குஷ்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூ..!

30-04-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று முன்தினம் நடிகை குஷ்புவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, “திருமணத்துக்கு முந்தைய `செக்ஸ்' உறவு சட்டபூர்வக் குற்றம் அல்ல” என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.




திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான `செக்ஸ்' உறவு கொள்வது தவறு இல்லை என்று, பிரபல நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டில் வெளியான குஷ்புவின் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அவருக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு கோர்ட்டுகளில் 22 வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. அந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற குஷ்புவின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து குஷ்புவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து நேற்று முன் தினம் தீர்ப்பு கூறியது. குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"பேட்டி ஒன்றில் குஷ்பு தெரிவித்த சொந்த கருத்துக்கு எதிராக கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குஷ்புவின் கருத்து அமையவில்லை. இந்த வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை'' என்று, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர்.

3 நீதிபதிகள் கொண்ட `சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்'சுக்காக நீதிபதி சவுகான் தீர்ப்பை எழுதி இருந்தார். தீர்ப்பின் முழு விவரம் இது..

"திருமணத்துக்கு பிறகே `செக்ஸ்' உறவு என்பது நமது சமுதாயத்தின் பிரதான கருத்தாகும். அதே நேரத்தில், திருமணம் ஆகாமலேயே பரஸ்பரம் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி கிரிமினல் குற்றம் அல்ல என்று, இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

சாதாரணமாக தனது கருத்துக்களை வெளியிடும் ஒருவரை தண்டிப்பது குற்றவியல் சட்டத்தின் பணி அல்ல. அது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும். சட்டபூர்வமான குற்றம் இழைத்ததற்கான ஆதாரங்களை புகார்தாரர்கள் தாக்கல் செய்தால் மட்டுமே, வழக்கு தொடர்வதற்கான நடைமுறைகளை மாஜிஸ்திரேட்டுகள் தொடங்க வேண்டும்.

தவறான, சாரமற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுமை இழைப்பதாகிவிடும். நடிகை குஷ்புவுக்கு எதிரான புகார்கள், உள்நோக்கத்துடன் அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டு இருப்பதால், குற்றவியல் நடைமுறை சட்ட அமைப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

ஆங்கில பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் ஆபாசமானவையோ நற்பண்புகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவோ இல்லை. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார், அவ்வளவுதான்.

எந்த ஒரு தனி மனிதருக்கோ, கூட்டாக பலருக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ அந்த கருத்தை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடும் நோக்கில் அதை அவர் தெரிவிக்கவில்லை. அவதூறு வழக்கு சட்ட பிரிவின் கீழும் அவருடைய கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.

அதே நேரத்தில் குஷ்புவின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது உண்மைதான். திருமணத்துக்கு முந்தைய உறவு, சேர்ந்து வாழ்வது போன்ற சர்ச்சைகள் எழும்போது அதுபற்றி வெளிப்படையாக விவாதிக்கும் கலாசாரம் வேண்டும்.

திருமண பந்தம் என்பது இந்தியாவில் முக்கியமான சமூக சம்பிரதாயம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதேபோல் சில தனி நபர்கள் மற்றும் அமைப்பினர் அதற்கு எதிரான கருத்துக்களையும் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தனிநபர் சுதந்திரத்தில் குற்றவியல் சட்டத்தை அவசியமின்றி பயன்படுத்த முடியாது.

குஷ்புவின் கருத்தில் புகார்தாரர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அதே வழியில் அவர்களும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் தங்கள் பதில் கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம். அதற்காக கிரிமினல் வழக்கு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இல்லை. குஷ்புவின் கருத்து இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டிவிடும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

"திருமணத்துக்கு முந்தைய உறவுகள் அதிகரித்து வருவதால், இருவருடைய சம்மதத்துடன் நடைபெறும் அத்தகைய உறவுகளை சமூகரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் குஷ்புவின் கருத்தே தவிர, எல்லா வகையான `செக்ஸ்' தொடர்புகளுக்கும் அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பதாக அர்த்தம் அல்ல.

குஷ்புவின் கருத்தை அப்படி தவறாக கருத வேண்டும் என்றால், `செக்ஸ்' தொடர்பாக வெளியிடப்படும் பல்வேறு செய்தி, கட்டுரைகளுக்காக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களையெல்லாம் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தவது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.

ஒரு வாதத்திற்காக, குஷ்புவின் கருத்து, திருமணத்துக்கு முன்பு உறவு கொள்ள சில இளைஞர்களை தூண்டுவதாக கருதினாலும், அந்த செயல் கிரிமினல் குற்றம் அல்ல என்பதால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது''.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது குறித்து நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அந்த கருத்துக்களை நீதிபதிகளின் உத்தரவு என்று கருதி, அதற்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதங்களை அனுப்பினார்கள். சிலர் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கோரி இருந்தனர். சில கடிதங்களில், “பாரதத்தின் புராண இலக்கியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?” என்றும் நீதிபதிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தனவாம்.

தீர்ப்பில் இந்தத் தகவலையும் வெளியிட்ட நீதிபதிகள், பத்திரிகை மற்றும் டி.வி. ஊடகங்களில் திரித்து வெளியான செய்திகளை பார்த்து இந்தக் கடிதங்களை பொதுமக்கள் எழுதி இருப்பதாக தெரிவித்தனர். எனவே, “இது போன்ற செய்திகளை வெளியிடும்போது பத்திரிகை மற்றும் ஊடகங்கள், மேலும் கவனமாகவும், பொறுப்பு - எச்சரிக்கை உணர்வோடும் வெளியிட வேண்டும்” என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தன் மனதுக்கு சரியென்று பட்டதை வெளிப்படையாகச் சொன்ன குஷ்புவின் கருத்து, தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று சொல்லி அவரை எதிர்த்து உள் நோக்கத்துடன் பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு விடுதலைச்சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்திய அராஜகங்களை சுலபத்தில் மறந்துவிட முடியாது..!

இவர்கள்தான் தமிழ்நாட்டின் கலாச்சாரக் காவலர்களைப் போல தங்களைக் காட்டிக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டை நாங்கள்தான் காப்பாற்றப் போகிறோம் என்று மேடைக்கு மேடை வாய் கிழிய பேசிவிட்டு ஒண்டியாய் இருந்த ஒரு பெண்ணிடம் தங்களது எதிர்ப்பைக் காட்டுவதற்கு தங்களிடம் இருந்த பெண்கள் படையினரையே அனுப்பி வைத்தார்கள்.

பண்பாடு, கலாச்சாரம் என்று கூவிய இவர்கள் எதிர்க்கக் கிளம்பிய தங்களது அமைப்பின் பெண்களிடம் விளக்குமாற்றையும், செருப்பையும் கொடுத்து குஷ்பு வீட்டின் எதிரே போராட்டம் நடத்த தூண்டினார்கள்.

“எதிர்க் கருத்தைத் தெரிவிக்க செருப்பையும், விளக்குமாற்றையும் காண்பிப்பதுதான் தமிழ்ப் பண்பாடா? தமிழ்க் கலாச்சாரமா?” என்று நடுநிலையாளர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும், இன்றுவரையிலும் இந்தக் கலாச்சாரக் காவலர்களும், பண்பாளர்களும் பதிலே சொல்லவில்லை. வாழ்க இவர்களது ஜனநாயகம்..!

ஆனாலும் தனி ஒரு மனுஷியாய், தான் எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாய் நின்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தோல்வியடைந்தாலும் மனதைரியத்துடன் உச்சநீதிமன்றம் வரையிலும் சென்று தனது கருத்துரிமையை நிலைநாட்டி, பேச்சுரிமை, எழுத்துரிமை, தனி மனித உரிமைகளுக்காக  இனி வரும் காலங்களில் மேற்கோள் காட்ட உச்சநீதிமன்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்கத் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்தமைக்காக குஷ்புவிற்கு எனது சல்யூட்..!

அண்ணன் அசுரனுக்கு எனது பணிவான பதில்கள்..!

28-04-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தோழர் அசுரன் அவர்கள் நமது வலையுலகத்தின் மிக மூத்தப் பதிவர்களில் ஒருவர். இன்று அவர் என்னையும் சக தோழர் அய்யனாரையும் குறிப்பிட்டு கும்மியிருக்கும் பதிவு ­இது.
.
அவருடைய இந்தப் பதிவே மிக நீளமானதாகவும், விவரணைகள் அதிகம் கொண்டதாகவும் இருந்தபடியால் நான் அங்கே பின்னூட்டமிட்டு எனது பதில்களைச் சொல்ல முடியவி்ல்லை. தனிப்பதிவாகவே போட வேண்டிய கட்டாயம்..

இனி ஓவர் டூ தோழர் அசுரன்..!

அண்ணன் அசுரன் அவர்களுக்கு...!

எனது வணக்கங்கள்.. நலமா..? வெகு நாட்களாகிவிட்டது உங்களைச் சந்தித்து..!

முதலிலேயே உங்களுக்கு மனசார ஒரு நன்றியைச் சொல்லிக்கிறேன்..! இங்க, வலையுலகத்துல ஏதோ ஒரு மூலைல.. யாருமே சீண்டாத.. எந்த லிஸ்ட்டுலேயுமே சேர முடியாத.. வைக்க முடியாத.. ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு வெட்டிப் பயல் நான்.. என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு எனக்காக ஒரு பதிவு போட்டிருக்கீங்க பாருங்க..! கும்பிட்டுக்குறேண்ணே..!

உங்களோட ‘அசுரன்’ அப்படீன்ற பேர் பொருத்தமா இல்லைன்னாலும், நான்  என் அப்பன் முருகன்கிட்ட உங்களுக்காக.. ‘நீங்க தீர்க்காயுசா.. நல்ல உடல் சுகத்தோட, எல்லா வளத்தையும் பெற்று சந்தோஷமா வாழணும்’னு வேண்டிக்கிறேண்ணே..!

நான் வலையுலகத்தின் உள்ளே கால் பதிக்காமல் வெறும் கண் பார்வையோடு இருந்த காலத்திலும், உங்களுடைய தளத்தினை வாசித்துக் கொண்டுதான் இருந்தேன்.

நீங்களும், தோழர் ஸ்டாலினும், தோழர் ஸ்பார்ட்டகஸும், ரவி சீனிவாஸும், கால்காரி சிவாவும், அரவிந்தன் நீலகண்டனும், வஜ்ராவும், ராஜாவனஜ்ஜும், தியாகுவும், தமிழ்மணியும், அதியமானும் ரவுண்டு கட்டி விளையாடியதெல்லாம் வலையுலகத்தின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

உங்களுடைய வார்த்தை விளையாட்டுக்களையெல்லாம் பார்த்து “நமக்கு இப்படியொரு எழுத்தறிவையும், படிப்பறிவையும் கொடுக்காம போயி்ட்டானே..!” என்று நான் என் அப்பன் முருகனைத் திட்டாத நாளில்லை..! அவ்வளவு பொறாமை கொள்ள வைத்திருக்கிறது உங்களுடைய வார்த்தை விளையாட்டுக்கள்..!

சில இடங்களில் உங்களுக்கு பின்னூட்டம் இட்டு.. அதுலேயே நான் மூக்குடைபட்டு திரும்பிய நாட்களுக்குப் பிறகு நம் அறிவுக்கு இந்த அண்ணன்கிட்டேயெல்லாம் போய் மோதக் கூடாது.. வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு ஒதுங்கிப் போறதுதான் நம்ம உடம்புக்கும், மனசுக்கும் நல்லது என்று நினைத்து ஓரமாகவே நின்றிருந்தேன்.!

அப்படியிருக்க.. இன்றைக்கு உங்களது இந்த 19 பக்க கட்டுரையில் பல முறை எனது பெயரை இட்டே பதிவு போட வைத்திருக்கும் அந்த முருகனின் திருவிளையாடலை என்னவென்று சொல்வது..?

அந்தக் கோவணாண்டிக்கு எனது நன்றிகள்..!

விஷயத்திற்கு வருகிறேன்.

நீங்கள் என்னைக் குறிப்பிட்டுச் சொல்லியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு, பின்பு பொதுவாக எனது கருத்துக்களை வைக்க விரும்புகிறேன்..!

[[[தமிழச்சியின் கட்டுரைகள் பெண்களின் பல்வேறு பிரச்சினைகள், மத பிற்போக்குவாதிகள் யோனிகளை எப்படியெல்லாம் புண்படுத்துகிறார்கள், பெண்ணடிமைத்தனம் என்று பல்வேறு விசயங்களைப் பேசின.]]]

அசுரன் அண்ணே.. நான் இதனை அப்பொழுதே மறுக்கவில்லை. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எனது
­இந்தப் பதிவிலும் இதனை நான் பதிவு செய்திருக்கிறேன்..! நீங்களும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஆனாலும் நமது வாசகர்கள் சிலர் சரியாகப் படிக்காமல் போய், என்னைத் தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எனது அந்தப் பதிவில் நான் எழுதியிருப்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

"நாம் ஒன்றும் அந்த வீராங்கனையின்(தோழர் தமிழச்சி) பதிவுகளைத் தவறு என்று சொல்லவே இல்லை.. பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமையான அந்த நிகழ்வுகளைத்தான் அவர் படம் பிடித்திருந்தார். நடக்கவே இல்லை என்று யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது."

- இப்படித்தான் தோழர் தமிழச்சியின் பதிவுகளைப் பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன் என்பதைத் தங்களது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்..!

ஆகவே தோழர் தமிழச்சியின் பதிவுகளில் பொருந்தியிருந்த உட்கருத்துக்கள் பற்றிய உங்களுடைய கருத்தும், எனது கருத்தும் ஒன்றுதான்..!

[[[ஆயினும், அவர் வெளியேற்றப்பட்டார். அன்றைக்கு எம்மையும், தோழர் தமிழச்சியின் நண்பர்கள் சிலரும், முற்போக்கு பேசும் பதிவர்களும் தவிர யாருமே அவருடன் நிற்கவில்லை. புனிதக் ‘பசு’ பதிவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து அவர் மீது நடத்திய அராஜகம் அது. அவ்வாறு, அவரை வெளியேற்றக் ‘குறி’ பார்த்துக் கூட்டுச் சேர்ந்த அராஜகவாதிகள் இன்று லீனாவுக்காகவும் ஒன்று சேர்வது ஆச்சர்யமானதல்ல. அன்று, தமிழச்சியோ தனது யோனிக் கட்டுரைகளை யாரிடம் காட்டினாலும் பேசத் தயார் என்றுதான் சொன்னார். மக்கள் விரோதமாக இருந்தால் அல்லவா அவர் பயப்பட்டிருக்க வேண்டும்?

தமிழச்சியின் கருத்துரிமையை கொல்வதற்காக அன்று ஒன்று சேர்ந்தவர்களில் அய்யனார்-உண்மைத்தமிழன் போன்ற இன்றைய கருத்துரிமைக் காவலர்களும் அடங்குவர். அன்று, உண்மைத்தமிழன் அண்ணாச்சி எழுதிய பதிவு இது.]]]

இங்கேதான் விஷயமே இருக்கிறது.. தோழர் தமிழச்சி ஏன் தமிழ்மணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்..? உண்மையான காரணம் என்ன..? என்பது இப்போதைய புதிய வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தெரியாது..

ஆனால் உங்களுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்திருந்தும் வேண்டுமென்றே எனது ­இந்தப் பதிவில் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கின்ற வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை குழி தோண்டி புதைத்திருக்கிறீர்கள். “அசுரன் அண்ணே நீங்களுமா..?” என்றுதான் இதனைப் பற்றிக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

தோழர் தமிழச்சியை தமிழ்மணத்தில் இருந்து வெளியேற்றும்படி கோரிக்கை வைக்கும் அளவுக்கு என்ன நடந்தது..? இதையும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எனது ­இந்தப் பதிவிலேயே தெளிவாக நான் எழுதியிருக்கிறேன்..

"அந்த 'வீராங்கனை' முதலில் ஒழுங்காக காப்பி-பேஸ்ட் செய்து வந்து, பின்பு திடீரென்று தடம் மாறி ரயில் புரண்டபடி தண்டவாளத்தில் ஓடுவதைப் போல் பதிவுகள் எழுதியபோதே பலரும் சொல்லிப் பார்த்தார்கள். கண்டித்துப் பார்த்தார்கள். பேசிப் பார்த்தார்கள். அம்மையார் திருந்தியபாடில்லை."

"இந்த வீராங்கனையின் பதிவின் தலைப்புகளை பார்த்து, பார்த்து தமிழ்மணம் தளப் பக்கத்தை திறப்பதற்கே எரிச்சல் வந்துவிட்ட நிலையில்தான் நானும் ஒரு பதிவைப் போட்டேன்.. கிடைத்தது 'காயடிக்கப்பட்ட காளை' என்றொரு பட்டம்."

"ஏற்கெனவே பல பதிவர்களும் விதவிதமான பட்டங்களை அம்மையாரிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டிருந்ததால், எனக்கும் இப்படித்தான் நடக்கும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன்.. அதுவே நடந்தது."

"நாம் ஒன்றும் அந்த வீராங்கனையின் பதிவுகளைத் தவறு என்று சொல்லவே இல்லை.. பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமையான அந்த நிகழ்வுகளைத்தான் அவர் படம் பிடித்திருந்தார். நடக்கவே இல்லை என்று யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது."

"ஆனால் அதை மலிவான விளம்பர நோக்கில் தலைப்பிலேயே அந்த வார்த்தையைக் குறிப்பிட்டு தொடர்ந்து பல நாட்கள், பல இடுகைகளாக எழுதியதுதான் அப்பதிவுகள் குறித்து பரிதாபத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக பலருக்கும் அருவருப்பை ஏற்படுத்திவிட்டது."

"இதை பலரும் பலவிதமாக, நல்லவிதமாக, மிக மரியாதையாக எடுத்துச் சொல்லியும் கேட்காமல் சக பதிவர்களுக்கு எழுதிய பதிலில் ஒரு மனிதனாககூட அவர்களைக் கருதாமல் அள்ளி வீசிய வசவுகளால்தான் அந்த அம்மணி பலரிடமிருந்தும் கண்டனங்களையும், விரோதங்களையும் எதிர்கொண்டார். அதை அவர் இன்றுவரையிலும் புரிந்து கொள்ளாதது நமக்கு வருத்தமே."

"அப்போது தூங்கியிருந்த தமிழ்மணம் இப்போது அதே வீராங்கனை, பெயரிலியுடன் மோதிய பின்பு முழித்துக் கொண்டதைப் போல் ஆக்ஷன் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை."

"அங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் 'வீராங்கனை' பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது."

"அது சரி.. இதற்கு முன்பு நான் உள்ளிட்ட பல பதிவர்கள் அம்மையாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதெல்லாம் தமிழ்மணத்திற்குத் தெரியுமே.."

"அவர்களெல்லாம் சக பதிவர்கள்தானே.. ஒரு எச்சரிக்கையாச்சும் விடுவோமே' என்ற எண்ணம்கூட அப்போதெல்லாம் தமிழ்மண  நிர்வாகிகளுக்கு வரவில்லை. ஆனால் அவர்களின் அடிமடியில் கை வைத்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது."

"அப்படியானால் அந்த 12 பேரின் பார்வையில், என்னைப் போன்ற அப்பிராணி பதிவர்களெல்லாம் யாராம்..?"

மேற்படிதான் நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் பதிவில் நான் முழுமையாக தோழர் தமிழச்சி பற்றி எழுதியிருக்கிறேன்.

இனி விரிவாக..

தோழர் தமிழச்சி பதிவெழுத வந்த புதிதில் முதல் நாள் 'விடுதலை' பத்திரிகையில் வெளி வரும் பெரியாரின் கட்டுரைகளை காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்தார். பிடித்தவர்கள் சென்றார்கள். படித்தார்கள்.. பாராட்டினார்கள். வாழ்த்தினார்கள்.

தோழர் தமிழச்சிக்கு வலையுலகத்தில் நுழையும்போதே தமிழில் அவ்வளவு பரிச்சயம் இல்லை. சில தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தமே அவருக்குத் தெரியாது..

இதன் பின்பு திடீரென்று 'பெண்ணியம் காக்கிறேன்' என்று சொல்லி கோணேஸ்வரி பற்றிய கவிதையை எடுத்துப் போட்டு அதனை விளக்க முற்பட்டார்.

இதுதான் சாக்கு என்று சொல்லி நம்மிடையே இருந்த சிலர் அனானிகளாக அவதாரம் எடுத்து, தமிழின் பல கெட்ட வார்த்தைகளை அவருக்கு நல்ல வார்த்தைகளைப் போல் சொல்லிக் கொடுத்தார்கள். அவரும் அர்த்தம் புரியாமலேயே முதலில் அதனை எடுத்துக் கையாண்டார்.

நம்மில் சிலர் அதனைக் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டியபோது, "போடா பொறம்போக்கு.." "செருப்பால அடிப்பேன்டா நாயே.." "போடா பேமானி" என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினார்.

