என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என்னுடைய இந்த வெட்டி வெண்ணை முருகா பதிவைப் படித்துவிட்டு வழக்கம்போல புலம்பித் தள்ளியிருக்கிறான் என்று ஒரு சின்ன புன்சிரிப்போடு கடந்து சென்றவர்களுக்கும், பின்னூட்டமிட்டு வாழ்த்திய, திட்டிய அன்பார்ந்த நெஞ்சங்களுக்கும் எனது நன்றி..!
இந்தப் பதிவைப் படித்துவிட்டு திருவாரூரில் இருந்து சரவணன் என்ற என்னைப் போன்ற இன்னொரு ஜீவன், எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்தக் கடிதம் இது :
உண்மைத் தமிழன் அண்ணே வணக்கம்.
என் பேரும் சரவணன்தான். பொதுவா முருகன் திருநாமங்களில் அதுவும் சரவணன் என்ற பெயர் வைத்தவர்களை போட்டு அடித்து, துவைத்து, காயப்போட்டு உரித்து தொங்கவிட்டுத்தான் விளையாடிக்கொண்டிருக்கிறான். என்ன பண்ண சொல்றீங்க.?
நான் சரஸ்வதி பூஜை அன்னைக்கு பிறந்துட்டேன்னு சரவணன்னு பேர் வெச்சுட்டாங்க. சமீபத்துல ஒரு நியூமராலஜி பார்ட்டியை வேறு ஒரு வேலையா சந்திச்சப்ப, நீங்க பிறந்த தேதிக்கும் உங்க பேருக்கும் ஆகவே ஆகாதுன்னு சொல்லி, 500 ரூபா பீஸ் எடுத்துட்டு வாங்க. சூப்பரா நான் ஒரு பேர் வெச்சுடுறேன்னு சொன்னார். "அட போப்பா, அந்த காசு இருந்துச்சுன்னா ஒரு வாரம் என் வீட்டுல சாப்பாடு செலவுக்கு அட்ஜஸ்ட் ஆயிடும்"னுட்டு வந்துட்டேன்.
கடந்த 17-ம் தேதி என்னுடைய டி.டி.பி. சென்டர்ல சிஸ்டம் ஹேங் ஆயிடுச்சு. நானும் என்னென்னவோ செய்து பார்த்தேன். வழிக்கு வரலை. சுவிட்ச் போர்டு சுவிட்சையே ஆப் செஞ்சுட்டு, திருப்பி ஆன் பண்ணினா பூட் ஆகி ஆட்டமெடிக் லாகின் ஆகி உள்ளே போகுது. அப்புறம் அவ்வளவுதான். டெஸ்க் டாப்பில் உள்ள ஒரே ஒரு நோட்பேட் பைலை திறக்குறதுக்குள்ள ஹேங் ஆயிடும். அட்டகாசம் படத்துல கருணாஸ் சொல்லுவாரே, ‘வண்டி ஸ்டார்ட் ஆகுது. கியர் விழுகுது. ஆனா வண்டி மூவ் ஆக மாட்டெங்குது’ன்னு.. அந்த கதிதான் என் கதியும். சரி. இனி நம்ம சிஸ்டம் அதோ கதிதான்னு முடிவு பண்ணி நானும் எனக்கு தெரிஞ்ச சர்வீஸ் எஞ்சீனியர்கள், எனக்குத் தெரியாத.. ஆனா வேலை தெரிஞ்ச எஞ்சீனியர்கள்னு அழைச்சுட்டு வந்து பார்த்தாலும் அவங்களும் உதட்டைப் பிதுக்கிட்டாங்க.
இந்த லட்சணத்துல கிரௌன் சைஸ்ல தலா எண்பது பக்கம் கொண்ட புத்தகம் லே அவுட் செஞ்சு அந்த கம்ப்யூட்டர்லதான் இருக்கு. நாலு நாள்ல சித்தப்பா பொண்ணுக்கு கல்யாணம். சும்மா இருந்த தம்பி, சித்தப்பாகிட்ட 12-க்கு எட்டு ப்ளக்ஸ் வெச்சிடுறேன்னு உதார் விட்டாச்சு. அதை ரெடி பண்ணணும். இது தவிர பொங்கல் நேரத்துல கோர்ட் சராமாரியா லீவா போனதால வழக்கமா கேஸ் விவரங்கள் டைப் செய்யுற வக்கீலுங்க அந்த நேரத்துலதான் அதிகமா வேலையை எடுத்துக்கிட்டு வர்றாங்க.
