கலைஞரின் அடுத்த அஸ்திரம் கலைமாமணி விருதுகள்..!

31-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எப்பாடுபட்டாவது ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் தமிழ்த் தாத்தா, எப்போதும்போல் தமிழர்களை ஆட்டிப் படைக்கும் சினிமா என்னும் மாய வலையினால் உருவாகியிருக்கும் பிரபலத்தனத்தை தனது கட்சிக்கான பிரச்சார யுக்தியாக மாற்றும்விதமாக முதலில் இரண்டாண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை அவசரம், அவசரமாக வெளியிட்டார்.

இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் 2008, 2009, 2010 ஆகிய மூன்றாண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக கலைமாமணியை அள்ளி வழங்கி தனது கொடை வள்ளல்தனத்தை மக்களிடையே கொண்டு வந்திருக்கிறார். முதலில் பட்டியலைப் படியுங்கள்.

 
2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :

1. சசிரேகா பாலசுப்ரமணியன் - நாட்டியம்   

2. காயத்ரி சங்கரன்- கர்நாடக இசை   

3. வே. நாராயணப் பெருமாள் - கர்நாடக இசை   

4. எம்.வி. சண்முகம் - இசைக் கலைஞர்   

5. இளசை சுந்தரம் - இயற்றமிழ் கலைஞர்   

6. பி. லெட்சுமி நரசிம்மன் - தவில் கலைஞர்   

7. காளிதாஸ், திருமாந்திரை - நாதஸ்வரக் கலைஞர்   

8. பிரேமா ஜெகதீசன் - நாட்டியம்   

9. ரோபோ சங்கர் - சின்னத்திரை கலைஞர்   

10. நாமக்கல் வேணுகோபால் - கிளாரிநெட்   

11. திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி - நாதஸ்வரக் 
      கலைஞர்கள்   

12. கவிக்கொண்டல் செங்குட்டுவன் - இயற்றமிழ் கலைஞர்   

13. ச. சுஜாதா க/பெயர் பீர் முகமது - நாட்டியம்   

14. ராணி மைந்தன் - இயற்றமிழ் கலைஞர்   

15. ஜி.கே. இராமஜெயம் - ஓவியக் கலைஞர்   

16. கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் - இயற்றமிழ் கலைஞர்   

17. தஞ்சை சுபாஷினி மற்றும்  ரமா - பரதநாட்டியக் கலைஞர்கள்   

18. சி.வி. ரமேஸ்வர சர்மா - சமையல் கலைஞர்   

19. திருமுருகன் - சின்னத்திரை இயக்குநர்   

20. பரத்வாஜ் - இசையமைப்பாளர்   

21. ராஜீவ் மேனன் - ஒளிப்பதிவாளர்   

22. சிற்பி குட்டப்பன் நாயர் - சிற்பக் கலைஞர்   

23. தோஹா பேங்க் சீதாராமன் - பண்பாட்டுக் கலை பரப்புனர்   

24. என். எத்திராசன் - கலைப் பரப்புனர்   

25. கருணாஸ் - நகைச்சுவை நடிகர்

2009 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :

1. காயத்ரி கிரீஷ் - கர்நாடக இசை   

2. சேக்கிழார் - சின்னத்திரை வசனகர்த்தா   

3. சாக்ஷி சிவா - சின்னத்திரை நடிகர்   

4. மாளவிகா - சின்னத்திரை நடிகை   

5. பூவிலங்கு - மோகன் சின்னத்திரை நடிகர்   

6. எஸ். முத்துராமலிங்கம் - கூத்துக் கலைஞர்   

7. பி. முருகேஸ்வரி - கரகாட்டக் கலைஞர்

8. ரேவதி சங்கரன் - சின்னத்திரை நடிகை   

9. தஞ்சை சின்னப்பொன்னு குமார் - கிராமியப் பாடகர்   

10. எல். ஜான்பாவா - சிலம்பாட்டக் கலைஞர்   

11. ரேவதி - வில்லுப்பாட்டுக் கலைஞர்   

12. கே. கருப்பண்ணன் - ஒயிலாட்டக் கலைஞர்   

13. கே.ஏ. பாண்டியன் - நையாண்டி மேளக் கலைஞர்   

14. எம். திருச்செல்வம் - நையாண்டி மேளக் கலைஞர்   

15. சிவகங்கை வி. நாகு - நையாண்டி மேளக் கலைஞர்   

16. டி. சேகர் - கிராமியக் கருவி இசைக் கலைஞர்   

17. மு. இளங்கோவன் - கிராமியக் கலை பயிற்றுனர்   

18. சா. கந்தசாமி - இயற்றமிழ்   

19. ராஜேஷ் குமார் - இயற்றமிழ்   

20. நாஞ்சில் நாடன் - இயற்றமிழ்   

21 ரோகிணி - குணச் சித்திர நடிகை   

22 சரண்யா - குணச் சித்திர நடிகை   

23 சின்னி ஜெயந்த் - நகைச்சுவை நடிகர்

2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :

1. பொன். செல்வகணபதி - இயற்றமிழ்   

2. பேராசிரியர் தே. ஞானசேகரன் - இயற்றமிழ்   

3. டாக்டர் சு. நரேந்திரன் - இயற்றமிழ்   

4. டாக்டர் தமிழண்ணல் -  இயற்றமிழ்   

5. திண்டுக்கல் ஐ. லியோனி - இலக்கியச் சொற்பொழிவாளர்   

6. சொ. சத்தியசீலன் - சமயச் சொற்பொழிவாளர்   

7. தேச. மங்கையர்க்கரசி - சமயச் சொற்பொழிவாளர்   

8. டி.வி. கோபாலகிருஷ்ணன் - இசை ஆசிரியர்   

9. கே. என். சசிகிரண் - குரலிசைக் கலைஞர்   

10. குடந்தை ஜெ. தேவிபிரசாத் - வயலின் கலைஞர்   

11. ஐ. சிவக்குமார் - மிருதங்க ஆசிரியர்   

12. என்.எஸ். ராஜம் - மிருதங்க கலைஞர்   

13. ஸ்ரீனிவாசன் - வீணை கலைஞர்   

14. ராஜேஷ்  வைத்யா - வீணைக் கலைஞர்   

15. திருவாரூர் எஸ். சாமிநாதன் - புல்லாங்குழல் 

16. கே.வி. இராமானுஜம் - புல்லாங்குழல்   

17. டாக்டர் தி. சுரேஷ் சிவன் - தேவார இசைக் கலைஞர்   

18. கல்யாணி மேனன் - மெல்லிசைப் பாடகி   

19. திருக்கடையூர் முரளிதரன் - நாதஸ்வரக் கலைஞர்   

20. ரெட்டியூர் செல்வம் - தவில் கலைஞர்   

21. ஏ.ஹேம்நாத் - பரத நாட்டியம்   

22. பிரசன்னா ராமசாமி - நாடகக் கலைஞர்   

23. எப். சூசை மாணிக்கம் - நாடக நடிகர்   

24. ஆர்யா - திரைப்பட நடிகர்   

25. அனுஷ்கா - திரைப்பட நடிகை   

26. தமன்னா - திரைப்பட நடிகை

இந்த விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறுமாம்.  மேலும் அன்றைக்கே ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளும் - பாரதி விருது, எம்.எஸ். சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருது ஆகியவைகளும் சேர்த்து வழங்கப்படுமாம்.

இப்போது எந்த முறையில் கலைமாமணி விருதைப் பெறுவதற்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்தான் விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து செய்தித் துறைக்கு அனுப்பி வைக்கிறது. அங்கிருந்து முதல்வருக்கு அது பாஸ் செய்யப்படுகிறது என்கிறார்கள்.

ஆனால் நடிக்க வந்து சில ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில் தமன்னாவுக்கும், அனுஷ்காவுக்கும் கொடுத்திருப்பது கோடம்பாக்கத்தில் வழக்கமான தி.மு.க.வின் காமெடியாகவே பேசப்படுகிறது.

ஒரு காலத்தில் கலைமாமணி விருது பெற சில விதிமுறைகள் இருந்தன என்கிறார் கோடம்பாக்கத்தின் அதிசய மனிதரான பிலிம் நியூஸ் ஆனந்தன்.. அதிகமான படங்களில் நடித்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு முறையாவது தமிழக அரசின் சிறந்த நடிகை அல்லது நடிகருக்கான விருதைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருந்தனவாம். இப்போது இதுவெல்லாம் கட்சிகளின் தேர்தல் அறிக்கையைப் போல காணாமலேயே போய்விட்டன.


இப்போது யார், யாருக்கு விருதுகளை வழங்கினால், அவர்கள் அங்கே வருகை தருவதால், நம்முடைய சொந்த டிவிக்கு விளம்பர வருவாய் கூடுதலாகக் கிடைக்கும் என்றுதான் யோசிக்கிறார்கள். இந்தச் சிந்தனையை முதலில் ஆரம்பித்து வைத்தது தி.மு.க. பின்பு இந்த வழிமுறையையே தொடர்ந்திருக்கிறது அ.தி.மு.க. இப்போது மீண்டும் தி.மு.க. இப்போதும் அதையே யோசித்து செயல்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய கோடம்பாக்கத்து டாக்..!


என்னவோ செஞ்சுட்டுப் போய்த் தொலைங்க..! சினிமா துறையில் யாருக்கு கலைமாமணி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் நான் கவலைப்படப் போவதில்லை. அதனைப் பற்றி அக்கறையும் படப் போவதில்லை. ஏன் என்பதை தயவு செய்து இந்தப் பதிவிற்குச் சென்று படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!

மற்றபடி இந்த முறை நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, கவிக்கொண்டல் செங்குட்டுவன், இளசை எஸ்.சுந்தரம், ராணிமைந்தன், ராஜேஷ்குமார், சொ.சத்தியசீலன், தமிழண்ணல், லியோனி போன்றோரும் இருப்பது பெருமைக்குரியதுதான்..!

நாஞ்சில் நாடனுக்கும், சா.கந்தசாமிக்கும் இப்போதுதானா என்று நினைத்துப் பார்க்காமல் இப்போதாவது கொடுத்தார்களே என்று நினைத்துத் திருப்திப்பட்டுக் கொள்ளலாம்..!

ஏனெனில் ஆள்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. ஆண்டவர்கள். அவர்களாகப் பார்த்து எப்போது, எதைக் கொடுத்தாலும் சமர்த்தாக வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போவதுதான் நம்மை மாதிரி அடிமைகளுக்கு நல்லது..! வேறு வழியில்லை.

அடுத்த பிறவியிலாவது உண்மையான ஜனநாயகமுள்ள நாட்டில் பிறந்து தொலைப்போம்..!