அனானி ஆப்ஷனை நீக்கும்படியும், சக பதிவர்கள் பற்றிய ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் நடுநிலையான பதிவர்கள் பலர் சொல்லியும் அவர்களுக்கும் இதுதான் பதிலாகக் கிடைத்தது. (ஆதாரத்திற்கு இப்போது இதையெல்லாம் தோண்டியெடுக்க முடியாது. அவற்றையெல்லாம் தோழர் தமிழச்சி அப்போதே நீக்கிவிட்டார்)

திடீரென்று யோனியை மையமாக வைத்தே பதிவின் தலைப்புகளை இடத் தொடங்கினார். காமம் ததும்பும் விதமாகவே வேறு, வேறு வார்த்தைகளில் அவரது தினப்படியான பதிவுகள் வலம் வர ஆரம்பித்தன. பதிவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். அனைவரின் சங்கடத்திற்கும் காரணமென்ன..?

பல பதிவர்கள் வீடுகளில் தமிழ்மணத்தைப் பார்ப்பதற்காக உட்கார்ந்தவுடன் இந்தப் பதிவின் தலைப்புதான் கண்ணில்படுகிறது. இதனால் எதிர்பாராத சங்கடங்கள் நேர்ந்தன.. "பதிவின் உள்ளடகத்தில் எதை வேண்டுமானாலும் எழுதித் தொலைக்கட்டும்.. தமிழச்சி என்ற பெயரைப் பார்த்தாலே நாங்கள் திறக்காமலேயே விட்டுவிடுவோம். ஆனால் தலைப்பிலேயே வந்தால் எங்களுக்கு சங்கடமாக இருக்கிறதே.." இதைத்தான் அனைத்து பதிவர்களும் நினைத்துப் பார்த்து, தங்களுக்குள் பேசி, கதைத்து, பின்பு பொறுமையிழந்து அவரவரும் தனித்தனிப் பதிவுகளாக இட்டு பின்னூட்டங்களை இட்டார்கள்.

அத்தனைக்கும் நமது தோழர் தமிழச்சி தனது பாணியிலேயே பதில் சொன்னார். மீண்டும் இகழ்ந்துதான் பேசினார். எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு பட்டப் பெயரையும் வைத்தார். எனக்கும்தான்.. 'காயடிக்கப்பட்ட காளை' நல்ல பெயர்.. வாங்கிக் கட்டிக் கொண்டேன்..

கடைசியாக எத்தியோப்பியா நாட்டில் சிறுமிகளின் பிறப்பு உறுப்பை அவர்களது சிறிய வயதிலேயே தைத்து விடுவதாக ஒரு செய்தியைப் போட்டு அதனை படத்துடன் விளக்கியிருந்தார் தோழர் தமிழச்சி. தலைப்பும் விகாரமாக இருந்தது.. உள்ளே படங்களும் அகோரமாக காட்சியளித்தன. இதுதான் கிளைமாக்ஸ் சண்டையாகிவிட்டது.

தகவல் என்னவோ தெரிந்து கொள்ள வேண்டியதுதான். இவருக்கு முன்பாகவே நாங்களும் படித்துவிட்டோம். ஆனாலும் தனது தளத்தின் ஹிட்ஸை உயர்வதற்காக இவர் தொடர்ச்சியாக வைத்திருந்த காமத் தலைப்புகளை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது..!

இதனால்தான் என்னோடு சேர்த்து நிறைய பேர் தமிழ்மணத்திற்கு புகார் தெரிவித்து பதிவு எழுதினோம். தமிழ்மணமே மிகவும் தாமதமாகத்தான் இதற்கு ஆக்ஷன் எடுத்தது.. அது உங்களுக்கே தெரியும் அசுரன் அண்ணே..!

ஆனால் நீங்களோ, [[[நியாயமாக இவர் தமிழச்சியிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும், விவாதம் செய்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாமல் அறிவுரை வழங்கியிருக்கிறார் இந்த பெரிய மனிதர்.]]]

என்று எழுதியிருக்கிறீர்கள். அறிவுரை சொல்லி பின்னூட்டம் போட்டவர்களுக்கெல்லாம் என்னென்ன மாதிரியான மரியாதையான பதில்கள் கிடைத்தன என்பது அப்போதைய பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரியும். ஏன் உங்களுக்கே தெரியும்..?

எனக்கும் பட்டம்தான் கிடைத்தது. 'காயடிக்கப்பட்ட காளை.' இதற்கு மேல் ஜனநாயக உணர்வுள்ள அந்தத் தோழரிடம் நான் என்ன விவாதம் நடத்தியிருக்க முடியும்..? யாரால் முடிந்தது..?

[[[அதற்கு அடங்காத பொழுது வெளியே போ என்று வன்முறையை ஏவியுள்ளார் இன்றைய கருத்துரிமை காவலர். அன்றைய புனிதக் கூட்டணியில் உ..த. அண்ணாச்சி]]] 

எது வன்முறைங்கண்ணா..?

"ஆபாச வார்த்தைகளை தலைப்புகளாக வைக்காமல், சக பதிவர்களை நண்பர்களாக பாவித்து பதில் சொல்லி, அவர்களைத் திட்டாமல், வையாமல், 'நாயே, சொரி நாயே, டேய்., அவனே, இவனே.. கொட்டையை கட் பண்ணிருவேன்.. பக்கத்துல வந்து பாரு.. ஒரு செகண்ட்ல ‘அது’ இருக்காது..  காணாப் போயிரும்..’ என்றெல்லாம் பதில் சொல்லாமல் மரியாதையாக பேசும்மா.." என்று சொன்னது வன்முறையா..? சிரிப்புதாண்ணே வருது உங்களோட..!

தமிழ்மணத்தை திறக்க கணிணி முன்பு உட்காரும்போதே "முருகா.. இன்னிக்காச்சும் நல்ல தலைப்பா வைச்சுத் தொலைஞ்சிருக்கணும்.. மானத்தை வாங்கிராத.." அப்படீன்னு வேண்டிக்கிடே எத்தனை பதிவர்கள் அப்போதைக்கு நடுக்கத்துடன் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா..?

போங்கண்ணே.. லீனா மேட்டர்ல உங்களுக்கு என் மேல பழி போடுறதுக்கு போயும், போயும் இந்த வீராங்கனைதான் உங்களுக்குக் கிடைத்தாரா..? மிக, மிகத் தவறான வாதத்தைத் துணைக்கு அழைத்திருக்கிறீர்கள் அண்ணே..! 

தோல்வி உங்களுக்குத்தான்..!

[[[இன்னொரு புத்திசாலித்தனமான கேள்வி "இந்துக் கடவுளர்களை இது போலத்தானே அவமானப்படுத்தினீர்கள் அப்பொழுது எங்களுக்கு கோபம் வந்து கலகம் செய்யலாமா?" என்று சந்தடி சாக்கில் கேட்கப்பட்டுள்ளது. கேட்டது உண்மைத்தமிழன் அண்டு அதியமான் அண்ணாச்சி. முற்போக்குவாதிகளின் கூட்டத்துக்கு வந்து கலகம் செய்யுங்க, கேள்வி கேளுங்க பதில் சொல்றோம் ('எல்லா' வகையிலும்).]]]

"எல்லா வகையிலு”ம் அப்படீன்னுனு பிராக்கெட்ல போட்டிருக்கீங்க பாருங்க.. அதுக்காகத்தான் இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் பார்த்து நாங்க ஓரமா ஒதுங்கிப் போறது..!

பேச்சு பேச்சா இருக்கும்னா என்ன வேணாலும் பேசலாம்ண்ணே. நீங்கதான் அடுத்த ஸ்டெப்புக்கு தயாரா இருக்கீங்களே..? அப்ப அதுக்கும் தயாரா இருக்குறவங்கதான் உங்ககிட்ட சரிக்கு சரி மல்லுக்கட்ட முடியும்.. எங்களால முடியாதுங்கண்ணா..!

[[[ஆனால், லீனாவினுடையது கருத்துக்கள் அல்ல, அவை கம்யூனிசத் தலைவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையே யோனி தேடி அலையும் ஆண் குறிகளாகச் சித்தரிக்கும் புளுபிலிம் ஆகும். அது ஒரு வன்முறை ஆகும்.]]]

இங்கேதான் நீங்கள் மீண்டும், மீண்டும் தவறு செய்கிறீர்கள். மேலே சொல்லப்பட்டது உங்களுடைய கருத்துதான். ஆனால் நீங்கள் சொல்கின்ற முறை எப்படி இருக்கிறதெனில், இந்தக் கவிதை பற்றி நீங்கள் சொல்வதுதான் சரியானது.. இறுதியானது. கடைசி வார்த்தை.. யாரும் மறுக்கக் கூடாது. அதுதான் நியாயம்.. அதனை நீங்கள் அனைவரும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற மறைமுகமான மிரட்டல்.. பயமுறுத்தல்..! இது எப்படி ஜனநாயகமாகும்.!

[[[புளுபிலிமை, அது உருவாக்கும் சமூக வன்முறையை தோழர்கள் எப்படி எதிர் கொள்வார்கள் என்பதை அராஜகவாதி உண்மைத்தமிழன் தனது பதிவில் பதிவு செய்துள்ளார் (அவருக்கு ஆத்திரம் என்னடா புளுபிலிம் போடுற தியேட்டரை தோழர்கள் உடைச்சுட்டாங்களே, அராஜகவாதிகள், என்று ஒரே புலம்பல்ஸ்).]]]

உண்மைதாண்ணே.. மறுக்க மாட்டேன். அந்த மது தியேட்டர்ல என் இளமைப் பருவத்தில் ரெகுலர் பாஸ் வாங்காத ஒரு ரசிகன். நான். அது இருக்கட்டும்..

உண்மையா அந்தத் தியேட்டர்ல போய் ரகளை பண்றதை விட்டுட்டு, கண்டுகொள்ளாமல் இருக்க தினமும் மாமூல் வாங்கிட்டு அனுமதி கொடுத்திருந்த மதுரை, தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷனைத்தான நீங்க அடிச்சு நொறுக்கியிருக்கணும்..! ஏண்ணே விட்டுட்டீங்க..! அங்கேயும் நீங்க பலமில்லாதவர்கள்கிட்டதான வந்தீங்க..! கடைசியா உங்க தோழர்கள் சிலர் ‘உள்ளே’ போய் வந்ததுதான் மிச்சம்..! இந்தப் போராட்டம் தவறு என்று நான் சொல்லவில்லை. முறைதான் தவறாகிவிட்டது.

ஒரு சமயம் வில்லாபுரம் மக்களெல்லாம் ஒன்று திரண்டு தியேட்டர் வாசலில் நின்று கூச்சல் போட்டார்கள். தர்ணா போராட்டம் நடத்தினார்கள். சாலை மறியல் செய்தார்கள். போலீஸ் வந்து சமாதானம் சொன்னதும் ஒரு வாரத்திற்கு மட்டும் 'சங்கர்குரு' படத்தை ரிலீஸ் செய்து பார்த்துவிட்டு அது 'வேகாததால்' மீண்டும் பழையபடிக்கு மாறிவிட்டார்கள் தியேட்டர்காரர்கள். எவ்வளவு அடிச்சாலும் தாங்கினாங்கண்ணே அந்தத் தியேட்டர்காரங்க..! ஒருவேளை தியேட்டரை திறந்து வைச்சவரோட கை ராசியோ என்னவோ..? இப்போ அந்த தியேட்டர் வேறொருவரின் கைக்குப் போய் பெயர் மாற்றப்பட்டு நல்ல தமிழ்ப் படங்களாகத் திரையிடுகிறார்களாம். கேள்விப்பட்டேன்..!

"இப்படியெல்லாம் பேச உனக்கு வெக்கமா இல்லையாடா? நீயெல்லாம் ஒரு மனுஷனாடா..? உனக்கு என்னடா நீதி, நியாயத்தை பேச உரிமை இருக்கு.. மானங்கெட்டப் பயலே.."  அப்படீன்னு நீங்க நினைக்கலாம்.. கேக்கலாம்..! 

தப்புதாண்ணே. மன்னிச்சுக்குங்கண்ணே..! ஆனா அந்த வயசுல அது தப்புன்னு தோணவே இல்லைண்ணே..! நான் என்ன செய்யறது..? நமக்கு சரியான கைட்னஸ் இல்லை. எது சரி.. எது தப்புன்னு வாழ்க்கைய வேற இடத்துக்கு மாத்துறதுக்கான வழிகாட்டி இல்லாத தறிகெட்டத்தனமான குடும்பச் சூழல்ல இருந்ததாலதான் அப்படியொரு கெட்ட வாழ்க்கையை அனுபவிச்சுத் தொலைஞ்சேன்.

வாழ்க்கைல சில அனுபவங்கள் கிடைச்சாத்தாண்ணே மனுஷன் திருந்த முடியும்..! அந்தத் தியேட்டர்ல நான் விட்ட காசை சேர்த்து வைச்சிருந்தா இன்னிக்கு ஒரு வீடே வாங்கியிருக்கலாம்..!  எல்லாம் கெட்ட பின்புதான் புத்தி வருகிறது..! அன்னிக்கு நான் அனுபவிச்ச சந்தோஷத்துக்குப் பதிலைத்தான் இப்ப முருகன் எனக்குத் தண்டனையா வாழ்க்கைல கொடுத்திட்டிருக்கான்.. தினமும் அனுபவிச்சிக்கிட்டிருக்கேன்..! ஸோ.. கெட்டுத் தெளிஞ்சிருக்கேன்.. அவ்வளவுதாண்ணே..!

[[[அத்தனைக்கும் லீனா ஒரு புளுபிலிம் தரகர் என்ற போதும் ம.க.இ.க. நியயமாகவே கேள்வி கேட்டுள்ளனர். ஆனால், இதையே கருத்துரிமைக்கெதிரானதாக திரிக்கிறார்கள் உண்மைத்தமிழனும்-அய்யனார் அண்டு கோவும். அராஜகவாதிகள் உண்மைத்தமிழனும், அய்யனாரும் வேண்டுமானால் தமது வீட்டாரை புளுபிலிமில் சித்தரித்து எடுப்பவனிடம் சென்று அஹிம்சை பேசி விளக்கம் கேட்கும் உயர்ந்த உள்ளம் படைத்தவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள முயலலாம். புரட்சியாளர்களுக்கு அவ்வாறு சுயமாரியதை விற்று நடித்து நல்லவன் பட்டம் வாங்க வேண்டிய அவசியமில்லை.]]]

இதற்குப் பெயர் சுயமரியாதை இல்லண்ணே.. ஜனநாயகம்.. பேச்சு உரிமை, எழுத்து உரிமை, சக மனிதர்களுக்கு இருக்கின்ற உரிமைகளை மதித்து நடக்கின்ற நாகரிகப் பண்பு.. இதையெல்லாம் தூக்கிக் காலில் போட்டு மிதித்துவிட்டு 'போராளி' என்றோ, 'புரட்சிவாதி' என்றோ பெயர் எடுக்க வேண்டிய அவசியம் எங்களைப் போன்றவர்களுக்கு இல்லீங்கண்ணா..!

[[[ஓவர் டூ உண்மைத்தமிழன்,

லீனா கூட்ட நிகழ்வுகள் குறித்து உண்மைத்தமிழன் ‘சோ’த்தனமாகக் காட்சிகளைச் சித்தரிக்கும் விதம்..

@@"பேசணும் ஸார்.. கொஞ்சம் சந்தேகம் இருக்கு ஸார்.. கண்டிப்பா பேசியே ஆகணும் ஸார்.. கொஞ்சம் தயவு பண்ணுங்க ஸார்.." என்று முதலில் நாகரிகமாகத்தான் ஆரம்பித்தது வினை.@@

@@'நயமான, நாகரிமான' கேள்வியை எழுப்ப.. அதைக் கேட்டு அதைக் கேட்டு சட்டென்று உஷ்ணமான லீனா ஏதோ சொல்லிக் கொண்டே முன்னால் வர..@@

லீனாவிடம் நயமாக கேட்க்கப்பட்ட கேள்வி என்னவென்று எழுத வேண்டியதுதானே உ.த. சார்? வினவு எழுதியுள்ளதே? வினவைத் தவறாகச் சித்தரிக்கத் தேவையானதை விலாவாரியாகவும், எதிர்தரப்பை ஏதோ செஞ்சுட்டாங்க என்பது போல காட்டி நல்லவர்களாக்கத் தேவையானதை சுருக்கமாகவும், பூடகமாகவும் எழுதும் இந்த நரித்தனம் ஒன்றுதான் உண்மைத்தமிழனின் ஒரே பலம் போலும்.]]]

அந்தக் கேள்வி லீனாவின் தனி மனித வாழ்க்கை பற்றியது. அது போன்று கேள்வி கேட்கவோ, வெளிப்படுத்தவோ வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதால்தான் அந்தக் கேள்வியை நான் புறந்தள்ளினேன்..!

[[[@@அவர் பேசி முடிக்கின்றவரையில் அமைதி காத்த தோழர்கள் மறுபடியும் எழுந்தார்கள்.. இம்முறை ஆதரவுக் கூட்டத்தில் இருந்து ஒருவர் ஆவேசமாகப் பேச பதிலுக்கு இவர்களும் ஆவேசமாகப் பேச கனன்றது அரங்கத்தின் சூழ்நிலை..@@

@@இந்த நேரத்தில் ஆதரவுக் கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் 'டா' போட்டு பேச.. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்பதைப் போல பிடித்துக் கொண்டார்கள் தோழர்கள்.@@

ஆதரவுக் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு திட்டுவதற்கு உரிமை உண்டு என்று சொல்ல வருகிறார் உண்மைத்தமிழன்.]]]

தவறான புரிதல் அசுரன் அண்ணே..! லீனா தரப்பினர்தான் முதலில் ஆரம்பித்தார்கள் என்பதற்காகத்தான் நான் அதை பதிவு செய்தேன்..!

[[[அயோக்கியத்தனத்தையும் செய்துவிட்டு, திட்டவும் செய்வானாம் நாம் அமைதியாக வரவேண்டும் என்பது உண்மைத்தமிழனின் எதிர்பார்ப்பு. அப்படியெல்லாம் வரமுடியாது. மேலும், அவர் சொல்வது போல வெறும் 'டா' போட்டு மட்டுமல்ல, வசவுகளும், திட்டுகளுமே ம.க.இ.கவினரை பார்த்து நிகழ்ந்தன.]]]

எது அயோக்கியத்தனம் என்பது பற்றிய தீர்மானமான முடிவு இதுவரையில் நம்  இருவருக்குமிடையில் ஏற்படாததால், இதைப் பற்றிய உங்களது அபிப்ராயத்திற்கு என்னிடம் பதில்லை..!

ஆனால் ம.க.இ.க. தோழர்களும், தோழியர்களும் வெளியேறுகின்றபோது பேசிய பேச்சுக்களையும், ஒரு தோழர் லீனாவின் கவிதைக்கு விளக்கம் சொல்வதற்காகப் பயன்படுத்திய வார்த்தைகளும் அட்சரச்சுத்தம் 'சரோஜாதேவி' புத்தகத்தின் வரிகள்தான்..!

[[[ஆனாலும் நமது தோழர்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தொண்டை கிழிய கத்திக் குவித்துவிட்டு, தயார் செய்து கொண்டு வந்திருந்த கோஷங்களையும் எழுப்பிவிட்டுத்தான் வெளியேறினார்கள். அவர்களுடன் வந்திருந்த பெண் தோழியர்கள் லீனாவையும், அவரது ஆதரவாளர்களையும் திட்டியதை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அதேபோலத்தான் தோழர்களும்..

அதாவது தோழர்களின் கத்தல்கள் மட்டுமே உ.த.வின் காதில் விழுந்துள்ளது எனில் அவர் நல்ல மனநல மருத்துவரை அனுகுவது நல்லது. லீனாவின் அடிபொடிகள் சலம்பியை எதுவுமே அவர் காதில் விழவில்லையெனில் அந்த வார்த்தைகள் எல்லாம் உ.த.வின் காதில் தேனாக பாய்ந்துள்ளது என்றே பொருள்.]]]

அவர்கள் அதிகம் பேசியது "வெளிய போங்கடா.." என்ற ரீதியில் 'டா' போட்டு பேசியதுதான்..!

[[[உ.த.வின் உளறல்களை அம்பலப்படுத்தி அவரது தளத்தில் வந்த பின்னூட்டங்களுக்கு அவரது எதிர்வினை,

[[[கிருஷ்ணமூர்த்தி said...
இங்கே பிரச்சினையே, சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பதை ஆளுக்காள், அவரவர் சௌகரியங்களுக்கேற்றபடி புரிந்து கொண்டிருப்பதுதான்! Your freedom ends where my nose begins என்பதாக ஒரு விவரணையும்கூட உண்டு!

கருத்துச் சுதந்திரம் என்பது என்னவாக, எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது உங்களுடைய கருத்தாக இருந்தால், உங்கள் வாதப்படியே, லீனா அண்ட் கம்பனிக்குத் தங்கள் கருத்தை அவர்களுக்குத் தெரிந்த உபரி மயிர் வார்த்தைப் பிரயோகத்தில் சொல்ல உரிமை இருப்பது போலவே, வினவு தளத்துக்கும் அவர்கள் வழியில் கலகத்தைத் தோற்றுவிப்பதும் சரியானதே!]]]

