தமிழ்மணத்திற்கும், சக வலைப்பதிவர்களுக்கும் நன்றி..! நன்றி..! நன்றி..!


28-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

தமிழ்மணம் நடத்திய போட்டியில் எனது பதிவுகளை வெற்றி பெற வைத்த வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்..

எனது எழுத்தினையும் படிக்கக் கூடிய ஒன்றுதான் என்ற ரீதியில் நீங்கள் அங்கீகரித்திருப்பது, நான் சோர்வடையாமல் இருந்து மேலும், மேலும் எழுதுவதற்கு என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது.

அதிலும் ஒரு பொருத்தமாக நமது எழுத்துலக ஆசான் சுஜாதா அவர்களின் அஞ்சலிப் பதிவு வெற்றி பெற்ற செய்தி, அந்த ஆசான் மறைந்த தினத்தன்றே வெளியானது எனக்கு நெகிழ்ச்சியைத் தருகிறது.

முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்பது ஒரு அளவீடுதானே ஒழிய, அதுவே முத்திரையல்ல.. இந்த அளவீடுகள் பதிவுக்கு பதிவு, தலைப்புக்குத் தலைப்பு மாறுபடும் தன்மை கொண்டது. பதிவர்கள் பலரும் பலவித குடும்பச் சூழல்களுக்கு மத்தியில் எழுத வருவதே மிகப் பெரிய விஷயம். அந்த வகையில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களுமே தத்தமது வெளிப்பாடுகளை அவரவர்க்கு ஏற்றவகையில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அத்தனை பேருமே வலையுலகின் எழுத்தாளர்கள்தான்.. சிறந்தவர்கள்தான்.. சந்தேகமில்லை..

நேரமும், சந்தர்ப்பமும் அனைவருக்கும் ஒரேவகையில் வாய்க்குமானால் இன்னும் சிறப்பாக பதிவர்களால் எழுத முடியும்.. அது அவர்களுக்கு கிட்டும் என்று நம்புகிறேன்..

ஆரோக்கியமான முறையிலும், நேர்மையான முறையிலும் போட்டியினை நடத்திய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

தொலைபேசியிலும், நேரிலும், பின்னூட்டத்திலும் வாழ்த்துச் சொன்ன அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..!

வலையுலகம் செழித்து வளரவும், பதிவர்கள் அவர்தம் குடும்பத்தினரும், வாசகர்களும் அவர்தம் குடும்பத்தினரும் நீடூழி வாழ வேண்டி என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..

நன்றி

வணக்கம்.

யாருக்குய்யா வேணும்...!? போங்கய்யா நீங்களும் உங்க 'கலைமாமணி'யும்!!!

27-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


மாநிலத்தில் கலை, பண்பாட்டு, கலாச்சாரத் துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரப்படுத்தும் நோக்கில், மாநில அரசினால் வருடந்தோறும் வழங்கப்படும் 'கலைமாமணி விருது' இந்தாண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலைப் பாருங்கள்..

2008-ம் வருடத்திய தமிழக அரசின் கலைமாமணிகள்

1. அ.மாதவன் - இயற்றமிழ்க் கலைஞர்

2. கவிஞர் சிற்பி - இயற்றமிழ்க் கலைஞர்

3. சரளா ராஜகோபாலன் - இயற்றமிழ் ஆராய்ச்சியாளர்

4. குருசாமி தேசிகர் - இயற்கலை பண்பாட்டு கலைஞர்

5. அவ்வை நடராஜன் - இலக்கியப் பேச்சாளர்

6. மாசிலாமணி - இலக்கியப் பேச்சாளர்

7. சீர்காழி எஸ்.ஜெயராமன் - இசை ஆசிரியர்

8. எம்.எஸ்.முத்தப்பா - இசை ஆசிரியர்

9. மகாராஜபுரம் சீனிவாசன் - குரலிசை

10. ஏ.வி.எஸ். சிவகுமார் - குரலிசை
11. எம்பார் கண்ணன் - வயலின்
12. வழுவூர் ரவி - மிருதங்கம்

13. டிரம்ஸ் சிவமணி - டிரம்ஸ்

14. சுகி சிவம் - சமயச் சொற்பொழிவாளர்

15. சதாசிவன் - இறையருட் பாடகர்
16. வீரமணி ராஜூ - இறையருட் பாடகர்
17. டி.வி.ராஜகோபால் பிள்ளை - நாதசுரம்
18. எஸ்.வி.மீனாட்சி சுந்தரம் - நாதசுரம்
19. தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன் - தவில்

20. ஏ.மணிகண்டன் - தவில்

21. செல்வி ஷைலஜா - பரத நாட்டிய ஆசிரியர்

22. செல்வி ஸ்வேதா கோபாலன் - பரத நாட்டியம்

23. செல்வி சங்கீதா கபிலன் - பரத நாட்டியம்

24. செல்வி கயல்விழி கபிலன் - பரதநாட்டியம்
25. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - பரத நாட்டியம்
26. வசந்தா வைகுந்த் - நாட்டிய நாடகம்
27. மு.ராமசாமி - நாடக ஆசிரியர்

28. கூத்துப்பட்டறை முத்துசாமி - நாடகத் தயாரிப்பாளர்

29. ராஜாமணி - நாடக நடிகை

30. சி.டேவிட் - இசை நாடக மிருதங்க கலைஞர்

31. புதுக்கோட்டை ச.அர்ச்சுனன் - நாடக ஆர்மோனிய கலைஞர்

32. விழுப்புரம் விசுவநாதன் - தெருக்கூத்து

33. சங்கரபாண்டியன் - காவடியாட்டம்

34. வேலவன் சங்கீதா - வில்லுப்பாட்டு

35. பெ.கைலாசமூர்த்தி - ஒயிலாட்டம்

36. துறையூர் முத்துக்குமார் - காளியாட்டம்


37. அபிராமி ராமநாதன் - திரைப்படத் தயாரிப்பாளர்

38. சேரன் - திரைப்பட இயக்குநர்

39. சுந்தர்.சி.- திரைப்பட நடிகர்

40. பரத் - திரைப்பட நடிகர்

41. நயன்தாரா - திரைப்பட நடிகை

42. அசின் - திரைப்பட நடிகை

43. மீரா ஜாஸ்மின் - திரைப்பட நடிகை

44. பசுபதி - குணச்சித்திர நடிகர்

45. ஷோபனா - குணச்சித்திர நடிகை

46. வையாபுரி - நகைச்சுவை நடிகர்

47. சரோஜாதேவி - பழம்பெரும் நடிகை
48. வேதம் புதிது கண்ணன் - வசனகர்த்தா
49. ஹாரிஸ் ஜெயராஜ் - இசையமைப்பாளர்

50. ஆர்.டி.ராஜசேகர் - ஒளிப்பதிவாளர்

51. பி.கிருஷ்ணமூர்த்தி - கலை இயக்குநர்

52. சித்ரா சுவாமிநாதன் - புகைப்படக் கலைஞர்

53. நவீனன் - பத்திரிகையாளர்

54. சீனிவாசன் - ஓவியக் கலைஞர்

55. சுந்தர் கே.விஜயன் - சின்னத்திரை இயக்குநர்

56. திருச்செல்வம் - சின்னத்திரை இயக்குநர்

57. பாஸ்கர் சக்தி - வசனகர்த்தா

58. அபிஷேக் - சின்னத்திரை நடிகர்

59. அனுஹாசன் - சின்னத்திரை நடிகை

60. அமரசிகாமணி - சின்னத்திரை நடிகர்
61. எம்.எம்.ரங்கசாமி - சின்னத்திரை ஒளிப்பதிவாளர்

62. தேவிப்பிரியா - சின்னத்திரை நடிகை

63. ரமேஷ் பிரபா - சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்


64. வி.தாயன்பன் - இசைக் கலைஞர்
65. டாக்டர் அ.மறைமலையான் - இயற்றமிழ்க் கலைஞர்
66. ஜாகிர் உசேன் - பரத நாட்டியக் கலைஞர்

67. சரோஜ் நாராயணசுவாமி - இயற்றமிழ்க் கலைஞர்

68. ஆண்டாள் பிரியதர்ஷிணி - இயற்றமிழ்க் கலைஞர்

69. அரிமா கோ.மணிலால் - இயற்றமிழ்க் கலைஞர்
70. பெரு.மதியழகன் - இயற்றமிழ்க் கலைஞர்
71. ஒய்.ஜான்சன் - நாடகக் கலைஞர்


பொற்கிழி பெறுவோர்


1. என்.எஸ்.வரதராசன் (மதுரை) - இசை நாடகப் பாடலாசிரியர்

2. டி.சி.சுந்தரமூர்த்தி (சென்னை) - புரவியாட்டக் கலைஞர்
3. டி.என்.கிருஷ்ணன் (சென்னை) - நாடக நடிகர்

சிறந்த நாடகக் குழு

சாம்புவின் சங்கரநாராயண சபா, ஆடுதுறை


சிறந்த கலை நிறுவனம்


தமிழிசை மன்றம், திருவையாறு.


இந்தப் பட்டியலைப் பார்த்தவுடன் கோடம்பாக்கத்தில் லேசான முணுமுணுப்புகளும், கிசுகிசுப்பான பேச்சுக்களும் துவங்கிவிட்டன. அரசியல் காரணங்களுக்காகவே சிலருக்கு இந்த விருதுகள் சீக்கிரமாக கிடைத்துவிடுகின்றன என்ற செய்திகளும் எழுந்துள்ளன. இதில் உண்மை இல்லாமல் இல்லை.. ஆனால் அப்படி விருதினைப் பெறுபவர்களும் சக கலைஞர்கள்தான் என்பதால் தங்களது குமுறலை கோடம்பாக்கத்துக்காரர்களால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.

ஆனால் அதே சமயம், இது மாதிரியான குறுக்கு வழியில் விரைவில் இந்த விருதை சிலர் வாங்கிவிட, அவர்களுக்கு முன்பே இதே துறையில் பணியாற்றி வரும் பல மூத்தக் கலைஞர்களுக்கு இந்த விருது கிடைக்காமல் போய்விடுகிறது.
அந்த மூத்தக் கலைஞர்களே பிற்காலத்தில் வருத்தப்பட்டு, 'எனக்கு ஒரு அங்கீகாரம் இல்லையா?' என்று கண் கலங்கிய பின்பே, இப்போதுதான் ஞாபகம் வருகிறாற்போல் விருதினை வழங்குவது அந்த விருதுக்கும், அரசுகளுக்கும் பெருமையாகாது. உதாரணம் நம்ம சரோஜாதேவி.

சரோஜாம்மாவுக்கே இப்பத்தான் விருது கொடுக்குறாங்கன்னா இதுவரையில் அரசாண்ட அரசுகளும், கலையுலகமும் இதுவரையில் என்ன செஞ்சுட்டிருந்தாங்கன்னு தெரியலை..
இதைக் கேள்வி்ப்பட்டு மனசு நொந்து, 'கலைமாமணி விருது' இதுவரைக்கும் யார், யாருக்கெல்லாம் கொடுத்திருக்காங்க.. யாருக்கெல்லாம் கொடுக்கலைன்னு தேடினா.. கொஞ்சம் அதிர்ச்சியாவும் இருந்துச்சு.. நிறைய கோபமும் வந்துச்சு.

அகில உலக சரோஜாதேவி ரசிகர் மன்றத் தலைவரான மதுரையின் மண்ணின் மைந்தன், இனமானப் பேராசிரியர், திருமிகு தருமி ஐயா அவர்கள், இதையெல்லாம் படிச்சுட்டு அரசின் மெத்தனப் போக்கைக் கண்டிச்சு போராட்டம் நடத்தணும். நான் அவருக்கு வெளில இருந்து ஆதரவு தருவேன் என்று உறுதியளிக்கிறேன்...


சரோஜாதேவியம்மா தமிழ்ல நடிச்சு வெளியான முதல் திரைப்படம் 'பூலோக ரம்பை'. இது 1958-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வெளியாகியிருக்கு. அவங்க தமிழ்த் திரையுலகத்துக்கு வந்த அடுத்த வருஷத்துல இருந்துதான் அதாவது, 1959-ம் வருஷத்துல இருந்துதான் ‘கலைமாமணி விருது’ வழங்க ஆரம்பிச்சிருக்காங்க..


1959-ல டி.ஆர்.ராஜகுமாரி, 1960-ல கண்ணாம்பாள், எம்.எஸ்.திரெளபதி, 1961-ல எஸ்.பி.சுப்புலஷ்மி, டி.பி.ராஜலஷ்மி, 1962-ல டி.ஏ.மதுரம், எம்.என்.ராஜம், 1963-ல எம்.வி.ராஜம்மா, ஜி.சகுந்தலா - அப்படீன்னு அவரைவிட திரையுலக சீனியர்களெல்லாம் விருதுகளை வாங்கிட்டாங்க..

சரோஜாம்மா 'லைம் லைட்'ல இருந்த காலத்துல, அவங்களோட சேர்ந்து நடிச்ச அத்தனை பேருமே தொடர்ந்து 'கலைமாமணி' வாங்கிட்டுப் போயிட்டாங்க..

