|
Tweet |
பாலுமகேந்திரா கொடுத்த அதிர்ச்சி..!
Posted by உண்மைத்தமிழன் at 19 comments
Labels: கலைப்புலி சேகரன், கே.ஆர்.ஜி., சினிமா, பாலு மகேந்திரா, முதல் தகவல் அறிக்கை
சகுனி - சினிமா விமர்சனம்
மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையங்கத்திற்கு வருபவர்களை ஏமாற்றியனுப்புவது தமிழ்ச் சினிமாவுக்கு புதிதல்ல.. ஆனால் தோல்வியடையக் கூடாது என்று நினைக்கும் ரசிகர்கள் கூட்டத்தைக் கையில் வைத்திருக்கும் ஸ்டார் நடிகர் இப்படிச் செய்யலாமா என்று புலம்புகிறார்கள் சினிமா புள்ளிகள்..!
இன்னொரு லாஜிக் ஓட்டை..! இப்போது எந்த மாநகராட்சியில் மேயரை, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். மேயர் பதவிக்கும் தனியாக தேர்தல் நடக்கிறதே..! நகராட்சித் தலைவர் பதவிக்குக் கூட தேர்தல்தான். கவுன்சிலர்கள் மாநகராட்சிகளில், நகராட்சிகளில் துணைத் தலைவரை மட்டுமே தேர்வு செய்கிறார்கள்..! இந்தக் கூத்தை என்னன்னு சொல்றது..? என்ன கொடுமை சரவணா இது..?
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 39 comments
Labels: கார்த்தி, சகுனி, சினிமா, சினிமா விமர்சனம்
முரட்டுக்காளை - சினிமா விமர்சனம்
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 18 comments
Labels: சிநேகா, சினிமா, சினிமா விமர்சனம், முரட்டுக்காளை, ரஜினி
கிருஷ்ணவேணி பஞ்சாலை - சினிமா விமர்சனம்
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 21 comments
Labels: அஜயன்பாலா, சினிமா, சினிமா விமர்சனம், நந்தனா, பஞ்சாலை
கண்டதும் காணாததும் - சினிமா விமர்சனம்
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
முற்காலத்தில் பிட்டுப் படங்கள் ஓடும் தியேட்டர்களில் எதிர்பார்த்து வந்த பிட்டுகள் காட்டப்படவில்லையெனில், படம் முடிந்து வெளியேறும்போது தங்களது வெறுப்பைக் காட்ட தியேட்டரின் சீட்டுகளை 'ஒரு வழி' செய்துவிட்டு கிளம்புவது ரசிகர்களின் பழக்கம்.. விரைவில் இது போன்று பிட்டு அல்லாத சினிமாக்கள் ஓடும்போதும் நிகழும் சாத்தியங்கள் உண்டு என்பதை இந்தப் படம் நமக்கு உணர்த்துகிறது..!
ஹீரோவும், ஹீரோயினும் ஒரே காலேஜ்லதான் படிக்கிறாங்களாம். ஷேர் ஆட்டோல வரும்போது வம்பு பண்ணும் ஒருத்தனை ஹீரோ புரட்டி எடுத்தர்றாரு.. இதைப் பார்த்தவுடனேயே ஹீரோயினுக்கு வழக்கம்போல லவ்வு வந்திருது.. 2 டூயட்டை தேத்திட்டாங்க..!
திடீர்ன்னு ஒரு நாள் ஒரு மேட்டர் புத்தகம் ஹீரோ கைல சிக்குது. வாழ்க்கைலேயே அன்னிக்குத்தான் அந்த மாதிரி புத்தகத்தை படிக்கிறார் போலிருக்கு.. படிச்சவுடனே கிக்கு ஏறிருது ஹீரோவுக்கு.. அந்த நேரத்துல ஹீரோயினும் அவரைப் பார்க்க வீட்டுக்கு வர்றாங்க.. சூடாகிப் போன காமத்துல ஹீரோயினை கட்டிப் பிடிச்சு உருள்றாரு.. தப்பிச்சுப் போகும் ஹீரோயின் ஹீரோ முகத்துல காரித் துப்பிட்டு போயிர்றாங்க.. அத்தோட லவ்வும் கட்டு..!
