Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

வெட்டி வெண்ணை முருகா..பாகம்-2..

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

என்னுடைய இந்த வெட்டி வெண்ணை முருகா பதிவைப் படித்துவிட்டு வழக்கம்போல புலம்பித் தள்ளியிருக்கிறான் என்று ஒரு சின்ன புன்சிரிப்போடு கடந்து சென்றவர்களுக்கும், பின்னூட்டமிட்டு வாழ்த்திய, திட்டிய அன்பார்ந்த நெஞ்சங்களுக்கும் எனது நன்றி..!

இந்தப் பதிவைப் படித்துவிட்டு திருவாரூரில் இருந்து சரவணன் என்ற என்னைப் போன்ற இன்னொரு ஜீவன், எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்தக் கடிதம் இது :

உண்மைத் தமிழன் அண்ணே வணக்கம்.

என் பேரும் சரவணன்தான். பொதுவா முருகன் திருநாமங்களில் அதுவும் சரவணன் என்ற பெயர் வைத்தவர்களை போட்டு அடித்து, துவைத்து, காயப்போட்டு உரித்து தொங்கவிட்டுத்தான் விளையாடிக்கொண்டிருக்கிறான். என்ன பண்ண சொல்றீங்க.?

நான் சரஸ்வதி பூஜை அன்னைக்கு பிறந்துட்டேன்னு சரவணன்னு பேர் வெச்சுட்டாங்க. சமீபத்துல ஒரு நியூமராலஜி பார்ட்டியை வேறு ஒரு வேலையா சந்திச்சப்ப, நீங்க பிறந்த தேதிக்கும் உங்க பேருக்கும் ஆகவே ஆகாதுன்னு சொல்லி, 500 ரூபா பீஸ் எடுத்துட்டு வாங்க. சூப்பரா நான் ஒரு பேர் வெச்சுடுறேன்னு சொன்னார். "அட போப்பா, அந்த காசு இருந்துச்சுன்னா ஒரு வாரம் என் வீட்டுல சாப்பாடு செலவுக்கு அட்ஜஸ்ட் ஆயிடும்"னுட்டு வந்துட்டேன்.

கடந்த 17-ம் தேதி என்னுடைய டி.டி.பி. சென்டர்ல சிஸ்டம் ஹேங் ஆயிடுச்சு. நானும் என்னென்னவோ செய்து பார்த்தேன். வழிக்கு வரலை. சுவிட்ச் போர்டு சுவிட்சையே ஆப் செஞ்சுட்டு, திருப்பி ஆன் பண்ணினா பூட் ஆகி ஆட்டமெடிக் லாகின் ஆகி உள்ளே போகுது. அப்புறம் அவ்வளவுதான். டெஸ்க் டாப்பில் உள்ள ஒரே ஒரு நோட்பேட் பைலை திறக்குறதுக்குள்ள ஹேங் ஆயிடும்.  அட்டகாசம் படத்துல கருணாஸ் சொல்லுவாரே, ‘வண்டி ஸ்டார்ட் ஆகுது. கியர் விழுகுது. ஆனா வண்டி மூவ் ஆக மாட்டெங்குது’ன்னு.. அந்த கதிதான் என் கதியும். சரி. இனி நம்ம சிஸ்டம் அதோ கதிதான்னு முடிவு பண்ணி நானும் எனக்கு தெரிஞ்ச சர்வீஸ் எஞ்சீனியர்கள், எனக்குத் தெரியாத.. ஆனா வேலை தெரிஞ்ச எஞ்சீனியர்கள்னு அழைச்சுட்டு வந்து பார்த்தாலும் அவங்களும் உதட்டைப் பிதுக்கிட்டாங்க.

இந்த லட்சணத்துல கிரௌன் சைஸ்ல தலா எண்பது பக்கம் கொண்ட புத்தகம் லே அவுட் செஞ்சு அந்த கம்ப்யூட்டர்லதான் இருக்கு. நாலு நாள்ல சித்தப்பா பொண்ணுக்கு கல்யாணம். சும்மா இருந்த தம்பி, சித்தப்பாகிட்ட 12-க்கு எட்டு ப்ளக்ஸ் வெச்சிடுறேன்னு உதார் விட்டாச்சு. அதை ரெடி பண்ணணும். இது தவிர பொங்கல் நேரத்துல கோர்ட் சராமாரியா லீவா போனதால வழக்கமா கேஸ் விவரங்கள் டைப் செய்யுற வக்கீலுங்க அந்த நேரத்துலதான் அதிகமா வேலையை எடுத்துக்கிட்டு வர்றாங்க. 

