நெகிழ வைத்த ஜெயராம்-கோபிகா : திரைப்பட விமர்சனம்


25-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பல நேரங்களில் காமெடித் திரைப்படம் என்று நினைத்துப் போனால் அழ வைத்துத் திருப்பியனுப்புவார்கள். திரில்லர் படம் என்று நினைத்துப் போனால் காமெடி படம்போல இருக்கும். சண்டைப் படம் என்று போனால் சர்க்கஸ் பார்த்த திருப்தியுடன் வெளியில் வர வேண்டியிருக்கும். குடும்பப் படம் என்று நினைத்து போனால், களியாட்டம் ஆடும் கிளப்புகளின் அன்றாட நிகழ்வுகளை ஒரு சேர பார்த்த வெறியுடன் வெளியில் வர வேண்டியிருக்கும்.

நீங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக திரைப்படங்களைப் பார்க்கும் வியாதியுடையவராக இருந்தால், மேற்கூறியவற்றையெல்லாம் அனுபவித்தவராக இருந்திருப்பீர்கள்.

ஆனால், சில நேரங்களில் மட்டுமே நாம் பார்க்கச் செல்லும் திரைப்படங்களின் தாக்கம் நம்மை மகிழ்ச்சியடைய வைக்கும். பணம் செரித்தது என்ற திருப்தியைத் தரும்.. மனதை குதூகலிக்க வைக்கும்.. அப்படியொரு திடீர் சிலிர்ப்பைத் தந்தது கடந்த வெள்ளிக்கிழமை மாலை உட்லண்ட்ஸ் தியேட்டரில் நான் பார்த்த 'Veruthe Oru Bharya' என்கிற மலையாளத் திரைப்படம்.

நடிகர் ஜெயராமை மலையாளத் திரைப்படங்களை அதீத ஆர்வத்துடன் பார்க்கத் துவங்கியதிலிருந்தே நான் ரசித்து வருகிறேன். குடும்பப் படங்களின் ஒட்டு மொத்த கதாநாயகன் என்கிற இமேஜை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மலையாளத் திரையுலகில் கட்டிக் காப்பாற்றி வந்த புண்ணியவான்.

இவரும் ஊர்வசியும் நடித்திருந்த மலையாளப் படங்கள், அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யக்கூடிய அளவுக்கு தகுதியான கதையம்சம் கொண்டவைதான். கண்ணியமான கணவன், அப்பாவியான கணவன், குடும்பத்தில் அனைவருக்கிடையிலும் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு சராசரி மனிதன் என்றெல்லாம் தனது நடிப்பு வேட்டையில் பல பரிமாணங்களை வகுத்திருக்கும் ஜெயராமுக்கு 'Veruthe Oru Bharya' என்னும் இந்த புதிய மலையாளத் திரைப்படமும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் சுகுணன் என்னும் ஜெயராமுக்கு பிந்து(கோபிகா) என்கிற மனைவியும், 13 வயதுள்ள ஒரு அஞ்சனா என்கிற குழந்தையும் உண்டு.

மனிதனுக்கு பெண் குலத்தின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு அதற்குள்தான் இருக்க வேண்டும் என்று மனைவியையும், மகளையும் போட்டு இம்சை செய்கிறான்.

பிறந்த வீடு, அரண்மனைபோல் இருக்க இங்கேயோ ஓட்டு வீட்டுக்குள் குடிசை வீட்டில் இருக்கும் பொருட்களைப் போல் இருப்பவைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள் மனைவி பிந்து.

காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவதில் இருந்து, இரவு 11 மணிக்கு படுக்கப் போகும்வரை ஓயாமல் உழைக்கிறாள் பிந்து. பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்கிற கணவன் சுகுணனின் நினைப்பால் மாடு, கன்றுக்குட்டிகளை மேய்க்கும் கடமைகூட அவளுக்கு உண்டு.

எப்போது நிற்கும் என்று தெரியாத மிக்ஸி, மல்லுக்கட்டும் ஒரேயொரு கேஸ் ஸ்டவ்.. தனக்குக் குளிப்பதற்காக சுடுதண்ணியை விறகு அடுப்பில்தான் வைக்க வேண்டும் என்கிற அளவுக்கான சுகுணனது ஆணாதிக்கம் அந்த வீட்டில் நிறைந்திருக்கிறது. சட்டையைப் போடுவதற்குக்கூட “பிந்து” என்று அழைக்கும்போது பிந்துவின் எரிச்சலைவிடவும் ஒரு பைத்தியம் என்கிற விமர்சனத்தை சுகுணன் பெறுகிறான்.

தினசரி பேப்பரை எட்டுப் படிகளில் ஏற சோம்பேறித்தனப்பட்டு வீசியெறியும் பேப்பர்காரனிடம் சண்டையிடும் சுகுணன், அந்தப் பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து படிக்கத் துவங்கி “பிந்து, பிந்து” என்று பத்து முறை அழைத்து காபியை வாங்கிக் குடிக்கும்போது எனக்கும் வெட்கமாகத்தான் இருந்தது.

வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் எல்லாமே மனைவியே செய்ய.. அவளைத் தான் ஆள வந்தவன் என்ற நினைப்பில் ஜெயராம் செய்யும் அலம்பல்கள்தான் முற்பாதி முழுக்க..

அலுவலகத்திலும் இதே நிலைதான். கையில் ரசீதுகளுடன் பொதுமக்கள் காத்திருக்க அலுவலகத்தில் வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறான் சுகுணன். அலுவலக மேலதிகாரி வந்து சொல்லியும் அரசுத் துறை ஊழியர்களின் அலட்சியப் போக்கை கண் முன்னே காண்பிக்கிறான் சுகுணன்.

வீட்டிற்கு வரும் பணக்கார மாமனாரையும், மைத்துனனையும் மதிக்காமல் உடன் சென்று வந்ததற்காக மனைவியை வாசலிலேயே கடிந்து கொள்ளும் போக்கைச் சகித்துக் கொள்ளும் போக்கில் பிந்துவின் மேல் பரிதாபம் கூடுகிறது.

மைத்துனன் திருமணத்தன்று EB Post-ல் இருந்து திருட்டுத்தனமாக கரண்ட் கனெக்ஷன் கொடுத்திருப்பதை அறியும் சுகுணன், “அது தப்பு.. மொதல்ல நிறுத்து..” என்று சொல்லி அதே இடத்தில் களேபரம் செய்வதுதான் படத்தின் முடிச்சு.

மறுநாள் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்த பிந்துவின் அம்மா மரணமடைந்திருக்க.. எப்போதும் நக்கலுடன் பேசும் சுகுணனுக்கு அன்று மட்டும் தனது மாமனாரிடம் துக்கத்தோடு பேச வேண்டிய சூழல். கடமையை முடித்துவிட்டு வீட்டில் வந்து உட்கார்கிறான்.

பெற்ற தாயின் இறுதிக் காரியங்களை செய்துவிட்டு கணவன் வீட்டிற்கு வரும் பிந்து எடுக்கும் ஒரு அஸ்திரம்தான் ஒத்துழையாமை இயக்கம். “இனி இந்த வீட்டில் நான் ஒரு வேலையும் செய்ய மாட்டேன்..” என்பது. “செய்யாட்டி போ.. நான் பாத்துக்குறேன்..” என்றெல்லாம் சவுடால் விடும் சுகுணனுக்கு ஒரு நாள்கூட தாங்க முடியவில்லை..

கோபத்தில் மனைவியை அடித்துவிட, மறுநாள் காலையே மகளிடம் மட்டும் சொல்லிக் கொண்டு சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறாள் மனைவி. இதற்குப் பின்தான் கதையே சூடு பிடிக்கிறது.

மனைவி இல்லாத சூழலில் ஜாலியாக இருக்க நினைக்கும் சுகுணன் முதல் காரியமாக தனது மகளுக்கு ஒரு செல்போனை வாங்கித் தருகிறான். அதனை வாங்கியவுடன் மகள் செய்கிற முதல் காரியம், அடுத்த வீட்டுப் பையனுடன் பேசத் துவங்குவதுதான்.

தனக்கும், மகளுக்கும் சமைத்துப் போட ஒருவனை நியமிக்கிறான் சுகுணன். வந்தவனோ மகளுக்கு மேஜிக் கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்லி அவளைத் தொடப் பார்க்க, கடைசி நிமிடத்தில் பார்த்துவிடும் சுகுணன் அவனை அடித்து விரட்டுகிறான்.

செல்போனில் இடைவிடாமல் தொடர்ச்சியாகப் பேசியதன் பயனாக பக்கத்து வீட்டுப் பையன் தனது ஜீப்பில் அஞ்சனாவின் பள்ளிக்கே வந்து அவளை அழைத்துச் செல்கிறான். விடலைப் பருவத்தின் தூண்டுதலால் செய்வது என்னவென்று தெரியாத, இனம் புரியாத கவர்ச்சிப் போதையில் இளம் தளிர்கள் இருவரும் மாலை நேரத்தில் மலைப்பிரதேசத்தில் போய்க் கொண்டிருக்க.. ஜீப் ரிப்பேர்..

அப்போது அங்கே கையில் பீர் பாட்டிலோடும், கண்களில் போதையோடும் வரும் இளைஞரணி கூட்டமொன்று அஞ்சனாவைத் தூக்க முயல.. ஜீப்காரன் அடிபட்டு கீழே விழுக அஞ்சனா தப்பியோடுகிறாள். சுகுணன் இரவு வீடு திரும்பி, மகளின் தோழிகள், பள்ளி அலுவலகம் என்று பலவற்றிலும் தேடி என்ன ஆனாள் என்பது தெரியாமல் அவதிப்பட்டு தேடி வருகிறான்.

காமுகர்களால் விரட்டப்படும் மகளும், மகளைத் தேடி வரும் அப்பாவும் ஓரிடத்தில் சந்தித்துக் கொள்ள.. பின்னால் வரும் போலீஸாரும் ரவுடிகளைப் பிடித்துக் கொள்ள மகள் காப்பாற்றப்படுகிறாள்.