சரி… யாராச்சும் பழைய சிஸ்டம் தள்ளிவிடுறாங்களான்னு விசாரிச்சா இப்போ ஒண்ணும் இல்லையேன்னு பழைய சோறு கேட்டு போனவனை (பழங்கால பிச்சைக்காரனை) விரட்டுற மாதிரி பதில் சொல்லிட்டாங்க. 27 ஆயிரம் ரூபாய்க்கு அவர் வாங்கின சிஸ்டத்தை அட்லீஸ்ட் 20 ஆயிரம் கொடுத்தாச்சும் எடுத்தாதான் நம்ம மனசாட்சி கொஞ்சம் அமைதியா இருக்கும்.
அது போகட்டும். அந்த சிஸ்டத்தையாவது அடுத்த நாளே ரெடி பண்ண முடிஞ்சதா? இல்லையே. விண்டோஸ் 7-தான் இன்ஸ்டால் ஆகுது. அது நான் வழக்கமா பயன்படுத்துற சில சாப்ட்வேருக்கு சப்போர்ட் பண்ணாது. எக்ஸ்பி இன்ஸ்டால் பண்ணவே முடியலை. நானும் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்து 10 நாள் கழித்து உறவுக்கார பையன் ஒருத்தன் பயாஸ் செட்டிங்ல ஒரே ஒரு ஆப்ஷனை மாத்தினான். எக்ஸ்பி ஓகே ஆயிடுச்சு.
நடுவுல இந்த பத்துநாளும் என்ன நடந்துச்சுன்னுதானே கேட்குறீங்க.? மக்கர் பண்ணின பழைய சிஸ்டமே ஒர்க் ஆகுது. ஆனாஅதுவும் கடந்த 5 வருசமா நம்மகிட்ட சிக்கி சின்னாபின்னமாகிதான் உழைச்சுகிட்டு இருக்கு. இப்போ தேவையில்லாம ஏற்கனவே இருக்குற கடன் போதாதுன்னு புதுசா ஒருத்தர்கிட்ட இருபதாயிரம் கடன். மாசம் 4 ஆயிரம் ரூபா சம்பாதிக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போற ஒருத்தனுக்கு இது தேவையா..? பழைய சிஸ்டம் டுயல் கோர் சிக்கியிருந்தா எப்படியும் சிபியு மட்டும் நல்ல கண்டிசனா இருந்தாலே ஆறு அல்லது ஏழாயிரம் ரூபாய்ல முடிஞ்சிருக்கும். இப்படி இழுத்துவிட்டுட்டார் ஆண்டவன்.
அடுத்த டுவிஸ்ட் என்னன்னா நான் பழைய சிஸ்டம் இருக்கான்னு விசாரிச்ச எல்லாரும் அடுத்து 2 நாள்ல இப்போ இருக்குன்னு போன் செய்யுறானுங்க. இது போதாதுன்னு …………. ஊர் கலெக்டர் ஆபீஸ் வளாகத்துல ஒரு துறையில இருக்குற உறவினர், எங்க ஆபீஸ்ல ஹை கான்பிகிரேசன்ல சிஸ்டம் போடப்போறதால பெரிய யுபிஎஸ், சிஸ்டம், பிரிண்டர்அப்படின்னு செட்டப்பா இருக்கு. நீ வந்து பார்த்து என்ன ரேட் தேறும்னு நீயே முடிவு பண்ணி மூணு நாலு லெட்டர்பேடுல ஒரு கொட்டேசன் கொடுத்துடு. நான் வாங்கித் தர்றேன்னு சொல்றார். மாவட்ட மைய நூலகத்துக்கு போனா அங்க ஒரு சிஸ்டத்தை கொடுத்துட்டு அப்கிரேடு செய்யப்போறதா நமக்கு பழக்கமான லைப்ரேரியன் சொல்றார். இன்னொரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்துல இதே மாதிரி ஒரு தகவல் வருது. இது எல்லா தகவலும் நான் ஒரு சிஸ்டத்தை கொண்டு வந்த ரெண்டே நாள் கழித்து ஒரு நாள் முழுக்க இந்த மாதிரி தகவல் வருதுன்னா மேல உட்கார்ந்துருக்குறவனுங்களை என்ன செய்யுறது...?