"1964-ல அஞ்சலிதேவி, 1965-ல பத்மினி, பண்டரிபாய், 1966-ல சாவித்திரி, 1967-ல விஜயகுமாரி, 1968-ல வைஜெந்தியமாலா, 1969-ல செளகார் ஜானகி, 1970-ல எஸ்.வரலஷ்மி, மனோரமா, 1971-ல ஜெயலலிதா, சந்திரகாந்தா ஈ.வி.சரோஜா, 1972-ல எம்.பானுமதி(?), கே.ஆர்.விஜயா, வெண்ணிற ஆடை நிர்மலா"

- இப்படி சரோஜாதேவியம்மா செட்ல இருந்த நிறைய பேரு வாங்கிட்டாங்கப்பா.. மூணு பேர் மட்டும்தான் மிஸ்ஸிங். அது தேவிகா, புஷ்பவல்லி, ஜமுனா.. பாவம், தேவிகாவும், புஷ்பவல்லியும் விருதை வாங்காமலேயே இறந்து போயிருக்காங்க.. ஜமுனா, இப்போ ஆந்திரால செட்டில் ஆகி காங்கிரஸ் கட்சி எம்.பி.யாவும் இருந்தாங்க..


இதுலயே நமக்குத் தெரியாத பேரெல்லாம்கூட இடைல இருக்கு. 1966-ல சாவித்திரிகூட ஹேமலதா அப்படீன்னு ஒருத்தங்களும் விருது வாங்கிருக்காங்க.. 1967-ல விஜயகுமாரிகூட டி..ஜெயலஷ்மி, என்.ஆர்.சாந்தினின்னு ரெண்டு பேரு வாங்கியிருக்காங்க... 1972-ல எம்.பானுமதி.. இதுவும் யாருன்னு தெரியல..


இவங்கள்ல ஒருத்தங்களுக்குப் பதிலா அப்பவே இந்த விருதை சரோஜாதேவிக்குக் கொடுத்திருந்தாகூட மரியாதையா இருந்திருக்கும்.. இப்ப பேரனோட படத்துல நடிக்கும்போதுதான் நம்ம அரசுக்குத் தெரிஞ்சிருக்கு, "ஐயையோ சரோஜாதேவியம்மாவுக்குத் தரலியே.."ன்னு! பார்த்துக்கி்டடேயிருங்க.. விருது கொடுக்குற நிகழ்ச்சியில, "எம்.ஜி.ஆரு.க்குக்கூட வராத பாசமும், நேசமும் எங்களுக்கு இருக்கு"ன்ற மாதிரியான பேச்சு நிச்சயமா வரும்..

எப்படியோ இப்பவாச்சும் அறிவு வந்து கொடுத்தாங்களே.. அதுக்கு ஒரு நன்றிதான்.. ஆனா அதுக்காக எல்லா நடிகரும், நடிகையும் இனிமே பேரன்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் நடித்தால் மட்டுமே, விருதுகள் கிடைக்கும்னு நினைச்சு ஓடி வந்தா என்ன பண்ணுவாங்க..? எல்லாருக்கும் சான்ஸும் கொடுத்து, விருதும் கொடுத்திருவாங்களா..? சரி விடுங்க.. அடுத்த விஷயத்தைப் பார்ப்போம்..

இதுக்கு அடுத்த செட்டு ஆளுகன்னு பார்த்தீங்கன்னா..

1974-ல வாணிஸ்ரீ, 1975-ல கே.என்.கமலம், காந்திமதி, விஜயசந்திரிகா, மஞ்சுளா, 1976-ல சுஜாதா, தாம்பரம் லலிதா(?), ஹேமமாலினி(?), 1977-ல ‚வித்யா, சிவபாக்கியம்(?), நாஞ்சில் நளினி, 1978-ல லதா, ஷோபா, சி.டி.ராஜகாந்தம், 1979-ல ஜெயசித்ரா, கலாவதி, யு.ஆர்.ஜீவரத்தினம், ரமணி(?) - இப்படி ஒரு லிஸ்ட்டு..

இதுல முக்கியமான அடுத்த தலைமுறை கதாநாயகிகளெல்லாம் வாங்கியாச்சு.. ஆனா இதுலேயும் விடுபட்டுப் போன கதாநாயகிகள்ல முக்கியமானவங்க ஜெயந்தி, சாரதா, ரோஜாரமணி, சந்திரகலா, ராஜஸ்ரீ, காஞ்சனா, பிரமிளா, பத்மப்பிரியா, கவிதா, சங்கீதான்னு ஒரு லிஸ்ட்டே இருக்கு..!

என்ன சரியா நடிக்கலைன்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு..
இந்த லிஸ்ட்லயே பார்த்தீங்கன்னா சி.டி.ராஜகாந்தம், கலாவதி, யு.ஆர்.ஜீவரத்தினம் மூணு பேரும் இதுக்கு முந்தின தலைமுறையைச் சேர்ந்தவங்க.. பாவம் அடுத்த தலைமுறைலதான் வாங்க வேண்டியிருந்திருக்கு..

இதுக்கு அடுத்ததுதான் நம்ம செட்டு..


என்னை மாதிரி சின்னப் புள்ளையான பதிவர்கள் பலருடைய வயித்தெரிச்சலை வாங்குற மாதிரியான மேட்டரெல்லாம் இதுலதான் இருக்கு.


1980-ல‚ ஸ்ரீ
பிரியா, வசந்தா(?), 1981-ல ஸ்ரீதேவி, எஸ்.ஆர்.சிவகாமி(?), 1982-ல சரிதா, சண்முகசுந்தரி, 1983-ல ராஜசுலோசனா, பி.பானுமதி, விஜயகுமாரி, 1984-ல ராதிகா, எஸ்.என்.பார்வதி, 1986-ல அம்பிகா, 1987-ல சுஹாசினி, 1990-ல சீதா, சுமித்ரா, எம்.சரோஜா, 1992-ல பானுபிரியா, சுகுமாரி, 1993-ல சச்சு, ரேவதி, டி.ஆர்.லதா(?) இப்படி ஒரு செட்டு ஆட்கள் வாங்கிட்டாங்க..

என்னாங்கடா இது? நம்மளோட ஒரிஜினல் ஹீரோயின்களையே கணக்குல எடுத்துக்காம இருந்திருக்காங்க..!

'புதிய வார்ப்புகள்'ல சின்னப் பசங்களான எங்க எல்லாருக்கும் தமிழ் சொல்லிக் கொடுத்த ரதிக்கு அவார்டு இல்லையா..? கண்ணாலேயே 'டியூஷன்' எடுத்த மாதவிக்கு எங்க அவார்டு..? தமிழ்ச் சினிமால முதல் முதல்லா சிகரெட் பிடிச்சு காண்பிச்ச பெண்ணியவாதி ராதாவுக்கு வெறும் புகைதானாம்ல..! காமவெறி பிடித்த அயோக்கிய ஆண்களை கோர்ட்டுக்கு இழுத்து வந்த முதல் நவீன பெண்ணியவாதி பூர்ணிமா ஜெயராமை காணவே காணோம்..!, 'இந்திரலோகத்தில் சுந்தரி'யான நளினிக்கு என்னாச்சு..? 'பூங்காற்று சூடாச்சு; ராசாவே நாளாச்சு'ன்னு பாடுன ஜீவிதாவையும் கைவிட்டுட்டாங்க.. பெரிசுகளையெல்லாம் கைப்பிடித்து அ, ஆ, இ, ஈ சொல்லிக் கொடுத்த தீபா டீச்சருக்கும் இல்லைன்னுட்டாங்களே..! செல்லமா கொஞ்சிக் காமிச்ச அர்ச்சனாவுக்கு பெப்பேவா.? சேலை, புடவை, பொட்டெல்லாம் அமோகமா விக்குறதுக்கு ஏற்பாடு பண்ணின நதியாவுக்கு என்னாச்சு? 'தலைவருக்கே' தண்ணி காட்டுன மை ஸ்வீட் ஹார்ட் அமலாவுக்கு அல்வாவா..? என்னை மாதிரி பச்சைப் புள்ளைகளை 'ஐ லவ் யூ'ன்னு சொல்லி பைத்தியமாக்குன நிரோஷாவுக்கு 'ஸாரி… வீ கேட் யூ'ன்னு சொல்லிட்டாங்க.. 'தென்றல் மூலமா என்னைத் தொட்ட' ஜெயஸ்ரீ, 'காளை.. காளை.. முரட்டுக்காளைன்னு' உருக்குன ரூபிணி.. இவுகளையும் லிஸ்ட்ல காணோம்.. கமலை கலாய்த்த சுலட்சனாவுக்கும் இல்லையாம்.. குப்புறக் கவுத்த கெளதமிக்கும் இல்லையாம்.. என்ன கொடுமை சரவணா இது..!

இவுங்கள்லாம் என்ன நடிக்காமய்யா இருந்தாங்க..? இல்லாட்டி நாங்கதான் பார்க்காம இருந்தோமா..? ஏன்யா அப்பவெல்லாம் எந்தப் பத்திரிகையும் இதைப் பத்தி எழுதலை!? எழுதியிருந்தா எங்க அப்பன், ஆத்தாகிட்ட சொல்லி ஓட்டை மாத்திப் போட்டு புரட்சி பண்ணி ஆட்சியை கவுத்திருப்போமே..!

இதுல இன்னொரு கொடுமை என்னன்னா.. சண்முகசுந்தரின்றவங்க முதல் தலைமுறையைச் சேர்ந்தவங்க.. ராஜசுலோசனாவைப் பத்தி சொல்லணுமா..? அவங்க 'நடிகவேள்' எம்.ஆர்.ராதாகூட ஜோடியா நடிச்சவங்க.. பி.பானுமதி. ஆம்பளை சிங்கம். சிவாஜி, எம்.ஜி.ஆரே பயப்படுற மாதிரி இருந்தவங்க.. இதுக்கு முந்தின தலைமுறை.. முதல் பெண் இயக்குநர்.. சுகுமாரி, 'பாசமலர்' படத்துல 'வாராயோ தோழி வாராயோ'ன்னு சாவித்திரிகூட ஆடிப் பாடுற தோழிகள்ல முதல் ஆளா நிப்பாங்க.. நாளைக்கு டிவில போட்டாங்கன்னா பாருங்க.. அத்திரைப்படத்தின் இயக்குநர் பீம்சிங்கின் மனைவியும்கூட.. எம்.சரோஜா.. இவங்களும் சீனியர் ஆர்ட்டிஸ்ட்.. 'டணால்' தங்கவேலுவோட ஜோடி. சச்சு அம்மா.. 'காதலிக்க நேரமில்லை'ல நாகேஷையே கலாய்ச்சவங்க.. இவங்கள்லாம் எந்தக் காலம்..? இப்படித்தாங்க தலைமுறை தாண்டி இவுங்களும் வந்து வாங்கியிருக்காங்க..

அடுத்த செட்டுக்கு வாங்க..

1994-ல சுகன்யா சி.கே.சரஸ்வதி, 1995-ல குஷ்பு, 1996-ல ஊர்வசி, கோவை சரளா, வடிவுக்கரசி, 1998-ல மீனா, ரேகா, கெளசல்யா செந்தாமரை, ரோஜா, 1999-ல ரம்யாகிருஷ்ணன், ராதாபாய், பசி சத்யா, டி.பி.முத்துலஷ்மி..

இதுல பாருங்க.. சி.கே.சரஸ்வதி, ராதாபாய்.. முதல் தலைமுறை நடிகையர்கள்.. நீண்ட வருடங்களாக நடித்துக் கொண்டிருந்தவர்கள்.. ரொம்ப லேட்டு.. அது போலவே டி.பி.முத்துலஷ்மி.. பழம்பெரும் நடிகைன்னே சொல்லலாம்.. எத்தனை வருஷம் கழிச்சு..?

இதுலேயும் கூத்த பாருங்க.. சுகன்யாவுக்குக் கொடுக்கும்போது கஸ்தூரிக்கு ஏன் கொடுக்கலை..? ஊர்வசிக்குக் கொடுக்கும்போது ஜோதிக்கு ஏன் கொடுக்கலை..? வடிவுக்கரசிக்குக் கொடுக்கறப்ப கீதாவுக்கும் கொடுத்திருக்கலாம்ல.. ரேகாவுக்கு கொடுத்திட்டு ரஞ்சிதாவுக்கு கொடுக்கலேன்னா எப்படின்றேன்..? கெளசல்யா செந்தாமரைக்குக் கொடுத்தவங்க சரண்யாவுக்கும் தட்டிவிட்டிருக்கலாமே.. சி.கே.சரஸ்வதிக்குக் கொடுத்தவங்க நிஷாந்திக்கும் தந்திருக்கலாமே..! ரம்யாகிருஷ்ணனுக்கு கொடுக்கும்போது, நக்மாவுக்கு கொடுக்குறதுல என்னங்கய்யா தப்பு? கோவை சரளாவுக்குக் கொடுத்தப்போ, அழகியத் தொடையழகி ரம்பாவுக்கும் கொடுத்திருந்தா எதுல குறைஞ்சு போயிருப்பாங்க..? 'பசி' சத்யாவுக்கு கொடுக்கும்போது சுவலட்சுமிக்கும் நீட்டிருக்கலாமே...! மீனாவுக்கு குடுத்தீங்களே..! அப்படியே, ஆயில் மசாஜ் பண்றது எப்படின்னு செஞ்சு காட்டுன மதுபாலாவுக்கும், தக்காளி விலையை ‘கிக்’குன்னு ஏத்திவிட்ட வினிதாவுக்கும் இதே மாதிரி கொடுத்திருக்கலாமே..! கொஞ்சமா நடிச்சாலும், பேர் சொன்ன மாதிரி நடிச்சிருந்த அஸ்வினிக்கும் தரலே.. ஜெயபாரதிக்கும் தரலே.. ரோகிணியையும் நட்டாத்துல விட்டுட்டாங்கப்பா..