உ.த.அண்ணாச்சி : எப்படி ஸார்..? லீனா எழுத்தில்தான் தனது கருத்தைப் பதித்தார். வினவு அண்ட் கோ..?@@

அடிக்க வந்தது லீனா. வினவு தனது கருத்துக்களை கடைசிவரை கருத்துக்களாகத்தான் பதிவு செய்துள்ளதை உ.த.வின் பதிவும் பதிவு செய்துள்ளது. ஆனாலும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது கருத்து உ.த.வின் மொத்த பதிவையும் ஒன்றுமில்லாமல் செய்கிறது என்றவுடன் இப்படி டுவிஸ்டு செய்கிறார் மிஸ்டர் உண்மை.]]]

இல்லை.. பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆவேசமான கோபத்துடன் ஏதோ சில வார்த்தைகளைச் சொன்னபடியே கணேசனை நோக்கி வந்தார். அது ஏன் பேசுவதற்காகவே இருக்கக் கூடாது..! உங்களுடைய பார்வையில் அது அடிப்பதற்காக வந்ததுபோல் இருந்திருக்க வேண்டும்..!  .

[[[மேலும், ம.க.இ.க. அனுகுமுறை சரி என்று சொன்ன ஒருவரை ம.க.இ.க.வின் பி.ஆர்.ஓ.வா என்று கேட்கிறார் உ.த. இவரென்ன லீனாவின் பி.ஆர்.ஓ.வா?]]]

போச்சுடா.. நான் எங்கே லீனாவை ஆதரித்து எழுதினேன்? கூட்ட நிகழ்வுகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். லீனாவின் கவிதை பற்றிய எனது கருத்தை முகப்பிலேயே சொல்லிவிட்டனே.. இதன் பின்பும் ஏன் இந்தக் கேள்வி..?

[[[அந்தக் கூட்டத்தை நடத்திய அமா பத்தி உங்களுக்க தெரியாது. எழுதுனா இந்து மக்கள் கட்சியும் ம•க•இ.க.வும் ஒன்னுன்னு கூட்டம் போடுற•.. ஏம்பா ன்னு கேக்க வந்தா பேச விடமாட்ட•.. எங்க அம்மாவ தேவடியான்னு சொல்லுவ கேக்க வந்த உனக்கு ஜனநாயகம் இருக்கும்ப•.. என்னப்பா நியாயம்..?

உ.த.அண்ணாச்சி : அ.மார்க்ஸ் பற்றி வெளியுலகில் எந்த அளவுக்குத் தெரியுமோ அது அளவுக்குத்தான் எனக்கும் தெரியும்.. இந்த இடத்தில் அவரது முந்தைய செயல்பாடுகளை பற்றி நாம் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்..?

அதாவது, ம.க.இ.க.வைப் பற்றி பேசும்போது மட்டும் எல்லா எஸ்டிடியும்(ஹிஸ்டரியும்) பேசுவார் மிஸ்டர் உண்மை. ஆனால், ம.க.இ.க. மட்டும் இளிச்சவாயன் மாதிரி அ.மார்க்ஸ், லீனாவினுடைய முந்தைய நடவடிக்கைகளை சுத்தமாக மறந்துவிட்டு புதிதாக எல்லாம் செய்ய வேண்டும் என்கிறார் இந்த ‘சோ’க்கால்டு உண்மைத்தமிழன்.]]]

அ.மார்க்ஸ் அந்த இடத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தார். அந்த வேலையைச் சரியாகத்தான் செய்தார். அதைப் பற்றி மட்டுமே பேசுங்கள்.. அவருடைய மற்றக் காரணிகளை ஏன் நான் கூட்ட நிகழ்வுகள் பற்றிய விஷயத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றுதான் கேட்கிறேன்..!

ம.க.இ.க. பற்றி நல்லவிதமாகவும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கிறனே.. சிதம்பரம் தீட்சிதர் விவகாரம், முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நான் பார்த்தது.. இதையெல்லாம் நீங்க படிக்கலையாண்ணே..!

சங்கர்ராமசுப்பிரமணியன் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி இப்போதுதான் எழுதியிருப்பதால் அதனைக் குறிப்பிட்டேன். இதில் ஒன்றும் தவறில்லையே..?

[[[உ.த.வின் மழுப்பல்ஸ்,
@@ஏழர said...

''கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவுபடுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம்.முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது”

இதுதான் அதியமான் அந்த கேள்வி. இது தொடர்பான வினவின் பதிவு
http://www.vinavu.com/2010/04/17/pala-rising/

உ.த.அண்ணாச்சி : கோபம் வராம என்ன செய்யும்..? நீங்கள் நேரில் கேட்டதால் அவரும் நேரிலேயே தனது கோபத்தை வெளிக்காட்டிவிட்டார்.. எழுத்தில் செய்திருந்தால் அவரும் எழுத்தில் தனது ஆவேசத்தைக் காட்டியிருப்பார்..! இதிலென்ன தவறு..?

லீனாவுக்கு நேரில் கேட்டால் கோபம் வரும். எங்களுக்கு எழுத்தில் படித்தால் கோபம் வரும். கோபம் வருவதில்கூட சீமாட்டிக்குத்தான் உரிமை உண்டு என ஜொள்ளுகிறார் உ.த.]]]

கோபத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். மீறி வெடித்தால் பிரச்சினைகளுக்கும் நீங்களே காரணமாவீர்கள். இது உங்களுக்கும் பொருந்தும், லீனா என்கிற அந்த சீமாட்டிக்கும் பொருந்தும்..!

[[[ஏழர said...
ம்கஇக செய்த 1000 விசயங்களை விடுத்து, லீனா மேட்டர் கிடைத்தவுடன் அராஜக கம்யூனிசம் என்று முடிவுக்கு வந்து எழுத முடிந்த உங்களால் தீபக்கை லீனாவும் சோபாவும் அடித்ததை வைத்து அவர்கள் மேல் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறீங்க பாருங்க. அடடா. அதுதான் சார் உண்மைத் தவிப்பு!!!]]]

ஏழர அண்ணே..! இதுக்கு மேல அந்த விஷயத்துல என்ன எழுதுறது..? நீங்களே சொல்லுங்க.. தெரிஞ்சுக்குறேன்..!]]]

இப்போதும் இதைத்தான் சொல்கிறேன்.. இந்த விஷயத்தில் இப்போது நான் என்ன எழுதுவது..? அடித்தவரே உண்மை என்று சொல்லி அபராதத்தைக் கட்டிவிட்டுப் போய்விட்டார். அடி வாங்கிய நண்பரும் நடந்ததைச் சொல்லிவிட்டார். வேறென்ன..? இனி இது போல் நடக்காமல் இருக்க இரண்டு தரப்பாருமே தயாராகவே இருப்பார்கள்..!

[[[ஏன், அழையா விருந்தாளியாக கூட்டத்துக்குப் போகிறாய்? என்பது இன்னொரு வாதம். லீனா ஆதரவு அராஜகவாதிகளின் இந்தக் கூட்டம் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாக வினவை குறி வைத்தே தயாரிக்கப்பட்டது. மேலும், இதில் குறிப்பிட்டது போல “இ.ம.கட்சி, ம.க.இ.க, வினவு தளம் ஆகியோரை இணைத்து லீனா ஏற்கெனவே எழுதியிருந்ததார். இதையே குமுதம் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார்”.

‘இணையத்தள அராஜகம்’, ‘இடது தீவிரவாதம் பேச மட்டும் செய்யும் சிறு கும்பல்’ போன்ற சொற்றொடர்கள் வினவை நேரடியாகக் குறிப்பிட்டு வம்பை விலைக்கு வாங்கப் பயப்படும் வகையில் பூடகமான, அயோக்கியத்தனமான சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டன. சரியாகச் சொன்னால் உண்மைத்தமிழன் பாணி சொல்லாடல்கள் அவை. அ.மார்க்ஸும் பலரை வினவைக் குறிப்பிட்டே கூட்டத்திற்கு அழைத்துள்ளார். மேலும், கூட்டம் குறித்த வெளிவந்த அழைப்பிதழில் முதல் பேராவிலேயே ‘இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது’ என்று வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. ]]]

யார் இல்லை என்று மறுத்தது..? நீங்களும் இதே போல் மறுநாள் அதே இடத்தில் கூட்டம் நடத்தி உங்களது எதிர்ப்பைக் காட்டியிருக்கலாமே என்றுதான் மீண்டும், மீண்டும் கேட்கிறேன்..!

[[[உண்மைத்தமிழன், அய்யனார் ஆகியோர் வீட்டார் விபச்சாரம் செய்வதாக ஒரு கவிதை. அதை எதிர்த்து அதே மொழியில் அவர்கள் பேசினால் அவர்களை அராஜகவாதிகள் என்று கண்டித்து ஊர் பெரிய மனுசங்க எல்லாம் கூட்டம் போடுவானுங்க. அதைக் கண்டிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும், விளக்கம் கேட்க வேண்டும், மறுநாள் அங்கு அதே போல கூட்டம் போட வேண்டும் என்று உண்மைத்தமிழனும், அய்யனாரும் நியாயம் பேசுவார்கள். அவர்களது வீட்டில் இதே போலச் சொல்லிப் பார்க்கட்டும், அதற்குப் பிறகு அங்கு நிகழும் குடும்ப அராஜகமே அவர்களுக்குச் சரியானதைத் தேர்ந்தெடுக்கக் கற்றுக் கொடுக்கும்.

என்ன செய்ய புரட்சியாளர்கள் மானங்கெட்டவர்கள் அல்லவே? ஒரு வேளை உ.த.வின் குடும்பத்தாருக்கு அவ்வாறு நிகழ்ந்தால் உண்மைத்தமிழன் அண்ணாச்சி வழக்கமாக தான் விண்ணப்பிக்கும் முருகனுக்குப் பதிலாக போலீசைக் கூப்பிடவும் வாய்ப்புள்ளது.]]]

முதலில் எனது வீட்டார் விபச்சாரம் செய்யட்டும். பின்பு அது பற்றிய கவிதை ஏதேனும் வெளி வந்து அது என்னைக் கோபமாக்கி என்ன செய்வது என்று நான் பல்லைக் கடித்துக் கொண்டிருக்கும்போது, உங்களை அழைத்து ஆலோசனை கேட்டு அதன்படி நடக்கிறேன்..! அல்லது நடக்க முயல்கிறேன்..!

அப்போதும் நான் சட்டத்தின் துணையைத்தான் நாடுவேனே தவிர.. நானே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ரவுடித்தனம் செய்ய மாட்டேன்..!

[[[தமிழச்சியை மிரட்ட தமிழ்மணத்திற்கு விண்ணப்பித்த கருத்துரிமைக் காவலர்தானே இவர்]]]

இதை மட்டும் தோழர் தமிழச்சி படித்தால் உங்கள் நிலைமை என்னாகுமோ தெரியவில்லை அசுரண்ணே..!

“என்னை எவண்டா.. எந்தக் கபோதிடா.. மிரட்டுறது..?” அப்படீன்னு வரிஞ்சு கட்டிட்டு உங்ககூடத்தான் சண்டைக்கு வருவாங்க..! எங்க அனுபவம் அப்படீண்ணே..!

[[[ஏனென்றால் போலீசுக்கு அராஜகம் செய்யும் உரிமை உண்டு என்று நம்பும் சோவின் சீடர்தானே அவர்.]]]

ஏண்ணே.. தேவையில்லாம சோ ஸாரை இதுல இழுக்குறீங்க..? நான் சோ ஸாரின் சீடன்ன்னு உங்களை மாதிரி நிறைய பேர்தான் வேலை வெட்டியில்லாம சொல்லிக்கிட்டிருக்கீங்க..!

துக்ளக்கில் வந்த சில அட்டைப் படங்கள், கருத்துப் படங்கள் எனது அரசியல் கருத்துக்களோடு ஒத்துப் போயிருந்ததால், அவற்றை ஸ்கேன் செய்து எனது தளத்தில் வெளியிட்டு வந்தேன். எனக்கு ஒத்துப் போயிருந்தால் மட்டுமே..! பல விஷயங்களில் அவருடைய கருத்துக்கும் எனக்கும் மலையளவு வித்தியாசங்கள் உண்டு..!

உதாரணங்களாக.. மகளிர் மசோதா, மனித உரிமை மீறல், காவல்துறையின் அத்துமீறல், வீரப்பன் வேட்டை, இந்த வேட்டையில் பலிகடாக்களாக ஆக்கப்பட்ட அப்பாவி மலைவாழ் மக்களின் கதி, ஈழப் பிரச்சினை.. இப்போது பார்வதியம்மாளைத் திருப்பியனுப்பிய விவகாரம்.. இப்படி நிறைய இருக்குண்ணே..!

நமக்குத் 'துக்ளக்'குல பிடிச்சது கட்சிகளின் நடவடிக்கைகளைப் பற்றி புட்டு புட்டு வைப்பார் பாருங்க.. அது ஒண்ணுதான்..!

'துக்ளக்'ன்னாலே வயித்து வலி வந்த மாதிரியும், வாந்தி பேதி ஆகுற மாதிரியும் பயப்படுறவங்களுக்கு இதெல்லாம் தெரியாது.. புரியாது..!

சொல்றவங்க.. சொல்லிக்குங்க..!

[[[லீனாவுக்கு மட்டுமே பம்மி பதுங்கும் இந்தக் கருத்துரிமை காவலர் சதாரண மக்களின் சில்லரைத் தவறுகளுக்கு எதிராக பிரயோகித்துள்ள அராஜகங்களில் ஒன்றை பார்ப்போமா? சினிமாத் தியேட்டரில் கள்ள டிக்கெட் விற்பவர்களுக்கு எதிராக அண்ணன் உ.த.வின்  .

@@@நான் அவருடன் வாக்குவாதம் செய்வதைப் பார்த்தபடியே இருந்த ரவுடிகள் கூட்டம் தூரத்தில் இருந்தே என்னை கவனித்தபடியே இருந்தார்கள். எனக்கு என்ன வேகம் வந்ததோ தெரியவில்லை. சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்து கத்திக் குவித்துவிட்டேன். "எல்லாம் உங்களாலதாண்டா.. ஒருத்தனாவது உதவிக்கு வர்றீங்களாடா..? காசு இருக்குதுன்னு நிறைய பேரு அள்ளி வீசுறதாலதான் அவன் கொள்ளையடிக்கிறான். ஏண்டா நாய்களா கொடுக்குறீங்க?" என்று கத்தினேன்.(இந்த வாரம் முழுக்கவே ரொம்ப டென்ஷனா இருக்கு) கூட்டம் வேடிக்கைதான் பார்த்ததே ஒழிய.. உதவிக்கு வரவில்லை..@@@

@@@அண்ணன் கமல் வெடிகுண்டுகளை ஒவ்வொரு இடத்திலும் வைக்கும்போது இந்தத் தியேட்டரிலும் அப்படியொரு குண்டை வைக்கக் கூடாதா என்றுதான் எனக்குத் தோன்றியது.@@@

தியேட்டரில் டிக்கெட் பிளாக்கில் விற்கும் அநியாயத்துக்கே உ.த. அண்ணாச்சிக்கு இவ்வளவு கோபம் வருகிறது. அவரை யாராவது சினிமாவுக்கு வா என்று கூப்பிட்டார்களா? அல்லது கள்ள டிக்கெட்டில் பார் என்று கூவி அழைத்தார்களா? கவுண்டரில் டிக்கெட் இருந்தால் பார், இல்லையெனில் என்னைக்கு கிடைக்கிறதோ அன்று வந்து பார். இதுவே அவரது கருத்துரிமை கோட்பாட்டின்படி சரியான நடைமுறையாக இருக்க முடியும். ஆயினும், நம்ம அண்ணாச்சி, அங்கு சென்று போலீசுக்காரரையும், டிக்கெட் விற்றவர்களையும் திரும்பத் திரும்ப தொந்தரவு செய்துள்ளார், பிறகு யாரும் எதுவும் செய்யாமலேயே (ஒருத்தனும் அவரை கண்டுகொள்ளவில்லயென்றவுடன்) அவரது கோபம் உச்சத்துக்குச் சென்று 'டேய்' 'போய்' என்று சுற்றியிருந்தவர்களை கத்தி அவதூறு செய்து ரவுடியிசம் செய்துள்ளார். குண்டு வைத்து அவர்களைக் கொல்ல வேண்டும் என்றும் விருப்பபட்டு பயங்கரவாதியாக மாறியுள்ளார்.]]]

அண்ணே.. அது சினிமா ரசிகர்களுக்கான இடம். அந்தச் சினிமா அரசால் அங்கீகரிக்கப்பட்டு வெளி வந்திருக்கிறது. படம் பார்க்கச் செல்வது எனது உரிமை.. அதனால் சென்றேன்.. தியேட்டருக்கு வந்து படம் பார் என்று சொல்லியிருப்பது அரசு. அங்கே எனக்காக சில வசதிகளை செய்து வைத்திருப்பதாக உறுதியளித்திருப்பது அரசு. டிக்கெட் விலையை நிர்ணயம் செய்திருப்பது அரசு.. அதனை சரியான முறையில் கவனிக்க வேண்டியது அரசு. எனது அரசு  அதனைச் செய்யவில்லை என்னும்போது சாதாரண பாமரனுக்கு என்ன தோணுமோ அதுதான் எனக்கும் அன்றைக்குத் தோன்றியது..! அந்த நிமிடத்தில் என் மனதில் தோன்றிய எண்ணத்தைத்தான் நான் பதிவு செய்திருக்கிறேன். போலியாக இல்லையே..!

[[[ஆனால், ம.க.இ.க.வினரோ லீனா கூட்டத்தில் அமைதியாகவே கேள்வி கேட்டுள்ளனர், லீனா கும்பல் திட்டத் தொடங்கிய பிற்பாடே ஆக்ரோசம் அடைந்து பதிலுக்குத் திட்டியுள்ளனர். இத்தனைக்கும் ம.க.இ.க. கோபம் கொண்டதோ சமூகப் பிரச்சினைக்கு.. ஆயினும் இவர்கள் கருத்தில் அது அராஜகவாதம். உண்மைத்தமிழன் போன்றோரின் சினிமா டிக்கெட் பிரச்சினையோ ஜனநாயகவாதம்.]]]

அரசு முறைப்படி நிர்ணயித்திருக்கும் சினிமா டிக்கெட்டின் விலையை உயர்த்தி பிளாக்கில் விற்காதீர்கள் என்று சொன்னதென்ன எனது தனிப்பட்ட பிரச்சினையா..? அதுவும் சமூகப் பிரச்சினைதான் அண்ணாச்சி..!

[[[அடப் போங்கப்பா.. முருகன் ஏன் கோவனத்தோடு பழனியில் குந்தியிருக்கான் என்று இப்போதான் தெரியுது. உ.த. மாதிரி பக்தர்களின் சல்லை தாங்கமால்தான் கோவணமாவது மிஞ்சட்டும் என்று அங்கு போய்விட்டான்.]]]

சத்தியமான உண்மைதாண்ணே.. "நம்ம பசங்க தொல்லை தாங்க முடியலை.. வர்றவனெல்லாம் எனக்கு அதைக் கொடு.. இதைக் கொடு.. இம்புட்டு கொடு.. அள்ளிக் கொடு.. கிள்ளிக் கொடுன்னு கேக்குறாங்க.. அல்லாருக்கும் தூக்கிக் கொடுக்க என் மாமன் திருமலையான் மாதிரி நானென்ன கோடீஸ்வரனா..?" அப்படீன்னு நினைச்சுத்தான் என் அப்பன் முருகன் கோவணத்தோட நிக்குறான்.. இப்ப வர்றவனுங்க என்ன கேப்பானுங்க..? இருக்கிறதே கோவணந்தான..?

[[[ஆனாலும் நமது தோழர்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தொண்டை கிழிய கத்திக் குவித்துவிட்டு, தயார் செய்து கொண்டு வந்திருந்த கோஷங்களையும் எழுப்பிவிட்டுத்தான் வெளியேறினார்கள். அவர்களுடன் வந்திருந்த பெண் தோழியர்கள் லீனாவையும், அவரது ஆதரவாளர்களையும் திட்டியதை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அதேபோலத்தான் தோழர்களும்@@

மொத்தத்தில் அங்கு கெட்டவார்த்தை பேசியது கத்தியது எல்லாம் ம.க.இ.க.வினர் மட்டுமே, லீனா தரப்பினர் அமைதியாகவே (சிலர் உணர்ச்சிவசப்பட்டு 'டா' என்று சொன்னது தவிர்த்து) இருந்தனர், லீனா சும்மா ஓடிப் பார்த்தார், தோழர்களோ கொலை வெறியோடு பாய்ந்தனர், என்று உண்மையை உள்ளபடியே பதிவு செய்துள்ளார் உண்மைத்தமிழன்.]]]

இல்லை.. அவர்களும் கோபத்தில் கத்தினார்கள். பேசினார்கள். ஆனால் உங்கள் அளவுக்கு தரம் தாழவில்லை..! பெண்கள் தரப்பில் மதுரையில் இருந்து வந்திருந்த ரஜினி என்கிறவரும், கவின்மலரும்தான் மரியாதையாக மன்றாடிக் கேட்டுப் பார்த்தார்கள்.

