விஸ்வரூபமான விஸ்வரூபம்..!

31-01-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"யார், யாருக்கோ சாவு வருது..!!!" - குறிச்சு வைச்சுக்குங்க.. யாருக்குன்னு கடைசியா சொல்றேன்..!

ஜனநாயக ரீதியில் தனக்கு ஆட்சி நடத்தவே தெரியாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் ஜெயலலிதா.! இவரது பாஸிஸ, அராஜக அரசியலை எதிர்த்தும், இஸ்லாமிய அமைப்புகள் என்று சொல்லிக் கொள்ளும் சில ரவுடிக் கும்பல்களையும் எதிர்த்து இப்போதுவரையிலும் சட்டத்தின் துணை கொண்டு மட்டுமே போராடி வரும் கமல்ஹாசன் என்னும் பிரியத்துக்குரிய கலைஞனுக்கு எனது சல்யூட்..!

அரசியல் வஞ்சத்தை அரங்கத்தில் நேரிடையாக நிறைவேற்றுவதில் ஜெயலலிதாவுக்கு நிகர் அவரேதான்..! வலம்புரி ஜான் என்னும் மதிப்புமிக்க எழுத்தாளரை அவமரியாதை செய்ய வேண்டி, அவர் பெற்ற மகள்கள் மூலமாகவே அவர் மீது கற்பழிப்பு வழக்கை பதிவு செய்ய வைத்த உத்தமத் தலைவி இவரே என்பதால் இது மாதிரியான அரசியல் அதிகாரத் திமிரில் ஆடுவது இவருக்கு ஒன்றும் புதிதல்ல..!

ஆனால் இப்போது இவர் எடுத்திருக்கும் ஆட்டம்தான் கொஞ்சம் புதுசு. ஒரு பக்கம் தனது தலை மீது தொங்கிக் கொண்டிருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு.. அதில் இருந்து தப்பிக்க வேண்டி தனது அனைத்து சக்தியையும் ஒருமனதோடு செலுத்திக் கொண்டிருக்கும் ஆத்தாவுக்கு கூடுதலாக கிடைத்துள்ள இணைப்பு வசதி வரும் பொதுத் தேர்தல்தான்..!

இதில் 40-க்கு 35 தொகுதிகளையாவது முழுமையாகப் பெற்றுவிட்டு, இதன் மூலம் மத்தியில் தனது ஆதரவில்லாமல் புதிய பிரதமர் உருவாக முடியாது என்னும் சூழலை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒருவேளை தானே பிரதமராகலாம்.. அல்லது பெங்களூர் கோர்ட் சிக்கல்களை உடைத்தெறியும் அளவுக்கு நட்பான ஒருவரை கொண்டு வர செய்யும் உத்தியை துழாவிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா..! இதற்கு இப்போதைக்கு அவருக்குத் தேவை ஒட்டு மொத்த தமிழகத்தின் ஆதரவு.. ஏற்கெனவே மின்வெட்டு பிரச்சினையில் மக்கள் ஆதரவு அதோ கதியாக அந்தரத்தில் இருக்க.. போதாக்குறைக்கு காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடகமும், காங்கிரஸும் செய்யும் தில்லாலங்கடி வேலையினால் விவசாயிகளின் வாயில் தினமும் வெந்து போகும் வெந்தயமாக தான் இருப்பதும் ஆத்தாவுக்கு தெரிந்துதான் இருக்கிறது..! ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு வித்தியாசத்தை கூட்டியோ, குறைத்தோ வெற்றி தோல்விக்கு வழி வகுப்பது சிறுபான்மையினரான இஸ்லாமிய பெருமக்கள் என்பதை தாத்தாவும், ஆத்தாவும் அறிந்துதான் வைத்திருக்கிறார்கள்..!

இவர்களது ஆதரவை ஒட்டு மொத்தமாக கைப்பற்ற என்ன வழி என்று யோசனையில் தானாகவே வந்து சிக்கியிருக்கிறது விஸ்வரூபம். கூடவே ஜெயல்லிதாவின் இயல்பான கோபம், ஆவேசம், பழி வாங்கும் உணர்வுகளுக்கு ஏற்ப  சேனல் ரைட்ஸ் விவகாரம் வேறு வெடித்து திசை திரும்பி விஜய் டிவிக்கு போய்விட.. இந்தக் கோபமும் ஒன்று சேர்ந்து இப்போது ஆத்தாவின் நேரடி உத்தரவில்.. அவரது கண் அசைவில்தான் கமல்ஹாசன் என்னும் கலைஞன் போராடிக் கொண்டிருக்கிறார்..!


கடந்த நவம்பர் 7-ம் தேதியன்று சத்யம் தியேட்டரில் தனது விஸ்வரூபத்தை பதிவு செய்திருக்கும் புதிய தொழில் நுட்ப முறையான ஆரோ 3-டி முறையைப் பற்றி பத்திரிகையாளர்களுக்கு விளக்கிச் சொல்லிவிட்டு அவசரம், அவசரமாக கோட்டைக்கு ஓடோடிச் சென்று ஆத்தாவின் முன்பு பவ்யமாக உட்கார்ந்து எழுந்த வந்த கமலை நினைக்கும்போது அன்றைக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது..! அவர் எப்போதும் வருடாவருடம் சந்திக்கும் கருணாநிதியைக் கூட அன்றைக்கு அவர் சந்திக்கவில்லை..! 

ஜெயா டிவியுடன் சேனல் ரைட்ஸுக்காக ஒப்பந்தம் போட்டு முடித்து கையெழுத்தாகும் முன்பேயே டிடிஹெச் அறிவிப்பை கமல் வெளியிட்டபோது அவர்களும்தான் சற்று சங்கடப்பட்டார்கள். ஆனாலும் மூன்று நகரங்களில் நடந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வேண்டிய அனைத்து செலவுகளையும் செய்து அதனை தங்களது தொலைக்காட்சியில் வெளியிடவும் செய்தார்கள். பின்பு எப்போது பிரச்சினை துவங்கியது..?

சின்னப் பயல் சிதம்பரத்தை ஆத்தாவுக்கு எப்போதுமே பிடிக்காதுதான்.. இருவருக்குமே நன்கு படித்தவர்கள் என்ற திமிரும்.. இயல்பான ஈகோவும் இன்றுவரையில் இருக்கத்தான் செய்கிறது.. ஒரு விழாவுக்கு அழைத்தால் போனோம்.. வந்தோம் என்றெல்லாம் இல்லாமல் ரஜினியை போலவே அன்றைக்கு ரொம்பவே சிதம்பரத்திற்கு ஜோஸியம் பார்த்துவிட்டார் கமல்.. அரங்கம் நிரம்பி வழிந்து தரையில் உட்காரக்கூட இடமில்லாத நிலையில் இருந்த, அந்தக் கூட்டத்தைப் பார்த்து வார்த்தைகள் ஸ்லிப்பானதுபோல் கமல் பேசிய பேச்சுக்கள்தான் அதன் பின்னான இன்றுவரையிலான தரங்கெட்ட சூழலுக்கு காரணம் என்று யூகிக்கவும் முடிகிறது..!

விஸ்வரூபம் பற்றிய சர்ச்சைகள் பெரிதும் வந்து கொண்டிருந்த நேரத்தில், டிடிஹெச் சமயத்திலேயே இந்த முஸ்லீம் பிரச்சனையும் எழுப்பப்பட்டது..! ஆனால் “படத்தில் ஒன்றுமே இல்லை.. படம் பார்த்த பின்பு குற்றம் சொல்பவர்கள் அண்டா அண்டாவாக பிரியாணிதான் சாப்பிட வேண்டி வரும்..” என்றுதான் கமல் சொல்லியிருந்தார்.  அரசின் நடவடிக்கைகள் நியாயமாக, நடுநிலையாக இருக்கும் அவர் அப்போது பெரிதும் நம்பியிருந்தார்..!

அந்த நம்பிக்கையில் மண்ணையள்ளிப் போட்டு, தான் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்படி இன்றைக்கு விஸ்வரூபத்தை தமிழ்நாட்டில் திரையிட விட மாட்டேன் என்ற சபதத்தையும், வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வர வேண்டும் என்றவரை புரட்சித் தலைவிக்கு நன்றி என்றும் சொல்ல வைப்பேன் என்ற ஆணவச் செருக்கில் இன்றைக்கு தனது அராஜகத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருக்கிறார் ஆத்தா..!

தொடர்ந்து இவைகளையே பேசுவதற்கும், எழுதுவதற்கும், படிப்பதற்கும் எரிச்சலாகத்தான் உள்ளது. ஆனால் பேசாமலும், எழுதாமலும் இருக்கத்தான் முடியவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டிருப்பவர் நான் பிறந்து வளர்ந்த காலத்தில் இருந்தே என்னை மகிழ்வித்தவர்.. என் கூடவே பயணப்பட்டவர்.. என் துக்கத்தில் பங்கு கொண்டவர்.. என்னை பண்படுத்தியவர்.. எனக்குச் சிலவற்றைச் சொல்லிக் கொடுத்தவர்.. என்றெல்லாம் பல முகங்களைக் கொண்ட ஒரு நல்ல கலைஞனாக இருப்பதினால் என்னுடைய இயலாமை.. அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமே என்ற ஆதங்கமே மீண்டும், மீண்டும் இது பற்றி எழுத வைக்கிறது..!

முஸ்லீம் அமைப்பினர் சொல்லும் தங்கள் மனம் புண்பட்டிருக்கிறது என்பதையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கதை நடப்பது ஆப்கானிஸ்தானில்.. அங்கே இருப்பவர்கள் முஸ்லீம்கள்.. தாலிபான்கள் தீவிர முஸ்லீம்கள்.. இஸ்லாத்தை பரப்புபவர்கள்..! இவர்களைக் காட்டும்போது அவர்கள் குரான் படிப்பது போலவும், அதற்குப் பிறகு போர்க்களத்தில் பணியாற்றுவது போலவும் காட்டத்தான் வேண்டும். எவ்வளவு போர்க் காலத்திலும் ஐந்து வேளை தொழுகையை அவர்கள் கைவிட்டதில்லை என்று பல இடங்களில் படித்திருக்கிறேன்.. இதில் தொழுகையை காட்டுகிறார்கள்.. குரானை காட்டுகிறார்கள்.. அப்புறம் துப்பாக்கியையும் காட்டுகிறார்கள்.. சுடுவதையும் காட்டுகிறார்கள் என்று சின்னத்தனமாக ஒப்பாரி வைப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல..!

இந்திய இஸ்லாமியர்களைப் பற்றி படத்தில் எதையும் அவர் குறிப்பிடவில்லை என்று படம் பார்த்தவர்கள் சொல்லிவிட்டார்கள்.. ஆப்கான் தாலிபான்களை பற்றி கூறினால், படமெடுத்தால், இங்கே உள்ளவர்களுக்கு ஏன் வலிக்கிறது என்றுதான் தெரியவில்லை. அமைதியே உருவான புத்தரின் அந்த மகா வடிவத்தை.. அற்புதமான கலைச் சிற்பத்தையே தங்களது மார்க்கத்துக்கு எதிரானது என்று சொல்லி குண்டு வைத்து இடித்த இந்த உத்தமர்களை விமர்சிக்கக் கூடாது என்றால் இது சிரிப்பாக இல்லை..?

பகவத்கீதை, குரான், பைபிள் - இந்த மூன்றுமே படிப்பதற்காக மட்டுமே இருப்பவை.. இவற்றை வைத்துக் கொண்டு வேறு என்ன செய்வது..? தலகாணிக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ளலாம்..! இதில் இருக்கும் கதைகளை படித்துவிட்டு இது மாதிரி நம்மால இருக்க முடியாது.. ஆனால் இருக்கணும் என்று நினைக்கலாம்..! ஆனால் இதையே உயிரைவிட பெரிசாக நினைப்பதெல்லாம் அவரவர் நிலைப்பாடு.. விருப்பம்.. இதனை அவரவர்கள் தங்களது வீட்டிற்குள் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்.. தெருவுக்கு வந்துவிட்டால் பக்கத்து வீட்டில் வேறொரு இந்தியன் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு தனது விருப்பத்தை ஓரங்கட்டுவதுதான் சிறந்த மதச் சார்பின்மை..!

குண்டு வைக்கும்போது குரானை காட்டுகிறார்கள்.. முஸ்லீம்களை காட்டுகிறார்கள். இதனாலேயே முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற பொருளாகிவிடுகிறது என்கிறார்கள்..! நானே இதனைப் பற்றி பல முறை, பல சினிமா விமர்சனங்களில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் அதனைக் குறிப்பிட முடியாமைக்குக் காரணம் கதையின் களன்தான்..! ஏன் முஸ்லீம்களில் திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கற்பழித்தவர்கள்,  கொலைகாரர்கள் யாருமே இல்லையா..? அனைவருமே ஒழுக்கமாகத்தான் வாழ்கிறார்களா என்ன..? 

தமிழகத்து சிறைகளில் குண்டு வெடிப்பு கைதிகளைத் தவிர மற்ற பிரச்சினைகளிலும் முஸ்லீம்கள் கைதாகியிருக்கிறார்களே.. வாராவாரம் திருட்டு விசிடி பிரச்சினையில் கைதாகுபவர்களில் 99 சதவிகிதத்தினர், முஸ்லீம்களாத்தான் இருக்கிறார்கள்..!  ஒருவரைக் குறிப்பிட்டால், அந்த சமூகத்தையே சொல்வது போலாகிவிடுமா..? அப்படிப் பார்த்தால் இதுவரையில் வந்த எத்தனையோ தமிழ்த் திரைப்படங்களில் கற்பழிக்கும் காட்சிகளில் நடித்தவர்களில் 99 சதவிகிதத்தினர் இந்து பெயர்கள் கொண்ட வில்லன்களே.. அப்படியனால் அனைத்து இந்துக்களும் கற்பழிக்கும் ஆசை கொண்ட வெறியர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா..? 