சின்ன பட்ஜெட் படத்து ஹீரோயினுகளுக்காச்சும் கொடுத்திருக்கலாம்.. வஞ்சகமில்லாம அந்த நேரத்துலதான் எத்தனை பேரு கொடி கட்டிப் பறந்தாங்கய்யா..! மேனகா, வனிதா, சத்யகலா, மாதுரி(என்ன சிரிப்புன்றேன்..?! நடிப்பு நல்லாத்தான் இருந்துச்சுன்றேன்..!), கோகிலா, இளவரசி, பல்லவி, விஜி, சாரதா ப்ரீதா, காவேரி, வினோதினி, சுமா, பிரகதி, அஞ்சுன்னு.. இப்படி நிறைய பேரு எத்தனை 'பட்ஜெட்' படங்களை வாழ வைச்சாங்களேப்பா.. விட்டுப்புட்டாங்களே..!


இது மட்டுமா..! அப்பப்ப வந்து நடிச்சிட்டு போன சசிகலாவுக்கும் இல்ல.. ‘புது வசந்தம்’ சித்தாராவையும் காணோம்..! பீரோ சாவியை ஒளிச்சு வைக்க இடம் கண்டுபிடிச்ச ஆம்னிக்கும் இல்ல.. ‘குண்டு தக்காளி’க்கு அர்த்தம் சொன்ன ரவாளியக்காவுக்கும் இல்ல.. 'கிட்டிப்புல்' விளையாட்டை பரபரப்பாக்கிய ஐஸ்வர்யாவுக்கும் இல்ல.. சடுகுடு விளையாட்டுல ஜெயித்த யுவராணிக்கும் இல்ல.. பிரின்ஸிபாலையை காதலுக்கு சப்போர்ட் பண்ண வைச்ச மோகினிக்கும் இல்ல.. நாக்குல விளையாடிக் காட்டுன சங்கவிக்கும் இல்ல.. கார்த்திக்குக்கே நீச்சல் கத்துக் கொடுத்த ப்ரியாராமனுக்கும் இல்ல.. ‘சின்ன குஷ்பு’ சிவரஞ்சனியையும் காணோம்.. ஒல்லியா இருந்தாலும் நடிப்புல பட்டையைக் கிளப்புன சங்கீதாவைக் காணோம்.. ‘செளந்தர்ய அழகி’ செளந்தர்யாவையும் காணோம்.. 'ஏப்ரல் மேயிலே காலேஜே காய்ஞ்சு போச்சு'ன்னு சொன்ன ஹீராவை காணோம்.. 'மப்'பென்று வலம் வந்த மந்த்ராவை காணோம்.. பட்டம் பறக்கவிட்ட சொர்ணாவைக் காணோம்.. 'விருமாண்டி'க்காக உயிரைவிட்ட அபிராமியைக் காணோம்.. 'ஓ போடு'ன்னு சொல்லிக் கொடுத்த கிரண் மாமியைக் காணோம்..

சில பேரு கல்யாணம், புள்ளை, குட்டின்னு விலகித்தான் போவாங்க.. நாமதான் தேடிப் பிடிச்சு இட்டாந்து மொட்டையடிச்சு, காது குத்தி கலெக்ஷனை பார்க்கணும்..! நாளைப் பொழுதைக்கு அவுங்க திரும்பி நடிக்க வரும்போது, சீனியர் நடிகைன்னு எல்லாருக்கும் தெரிய வேணாம்..!?

சில அழகுச் சிலைகளை வெளிமாநிலத்துக்காரங்கன்னு சொல்லி ஒதுக்கி வைச்சு அநியாயம் பண்ணிருக்காங்களே.. என்னன்னு சொல்றது..? உலக அழகி ஐஸ்வர்யாவை ஒவ்வொரு நாட்டுலேயும் கூப்பிட்டிருக்காங்க.. இங்க என்னடான்னா மூணு படத்துல நடிச்சு முடிச்ச பின்னாடியும் எதுவுமே கொடுக்காம இருக்காங்க.. இது நியாயமா..? ‘இருவர்’ முடிஞ்ச பின்னாடியே கொடுத்திருக்கணும்.. என்ன நடிப்பு.. என்ன அழகு..!

மனீஷா கொய்ராலாவை விட முடியுமா? மறக்க முடியுமான்றேன்.. 'பாபா'ல அவுக வரும்போதெல்லாம் 'கிழவி'.. 'கிழவி'ன்னு கத்துறதையே சகிச்சிக்குட்டு நடிச்சுக் கொடுத்துட்டு போனாங்களே.. அந்தப் பொறுமைக்கு ஒரு பரிசு கொடுக்க வேணாம்..! வெத்தலையை எப்படி பாஸ் பண்றதுன்னு, வெத்தலையை கண்டுபிடிச்ச நமக்கே சொல்லிக் கொடுத்தாங்களே.. மறக்க முடியுங்களா..! 'கலைமாமணி'க்கு கொடுத்து வைக்கலை.. அவ்ளோதான்..

அடுத்து பாருங்க.. 2000-ல தேவயானி, 2001-ல ரேகா(ரெண்டு ரேகா வர்றாங்க.. யாருன்னு தெரியலை..) 2002-ல விஜயசாந்தி, 2003-ல சிம்ரன், கனகா, லஷ்மிராஜ்யம்(யாருங்க இது) 2004-ல சினேகா, கமலாகாமேஷ், சி.ஆர்.சரஸ்வதி, 2005-ல ஜோதிகா, சத்யப்ரியா, 2006-த்ரிஷா, நவ்யா நாயர், 2007-ல நயன்தாரா, அசின், ஷோபனா, அனுஹாசன், சரோஜாதேவி..

இப்படி வந்து முடிஞ்சிருக்கு லிஸ்ட்டு..


இதுலேயும் பாருங்க.. குளோஸப்புல கண்ணை மூடிக்கிட்டாலும், நடிப்புல நம்ம கண்ணைத் திறந்த கெளசல்யாவைக் காணோம்.. சிரிச்சு, சிரிச்சே நம்மளை காலி செஞ்ச லைலாவைக் காணோம்.. டிரெயின்ல ஓடி, ஓடியே பில்டப்பு கொடுத்த சதாவை காணோம்.. பிதாமகனையே ஆட்டைய போட்ட இன்னொரு சங்கீதாவையும் காணோம்.. கண்ணுலயே சோகத்தை பிழியும் சோனியா அகர்வாலையும் காணோம்.. 


வருஷா வருஷம் 10 பேருக்கு, 20 பேருக்குன்னு கொடுத்திருந்தா இத்தனை கண் கண்ட தெய்வங்களும் பட்டியல்ல வி்டுபட்டுப் போயிருப்பாங்களா..? இனிமே எந்தக் காலத்துல இவுங்களுக்கு 'கலைமாமணி' கொடுத்து இந்த அரசு புண்ணியத்தைத் தேடிக்கிறது.. கோடி முறை காசில குளிச்சாலும் இந்த புண்ணியம் கிட்டாதே..!

ஐயையோ.. இப்பத்தான் ஞாபகம் வருது..! ஆத்தாடி.. எப்படி மறந்தேன்..? எப்படி மறந்து போனேன்..!

இன்னொரு பக்கம் பாருங்க..


'எழந்தப்பழம்.. எழந்தப்பழம்'னு விக்க வந்த விஜயநிர்மலாவை யாருன்னு கேக்கணுமாம்..! 'பளிங்கினால் ஒரு மாளிகை'ன்னு ஆடிக் காட்டுன விஜயலட்சுமியை நாம மறந்திரணுமாம்.. 'குடிமகனே.. குடிமகனே'ன்னு நம்ம எல்லாரையும் பெயர் சொல்லி அழைத்து பெருமைப்படுத்திய ஆடுன சி.ஐ.டி. சகுந்தலாவை விட்டிரணுமாம்.. ‘கள்ளிக்கோட்டை சொர்ணம்’ ஜெயமாலினியை நினைச்சே பார்க்கக் கூடாதாம்.. 'கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வர்றியா.. வர்றியா'ன்னு கூப்பிட்ட ஜோதிலட்சுமிக்கும் கிடையவே கிடையாதாம்.. வருஷக்கணக்கா உதட்டைச் சுழுக்கியே எங்க உள்ளத்தைச் சுளுக்குன ஒய்.விஜயாவுக்கு ஒத்தடம் கிடையாதாம்..! 'பலானது ஓடத்து மேல'ன்னு ஆடுன குயிலிக்கும் இல்லையாம்.. கலைச்சேவைக்கு தனது வாரிசையும் களமிறக்கி சாதனை படைத்திருக்கும் அனுராதாவுக்கும் இல்லையாம்.. டிஸ்கோ டான்ஸ் ஆடுன சிபிஐ ஆபிஸர், டிஸ்கோ சாந்திக்கும் இல்ல.. 'மடிப்பு அம்சா' விசித்ராவுக்கும் இல்ல.. 'மலமல மருதமலை'ன்னு, மருதமலைக்கு இன்னொரு அர்த்தம் கண்டுபிடிச்ச மும்தாஜுக்கும் இல்ல.. 'சீனாதானா டோய்' ரகசியாவுக்கும் இல்ல.. புகார் சொல்லியே காணாப் போன, 'வாளமீன்' மாளவிகாவுக்கும் இல்ல... தமிழ் கூறும் நல்லுலகத்தின் இப்போதைய இளைஞர்களுக்கு 'பிட்'டு காண்பிச்சே, பட்டையைக் கிளப்புன தங்க மகள் ஷகீலாவுக்கும் இல்லையாம்..



எல்லாத்துக்கும் மேல.. எல்லாத்துக்கும் மேல..










இருபதாண்டு காலம் தமிழ்ச் சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்த, தான் இருந்த காலம் முழுவதும் கோடம்பாக்கத்தை ஆட்டிப் படைத்த, தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த, தமிழ்ச் சினிமா ரசிகர்களின் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும், இதய தெய்வம், கனவுக் கன்னி 'விஜயலஷ்மி' என்கிற 'சில்க் ஸ்மிதா'வுக்கு கொடுக்கவே இல்லையாம்..

போங்கய்யா நீங்களும் உங்க 'கலைமாமணி'யும்.. !!! எவனுக்கு வேணும்..!

டிஸ்கி : மறக்காம தமிழ்மணம் கருவிப்பட்டைல நச்சுன்னு ஒரு குத்து குத்திருங்க...!

இவ்வளவு நேரம் பொறுமையா படிச்சதுக்காக ஒரு 'பிட்டு' படம் கீழே..








(2008-ல எந்த நடிகைக்கும் தரலை.. 2009-ல ரோகிணி, சரண்யா இவங்களோட சின்னத்திரை நடிகையர்கள் மாளவிகா, ரேவதி சங்கரனுக்கும் கொடுத்திருக்காங்க. 2010-ல தங்கத் தலைவி அனுஷ்காவும், இடையழகி தமன்னாவும் வாங்கியிருக்காங்க..!)

ரஹ்மானின் ஆஸ்கார்! முதல் காரணம் இளையராஜாதான்..!


26-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1989 தீபாவளி சமயம். 'கவிதாலயா' நிறுவனத்திற்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியிருந்தது. காரணம் இசைஞானி இளையராஜா. தன்னுடைய திரையிசைக்காகத்தான் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து குவிகிறார்கள் என்பதில் அசைக்க முடியாத, ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டிருந்தார் இசைஞானி.

'புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படத்தினை தீபாவளி ரிலீஸாக கொண்டு வர வேண்டிய சூழலில் இருந்ததால் 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தர் மிகுந்த பரபரப்பில் இருந்தார். பி்ன்னணி இசைக் கோர்ப்பு மட்டும் முடிந்தால், அடுத்து வெளியீட்டு வேலையில் இறங்கிவிடலாம் என்ற நினைப்பில் இசைஞானிக்காக ‘கவிதாலயா’ காத்திருந்தது.

அதே நேரம் இசைஞானிக்காக பல திரைப்படங்களின் இசைக் கோர்ப்புகளும் காத்திருந்தன. அவரும் சும்மா இல்லை.. கைவசம் 15 திரைப்படங்களை வைத்திருந்தார். ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கென்று கால்ஷீட்டை ஒதுக்கி நோட்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு, மறுநாள் வேறொரு திரைப்படத்திற்குச் சென்று சளைக்காமல் பணி செய்து கொண்டிருந்தார்.