ரஜினி சிறிது நேரம் கழித்து கோபத்தில் “எல்லாம் எங்களுக்குத் தெரியும்.. போங்க.. நீங்க போங்க.. வெளில போங்க.” என்று கோபத்தில் பொங்கினார். கவின்மலரோ அவ்வப்போது மைக்கில் நாகரிகமாக அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். நீங்கள் யாரும் கேட்கவில்லை. கடைசியில், "தோழர்களே தயவு செய்து வெளியேறுங்கள். நாங்கள் உங்களை இங்கே அழைக்கவில்லை. நீங்கள் வெளியேறலாம்.." என்று மரியாதையுடன் கேட்டுக் கொண்டார்..!

[[[இன்னொன்றையும் அவர் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். லீனா தரப்பினரை அடித்து, துவைத்து காயப்போட்டு, வெளியே அனுப்பிவிட்டு கூட்டத்தை ம.க.இ.க. மொத்தமாகக் கைப்பற்றிக் கொண்டது என்று.]]]

இவ்ளோ பெரிய பொய்யை நான் எப்படிங்கண்ணே உண்மைன்னு  சொல்ல முடியும்..?

[[[எதுக்கு சார் பெயரில் தேவையில்லாமல் 'உண்மை'யை வைச்சிருக்கீங்க? பெசாம எடுத்துடுங்க எல்லாம் வல்ல முருகப் பெருமானாவது பிழைத்துப் போகட்டும்.]]]

வைக்கச் சொன்னவனே அவன்தானே..!!!

[[[வினவு மீதான உண்மைத்தமிழனின் ஆத்திரத்திற்கு காரணங்களில் ஒன்று புளுபிலிம் தியேட்டரை உடைத்து அவரது எண்டெர்டெயின்மெண்டுக்கு ஆப்பு வைத்தது என்பதாகக் கருதலாம்(எனது கருத்துச் சுதந்திரம்)]]]

இதற்கான பதிலை நான் மேலே சொல்லியிருக்கிறேன். உங்களது கருத்துச் சுதந்திரத்திற்கு எனது சல்யூட்..!

[[[ஈராக், ஆப்கானில் போராடும் மக்களை படு மோசமாக இழிவுபடுத்தி கவிதை என்ற பெயரில் குடித்துவிட்டு எழுதினார்கள் அவரது ‘இனிய நண்பர்’கள். அவர்கள் உண்மைத்தமிழனின் ‘இனிய நண்பர்’கள் என்பதால் ம.க.இ.க.வினர் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதும், அதுவே ஜனநாயகம் என்பதும் அவரது எதிர்பார்ப்பாக இருக்கலாம்.]]]

நான் எங்கண்ணே அப்படிச் சொன்னேன்..!?

[[[அவ்வாறு இருக்க முடியாது. சரி இவராவது இவரது ‘ஜனநாயக முறை’ப்படி ‘இனிய நண்பர்’களிடம் ஐயன்மீர் ஏன் இவ்வாறு கவிதை எழுதினீர்கள் என்று கேட்டாரா (இப்போது லீனாவின் கருத்துரிமைக்காக பக்கம் பக்கமாக எழுதி சோடா குடிக்கிறார் இல்லையா..! அது போன்றதொரு உன்னதமான அக்கறையின் வெளிப்பாடாக ஈராக் மக்களின் கருத்துரிமைக்காக அவர்களிடம் பேசினாரா?)  என்றால் அதுவும் இல்லை.]]]

அதெல்லாம் அப்பவே பேசி முடிச்சாச்சுண்ணே.. பதிவுலகம்னா என்னன்னு தெரியாத காலம் அது.. கவிதை எழுதவது அவரவர் உரிமை.. பிடித்திருந்தால் பாராட்டலாம். பிடிக்காவிட்டால் விமர்சிக்கலாம். இல்லாவிட்டால் நாமும் எதிர் கவிதை எழுதலாம்..! ஆனால் கை கலப்பும், நேரடித் தாக்குதலும் மட்டும் கூடவே கூடாது..!

[[[மொத்தத்தில் இவருக்கு இவரது நட்பு முக்கியம், எங்களுக்கு எமது கற்பு (அவருக்கு கற்பு தேவையில்லாமல் இருக்கலாம்)]]]

கற்பா..? அப்படீன்னா..?

[[[முக்கியம் என்ற சின்ன லாஜிக்கை அராஜகவாதம் என்ற பெரிய பிரேமில் போட்டு அடைக்க முயன்று சோடா குடித்துள்ளார் உண்மைத்தமிழன்.]]]

அச்சச்சோ.. நட்புதான் கடைசியா சுடுகாடுவரைக்கும் வரும்னு தெரியாதாண்ணே உங்களுக்கு..!

[[[அத்தனைக்கும் அவரது ‘இனிய நண்பரி’ன் வீட்டுக்குச் சென்று அவரது சுற்றத்தாரிடம் இந்தக் கவிதையை எழுதியவர் இவர்தான், இதில் உங்களுக்கு ஒப்புதலா என்றுதான் தோழர்கள் கேட்டுள்ளார்கள்.]]]

இதைத்தான் தப்பு என்கிறோம். இதைச் செய்ய நீங்கள் யார்? யார் உங்களுக்கு இந்த அனுமதியைக் கொடுத்தது...? இந்திய அரசா..? தமிழக அரசா..? இந்திய அரசியலமைப்புச் சட்டமா..? மொதல்ல அதைச் சொல்லுங்க..! அரசுகளையும், சட்டத்தையும் நம்பித்தான் இங்கே மக்கள் வாழ்கிறார்களே தவிர.. உங்களை நம்பி அல்ல.. உங்களுக்காகவும் அல்ல.! உங்களிடம் இது பற்றி விளக்க வேண்டிய அவசியமும் மக்களுக்கில்லை..!

[[[இத்தனை கூறிய பிறகு ஒரு கேள்வி எழலாம் கருத்துச் சுதந்திர புனிதக் கூட்டணியாளர்கள், எப்போதுமே அராஜகவாதம் தவறுதான் என்று சொல்லும் உத்தமர்கள், ஆனால் ம.க.இ.க.வினரோ அயோக்கியத்தனத்திற்கு அராஜகமே பதில் என்று சொல்லும் வன்முறையாளர்கள் என்ற கருத்து சரிதானே?]]]

எது அயோக்கியத்தனம் என்பதே இன்னும் முடிவாகலை.. அதையும் நீங்களே முடிவு பண்ணிக்கி்டடீங்கன்னா எப்படிங்கண்ணா..?

[[[நிற்க, மேற்படி உண்மைத்தமிழன் - அய்யனார் அண்டு கோவின் கருத்துரிமை கபர்தஸ்து சுத்த சுயம்புவான அராஜகவாதமாக பல்லிளிக்கும் இடமே ‘இனிய நண்பர்’ விவகாரத்திலும் லீனா விவகாரத்திலும்தான் உள்ளது. அதாவது, எந்தவொரு விசயத்தையும் மக்களிடம் முன் வைத்து பிரச்சாரம் செய்யும் நடைமுறையைக் கொண்ட ம.க.இ.க. நான் மக்களிடம் சென்று இவற்றை பேசிக் கொள்கிறேன் என்று சொன்னால் அது கருத்துரிமைக்கு எதிரான பாசிசம் என்கிறார்கள் இந்த அராஜகவாதிகள். அதாவது, மக்களுக்கான கருத்துரிமையை எதிர்க்கிறார்கள். அதாவது, மக்கள் முட்டாள், அவர்களுக்கு இவற்றை புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது என்ற மேட்டுக்குடித் திமிரிலிருந்து வரும் அராஜகவாதமே இவர்களின் கூற்று.]]]

உங்களது பிரச்சாரத்தை நாங்கள் தடை செய்யவில்லையே.. ஆனால் அது யாருடைய தனி மனித உரிமையையும் பாதிக்கக் கூடாது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொடுத்திருக்கும் ஒரு உரிமை..!

[[[இன்னும் சொன்னால் எதையும் சொல்லும், தெரிந்து கொள்ளும் ‘கருத்து’ உரிமை எங்களை மாதிரி இண்டலெக்சுவலுக்கு மட்டுமே உண்டு, மக்கள் எல்லாம் அந்தளவுக்கு வளரவில்லை, அவர்களுக்கும் சேர்த்து நாங்களே படித்து சிந்திக்கிறோம் எனவே மக்களுக்கு அனைத்தும் அறிந்துகொள்ளும் ‘கருத்து’ உரிமைக்கான வாய்ப்பை வழங்கி விடாதே என்பதே இந்த அராஜகவாதிகளின் கோரிக்கை.]]]

இப்ப அராஜகம் செஞ்சது நீங்களா..? அவங்களா..? இல்ல நாங்களா..? குழப்புறீங்களே..! நாங்க என்னிக்கு இண்டலெக்சுவல் என்று எங்களைச் சொல்லிக் கொண்டு சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தடாலடியில் இறங்கியிருக்கிறோம். செஞ்சதெல்லாம் நீங்க.. பழி எங்க மேலயா..?

[[[மக்களைப் பார்த்துப் பயப்படும் இவர்களின் பிழைப்புவாத அரசியலும், உ.த.வின் எதிர்ப் புரட்சி அரசியலும் புரட்சியாளர்களுக்கு எதிராக இவ்வாறு புனிதக் கூட்டணி சேர்ந்துள்ளது.]]]

அண்ணே.. இதெல்லாம் ரொம்ப ஓவரு.. டூ மச்சு.. ஏதோ நானே ஓசில கிடைச்சிருக்கு.. தமிழ் டைப்பிஸ்ட்டு.. கொளுத்திரலாம்னு நினைச்சு ஏதோ என் மனசுல தோணுறதை டைப் செஞ்சு போட்டுக்கிட்டிருக்கேன்.. என்னைய போயி.. அரசியல் நடத்துறேன்.. எதிர்ப் புரட்சி அரசியல்.. அது.. இதுன்னு எழுதுறீங்களேண்ணே.. இதைப் படிக்கிறவங்க கண்டிப்பா சிரிக்கத்தான் போறாங்க.. பாருங்க..!

[[[அராஜவாதத்தை உள்ளடக்கமாகக் கொண்ட இவர்கள் புரட்சியாளர்களை அராஜகவாதிகள் என்று சொல்வது வேடிக்கையானது. இவர்களின் கருத்துரிமை ஆவேசங்கள் ஆபரேசன் கிரின் ஹண்டு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து என்றுமே வெளிவராது.]]]]

அண்ணே.. எங்களுக்குப் புரியற விஷயம்னா.. தெரிஞ்ச விஷயம்னா.. படிச்ச விஷயம்னா எங்க தளத்துல.. எங்களுக்குப் பிடிச்சமான முறைல எங்களோட மனசாட்சிப்படி நியாயமா நடிக்காம எழுதி வைப்போம்ண்ணே.. இதுக்கு நீங்க என்ன பேர் வேண்ணாலும் வைச்சுக்குங்க..!

[[[உண்மைத்தமிழனோ, அய்யனாரோ இது சார்ந்து பதிவு போட்டதாக தெரியவில்லை. அவர்களது அதிகபட்ச கருத்துரிமை எதிரிகள் கள்ள டிக்கெட் விற்பவன், சூடு வைத்த ஆட்டோ மீட்டர், போன் கனெக்சனுக்கு கமிசன் கேட்பவன், அப்புறம் லீனாவை எதிர்க்கும் வினவு போன்றோர். லீனாவின் யோனிக் கவிதையில்தான் உனது கருத்துரிமை கொப்புளிக்கிறது என்றால், ஆப்புரேசன் கிரின் ஹண்டு போன்றவற்றில் கருத்துரிமை பறி போவது பற்றி நீட்டி முழக்க நீ தயாரில்லை எனில், உன்னுடைய கருத்துரிமை என்ற பெயரிலான அராஜகவாத பிதற்றலை யோனி மசிராகக்கூட நான் மதிக்க வேண்டிய அவசியமில்லை.]]]

வேண்டாம்ண்ணே.. மயிராப் போச்சு.. விட்ருண்ணே..! நீங்க உங்க லெவலுக்கு எதிராளியைப் பாருங்கண்ணே.. நான் என் லெவலுக்கு பார்க்குறேண்ணே.. அத்தோட நிறுத்திக்குவோம்ண்ணே..!

[[[புரட்சிக்காரன் சமூக விரோத சக்திகளிடமிருந்து தன்னைக் காக்க தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான், அயோக்கியன் மக்களிடமிருந்து தன்னைக் காக்க தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான். இரண்டும் ஒன்று என்பது அயோக்கியர்களின் கருத்தாகத்தான் இருக்கும். இப்படியாக அனைவருக்குமான இவர்களின் கருத்துரிமை, அராஜகவாதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு அற்பமானதுதான் இவர்களது கருத்துரிமை அராஜகவாதம். அதாவது லீனாவின் யோனிக்கு மட்டுமே இவர்களது கருத்துரிமை செல்லுபடியாகும்.]]]

இந்தப் பத்திக்கு யாராவது விளக்கம் சொல்லிட்டா இதே மாதிரி இருபது பக்க மேட்டரை நான் இலவசமா தட்டச்சு செஞ்சு தர்றேன்..!

அப்பாடா.. இப்ப நாலு சோடாவை ஒரே நேரத்துல குடிக்கணும் போலிருக்கு..!

அசுரன் அண்ணே.. மூணு வருஷமா இருந்த புகையை, பகையா மாத்தி ஒரே பதிவுல தீர்த்துக்கிட்டாருன்னு நினைக்கிறேன்..! ரொம்பக் கொடுமைடா முருகா..!

நான் அப்படியென்ன எழுதிட்டேன்..!

"லீனாவின் கவிதைக்கு விளக்கம் கேட்க நினைத்த வினவு அண்ட் கோவின் முயற்சி தவறில்லை. ஆனால் கேட்டவிதம்தான் தவறு" என்கிறேன்.. இது தப்பா..?

"அவர்களுக்கு எதிரான கூட்டம் என்று தெரிந்தும், வந்திருந்து கூட்டம் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தது தப்பு"ண்ணேன்.. இது தப்பா..?

"லீனாவின் கவிதையே ஆபாசம் என்றால் அதற்கு வினவு எழுதிய மறுப்பு கவிதை அதைவிட ஆபாசம்.. இருவருமே ஒருவராக மாறிவிட்டார்கள். பின்பு வினவுக்கு லீனாவைக் குற்றம் சொல்ல என்ன உரிமை இருக்கிறது?" அப்படீன்னு கேட்டேன்.. இது தப்பா..?

"ஒரு ஆள் என்ன வேண்ணாலும் எழுதட்டும்.. பிடிக்கலைன்னா நீங்களும் எதிர்க் கருத்தை எழுதுங்க.. பேசுங்க.. கூட்டம் போடுங்க.. நடத்துங்க.. இல்லைன்னா கோர்ட்ல கேஸ் போடுங்க.. போலீஸ்ல புகார் கொடுங்க.. " அப்படீன்னு சொன்னேன்.. இது தப்பா..?

"இதையெல்லாம் விட்டுப்போட்டு வீட்டுக்குப் போய் விளக்கம் கேட்பேன். அக்கம்பக்கத்துல அவரைப் பத்திச் சொல்லி விளக்கம் கேட்பேன்.. இழுத்துட்டுப் போயி ஆபீஸ்ல கட்டப் பஞ்சாயத்து செய்வேன்.. இப்படியெல்லாம் செய்றது நியாயமா..?" அப்படீன்னு கேட்டேன்.. இது தப்பா..?

என்னங்கய்யா இது..? இது என்ன சுதந்திர நாடா.. இல்லை அடிமைகள் நாடா..?

டிராபிக் போலீஸை பார்த்தா பயப்படணும்..! ரேஷன் கடைக்காரனைப் பார்த்தா பயப்படணும்..! தாசில்தார் ஆபீஸ்ல பியூனை பார்த்தா பயப்படணும்..! வி.ஏ.ஓ.வை பார்த்தா பயப்படணும்..! ரெவின்யூ இன்ஸ்பெக்டரை பார்த்தா பயப்படணும்..! செத்ததுக்கு சர்டிபிகேட் வாங்க டாக்டரை பார்க்கப் போனா அவருக்கும் பயப்படணும்..! ஆளும் கட்சி தொண்டனை பார்த்தாலும் பயப்படணும்..! எதிர்க்கட்சி வட்டச் செயலாளரைப் பார்த்தாலும் பயப்படணும்..! எல்லாக் கட்சித் தொண்டர்களை பார்த்தாலும் பயப்படணும்..! பதிப்பாளரை பார்த்தாலும் பயப்படணும்.. பத்திரிகை ஆசிரியரைப் பார்த்தாலும் பயப்படணும்..! கார்ப்பரேஷன் கிளார்க்கை பார்த்தாலும் பயப்படணும்..! கவுன்சிலரை பார்த்தாலும் பயப்படணும்..! கார்ப்பரேஷன் கக்கூஸ் வாசல்ல உக்காந்திருக்கிறவனைப் பார்த்தாலும்கூட பயப்படணும்..!  கடைசியா சுயமா கருத்தை எழுதினால்கூட எதிர்ப்பாளருக்குப் பயப்படணும்..! உஷ் முருகா..

நாட்டுல யார், யாருக்குத்தான் பயப்படறது..? இன்னும் எத்தனை பேருக்குத்தான்யா பயப்படுறது..? ஆள் மாத்தி ஆள் சட்டம் என் கைலதான் இருக்குன்னு கூட்டத்தைக் கூட்டி மிரட்டினா.. தனி ஆளு.. காமன்மேன்.. பொது ஜனம்.. என்னை மாதிரியான மிடில் கிளாஸ் மாதவன்கள் என்னதான் செய்யறது..?

அடப் போங்கண்ணே.. நீங்களும் உங்களோட புண்ணாக்குப் புரட்சியும்..!


இமயமும், சிகரமும் ரெட்டச்சுழியும்.. - திரைப்பட விமர்சனம்

25-04-2010


 ஒரு சாதாரணத் தமிழ்த் திரைப்படம் என்பதற்கான அடையாள ஒழுங்குமுறையையும், இலக்கணங்களையும் இந்தப் படம் சுமக்கவில்லை.  ஆனால் இரண்டரை மணி நேர பொழுதுபோக்கிற்கு முழு உத்தரவாதம் அளிக்கிறது.

இமயமும், சிகரமும் இணைகிறார்கள் என்பதால் ஆர்வத்துடன் காத்திருக்க வைத்திருந்த திரைப்படம். ஆனால் அந்த ஆர்வத்திற்கு பாதி அளவே பூஸ்ட் கொடுத்திருக்கிறது.

சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள கிராமம். கிராமத்தில் இரண்டு பெரிசுகள். ஒருவர் லெனினைத் தோளில் துண்டாகவும், காரல்மார்க்ஸை நடத்தையிலுமாகக் காட்டிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் முதல் கம்யூனிஸ்ட்டான சிங்காரவேலரின் பெயரைக் கொண்டிருக்கும் இயக்குநர் இமயம்.

மற்றொருவர் எதற்கெடுத்தாலும் நடுங்குகின்ற கைகளில் குண்டே இல்லாத துப்பாக்கியை வைத்துக் கொண்டு பிலிம் காட்டும் ராமசாமி என்னும் வறட்டுப் பிடிவாதக்காரரான இயக்குநர் சிகரம்.

ரொம்ப வருடப் பகை. ராமசாமியின் தங்கையை சிங்காரம் லவ்விக் கொண்டிருக்கும் சூழலில் நடைபெறும் பஞ்சாயத்துத் தேர்தலில் சிங்காரம் மச்சான் ராமசாமியைத் தோற்கடிக்க அன்றைக்கு மோதல் ஏற்படுகிறதாம். தங்கையைக் கட்டித் தர மாட்டேன் என்று ராமசாமி சொல்லிவிட.. சிங்காரத்தின் காதலியும், ராமசாமியின் தங்கையுமான பெண் தூக்கலிட்டுத் தற்கொலை செய்து கொள்ள.. சிங்காரவேலர் அன்றிலிருந்து திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

ஆனாலும் அவரது வீட்டில் வளர்ப்புப் பிள்ளைகள் நிறைய.. அந்தப் பிள்ளைகள் பெற்றெடுத்த பிள்ளைகளும் நிறைய.. இங்கே ராமசாமியின் வீட்டிலும் மகன்களும், மகள்களும் பெற்றெடுத்த பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைத் தோழர்களுமாக.. ஆளுக்கொரு பக்கம் கொடி பிடிக்கும் அளவுக்கு கூட்டம் சேர்த்திருக்கிறார்கள்.

சிங்காரவேலர் வளர்த்த ஹீரோ, சமய சந்தர்ப்பத்தில் வீட்டைவிட்டு வெளியே ஓடி வர.. அவனை ராமசாமி தனது வீட்டில் வைத்து வளர்த்து ஆளாக்குகிறார். அந்த ஹீரோ மிலிட்டரிக்காரனாக திரும்பி வந்து தான் சின்ன வயதில் லவ்விய சிங்காரவேலரின் வளர்ப்பு பேத்தியான அஞ்சலியை விட்ட இடத்தில் இருந்து காதலிக்கத் துவங்க..

இந்தக் காதல் ஜெயித்ததா.. இல்லையா.. என்பதுதான் படத்தின் கதை..