இது சினிமா.. இரண்டரை மணி நேர ஒரு மாயாஜாலத்தை.. ஒரு கற்பனைக் கதையை.. ஒரு இயக்குநர் தனது படைப்புத் திறமையினால் நடந்தது போல் கொண்டு வந்து காட்டுகிறார்..! நிஜத்தில் நடக்காததை..  அல்லது நடந்ததை.. நாம் உணராததை.. நம் கண் முன்னே காட்டுவதற்குப் பெயர்தானே படைப்பு.. அவன்தானே படைப்பாளி.. இவனை இந்தக் கதையைத்தான் படமாக்க வேண்டும்.. அந்தக் கதையை இப்படி எடுக்கக் கூடாது என்றெல்லாம் தடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவனுக்குக் கொடுத்திருக்கும் கருத்துரிமை, பேச்சுரிமையை தடை செய்வது போலாகாதா..?

ஒருவரின் கருத்து மற்றவருக்கு கேலியாக இருக்கலாம்.. இன்னொருவருக்கு முட்டாள்தனமாக இருக்கலாம்.. அது அவரவர் விருப்பம்.. இதில் தனி மனித தலையீடு இருக்கவே கூடாது..! மேலே சொன்னபடி குரானை என்னிடம் கொடுத்தால் நான் தலைக்கு வந்து தூங்குவேன்.. கீதைக்கும் இதே கதிதான்.. ஆனால் ஒரு சிலர் அதனை அட்டை டூ அட்டை படிப்பார்கள்.. சிலர் அதனை பரப்புரையே செய்வார்கள்.. ஆனால் அவர்கள் செய்வதுதான் சரி..? நானும் அதைத்தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி..?

இதுவரையிலும் வந்த எத்தனையோ சினிமாக்களில் இந்து கடவுள்களை கேலியாகவும், கிண்டலாகவும் செய்து எத்தனையோ காட்சிகள் வந்திருக்கின்றன.. யாரும் இது பற்றி கண்டு கொண்டதில்லை.. சில வேலை வெட்டியில்லாத இந்து அமைப்புகள் தலைதூக்கும்வரை..! மக்களுக்குத் தெரியும்.. இது கிண்டல்தான் என்று.. இப்படியெல்லாம் கிண்டல் செய்தால் முருகன் வேல் வைச்சு கண்ணைக் குத்துவான் என்றோ.. சிவன் சூலாயுதத்தைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவான் என்றோ அவர்கள் நினைப்பதில்லை.. இவ்வளவு ஏன்..? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டிதொட்டியெங்கும் ஓடிக் கொண்டிருந்த பிட்டு படங்களின் தயாரிப்பாளர்களில் பெரும்பாலோர் தங்களது பட நிறுவனத்திற்கு லஷ்மி மூவிஸ், முருகன் பிலிம்ஸ் என்ற ரீதியில் கடவுளர் பெயர்களைத்தான் வைத்திருந்தார்கள்..! தொழில் வேறு.. பக்தி வேறு என்பது அவர்களது அபிப்ராயம்.. இதனால்தான் இப்போதும் சென்னையில் மாநகராட்சியின் கக்கூஸ்களை ஏலத்தில் எடுத்தவர்கள்கூட கக்கூஸ் வாசலில் திருப்பதி பெருமாளின் படத்தை வைத்திருக்கிறார்கள்..

“ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருக்கு. எங்களுக்கு இல்லை. இஸ்லாமும், குரானும் எங்களுக்கு உயிர் போல..” என்னும் அன்பர்கள், அதனைத் தாங்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் நியாயமும் கூட..! நாங்கள் யாரும் படம் பார்க்க வாருங்கள் என்று யார் கையையும் பிடித்திழுக்கவில்லை.. எப்போதும் போலவே ஒரு சராசரி சினிமா ரசிகன், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டர் வாசலிலேயே பிடித்திருந்தால் பிடித்தது என்றும், இல்லையென்றால் உதட்டைப் பிதுக்கிவிட்டும் அடுத்த வேலையைப் பார்த்து போய்விடுவான்..!

இந்த ஒரு படத்தை பார்த்து முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று நினைக்க இங்கே யாரும் முட்டாள்கள் இல்லை..! அப்படி நினைத்திருந்தால் இப்போதுபோல் முஸ்லீம் பெருமக்கள் தமிழகத்தில் இந்த அளவுக்கு நிம்மதியுடன் வாழ முடியுமா..? 

அரசியல்வியாதிகள் எங்கே புகுந்தாலும் அது உருப்படாது என்பதற்கு இந்த அமைப்புகளும் ஒரு உதாரணம்..! குரூப் குரூப்பாக பிரிந்து நிற்கும் தலைவர்கள்.. தங்களது சுய லாபத்துக்காக.. அடுத்தத் தேர்தலில்  தி.மு.க., அ.தி.மு.க. அணியில் சேர துடிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்.. எப்படியாவது கூட்டணி வைத்து எம்.எல்.ஏ.வாகிவிட வேண்டும்.. எம்.பி.யாகிவிட வேண்டும் என்று நினைக்கும் கொள்ளையர்கள்தான் இப்போது அப்பாவி முஸ்லீம்களை முன் வைத்து இந்தப் பிரச்சினையை இழுத்துச் செல்கிறார்கள்.! என்னதான் தலை, தலையாய் அடித்து கூப்பாடு போட்டாலும் ஆத்தாவைவிட்டால் தாத்தா.. தாத்தாவைவிட்டால் ஆத்தா என்றே தேர்வு செய்து வரும் பொதுமக்களில் ஒரு பிரிவினரான இஸ்லாமிய பெருமக்களில் ஒரு சிலரும் இவர்களுக்கு ஆதரவளிப்பது அவர்களது அறிவீனமே..!  

இவர்களது எதிர்ப்பை நான் தவறென்று சொல்லவில்லை. இவர்களது கருத்துரிமையும், பேச்சுரிமையும் கமலுக்கு உள்ளதுபோலவே இருக்கும்தான். ஆனால் அதனை இவர்கள் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்..? தியேட்டர்கள் முன் ஓரிடத்தில் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் செய்யலாம்.. உண்ணாவிரதம் இருக்கலாம்.. கோஷங்கள் எழுப்பலாம்.. “இந்தப் படத்தை நாங்கள் எதற்காக எதிர்க்கிறோம்.. புறக்கணிக்கிறோம்..” என்பதை பிட் நோட்டீஸாக அச்சடித்து படம் பார்க்க வரும் ரசிகர்களின் கைகளில் கொடுக்கலாம்.. இதுதான் ஜனநாயக ரீதியிலான ஒரு போராட்ட வழிமுறை..  இதனைவிட்டுவிட்டு “படத்தையே திரையிட விட மாட்டோம்.. உயிரைக் கொடுத்தாவது தடுப்போம்.. ரகளையில் ஈடுபடுவோம்.. தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம்..” என்றெல்லாம் செய்வது ரவுடித்தனம்..! இவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் இந்தச் செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.. விஸ்வரூபத்தில் இவர்கள் இதையே செய்திருக்கலாம்..!

கமல் இன்று முதலீடு செய்திருக்கும் 100 கோடி ரூபாய் அடுத்த வருடம் இதே தமிழ்ச் சினிமாவில் இறக்குமதி செய்யப்பட்டு பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும். 30 ஆயிரத்துக்கும் மேலான தொழிலாளர்களைக் கொண்டு, 1 லட்சத்திற்கும் மேலான சார்நிலை தொழிலாளர்களைக் கொண்ட தமிழ்ச் சினிமா துறையின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் ஒரு போராட்டத்தை இஸ்லாமிய அன்பர்களின் ஆதரவுடன் சில ரவுடிக் கும்பல்கள் இப்படிச் செய்ய நினைப்பது  ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல..!

கமல்ஹாசனை தவிக்க விட வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் ஜெயலலிதாவின் அரசியல் சூழ்ச்சியில் இஸ்லாமிய அன்பர்களும்  சிக்கிக் கொண்டது அவர்களுக்கே தெரியவில்லைபோலும்.. இன்றுவரையிலும் சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.. இதுவரையிலும் நான் ஒரு இந்து என்று நினைப்பே வராமல் இருந்த எனக்கு, ஒரு கணத்தில் “இவுங்க மட்டும்தான் சாமி கும்பிடுறாங்களா..? இவங்களுக்கு மட்டும்தான் புத்தகம் இருக்கா..? இவங்களுக்கு மட்டும்தான் பாசம் இருக்கா..? நமக்கெல்லாம் மதம் இல்லையா..?” என்ற ரீதியில் யோசிக்க வைத்துவிட்டார்கள்..! இது என் ஒருவனுக்கு மட்டுமே வந்ததில்லை.. தமிழ்நாட்டில் பெருவாரியான சினிமா ரசிகர்களுக்கு வந்துவிட்டது.. இந்த முட்டாள்தனமான போராட்டத்தினால் இஸ்லாமிய இயக்கங்கள் சாதித்தது இதைத்தான் என்று உறுதியுடன் சொல்லலாம்..!

தன்னுடைய சொத்து முழுவதையும் பணயம் வைத்து ஹாலிவுட் படங்களுக்கு இணையான தொழில நுட்ப நேர்த்தியுடன் ஒரு கலைப்படைப்பை படைத்திருக்கும் கமல் என்னும் கலைஞனை வாழ்த்த உங்களுக்கு மனமில்லாமல் இருக்கலாம்.. அல்லது அது ஒரு கலைத்திறன் சார்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத மூளையும் உங்களுக்கு இருக்கலாம்.. ஆனால் கமல்ஹாசன் என்ற மனிதனுக்கும் தனி கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு என்பதையாவது சற்று சிந்தித்துப் பாருங்கள்..! உங்களது குரான் எப்படி மேம்பட்டது என்று சொல்ல உங்களுக்கு உரிமையுண்டோ, அதே அளவுக்கு அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லவும் அவருக்கும் உரிமையுண்டு..!

நேற்று இரவில் உயர்நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பை பார்த்துவிட்டு உடனுக்குடன் அதனை எதிர்த்து அப்பீல் செய்ய துடியாய் துடித்த இந்த அரசாங்கத்தின் தவிப்பைப் பார்த்தவுடன் “அடப்பாவிகளா..? எம்.ஜி.ஆர். என்ற இதயக்கனி உருவாக்கிய அ.தி.மு.க.வின் பெயரை வைத்துக் கொண்டு தமிழ்ச் சினிமாவை வீழ்ச்சிக்கு கொண்டு போகிறீர்களேடா பாவிகளா..” என்ற என் புலம்பலுக்கு இப்போதுவரையிலும் நல்ல முறையில் தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் ஆத்தா..!

தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வரும் திங்கள்கிழமைக்குள் படத்தை ரிலீஸ் செய்ய நினைத்திருக்கும் கமலின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன். உச்சநீதிமன்றமாவது ஒரு கலைஞனின் மனதைப் புரிந்து கொண்டு செயல்பட்டு தீர்ப்பளிக்கும் என்றே நம்புகிறேன்..!

உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகலை உடனுக்குடன் தர விடாமல் இழுத்தடித்து.. வழக்கில் கமலுக்காக ஆஜராகிய எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரது மகனான பி.எஸ்.ராமனை மிரட்டி.. காலையில் தியேட்டர்களில் தவியாய் தவிப்புடன் திரண்டிருந்த ரசிகர்களை போலீஸை வைத்து துரத்தியடித்து.. சில தியேட்டர்களில் போலீஸ் துணையுடன் பெட்ரோல் குண்டுகளை வீச வைத்து.. இந்தக் குண்டுகள் வீசப்பட்ட 15 நிமிடத்தில், அந்தச் செய்தியை வாதிட்டுக் கொண்டிருந்த உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளிடம் புகாராக பதிவு செய்து.. சட்டம் ஒழுங்கு கெட்டு விடும். அதனைக் கட்டுப்படுத்தும் அறிவும், ஆற்றலும் எங்க சி.எம்.முக்கு இல்லவே இல்லை என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டு.. பாதிக்குப் பாதி நீதியை அளித்துக் கொண்டிருக்கும் இந்த நீதிபதிகளிடம் மீண்டும் தடை என்று உத்தரவை வாங்கிவிட்டுத்தான் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் ஆத்தாவும், அவருடைய சட்டம் படித்த தொண்டரடிப் பொடியாள்வார்கள்..!

இதே வேகத்தை.. துடிப்பை.. தனது சொத்துக் குவிப்பு வழக்கின் மீதும் செலுத்தி விரைவாக.. ஒரு மாதத்திற்குள்ளாக வழக்கு விசாரணையை முடிக்க வைத்து.. நான் குற்றமற்றவள் என்று நிரூபித்து வெளியே வருவேன்னு சொல்ல இந்தம்மாவுக்கு வக்கில்லை.. அறிவில்லை.. ஆனால் ஒரு நல்ல கலைஞனை அவமானப்படுத்த, அழித்தொழிக்க, மட்டும் துடியாய் துடிக்கும் இந்தக் கேவலமான, வெக்கங்கெட்ட, கேடுகெட்ட அரசியல்தனத்தையெல்லாம் பார்க்கத்தான் வேண்டுமா..? இன்னும் எத்தனை முறைதான் இப்படியே எழுதுவது.. பேசுவது..? இந்தக் கொடுமையையெல்லாம் பார்க்குறதுக்கு பதிலா மேல போய்ச் சேர்ந்தா நிம்மதி கிடைக்மேன்னும் அடிக்கடி எனக்குத் தோணுது.. இதுக்காகத்தான் முதல் வரியில் அந்த வார்த்தைகள்..!

2013- பத்ம விருதுகள் - எஸ்.ஜானகிக்கு பத்மபூஷன்..!


25-01-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.. இதில் 6 பேர் மட்டுமே தமிழகத்துக்காரர்கள்..! 

நமது இசைக் குயில் எஸ்.ஜானகிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. 

மதுரையின் தியாகராஜா மில்ஸ் அதிபர் ஆர்.தியாகராஜனுக்கும் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது..!

Lakshmi Narayana Sathiraju,  S.K.M Maeilanandhan, Ms. Rajshree Pathy, Prof. (Dr.) T.V. Devarajan  இவர்கள் நால்வருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் ராஜ்ஸ்ரீபதி, சர்க்கரை ஆலை அதிபர் என்று தெரியும். மற்றவர்கள் யார் என்று தெரியவில்லை..!

