|
Tweet |
என் இனிய மானிட்டரே..
Posted by உண்மைத்தமிழன் at 29 comments
Labels: கம்ப்யூட்டர், கழகத்திற்குள் கடிதம், பதிவர் வட்டம், மானிட்டர்
மறுபடியும் ஒரு குழப்பம்..!
29-08-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்தப் பதிவில் நான் ஏற்கெனவே சொல்லியிருந்த கமெண்ட்டுகள் இடுபவரின் பெயர்கள் தெரிய வேண்டிய இடத்தில் கேள்விக்குறியாகவே வருகிறது என்ற எனது குழப்பம் இப்போது சரியாகிவிட்டது.
நேற்று முதல் கமெண்ட்டுகளை இடுபவரின் பெயர்கள் தமிழிலேயே தெளிவாகத் தெரிகின்றது.
மேலும் மேற்குறிப்பிட்ட பதிவில் பின்னூட்டம் இட்டிருந்த 'மதுரையின் வாலிபச் சிங்கம்', 'இனமானப் பேராசிரியர்' தருமி அவர்கள் குறிப்பிட்டிருந்த பின்னூட்டப் பெட்டியைக் கிளிக் செய்யும்போது எழுந்த Mouse Cursor பிரச்சினையும் தீர்ந்துவிட்டது.
ஆனால், அந்த மணப்பாறை முறுக்காகக் முறுக்கிக் கொண்டு நிற்கும் பதிவின் தலைப்பு மட்டும் அப்படியே இன்னும் பெரிய, பெரிய சங்கிலித் தொடர்களாக போய்க் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக இப்போது வேறு ஒரு பிரச்சினை.
எனது தளத்தினை எப்போது திறந்தாலும் திறந்த 4 நொடிகளில் தளம் மறைந்து படம் 3, படம் 4-ல் இருப்பது போல வந்து நிற்கிறது.
நான் F5 கீயை அழுத்தி 'மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பி' என்று கட்டளை கொடுத்தால் சரியாக வருகிறது.
ஆனால் தளத்தில் ஏதேனும் மாறுதல் செய்துவிட்டு மீண்டும் தளத்தினை திறந்தால் முன்பு பார்த்த Google Error Message Page-ற்கே செல்கிறது.
நான் ஒவ்வொரு முறையும் refresh செய்துதான் தளத்தினை படித்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு மட்டும்தான் இப்படியா? அல்லது அனைவரது கம்ப்யூட்டரிலும் இப்படியா என்று எனக்குத் தெரியவில்லை.
தெரிந்த நண்பர்கள் ஏதேனும் தீர்வு இருந்தால் சொல்லவும்..
பின்குறிப்பு : கமெண்ட்டுகளை இடுபவர்களின் பெயர்களை தமிழில் வரச் செய்தது யார் என்று தெரியவில்லை. எந்தப் பதிவராவது அந்த அருஞ்செயலை செய்திருந்தால் உடனேயே எனக்கு தகுந்த ஆதாரத்தோடு மடல் இடவும். கை அரிக்கிறது.. 100 கமெண்ட்டுகளை கொட்டத் தயாராக இருக்கிறேன்..
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 5 comments
Labels: ஈ-மெயில் குழப்பம், கழகத்திற்குள் கடிதம், பதிவர் வட்டம்
பதிவர் அனுராதா அம்மா அவர்களுக்கு எனது அஞ்சலி!
28-08-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இன்று காலை அலுவலகத்திற்குள் கால் வைத்தவுடன் வந்த செய்தி எனக்கு பெரும் துக்கத்தை தந்தது.
“உண்மைத்தமிழன்தானே.. நான் திண்டுக்கல் சர்தார் பேசுறேன்..” என்று ஆரம்பித்த அந்தக் குரல் பிசிறு தட்டாமல், ஒரு தடங்கலும் இல்லாமல் “அனுராதாம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி expired ஆயிட்டாங்க.. உங்களுக்குச் சொல்லணும்னு நினைச்சேன். அதுதான்.. உங்களால முடிஞ்சா ஒரு பதிவு போட்டிருங்களேன்..” என்றார்.
வருத்தங்களை வார்த்தைகளால் மட்டுமே வடிக்கும் அளவுக்கு நமது சமூகப் பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன என்பதால் எனது வருத்தங்களை அவருக்குத் தெரிவித்து போனை வைத்தேன்.
கடந்த 2003-ம் ஆண்டு முதலே அந்தக் கொடிய நோயுடன் மரணப் போராட்டமே நடத்தி வந்திருக்கிறார் நமது பதிவரம்மா.
பொதுவாக பெண்கள் வெளியில் சொல்வதற்கே சங்கடப்படக்கூடிய பல விஷயங்களை அவருடைய துன்பவியல் அனுபவத்தின் மூலம் வெளிப்படுத்தி நம் சமூகத்திற்கு தேவையான ஒரு உதவியைச் செய்திருக்கிறார் அவர்.
பொதுவாகவே நோய் வந்தால் உடனேயே பயத்திலேயே சுருண்டு படுத்துவிடும் மக்கள் மத்தியில் வந்த நோய் எதனால் வந்தது? ஏன் வந்தது? என்பதையெல்லாம் வெளியில் சொல்லி மற்றவர்களையும் எச்சரிக்கையுடன் இருக்கவைக்க வேண்டும் என்று நினைத்த அந்த உயர்ந்த உள்ளத்திற்கு நாம் எப்படி காணிக்கை செலுத்துவது என்று தெரியவில்லை.
விதி வலியது என்பார்கள். அதனை தனது மதியால் இத்தனை நாட்கள் போராடி வந்த அம்மாவின் மனத்திடம், அனைவருக்கும் வாய்த்துவிடாது. அம்மாவுக்கு அது கிடைத்திருக்கிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவர் நீண்ட மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு வீடு திரும்பியிருப்பதை பதிவாக எழுதியிருந்தார். அப்போதுதான் நான் அவருக்கு போன் செய்து பேசினேன். தான் மிகத் தைரியமாக இருப்பதாகவும், நோயின் தாக்கம் அவ்வப்போது வந்து கொண்டேயிருப்பதால் பதிவுகள் மட்டும் உடனுக்குடன் எழுத முடியவில்லை என்றும் வருத்தப்பட்டார். இதுவே எனக்கு ஆச்சரியம்தான்.. “உங்களை எப்படி பாராட்டுறதுன்னே தெரியலம்மா.. நல்லாயிருங்கம்மா.. எல்லாருத்துக்கும் மேல முருகன் இருக்காம்மா..” என்றேன்.. சிரித்துவிட்டு போனை வைத்தார்.
இவருடைய கணவர்தான் நான் சில காலமாகத் தேடிக் கொண்டிருக்கும் திண்டுக்கல் சர்தார் என்பது எனக்கு நேற்றுதான் தெரியும். நேற்றுதான் அவருடைய பதிவில் இது பற்றி வெளிப்படுத்தியிருந்தார். இந்த நேரத்தில் அது பற்றி கேட்கக்கூடாது என்பதால் நானும் கேட்கவில்லை.
ஆரம்பக் காலத்தில் நான்தான் ‘திண்டுக்கல் சர்தார்’ என்று நினைத்து எனக்கு ஏகப்பட்ட ‘அன்பான’ பின்னூட்டங்கள் டஜன் கணக்கில் வந்து கொண்டிருந்தன. தொல்லை தாங்காமல் நானே அவருக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்தேன். “முகத்தையாவது காட்டுங்களேன்” என்று.. ஆனால் இப்படியொரு துர்ப்பாக்கிய சூழ்நிலையில் அது நிகழும் என்று நான் நினைக்கவில்லை. எல்லாம் முருகன் செயல்.
நாளை காலை மதுரை, தத்தனேரி மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 4 comments
Labels: அனுராதா, திண்டுக்கல் சர்தார், பதிவர் வட்டம்
மதுரையில் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழா
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
செப்டம்பர் 6-ம் நாள் மாலை 4 மணிக்கு மதுரை, தல்லாகுளம், இராசா முத்தையா மன்றத்தில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளோடு நிகழ்ச்சி துவங்கவிருக்கிறது.
மக்கள் தொலைக்காட்சியில் திரைப்படங்கள் என்கின்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் திரு.அமீர் அவர்கள் உரையாற்றவுள்ளார்.
நெல்லைத்தமிழ் பற்றி கலைமாமணி திரு.சுப்பு ஆறுமுகம் அவர்கள்..
குமரித்தமிழ் பற்றி எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள்..
கொங்குத் தமிழ் பற்றி எழுத்தாளர் திரு.பாமரன் அவர்கள்..
சென்னைத் தமிழ் பற்றி முனைவர் பெரியார்தாசன் அவர்கள்..
உலகத் தமிழ் பற்றி திரு.செந்தலை கெளதமன் அவர்கள்..
மக்கள் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் திரு.வேணு சஞ்சீவி அவர்கள் வரவேற்புரையாற்றுவார்கள்.
மதுரை நேயர்களும், வலைப்பதிவர்களும் வாய்ப்பு கிடைத்தால் நேரில் சென்று, கண்டு, களிக்கும்படி வாழ்த்துகிறேன்.
நன்றியுடன்
உண்மைத்தமிழன்
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 2 comments
Labels: அன்புமணி ராமதாஸ், இராமதாஸ், பதிவர் வட்டம், மக்கள் டிவி, மதுரை
நினைத்தேன் எழுதுகிறேன்-28-08-2008
28-08-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்றே கொல்லும் என்ற பழமொழி பல நிலைகளில் பலித்திருப்பதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். நேற்றும் கண்டேன்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரனுக்கும், அவருடைய மனைவிக்கும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இந்த பாஸ்கரனும் அம்மாவின் முதல் ‘பொன்னான’ ஆட்சிக் காலத்தில் சப்தமில்லாமல் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். அதிலும் அப்போதைய பத்திரிகையாளர்கள் சுலபத்தில் இவரை மறந்துவிட முடியாது.
சென்னை, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இருந்த அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு சசிகலா ஆஜராக வந்தபோது பத்திரிகையாளர்கள் பெருமளவு கூடியிருந்தார்கள். அவர்களின் கேமிராக்களில் சசிகலாவின் முகம் பதியாத வண்ணம் எங்கிருந்தோ அழைத்து வரப்பட்டிருந்த வாட்டசாட்டமான ஆட்கள் வட்டவடிவில் நின்று கொண்டு தங்களது கைகளை ஒரு சேரத் தூக்கி இணைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களை இடித்துத் தள்ளி கோரத் தாண்டவமாடியதை நான் கண்கூடே கண்டேன். அந்த அரும்பணியைச் செய்து புண்ணியம் தேடிக் கொண்டவர் இந்த ரிசர்வ் பேங்க் பாஸ்கரன்தான் என்பதை பத்திரிகைகள் பிற்பாடு புலனாய்வு செய்து சொல்லியிருந்தன.