நல்ல மனிதனாக இருந்த போலீஸ் அதிகாரி மகளுடைய செல்போனை ஆராய்ந்து, அதில் எத்தனை மணி நேரம் அந்தப் பையனுடன் பேசியிருக்கிறாள் என்பதை சுகுணனிடம் சொல்லி, “இனியாவது பத்திரமா பாத்துக்குங்க..” என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறார்.

வீட்டுக்கு வரும் மகள் அப்பாவின் காலில் விழுந்த மன்னிப்பு கேட்க சுகுணன் யோசிக்கிறான். மனைவியை அழைத்து வர இப்பவும் அவனுக்குத் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.. என்ன செய்வது என்று இரவெல்லாம் யோசிக்கத் துவங்க.. இந்த இடத்தில் அவனது மனநிலை மாறுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

அங்கே மனைவியின் நிலையோ இதைவிட பரிதாபமாக இருக்கிறது. அப்பாவுக்கும், தம்பிக்கும் இடையில் மாட்டிக் கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறாள் பிந்து.

மறுநாளும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் அஞ்சனாவை அதே மேஜிக்காரன் கையைப் பிடித்து இழுத்து ஆட்டோவுக்குள் திணிக்க முயல மகளை அழைக்க வரும் சுகுணன், இதைப் பார்த்து இன்னமும் பதைபதைத்துப் போகிறான். அவனை விரட்டிவிட்டு மகளை அரவணைக்கும்போது அவனுக்குள் அது அணையாத நெருப்பாகிறது.

மகள் அரவணைக்கப்பட வேண்டியவள். அவளை விரட்டும் கழுகுகள் நிறையவே உள்ளன. பாதுகாக்க வேண்டியது அவன் கடமை என்ற உணர்வுகள் மேலோங்க மனச்சிதைவு நோய்க்கு ஆளாகுகிறான். ஆனால் இதனை கடைசிவரையில் சொல்லாமல் காப்பாற்றியது இயக்குநரின் திறமை.

வீட்டுக்கு வரும் சுகுணன் மனைவியிடமிருந்து வரும் போனை கட் செய்கிறான். கூடவே போன் இணைப்பையும் துண்டிக்கிறான். இரவில் தூக்கத்தின் ஊடேயே இதுவரையில் மகளின் வாழ்க்கையில் குறுக்கே புகுந்த கோடாரிகள் அவர்கள் நினைத்ததை சாதிக்கப் போவதை நினைத்துப் பார்த்து அவஸ்தைப்படுகிறான். உடனேயே எழுந்தோடி வந்து மகளைப் பார்த்து ஆறுதல்படுகிறான்.

மறுநாளில் இருந்து அவனது நடத்தை முற்றிலும் மாறுகிறது. மகளுடைய படிப்பை நிறுத்துகிறான். “வீட்டிலிருந்தே படித்துக் கொள்..” என்கிறான். மகள் பயந்து போய் அம்மாவுக்கு போன் செய்ய முயல.. போன் கட்.. வீடு உட்புறமாகவே பூட்டப்படுகிறது.

நிலைமை புரியாமல் சுகுணனின் அலுவலக ஊழியர்கள் கையில் பாட்டிலோடு தீர்த்தம் சாப்பிட வீட்டுக்குள் வந்து அமர்ந்து அலப்பரையைக் கொடுக்க.. அமைதியாக அதனை மறுக்கும் சுகுணன் அவனது மகளிடம் டம்ளர் எடுத்து வரும்படி ஒருவன் சொல்லும்போது ஆவேசமாகி அனைவரையும் கழுத்தில் கை வைக்காத குறையாக வெளியேற்றுகிறான்.

பிந்துவோ மகளது நிலைமை தெரியாமல் பரிதவித்து பாசம் மேலோங்க அவளது பள்ளிக்குச் சென்று விசாரிக்கிறாள். பிந்து பள்ளிக்கு வந்தே வாரங்களாகிவிட்டது என்று தலைமையாசிரியை சொல்ல.. சுகுணனின் அலுவலகம் வந்து விசாரிக்கிறாள். சுகுணன் வேலைக்கு வந்தும் நாட்களாகிவிட்டது என்று அவர்களும் சொல்ல “போய்தான் பாக்கலாம்.. வாங்க..” என்று சொல்லி அனைவரும் வீட்டிற்கு ஓடி வருகிறார்கள்.

வீட்டின் வெளிவாசல் இறுகப் பூட்டியிருக்க.. நாள் கணக்கில் பேப்பர்கள் எடுக்கப்படாமல் மழையில் நனைந்து நைந்து போயிருக்க.. ஏதோ ஒன்று என்று நினைத்து ஓடுகிறார்கள் மனைவியும், நண்பர்களும்.

வீடு அமானுஷ்ய அமைதியில் பூட்டப்பட்டிருக்க.. அதோடு கூடவே ஜன்னல்களும் இறுகப் பூட்டப்பட்டு அதற்கு மேல் குறுக்குவாக்கில் இரண்டு கட்டைகளும் வைத்து மூடப்பட்டிருக்கிறது. சுற்றிச் சுற்றி வருகிறார்கள் அனைவரும். அனைத்து ஜன்னல்களுமே பாதுகாப்பு கோட்டை போல் இருந்து நிலைமையை பயமுறுத்துகிறது.