நம்ம ஸ்ரீதேவிக்கும் பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா கோட்டாவில்..!

இவர்களைத் தவிர சினிமாக்காரர்கள் என்று பார்த்தீர்களேயானால், டி.ராமாநாயுடு, ஷர்மிளா தாகூர், மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணா ஆகியோருக்கு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி நடிகர் நானா படேகர், மலையாள நடிகர் மது(அடப்பாவிகளா.. இவருக்கே இப்பத்தானா..?) சென்ற வருடம் இளையராஜாவின் இசையில் வெளியான ஸ்ரீராமராஜ்யம் படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பாபு ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.


MINISTRY OF HOME AFFAIRS PRESS NOTE

Padma Awards - one of the highest civilian awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri. The Awards are given in various disciplines/ fields of activities, viz.- art, social work, public affairs, science and engineering, trade and industry, medicine, literature and education, sports, civil service, etc. ‘Padma Vibhushan’ is awarded for exceptional and distinguished service; ‘Padma Bhushan’ for distinguished service of high order and ‘Padma Shri’ for distinguished service in any field. The awards are announced on the occasion of Republic Day every year.

2. These awards are conferred by the President of India at ceremonial functions which are held at Rashtrapati Bhawan usually around March/ April every year. This year the President of India has consented to confer Padma Awards to 108 persons as per the list below. The list comprises of 4 Padma Vibhushan, 24 Padma Bhushan and 80 Padma Shri Awardees. 24 of the awardees are women and the list also includes 11 persons from the category of foreigners, NRIs, PIOs and Posthumous awardees.

Padma Vibhushan

Sl No. Name Discipline State/ Domicile

1. Shri Raghunath Mohapatra Art Orissa
2. Shri S. Haider Raza Art Delhi
3. Prof. Yash Pal Science and Engineering Uttar Pradesh
4. Prof. Roddam Narasimha Science and Engineering Karnataka

Padma Bhushan

Sl No. Name Discipline State/ Domicile

1. Dr. Ramanaidu Daggubati Art Andhra Pradesh
2. Smt. Sreeramamurthy Janaki Art Tamil Nadu
3. Dr. (Smt.) Kanak Rele Art Maharashtra
4. Smt. Sharmila Tagore Art Delhi
5. Dr. (Smt.) Saroja Vaidyanathan Art Delhi
6. Shri Abdul Rashid Khan Art West Bengal
7. Late Rajesh Khanna Art Maharashtra #
8. Late Jaspal Singh Bhatti Art Punjab #
9. Shri Shivajirao Girdhar Patil Public Affairs Maharashtra
10. Dr. Apathukatha Sivathanu Pillai Science and Engineering Delhi
11. Dr. Vijay Kumar Saraswat Science and Engineering Delhi
12. Dr. Ashoke Sen Science and Engineering Uttar Pradesh
13. Dr. B.N. Suresh Science and Engineering Karnataka
14. Prof. Satya N. Atluri Science and Engineering USA *
15. Prof. Jogesh Chandra Pati Science and Engineering USA *
16. Shri Ramamurthy Thyagarajan Trade and Industry Tamil Nadu
17. Shri Adi Burjor Godrej Trade and Industry Maharashtra
18. Dr. Nandkishore Shamrao Laud Medicine Maharashtra
19. Shri Mangesh Padgaonkar Literature & Education Maharashtra
20. Prof. Gayatri Chakravorty Spivak Literature & Education USA*
21. Shri Hemendra Singh Panwar Civil Service Madhya Pradesh
22. Dr. Maharaj Kishan Bhan Civil Service Delhi
23. Shri Rahul Dravid Sports Karnataka
24. Ms. H. Mangte Chungneijang Mary Kom Sports Manipur


Padma Shri

Sl No. Name Discipline State/ Domicile


1. Shri Gajam Anjaiah Art Andhra Pradesh
2. Swami G.C.D. Bharti alias Bharati Bandhu Art - Chhattisgarh
3. Ms. B. Jayashree Art Karnataka
4. Smt. Sridevi Kapoor Art Maharashtra
5. Shri Kailash Chandra Meher Art Orissa
6. Shri Brahmdeo Ram Pandit Art Maharashtra
7. Shri Vishwanath Dinkar Patekar alias Nana Patekar Art Maharashtra
8. Shri Rekandar Nageswara Rao alias Surabhi Babji Art Andhra Pradesh
9. Shri Lakshmi Narayana Sathiraju Art Tamil Nadu
10. Smt. Jaymala Shiledar Art Maharashtra
11. Shri Suresh Dattatray Talwalkar Art Maharashtra
12. Shri P. Madhavan Nair alias Madhu Art Kerala
13. Shri Apurba Kishore Bir Art Maharashtra
14. Shri Ghanakanta Bora Borbayan Art Assam
15. Smt. Hilda Mit Lepcha Art Sikkim
16. Smt. Sudha Malhotra Art Maharashtra
17. Shri Ghulam Mohammad Saznawaz Art Jammu and
Kashmir
18. Shri Ramesh Gopaldas Sippy Art Maharashtra
19. Ms. Mahrukh Tarapor Art Maharashtra
20. Shri Balwant Thakur Art Jammu &
Kashmir
21. Shri Puran Das Baul Art West Bengal
22. Shri Rajendra Tikku Art Jammu &
Kashmir
23. Shri Pablo Bartholomew Art Delhi
24. Shri S. Shakir Ali Art Rajasthan
25. Sh. S.K.M Maeilanandhan Social Work Tamil Nadu
26. Ms. Nileema Mishra Social Work Maharashtra
27. Ms. Reema Nanavati Social Work Gujarat
28. Ms. Jharna Dhara Chowdhury Social Work Bangladesh *
29. Late Dr. Ram Krishan Social Work Uttar Pradesh #
30. Late Manju Bharat Ram Social Work Delhi #
31. Prof. Mustansir Barma Science and Engineering Maharashtra
32. Shri Avinash Chander Science and Engineering Delhi
33. Prof. Sanjay Govind Dhande Science and Engineering Uttar Pradesh
34. Prof. (Dr.) Sankar Kumar Pal Science and Engineering West Bengal
35. Prof. Deepak B. Phatak Science and Engineering Maharashtra
36. Dr. Mudundi Ramakrishna Raju Science and Engineering Andhra Pradesh
37. Prof. Ajay K. Sood Science and Engineering Karnataka
38. Prof. Krishnaswamy Vijayraghavan Science and Engineering Karnataka
39. Dr. Manindra Agrawal Science and Engineering Uttar Pradesh
40. Dr. Jayaraman Gowrishankar Science and Engineering Andhra Pradesh
41. Prof. Sharad Pandurang Kale Science and Engineering Maharashtra
42. Smt. Vandana Luthra Trade and Industry Delhi
43. Ms. Rajshree Pathy Trade and Industry Tamil Nadu
44. Shri Hemendra Prasad Barooah Trade and Industry Assam
45. Shri Milind Kamble Trade and Industry Maharashtra
46. Ms. Kalpana Saroj Trade and Industry Maharashtra
47. Dr. Sudarshan K. Aggarwal Medicine Delhi
48. Dr. C. Venkata S. Ram alias Chitta
Venkata Sundara Ram Medicine Andhra Pradesh
49. Dr. Rajendra Achyut Badwe Medicine Maharashtra
50. Dr. Taraprasad Das Medicine Orissa
51. Prof. (Dr.) T.V. Devarajan Medicine Tamil Nadu
52. Prof. (Dr.) Saroj Chooramani Gopal Medicine Uttar Pradesh
53. Dr. Pramod Kumar Julka Medicine Delhi
54. Dr. Gulshan Rai Khatri Medicine Delhi
55. Dr. Ganesh Kumar Mani Medicine Delhi
56. Dr. Amit Prabhakar Maydeo Medicine Maharashtra
57. Dr. Sundaram Natarajan Medicine Maharashtra
58. Prof. Krishna Chandra Chunekar Medicine Uttar Pradesh
59. Dr. Vishwa Kumar Gupta Medicine Delhi
60. Prof. (Capt.) Dr. Mohammad Sharaf-e-Alam - Literature & Education - Bihar
61. Dr. Radhika Herzberger Literature & Education Andhra Pradesh
62. Shri J. Malsawma Literature & Education Mizoram
63. Shri Devendra Patel Literature & Education Gujarat
64. Dr. Rama Kant Shukla Literature & Education Delhi
65. Prof. Akhtarul Wasey Literature & Education Delhi
66. Prof. Anvita Abbi Literature & Education Delhi
67. Shri Nida Fazli Literature & Education Madhya Pradesh
68. Shri Surender Kumar Sharma Literature & Education Delhi
69. Dr. Jagdish Prasad Singh Literature & Education Bihar
70. Late Shaukat Riaz Kapoor Alias Salik
Lakhnawi Literature & Education West Bengal #
71. Prof. Noboru Karashima Literature & Education Japan *
72. Shri Christopher Pinney Literature & Education UK *
73. Smt. Premlata Agrawal Sports Jharkhand
74. Shri Yogeshwar Dutt Sports Haryana
75. Shri Hosanagara Nagarajegowda Girisha Sports Karnataka
76. Subedar Major Vijay Kumar Sports Himachal Pradesh
77. Shri Ngangom Dingko Singh Sports Maharashtra
78. Naib Subedar Bajrang Lal Takhar Sports Rajasthan
79. Ms. Ritu Kumar Fashion Designing Delhi
80. Dr. Ravindra Singh Bisht Archaeology Uttar Pradesh

Note: * indicates awardees in the category of Foreigners / NRIs/ PIOs.

# indicates awardees in the posthumous category.

கண்ணா லட்டு தின்ன ஆசையா - சினிமா விமர்சனம்

23-01-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முன்பே எழுதியிருக்க வேண்டியது.. வழக்கம்போல அதுதான் எல்லாரும் எழுதியாச்சே என்ற அலுப்பும், கூடுதலாக சோம்பேறித்தனமும் கூட தள்ளிப் போட்டே வந்துவிட்டேன்.  இன்றைக்குத்தான் திடீர் ஞானதோயம் வந்தது..! என்றாவது ஒரு நாள் விமர்சனங்களை புத்தகமாக போடும்போது தேவைப்படுமே என்று..! அதனால் இப்போது.. இங்கே..!

நல்லதோ கெட்டதோ.. பழைய படங்களை ரீமேக் செய்வதை கொஞ்சம் நிறுத்திக் கொள்வது சினிமாவுலகத்தினருக்கு நல்லது.. பழைய படங்களின் வெற்றிக்கு முதற் காரணமே அப்போதைய காலக்கட்டம்தான்.. அந்தச் சூழலில் மக்களின் வாழ்க்கை முறைக்கேற்ப.. கிடைத்த வசதிகளுக்கேற்ப.. அந்தந்த இயக்குநர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு எடுத்துக் காண்பித்த திரைப்படங்களில் ஒரு படம் அமோக வெற்றியென்றால்.. அது அந்த இயக்குநருக்கும், கதாசிரியருக்கும் கிடைத்த வெற்றி..! 

அதையே இப்போதும் எடுப்பதற்கு இப்போதென்ன கதை பஞ்சமா இருக்கிறது..? காமெடியில் இன்னும் எடுக்கப்படாதது நிறையவே இருக்கிறது.. அவற்றையெல்லாம் பொறுக்கி எடுத்து படமாக்கவே இப்போதைய இயக்குநர்களுக்கு ஆயுசு போதாது..! மிக எளிதாக ஒரு வெற்றி பெற்ற படத்தின் கதையைச் சுட்டு நோகாமல் நொங்கு திங்க ஆசைப்படுவது நல்ல கலைஞர்களுக்கு அழகல்ல..!

இன்று போய் நாளை வா படத்தினை நான் முதன் முதலில் மதுரை மிட்லண்ட் தியேட்டரில் பார்த்தபோது என் வயதுக்கேற்ற விருப்பத்துடன் மிக மிக ரசித்தேன்..! பாக்யராஜின் முகமும், அவருடைய நிஜ நண்பர்களான பழனிச்சாமி மற்றும் இன்னொரு நண்பரின்(பெயர் தெரியவில்லை) ஆகியோரின் நடிப்பும், முகங்களும் என் பக்கத்து வீட்டுக்காரர்களை போலவே இருந்ததால் என்னைப் போன்ற ஒரு யூத்துகளின் அக்கப்போர் என்று நினைத்து சந்தோஷப்பட முடிந்தது..!

பாக்யராஜாவது பரவாயில்லை.. இதற்கும் முன்பே படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவருடைய நண்பர்களுக்கு அதுதான் முதல் படம்.. கடைசி படமும் கூட என்று நினைக்கிறேன்..! அதிலும் பழனிச்சாமி படம் முழுவதும் உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டிருப்பார்..! அந்த பெல்பாட்டம் பேண்ட்டும், கண்ணாடியும், அடுக்கடுக்கான சுருள் முடியும்.. ராதிகாவின் இன்னசென்ட் முகமும், கல்லாபெட்டி சிங்காரத்தின் மூச்சுவிட கஷ்டப்பட்டு பேசும் வசனங்களும், அவருடைய அப்பாவின் ஆக்ரோஷத்தனமான முகமும் மறக்க முடியாதுதான்.. கூடவே பக்கத்து வீட்டு அக்காவாக அட்வைஸராக நடித்திருப்பவும் ஒரு சோடாபுட்டி அளவுக்கு கண்ணாடியை போட்டு அமைதியாக நடித்திருப்பார்.. அவர் யார் என்று யாராவது சொன்னால் தன்யனாவேன்..!

இப்போது இந்தக் கதைக்கு வருவோம்..! 


படத்தின் ஹீரோ சேதுவின் எதிர் வீட்டுக்கு வரும் விசாகாவை காதலிக்க போட்டி போடும்  சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், சேது மூவரில் ஹீரோதான் ஜெயிக்க வேண்டும் என்பது தமிழ்ச் சினிமாவில் எழுதப்படாத விதி என்பதால் கிளைமாக்ஸிலும் ஹீரோவையம், ஹீரோயினையும் சேர்த்துவைப்பதோடு மங்களம் பாடியிருக்கிறார்கள்.