நன்றி..!

தொடர்புடைய முந்தைய பதிவு இது :

யாருக்குய்யா வேணும்...!? போங்கய்யா நீங்களும் உங்க 'கலைமாமணி'யும்!!

இந்த வருடமும் ஏமாற்றமளித்த பத்ம விருதுகள்..!

30-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2010-ம் ஆண்டுக்கான இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகளை மத்திய அரசு சென்ற வாரம் அறிவித்துள்ளது.

கலை, பொது நலச் சேவை, அறிவியல், தொழில் நுட்பம், தொழில் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, அரசுப் பணி என்று அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கி இதில் அப்போதைய ஆளும் அரசினை எதிர்க்காதவர்களை தேடிப் பிடித்து வாரி வழங்கி வருவதுதான் பத்ம விருதுகள்.

அவரது துறையில் உயர்ந்த, அரிய சாதனைகளைப் படைத்து புகழ் பெற்றிருக்கும் ஒருவருக்கு பத்ம விபூஷன் விருதும், சாதனை படைத்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதும், புகழ் பெற்றவர்களுக்கு பத்ம‚ விருதும் வழங்கப்படுகிறது.


இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளைப் பெறுவதற்கு 1303 விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில் யோகா குரு பாபா ராம்தேவ், பேஷன் டிஸைனர் ரிட்டு பெரி, துப்பாக்கிச் சுடும் வீரர் தேஜஸ்வாணி சவாண்ட், நடிகை ஜெயபிரதா, பிரியங்கா சோப்ரா, சல்மான்கான் என்று பலரும் சிபாரி செய்யப்பட்டிருந்தார்கள்.

இவர்களுடன் கூடவே சாலை போக்குவரத்தில் நடைபெற்ற ஊழலைத் தட்டிக் கேட்டு படுகொலையான சத்யேந்திர துபே மற்றும் மஞ்சுநாத் சண்முகம் இருவரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ஆனால் எதிர்பார்த்தது போலவே இவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவில்லை. இவர்கள் மட்டுமல்ல.. உத்தர்காண்ட் மாநில தற்போதைய முதலமைச்சர் ரமேஷ் போக்ரியல் தான் எழுதிய நிஷான்க் என்கிற புத்தகத்திற்காக இலக்கியப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தாராம். இதோடு கூடவே ஒரிஸ்ஸா மாநில முன்னாள் முதலமைச்சர் கிரிதர் கொமாங்கின் பெயர் வாத்தியக் கருவியின் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரில் இருந்ததாம்.. நல்ல வேளை.. இவர்கள் இருவரின் பெயர்களும் இந்தாண்டுக்கான லிஸ்ட்டில் இல்லை.

இந்த ஆண்டுக்கான பட்டியலில் 12 பிரிவுகளின் கீழ் அயல் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் விருதுகளைப் பெறுகிறார்கள். 13 பத்ம விபூஷன் விருதுகள், 31 பத்ம பூஷன் விருதுகள், 84 பத்ம‚ விருதுகள் என மொத்தம் 130 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் 17 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகளும், ஜால்ராக்களும் பொதுச்சேவை என்கிற பிரிவின் கீழ் விருதினைப் பெற்றுள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

பத்ம விபூஷன் விருதினைப் பெற்றுள்ள கபில் வாத்ஸாயன், மற்றும் மாண்டேக்சிங் அலுவாலியாவைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்..!  மாண்டேக்சிங், பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆத்மார்த்தமான தோழர். “இந்திய விவசாயிகளுக்கு இன்னும் எத்தனை வருடம்தான் மானியம் தருவது..?” என்று சமீபத்தில்தான் மீடியாக்களிடம் அலுத்துக் கொண்டார் இந்த மாண்டேக்சிங். அந்த அளவுக்கு நல்ல மனிதரும்கூட..! இதற்காக பாரத்ரத்னா விருதைக்கூட இவருக்குக் கொடுத்திருக்கலாம்..!

இதில் ஆச்சரியப்படுத்தியிருக்கும் ஒரு விஷயம், அடல்பிகாரி வாஜ்பாயின் நெருங்கிய நண்பரும், அவருடைய ஆட்சிக் காலத்தில் 'சாணக்கிய குரு' என்ற பட்டத்தையும் பெற்றிருந்த பிரிஜேஸ் மிஷ்ராவிற்கு அரசு நிர்வாகத் துறையின் கீழ் பத்ம விபூஷன் விருதை வழங்கியிருப்பதுதான். என்ன லின்க்கோ தெரியவில்லை..!

கலைத்துறையின் சார்பில் தெலுங்குலகின் பழம் பெரும் நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவ், பத்ம விபூஷன் விருதினைப் பெறுகிறார். ஹிந்தி திரையுலகின் பழம் பெரும் நடிகர் சசிகபூர், நடிகை வஹிதா ரஹ்மான், இசையமைப்பாளர் ஹாயம் மற்றும் தமிழ்நாட்டின் பாடும் குயில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நால்வரும் பத்ம பூஷன் விருதினைப் பெறுகின்றனர்.

மேலும் நடிகைகள் கஜோல், தபு, நடிகர் இர்பான்கான், வங்காளத்தின் ஸ்வீட் மாமியார் உஷா உதூப், கன்னட இயக்குநர் கிரீஷ் காஸரவல்லி, மலையாள இயக்குநர் ஷாஜி கரூண், நடிகர் ஜெயராம் ஆகியோர் பத்ம
ஸ்ரீ விருதினைப் பெறுகிறார்கள். இதில் நடிகர் ஜெயராமிற்கு தமிழ்நாடு மாநில கோட்டாவில் விருது வழங்கப்பட்டுள்ளது எப்படி என்று எனக்குப் புரியவில்லை.

நான் வருடந்தோறும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, பிலிம் நியூஸ் ஆனந்தன், பி.பி.சீனிவாஸ், எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் என்ற உயரிய கலையுலகக் கலைஞர்கள் உயிரோடு இருக்கின்றபோதே பத்ம
ஸ்ரீ விருதாவது கொடுத்து இந்திய அரசு தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் என்று பார்க்கிறேன்.. ம்ஹூம்.. எனது ஆசை கனவாகவே இருந்து தொலைகிறது..!

டி.எம்.எஸ். எப்படியோ கஷ்டப்பட்டு 2003-ல் பத்ம
ஸ்ரீ விருதைப் பெற்றுவிட்டார். சுசீலாம்மா பத்ம பூஷன் விருதையே பெற்றுவிட்டார்கள். இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும்கூட பத்ம பூஷன் விருதினைப் பெற்றுவிட்டார்கள். பாடகி சித்ராவும்  பத்மஸ்ரீ விருதைப் பெற்றுவிட்டார்.

ஆனால் இவர்களுக்கும் மூத்த அந்தத் திரைக் கலைஞர்களுக்கு இன்னமும் பத்ம விருதுகள் கொடுக்கப்படாதது அதிர்ச்சியாக உள்ளது. இதனைப் பொறுப்பாக பரிந்துரைக்க வேண்டியவர்களே பாராமுகமாக இருக்கும்போது நாம் என்ன செய்ய..? கேவலம்..!

2010-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளின் முழுப் பட்டியல் இது :

பத்ம விபூஷன் விருது பெற்றவர்கள் :
 
1.    Dr. (Smt.) Kapila Vatsyayan  -  Art - Art Administration and Promotion. -   Delhi   
 
2.    Mrs. Homai Vyarawalla  -  Art - Photography -  Gujarat   
 
3.    Shri A Nageshwara Rao -   Art- Cinema - Andhra Pradesh   
 
4.    Shri Parasaran Kesava Iyengar -   Public Affairs -  Delhi   
 
5.    Dr. Akhlaq-ur-Rehman Kidwai  -  Public Affairs -  Delhi   
 
6.    Shri Vijay Kelkar  -  Public Affairs -  Delhi   
 
7.    Shri Montek Singh Ahluwalia -   Public Affairs - Delhi   
 
8.    Shri Palle Rama Rao  -  Science and Engineering - Andhra Pradesh   
 
9.    Shri Azim Premji  -  Trade and Industry - Karnataka   
 
10.    Shri Brajesh Mishra  -  Civil Services -  Madhya Pradesh   
 
11.    Prof. (Dr.) Ottaplakkal Neelakandan Velu Kurup  -  Literature and Education - Kerala   
 
12.    Dr. Sitakant Mahapatra - Literature and Education - Orissa   
 
13.    Late Shri L. C. Jain -  Public Affairs - Delhi *   
 
பத்ம பூஷன் விருது பெற்றவர்கள் :

1.    Shri Satyadev Dubey  -  Art - Theatre -   Maharashtra   
 
2.    Shri Mohammed Zahur Khayyam Hashmi alias Khayyam  -  Art - Cinema - Music  - 
       Maharashtra   
 
3.    Shri Shashi Kapoor - Art - Cinema  -  Maharashtra   
 
4.    Shri Krishen Khanna - Art - Painting -   Haryana   
 
5.    Shri Madavur Vasudevan Nair  -  Art - Dance - Kathakali  -  Kerala   
 
6.    Ms. Waheeda Rehman  -  Art - Cinema  -  Maharashtra   
 
7.    Shri Rudrapatna Krishna Shastry Srikantan  -  Art - Music-Vocal -   Karnataka   
 
8.    Ms. Arpita Singh  -  Art - Painting  -  Delhi   
 
9.    Dr. Sripathi Panditharadhyula Balasubrahmanyam  -  Art - Playback Singing, Music 
       Direction & acting  -  Tamil Nadu   
 
10.    Shri C.V. Chandrasekhar    Art - Classical Dance-Bharatanatyam - Tamil Nadu   
 
11.    Shri Dwijen Mukherjee  -  Art  -  West Bengal   
 
12.    Smt. Rajashree Birla  -  Social work  -  Maharashtra   
 
13.    Mrs. Shobhana Ranade  -  Social work  -  Maharashtra   
 
14.    Dr. Suryanarayanan Ramachandran  -  Science and Engineering -  Tamil Nadu   
 
15.    Shri S.(Kris) Gopalakrishnan  -  Trade and Industry  -  Karnataka   
 
16.    Shri Yogesh Chander Deveshwar -   Trade and Industry  -  West Bengal   
 
17.    Ms. Chanda Kochhar  -  Trade and Industry  -  Maharashtra   
 
18.    Dr. K. Anji Reddy -   Trade and Industry- Pharmacy  -  Andhra Pradesh   
 
19.    Shri Analjit Singh  -  Trade and Industry -  Delhi   
 
20.    Shri Rajendra Singh Pawar -  Trade and Industry -  Haryana   
 
21.    Dr. Gunapati Venkata Krishna Reddy-Trade and Industry-Andhra Pradesh   
 
22.    Shri Ajai Chowdhary-Trade and Industry-Delhi   
 
23.    Shri Surendra Singh-Civil Services-Delhi   
 
24.    Shri M. N. Buch-Civil Services-Madhya Pradesh   
 
25.    Shri Shyam Saran - Civil Services -   Delhi   
 
26.    Shri Thayil Jacob Sony George - Literature and Education - Karnataka   
 
27.    Dr. Ramdas Madhava Pai  -  Literature and Education  -  Karnataka   
 
28.    Shri Sankha Ghosh  -  Literature and Education -   West Bengal   
 
29.    Late Shri K. Raghavan Thirumulpad -   Medicine - Ayurveda.  -  Kerala*   
 
30.    Late Dr. Keki Byramjee Grant -   Medicine - Cardiology  -  Maharashtra *   
 
31.    Late Shri Dashrath Patel  -  Art -   Gujarat *   
 
பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் :

