குழப்பம் தீர்த்தால் 100 கமெண்ட்டுகள் இலவசம்!

வலையுலகப் பொறியாளர்களிடம் ஒரு அன்பு வேண்டுகோள்..

ஒரு சிறிய குழப்பம் எனது பதிவில் நடந்து வருகிறது.

குழப்பம்-1

எனது மெயிலுக்கு வரும் கமெண்ட்டுகளில் யார் அனுப்புவது என்கிற இடத்தில் ?????????????????????????? இப்படியே வருகிறது..

அந்த மெயிலை ஓப்பன் செய்து பார்த்தால் மட்டுமே யார் அனுப்பியது என்பது தெரிய வரும்..

இந்தக் கொடுமையைச் சீரமைக்க என்ன செய்ய வேண்டும்?

குழப்பம்-2

வர, வர மாமியார் கழுதையானாள் என்ற கதையாக ???????????????????? என்று கொஸ்டீன் மார்க்காக இருந்த அனுப்பனரின் இடத்தில் இப்போது மெகாத் தொடர் கதையாக இப்படி [&[[[[[#2953 ண ் ம& #3016 த ் த ம ி ழ ன ்] New comment on ந ா& #2985 ு ம ் உ ட ன ே ம ந ் த ி ர ி ய ா க ண ு ம ் -ப க ு த ி -1.]]]]எழுத்துக்கள்தான் வருகிறது.

முன்பெல்லாம் எழுதுபவரின் பெயர்தான் வரும். இப்போது ஏதோ மணப்பாறை முறுக்கு மாதிரி முறுக்கிக் கொண்டு இத்தனை நம்பர்கள் அணிவகுத்து வருவதன் காரணம் என்ன என்று தெரியவில்லை.

இதற்கானத் தீர்வை யாரேனும் வலையுலகப் பொறியாளர்கள் தெரிவித்து அதனை நான் சோதித்துப் பார்த்து அது சரியாக இருந்தால், அந்தப் பதிவர் கை காட்டும் பதிவிற்கு 100 கமெண்ட்டுகள் போடுவேன் என்பதனை எனது அப்பன் முருகப் பெருமான் மீது ஆணையாகச் சொல்கிறேன்.

சீக்கிரமா சொல்லுங்கப்பூ..

42 comments:

நாமக்கல் சிபி said...

தங்கள் பிரவுசரை அப்கிரேட் செய்யவும்!

சிறிய அழகான பதிவு!

இதைப் போன்ற பதிவுகளை தொடர்ந்து போடும்படி கேட்டுக் கொல்கிறேன்!

கொல்கிறேன் - எழுத்துப் பிழை அல்ல!

கூடுதுறை said...

ஜிமெயில் இன்பாக்ஸில் இப்படித்தான் எனக்கும் வருகிறது..

அதுவும் firefox latest version தான் சிபி... இதுக்கு என்ன சொல்கிறீர்கள்...

உ.த அவர்களே உங்களுக்கு யாரேனும் தெரியப்படுத்தினால் எனக்கும் சொல்லவும் நானும் 100 இல்லாவிட்டாலும் ஒரு 10 வது பின்னுட்டம் போடுகிறேன்....

இப்போது 110 பின்னுடங்கள் கியாரண்டி...

பரிசல்காரன் said...

குழப்பத்தை தீர்க்க நினைப்பவர்களும் உங்கள் இலவசத்தைப் பார்த்து ஓடிவிடுவார்கள்!

ALIF AHAMED said...

பரிசல்காரன் said...

குழப்பத்தை தீர்க்க நினைப்பவர்களும் உங்கள் இலவசத்தைப் பார்த்து ஓடிவிடுவார்கள்!
//

தீர்ப்பவர்கள் கை காட்டும் பதிவுக்கு 110 பின்னுட்டங்கள் பரிசல்

அது உங்க பதிவாகவும் இருக்க 80% பாசிபிலிட்டி...:)

ALIF AHAMED said...

view>character encoding> auto-detect> east asian..?

உண்மைத்தமிழன் said...

//நாமக்கல் சிபி said...
தங்கள் பிரவுசரை அப்கிரேட் செய்யவும்!//

அப்கிரேட் எப்படி செய்வது?

அலுவலகத்தில் அட்மினிஸ்டிரேட்டர் அடிக்க வருகிறாரே..