சரி… யாராச்சும் பழைய சிஸ்டம் தள்ளிவிடுறாங்களான்னு விசாரிச்சா இப்போ ஒண்ணும் இல்லையேன்னு பழைய சோறு கேட்டு போனவனை (பழங்கால பிச்சைக்காரனை) விரட்டுற மாதிரி பதில் சொல்லிட்டாங்க.  27 ஆயிரம் ரூபாய்க்கு அவர் வாங்கின சிஸ்டத்தை அட்லீஸ்ட் 20 ஆயிரம் கொடுத்தாச்சும் எடுத்தாதான் நம்ம மனசாட்சி கொஞ்சம் அமைதியா இருக்கும்.

அது போகட்டும். அந்த சிஸ்டத்தையாவது அடுத்த நாளே ரெடி பண்ண முடிஞ்சதா? இல்லையே. விண்டோஸ் 7-தான் இன்ஸ்டால் ஆகுது. அது நான் வழக்கமா பயன்படுத்துற சில சாப்ட்வேருக்கு சப்போர்ட் பண்ணாது. எக்ஸ்பி இன்ஸ்டால் பண்ணவே முடியலை. நானும் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்து 10 நாள் கழித்து உறவுக்கார பையன் ஒருத்தன் பயாஸ் செட்டிங்ல ஒரே ஒரு ஆப்ஷனை மாத்தினான். எக்ஸ்பி ஓகே ஆயிடுச்சு. 

நடுவுல இந்த பத்துநாளும் என்ன நடந்துச்சுன்னுதானே கேட்குறீங்க.? மக்கர் பண்ணின பழைய சிஸ்டமே ஒர்க் ஆகுது. ஆனாஅதுவும் கடந்த 5 வருசமா நம்மகிட்ட சிக்கி சின்னாபின்னமாகிதான் உழைச்சுகிட்டு இருக்கு. இப்போ தேவையில்லாம ஏற்கனவே இருக்குற கடன் போதாதுன்னு புதுசா ஒருத்தர்கிட்ட இருபதாயிரம் கடன். மாசம் 4 ஆயிரம் ரூபா சம்பாதிக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போற ஒருத்தனுக்கு இது தேவையா..? பழைய சிஸ்டம் டுயல் கோர் சிக்கியிருந்தா எப்படியும் சிபியு மட்டும் நல்ல கண்டிசனா இருந்தாலே ஆறு அல்லது ஏழாயிரம் ரூபாய்ல முடிஞ்சிருக்கும். இப்படி இழுத்துவிட்டுட்டார் ஆண்டவன். 

அடுத்த டுவிஸ்ட் என்னன்னா நான் பழைய சிஸ்டம் இருக்கான்னு விசாரிச்ச எல்லாரும் அடுத்து 2 நாள்ல இப்போ இருக்குன்னு போன் செய்யுறானுங்க. இது போதாதுன்னு …………. ஊர் கலெக்டர் ஆபீஸ் வளாகத்துல ஒரு துறையில இருக்குற உறவினர், எங்க ஆபீஸ்ல ஹை கான்பிகிரேசன்ல சிஸ்டம் போடப்போறதால பெரிய யுபிஎஸ், சிஸ்டம், பிரிண்டர்அப்படின்னு செட்டப்பா இருக்கு. நீ வந்து பார்த்து என்ன ரேட் தேறும்னு நீயே முடிவு பண்ணி மூணு நாலு லெட்டர்பேடுல ஒரு கொட்டேசன் கொடுத்துடு. நான் வாங்கித் தர்றேன்னு சொல்றார். மாவட்ட மைய நூலகத்துக்கு போனா அங்க ஒரு சிஸ்டத்தை கொடுத்துட்டு அப்கிரேடு செய்யப்போறதா நமக்கு பழக்கமான லைப்ரேரியன் சொல்றார். இன்னொரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்துல இதே மாதிரி ஒரு தகவல் வருது. இது எல்லா தகவலும் நான் ஒரு சிஸ்டத்தை கொண்டு வந்த ரெண்டே நாள் கழித்து ஒரு நாள் முழுக்க இந்த மாதிரி தகவல் வருதுன்னா மேல உட்கார்ந்துருக்குறவனுங்களை என்ன செய்யுறது...?