இயக்குநர் சிகரத்தைவிட இயக்குநர் இமயமே நன்கு ஸ்கோர் செய்திருக்கிறார். பால்காரனிடம் லெனில், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் என்று பாடம் எடுப்பதிலேயே கை தேர்ந்த நடிகராக வெளிப்பட்டுவிட்டார்.

ஒரு காட்சியில் மனதைத் தொட்டுவிட்டாலே போதும்.. கேரக்டர் ஜெயித்த மாதிரிதான் என்பதைப் போல அந்தச் சிறுவன் “வணக்கம் தோழரே” என்றழைத்தவுடன் காட்டுகின்ற முறைப்பும், பின்பு பேத்திக்காக அதே சிறுவனை விரட்டிப் பிடித்து குனிந்து கும்பிடு போடும் காட்சியிலும் அவரது நடிப்பு நேர்த்தியானது.


கே.பி.க்கு இதில் பெரிதாக ஒன்றுமில்லை. நடித்திருக்கிறார் அவ்வளவுதான். “செத்துப் போ தாத்தா. நீ செத்துப் போ தாத்தா..” என்கின்றபோதுதான் கொஞ்சம் அவரையும் ஒரு நடிகராகப் பார்க்க முடிந்தது. பொய்யில் நாம் பார்த்திருந்த சதுரங்க நடிகர் இதற்கும் மேல். ஆனாலும் இவருக்கும் நமீதாவை பார்த்து ஜொள்ளுவிடும் கேரக்டர் சூட்டாகியிருக்கிறது என்பதை நினைத்தால்தான் கொஞ்சம் சிரிப்பாக இருக்கிறது. எவ்வளவுதான் நடித்திருந்தாலும் அந்த மீசைவேறு அநியாயத்துக்கு தடைக்கல்லாக இருக்கிறது.. வேறு மேக்கப் போட்டிருக்கலாம்..


திருஷ்டி சுத்திப் போட வேண்டியது வாண்டுகள் படையினரைத்தான்.. அவர்களை வைத்தே கதையைத் துவக்கி.. அவர்களுடனேயே கதையை நகர்த்தியிருக்கும் பாங்கு பாராட்டக்கூடியதுதான்.. சிங்காரவேலருடன் மல்லுக் கட்டும் அந்தச் சிறுவனின் “வணக்கம் தோழர்” என்கிற நடிப்பும், குஷ்பூ கேரக்டரை கச்சிதமாக இடையில் புகுத்தியிருந்து பயன்படுத்தியிருப்பதும் நகைச்சுவையானது.

அங்காடித் தெருவுக்கு முன்பு இந்தப் படம் வந்திருந்தால் அஞ்சலி அவ்ளோதான் என்று சொல்லியிருப்பார்கள். பின்பு  வந்திருப்பதால் அதிகம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டாரே என்று இயக்குநர் மீது வருத்தம்தான் வருகிறது.. ஆனாலும் பொண்ணிடம் ஏதோ ஒன்று இருக்கிறது.. நடிப்பில் குற்றம், குறை சொல்ல முடியவில்லைதான்.


ஹீரோ புதுமுகம். பெரிதாக ஸ்கோப் இல்லை.. வசனங்கள் பேச வேண்டிய வேலையே நிறைய இருப்பதால் நடிப்புதான் தொலைந்து போய்விட்டது என்று நினைக்கிறேன். அடுத்தப் படத்திலாவது நடிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கட்டும்..

பொதுவாக காதலுக்குத் தூது போகவும், காட்சியை நகர்த்தவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் சிறுசுகள் இந்தப் படத்தில் படம் முழுவதும் உலாவிக் கொண்டேயிருப்பதால் படம் என்னவோ அவர்களுக்கானது என்பது போலாகிவிட்டது.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது வசனங்களையும், ஒளிப்பதிவையும்.. இயக்குநர் தாமிராவே நல்ல கதை, வசனகர்த்தாதான். நல்லதொரு இலக்கியவாதி. பொய் படத்திற்கு இவர்தான் வசனம். ஆனாலும் இந்தப் படத்தில் வேறொருவருக்கு வசனம் எழுத வாய்ப்பளித்து அதனை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.

பால்காரன் லெனின் பற்றிக் கேட்கும் “யாருங்க அவரு..?” என்ற பரிதாபக் கேள்வி. கம்யூனிஸம் இன்னமும் யார், யாரிடமெல்லாம் பரவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லித் தாக்கியிருக்கிறார் வசனகர்த்தா.

“நான்தான் சொல்றனே.. நான் சொல்ற ஐடியாவைத்தான் யாருமே கேக்க மாட்டேங்குறீங்க..”

“குஷ்பூ.. நீ வாயைத் தொறந்தாலே ஏதாவது பிரச்சினையாயிரும்.. பேசாம இரு..”

“குஷ்பூ.. வாசல்லேயே செருப்பைக் கழட்டி வைச்சிட்டு வா.. அப்புறம் இதுக்கும் ஏதாவது பிரச்சினை வந்திரும்..”

“இங்கிலீஷ் டீச்சர் மனசுல என்ன இருக்கும்..? லாங் லாங் எகோ தேர் வாஸ் எ கிங்தான் இருக்கும்.. வேறென்ன..?”

இது போன்று அவ்வப்போது அவர்கள் பேசுகின்ற வசனங்கள் லூட்டியடித்தாலும், அவர்களுடைய வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியான வசனங்களும் இடையில் கலந்திருந்தது கொஞ்சம் இடிக்கத்தான் செய்கிறது.


ஒளிப்பதிவில் செழியனுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான படமாக இது இருக்குமென்று நினைக்கிறேன்.. வாய்க்கால், வரப்புகளில் இயற்கை எழிலை படமாக்குவதில்தான் ஒளிப்பதிவாளருக்கு தில்லே இருக்கிறது.. பாடல் காட்சிகளில் மட்டுமே அதை பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தாலும், அஞ்சலியை வழிமறித்து ஹீரோ பேசுகின்றபோது காண்கின்ற காட்சி ஸ்கீரினை கமகமக்க வைத்தது.

பொதுவாகத் தமிழ்ச் சினிமாவில் எடுத்த எடுப்பிலேயே உறவுகளை யார், யாருக்கு எந்த வகையில் சொந்தம் என்பதை வசனத்தாலாயோ, காட்சிகளாலோயே சொல்லிவிடுவார்கள். இதில் அது சுத்தம்.. யாருக்கு, யார் சொந்தம்.. மகனா..? மகளா..? யாருக்கு எத்தனை குழந்தைகள்..? என்பதெல்லாம் தெரியாமல் அப்படியே போய்க் கொண்டிருக்கிறது கதை.. படம் முடிந்த பின்புதான் இது பற்றி யோசிக்கவும் வைத்திருக்கிறது என்றால் இயக்குநருக்கு ஒரு சபாஷ் போடத்தான் வேண்டும்.

இளவரசு கேரக்டர் வீணடிக்கப்பட்டிருப்பது வருத்தமானது.. மாயாண்டி குடும்பத்தார் மாதிரி இதிலும் எதையாவது செய்வார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து வீணானதுதான் மிச்சம்.

எந்த ஒரு புதுமுக இயக்குநரும் தனது முதல் படத்தில் தேடிப் பிடித்து நடிக்க வைக்கும் சினிமா பார்முலாவின்படி இந்தப் படத்திலும் இடம் பிடித்திருக்கும் மனோபாலா இருக்கப் போய் கே.பி. தப்பித்தார் என்றே சொல்லலாம்.

கே.பி.யை காக்கா பிடிக்க ஒரு சிறுமி ராட்டையைக் கையில் ஏந்தியபடியே பின்னால் வர.. “இவர் கட்சி ஆபீஸுக்கு போயே பத்து வருஷமாச்சு.. இப்ப போய் இதைக் கண்ணுல காட்டுறியே.. கிளம்பு..” என்று மனோபாலா பத்திவிடும் காட்சியில் ரசிக்க முடிகிறது.

இன்னொரு அநியாய வேஸ்ட் கருணாஸ்.. ஏற்கெனவே கதாநாயகனாகவே கச்சைக் கட்டியிருந்தாலும் இது போன்ற வேஸ்ட்டான கேரக்டர்களிலும் நடிப்பதற்கு துணிச்சல் வேண்டும்.. கருணாஸ் வாழ்க..

ஏதோ மிலிட்டிரி லாரிகள் வருகின்றன. கூடாரங்கள் போடுகிறார்கள். அமர்கிறார்கள். டிரெயினிங் எடுக்கிறார்கள்.. பின் திடீரென்று காலி செய்துவிட்டுப் போகிறார்கள்.. ஏன்..? எதற்கு..? ம்ஹூம்.. எந்தக் கேள்விக்கும் விடை தேடி மண்டையைப் போட்டுப் பிய்ச்சுக்க வேண்டாம் என்று இயக்குநர் சொல்லாமல் சொல்லிவிட்டதால் ஹீரோவை வரவழைக்க இயக்குநரால் முடிந்த செட்டப் என்று நினைத்துக் கொள்வோம்.

பாடல்களை தனியே கேட்டபோது ஒரு முறையாவது கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் படத்தில் பார்த்தபோது ஏனோ ஒன்றவே இல்லை. என்ன காரணமோ..? பாடல் காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைத்தது என்னவோ உண்மை.


கிளைமாக்ஸ் நாடகத்தனமானது என்றாலும் படமே சீரியஸ் இல்லை என்பதால் இதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..

அந்த பள்ளிக்கூட காட்சியில் “பிள்ளை பெக்க வக்கில்லாதவனெல்லாம் புள்ளைக படிக்குற ஸ்கூலுக்கு தலைவனா?” என்கிற கே.பி.யின் எகத்தாளத்தின்போது படம் எங்கே சீரியஸாக போய்விடுமோ என்று நினைத்தேன். நல்லவேளை சிறுசுகள் மீண்டும் தப்பிக்க வைத்துவிட்டார்கள்.

தாமிரா இதுவரையில் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரில்லை. இலக்கியவாதி.. நல்ல எழுத்தாளர். சிறந்த வசனகர்த்தா. இது அவருடைய முதல் திரைப்படம் என்பதாலும், பல குறைபாடுகள் தென்பட்டிருந்தாலும் என்னை மாதிரியான சின்னஞ்சிறுசுகளுக்கும் “எப்படியும் நாமளும் ஒரு படம் பண்ணிரலாம்..” என்று தைரியத்தை மூட்டியிருக்கிறார் இத்திரைப்படத்தின் மூலம்..

இதுதான் கோடம்பாகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். ஒரு நல்ல தயாரிப்பு கம்பெனியும், சிறந்த நட்பான ஒளிப்பதிவாளரும், நல்ல கதையும், விஷயமுள்ள வசனகர்த்தாவும் கிடைத்தாலே போதும்.

எந்தவகையிலும் முகம் சுளிக்காதவகையில் குத்துப் பாட்டு, குத்து டான்ஸ்களும், காதைக் கிழிய வைக்கும் சண்டைக் காட்சிகளும் இல்லாமல் பத்து நிமிடங்களுக்கொரு முறையாவது சிரிக்க வைத்து அனுப்பி வைத்த அண்ணன் தாமிராவுக்கு எனது நன்றி..

நேரத்தைக் கொண்டாட விரும்பினால் தாராளமாகச் செல்லலாம்.. ஆனால் குடும்பத்துடன் மட்டுமே..

ஜெயலலிதாவின் இந்த நோட்ஸ்களை வைத்தும் நடவடிக்கை எடுங்கள் மிஸ்டர் பிரைம்மினிஸ்டர்..!

19-04-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"வந்தாரை வாழ வைத்த தமிழ்நாடு" இனி தன் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

தமிழ்நாட்டுக்கென்றே இருந்த தனி மரியாதையையும், சிறப்பையும் தனி மனிதர் ஒருவரின் சுயநலத்தால் இழந்து போய் நிற்கிறோம்.


பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் ஏற்கெனவே பல ஆண்டுகள் தமிழகத்தில் திருச்சியில் வசித்தவர். அவருடைய புதல்வர் பிரபாகரன் தனி ஈழத்தின் முதல் தேசியத் தலைவராக தனியாட்சி நடத்திக் கொண்டிருந்தபோதே அந்த அம்மையார் தமிழ்நாட்டில்தான் இருந்தார்.



பிரபாகரன் என்ன தவறு வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும்.. அதைப் பற்றி இப்போது பேச்சில்லை. இந்த 76 வயது அம்மையார் என்ன பாவம் செய்தார்..? தமிழச்சியாக பிறந்தது பாவமா..? அல்லது பிரபாகரனை பெற்றெடுத்ததுதான் பாவமா..?

மூச்சுக்கு மூச்சு "தமிழுக்காக உயிரைக் கொடுப்பேன்.. தமிழர்களுக்காகத் தலையைக் கொடுப்பேன்" என்று சவுடால்விட்ட முதல்வர், இன்றைக்குச் சட்டசபையில் வாந்தியெடுத்திருக்கிறார்.. அதே தமிழில்தான்.. "பார்வதியம்மாள் தமிழகத்திற்கு வந்ததே தனக்குத் தெரியாது..! என்று.. நாம் தமிழர்கள் அனைவரும் நமது நெஞ்சில் அடித்துக் கொள்ளலாம் இந்த ஒரு வார்த்தையைக் கேட்டுவிட்டும் நாம் இன்னமும் உயிரோடு இருப்பதற்காக.. கிராமப்புறங்களில் சாவு வீட்டில் பெண்கள் தங்களது நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுவார்கள் பாருங்கள்.. அதுபோல்..

ஒரு முதலமைச்சராக இருப்பவருக்கே இது தெரியாது எனில் இவர் எதற்காக முதலமைச்சர் பதவியில் வெட்கமில்லாமல் இருக்கிறார் என்பதை யாரேனும் கேட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்.

இவருக்கே தெரியாது என்றால் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டுக்கு மட்டும் எப்படி தெரிந்ததாம்..? வைகோவும், நெடுமாறனும் முறைப்படி அனுமதிச் சீட்டை வாங்கிக் கையில் வைத்திருந்தும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்க மறுத்து ரவுடித்தனம் செய்த காவல்துறையை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தது ஜாங்கிட்தானே..

ஒரு மாநிலத்தில் ஒரு நகர கமிஷனருக்குத் தெரிந்திருக்கும் விஷயம்கூட அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்குத் தெரியவில்லை என்றால் இதைவிட வெட்கக்கேடு வேறென்ன இருக்க முடியும்..? இப்படியெல்லாம் தமிழர்கள் நினைக்க மாட்டார்களா என்றுகூட யோசிக்காமல் அண்டப்புழுகை வீசியிருக்கிறாரே இந்த 86 வயது முதியவர்.. இவரை என்ன பெயர் வைத்துத்தான் இனிமேல் அழைப்பது. உலக மகா பொய்யன்..!

"அவசரப்பட்டு விசா கொடுத்துவிட்டீர்கள்.. ஏன் எங்களிடம் முன்பே கருத்து கேட்கவில்லை. வந்தால் உங்களுக்குத்தான் பிரச்சினை.. பரவாயில்லையா..?" என்று தமிழக அரசின் தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை சென்ற பிறகுதான், மத்திய அரசு திருப்பியனுப்பும் முடிவை நடத்திக் காட்டியிருப்பதாக டெல்லி பத்திரிகையாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் சொல்கிறார்கள்.

"அந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு தினம்தோறும் அவருடைய உடல்நல அறிக்கையை அறிவித்து அனைத்துக் கட்சிகளும் மீண்டும் இலங்கை பிரச்சினையைக் கையில் எடுப்பார்கள். கோவை உலகத் தமிழ் மாநாட்டு சமயத்தில் இதை வைத்தே ஏதேனும் பிரச்சினை வரும்.. அனுமதிக்காதீர்கள்.." என்ற ஸ்ட்ராங்கான அட்வைஸ் கோபாலபுரத்தில் இருந்துதான் சென்றிருக்கிறது.

இரண்டு அரசுகளுக்குமே இப்போது இலங்கை பிரச்சினை வேப்பங்காய் என்பதால், தூக்கி சாக்கடையில் வீசிவிட்டார்கள் அந்த மூதாட்டியை.

வழக்கம்போல கட்சிகளுக்குள் இதை வைத்து சடுகுடுவும் ஆரம்பமாகிவிட்டது.

வைகோவும், நெடுமாறனும் பிரபாகரனின் அண்ணன் மனோகரனின் மூலமாக பார்வதியம்மாவுக்கு சிகிச்சையளிக்க சென்னைக்கு அழைத்து வரும் வேலைகளை ரகசியமாக செய்து முடித்ததாகச் செய்தி. இதில் கூட்டாளிகளாகத் தங்களை அழைக்காததால் ராமதாஸும், தொல்.திருமாவும் கோபத்தில் இருக்கிறார்கள்.

அதிலும் மேல்சபை வரப் போகிறது. சும்மா இருக்கும் முந்திரிக்காடு தளபதிகளை அதில் தள்ளிவிட அரசுத் தரப்பின் உதவி வேண்டும். இப்போதுதான் ஐயா கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார். கூடவே மாநிலங்களவை எம்.பி. பதவியும் தொங்கலில் நிற்கிறது.. போயஸ்கார்டன் பக்கமும் போக முடியாது.. அம்மா பந்த் விஷயத்தை பகிரக்கூட நம்மை அழைக்கவில்லை. எனவே ஐயாவைப் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டி மத்திய அரசையும் கண்டிக்கவில்லை. மாநில அரசையும் கண்டிக்கவில்லை என்று ரெண்டுங்கெட்டாத்தனமாக ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார் ராமதாஸ். கூடவே ஒரு நம்பிக்கையும் வேறு.. கருணாநிதிக்கு இது தெரியாது என்றே இவர் நம்புகிறாராம்.. இவரை நம்புகிறவர்களை நாம் நம்பக்கூடாது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தொல்.திருமாவோ ஒரு மாதத்திற்கு முன்பாகவே தன்னைத் தொடர்பு கொண்டு சென்னையில் வைத்து பார்வதியம்மாளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று பலரும் மலேஷியாவில் இருந்து கேட்டுக் கொண்டதாகச் சொல்கிறார். ஆனால் பதிலுக்கு இவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை.

ஆனால் இப்போது "பார்வதி அம்மாளை திருப்பியனுப்பியது யாராக இருந்தாலும் அதனை நியாயப்படுத்த முடியாது" என்று சொல்லி ஜாம் தடவியிருக்கிறார். அம்பேத்கரின் அரசியலில் இருந்து பெரியாரின் அரசியல்வரைக்கும் கிண்டி கிழங்கெடுக்கும் இந்த சிறுத்தைக்கு பார்வதியம்மாள் திருப்பியனுப்பட்ட பின்னணியில் இருந்தது யாரென்று தெரியாதாம்.. நாமும் அதனை நம்ப வேண்டுமாம்..

எப்போதும் நாட்டு நடப்புகள் என்றால் உடனுக்குடன் அறிக்கை விடும் முதல்வர் ஐயா, இரண்டு நாட்களாக அமைதி காத்துவிட்டார். வழக்கமாக வெளிவரும் தானே கேள்வி. தானே பதில்கூட வராததால் பத்திரிகையாளர்கள் குழப்பத்தில் நிற்க,, லேசுபாசாக ஒரு அறிக்கையை பத்திரிகையாளர்களிடம் பரவவிட்டு மேலோட்டம் பார்த்தது ஆட்சி நிர்வாகம். அதனை ஸ்மெல் செய்த மீடியா அதில் இருந்த மேட்டரை படித்து சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் இப்போதுவரைக்கும்.

முன்பு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதுதான் பார்வதியம்மாள் முறைப்படி விசா பெற்று இலங்கைக்குப் பயணமானார். அவரை அனுப்பிய கையோடு அவரை மீண்டும் தமிழகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பாணையை மத்திய அரசுக்கு அனுப்பினாராம் ஜெயலலிதா.

2003-ம் ஆண்டு எழுதியனுப்பப்பட்ட அந்தக் குறிப்பாணையை இப்போது கையில் எடுத்துத் தூசி தட்டிப் படித்துப் பார்த்து, கண் கலங்கி, அறிவு பெருகி, ஆற்றல் பெற்று, இதன் பிறகுதான் பார்வதி அம்மாளை திருப்பியனுப்ப மத்திய அரசு முடிவெடுத்ததாம்..

சபாஷ்.. 2003-ல் புரட்சித் தலைவி எழுதியனுப்பிய ஒரு 'நோட்'..(இது கோரிக்கைதான்.. வேண்டுதல்தான்..) இதை வைத்து தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமென்றால்..

"தினகரன் பத்திரிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டு மகன் மு.க.அழகிரியை காப்பாற்றிய தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..

மத்திய அமைச்சர் ராஜாவின் பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்டரம் ஊழலுக்கு உடந்தையாய் இருக்கும் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..

இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்திருக்கும் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்..

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பொய்யான தகவலையளித்த தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..

தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்க்க வக்கில்லாத தமிழக அரசை டிஸ்மிஸ் செய்.."