இத்தனை நாட்கள் ஒழுங்காக வந்து கொண்டிருந்தது இந்த ஆகஸ்ட்-15 சுதந்திர தின நாளுக்குப் பின்புதான் இப்படி சொதப்புகிறது.

//சிறிய அழகான பதிவு! இதைப் போன்ற பதிவுகளை தொடர்ந்து போடும்படி கேட்டுக் கொல்கிறேன்! கொல்கிறேன் - எழுத்துப் பிழை அல்ல!//

எப்படி? இது மாதிரி நிறைய பிரச்சினைகள் தினமும் என்னைத் தேடி வர வேண்டும். நானும் இதே போல சிறிய புலம்பலாகப் போட வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியுடன் கமெண்ட்ஸ் இட வேண்டுமா?

சிபியாரே.. ஒழுங்காக எனது முந்தைய எட்டுப் பதிவுகளுக்கும் கருத்துச் சொல்லவும். இல்லாவிடில் நானும் கொல்வேன்..)))))))))))))))

உண்மைத்தமிழன் said...

//கூடுதுறை said...
ஜிமெயில் இன்பாக்ஸில் இப்படித்தான் எனக்கும் வருகிறது.. அதுவும் firefox latest versionதான் சிபி... இதுக்கு என்ன சொல்கிறீர்கள்...//

என்னுடையது internet explorer 7.0 கூடுதுறையாரே.. இருந்தாலும் சிபி சொல்வது போல் நீங்கள் அப்கிரேட் செய்து பாருங்கள். ஏதேனும் தெரிகிறதா என்று பார்த்து சொல்லுங்கள்..

//உ.த அவர்களே உங்களுக்கு யாரேனும் தெரியப்படுத்தினால் எனக்கும் சொல்லவும். நானும் 100 இல்லாவிட்டாலும் ஒரு 10 வது பின்னுட்டம் போடுகிறேன்..//

10 கமெண்ட்டுகள் என்பது குறைவு.. கூடுதுறையாருக்கு இருக்கும் வசதிக்கு 200 கமெண்ட்டுகளாச்சும் போடலாம்.. யோசிக்கவும்..))))))))

உண்மைத்தமிழன் said...

//பரிசல்காரன் said...
குழப்பத்தை தீர்க்க நினைப்பவர்களும் உங்கள் இலவசத்தைப் பார்த்து ஓடிவிடுவார்கள்!//

ஆஹா.. பரிசல்காரரே.. இப்படியொரு கோணமும் இருக்கிறதா..? யோசிக்காமல் இருந்துவிட்டனே.. இப்போது என்ன செய்வது? பேசாமல் வாபஸ் வாங்கிவிடவா..?

ம்ஹ¤ம்.. திரும்பிப் பார்க்க மாட்டார்களே..? என்ன செய்வது?

உண்மைத்தமிழன் said...

//தமிழ்நெஞ்சம் said...
thanks//

Thanks Very much for your "thanks"

உண்மைத்தமிழன் said...

//மின்னுது மின்னல் said...
பரிசல்காரன் said...
குழப்பத்தை தீர்க்க நினைப்பவர்களும் உங்கள் இலவசத்தைப் பார்த்து ஓடிவிடுவார்கள்!//
தீர்ப்பவர்கள் கை காட்டும் பதிவுக்கு 110 பின்னுட்டங்கள்.. பரிசல் அது உங்க பதிவாகவும் இருக்க 80% பாசிபிலிட்டி...:)///

ஆஹா மின்னுது மின்னல்.. அப்ப பரிசல்காரர் சொல்லிருவாருன்றீங்களே..?

தருமி said...

எனக்கும் உ.த. சொல்ற பிரச்சனை இருக்கு. அந்த இரண்டாவது பிரச்சனை இப்போது கடந்த இரண்டு மூன்று நாட்களாகத்தான்.

அதோடு இன்னொரு பிரச்சனை. என் பதிவை பப்ளிஷ் செய்யவோ அல்லது இந்த பின்னூட்டத்தைக் கூட பப்ளிஷ் செய்ய சுட்டியை அந்த ஆரஞ்சு வண்ணப் பட்டைக்கு அருகே கொண்டு போனால் பட்டைக்கும் சுட்டிக்கும் சண்டை வந்து முறுக்கிக்கொள்கின்றன. சுட்டியை மெதுவாக நகர்த்தி மெல்ல பட்டையின் அடிப்பகுதியில் கொண்டு போய் சர்வ ஜாக்கிரதையாக க்ளிக் செய்ய வேண்டியதுள்ளது. ஏன்?