1.    Ms. Neelam Mansingh Chowdhry    Art - Theatre    Chandigarh   
 
2.    Shri Makar Dhwaja Darogha    Art- Chhau Dance    Jharkhand   
 
3.    Shri Shaji Neelakantan Karun    Art - Film Direction    Kerala   
 
4.    Shri Girish Kasaravalli    Art - Film making    Karnataka   
 
5.    Ms. Tabassum Hashmi Khan alias Tabu    Art - Cinema    Maharashtra   
 
6.    Shri Jivya Soma Mase    Art - Warli Painting    Maharashtra   
 
7.    Guru (Ms.) M.K. Saroja    Art - Dance- Bharatnatyam    Tamil Nadu   
 
8.    Shri Jayaram Subramaniam    Art - Cinema    Tamil Nadu   
 
9.    Pandit Ajoy Chakraborty    Art - Music-Indian Classical Vocal    West Bengal   
 
10.    Smt. Mahasundari Devi    Art - Mithilia/ Madhubani Painting.    Bihar   
 
11.    Shri Gajam Govardhana    Art - Handloom Weaving    Andhra Pradesh   
 
12.    Ms. Sunayana Hazarilal    Art - Dance - Kathak    Maharashtra   
 
13.    Shri S.R. Janakiraman    Art - Carnatic Vocal Music    Tamil Nadu   
 
14.    Shri Peruvanam Kuttan Marar    Art - Chenda Melam- Drum concert    Kerala   
 
15.    Smt. Kalamandalam Kshemavathy Pavithran    Art - Dance - Mohiniattam    Kerala   
 
16.    Shri Dadi Dorab Pudumjee    Art - Puppetry    Delhi   
 
17.    Shri Khangembam Mangi Singh    Art - Traditional Music of Manipur (Pena)    
         Manipur   
 
18.    Shri Prahlad Singh Tipaniya    Art - Folk Music    Madhya Pradesh   
 
19.    Smt. Usha Uthup    Art - Music.    West Bengal   
 
20.    Smt. Kajol    Art- Cinema    Maharashtra   
 
21.    Shri Irfan Khan    Art- Cinema    Maharashtra   
 
22.    Shri Mamraj Agrawal    Social work    West Bengal   
 
23.    Shri Jockin Arputham    Social work    Maharashtra   
 
24.    Ms. Nomita Chandy    Social work    Karnataka   
 
25.    Ms. Sheela Patel    Social work    Maharashtra   
 
26.    Ms. Anita Reddy    Social work    Karnataka   
 
27.    Shri Kanubhai Hasmukhbhai Tailor    Social work    Gujarat   
 
28.    Shri Anant Darshan Shankar    Public Affairs    Karnataka   
 
29.    Prof. M. Annamalai    Science and Engineering    Karnataka   
 
30.    Dr. Mahesh Haribhai Mehta    Science and Engineering - Agricultural Science    
         Gujarat   
 
31.    Shri Coimbatore Narayana Rao Raghavendran    Science and Engineering    Tamil 
         Nadu   
 
32.    Dr. (Mrs.) Suman Sahai    Science and Engineering    Delhi   
 
33.    Prof.(Dr.) E.A. Siddiq    Science and Engineering - Agricultural Science    Andhra      
         Pradesh   
 
34.    Shri Gopalan Nair Shankar    Science and Engineering - Architecture    Kerala   
 
35.    Shri Mecca Rafeeque Ahmed    Trade and Industry    Tamil Nadu   
 
36.    Shri Kailasam Raghavendra Rao    Trade and Industry    Tamil Nadu   
 
37.    Shri Narayan Singh Bhati    Civil Services    Andhra Pradesh   
 
38.    Shri P K Sen    Civil Services    Bihar   
 
39.    Ms. Shital Mahajan    Sports - Adventure Sports- Para Jumping    Maharashtra   
 
40.    Ms. Nameirakpam Kunjarani Devi    Sports - Weightlifting    Manipur   
 
41.    Shri Sushil Kumar    Sports - Wrestling    Delhi   
 
42.    Shri Vangipurapu Venkata Sai Laxman    Sports - Cricket    Andhra Pradesh   
 
43.    Shri Gagan Narang    Sports - Shooting    Andhra Pradesh   
 
44.    Smt. Krishna Poonia    Sports - Discus Throw    Rajasthan   
 
45.    Shri Harbhajan Singh    Sports - Mountaineering    Punjab   
 
46.    Dr. Pukhraj Bafna    Medicine - Padeatrics    Chhattisgarh   
 
47.    Prof. Mansoor Hasan    Medicine- Cardiology    Uttar Pradesh   
 
48.    Dr. Shyama Prasad Mandal    Medicine - Orthopaedic    Delhi   
 
49.    Prof. (Dr.) Sivapatham Vittal    Medicine - Endocrinology    Tamil Nadu   
 
50.    Prof. (Dr.) Madanur Ahmed Ali    Medicine - Gastroenterology    Tamil Nadu   
 
51.    Dr. Indira Hinduja    Medicine - Obstetrics and Gynaecology.    Maharashtra   
 
52.    Dr. Jose Chacko Periappuram    Medicine - Cardio-Thoracic Surgery.    Kerala   
 
53.    Prof. (Dr.) A. Marthanda Pillai    Medicine - Neurosurgery    Kerala   
 
54.    Shri Mahim Bora    Literature and Education    Assam   
 
55.    Prof. (Dr.) Pullella Srirama Chandrudu    Literature and Education- Sanskrit    Andhra 
         Pradesh   
 
56.    Dr. Pravin Darji    Literature and Education    Gujarat   
 
57.    Dr. Chandra Prakash Deval    Literature and Education    Rajasthan   
 
58.    Shri Balraj Komal    Literature and Education    Delhi   
 
59.    Mrs. Rajni Kumar    Literature and Education    Delhi   
 
60.    Dr. Devanooru Mahadeva    Literature and Education    Karnataka   
 
61.    Shri Barun Mazumder    Literature and Education    West Bengal   
 
62.    Dr. Avvai Natarajan    Literature and Education    Tamil Nadu   
 
63.    Shri Bhalchandra Nemade    Literature and Education    Himachal Pradesh   
 
64.    Prof. Riyaz Punjabi    Literature and Education    Jammu and Kashmir   
 
65.    Prof. Koneru Ramakrishna Rao    Literature and Education    Andhra Pradesh   
 
66.    Ms. Buangi Sailo    Literature and Education    Mizoram   
 
67.    Prof. Devi Dutt Sharma    Literature and Education    Uttarakhand   
 
68.    Shri Nilamber Dev Sharma    Literature and Education    Jammu and Kashmir   
 
69.    Ms. Urvashi Butalia #    Literature and Education    Delhi   
 
70.    Ms. Ritu Menon #    Literature and Education    Delhi   
 
71.    Prof. Krishna Kumar    Literature and Education    Delhi   
 
72.    Shri Deviprasad Dwivedi    Literature and Education    Uttar Pradesh   
 
73.    Ms. Mamang Dai    Literature and Education    Arunachal Pradesh   
 
74.    Dr. Om Prakash Agrawal    Others - Heritage Conservation    Uttar Pradesh   
 
75.    Prof. Madhukar Keshav Dhavalikar    Others - Archeology    Maharashtra   
 
76.    Ms. Shanti Teresa Lakra    Others-Nursing    Andaman & Nicobar   
 
77.    Smt. Gulshan Nanda    Others - Handicrafts promotion    Delhi   
 
78.    Dr. Azad Moopen    Social work    UAE *   
 
79.    Prof. Upendra Baxi    Public Affairs -Legal Affairs    United Kingdom *   
 
80.    Dr. Mani Lal Bhaumik    Science and Engineering    USA *   
 
81.    Dr. Subra Suresh    Science and Engineering    USA *   
 
82.    Prof. Karl Harrington Potter    Literature and Education    USA *   
 
83.    Prof. Martha Chen    Social work    USA *   
 
84.    Shri Satpal Khattar    Trade and Industry    Singapore *   
 
85.    Shri Granville Austin    Literature and Education    USA *   

இவர்களுக்கெல்லாம் வாலண்டரி ரிட்டையர்ட்மெண்ட் இல்லையா..?


30-01-2001

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தோழர் சவுக்குவின் இணையத்தளத்தில் இந்தப் புகைப்படங்களைப் பார்த்தவுடன் எனக்குள் தோன்றியதுதான் இந்தப் பதிவின் தலைப்பு..! 


  
ஒரு மாநிலத்தை ஆளுகின்ற இரு பெரும் தலைகளுமே இப்படி இருந்தால் ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கும்..?

அரசு ஊழியர்களுக்கே ஓய்வு நாள் இருக்கின்றபோது இவர்களுக்கும்  ஏன் ஓய்வு கொடுக்கக் கூடாது..? 

ராணுவப் பணியில் சிறிதளவு உடல் தளர்ச்சியடைந்தாலும் வேறு பணிகளுக்கு அனுப்பிவிடுவார்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கு என்ன வகை அரசுப் பணியாக இருந்தாலும் அவர்களால் செய்ய முடியுமா என்று மருத்துவர்கள் சான்றழிக்காமல் சேர்க்க மாட்டார்கள்..!

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் அரசு உதவித் தொகையைப் பெறலாம். ஆனால் அரசுப் பணியினைப் பெற முடியாது..!

அரசுப் பணிகளுக்காக, பொது நிர்வாகப் பணிகளுக்காக 24 மணி நேரமும் மக்களைச் சந்திக்க வேண்டி ஓட வேண்டியிருப்பதால் அரசுக்கு தலைமை தாங்குபவர்கள் திடமாக இருக்க வேண்டியது அவசியமே..!

இத்தனை வருடங்களாக அரசு சலுகைகளையும், மக்கள் பணத்தில் சொகுசான வாழ்க்கையையும் அனுபவித்தவி்டடார்களே.. போதாதா..?