அந்த ‘ராமராஜ்ய’ கட்டத்தில் சின்னம்மாவின் சீற்றத்திற்குள்ளான அனைத்து விஷயங்களிலும் பாய்ந்தவைகள் இவருடைய வில் சேனையிலிருந்து கிளம்பிய அம்புகள்தான். ஆனாலும் எதிலும் ஆதாரமில்லை என்று சொல்லி அப்போதும் சரி.. அதற்குப் பின்னான தி.மு.க. ஆட்சியிலும் சரி ‘கை’ வைக்க முடியாத நிலையில்தான் இருந்தார்.
ஆனாலும் ஒரு முறை ஒன்று சேர அடித்த சி.பி.ஐ.யின் ரெய்டில் மட்டுமே சிக்கினார். பத்திரிகைகளின் கைகளுக்கு நியூஸ் போகாதவண்ணம் நடந்து முடிந்த இந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற விசாரணையின் முடிவு மட்டும், அனைத்து கண்டங்களுக்கும் தெரிந்துவிட்டது.
ஆடும்வரை ஆடுங்கள். எல்லாம் முடிந்த பின்பு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைத்தே தீரும்.
* * * * * * *
சிபுசோரன் தனது நீண்ட நாள் கனவான முதல்வர் பதவியை அடைந்துவிட்டார். மாயாவதி மாநிலம் முழுவதும் அரசு செலவில் தன்னுடைய உருவச் சிலையை அமைக்கச் சொல்லி உத்தரவிட்டுவிட்டார். லாலூ பிரசாத் யாதவ் அடுத்தத் தேர்தலில் கூட்டணி பற்றி சரத்யாதவுடன் பேசத் தயாராகிவிட்டார். ஜெயலலிதா பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்காதபட்சத்தில் கம்யூனிஸ்ட்கள் அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்புண்டு என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்துவிட்டார்கள்.
ஆக மொத்தத்தில் லஞ்சம், ஊழல், முறைகேடு, சி.பி.ஐ., கோர்ட், வழக்கு, தீர்ப்பு என்று எல்லா ஜல்லியையும் ஓட்டுப் போட்ட அப்பாவிகளும், பொழுது போகாத நமது பதிவர்களும்தான் பேசவும், எழுதிக் கொள்ளவும் வேண்டும். யாருக்கும் இங்கே வெட்கமில்லை என்பதனை மீண்டும், மீண்டும் நாம் நிரூபித்தே வருகிறோம்.. வாழ்க ஜனநாயகம்..
* * * * * *
கடைசியாக நேற்று இரவு கிடைத்த செய்திகளின்படி தம்பி பாலபாரதி திருமணப் பந்தத்தில் சிக்கிக் கொண்டதாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
அவர் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்.
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 11 comments
Labels: அரசியல், அனுபவங்கள், நாட்டு நடப்பு, பாலபாரதி
நெகிழ வைத்த ஜெயராம்-கோபிகா : திரைப்பட விமர்சனம்
25-08-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பல நேரங்களில் காமெடித் திரைப்படம் என்று நினைத்துப் போனால் அழ வைத்துத் திருப்பியனுப்புவார்கள். திரில்லர் படம் என்று நினைத்துப் போனால் காமெடி படம்போல இருக்கும். சண்டைப் படம் என்று போனால் சர்க்கஸ் பார்த்த திருப்தியுடன் வெளியில் வர வேண்டியிருக்கும். குடும்பப் படம் என்று நினைத்து போனால், களியாட்டம் ஆடும் கிளப்புகளின் அன்றாட நிகழ்வுகளை ஒரு சேர பார்த்த வெறியுடன் வெளியில் வர வேண்டியிருக்கும்.
நீங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக திரைப்படங்களைப் பார்க்கும் வியாதியுடையவராக இருந்தால், மேற்கூறியவற்றையெல்லாம் அனுபவித்தவராக இருந்திருப்பீர்கள்.
ஆனால், சில நேரங்களில் மட்டுமே நாம் பார்க்கச் செல்லும் திரைப்படங்களின் தாக்கம் நம்மை மகிழ்ச்சியடைய வைக்கும். பணம் செரித்தது என்ற திருப்தியைத் தரும்.. மனதை குதூகலிக்க வைக்கும்.. அப்படியொரு திடீர் சிலிர்ப்பைத் தந்தது கடந்த வெள்ளிக்கிழமை மாலை உட்லண்ட்ஸ் தியேட்டரில் நான் பார்த்த 'Veruthe Oru Bharya' என்கிற மலையாளத் திரைப்படம்.
நடிகர் ஜெயராமை மலையாளத் திரைப்படங்களை அதீத ஆர்வத்துடன் பார்க்கத் துவங்கியதிலிருந்தே நான் ரசித்து வருகிறேன். குடும்பப் படங்களின் ஒட்டு மொத்த கதாநாயகன் என்கிற இமேஜை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மலையாளத் திரையுலகில் கட்டிக் காப்பாற்றி வந்த புண்ணியவான்.
இவரும் ஊர்வசியும் நடித்திருந்த மலையாளப் படங்கள், அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யக்கூடிய அளவுக்கு தகுதியான கதையம்சம் கொண்டவைதான். கண்ணியமான கணவன், அப்பாவியான கணவன், குடும்பத்தில் அனைவருக்கிடையிலும் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு சராசரி மனிதன் என்றெல்லாம் தனது நடிப்பு வேட்டையில் பல பரிமாணங்களை வகுத்திருக்கும் ஜெயராமுக்கு 'Veruthe Oru Bharya' என்னும் இந்த புதிய மலையாளத் திரைப்படமும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் சுகுணன் என்னும் ஜெயராமுக்கு பிந்து(கோபிகா) என்கிற மனைவியும், 13 வயதுள்ள ஒரு அஞ்சனா என்கிற குழந்தையும் உண்டு.
மனிதனுக்கு பெண் குலத்தின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு அதற்குள்தான் இருக்க வேண்டும் என்று மனைவியையும், மகளையும் போட்டு இம்சை செய்கிறான்.
பிறந்த வீடு, அரண்மனைபோல் இருக்க இங்கேயோ ஓட்டு வீட்டுக்குள் குடிசை வீட்டில் இருக்கும் பொருட்களைப் போல் இருப்பவைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள் மனைவி பிந்து.
காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவதில் இருந்து, இரவு 11 மணிக்கு படுக்கப் போகும்வரை ஓயாமல் உழைக்கிறாள் பிந்து. பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்கிற கணவன் சுகுணனின் நினைப்பால் மாடு, கன்றுக்குட்டிகளை மேய்க்கும் கடமைகூட அவளுக்கு உண்டு.
எப்போது நிற்கும் என்று தெரியாத மிக்ஸி, மல்லுக்கட்டும் ஒரேயொரு கேஸ் ஸ்டவ்.. தனக்குக் குளிப்பதற்காக சுடுதண்ணியை விறகு அடுப்பில்தான் வைக்க வேண்டும் என்கிற அளவுக்கான சுகுணனது ஆணாதிக்கம் அந்த வீட்டில் நிறைந்திருக்கிறது. சட்டையைப் போடுவதற்குக்கூட “பிந்து” என்று அழைக்கும்போது பிந்துவின் எரிச்சலைவிடவும் ஒரு பைத்தியம் என்கிற விமர்சனத்தை சுகுணன் பெறுகிறான்.
தினசரி பேப்பரை எட்டுப் படிகளில் ஏற சோம்பேறித்தனப்பட்டு வீசியெறியும் பேப்பர்காரனிடம் சண்டையிடும் சுகுணன், அந்தப் பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து படிக்கத் துவங்கி “பிந்து, பிந்து” என்று பத்து முறை அழைத்து காபியை வாங்கிக் குடிக்கும்போது எனக்கும் வெட்கமாகத்தான் இருந்தது.
வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் எல்லாமே மனைவியே செய்ய.. அவளைத் தான் ஆள வந்தவன் என்ற நினைப்பில் ஜெயராம் செய்யும் அலம்பல்கள்தான் முற்பாதி முழுக்க..
அலுவலகத்திலும் இதே நிலைதான். கையில் ரசீதுகளுடன் பொதுமக்கள் காத்திருக்க அலுவலகத்தில் வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறான் சுகுணன். அலுவலக மேலதிகாரி வந்து சொல்லியும் அரசுத் துறை ஊழியர்களின் அலட்சியப் போக்கை கண் முன்னே காண்பிக்கிறான் சுகுணன்.
வீட்டிற்கு வரும் பணக்கார மாமனாரையும், மைத்துனனையும் மதிக்காமல் உடன் சென்று வந்ததற்காக மனைவியை வாசலிலேயே கடிந்து கொள்ளும் போக்கைச் சகித்துக் கொள்ளும் போக்கில் பிந்துவின் மேல் பரிதாபம் கூடுகிறது.
மைத்துனன் திருமணத்தன்று EB Post-ல் இருந்து திருட்டுத்தனமாக கரண்ட் கனெக்ஷன் கொடுத்திருப்பதை அறியும் சுகுணன், “அது தப்பு.. மொதல்ல நிறுத்து..” என்று சொல்லி அதே இடத்தில் களேபரம் செய்வதுதான் படத்தின் முடிச்சு.
மறுநாள் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்த பிந்துவின் அம்மா மரணமடைந்திருக்க.. எப்போதும் நக்கலுடன் பேசும் சுகுணனுக்கு அன்று மட்டும் தனது மாமனாரிடம் துக்கத்தோடு பேச வேண்டிய சூழல். கடமையை முடித்துவிட்டு வீட்டில் வந்து உட்கார்கிறான்.
பெற்ற தாயின் இறுதிக் காரியங்களை செய்துவிட்டு கணவன் வீட்டிற்கு வரும் பிந்து எடுக்கும் ஒரு அஸ்திரம்தான் ஒத்துழையாமை இயக்கம். “இனி இந்த வீட்டில் நான் ஒரு வேலையும் செய்ய மாட்டேன்..” என்பது. “செய்யாட்டி போ.. நான் பாத்துக்குறேன்..” என்றெல்லாம் சவுடால் விடும் சுகுணனுக்கு ஒரு நாள்கூட தாங்க முடியவில்லை..
கோபத்தில் மனைவியை அடித்துவிட, மறுநாள் காலையே மகளிடம் மட்டும் சொல்லிக் கொண்டு சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறாள் மனைவி. இதற்குப் பின்தான் கதையே சூடு பிடிக்கிறது.
மனைவி இல்லாத சூழலில் ஜாலியாக இருக்க நினைக்கும் சுகுணன் முதல் காரியமாக தனது மகளுக்கு ஒரு செல்போனை வாங்கித் தருகிறான். அதனை வாங்கியவுடன் மகள் செய்கிற முதல் காரியம், அடுத்த வீட்டுப் பையனுடன் பேசத் துவங்குவதுதான்.