இது ரெண்டு நாள் சாம்பிள்தான் அண்ணே. எனக்கு விவரம் தெரிஞ்ச நாலு வயசுல இருந்து நடந்ததை புத்தகமாக்கினா குறைஞ்சது 100 தொகுதி அச்சடிக்கலாம். நடுவுல நீங்க ஒரு நாள் வண்டி பஞ்சர் ஆன கதை எழுதியிருந்தீங்கிளே. அப்படி நமக்கு வாரத்துக்கு நாலு மேட்டர் நடக்கும்.கைப்புள்ள வடிவேலு கதையா... என்ன இன்னைக்கு பொழுது விடிஞ்சதுல இருந்து ஒரு அடியும் விழலைன்னு மிச்சமிருக்குறஒண்ணு ரெண்டு நாள்ல கவலைப்படுற அளவுக்கு நம்ம கதி ஆயிடுச்சு.

நான் மீடியேட்டரா இருந்து யாருக்காச்சும் ஒரு வேலையை கைகாட்டி விட்டா ஒருத்தர் 10 முதல் 20 ஆயிரம் லாபம்கிடைச்சா போதும்னு இருந்த நேரத்துல 1 லட்ச ரூபாய் லாபம் கிடைச்சுடுச்சுன்னு மிரண்டு போய் இருக்கார். ஆனா என் கதி... கடை வாடகை, வீட்டு சாப்பாட்டு செலவு தவிர வேறு ஒரு பைசா பார்க்க முடியலை. தொழிலை விட்டுட்டு வேலைக்கு போக வேண்டியதுதானேன்னு கேட்பீங்க. வேலைக்கு போன ஒரு இடத்துல கூட எனக்கு சம்பளம் அதிகமா இல்லை... பேசுன தொகையே வராதுண்ணே. உள்ளூர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில இருந்து தினமலர் எடிட்டோரியல்வரை இதுதான் நிலைமை.

வெண்ணை வெட்டி முருகான்னு நீங்க எழுதுன பதிவை படிச்சதும், என் மனசுல இருந்த சோகமெல்லாம் மறைஞ்சு நாமசங்கம் சேர்றதுக்கு ஒரு ஆள் இருக்காருன்னுதான் தோணுச்சு.

அன்புடன்

From 

Saravanan
Thiruvarur.


அன்பின் சரவணன்

உங்களுக்கு நான் ஆறுதல் சொல்லித் தேற்றும் நிலையில் இல்லை.. வேண்டுமானால் நாம் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வோம்.. 

வாழ்க்கை ஒரு போராட்டம்.. அதில் ஜெயிப்பவன்தான் மனிதன் என்று அடுத்த வேளை சோற்றுக்கு பிரச்சினையில்லாத பேச்சாளர்கள்தான் பேசுவார்கள்.. அவர்களுக்கு கவலையில்லை. பேசுகிறார்கள். வாழ்க்கையில் இத்தனை பிரச்சினைகள் வருகின்றன.. இத்தனை கஷ்டங்கள் வருகின்றன.. அதனை நிவர்த்தி செய்யும் வழிகளும் இங்கேயே இருக்கின்றன. அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்ற அறிவுரை எல்லா திசைகளில் இருந்தும் கிடைக்கின்றன.. ஆனால் அது தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தால் எப்படியிருக்கும் என்று கேட்டுப் பாருங்கள்.. பதிலே வராது..

ஒருவன் வாங்கி வந்த வரமே இப்படித்தான் என்றால் அவன் உடல் சுடுகாடு போகும்வரையிலும் எழுந்து, விழுந்து பின் எழுந்து, பின் மீண்டும் விழுந்து.. இப்படியேதான் இந்த வாழ்க்கைச் சூழலில் உழல வேண்டும்.. உங்களது துயரங்கள் தொடர்கதை என்னும்போதே நீங்களும் என்னைப் போன்றவர் என்ற உணர்வினை என்னால் உணர முடிந்தது..!