'புதுப்புது அர்த்தங்களில்' இசைஞானியின் திரைப்பாடல்கள் அமர்க்களமாக வந்திருக்க.. அதேபோல் பின்னணி இசையிலும் அமர்க்களப்பட வைக்க வேண்டும் என்பதற்காக இசைஞானியை நேரடியாக இசைக்கோர்ப்புப் பணியில் ஈடுபட வைக்க 'கவிதாலயா' முயற்சி செய்தது. இசைஞானி சிக்கவில்லை. கடும் போராட்டத்திற்குப் பின் அவரிடம் பேசியபோது மிகுந்த கோபப்பட்டுவிட்டாராம்.

ஒரு ஆடியோ கேஸட்டை கொடுத்து, 'நீங்க கூப்புடுற நேரத்துக்கெல்லாம் என்னால வர முடியாது. நான் வேணும்னா நீங்க வெயிட் பண்ணித்தான் ஆகணும். இல்லைன்னா, நான் ஏற்கெனவே போட்ட டிராக்ஸ் இதுல நிறைய இருக்கு.. நீங்களே இருக்குறத பார்த்து போட்டுக்குங்க...' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் இசைஞானி.

இதனை மிகப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்ட 'கவிதாலயா', இனி எந்தத் திரைப்படத்திற்கும் இசைஞானியை அணுகுவதில்லை என்ற முடிவை அப்போதுதான் எடுத்தது.

கோபம்தான்.. சட்டென்று எழுந்த கோபம்.. படைப்பாளிகளுக்கு எப்போதுமே ஈகோவும், அதன் பக்கவாத நோயான முன்கோபமும்தான் முதலிடத்தில் இருக்கும். முதலில் வந்தது இசைஞானிக்கு. இது எங்கே போய் முடியும் என்று அப்போது அவருக்கும் தெரியாது.. இரண்டாவதாக கோபப்பட்ட இயக்குநர் சிகரத்திற்கும் தெரியாது.

மறு ஆண்டு. மும்பை.. 'தளபதி' திரைப்படத்திற்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணியில் ராப்பகலாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் இசைஞானி. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் இசை, தியேட்டரிலேயே ரசிகர்களை எழுந்து ஆட வைக்கப் போகிறது என்பதை இயக்குநர் மணிரத்னமும், இசைஞானியும் அறிந்ததுதான்.. அதேபோல் மணிரத்னமும் தான் நினைத்தபடியே பி்ன்னணி இசையும் அதே வேகத்தில், அதே பாணியில் இருக்க வேண்டும் என்று சொல்லி இசைஞானியிடம் வற்புறுத்திக் கொண்டிருந்த நேரம்.

ஏதோ ஒரு மதிய நேரம் என்கிறார்கள். இருவருக்குள்ளும் ஒரு சிறிய வார்த்தை பிரயோகம் எழுந்து, அது மணிரத்னத்தை ஸ்டூடியோவைவிட்டு வெளியேறச் செய்திருக்கிறது.. மறுநாள் விடியற்காலையிலேயே தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஷ்வரன் சென்னையிலிருந்து மும்பைக்கு ஓடோடிப் போய் இருவருக்குமிடையில் சமாதானம் செய்து பார்த்தும், அது முடியாமல் போனது.. நிற்க.. இங்கேயும் முதலில் கோபம் எழுந்தது இசைஞானியிடமிருந்துதான்.. நிமிட நேரம் கோபம்தான்.. தொடர்ந்து எழுந்தது மணிரத்னத்தின் கோபம்..

இந்த முக்கோண முறைப்பு, தமிழ்ச் சினிமாவில் ஒரு புதிய இசைப் புயலை உருவாக்கப் போகிறது என்று மூவருமே அந்த நேரத்தில் நினைத்திருக்க மாட்டார்கள்..! ஆனால் உருவாக்கப்பட்டது. அது காலத்தின் கட்டாயம்..! இறைவனின் விருப்பமும் இதுவே..!

இப்போது மணிரத்தினத்திற்கும் இதே எண்ண அலைகள்தான்.. தன்னால் மறுபடியும் இசைஞானியை வைத்து வேலை வாங்க முடியாது. அல்லது அவரிடம் பணியாற்ற முடியாது என்பதுதான்..


இந்த நேரத்தில்தான் கே.பி. தனது 'கவிதாலயா' நிறுவனத்திற்காக ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்று கேட்டு மணிரத்னத்தை சந்தித்தார். சந்தித்த நிமிடத்தில் அதனை ஒத்துக் கொண்ட மணிரத்னம் கதையைவிட, இசைக்கு யாரை அணுகுவது என்கிற தேடலில் மூழ்கிப் போனார்.

அவரை எப்போதும்போல் அன்றைக்கும் சந்திக்க வந்த அப்போதைய விளம்பரப்பட இயக்குநரான ராஜீவ்மேனன், 'இந்த மியூஸிக்கை கேட்டுப் பாருங்க' என்று சொல்லி ஒரு ஆடியோ கேஸட்டை மணிரத்தினத்தின் கையில் திணித்தார். அது ராஜீவ்மேனனின் ஒரு மூன்று நிமிட விளம்பரத்திற்கு ரஹ்மான் போட்டிருந்த இசை. அந்த இசையைக் கேட்டுவிட்டு அதில் ஈர்ப்படைந்த மணிரத்னம், தொடர்ந்து ரஹ்மான் போ்ட்டிருந்த அனைத்து விளம்பர ஜிங்கிள்ஸ்களையும் வாங்கிக் கேட்டுப் பார்த்துவிட்டு, அப்போதே முடிவு செய்து கொண்டார் இவர்தான் தனது அடுத்த இசையமைப்பாளர் என்று.

ஒரு ஆட்டோவில் சாதுவாக வந்திறங்கிய அந்தப் பையனைப் பார்த்து, 'கவிதாலாயா' நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்கூட நம்பவில்லையாம். இவர்தான் நமது அடுத்தப் படத்தின் இசையமைப்பாளர் என்று..!

ஆனால் அலுவலகத்தில் இருந்த ஒருவர் மட்டும் டேப்-ரிக்கார்டரில் அந்த இளைஞர் போட்டிருந்த விளம்பர இசையைக் கேட்ட மாத்திரத்தில், சந்தோஷமாக துள்ளிக் குதித்து சம்மதித்தார். அவர் 'கவிதாலயாவின்' தூணாக விளங்கிய திரு.அனந்து. உலக சினிமாவின் சரித்திரத்தையும், கதைகளையும் விரல் நுனியில் வைத்திருந்த அந்த உன்னதப் படைப்பாளி, இந்த இசையமைப்பு வேறு ஒரு ரீதியில் தமிழ்த் திரையுலகைக் கொண்டு போகப் போகிறது என்பதை மிக எளிதாகப் புரிந்து கொண்டு புத்தம் புது இசையமைப்பாளருக்கு முழு ஆதரவு கொடுக்க.. சங்கடமில்லாமல், கேள்வி கேட்காமல் கே.பி.யால் இது அங்கீகரிக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் இப்போதும் சொல்கிறார்கள் படத்தின் பாடல்களை கேட்கின்றவரையில் யாருக்குமே நம்பிக்கையில்லை என்று..!

'தளபதி'வரையிலும் வாலியுடன் இருந்த நெருக்கத்தை, அப்போதைக்கு முறித்துக் கொண்டு புதிதாக வைரமுத்துவுடன் கூட்டணி வைத்தார் மணிரத்னம்.. இசை ஒலிப்பதிவு செய்யப்பட்டவுடன் படத்தின் அனைத்துப் பாடல்களுமே இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப் போகிறது என்பதை கே.பி.யும், வைரமுத்துவும், மணிரத்தினமும் உணர்ந்தார்கள்.


'ரோஜா' திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை 'சோழா ஹோட்டலில்' நடந்தபோது பேசிய கே.பாலசந்தர், "இந்தப் படத்தோட இசையமைப்பாளர் ரஹ்மானை எனக்கு அறிமுகப்படுத்த மணிரத்னம் அழைத்து வந்தபோது, நான்கூட ஏதோ எனக்குத் தெரியாத வேற்று மொழிக்காரரையோ, அல்லது வயதான, திரையுலகம் மறந்து போயிருந்த ஒருத்தரையோ அழைத்து வரப்போகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வந்தது இந்தச் சின்னப் பையன்தான். ஆனால் படத்தின் இசையைக் கேட்டபோது இது ஒரு புயலாக உருவெடுக்கப் போகிறது என்பதை இப்போது உணர்கிறேன். நிச்சயம் அதுதான் நடக்கப் போகிறது..." என்றார். அவருடைய வாக்கு அடுத்த சில வருடங்களில் நிஜமாகவே நடந்துவிட்டது.

வீட்டிலேயே சிறிய அளவில் ஸ்டூடியோ வைத்து அதில் விளம்பரப் படங்களுக்கு இசையமைப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்த ரஹ்மான், தனக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அதற்கான முழுத் திறமையும் அவருக்குள் இருந்து, அதனை கொஞ்சமும் தயக்கமோ, சோம்பேறித்தனமோ இல்லாமல் சரியான சமயத்தில், கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குநர் சிகரத்தின் நிறுவனம் என்கிற பேனர்.. மணிரத்னம் என்ற மாபெரும் இயக்குநர்.. இவர்கள் இருவரின் நேரடி பார்வையில் தன்னை பட்டென்று பற்றிக் கொள்ளும் சூடமாக ஆக்கிக் கொண்டு ஜெயித்தது ரஹ்மானின் திறமைதான்..

ராஜீவ்மேனன் மட்டும் அன்றைக்கு அந்தச் சூழலில் ரஹ்மானைப் பற்றிச் சொல்லாமல் இருந்திருந்தால்..

இதன் காரணமாக ரஹ்மான், மணிரத்னம் கண்ணில் படாமல்போய் அவர் தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த ஹிந்தி இசையமைப்பாளர்களையே அழைத்து வந்திருந்தால்..

இந்த 'ரோஜா' வாய்ப்பே ரஹ்மானிடம் சிக்காமல் போயிருந்திருக்கும்..

இதன் பின்னால் அவருக்கு யார் இப்படி ஒரு கோல்டன் சான்ஸை கொடுத்திருப்பார்கள் என்று யோசிக்க முடியவில்லை.. ஆனால் ரஹ்மான் சொல்வது போல் இது தெய்வீகச் செயல்.. கிடைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது, கிடைத்துவிட்டது..

வேறொரு இயக்குநரால் ரஹ்மான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை அவரால் பெற்றிருக்க முடியுமா..? 'சின்னச் சின்ன ஆசை' உருவாகியிருக்குமா..? அது இயக்குநரின் கற்பனையாச்சே..! யோசித்தால் நடந்தும் இருக்கலாம்., அல்லது நடவாமலும் இருக்கலாம் என்றுதான் என் மனதுக்குத் தோன்றுகிறது.

இந்த நன்றிக் கடனுக்காகத்தான் ஏவி.எம். நிறுவனம், தனது 150-வது படத்திற்கு ரஹ்மானை இசையமைப்பாளராக புக் செய்துவிட்டு, "யாரை இயக்குநராகப் போடலாம்?" என்று கேட்டபோது ரஹ்மான் தயங்காமல் கை காட்டியது ராஜீவ்மேனனை. தயக்கமே இல்லாமல் ஏற்றுக் கொண்டது ஏவி.எம். நன்றிக் கடன் தீர்க்கப்பட்டது. அத்திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று, ரஹ்மானுக்கே விருதுகளை வாரிக் கொடுத்தது.


ரஹ்மானின் திரையுலக வாழ்க்கை நமக்குச் சொல்கின்ற பாடங்கள் நிறைய..!!!

'சிந்துபைரவி' படத்தின் பாடல்களைப் போல் ஒரு இயக்குநருக்கு கதைக்கேற்ற சிறந்த பாடல்கள் வேறெங்கே கிடைத்திருக்கும்..?

'தளபதி' படத்தின் இசையைப் போல் ஒரு சூப்பர்ஹிட் கமர்ஷியல் படத்தின் தாக்கத்தை யாராவது உருவாக்க முடியும்..?

ஆனால் இந்த இரண்டுமே ஒரு நொடியில் உடைந்து போனதே..? அதன் பின் இன்றுவரையிலும் அது போன்ற இசை தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைக்கவில்லையே..? நாம் நிச்சயம் இழந்திருக்கிறோம்..!

ஆனால், 'எல்லா சோகத்திலும் ஒரு வழி பிறக்கும்' என்பார்கள். 'எப்பேர்ப்பட்ட துக்கத்திலும் ஒரு செய்தி கிடைக்கும்' என்பார்கள். இது இங்கே தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு இசைஞானியால் கிடைத்தது.

இளையராஜா என்ற மனிதரின் ஒரு நிமிட கோபத்தின் விளைவு, இப்போது ஆசியக் கண்டத்துக்கே பெருமை..

இந்தியாவுக்கே சிறப்பு..

தமிழ்த் திரைப்பட உலகத்திற்கே ஒரு மகுடம்..

எல்லாவற்றிலும் ஒரு காரண, காரியம் உண்டு.. நம்புங்கள்..!

எல்லாம் இறைவன் செயலே..!