ஹீரோ வழக்கம்போல தாடி வளர்த்து, சோக கீதம் பாடுறாரு. ஹீரோயினுக்கு வேற இடத்துல நிச்சயமாகி கல்யாணமாகப் போற நேரத்துல இடைல புகுந்த ஒரு பிரெண்டு சேர்த்து வைக்க டிரை பண்றாரு.. இதுக்கு முன்னாடியே ஹீரோ சூஸைடு.. இதை ஹீரோயின்கிட்ட சொல்லாம விட்டுட்டு அவ வாழ்க்கையை காப்பாத்துறாரு பிரெண்டு.. இம்புட்டுத்தான் கதை..! இதுக்கு இடைல பரோட்ட சூரி, ஆர்.சுந்தர்ராஜனை வைச்சு ஏதோ ஒப்பேத்துற மாதிரி ஒரு காமெடி..!
இந்தப் படத்தோட தயாரிப்பாளர் அமெரிக்கால இருந்து வந்திருக்காரு. பேரு சங்கரநாராயணன். வருஷத்துக்கு 10 படம் பண்ணப் போறேன்னு உறுதியா சொன்னாரு.. இந்த ஒரு படத்தோட ஓடுவாருன்னு நான் உறுதியா நம்புறேன்..
பல ஊர்ல 3, 4-வது நாள்லேயே படத்தைத் தூக்கிட்டாங்க.. படத்தோட இயக்குநரோ யாருமே சொல்லத் துணியாத ஒரு காதலை இதுல சொல்லியிருக்கேன்னு மார் தட்டிப் பேசினாரு.. ஆனால் எடுத்தக் கொடுமையை நாங்க எங்க போய்ச் சொல்றதுன்னு தெரியலை..!
படத்துல ஒளிப்பதிவுன்னு ஒண்ணு இருக்கான்னே தெரியலை.. அவ்வளவு மட்டம்.. குறும்படங்கள்கூட அழகா எடுத்திருக்காங்க.. ஏதோ முன்ன பின்ன கேமிராவையே பார்த்திருக்காத ஒரு ஆள்கிட்ட கேமிராவை நீட்டியிருக்காங்கன்னு நினைக்கிறேன்..! திடீர்ன்னு லைட் வருது.. திடீர்ன்னு போகுது..! எப்போ ஸ்கிரீன் கும்மிருட்டாகும்னு யாருக்குமே தெரியலை.. அந்தளவுக்கு பெர்பெக்ட் ஒளிப்பதிவு.. வாழ்த்துகள்..!
இளையராஜாவின் பாடல்களையே மீண்டும் கேட்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். சந்தோஷம்.. இசைஞானிக்கு இப்படியொரு சீடனாவது இருக்காரேன்னு சந்தோஷப்பட வேண்டியதுதான்..! இது கெட்ட கேட்டுக்கு குத்துப் பாட்டு வேற.. அது எதுக்கு வருதுன்னுகூட லீடிங் இல்லை. பாட்டு வேணும்னு தியேட்டர்ல இருந்து யாரோ போன் அடிச்சு கேட்டாங்க போலிருக்கு..!
இயக்கம்.. சுத்தம்.. ஹீரோ பார்க்க நல்லாத்தான் இருக்காரு. ஆனா நடிக்க வைக்கத்தான் முடியலை.. ஹீரோயின் சுவாசிகா.. இதுக்கு முன்னாடி 3 படத்துல நடிச்சதுனால அவுக பேரை காப்பாத்திட்டுப் போயிட்டாக.. ஏதோ அந்தப் பொண்ணோட கெட்ட நேரம் இங்க வந்து மாட்டிருச்சு போலிருக்கு..!