அரசு ஊழியர்களைப் போலவே இவர்களுக்கும் கட்டாய ஓய்வு அளிக்கும்படியான சட்டத்தினைக் கொண்டு வரக் கூடாதா..?


இப்போது இப்படி முடியாத நிலையிலும் அரசு பதவிகளையும், அரசு சலுகைகளையும் அனுபவித்தே தீருவேன் என்பது என்ன நாகரிகம்..?

ஜோதிபாசுவையும், நம்பூதிரிபாட்டையும் நினைத்துப் பார்த்தாவது இவர்கள் குறைந்தபட்ச பொது நாகரிகத்தைக் கற்றுக் கொள்ளக் கூடாதா..?

ட்வீட்டரில் மீனவப் புரட்சி..! பங்கெடுக்க வாருங்கள் தோழர்களே..!

29-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கம்போல எப்போதும் நடக்கின்ற கொலைதான் என்கிறவகையில் தற்போது கடைசியாக நடந்திருக்கும் நாகப்பட்டினம் மீனவர் ஜெயக்குமாரின் கொலை, சிறிதளவு இந்திய, தமிழக அரசுகளை அசைத்துப் பார்த்திருக்கிறது..!


தேர்தல் நேரம் என்பதாலும், இதனை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்து சினிமாத்தனமாக அனைவருக்கும் முந்திக் கொண்டு இரவோடு இரவாக அரசு வேலை தரும் ஆணையை கிராமத்து வீட்டுக்கே கொண்டு போய்ச் சேர்ப்பித்திருக்கிறது மாநில அரசு.

இந்த வேகத்தை முதல் மீனவன் பலியானபோதே இலங்கை அரசை கண்டிப்பதிலும், தண்டிப்பதிலும் நிகழ்த்தியிருந்தால் மிச்சம் இருந்த 535 பேரின் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கலாமே..?

அரசுகளின் இந்த அவலட்சணத்தை இதுவரையிலும் சொல்லிக் கொண்டிருந்த வெகுஜன ஊடகங்களுக்கு மத்தியில், இப்போது இணைய ஊடகங்களும் களத்தில் குதித்துவிட்டன.

வலைத்தளங்களில் பல பதிவர்கள் சிங்கள அரசின் கொடுமையைக் கண்டித்தும், மீளாத் துயிலில் மூழ்கியிருக்கும் தமிழக, மத்திய அரசைக் கண்டித்தும் பதிவெழுதிவிட்டார்கள்.

கூகிள் பஸ் மற்றும் பேஸ்புக் இணையத்தளங்களிலும் உடனுக்குடன் எதிர்ப்பு கோஷங்களும், அரசுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுவிட்டது.

இன்னும் ஒரு படி மேலே போய் உணர்வுள்ள அத்தனை பேரையும் உடனுக்குடன் ஒருங்கிணைக்கும் வசதி கொண்ட ட்வீட்டரில் இதற்கென  http://twitter.com/
#TNfisherman என்ற தனி ஐ.டி.யை ஆரம்பித்து அதில் தங்களது கோபத்தையும், கொந்தளிப்பையும் பதிவு செய்து வருகின்றனர் தோழர்கள்.

மூன்று நாட்களுக்கு முன்பாக வலையுலக நண்பர் டிபிசிடி ஆரம்பித்த இந்த மீனவர்களுக்கான ஆதரவுப் போராட்டத்திற்கு இரண்டாவது நாளிலேயே ஊடகங்கள் ஆதரவு கொடுத்து அடையாளப்படுத்தின.

ட்வீட்டர் என்றில்லாமல் அங்கே இடுகின்ற செய்திகளும், கண்டனங்களும், கோரிக்கைகளும் http://www.savetnfisherman.org  என்ற வலைத்தளத்தில் தொகுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வேகத்தோடு இது அரசின் காதுகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்கிற அக்கறையோடு கடந்த மூன்று தினங்களாக ட்வீட்டர் உலகம் கலங்கிப் போய் இருக்கிறது..!

இதன் உச்சக்கட்டமாக நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் உலகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து தமிழர்களும் இந்த டிவீட்டரின் மூலம் இயங்கும் மீனவர் ஆதரவுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

9 மணி என்றில்லாமல் அதற்கு முன்பிருந்தே பல ட்வீட்டர்களும் கண்டனங்களை அதில் எழுப்பிக் கொண்டேயிருந்தார்கள். 9 மணிக்குப் பிறகு, மேலும் வேகம் பிடித்து ட்வீட்டர் ஓவர் லோடு ஆகும் அளவுக்கு தமிழர்கள் பொங்கித் தீர்த்துவிட்டார்கள்.

அந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 3710 ட்வீட்டுகள் மீனவர் பிரச்சினை தொடர்பாக இடப்பட்டன. நேற்று இரவு 10 மணிவரையிலும் இந்தப் பிரச்சினை தொடர்பான பதிவர்கள் இட்ட ட்வீட்டுகளின் எண்ணிக்கை 17,000-த்தை தாண்டியிருந்தது..!


இத்தனை களேபரங்களும் இங்கே நடந்து கொண்டிருக்க.. மத்திய அரசோ மிக மெதுவாக “நாளைக்கு நாள் நல்லாயில்லை. அடுத்த நாள் நல்லாயிருக்கும்..” என்று தேர்ந்தெடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமையன்று நமது வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமாராவை இலங்கைக்கு அனுப்புகிறதாம். அவர் அங்கே போய் என்ன பேசப் போகிறார் என்று தெரியவில்லை.

இதுநாள்வரையிலும், இத்தனை மீனவர்கள் இறந்தார்களே.. அவர்களுடைய மரணத்திற்கு காரணம் யார் என்றுகூட விசாரிக்க முடியாத, விசாரிக்கத் தெரியாத இந்தத் துப்புக் கெட்டவர்கள் “சுடாதீங்க.. அவங்க பாவம்ல்ல.. எங்களுக்கு நிறைய பிரச்சினையாகுதுல்ல..” என்று சொல்வதற்காக ஒரு தூதரை அனுப்பி வைக்கிறார்கள். இதுவே மிகக் கேவலம்.

நான் எழுதிய
தொடரும் மீனவர்கள் படுகொலை - தொலையட்டும் இந்தக் குடும்பம்..!  என்ற கட்டுரையை வாசித்த தி.மு.க.வைச் சேர்ந்த தோழர்கள் என்னிடம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

"தி.மு.க. இப்போது ஆட்சியைவிட்டு விலகினால்.. கருணாநிதி இல்லை என்றால் சிங்கள அரசு தமிழக மீனவர்களைச் சுடாது என்கிறீர்களா..?"
 
"அல்லது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டால் இது மாதிரியான சம்பவங்கள் திரும்பவும் நடக்காது என்கிறீர்களா..?" என்று கேட்கிறார்கள்.

இவ்வாறு கேட்பதற்கு இவர்களுக்கு எப்படி மனது வருகிறது என்றே தெரியவில்லை.

இப்போது நடப்பது கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி. தமிழகத்தின்  முதல்வர் கருணாநிதிதான். செத்தவன் தமிழகத்தைச் சேர்ந்த மீனவன். நியாயத்தை யாரிடம் கேட்பது..? எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிடமா கேட்க முடியும்?

ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் இறந்தபோது மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்றால் சுடத்தான் செய்வார்கள் என்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். யார் இதனை இல்லை என்று சொன்னது..? அப்போது அதனை மறுத்தும், எதிர்த்தும் பேசிய கருணாநிதி இன்றைக்கு தனது ஆட்சியிலேயே ஒரு மரணம் நிகழ்ந்ததும் கள்ள மெளனம் சாதிப்பது ஏன்..? நாங்கள் எங்கே ஜெயலலிதாவை உத்தமி என்று சொன்னோம்..?

தற்போது இந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உண்டு எனில், மத்திய அரசை எப்பாடுபட்டாவது வற்புறுத்தி இந்தப் படுகொலைகளை நிறுத்துவது மாநில அரசின் கடமையல்லவா..? கருணாநிதி ஏன் செய்யவில்லை..? ஏன் இவரால் செய்ய முடியாது..?

தனது பேரன்களின் கேபிள் சாம்ராஜ்யத்தை ஒழிக்க சட்டம் வரப் போகிறது என்ற தகவல் கிடைத்த 1 மணி நேரத்திற்குள் கவர்னர் மாளிகைக்கு அன்பழகன் தலைமையில் கட்சிப் பிரமுகர்களை அனுப்பி வைத்து புலம்பத் தெரிந்தவர்தானே இந்தக் கருணாநிதி..!

தனது பேரனுக்கும், தனது கட்சிக்காரர்களுக்கும் நல்ல லாபமான, பசையான துறைகளை வாங்கித் தர வேண்டி இந்தத் தள்ளாத வயதிலும் டெல்லியின் தெருக்களில் லாவணி பாட ஓடத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

கேட்ட துறைகள் கொடுக்கப்படவில்லை என்றவுடன் பதவியேற்பில் கலந்து கொள்ள மாட்டோம். நாங்கள் வெளியேயே நின்று கொள்கிறோம் என்று மிரட்டத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

நாங்கள் இருக்கவா வேண்டாமா என்பதை முடிவெடுத்துச் சொல்லுங்கள் என்று மிரட்டி ஜெயிலில் இருந்து தனி உத்தரவு மூலம் தான் மட்டும் வெளியேறத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

தொலைக்காட்சி துவங்க 5 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் பி்ன்னுக்குத் தள்ளிவிட்டு விண்ணப்பம் கொடுத்து 15 நாட்களில் தனது தொலைக்காட்சிக்கு மட்டும் அனுமதி வாங்கத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

உலகத்தில் எந்த நாடும் செய்திருக்காத சாதனையாக ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஜீரோக்களை எண்ணக்கூடத் தெரியாதவர்கள் இருக்கின்ற இந்த நாட்டில் அந்த ஊழல் நாயகனைக்கூட திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது என்று அடம் பிடிக்கத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

தனது மகனை ரவுடி என்று விமர்சித்த பேரனை ஒரே நொடியில் தனது சார்பான அமைச்சர்கள் பட்டியலில் இருந்து தூக்கத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

ஆங்கிலமும், இந்தியும் பேசத் தெரியாத மகனை, இது இரண்டு மட்டுமே தெரிந்த பிரதமரின் அமைச்சரவையில் கேபினட் மினிஸ்டராக ஆக்கத் தெரிந்திருக்கிறதே இந்தக் கருணாநிதிக்கு..!

