7-2-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அப்பன் முருகன் எவ்வளவுதான் சோதனைகளைக் கொடுத்தாலும் வாழ்ந்துதான் தீர வேண்டும். போராட்டங்களை நடத்தித்தான் ஆக வேண்டும்.. தற்போதைய நிலைமையில் வேலை தேடும் படலத்தை ஒரு பக்கம் நகர்த்திக் கொண்டேயிருந்தாலும், எதிர்பார்த்த வேலை கிடைக்கின்றவரையிலும் வருமானத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிலை..
வெறுமனே பத்து காசுக்கு பிரயோசனப்படாமல் பிளாக்கில் எழுதி வருவதையே கொஞ்சம் மாற்றி தனி இணையத்தளத்தில் எழுதினால் என்ன என்ற யோசனை பல ஆண்டுகளாக எனக்குள்ளேயே இருந்தது. ஆனால் நேரமில்லாத காரணத்தினாலும், அதனை தொடர்ந்து பின்பற்ற முடியாதே என்கிற தவிப்பினாலும் தொடாமலேயே இருந்தேன்.
இப்போதுதான் நேரம் வாய்த்தது.. எனக்குப் பிடித்த.. நான் செய்கின்ற தொழிலான சினிமாவில்.. பத்திரிகையாளராக உருமாறி வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருந்ததை, இப்போது எனது சொந்தத் தளத்தில் எழுதி வருகிறேன்..
இப்படியொரு ஐடியாவை சில மாதங்களுக்கு முன்னால் கூகிள் பிளஸ்ஸில் நான் வைத்தபோது உடனுக்குடன் அன்றைக்கே ஓடி வந்து ,அறிவுரையும், ஆலோசனையும் சொல்லி ஊக்கமளித்தவர்கள் பலர்.. அதில் தற்போது அமெரி்ககாவில் இருக்கும் அண்ணன் முத்துக்குமரன், எனது தளத்தை உடனுக்குடன் பதிவு செய்து கொடுத்தார். பெங்களூரில் இருக்கும் நமது ஐயப்பன் கிருஷ்ணன் என்கிற ஜீவ்ஸ் அதனை ஒரு சில நாட்களில் உருவாக்கிக் கொடுத்தார்..
ஆனாலும் அந்த நேரத்தில் என்னால் முழுமையாக அதனைச் செயல்படுத்த முடியவில்லை. சட்டென்று அலுவலகத்தில் எழுந்த திடீர் மாற்றங்கள் என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது.. குழி தோண்டுகிறார்கள் என்பதையே புரிந்து கொள்ள முடியாத நிலையில்.. குப்புறத் தள்ளிய பிறகே குழி நமக்குத்தான் என்பது தெரிந்தது.. அதற்குள்ளாக 2 மாதங்கள் ஓடிவிட்டன..
இதன் பின்பும் தம்பி ஜீவ்ஸ் அவ்வப்போது சாட்டிங்கிலும், போனிலும் இதைப் பற்றிச் சொல்லி கடிந்து கொண்டார். முத்துக்குமரன் அண்ணன் "எல்லாம் வேஸ்ட்டா போச்சேண்ணே.. ஏன் இத்தனை லேட் பண்றீங்க..?" என்று வருத்தப்பட்டார்.. அப்போதும் அதனை ஆரம்பிக்கத் தயங்கினேன். காரணம்.. அதனை ஆரம்பித்து பாதியில் விடவே முடியாது. துவக்கினால் அதனை முழுமையாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால்தான் அத்தனை யோசிப்பு..
போன மாத கடைசி வாரத்தில் களத்தில் ஏற்பட்ட சில, பல ஏமாற்றங்கள் வேறு வழியே இல்லாமல், என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து தள்ளிவிட்டது. www.tamilcinetalk.com என்ற இத்தளத்தை முழுமையாக பணிக்குக் கொண்டு வரும் பணியை துவக்கினேன்.. அருமை நண்பரும் 'கேள்விக்குறி' படத்தின் இயக்குநரான அண்ணன் ஜெய்லானி, மிக அருமையாக மிகக் குறுகிய காலத்தில் இத்தளத்தை முழுமையாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்..