ஆஸ்கார் ரஹ்மான் சொல்லியிருக்கும் உண்மை..!

25-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அல்லா ரக்கா ரஹ்மானின் பெயர் இந்தியத் திரைப்பட உலகில் முதன்மைப் பெயராகப் பொறிக்கப்பட்டுவிட்டது. இந்த இமாலய வெற்றிக்கு அடிப்படை காரணங்களாக வெற்றியாளரான ரஹ்மான் சொல்கின்ற இரண்டு விஷயங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

1.இறைவனின் கருணை.

2. கடுமையான உழைப்பு.

"இறைச்செயல் என்ற ஒன்றே இல்லை. எல்லாமே நமது உழைப்பில்தான் உள்ளது" என்கிறது நாத்திகம். ஆனால் இந்த அனுபவஸ்தர் தனக்கு கிடைத்திருக்கும் வெற்றியினால், இந்த உலகத்திற்குச் சொல்லியிருக்கும் விஷயம் "எந்தவொரு செயலாக இருந்தாலும், அதற்கு இறைச்செயலின் ஆசி வேண்டும்" என்பதே.

‘ஆஸ்கார்’ மேடையில் அவர் தமிழில் பேசியதைவிடவும், "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று சொன்னதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதுதான் உண்மையும்கூட.

உண்மையான ஆத்திகம் என்றைக்கும் பொய்க்காது. தூய்மையான பக்திக்கு இறைவனின் கொடை நாம் எதிர்பார்க்காததாகத்தான் இருக்கும். இங்கே ஆத்திகம்தான் ஜெயித்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் அடிப்படை கடவுள் பக்தி. அது மனிதர்களிடத்தில் நிச்சயம் இருக்க வேண்டும். இதைத்தான் ரஹ்மானின் இந்த வெற்றி உணர்த்துகிறது..

"கடுமையாக உழை.. உழைத்துக் கொண்டே இரு.. உன்னுடைய உழைப்பு 99 சதவிகிதம் நிறைவு பெறுமானால், மிச்சமிருக்கும் அந்த 1 சதவிகிதத்தை நீ வணங்கும் இறைவன் தான் அளித்து உன்னை வெற்றி பெறச் செய்வான்.." என்பது கடவுள் நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கை. இதற்கு முழு முதற் உதாரணம் நமது ‘ஆஸ்கார்’ ரஹ்மான்.

அவர் இன்னும் மென்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்..!

என்னைப் பின் தொடரும் பதிவர்கள்..!

24.02.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வலைத்தளங்களின் தொழில் நுட்ப வசதிகள் ஒவ்வொரு மாதமும் மேம்பட்டுக் கொண்டே போகின்றன. அந்த வகையில் வந்த 'பின்தொடர்பவர்கள் பட்டியல்' பல பதிவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நமது தளத்தின் மூலமாகவே நாம் அதிகம் பார்க்க விரும்பும் பதிவுகளை அலைச்சல் இல்லாமல் நம்மால் பார்க்க முடிகிறது. அதேபோல் அதிகம் பேர் பார்க்கிறார்கள் என்ற எண்ணிக்கையும் அந்தத் தளத்தின் பெருமையையும், மேன்மையையும் சொல்லாமல் சொல்கிறது.

அந்த வகையில் எனது பதிவு ஒவ்வொரு முறை திறக்கப்படும்போதும் புதிய நபர் யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்ப்பதுண்டு. அதன் எண்ணிக்கை கூட, கூட இத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்பதால்.. இன்னமும் அதிக கவனமாக, ஈர்ப்புத் தன்மையுடன் எழுத வேண்டும் என்று மனம் பரபரக்கிறது.

அந்தப் பட்டியலில் இருப்பவர்கள் யார், யாரென்று பார்க்கலாம் என்று கிளிக் செய்து பார்த்தபோது திடீரென்று ஒரு யோசனை எழுந்தது.. 'அவர்கள் அத்தனை பேரையும் அப்படியே ஒரு பதிவில் இட்டு அறிமுகப்படுத்தினால் என்ன?' என்று என் சிந்தனை சிறகடித்து பறந்தது. அந்த சிந்தனையை சிதறடிக்காமல் இங்கே செய்து முடித்திருக்கிறேன்..

இன்றைய தேதி வரையிலும் மொத்தம் 56 பதிவர்கள் என்னைத் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களைப் பற்றிய அறிமுகங்கள் இங்கே..

1. இளவஞ்சி

http://konguvaasal.blogspot.com
http://ilavanji.blogspot.com
http://tamilcomic.blogspot.com

நவீன புனைவு எழுத்தாளர். ஆனா இப்பத்தான் 'எழுத மாட்டேன் போ'ன்னு சொல்லி அடம் புடிக்கிறார். 'கொங்குவாசல்' பதிவில் இவர் எழுதியிருக்கும் 'கொங்கு வட்டார வழக்கு மொழி' நமக்கு மிகப் பெரும் உதவி..

2. மோகன்தாஸ்

http://blog.mohandoss.com
http://baavaa.mohandoss.com

வலையுலகின் தலைசிறந்த பெண்ணியவாதி.. பின்நவீனத்திற்கும், முன் நவீனத்திற்கும் ஒரு பெரும் பாலமாக இருக்கும் பெங்களூரு மைனரு.. இவருடைய பின்னவீனத்துவ கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள், புரியும்..!

3. அதிஷா

http://www.athishaonline.comhttp://athisha123.blogspot.com

"ஏண்ணா இப்படி எழுதுறீங்க?"ன்னு அவனவன் போன்ல பேசி, திட்டி ஓய்ஞ்சுட்டாங்க.. இந்தப் பயபுள்ளை முதல்முதல்லா என்னை பார்த்தப்பவே சிகரெட்டால சூடு வைச்சு கோபத்தைத் தீர்த்துக்கிட்டான்ல..

4. அருப்புக்கோட்டை பாஸ்கர்

http://aruvaibaskar.blogspot.com

ஒரு காலத்துல துக்ளக் அட்டைப் படங்களையும், கருத்துப் படங்களையும் ஸ்கேன் செய்து போடுவதில் நான்தான் முதல் ஆளாக இருந்தேன். பின்பு என்னிடமிருந்து அந்தப் பெருமையைத் தட்டிப் பறித்த புண்ணியவான் இவர்தான்.. நான்தான் இவரோ என்று நினைத்து எனக்கு ஏகப்பட்ட மிரட்டல்களும், அன்பு மடல்களும் போலிக் கூட்டத்திடமிருந்து வந்து குவிந்தது.

5. தென்றல்

http://nanayam2007.blogspot.com
http://thendral2007.blogspot.com

முக்கியமான எனது எல்லாப் பதிவிலேயும் இவர் ஆஜராயிருப்பாரு..

6. அருண்குமார்

http://thamizthoughts.blogspot.com

பெங்களூரு தம்பி.. ஒரு விதத்துல போலியையும், அவனது அல்லக்கைகளையும் காலி செய்து, இன்னிக்கு வலையுலகம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறதுக்கு ரொம்பவே உதவியிருக்கிறவரு.. ஆனா ரொம்ப அடக்கமானவரு.. யார்கிட்டேயும் சிக்காதவரு..

7. வரதராஜ்-துபாய்

http://musikvrdrj.blogspot.com

புத்தம் புதிய திரைப்படங்களை ஆன்லைனில் இறக்குமதி செய்யும் லின்க்குகளை தனது தளத்தில் கொடுத்து வைத்திருக்கிறார்.. ஆளை விடாதீங்க.. பிடிங்க..

8. சுரேஷ்கண்ணன்

http://pitchaipathiram.blogspot.com

'நான் பார்க்கணும்.. பேசணும்'னு விடாம துரத்திக்கிட்டிருக்கேன்.. போன் நம்பரைக் கூட கொடுக்காம டபாய்ச்சுக்கிட்டிருக்காரு அண்ணன்..

9. கூடுதுறை

http://paakeypa.blogspot.com

நான் எப்பல்லாம் சோகக்கதை, ஆன்மீகக் கதையெல்லாம் எழுதறனோ, அந்த நேரத்துல 'டான்'னு வந்து நின்னு கண்ணீரைத் துடைச்சுவிடுவாரு.. அவ்ளோ பாசமானவரு..

10. கொங்கு ராசா

http://raasaa.blogspot.com

இவரைப் பத்தி முன்னாடி தப்பா எழுதிட்டேங்க.. இப்ப திருத்திக்கிறேன்..

இவர் ஒரு மூத்தப் பதிவருங்கோ.. 2004-ல இருந்து எழுதிட்டு வர்றாருங்க.. இவரைப் பார்த்துதான் பல பேரு வலைக்குள்ளாற பூந்திருக்காங்க.. கொங்கு வழக்குப் பேச்சு இவர் பதிவுல விளையாடுதுங்கோ.. போய்ப் பாருங்கோ..

முன்னாடி தப்பா எழுதினதுக்கு மன்னிச்சுக்குங்க..

11. விசு என்கிற பொ.விசுவநாதன்

http://vichumsc.blogspot.com

அண்ணே.. பின்னாடி மட்டும்தான் வருவாரு போலிருக்கு..

12. தமிழ்மகன்

http://tamilmagan.blogspot.com

சினிமாவுலகில் இருந்தும், சந்திக்க முடியாத சூழலால் தொலைபேசியில் மட்டுமே பேசிக் கொள்ளும் நல்லதொரு நண்பர்.

13. வெயிலான்

http://veyilaan.wordpress.com

யாருய்யா இந்தாளு..? கோயம்புத்தூர் பக்கம் போற, வர்ற ஆளுக எல்லாரும் "வெயிலானை பார்த்தேன்.. நல்லா பேசினாரு.. சூப்பரா கவனிச்சாரு.. போக்குவரத்துச் செலவுக்கான பணத்தைக்கூட கைல திணிச்சு அனுப்பினாரு"ங்குறாங்க.. என்னை மட்டும்தான் கூப்பிட மாட்டேங்குறாரு..! வைச்சுக்குறேன் ஒரு நாளு..!

14. விஜயராகவன் சீனிவாசமூர்த்தி

http://sujaarun.blogspot.com

இவரும் புதுமுகம்தான்.. பதிவை படிக்க மட்டுமே செய்வார் போலிருக்கிறது.. பரவாயில்லை.. படிக்கிறாரே அதுவே பெரிய விஷயமாச்சே..

15. அக்னிபார்வை

http://agnipaarvai.blogspot.com

ஒரு பத்து நிமிட தாமதத்தால் டிசம்பர் மாத உலகத் திரைப்பட விழாவில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் சந்திக்க முடியாமல் போய்விட்டது இந்த நண்பரை.. அடுத்த வருட திரைப்பட விழாவில்தான் சந்திக்க முடியும்போல் உள்ளது.

16. வான்முகிலன்

http://vaanmuhilan.blogspot.com

இப்போதுதான் படித்தேன்.. நீங்களும் படித்துப் பாருங்கள்..

17. சினிமா ரசிகன்

http://kollywoodkondattam.blogspot.com

முன்பெல்லாம் எனது சினிமாப் பதிவுகளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வருவார். இப்போது வருவதேயில்லை..

18. மடல்காரன்

http://kbmadal.blogspot.com

நீண்ட நாளாகவே பதிவுலகில் உள்ளார். ஆனால் அவ்வப்போதுதான் தலையைக் காட்டுவார்..

19. வலையில் உலாவும் வாசவன்

http://valaivesumvasavan.blogspot.com

இவரை இப்போதுதான் தரிசிக்கிறேன்.. இவருடைய தளத்தின் முகப்பில் இருக்கும் குழந்தை புகைப்படம் கொள்ளை அழகு..

20. மேத்யூ

http://enbathamil.blogspot.com

தளம் விரியவே இல்லை.. என்ன பிரச்சினை..?

21. நித்யகுமாரன்

http://nithyakumaaran.blogspot.com

உள்ள நுழையும்போது ‘டவுசர் பாண்டி’யா வந்தான்யா.. இப்ப ‘பருத்தி வீரனா’ மாறிட்டான்.. ஆனா ‘சொக்கத் தங்கம்..!’

22. செந்தழல் ரவி

இம்சை.. பெங்களூரு தப்பிச்சு ஹாலந்து மாட்டிக்கிச்சு.. அந்த நாட்டுக்காரங்க எப்படி சமாளிக்கிறாங்களோ தெரியலையே..?

23. மெட்ராஸ்காரன்

http://meeramunna.blogspot.com

நானும் இவருக்குப் புதுசுதான்..

24. அதிரைபோஸ்ட்

http://fromtamil.blogspot.com

பலவித அரசியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.. அவ்வப்போது படித்ததுண்டு..

25. சத்யா

http://msathia.blogspot.com

நானும் இப்போதுதான் படித்தேன்.. ஜெயாக்கா கதை மனதை என்னமோ செய்கிறது..

26. பரக்கத் அலி

http://barakathalinews.blogspot.com

நாட்டு நடப்புகளை உடனுக்குடன் வலையுலகில் பரப்பி வரும் பரக்கத்அலி எனது நண்பர்.. கூடிய சீக்கிரம் எல்லாருக்கும் நண்பராகிவிடுவார்.. அவர்கிட்ட எதுக்கும் போன் நம்பர் வாங்கி வைச்சுக்குங்க.. ஆபத்துக்கு உதவும்..