பகுத்தறிவை பயன்படுத்தச் சொல்லி அறிவுரை வழங்கும் அஞ்சாசிங்கங்கள் எல்லாம் இங்கே பலர் இருக்கிறார்கள். பாவம்.. அவர்களுக்கு இதுவெல்லாம் வாய்க்க வாய்ப்பில்லை.. வாழ்க்கையில் துயரங்களையும், சோகங்களையும் உண்மையாகவே அனுபவிக்காதவனிடம் அதன் நிழல்கூட தெரியாது.. பார்ப்பவர்களிடத்திலெல்லாம் எதையும் ஈஸியா எடுத்துக்கணும் என்று சொல்லிவிட்டுப் போகத் தெரிந்தவனுக்கு அவனது பிரச்சினையைத் தீர்க்க ஆயிரம் பேர் இருப்பார்கள்.. இருந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் புரியாது..!

அன்பின் சரவணன்.. இதுதான் நமது விதி.. போராடி, போராடியேதான் நாம் அனைத்தையும் பெற வேண்டும் என்பது இந்த ஜென்மத்தில் நமக்கு விதிக்கப்படடிருக்கும் விதி.. அதனை நம்மால் மீற முடியாது.. ஒரு செயலைத் துவக்கும்போதே இது நடக்காமல் போனால் என்ன செய்வது என்பதற்கான வழிகளையும் வைத்துக் கொண்டே எதனையும் செய்யத் துவங்குங்கள். இதுதான் நான் உங்களுக்குக் கொடுக்கும் ஒரேயொரு சின்ன அட்வைஸ்.. இதைத்தான் நானும் இப்போதுவரையிலும் பின்பற்றுகிறேன்..!

போன ஜென்மத்து பாவத்தையெல்லாம் இந்த ஜென்மத்தில் சுமக்குகிறோம் என்கிறார்கள்.. இந்த ஜென்மத்தில் நாம் செய்கிற புண்ணியமெல்லாம் சேர்ந்து அடுத்த ஜென்மத்திலாவது நம்மை இவ்வுலகில் வாழ விடட்டும்..! சென்னைக்கு வந்தீர்களேயானால் அவசியம் என்னை சந்தியுங்கள்.. சந்திப்போம்.. 

நன்றி..

சாய்பாபாவிற்கு எனது அஞ்சலிகள்..!

25-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சாய்பாபா என்றொரு மனிதர் இறந்துவிட்டார் என்று சொல்லத்தான் மனம் விரும்புகிறது..! ஆனால் பொது அறிவு "அப்படியானால் இத்தனை பேர் அவரை விரும்பியிருக்கிறார்களே..? எப்படி..? எதற்கு..? ஏன் அந்தப் பெருமையை நீ அவருக்குக் கொடுக்கக் கூடாது..?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறது..!


உலகத்தில் இருக்கும் மதங்களில் மிகச் சிக்கலானது இந்து மதம்தான்.. சாதி அடுக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்து அதன் மேல் கட்டி வைக்கப்பட்ட மேடைதான் இந்து மதம் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்..! எல்லாவிதமான உலகப் பார்வைகளுக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்து மதம்தான். அதனால்தான் அதனுள் இத்தனை வலிந்து திணிக்கப்பட்ட கதைகள் உள்ளன என்கிறார்கள் ஆதரவாளர்கள்..!

இந்த இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை சாதாரண பொது ஜனங்களுக்கு இல்லை..! தங்களுக்குத் தோல்வி என்றவுடன் கடவுளைத் தேடி ஓடுவதும், தோல்வியைத் தோற்கடித்தவுடன் மீண்டும் பழையபடி கடவுளை மறந்து தொலைத்துவிட்டு ஆடிப் பாடுவதும் இவர்களது வாடிக்கையாகிவிட்டது..!