இவைகளெல்லாம் தமிழகத்தின் தற்போதைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவி, முன்னாள் முதலமைச்சர், 2003-ல் 'நோட்' எழுதிக் கொடுத்து, இப்போது உங்களுக்குக் கை கொடுத்திருக்கும் 'கோப்பெருந்தேவி' இந்த நான்காண்டு காலத்தில் எழுப்பியிருக்கும் கோஷங்கள்தான்..

அந்த 'நோட்'டை வைத்து எப்படி நடவடிக்கை எடுத்தீர்களோ.. அதேபோல் இப்போதும் 'போயஸ் ஆத்தா' இந்த மூன்றரை ஆண்டுகளாக எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த 'நோட்ஸ்'களை வைத்தும் சூடு, சொரணை இருந்தால் நடவடிக்கை எடுங்கள் மிஸ்டர் மன்னமோகனசிங்..!

ம.க.இ.கழகத்தினரின் அராஜக கம்யூனிஸம்..!

16-04-2010 என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதலிலேயே ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். லீனா மணிமேகலையின் அந்த இரண்டு கவிதைகளிலும் எனக்கு முற்றிலும் உடன்பாடில்லை. அவர் சொல்ல வந்த கருத்தும், சொல்லிய விதமும் முற்றிலும் தவறு என்பது எனது கருத்து.

தமிழில் எத்தனையோ நல்ல, நல்ல வார்த்தைகள் இருக்கின்றன. சொற்றொடர்களும், அலங்காரச் சொற்களும் கவிஞர்களுக்காக காத்திருக்கும்போது தங்களது உடல் அவயங்களை முன் வைத்து, அவற்றை வெளிப்படுத்தி எழுதிதான் ஒரு விஷயத்தை மக்களுக்கு உணர்த்தவேண்டும் என்கிற அவசியமில்லை. லீனா இந்த விஷயத்தில் சற்று யோசித்திருக்கலாம். இது மாதிரியான நிறைய 'லாம்'களை நம்மால் போட முடியும்!

ஆனால் என்ன எழுதுவது என்பது அவரது உரிமை. அவரது வலைத்தளத்தில்தான் அதனை எழுதியுள்ளார். இப்படித்தான் எழுத வேண்டும்.. இதை எழுதக்கூடாது என்று நாம் தடுக்க முடியாது. தடுப்பதற்கு உரிய அத்தாட்சியை கையில் வைத்திருப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மட்டுமே.. இது அவருக்கு மட்டுமல்ல.. நமக்கும் பொருந்தும்.

அதே சமயம், லீனா மணிமேகலையின் கருத்து சுதந்திரத்துக்கான ஒன்று கூடல் நிகழ்ச்சியில், அருமையிலும் அருமையான நமது சக தோழர்களான மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் நடத்திய அராஜகப் போராட்டத்தை வன்மையாகக் கண்டிக்கத்தான் வேண்டும்.

இந்த ம.க.இ.க.-வினரை பற்றி நான் முதன் முதலில் அடையாளம் கண்டது மதுரையில்தான். என் அப்பன் முருகப்பெருமான் வீற்றிருக்கும் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்திற்கு சென்று அவனைத் தரிசித்துவிட்டு திரும்பும்போது அன்றைய நாளில் அந்த வட்டாரம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த 'ம.க.இ.கழகத்தினரின் கலை விழா' என்ற போஸ்டரில்தான் இவர்களது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அதுவும் எனது அப்பனால்.. ரொம்ப சந்தோஷம்.. அந்தக் கலைவிழாவில் அவர்கள் நடத்திய கூத்தும், தப்பாட்டமும், அப்போதே என்னைக் கவர்ந்துதான் இருந்தது.

அதே கூத்தையும், தப்பாட்டத்தையும் வேறு வடிவில் பல வருடங்களுக்குப் பிறகு அருமைத் தம்பி முத்துக்குமாரின் இறுதி ஊர்வல தினத்தன்றுதான் பார்த்தேன். அந்த ஊர்வலத்தில் இந்த அமைப்பினர் காட்டிய எதிர்ப்புகள், எழுப்பிய கோஷங்களை எனது அந்தப் பதிவில் நான் பதிவு செய்திருக்கிறேன். சுடுகாடுவரையிலும் ஒருவர் மாற்றி ஒருவர் தொண்டை கிழிய கோஷம் போட்டுக் கத்திக் கொண்டே வந்ததை நான் இன்றைக்கும் ஆச்சரியத்துடன்தான் நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த அளவுக்கான பொது நலன்களில் அவர்கள் எடுக்கின்ற அக்கறை எப்படி, எந்த வடிவத்தில் அவர்களை ஆட்கொள்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. இந்த அமைப்பினர்தான் தமிழ் வலையுலகில் தற்போது ஆளே இல்லாத கிரவுண்ட்டில் கோல் போடும் வினவு டீம் என்பதே என் மரமண்டைக்கு மிகச் சமீபத்தில்தான் தெரிந்தது..

இவர்களுடைய ஒரு பக்கத்தை முத்துக்குமாரின் மரணத்தின்போது பார்த்து பிரமித்துப் போயிருந்த எனக்கு இவர்களது இன்னொரு பக்கத்தை எழும்பூர் இக்சா அரங்கில் அன்றைக்குப் பார்த்தபோது வெறுப்பாகிவிட்டது.

ஒருவர் சொல்கிற கருத்தில் உங்களுக்கு ஆட்சேபணையிருந்தால் எதிர்ப்பைக் காட்ட வேண்டியதுதான்.. தப்பில்லை.. அது எழுத்தாக இருந்தால் எழுத்திலேயே எதிர்ப்பைக் காட்டுவதுதான் மிகச் சிறந்த பதிலடி.

கூட்ட அழைப்பில் தெளிவாகச் சொல்லித்தான் அழைத்திருக்கிறார்கள். "லீனா மணிமேகலையின் கவிதைக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் கூட்டப்பட்டிருக்கும் ஒன்றுகூடல்" என்று அனைவருக்கும் புரிந்தாற்போலத்தான் இருந்தது.

லீனாவின் கவிதையை கடந்த மாதமே கொத்து புரோட்டா போட்டு சலிக்கின்றவரையில் சாப்பிட வைத்திருக்கும் ம.க.இ.கழகத்தினரும், வினவும் போதாததற்கு அதற்குப் பிறகும் இரண்டு முறை அதே போன்று பதிவெழுதி தங்களது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். இதுவரையிலும் சரி..

இதேபோல் லீனாவின் கூட்டத்திற்கு மறுநாள் அதே இக்சா அரங்கத்தில் நமது தோழர்கள் எதிர்ப்பாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தி அதிலே தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தால் மிக, மிக சந்தோஷமாக இருந்திருக்கும்.

அதைவிட்டுவிட்டு எதிர்ப்புக் கூட்டத்திலேயே நேருக்கு நேராக பதில் சொல்கிறோம் என்று அழைக்காமலேயே வந்திருந்து கூட்டத்தை நடத்தவிடாமல் கூச்சலையும், குழப்பத்தையும் உண்டு செய்து கடைசியாக அவர்கள் சாதித்ததுதான் என்ன..? பூஜ்யம்.

ஆனால், தோழர்களின் அட்டாக் முறையை கவனத்துடன் பாருங்கள்..

வரும்போதே பக்காவான திட்டத்தோடுதான் வந்தார்கள் தோழர்கள். அரங்கத்தின் உள்ளே நுழைந்தவுடன் மூலைக்கு ஒருவராக போய் அமர்ந்தார்கள். யாரும், யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. வெளி ஆட்களுக்கு யாரோ சிலர் தனித்தனியாக வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்பது போலத்தான் தெரியும்..!

யார் முதலில் எழுந்து பேசுவது.. அதன் பிறகு அவருக்கு யார் துணை செய்வது..? எப்படி பேச வேண்டும்..? எதிர்ப்புகளை எப்படி சமாளிப்பது என்று அனைத்தையும் திட்டமிட்டு வந்திருந்தது பின்னால்தான் தெரிந்தது. கோஷங்களைகூட முன்கூட்டியே தயார் செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறார்கள் தோழர்கள்.. அடடா.. என்ன ஒரு பிளானிங்..?(முருகன்களா கோச்சுக்காதீங்க..!)

முன் வரிசையில் இரண்டு பேர்.. நடுவரிசையில் பெண்கள் அமைப்பினர் ஒரு ஆறு பேர்.. நடு வரிசையில் ஒருவர். அவருக்குப் பின் ஒருவர்.. அரங்கத்தின் மூலையில் இரண்டு பேர்.. கடைசி வரிசையில் எனக்குப் பின்பு இரண்டு பேர்.. எங்களுக்கு முன் வரிசையில் இரண்டு பேர்.. இது அனைத்துமே ஒரு பக்கத்தில்தான்.. அதாவது அரங்கத்தின் இடது பக்கம் முழுவதும் தோழர்களின் ராஜ்ஜியம்தான்.. வலது பக்கம் முழுவதும் ஆதரவாளர்கள் ராஜ்ஜியம்!

எழுந்து பேசும்போதும் அதே டெக்னிக்தான். முதலில் ஒரே ஒருவர் பேசத் துவங்கினார். பின்பு அடுத்த முறை இன்னும் இரண்டு பேர் எழுந்தார்கள். அதற்கடுத்த முறை இன்னும் 3 பேர் எழுந்தார்கள். பேச்சு முற்றி ஆதரவாளர்களின் எண்ணிக்கைகூட கூட நம்ம தோழர்களின் கூட்டமும் வேகவேகமாக எழுந்தது..

அடுத்து ஆதரவுக் கூட்டத்தில் இரண்டு பெண்கள் தங்களது கருத்தை வாதாடத் துவங்க.. அதுவரையில் பொறுமையுடன் காத்திருந்த ம.க.இ.க. தோழியர்கள் அவர்களுடன் பதிலுக்கு பதில் வாதாடத் துவங்க.. எண்ணிக்கை இரண்டு மட்டத்திலும் சம அளவாக இருப்பது கடைசியில்தான் தெரிந்தது..

என்ன ஒரு பக்காவான ஸ்கிரிப்ட்டு..? கொன்னுட்டாங்க போங்க..! மணிரத்னம் அடுத்த படத்துக்கு திரைக்கதையில் ஏதாவது உதவி தேவையெனில் நமது தோழர்களைத் தாராளமாக அணுகலாம்.

முதலில் வரவேற்புரை நிகழ்த்திவிட்டு பேராசிரியர் ராஜன்குறையை பேச அழைத்தார் அ.மார்க்ஸ். அனர்த்தத்தை உடனேயே ஆரம்பித்தார்கள் தோழர்கள். “பேசணும் ஸார்.. கொஞ்சம் சந்தேகம் இருக்கு ஸார்.. கண்டிப்பா பேசியே ஆகணும் ஸார்.. கொஞ்சம் தயவு பண்ணுங்க ஸார்..” என்று முதலில் நாகரிகமாகத்தான் ஆரம்பித்தது வினை.

இந்த இடத்தில் அ.மார்க்ஸை பற்றிச் சொல்லித்தான் ஆக வேண்டும். இவர்களது அரிச்சுவடியை பற்றி அவர் நன்கு தெரிந்து வைத்திருந்ததால் இவர்களது முகத்தைப் பார்த்தவுடனேயே மருவாதைக்கு காவல்துறைக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டார்போலும். இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் வந்திருந்தார்கள். வாசல் அருகேயே நின்று கொண்டு அனைத்தையும் கவனித்தபடியேதான் இருந்தார்கள்.

மார்க்ஸ் முதலில் ஜனநாயக ரீதியாக தன்மையாகத்தான் பேசினார். "நாங்க எல்லாரும் பேசி முடிச்சுக்குறோம். கடைசியா நீங்க கேக்க வேண்டியதையெல்லாம் கேளுங்க.. பேச வேண்டியதையெல்லாம் பேசலாம்.. வாய்ப்பு தர்றோம்.." என்றார். இந்த கோல்டன் சான்ஸை தோழர்கள் பயன்படுத்தியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, "உடனேயே பேச வேண்டும்.. இப்போதே பேசணும்.. எங்க சந்தேகத்துக்கு பதில் சொல்லிவிட்டுத்தான் பேச வேண்டும்" என்று அடம் பிடித்ததே இவர்கள் வந்த நோக்கம் என்னவென்பதை பறை சாற்றிவிட்டது.

நல்லதொரு வாய்ப்பை அவர்களாகவே கெடுத்துக் கொண்டார்கள். கடைசியாகப் பொறுமையுடன் காத்திருந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கலாம். பேசவே கூடாது என்று மார்க்ஸும், கூட்டத்தினரும் சொல்லவே இல்லை. "கடைசியா பேசுங்க ஸார்.. இப்ப குறுக்கிடாதீங்க.. நிறைய பேர் இருக்காங்க.. 9 மணிக்குள்ள கூட்டத்தை முடிக்கணும்னு ரூல்ஸ் இருக்கு" என்றெல்லாம் சொன்னார்கள். யார் கேட்டா..?

அரைகுறை மனதோடு அமர்ந்தார்கள் தோழர்கள். ராஜன் குறை பேச்சைத் துவக்கினார். எடுத்த எடுப்பிலேயே தெள்ளத் தெளிவாகச் சொன்னார், "இந்தக் கூட்டம் லீனாவின் கவிதைக்கான ஆதரவுக் கூட்டம் அல்ல.. லீனாவின் கவிதையில் இங்கு பலருக்கும் கருத்து வேறுபாடு உண்டு. அதனால் அவரது கவிதையில் உடன்பட்டுத்தான் அனைவரும் இங்கு வந்திருக்கிறார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம். லீனா எழுதுவதை தடை செய்யுமளவுக்குச் சென்றிருக்கும் ஒரு நடவடிக்கையைக் கண்டித்துதான் இந்தக் கூட்டம்...” என்று தோழர்களைக் கணக்கில்வைத்துதான் ராஜன் கூறினார்.

அவர் பேசி முடிக்கின்றவரையில் அமைதி காத்த தோழர்கள் மறுபடியும் எழுந்தார்கள்.. இம்முறை ஆதரவுக் கூட்டத்தில் இருந்து ஒருவர் ஆவேசமாகப் பேச பதிலுக்கு இவர்களும் ஆவேசமாகப் பேச கனன்றது அரங்கத்தின் சூழ்நிலை.. யார் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாத அளவுக்குக் கூச்சலும், குழப்பமுமாக ஆள் மாற்றி ஆள் முறை வைத்துப் பேசினார்கள் தோழர்கள். திடீரென்று அவர்களே சட்டென்று அமர்ந்தார்கள்.

பின்பு மார்க்ஸ் அவர்களை கூல் செய்யும்விதமாக பேசிவிட்டு அடுத்தவரை பேச அழைக்க மறுபடியும் எழுந்தார்கள் தோழர்கள். இது 'விளையாட்டு'தான் என்பது எல்லோருக்குமே புரிந்தது. ஆனாலும் மார்க்ஸ் வயதில் பெரியவர்.. அவரால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.

இந்த நேரத்தில் ஆதரவுக் கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் 'டா' போட்டு பேச.. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்பதைப் போல பிடித்துக் கொண்டார்கள் தோழர்கள். இவர்களும் பதிலுக்குப் பேச்சுக் குறைவில் இறங்க.. கொஞ்சம் கொஞ்சமாக அரங்கத்தில் சரோஜாதேவி புத்தக வார்த்தைகளெல்லாம் சரளமாக புழங்க ஆரம்பித்தன. பாவம் தமிழன்னை.. அவளுக்கு நேர்ந்த கொடுமை..! நேற்று மட்டும் தோழர்கள் பேசியதைக் கேட்டிருந்தால் கூவத்தில் விழுந்தே செத்திருப்பாள்.

அதுவரையில் என் வரிசையில் அமைதியாக பார்வையாளரைப் போல் காட்டிக் கொண்டு அமர்ந்திருந்த ஒரு தோழர் சட்டென்று ஏதோ ஆவேசம் வந்தவரைப் போல் லீனாவின் கவிதைக்கு கோனார் உரை நிகழ்த்தத் துவங்கினார். 'செந்தமிழ்' இவரது நாவில் தாண்டவமாடியது.

இவருடன் ஒரு பார்வையாளர் மல்லுக் கட்டத் துவங்க.. திடீரென்று எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு தோழர் எழுந்து தனது தோழருக்கு ஆதரவாகப் பேச திக்கென்றானது எங்களது பகுதியில் இருந்தவர்களுக்கு.. "ஆஹா.. தோழர்கள் நமக்கே பிலிம் காட்டுறாங்கப்பா.." என்று இடத்தைக் காலி செய்ய வேண்டியதாகிவிட்டது.

ஒருவழியாக லீனாவின் ஆதரவாளர்களை பெரும்பாடுபட்டு அடக்கிய மார்க்ஸ், தோழர்களில் ஒருவருக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் நேரம் 2 நிமிடம் மட்டும்தான் என்று சொல்லித்தான் கொடுத்தார்.

பேசியவரோ, கைகளில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு "இதில் ஏழு கேள்விகள் இருக்கின்றன. அவற்றுக்கு எங்களுக்கு பதில் வேண்டும்" என்றவர், இந்தக் கூட்டத்துக்கு வந்ததற்கான ஒரு காரணத்தை முன் வைத்தார்.

லீனா தனது வலைத்தளத்தில் இந்தக் கூட்ட அழைப்பை பதிவு செய்யும்போது அதற்கான பிளாக்கர் லேபிளில் 'வினவு, ம.க.இ.க.' என்று எழுதிவிட்டாராம். எனவே இது தங்களுக்கான எதிர்ப்பு என்பது தெரிந்ததாலேயே இங்கே நேரில் வந்ததாகச் சொன்னார்.

இது எல்லாருமே வழக்கமாகச் செய்வதுதான். நானும் இந்தப் பதிவிற்கான லேபிளில் அதேபோல்தான் செய்வேன். இது படிப்பவர்களுக்கும், தேடுபவர்களுக்கும் எளிதாக இருப்பதற்காகத்தானே.. அவர்களைப் பற்றி எழுதியிருப்பதால் நேரில் போய் சண்டையிடுவதா..? இது சரின்னு பார்த்தா வலையுலகத்துல ஒருத்தராவது அடுத்த போஸ்ட் போட முடியுமா..? ம்.. என்னமோ போங்க..!

பேசிய இந்தத் தோழராவது சரியாகப் பேசியிருக்கலாம். இந்து மக்கள் கட்சியை எதிர்த்தும், குஜராத்தில் முஸ்லீம் பெண்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் பேசியவர் சட்டென்று டிராக் மாற்றி லீனாவிடம் ஒரு கேள்வி கேட்பதாகச் சொல்லி ஒரு 'நயமான, நாகரிமான' கேள்வியை எழுப்ப.. அதைக் கேட்டு சட்டென்று உஷ்ணமான லீனா ஏதோ சொல்லிக் கொண்டே முன்னால் வர.. ஆதரவுக் கூட்டமும் அவர்களை நெருக்க.. அமர்ந்திருந்த ஒட்டு மொத்தத் தோழர்களின் கூட்டமும் மேடைக்கு ஓடியது..

அப்புறம் நடந்ததெல்லாம் தூர்தர்ஷன்ல வர்ற டிவி சீரியல் மாதிரிதான். கேமிராவை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திட்டு கேமிராமேன் தூங்கப் போயிருவாரு.. வசனம் பேச வேண்டியவங்களெல்லாம் கேமிரா முன்னாடி வந்து பேசிட்டுப் போயிருவாங்க.. 'டாக்கிங் போர்ஷன் முடிஞ்சிருச்சு'ன்னு கேமிராமேன்கிட்ட வந்து சொன்ன பின்னாடி கேமிராமேன் எந்திரிச்சு வந்து கேமிராவை ஆஃப் பண்ணிட்டு ஸ்டேண்டை ரிமூவ் பண்ணிட்டு அப்புறமா குளோஸப் ஷாட் எடுக்கத் தொடங்குவாரு..

இதே மாதிரிதான்..! அதுவரைக்கும் வாட்ச் பண்ணிக்கிட்டிருந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் "கூட்டத்தை முடிங்க.. பெர்மிஷன் சஸ்பெண்டட்.. ஆல் ஆப் கெட் அவுட்.." என்றபடியே உள்ளே வந்து வரிசை, வரிசையாக இருப்பவர்கள் எழுப்பிவிட்டவர், தைரியமாக கூட்டத்துக்குள் புகுந்து இரு தரப்பினருக்கும் நடுவில் நின்று கொண்டார்.

இப்போதுதான் மார்க்ஸ் போதும்டா சாமி என்று நினைத்தாரோ என்னவோ, "எல்லாரும் வெளில போங்க.. நாங்க உங்களைக் கூப்பிடலை.. வெளில போலாம்.." என்றார் தைரியமாக. இதை கூட்ட ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால்..?

ஆனாலும் நமது தோழர்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தொண்டை கிழிய கத்திக் குவித்துவிட்டு, தயார் செய்து கொண்டு வந்திருந்த கோஷங்களையும் எழுப்பிவிட்டுத்தான் வெளியேறினார்கள். அவர்களுடன் வந்திருந்த பெண் தோழியர்கள் லீனாவையும், அவரது ஆதரவாளர்களையும் திட்டியதை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அதேபோலத்தான் தோழர்களும்..