முழுக்க, முழுக்க சினிமா பற்றிய செய்திகளைத் தொகுத்து தரும் தளமாகவே இதனை கொண்டு வந்திருக்கிறேன். இதுதான் எனது தொழில். இதன் பின் விளைவுகளும், பக்க விளைவுகளும் எனக்கே..! இதுவரையில் 'உண்மைத்தமிழன்' வலைத்தளத்தில் எழுதி வந்த சினிமா விமர்சனங்கள், இனி இந்த தமிழ்சினிடாக்.காம்-ல் வெளிவரும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
அதன் முதல் கட்டமாக 'ரம்மி' மற்றும் 'உ' படத்தின் விமர்சனங்களை தமிழ்சினிடாக்.காம்-ல் எழுதியுள்ளேன்.. படித்துப் பார்க்கவும்..! பிற்காலத்தில் தேவையெனில் 'உண்மைத்தமிழன்' வலைத்தளத்திலும் பதிவு செய்து வைக்கிறேன்.. இப்போது ஏதேனும் ஒரு தளத்தில் மட்டும் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் சொந்தத் தளமென்றாலும் அதற்குத் தேவை அதிகப்படியான பார்வையாளர்களின் வருகை.. அதற்காகத்தான் இப்போது, இந்த காலை வேளையில் பல்லுகூட விளக்காமல் மல்லு கட்டிக் கொண்டிருக்கிறேன். அத்தனை வேலைகள் காத்திருக்கின்றன..
வலைத்தளம் உருவாக பெரிதும் உதவிகள் செய்த அண்ணன்கள் முத்துக்குமரன், ஜீவ்ஸ் ஆகியோருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போதுவரையிலும் அவர்களுக்கு சல்லிக்காசு தரவில்லை.. இதுபோன்ற நட்புகளை நம்பித்தான் நமது வாழ்க்கை தீராநதியாக ஓடிக் கொண்டிருக்கிறது.. நன்றி நண்பர்களே..! என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன். அண்ணன் ஜெய்லானிக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..
நண்பர்களும், அன்பர்களும் கோபித்துக் கொள்ளாமல், சிரமம் பார்க்காமல் எனது சினிமா செய்தித் தளத்திற்கு வந்து சினிமா விமர்சனங்களை படித்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..
மீண்டும் சந்தி்பபோம் மக்களே..!
|
Tweet |
25 comments:
வாழ்த்துக்கள் அண்ணே...சினிமா செய்திகளை இனி அங்கே மட்டும் பதியுங்கள்...அப்பதான் நல்ல ஹிட்ஸ் கிடைக்கும். இங்கே வெறும் புலம்பல்களை மட்டும் வைத்துக் கொள்ளலாம்..
வாழ்த்துக்கள் தலைவா ....முருகனை இனிமே ரொம்ப திட்டாதீங்க ;)
வாழ்த்துகள் அண்ணாச்சி
வாழ்த்துகள் அண்ணே. விமர்சனம் அங்கே போடும்போது, இங்கே ஒரு வரியில் ‘tamilcinetalk.com-ல் *** விமர்சனம்’ என்று கொஞ்சநாளைக்கு லின்க் போடுங்கள். நம் மக்களுக்கு பழக்கமாகும்வரை, இதைச் செய்யுங்கள்.
அப்புறம் சைடுல பெருசா உங்க தளத்திற்கு போட்டோ லின்க் கொடுங்க. முடிஞ்சா, நியூஸ் அப்டேட் ஆகித் தெரியமாதிரி லின்க் கொடுங்க...வெற்றிவேல், வீரவேல்.
உண்மைத்தமிழன் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என்னுடைய சில ஆலோசனைகள்
1. இந்தத் தளத்தில் திரை செய்திகளை இனி போடாதீர்கள்.
2. புதிய தளத்தில் சுருக்கமாக திரை செய்திகளை எழுதுங்கள் . இங்கே போல ரொம்ப பெரிதாக எழுத வேண்டாம்.. படிப்பவர்களை சோர்வடைய செய்யும்.. ஆர்வம் குறையும்.
3. துணுக்கு செய்திகளே பெரும்பாலனவர்கள் விரும்பி படிகிறார்கள் எனவே அதில் கவனம் செலுத்துங்கள்.
4. தினமும் ஏதாவது அப்டேட் செய்யுங்கள். வருகிறவர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும்.. இல்லை என்றால் வரும் ஆர்வம் குறைந்து விடும்.
5. செங்கோவி கூறியது போல இங்கேயும் (blogspot) கொஞ்ச மாதங்களுக்கு உங்க புதிய தள செய்தி / பதிவு லிங்க் கொடுங்கள்.