சிபி நீங்க சொன்னதைத் தமிழில் சொல்லவும்! ட்ரவுசரை எப்படி ...??!!

கூடுதுறை said...

//10 கமெண்ட்டுகள் என்பது குறைவு.. //

அண்ணன் உ.த அவர்களின் கோரிக்கைக்கு இணங்க எனது பின்னுடங்களை இருமடங்ககா ஆக்குகிறேன். அதாவது 20


//கூடுதுறையாருக்கு இருக்கும் வசதிக்கு 200 கமெண்ட்டுகளாச்சும் போடலாம்.. யோசிக்கவும்..))))))))//

ஆஹா இதிலே எதோ உள்குத்து இருக்கும்போலிருக்கே... நானும் உண்மைத்தமிழனின் சின்னதம்பி போலத்தான் வசதியை பொருத்தவரை உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வாத்தியார் ஐயாவைக்கேட்டு பாருன்ங்கள்

மங்களூர் சிவா said...

/
அப்கிரேட் எப்படி செய்வது?

அலுவலகத்தில் அட்மினிஸ்டிரேட்டர் அடிக்க வருகிறாரே..
/

:))))))))
ROTFL

ALIF AHAMED said...

ஆஹா மின்னுது மின்னல்.. அப்ப பரிசல்காரர் சொல்லிருவாருன்றீங்களே..?
//



தீர்ப்பவர்கள் கை காட்டும் பதிவுக்கு 110 பின்னுட்டங்கள்.. பரிசல் அது உங்க பதிவாகவும் இருக்க 80% பாசிபிலிட்டி...:)

தீர்ர்பவர்கள் பரிசலுக்கு 110 போடசொல்லி பழிவாங்கலாமுனு சொன்னேன் :)

உண்மைத்தமிழன் said...

//மின்னுது மின்னல் said...
view>character encoding> auto-detect> east asian..?//

மின்னல் ஸார்,

நான் பயன்படுத்துவது IE 7. இதில் View Option-ல் Encoding என்று இருக்கிறது. அதனை கிளிக் செய்தால் auto-select என்றுதான் இருக்கிறது..

என்ன செய்வது..?

உண்மைத்தமிழன் said...

//தருமி said...
எனக்கும் உ.த. சொல்ற பிரச்சனை இருக்கு. அந்த இரண்டாவது பிரச்சனை இப்போது கடந்த இரண்டு மூன்று நாட்களாகத்தான். அதோடு இன்னொரு பிரச்சனை. என் பதிவை பப்ளிஷ் செய்யவோ அல்லது இந்த பின்னூட்டத்தைக் கூட பப்ளிஷ் செய்ய சுட்டியை அந்த ஆரஞ்சு வண்ணப் பட்டைக்கு அருகே கொண்டு போனால் பட்டைக்கும் சுட்டிக்கும் சண்டை வந்து முறுக்கிக்கொள்கின்றன. சுட்டியை மெதுவாக நகர்த்தி மெல்ல பட்டையின் அடிப்பகுதியில் கொண்டு போய் சர்வ ஜாக்கிரதையாக க்ளிக் செய்ய வேண்டியதுள்ளது. ஏன்?//

பேராசிரியரே.. கரெக்ட்டு.. எனக்கும் இந்தப் பிரச்சினை இருக்கு.. சொல்ல மறந்திட்டேன். ஏன்னா எப்படின்னாலும் நான் அதை கிளிக் பண்ணிர்றேன்.. அதுனால பெரிய பிரச்சினையா தெரியல..

கொஞ்சம் காத்திருப்போம்.. வலையுலக மேதைகள் சீக்கிரமே நமக்கு ஒரு முடிவைச் சொல்வார்கள்.

//சிபி நீங்க சொன்னதைத் தமிழில் சொல்லவும்! ட்ரவுசரை எப்படி ...??!!//

ஆஹா.. பேராசிரியர்ன்னா பேராசிரியர்தான்.. ஸ்டூடண்ட்ஸை எவ்ளோ தெளிவா புரிஞ்சு வைச்சிருக்காரு..