ஓரிடத்தில் கிடைத்த இடத்தில் கட்டையை அப்புறப்படுத்தி உள்ளே பார்க்க மகள் அஞ்சனா கடும் குளிரில் அவதிப்பட்டு நடுங்கிக் கொண்டிருக்கிறாள். அப்பா சுகுணனோ போர்வையை எடுத்து போர்த்திவிட்டு சுடுதண்ணி கொண்டு வந்து வைத்தும் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறான்.

இவர்கள் கதவைத் திறக்கும்படி சொல்ல.. சுகுணன் ஜன்னலை நோக்கி பார்க்க அங்கே அவன் கண்களுக்கு உன்மத்த வெறியுடன் மகளை சுற்றிச் சுற்றி வந்த ரெளடிகளாகவே அனைவரும் தெரியும்போதுதான் சுகுணனின் நிலைமை நமக்குத் தெரிகிறது.

அவன் கதவைத் திறக்க மறுத்து மகளையும் இழுத்துக் கொண்டு அறை, அறையாக ஓட.. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள் அனைவரும். மனைவி, சக ஊழியர்கள் என்று யாரையும் அறிந்து கொள்ள முடியாமல் வந்திருப்பவர்கள் மகளைக் காவு வாங்க வந்த எமன்கள் என்றே நினைத்து எதிர்க்கிறான் சுகுணன்.

மகளை இறுக அணைத்து அழுகும் மனைவியை அடிக்க இரும்புக் கம்பியை வீசுகிறான் சுகுணன். ஆனால் அடி மகளின் மீது விழுந்து ரத்தம் சிதற.. அந்த ரத்தச் சிதறலே அவனை ஆசுவாசப்படுத்துகிறது.

முடிவில் மனநல மருத்துவரின் நீண்ட தேவையான அட்வைஸால் பிரச்சினைக்கான காரணத்தை முழுமையாக அறிந்து மனநோயிலிருந்து விடுபட்டவனாக இருக்கிறான் சுகுணன்.படத்தின் துவக்கக் காட்சிக்கு முற்றிலும், மாறுபட்ட இறுதிக் காட்சியோடு படத்தை நிறைவு செய்கிறார் இயக்குநர்.

டைட்டில் காட்சியிலேயே படத்தின் மொத்தக் கதையையும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

ஜெயராம் தனது நடிப்பில் இன்னொரு புதிய இடத்தை இப்படத்தின் மூலம் நிரப்பியிருக்கிறார். மகளின் படிப்பு பற்றி கோபிகா புகார் சொன்னவுடன் “ஏன் படிக்கல?” என்று திடீர் கோபத்தில் மகளை விரட்டி விரட்டி அடித்து படிக்கச் சொல்லுமிடத்தில் ஒரு அப்பாவின் தோற்றத்தைக் காட்டுகிறார் மனிதர்.

கோபிகாவை கொஞ்சுவதாகட்டும், கெஞ்சுவதாகட்டும், ஆணாதிக்கக் கணவனை கண் முன்னே கொண்டு வருகிறார். மனைவி பிரிந்து போயிருக்க அதே சூழலில் அலுவலகத்தில் தனது பெண் மேலதிகாரியிடம் தனது புலம்பலைக் கொட்டுகின்ற இடத்தில் ஜெயராமுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

அலுவலக ஊழியர்களுடன் டூருக்குச் செல்லும்போது தண்ணியை போட்டுவிட்டு சலம்பல் செய்வதும், மனைவியையும், மகளையும் ஒருவன் தவறாகப் பேச அதைக் கேட்டு ஆவேசப்பட்டு அடிதடியில் ஈடுபட்டுவிட்டு போதையில் புலம்புவதைக் காண்கின்றபோது நடிகர்களின் உண்மையான நடிப்பு போதையில் தெள்ளத் தெளிவாக வருமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

கோபிகாவின் நடிப்பு அவர் உருவாக்கியிருக்கும் வெற்றிடம் எவ்வளவு கஷ்டமானது என்பதை காட்டுகிறது. கோபிகாவின் இப்போதைய கடைசித் திரைப்படம் இது என்று மட்டும் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு படம் முழுவதும் வியாபித்துள்ளார்.

கணவனைப் பற்றி புலம்புவதில் இருந்து மாடு, கன்னுக்குட்டிகளிடம் பேசுவதுவரையிலும் அந்த வீட்டில் அவளுக்கிருக்கும் பெரும் பிரச்சினையே, அவளுடைய ஆதங்கங்களைக் கேட்கக்கூட ஆள் இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது.

மகளுக்கு ஆபத்து என்றவுடன் இப்போது ஜெயராமு இருக்கும் ஒரே துணை அவள்தான் என்ற உணர்வுதான் அவரை ஆட்கொண்டு மனச்சிதைவு அளவுக்கு கொண்டு செல்வதை இயக்குநர் அழகாகச் சொல்லியிருக்கிறார்.