சாய்பாபா என்னும் இந்த மனிதர் இத்தனை அற்புதங்கள் செய்தார் என்று வருடக்கணக்காகக் கேட்டு கேட்டு சலித்துப் போயிருந்த நிலையில், புதிய தொழில் நுட்பங்களின் கண்களுக்கு அவரது ஏமாற்று வேலைகள் கண்கூடாகத் தெரிந்து பரபரப்பாகிவிட்டது. இன்றளவும் இதைப் பற்றி மகான் சாய்பாபா எந்தவிதக் கருத்தையும் கூறாமலேயே போய்ச் சேர்ந்துவிட்டார்..!

உதவியாளர் கொடுக்கும் செயினை வாங்கி "ஜீ பூம் பா.. எல்லாரும் பார்த்துக்குங்க.. செயின் வர வைக்கிறேன் பாருங்க.." என்று சொல்லாமல் சொல்லி செயினை வரவழைத்து மோடி மஸ்தான் வேலையைக் காட்டிய சாய்பாபா எப்போது கடவுளின் அவதாரமானார் என்று தோண்டித் துருவித்தான் படிக்க வேண்டியுள்ளது..

இதேபோல் விரல் இடுக்கில் மாத்திரை வடிவத்தில் விபூதியை வைத்துக் கொண்டு கணப்பொழுதில் அதனை நசுக்கு தூளாக்கி கைகளை பரப்பி கீழேயும், மேலேயுமாக அசைத்து விபூதியை கொடுத்துதான் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவையும் இவர் ஏமாற்றியிருக்கிறார் என்பதை இன்றைக்கு நினைக்கும்போது வருத்தமாகத்தான் உள்ளது. நல்லவேளை எம்.எஸ். அம்மா.. இதையெல்லாம் பார்ப்பதற்கு முன்பாகவே போய்ச் சேர்ந்துவிட்டார்..!



வாயில் இருந்து லிங்கம் எடுப்பது என்பது மனித வடிவில் இருப்பவரால் முடியாத விஷயம் என்று ஐ.ஏ.எஸ்., மருத்துவம், பொறியியல் படித்த மாமனிதர்களுக்குத் தெரியாததல்ல.. புரியாததல்ல.. ஆனாலும் எப்படி இதனை நம்பினார்கள்..? ஆச்சரியமாக இருக்கிறது..!


வாய்க்குள் லிங்கத்தை வைத்துக் கொண்டு ஏதோ திடீரென்று வயிற்றின் உள்ளேயிருந்து லிங்கம் வெளி வருவதைப் போல் ஆக்ஷன் காட்டி எடுத்துக் காட்டி புளகாங்கிதமடையும் மகான் சாய்பாபாவின் அந்த ஆக்ஷனை பார்த்தபோது சிரிப்புதான் வந்தது..!

கூடவே இன்னொரு முறை, கையில் வைத்திருந்த துண்டில் மறைத்து வைத்திருந்த லிங்கத்தை தன் வாயில் இருந்து விழுந்ததைப் போல பாவ்லா காட்டி கூட்டத்தினரை வசியப்படுத்துகிறார்.. கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள் பக்தர்கள்..!

இந்த லீலைகளை எல்லாம் கடந்த சில வருடங்களாகவே பாபா நிறுத்திக் கொண்டார் என்று அவருடைய பக்தர்கள் சொல்கிறார்கள். அதாவது இந்த பிராடுத்தனத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிய பின்பு..!

ஆனாலும் ஏன் அவரைத் தேடி இவ்வளவு கூட்டம்..? என்ன காரணம்..? கும்பகோணத்தில் ஏதுமறியாத அப்பாவி குழந்தைகளை சாவுக்குக் கொடுத்துவிட்டபோதும் அந்த மக்கள் ஒன்றுமறியாமல் அதே ஊரில் குத்துக்கல்லாட்டம் அமர்ந்திருக்கும் பல சாமிகளைத் தேடி இப்போதும் சென்று வருகிறார்களே.. அதுவேதான் இதற்கும் காரணம்..!

நம்பிக்கை.. இந்த அசாத்திய நம்பிக்கையை நன்றியுணர்வு என்கிற ஒரு வார்த்தையையும் சேர்த்தே சொல்லலாம்..!