தனக்கும், மகளுக்கும் சமைத்துப் போட ஒருவனை நியமிக்கிறான் சுகுணன். வந்தவனோ மகளுக்கு மேஜிக் கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்லி அவளைத் தொடப் பார்க்க, கடைசி நிமிடத்தில் பார்த்துவிடும் சுகுணன் அவனை அடித்து விரட்டுகிறான்.
செல்போனில் இடைவிடாமல் தொடர்ச்சியாகப் பேசியதன் பயனாக பக்கத்து வீட்டுப் பையன் தனது ஜீப்பில் அஞ்சனாவின் பள்ளிக்கே வந்து அவளை அழைத்துச் செல்கிறான். விடலைப் பருவத்தின் தூண்டுதலால் செய்வது என்னவென்று தெரியாத, இனம் புரியாத கவர்ச்சிப் போதையில் இளம் தளிர்கள் இருவரும் மாலை நேரத்தில் மலைப்பிரதேசத்தில் போய்க் கொண்டிருக்க.. ஜீப் ரிப்பேர்..
அப்போது அங்கே கையில் பீர் பாட்டிலோடும், கண்களில் போதையோடும் வரும் இளைஞரணி கூட்டமொன்று அஞ்சனாவைத் தூக்க முயல.. ஜீப்காரன் அடிபட்டு கீழே விழுக அஞ்சனா தப்பியோடுகிறாள். சுகுணன் இரவு வீடு திரும்பி, மகளின் தோழிகள், பள்ளி அலுவலகம் என்று பலவற்றிலும் தேடி என்ன ஆனாள் என்பது தெரியாமல் அவதிப்பட்டு தேடி வருகிறான்.
காமுகர்களால் விரட்டப்படும் மகளும், மகளைத் தேடி வரும் அப்பாவும் ஓரிடத்தில் சந்தித்துக் கொள்ள.. பின்னால் வரும் போலீஸாரும் ரவுடிகளைப் பிடித்துக் கொள்ள மகள் காப்பாற்றப்படுகிறாள்.
நல்ல மனிதனாக இருந்த போலீஸ் அதிகாரி மகளுடைய செல்போனை ஆராய்ந்து, அதில் எத்தனை மணி நேரம் அந்தப் பையனுடன் பேசியிருக்கிறாள் என்பதை சுகுணனிடம் சொல்லி, “இனியாவது பத்திரமா பாத்துக்குங்க..” என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறார்.
வீட்டுக்கு வரும் மகள் அப்பாவின் காலில் விழுந்த மன்னிப்பு கேட்க சுகுணன் யோசிக்கிறான். மனைவியை அழைத்து வர இப்பவும் அவனுக்குத் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.. என்ன செய்வது என்று இரவெல்லாம் யோசிக்கத் துவங்க.. இந்த இடத்தில் அவனது மனநிலை மாறுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
அங்கே மனைவியின் நிலையோ இதைவிட பரிதாபமாக இருக்கிறது. அப்பாவுக்கும், தம்பிக்கும் இடையில் மாட்டிக் கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறாள் பிந்து.
மறுநாளும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் அஞ்சனாவை அதே மேஜிக்காரன் கையைப் பிடித்து இழுத்து ஆட்டோவுக்குள் திணிக்க முயல மகளை அழைக்க வரும் சுகுணன், இதைப் பார்த்து இன்னமும் பதைபதைத்துப் போகிறான். அவனை விரட்டிவிட்டு மகளை அரவணைக்கும்போது அவனுக்குள் அது அணையாத நெருப்பாகிறது.
மகள் அரவணைக்கப்பட வேண்டியவள். அவளை விரட்டும் கழுகுகள் நிறையவே உள்ளன. பாதுகாக்க வேண்டியது அவன் கடமை என்ற உணர்வுகள் மேலோங்க மனச்சிதைவு நோய்க்கு ஆளாகுகிறான். ஆனால் இதனை கடைசிவரையில் சொல்லாமல் காப்பாற்றியது இயக்குநரின் திறமை.
வீட்டுக்கு வரும் சுகுணன் மனைவியிடமிருந்து வரும் போனை கட் செய்கிறான். கூடவே போன் இணைப்பையும் துண்டிக்கிறான். இரவில் தூக்கத்தின் ஊடேயே இதுவரையில் மகளின் வாழ்க்கையில் குறுக்கே புகுந்த கோடாரிகள் அவர்கள் நினைத்ததை சாதிக்கப் போவதை நினைத்துப் பார்த்து அவஸ்தைப்படுகிறான். உடனேயே எழுந்தோடி வந்து மகளைப் பார்த்து ஆறுதல்படுகிறான்.
மறுநாளில் இருந்து அவனது நடத்தை முற்றிலும் மாறுகிறது. மகளுடைய படிப்பை நிறுத்துகிறான். “வீட்டிலிருந்தே படித்துக் கொள்..” என்கிறான். மகள் பயந்து போய் அம்மாவுக்கு போன் செய்ய முயல.. போன் கட்.. வீடு உட்புறமாகவே பூட்டப்படுகிறது.
நிலைமை புரியாமல் சுகுணனின் அலுவலக ஊழியர்கள் கையில் பாட்டிலோடு தீர்த்தம் சாப்பிட வீட்டுக்குள் வந்து அமர்ந்து அலப்பரையைக் கொடுக்க.. அமைதியாக அதனை மறுக்கும் சுகுணன் அவனது மகளிடம் டம்ளர் எடுத்து வரும்படி ஒருவன் சொல்லும்போது ஆவேசமாகி அனைவரையும் கழுத்தில் கை வைக்காத குறையாக வெளியேற்றுகிறான்.
பிந்துவோ மகளது நிலைமை தெரியாமல் பரிதவித்து பாசம் மேலோங்க அவளது பள்ளிக்குச் சென்று விசாரிக்கிறாள். பிந்து பள்ளிக்கு வந்தே வாரங்களாகிவிட்டது என்று தலைமையாசிரியை சொல்ல.. சுகுணனின் அலுவலகம் வந்து விசாரிக்கிறாள். சுகுணன் வேலைக்கு வந்தும் நாட்களாகிவிட்டது என்று அவர்களும் சொல்ல “போய்தான் பாக்கலாம்.. வாங்க..” என்று சொல்லி அனைவரும் வீட்டிற்கு ஓடி வருகிறார்கள்.
வீட்டின் வெளிவாசல் இறுகப் பூட்டியிருக்க.. நாள் கணக்கில் பேப்பர்கள் எடுக்கப்படாமல் மழையில் நனைந்து நைந்து போயிருக்க.. ஏதோ ஒன்று என்று நினைத்து ஓடுகிறார்கள் மனைவியும், நண்பர்களும்.
வீடு அமானுஷ்ய அமைதியில் பூட்டப்பட்டிருக்க.. அதோடு கூடவே ஜன்னல்களும் இறுகப் பூட்டப்பட்டு அதற்கு மேல் குறுக்குவாக்கில் இரண்டு கட்டைகளும் வைத்து மூடப்பட்டிருக்கிறது. சுற்றிச் சுற்றி வருகிறார்கள் அனைவரும். அனைத்து ஜன்னல்களுமே பாதுகாப்பு கோட்டை போல் இருந்து நிலைமையை பயமுறுத்துகிறது.
ஓரிடத்தில் கிடைத்த இடத்தில் கட்டையை அப்புறப்படுத்தி உள்ளே பார்க்க மகள் அஞ்சனா கடும் குளிரில் அவதிப்பட்டு நடுங்கிக் கொண்டிருக்கிறாள். அப்பா சுகுணனோ போர்வையை எடுத்து போர்த்திவிட்டு சுடுதண்ணி கொண்டு வந்து வைத்தும் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறான்.
இவர்கள் கதவைத் திறக்கும்படி சொல்ல.. சுகுணன் ஜன்னலை நோக்கி பார்க்க அங்கே அவன் கண்களுக்கு உன்மத்த வெறியுடன் மகளை சுற்றிச் சுற்றி வந்த ரெளடிகளாகவே அனைவரும் தெரியும்போதுதான் சுகுணனின் நிலைமை நமக்குத் தெரிகிறது.
அவன் கதவைத் திறக்க மறுத்து மகளையும் இழுத்துக் கொண்டு அறை, அறையாக ஓட.. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள் அனைவரும். மனைவி, சக ஊழியர்கள் என்று யாரையும் அறிந்து கொள்ள முடியாமல் வந்திருப்பவர்கள் மகளைக் காவு வாங்க வந்த எமன்கள் என்றே நினைத்து எதிர்க்கிறான் சுகுணன்.
மகளை இறுக அணைத்து அழுகும் மனைவியை அடிக்க இரும்புக் கம்பியை வீசுகிறான் சுகுணன். ஆனால் அடி மகளின் மீது விழுந்து ரத்தம் சிதற.. அந்த ரத்தச் சிதறலே அவனை ஆசுவாசப்படுத்துகிறது.
முடிவில் மனநல மருத்துவரின் நீண்ட தேவையான அட்வைஸால் பிரச்சினைக்கான காரணத்தை முழுமையாக அறிந்து மனநோயிலிருந்து விடுபட்டவனாக இருக்கிறான் சுகுணன்.படத்தின் துவக்கக் காட்சிக்கு முற்றிலும், மாறுபட்ட இறுதிக் காட்சியோடு படத்தை நிறைவு செய்கிறார் இயக்குநர்.
டைட்டில் காட்சியிலேயே படத்தின் மொத்தக் கதையையும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
ஜெயராம் தனது நடிப்பில் இன்னொரு புதிய இடத்தை இப்படத்தின் மூலம் நிரப்பியிருக்கிறார். மகளின் படிப்பு பற்றி கோபிகா புகார் சொன்னவுடன் “ஏன் படிக்கல?” என்று திடீர் கோபத்தில் மகளை விரட்டி விரட்டி அடித்து படிக்கச் சொல்லுமிடத்தில் ஒரு அப்பாவின் தோற்றத்தைக் காட்டுகிறார் மனிதர்.
கோபிகாவை கொஞ்சுவதாகட்டும், கெஞ்சுவதாகட்டும், ஆணாதிக்கக் கணவனை கண் முன்னே கொண்டு வருகிறார். மனைவி பிரிந்து போயிருக்க அதே சூழலில் அலுவலகத்தில் தனது பெண் மேலதிகாரியிடம் தனது புலம்பலைக் கொட்டுகின்ற இடத்தில் ஜெயராமுக்கு ஒரு சபாஷ் போடலாம்.
அலுவலக ஊழியர்களுடன் டூருக்குச் செல்லும்போது தண்ணியை போட்டுவிட்டு சலம்பல் செய்வதும், மனைவியையும், மகளையும் ஒருவன் தவறாகப் பேச அதைக் கேட்டு ஆவேசப்பட்டு அடிதடியில் ஈடுபட்டுவிட்டு போதையில் புலம்புவதைக் காண்கின்றபோது நடிகர்களின் உண்மையான நடிப்பு போதையில் தெள்ளத் தெளிவாக வருமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
கோபிகாவின் நடிப்பு அவர் உருவாக்கியிருக்கும் வெற்றிடம் எவ்வளவு கஷ்டமானது என்பதை காட்டுகிறது. கோபிகாவின் இப்போதைய கடைசித் திரைப்படம் இது என்று மட்டும் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு படம் முழுவதும் வியாபித்துள்ளார்.