சந்தானம் இப்போதெல்லாம் ஸ்கிரீனில் தோன்றியவுடனேயே கையைத் தட்டத் துவங்குகிறார்கள். அவர் என்ன டயலாக் பேசுகிறார் என்பதையே கேட்க விரும்பாலேயே கையைத் தட்டி மற்றவர்களையும் கேட்க விடாமலேயே செய்கிறார்கள்..! இதிலும் அப்படியே..? ஆனாலும் வடிவேலு எப்போதும் தன்னை ஒரு நிஜ காமெடியனாக நினைத்து, தன்னை தாழ்த்தியே திரைக்கதை எழுதிக் கொள்வார்.. ஆனால் சந்தானமோ அப்படியே உல்டாவாக தன்னைத் தவிர சினிமாவில் இருக்கும் ஆடு, மாடு, கழுதையைக் கூட திட்டிக் கொண்டே இருக்கிறார்..  ஆனாலும் மக்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள்..!

அண்டாவுக்குள் உட்கார்ந்து சாதகம் செய்யும் காட்சியும், அதையொட்டி காமெடிகளும் அல்லல்பட வைப்பதால் ரசிக்க முடிகிறது.. சில நேரங்களில் சந்தானம் சீரியஸாக பேசுகிறாரா அல்லது காமெடியாக சொல்கிறாரா என்பதை அவர் காமெடியாக கடைசியாக பேச்சை முடிக்கும்போதுதான் தெரியும்.. அதே பாணியில் தண்ணியை வாங்கிக் கொடுத்து குடிக்க வைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து விசாகாவின் முன்னிலையில் மூக்கடைக்கும் காட்சி  நிசமாகவே விறுவிறுப்புதான்..!

ஆளுக்கொன்றை எடுத்துக் கொள்ளும்போது ஜெயிப்பது சந்தேகமேயில்லாமல் பவர் ஸ்டார்தான்..! அவ்வப்போது அவர் காட்டும் கோணங்கித்தனமான முக பாவனைகள்.. வீட்டுக்கு போய் டான்ஸ் கற்றுக் கொள்ள பிளான் செய்து தனது ரசிகர்களை வைத்து அவர் செய்யும் டிராமா.. டான்ஸ் ஆட அவருக்குள் ஒரு வேகம் வந்து ஆடிக் காட்டும் அந்த ஸ்டைலெல்லாம் தமிழ்ச் சினிமாவுக்கு புதிது என்பதால் தியேட்டரில் இன்னமும் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் பவர் ஸ்டார்.!

எப்போதும் தன்னை  ஒருவன் தாழ்த்திக் கொண்டே போய்.. காமெடிக்காரனாகவே காட்டிக் கொண்டால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கத்தான் செய்யும். கடந்த 3 வருடங்களாக தமிழ் ரசிகர்கள் பவர் ஸ்டாரை எந்த அளவுக்கு இழித்தும், பழித்தும் பேசியும் அதை அவர் காதில் போட்டுக் கொள்ளாமல் தனக்கான நேரம் வரும்வரைக்கும் காத்திருந்து இப்போது கொடுத்திருப்பது சரியான பதிலடி..! வெல்டன் பவர் ஸ்டார்..!

விஜய் டிவியின் நீயா நானாவில் அவரை எவ்வளவு கேவலப்படுத்த வேண்டுமோ அத்தனையையும் செய்தார்கள்.. ஆனாலும் அசராமல் தான் சூப்பர் ஸ்டாருக்கே போட்டி என்று சொன்ன அவரது தைரியம் நிஜமாகவே குருட்டு தைரியமில்லை.. தன்னம்பிக்கை..! தன்னையும் ரசிக்க நாலைந்து பேர் இருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களை இப்போதுவரையிலும் இழந்துவிடாமல் ரசிகராகவே வைத்திருப்பதுதான் பவர் ஸ்டாரின் சாமர்த்தியம்.. 

புதுமுக நடிகர் சந்தானத்தின் பால்ய நண்பர்.. தான் படம் தயாரித்தால் நீதான் ஹீரோ என்று முன்பே சொல்லி வைத்திருந்த்தை இப்போது படமாக எடுத்தபோது உறுதிப்படுத்தியிருக்கிறார் சந்தானம். இதுவல்லவோ நட்பு..! சந்தானமும், பவர் ஸ்டாரும் முன்னே போய்க் கொண்டிருக்க.. இவர்களாலேயே சேது கொஞ்சம் தெரிகிறார்.. இன்னும் இவருக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது..!

ஹீரோயின் விசாகாவை எங்கேயிருந்து பிடித்தார்கள் என்று தெரியவில்லை. அசத்தல் முகம்.. அழகு பதுமை.. ரம்மியமா இருக்கே பாப்பா என்று நினைத்து பரவசப்பட்ட 2 நிமிடத்திற்குள் குத்துப் பாட்டில் ஆட வைத்துவிட்டார்கள். என் நினைப்பில் மண்ணையள்ளிப் போட்டு குடும்ப குத்துவிளக்கு இமேஜை துடைத்தெறிந்த இயக்குநருக்கு எனது வன்மையான கண்டனங்கள்..! அதிலும் மூவரிடமும் ஆடும்போதுகூட தனது சிரிப்பிலும், நடிப்பிலும் மில்லி மீட்டர் அளவைக்கூட குறைக்கவில்லையே.. இதுக்காகவே இவருக்கு ஒரு “ஓ” போட வேண்டும்..!

படத்தின் இன்னொரு பலம் சில, பல வசனங்கள்..! எல்லாத்தும் மேலாக கடைசியாக சந்தானம் சொல்லும் “நானாவது காமெடியன்னு தெரிஞ்சே காமெடியனா இருக்கேன். ஆனா நீ அதுகூட தெரியாமலேயே காமெடி பண்ணிக்கிட்டருக்க..?” என்று பவர் ஸ்டாரை  இன்றைய உண்மை நிலையை பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கும் வசனத்திற்குத்தான் தியேட்டரே அதிர்கிறது..!

இதையேதான் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனிலும் சந்தானம் சொன்னார். அப்போதும் எவ்வித ரியாக்ஷனும் காட்டாமல் தலைக்கு 500 கொடுத்து அழைத்து வரப்பட்ட தனது ரசிக குஞ்சுகளின் கைதட்டலில் சொக்கிப் போய் உட்கார்ந்திருந்தார் பவர் ஸ்டார்..! இனியாவது தான் ஒரு நடிகர் என்று நினைத்து கொஞ்சம் மரியாதையுடன் நடந்து கொண்டால் அவருக்கும் நல்லது.. திரையுலகத்துக்கும் நல்லது..!

சர்ச்சை நடிகர் சிம்பு இதிலும் அவராகவே வருகிறார். தன்னைப் பற்றி தானே எடுத்துச் சொல்லிக் கொண்டு இவர்களுக்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கும் நல்ல நடிகரான கேரக்டர்.. இதையே நிஜத்திலும் இவர் செய்தால் நன்றாகவே இருக்குமே..? சிம்புவை கடத்தி வருவதற்கு ஒரு டீமை ரெடி செய்வது மட்டுமே இப்படத்தின் சொதப்பலான திரைக்கதை..! அதையும் சண்டைக் காட்சியுடன் லின்க் ஏற்படுத்திக் கொடுத்து திரைக்கதையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த உதவியிருப்பதால் சரி போகட்டும் என்று விட்டுவிடலாம்..!

லவ் லெட்டரு கொடுக்க ஆசைப்பட்டேன் பாடலைவிடவும் பாடலை எடுத்தவிதம் மிக அழகு..! நல்ல ரசனையான இயக்குநரிடம்தான் மாட்டியிருக்கிறார்கள் இவர்கள்..! நான்கூட முதலில் சந்தேகப்பட்டேன்.. சந்தானம் இத்தனை இயக்குநர்களிடம் பணியாற்றியிருக்கிறார்.. இவரை எங்கேயிருந்து தேடிப் பிடித்தாரென்று யோசனையாகவே இருந்தது.. சில விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் மட்டுமே கொண்ட இப்படத்தின் இயக்குநர் மணிகண்டனுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்..!

இன்றைய யூத்துகளுக்கு ஏற்றாற்போன்று ஒரு நடிகர், நடிகையரை வைத்து, நல்ல முறையில் இயக்கம் செய்து.. வசூலையும் வாரிக் குவித்திருக்கும் இந்தப் படம் இந்தாண்டின் முதல் பிளாக்பஸ்டர்தான்..! 

ஆனால் இதிலும் ஒரு சின்ன நெருடல்.. பவர் ஸ்டார் தனது அடுத்தப் படமான யா, யா-வில் தனது சம்பளமாக 50 லட்சத்தைக் கேட்டு அதையும் தயாரிப்பாளர் கொடுத்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.. இது உண்மையெனில் தமிழ்ச் சினிமாவின் தொடர்ச்சியான சீரழிவுக்கு பவர் ஸ்டாரும், இந்தத் தயாரிப்பாளரும் ஒரு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும்..!

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்று தயாரிப்பாளர் கூறினாலும், இதன் லாபத்தை தியேட்டர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் தலையில் கட்டி, அவர்கள் பார்வையாளர்களின் தலையில் சுமத்தி.. கடைசியாக தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் கூட்டத்தை குறைக்கும் பணியில் இவர்களும் இணைகிறார்கள் என்பதுதான் உண்மை..! 

இதை யார் தட்டிக் கேட்பது..?   

2012-ல் வெளி வந்த தமிழ் சினிமாக்கள்..!

20-01-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு  ஆவணப்படுத்தலுக்காக சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களை தேதியோடு குறித்து வைத்திருந்தேன். கடைசி 2 மாதங்கள் மட்டுமே செய்யவில்லை. கொஞ்சம் சோம்பேறித்தனம்..! இத்தனை கஷ்டப்பட்டு குறித்து வைத்தது வீணாகக் கூடாது என்று இன்றைக்கு எனக்கு வந்த திடீர் ஞானதோயத்தால், இப்போது அவற்றையும் தட்டச்சு செய்து  முழுமையாக்கிவிட்டேன்.. இதுவும் இணையத்தில் ஒரு ஆவணமாக இருந்துவிட்டுப் போகட்டுமே..!?





ஜனவரி-2012

06-01-2012 - விநாயகா - சஹானா கிரியேஷன்ஸ் - பாலசேகரன்
06-01-2012 - மதுவும், மைதிலியும் - ஜெயலட்சுமி நடராஜன் - ஜெ.ஜெயந்தி
12-01-2012 - நண்பன் - ஜெமினி பிலிம் சர்க்யூட் - ஷங்கர்
14-01-2012 - வேட்டை - திருப்பதி பிரதர்ஸ் - லிங்குசாமி
14-01-2012 - கொள்ளைக்காரன் - பிரசாத் சினி ஆர்ட்ஸ் - தமிழ்ச்செல்வன்
14-01-2012 -  மேதை - எம்.குமார் - சரவணன்
20-01-2012 - பாதாள உலகம் - (ஆங்கில டப்பிங்)
27-01-2012 - பாரி -  தனிஷா இண்டர்நேஷனல் - ரஜினி
27-01-2012 - அன்புள்ள துரோகி - இந்திரா இன்னோவிஷன்ஸ் - சுதா.கே.பிரசாத்
27-01-2012 - சேட்டைத்தனம் - ஆர்.சதீஷ்
27-01-2012 - தேனி மாவட்டம் - செவன் ஸ்டார் ஸ்டேண்ட்ர்டு பிலிம்ஸ் - கெளமாரிமுத்து

பிப்ரவரி - 2012

03-02-2012 - சினம் - பி.எம்.டி. பிக்சர்ஸ் - அருண்பிரசாத் - (தெலுங்கு டப்பிங்)
03-02-2012 - மெரினா - பசங்க புரொடெக்சன்ஸ் - பாண்டிராஜ்
03-02-2012 - மகாராணி -ஓரியண்டல் பிக்சர்ஸ் - வி.என்.ஆதித்யா -  (தெலுங்கு டப்பிங்)
03-02-2012 - செங்காத்து பூமியிலே - சுவாமி சினி ஆர்ட்ஸ் - ரத்னகுமார்
03-02-2012 - போதி தர்மன் - (ஆங்கிலம்  டப்பிங்)
03-02-2012 - குரு 2 - (ஆங்கிலம்  டப்பிங்)
10-02-2012 - தோனி - டூயட் மூவிஸ் - பிரகாஷ்ராஜ்
10-02-2012 - ஒரு நடிகையின் வாக்குமூலம் - புன்னகை பூ கீதா - ராஜ் கிருஷ்ணா  
10-02-2012 - சூழ்நிலை - செந்தூரன் - செந்தூரன்
10-02-2012 - விளையாட வா - டெலிசாய் மீடியா மேட்ரீக்ஸ் பிரைவேட் லிமிடெட் - விஜயநந்தா
10-02-2012 - ஒரு மழை நான்கு சாரல் - பத்ரி நாராயணன் - ஆனந்த்
10-02-2012 - வாச்சாத்தி - குமாரி டாக்கீஸ்-ரெத்னா பிலிம்ஸ் - ரவிதம்பி
10-02-2012 - ருத்ரபூமி - (ஆங்கிலம் டப்பிங்)
17.02.2012 அம்புலி 3D - KTVR க்ரியேட்டிவ் ரீல்ஸ் - ஹரி ஷங்கர் & ஹரீஷ் நாராயண்
17-02-2012 - உடும்பன் - மாடர்ன் சினிமா - எஸ்.பாலன்
17-02-2012 - முப்பொழுதும் உன் கற்பனைகள் - ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் - எல்ரெட் குமார்
17-02-2012 - காட்டுப்புலி - கபிஷேக் பிலிம்ஸ் - டினுவர்மா - (கன்னட டப்பிங்)
17-02-2012 - காதலில் சொதப்புவது எப்படி - YNOT Production -  பாலாஜி மோகன்
17-02-2012 - நிப்பு - வி.வி.எஸ். செளத்ரி - (தெலுங்கு டப்பிங்)
17-02-2012 - தி உமன் இன் பிளாக் - (ஆங்கிலம்  டப்பிங்)
24-02-2012 - விருதுநகர் சந்திப்பு - ஏ.ஆர்.பி. புரொடெக்சன் - வி.எஸ்.டி.ரங்கராஜன்
24-02-2012 - காதல் பாதை - பாலாஜி பிரேம்ஸ் - வியாசன் 
24-02-2012 - கால பைரவன் - தேனான்டாள் பிக்சர்ஸ் -  (ஆங்கிலம்  டப்பிங்)

