நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-8

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

படித்து விட்டீர்களா மக்களே..?

என்ன கொடுமை பாருங்கள்..!

தியாகிகளுக்கான பென்ஷன் தொகையைக் கூட்டிக் கொடுங்கள் என்று கேட்டால், அத்துறையில் அவ்வளவுதான் நிதி ஒதுக்கீடு என்று ரீல் விடுகிறார்கள்.

ரயில் பயணத்தில் ஊனமுற்றவர்களுக்கு பாஸ் கொடுங்கள் என்று கேட்டால் ரயில்வே நிர்வாகம் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது என்கிறார்கள்.

விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரம் கொடுங்கள் என்று கேட்டால் முடியாது. பட்ஜெட் கையைக் கடிக்குது என்கிறார்கள்.

பருத்திக்கு மான்ய விலை கொடுங்கள் என்றால் பட்ஜெட் காலைக் கடிக்குது என்கிறார்கள்.

கோதுமைக்கு நல்ல விலை கொடுங்கள் என்றால், துட்டு லேது என்கிறார்கள்.

ஆனால் நமது மாண்புமிகுக்கள் இப்படி நாடு, நாடாகப் பறந்து சொகுசு வாழ்க்கை வாழ்வதைப் பாருங்கள்.

இப்படி இவர்கள் பறப்பதற்காகவா நாம் இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம்?

நாட்டு மக்களின் துயர் துடையுங்கள் என்று இவர்களைப் பணித்தால், இவர்கள் துயர் துடைக்க இவர்கள் பறப்பதைப் பார்க்கின்றபோது நமது ஜனநாயகத்தின் மீது கோபமான கோபம் வருகிறது.

இந்த மந்திரிகள் எந்த வேலைக்காகப் போயிருந்தாலும் சரி, செலவு என்னவோ நமது தலையில்தான். செலவுத் தொகையைக் காட்டிவிட்டு எப்படி செலவானது என்பதை மட்டும் சொல்ல மாட்டோம் என்பது எந்தவிதத்தில் நியாயம்..?

தெருமுனையில் கடை வைத்திருப்பவன் இதே போல் இன்கம்டாக்ஸ்காரர்களுக்கு தகவல் சொன்னால் சும்மா விடுவார்களா அவர்கள்..?

அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி..? மக்களுக்கு ஒரு நீதியா..?

முடிவு செய்துவிட்டேன் மக்களே..

இனிமேல் இவர்களிடம் வேலை கேட்டு பிரயோசனமில்லை.. உதவித் தொகை கேட்டு பயனில்லை.. ஊக்கத் தொகை கேட்டு புண்ணியமில்லை.. கடன் உதவி கேட்டு மாள முடியவில்லை.. நேரடியாக அடிக்க வேண்டியதுதான்.. எனக்கு உடனே மந்திரி பதவி வேண்டும்.. என்ன செய்வீர்களோ.. ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது.. எனக்கு உடனே மந்திரி பதவி வேண்டும்... வேறெதுவும் சொல்வதற்கில்லை..

அப்புறம் கடைசியாக,

இந்த மெகா தொடரின் முதல் பகுதியின் முதல் பாராவையும், இந்த கடைசி பகுதியின் கடைசி பாராவையும் மட்டுமே படித்த கழகக் கண்மணிகளுக்கு அன்பு முத்தங்கள்.(வேறென்ன செய்றது..?)

படிக்காமலேயே சும்மா மவுஸை உருட்டிக்கிட்டே வந்துட்டு எஸ்கேப்பாகப் பாக்குற ரத்தத்தின் ரத்தத்தங்களின் காலில் விழுந்து வணங்கி நானும் எஸ்கேப்பாகுறேன்.

கடைசிவரையிலும் படித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி அனைத்தையும் படித்து முடித்திருக்கும் அன்பு உடன்பிறப்புகளுக்கு எனது கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.

நன்றி

உண்மைத்தமிழன்

8 comments:

Sundararajan P said...

(இந்த நாடாளுமன்ற) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :)

உருப்புடாதது_அணிமா said...

///அப்புறம் கடைசியாக,

இந்த மெகா தொடரின் முதல் பகுதியின் முதல் பாராவையும், இந்த கடைசி பகுதியின் கடைசி பாராவையும் மட்டுமே படித்த கழகக் கண்மணிகளுக்கு அன்பு முத்தங்கள்.(வேறென்ன செய்றது..?)///

ஹி ஹி... எப்படிங்க என்னை பத்தி நல்லா தெரிஞ்சு வெச்சுறுக்கிங்க??