சாய்பாபாவை சந்தித்தவுடன், தான் அங்கு போய் வந்தவுடன் தனது பிரச்சினை தீர்ந்ததாக ஒருவர் சொன்னாலே போதாதா..? ஒரு தெருவே கிளம்பிவிட்டது.. இப்படி ஒருவருக்கொருவர் தங்களது சுய துக்கங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டபடியேதான் சாய்பாபாவை தரிசிக்கச் சென்றார்கள். பலருக்கும் பிரச்சினைகள் ஏதோ ஒரு வழியில் முடிந்திருக்கிறது.. சிலருக்கு முடியவில்லை..! முடிந்தவர்கள் தங்களது நன்றியை கரன்சியாக்கிக் கொட்டியிருக்கிறார்கள். முடியாதவர்கள் சாமி தங்களிடம் இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறதோ என்று நினைத்து வந்து கொட்டியிருக்கிறார்கள்..!

ஒரு நிழல் அரசாங்கத்தையே புட்டபர்த்தியில் நடத்தி வந்திருக்கிறார் சாய்பாபா. கி்ட்டத்தட்ட வாடிகனை போல..! ஆனாலும் அந்த ஊர் மக்களுக்கு வேண்டியதைச் செய்திருக்கிறார். அவர்களிடமிருந்து அவர் எதையும் பறிக்கவில்லை. தன்னிடம் சேர்ந்ததை பிரித்துக் கொடுத்திருக்கிறார்..!

அவரை நாடி வந்து கொடுத்தவர்களெல்லாம் திருடர்களோ, கொள்ளைக்காரர்களோ இல்லை.. அப்பாவிகள்தான்.. பணமிருந்தும் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாத மனிதர்கள்தான்.. அவர்களுக்கு நல் வழி காட்டுகிறேன் என்று சொல்லித்தான் இந்த மோடி மஸ்தான் வேலையை சாய்பாபா செய்து வந்திருக்கிறார்..!

ஆக.. வந்திருக்கும், சேர்ந்திருக்கும் பணமெல்லாம் சட்டப்பூர்வமான பணம்தான்.. கொள்ளையடித்த பணமல்ல.. கொட்டு வந்து கொட்டியவர்களின் சாபம் பாபாவையோ, அவரால் அந்தப் பணத்தின் மூலம் பலன் பெற்றவர்களையோ சாராது..!

ஓஷோவை போல தனது ஆசிரமத்தை களியாட்டத்திற்கு உட்படுத்தாமல் இருந்தவகையிலும், நித்யானந்தா மற்றும் ஜெயேந்திரர், பிரேமானந்தா அளவுக்கு தரம் தாழ்ந்து போகாமலும் தனது எல்லைகளைச் சுருக்கிக் கொண்டு ஆன்மிகம் என்னும் ஒரு ஆயுதத்தை மக்களிடத்தில் ஆழமாக விதைத்துவிட்டுச் சென்ற ஒரு காரணத்திற்காக இவரை பாராட்டத்தான வேண்டும்..!

மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி.. பிரதமர்களோ, ஜனாதிபதிகளோ, துணை ஜனாதிபதிகளோ இங்கு வராதவர்களே இல்லை..! இவரை வணங்காதவர்களே இல்லை என்கிற அளவுக்கு அரசியல் பின்புலமும் அபரிமிதமாக இவரை வளர்த்து வைத்திருக்கிறது..!

தீவிரமான ஆத்திகக் கொள்கைகளை கொள்கையாக கொண்டிருக்கும் வீடுகளின் இல்லத்தரசிகள்கூட பாபாவின் அடிபணிந்த பக்தைகளாக மாறியதற்கு என்ன காரணம் என்று எதைத்தான் சொல்வீர்கள்..? இவர்களிடத்தில் இல்லாத பணமா? அதிகாரமா..? இவை இரண்டும் இருந்தாலே போதும்.. இதையும் தாண்டி இவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள். புரியவில்லை..!

இவரை நாடிச் சென்றவர்கள் சொல்லும் குறைகள் உடனுக்குடன் தீர்ந்தன என்றுதான் முதலில் சொன்னார்கள். எனக்குத் தெரிந்து அப்படி சொன்னவர்களில் பி.சுசீலாவும் ஒருவர்.  கடைசியாகச் சொன்னவரும் பாடகிதான். அவர் சித்ரா..!