ALIF AHAMED said...

The problem is that all quotation marks (unless in plain text-encoding)
appear as blocks, and all letters like é, ü, ë, ó and so on.

I simply need I.E.7 to start in estern-asian. Even if I change the coding
while on the site, if I renew the page it is UTF-8 again.

The sites are not the problem, search engines like Google show the same thing.

உண்மைத்தமிழன் said...

///கூடுதுறை said...
//10 கமெண்ட்டுகள் என்பது குறைவு.. //
அண்ணன் உ.த அவர்களின் கோரிக்கைக்கு இணங்க எனது பின்னுடங்களை இருமடங்ககா ஆக்குகிறேன். அதாவது 20.///

சரி.. ஏதோ உங்களால முடிஞ்சதை செய்றேன்னு சொல்றீங்க.. ஒத்துக்குறேன்.. கண்ணுகளா 120 உறுதி..

//கூடுதுறையாருக்கு இருக்கும் வசதிக்கு 200 கமெண்ட்டுகளாச்சும் போடலாம்.. யோசிக்கவும்..))))))))//
ஆஹா இதிலே எதோ உள்குத்து இருக்கும ்போலிருக்கே... நானும் உண்மைத்தமிழனின் சின்னதம்பி போலத்தான் வசதியை பொருத்தவரை... உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வாத்தியார் ஐயாவைக் கேட்டு பாருங்கள்.//

சரி.. நம்புகிறேன்.. ஆஇனால் எனக்கு ஒரு சிறிய சந்தேகம். அதை மட்டும் கோபித்துக் கொள்ளாமல் இன்னொரு கமெண்ட் போட்டுத் தீர்த்து விடுங்கள்.

"நீங்கள் டைப் செய்யும் முறை பாமினி முறையா..?"

உண்மைத்தமிழன் said...

///மங்களூர் சிவா said...
/அப்கிரேட் எப்படி செய்வது?
அலுவலகத்தில் அட்மினிஸ்டிரேட்டர் அடிக்க வருகிறாரே../
:))))))))
ROTFL///

தம்பீபீபீ.. சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டரா இருக்கீக போலிருக்கு.. கரீக்ட்டா..?

உண்மைத்தமிழன் said...

///மின்னுது மின்னல் said...
//ஆஹா மின்னுது மின்னல்.. அப்ப பரிசல்காரர் சொல்லிருவாருன்றீங்களே..?//
தீர்ப்பவர்கள் கை காட்டும் பதிவுக்கு 110 பின்னுட்டங்கள்.. பரிசல் அது உங்க பதிவாகவும் இருக்க 80% பாசிபிலிட்டி...:) தீர்ர்பவர்கள் பரிசலுக்கு 110 போடசொல்லி பழிவாங்கலாமுனு சொன்னேன் :)///

ஆஹா.. அப்படியா? சரியாப் புரியாமப் போச்சே எனக்கு.. சரி.. பரவாயில்லை.. ஆனாலும் பரிசல்காரரை அந்தளவுக்கெல்லாம் கஷ்டம் கொடுக்க மாட்டேன்.. நானே 120 போட்டாலும் போட்டிருவேன்.. 100 போடுறவன் இன்னொரு 20 போட மாட்டனா..?

இதுல என்ன கஷ்டம்னா.. 120 கமெண்ட் போடுற மாதிரி பதிவை யார் போடப் போறான்னு தெரியல. அப்படி போட்டாங்கன்னா அது நிச்சயம் ஒரு சாதனைதான்..

ALIF AHAMED said...

நான் பயன்படுத்துவது IE 7. இதில் View Option-ல் Encoding என்று இருக்கிறது. அதனை கிளிக் செய்தால் auto-select என்றுதான் இருக்கிறது..
//

view > encoding >more >unicode (utf-8)


முன்னாடி உள்ள பின்னுட்டத்தை பார்க்க..

கூடுதுறை said...

//view>character encoding> auto-detect> east asian..?//

இது firefox க்கு ஆனாது தான் ஆனால் east asian மாற்றினால் unicode utf8 வேலை செய்யாது இல்லையா?

ஆனால் இந்த மாற்றம் நாம் யாரும் செய்யவில்லையே? ஒரு வேளை இது கூகுள் ஆண்டவரின் வேலையாகத்தான் இருக்கும்....