இது ரெண்டு நாள் சாம்பிள்தான் அண்ணே. எனக்கு விவரம் தெரிஞ்ச நாலு வயசுல இருந்து நடந்ததை புத்தகமாக்கினா குறைஞ்சது 100 தொகுதி அச்சடிக்கலாம். நடுவுல நீங்க ஒரு நாள் வண்டி பஞ்சர் ஆன கதை எழுதியிருந்தீங்கிளே. அப்படி நமக்கு வாரத்துக்கு நாலு மேட்டர் நடக்கும்.கைப்புள்ள வடிவேலு கதையா... என்ன இன்னைக்கு பொழுது விடிஞ்சதுல இருந்து ஒரு அடியும் விழலைன்னு மிச்சமிருக்குறஒண்ணு ரெண்டு நாள்ல கவலைப்படுற அளவுக்கு நம்ம கதி ஆயிடுச்சு.
நான் மீடியேட்டரா இருந்து யாருக்காச்சும் ஒரு வேலையை கைகாட்டி விட்டா ஒருத்தர் 10 முதல் 20 ஆயிரம் லாபம்கிடைச்சா போதும்னு இருந்த நேரத்துல 1 லட்ச ரூபாய் லாபம் கிடைச்சுடுச்சுன்னு மிரண்டு போய் இருக்கார். ஆனா என் கதி... கடை வாடகை, வீட்டு சாப்பாட்டு செலவு தவிர வேறு ஒரு பைசா பார்க்க முடியலை. தொழிலை விட்டுட்டு வேலைக்கு போக வேண்டியதுதானேன்னு கேட்பீங்க. வேலைக்கு போன ஒரு இடத்துல கூட எனக்கு சம்பளம் அதிகமா இல்லை... பேசுன தொகையே வராதுண்ணே. உள்ளூர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில இருந்து தினமலர் எடிட்டோரியல்வரை இதுதான் நிலைமை.
வெண்ணை வெட்டி முருகான்னு நீங்க எழுதுன பதிவை படிச்சதும், என் மனசுல இருந்த சோகமெல்லாம் மறைஞ்சு நாமசங்கம் சேர்றதுக்கு ஒரு ஆள் இருக்காருன்னுதான் தோணுச்சு.
அன்புடன்
From
Saravanan
Thiruvarur.
அன்பின் சரவணன்
உங்களுக்கு நான் ஆறுதல் சொல்லித் தேற்றும் நிலையில் இல்லை.. வேண்டுமானால் நாம் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வோம்..
வாழ்க்கை ஒரு போராட்டம்.. அதில் ஜெயிப்பவன்தான் மனிதன் என்று அடுத்த வேளை சோற்றுக்கு பிரச்சினையில்லாத பேச்சாளர்கள்தான் பேசுவார்கள்.. அவர்களுக்கு கவலையில்லை. பேசுகிறார்கள். வாழ்க்கையில் இத்தனை பிரச்சினைகள் வருகின்றன.. இத்தனை கஷ்டங்கள் வருகின்றன.. அதனை நிவர்த்தி செய்யும் வழிகளும் இங்கேயே இருக்கின்றன. அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்ற அறிவுரை எல்லா திசைகளில் இருந்தும் கிடைக்கின்றன.. ஆனால் அது தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தால் எப்படியிருக்கும் என்று கேட்டுப் பாருங்கள்.. பதிலே வராது..
ஒருவன் வாங்கி வந்த வரமே இப்படித்தான் என்றால் அவன் உடல் சுடுகாடு போகும்வரையிலும் எழுந்து, விழுந்து பின் எழுந்து, பின் மீண்டும் விழுந்து.. இப்படியேதான் இந்த வாழ்க்கைச் சூழலில் உழல வேண்டும்.. உங்களது துயரங்கள் தொடர்கதை என்னும்போதே நீங்களும் என்னைப் போன்றவர் என்ற உணர்வினை என்னால் உணர முடிந்தது..!
பகுத்தறிவை பயன்படுத்தச் சொல்லி அறிவுரை வழங்கும் அஞ்சாசிங்கங்கள் எல்லாம் இங்கே பலர் இருக்கிறார்கள். பாவம்.. அவர்களுக்கு இதுவெல்லாம் வாய்க்க வாய்ப்பில்லை.. வாழ்க்கையில் துயரங்களையும், சோகங்களையும் உண்மையாகவே அனுபவிக்காதவனிடம் அதன் நிழல்கூட தெரியாது.. பார்ப்பவர்களிடத்திலெல்லாம் எதையும் ஈஸியா எடுத்துக்கணும் என்று சொல்லிவிட்டுப் போகத் தெரிந்தவனுக்கு அவனது பிரச்சினையைத் தீர்க்க ஆயிரம் பேர் இருப்பார்கள்.. இருந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் புரியாது..!