ஒரு சமயத்தில் சுசீலாம்மாவின் குரலில் ஏற்பட்ட தடுமாற்றத்தை பாபாதான் தீர்த்து வைத்ததாக சுசீலாம்மா பேட்டியளித்திருந்தார். பாபாவின் முன்னிலையில் ஒரு கச்சேரியில் தான் பாடத் துவங்கியபோதே தனது பழைய குரல் மீண்டும் கிடைத்துவிட்டதாக புளகாங்கிதப்பட்டிருந்தார்..!

நிறுவனமயமாக்கப்பட்ட ஆன்மிகத் தலங்களில் புட்டபர்த்தி பிரகாசமானதற்கு ஒருவகையில் சுசீலாம்மா, எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களும் காரணம்..!

புட்டபர்த்தியில் சாய்பாபா முன்பு பாடாத கர்நாடக இசைப் பாடகிகளும், பாடகர்களும், வாத்தியக் கருவியை இசைக்கும் இசைக் கலைஞர்களும் யாருமில்லை என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அனைவரையும் முறை வைத்து அழைத்துச் சென்று பாட வைத்தார்கள் ஆசிரமத்தினர்.

தாங்கள் விரும்பியவர்களே தெய்வமாக வணங்குகிறார்களே என்ற ஆர்வத்தில் மேலும், மேலும் சாய்பாபா தெய்வமாகிக் கொண்டே போனது இதனால்தான்..! அத்தனை பேருக்கும் சாய்பாபாவின் கருணை கிடைத்துவிடவில்லை..! ஆனால் நேரில் பார்க்க வேண்டிய கட்டாயத்தை ஊடகங்களும், அதில் தெரிந்த பி.ஆர்.ஓ. பிரபலங்களும் உண்டாக்கினார்கள்..!

வருடாவருடம் கொடைக்கானலுக்கு பாபா வரும்போது அங்கு செல்லும் கூட்டத்தை பார்க்க வேண்டுமே..! 4 நாட்கள் தொடர்ந்து நான் அங்கே இருந்தபோது பார்த்தேன்.. ஒரு சப்தம்.. ஒரு கூச்சல்.. இல்லை. அனைவரும் அமைதி காக்கிறார்கள். அவர் வருகிறார். பார்க்கிறார். நடக்கிறார். திரும்புகிறார். அனைவரும் கை கூப்புகிறார்கள். சிலரின் தலையில் கை வைக்கிறார். மீண்டும் வந்த வழியே திரும்புகிறார். மேடையில் இருக்கும் அரியாசனத்தில் அமர்கிறார். லேசாக திரும்பிப் பார்த்தவுடன் பஜனை கோஷ்டி தனது கோஷ்டி கானத்தை ஆரம்பித்தது.. அவ்வளவுதான்.. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பாபா புராணம்தான்..!

இரண்டாவது நாளே எனக்கு போரடித்துவிட்டது..! என்னதான் செய்கிறார் இந்த சாமி என்கிற ஆர்வத்தில் உள்ளூர்காரர்களும் ஒட்டிக் கொண்டு எட்டி எட்டிப் பார்க்கிறார்கள். சுற்றுலா பயணிகளாக வந்தவர்களும் விழுந்தடித்துக் கொண்டு வந்து பார்க்கிறார்கள்.. அனைவரையும் முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாத நிலையிலேயே பார்க்கிறார்..! அட.. சிறு குழந்தைகள் டாட்டா காட்டியும், அவரை நோக்கி பிஞ்சு கைகளைக் குவித்து வணக்கம் சொல்வதைக்கூட சாதாரணமாக எடுத்துக் கொண்டதை நினைத்து ரொம்பவே ஆச்சரியப்பட்டேன்..! மனுஷன் என்னமா இறுக்கமா இருக்காருய்யா என்று..!

மனிதன் தெய்வமாகலாம் என்பதை அவனுடைய குணத்தை வைத்துச் சொல்கிறார்கள். ஈகை, மன்னிப்பு, இரக்கம், அன்பு, பாசம், வருமுன் உரைப்பது... இவற்றையெல்லாம் செய்யும் மனிதர்களே தெய்வங்கள் என்கிறார்கள். ஏனெனில் இவைகளையெல்லாம் மனிதர்களிடத்தில் நீங்கள் காண முடியாது. ஆகவே இவர்கள் தெய்வங்கள் என்பார்கள்..!