அங்குதான் கேட்கவேண்டியதிருக்கும்... இல்லை எல்லாம் வல்ல கணிப்பொரி ச்ச்சீ..கணிப்பொறியாளரகள் சொல்லலாம்...

உண்மைத்தமிழன் said...

//மின்னுது மின்னல் said...
The problem is that all quotation marks (unless in plain text-encoding) appear as blocks, and all letters like ர©, ரட, ரஅ, ரஐ and so on.//

மின்னல் புரியவில்லை..

//I simply need I.E.7 to start in estern-asian. Even if I change the coding while on the site, if I renew the page it is UTF-8 again. The sites are not the problem, search engines like Google show the same thing.//

இது எனக்கும் நடக்கிறது. auto select செய்தாலும் அது UTF-8 என்பதைத்தான் காட்டுகிறது..

உண்மைத்தமிழன் said...

///மின்னுது மின்னல் said...
நான் பயன்படுத்துவது IE 7. இதில் View Option-ல் Encoding என்று இருக்கிறது. அதனை கிளிக் செய்தால் auto-select என்றுதான் இருக்கிறது..//
view > encoding >more >unicode (utf-8) முன்னாடி உள்ள பின்னுட்டத்தை பார்க்க..///

இதேதான் எப்போதும் இருக்கிறது.. இதில் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை.

உண்மைத்தமிழன் said...

///கூடுதுறை said...
//view>character encoding> auto-detect> east asian..?//
இது firefox க்கு ஆனாதுதான.் ஆனால் east asian மாற்றினால் unicode utf8 வேலை செய்யாது இல்லையா? ஆனால் இந்த மாற்றம் நாம் யாரும் செய்யவில்லையே? ஒரு வேளை இது கூகுள் ஆண்டவரின் வேலையாகத்தான் இருக்கும்.... அங்குதான் கேட்க வேண்டியதிருக்கும்... இல்லை எல்லாம் வல்ல கணிப்பொரி ச்ச்சீ..கணிப்பொறியாளர்கள் சொல்லலாம்...///

ஆமாம் கூடுதுறையாரே.. ஏதோ ஒரு குழப்பம் எங்கோ நிகழ்ந்திருக்கிறது. அது செட்டிங்ஸ் மாற்றத்தினாலா அல்லது பிளாக்கரின் சொதப்பலா என்பதுதான் தெரியவில்லை..

கூடுதுறை said...

//அது செட்டிங்ஸ் மாற்றத்தினாலா அல்லது பிளாக்கரின் சொதப்பலா என்பதுதான் தெரியவில்லை..//

செட்டிங்ஸ் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை... பிளாக்கர் ஆகவும் இருக்க வாய்ப்பில்லை... அனேகமாக ஜீமெயில்தான் பிரச்னை என நினைக்கிறேன் .... எதற்கும் pkp யிடம் கேட்டுப்பார்க்கலாம்

தகடூர் கோபி(Gopi) said...

இதற்கும் இணைய உலாவிக்கும் தொடர்பில்லை. ஜிமெயில் சர்வரிலேயே இந்த வழு ஏற்படுவதால் அவர்களாய் சரி செய்யும் வரை இந்த வழு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

உண்மைத்தமிழன் said...

//கோபி(Gopi) said...
இதற்கும் இணைய உலாவிக்கும் தொடர்பில்லை. ஜிமெயில் சர்வரிலேயே இந்த வழு ஏற்படுவதால் அவர்களாய் சரி செய்யும் வரை இந்த வழு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.//

இருக்கட்டும். ஆனால் எங்களில் சிலருக்கு மட்டுமே இது ஏற்பட்டுள்ளதே.. அது ஏன்..?

தம்பீ.. இப்படி ஏதாவது பிரச்சினைன்னா வந்தாத்தான் பொறியாளர் மாதிரி வந்து தலையைக் காட்டுவீகளோ.. உங்களுக்கே இது நல்லாயிருக்கா..?

வால்பையன் said...

இதற்கு நீங்களோ நானோ இல்லை,
ப்ளாக்கர்.காம் தமது சேவையை விரிவு படுத்தும் பொருட்டு சில வேலைகள் செய்து கொண்டிருக்கிறது, அதனால் சில பிரச்சினைகள் இது போல் ஏற்படலாம்,
பின்னூட்டங்கள் போலவே தற்போதைய டாஸ்போர்டும் வித்தியாசமாக இருப்பதை பார்க்கலாம்.