கணவனைப் பற்றி புலம்புவதில் இருந்து மாடு, கன்னுக்குட்டிகளிடம் பேசுவதுவரையிலும் அந்த வீட்டில் அவளுக்கிருக்கும் பெரும் பிரச்சினையே, அவளுடைய ஆதங்கங்களைக் கேட்கக்கூட ஆள் இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது.
மகளுக்கு ஆபத்து என்றவுடன் இப்போது ஜெயராமு இருக்கும் ஒரே துணை அவள்தான் என்ற உணர்வுதான் அவரை ஆட்கொண்டு மனச்சிதைவு அளவுக்கு கொண்டு செல்வதை இயக்குநர் அழகாகச் சொல்லியிருக்கிறார்.
படத்தின் பாடல்களும் மிகப் பெரும் வெற்றி பெற்றிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. “மஞ்சில் குளிக்கும்” என்ற பாடல் ஒலித்த போது எனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞர்கள், கூடவே கடைசி வரையிலும் பாடியது கேட்பதற்கும், பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது.
மிகக் குறைந்த பட்ஜெட்டில் 1.35 கோடியில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மலையாளத் திரையுலகின் கதையம்சமுள்ள ஒரு பக்கத்தை மறுபடியும் பறை சாற்றியிருக்கிறது. வெற்றியும் பெற்றிருக்கிறது என்பது மனதுக்கு நிறைவைத் தருகின்ற ஒரு விஷயம்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கிரீஷ்குமார் எழுதியிருக்க.. அக்கு அக்பர் என்பவர் இயக்கம் மட்டுமே செய்திருக்கிறார். இதனை நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பார்த்துப் படித்து உணர்ந்து கொள்வது அவசியம் என்கிறேன்.
இயக்கத்துடன் கதை, திரைக்கதை, வசனத்தையும் நான்தான் எழுதுவேன் என்று பல இயக்குநர்களும் பிடிவாதம் பிடிப்பதால், வெற்றி பெற வேண்டிய திரைப்படங்கள் பல கூட தோல்வியடைவதுண்டு.
ஒருவேளை தனது கதை இல்லை என்பதால் இந்த இயக்குநர் இதனை தயாரிப்பாளரின் முன் கொண்டு செல்லாமல் போயிருந்தால், ஒரு நல்லத் திரைப்படம் மலையாளத் திரையுலகத்திற்குக் கிடைக்காமல் போயிருக்கும் வாய்ப்பு உண்டே. இத்திரைப்படத்தின் இயக்குநரை இந்த ஒரு விஷயத்திற்காகவே எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தமிழகம் முழுவதும் பிரமிட் சாய்மிரா நிறுவனம் திரையிட்டுள்ள இத்திரைப்படம், தமிழகத்தில் பரவலாக மலையாள மக்களிடையேயும், சினிமா ஆர்வலர்களிடமும் திடீர் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
“கதா பறையும் போள்” திரைப்படத்தினைவிடவும் இத்திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது என்கிற உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.
பார்க்க விரும்பும் சென்னை வாழ் அன்பர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் உட்லண்ட்ஸ் தியேட்டரிலும், சங்கம் தியேட்டரிலும் சென்று காணும்படி கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற மலையாளத் திரைப்படங்கள் அதிகப்பட்சம் 7 நாட்கள்தான் திரையிடப்படும்.
நல்லவைகளை காண்பதற்கு இன்றே முந்துங்கள்..!
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 35 comments
Labels: அக்கு அக்பர், கோபிகா, சினிமா, சினிமா விமர்சனம், பிரமிட் சாய்மிரா, ஜெயராம்
குழப்பம் தீர்த்தால் 100 கமெண்ட்டுகள் இலவசம்!
வலையுலகப் பொறியாளர்களிடம் ஒரு அன்பு வேண்டுகோள்..
ஒரு சிறிய குழப்பம் எனது பதிவில் நடந்து வருகிறது.
குழப்பம்-1
எனது மெயிலுக்கு வரும் கமெண்ட்டுகளில் யார் அனுப்புவது என்கிற இடத்தில் ?????????????????????????? இப்படியே வருகிறது..
அந்த மெயிலை ஓப்பன் செய்து பார்த்தால் மட்டுமே யார் அனுப்பியது என்பது தெரிய வரும்..
இந்தக் கொடுமையைச் சீரமைக்க என்ன செய்ய வேண்டும்?
குழப்பம்-2
வர, வர மாமியார் கழுதையானாள் என்ற கதையாக ???????????????????? என்று கொஸ்டீன் மார்க்காக இருந்த அனுப்பனரின் இடத்தில் இப்போது மெகாத் தொடர் கதையாக இப்படி [&[[[[[#2953 ண ் ம& #3016 த ் த ம ி ழ ன ்] New comment on ந ா& #2985 ு ம ் உ ட ன ே ம ந ் த ி ர ி ய ா க ண ு ம ் -ப க ு த ி -1.]]]]எழுத்துக்கள்தான் வருகிறது.
முன்பெல்லாம் எழுதுபவரின் பெயர்தான் வரும். இப்போது ஏதோ மணப்பாறை முறுக்கு மாதிரி முறுக்கிக் கொண்டு இத்தனை நம்பர்கள் அணிவகுத்து வருவதன் காரணம் என்ன என்று தெரியவில்லை.
இதற்கானத் தீர்வை யாரேனும் வலையுலகப் பொறியாளர்கள் தெரிவித்து அதனை நான் சோதித்துப் பார்த்து அது சரியாக இருந்தால், அந்தப் பதிவர் கை காட்டும் பதிவிற்கு 100 கமெண்ட்டுகள் போடுவேன் என்பதனை எனது அப்பன் முருகப் பெருமான் மீது ஆணையாகச் சொல்கிறேன்.
சீக்கிரமா சொல்லுங்கப்பூ..
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 42 comments
Labels: ஈ-மெயில் குழப்பம், கழகத்திற்குள் கடிதம், பதிவர் வட்டம், பதிவு சந்தேகம்
நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-8
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்
நான்காம் பாகம்
ஐந்தாம் பாகம்
ஆறாம் பாகம்
ஏழாம் பாகம்
படித்து விட்டீர்களா மக்களே..?
என்ன கொடுமை பாருங்கள்..!
தியாகிகளுக்கான பென்ஷன் தொகையைக் கூட்டிக் கொடுங்கள் என்று கேட்டால், அத்துறையில் அவ்வளவுதான் நிதி ஒதுக்கீடு என்று ரீல் விடுகிறார்கள்.
ரயில் பயணத்தில் ஊனமுற்றவர்களுக்கு பாஸ் கொடுங்கள் என்று கேட்டால் ரயில்வே நிர்வாகம் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது என்கிறார்கள்.
விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரம் கொடுங்கள் என்று கேட்டால் முடியாது. பட்ஜெட் கையைக் கடிக்குது என்கிறார்கள்.
பருத்திக்கு மான்ய விலை கொடுங்கள் என்றால் பட்ஜெட் காலைக் கடிக்குது என்கிறார்கள்.
கோதுமைக்கு நல்ல விலை கொடுங்கள் என்றால், துட்டு லேது என்கிறார்கள்.
ஆனால் நமது மாண்புமிகுக்கள் இப்படி நாடு, நாடாகப் பறந்து சொகுசு வாழ்க்கை வாழ்வதைப் பாருங்கள்.
இப்படி இவர்கள் பறப்பதற்காகவா நாம் இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம்?
நாட்டு மக்களின் துயர் துடையுங்கள் என்று இவர்களைப் பணித்தால், இவர்கள் துயர் துடைக்க இவர்கள் பறப்பதைப் பார்க்கின்றபோது நமது ஜனநாயகத்தின் மீது கோபமான கோபம் வருகிறது.
இந்த மந்திரிகள் எந்த வேலைக்காகப் போயிருந்தாலும் சரி, செலவு என்னவோ நமது தலையில்தான். செலவுத் தொகையைக் காட்டிவிட்டு எப்படி செலவானது என்பதை மட்டும் சொல்ல மாட்டோம் என்பது எந்தவிதத்தில் நியாயம்..?
தெருமுனையில் கடை வைத்திருப்பவன் இதே போல் இன்கம்டாக்ஸ்காரர்களுக்கு தகவல் சொன்னால் சும்மா விடுவார்களா அவர்கள்..?
அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி..? மக்களுக்கு ஒரு நீதியா..?
முடிவு செய்துவிட்டேன் மக்களே..
இனிமேல் இவர்களிடம் வேலை கேட்டு பிரயோசனமில்லை.. உதவித் தொகை கேட்டு பயனில்லை.. ஊக்கத் தொகை கேட்டு புண்ணியமில்லை.. கடன் உதவி கேட்டு மாள முடியவில்லை.. நேரடியாக அடிக்க வேண்டியதுதான்.. எனக்கு உடனே மந்திரி பதவி வேண்டும்.. என்ன செய்வீர்களோ.. ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது.. எனக்கு உடனே மந்திரி பதவி வேண்டும்... வேறெதுவும் சொல்வதற்கில்லை..
அப்புறம் கடைசியாக,
இந்த மெகா தொடரின் முதல் பகுதியின் முதல் பாராவையும், இந்த கடைசி பகுதியின் கடைசி பாராவையும் மட்டுமே படித்த கழகக் கண்மணிகளுக்கு அன்பு முத்தங்கள்.(வேறென்ன செய்றது..?)
படிக்காமலேயே சும்மா மவுஸை உருட்டிக்கிட்டே வந்துட்டு எஸ்கேப்பாகப் பாக்குற ரத்தத்தின் ரத்தத்தங்களின் காலில் விழுந்து வணங்கி நானும் எஸ்கேப்பாகுறேன்.
கடைசிவரையிலும் படித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி அனைத்தையும் படித்து முடித்திருக்கும் அன்பு உடன்பிறப்புகளுக்கு எனது கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.
நன்றி
உண்மைத்தமிழன்
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 8 comments
Labels: அரசியல், இந்தியாடுடே, பிரதமர், மந்திரிகள், மன்மோகன்சிங்
நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-7
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்
நான்காம் பாகம்
ஐந்தாம் பாகம்
ஆறாம் பாகம்
பிரதமர்களின் பயணச் செலவுகள்
கடந்த 1996-ம் ஆண்டு முதல் இதுவரை, வெளிநாட்டுப் பயணங்களுக்காக நமது நான்கு பிரதமர்கள் 371 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த சேட்டன் சவுத்ரி என்பவர் நமது பிரதமர்கள் மேற்கொண்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணங்கள் குறித்தும், அதற்கான செலவுகள் குறித்தும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்டிருக்கிறார்.
