நினைத்தேன் எழுதுகிறேன்-28-08-2008

28-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்றே கொல்லும் என்ற பழமொழி பல நிலைகளில் பலித்திருப்பதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். நேற்றும் கண்டேன்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரனுக்கும், அவருடைய மனைவிக்கும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்த பாஸ்கரனும் அம்மாவின் முதல் ‘பொன்னான’ ஆட்சிக் காலத்தில் சப்தமில்லாமல் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். அதிலும் அப்போதைய பத்திரிகையாளர்கள் சுலபத்தில் இவரை மறந்துவிட முடியாது.

சென்னை, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இருந்த அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு சசிகலா ஆஜராக வந்தபோது பத்திரிகையாளர்கள் பெருமளவு கூடியிருந்தார்கள். அவர்களின் கேமிராக்களில் சசிகலாவின் முகம் பதியாத வண்ணம் எங்கிருந்தோ அழைத்து வரப்பட்டிருந்த வாட்டசாட்டமான ஆட்கள் வட்டவடிவில் நின்று கொண்டு தங்களது கைகளை ஒரு சேரத் தூக்கி இணைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களை இடித்துத் தள்ளி கோரத் தாண்டவமாடியதை நான் கண்கூடே கண்டேன். அந்த அரும்பணியைச் செய்து புண்ணியம் தேடிக் கொண்டவர் இந்த ரிசர்வ் பேங்க் பாஸ்கரன்தான் என்பதை பத்திரிகைகள் பிற்பாடு புலனாய்வு செய்து சொல்லியிருந்தன.

அந்த ‘ராமராஜ்ய’ கட்டத்தில் சின்னம்மாவின் சீற்றத்திற்குள்ளான அனைத்து விஷயங்களிலும் பாய்ந்தவைகள் இவருடைய வில் சேனையிலிருந்து கிளம்பிய அம்புகள்தான். ஆனாலும் எதிலும் ஆதாரமில்லை என்று சொல்லி அப்போதும் சரி.. அதற்குப் பின்னான தி.மு.க. ஆட்சியிலும் சரி ‘கை’ வைக்க முடியாத நிலையில்தான் இருந்தார்.

ஆனாலும் ஒரு முறை ஒன்று சேர அடித்த சி.பி.ஐ.யின் ரெய்டில் மட்டுமே சிக்கினார். பத்திரிகைகளின் கைகளுக்கு நியூஸ் போகாதவண்ணம் நடந்து முடிந்த இந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற விசாரணையின் முடிவு மட்டும், அனைத்து கண்டங்களுக்கும் தெரிந்துவிட்டது.

ஆடும்வரை ஆடுங்கள். எல்லாம் முடிந்த பின்பு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைத்தே தீரும்.

* * * * * * *

சிபுசோரன் தனது நீண்ட நாள் கனவான முதல்வர் பதவியை அடைந்துவிட்டார். மாயாவதி மாநிலம் முழுவதும் அரசு செலவில் தன்னுடைய உருவச் சிலையை அமைக்கச் சொல்லி உத்தரவிட்டுவிட்டார். லாலூ பிரசாத் யாதவ் அடுத்தத் தேர்தலில் கூட்டணி பற்றி சரத்யாதவுடன் பேசத் தயாராகிவிட்டார். ஜெயலலிதா பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்காதபட்சத்தில் கம்யூனிஸ்ட்கள் அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்புண்டு என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்துவிட்டார்கள்.

ஆக மொத்தத்தில் லஞ்சம், ஊழல், முறைகேடு, சி.பி.ஐ., கோர்ட், வழக்கு, தீர்ப்பு என்று எல்லா ஜல்லியையும் ஓட்டுப் போட்ட அப்பாவிகளும், பொழுது போகாத நமது பதிவர்களும்தான் பேசவும், எழுதிக் கொள்ளவும் வேண்டும். யாருக்கும் இங்கே வெட்கமில்லை என்பதனை மீண்டும், மீண்டும் நாம் நிரூபித்தே வருகிறோம்.. வாழ்க ஜனநாயகம்..

* * * * * *

டைசியாக நேற்று இரவு கிடைத்த செய்திகளின்படி தம்பி பாலபாரதி திருமணப் பந்தத்தில் சிக்கிக் கொண்டதாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

அவர் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்.

11 comments:

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//ஆக மொத்தத்தில் லஞ்சம், ஊழல், முறைகேடு, சி.பி.ஐ., கோர்ட், வழக்கு, தீர்ப்பு என்று எல்லா ஜல்லியையும் ஓட்டுப் போட்ட அப்பாவிகளும், பொழுது போகாத நமது பதிவர்களும்தான் பேசவும், எழுதிக் கொள்ளவும் வேண்டும். யாருக்கும் இங்கே வெட்கமில்லை//
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் , அது தான் தொல்லை .!!

வெட்டிப்பயல் said...

:: Not to be published ::

துக்க செய்தியையும், நல்ல செய்தியையும் ஒரே பதிவுல தந்தா வருத்தம் சொல்ல முடியுமா இல்லை வாழ்த்து சொல்ல முடியும???