உங்களுடைய ப்ளாக்கர் கருவிப்பட்டையில் இருமுறை தமிழ்மண கருவிப்பட்டை சேர்ந்துள்ளது, இதனால் சில நேரங்களில் பின்னூட்டம் போடும் பெட்டி திறக்காமல் அலும்பு செய்யலாம்.

விளம்பரங்களை தவிர்த்து விட்டதால் கொஞ்சம் சீக்கிரமே உங்கள் பக்கம் திறக்கும் வாய்ப்பு அதிகமாயிருக்கிறது.

இவ்வளவு தான் எனக்கு தெரிந்தது.
என் பின்னூட்டவாசல் திறந்தே தான் இருக்கிறது

வால்பையன்

உண்மைத்தமிழன் said...

//வால்பையன் said...
இதற்கு நீங்களோ நானோ இல்லை, ப்ளாக்கர்.காம் தமது சேவையை விரிவு படுத்தும் பொருட்டு சில வேலைகள் செய்து கொண்டிருக்கிறது, அதனால் சில பிரச்சினைகள் இது போல் ஏற்படலாம், பின்னூட்டங்கள் போலவே தற்போதைய டாஸ்போர்டும் வித்தியாசமாக இருப்பதை பார்க்கலாம். உங்களுடைய ப்ளாக்கர் கருவிப்பட்டையில் இருமுறை தமிழ்மண கருவிப்பட்டை சேர்ந்துள்ளது, இதனால் சில நேரங்களில் பின்னூட்டம் போடும் பெட்டி திறக்காமல் அலும்பு செய்யலாம். விளம்பரங்களை தவிர்த்து விட்டதால் கொஞ்சம் சீக்கிரமே உங்கள் பக்கம் திறக்கும் வாய்ப்பு அதிகமாயிருக்கிறது. இவ்வளவு தான் எனக்கு தெரிந்தது. என் பின்னூட்டவாசல் திறந்தேதான் இருக்கிறது
வால்பையன்//

வால்பையன் ஸார்.. இத்தனை நாட்களும் சரியாகத்தான் இருந்தது. இப்போதுதானே இந்தப் பிரச்சினை.. ஓகே.. நீங்கள் சொல்வது போல பிளாக்கர்.காம் ஏதேனும் தொழில் நுட்பச் சேவையை விரிவுபடுத்திக் கொண்டிருக்கலாம்.. அதனால் இது விளைந்திருக்கலாம் என்று நானும் நம்புகிறேன்..

தகடூர் கோபி(Gopi) said...

//இருக்கட்டும். ஆனால் எங்களில் சிலருக்கு மட்டுமே இது ஏற்பட்டுள்ளதே.. அது ஏன்..?//

இது ப்ளாக்கர்.காம் பிரச்சனை எனில் அனைவருக்கும் வரும். சிலருக்கு மட்டுமே வருகிறது என்பதை வைத்துத் தான் நான் இது ஜிமெயில் பிரச்சனை என்கிறேன். கமெண்ட் மாடரேசனுக்கு ஜிமெயில் அல்லாத வேறு மின்னஞ்சல் முகவரி கொடுத்துள்ளவர்கள் யாரேனும் உறுதி செய்தால் தான் பிரச்சனை ப்ளாக்கரிலா அல்லது ஜிமெயிலிலா என்று தெரியவரும்.

//தம்பீ.. இப்படி ஏதாவது பிரச்சினைன்னா வந்தாத்தான் பொறியாளர் மாதிரி வந்து தலையைக் காட்டுவீகளோ.. உங்களுக்கே இது நல்லாயிருக்கா..?//

நாங்க எல்லாம் உங்க பதிவுக்கு சைலண்ட் விசிட்டருங்க (சொன்னா நம்பனும். ஆமா!) தேவைப்பட்டா மட்டும் பின்னூட்டத்துல தலைய காட்டுவோமில்ல.. :-)

Indian said...

இப்படி ரெண்டு பேரும் மாறி மாறி கும்மிட்டிருந்தா யாராவது பதில் சொல்ல முன் வருவார்களா?

Thamiz Priyan said...