உண்மைத்தமிழன் said...

//சுந்தரராஜன்...! said...
(இந்த நாடாளுமன்ற) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா:)//

அதுனாலதான் மந்திரி பதவி வேணும்கிறேன்.. இனிமே குற்றம் சொல்லியே காலத்தை ஓட்டக் கூடாது. நாமளும் சேர்ந்து எப்படி அடிக்கலாம்னு யோசிச்சாத்தான் ஏதாவது நடக்கும்னு நினைக்கிறேன்..)))))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

///உருப்புடாதது_அணிமா said...
//அப்புறம் கடைசியாக, இந்த மெகா தொடரின் முதல் பகுதியின் முதல் பாராவையும், இந்த கடைசி பகுதியின் கடைசி பாராவையும் மட்டுமே படித்த கழகக் கண்மணிகளுக்கு அன்பு முத்தங்கள்.(வேறென்ன செய்றது..?)//
ஹி ஹி... எப்படிங்க என்னை பத்தி நல்லா தெரிஞ்சு வெச்சுறுக்கிங்க??///

ஓ.. நீங்களும் அந்த டீம்ல ஒரு ஆளா..? வைக்கிறேன் ஆப்பு.. சீக்கிரமா நூறு கமெண்ட்ட பப்ளிஷ் பண்ண வைச்சர்றேன்.. அப்பத் தெரியும்..

அருண்மொழி said...

டுபாக்கூர் தமிழரே,

முதலில் ஒழுங்கா பதிவுகளை போட கற்றுக்கொள்ளவும். Check the links in your postings.

எல்லாம் முருகன் செயல் அய்யா. உமக்கு ஏன் வயிர் எரிகின்றது.

உண்மைத்தமிழன் said...

//அருண்மொழி said...
டுபாக்கூர் தமிழரே, முதலில் ஒழுங்கா பதிவுகளை போட கற்றுக்கொள்ளவும். Check the links in your postings.//

ஐயோ அருண்மொழி ஸார்.. மன்னிக்கணும்.. மன்னிக்கணும்.. அவசரம், அவசரமா போஸ்ட் போட்டன்னா.. அதான் மறுபடியும் டெஸ்ட் பண்ணிப் பார்க்க மறந்துட்டேன்.. தப்பாப் போயிருச்சு. ஓ.. அதுதான் கமெண்ட்டே வரலையா..? என் மரமண்டைக்கும் தெரியாம போயிருச்சே..

மிக்க நன்றிகள் ஸார்.. பாருங்க.. உங்களைத் தவிர வேற ஒருத்தர்கூட இதைச் சொல்லலை..

//எல்லாம் முருகன் செயல் அய்யா. உமக்கு ஏன் வயிர் எரிகின்றது.//

எல்லாம் அவன் செயல்தான்.. வேறில்லை.. என் வயிறு எரிவதுகூட அவன் செயல்தான்.. அதைத்தான் வெளிப்படுத்துகிறேன்.. வேறென்ன செய்வது?

Aachi said...

எல்லாம் இந்த நாட்டின் மீதும்,மக்களின் மீதும் கொண்ட பாசமையா.வெளிநாட்டுக்கு செல்வது என்பது அவர்களின் சொந்த வேலைக்காகவும் சேர்த்த சொத்துக்களை பதுக்கி வைப்பதற்காகவும் போனது மாதிரியே எழுதுரிங்கலேப்பா.அந்த நாட்டில் வாழும் மக்களைப்போல நமது மக்களையும் உயர்த்த வேண்டும் என்பதற்காகத்தான் இவைகள் என்பதை ஏன் புரியாமல் இருக்கிறீங்க.இதில் இருக்கிறே சதியைக் கண்டுபிடிக்க உடனே நீதி விசாரணைக்கு இந்த அரசு செல்லவேண்டும்.உண்மைத் தமிழனையும் இந்த விசாரணைக்கு உட்படுத்தனும்.எங்கே மந்திரிங்கே எங்கே வேன்னாலும் போவாங்க.எவ்வளவு பணம் வேணும்னாலும் செலவழிப்பாங்க.அதையெல்லாம் பார்த்து இப்படி எழுதி எங்க மக்களுக்கு அறிவை ஊட்டுறிங்கலாக்கும்.இதையெல்லாம் படிச்சு திருந்த நாங்க தான் விட்டுருவோமா?.எப்படி...

abeer ahmed said...

See who owns freesearchtools.org or any other website:
http://whois.domaintasks.com/freesearchtools.org