27. சண்முகா இலங்கேஸ்வரன்

http://shanmugha.blogspot.com
http://itvav.blogspot.com

இந்தத் தளத்தைப் பார்த்தவுடன் ஆச்சரியமு்ம், அதிர்ச்சியும் அடைந்தேன். இலங்கை, வவுனியாவில் கணினி பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிறாராம் இந்த இனிய நண்பர் சண்முகா இலங்கேஸ்வரன்.

நான் இதுவரையிலும் இந்தப் பெயரையும், வவுனியாவில் இருந்து பதிவேற்றி வரும் இவரைப் பற்றியும் கேள்விப்பட்டதில்லை.. என்னையும் தொடர்ந்து வந்திருக்கிறார்.. இவ்வளவு நாட்கள் கவனிக்காமல் இருந்தது குறித்து எனக்கே வெட்கமாக உள்ளது.. தளத்திற்குச் சென்று படித்துப் பாருங்கள்.

இவருடைய இந்தத் தளத்தில் பலதரப்பட்ட விஷயங்களையும் சுவாரசியமாக அனாயசமாக எழுதியிருக்கிறார் இந்த கணினி ஆசிரியர்.

28. கண்ணாநேசன்

http://kannanesan.blogspot.com

இவரும் புதுமுகம்தான்.. கொஞ்சம்தான் எழுதியிருக்கிறார்.

29. வேத்தியன்

http://jsprasu.blogspot.com

ஈழத் தமிழர் என்பது எழுத்துக்களில் இருந்து தெரிகிறது.. நானும் இப்போதுதான் படிக்கிறேன்..

30. Shan Nalliya

http://worldtamiltravellersforum.blogspot.com

நான் பார்த்தவர்களிலேயே இவர்தான் அதிகம் பேரைப் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அதேபோல் அதிகமான சொந்தத் தளங்களை வைத்திருப்பவரும் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.

உள்ளே சென்று பாருங்கள்..

31. திரட்டி.காம்

http://thiratti1.blogspot.com

திடீரென்று திரட்டியாக உருவெடுத்து நம்மையும் சேர்த்துக் கொண்டு, அதில் தம்மையும் இணைத்துக் கொண்டு பவனி வருகிறார் வெங்கடேஷ்.

32. குடுகுடுப்பை

http://kudukuduppai.blogspot.com

மொக்கைக்கும், சீரியஸுக்கும் மாறி, மாறி பின்னூட்டமிடுவதில் வல்லவர்.. பின்னூட்டங்கள் ஒன்று, இரண்டெல்லாம் போடுவதில்லை. இவருக்கு பிரெஸ்டீஜ் குறைந்துவிடுமாம்.. குறைந்தது 5 அல்லது 10தானாம்..

33. ஷண்முகப்பிரியன்

http://shanmughapriyan.blogspot.com

உதவி இயக்குநரு, கதாசிரியரு, திரைப்படம் இயக்கும் முயற்சியில் உள்ளோர் அப்படி, இப்படீன்னு சினிமாக்காரங்களும் இருக்காங்கன்னு சொல்லிட்டிருந்த வலையுலகத்துல திடீர்ன்னு நம்ம இயக்குநர் ஷண்முகப்பிரியன் ஸாரும் வந்து களத்துல குதிச்சிருக்காரு..

கிட்டத்தட்ட 30 வருட கால திரையுலக அனுபவஸ்தர். இதுவரையில் 4 திரைப்படங்களை இயக்கியுள்ளார். புகழ் பெற்ற, நம்மால் மறக்க முடியாத "ஒருவர் வாழும் ஆலயம்" திரைப்படத்தின் இயக்குநரே நமக்கு வலையுலக நண்பராக வந்திருப்பதில் நிச்சயம் நான் பெருமைப்படுகிறேன். மேலும் 'பாட்டுக்கு நான் அடிமை' ("பிழிஞ்சு காயப் போட்டுட்டேன்" என்ற டயலாக் எத்தனை, எத்தனையோ இடங்களில் பயன்படுத்தப்பட்டது.) 'மதுரை வீரன் எங்க சாமி', 'உதவும் கரங்கள்' என்று 4 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

திரையுலகில் கதாசிரியர்களுக்கு தனித்துவம் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் நம்ம ஷண்முகப்பிரியன் அவர்களின் கதைகளும் பல நல்ல திரைப்படங்களாக உருவெடுத்துள்ளன..

'உறவாடும் நெஞ்சம்', 'உங்களில் ஒருத்தி', 'உறங்காத நினைவுகள்', 'ஆணிவேர்', 'ஈட்டி', 'ஆயிரம் முத்தங்கள்', 'அன்று முதல் இன்றுவரை', 'சின்னத் தம்பி பெரிய தம்பி', 'வெற்றி விழா', 'தழுவாத கைகள்', 'பிரம்மா', 'மகுடம்', 'ஆத்மா', 'ஒன்ஸ்மோர்' என்று 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இவருடைய கதையில்தான் உருவாகியுள்ளன.

மேலும் 'நினைவே ஒரு சங்கீதம்', 'மெல்லத் திறந்தது கதவு', 'ஆஞ்சநேயா' போன்ற திரைப்படங்களின் கதையை இணைந்து உருவாக்கியுள்ளார்.

தமிழ் மட்டுமன்றி கன்னடத்தில் 'உஷா சுயம்வரம்', 'அதறு பதறு' என்று சில படங்கள் இவருடைய கதையில் உருவாக்கப்பட்டுள்ளன.

அவருடைய தளத்தைப் பார்த்து, படித்து முதலில் பயந்துதான் போனேன். அவருடைய முதல் சில பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.. புரியும்.. பின்நவீனத்துக்கே சவால் விடுவதைப் போல் 'புரியவே மாட்டேன்' என்று அடம் பிடித்தது. பின்பு இப்போதுதான் ஏதோ கொஞ்சம் எனக்கும் புரிவதைப் போல் இறங்கி வந்து எழுதுகிறார்.

நேரிலும் சந்தித்தேன். மனிதர் அற்புதமாகப் பேசுகிறார். நிமிடத்திற்கு நிமிடம் சிரிக்கிறார். இவருடன் பேசும்போது நமது கவலைகள்கூட கொஞ்சம் ஓரம்கட்டப்பட்டு நாமும் உற்சாகமாகிவிடுவோம். இப்போதும் இளைஞர்களுக்கு சமமாக பேசுவதிலும், எழுதுவதிலும் மிக விருப்பமுடையவராக இருக்கிறார் இந்த 60 வயது இளைஞர்.. பழகிப் பாருங்கள் தெரியும்..

34. ஊர்சுற்றி

http://oorsutri.blogspot.com

அன்றாட நிகழ்வுகளின் மீது சாமான்யனுக்கு எழும் கோபங்களை மிக ரத்தினச் சுருக்கமாக சில கட்டுரைகளாக ஆக்கம் செய்திருக்கிறார்.

35. மருள்நீக்கி

http://marulneekki.blogspot.com

சென்ற டிசம்பர் மாதம்தான் எழுதத் துவங்கியிருக்கிறார். ஈழத் தமிழர் என்று நினைக்கிறேன்.. அமெரிக்காவில் இருப்பதுபோல் தெரிகிறது.. மூங்கையன் மொழி என்று பதிவிற்குத் தலைப்பு வைத்துள்ளார். அது என்ன மொழி என்று தெரியவில்லை. அதோடு கூடவே எழுதியிருக்கும் "அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையன் பேசலுற்றான்.. என்ன யான் மொழியலுற்றேன்" என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.. புரியவில்லை.. .

36. மகா

http://tamil1234.blogspot.com

இலங்கை மக்கள்பால் அனுதாபத்தோடு பல கவிதைகளையும், வன்னி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை புகைப்படங்களோடு சொல்லியிருக்கிறார்.

37. சங்கர்

http://www.blogger.com/profile/13602192161584088050

இவர் வலைத்தளம் இல்லாமல் ஜிமெயில் மூலம் இணைப்பு கொடுத்துள்ளார்.

38. விஸ்வநாதன்

http://kundappaviswanath.blogspot.com

ஞாநியின் பாரதிக்கு ஒரு பொட்டு வைத்து மேலும் அழகுபடுத்தி வைத்திருக்கிறார். ஞாநிக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை.. தெரிந்தால் கோர்ட்டு, கேஸ்.. உறுதி!

39. மாயாவி

http://kundappaviswanath.blogspot.com

இவருடைய தளமும் துவக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.

40. ரகு முத்துக்குமார்

http://rithumohitha.blogspot.com

இன்னொரு பாசக்கார அப்பா. 'ரித்துவின் அப்பா' என்ற பெயரில் எழுதுகிறார்.

41. பிரான்சிஸ் சைமன்

http://bryanisaac.blogspot.com

அதிகம் கவிதைகள்தான் உள்ளன. அனைத்துமே சோகத்தைப் பிழிந்தெடுக்கி்ன்றன.

42. பிரபு

http://www.blogger.com/profile/03660633360455517585

இந்த பிளாக்கர் லின்க் மட்டுமே கிடைக்கிறது..

43. IRAPEKE

http://irapeke.blogspot.com

எப்போதும் வாழ்க்கை அழகானதுதான் என்கிறார் இவர்.

44. பொற்கோ

http://porkovaanan.blogspot.com

இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார் போல் தெரிகிறது..

45. தண்டோரா

http://vilambarakkaaran.blogspot.com

இந்த மாசந்தான் ஆரம்பிச்சிருக்காரு.. போகப் போகப் பிக்கப் ஆவாருன்றது அவரோட எழுத்துல தெரியுது.. முதல் பதிவே ஆள் எப்படின்னு காட்டுது..

46. பாட்டாளி

http://paattaalinpakkangal.blogspot.com

இதிலேயும் ஒன்றும் இல்லை.. துவக்க விழாவோடு நிறுத்தி வைத்திருக்கிறார்.

47. ஹாலிவுட் பாலா

http://hollywoodbala.blogspot.com

ஹாலிவுட் திரைப்படங்களை அலசி, ஆராய்ந்து, சாறு பிழிந்து, சக்கையெடுக்கும் புத்தம் புதிய ஹாலிவுட் பதிவர்.

48. சர்வேசன்

http://surveysan.blogspot.com

சொல்லணுமா..?

49. வால் பையன்

http://valpaiyan.blogspot.com

கெட்ட வாலாச்சே.. தெரியுமே உங்களுக்கு.. கொஞ்சம் தள்ளியே நில்லுங்க..

50. மலர்

http://globetrotter360.blogspot.com

புதுசு கண்ணா புதுசு.. "திரட்டின்னா என்னங்கண்ணா?"ன்னு கேட்டு என்னை அலற வைச்சிருச்சு குழந்தை..

51. சுபாஷினி

http://baluthemagician.blogspot.com
http://entamilulagam.blogspot.com
http://iniyasamaiyal.blogspot.com

ஒண்ணுல்ல.. மூணு வைச்சிருக்காகளாம் அக்கா..

52. அத்திரி

http://rajkanss.blogspot.com

வஞ்சகமில்லாம வந்து பின்னூட்டத்தை வாரி வழங்கும் புதுசு..

53. தேனியார்

http://palapponamanasu.blogspot.com

கோபக்காரர்.. சந்தேகம் இருந்தா ரஜினியை பத்தி ஏதாவது சொல்லிப் பாருங்க..

54. அப்பாவி தமிழன்

http://mycamerafotos.blogspot.com
http://tamilwares.blogspot.com
http://technotamil.blogspot.com

இவரும் மூணு தளம் வைச்சுக்கிட்டு பயமுறுத்துறார்.. தமிழ் சாப்ட்வேர் பத்தினது எனக்கு ரொம்ப உதவுச்சு.. மிக்க நன்றிங்கோ..

55. ஜாக்கிசேகர்

http://jackiesekar.blogspot.com

ங்கொய்யால. நீயே இப்பத்தான் 55-வது ஆளா சேர்றியா..? உனக்கெல்லாம் வேப்பிலை அடிக்கணும்யா.. மக்களே.. நம்ம ஜாக்கி, வாழ்க்கையில் மிகவும் அடிமட்ட நிலைமையில் இருந்து உயர்ந்திருக்கும் உழைப்பின் சிகரம்.. பழகுவதற்கு இனியவர்.. வெளிப்படையாகப் பேசுபவர். ‘சிறந்த தங்கமணி’ என்கிற பட்டத்தை தாராளமாக இவருக்கு வழங்கலாம்.

56. தமிழ்நேசன்

http://tamilarnesan.blogspot.com

இவரும் புதியவர். இயற்பெயர் சிவாபிரகாசம். “சராசரி தமிழனின் சமூகம் மீதான பார்வைகளை பிரதிபலிக்கிறேன்” என்கிறார் இவர். வாழ்த்துகிறேன்..

நேற்று 60 பதிவர்கள் இருந்தார்கள். கடைசியாக நான் எழுதிய இந்தப் பதிவில் வந்த "நீயும் எல்.டி.டி.ஆளா?” என்ற அனானி ஒருவரின் கேள்விக்கு "இல்லை" என்று நான் பதிலளித்த 1 மணி நேரத்தில், 4 பதிவர்கள் தங்களது பார்வையை வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கும் எனது நன்றி.