படத்தின் பாடல்களும் மிகப் பெரும் வெற்றி பெற்றிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. “மஞ்சில் குளிக்கும்” என்ற பாடல் ஒலித்த போது எனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞர்கள், கூடவே கடைசி வரையிலும் பாடியது கேட்பதற்கும், பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் 1.35 கோடியில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மலையாளத் திரையுலகின் கதையம்சமுள்ள ஒரு பக்கத்தை மறுபடியும் பறை சாற்றியிருக்கிறது. வெற்றியும் பெற்றிருக்கிறது என்பது மனதுக்கு நிறைவைத் தருகின்ற ஒரு விஷயம்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கிரீஷ்குமார் எழுதியிருக்க.. அக்கு அக்பர் என்பவர் இயக்கம் மட்டுமே செய்திருக்கிறார். இதனை நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பார்த்துப் படித்து உணர்ந்து கொள்வது அவசியம் என்கிறேன்.

இயக்கத்துடன் கதை, திரைக்கதை, வசனத்தையும் நான்தான் எழுதுவேன் என்று பல இயக்குநர்களும் பிடிவாதம் பிடிப்பதால், வெற்றி பெற வேண்டிய திரைப்படங்கள் பல கூட தோல்வியடைவதுண்டு.

ஒருவேளை தனது கதை இல்லை என்பதால் இந்த இயக்குநர் இதனை தயாரிப்பாளரின் முன் கொண்டு செல்லாமல் போயிருந்தால், ஒரு நல்லத் திரைப்படம் மலையாளத் திரையுலகத்திற்குக் கிடைக்காமல் போயிருக்கும் வாய்ப்பு உண்டே. இத்திரைப்படத்தின் இயக்குநரை இந்த ஒரு விஷயத்திற்காகவே எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தமிழகம் முழுவதும் பிரமிட் சாய்மிரா நிறுவனம் திரையிட்டுள்ள இத்திரைப்படம், தமிழகத்தில் பரவலாக மலையாள மக்களிடையேயும், சினிமா ஆர்வலர்களிடமும் திடீர் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

“கதா பறையும் போள்” திரைப்படத்தினைவிடவும் இத்திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது என்கிற உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

பார்க்க விரும்பும் சென்னை வாழ் அன்பர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் உட்லண்ட்ஸ் தியேட்டரிலும், சங்கம் தியேட்டரிலும் சென்று காணும்படி கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற மலையாளத் திரைப்படங்கள் அதிகப்பட்சம் 7 நாட்கள்தான் திரையிடப்படும்.

நல்லவைகளை காண்பதற்கு இன்றே முந்துங்கள்..!

35 comments:

குசும்பன் said...

//கதை, திரைக்கதை, வசனத்தை கிரீஷ்குமார் எழுதியிருக்க.. அக்கு அக்பர்//

முதலில் ரீத்திஸ்குமார் என்று படிச்சுவிட்டேன், இப்ப எல்லாம் ரீ என்ற் எழுத்தை பார்த்தாலே பயம்மா இருக்குங்க!!:)

Athisha said...

அண்ணா ... உங்கள் விமர்சனத்தை படிக்கவில்லை , நீங்களே கூறுவதால் இந்த படம் நிச்சயம் அசத்தலாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்

இந்த வார இறுதிக்குள் கட்டாயம் ஒரு முறை பார்த்துவிட்டு வந்து உங்கள் மேலான விமர்சனத்தை படித்துவிட்டு என் கருத்தை பதிகிறேன் .

அண்ணா வரவர உங்களது ரசனையின் அளவுகோல் மிகஅதிகமாகி வருகிறது..

கானா பிரபா said...

பரிந்துரைக்கு நன்றி உ.த தேடிப்பார்க்கின்றேன்

முரளிகண்ணன் said...

very nice story & posting

Unknown said...

வெகுநாட்களுக்குப்பிறகு வரும் நல்ல திரைப்ப்டம் என்று மலையாள நண்பர்கள் பரிந்துரைத்திருந்தனர். உங்களின் நீண்ட தெளிவான description அதை உறுதிப்படுத்துகிறது. அறிமுகத்திற்கு நன்றி.

Bleachingpowder said...

நல்ல கதை, சிறந்த படம் எல்லாம் சரி ஆனால் ஜெயராமின் அல்லக்கையாக வருபவர் படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்களாய் பேசுவது, குழந்தைகளுடன் படம் பார்க்கும் பெற்றோர் நெளிய வைத்ததை கவணித்தீர்களா??

ஜெயராமின் நடிப்பு சிறப்பாய் இருந்தாலும், தன்மாந்த்ரா மோகன்லாலை இமிடேட் செய்ததை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

பிச்சைப்பாத்திரம் said...

உண்மைத்தமிழன்,

பட அறிமுகத்திற்கு நன்றி. படத்தைப் பார்க்க வேண்டும் என்கிறஆவலை தூண்டுகிறது உங்கள் அறிமுகம். நம்மூரில் மோகன் மாதிரி அதிரடி கதாநாயர்களின் சம்பிரதாயமான காமெடிகள் இல்லாத சாதாரண நபர்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாயகர்களில் ஜெயராமும் ஒருவர்.