மார்ச்-2012

02-03-2012 - அரவான் - அம்மா கிரியேஷன்ஸ் - ஜி.வசந்தபாலன்
02-03-2012 - கொண்டான் கொடுத்தான் - விசாலி பிலிம்ஸ் - ஜி.இராஜேந்திரன்
02-03-2012 - சங்கர் ஊர் ராஜபாளையம் - கோல்டன்சன் பிக்சர்ஸ் - வீரா
02-03-2012 - யார் - சதீஷ் - ரவி  (தெலுங்கு  டப்பிங்)
02-03-2012 - மம்மி Vs சிந்துபாத்  - (ஆங்கிலம் டப்பிங்)
09-03-2012 - சேவற்கொடி - பனேரி பிக்சர்ஸ் - சுப்ரமணியன்
09-03-2012 - பத்திரமா பார்த்துக்குங்க - வி.சி.சோமசுந்தரம் - வி.சி.சோமசுந்தரம்
09-03-2012 - நாங்க - செல்வகுமரன் பிக்சர்ஸ் - செல்வா
09-03-2012 - ஜான் கார்ட்டர் மாவீரன் - தேனாண்டாள் பிலிம்ஸ் - (ஆங்கிலம் டப்பிங்)
16-03-2012 - கழுகு - அருண் பிலிம் என்ட்டெர்டெயின்மெண்ட் - சத்யசிவா
16-03-2012 - விண்மீன்கள் - மணாஸ் பிலிம் கார்ப்பரேஷன் - விக்னேஷ் மேனன்
16-03-2012 - மாசி - சுப்புலட்சுமி பிலிம்ஸ் - ஜி.கிச்சா
16-03-2012 - மகாவம்சம் - (ஆங்கில டப்பிங்) 
23-03-2012 - ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி - சிட்டி லைட்ஸ் எண்ட்டெர்டெயிண்மெண்ட்ஸ் - ஷண்முகராஜ்
23-03-2012 - காதல் பிசாசே - ட்ரீம் ஆர்ட் கிரியேஷன்ஸ் - அரவிந்த்
23-03-2012 - காதலிச்சி பார் - P.R. Global Entertainment - கே.எஸ்.விஜயபாலன்
23-03-2012 - நந்தா நந்திதா - சூப்பர் டீம் சினிமாஸ் - ராம்ஷிவா
23-03-2012 - ஆக்டோபஸ் சுறா - (ஆங்கிலம் டப்பிங்)
30-03-2012 - 3 - R.K. Productions - Wonderfor Films Private Ltd - ஐஸ்வர்யா தனுஷ்
30-03-2012 - ஒத்தவீடு - தேவ் குமார் - பாலு மலர்வண்ணன்
30-03-2012 - ஒத்தக்குதிரை - ஓம் மீடியா பிக்சர்ஸ் - ஜெ.சீனிவாசன்
30-03-2012 - சூரிய நகரம் - ஏ.வி. ஸ்கிரீன்ஸ் - மா.செல்லமுத்து
30-03-2012 - மீராவுடன் கிருஷ்ணா - 
30-03-2012 - முதல்வர் மகாத்மா - அ.பாலகிருஷ்ணன்
30-03-2012 - மர்மதேசம்-2 - 3டி - (ஆங்கிலம் டப்பிங்)

ஏப்ரல்-2012

05-04-2012 - அஸ்த்தமனம் - சுதிர்ரெட்டி - பண்டி சரோஜ்குமார்
05-04-2012 - மழைக்காலம் - ஏ.ஆர்.ஸ்கிரீன் - தீபன்
05-04-2012 - நண்டு பாஸ்கி - அய்யனார் கிரியேஷன்ஸ் - பி.செல்வகுமார்
05-04-2012 - ரகளை - ஆர்.பி.செளத்ரி - சம்பத் நந்தி -  (தெலுங்கு  டப்பிங்)
05-04-2012- டைட்டானிக் 3டி - ஜேம்ஸ் கேம்ரூன்(ஆங்கிலம் டப்பிங்)
13-04-2012 - ~ஒரு கல் ஒரு கண்ணாடி - ரெட் ஜெயண்ட் மூவிஸ் - ராஜேஷ்
13-04-2012 - வருடங்கள் 20 - கே.பி.பிரியங்கா புரொடக்ஷன்ஸ் - கே.கென்னடி
13-04-2012 - பச்சை என்கிற காத்து - கீரா
20-04-2012 - ஊலலலா - மார்ஷல் பவர் மீடியா - ஏ.எம்.ஜோதிகிருஷ்ணா
20-04-2012 - அடுத்தது - சூத்ரதார் - தக்காளி சீனிவாசன்
20-04-2012 - மாட்டுத்தாவணி - பவித்ரன்
20-04-2012 - மை - பத்மாலயா சினி விஷன்ஸ் - சே.ரா.கோபாலன்
27-04-2012 - ஆதிநாராயணா - பாலாஜி - வெற்றிவேந்தன்
27-04-2012 - படம் பார்த்து கதை சொல் - ஏபிஎம் புரொடெக்சன் - ஆர்.பெஞ்சமின் பிரபு
27-04-2012 - லீலை - ஆர் பிலிம்ஸ் - ஆண்ட்ரு லூயிஸ்
27-04-2012 - அவெஞ்சர்ஸ் - (ஆங்கிலம் டப்பிங்)

மே - 2012

04-05-2012 - கிளிக்-3 - கே.ஜி.எஸ். புரொடெக்சன் - சங்கீத் சிவன்  - (மலையாள டப்பிங்)
04-05-2012 - ஜக்கம்மா - பாலா.ஆர். - வினயன் - (மலையாள டப்பிங்)
04-05-2012 - வழக்கு எண் 18/9 -திருப்பதி பிரதர்ஸ் - பாலாஜி சக்திவேல்
04-05-2012 - பரமகுரு - ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் - ஜெ.எஸ்.மணிமாறன்
04-05-2012 - காந்தம் - நியூ மூன் ஸ்டூடியோஸ் - சஞ்சய் கணேஷ்
04-05-2012 - X - (ஆங்கிலம் டப்பிங்)
11-05-2012 - கலகலப்பு - யு டிவி - திருப்பதி பிரதர்ஸ் - சுந்தர் சி.
11-05-2012 - விவகாரம் - சூப்பர்ஹிட் பிக்சர்ஸ் - பி.பப்பு  - (தெலுங்கு டப்பிங்)
11-05-2012 - புதையல் வேட்டை - (ஆங்கிலம் டப்பிங்)
11-05-2012 - ஏலியன் ஆர்மெகட்டான் - (ஆங்கிலம் டப்பிங்)
18-05-2012 - Sreedhar - சதீஷ் பிலிம் கார்ப்பரேஷன் - Sreeram - (தெலுங்கு டப்பிங்)
18-05-2012 - ராட்டினம் - ஜெ.எஸ். புரொடெக்சன்ஸ் - கே.எஸ்.தங்கசாமி
18-05-2012 - கண்டதும் காணாததும் - எஸ்.பி.பிலிம்ஸ் - சீலன்
18-05-2012 - ராமராஜ்ஜியம் - சாய்பாபா மூவிஸ் - பாபு - (தெலுங்கு டப்பிங்)
18-05-2012 - மாற்றி காட்டுவோம் - 
25-05-2012 - இஷ்டம் - பாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிமிடெட் - பிரேம் நிஸார்
25-02-2012 - கொஞ்சும் மைனாக்களே - சத்யா கிரியேஷன்ஸ் - ஏ.பி.கே.கார்த்திகேயன்
25-05-2012 - அன்புள்ள மான்விழியே - முத்துவேல் மூவிஸ் - பிரம்மன்
25-05-2012 - எம்.ஐ.பி.-3 - (ஆங்கிலம் டப்பிங்)
25-05-2012 - உருமி - கலைப்புலி எஸ்.தாணு - சந்தோஷ்சிவன்
25-05-2012 - திருடி திருடன் - பூர்ணி கிரியேஷன்ஸ் - விஜயபாஸ்கர் - (தெலுங்கு டப்பிங்)

ஜூன் - 2012

01-06-2012 - மனம் கொத்திப் பறவை - ஒலிம்பியா மூவிஸ் - எஸ்.எழில்
01-06-2012 - தடையறத் தாக்க - Feather Touch Entertainments - மகிழ்திருமேனி
01-06-2012 - இதயம் திரையரங்கம் - தமிழ் சினிமா கார்ப்பரேஷன் - ராம்கி ராமகிருஷ்ணன்
01-06-2012 - மயங்கினேன் தயங்கினேன் - தாய்மண் திரையகம் - எஸ்.டி.வேந்தன்
01-06-2012 - தி ரெய்டு - (ஆங்கிலம் டப்பிங்) - GARETH EVANS
08-06-2012 - பொற்கொடி பத்தாம் வகுப்பு - நியூ டீம் வொர்க் புரொடெக்சன் - பழ.சுரேஷ்
08-06-2012 - கிருஷ்ணவேணி பஞ்சாலை - மின்வெளி மீடியா ஒர்க்ஸ் - தனபால் பத்மநாபன்
08-06-2012 - தூதுவன் - பயோனியர் மூவிஸ் - மோகன் ரூப்
08-06-2012 - ப்ரோமிதியஸ் - (ஆங்கில டப்பிங்) 
08-06-2012 - அப்பு பப்பு - செளந்தர்யா ஜெகதீஷ் பிலிம்ஸ் - ஆனந்தராஜூ - (தெலுங்கு டப்பிங்)
08-06-2012 - காதல் போதை - முருகவேல் பிலிம்ஸ் - குமார்
15-06-2012 - மறுபடியும் ஒரு காதல் - கனெக்ட் பிலிம் மீடியா - வாசு பாஸ்கர்
15-06-2012 - முரட்டுக் காளை - ஐங்கரன் இண்டர்நேஷனல் - சுந்தர்.சி
22-06-2012 - சகுனி - ஆர்.பிரபு - ஷங்கர்தயாள்
22-06-2012 - டைகர் விஷ்வா - (தெலுங்கு டப்பிங்) - ஏ.என்.பாலாஜி
22-06-2012 - காதலர் கதை - ராசி மூவிஸ் - ஜமீல்
29-06-2012 - காமாஸ்த்ரி - 3டி ஸ்டூடியோ - கோபால் ஜி.பெருமாள் - (தெலுங்கு டப்பிங்)
29-06-2012 - அம்மான்னா சும்மா இல்லடா - அம்மா கலைக்கூடம் - ஜெயகோவிந்தன்

ஜூலை - 2012

06-07-2012 - நான் ஈ - பிவிபி சினிமா - எஸ்.எஸ்.ராஜமெளலி
06-07-2012 - நாளை எனது நாள் - ஜி.எஸ்.எல்.புரொடெக்சன்ஸ் - வம்சி - (தெலுங்கு டப்பிங்)
06-07-2012 - இன்பநிலா - மாஸ் புரொடெக்சன்ஸ் - ராஜ்குமார்
13-07-2012 - பில்லா-2 - வைடு ஆங்கிள் கிரியேஷன்ஸ் - சாக்ரி டோலட்டி
13-07-2012 - ஆபிரகாம் லிங்கன் வேம்ப்பயர் ஹண்டர் - (ஆங்கிலம் டப்பிங்)
16-07-2012 - தற்காப்புப் படையும் கூலிப்படையும் - (ஆங்கிலம் டப்பிங்)
20-07-2012 - பேட்மேன்-3 - (ஆங்கிலம் டப்பிங்)
27-07-2012 - முத்துப்பேச்சி - டி.கே.முருகேசன் - சாய்ராம்
27-07-2012 - பொல்லாங்கு - பி.ஆர்.எண்ட்டெர்டெயிண்மெண்ட் - காந்தி மார்க்ஸ்
27-08-2012 - மாலைப் பொழுதின் மயக்கத்திலே - லட்சுமி நரசிம்ஹா கிரியேஷன்ஸ் - நாராயண் நாகேந்திரராவ்
27-08-2012 - சுழல் - ஒயிட் இன்போடெயின்மெண்ட் - ஆர்.ஜெயக்குமார்
27-07-2012 - ஐஸ் ஏஜ்-4 - (ஆங்கிலம் டப்பிங்)
27-07-2012 - கண்ணாடி பிசாசு - திருச்சி லட்சுமி பிலிம்ஸ் - (ஆங்கிலம் டப்பிங்)