பதிவர்களே..

என்னையும் ஒரு ஆளாக மதித்து "நாங்கள் இத்தனை பேர் உன்னைப் பின் தொடர்கிறோம்..” என்று சொல்லியிருப்பது எனக்கு நிச்சயம் பெருமையளிக்கும் விஷயம்தான்..

நீங்களும் உங்களைப் பின் தொடர்பவர்களை இதே போல் லிஸ்ட் எடுத்து அவர்களது பெயர்களை வெளியிட்டு மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினால், வலையுலகத்தில் பதிவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாவது பலருக்கும் மிக, மிக சுலபமான வழியாக அமையும்.

ஏதோ எனக்குச் சொல்லத் தோன்றியது.. சொல்கிறேன்..

நன்றி

வணக்கம்.

இந்தப் பதிவர்களை விடாதீர்கள்..!

24-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தினமும் சென்னைக்கு வந்திறங்கும் புதிய நகரவாசிகளின் எண்ணிக்கையில் பாதி அளவுக்காகவாவது புதிய, புதிய வாசகர்கள் தினந்தோறும் பதிவுலகத்திற்குள் பிரவேசித்தவாறே உள்ளார்கள்.

அப்படி உள் நுழைந்தவர்கள் பதிவுலகின் வாசனையும், கிறக்கமான சூழ்நிலையையும் கண்டு உற்சாகமாகி தாங்களும் ஒரு பதிவர்களாகி எழுத்து ஜமாவில் தங்களை ஐக்கியமாக்கிக் கொண்டே வருகிறார்கள்.

பதிவு எழுதியே நாசமாப் போனவர்கள் பட்டியலில் நான் முதன்மையானவனாக இருந்தும் புதிய புதிய பதிவர்களைப் பார்க்கின்றபோதும், அவர்களுடைய எழுத்துக்களை வாசிக்கின்றபோதும் பதிவுலகின் மாயவலை என்னைக் கைவிட மறுக்கிறது.. நானும் கள் குடித்த குரங்காய் இங்கேயே சுற்றிச் சுற்றி வர வேண்டியிருக்கிறது.

புதிய பதிவர்கள் என்றில்லாமல் நீண்ட நாட்களாக எழுதுபவர்களாக இருந்தாலும் பதிவுலகின் பதிவு அரசியல் தெரியாமல் உழன்று வருவதால், அவர்களுடைய பதிவுகள் பெரும்பாலான பதிவுலகத்தினரை சென்றடைவதில்லை. அப்படி நான் பார்த்த சிலரின் பதிவுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

1. பென்ஸ்

இந்த மனிதர் என்றைக்கு எனது தளத்தை படித்தார்..? எப்படி படித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் எனக்கு அறிமுகமான நாளிலிருந்து ஒரு பதிவு விடாமல் எனக்குப் பின்னூட்டம் போட்டு தாளித்துக் கொண்டிருக்கிறார். அதுலேயும் ஒரு பின்னூட்டமெல்லாம் போடவே மாட்டார். இரண்டு, நான்கு, ஆறு என மடங்குக் கணக்கில்தான் பின்னூட்டங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.

இதில் ஆச்சரியம் இவர் ஒரு இலங்கை தமிழர். என்னையும் வாசிக்கும், என்னைப் பிடிக்கிறது என்று சொல்லும் இலங்கை தமிழர். இதைவிட ஆச்சரியம் இவருடைய வயது 71. அப்படியானால் நம்மிடையே இருக்கும் வயதான பதிவர்களில் இவரும் ஒருவர். ஆஸ்திரேலியாவில் குடியிருக்கிறார்.

கொண்ட கொள்கையில் சிங்கம். கொள்கையில் 'சிங்கமாக' இருப்பதால் தீவிரமான 'புலி' எதிர்ப்பாளராக விளங்குகிறார். ஈழத் தமிழில் பேசியும், எழுதியும் பெயரிலி போன்றவர்கள் பல தமிழ் மொழிகளை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும்வேளையில் இவரும் ஒரு மொழியினைக் கற்றுக் கொடுக்கிறார். அதுவும் தமிழ்தானாம்.. படித்துப் பாருங்கள்.. மொழியால் தலை சுற்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல.. இவருடைய முகவரி இது http://kavanitha.blogspot.com.

2. கலையரசன்

http://kalaiy.blogspot.com

உலக நாடுகளின் தற்போதைய நிலவரம், கலவரம் மற்றும் பிரச்சினைகள் பற்றி துல்லியமாக துப்பறிந்து எழுதுகிறார் பதிவர் கலையரசன். நானும் இவரது தளத்தை மேய்ந்துதான் உலக நாடுகள் பற்றிய எனது பொது அறிவை வளர்த்து வருகிறேன்.. தயவு செய்து மறந்தும் புறக்கணிக்க முடியாத வீடு இவருடையது.. விட்டுவிடாதீர்கள். வாழ்த்துக்கள் கலையரசன்.

3. திருமதி.பிரியா கதிரவன்

SYNAPSE என்பதை தளத்தின் தலைப்பாக வைத்திருக்கும் திருமதி பிரியா மிகச் சிறப்பாக எழுதி வருகிறார். திரட்டிகளில் இணைந்துள்ளாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இட்லிவடை மூலமாக லின்க் கிடைத்து சென்று படித்தேன். அற்புதமாக உள்ளது. அவருடைய இந்த ஒரு பதிவே அவர் யாரென்று காட்டுகிறது.. நானெல்லாம் பிச்சை எடுக்கணும் போல இருக்கு.. வாழ்த்துக்கள் பிரியா.

4. மாடசாமி

ஏற்கெனவே வலையுலகில் இருக்கின்ற பின்னவீனத்துவ சாமிகளையே சமாளிக்க முடியாமல் நாம் தவித்துக் கொண்டிருக்கும்போது, இன்னொரு பின்னவீனத்துவம் அவதாரமெடுத்து வந்திருக்கிறது. பெயர் மாடசாமி. அற்புதமான கணினி கலைஞர். போர்க்குணமிக்கவர். பா.ராகவனின் நான் கடவுள் விமர்சனத்தைப் படித்துவிட்டு கொதித்துப் போய் ஒரு தாக்குத் தாக்கிவிட்டு வந்திருக்கிறார். அதுதான் அவரது முதல் பின்னூட்டம். அதுவே அப்படியென்றால், இப்போது வலையில் உட்புகுந்து பின்னி பெடலெடுக்கப் போவதாகச் சொல்லி பயமுறுத்துகிறார்.

ஏற்கெனவே பல மாதங்களுக்கு முன்னால் ஒரு பதிவை
ஆரம்பித்துவிட்டு, “போடப் போறேன்.. போடப் போறேன்”னு பயமுறுத்துக்கிட்டிருந்தாரு. அதுல இருக்குற படத்தையெல்லாம் பார்த்துட்டு எனக்கு காய்ச்சலே வந்திருச்சு. “சாமி.. இது மாதிரி படமெல்லாம் போட்டீன்னா, எங்க வலையுலக பிள்ளைக கெட்டுப் போயிரும்.. ஏற்கெனவே நாலைஞ்சு பேரு ‘அந்தக் கதை’, ‘இந்தக் கதை’ன்னு சொல்லி பச்சைப் புள்ளைக மனசைக் கெடுத்துப்புட்டாங்க.. நீயும் சேர்ந்து ஆடிராத சாமி"ன்னு கெஞ்சிக் கூத்தாடி அந்தப் போட்டோவை எடுக்கச் சொன்னேன்.

நம்மளோட நல்ல நேரம்.. மாடசாமிக்கு அந்தப் பதிவோட பாஸ்வேர்டு மறந்து போச்சாம். வசதியாப் போச்சு.. “வேற புது தளம் ஒண்ணை ஆரம்பி.. ஆனா, வேற போட்டோவை போடு..”ன்னு பக்கத்துலேயே உக்காந்து ஸார் என்ன போட்டோவை எடுக்குறாருன்னு செக் பண்ணி போட வைச்சு, அவரோட புதிய இந்தப் பதிவை நானே துவக்கி வைச்சிருக்கேன். அது இதுதான்.. http://www.sowkkiyama.blogspot.com.

படிச்சுப் பாருங்க.. பிடிச்சிரும்.. பிடிக்கும்.. ஒரு பின்னூட்டத்தைத் தட்டி விடுங்க.. அப்புறம்தான் தொடர்ந்து எழுதுவாராம்.. இவர் எழுதறதும், எழுதாததும் உங்க கைலதான் இருக்கு.. சொல்லிட்டேன்..


5. மது கிருஷ்ணா

சீனால இருக்காங்களாம்.. IMEANDMYSELF அப்படீன்னு தளத்துக்கு பேரு வைச்சிருக்காங்க.. என்னன்னுதான் புரியல.. ஆனா எழுத்து நல்லாயிருக்கு.. ஏன் இன்னும் திரட்டில சேரலைன்னு தெரியலை.. படிக்க விரும்புறவங்க அங்கன போயி படிச்சிட்டு அப்படியே இவுகளை தொடர்றவங்களைப் பாருங்க.. அது ஒரு உலகம் தனியா இருக்குது போல.. திரட்டிகள்ல சேராம எழுதுறவங்க.. ஆனா நல்லாயிருக்குதேய்யா.. என்ன செய்யறது.. தேடிப் பிடிச்சுத்தான் படிக்கணும் போலிருக்கு.. இவுக முகவரி இது http://mathukrishna.blogspot.com.

6. கோபி

ரஜினியின் அதி தீவிர ரசிகராம். இப்போதுதான் எழுதத் துவங்கியிருக்கிறார். ஆனால் எழுத்து முழுவதுமே ஏதோ மூன்றாம் உலகத்தில் இருப்பவைகள் பற்றியும், அதுகளைப் பற்றியுமே என்று வித்தியாசமாக இருக்கிறது. சென்று படித்துக் கொள்ளுங்கள். இவருடைய முகவரி இது http://jokkiri.blogspot.com.

இந்தப் பட்டியல் மென்மேலும் தொடரும்.

நன்றி..

வணக்கம்..

ஈழப் பிரச்சினை-சென்னையில் அமைதி ஊர்வலம்

22-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து வாருங்கள் என்றழைத்து அபயம் தேடி ஓடி வரும் அப்பாவி மக்கள் மீது விரைந்து எறிகணைகளை வீசி அவர்களை கொத்துக் கொத்தாய் விரைவாய் மேலுலகம் அனுப்பிக் கொண்டிருக்கும் இலங்கை இனவாத அரசினை கண்டித்து உலகத் தமிழர்கள் அனைத்து நாடுகளிலும், இடங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் இந்தப் போராட்டங்கள் நடைபெறாத ஊர்களும், நாட்களும் இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

அந்த வரிசையில் இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள் என்ற முழக்கத்துடன் எந்த அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாத ‘நாம்' என்கிற அமைப்பு ஒரு அமைதி நடைப்பயணத்தை இன்று சென்னையில் நடத்தியது.

“இதயமுள்ளோரே வாருங்கள்.. இணைந்து நடப்போம்.. போர் நிறுத்தம் வேண்டுவோம்” என்ற அன்பான வேண்டுகோளோடு அழைத்திருந்தார்கள்.

அமைதி ஊர்வலம் சென்னை தலைமைச் செயலகம் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னம் அருகிலிருந்து துவங்கி அண்ணா சாலை, ராஜாஜி மண்டபம் இருக்கும் ஓமந்தூரார் தோட்டம் அருகே முடிவதாக ஏற்பாடு.

மதியம் 3 மணிக்கு நான் அங்கு சென்றிருந்தபோது ஓரளவுக்கு கூட்டம் கூடியிருந்தது. வந்திருந்தவர்களில் பலரும் கட்சி சார்பற்றவர்கள் என்பதால் அனைவரும் கள அரசியலுக்கு புதுமுகங்களாகத் தெரிந்தார்கள். ஆனால் கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் பலரும் துடிப்பு மிக்கவர்களாகத் தெரிந்தார்கள். ‘நாம்' அமைப்பின் வெள்ளை நிற டீ ஷர்ட் அணிந்து மிக பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார்கள்.

ஊர்வலத்தில் கொண்டு போக வேண்டிய பதாகைகள் பலவும் மிக, மிக வித்தியாசமான முறையில், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

போஸ்டர்களில் ‘சோ'வுக்குத் தனி இடம் கொடுத்து தமிழினத்தின் ஒரே எதிரி என்று பெயர் வைத்துவிட்டார்கள். இதில், ‘ஹிந்து' ராம், அப்துல்கலாமையும் கொஞ்சம் கலாய்த்திருந்தார்கள்.

போஸ்டர்களில் சில உங்களது பார்வைக்காக..!







































உலகப் புகழ் பெற்ற முத்துக்குமாரின் இறுதி சாசனம் மறுபடியும் இங்கே வேறொரு வடிவில் பிரிண்ட் செய்யப்பட்டு அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

ஈழப் போராட்டம் தொடர்பான துண்டறிக்கைகளும், செய்திகளும் தரப்பட்டன. விடுதலை ராசேந்திரன் எழுதிய ‘ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?' என்கிற புத்தகம் மிக வேகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தது.