'வெளியே போ' என்றவுடன் சட்டென்று வெளியில் போக எத்தனிக்கும் அளவுக்கு அவை நாகரீகத்துடன் தயாராக இருந்த தோழர்கள், எதற்காக கூட்டத்துக்கு வர வேண்டும்..? காரணம் புரிந்ததா..?

ச்சும்மா.. தங்களுடைய எதிர்ப்பை காட்டுகின்றவிதமாக..! "நாங்களும் இருக்கோம்.. பார்த்துக்குங்க.." என்று பலரையும் பயமுறுத்த.. "நாங்கள் நினைத்தால் எதையும் செய்வோம்.. எந்தக் கூட்டத்தையும் நிறுத்துவோம்.. தெரிஞ்சுக்குங்க" என்ற தங்களது நெஞ்சுர அராஜகத்தை நிலைநிறுத்தியிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்னவென்று நினைப்பது?

இந்தக் கூற்றுக்கு மற்றுமொரு உதாரணம் சில ஆண்டுகளுக்கு முன்பாக எனது இனிய நண்பன் கவிஞர் சங்கராமசுப்பிரமணியனுக்கு இந்தத் தோழர்களால் நேர்ந்திருக்கும் கதி.

அப்போது நானும் அவருடன் அதே 'மின்பிம்பங்கள்' அலுவலகத்தில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இப்படியொரு சம்பவம் நடந்ததை கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டேன். வேறென்ன செய்வது..? தளவாய்சுந்தரம் அந்தச் சந்தர்ப்பத்தில் குமுதம் பத்திரிகையில் நிருபர்.. அப்போது எங்களுடன் பணியாற்றி வந்த இன்னுமொரு தோழரான ம.செந்தமிழன் இது போன்ற குழுக்களுடன் நன்கு அறிமுகமானவர். அப்படியிருந்தும் சங்கருக்கு உதவிகள் செய்ய முடியாமல் போனது குறித்து எங்கள் அனைவருக்கும் வருத்தமே..

சங்கரின் கதை குறிப்பிடுவது என்னவென்றால் இந்த மாதிரியான தோழர்கள், தாங்கள் நிஜ வாழ்வில் அமெரிக்க அண்ணனை போல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

காவல்துறையினர் இவர்களது நிகழ்ச்சிகளுக்கு தடை போட்டாலோ, அல்லது கைது செய்தாலோ, அல்லது தடியடி நடத்தி கலைத்தாலோ 'அதிகாரத் துஷ்பிரயோகம்..' 'அடாவடித்தனம்..' 'ஆட்சிக் கொழுப்பு' என்றெல்லாம் வர்ணிக்கும் இவர்கள், எந்த அதிகாரத்தின் கீழ் சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரை மிரட்டினார்கள்..? யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது..? பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் ஆட்சியாளர்களை, அரசு அமைப்புகளைத் திட்டுகிறார்கள்..? கண்டிக்கிறார்கள்.

சங்கர் மற்றும் லீனாவின் கவிதைகள் பிடிக்கவில்லையா? எதிர்ப் பதிவு போடுங்கள்.. அது உங்களைத் தாக்கியதா..? காவல்துறையில் புகார் கொடுங்கள். அங்கு நியாயமி்ல்லையா..? நீதிமன்றத்தில் வழக்குப் போடுங்கள்.. வாதாடுங்கள்.. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அது தவறு என்றால் நிச்சயம் தண்டனை கிடைக்குமே.. அதைவிட்டுவிட்டு வீடு தேடிச் சென்று மிரட்டுவதும், இழுத்துச் செல்வதும் எந்த வகை கம்யூனிஸம்..? கம்யூனிஸத்தில் இதைத்தான் மார்க்ஸும், ஏங்கெல்ஸும் இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்களா..?

இதோ இப்போது பால் சக்காரியாவை கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவினர் தாக்கியிருக்கிறார்கள். எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரின் சொந்த வாழ்க்கையில் அத்துமீறி நுழைந்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்.. கொல்கத்தாவில் தஸ்லிமாவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள்.. இதுதான் மார்க்சிய வழியா..? மார்க்ஸும், ஏங்கெல்ஸும் சொன்ன வழியா..?

லீனா தொடர்பாக குட்டிப் பிரசுரத்தில் சி.பி.ஐ.யும், சி.பி.ஐ.எம்.மையும் கேள்வி கேட்டிருக்கிறார்களே இந்தத் தோழர்கள்..! சங்கரராமசுப்பிரமணியன் என்றால் மட்டும்தான் அவரது வீட்டிற்குச் சென்று மிரட்டுவார்களா..? ஏன் இதே கேள்வியோடு மார்க்சிஸ்டு பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்குப் போய் அவரை மிரட்டுங்களேன்..? பிரகாஷ் காரத்தை முற்றுகையிட்டு கேள்வி கேளுங்களேன்.. இருபத்தி நாலு மணி நேரமும் திறந்தே இருக்கும் பாலன் இல்லத்தில் போய் சி.மகேந்திரனிடம் இதே போல், "வாங்க தோழர்.. ஒரு பஞ்சாயத்து இருக்கு.. 'புதிய கலாச்சாரம்' ஆபீஸ்ல போய் பேசிக்குவோம்.." என்று கூப்பிட்டுப் பாருங்களேன்.. முடியுமா இவர்களால்..?

முடியாது.. ஏனெனில் 'பாலன் இல்ல'த்திலும், 'வி.பி.சிந்தன் கட்டிட'த்திலும் கால் வைத்தால் எதிரணியில் லட்சம் பேர் திரள்வார்கள். தாங்க முடியாது. டிரவுசர் கிழிந்துவிடும். அதனால் தைரியமில்லை. ஆனால் சங்கரராமசுப்ரமணியனை பிடிக்கலாம். தாக்கலாம். இழுத்துச் செல்லாம்.. கேள்வி கேட்கலாம்.. ஏனெனில், ஏனென்று கேட்க சங்கரின் பக்கத்து வீட்டுக்காரன்கூட வர மாட்டான்..

இப்படி தன்னுடைய ஆளுமையை, தனது எதிர்ப்புச் சக்தியை வலியவர்களிடம் காட்ட முடியாமல், எளியவர்களிடம் காட்டுகின்ற இவர்களுக்கும், மணிப்பூரில் மனோரமா என்கிற ஆதிவாசிப் பெண்ணைக் கொடூரமாகக் கற்பழித்துக் கொன்ற இந்திய துணை ராணுவப் படையினருக்கும் மனதளவில் என்ன வித்தியாசம்..? (ஸாரி தோழர்களே.. விமர்சனம் கடுமையானதுதான்.. ஆனால் உண்மை சுடத்தான் செய்யும்..) ஒரு வித்தியாசமும் இல்லை.

துணை நிலை ராணுவம் செய்தது தங்களது பலத்தை மக்களுக்குக் காட்ட.. மனரீதியாக அவர்களை ராணுவத்தின் அடிமையாக இருக்க வைக்க..! நம்ம தோழர்கள் செய்ததும் அதே மனநிலையோடு தங்களது பலத்தை தங்களைவிட சக்தி குறைந்தவர்களிடம் காட்டுவதற்காகத்தான்..! இதை வேறெப்படி ஒப்பிடுவது..?

ஏழு கேள்விகள் கேட்டு அவர்கள் தயார் செய்திருந்த பட்டியலை இவர்கள் முதலில் எடுத்துக் கொண்டுபோய் உரிமையோடு சட்டையைப் பிடித்துக் கேட்டிருக்க வேண்டிய இடம் "தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம்"தான். போயிருக்கலாமே.. "ஏனப்பா நீங்களும் மார்க்சியவாதிகள்தானே.. மார்க்ஸ், ஏங்கல்ஸை படித்தவர்கள்தானே.. புரட்டியவர்கள்தானே.. நீங்கள் எப்படி லீனாவுக்கு ஆதரவு கொடுக்கலாம்" என்று கேட்டிருக்கலாமே..? உங்களுடைய இனிய தோழர் காம்ரேட் ச.தமிழ்ச்செல்வன் பதில் சொல்லக் காத்துக் கொண்டிருப்பாரே..! ஏன் போகவில்லை..?

ஆனால் இங்கே இளிச்சவாயர்கள் லீனாவும், அ.மார்க்ஸும்தான்.. ஏனெனில் இவர்களுக்குப் பின்னால் எந்தவொரு அமைப்பும் இல்லை.. ஆள் பலம் இல்லை. படை பலம் இல்லை.. அம்பு, சேனைகள் இல்லை.. இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. கெஞ்ச வைக்கலாம்.. கதற வைக்கலாம்.. அழுக வைக்கலாம் என்கிற சர்வாதிகார மனநிலைதான்..

எந்தக் காலத்திலும் கம்யூனிஸ இயக்கத் தோழர்களுக்கு வரக்கூடாத மனநிலை இந்த சர்வாதிகார மனநிலைதான்.. ஆனால் இந்த இயக்கத்தினருக்கு வந்திருக்கிறது என்றால் இவர்கள் கம்யூனிஸத்தை தங்களுக்குக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் பொருள்.

நாடு இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனுக்குடன் ஓடி வரக்கூடியவர்கள் கம்யூனிஸ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இந்தியாவில் தற்போதைக்கு கண்கூடாகப் பார்க்கின்ற உண்மை. அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்ற ஒரு அமைப்பு இப்படிப்பட்ட ஒரு அராஜக மன உணர்வோடு தன்னை வளர்த்துக் கொண்டே வருவது அந்த அமைப்பினருக்கு மட்டுமல்ல.. நமக்கும் நல்லதல்ல.. நாட்டுக்கும் நல்லதல்ல..

ஏனெனில் மக்கள் கலை இலக்கியக் கழகம் இன்னொரு பக்கம் மக்களுக்கான, மக்களுக்கு நெருக்கமான பல விஷயங்களில் அழைப்பு இல்லாமலேயே தானாகவே முன் வந்து பலவிதப் போராட்டங்களை நடத்தி வருகிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவதற்குத் தடை இருந்தபோது அத்தடையை நீக்கவும், தேவாரத்தை மனமுருக பாடுவதற்காக பெருந்தவத்தோடு காத்திருந்த பெரியவர் ஓதுவார் ஆறுமுகசாமிக்காக சிதம்பரம் நகர மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் எத்துணை பாடுபட்டார்கள் என்பதனை சமீபத்தில் நான் அங்கே சென்றிருந்தபோது அறிந்து கொண்டேன்.

நீதிமன்ற உத்தரவுப்படி ஓதுவார் ஆறுமுகசாமி தேவாரம் பாடுவதற்காக கோவிலுக்கு வந்தபோது மெயின் ரோட்டில் இருந்து அவரைத் தங்களது தோளில் தூக்கிக் கொண்டு போய் அந்த உலகாளும் நடராஜனின் திருச்சிற்றம்பல மேடையில் இறக்கி வைத்தவர்கள், இந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள்தான் என்பதை அன்றைக்கு தொலைக்காட்சிகளில் பார்த்தபோதும், பத்திரிகைகளில் படித்தபோதும் எத்தனை சந்தோஷப்பட்டோம்..?

சாமியே இல்லை என்றவர்களைக்கூட சாமியைப் புகழ்ந்து பாட கால் வலிக்க கோவிலின் உள்ளே ஓட வைத்ததுகூட சிவனின் திருவிளையாடல்தான்(எப்பூடி..? சைக்கிள் கேப்புல டிரெயின் ஓட்டுறேன் பாருங்க..!) என்று அப்போது நான் நினைத்துக் கொண்டேன். சந்தோஷம்.. பெருத்த சந்தோஷம்..!

இது போன்ற மக்களுக்கான போராட்டங்களின் வாயிலாகவும், போராட்ட வழிமுறைகளினால் மக்களை இன்னமும் நெருங்க வேண்டிய இடத்தில் இருக்கும் இந்த கழகத் தோழர்கள் இப்படி தேவையற்ற முறையில், நேர்மையில்லாத வகையில் நடந்து கொள்வது மக்களிடமிருந்து அவர்களை விலக்கத்தான் செய்யும். நாளை அவர்களைப் பற்றி சொல்லும்போதே, "ஆமாப்பா.. அவங்க வந்தாலே அப்படித்தான்.. ஏதாவது கலகம் பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க.." என்பது போன்ற பாராட்டுரைகள்தான் கிடைக்கும்.. தேவைதானா இது..?

லீனாவின் இந்தக் கவிதை ஆபாசம்.. அந்த ஆபாசத்திற்கு எங்களது ஆசான்கள்தான் கிடைத்தார்களா என்று முழங்குகிறீர்களே..! இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியே ஆத்திகர்களான நாங்கள் நெஞ்சார வணங்கும் எங்களது தெய்வங்களை பழித்துப் பேசுகிறீர்களே.. எழுதுகிறீர்களே.. பத்தகம் அச்சடித்து வெளியிடுகிறீர்களே..(ச்சும்மா ஒரு பேச்சுக்குத்தான்) நாங்கள் என்றைக்காவது ஏதாவது கேட்டிருக்கிறோமா..? இல்லையே..! கண்டு கொள்ளாமல் நாங்கள் பாட்டுக்கு எங்கள் வழியில் போய்க் கொண்டுதானே இருக்கிறோம்..!

ஏனெனில் இந்து மக்கள் கட்சியும், ஆர்.எஸ்.எஸ்ஸும், பஜ்ரங்தளமும், பி.ஜே.பியும், இன்னும் பிற அமைப்புகளும் கூக்குரல் போடுவதாலேயே இந்த இந்தியத் திருநாட்டில் ஆத்திகம் வளரவில்லை.. நாத்திகமும் செழிக்கவில்லை.

ஒவ்வொரு மனிதனும் சுயமான அறிவு, சுயமான நடத்தை, சுயமான செல்வாக்கு, சுயமான சிந்தனை வருகின்றவரையில் குடும்பத்துக்காக ஆத்திகத்தைச் சுமக்கிறான். ஏற்றுக் கொள்கிறான். ஆனால் அதன் பின்பு அவன் படுகின்ற வாழ்க்கை அனுபவங்கள் மட்டுமே அவனை ஆத்திகனாக நிலைக்க வைக்கிறதே ஒழிய.. யாரும் அவனை கோவிலுக்குள் இழுத்துச் சென்று நிப்பாட்டுவதில்லை.

இன்னும் எத்தனை பெரியார்களும், திராவிடர் கழகங்களும், நாத்திகக் கழகங்களும் வந்தாலும் ஆத்திக உணர்வு என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் பரவத்தான் செய்யும். அதனை யாராலும் தடுக்க முடியாது..

அதேபோலத்தான் மார்க்ஸும், ஏங்கெல்ஸும், லெனினும் உங்களுடைய இன்ன பிற தலைவர்களும்.. அவர்களைப் பற்றி என்ன எழுதினாலும் அவர்களுடைய மதிப்பையும், மரியாதையையும் உங்களிடமிருந்தும் யாரும் அபகரிக்க முடியாது..

இப்போது எதற்கு இந்த வீணான போராட்டம்..? மேலேயும், கீழேயுமான குதிப்பு..? ஒரு கவிதை வந்தது. நீங்கள் எதிர்ப் பதிவு போட்டு எதிர்ப்பைக் காட்டிவிட்டீர்கள். முடிந்தது பிரச்சினை.. அடுத்த வேலையைப் பார்த்துவிட்டுப் போகலாம்.

நீங்கள் ஒரு கட்டுக்குள் இருந்து கொண்டு அமைப்பை நடத்துகிறீர்கள். இது போன்ற ஆவேசத்தையும், எதிர்ப்புணர்வையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.. போர்க்குணத்தை போராட்டத்தில் மட்டும் காட்டலாம்.. அரசு அமைப்புகளிடம் காட்டலாம்.. ராணுவத்திடம் காட்டலாம்.. காவல்துறையினரிடம் காட்டலாம்.. காட்டியிருக்கிறது கம்யூனிஸம்... உலகில் முதலில் தோன்றிய கம்யூனிஸம் இப்படித்தானே மலர்ந்தது.. ஆனால் தனி மனிதர்களிடம் தன் வீரத்தைக் காட்டவில்லையே..! அப்படிக் காட்டினால் அதற்குப் பெயர் கம்யூனிஸமும் இல்லையே..!

யோசியுங்கள் தோழர்களே..!


உஷ்ஷ்ஷ்.. அப்பா.. யாராச்சும் கொஞ்சம் சோடா உடைங்கப்பா..! மூச்சு வாங்குது..!


கடைசியா ஒரு விஷயம் தோழர்களே..! இதற்காக எனது வீட்டு அட்ரஸ் கேட்டு தயவு செய்து அலைய வேண்டாம்.. வீட்டுக்கு ஆட்டோவோ, டெம்போ வேனோ, மினி லாரியோ அனுப்ப வேண்டாம் தோழர்களே.. யாராவது ஒரு தோழரை சைக்கிளில் அனுப்பினாலே போதும்.. பெரியவர் உ.ரா.வரதராஜன் மாதிரி கேரியர்ல உக்காந்து எங்க வரச் சொல்றீங்களோ அங்க நானே வந்து ஆஜராகியிருவேன்..!

என்னடா இந்தச் சுள்ளான் நம்மகிட்டயே இப்படி பயமில்லாம பேசுறானே அப்படீன்னு நினைக்குறீங்களா தோழர்களே..?

ஹி.. ஹி.. எனக்குத்தான் என் அப்பன் முருகன் இருக்கானே..! அப்புறமெதுக்கு பயம்..? அவன் ஒருத்தனே போதும்..!

முருகா சரணம்.. முருகனடி சரணம்..!

வேல் வேல் வெற்றிவேல்..!

கந்தனுக்கு அரோகரா..!

முருகனுக்கு அரோகரா..!

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் - ஒரு அலசல்..!

12-04-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


அடி மேல் அடியாக இலங்கை தமிழர்களுக்கு விழுந்து கொண்டேயிருக்கிறது.


கடந்த ஓராண்டுக்கு முன்புவரையிலும் தனி ஈழம் என்கிற கோரிக்கைக்கும், உலகம் முழுவதிலும் இருக்கின்ற அகதிகளுக்குத் தாய் நாடு வேண்டும் என்கிற முழக்கங்களுக்கும் காரணகர்த்தாவாக இருந்த விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டது முதல் அடி..!

மகிந்த ராஜபக்சே எத்தனையோ கொடூரங்களை நிகழ்த்தியிருந்ததால் இந்த முறை ஜனாதிபதி பதவிக்கு அவரை வரவிடவே கூடாது என்ற நினைப்பில் இலங்கையில் உள்ள அனைத்து தமிழர் கட்சிகளும், தமிழரல்லாத கட்சிகளும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பைக் காட்டியும், ராஜபக்சேவின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.. இது இரண்டாவது..

இப்போது பாராளுமன்றத் தேர்தலின் மூலம் கிடைத்திருப்பது மூன்றாவது அடி..

இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத் தேர்தல் கடந்த எட்டாம் தேதியன்று நடைபெற்றது. 196 நேரடி பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான இந்தத் தேர்தலில் மொத்தம் 7620 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் சார்பாகவும், சுயேச்சைக் குழுக்களாகவும் போட்டியிட்டனர்.


சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் முதன் முறையாக இலங்கையின் 22 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தல் இதுதானாம்.

தேர்தலில் 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டுள்ளன. மிகக் கூடுதலாக திகாமடுல்ல மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகளும், 48 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டுள்ளன. ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரம் பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.


பிரபாகரனையும், விடுதலைப்புலிகள் அமைப்பையும் தீர்த்துக் கட்டிய ஒன்றையே தனது பிரதான சாதனையாக அதுவரையிலும் மக்கள் முன் வைத்து வந்திருக்கும் மகிந்தாவுக்கு இந்தத் தேர்தலிலும் அதேதான் பிரதான கோஷம். “நாட்டில் அமைதியை நிலை நாட்டியிருக்கிறேன். வேறென்ன வேண்டும் நமது நாட்டுக்கு?” என்ற ரீதியில் அவருடைய பிரச்சாரம் அவர் சார்ந்த சிங்கள இனத்து மக்கள் ரீதியில் வெகுவாக எடுபட்டிருந்தது.

இதனால்தான் ஜனவரி 26-ம் தேதியன்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டிருந்த 74 சதவிகித வாக்குகளில் அதிகப்படியானதை வென்று சரத்பொன்சேகாவை தோற்கடித்திருந்தார்.

அதேபோல் பாராளுமன்றத் தேர்தலிலும் தனது பிரபாகரன் சாதனையை மட்டுமே முன் வைத்து களத்தில் குதிக்க நினைத்தாலும், ஒருவேளை தனது கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் எதிர்க்கட்சிகளை கெஞ்ச வேண்டியிருக்குமே என்ற நினைப்பில் தமிழக, இந்திய பாணியில் கட்சிகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டார் மகிந்தா.

கடந்த ஆட்சிக் காலத்தில் சுமார் 35-க்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்களை கட்சி தாவ வைத்து, அவர்களுக்கு இலாகா இல்லாத அமைச்சர்கள் என்கிற அந்தஸ்தை கொடுத்து, 100-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பட்டியலோடு ஆட்சி செய்து, இலங்கையின் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றி, தனது ஆட்சியையும் காப்பாற்றிக் கொண்டு 35 வருட ஈழ யுத்தத்தை தற்காலிகமான ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்றால் மகிந்தாவை சாதாரணமாகவா எடை போட முடியும்..?