6. அங்கே எழுதியது பழையது என்று கொஞ்ச நாள் கழித்து இங்கே பதிய வேண்டாம்.. இங்கேயே வரும் என்று இதையே படித்து விட்டு அங்கே வர மாட்டார்கள்.
7. உங்கள் தனிப்பட்ட விருப்ப வெறுப்புகள் புதிய தளத்தில் காட்டாதீர்கள். இல்லை என்றால் இந்த தளம் குறிப்பிட்ட நடிகருக்கு எதிரானது / ஆதரவானது என்ற எண்ணம் பரவி விடும்.
8. உங்கள் தளத்தை அனைத்து இடங்களிலும் ப்ரொமோட் செய்யுங்கள். FB Google+ etc
கடைசியாக நல்லபடியாக உற்சாகமாக தளத்தை நடத்துங்கள். உங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் என் நன்றி.
அண்ணாச்சி,
முதலில் வாழ்த்துக்கள்! வெற்றி நமதே!
வெற்றில பங்கு கேட்கிறேன் நினைச்சுப்புடாதீர் ,சும்மா ஒரு கோஷத்துக்கு!
# இதெல்லாம் முன்னாடியே செஞ்சிருக்கணும், அதனால் தான் வேற முயற்சி செய்யுங்கனு சொல்லிட்டு இருந்தேன். இப்பவாச்சும் ஆரம்பிச்சிங்களே ,வேற வேலை வந்தாலும் சைடில் கவனிச்சுக்குங்க!
அப்படியே புக்கு கிக்கு போடுங்க ,அப்பத்தான் " அடையாளம்" கிடைக்கும்.
மத்தவங்க போடுறது லாம் வெறும் பேருக்காக ,ஆனால் திரையுலகம் சார்ந்து இருப்பவர்களுக்கு "படைப்பு அடையாளம்" எனவே பலன் கிடைக்கும்.
அதுக்குனு உங்க விமர்சனத்தை புக்கா போடுறேன்னு கிளம்பிடாதிங்க , படைப்பூக்கம் பெற்ற படைப்பாக செய்யுங்க!
நான் 10 புக்கு வாங்கிக்கிறேன்! ஹி...ஹி 100 கூட வாங்கலாம் தான் ,இப்போதைய நிலைமைக்கு தாங்காது அவ்வ்!
best wishes, Sir
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் சகோ.
வாழ்த்துக்கள். கிரி சொன்ன எல்லா அறிவுரைகளும் அருமை. உங்கள் தளம் பெரிய அளவு புகழ் பெற வாழ்த்துக்கள்!
vaazhthukkal.......
வணக்கம்
நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள் !
மனம் நிறைந்த வாழ்த்துகளுடன் ..பாராட்டுகள் பல..பல...
வாழ்த்துக்கள்....அசத்துங்க அண்ணே....
வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் அண்ணே. சினிமா சார்ந்து ஆர்வம் எனக்கில்லாவிட்டாலும் பொதுவான இணையத்தள அனுபவத்தில் சில கருத்தைச் சொல்லிக் கொள்கிறேன். விரும்பினால் பயன்படுத்திக் கொள்க. தமிழில் இதுவரை 13500க்கு மேல் இணையத்தளங்கள் உள்ளன அதில் 200க்கு மேல் செய்தித் தளங்கள் உள்ளன என்றே அறிகிறேன். பெரும்பாலான தளங்கள் பிற இணையத்தளங்களை நகல் எடுத்தே இயங்குகின்றன. உங்களுக்கு என்று ஒரு தரநிலையை நிர்ணயித்து தனித்துவமாக விளங்கினால் சிறப்பாகும். அடுத்தது நுட்பங்களை மேம்படுத்தி கைப்பேசி, டேபிலேட் என பல கருவிகளில் படிக்கும் வகையில் இணையத்தளத்தைக் கொண்டுபோனால் மேலும் சிறப்பு. சினிமா செய்திகளைப் பொருத்தவரை தேடுதளங்கள் வழியாகவே பலமான வாசகர் பார்வைகள் கிடைக்கும். எனவே சிறப்பான Search engine optimization மூலம் அதைப் பெறமுயலலாம். என்னால் முடிந்த உதவிகளும் செய்கிறேன்.
வாழ்த்துக்கள் சார்!
வாழ்த்துகள் .
CONGRATS SARAVANAN
CONGRATS SARAVANAN!
CONGRATS SARAVANAN!
வாழ்த்துக்கள் தல ..!! கலக்குங்க...!!!
வாழ்த்துக்கள் !!
Post a Comment