ஆகஸ்ட் - 2012

02-08-2012 - மிரட்டல் - மீடியா ஒன் புரொடெக்சன்ஸ் - ஆர்.மாதேஷ்
02-08-2012 - தூயா - A.C. Star Film International -  (தெலுங்கு  டப்பிங்)
03-08-2012 - யுகம் - A.C.E. Entertainment - எம்.எல்.ராஜூ - ராஜ் சத்யா - (தெலுங்கு  டப்பிங்)
03-08-2012 - ஆசாமி - லலிதா பிக்சர்ஸ் - ஏ.லலிதசாமி
03-08-2012 -மதுபானக்கடை - மாண்டேஜ் புரொடெக்சன்ஸ் - கமலக்கண்ணன்
03-08-2012 - நிலவன் - தேவகோட்டை தேவிபிரியா - ரகுநாத்
03-08-2012 - வீரய்யா - சிவம் அசோஸியேட்ஸ் - ரமேஷ்வர்மா - (தெலுங்கு டப்பிங்)
03-08-2012 - டோட்டல் ரீ கால் - (ஆங்கில டப்பிங்)
10-08-2012 - அதிசய உலகம் 3-டி - டிட்டு புரொடெக்சன்ஸ் - எல்.ரவிச்சந்திரன்
10-08-2012 - எப்படி மனசுக்குள் வந்தாய் - ஜி.கிச்சா - பி.வி.பிரசாத்
10-08-2012 - பனித்துளி - டாக்டர் ஜெய்+நட்டிகுமார்
10-08-2012 - ராமகிருஷ்ண தரிசனம் - GNG Vision Internation - G.N.தாஸ்
15-08-2012 - அட்டக்கத்தி - சி.வி.குமார் புரொடெக்சன்ஸ் - பா.இரஞ்சித்
15-08-2012 - நான் - விஜய் ஆண்டனி - ஜீவா சங்கர்
17-08-2012 - பாண்டி ஒலி பெருக்கி நிலையம் - எம்.கே.எண்டர்பிரசைஸ் - இராசு.மதுரவன்
17-08-2012 - ஏதோ செய்தாய் என்னை - ஆதிசக்தி  பிலிம்ஸ் - ஜே.எல்வின் பாசர்
17-08-2012 - பூவம்பட்டி - சூர்யா பிரதர்ஸ் மூவிஸ் - புதுகை மாரிசா
17-08-2012 - இருவன் - ஜியோன் பிக்சர்ஸ் - E.S. முருகானந்தம்
17-08-2012 - பாளையங்கோட்டை - விசாலாட்சி அம்மா கிரியேஷன்ஸ் - ஜி.சேகர்
24-08-2012 - பெருமான் - காமாட்சி விஷன்ஸ் - ஜெ.ராஜேஷ்கண்ணன்
24-08-2012 - 18 வயசு - நிக் ஆர்ட்ஸ் - ஆர்.பன்னீர்செல்வம்
24-08-2012 - ஆச்சரியங்கள் - Purple Pafch Entertainment - ஹர்ஷவர்த்தன்
24-08-2012 - ரசகுல்லா - நிலா மூவி மேக்கர்ஸ் - கோவர்த்தன் - (தெலுங்கு டப்பிங்)
24-08-2012 - துள்ளி எழுந்தது காதல் - Silver Streak Communications - ஹரி நானு
24-08-2012 - அணில் - ARS
24-08-2012 - அவன் அப்படித்தான் - கே.கருணாகரன் - எஸ்.பி.ராஜா
24-08-2012 - The Expendables-2 - (ஆங்கிலம் டப்பிங்)
31-08-2012 - முகமூடி - யூ டிவி - மிஷ்கின்
31-08-2012 - வாலிபன் சுற்றும் உலகம் - ராஜலட்சுமி கிரியேஷன்ஸ் - ஏ.ஆர்.லலிதசாமி

செப்டம்பர் - 2012

07-09-2012 - அரக்கோணம் - காயத்ரி மூவிஸ் - சுதாகர் ரெட்டி
07-09-2012 - கள்ளப்பருந்து - பி.பொன்முடி
07-09-2012 - மன்னாரு - தமிழ் பிக்சர்ஸ் - எஸ்.ஜெய்சங்கர் 
07-09-2012 - பாகன் - வேந்தர் மூவிஸ் - அஸ்லம்
14-09-2012 - சுந்தரபாண்டியன் - எம்.சசிகுமார் - பிரபாகரன்
14-09-2012 - நெல்லை சந்திப்பு - டி கிரியேஷன்ஸ் - நவீன்
21-09-2012 - சாட்டை - ஷாலோம் ஸ்டூடியோஸ் - எம்.அன்பழகன்
21-09-2012 - சாருலதா - குளோபல் ஒன் மூவிஸ் - பொன்குமரன்
28-09-2012 - தாண்டவம் - யு டிவி - விஜய்

அக்டோபர் - 2012

05-10-2012 - இங்கிலீஷ்-விங்கிலீஷ் - கெளரி ஷிண்டே - (ஹிந்தி டப்பிங்)
05-10-2012 - புதிய காவியம் - பிரண்ட்ஸ் சர்க்கிள் மூவிஸ் - ரமேஷ்
05-10-2012 - சிவங்கி - மூன் லைட் சினிமாஸ் - Sreesha Thulasiram (தெலுங்கு டப்பிங்)
12-10-2012 - செம்பட்டை - ஜி.எஸ்.ஸ்டூடியோஸ் - ஐ.கணேஷ்
12-10-2012 - மயக்கும் மன்மதன் - ஓரியண்டல் பிக்சர்ஸ் - டி.எல்.வி.பிரசாத் - (தெலுங்கு டப்பிங்)
12-10-2012 - மாற்றான் - ஏஜிஸ் புரொடெக்சன்ஸ் - கே.வி.ஆனந்த்
12-10-2012 - செளந்தர்யா - ஏபிசி கம்பெனி - சந்திரமோஹன்
18-10-2012 - அமிர்தயோகம் - சரசபூஷணி பிலிம்ஸ் - ஏ.மாணிக்கராஜ்
19-10-2012 - சக்கரவர்த்தி திருமகன் - சசி புரொடெக்சன்ஸ் - ஜி.புருஷோத்தமன்
19-10-2012 - திருத்தணி - பாஸ்கர் சினி ஆர்ட்ஸ் - பேரரசு
19-10-2012 - பீட்சா - சோனம் சினிமாஸ் - கார்த்திக் சுப்புராஜ்
19-10-2012 - சத்ரிய வம்சம் - செஞ்சூரி இண்டர்நேஷனல் - டி.எஸ்.சுரேஷ்பாபு - (மலையாளம் டப்பிங்)
19-10-2012 - கோயம்பேடு பேருந்து நிலையம் - C.V.C. Communications - ரா.மணிவாசகன்
19-10-2012 - சந்திரமெளலி - சதீஷ் பிலிம் கார்ப்பரேஷன் - எஸ்.எஸ்.ராஜமெளலி (தெலுங்கு டப்பிங்)
19-10-2012 - பேய் நிலா - Ole Brandel -  (தெலுங்கு டப்பிங்)
26-10-2012 - ஆரோகணம் - ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் - லஷ்மி ராமகிருஷ்ணன்
26-10-2012 - வவ்வால் பசங்க - ராஜி மூவிஸ் - சபரி
26-10-2012 - மயிலு - டூயட் மூவிஸ் - ஜீவன்

நவம்பர் - 2012

02-11-2012 - அறியான் - Blessing Entertainers - பி.கார்த்திகேயன்
02-11-2012 - மகன் - சேவியர் சினி ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் - சுந்தரேசன்
02-11-2012 - யாருக்கு தெரியும் - Arubere Art Ventura Pvt.Ltd - தர் - கணேசன் காமராஜ்
02-11-2012 - அசைவம் - அன்னை தெரசா இண்டர்நேஷனல் பிலிம்ஸ் - கின்னஸ் கிஷோர்
13-11-2012 - போடா போடி - நேமிக்சந்த் ஐபக் - விக்னேஷ் சிவன்
13-11-2012 - துப்பாக்கி - வி கிரியேஷன்ஸ் - ஏ.ஆர்.முருகதாஸ்
13-11-2012 - அம்மாவின் கைப்பேசி - தங்கர் திரைக்களம் - தங்கர்பச்சான்
13-11-2012 - அஜந்தா - ப்ளோரா மூவி கிளப் - ராஜ்பா ரவிசங்கர்
13-11-2012 - காசிகுப்பம் - பாலமுருகன் பிலிம்ஸ் - அருண்
30-11-2012 - நீர்ப்பறவை - ரெட் ஜெயண்ட் மூவிஸ் - சீனு ராமசாமி
30-11-2012 - நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - ராஜ்குமார் - பாலாஜி தரணீதரன்
30-11-2012 - ஓங்காரம் - கிரீஷ் - (தெலுங்கு டப்பிங்)

டிசம்பர் - 2012

7-12-2012 - பிஸினஸ்மேன் - பூரி ஜெகன்னாத் (தெலுங்கு டப்பிங்)
7-12-2012 - முரட்டு சிங்கம் - ராஜ வம்ஸி (தெலுங்கு டப்பிங்)
7-12-2012 - தஞ்சம் -  ஜி.அஸ்லாம் - ஜி.அஸ்லாம்
7-12-2012 - திருமதி சுஜாதா என் காதலி - டூயட் மூவிஸ் - 
14-12-2012 - நீதானே என் பொன்வசந்தம் - போட்டோபோன் - கெளதம் வாசுதேவ் மேனன்
14-12-2012 - கும்கி - திருப்பதி பிரதர்ஸ் - பிரபு சாலமன்
14-12-2012 - காதல் கிளுகிளுப்பு - ஹெடெக் மூவி - எஸ்.காசி
14-12-2012 - நானே வருவேன் - பாபு கணேஷ் - பாபு கணேஷ்
21-12-2012 - சட்டம் ஒரு இருட்டறை - எஸ்தர் எண்ட்டெர்டெயினர்ஸ் - சினேகா பிரிட்டோ
28-12-2012 - அகிலன் - டாக்டர் பி.சரவணன் - எஸ்.ஐ. ஹென்றி ஜோஸப்
28-12-2012 - கோழி கூவுது - ஏ.நாகராஜன் - ரஞ்சித்
28-12-2012 - பாரசீக மன்னன் - ஜெ.சுரேஷ் - ஜெ.சுரேஷ்
28-12-2012 - கண்டு பிடிச்சிட்டேன் - ஜெயபால் - ஆர்.கோபால்ராஜ்
28-12-2012 - புதுமுகங்கள் தேவை - வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் - மணீஷ்பாபு

இவைகள் தவிர, தேதி தெரியாமல்........  

1. 'இதயத்தில் ஒருவன்' 
2. 'உள்ளம்' 
3. 'கல்யாண கனவுகள்' 
4. 'கோகுலம்', 
5. 'சுன்சுன் தாத்தா' 
6. 'துரோகம் பண்ணாதீங்க' 
7. 'மாதுரி அவள் ஒரு மாதிரி' 

ஆகிய 7 படங்களும் ரிலீஸ் ஆகியிருப்பதாக பெரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் தெரிவிக்கிறார்..! இவற்றையும் சேர்த்தால்............. 

நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 158. 

கன்னட டப்பிங் படம் : 1

ஹிந்தி டப்பிங் படம் : 1

மலையாள டப்பிங் படங்கள் : 3

தெலுங்கு  டப்பிங் படங்கள் : 24

ஆங்கில டப்பிங் படங்கள் : 26

மொத்த டப்பிங் படங்கள் : 55

ரிலீஸான ஒட்டு மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை  : 213. 

இதில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 6 டப்பிங் படங்களைத் தவிர 24 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸாகி சாதனை படைத்துள்ளன. தமிழ்ச் சினிமா வரலாற்றில் இதுவரையிலும் எந்த வருடத்திலும் ஒரே மாதத்தில் இத்தனை படங்கள் வெளியானதில்லை என்கிறார் திரையுலகப் பெரியவர் திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன்..!




தோழர்களே.. ஒரு நிமிடம் சிந்தியுங்கள்..!


20-01-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனது குடும்பத்தில் துன்பவியல் நாடகங்களுக்கு பஞ்சமேயில்லை..! எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்திருக்கிறோம்.. உச்சக்கட்டமாக எனது தந்தை மற்றும் தாயின் புற்றுநோய் அவலங்களைக் குறிப்பிடலாம்.. இவைகளைக் கடந்து இத்தனையாண்டுகள் கழித்து மீண்டும் ஒரு அவலம்..! 

இப்போது எனது அண்ணன்..! பிரிவியூ தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாளில், என்னை உடனே தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு வரும்படி போனில் அழைத்தார் எனது அண்ணனின் சகலை..! ஏற்கெனவே சென்ற மாதம் திருச்சியில் இருந்த அண்ணனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவர் திட உணவு சாப்பிட முடியாமல் வெறும் கஞ்சி மட்டுமே குடித்துக் கொண்டிருந்தது என்னை கொஞ்சம் பயமுறுத்தியிருந்தது.

அப்படியொன்று இருக்கக் கூடாதுடா முருகா என்று வேண்டிக் கொண்டேதான் மருத்துவமனைக்குள் நுழைந்தேன். ஆனால் நம்பிக்கை வழக்கம்போல பொய்த்துதான் போனது.. வாசல்படியிலேயே என்னைத் தனியே அழைத்துச் சென்றவர்கள் எனது அண்ணனுக்கு வாயில் புற்றுநோய் என்றும் 2-ம் கட்ட நிலையில் இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்தாக வேண்டும். அடுத்த வாரம் ஆபரேஷன் என்ற பொங்கி வந்த துக்கத்தைக்கூட முழுமையாக அனுபவிக்க விடாமல் நீட்டிக் கொண்டே போனார்கள்..!

எனது அண்ணன் இப்போதும் வழக்கம்போல டாக்டர்கள் கொடுத்த சீட்டுக்களை வரிசைக்கிரமமாக அடுக்கியபடியே என்னைப் பார்த்து சிரித்தார். விதி அபாரமாக விளையாடுகிறது என்று நினைத்த எனக்கு எனது அண்ணியின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் முடியவில்லை.

மிகப் பரபரப்பாகத் துவங்கிய இந்த விளையாட்டு அடுத்தடுத்த கட்டங்களில் சீராகவே நடந்து முடிந்தது..! அண்ணியாரின் சகோதரிகளும், சகோதரரும் பெரும் உதவி செய்ய சிகிச்சைக்கு முதல் கட்டமாகத் தேவையான 3.50 லட்சம் ரூபாயும் உடனே கிடைத்தது.. ஆபரேஷனுக்கு முதல் 3 நாட்களாக ஒரேயொரு விஷயம் மட்டுமே பிரச்சினையாக இருந்தது. அது ஆபரேஷனுக்காக வேண்டிய ரத்தம் பற்றியது..!