அன்பின் சரவணன்.. இதுதான் நமது விதி.. போராடி, போராடியேதான் நாம் அனைத்தையும் பெற வேண்டும் என்பது இந்த ஜென்மத்தில் நமக்கு விதிக்கப்படடிருக்கும் விதி.. அதனை நம்மால் மீற முடியாது.. ஒரு செயலைத் துவக்கும்போதே இது நடக்காமல் போனால் என்ன செய்வது என்பதற்கான வழிகளையும் வைத்துக் கொண்டே எதனையும் செய்யத் துவங்குங்கள். இதுதான் நான் உங்களுக்குக் கொடுக்கும் ஒரேயொரு சின்ன அட்வைஸ்.. இதைத்தான் நானும் இப்போதுவரையிலும் பின்பற்றுகிறேன்..!
போன ஜென்மத்து பாவத்தையெல்லாம் இந்த ஜென்மத்தில் சுமக்குகிறோம் என்கிறார்கள்.. இந்த ஜென்மத்தில் நாம் செய்கிற புண்ணியமெல்லாம் சேர்ந்து அடுத்த ஜென்மத்திலாவது நம்மை இவ்வுலகில் வாழ விடட்டும்..! சென்னைக்கு வந்தீர்களேயானால் அவசியம் என்னை சந்தியுங்கள்.. சந்திப்போம்..
நன்றி..
அன்பின் சரவணன்.. இதுதான் நமது விதி.. போராடி, போராடியேதான் நாம் அனைத்தையும் பெற வேண்டும் என்பது இந்த ஜென்மத்தில் நமக்கு விதிக்கப்படடிருக்கும் விதி.. அதனை நம்மால் மீற முடியாது.. ஒரு செயலைத் துவக்கும்போதே இது நடக்காமல் போனால் என்ன செய்வது என்பதற்கான வழிகளையும் வைத்துக் கொண்டே எதனையும் செய்யத் துவங்குங்கள். இதுதான் நான் உங்களுக்குக் கொடுக்கும் ஒரேயொரு சின்ன அட்வைஸ்.. இதைத்தான் நானும் இப்போதுவரையிலும் பின்பற்றுகிறேன்..!
போன ஜென்மத்து பாவத்தையெல்லாம் இந்த ஜென்மத்தில் சுமக்குகிறோம் என்கிறார்கள்.. இந்த ஜென்மத்தில் நாம் செய்கிற புண்ணியமெல்லாம் சேர்ந்து அடுத்த ஜென்மத்திலாவது நம்மை இவ்வுலகில் வாழ விடட்டும்..! சென்னைக்கு வந்தீர்களேயானால் அவசியம் என்னை சந்தியுங்கள்.. சந்திப்போம்..
நன்றி..
|
Tweet |
10 comments:
காகித ஓடம், கடலலை மீது, போவது போலே இருவரும் போவோம்... (சிச்சுவேஷன் சாங்)...
http://youtu.be/wkwcIf1vAsk
அண்ணாச்சி,
ஆரம்பிச்சுட்டிங்களா?
எவனுக்கு இல்லை பிரச்சினைனு சொன்னா ,உடனே
//வாழ்க்கை ஒரு போராட்டம்.. அதில் ஜெயிப்பவன்தான் மனிதன் என்று அடுத்த வேளை சோற்றுக்கு பிரச்சினையில்லாத பேச்சாளர்கள்தான் பேசுவார்கள்.//
இப்படி சொல்லிடுவீங்க ,என்னத்த சொல்ல ,நாட்டுல ஒவ்வொருத்தரும் தமக்கு வரும் கஷ்டம் தான் உலகிலே மோசமான ,பெரிய ஒன்னு என நினைச்சுப்பது இயல்பு அவ்வ்!
அதே சமயம் அவங்களுக்கு ஒரு நல்லது நடந்தால் ,அதிஷ்டம் அடிச்சால் நாட்டுல இத விட பெரிய நல்லது அல்லது வாழ்வு மத்தவங்களுக்கு கிடைக்குது ,நமக்கு மட்டும் போயும் போயும் இதான் கிடைச்சதுனு பேசுவாங்க அவ்வ்!