முதலில் இத்தகவல்களைத் தர பிரதமர் அலுவலகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து சேட்டன் சவுத்ரி மேல்முறையிடு செய்துள்ளார்.
அந்த மனுவை விசாரித்த மேல் முறையீட்டு ஆணையம், சேட்டன் கேட்கும் தகவல்களைத் தரும்படி பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய பொது தகவல் அதிகாரி இந்தத் தகவல்களை கொடுத்துள்ளார்.
அதிலும் 1996-ம் ஆண்டுக்கு முன் நமது பிரதமர்கள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்த விவரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டதாவும், 2000-ம் ஆண்டிற்குப் பின்பான தகவல்கள் மட்டுமே இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
1996-ம் ஆண்டு முதல் வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால், மன்மோகன்சிங் ஆகிய நான்கு பேரும் பிரதமர்களாக இருந்துள்ளனர். இவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மட்டும் 371 கோடியே 41 லட்சத்து 6538 ரூபாய் செலவாகியுள்ளது.
அதே நேரத்தில் 2000-ம் ஆண்டுக்குப் பின் பிரதமர்கள் மேற்கொண்ட உள்நாட்டுப் பயணங்களுக்கு 27 லட்சத்து 38 ஆயிரத்து 710 ரூபாய் செலவாகியுள்ளது. இது வாஜ்பாய் மற்றும் மன்மோகன்சிங் மேற்கொண்ட பயணங்களுக்கானது.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், 1999 முதல் 2003-ம் ஆண்டுவரை வெளிநாட்டுப் பயணங்களுக்காக 185.6 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டில் மட்டும் பிரதமர் மன்மோகன்சிங்கின் வெளிநாட்டுப் பயணத்திற்காக ரூபாய் 67 கோடி செலவாகியுள்ளது.
நமது மனதிருப்திக்காக ஒரு ‘அக்கரை’ கதை
கடந்த ஜனவரி மாதம் பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார் பாகிஸ்தானின் முன்னால் ஜனாதிபதி ஜெனரல் முஷாரப்.
சுற்றுப்பயணத்தின் முடிவில் மூன்று நாட்கள் லண்டன், ஹைட்பார்க் பகுதியில் கட்டணம் அதிகம் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்திருக்கிறார் முஷாரப். மொத்த ஓட்டல் பில் மட்டும் ஜஸ்ட் 63 லட்சம் ரூபாய்.
(தொடரும்)
எட்டாம் பாகம்
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 2 comments
Labels: அரசியல், இந்தியாடுடே, பிரதமர், மந்திரிகள், மன்மோகன்சிங்
நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-6
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்
நான்காம் பாகம்
ஐந்தாம் பாகம்
முடிவுரை
"தகவல் அறியும் உரிமைச் சட்டம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்தத் தகவல்களைப் பெற்றிருக்கவே முடியாது.
ஐக்கிய முன்னேற்ற கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து வெளிநாடு சென்று வந்த அமைச்சர்கள், அவர்கள் சென்ற நாடுகள், ஆன செலவு ஆகிய விவரங்களைக் கேட்டு ஒரு RDI மனுவை போன வருடம் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளது இந்தியா டுடே பத்திரிகை.
செலவு பற்றிய விவரங்களைத் தவிர மற்ற எல்லாத் தகவல்களையும் கொடுத்தது பிரதமர் அலுவலகம். “வழங்கப்படும் தகவல்களில் பயணங்களின் செலவு விவரங்கள் இடம் பெறவில்லை. இந்த அலுவலகம் அந்த விவரங்களை வைத்துக் கொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்தும், அமைச்சகங்களிடமிருந்தும் அந்தத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்..” என்று பதில் அளித்திருந்தது பிரதமர் அலுவலகம்.
உடனடியாக ஒவ்வொரு அமைச்சகத்திடமும் அந்த அமைச்சகத்தின் கேபினட் அமைச்சர், இணை அமைச்சர்கள் சென்ற வெளிநாட்டுப் பயணத்தின் விவரங்களையும் உடன் சென்றவர்கள் பற்றிய விவரங்களையும் கேட்டு மனு செய்தது இந்தியா டுடே.
கபில்சிபலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அமைச்சருக்கும் உடன் சென்ற அதிகாரிகளுக்கும் ஆன செலவுக் கணக்கைத் தந்தது. ஆனால் விமானக் கட்டணம் பற்றி குறிப்பிடவில்லை.
பல அமைச்சகங்கள் நழுவலாகவே பதிலளித்துள்ளன. “சம்பந்தப்பட்ட பொதுத்துறை அல்லது கேபினட் செயலகத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றபடியே அமைச்சரின் விஜயத்திற்கான செலவுகள் அமைந்தன..” என்று குறிப்பிட்டிருந்தது எ·கு அமைச்சகம்.
“இங்கே குறிப்பிட்டிருக்கும் செலவு மின்சாரத் துறை அமைச்சரின் விமானக் கட்டணத்திற்கு மட்டுமானது. அமைச்சரின் தினப்படி, ஹோட்டல் செலவு, போக்குவரத்துச் செலவு ஆகியவை குறித்த விவரங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களே கவனித்துக் கொண்டன. பிறகு அது பற்றிய கணக்குள் செலவு மற்றும் கணக்கு அலுவலகத்திற்கும் கேபினட் செயலகத்திற்கும் அனுப்பப்பட்டன..” என மின்சாரத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விரிவாகவே பதிலளித்திருந்தாலும், செலவு பற்றிய கேள்விக்கு, “இவர்களுக்கு செலவு பி.ஏ.ஓ, கேபினட் செயலகங்களின் பயணங்களுக்குப் பிறகு செலவு குறித்த விவரங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அங்கிருந்தே நீங்கள் அதனைப் பெற்றுக் கொள்ளலாம்..” என்று பதிலளித்திருக்கிறது.
அதே போல் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான அமைச்சகமும் செலவு தவிர்த்து பிற எல்லாத் தகவல்களையும் அளித்திருக்கிறது.
கடைசியாக அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த செலவு விவரங்களைக் கேட்டு கேபினட் செயலகத்தை அணுகியது இந்தியா டுடே.
“மத்திய கேபினட் அமைச்சர்களின் சம்பளங்கள், படிகள் உள்ளிட்ட செலவுகளைப் பற்றிய தகவல்களுக்கும் கேபினட் செயலகத்திற்கும் சம்பந்தமில்லை. இவையெல்லாம் பில்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகம், கேபினட் விவகாரங்களுக்கான பி.ஏ.ஓ. இடையில் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன..” என்று பதிலளித்துள்ளது கேபினட் செயலகம்.
ரயில்வே, தொழிலாளர், சுற்றுலா, வெளியுறவு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து, விவசாயம், நகர்ப்புற மேம்பாடு, நிதி, நீராதாரங்கள் போன்ற அமைச்சகங்கள் முழுத் தகவல்களையும் கொடுத்துள்ளன.
பல சிக்கலான நடைமுறைகளின் காரணமாக எவ்வளவு செலவாகிறது என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதாவது ஒரு அலுவல் ரீதியான பயணத்திற்கு எந்த அளவுக்குச் செலவாகிறது என்பது இன்னமும் மர்மமான விஷயம்தான்.
அதிகாரப்பூர்வமாக வெளிநாடு செல்ல பிரதமர் அலுவலகம் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையிலும் அமைச்சர்கள் தங்கள் பயணத்தில் பொதுமக்களின் வரிப்பணத்தை இந்த அளவுக்கு செலவழிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
பிரதமர் அலுவலகம் மட்டும் பல பயணங்களைத் தடுத்திருக்காவிட்டால், இந்தப் பட்டியல் இன்னும் பெரிதாகியிருக்கும். கூட்டணிக் கட்சிகளிலிருந்து வேண்டுகோள் வந்தால், பிரதமர் அலுவலகத்தால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. ஆனால் அதிகம் பறந்திருந்தது காங்கிரஸ் பெருந்தலைகள்தான்.
'முன்னகர்ந்து செல்லும் அரசு' என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டுபிடித்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. இப்போது அவர் உயிரோடு இருந்து ஐ.மு.கூட்டணி அரசு வெளிநாட்டுப் பயணங்களில் நகர்ந்து சென்றிருக்கும் தூரத்தைப் பார்த்திருந்தால் மயங்கியே விழுந்திருப்பார்."
நன்றி : இந்தியா டுடே, பிப்ரவரி 17, 2008
(தொடரும்)
ஏழாம் பாகம்
எட்டாம் பாகம்
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 2 comments
Labels: அரசியல், இந்தியாடுடே, பிரதமர், மந்திரிகள், மன்மோகன்சிங்
நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-5
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்
நான்காம் பாகம்
அமைச்சர்கள் அனுபவிக்கும் சலுகைகள்
விதிகள் என்ன?
கேபினட் அமைச்சர் வெளிநாடு செல்வதாக இருந்தால், அது சொந்தப் பயணமாக இருந்தாலும் சரி, அலுவலகப் பயணமாக இருந்தாலும் சரி.. வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.
அங்கே ஒப்புதல் பெற்ற பின், பிரதமரின் அனுமதிக்காக கோப்பு அனுப்பப்படும். குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்குத்தான் அனுமதி தேவையில்லை.
செலவு
அமைச்சர்கள் வெளிநாட்டிற்குச் செல்லும்போதும் அங்கிருக்கும் இந்தியத் தூதரகங்களே கட்டணங்களைச் செலுத்திவிட்டு பிறகு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடமிருந்து தொகையைப் பெற்றுக் கொள்ளும்.
சலுகைகள்
ஒரு நாளைக்கு ரூ.80,000 முதல் 1 லட்சம் வாடகையுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் ஜூனியர் அல்லது எக்சிகியூட்டிவ் சூட்களில் தங்கலாம். நியூயார்க், பாரீஸ், லண்டன் ஆகிய நகங்களில் சுற்றுலா சீசன் உச்சத்தில் இருக்கும்போது சாதாரண சூட்களில்தான் தங்க வேண்டும். ஆனால் அமைச்சர்கள் சில சமயங்களில் ரூ.2,40,000 வாடகையுள்ள பிரசிடென்ஷியல் சூட்களில்கூட தங்குகிறார்கள்.
ஒரு வெளியுறவுத்துறை அமைச்சர் பாரீசிற்குச் சென்றால் அங்கிருக்கும் பொட்டிக் ஹோட்டல்களில்தான் தங்குவாராம். வேறு ஹோட்டலே கிடைக்கவில்லை என்று அங்கிருக்கும் இந்தியத் தூதரகம் இதைச் சமாளிக்கும். இங்கே ஒரு நாள் தங்குவதற்கு வாடகை ரூ.1,14,000.