இன்னும் எத்தனையோ திருட்டுக்களையும், கொள்ளைகளையும் மறைமுகமாகச் செய்து பிழைத்து வரும் இந்தக் கருணாநிதிக்கு மீனவர்களின் தொடர் படுகொலையை தடுக்கக் கூடவா தெரியாது..?

இவருடைய கட்சி எம்.பி.க்களின் ஆதரவோடுதானே மத்திய அரசே இயங்குகிறது.. அந்த மத்திய அரசில் இவரும் ஒரு அங்கம்தானே.. பின்பு இவரிடம் கேட்காமல் வேறு யாரிடம் போய் கேட்பது..?

இவர் உண்மையான தமிழனாக இருந்தால், முள்ளிவாய்க்கால் போரின்போதே கூட்டணியில் இருந்து விலகியிருக்க வேண்டும். அப்போதே தெரிந்துவிட்டது ஐயா தனது குடும்பத்தினருக்கு மட்டும்தான் தமிழன் என்று..!

நானாக இருந்திருந்தால் ஆட்சியில் இருந்து விலகியிருப்பேன். மத்திய அரசை நட்டாத்தில் விட்டிருப்பேன். அடுத்து மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது நானே முதல் படகில் அமர்ந்து சென்று “இப்போ வந்து சுட்டுப் பாரு..!” என்று சவால் விட்டிருப்பேன்.

கடற்படையினரை நம்பி இனிமேல் புண்ணியமில்லை. முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு ஓட்டுப் போட்ட மக்களைக் காப்பாற்ற நான்தான் முனைய வேண்டும். அந்த வகையில் தமிழக காவல்துறையினரை மீனவர்களின் பாதுகாப்புக்காக நடுக்கடலுக்குள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அதனை செய்திருப்பேன்..!

எதிர்க்க வருபவர்களை, தடுக்க நினைக்கும் மத்திய அரசினை எதிர்த்து மக்களைத் திரட்டியிருப்பேன். போராடியிருப்பேன்.. ஆட்சி டிஸ்மிஸாகும் என்றாலும் பரவாயில்லை. துணிந்து நிற்கிறேன். டிஸ்மிஸ் செய்து பார் என்று சவால் விட்டிருப்பேன்.

ஆனால் கருணாநிதி செய்யவில்லையே.. அவருக்கு இப்போது என்ன கவலை..? ஒரே கவலைதான். தனது ஆட்சி போகக்கூடாது. அவ்வளவுதான். தனது ஆட்சியை நம்பித்தான் தனது குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். தனது ஆட்சி போய் வேறொரு ஆட்சி வந்தால், அவர்கள் சம்பாதிக்கிறார்களோ இல்லையோ.. தனது குடும்பத்தினர் மீது கை வைத்து விடுவார்களே என்று பயப்படுகிறார்.

“நான் எனது நாட்டு மக்களைவிட எனது குடும்பத்தினரை அதிகம் நேசிக்கிறேன். அவர்களுக்காகவே நான் 24 மணி நேரமும் உழைக்கிறேன். நடிக்கிறேன். பேசுகிறேன். அவர்களைவிட்டுவிட்டு வேறு யாரையும் நான் நம்பத் தயாராக இல்லை. மத்திய அரசை பகைத்துக் கொண்டால் எனது மகனும், பேரனும் மந்திரி பதவியை இழந்துவிடுவார்கள். அதன் பின் கட்சியில் குழப்பம் ஏற்பட்டால்கூட சமாளித்துவிடுவேன். ஆனால் எனது குடும்பத்தில் குழப்பம் வரும். அதனை என்னால் சமாளிக்க முடியாது.. இப்போது எனது குடும்பத்தினர் சம்பாதித்து வரும் பணம் குறைந்துவிடும். சம்பாத்தியம் போய்விடும். ஏற்கெனவே சம்பாதித்ததற்கு கணக்கு வழக்கு கேட்பார்கள். வழக்குத் தொடர்வார்கள். அதனைச் சமாளிக்க வேண்டுமெனில் என்னிடம் அதிகாரம் இருக்க வேண்டும். அதிகாரம் இல்லையெனில் எனது குடும்பத்தினரே என்னை மதிக்க மாட்டார்கள். இது எல்லாவற்றையும்விட எனக்கு எப்போது மரணம் என்று தெரியவில்லை. ஆனால் நான் சாகும்போதுகூட முதல்வராகவே சாக விரும்புகிறேன். அப்படி இறந்தால்தான் எனது 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆரை போல எனக்கும் பெயர் கிடைக்கும்..  ஆகவே எந்த நாடு, எத்தனை தமிழர்களைக் கொலை செய்தாலும் பரவாயில்லை. எனக்கு எனது ஆட்சிதான் முக்கியம்.. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..”

- இப்படி சதா சர்வகாலமும் தனது குடும்பத்தைப் பற்றியே சிந்தித்து வருபவரிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்..? நேற்றுகூட ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 38 பேர் இறந்தார்களே.. ஜெயலலிதா அப்போது என்ன செய்தார் என்று..?

நீ ஏண்டா ஒரு நாள் அம்மணமா ஆடுறன்னு கேட்டா.. அவன் 38 நாள் ஆடுனானேன்னு அது உன் கண்ணுக்குத் தெரியலையா என்று கேட்கிறார் இந்தத் தமிழினத் தலைவர்..! இதுவா நியாயவான் பேசுகிற பேச்சு.. அப்போது இவரும் ஒரு ரவுடிதானே? ஜெயலலிதாவுக்கு என்ன மரியாதை கொடுக்கிறோமே அதே அளவுக்கு மரியாதைதான் இவருக்கும் கிடைக்கும். ஆனால் ஜெயலலிதா எதையும் சொல்லிவிட்டுச் செய்வார். கருணாநிதி சொல்லாமல் செய்வார், செய்தவர் என்பதால் அந்த மரியாதையைக்கூட இப்போது இழந்துவிட்டார்.

இப்போது மீனவர் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் அத்தனை பேரும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியவர்களில்லை. வாங்குபவர்களும் இல்லை. இப்போது கருணாநிதி ஆட்சியில் இல்லாமல் ஜெயலலிதா இருந்திருந்தாலும் இப்படித்தான் எழுதியிருப்பார்கள். பேசியிருப்பார்கள்.

இப்படி ஜெயலலிதாவைக் காட்டியே அவரைவிட பல மடங்கு பணத்தையும், சொத்துக்களையும் தனது குடும்பத்தினருக்காகச் சம்பாதித்துக் குவித்திருக்கும் கருணாநிதி மீண்டும், மீண்டும் ஜெயலலிதா என்னும் பூச்சாண்டியைச் சொல்லியே நம்மிடமிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்..!

அவருக்கு மட்டுமல்ல, இனி ஆட்சி பீடத்தில் ஏறப் போகும் அனைவருக்குமே ஒரு பாடத்தைப் புகட்டுவதைப் போல நாம் நமது எதிர்ப்பை தொடர்ந்து காட்டிக் கொண்டே வர வேண்டும். இது தேர்தல் சமயத்தில் நமது மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் விளைவாக இந்த கோபாலபுரத்து கோயபல்ஸின் சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக வேண்டும்..!

பதிவர்களும், வாசக அன்பர்களும் மீனவர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் தளத்திற்குச் சென்று பிரதமருக்கு ஒரு கண்டனக் கடிதத்தை உங்களது ஒப்புதலுடன் அனுப்பி வையுங்கள்..

மேலும் நேரமிருப்பவர்கள், வாய்ப்பு இருப்பவர்கள் ட்வீட்டரில் தற்போது நடைபெற்று வரும் இந்தப் போராட்டக் களத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் http://www.facebook.com/savetnfisherman என்ற தளத்தில் இணைந்து தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நம்மால் முடிந்ததை அந்த மீனவர்களின் சமுதாயத்தினருக்கு செய்வோம்..! வாருங்கள்..!

சின்னத்திரை விருதுகள் - தேர்தல் நேரத்து ஸ்டண்ட்டா..?

27-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தொல்லைக்காட்சிகளின் மூலம் குடும்பத்தைப் பிரிக்கும் சீரியல்கள் என்று காட்டமாக விமர்சிக்கப்படும் சின்னத்திரை தொடர்கள் மற்றும் அதில் நடித்த நடிகர், நடிகையர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் விருதுகள் வழங்கப்படத் துவங்கின.

அந்த ஒரு வருடத்திற்குக் கொடுத்துவிட்டு பின்பு நான்கு வருட இடைவெளிக்குப் பின்பு இப்போதுதான் 2007 மற்றும் 2008-ம் ஆண்டுக்கான விருதுகளை தற்போதுதான் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை ரொம்பக் கஷ்டப்பட்டுத் தேடியலைய வேண்டாம்.. கண்ணை மூடிக் கொண்டு யோசித்தாலே தானாய் புரிந்துவிடும்..!

விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்ய முன்னாள் நீதிபதி மு.மருதமுத்து தலைமையில் இயக்குநர் விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிரியர் கண்மணி சுப்பு, தயாரிப்பாளர் டி.வி.சங்கர், சின்னத்திரை நடிகர் ராஜசேகர், தமிழ் வளர்ச்சி அற நிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தேர்வுக் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு 2007-ம் ஆண்டுக்காக 7 விண்ணப்பங்களும், 2008-ம் ஆண்டுக்காக 12 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. மொத்தம் 19 சின்னத்திரைத் தொடர்களை இந்தக் குழு பார்வையிட்டு விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்துள்ளது.

காலைல 10 மணிக்கு ஆரம்பிச்சு, ராத்திரி 11 மணிவரைக்கும் எல்லா சேனல்லேயும் மாத்தி, மாத்தி நம்மளை அழுக வைக்குறாங்களே.. ஆனா போட்டிக்குன்னு பார்த்தா 7 சீரியல்கள் மட்டும்தான் போட்டி போட்டிருக்கேன்னு விசாரிச்சேன்..!

தமிழக அரசு இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விதித்திருந்த சில நிபந்தனைகளால்தான் இத்தனைக் குறைவான சீரியல்கள் களத்தில் இருந்திருக்கின்றன.

Ø    அந்தந்த ஆண்டுகளில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை உள்ள காலத்தில் நெடுந்தொடர் மற்றும் வாரத்தொடர் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்பட்டிருக்க வேண்டும்.

Ø    அந்தந்த ஆண்டுகளில் தொடர் ஒளிபரப்பு ஆரம்பித்து முடியாத நிலையில், அத்தொடர் அந்தந்த ஆண்டுகளில் குறைந்தபட்சம் 130 பகுதிகள் ஒளிபரப்பாகியிருக்க வேண்டும்.

Ø    வாரத் தொடர் எனில், அந்தந்த ஆண்டில் குறைந்தபட்சம் 26 பகுதிகள் சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகி இருக்க வேண்டும்.