இழப்பை ,துன்பத்தை பெருசு படுத்தி பார்ப்பதும், நன்மையை சிறுமையாக்கி விடுவதும் அல்ப மனித இயல்பு!
10 ரூவா கிடைச்சா ,100 ரூவா கிடைக்கலையே என ஏங்குவதும், 100 ரூவா கிடைச்சா 1000 ரூவா ,கிடைச்சா லட்சமில்லையே என்பார்கள்.
இப்போ கடித பொலம்பலுக்கு வருவோம்,
# // 27 ஆயிரம் ரூபாய்க்கு அவர் வாங்கின சிஸ்டத்தை அட்லீஸ்ட்20 ஆயிரம் கொடுத்தாச்சும் எடுத்தாதான் நம்ம மனசாட்சி கொஞ்சம் அமைதியா இருக்கும்.
//எக்ஸ்பி இன்ஸ்டால் பண்ணவே முடியலை. நானும் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்து 10 நாள் கழித்து உறவுக்கார பையன் ஒருத்தன் பயாஸ் செட்டிங்ல ஒரே ஒரு ஆப்ஷனை மாத்தினான். எக்ஸ்பி ஓகே ஆயிடுச்சு.
//
கணீனி பத்தி எதுவும் தெரியாமலே டிடிபி மட்டும் தெரிஞ்சி வச்சிருப்பாரோ?
15 ஆயிரத்துக்கு புத்தம் புது அருமையான கான்பிகரேஷன்ல டெஸ்க் டாப் பிசி விக்குது , அவ்வ்!
லேப் டாப்பே கிடைக்கும்.
# ஆபரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யறது எப்படினு தெரிஞ்சிக்கவே 10 நாள் ஆகுதுனா, சூப்பர் கம்பியூட்டரே கொடுத்தாலும் "சரியில்லையேனு "பொலம்புவாராயிருக்கும் அவ்வ்!
ஃபைல் ஃபார்மேட்டிங் மெத்தட் மட்டும் பயோஸ்ல மாத்தினா போதும் எக்ஸ்பி இண்ஸ்டால் ஆகிடும்.
திருவாரூர்ல யாருக்கும் கம்பியூட்டர பத்தி தெரியாதா, நல்ல ஊராச்சே?
இப்படிப்பட்டவர்கள் எல்லாம் பொலம்புறத மட்டுமே தொழிலாக செய்யத்தான் வசதிப்படும் அவ்வ்!
உடனே எல்லாருக்கும் கம்பியூட்டரில் எல்லாம் தெரியுமானு கேட்காதிங்க, கணியை வச்சே தொழில் செய்றவங்க அதுவும் பல வருடமா செய்றவங்க கண்டிப்பா தெரிஞ்சி வச்சிருக்கனும். வீட்டுப்பயன்பாட்டாளர்கள் இப்படி பொலம்பினாலாச்சும் ஒரு நியாயம் இருக்கு அவ்வ்!
பொலம்புறதா இருந்தா ரீசனபிளாக பொலம்புங்கையா , தும்மல் வந்தால் கூட அய்யோ எனக்கு மட்டும் தும்மல் வருது பக்கத்தில இருக்கவங்களுக்குலாம் வரலியேனு பொலம்பாதிங்க ,முடியல ,அவ்வ்!
வவ்ஸ்,
முந்தியே சொல்லணும்னு நினச்சேன். இத்தனை வரிகளில் 7 ‘அவ்வ்’! எதுக்கு இம்புட்டு .... உங்க ட்ரேட் மார்க்காக ஆகிப் போச்சு. ஆனால் நல்லா இல்லை.
குறைங்க ... வாசிக்கிறவங்களுக்கு நல்லா இருக்கும்.
இதுக்கும் அவ்வுன்னு கோவிச்சிக்காதீங்க!!!!
என்னங்க நீங்கள் இருவருமே,சிறு வயதிலேயே ஒரு மாம்பழத்துக்கே வக்கில்லாதவர் என பரமசிவன் குடும்பத்தால் கோவணத்துடன் கலைக்கப்பட்டு, வளர்ந்து மணம்முடிக்க உதவிக்கு கட்டப்பிரமச்சாரி கணபதியிடம் கைகட்டி நின்ற இந்த முருகனிடம் சொல்லிப் புலம்புகிறீர்கள்.