தமிழ்ச்சினிமாவின் பிம்பமாகிக் கொண்டிருக்கும் மலையாள திரையுலகில் நல்ல படம் ஒன்று வந்திருப்பதை அறிய மகிழ்ச்சி.

குறைந்த பட்சம் கோபிகா - வுக்காகவாவது பார்க்க வேண்டும். :-)

பிச்சைப்பாத்திரம் said...

உண்மைத்தமிழன்,

பட அறிமுகத்திற்கு நன்றி. படத்தைப் பார்க்க வேண்டும் என்கிறஆவலை தூண்டுகிறது உங்கள் அறிமுகம். நம்மூரில் மோகன் மாதிரி அதிரடி கதாநாயர்களின் சம்பிரதாயமான காமெடிகள் இல்லாத சாதாரண நபர்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாயகர்களில் ஜெயராமும் ஒருவர்.

தமிழ்ச்சினிமாவின் பிம்பமாகிக் கொண்டிருக்கும் மலையாள திரையுலகில் நல்ல படம் ஒன்று வந்திருப்பதை அறிய மகிழ்ச்சி.

குறைந்த பட்சம் கோபிகா - வுக்காகவாவது பார்க்க வேண்டும். :-)

உண்மைத்தமிழன் said...

///குசும்பன் said...
//கதை, திரைக்கதை, வசனத்தை கிரீஷ்குமார் எழுதியிருக்க.. அக்கு அக்பர்//
முதலில் ரீத்திஸ்குமார் என்று படிச்சுவிட்டேன், இப்ப எல்லாம் ரீ என்ற் எழுத்தை பார்த்தாலே பயம்மா இருக்குங்க!!:)///

எனக்கும் இப்பல்லாம் கமெண்ட்ஸ் தலைப்புல 'குசும்பன்'னு இருந்தாலே வயித்தைக் கலக்குது தம்பீ..

உண்மைத்தமிழன் said...

//அதிஷா said...
அண்ணா ... உங்கள் விமர்சனத்தை படிக்கவில்லை , நீங்களே கூறுவதால் இந்த படம் நிச்சயம் அசத்தலாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.//

நம்ப வேண்டாம்.. அப்படியேதான்..

//இந்த வார இறுதிக்குள் கட்டாயம் ஒரு முறை பார்த்துவிட்டு வந்து உங்கள் மேலான விமர்சனத்தை படித்துவிட்டு என் கருத்தை பதிகிறேன்.//

நன்றி.. காத்திருக்கிறேன்..

//அண்ணா வர வர உங்களது ரசனையின் அளவுகோல் மிக அதிகமாகி வருகிறது..//

இது நல்லதா..? கெட்டதா..?

உண்மைத்தமிழன் said...

//கானா பிரபா said...
பரிந்துரைக்கு நன்றி உ.த தேடிப ்பார்க்கின்றேன்//

நன்றி பிரபா.. டிவிடிக்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்..

உண்மைத்தமிழன் said...

//முரளிகண்ணன் said...
very nice story & posting.//

Thanks Very much Kanna..

உண்மைத்தமிழன் said...

//sivaraman said...
வெகு நாட்களுக்குப்பிறகு வரும் நல்ல திரைப்ப்டம் என்று மலையாள நண்பர்கள் பரிந்துரைத்திருந்தனர். உங்களின் நீண்ட தெளிவான description அதை உறுதிப்படுத்துகிறது. அறிமுகத்திற்கு நன்றி.//

அந்த மலையாள நண்பர்களுக்கு எனது முதல் நன்றியும், உங்களுக்கு அடுத்த நன்றியும் உரித்தாகட்டும்..

உண்மைத்தமிழன் said...

//Bleachingpowder said...
நல்ல கதை, சிறந்த படம்.//

இது போதும்.. மற்றவையெல்லாம் வேண்டாமே..

//ஜெயராமின் நடிப்பு சிறப்பாய் இருந்தாலும், தன்மாந்த்ரா மோகன்லாலை இமிடேட் செய்ததை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.//

ஜெயராம் நடிப்பில் இமிடேட் செய்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் தன்மந்த்ராவையும் பார்த்துவிட்டேன். கதையமைப்பு அப்படி..

இப்போதெல்லாம் மனச்சிதைவு நோய் எப்படியெல்லாம், எந்தெந்த காரணத்திற்கெல்லாம் வருகிறது என்பதனை யாராயும் சொல்ல முடியவில்லை. ஆனால் நோயாளிகள் பெருகிக் கொண்டேயிருக்கிறார்கள்.

உண்மைத்தமிழன் said...

//சுரேஷ் கண்ணன் said...
உண்மைத்தமிழன், பட அறிமுகத்திற்கு நன்றி. படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது உங்கள் அறிமுகம். நம்மூரில் மோகன் மாதிரி அதிரடி கதாநாயர்களின் சம்பிரதாயமான காமெடிகள் இல்லாத சாதாரண நபர்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாயகர்களில் ஜெயராமும் ஒருவர்.//

உண்மை.. ஒத்துக் கொள்கிறேன்.. அவர் வெகுசன அப்பாவி ஆண்மக்களின் பிரதிநிதி..