அவனவன் ஆஸ்திரேலியா, அண்டார்டிகான்னு கண்ணுல காட்டி அசர வைச்சுக்கிட்டிருக்காங்க. இந்த நேரத்துல 2 மப்ளரையும், ஸ்வெட்டரையும் போட்டுட்டு கண்ணாடி கதவுக்கு முன்னாடி நின்னுட்டா அது அமெரிக்காவாம்..! இத்தனைக் கொடுமையையும் பார்க்கணும்னு நமக்குத் தலையெழுத்து..!
“சினிமா துறைல நான் பார்க்காத வேலையே இல்லை.. அம்புட்டு வேலையையும் செஞ்சிட்டுத்தான் இப்போ இயக்குநராயிருக்கேன்”னு பேட்டி கொடுத்தாரு இயக்குநரு..! அதுல இயக்குநர் வேலையைத் தவிர வேற ஏதாவது ஒரு வேலையை பார்த்து போயிட்டாருன்னு புண்ணியமா போகும்..!
கிளம்புங்கப்பா.. காத்து வரட்டும்..!
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 12 comments
Labels: கண்டதும் காணாததும், சினிமா, சினிமா விமர்சனம்
தடையறத் தாக்க - சினிமா விமர்சனம்
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மாமனாரின் பணத்தில், மச்சான் தயாரிக்க.. தன்னால் இயன்ற அளவுக்கு நடித்துக் காண்பித்திருக்கிறார் நடிகர் அருண்குமார். பாவம்.. இவரும்தான் எப்படி, எப்படியோ முயற்சி செய்து பார்த்தும் அதிர்ஷ்டம் என்னும் தேவதை மட்டும் கையில் சிக்கவே மறுக்கிறது..!
செல்வா டிராவல்ஸ் என்ற பெயரில் கால்டாக்சி ஓட்டும் அருண்குமார், மிச்சமிருக்கும் நேரத்தில் மம்தா மோகன்தாஸிடம் காதலை ஓட்டிக் கொண்டிருக்கிறார். கடனை அடைக்கவில்லை என்பதற்காக தனது நண்பனை கடத்திச் சென்ற கும்பலிடம் சமரசம் பேசப் போய், அது மோதலாக உருவெடுக்கிறது. போலீஸின் முழு ஆதரவுடன் திகழும் மகா என்னும் இந்த கேங்கின் தலைவன் கொலை செய்யப்பட அந்தப் பழி அருண் மீது விழுகிறது.. மகாவின் கும்பல் கொலை வெறியோடு அருணை துரத்தத் துவங்க.. தப்பித்தாரா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
110 இடங்களில் கட் செய்ய வேண்டும். இல்லாவிடில் ஏ சர்டிபிகேட்டுதான் என்று சென்சாரில் உறுதியாகச் சொல்லியும் ஏ சர்டிபிகேட்டே கொடுங்க என்று வேண்டி விரும்பி வாங்கி வந்திருக்கிறார்கள்..! இதனால் அரசிடம் வரிவிலக்கும் கோர முடியாது. தொலைக்காட்சிகளிலும் காண்பிக்க முடியாது. இதனால் சேனல் ரைட்ஸும் ஜீரோ. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாகவும் இது இல்லை..! மிக அதிகப்படியான வயலன்ஸ் காட்சிகளில் மட்டுமல்ல.. வசனத்திலும் அப்படியே..! பல இடங்களில் மியூட் செய்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த வசனங்கள் புரிகின்றன.. ஒன்று மட்டும்தான் புரியவில்லை. இந்தப் படத்திற்கு, இந்த கதைக்கு எதற்காக இத்தனை வன்முறை காட்சிகளும், வரைமுறையற்ற ஆபாசப் பேச்சுக்களும்..?