ஒரு மத்திய அமைச்சர் லண்டனுக்குச் சென்றால் அங்கிருக்கும் தோர்செஸ்டர் ஹோட்டலில் லக்ஸ¥ரி சூட்டில்தான் தங்குவார். இங்கே ஒரு நாள் வாடகை 1,31,000. தனி சேகவர், டிப்ஸ் ஆகியவற்றுக்குத் தனியாக ரூ.15,500 வரை ஆகும்.
அமைச்சர்கள் வெளிநாடு சென்றால் தினப்படியாக ரூபாய் 3000 கிடைக்கும்.
போக்குவரத்திற்கு கார்களை அங்கிருக்கும் தூதரகமே வாடகைக்கு எடுத்துக் கொடுத்துவிடும். அல்லது அழைப்பு விடுத்திருக்கும் நாடே இந்த வசதியைச் செய்து கொடுக்கும்.
மெர்சிடிஸ் ஈ கிளாஸ் கார் எனில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,600-ம், மெர்சிடிஸ் எஸ் கிளாஸ் கார் எனில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.4000-ம் ஆகும்.
உணவு தூதரகத்தாலோ, அழைப்பு விடுத்தாவர்களாலோ அவை வழங்கப்படும்.
வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறோம் என்ற பெயரில்தான் அமைச்சர்கள் இந்த சொகுசுகளை அனுபவிக்கிறார்கள். இதில் செலவழிக்க உச்சபட்ச வரம்பு ஏதும் இல்லை.
ஆனால் இதற்காகும் செலவு சில சமயம் திகைக்க வைக்கிறது. அழைப்பு விடுக்கும் அரசாங்கங்களே பெரும்பாலும் தங்கள் அரசு விருந்தினர் விடுதிகளை வழங்கும் என்றாலும், நம் அமைச்சர்கள் இம்மாதிரி ஹோட்டல்களில் தங்குவதையே விரும்புகிறார்கள்.
(தொடரும்)
ஆறாம் பாகம்
ஏழாம் பாகம்
எட்டாம் பாகம்
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 2 comments
Labels: அரசியல், இந்தியாடுடே, பிரதமர், மந்திரிகள், மன்மோகன்சிங்
நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-4
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்
வயிறு எரிய வைக்கும் புள்ளி விவரங்கள்
E.அகமது (வெளியுறவுத் துறை இணை அமைசசர்
அமைச்சராக இருந்த நாட்கள் 1,287
மொத்தப் பயணங்கள் 79
அலுவலர் ரீதியானது 76
சொந்தப் பயணம் 3
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 232
அலுவல் ரீதியானது 220
சொந்தப் பயணம் 12
பயண தூரம் 6,13,277 கி.மீ.
அரசு செல்வு 1.37 கோடி
வயலார் ரவி (வெளிநாடு வாழ் இந்தியர்கள் துறை)
பயணங்கள் 18
பயண தூரம் 2,83,036 கி.மீ.
செலவு 1.14 கோடி
மணி ஷங்கர் அய்யர் (பஞ்சாயத்துராஜ் அமைச்சர்)
பயணங்கள் 17
பயண தூரம் 2,09,239 கி.மீ.
செலவு 40 லட்சம் (சில கணக்குகள் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை)
அ.ராசா (தொலைத்தொடர்பு, தொழில் நுட்பம்)
பயணங்கள் 12
பயண தூரம் 1,89,994 கி.மீ.
செலவு தகவல் இல்லை.
விலாஸ் முட்டெம்வர் (மரபுசாரா எரிசக்தி இணையமைச்சர்)
பயணங்கள் 9
பயண தூரம் 1,56,025 கி.மீ.
செலவு 87.4 லட்சம்
சைபுதீன் சோஸ் (நீர் ஆதாரங்கள் துறை அமைச்சர்)
பயணங்கள் 9
பயண தூரம் 65,704 கி.மீ.
செலவு 14.2 லட்சம்
பிருத்விராஜ் செளகான் (பிரதமர் அலுவலக இணையமைச்சர்)
பயணங்கள் 9
பயண தூரம் 92,400 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
பனபகா லட்சுமி (சுகாதாரத்துறை இணையமைச்சர்)
பயணங்கள் 8
பயண தூரம் 1,23,811 கி.மீ.
செலவு 28.6 லட்சம்
காந்திலால் புரியா (விவசாயம், நுகர்வோர் விவகார இணையமைச்சர்)
பயணங்கள் 8
பயண தூரம் 1,18,769 கி.மீ.
செலவு 80.8 லட்சம்
சந்தோஷம் மோகன்தேவ் (கனரக தொழில்கள் துறை)
பயணங்கள் 8
பயண தூரம் 1,03,645 கி.மீ.
செலவு 52 லட்சம்.
சங்கர்சிங் வகேலா (ஜவுளித்துறை)
பயணங்கள் 8
பயண தூரம் 1,37,494 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
பிரேம்சந்த் குப்தா (கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சர்)
பயணங்கள் 7
பயண தூரம் 57,388 கீ.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
அம்பிகா சோனி (சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை)
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 23
இதில் 11 நாட்கள் எங்கேயிருந்தார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
சரத்பவார் (விவசாயம், நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம்)
அமைச்சராக இருந்த நாட்கள் 1287
மொத்தப் பயணங்கள் 27
அலுவல் ரீதியானவை 7
கிரிக்கெட் வாரியத்திற்காக 17
சொந்தப் பயணம் 3
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 97
பயண தூரம் 2,62,592 கி.மீ.
செலவு 1.03 கோடி
காந்திசிங் (கனரக தொழில்துறை இணையமைச்சர்)
பயணங்கள் 6
பயண தூரம் 54,756 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
ராம்விலாஸ் பாஸ்வான் (ரசாயனம், உரங்கள்)
பயணங்கள் 5
பயண தூரம் 58,640 கி.மீ.
செலவு 25.3 லட்சம்.
முரளி தியோரா (பெட்ரோலியம், இயற்கை எரிவாயு)
பயணங்கள் 5
பயண தூரம் 41,242 கி.மீ.
செலவு 12.6 லட்சம்
பி.கே.ஹந்திக் (ரசாயனம், உரங்கள் இணையமைச்சர்)
பயணங்கள் 5
பயண தூரம் 51,819 கி.மீ.
செலவு 69,000
அகிலேஷ் பிரசாத் சிங் (விவசாயம், நுகர்வோர் இணையமைச்சர்)
பயணங்கள் 5
பயண தூரம் 79,663 கி.மீ.
செலவு 30.5 லட்சம்
பிரணாப் முகர்ஜி (வெளியுறவுத் துறை)
பயணங்கள் 33
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 115
பயண தூரம் 3,09,145 கி.மீ.
செலவு 86 லட்சம்
சூர்யகாந்தா பாட்டீல் (கிராமப்புற மேம்பாடு)
பயணங்கள் 3
பயண தூரம் 30,656 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
சிவ்ராஜ் பாட்டீல் (உள்துறை)
பயணங்கள் 4
பயண தூரம் 24,736 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
டி.ஆர்.பாலு (கப்பல், சாலை, போக்குவரத்துத் துறை)
பயணங்கள் 4
பயண தூரம் 73,429 கி.மீ.
செலவு 14.1 லட்சம்
மஹாவீர் பிரசாத் (சிறிய நடுத்தரத் தொழில் துறை)
பயணங்கள் 4
பயண தூரம் 60,706 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
ரகுவன்ஷ் பி.சிங் (கிராமப்புற மேம்பாட்டுத் துறை)
பயணங்கள் 4
பயண தூரம் 42,078 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
தின்ஷா ஜே.படேல் (பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு)
பயணங்கள் 4
பயண தூரம் 93,512 கி.மீ.
செலவு 15.7 லட்சம்
எஸ்.ஜெய்பால் ரெட்டி (நகர்ப்புற மேம்பாட்டுத் துறை)
பயணங்கள் 4
பயண தூரம் 59,180
செலவு 43 லட்சம்.
எம்.எம்.பல்லம் ராஜூ (பாதுகாப்புத் துறை இணையமைச்சர்)
பயணங்கள் 4
பயண தூரம் 58,630 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
எச்.ஆர்.பரத்வாஜ் (சட்டம், நீதித்துறை)
பயணங்கள் 3
பயண தூரம் 47,189
செலவு 20 லட்சம்.
சிஸ்ராம் ஓலா (சுரங்கத்துறை)
பயணங்கள் 3
பயண தூரம் 57,486 கி.மீ.
செலவு 1.17 கோடி
ஆர்.வேலு (ரயில்வே துறை இணையமைச்சர்)
பயணங்கள் 3
பயண தூரம் 54,529
செலவு 11.2 லட்சம்
ப.சிதம்பரம் (நிதித்துறை)
அமைச்சராக இருந்த நாட்கள் 1287
மொத்த பயணங்கள் 24
அலுவல் ரீதியாக 24
பயண தூரம் 2,60,860 கி.மீ.
செலவு 1.45 கோடி
அகிலேஷ்தாஸ் (எ·கு துறை இணையமைச்சர்)
பயணங்கள் 2
பயண தூரம் 31,266 கி.மீ.
செலவு இல்லை.
லாலு பிரசாத் யாதவ் (ரயில்வே துறை)
பயணங்கள் 1
பயண தூரம் 15,826 கி.மீ.
செலவு 40 லட்சம்
சந்திரசேகர் சாஹ (கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர்)
பயணங்கள் 1
பயண தூரம் 12,712 கி.மீ.
செலவு 1.18 கோடி
ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (உள்துறை இணையமைச்சர்)
பயணங்கள் 3
பயண தூரம் 18,481 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
பவன்குமார் பன்சால் (சட்டம், நீதித்துறை)
பயணங்கள் 2
பயண தூரம் 25,528 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
தாசரி நாராயணராவ் (நிலக்கரித் துறை இணையமைச்சர்)
பயணங்கள் 2
பயண தூரம் 32,382 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
நரன்பாய் ரத்வா (ரயில்வே துறை இணையமைச்சர்)
பயணங்கள் 2
பயண தூரம் 36,955 கி.மீ.
செலவு 20.3 லட்சம்
ஏ.கே.ஆன்டனி (பாதுகாப்புத்துறை)
பயணங்கள் 2
பயண தூரம் 17,004 கி.மீ.
ஷகீல் அகமது (தொலைத் தொடர்பு)
பயணங்கள் 2
பயண தூரம் 15,388 கி.மீ.
செலவு 2.5 லட்சம்
மீராகுமார் (சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை)
பயணங்கள் 3
பயண தூரம் 32,296 கி.மீ.
செலவு 8.1 லட்சம்
ராவ்இந்தர்ஜித் சிங்
பயணங்கள் 26
அலுவல் ரீதியாக 23
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 130
பயண தூரம் 4,99,438 கி.மீ.
செலவு 33.3 லட்சம்
ரேணுகா சவுத்ரி (பெண்கள், குழந்தைகள், மேம்பாட்டுத் துறை)
மொத்த பயணங்கள் 25
அலுவல் ரீதியாக 22
சொந்தப் பயணம் 3
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 112
அலுவல் ரீதியாக 101
சொந்தப் பயணம் 11
பயண தூரம் 3,17,031 கி.மீ.