வெட்டிப்பயல் said...

அண்ணே... உண்மை தமிழன் அண்ணே...

Not to be Publishedனா பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம். உங்கள் பார்வைக்கு மட்டும்னு அர்த்தமண்ணே...

உண்மைத்தமிழன் said...

//Not to be published ::
துக்க செய்தியையும், நல்ல செய்தியையும் ஒரே பதிவுல தந்தா வருத்தம் சொல்ல முடியுமா இல்லை வாழ்த்து சொல்ல முடியும???//

//அண்ணே... உண்மை தமிழன் அண்ணே... Not to be Publishedனா பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம். உங்கள் பார்வைக்கு மட்டும்னு அர்த்தமண்ணே...//

தம்பீ.. மன்னிக்கணும்.. மன்னிக்கணும்.. மன்னிக்கணும்..

பதிவு போடும்போதே கட் செய்து தனிப்பதிவாகத்தான் போட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அலுவலக அவசரம்.. கடைசி நிமிடத்தில் அந்த யோசனை மறந்து போய்விட்டது.. முதல் கமெண்ட் வந்த பின்புதான் யோசிப்பே வந்தது.. அதற்குள் பல மணி நேரமும், நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் பார்த்துவிட்டார்கள்.

அதுனால அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.. என்ன செய்வது? எனக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும்..

உனது அறிவுரைக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி..

வெட்டிப்பயல் said...

//முதல் கமெண்ட் வந்த பின்புதான் யோசிப்பே வந்தது.. //

அதே தான்... பதிவை படிச்சி முடிச்சிட்டு முதல் பின்னூட்டம் பார்த்தவுடனே அதிர்ச்சியாகிடுச்சி. அதுக்கு அப்பறம் தான் அவர் எதுக்கு சொன்னாருனு புரிஞ்சிது. அதனால தான் உங்களுக்கு சொன்னேன்...

நூற்றுக்கு மேற்பட்டோர் பார்த்தாலும் இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்க்கும் போது அவுங்க மனசுலயும் இப்படி தோன்றக்கூடாதேனு சொன்னேன்.

உண்மைத்தமிழன் said...

///வெட்டிப்பயல் said...
//முதல் கமெண்ட் வந்த பின்புதான் யோசிப்பே வந்தது.. //
அதே தான்... பதிவை படிச்சி முடிச்சிட்டு முதல் பின்னூட்டம் பார்த்தவுடனே அதிர்ச்சியாகிடுச்சி. அதுக்கு அப்பறம் தான் அவர் எதுக்கு சொன்னாருனு புரிஞ்சிது. அதனாலதான் உங்களுக்கு சொன்னேன்...நூற்றுக்கு மேற்பட்டோர் பார்த்தாலும் இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்க்கும் போது அவுங்க மனசுலயும் இப்படி தோன்றக்கூடாதேனு சொன்னேன்.///

தம்பீ..

சங்கடம் பார்த்து நின்றேன்.. உனது அறிவுரையினால் தயக்கம் காட்டாமல் செய்துவிட்டேன்..

நன்றி.

வெட்டிப்பயல் said...

அண்ணே,
தனி பதிவா போட்டதுக்கு மிக்க நன்றி... நீங்க வேணும்னா என் பின்னூட்டத்தை எல்லாம் நீக்கிடலாம்...

வால்பையன் said...

//ஆடும்வரை ஆடுங்கள். எல்லாம் முடிந்த பின்பு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைத்தே தீரும்.//

இது எல்லோருக்கும் பொருந்தும் தானே!
ஆளும் கட்சி பாவம் சோத்துக்கே கஷ்டப் படராங்கலாமா

உண்மைத்தமிழன் said...

//வெட்டிப்பயல் said...
அண்ணே, தனி பதிவா போட்டதுக்கு மிக்க நன்றி... நீங்க வேணும்னா என் பின்னூட்டத்தை எல்லாம் நீக்கிடலாம்...//

தேவையில்லை தம்பீ.. இருக்கட்டும்.. இருக்க வேண்டும்.. அறிவுரைக்கும், தெளிவுரைக்கும் நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

///வால்பையன் said...
//ஆடும்வரை ஆடுங்கள். எல்லாம் முடிந்த பின்பு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைத்தே தீரும்.//
இது எல்லோருக்கும் பொருந்தும்தானே!///

நிச்சயமாக பொருந்தும்.. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தந்த கட்சியினர் ஆடத்தான் செய்கிறார்கள்.. செய்வார்கள்.. இது நமக்குக் கிடைத்த கொடுப்பினை.. அவ்ளோதான்..

//ஆளும் கட்சி பாவம் சோத்துக்கே கஷ்டப்படராங்கலாமா?//

வால்பையன் ஸார்.. கடைசி வார்த்தை குழப்பத்தில் கொண்டு போய்விடுகிறது.. புரியவில்லை.. தயவு செய்து விளக்கவும்.

abeer ahmed said...

See who owns blogspot.com or any other website:
http://whois.domaintasks.com/blogspot.com