நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-3

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

படையெடுத்த புத்திசாலி மந்திரிகள்

வெளிநாட்டிற்குச் செல்லும் சலுகையை அதிகம் பயன்படுத்தியவர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத்துதான்.. கிட்டத்தட்ட சாதனையே படைத்திருக்கிறார்.

72 முறை பயணம் மேற்கொண்டு 424 நாட்கள் வெளிநாட்டில் கழித்திருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 14 மாதங்கள்.. போன வருடம் நவம்பர் 30-ம் தேதிவரை சுமார் 10,08,162 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார். இவரது பயணங்களுக்காக அரசு ரூபாய் 1.81 கோடியை செலவழித்திருக்கிறது.

வெளியுறவுத் துறை அமைச்சரைவிட இவரே மிகவும் பளிச்சென்று வெளியில் தெரியக்கூடிய நபராக இருக்கிறார். ப்ரஸ்ஸல்ஸ், பாரீஸ், நியூயார்க், பாங்காக், கோலாலாம்பூர், லண்டன் ஆகிய நகரங்களுக்குத்தான் இவர் அடிக்கடி சென்றிருக்கிறார்.

இவரோடு ஒப்பிட்டால் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மிகக் குறைவான நாட்களே வெளிநாட்டில் இருந்திருக்கிறார். அதாவது 118 நாட்கள் மட்டுமே. இவரது பயணத்திற்கு அரசு செலவழித்துள்ள தொகை ரூ.1.45 கோடி.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பிர·புல் பட்டேல் 41 முறை வெளிநாடு சென்றிருக்கிறார். அவற்றில் 16 தடவைகளே அதிகாரப்பூர்வமானவை. அமெரிக்காவுக்கு 6 முறையும், பிரிட்டனுக்கு 5 முறையும் சென்றிருக்கிறார்.

இவர் சொந்த விஷயமாக லண்டன், பாரீஸ், நியூயார்க், சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்காக், துபாய் போன்ற நகரங்களுக்குச் சென்றிருக்கிறார்.
அமைச்சராக வெளிநாடு சென்ற நாட்களைவிட, தன் சொந்த விஷயமாக வெளிநாடு சென்ற நாட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 57 நாட்கள் அமைச்சர் என்ற முறையிலும், 125 நாட்கள் சொந்த விஷயமாகவும் சென்று வந்துள்ளார் இவர்.

பத்மி அமைச்சர் என்கிற முறையில் 14 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். ஆனால் சொந்த விஷயமாக 181 நாட்கள் வெளிநாட்டில் சுற்றியிருக்கிறார். மொத்தமாக 2,36,005 கி.மீ. பயணம் செய்திருக்கிறார்.

பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி அமைச்சர் என்கின்ற முறையில் 20 நாட்களும், சொந்த விஷயமாக 38 நாட்களும் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். 1,59,676 கி.மீ. தூரம் பயணம் செய்திருக்கும் இவருடைய அலுவல் ரீதியான பயணங்களுக்கு அரசு 17 லட்சம் செலவழித்திருக்கிறது.

வெளியுறவுத் துறையின் இணையமைச்சர் ஈ.அகமது, தன் துறையின் கேபினட் அமைச்சரான பிரணாப் முகர்ஜியைவிட அதிக நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். மொத்தம் 232 நாட்கள். இவரது பயணத்திற்காக அரசு ரூ.1.37 கோடியைச் செலவழித்திருக்கிறதாம். 22 முறை ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றிருக்கும் அகமது, அங்கே 48 நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்.

அலுவல் ரீதியான பயணங்களைவிட சொந்த விஷயமாக அதிகம் பயணம் செய்தவர்களில் என்.டி.ராமராவின் மகள் புரந்தேஸ்வரியும் ஒருவர். மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சரான இவர், 670 நாட்கள் அமைச்சராக இருந்திருக்கிறார். இந்த நாட்களில் 8 முறை வெளிநாட்டிற்குச் சென்று வந்திருக்கிறார். மொத்தமாக 2 மாதங்கள் வெளிநாட்டில் கழித்திருக்கிறார் இவர்.

அந்தத் துறையின் கேபினட் அமைச்சரான அர்ஜூன்சிங் ஒன்பது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார்.

சரத்பவார் 97 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். அவற்றில் 49 நாட்கள் BCCI வேலையாகவும், 37 நாட்கள் விவசாய அமைச்சகம் சார்பாகவும் வெளிநாட்டில் இருந்திருக்கிறார்.

வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஆனந்த் ஷர்மா 30 வெளிநாட்டுப் பயணங்களில் 114 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். இவருக்கான மொத்தச் செலவு ரூ.1.33 கோடி.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தனது 18 வெளிநாட்டுப் பயணங்களில் 125 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார்.

சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகங்களின் சார்பில் 112 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார் ரேணுகா சவுத்ரி.

சுற்றுலா துறையிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மாறிய பின் கம்போடியா, சிகாகோ, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சொந்தப் பயணமாகச் சென்று வந்திருக்கிறார் ரேணுகா.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் என்ற முறையில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் சுமார் 46 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார். இதற்கு 2.26 கோடி ரூபாயை அரசு செலவழித்திருக்கிறது.
புள்ளியியல் அமைச்சராகத்தான் ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெனிவா என அதிக நாடுகளுக்குச் சென்றிருக்கிறார் ஆஸ்கர் ·பெர்னாண்டஸ்.

அமைச்சரான 2 மாதங்களில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், இத்தாலி, கனடா நாடுகள் உள்பட 13 முறை வெளிநாடுகளுக்குப் படையெடுத்திருக்கிறார் சுபோத்காந்த் சகாய்.

தாய்லாந்து, கோலாலாம்பூர், ஜெனீவா, செஷல்ஸ், சிங்கப்பூர் என 117 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார் அன்புமணி. மொத்தம் 254 லட்சம் கி.மீ. பறந்திருக்கிறார்.

சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் இணையமைச்சரான நமோநாராயண் மீனா கனடா, பிரேசில், அமெரிக்கா, லண்டன், செக் குடியரசு ஆகிய நாடுகளுக்குப் பறந்திருக்கிறார்.

18 அதிகாரப்பூர்வ பயணங்களில் 55 நாட்கள் வெளிநாட்டில் கழித்திருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உஸ்பெகிஸ்தானுக்கு 3 முறையும், பாங்காக்கிற்கு 2 முறையும் சென்றிருக்கிறார்.

670 நாட்கள் அமைச்சராக இருந்திருக்கும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சரான அஸ்வினிகுமார் கஜகிஸ்தான், எகிப்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 75 நாட்கள் செலவழித்திருக்கிறார்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், பகு, டாக்கா, மணிலா போன்ற யாரும் அதிகம் செல்லாத இடங்களுக்குச் சென்றிருக்கிறார். அமைச்சராக இருந்த 670 நாட்களில் 4 முறை பயணம் செய்திருக்கிறார்.

வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு இணையமைச்சர் குமாரி செல்ஜா, அம்மான், கனடா, பிரான்ஸ், எகிப்து உள்பட 14 பயணங்களில் 66 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார்.

மொத்தத்தில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசின் அமைச்சர்கள் 78 பேரில் 71 பேர்கள்(பிரதமரைத் தவிர்த்து) 786 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். 1287 நாட்களில் 1.02 கோடி கி.மீ. தூரம் பறந்திருக்கிறார்கள்.

(தொடரும்)

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

எட்டாம் பாகம்

5 comments:

சின்னப் பையன் said...

நம்ம பசி ஐயா இருக்கறவரைக்கும் யாருக்கும் கவலையேயில்லை. அடுத்த வருஷம் மறுபடி ஆட்சிக்கு வந்துட்டா, இன்னும் அதிகமா நிதி ஒதுக்கீடு செய்வாரு கவலையேபடாதீங்க.....

சின்னப் பையன் said...

அண்ணாச்சி, ஏன் இப்படி??? உங்க வயிறு எரிஞ்சுதுன்னு இப்போ எங்களை படிக்க வெச்சி, எங்க வயிறையும் சேத்து எரிக்கறீங்க.... அவ்வ்வ்...

உண்மைத்தமிழன் said...

//ச்சின்னப் பையன் said...
நம்ம பசி ஐயா இருக்கறவரைக்கும் யாருக்கும் கவலையேயில்லை. அடுத்த வருஷம் மறுபடி ஆட்சிக்கு வந்துட்டா, இன்னும் அதிகமா நிதி ஒதுக்கீடு செய்வாரு கவலையேபடாதீங்க.....//

என்ன சின்னப்பையன்..

வயித்துல எரியற நெருப்புல, இன்னும் கொஞ்சம் நெய் ஊத்துவாருன்னு இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க..?

உங்களுக்கே இது நியாயமா இருக்கா..?

உண்மைத்தமிழன் said...

//ச்சின்னப் பையன் said...
அண்ணாச்சி, ஏன் இப்படி??? உங்க வயிறு எரிஞ்சுதுன்னு இப்போ எங்களை படிக்க வெச்சி, எங்க வயிறையும் சேத்து எரிக்கறீங்க.... அவ்வ்வ்...//

அதுதான் முதல் பாகத்திலேயே எழுதியிருக்கனே பையா.. படிக்கலையா..? என் சோகத்துல கொஞ்சம் பங்கு எடுத்துக்குங்க சாமிகளா..

abeer ahmed said...

See who owns actualkeywords.com or any other website:
http://whois.domaintasks.com/actualkeywords.com