'ஓ' பாஸிட்டிவ் ரத்தம் கேட்டு நானும் அப்போதைய நேரத்தில் கூகிள் பிளஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் தகவல்களை பகிர்ந்திருந்தேன்.. மேலும் கூடுதலாக வலையுலக அன்பர்களிடம் விசாரித்தபோது பதிவர் “சுரேகா அண்ணன் அவருடைய தளத்தில் இதற்காகவே தனிப் பிரிவை வைத்திருக்கிறார். அதனைக் கிளிக் செய்து போனால் நிறைய பேர் கிடைப்பார்கள். உடனேயே தேடுங்கள்..” என்றார்கள். 

சுரேகா அண்ணனிடம் விசாரித்தபோது வெளியூர் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தபோதிலும் மிகவும் அக்கறையாக அதற்கான வழிமுறைகளையெல்லாம் சொன்னார். அந்த லின்க்கின் மூலமாக தேடிப் பிடித்த சில அன்பர்கள் ஓரிருவர் “இப்போதுதான் ரத்தம் கொடுத்தோம்.. இனி 3 மாதம் கழித்துதான் தர முடியும்..” என்றார்கள். இரண்டு பேர் எடுத்த எடுப்பிலேயே “இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள நாங்க ஆஸ்பத்திரிக்கு போய் கொடுத்திருவோம்..” என்றார்கள். அதேபோல் செய்துவிட்டும் போன் செய்து சொன்னார்கள்.

ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் பாஸ்கர் என்ற நண்பர், அவருடைய மனைவி உட்பட அலுவலக நண்பர்களையும் அழைத்துக் கொண்டு வந்து ரத்தம் அளித்து உதவிகளைச் செய்தார். இது போதுமென்று மருத்துவமனையில் இருந்து சொல்லியிருந்ததால் நானும் தேடுதல் வேட்டையை கொஞ்சம் நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால் ஆபரேஷனுக்காக அட்மிட் ஆன பின்பு கூடுதலாக 2 யூனிட் நாளை காலைக்குள் தேவை என்று சொல்லிவிட்டார்கள்.

மறுபடியும் பாஸ்கரிடம் கேட்டேன்.. கூடுதலாக ஒருவரை உடனேயே அனுப்பி வைத்தார். அடுத்து அதே தளத்தின் மூலமாகத் தொடர்பு கொண்ட வேறொரு நண்பரும் ஓடி வந்து ரத்தமளித்து உதவிகளைச் செய்தார்கள். அந்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றிகள்..! இத்தனைக்கும் மூல காரணம் அண்ணன் சுரேகாதான்.. அவருக்கும் எனது குடும்பத்தினர் அனைவரின் சார்பிலும் கோடானு கோடி நன்றிகள்..!

அண்ணனின் வாய்ப்புறத்தில் வலதுபுற தோலின் உட்புறம் இருந்த கேன்சர் கட்டியை அகற்றிவிட்டு அந்தத் தோலுக்குப் பதிலாக அவருடைய தொடையில் இருந்து தோலை வெட்டியெடுத்து அங்கே ஒட்ட வைத்து.. கிட்டத்தட்ட 6 மணி நேரத்துக்கும் மேலாக அந்த ஆபரேஷன் நடந்தது..! ஆபரேஷன் முடிந்த பின்பு ஸ்பெஷல் வார்டில் 2 நாட்கள் வைத்திருந்துவிட்டு பின்புதான் ஆர்டினரி வார்டுக்கு கொண்டு வந்தார்கள். மூக்கில் சொருகியிருந்த டியூப் மூலமாகவே அவருக்கு வேண்டிய கஞ்சி போல் இருந்த உணவை செலுத்தினார்கள். கிட்டத்தட்ட 10 நாட்கள் ஒரு குழந்தையைப் போலவே படுத்திருந்தார்..! 

அண்ணன் சிகரெட் பழக்கத்தை கைவிட்டு 3 ஆண்டுகள் ஆகிறது.. ஆனாலும் ஏன் இந்த கேன்ஸர் என்று மருத்துவரிடம் கேட்டபோது, “அந்த கேன்ஸர் கட்டி 10 வருஷத்துக்கு முன்னாடியே பார்ம் ஆகியிருக்கு.. இப்பத்தான் அதுக்கான முழு சக்தியும் கிடைச்சு தன் வேலையைக் காட்டியிருக்கு.. கேன்ஸரை பொறுத்தவரையில் அது எப்போ வரும்.. எப்படி வரும்ன்னு யாராலேயும் சொல்ல முடியாது..  எல்லாருக்குள்ளேயும் கேன்ஸர் செல்கள் இருக்கு.. அமைதியா தூங்கிக்கிட்டிருக்குற அதனை தட்டி எழுப்பிவிடுற மாதிரி நாமதான் அதுக்குப் பிடித்தமான, நமக்குத் தீங்கானவற்றை செய்யக் கூடாது.. அப்படிச் செய்தால் இப்படித்தான்..” என்றார்..

அப்பலோ மருத்துவமனையில் கேன்ஸரை கண்டு பயப்படாமல் இருக்க வாரந்தோறும் மீட்டிங்கெல்லாம் நடத்துகிறார்கள். கேன்ஸர் நோயில் இருந்து மீண்ட நோயாளிகளை வரவழைத்து அவர்களை வைத்தே தற்போது மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளிடம் பேச வைத்து அவர்களுக்கும் நம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டுகிறார்கள்..! ஒரு சில நோயாளிகளுக்கு அவர்களுக்குள் ஏற்படும் பய உணர்விலேயே சரியாக சிகிச்சையை மேற்கொள்ளாமல் போய் நோய் முற்றிப் போய்விடுகிறது.. இதனைத் தடுக்கவே இது போன்ற மன ரீதியான சிகிச்சைகளையும் மேற்கொள்வதாக அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கூறினார்..!

என்னுடைய மூத்த அக்கா திண்டுக்கல்லில் இருந்து வந்தவர் அந்தக் கோலத்தில் அண்ணனை பார்த்தவுடன் கதறிவிட்டார். அண்ணனும், மூத்த அக்காவும்தான் என் வீட்டில் முதலில் பிறந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் அன்னியோன்யம் அதிகம்..! இதுக்காகவே “அக்காவை கூப்பிடாத.. நான் திருச்சிக்கு போன பின்னாடி வரச் சொல்லு..” என்று ஆபரேஷனுக்கு முன்பாகவே அண்ணன் என்னிடம் கூறியிருந்தார். ஆனாலும் எனக்கு மனசில்லை.. அக்காவும் தினமும் போன் போட்டு “என்னாச்சு என்னாச்சு..” என்று கேட்டுக் கொண்டேயிருக்க.. “கிளம்பி வந்திரு”ன்னு சொல்லிட்டேன்..! இது கட்டுக்குள் அடங்காத பாசவுணர்வு..! எந்த நேரத்தில் வர வேண்டுமோ அப்போது வந்தே தீரும்..!

பணக்காரன், ஏழை என்பதெல்லாம் நோய்களுக்கு இல்லை.. வெளிநாட்டு கார்களில் வந்திறங்கும் பணக்காரர்கள்.. இந்தியா முழுவதிலும் இருந்தும் இங்கே தேடி வரும் நோயாளிகள்.. வெளிநாட்டில் இருந்து குறிப்பாக ஆப்ரிக்காவில் இருந்து வருபவர்களும் நிறையவே இருந்தார்கள். என்றாலும் நோயால் அனைவரும்தான் துவண்டு போயிருக்கிறார்கள்.

ஒரு பத்து நிமிடம் அந்த மருத்துவமனையின் ரிசப்ஷனில் உட்கார்ந்து பாருங்கள்.. எத்தனை விதவிதமான மனிதர்கள்.. விதவிதமான நோய்கள்.. நோய்வாய்ப்பட்ட மனிதர்களெல்லாம் ஒரே ஜாதிதான் என்று மட்டுமே சொல்ல தோன்றுகிறது..! அதுவும் கேன்ஸர் என்றால் எல்லாருக்குமே ஒன்று போலத்தான்..! முதலில் திட உணவுகளை சாப்பிட முடியாது. இந்த ஒரு குறைபாட்டிலேயே அவருடைய அன்றாடச் செயல்பாடுகளில் பாதிப்பு வந்துவிடும்..! பின்பு இருக்கவே இருக்கிறது சாவு பற்றிய பயம்..! அதுவரையிலும் நாளைக்கு என்ன செய்யலாம் என்ற நினைப்பிலேயே இருப்பவர்களுக்கு விரைவில் சாவு என்ற நிலைமை வந்தால் என்ன செய்வார்கள்..?

மருத்துவமனையில் தினம்தோறும் ஏதாவது ஒரு வகையில் சாவு.. வரவேற்பறையில் யாராவது ஒருவர் கதறிக் கொண்டிருக்கிறார்.. படிக்கட்டுப் படிகளில், யார் மடியிலாவது படுத்து யாராவது சப்தம் வராமல் அழுது கொண்டிருக்கிறார்கள்..! இன்று இரவுக்குள் முடிந்துவிடும் என்ற மருத்துவர்களின் கணிப்போடு ஒரு மனிதர் வீட்டிலேயே நிம்மதியாக இறப்பதற்காக புறப்படுகிறார். இத்தனை நாட்கள் கவனித்துக் கொண்டதற்கு நன்றி என்பதுபோல் அந்த கைகள் மருத்துவரை நோக்கி கும்பிடுகிறது..! நெகிழ்ந்துவிட்டேன்..! 

திருமண வயதில் 3 பெண்கள் காத்திருக்கும் சூழலில் அவர்களுடைய அப்பா புற்று நோய்க்காக வந்திருக்கிறார்.. 3 பெண்களும் ஒருவர் மாற்றி ஒருவர் தினம்தோறும் வந்தார்கள். அவர்களுடைய அம்மா மிக பொறுப்பாக தான் மட்டுமே இங்கேயும், அங்கேயுமாக அலைந்து கொண்டிருந்தார். எப்போதும் ஐபேடில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த கடைசி மகள் அன்றைக்கு கதறிக் கொண்டிருந்தாள். இன்னும் இரண்டு பெண்கள் அம்மாவின் இரு பக்க தோள்களையும் பிடித்துக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள். யாரை தேற்றுவது என்று அவருக்குத் தெரியவில்லை..

சட்டென ஏற்பட்ட சாவு.. “மதியம்வரைக்கும் நல்லாத்தான் இருந்தாங்க.. இப்போத்தான்..” என்று சொன்ன மனைவிக்கு மேலும் சொல்ல வார்த்தைகள் இல்லை.. இப்பத்தான் பணம் கட்டிட்டு வந்தேன் என்று சொல்லி கையில் வைத்திருந்த அந்த ரசீதை இப்படியும், அப்படியுமாக புரட்டிக் கொண்டிருந்தவரிடம் அடுத்த நடைமுறைகள் பற்றி விளக்கிச் சொல்லியும் முடியவில்லை. ரிசப்ஷனில் இருந்த மற்ற நோயாளிகளின் உறவினர்கள் வலுக்கட்டாயமாக பிள்ளைகளையும், அம்மாவையும் பிரித்து அவர்களுடைய செல்போனில் கடைசியாக இருந்த நம்பரை பார்த்து யாருக்கோ டயல் செய்து தகவலைச் சொன்னார்கள்.

1 மணி நேரத்தில் வாசலில் நின்ற ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்காக வந்த கணவரின் உடலை பார்த்த மனைவி, ரொம்ப கோபமாகவே செத்து போயிருந்த அந்தக் கன்னத்தில் மாறி மாறி அடித்து, “தலை தலையா அடிச்சனே.. குடியை விடுய்யா.. குடியை விடுய்யான்னு கேட்டியா..?” என்று ஓங்காரித்துவிட்டார்..! ஆம்புலன்ஸில் மகள்களை ஏற்றிவிட்டவர்.. “உங்க டாடி கூடவே போங்கடி. டாடியாம் பெரிய டாடி...” என்று கோபத்தைக் கொப்பளித்துவிட்டு தனக்குப் பின்னால் நின்றிருந்த தன் காரில்  ஏறிச் சென்றார். அவர் ஏறிச் சென்ற கார் பிஎம்டபிள்யூ..!

இந்த வயதினருக்குத்தான் என்றில்லை.. சின்னச் சின்னப் பிள்ளைகளுக்குக்கூட வந்திருக்கிறது..! அவர்களெல்லாம் என்ன பாவம் செய்தார்கள்.. ஒரு கியூட்டான பெண் குழந்தை.. பார்த்தாலே தூக்கிக் கொஞ்ச வேண்டும் போல இருந்தது.. மூளையில் கேன்ஸராம்..!  வட நாட்டில் இருந்து வந்திருந்த அக்குழந்தையின் பெற்றோர் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு பேஷண்டுகளை பார்க்க குழந்தைகளோடு வரும் பார்வையாளர்களைத்தான் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன கொடுமை இது..?

மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம் பேரை பார்த்தேன்..  எத்தனை பணம் இருந்தும் என்ன செய்ய..? வந்துவிட்டது.. இறுதிவரையில் போராடுவோம் என்ற மனத்தோடு பலரும் வந்து செல்கிறார்கள்..! ஒரு சிலருக்கு முதல் கட்ட தாக்குதலிலேயே தெரிந்துவிடுகிறது. சிலருக்கு மூன்றாவது கட்டம்.. பலருக்கு இறுதிக் கட்டம்..! அது ஆண்டவனின் விருப்பம்..!

இந்த மருத்துவமனையே இப்படியென்றால் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றால் மிக மிக பரிதாபமான கதைகள்தான் அதிகமிருக்கும்..! அதையும் என் தந்தை சாவின் போது பார்த்திருக்கிறேன்..! “மனசு ரொம்பக் கஷ்டமா இருக்கு. எனக்கு எவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா?” என்றெல்லாம் கதை விடுபவர்களை கொஞ்சம் இந்த வார்டுக்குள் கொண்டு வந்து நிற்க வைத்து பார்க்கச் சொல்ல வேண்டும்.. இன்னும் 10 நாட்கள்தான் இவர் உயிரோடு இருப்பார் என்று சொன்னால் அந்த நபர் என்னவெல்லாம் நினைப்பார்..? அந்தக் குடும்பத்தினரின் நிலைமை என்ன என்பதையெல்லாம் கொஞ்சம் யோசிக்கச் சொல்ல வேண்டும்..! வாழ்க்கையை, கடந்து வந்த பாதையை மனிதர் அனைவருமே தங்களுடைய இறுதிக் காலத்தில்தான் அவசியம் திரும்பிப் பார்ப்பார்கள்.. அந்த சாவின் மீது இருக்கும் பயம் அப்படி..? 