//தமிழ்ச ்சினிமாவின் பிம்பமாகிக் கொண்டிருக்கும் மலையாள திரையுலகில் நல்ல படம் ஒன்று வந்திருப்பதை அறிய மகிழ்ச்சி.//

இதுவும் உண்மை. இது மாதிரியான திரைப்படங்கள்தான் மலையாள மொழி சினிமாவின் தரத்தை வெளியுலகத்திற்கு உரக்கச் சொல்கின்றன. மேன்மையின் அடையாளம்..

//குறைந்த பட்சம் கோபிகா-வுக்காகவாவது பார்க்க வேண்டும்.:-)//

-)))))))))))))))))))))))))

Unknown said...

பார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். உங்களது விமர்சனம் அற்புதமாக இருக்கிறது. ஆர்வத்தை பல மடங்கு தூண்டிவிட்டது.

பின் குறிப்பு : மனைவியை விரட்டுவது, பின் ஏங்குவது, பின் இணைவது என இன்னும் எத்தனை படங்களில் தான் நடிக்கப் போகிறாரோ ஜெயராம்.

உண்மைத்தமிழன் said...

//Xavier said...
பார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். உங்களது விமர்சனம் அற்புதமாக இருக்கிறது. ஆர்வத்தை பல மடங்கு தூண்டிவிட்டது.//

நிச்சயம் பார்த்துவிடுங்கள்..

//பின் குறிப்பு : மனைவியை விரட்டுவது, பின் ஏங்குவது, பின் இணைவது என இன்னும் எத்தனை படங்களில்தான் நடிக்கப் போகிறாரோ ஜெயராம்.//

அவர் விரட்டவில்லை சேவியர்.. கதைக்கரு அதுபோலவே அமைந்துவிடுகிறது. கரு ஏன் அமைகிறது எனில் அது நமது சமூகத்தின் வெளிப்பாடு. சமூகத்தில் குடும்பத்தின் பங்கு எப்படி உள்ளதோ அதனை சிறிதளவையாவது காட்ட வேண்டுமே? அதனால்தான்.. இதற்காக ஜெயராம் மீது கோபப்பட வேண்டாம்..

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//போதையில் புலம்புவதைக் காண்கின்றபோது நடிகர்களின் உண்மையான நடிப்பு போதையில் தெள்ளத் தெளிவாக வருமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.//
பொதுவாகவே மலையாள நடிகர்கள் குடித்து விட்டு செய்யும் அலப்பறை மிகவும் ரசிக்கும் படி இருக்கும் . மோகன்லால் மற்றும் ஜெயராம் அவர்களில் ஒரு படி மேலே தான்.
இந்தமுறை அதனை நடிப்பு திறமையை வெளிப்படுத்த ஜெயராம் உபயோகப்படுத்தி உள்ளார் போலும் .!
அன்புடன்,
பாஸ்கர்.

சரண் said...

மிக நல்ல விமர்சனம். படத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் உதவியது..

இந்தப் படத்தை தமிழில் எடுக்கிறேன் பேர்வழி என்று பீ.வாசு மாதிரி ஆட்கள் நாசமடிக்காமல் இருந்தால் போதும்.

Ayyanar Viswanath said...

உண்மை தமிழன்
அறிமுகத்திற்கு நன்றி..ஆனா மொத்த கதையும் சொல்லிட்டீங்க..இனிமே படத்தில பார்க்க என்ன இருக்க போகுது :(

அகமது சுபைர் said...

//“கதா பறையும் போள்” திரைப்படத்தினைவிடவும் இத்திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது என்கிற உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.// - அப்ப நம்ம பீ.வாசுவுக்கு ஒரு வேட்டை இருக்குன்னு சொல்லுங்க.

துளசி கோபால் said...

நேரத்தே கண்டோ?

இன்னெலெயாணு இவிடே கோபாலேட்டன் பரஞ்ஞு, நல்ல படம். கிட்டியாக் கொள்ளாம்னு.

உண்மைத்தமிழன் said...

///ARUVAI BASKAR said...
//போதையில் புலம்புவதைக் காண்கின்றபோது நடிகர்களின் உண்மையான நடிப்பு போதையில் தெள்ளத் தெளிவாக வருமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.//
பொதுவாகவே மலையாள நடிகர்கள் குடித்து விட்டு செய்யும் அலப்பறை மிகவும் ரசிக்கும படி இருக்கும் . மோகன்லால் மற்றும் ஜெயராம் அவர்களில் ஒரு படி மேலேதான். இந்த முறை அதனை நடிப்பு திறமையை வெளிப்படுத்த ஜெயராம் உபயோகப்படுத்தி உள்ளார் போலும் .!
அன்புடன்,
பாஸ்கர்.///

உண்மைதான் பாஸ்கர்.. அதிலும் மோகன்லாலின் 'சித்ரம்' பட அலப்பறை இன்னமும் மறக்க முடியாதது..

அதென்னவோ 'தண்ணி' உள்ளே போனால் எல்லா கோணங்கி சேட்டைகளும் தானாகவே வெளி வருகிறது..

உண்மைத்தமிழன் said...

//சூர்யா said...
மிக நல்ல விமர்சனம். படத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் உதவியது..//

நன்றி சூர்யா. அவசியம் வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.

