18-08-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எந்த நேரத்தில் ‘எனது ஆகாசக் கனவு’ என்கிற பதிவை எழுதினேன் என்று தெரியவில்லை. அந்தக் கனவை நினைத்து ஏக்கத்துடன் இருப்பவனின் மனதில் நெருப்பு கங்கை கொட்டிவிட்டது கடந்த பிப்ரவரி மாத 'இந்தியா டுடே'யில் வந்திருந்த ஒரு கவர் ஸ்டோரி.
கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் நான்கு மாதங்கள் கழித்து வீட்டைச் சுத்தம் செய்யலாம் என்று ஒழுங்கு செய்கையில், அந்த 'இந்தியா டுடே' பத்திரிகை கைக்குக் கிடைத்தது. சும்மா ஒரு புரட்டு புரட்டியவனின் கண்ணில்பட்டது இந்த கொடுமை..
படிக்கும்போதே வயிறு எரிய ஆரம்பித்தது. படித்து முடித்தவுடன் எத்தனை குடம் தண்ணீர் குடித்தாலும் தீ அணையாது போலிருந்தது. சரி.. வழக்கம்போல பதிவு போட்டாவது தீயை அணைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து வீட்டை ஒட்டடை அடிக்கும் வேலையை ஒத்திவைத்துவிட்டு டைப் செய்துவிட்டேன்..
கொஞ்சூண்டு நீளமாக இருந்ததினால் பிரித்துப் போட்டுள்ளேன். படித்துப் பார்த்து எனது வயிற்றெரிச்சலில் கொஞ்சத்தையாவது யாரேனும் பங்கு போட்டுக் கொள்ள முன் வந்தால், எனக்கு பெரும் உதவியாக இருக்கும்.. வயிறு எரியுதே? வேற என்ன செய்ய..?
(தொடரும்)
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்
நான்காம் பாகம்
ஐந்தாம் பாகம்
ஆறாம் பாகம்
ஏழாம் பாகம்
இறுதி பாகம்
|
Tweet |
5 comments:
மந்திரியாகனும், அவ்ளோதானே? இது ஒரு பெரிய விசயமா?
2சி உடனே கட்சிக்கு நிதி கொடுங்க, 2013ல நாமதான் மத்தியில ஆட்சியமைக்கிறோம். ( என்ன பண்றது 2011, 2016 வரைக்கு முதலமைச்சர் பதவிக்கு போட்டிக்கு நிறைய பேரு இருக்காங்க. ) நாம நேரடியா மத்தியில ஆட்சிய புடிச்சுருவோம்.
அட்வான்ஸ் 2சி உடனே கட்டி ரசீது வாங்கிக்கங்கப்பு.
//கொஞ்சூண்டு நீளமாக இருந்ததினால் பிரித்துப் போட்டுள்ளேன். //
நிஜமாவே கொஞ்சூண்டா? இல்லை உண்மை தமிழன் கொஞ்சூண்டா?
//ஜோசப் பால்ராஜ் said...
மந்திரியாகனும், அவ்ளோதானே? இது ஒரு பெரிய விசயமா? 2சி உடனே கட்சிக்கு நிதி கொடுங்க, 2013ல நாமதான் மத்தியில ஆட்சியமைக்கிறோம். ( என்ன பண்றது 2011, 2016 வரைக்கு முதலமைச்சர் பதவிக்கு போட்டிக்கு நிறைய பேரு இருக்காங்க. ) நாம நேரடியா மத்தியில ஆட்சிய புடிச்சுருவோம். அட்வான்ஸ் 2சி உடனே கட்டி ரசீது வாங்கிக்கங்கப்பு.//
ஜோசப்பு.. நல்ல காமெடி.. ஆனா ஒரு விஷயம்.. 2013-ல போட்டி அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா பேரன்களும், மகன்களுமாக அனைத்துக் கட்சியிலும் கோட்டைக்குப் போட்டி போடப் போறாங்க.. இப்பவே ஏதாவது ஒரு பேரனையோ, மகனையோ காக்கா பிடிச்சு வைச்சுக்குங்க..
///குசும்பன் said...
//கொஞ்சூண்டு நீளமாக இருந்ததினால் பிரித்துப் போட்டுள்ளேன். //
நிஜமாவே கொஞ்சூண்டா? இல்லை உண்மை தமிழன் கொஞ்சூண்டா?///
ரெண்டும் ஒண்ணுதான் குசும்பா..
See who owns google.com or any other website:
http://whois.domaintasks.com/google.com
Post a Comment