விடுதலைப்புலிகள் இருக்கின்றவரையில் அவர்களுக்காகத்தான் சிலருக்கு எம்.பி. தேர்தலில் சீட் கொடுத்து வைத்திருந்ததாகவும், வரும் தேர்தலில் அவர்களுக்கு சீட் இல்லை என்று சிலரைக் குறிப்பிட்டு பிரதான தமிழர் கட்சியான தமிழரசுக் கட்சி அறிவிக்க.. சீட் இல்லாமல் வெளியில் வந்தவர்களை அன்போடு தன்னிடம் அழைத்து அரவணைத்துக் கொண்டார் மகிந்தா..

அதுவரையிலும் தமிழ் மக்களின் துரோகியாக சித்தரிக்கப்பட்ட மகிந்தா அந்த நிமிடத்தில் இருந்து, தமிழரசுக் கட்சியில் சீட் இல்லாமல் வெளியே வந்த தமிழர்களுக்கு தேவதூதன் போலாகிவிட்டார். வெளியேற்றப்பட்ட தமிழ் எம்.பி.க்கள் ஒரு கட்சியை உருவாக்க அவர்களுடன் ஒரு கூட்டணியை வைத்துக் கொண்டார் மகிந்தா..!

இலங்கையின் வீரமிக்க சிங்களக் கட்சியும், மூன்றாவது பெரிய கட்சியுமான ஜே.வி.பி.யில் இருந்து விமல் வீரவன்ச தலைமையில் ஒரு டீமை மகிந்தா தன் கட்சிக்குக் கடத்திக் கொண்டுபோய் அவர்களுடனும் ஒரு கூட்டணி வைத்துக் கொண்டார்..!


மிச்சம், மீதியிருந்த ஜே.வி.பி. வேறு வழியில்லாமல் கடைசிக் கட்டத்தில் சரத் பொன்சேகாவுடன் கூட்டணி அமைத்து ஜனநாயக தேசிய முன்னணியாக தேர்தல் களத்தில் குதித்தது.

தேர்தல் நாளன்று நடந்த வன்முறைகளைவிடவும் அதிர்ச்சியை அளித்த விஷயம் வாக்குப் பதிவு சதவிகிதம்தான். இதனை இலங்கையின் அனைத்துக் கட்சிகளுமே எதிர்பார்த்திருக்கவில்லை. நாடு முழுவதிலுமே மொத்தமே 55 சதவிகித மக்களே வாக்களித்திருத்திருக்கிறார்கள்.


அதிலும் தங்களது தலைவிதியை நிர்ணயிக்கின்ற தேர்தல் என்று தெரி்ந்திருந்தும் யாழ் பகுதியில் வெறும் 18 சதவிகிதம் பேரே வாக்களித்திருந்தது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. இந்த சதவிகிதக் கணக்கே தமிழர் கட்சிகளின் வயிற்றில் கிலியை கிளப்பியிருந்தது. அது போலவேதான் நடந்தும்விட்டது.

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் ஆளும் கட்சியை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 117 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி 46 இடங்களையும் பழம் பெரும் தமிழர் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி 12 இடங்களையும் பெற்றிருக்கிறது.

இத்தேர்தலின்போது இந்தியத் திருநாட்டின் தேர்தல் விளையாட்டுக்களும், திருவிழாக்களும் இங்கேயும் அரங்கேறியிருக்கின்றன.

கண்டி மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் வாக்குச் சாவடியின் மீது தாக்குதல்.. சாவடிகளுக்குள் நுழைந்து போலி வாக்குளைப் பெட்டியில் திணித்தது.. வாக்குப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓடியது என்று சகலத்தையும் செய்து முடித்திருக்கிறார்கள்.


செய்திகளும், குற்றச்சாட்டுக்களும் உண்மை என்பதையறிந்து இந்த இரண்டு மாவட்டங்களின் தேர்தல் முடிவுகளை மட்டும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் தேர்தல் திணைக்கள அதிகாரிகள். என்னே ஒரு நல்ல அதிகாரிகள்..!

அதிலும் கண்டி மாவட்டத்தில் ஓட்டுப் போட வந்த நகர்ப்புற மக்களை ஒரு அரசியல் ரவுடிக் கும்பல் வழி மறித்து மிரட்டல் வேலைகளைத் தொடுத்துக் கொண்டேயிருந்ததாம். இதனால் வாக்குப் பதிவு மிக, மிக குறைந்துபோய்விட்டதாகப் புகார் சொல்கிறார் அம்மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்.


மேலும் “தமிழர்களுக்கு ஓட்டளித்தால் எப்படியும் நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம்.. தேர்தல் முடிந்த பின்பு உங்களுக்கு ஆப்புதான்.. என்று குண்டர்கள் சிலர் மிரட்டியதால்தான் பொதுமக்கள் ஓட்டளிக்க முன்வரவில்லை” என்றும் சொல்கிறார் மனோ கணேசன்.

கண்டி மாவட்டத்தில் நாவிலப்பட்டிய என்கிற ஊரில் இருக்கும் வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டுப் போட்டது.. பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடியது.. சூறையாடியது என்று அத்தனையும் நடந்திருப்பதால் மீண்டும் அந்தத் தொகுதியில் மறுவாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளதாம். இத்தொகுதியில் நடைபெறும் வாக்குப் பதிவில்தான் மனோ கணேசனின் எம்.பி. பதவி கனவு அடங்கியிருக்கிறது.

திருகோணமலைக்கு வடக்கே உள்ள தமிழ்க் கிராமமான கும்புறுபிட்டியில் இருந்த பூத்தில் உள்ளே நுழைந்த ஒரு கும்பல் வாக்குச் சீட்டுக்களை அள்ளிக் கொண்டு போனதையடுத்து அந்தத் தொகுதியில் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

இதனால் திருகோணமலைத் தேர்தல் தொகுதியின் முடிவை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதே மாவட்டத்தில் உள்ள மற்ற இரண்டு தேர்தல் தொகுதிகளான மூதூர் மற்றும் சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகளும் இதற்காக வெயிட்டிங்..

தமிழர்களின் பிரதானக் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் 5 இடங்களையும், வன்னிப் பிரதேசத்தில் 3 இடங்களையும், மட்டக்களப்பில் 3 இடங்களையும், பெற்றுள்ளது. திருகோணமலையில் இக்கட்சிக்கு 1 இடமே கிடைக்கும் என்கிறார்கள்.

திருகோணலை, கண்டி மாவட்ட முடிவுகள் வெளிவந்த பின்பு தேசியப் பட்டியல் இடங்களுக்கான எம்.பி.க்களில் யார், யாருக்கு எத்தனை என்பதும் தெரிய வந்துவிடும் என்கிறார்கள்.

இலங்கையின் அரசமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் தவிர, அக்கட்சி பெற்ற ஓட்டுக்களின் அடிப்படையில் கூடுதலாக தேசியப் பட்டியல் எம்.பி.க்களாக சிலர் பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்வார்கள். இந்தப் பட்டியலை அந்தந்த கட்சிகளே முடிவு செய்து கொள்ளலாம்.

அதன்படி பார்த்தால் இறுதி நிலவரப்படி மகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 145 இடங்களையும், ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி 55 இடங்களையும், தமிழரசுக் கட்சி 14 இடங்களையும், ஜனநாயக தேசிய முன்னணி 7 இடங்களையும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2004-ஆம் ஆண்டு 20-க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஜே.வி.பி. இம்முறை வெறும் 7 உறுப்பினர்களோடு திருப்திப்பட்டுக் கொள்ளப் போகிறது. சரத் பொன்சேகாவுடன் கூட்டணி வைத்து தென்னிலங்கையில் தங்களுக்கான ஆதரவுத் தளத்தை பெருக்கிக் கொள்ள நினைத்த அக்கட்சியின் அரசியல் வியூகம் படுதோல்வி அடைந்திருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தளவில் அக்கட்சி கடந்த தேர்தல்களில் பெற்றிருந்த வாக்குகளில் சுமார் 10 லட்சம் வாக்குகளை இத்தேர்தலில் இழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தலைநகரான கொழும்பு மாவட்டத்தில் மட்டும் கொழும்பு மத்தியத் தொகுதி, கொழும்பு வடக்குத் தொகுதி, கொழும்பு கிழக்குத் தொகுதி, கொழும்பு மேற்குத் தொகுதி. டெகிவளை தொகுதி, பொரளை தொகுதி என 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொழும்புவில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்ற இத்தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்திருக்கும் வாக்குகள் இலங்கை வாழ் தமிழர்களிடையே இருக்கின்ற பிரிவினையைத் தெளிவாகக் காட்டுகிறது.

மூத்தத் தமிழ்க் கட்சிகள் என்றும், ஆயுதம் தாங்காத அரசியல் கட்சி என்றும் பெருமை கூறி வந்த ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலை கூட்டணியும், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு ஜனநாயக வழிக்கு திரும்பியதாக கூறும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற கட்சிகள் இத்தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.

இத்தேர்தல் முடிவுகளால் இக்கட்சிகள் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தையும், வழிகளையும், கூட்டணிகளையும் மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன..

கட்சிகளே படுதோல்வியடையும்போது தனி மனிதர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன..? இலங்கையின் ஆறாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள், இலாகா இல்லாத அமைச்சர்கள் என்று மொத்தம் 57 எம்.பி.க்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
இவர்களில் நான்கு கேபினட் அமைச்சர்கள், ஐந்து துணை அமைச்சர்கள் மற்றும் ஐந்து, இலாகா இல்லாத அமைச்சர்கள் தங்களது பதவியை பறி கொடுத்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய வெளி விவகாரத் துறை அமைச்சராக இருக்கும் ரோஹித்த போகொல்லாகம. விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொக்குகே, சட்ட அமைச்சர் மிலிந்த மொறகொட, வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், பெட்ரோலியம் மற்றும் வள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் நஜீப் ஏ.மஜீத், நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர்களான வடிவேல் சுரேஷ், புத்திரசிகாமணி என்ற பிரபலங்கள் பலரும் இத்தேர்தலில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., இடதுசாரி முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பலரும் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று மகிந்தாவின் திடீர் ஆதரவோடு போட்டியிட்ட முன்னாள் தமிழ் எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் யாழ்ப்பாண மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளனர்.

இதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.க்களான சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா அங்கே சீட் கிடைக்காத கோபத்தில் இடதுசாரி முன்னணியின் குடைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளனர்.

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.க்களாக இருந்த சிவநாதன் கிஷோரும், கனகரட்ணமும் மகிந்தாவின் ஆதரவோடு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளனர்.

கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான தங்கேஸ்வரி, மகிந்தாவின் ஆதரவோடு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு தோற்றுப் போயிருக்கிறார்.

யாழ்ப்பாணம் .மாவட்டத்தில் இருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன், சிவஞானம் சிறீதரன் ஆகியோர் இவர்களில் சரவணபவன், சிறீதரன் ஆகியோர் புதுமுகங்களாம். இதேபோல் மட்டக்களப்பில் போட்டியிட்டு ஜெயித்திருக்கும் பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் என்ற இருவருமே புதுமுகங்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்னும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தோல்வியைத் தழுவியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி.க்களான மொஹமட் மஹ்ரூப், சபீக் ரஜாப்டீன், சாஹல ரத்னாயக்க, ஜோன் அமரதுங்க உள்ளிட்டோரும் தோல்வியடைந்துள்ளனர்.
அத்துடன், ஜே.வி.பி கட்சியைச் சேர்ந்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளனர்.
ஜே.வி.பி.யில் இருந்து விலகி தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டு, பின்னர் ஆளும் கட்சியில் இணைந்த முன்னாள் எம்.பி. நந்தன குணதிலக்க தோல்வியடைந்துள்ளார். ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் கிண்ணம் சின்னத்தில் போட்டியிட்ட ஜே.வி.பி.யின் முன்னாள் எம்.பி.க்கள் பலரும் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.


வெற்றி பெற்றவர்களில் முதன்மையானவர் ஜெனரல் சரத் பொன்சேகா. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பொன்சேகா 98,612 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். “பிரபாகரனின் மரணச் செய்தி கிடைத்தபோதும், புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்ற செய்தி கிடைத்தபோதும் பொன்சேகா எப்படி புன்முறுவல் பூத்தாரோ அதேபோல்தான் இப்போதும் இந்த வெற்றிச் செய்தி கிடைத்ததும் புன்சிரிப்பை உதிர்த்தார்..” என்று அவருடைய மனைவி பத்திரிகையாளர்களிடம் திருவாய் மலர்ந்திருக்கிறார்.. நாமும் வாழ்த்துவோம்..!


22 வயதேயான நாமல் ராஜபக்சே.. மகிந்தாவின் மூத்த புதல்வர்.. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதே தொகுதியில் போட்டியிட்ட மகிந்தாவின் அண்ணன் சமல் ராஜபக்சே, தம்பி மகன் நாமல் பெற்ற வாக்குகளில் பாதியளவே பெற்றாலும் அவரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

இலங்கையின் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டரான சனத் ஜெயசூரியா ஆளும் மகிந்தாவின் கட்சி சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 74352 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மகிந்தாவின் தம்பியான பசில் ராஜபக்சே கம்பஹா மாவட்டத்தில் 4,25,861 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இந்தப் பொதுத்தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளரும் இவர்தானாம்..

இலங்கையின் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்தத் தேர்தலில் 64 புதிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த தலா இருபது பேர் புதிதாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் வெற்றி பெற்றவர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார்.


“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி போதுமானதாக இல்லாவிட்டாலும்கூட, மக்களின் அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதற்கு மக்கள் கொடுத்துள்ள ஆதரவாகவே இதனைக் கருதுவதாக” ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா பி.பி.ஸி. தமிழோசைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“அரச ஆதரவும், பின்புலமும் ஈ.பி.டி.பி வேட்பாளர்களுக்கு இருந்த நிலையில், யாழப்பாண மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான இடங்களைப் பெற்றுள்ளதே?” என்று டக்ளஸிடம் கேட்கப்பட்டதற்கு “மக்கள் சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய தருணத்தில் தற்போது உள்ள போதிலும், தமக்கெதிராக ஊடகங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களே தமது கருத்துக்கள் மக்களைச் சென்றடைவதை தடுத்துள்ளதாக” கூறியிருக்கிறார் டக்ளஸ்.

“மக்கள் கொடுக்கும் அங்கீகாரத்துக்கு ஏற்ப ஜனாதிபதியுடன் கலந்துரையாடி மக்களுக்கான அரசியல் உரிமையை மிக விரைவில் பெற்றுக் கொடுக்கமுடியும்” என்று நம்மூர் அரசியல்வியாதிகளையே தோற்கடிக்கும்விதமாக நம்பிக்கைகளை அள்ளி வீசுகிறார் டக்ளஸ்.

அதே நேரத்தில், “தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைந்தமையே தமிழ் தேசியக் கட்சியின் பின்னடைவுக்குக் காரணம்” என்கிறார் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். தன்னுடைய தோல்விக்கான காரணத்தை தெரிவிக்காத சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசியக் கட்சியின் தோல்வியை மட்டும் குறிப்பறிந்து சொல்வது ஏன் என்றுதான் தெரியவில்லை.


"பெருவாரியான தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காத காரணத்தால்தான் பேரினவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் அமோக வெற்றி பெற்றிருப்பதற்குக் காரணமாகும். இனிவரும் தேர்தல்களின்போதாவது தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்று அட்வைஸும் செய்திருக்கிறார் சிவாஜிலிங்கம்.

பாவம் முள்ளிவாய்க்கால் போரின்போது தமிழகத்திலேயே கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இருந்து ஈழ ஆதரவு தலைவர்களிடையே நடந்து, நடந்து ஈழப் பிரச்சினையை மங்கிவிடாமல் பார்த்துக் கொண்ட இவருக்கு கிடைத்திருப்பது இந்தத் தோல்விப் பரிசுதான்..!

என்னதான் மகிந்தாவின் ஆளும் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுவிட்டாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியைப் பெற்றாக வேண்டும் என்கிற வெறியில் இருக்கிறார் மகிந்த ராஜபக்சே.

காரணம்.. வெரி சிம்பிள்.. அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும்.. எதற்காக அரசியலமைப்புச் சட்ட மாற்றம் என்றால், அது முழுக்க முழுக்க மகிந்தாவின் பொற்காலத்தை உருவாக்கத்தான்..!

தற்போதைய அரசியலமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி பதவி வகிக்கும் ஒருவர் இரண்டு முறைகளுக்கு மேல் அப்பதவியை வகிக்க முடியாது. இதனால்தான் சந்திரிகாவே வீட்டுக்குப் போனார். தானும் அதேபோல் வீட்டுக்குப் போனால் பாதுகாப்பில்லாமல் அடுத்த ஆறு மாதம் கூட தங்க முடியாது என்பதை மகிந்தா தெள்ளத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார். எனவேதான் அந்த விதிமுறையை உடைத்தெறிய நினைக்கிறார். எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவர் ஜனாதிபதி பதவியில் அமர முடியும் என்று அரசியலமைப்பை மாற்றுவதுதான் மகிந்தாவின் தற்போதைய லட்சியம்..!

தற்போதைய நிலையில் 2017 வரையிலும் மகிந்தா இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும். ஆனாலும் அதற்குப் பின்னும் தானே தலைவராக இருக்க விரும்புகிறார்போலும்.. இதனை நோக்கித்தான் அவரது அடுத்த அரசியல் ஸ்டெப் இருக்கும் என்கிறார்கள் இலங்கை அரசியல் பார்வையாளர்கள்.

கண்டி, திருகோணமலை ரிஸல்ட்டுக்குப் பிறகும், தேசியப் பட்டியல் எம்.பி.க்களை நியமித்த பிறகும் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டிக்கு மேலும் சில எம்.பி.க்கள் மகிந்தாவுக்குத் தேவைப்படலாம்.

அப்போது சென்ற காலக்கட்டத்தில் செய்ததைப் போல அமைச்சர் பதவியைக் காட்டி கட்சிகளை உடைத்து உறுப்பினர்களை இழுக்கின்ற வேலையைக் கச்சிதமாகச் செய்யத்தான் போகிறார் மகிந்தா.

இடையில் இப்போது புதிய திருப்பமாக இலங்கையின் புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களிடையே கருத்து மோதல் இருப்பதுபோல் செய்திகள் வெளியாகியுள்ளன.


நாட்டிலேயே அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கும் பசில் ராஜபக்சேதான் அடுத்த பிரதமர் என்று கட்சியில் ஒரு கோஷ்டி குரல் எழுப்பி வருகிறதாம். இதனால் பசிலைவிட மூத்தவர்களான டி.எம்.ஜயரட்ன, மைத்திரிபால சிறிசேன ஆகியோர்கள் மனக்கிலேசத்தில் இருப்பதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கி்ன்றன.

ஆனாலும் இளம் துருக்கியர் டீமைப் போல கட்சியில் பசிலுக்கு ஆதரவுக்களம் பெரிதும் இருப்பதால் அடுத்த பிரதமர் பசில்தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் தலைநகர பத்திரிகையாளர்கள். ஒருவேளை அது இல்லையெனில் நிச்சயம் வெளிவிவகாரத் துறை பசிலுக்குத்தான். அதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.

இனவாத அரசு, இனப் பிரச்சினையுள்ள நாடு என்றெல்லாம் சொல்லப்படும் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் முற்றாக முடிவடைந்து அடுத்து ஆட்சியாளர்கள் பதவியேற்கும் சூழலில் அனைவராலும் மறக்கப்பட்டுவிட்ட ஒன்று தனி தமிழீழம் என்கிற கோரிக்கைதான்.

முள்ளிவாய்க்காலோடு அது புதைக்கப்பட்டுவிட்டது என்றுதான் தோன்றுகிறது. இப்போதைய தமிழர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் நுழையவிருக்கும் தமிழரசுக் கட்சி தனித் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக அறிவித்தேவிட்டது. “தேசியத்தோடு இணைந்து கூட்டாட்சியாக இருக்கவே தாங்கள் பிரியப்படுகிறோம்” என்று சொல்கிறது அக்கட்சி.


ஆனாலும் அவர்களுக்குள் இருக்கின்ற ஒரே கவலை.. “தமிழர்களின் ஒரே பிரதிநிதி நாங்கள்தான்.. ஜனாதிபதி எங்களைத்தான் தமிழர்களின் பிரச்சினைகள் சார்பாக பேசுவதற்கு அழைக்க வேண்டும். அவர் அழைப்புக்காக காத்திருக்கிறோம்..” என்று இந்த இரு நாட்களில் ஈழத்தின் பல இடங்களில் பேசி முடித்து ஓய்ந்துவிட்டார் சம்பந்தன்..!

அழைப்பு விடுப்பதோ, அழைக்காமல் விடுப்பதோ, தனி ஈழம் கொடுப்பதோ, கொடுக்காமல் விடுவதோ.. இனி எல்லாமே ராஜபக்சேக்களின் கைகளில்தான்..!