இத்தனை பிரேக்கிங் பாயிண்ட்டுகளை வைத்துக் கொண்டும் இதனை திரைக்குக் கொண்டு வந்து 100 நாட்களாவது ஓட்டியாக வேண்டும் என்று முனைப்புக் காட்டும் இந்தத் தயாரிப்பாளருக்கு எனது சல்யூட்.. இருந்தாலும் இப்படித்தான் மாமனார்கள் அமைய வேண்டும்..! அருண்குமார் ஏதோ லக்கி செய்திருக்கிறார் போலும்..!
பட், நடிப்பில் அருண்குமாரை குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும். அமைதியான, அழுத்தமான நடிப்பு.. பாத்ரும் போயிட்டு வரேன் என்று மம்தாவிடம் சொல்லிவிட்டு ரவுடிகளை வேட்டையாட வரும், அந்த வேகத்திலும், நடிப்பிலும் எந்தக் குறையுமில்லை.. இறுதிவரையில் தனது கேரக்டரை யூகிக்க முடியாத அளவுக்கே நடித்திருக்கிறார். அமைதியாக, அலட்டலில்லாமல் லவ் செய்யவும் இவரால் முடிகிறது..!
காதல் காட்சிகளில் இவரைவிடவும் ஸ்கோர் செய்திருப்பவர் மம்தாதான்..! நோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர் என்ற அறிகுறியே தெரியாமல், அருணை நினைத்து மருகுவது, உருகுவது, கெஞ்சுவது என்று பல வேடங்களில் ஜமாய்த்திருக்கிறார். என்ன குரல்தான் கொஞ்சம் உதைக்கிறது.. என்னடா என்று அருணை அழைக்கும்போது மட்டும்தான் குரல் பிடிக்கிறது..! சிவப்பதிகாரத்திற்குப் பிறகு இப்போதுதான் தமிழில் நடிக்கிறார் என்று நினைக்கிறேன். நல்ல நடிகைதான்.. ஆனால் நம்ம ஊர் இயக்குநர்களுக்கு இவரின் ஹோம்லி லுக் பிடிக்கவில்லை போலும்..!
“அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க. வர்றதுக்கு அரை மணி நேரமாகும். அதுக்குள்ள உனக்கு வேணும்னா என்னை என்ன வேண்ணாலும் செஞ்சுக்க..” என்ற இந்த வசனத்துக்காகவே இந்தப் படத்துக்கு ஏ சர்பிடிகேட் கிடைத்திருக்கிறது என்றால் அது தப்புமில்லை.. மிகையுமில்லை..!
பிராவை வைத்து பல காமெடிகளும், காட்சிகளும் ஏற்கெனவே நிறைய வந்துவிட்டன. ஜட்டி மட்டும்தான் பெண்டிங்கில் இருந்தது.. இப்போது அதையும் செய்துவிட்டார் இயக்குநர். வாரத்தின் 7 நாட்களும் மம்தா பயன்படுத்திக் கொள்ள ஜட்டி வாங்கிக் கொடுக்கும் அருண்குமாரின் அந்தக் காட்சியை அனைத்து சேனல்களும் மீண்டும், மீண்டும் ஒளிபரப்பி இந்தப் படத்தின் வெற்றிக்கு உதவி செய்யலாம்..!
எழுதி, இயக்கிய மகிழ் திருமேனி கெளதம் வாசுதேவன் மேனனின் உதவியாளராம். முதற்பாதியில் இடைவேளை போர்டு மாட்டும்வரையிலும் படத்தின் மீதான ஒரு எதிர்பார்ப்பை கொண்டு சென்றவர்.. பின்புதான் கோட்டைவிட்டுவிட்டார்.. அதீதமான வன்முறைக் காட்சிகளாலும், ஒரேயொரு விஷயத்திலேயே கதை ராட்டினம் சுற்றுவதால் சிறிது அசதியும் ஏற்பட்டு கடைசியில் தலைவலியே வந்துவிட்டது..! ஆனாலும் சின்னச் சின்ன விஷயங்களால் சுவாரஸ்யப்பட வைத்துள்ளார். உதாரணமாக, மகாவின் சின்ன வீடு மேட்டரை பூடகமாகக் கொண்டு சென்று புதிரை விடுவித்ததைச் சொல்லலாம்.