செலவு 56 லட்சம்.
எஸ்.ரகுபதி (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை)
பயணங்கள் 7
பயண தூரம் 70,416 கி.மீ.
செலவு 67,000 (ஒரு பயணத்துக்கு மட்டும்)
சுஷில்குமார் ஷிண்டே (மின்சாரத் துறை)
பயணங்கள் 6
பயண தூரம் 1,47,297 கி.மீ.
செலவு 29.2 லட்சம்
சுரேஷ் பசெளரி (தொழிலாளர் பொதுமக்கள் துறை இணையமைச்சர்)
பயணங்கள் 6
பயண தூரம் 85,932 கி.மீ.
செலவு 28.2 லட்சம்
ஆனந்த் ஷர்மா (வெளியுறவுத் துறை இணையமைச்சர்)
பயணங்கள் 30
பயண தூரம் 5,30,511 கி.மீ.
செலவு 1.33 கோடி
பிரபுல் பட்டேல் (விமானப் போக்குவரத்து)
மொத்த பயணங்கள் 41
அலுவல் ரீதியாக 16
சொந்தப் பயணம் 25
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 182
அலுவல் ரீதியாக 57
சொந்தப் பயணம் 125
பயண தூரம் 5,12,351 கி.மீ.
செலவு 66.5 லட்சம்
கபில்சிபல் (அறிவியல், தொழில் நுட்பம்)
அமைச்சராக இருந்த நாட்கள் 1,287
மொத்தப் பயணங்கள் 24
அலுவல் ரீதியானவை 23
சொந்தப் பயணம் 1
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 113
அலுவல் ரீதியானவை 106 நாட்கள்
சொந்தப் பயணம் 7 நாட்கள்
பயண தூரம் 3,97,813 கி.மீ.
செலவு 11.7 லட்சம்
அமெரிக்காவிற்கு மட்டும் 6 முறை சென்றிருக்கிறார்.
மலேசியா, சீன பயணத்தில் சீனாவில் மட்டும் 18 நாட்கள் குடியிருந்திருக்கிறார்.
பி.ஆர். கிந்தியா (பழங்குடியினர் விவகாரத் துறை)
பயணங்கள் 1
பயண தூரம் 11,846 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
கே.எச்.முனியப்பா (கப்பல், சாலை போக்குவரத்துத் துறை)
பயணங்கள் 1
பயண தூரம் 10,540 கி.மீ.
செலவு 1.4 லட்சம்
ஜி.கே.வாசன் (புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம்)
பயணங்கள் 1
பயண தூரம் 9,387 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
கே.வேங்கடபதி (சட்டம், நீதித்துறை இணையமைச்சர்)
பயணங்கள் 1
பயண தூரம் 11,572 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (நிதித்துறை இணையமைச்சர்)
பயணங்கள் 1
பயண தூரம் 1,370 கி.மீ.
செலவு 2.7 லட்சம்
பிரியரஞ்சன்தாஸ்முன்ஷி (தகவல் மற்றும் ஒளிபரப்பு)
அலுவல் விஷயமாக வெளிநாட்டில் இருந்தது 20 நாட்கள்
சொந்தப் பயணம் 38 நாட்கள்
இதுவரையிலும் வெளிநாட்டிற்குச் செல்லாத அமைச்சர்கள்
எச்.எம். அம்பரீஷ் (தகவல் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர்)
ஜே.பி.என். யாதவ் (நீராதாரங்கள் துறை இணையமைச்சர்)
எம்.வி.ராஜசேகரன் (திட்டத் துறை இணையமைச்சர்)
மாணிக்ராவ் கவிட் (உள்துறை இணையமைச்சர்)
சுப்புலட்சுமி ஜெகதீசன் (சமூக நீதி, மேம்பாடு)
தஸ்லீமுதீன் (விவசாயம், நுகர்வோர் விவகாரங்கள்)
வி.ராதிகா செல்வி (உள்துறை இணையமைச்சர்)
(தொடரும்)
ஐந்தாம் பாகம்
ஆறாம் பாகம்
ஏழாம் பாகம்
எட்டாம் பாகம்
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 2 comments
Labels: அரசியல், இந்தியாடுடே, பிரதமர், மந்திரிகள், மன்மோகன்சிங்
நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-3
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
படையெடுத்த புத்திசாலி மந்திரிகள்
வெளிநாட்டிற்குச் செல்லும் சலுகையை அதிகம் பயன்படுத்தியவர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத்துதான்.. கிட்டத்தட்ட சாதனையே படைத்திருக்கிறார்.
72 முறை பயணம் மேற்கொண்டு 424 நாட்கள் வெளிநாட்டில் கழித்திருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 14 மாதங்கள்.. போன வருடம் நவம்பர் 30-ம் தேதிவரை சுமார் 10,08,162 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார். இவரது பயணங்களுக்காக அரசு ரூபாய் 1.81 கோடியை செலவழித்திருக்கிறது.
வெளியுறவுத் துறை அமைச்சரைவிட இவரே மிகவும் பளிச்சென்று வெளியில் தெரியக்கூடிய நபராக இருக்கிறார். ப்ரஸ்ஸல்ஸ், பாரீஸ், நியூயார்க், பாங்காக், கோலாலாம்பூர், லண்டன் ஆகிய நகரங்களுக்குத்தான் இவர் அடிக்கடி சென்றிருக்கிறார்.
இவரோடு ஒப்பிட்டால் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மிகக் குறைவான நாட்களே வெளிநாட்டில் இருந்திருக்கிறார். அதாவது 118 நாட்கள் மட்டுமே. இவரது பயணத்திற்கு அரசு செலவழித்துள்ள தொகை ரூ.1.45 கோடி.
உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பிர·புல் பட்டேல் 41 முறை வெளிநாடு சென்றிருக்கிறார். அவற்றில் 16 தடவைகளே அதிகாரப்பூர்வமானவை. அமெரிக்காவுக்கு 6 முறையும், பிரிட்டனுக்கு 5 முறையும் சென்றிருக்கிறார்.
இவர் சொந்த விஷயமாக லண்டன், பாரீஸ், நியூயார்க், சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்காக், துபாய் போன்ற நகரங்களுக்குச் சென்றிருக்கிறார்.
அமைச்சராக வெளிநாடு சென்ற நாட்களைவிட, தன் சொந்த விஷயமாக வெளிநாடு சென்ற நாட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 57 நாட்கள் அமைச்சர் என்ற முறையிலும், 125 நாட்கள் சொந்த விஷயமாகவும் சென்று வந்துள்ளார் இவர்.
பத்மி அமைச்சர் என்கிற முறையில் 14 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். ஆனால் சொந்த விஷயமாக 181 நாட்கள் வெளிநாட்டில் சுற்றியிருக்கிறார். மொத்தமாக 2,36,005 கி.மீ. பயணம் செய்திருக்கிறார்.
பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி அமைச்சர் என்கின்ற முறையில் 20 நாட்களும், சொந்த விஷயமாக 38 நாட்களும் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். 1,59,676 கி.மீ. தூரம் பயணம் செய்திருக்கும் இவருடைய அலுவல் ரீதியான பயணங்களுக்கு அரசு 17 லட்சம் செலவழித்திருக்கிறது.
வெளியுறவுத் துறையின் இணையமைச்சர் ஈ.அகமது, தன் துறையின் கேபினட் அமைச்சரான பிரணாப் முகர்ஜியைவிட அதிக நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். மொத்தம் 232 நாட்கள். இவரது பயணத்திற்காக அரசு ரூ.1.37 கோடியைச் செலவழித்திருக்கிறதாம். 22 முறை ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றிருக்கும் அகமது, அங்கே 48 நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்.
அலுவல் ரீதியான பயணங்களைவிட சொந்த விஷயமாக அதிகம் பயணம் செய்தவர்களில் என்.டி.ராமராவின் மகள் புரந்தேஸ்வரியும் ஒருவர். மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சரான இவர், 670 நாட்கள் அமைச்சராக இருந்திருக்கிறார். இந்த நாட்களில் 8 முறை வெளிநாட்டிற்குச் சென்று வந்திருக்கிறார். மொத்தமாக 2 மாதங்கள் வெளிநாட்டில் கழித்திருக்கிறார் இவர்.
அந்தத் துறையின் கேபினட் அமைச்சரான அர்ஜூன்சிங் ஒன்பது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார்.
சரத்பவார் 97 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். அவற்றில் 49 நாட்கள் BCCI வேலையாகவும், 37 நாட்கள் விவசாய அமைச்சகம் சார்பாகவும் வெளிநாட்டில் இருந்திருக்கிறார்.
வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஆனந்த் ஷர்மா 30 வெளிநாட்டுப் பயணங்களில் 114 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். இவருக்கான மொத்தச் செலவு ரூ.1.33 கோடி.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தனது 18 வெளிநாட்டுப் பயணங்களில் 125 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார்.
சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகங்களின் சார்பில் 112 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார் ரேணுகா சவுத்ரி.
சுற்றுலா துறையிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மாறிய பின் கம்போடியா, சிகாகோ, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சொந்தப் பயணமாகச் சென்று வந்திருக்கிறார் ரேணுகா.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் என்ற முறையில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் சுமார் 46 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார். இதற்கு 2.26 கோடி ரூபாயை அரசு செலவழித்திருக்கிறது.
புள்ளியியல் அமைச்சராகத்தான் ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெனிவா என அதிக நாடுகளுக்குச் சென்றிருக்கிறார் ஆஸ்கர் ·பெர்னாண்டஸ்.
அமைச்சரான 2 மாதங்களில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், இத்தாலி, கனடா நாடுகள் உள்பட 13 முறை வெளிநாடுகளுக்குப் படையெடுத்திருக்கிறார் சுபோத்காந்த் சகாய்.
தாய்லாந்து, கோலாலாம்பூர், ஜெனீவா, செஷல்ஸ், சிங்கப்பூர் என 117 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார் அன்புமணி. மொத்தம் 254 லட்சம் கி.மீ. பறந்திருக்கிறார்.
சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் இணையமைச்சரான நமோநாராயண் மீனா கனடா, பிரேசில், அமெரிக்கா, லண்டன், செக் குடியரசு ஆகிய நாடுகளுக்குப் பறந்திருக்கிறார்.
18 அதிகாரப்பூர்வ பயணங்களில் 55 நாட்கள் வெளிநாட்டில் கழித்திருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உஸ்பெகிஸ்தானுக்கு 3 முறையும், பாங்காக்கிற்கு 2 முறையும் சென்றிருக்கிறார்.
670 நாட்கள் அமைச்சராக இருந்திருக்கும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சரான அஸ்வினிகுமார் கஜகிஸ்தான், எகிப்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 75 நாட்கள் செலவழித்திருக்கிறார்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், பகு, டாக்கா, மணிலா போன்ற யாரும் அதிகம் செல்லாத இடங்களுக்குச் சென்றிருக்கிறார். அமைச்சராக இருந்த 670 நாட்களில் 4 முறை பயணம் செய்திருக்கிறார்.
வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு இணையமைச்சர் குமாரி செல்ஜா, அம்மான், கனடா, பிரான்ஸ், எகிப்து உள்பட 14 பயணங்களில் 66 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார்.
மொத்தத்தில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசின் அமைச்சர்கள் 78 பேரில் 71 பேர்கள்(பிரதமரைத் தவிர்த்து) 786 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். 1287 நாட்களில் 1.02 கோடி கி.மீ. தூரம் பறந்திருக்கிறார்கள்.
(தொடரும்)
நான்காம் பாகம்
ஐந்தாம் பாகம்
ஆறாம் பாகம்
ஏழாம் பாகம்
எட்டாம் பாகம்
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 5 comments
Labels: அரசியல், இந்தியாடுடே, பிரதமர், மந்திரிகள், மன்மோகன்சிங்
நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-2
முதல் பாகம்
இந்தியா டுடே, பிப்ரவரி 27, 2008
மத்திய அமைச்சர்களின் உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்களுக்கு நிதியமைச்சகம் நிதி ஒதுக்குகிறது. ஒதுக்கப்படும் நிதியைவிட ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மடங்கு செலவழித்து சாதனை நடத்தி வருகின்றனர் அமைச்சர்கள்.
சிதம்பரம் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் அமைச்சர்களின் பயணத்துக்காக ஒதுக்கீடு செய்தது 46 கோடி ரூபாய். ஆனால் செலவு செய்யப்பட்டதோ 80.2 கோடி.
கடந்த 2005-06ம் நிதியாண்டில் சிக்கன நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணத்தை கட்டுப்படுத்தும் வகையில் 28 நிபந்தனைகளை மத்திய அரசு விதித்தது.
இருந்தாலும், அதற்கு முந்தைய ஆண்டைவிட சற்று கூடுதலாகவே அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பயணத்துக்கு 47.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார் சிதம்பரம்.
முந்தைய ஆண்டைவிட 2006-06ம் நிதியாண்டில் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பயணச் செலவு குறைந்தாலும், ஒதுக்கீட்டைவிட அதிகரித்து ரூ.62.58 கோடி செலவு ஏற்பட்டது.
அதற்கு அடுத்தாண்டில் கட்டுப்பாடுகள் கட்டவிழ்ந்தன. சிதம்பரம் 45.18 கோடியை ஒதுக்கீடு செய்ய, செலவு ஏற்பட்டதோ ரூ.92.31 கோடி.
நிறைய செலவாகிறதே என்று 2007-08ம் நிதியாண்டில் தாராளமாக ரூ.75.5 கோடி ஒதுக்கீடு செய்தார் சிதம்பரம். இதனால் குஜாலான நமது அமைச்சர்கள் 150.43 கோடி செலவிட்டு அசத்திவிட்டனர்.
கடைசி நிதியாண்டில் தற்போதைய கூட்டணி அரசு இருக்கிறது. எனவே அமைச்சர்களின் எதிர்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் மட்டுமல்லாது, அவர்களே வாய் பிளக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் ரூ.160.76 கோடி ஒதுக்கி மனம் குளிர வைத்தள்ளார் சிதம்பரம்.
போன வருடம் நவம்பர் மாதம் 30-ம் தேதியோடு கணக்கிட்டால் 1,287 நாட்கள் ஆட்சியில் இருந்திருக்கிறது ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு. இந்த நாட்களில் இதன் அமைச்சர்கள் சுமார் 1 கோடி கிலோ மீட்டர்கள் பயணம் செய்திருக்கிறார்கள்.
சொந்தப் பயணங்களும் இதில் அடங்கும் என்றாலும் பெரும்பாலும் அதிகாரப்பூர்வ விஜயங்களும்தான். இவர்கள் பயணம் செய்த மொத்த தூரத்திற்கு பூமியையே 256 முறை சுற்றி வந்துவிடலாம்.
பதவியிலிருந்த போது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த அமைச்சர்களில் 47 அமைச்சர்கள் 27 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள்.
78 அமைச்சர்களில் 12 அமைச்சர்களாவது தலா இரண்டரை கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார்கள்.
அலுவலைவிட சொந்த விஷயமாக வெளிநாடுகளைச் சுற்றிய அமைச்சர்கள் பட்டியலும் அதிகமாகவே இருக்கிறது.
மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் எம்.ஏ.ஏ.·பத்மி, புரந்தேஸ்வரி, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ்முன்ஷி, சுரங்கத்துறை அமைச்சர் சிஸ்ராம் ஓலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் தின்ஷா ஜே.படேல், கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரேம்சந்த்குப்தா, எ·கு துறை இணையமைச்சர் அகிலேஷ்தாஸ் ஆகியோர்தான் சொந்த செலவில் அதிகம் தடவை நாடு சுற்றிய மகாதேவர்கள்.
ஆனால் பல சமயங்களில் அமைச்சகங்களுக்கும், அந்த அமைச்சர்கள் மேற்கொண்ட பயணங்களுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்து கொள்வது கடினமான காரியமாகவே இருக்கிறது.
வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கான இணையமைச்சர் ஏன் உஸ்பெகிஸ்தானுக்கு மூன்று முறை செல்ல வேண்டும்?
ஏன் அமைச்சர்கள் அடிக்கடி செர்பியா செல்கிறார்கள்?
அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களில் செலவழிப்பதற்கென்று தனி விதிமுறைகள் இருந்தாலும் சிறந்த ஹோட்டல்களில் தங்கவும், விலையுயர்ந்த காரில் செல்லவும் விரும்புகிறார்கள். இதற்கு அங்கிருக்கும் தூதரகங்களை வற்புறுத்தவும் செய்கிறார்கள்.
பல அமைச்சர்கள் தங்கள் வேலைகளுக்குச் சம்பந்தமில்லாத இடங்களுக்கே செல்கிறார்கள். கிடைத்திருக்கும் தகவல்களின்படி 17 அமைச்சர்கள் தாய்லாந்திற்குச் சென்றிருக்கிறார்கள்.
14 அமைச்சர்கள் மலேசியாவிற்கு ஒரு முறையாவது சென்றிருக்கிறார்கள்.
தங்களுக்குப் போதுமான வேலை ஒதுக்கப்படவில்லை என்று மூக்கு சீந்திய இணையமைச்சர்கள்தான் அதிகம் வெளிநாடுகளில் டூர் அடித்திருக்கிறார்கள்.
மொத்தமுள்ள 40 இணையமைச்சர்களில் 33 பேர் 311 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களில் 7 பேர் வெளிநாட்டு மண்ணையே மிதிக்காத ஏமாளிகளாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா காந்தி பிறந்த நாடான இத்தாலிக்கு ஏகப்பட்ட அமைச்சர்கள் சொந்த முறையிலும், அதிகாரப்பூர்வமாகவும் சென்று வந்திருக்கிறார்கள்.
ரவிசங்கர்பிரசாத், சுஷில்குமார்ஷிண்டே, கமல்நாத், காந்திலால்புரியா, ஆர்.வேலு, சந்தோஷ்மோகன்தேவ், அம்பிகா சோனி, சுபோத்காந்த்சகாய், சங்கர்சிங்வகேலா, விலாஸ் முட்டெம்வர், எஸ்.ஜெய்பால்ரெட்டி, ஆஸ்கர் ·பெர்னாண்டஸ், பி.ஆர்.சிந்தியா, அகிலேஷ் பிரஸாத்சிங், அஸ்வினிகுமார், பிரகாஷ்ஜெய்ஸ்வால், ரேணுகா சவுத்ரி ஆகிய அமைச்சர்கள் இதில் அடக்கம்.
பிரணாப் முகர்ஜி, ஆனந்த் ஷர்மா, சரத்பவார்(விவசாயத் துறை அமைச்சகம் சார்பாக பறந்ததைவிட பி.சி.சி.ஐ சார்பாக பறந்ததுதான் அதிகம்), அன்புமணி ராமதாஸ், ரேணுகா செளத்ரி, கபில்சிபல், வயலார் ரவி, இந்தர்ஜித் சிங், அஸ்வினி குமார் ஆகியோர் அதிகம் பறந்த சில அமைச்சர்கள்.
(தொடரும்)
மூன்றாம் பாகம்
நான்காம் பாகம்
ஐந்தாம் பாகம்
ஆறாம் பாகம்
ஏழாம் பாகம்
எட்டாம் பாகம்
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 4 comments
Labels: அரசியல், இந்தியாடுடே, பிரதமர், மந்திரிகள், மன்மோகன்சிங்
நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-1
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எந்த நேரத்தில் ‘எனது ஆகாசக் கனவு’ என்கிற பதிவை எழுதினேன் என்று தெரியவில்லை. அந்தக் கனவை நினைத்து ஏக்கத்துடன் இருப்பவனின் மனதில் நெருப்பு கங்கை கொட்டிவிட்டது கடந்த பிப்ரவரி மாத 'இந்தியா டுடே'யில் வந்திருந்த ஒரு கவர் ஸ்டோரி.
கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் நான்கு மாதங்கள் கழித்து வீட்டைச் சுத்தம் செய்யலாம் என்று ஒழுங்கு செய்கையில், அந்த 'இந்தியா டுடே' பத்திரிகை கைக்குக் கிடைத்தது. சும்மா ஒரு புரட்டு புரட்டியவனின் கண்ணில்பட்டது இந்த கொடுமை..
படிக்கும்போதே வயிறு எரிய ஆரம்பித்தது. படித்து முடித்தவுடன் எத்தனை குடம் தண்ணீர் குடித்தாலும் தீ அணையாது போலிருந்தது. சரி.. வழக்கம்போல பதிவு போட்டாவது தீயை அணைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து வீட்டை ஒட்டடை அடிக்கும் வேலையை ஒத்திவைத்துவிட்டு டைப் செய்துவிட்டேன்..
கொஞ்சூண்டு நீளமாக இருந்ததினால் பிரித்துப் போட்டுள்ளேன். படித்துப் பார்த்து எனது வயிற்றெரிச்சலில் கொஞ்சத்தையாவது யாரேனும் பங்கு போட்டுக் கொள்ள முன் வந்தால், எனக்கு பெரும் உதவியாக இருக்கும்.. வயிறு எரியுதே? வேற என்ன செய்ய..?
(தொடரும்)
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்
நான்காம் பாகம்
ஐந்தாம் பாகம்
ஆறாம் பாகம்
ஏழாம் பாகம்
இறுதி பாகம்
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 5 comments
Labels: அரசியல், இந்தியாடுடே, பிரதமர், மந்திரிகள், மன்மோகன்சிங்
எனது ஆகாசக் கனவு!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 54 comments
Labels: அனுபவங்கள், திண்டுக்கல், விமான நிலையம், விமானம்