Ø    தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தொடர்கள் இத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது..

- இவைகள்தான் அந்த நிபந்தனைகள். 
இதன்படி பார்த்தால், ஒரு மாதத்தில் திங்கள் முதல் வெள்ளிவரை ஓட்டினாலே மாதத்திற்கு 20 அல்லது 21 எபிசோடுகள் வரும். இதுவே 130 எபிசோடுகள் எனில் ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 7 மாதங்களாவது இத்தொடர் தொடர்ந்து ஓட்டப்பட்டிருக்க வேண்டும்.

அதாவது இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமெனில் அத்தொடர் 2006-ம் ஆண்டில் ஜூன் மாதத்திற்கு முன்பு  துவக்கப்பட்டிருக்கவேண்டும். அல்லது 2005-ம் ஆண்டு துவக்கப்பட்டு 2006-ம் ஆண்டில் ஜூலை மாதம் வரையிலாவது ஓட்டப்பட்டிருக்க வேண்டும். இப்படி இருந்திருந்தால் மட்டுமே அத்தொடர், இந்த விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டிருக்க முடியும்.

2007-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி துவக்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சி இதில் போட்டியிட வாய்ப்பே இல்லை. நிச்சயமாக சன், ஜெயா, விஜய், ராஜ் டிவிக்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

இதில் ராஜ் டிவி மற்றும் விஜய் டிவிக்களின் பங்களிப்பு என்னவாக இருந்திருக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில் இந்த டிவிக்களில் சீரியல்கள் திங்கள் முதல் வியாழன்வரைதான். அது வாரத்துக்கு 4 நாட்கள் என்று கணக்கிட்டால் மாதத்திற்கு அதிகப்பட்சம் 16 அல்லது 17 எபிசோடுகள்தான் வந்திருக்கும்.

தொடர்ச்சியாக ஒரு ஆண்டில் 130 எபிசோடுகள் வரக்கூடிய அளவுக்கு ராஜ் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பானதா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.  ஆனால் விஜய் மற்றும் ராஜ் டிவியிலிருந்து எந்த சீரியல்களும் போட்டிக்கு அனுப்பப்படவில்லை. மிச்சம் இருந்தது சன் டிவியும், ஜெயா டிவியும்..

இதில் சன் டிவியின் சார்பாக 6 தொடர்களும், ஜெயா டிவியின் சார்பில் 1 தொடரும் போட்டியில் கலந்து கொண்டுள்ளன. இந்த 7 தொடர்களுக்குமே ஏதோ ஒரு வகையில் பரிசுகள் கிடைத்திருக்கின்றன என்பது சுவையான விஷயம். போட்டியே இல்லையே.. அப்புறமென்ன..?

2007-ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலைப் பாருங்கள் :

சிறந்த நெடுந்தொடர் முதல் பரிசு : கோலங்கள் (விகடன் டெலிவிஸ்டாஸ்) ரூ 2 லட்சம் ரொக்கம்.

சிறந்த நெடுந்தொடர் இரண்டாம் பரிசு : லட்சுமி (ஹோம் மூவி மேக்கர்ஸ்) 1 லட்சம் ரொக்கம்.

சிறந்த சாதனையாளர் விருதைப் பெறுபவர் நடிகை ராதிகா -பரிசு 1 லட்சம் ரொக்கம்.

2007-ம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுபவர் - நடிகர் வி.எஸ்.ராகவன் - பரிசு 1 லட்சம் ரொக்கம்.

அதேபோல் இவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

சிறந்த கதாநாயகன் : விஜய் ஆதிராஜ் (லட்சுமி)

சிறந்த கதாநாயகி : தேவயானி (கோலங்கள்).

சிறந்த குணச்சித்திர நடிகர் : பிருத்விராஜ் (அரசி).

சிறந்த குணச்சித்திர நடிகை : சத்யபிரியா (கோலங்கள்).

சிறந்த வில்லன் நடிகர் : ராஜ்காந்த் (மேகலா).

சிறந்த வில்லி நடிகை : நளினி (பந்தம்).

சிறந்த குழந்தை நட்சத்திரம் : நிவேதா (அரசி).

சிறந்த இயக்குனர் : சுந்தர் கே.விஜயன் (லட்சுமி).

சிறந்த கதையாசிரியர் : அறிவானந்தம் (அகமும் புறமும்).

சிறந்த திரைக்கதை ஆசிரியர் : முத்துசெல்வம் (மேகலா).

சிறந்த உரையாடல் ஆசிரியர் : பாஸ்கர் சக்தி (மேகலா).

சிறந்த ஒளிப்பதிவாளர் : வசீகரன் (அரசி).

சிறந்த படத் தொகுப்பாளர் : ரமேஷ் (அரசி).

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : ரேகான் (பந்தம்).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்(ஆண்) : மதி (லட்சுமி).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்(பெண்) :  நித்யா (பாசம்).

விருதுகள் பெறும் இவர்கள் அனைவருக்கும் 3 பவுன் தங்க பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

'கோலங்கள்', 'லட்சுமி', 'அரசி', 'மேகலா', 'பந்தம்', 'பாசம்' - இவை அனைத்துமே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானவைதான். 'அகமும் புறமும்' சீரியல் மட்டுமே ஜெயா தொலைக்காட்சி. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற ரீதியில் 'சிறந்த கதை'க்கான விருதினை ஜெயா டிவி தட்டிச் சென்றுள்ளது ஆச்சரியமானது.

பழம்பெரும் நடிகர் திரு.வி.எஸ்.ராகவனுக்குக் கொடுத்த விருது நிச்சயம் ஏற்கப்பட வேண்டியது. இந்த மனிதரைப் பற்றி நான் தனியாக பதிவு எழுத வேண்டும். இந்த வயதிலும் என்னவொரு டெடிகேஷனோடு இவர் நடிக்கிறார் என்பதை இவருடன் இணைந்து நடித்தவர்களிடத்திலும், இயக்கியவர்களிடத்திலும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். விருதுக்குரிய தேர்வு இவரே..!

இதேபோல் 2008-ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலையும் பாருங்கள் :

சிறந்த நெடுந்தொடர் முதல் பரிசு : ஆனந்தம் (சத்யஜோதி பிலிம்ஸ்) ரூ.2 லட்சம் ரொக்கம்.

சிறந்த நெடுந்தொடர் - இரண்டாம் பரிசு : நம்ம குடும்பம் (எவர் ஸ்மைல் என்டர்பிரைசஸ்) 1 லட்சம் ரொக்கம்.
சிறந்த சாதனையாளர் : வ.கவுதமன் ரூ1 லட்சம் ரொக்கம்.

வாழ்நாள் சாதனையாளர் : ஒய்.ஜி.மகேந்திரா 1 லட்சம் ரொக்கம்.

அதே போல், ரொக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

சிறந்த கதாநாயகன் : சஞ்சீவ் (திருமதி செல்வம்).

சிறந்த கதாநாயகி : சுகன்யா (ஆனந்தம்).

சிறந்த குணச்சித்திர நடிகர் : மோகன் வி.ராமன்(வைர நெஞ்சம்).

சிறந்த குணச்சித்திர நடிகை : அனுராதா கிருஷ்ணமூர்த்தி(அரசி).

சிறந்த வில்லன் நடிகர் : சாக்ஷிசிவா (நம்ம குடும்பம்).


சிறந்த வில்லி நடிகை : மாளவிகா (அரசி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் மோனிகா (ஆனந்தம்).

சிறந்த இயக்குநர் : செய்யாறு ரவி (ஆனந்தம்).

சிறந்த கதையாசிரியர் : குமரன் (திருமதி செல்வம்).

சிறந்த திரைக்கதை ஆசிரியர் : அமிர்தராஜ் மற்றும் அமல்ராஜ் (திருமதி செல்வம்).

சிறந்த உரையாடல் ஆசிரியர்  : லியாகத் அலிகான் (அரசி).

சிறந்த ஒளிப்பதிவாளர் : அசோக்ராஜன் (சிவசக்தி).

சிறந்த படத் தொகுப்பாளர் : ராஜீ (மேகலா).

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : ஆதித்யன் (சந்தனக்காடு).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்(ஆண்) : சங்கர் (பந்தம்).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்(பெண்) : அனுராதா (தவம்).

விருதுகள் பெறும் இவர்கள் அனைவருக்கும் 3 பவுன் தங்க பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

2008-ம் ஆண்டுக்கான போட்டியில் கலந்து கொண்ட 12 சீரியல்களுமே ஏதேனும் ஒரு விருதினைப் பெற்றிருக்கின்றன.

2007-ம் வருடம் ஜூன் 3-ம் தேதியன்று உதயமான கலைஞர் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் இந்தாண்டுக்கான போட்டியில் கலந்து கொண்டுள்ளன. கூடவே மக்கள் தொலைக்காட்சியின் புகழ் பெற்ற சீரியலான சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையைச் சொன்ன 'சந்தனக்காடு' சீரியலும் போட்டியிட்டுள்ளது.

2008-ல் வெற்றி பெற்றிருக்கும் 'ஆனந்தம்', 'மேகலா', 'திருமதி செல்வம்', 'பந்தம்', 'அரசி', 'சிவசக்தி' ஆகியவை சன் தொலைக்காட்சியின் சீரியல்கள்.

'நம்ம குடும்பம்', 'தவம்', 'வைரநெஞ்சம்' ஆகியவை கலைஞர் தொலைக்காட்சியின் சீரியல்கள். ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என்ற ரீதியில் போட்டியிட்ட 'சந்தனக்காடு' சீரியலுக்கும் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது.

தேர்வு செய்யப்பட்டிருக்கும் அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!

அதே சமயத்தில் முந்தைய ஆண்டுகளில் போட்டியிட்ட சீரியல்களை அடுத்த ஆண்டில் விலக்கி வைப்பது நியாயமானது என்று நினைக்கிறேன்.

ஏனெனில் 2007-ம் ஆண்டில் சில விருதுகளில் பரிசுகளை வென்ற 'பந்தம்', 'அரசி', 'மேகலா' போன்றவைகள் 2008-ம் ஆண்டிலும் வேறு சில பிரிவுகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்தந்த ஆண்டுகளில்தான் போட்டி என்றாலும், ஏற்கெனவே கலந்து கொண்டதால் அவர்களை அடுத்தாண்டில் நீக்கிவிட்டால், புதிய ஆண்டில் புதிய சீரியல்களுக்கு நிறைய விருதுகள் கிடைக்க வாய்ப்பு கிடைக்கும்..!

130 எபிசோடுகள் விதிமுறையே சன் டிவியுடன் கலைஞர் தொலைக்காட்சியின் சீரியல்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற காரணமாகவே வைக்கப்பட்டதாக சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசு பேசுகிறார்கள்.