அண்ணன் மீண்டும் திருச்சி சென்றுவிட்டு மறுபடியும் ரேடியேஷன் வைப்பதற்காக சென்னை வந்தார்.. என்னால் அவருக்காக பண உதவி அளிக்க முடியாவிட்டாலும் அவரது வசதிக்காக அவசரமாக வீட்டை மாற்றி அவரைத் தங்க வைத்து என்னால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்துவிட்டேன்..! 40 நாட்கள் தொடர்ச்சியாக ரேடியேஷன் வைத்திருக்கிறார்கள். காலையில் சிகிச்சையெடுத்து வந்தாலும் இரவில் வலிக்கிறது என்பார்.. அவருடைய கன்னம் பகுதி கருப்பாகி முகம் பொலிவிழந்து போயிருக்கிறது.. வாய் பகுதியில் தையல் இருந்ததால் இன்னமும் அவரால் முழுமையாக வாயைத் திறக்க முடியவில்லை..! பிரஷ் செய்ய முடியாமல், மவுத்வாஷை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.. இப்போதும் வெறும் கஞ்சிதான்.. அல்லது 4 இட்லியை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனைக் குடிக்கிறார். அவ்வப்போது ஜூஸ்.. இளநீர்.. இதுதான்.. சாப்பாடு.. 

கல்லூரியில் படிக்கும் மகனும், மகளும் திருச்சியில் இருப்பதால், பாண்டிச்சேரியில் இருந்து திருச்சிக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு சென்ற வாரம்தான் அங்கே டூட்டியில் சேர்ந்திருக்கிறார் அண்ணன்..! இனி இயல்பான வாழ்க்கையை அவர் வாழலாம் என்று மருத்துவர்கள் சொன்னாலும், அதிகம் சாப்பிடவே முடியாமல் என்னதான் செய்வது..? 2 மாதங்களுக்கு ஒரு முறை செக்கப்புக்கு வர வேண்டுமாம்.. “கொஞ்சம், கொஞ்சமாகத்தான் இது சரியாகும்.. இரண்டாம் கட்ட நிலைமையிலேயே கண்டறிந்ததால் இந்த அளவுக்காச்சும் முடிந்தது..” என்றார் மருத்துவர்..! 

ரேடியஷனுக்காக கூடுதலாக 3 லட்சம் ரூபாயுடன், இதுவரையிலும் மொத்தம் ஏழரை லட்சம் செலவாகியிருக்கிறது..! அண்ணன் மத்திய அரசு ஊழியர். அரசு வழங்கும் மருத்துவச் சலுகையினால் செலவழித்த தொகையில் 75 சதவிகிதம் திரும்பி வந்துவிடுமாம்.. ஆனாலும் அந்த இக்கட்டான நேரத்தில் உறவுகளும், சொந்தங்களும் கொடுத்தார்களே.. அது எவ்வளவு பெரிய விஷயம்..? அண்ணனுடன் மருத்துவமனையில் தவம் கிடந்து அவரை பார்த்துக் கொண்டது அண்ணியார் மட்டுமே..! அதிகம் அவருக்காக வெளி வேலைகளைச் செய்தது நான் உட்பட சொந்தங்களும், பந்தங்களும்தான்.. 

ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள் தோழர்களே..!  இந்த பாசவுணர்வு எல்லாருக்கும் கிடைக்காததுதான்..! கிடைக்குதோ கிடைக்கலையோ..? நாமும் நமக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் பகைவனை எதற்குத் தட்டியெழுப்ப வேண்டும்..? விட்டொழியுங்கள் கெட்ட பழக்கங்களை..! குடியும், புகையும் நமக்கு என்றென்றைக்கும் பகைதான்..! வராவிட்டால் சந்தோஷம்தான்.. வந்துவிட்டால் உங்களது குடும்பத்தினர் மட்டுமே தங்களது சந்தோஷத்தை இழப்பார்கள்.. நண்பர்களோ, மற்றவர்களோ அல்ல..!

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..!

புத்தகம் - சினிமா விமர்சனம்

16-01-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மாதத்திற்கு ஒரு படம் எடுக்கும் அளவுக்கு பணப்பையுடன் செஷல்ஸ் தீவில் இருந்து கோடம்பாக்கத்தில் கால் பதித்திருக்கும் பெரும் கோடீஸ்வரப் பெருமான் வி.ராமதாஸின் முதல் தயாரிப்பு இது..! 

சின்னத்திரை நடிகர் விஜய் ஆதிராஜ் பெரிய திரையில் நடிக்க விரும்பாமல் இயக்க விரும்பி அதனை முனைப்போடு செய்திருக்கும் முதல் படம் இது..! கொஞ்சம் கொஞ்சம் சீரியல்தன்மையோடு வித்தியாசமான கதைக்களனோடு தன்னால் முடிந்த அளவுக்கு எடுத்திருக்கிறார்.. நிச்சயம் மோசமில்லை..!


தனது காதலிக்காக வேண்டி லைப்ரரியில்  காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தை எடுக்கிறார் ஹீரோ சத்யா. அந்தப் புத்தகத்திற்குள் இருக்கும் ஒரு பேப்பரில் பெருமளவுக்கு பணம் கல்லறையில் ஓரிடத்தில் புதைக்கப்பட்டிருப்பதை அறிந்து தனது அறை நண்பர்களுடன் சேர்ந்து அதனை கைப்பற்றுகிறார். இன்னொரு பக்கம் இந்தப் பணத்துக்குச் சொந்தக்காரரான முன்னாள் அமைச்சர் இமயப்பன், கில்லாடியான ஜெகபதிபாபு மூலமாக பணத்தைத் தேடியலைகிறார்... பணம் இமயப்பன் கைக்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் கதை..!

ஆர்யாவின் தம்பி சத்யாதான் ஹீரோ. நடிக்கவே தேவையில்லாத இது போன்ற படங்களில்தான் அறிமுகமாக முடியும் என்பதால் கனகச்சிதமாக இந்தப் படத்தைத் தேர்வு செய்திருக்கிறார்..! படத்தில் இவருக்கென்று பெரிய பேக்கிரவுண்ட் இல்லை என்றாலும், மற்ற நண்பர்களில் சந்தானபாரதியின் மகனான சஞ்சய் பாரதிக்கு சீரியல் சோகத்துடன் கூடிய கதை உண்டு.. அது நடுநடுவே ஆடியன்ஸின் கண்ணை குளமாக்க வேண்டும் என்பதற்காகவே செய்திருக்கிறார்கள் போலும்.. 

சத்யா, சஞ்சய் பாரதிகளுக்கு இன்னும் ஒரு பெரிய ரவுண்டு கிடைத்தால் வரலாம்..! இங்கே புதுமுக நடிகர்கள் யார், எப்படி ஹிட்டடிக்கிறார்கள் என்றே தெரியவில்லை..! ஏதோ ஒரு படத்தில் கிளிக்காகி நல்ல இயக்குநர்களின் கண்ணில் பட்டு, அவர்களது இயக்கத் திறமையினால் மேம்பட்டால்தான் உண்டு..! முயற்சி செய்யட்டும்..!

ஹீரோயினாக ரகுல் பரீத்..! அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிப்புடன், மிகச் சரியான முறையில் டயலாக் டெலிவரியையும் செய்திருக்கிறார்..! வெல்டன்.. அழகு என்று சொல்ல முடியவில்லை என்றாலும் ஏதோ ஒரு கோணத்தில் ஸ்கிரீனில் புதுமையாகத் தோன்றுகிறார்..!  பாராட்டுக்கள்..!

சீரியல்களில் பெருமளவு பணியாற்றியிருப்பதால் சீரியல் தன்மையுடனேயே கேரக்டர் ஸ்கெட்ச், அறிமுகங்களுடன் திரைக்கதையையும் அமைத்திருக்கிறார் விஜய் ஆதிராஜ்.  மனோபாலா இல்லாத புதுமுக இயக்குநர்களின் படங்கள் தமிழ்ச் சினிமாவில் வரவே வராது போலிருக்கிறது..! இதிலும் அவருக்கென்றே ஒரு கரைச்சல் கேரக்டரை கொடுத்து மனோபாலாவை நிறுத்தியிருக்கிறார் இயக்குநர்..! 

ஹீரோயின் சத்யாவிடம் பிரண்ட்ஷிப்பை பிரபோஸ் செய்ய ஹோட்டலுக்கு வரவழைத்து பேசுவதும்.. கிப்ட் கொடுப்பதும்.. அங்கிருந்து போக மனசில்லாமல் திரும்பி வரும் காட்சியும் செம ரசனை.. எனக்கு இந்தப் படத்தில் மிகப் பிடித்தமான காட்சியாக இருந்தது இது..! பர்ஸ்ட் பிரெண்ட்ஷிப்.. நெக்ஸ்ட் பிடிச்சிருந்தா லவ்.. என்ற இந்த பார்மெட்டும் இன்றைய இளசுகளுக்குத் தேவையாகத்தான் இருக்கிறது..!

சிற்சில லாஜிக் மீறல்களே படத்தின் நம்பகத்தன்மையை குறைக்கிறது என்று சொல்ல வேண்டும்..! தந்தி டிவியில் வெளியாகும் கவுன்சிலரின் ஊழல் பற்றிய செய்தியே முதலில் கொஞ்சம் நகைச்சுவை.. அமைச்சர் லெவல்.. முதல் அமைச்சர் லெவல்.. பிரதமர் லெவலுக்கெல்லாம் ஊழல் பெருச்சாளி பெரிசாகியிருக்கும், இன்றைய நிலையில் சாதாரண கவுன்சிலர் ஊழலை பெரிதாகக் காட்டுவது கேலியாகிவிட்டது.. அதைவிட கூத்து ஸ்டூடியோவில் இருந்து பேசும் செய்தி வாசிப்பாளர் தனது சக ரிப்போர்ட்டரிடமே “கவுன்சிலரின் ஊழலை உங்களால் நிரூபிக்க முடியுமா?” என்று நேரலையில் கேட்பதுதான்..! வசனகர்த்தா மேலும் ஒரு முறை தான் எழுதியதை படித்துப் பார்த்துவிட்டு ஸ்கிரிப்ட்டை ஷூட்டிங்குக்கு அனுப்பியிருக்கலாம்..!

இந்தக் கவுன்சிலர் ரிப்போர்ட்டர் மீதான பகையை மறக்காமல் பாலோ செய்ய வைத்து இடைவேளைக்கு பின்பு ஜெகபதிபாபுவின் விரட்டலுடன் இணையும்படி திரைக்கதை அமைத்தது பக்கா சினிமா. ஆனால் இது ரொம்ப வருஷத்துக்கு முந்தைய திரைக்கதை என்பதால் டல்லடிக்கிறது..! ஜெகபதிபாபுவின் கேரக்டரை மிகப் பெரிய டானாக காட்டியிருப்பதும் ஏமாற்றம்தான்.. துணைக்கு ஒரு கராத்தே மாஸ்டர் போன்ற பெண்ணை வைத்துக் கொண்டு மட்டுமை தில்லாலங்கடி வேலையை ஜெகபதி பாபு செய்கிறார் என்பதையே முதலில் நம்ப முடியவில்லை.. 

ஜெகபதிபாபு, தலைவாசல் விஜய்யின் பெங்களூர் நண்பரை முதலில் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே புரியவில்லை.. ஆனாலும் தைரியமாக பாரில் சண்டையிட்டு அவரிடம் உண்மையை வரவழைப்பதும், பாத்திமா பாபுவின் வீட்டிற்கு சென்று அவரது மகனை அடித்து உதைப்பதும், லைப்ரரிக்கு சென்று  தான் ஒரு சிபிசிஐடி போலீஸ் என்று புரூடா விடுவதும் நல்ல புரூடாக்கள்..! லாஜிக் எங்கிட்டு எங்கிட்டோ உதைக்குது..! இதுதான் இப்படியென்றால், சஞ்சய் பாரதி வேலை செய்யும் கூரியர் ஆபீஸில் வேலை செய்யும் பெண் நண்பி எப்படி பாரதியுடன் டூயட் பாடும் அளவுக்கு லவ்வரானார் என்பதும் தெரியவில்லை..! ஒரே காட்சியில் அவருக்கு பிரமோஷனா..?

கெட்ட அமைச்சராக சுரேஷும், அவருடைய நண்பராக தலைவாசல் விஜய்யும்  கொஞ்சமே நடித்திருக்கிறாகள். கிளைமாக்ஸில் தன் பணம் பறிபோன துக்கத்தில் சுரேஷ் செய்யும் அலம்பல்கள் மட்டும் ஓகே.. தண்ணியடித்த சலம்பலில்தான் சிலருக்கு நடிப்பு வருமோ..?  

ஜேம்ஸ் வசந்தனின் இசை. அவ்வளவுதான்..!  வழக்கம்போல பாடல்கள்.. எதுவும் மனதில் ஒட்டவில்லை.. ஒளிப்பதிவாளருக்கு செம வேலை போலிருக்கிறது.. காட்சிக்கு காட்சிக்கு கிரேன் ஷாட்டுகளை வைத்து கொளுத்தியிருக்கிறார்..! சில, பல இடங்களில் கேமிராவின் கோணம் பார்க்கவே அழகாக இருக்கிறது..! மிகச் சிரமப்பட்டு திருவல்லிக்கேணி மேன்ஷன் பகுதிகளில் ஷூட்டிங்கை நடத்தியிருக்கிறார்கள்..! புதுமுக இயக்குநர் என்றாலும் ஓரளவுக்கு ஒரு நல்ல கமர்ஷியல் சினிமா என்று சொல்லும் அளவுக்கு படத்தை எடுத்திருக்கிறார் விஜய் ஆதிராஜ்.. அவருக்கு எனது பாராட்டுக்கள்..!

புத்தகம் - ஒரு முறை படிக்கலாம்..!