எனக்கும் ஆகஸ்ட் 15 க்குப் பிறகே இது போல் கேள்விக்குறியாகவும், இடுகையின் பெயர் கட்டம் கட்டமாகவும் வருகின்றது. என்னிடம் இருக்கும் உலாவிகள் அனைத்தும் புத்தம் புதியவை. அனைத்தும் அப்ட்டேட் செய்யப்பட்டவை. எனவே இது பிளாக்கரின் தகராறாகத் தான் இருக்கும்.

ILA (a) இளா said...

இவ்வளவு தக்கணூண்டு பதிவு போட்டதுக்கே சபாஷ் சொல்லனும்,,

தென்றல் said...

உண்மைத்தமிழன்,

உண்மையாவே இது நீங்க போட்ட பதிவுதான... 'அதிசயமா ஒலிம்பிக்கில இந்தியா தங்க பதக்கம் வாங்கின மாதிரி'...

தமிழ் பிரியன் சொன்னது போல ..
இது பிளாக்கரின் தகராறாகத் தான் இருக்க வேண்டும்.!!

கயல்விழி said...

எனக்கும் இதே பிரச்சினைகள் இருக்கிறது, ஆனால் நான் கண்டுக்கொள்வதே இல்லை! இத்தனை அக்கறை எடுத்துக்கொண்ட முதல் மனிதர் நீங்களாக தான் இருப்பீர்கள் :)

உண்மைத்தமிழன் said...

//Indian said...
இப்படி ரெண்டு பேரும் மாறி மாறி கும்மிட்டிருந்தா யாராவது பதில் சொல்ல முன் வருவார்களா?//

யார் கும்முறா சாமி..? எல்லாரும் சீரியஸாத்தான் பேசுறாங்க.. நான் கொஞ்சுண்டு சைஸ்ல பதிவு போட்டதால கொஞ்சம் ஷாக் ஆயிட்டாங்க. அவ்ளோதான்..

உண்மைத்தமிழன் said...

//தமிழ் பிரியன் said...
எனக்கும் ஆகஸ்ட் 15 க்குப் பிறகே இது போல் கேள்விக்குறியாகவும், இடுகையின் பெயர் கட்டம் கட்டமாகவும் வருகின்றது.

எனக்கும் அப்படித்தான். சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியா அல்லது ஆடி போய் ஆவணி வந்ததைக் குறிக்கிறதா என்று தெரியவில்லை.

//என்னிடம் இருக்கும் உலாவிகள் அனைத்தும் புத்தம் புதியவை. அனைத்தும் அப்ட்டேட் செய்யப்பட்டவை. எனவே இது பிளாக்கரின் தகராறாகத் தான் இருக்கும்.//

எனது சந்தேகமும் இப்போது அதுதான்..

உண்மைத்தமிழன் said...

//ILA said...
இவ்வளவு தக்கணூண்டு பதிவு போட்டதுக்கே சபாஷ் சொல்லனும்.//


ஞ்

ப்

பு

ழ்
ச்
சி

உண்மைத்தமிழன் said...

//தென்றல் said...
உண்மைத்தமிழன், உண்மையாவே இது நீங்க போட்ட பதிவுதான... 'அதிசயமா ஒலிம்பிக்கில இந்தியா தங்க பதக்கம் வாங்கின மாதிரி'.//
இதுவும்
.

ஞ்

ப்

பு

ழ்
ச்
சி

//தமிழ் பிரியன் சொன்னது போல .. இது பிளாக்கரின் தகராறாகத்தான் இருக்க வேண்டும்.!!//

எனது எண்ணமும் அதுதான் தென்றல் ஸார்.

உண்மைத்தமிழன் said...

//கயல்விழி said...
எனக்கும் இதே பிரச்சினைகள் இருக்கிறது, ஆனால் நான் கண்டுக்கொள்வதே இல்லை! இத்தனை அக்கறை எடுத்துக்கொண்ட முதல் மனிதர் நீங்களாக தான் இருப்பீர்கள்:)//

நானும் கண்டு கொள்ள வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் எந்தப் பதிவு பற்றி கமெண்ட் வருகிறது என்பது சட்டெனத் தெரியவில்லை. அதனால்தான் பதிவு எழுதினேன்..

தங்களது வருகைக்கு மிக்க நன்றி கயல்..

abeer ahmed said...

See who owns pioutsource.com or any other website:
http://whois.domaintasks.com/pioutsource.com