//இந்தப் படத்தை தமிழில் எடுக்கிறேன் பேர்வழி என்று பீ.வாசு மாதிரி ஆட்கள் நாசமடிக்காமல் இருந்தால் போதும்.//

நிச்சயம் அந்தத் தவறு இனி நடக்காது என்றே நினைக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//அய்யனார் said...
உண்மை தமிழன் அறிமுகத்திற்கு நன்றி..ஆனா மொத்த கதையும் சொல்லிட்டீங்க..இனிமே படத்தில பார்க்க என்ன இருக்க போகுது:(//

எப்படி எடுத்திருக்காங்கன்னு பார்த்தாதான் ஸார் தெரியும்.. நான் கதைதான எழுதினேன்.. Visual-ஆ நினைச்சுப் பாருங்க.. அப்பத்தான் முழு வீச்சும் புரியும்..

உண்மைத்தமிழன் said...

///அகமது சுபைர் said...
//“கதா பறையும் போள்” திரைப்படத்தினைவிடவும் இத்திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது என்கிற உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.//
அப்ப நம்ம பீ.வாசுவுக்கு ஒரு வேட்டை இருக்குன்னு சொல்லுங்க.///

நிச்சயமா நடக்காது.. கவலைப்படாதீங்க..

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
நேரத்தே கண்டோ? இன்னெலெயாணு இவிடே கோபாலேட்டன் பரஞ்ஞு, நல்ல படம். கிட்டியாக் கொள்ளாம்னு.//

டீச்சர்.. எவ்ளோ நல்ல நேரம்னு பார்த்தீங்களா. அவசியம் பார்த்திருங்க.. நீங்க பதிவு போடறதுக்கு ஏற்ற படம்தான் ரீச்சர்.. கோபால் சேட்டாவை ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்கோ..

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//மோகன்லாலின் 'சித்ரம்' பட அலப்பறை இன்னமும் மறக்க முடியாதது.. //
அதே !! அதே !!
//அதென்னவோ 'தண்ணி' உள்ளே போனால் எல்லா கோணங்கி சேட்டைகளும் தானாகவே வெளி வருகிறது..//
அவ்வாறு "நடிப்பதிலே" மலையாள நடிகர்கள் மிகவும் திறமைசாலிகள் .!!

உண்மைத்தமிழன் said...

///ARUVAI BASKAR said...
//மோகன்லாலின் 'சித்ரம்' பட அலப்பறை இன்னமும் மறக்க முடியாதது.. //
அதே !! அதே !!
//அதென்னவோ 'தண்ணி' உள்ளே போனால் எல்லா கோணங்கி சேட்டைகளும் தானாகவே வெளி வருகிறது..//
அவ்வாறு "நடிப்பதிலே" மலையாள நடிகர்கள் மிகவும் திறமைசாலிகள்.!!///

இயல்பாகவே அந்த ஊரே 'தண்ணி' ஊர்தான்.. நம் ஊரில் குடித்துவிட்டுப் புலம்புவது ரெளடித்தனத்தின் முதல் படி என்று நாம் நினைப்பதால் அநேகத் திரைப்படங்களில் குடியினால் வரும் 'நடிப்புத் திறமை' வெளிப்படுத்தப்படவில்லை. சிறிது வெளிப்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் மிகை நடிப்பு தென்பட்டு கதை கந்தலாகிவிட்டது..

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//அநேகத் திரைப்படங்களில் குடியினால் வரும் 'நடிப்புத் திறமை' வெளிப்படுத்தப்படவில்லை.//
image spoil ஆகி விடும் என்று இங்கு ஒருவரும் அந்த மாதிரி scene களை வைப்பதற்கு அனுமதிப்பதில்லை என்பது எனது அனுமாநிப்பாகும் !

butterfly Surya said...

நல்ல விமர்சனம்.. கண்டிப்பாக பார்க்க வேண்டும். மோகன்லாலின் தன்மாத்ரா வகையறா போல இருக்கு..

நன்றி..வாழ்த்துக்கள்

சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

விமர்சனம் நன்றாக இருக்கிறது;நாங்கள் படத்தைப் பார்க்க வேண்டும் எனில் தகடு தேட வேண்டும் அல்லது இந்தியா வரும் வரை காத்திருக்க வேண்டும்;என்ன,அதுவரை படம் தியேட்டரில் இருக்க வேண்டும் !!!

ஆனால் என்ன,எனக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி.

இடையில் ஒரு சிறிய பதிவைப் பார்த்தும்,என்ன ஆனது உண்மைத்தமிழனுக்கு என நினைத்தேன்;திரும்ப ஃபார்முக்கு வந்துட்டிங்க!

:))))))))

மணி said...

உங்க விமர்சனம் நல்லா இருக்குன்னா, ஒரு படம் பார்த்த ஃஎபக்ட் இருக்கு

அற்புதம்

malar said...

நல்ல் ஓரு படத்தை அறிமுகபடிதியதற்க்கு நன்றி....

பார்த்து விட்டேன்...

abeer ahmed said...

See who owns elance.com or any other website:
http://whois.domaintasks.com/elance.com