தமிழகத்தில் வசிக்கும் ஈழத்து தமிழர்கள் பலரும் தத்தமது குடும்பத்தினருடன் வந்திருந்தார்கள்.

வள்ளலார் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்திய சுவிசேஷ திருச்சபையைச் சேர்ந்தவர்கள், ரவிசங்கர்ஜியின் ‘வாழும் கலை' இயக்க உறுப்பினர்கள், பகுத்தறிவுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், திராவிடர் கழகத்தின் உறுப்பினர்கள், பெரியார் திராவிட கழக உறுப்பினர்கள், கண் பார்வையற்றோர் சிலர், திருநங்கைகள், கிறிஸ்துவ மத அமைப்புகள், சுவாமி முத்துக்குமார தம்பிரான் அவர்கள்.. என்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் திரண்டு வந்திருந்தார்கள்.

பதிவுலகில் இருந்து கே.ஆர்.அதியமான், அதிஷா, லக்கி, மாடசாமி, நந்தா, அவருடைய தம்பி, மற்றும் பிரின்சு என்.ஆர்.சாமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவல்துறை மிக அதிகமாகக் குவிக்கப்பட்டிருந்தும், ஊர்வலத்தின் நோக்கம் கருதியும், கலந்து கொள்பவர்களைப் பற்றி தெரிந்திருந்ததாலும் அவ்வளவாக டென்ஷனாகாமல் ஹாயாகவே இருந்தனர்.

பல்வேறு பத்திரிகையாளர்கள், ஊடகச் செய்தியாளர்களும் வந்திருந்தார்கள். மக்கள் டிவி ஊர்வலம் முழுவதையும் படம் பிடித்தது.

போஸ்டர்களில் பிரபாகரனை வாழ்த்தி எழுதப்பட்டிருந்த ஒன்றைச் சுட்டிக் காட்டிய ஒருவர், அது பற்றி கமெண்ட் செய்யப் போக.. அருகில் இருந்த இன்னொருவர் டென்ஷனாகி அவரைத் திட்டித் தீர்த்துவிட்டார். பிரபாகரன், மற்றும் புலிகளை வாழ்த்தி எழுதியிருந்த போஸ்டர்கள்தான் அநேகம் இளைஞர்கள் கைகளில் இருந்தது.

ஊர்வலத்தை முன்பு போர் நினைவுச் சின்னத்திலிருந்து கடற்கரை காந்தி சிலை வரையிலும்தான் என்று தீர்மானித்திருந்தார்கள். ஆனால் காந்தி சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை, மாலை நேரம்.. கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதனால் காவல்துறை வேறு இடம் தேடும்படி வற்புறுத்தியதாம். ‘பிரச்சினை வேண்டாம்' என்பதால் ஓமந்தூரார் தோட்டம் வரையிலும் நடைப் பயணத்தை வைத்துவிட்டார்கள்.

அரசியல் கலப்படமற்ற கூட்டம் என்பதால் தனி மனித துதிபாடுகளும், அரசியல் சேட்டைகளும் இல்லாமல் கூட்டம் ஒழுங்கு காத்தது.. துவக்க நேரம் மாலை 4 மணி என்றாலும்கூட, பல இடங்களில் இருந்து மக்கள் வர வேண்டியிருந்ததால் காத்திருந்து மாலை 4.40 மணிக்கு ஊர்வலம் துவங்கியது.

ஊர்வலத்தினர் கைகளில் போஸ்டர்களையும், தட்டிகளையும் ஏந்திக் கொண்டு கோஷங்களை எழுப்பியபடியே வந்தனர்.

“கொல்லாதே கொல்லாதே
ஈழ மக்களைக் கொல்லாதே..!

ஈழப் போராட்டம்
எங்கள் போராட்டம்!

ஈழப் போர்
எங்கள் போர்!

வேண்டும், வேண்டும்
தமிழ் ஈழம்!

தடையை நீக்கு! தடையை நீக்கு!
புலிகள் தடையை நீக்கு..!

மத்திய அரசே; மத்திய அரசே,
இலங்கைக்கு உதவாதே..!

எங்கள் தேவை
தமிழ் ஈழம்!

ராஜபக்சே கேக்குறான்
ரேடார் கேக்குறான்
குண்டு கேக்குறான்
கொடுக்காதே.. கொடுக்காதே..!
மத்திய அரசே கொடுக்காதே..!

என்று கோஷங்களை எழுப்பியபடியே ஊர்வலம் நகர்ந்தது.
கண் பார்வையற்றோர்கூட கோஷங்களை எழுப்பியபடியே வந்தது ஊர்வலத்திற்கு ஒரு உத்வேகத்தைக் கூட்டியது.

ஊர்வலம் கொடி மர சாலை வழியாகச் சென்ற போது எதற்கும் இருக்கட்டும் என்று நினைத்து அங்கேயிருந்த ராணுவ அலுவலகத்தின் வாசலில் போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார்கள்.

மன்றோ சிலை சாலையில் வரும்போது ரோட்டையே மறித்தபடி போகலாம் என்று நினைத்து “போக்குவரத்தை நிறுத்துங்கள்..” என்று சிலர் காவல்துறையினரிடம் சொன்னார்கள். ஆனால் பின்னால் வந்து கொண்டிருந்த அமைப்பினர், அதைத் தடுத்து ஊர்வலத்தையே ஓரமாக நகர்த்திக் கொண்டுபோய் போக்குவரத்திற்கு இடம் கொடுத்தனர்.

பொருட்காட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அங்கு வருகை தந்து கொண்டிருந்த பொதுஜனங்களுக்கு இந்த ஊர்வலத்தினால் அவர்களுக்குள் ஒரு கவன ஈர்ப்பு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.. ஆனாலும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் மன்றோ சாலையில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்ததாலும் ஊர்வலத்தினருக்கு ஒரு மனக்குறை இருந்தது உண்மைதான்.

2 கிலோ மீட்டர் தூரமே இருக்கும் என்பதனால் மாலை 5.40 மணிக்கு ஊர்வலம் ஓமந்தூரார் தோட்டத்தை அடைந்தது. அங்கு தாகசாந்திக்காக முதலில் தண்ணீர் தரப்பட்டது. விரிவான ஏற்பாட்டை செய்திருந்தார்கள் அமைப்பினர்.

‘நாம்' அமைப்பின் சார்பாக அருட்திரு.ஜெகத் கஸ்பார் பேசினார்.

ஈழத்தில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டுமென்றும், அதற்கான வழிமுறைகளை செய்யும்படி நாம் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் அதற்காகத்தான் இந்த ஊர்வலம் என்றும் சொன்னார்.

தொடர்ந்து 7 தீர்மானங்களை செந்தில் என்பவர் வாசிக்க கூட்டத்தினர் ஒவ்வொரு தீர்மானத்தின் இறுதியிலும் கை தட்டி தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து செந்தில் அத்தீர்மானங்களை படித்துக் காண்பித்தார். 6-வது தீர்மானத்திற்குத்தான் அதிகமான கை தட்டல் எழுந்தது என்பதையும் நான் இங்கே சொல்லியாக வேண்டும்.

இன அழித்தலுக்கெதிரான இந்தியர்கள் அமைதிப் பேரணி தீர்மானங்கள்

1. ஸ்ரீலங்கா ராஜபக்சே அரசு தமிழ் மக்கள் மீது நடத்தும் இன அழித்தல் யுத்தத்தை தடுத்து நிறுத்தும் உடனடி முயற்சிகள் எடுத்திட இந்திய அரசை வேண்டுகிறோம்.

2. இந்திய அரசே, தமிழ் மக்களின் தியாகங்கள் நிறைந்த நீண்ட போராட்ட வரலாற்றினை கருத்திற்கொண்டு, அவர்தம் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நிரந்தர அரசியற் தீர்வு பேச்சுவார்த்தைகள் தொடங்க ஸ்ரீலங்கா அரசை வலியுறுத்து.

3. முல்லைத்தீவு பகுதியில் 2,20,000 தமிழர்கள் உணவு, மருந்துப் பொருட்களின்றியும், விமான, எறிகணை குண்டு வீச்சுக்களாலும், புழுப்பூச்சிகள்போல் செத்து மடிகின்றனர். சமீப நாட்களாக அங்கு வெறும் 70,000 மக்கள் மட்டுமே இருப்பதால் ஸ்ரீலங்கா அரசு கூறத் தொடங்கியுள்ளது. இது வரும் வாரங்களில் லட்சத்திற்கும் மேலான தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்யும் சதியோ என அஞ்சுகிறோம். இந்த நூற்றாண்டின் மிகக் கொடூரமான படுகொலையாக முடியப் போகும் இப்பேரழிவினை உடனடியாகத் தடுத்து நிறுத்த இந்திய அரசையும், உலக நாடுகளையும் வேண்டுகிறோம்.

4. ஸ்ரீலங்கா அரசு 30 ஆண்டுகளாய் தமிழ் மக்களுக்கெதிராகப் புரிந்து மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் பதிவு செய்து, விசாரித்து நீதி வழங்க அனைத்துலக போர்க்குற்ற நீதியமையகம்(International War Crimes Tribunal) அமைக்க ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் கொணர இந்தியா முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். கடந்த பல ஆண்டுகளாய் இந்தியாவின் வெளியுறவு வளங்கள் ஸ்ரீலங்காவின் தமிழர் அழிப்பு போரை நியாயப்படுத்தவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அணுகுமுறையில் உறுதியான மாற்றத்தை இந்திய அரசிடம் வேண்டுகிறோம்.

5. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சீனா நாடுகளின் சுய நல அபிலாஷைகள் ஈழத் தமிழ் மக்களின் துன்பங்களுக்கு முக்கியமானதோர் காரணம். இந்நாடுகள் ஆறரை கோடி இந்தியத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போர் நிறுத்தம் கொணரவும், ஸ்ரீலங்கா மீது போர்க் குற்ற நீதி மையம் அமைக்கவும் ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் கொணர்ந்திட வேண்டுகிறோம்.

6. ஈழத் தமிழ் மக்கள் பேரழிவின் விளிம்பில் நிற்கும் இக்காலத்தில் தமிழக அரசியற் கட்சிகள் தேர்தல் அரசியலின் சிக்கல்களினின்று மேலேழுந்து ஒரே குரலாய் ஒலிக்க வேண்டுமெனவும் மன்றாடுகிறோம்.

7. இன அழித்தலுக்கெதிரான இந்தியர்கள் அமைப்புடன் இணைந்து செயற்பட மனிதநேயம் கொண்ட அனைவரையும் அழைக்கின்றோம்.

கூட்டம் கரவொலி எழுப்பி தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடுக்க தொடர்ந்து திரு.கஸ்பார் “தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக கடவுளை நம்புகிறவர்களும், கடவுளை நம்பாதர்களும் ஒன்றிணைந்து ஒரு போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அது இந்த தமிழ் ஈழப் போராட்டத்திற்காகத்தான்” என்றார்.

மேலும், “ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புகளும், சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் போர்க்களப் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகம் என்று சொல்லியுள்ள சூழலில், இலங்கை அரசு அங்கிருக்கும் மக்கள் வெறும் 70000 பேர்தான் என்று சொல்லியிருப்பது கவனத்துக்குரியது.

வரும் நாட்களில் போரைத் தீவிரப்படுத்தி பொதுமக்களை கொன்று குவித்து கடைசியில் இந்தக் கணக்கை நேர் செய்யப் போகிறார் ராஜபக்சே என்று நினைக்கிறோம். அந்தச் சூழல் ஏற்படுவதற்குள் ஐ.நா. இதில் தலையிட வேண்டும். நாமும் மறுபடியும் ஒரு முறை இதேபோன்று போராட வேண்டி வரும் என்று நினைக்கிறேன். அப்போது மறுபடியும் அழைப்பேன். சந்திப்போம்..” என்றவர் இந்த நிகழ்ச்சி நடைபெற வேண்டி ஒத்துழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தை முடித்தார்.

கொஞ்சமும் அரசியல் கட்சிகளின் பின்னணி இல்லாமல் நாத்திகம், ஆத்திகம் என்றல்லாம் பேதம் பிரிக்காமல் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைத்திருக்கிறது இந்த ஈழப் போராட்டம்.

எப்படியாவது, யாராவது முனைந்து நடவடிக்கை எடுத்து இந்தக் கொடூரத்தை நிறுத்திவிட மாட்டார்களா என்ற நினைவோடு வீட்டிற்கு வந்து தொலைக்காட்சி செய்தியைப் பார்த்தால், “வக்கீல்-போலீஸ் ஒற்றுமை ஏற்படவில்லையெனில் உண்ணாவிரதம் இருப்பேன். முதல்வர் மருத்துவமனையில் இருந்து அறிவிப்பு” என்று பிளாஷ் செய்தி ஓடியது.

வெறுத்தே போய்விட்டது எனக்கு..!

என்றைக்கு இவர் திருந்துவார்..?


புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : புதினம் மற்றும் 'நாம்' அமைப்பு