வீட்டுக்கு வீடு வாசல் படி தான்.
ஆனாலும் இருவர் எழுத்தையும் வாசித்துச் சிரித்தேன். கேலியாகவல்ல - துன்பம் வரும் வேளையில் சிரிக்கச் சொல்லியுள்ளார்களே!- அதுதான் , உங்கள் துன்பத்துக்காகச் சிரித்தேன்.
இந்தப் பாடல் ஞாபகம் வந்தது.
"ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற
தள்ளவொணா விருந்து வர.. சர்ப்பந் தீண்ட
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே.."
தருமிய்யா,
//முந்தியே சொல்லணும்னு நினச்சேன். இத்தனை வரிகளில் 7 ‘அவ்வ்’! எதுக்கு இம்புட்டு //
நாம எழுதினை படிச்சு நினைச்சு "எண்ணி"ப்பார்ப்பாங்கனு நினைச்சால் ,இந்த "எண்ணி"ப்பார்க்கிறத செய்யுறிங்களே -:))
அவ்வுக்கு இந்த அக்கப்போரா ம்மே!
எப்படியோ ஒட்டிக்கிட்டு தானா வந்துடுது,இனிமே குறைச்சுக்கிறேன்,நாம எப்பவும் கோவிச்சுக்கிறதுலாம் இல்லை, ஆனால் என்ன பேசினாலும் கோவிச்சுக்கிட்டு பேசுறாப்போலவே தெரியுது ,நம்ம மூஞ்சு அப்படி :-((
# அது சரி ஒரு மனுசன் கடுதாசிலாம் காட்டி ,சோடிப்போட்டுக்கிட்டு ஆற்றாமையால் பொலம்பித்தள்ளிக்கிட்டு இருக்கார் ,அதுக்கு ஆறுதலா "அடப்பாவமே லோகத்தில இப்படியுமா நடக்குதுனு " சொல்லி வைக்கலாம்ல ,அதை விட்டுப்புட்டு எண்ணிக்கிட்டு இருக்கிங்களே? (அய்யோ அவ்வ்னு சொல்லிடுவேன் போல இருக்கே ஹி...ஹி)
ஊரில் பொழுது போகாத பொம்முகள் நிறையத்தான் இருக்கின்றன போலிருக்கிறது .அட..........என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் .
ஊரில் பொழுது போகாத பொம்முகள் நிறையத்தான் இருக்கின்றன போலிருக்கிறது .அட..........என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் .
//வவ்வால் said...
அண்ணாச்சி,
ஆரம்பிச்சுட்டிங்களா?//
பிரச்சனை என்னன்னா கொஸ்டின் பேப்பர்-தான்.
பத்தாவது படிக்கிறவனுக்கு அஞ்சாம் கிளாஸ் கணக்கு பேப்பர் ஈசி, படிக்கிறவனுக்கு எம்ஈ கணக்கு பேப்பர் ஈசி. அதே மாதிரிதான் ஒருத்தனுக்கு போராட்டமா இருக்கிற வாழ்க்கை சூழ்நிலை இன்னொருத்தனுக்கு ஈஸியா இருக்கும், சிலர் ஊருக்கே வழி காட்டுவான் ஆனா அவனோட பிரச்சனைக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிசிட்டிருப்பன் அது மாதிரி தான் இந்த ரெண்டு சரவணனோட பிரச்னையும்
//வவ்வால் said...
அண்ணாச்சி,
ஆரம்பிச்சுட்டிங்களா?//
பிரச்சனை என்னன்னா கொஸ்டின் பேப்பர்-தான்.
பத்தாவது படிக்கிறவனுக்கு அஞ்சாம் கிளாஸ் கணக்கு பேப்பர் ஈசி, படிக்கிறவனுக்கு எம்ஈ கணக்கு பேப்பர் ஈசி. அதே மாதிரிதான் ஒருத்தனுக்கு போராட்டமா இருக்கிற வாழ்க்கை சூழ்நிலை இன்னொருத்தனுக்கு ஈஸியா இருக்கும், சிலர் ஊருக்கே வழி காட்டுவான் ஆனா அவனோட பிரச்சனைக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிசிட்டிருப்பன் அது மாதிரி தான் இந்த ரெண்டு சரவணனோட பிரச்னையும்
Post a Comment