ஆனால், அதற்கான கிளைக்கதையாக இறுதியில் அவர் காட்டுவது பெரிய லாஜிக் ஓட்டை என்றாலும் கதையே லாஜிக்கே இல்லாததுதான் என்பதால் இதையும் கண்டும் காணாமல் போக வேண்டியதுதான். இத்தனை கொலைகளை அலட்சியமாகச் செய்யும் இவர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்க போலீஸுக்கு எத்தனை கோடிகளை வாரி இறைத்தார்களோ தெரியவில்லை..! ஊரில் ஒரு நல்ல போலீஸ்கூடவா இல்லை. ஒருவேளை பத்திரிகைகளே இல்லாத ஊராக இருக்குமோ..?
இடைவேளைக்குப் பின்பு கிடைத்த ஒரேயொரு நிம்மதி.. பாடல்கள் இல்லை என்பதுதான். முற்பாதியிலேயே காதல் பாடல்களையும், குத்துப் பாடலையும் கச்சிதமாக வைத்துவிட்டு மங்களம் பாடிவிட்டார். பிற்பாதியில் பாடல் வைத்திருந்தால் கூடுதல் தலைவலிதான் வந்திருக்கும். நன்றி இயக்குநரே..!
பாடல்களில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பூந்தமல்லிதான் புஷ்பவள்ளிதான் பாடலை எஃப்.எம்.மிலும், சேனல்களிலும் போட்டு வாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாடல் காட்சி அடல்ட்ஸ் ஒன்லிதான்..!
மைனா சுகுமாரின் ஒளிப்பதிவு குறிப்பிட வேண்டியது. அதிலும் இரவு நேரக் காட்சிகளில் கண்ணை உறுத்தாமல் எடுத்திருக்கிறார்கள்..! பாடல் காட்சிகளில் மட்டுமே சோகை போனதுபோல் தெரிகிறது..!
ஒரே ஆள் 50 பேரை அடித்து உதைப்பது.. 100 பேர் இருந்தாலும் ஸ்பாட்டில் இருந்து தப்புவிப்பது.. இதெல்லாம் சினிமா ரூல்ஸ்படி சரிதான் என்றாலும், இந்த அளவுக்கு கொண்டு போயிருக்கக் கூடாது..! ரத்தத்தைப் பார்த்து உறைந்து போய் உட்காரும் அளவுக்கான ரத்தச் சிதறல்களையும், அருணின் ஒரு நண்பனின் படுகொலையும் திகிலூட்டுகிறது..!
84 நாட்களில் படத்தை எடுத்து முடித்துவிட்டேன் என்று இயக்குநர் சொன்னாலும், ஒன்றரை ஆண்டுகளாகியும் படத்தை ரிலீஸ் செய்யாமல், செய்ய விடாமல் தடுத்தது. செய்ய முடியாதது.. ஏன்..? யார்..? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்தால் இன்னொரு சினிமாவே எடுக்கலாம் போலிருக்கிறது..!
ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியிலேயே இயக்குநருடன் மோதுகிற அளவுக்கு தயாரிப்பாளரின் கோபம் இருந்தது.. அது ஏன் என்று இந்தப் படத்தின் ரிசல்ட்டை பார்த்தே நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம்..! கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் செலவு என்றார் தயாரிப்பாளர். 8 கோடிக்கு இதில் அப்படியென்ன செலவு செய்தார்கள் என்று தெரியவில்லை..! யாராவது கேட்டுச் சொன்னால் புண்ணியமாக இருக்கும்..!
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 15 comments
Labels: அனுபவம், சினிமா, சினிமா விமர்சனம், தடையறத் தாக்க