2007 ஜூன் 3 துவங்கி, டிசம்பர் 31-ம் தேதிக்குள் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தொடர்களின் எண்ணிக்கை தோராயமாக 138 நாட்கள் வரும் என்கிறார்கள். இதனால்தான் 130 எபிசோடு விதிமுறை வந்ததாகச் செய்தி.

அதேபோல் 130 எபிசோடுகள் என்பதையும் குறைத்து 80 எபிசோடுகள் என்று வைத்துக் கொண்டால் மற்ற சிறிய டிவிக்களின் சீரியல்களும் இதில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்..! அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..? இப்படி மறைமுகமாக அவர்களைத் தடை செய்திருப்பது ஒரு வகையில் இப்போதும் முன்னணியில் இருக்கும் சன், மற்றும் கலைஞர் டி.வி.க்களின் செல்வாக்கை உயர்த்தவே உதவும்..! இது நிச்சயம் ஜனநாயகமானதல்ல..!

ராஜ், விஜய், மக்கள் டிவி மற்றும், தற்போது களத்தில் குதித்திருக்கும் வசந்த், மெகா டிவிக்களுக்கும், சன் டிவிக்கும் விளம்பர கட்டணத்தில் ஏணி வைத்தால்கூட எட்டாது. அந்த வகையில் அவர்களால் சன், கலைஞர் அளவுக்கு 130 எபிசோடுகளாக 8 மாதங்கள் தாக்குப் பிடிக்கும்வகையில் சீரியல்களை ஓட்ட முடிவதில்லை.

மிகச் சிறந்த இயக்குநர்களும், மிகச் சிறந்த நடிகர்களும், மிகச் சிறந்த கதை ஆசிரியர்களும் இப்போது நிறையவே சம்பளம் கேட்பதால் இவர்கள் இந்த சிறிய டிவிக்களின் சீரியல்களில் பணியாற்றவும் முடியாது. அப்படியிருக்கும்போது அவர்களால் தங்களது தரத்துக்கேற்றாற்போலத்தான் சீரியல்களைத் தர முடியும். அவற்றை சன் டிவி  சீரியல்களுடன் போட்டியிட வைப்பது நியாயமாகாது.

ஆனால் பொதுவானது அதுவே என்றால், முந்தைய ஆண்டில் விருது பெற்றவைகளை கழித்தாலாவாவது, புதிய ஆண்டில் சிறிய டி.வி.க்களின் சீரியல்கள் சில பரிசுகளை வெல்ல வாய்ப்பு கிடைக்கும்..! இதனை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கமும், கூட்டமைப்பும் கவனத்தில் கொண்டால் நல்லது..!

தாத்தா நல்லதுதானே செய்திருக்கிறார்.. இதில் என்ன அரசியல் ஸ்டண்ட் என்கிறார்களா..? இருக்கே..! என்னடா இது.. திடீரென்று தேர்தல் வரவிருக்கும் கடைசி நேரத்தில் இப்படியொரு அறிவிப்பு வெளி வருகிறதே என்று யோசித்த நேரத்தில் இன்னொன்றும் ஞாபகத்திற்கு வந்தது..!

கடந்த 23-ம் தேதிதான் 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளுக்குரிய  சின்னத்திரை விருதுகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்திட அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் பிப்ரவரி 18-ம் தேதி என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்த அறிவிப்பு வெளியான இரண்டு நாட்கள் இடைவெளியில் முந்தைய இரு ஆண்டுகளுக்கான விருதுகளைப் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. யோசித்துப் பார்த்தால் சநதேகமேயில்லாமல் இதில் இருக்கும் அரசியல் தெரிகிறது.

2007 விருதுகளை 2008-ம் ஆண்டிலும், 2008-ம் ஆண்டுக்குரிய விருதுகளை 2009-ம் ஆண்டிலும், 2009-க்குரிய விருதுகளை 2010-ம் ஆண்டிலும் கொடுத்து முடித்திருந்தால் நிச்சயம் இந்த அரசு, விருதுகளை உண்மையான அக்கறையோடு வழங்கி வருகிறது என்று சொல்லியிருப்பேன்.

ஆனால் கடமைக்கே என்று முதல் வருடம் மட்டும் கொடுத்துவிட்டு அனைத்தையும் சேர்த்து வைத்து தேர்தல் சமயத்தில் கொடுக்க நினைப்பது தங்களின் அரசியல் லாபத்திற்கு இதனைப் பயன்படுத்தும் எண்ணத்தில்தான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை..!

2007-2008 விருதுகள் வழங்கும் விழா மார்ச் மாதத் துவக்கத்தில் கலைஞர் டிவியில் தாத்தாவுக்கு பாராட்டு விழாவாகவும் உருவெடுத்து தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவப் போகிறது என்று நினைக்கிறேன்.

இன்னும் 2009 மற்றும் 2010-ம் ஆண்டுக்குரிய விருதுகள்கூட விரைவாக ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத் துவக்கத்திலோ இன்னுமொரு விழாவாக வைக்கப்படலாம். யார் கண்டது..?

இந்த நேரத்தில் ஒரு சின்ன விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. 2010-ம் ஆண்டுக்கான சிறந்த சீரியல்கள் போட்டியில் 'எங்கே பிராமணன்' போட்டியிட்டுச் சிறந்த கதையாகத் தேர்வு செய்யப்பட்டுவிட்டால்(அப்படியொன்று நடந்தால் மட்டுமே..!) தேர்தல் நேரத்தில் சோ-வுடன் முதல்வர் மேடையில் நிற்க வேண்டி வந்து.. ஒரு காமெடி நடக்க வாய்ப்புண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

தாத்தாவின் ஒவ்வொரு ஸ்டெப்பையும் நாங்க உத்து உத்துப் பார்ப்போமாக்கும்..!! எங்களுக்கா தெரியாது அவரைப் பத்தி..? தாத்தா.. நீ இன்றைய சாணியடிக்கிற அரசியல்ல சாணி தட்டுறதுல சாணக்கியன்யா..! இந்த ஒரு விஷயம்தான் எனக்கு உன்கிட்ட ரொம்ப, ரொம்பப் புடிச்சது. எவ்ளோ பிரச்சினை வந்தாலும் தப்பிக்கிறதுக்கு எல்லா வழியையும் தேடிப் பிடிச்சு ஓடுற பாரு..? அரசியல்ல நீயொரு கில்லி..! உன் அளவுக்கு தில்லாலங்கடி செய்யத் தெரியாதவங்கதான் இப்ப உனக்கு அரசியல் எதிரிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் உன்னோட பலமே..! ஜமாய் தாத்தா ஜமாய்..!

(டிஸ்கி : தாத்தாவின் இன்னொரு ‘கில்லி’ வேலை, நாளைய பதிவில்..!)

போப் ஆண்டவரை தத்து எடுத்து அவரிடம் கொடுக்கலாமே..?

26-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“நான் சீக்கிரம் சாகப் போறேன்.. எனது பெயரில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வாரிசுதாரர் இல்லை. நான் செத்துவிட்டால் வங்கிக்காரர்களே அதனை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். எனக்கு அந்தக் கயவர்களிடம் பணத்தைக் கொடுக்க விருப்பமில்லை. உங்களது ஜிமெயில் முகவரியை பார்த்த மாத்திரத்திலேயே நீங்கள்தான் எனது வாரிசு என்பதை முடிவு செய்துவிட்டேன். உடனேயே என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.. எனது வாரிசாக உங்களை நியமிக்கும் கடிதத்தை விரைந்து உங்களுக்கு அனுப்புகிறேன். நான் இறந்த பின்பு அந்தப் பணத்தை என் நியாபகமாக வைத்து நீங்கள் அனுபவியுங்கள்.. உடனேயே மெயில் செய்யுங்கள்..” - இப்படி தொடர்ச்சியாக பல மெயில்கள் கடந்த சில ஆண்டுகளாக வந்தவண்ணம் இருந்தன.

பல அப்பாவி தமிழர்கள் இதனையும் உண்மை என்பதை உணர்ந்து அவர்கள் சொன்னதை நம்பி பல கோடிகள் கிடைக்கப் போகிறது என்பதற்காக சில லட்சங்களை அவர்கள் கேட்டவிதத்தில் கொடுத்துவிட்டு பின்னர் உண்மை தெரிந்து காவல்துறையினரை நோக்கி ஓடிச் சென்றிருக்கிறார்கள். செல்கிறார்கள். இப்போதும் சென்று கொண்டிருக்கிறார்கள்..


இப்போது, இன்றைக்குத்தான் கொஞ்சம் புது மாதிரியாக கன்னியாஸ்திரி கதையோடு ஆரம்பித்திருக்கிறார்கள்.. இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு ஒரு கன்னியாஸ்திரி எதற்காகக் புலம்ப வேண்டும். அப்படியே வாடிகனுக்கோ, அல்லது திருச்சபைக்கோ சமர்ப்பித்துவிட்டு கர்த்தருக்குள் நித்திரை அடைந்துவிடலாமே..?

இவ்வளவு ஏன்..? வாடிகனை தற்போது ஆட்சி செய்யும் போப் ஆண்டவரை தத்துப் பிள்ளையாக எடுத்து அவர் தலையில் இந்த பில்லியன் டாலரைக் கட்டிவிட்டு கர்த்தரைத் தழுவிக் கொள்ளலாமே..? எதற்காக வேறு நபர்களுக்கு தாரை வார்க்க வேண்டும்..?


லண்டன்வாழ் பதிவர்கள் நேரில் சென்று இந்தக் கன்னியாஸ்திரிக்கு நல்ல புத்திமதி சொல்லி சொர்க்கத்தை காட்டி புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

Hello Beloved,

I am Rev. Sister Carol Mitchell a Missionary in St Peters Catholic Church London United Kingdom, But I am Citizen of America from California USA.I am very sick now and I deposited the Sum of 6M USD in Intercontinental Bank London United Kingdom here, But my Doctor here in the Hospital told me that I will not survive this Sickness that I have only two weeks more to live.

So I want you to help me stand as my next of kin to enable Bank here in London Uk Transfer this 6M USD to you, But note that you will take 3M USD out of this 6M USD and give the remaining 3M USD to any Charity Home around you because that was the vow I made to my God Almighty before I became a Missionary.

I want you to get back to me immediately if you are interested to stand as my Next of Kin, So that I can introduce you to my Doctor and direct you on how to proceed before I pass away in this world because I have only two weeks to live according to
my Doctor.

Thanks,

Missionary Carol Mitchell.

carolmitchell3@aol.com
From St Peters Catholic Church
136 Clergywomen Road,
London EC1R 5DL,
United  Kingdom.

விரிவுபடுத்தப்பட்ட கொள்ளைக் கும்பல் - புதிய பட்டியல்..!

26-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 19-ம் தேதியன்று தனது கொள்ளை அமைச்சரவையில் புதிதாக மூன்று ராஜாங்க மந்திரிகளை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் நமது மாண்புமிகு பிரதம மந்திரி மன்னமோகனசிங்..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெனி பிரசாத் வர்மா, பஞ்சாப்பைச் சேர்ந்த அஷ்வினி குமார், கேரளாவின் கே.சி.வேணுகோபால் ஆகிய மூவர்தான் புதிய மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்.


1996-ல் மத்தியில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த ஐக்கிய முன்னணி அரசில் கேபினட் மந்திரியாக இருந்த பெனிபிரசாத்வர்மா, இந்த முறை தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரியாக மட்டுமே அமர்த்தப்பட்டுள்ளார். இவருக்கு ஒதுக்கப்பட்ட துறை உருக்கு..!

அஷ்வினி குமார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கு துணை அமைச்சராகவும், கே.சி.வேணுகோபால் மின்சாரத் துறையின் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு கூடவே தனது அமைச்சரவைக் கும்பலில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறார் மன்மோகன்.. தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாக இருந்த பிரபுல் பட்டேல், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் மற்றும் சல்மான் குர்ஷித் மூவரும் கேபினட் அமைச்சராகியுள்ளனர்.

விமானப் போக்குவரத்துத் துறையின் தனிப் பொறுப்பை வகித்து வந்த  பிரஃபுல் பட்டேலுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டு அவருக்கு கனரக தொழில்சாலைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இணையமைச்சர்களாக இருந்து இதுவரை வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறையின் அமைச்சராக இருந்த வயலார் ரவி விமான போக்குவரத்துத் துறையின் தனி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த முரளி தியோரா பெரு நிறுவன விவகாரங்கள் துறையின் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி பெட்ரோலியத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ஜெய்பால் ரெட்டி வகித்த நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கமல் நாத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. கமல் நாத் வகித்த தேச சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சக பொறுப்பு சி.பி.ஜோஷிக்கு அளிக்கப்பப்ட்டது.

குர்ஷித் ஆலம்கான் நீர்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த பெருநிறுவனங்கள் துறை முரளி தியோராவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை நலத்துறை தொடர்ந்து குர்ஷித்திடம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஜய் மக்கான், இ.அகமது, பி.பி.வர்மா ஆகியோர் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுவையைச் சேர்ந்த என்.நாராணசாமி, பிரிதிவிராஜ் சவான் வகித்த பிரதமர் அலுவலக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். விலாஸ் ராவ் தேஷ்முக் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த எம்.எஸ்.கில் புள்ளி விவரத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். விளையாட்டு, இளைஞர் நலம் துறை அஜித் மக்கானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களையும் சேர்த்து இப்போது மன்னமோகனின் அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேபினட் அந்தஸ்தில் 35 அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாக 6 பேரும், துணை அமைச்சர்களாக 37 பேரும் உள்ளனர்.

இந்த எண்ணிக்கை வரவிருக்கும் சில மாநிலங்களின் தேர்தல்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வரும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக்கேற்ப கூடலாம்.. அல்லது குறையலாம்..தற்போதைய மத்திய மந்திரிகளின் துறை விவரங்கள் :-

1. மன்மோகன்சிங் : பிரதமர் - பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் பென்சன் திட்டம். அணுசக்தி, விண்வெளி ஆய்வு துறைகள்

கேபினட் மந்திரிகள்

2. பிராணாப்முகர்ஜி : நிதி

3. சரத்பவார் : விவசாயம் மற்றும் உணவுபதப்படுத்தும் தொழில்கள்

4. ஏ.கே.அந்தோணி : ராணுவம்

5. ப.சிதம்பரம் : உள்துறை

6. எஸ்.எம்.கிருஷ்ணா : வெளியுறவு துறை

7. மம்தாபானர்ஜி : ரெயில்வே

8. குலாம்நபி ஆசாத் : சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

9. சுஷில்குமார் சிண்டே : மின்சாரம்

10. எம்.வீரப்பமொய்லி : சட்டம் மற்றும் நீதித் துறை

11. எஸ்.ஜெய்பால்ரெட்டி : பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

12. கமல்நாத் : நகர்ப்புற வளர்ச்சித் துறை

13. வயலார் ரவி : வெளிநாட்டு வாழ் இந்தியர் நலன், சிவில் விமான 
      போக்குவரத்து.

14. முரளி தியோரா : கம்பெனி விவகாரம்

15. கபில்சிபில் : மனிதவள மேம்பாடு, தொலை தொடர்பு மற்றும் தகவல் 
      தொழில் நுட்பம்

16. அம்பிகா சோனி : தகவல் ஒலிபரப்பு

17. பி.கே.ஹாண்டிக் : வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை

18. ஆனந்த் ஷர்மா : வர்த்தகம் மற்றும் தொழில் துறை

19. வீரபத்திரசிங் : மிகச்சிறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்

20. விலாஸ்ராவ் தேஷ்முக் : கிராமப்புற மேம்பாடு- பஞ்சாயத்து ராஜ்

21. சி.பி.ஜோஷி : சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை

22. குமாரி செல்ஜா : வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, கலாசாரம்

23. சுபாத் காயந்த் சகாய் : சுற்றுலா

24. எம்.எஸ்.கில் : புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கம்
 
25. ஜி.கே.வாசன் : கப்பல் துறை

26. தயாநிதிமாறன் : ஜவுளித் துறை

27. பரூக்அப்துல்லா : மறு பயன்பாட்டு எரிசக்தி

28. மல்லிகார்ஜூன கார்கே : தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு

29. பவன் கே. பன்சால் : பாராளுமன்ற விவகாரம் மற்றும் விஞ்ஞான 
     தொழில் நுட்பம், புவி அறிவியல்

30. முகுல் வாஷ்னிக் : சமூகநீதி

31. காந்திலால் பூரியா : பழங்குடியினர் நலன்

32. மு.க.அழகிரி : ரசாயனம், உரம்

33. பிரபுல்படேல் : கனரகத் தொழில்-பொதுத்துறை நிறுவனங்கள்

34. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் : நிலக்கரி

35. சல்மான் குர்ஷீத் : நீர்வளம் மற்றும் சிறுபான்மையினர் நலன்

தனிப் பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள் :

36. அஜய் மக்கான் : இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

37. பேனி பிரசாத் வர்மா: உருக்கு

38. கே.வி.தாமஸ் : நுகர்வோர் நலன்- உணவு- பொது வினியோகம்

39. தின்ஷா ஜே.படேல் : சுரங்கம்

40. கிருஷ்ணா தீரத்: பெண்கள்- குழந்தைகள் மேம்பாடு

41. ஜெய்ராம் ரமேஷ் : சுற்றுச்சூழல், வனம்

ராஜாங்க மந்திரிகள் :

42. ஸ்ரீகாந்த் ஜெனா : ரசாயனம், உரம்

43. ஈ.அகமது : வெளியுறவு

44. முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் : உள்துறை

45. வி.நாராயணசாமி : பாராளுமன்ற விவகாரம், பணியாளர் நலன், 
      பொதுமக்கள் குறை தீர்ப்பு, பென்சன், பிரதமர் அலுவலகம்

46. ஜோதிர் ஆதித்ய சிந்தியா : வர்த்தகம், தொழில் துறை

47. டி.புரந்தேஸ்வரி : மனித வள மேம்பாடு

48. கே.எச்.முனியப்பா : ரெயில்வே

49. பனபாக லட்சுமி : ஜவுளி

50. நமோ நாராயண் மீனா : நிதித் துறை

51. எம்.எம்.பல்லம் ராஜூ : ராணுவம்

52. சவுகதா ராஜ் : நகர்ப்புற வளர்ச்சி

53. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் : நிதி

54. ஜிதின் பிரசாத் : சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை

55. ஏ.சாய் பிரதாப் : கனரக தொழில்- பொதுத் துறை நிறுவனங்கள்

56. பிரனீத் கவுர் : வெளியுறவு

57. குர்தாஸ் காமத் : உள்துறை

58. ஹாரிஷ் ரவாத் : விவசாயம்- உணவு பதப்படுத்தும் தொழில்

59. பாரத்சிங் சோலங்கி : ரெயில்வே

60. மகாதேவ் எஸ்.கந்தேலா : பழங்குடியினர்

61. தினேஷ் திரிவேதி : சுகாதாரம், குடும்ப நலன்

62. சிசிர் அதிகாரி : கிராமப்புற மேம்பாடு

63. சுல்தான் அகமது: சுற்றுலா

64. முகுல்ராய் : கப்பல்

65. சவுத்ரி மோகன்ஜதுவா: தகவல் ஒலிபரப்பு

66. டி.நெப்போலியன்: சமூகநீதி, அமலாக்கம்

67. எஸ். ஜெகத்ரட்சகன் :தகவல் ஒலிபரப்பு

68. எஸ்.காந்திசெல்வன் : சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

69. துஷார்பாய் சவுத்ரி : சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை

70. சச்சின் பைலட் : தொலை தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்

71. அருண் யாதவ் : விவசாயம், உணவு பதப்படுத்துதல் துÛ

72. பிரதீக் பிரகாஷ்பாபு படீல் : நிலக்கரி

73. ஆர்.பி.என்.சிங் : பெட்ரோலியம்- இயற்கை எரிவாயு, கம்பெனி 
      விவகாரம்

74. வின்சென்ட் பாலா : நீர்வளம், சிறுபான்மையினர் நலன்

75. பிரதீப் ஜெயின் : கிராமப்புற மேம்பாடு

76. அகதா சங்மா : கிராமப்புற மேம்பாடு

77. அஷ்வினி குமார் : திட்டம், பாராளுமன்ற விவகாரம், விஞ்ஞான 
      தொழில் நுட்பம், புவி அறிவியல்

78. கே.சி.வேணுகோபால் : மின்சாரம்.

இத்தனை நாட்கள் கழித்து இது ஏன் என்கிறீர்களா..? 

அன்னை சோனியாவின் தலைசிறந்த எடுபிடியான பிரதமர் மன்னமோகனசிங்கின் முதல் அமைச்சரவைப் பட்டியலை  புதிய கொள்ளைக் கூட்டக் கும்பல் - சில புள்ளி விபரங்கள் என்ற தலைப்பில்   ஏற்கெனவே எனது வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

அதன் தொடர்ச்சியாக இதுவும் ஒரு தகவல் சேமிப்புக்காக  இங்கே பதிவிடப்படுகிறது..!