இப்படித்தான் மனிதர்களை தெய்வங்களாக்கிய கதையில் ஷீரடி சாய்பாபா, காஞ்சி பெரியவர், பங்காரு அடிகளார், பகவான் ரமணர், அரவிந்தர், அன்னை, வள்ளலார் என்று நீண்ட பட்டியலில் பல கோடி மக்கள் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள்..!

இவர்களது நம்பிக்கையை நாம் குலைப்பதென்பது சாமான்யமானதல்ல..! அது முடியவும் முடியாது..! இவ்வளவு நடந்த பின்பும் நித்யானந்தாவைத் தேடியும் ஒரு கூட்டம் போகின்றது என்றால் மனிதர்களின் குணத்தை எத்தனை, எத்தனை விதமாக படைத்திருக்கிறார் இறைவன் என்று யோசிக்கத்தான் வேண்டியுள்ளது..!


1912-ல் சித்தியடைந்த ஷீரடி சாய்பாபாவின் வாரிசு நான்தான் என்று கூறித்தான் இந்த சாய்பாபா தனது ஆன்மிகத்தை துவக்கினார்.. இப்போது தனக்குப் பின்பு கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பிரேம்சாய் என்ற பெயரில் நானே அவதாரமெடுப்பேன் என்றும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் இந்த இரண்டாவது சாய்பாபா..! மூன்றாவது சாய்பாபாவின் வருகைக்காக நாமும் காத்திருப்போம்..

இவருடைய மரணத்தினால் அவரது பக்த கோடிகள் தங்களது ஒரேயொரு நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள்..! அவரது அறக்கட்டளையின் உதவியினால் வாழ்க்கை நலம் பெற்ற மக்கள் இப்போது கண்ணீர் விடுகிறார்கள்..! அவருடைய ஆசியினால் நல்வாழ்வு பெற்றவர்கள் இப்போது கதறுகிறார்கள்..! அனைத்துமே நம்பிக்கை மற்றும் அனுபவத்தினால் விளைந்தது..!

மனிதனாக பிறந்த அனைவருக்கும் மரணமுண்டு என்பதை உணர்ந்தால் இதுவும் புட்டபர்த்தியில் நேற்று நடந்த ஒரு மரணத்தில் ஒன்று என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்..! இதுவரையில் கடவுளாகவே கருதப்பட்டவர் இந்த நிமிடத்தில் இருந்து மனிதனாக்கப்பட்டு ப்ரீஸருக்குள் அடக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது சட்டென்று பல பக்தர்களால் ஏற்க முடியாமல்தான் உள்ளது..!

இது அத்தனையையும் ஒரே வார்த்தையில்.. முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. இவர்கள் யாரும் நம்மூர் முனியாண்டியையும், அய்யனாரையும் கும்பிடும் சாமான்யர்கள் இல்லை.. மெத்தப் படித்த மேதாவிகள்தான்..! சிந்தை கலங்கும் அளவுக்கு ஆன்மிகத்தை தமது மனதில் நிறுத்தி வைத்திருக்கும் இவர்களுக்கு, இவர்கள் விரும்பிய சாய்பாபாவின் அருள் என்றென்றும்  நிலைத்திருக்கட்டும்..!

சாய்பாபா விட்டுச் சென்ற ஆன்மிக, சமூகப் பணிகளை அவரது அறக்கட்டளையினர் தொடர்ந்து செய்து வந்தார்களேயானால் அதுவே அவருக்கு பெருமை..!

சாய்பாபாவின் கோடிக்கணக்கான பக்த கோடிகளின் துக்கத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்..!

அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..!

வலையுலகத் தோழர்களுக்கு நன்றி..!

10-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
 
2004-ம் வருடமே வலையுலகம் எனக்கு அறிமுகமானதாக இருந்தாலும் நானும் ஒரு வலைப்பதிவனாக என்னை இணைத்துக் கொண்டது மார்ச் 23, 2007-ல்தான்..!

அன்று துவங்கிய இந்த விளையாட்டு இதோ இன்று 600-வது பதிவினை இடுகின்றவரையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது..!

இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் சில மாதங்கள் நான் எழுதாமல் இருந்த காரணத்தால் இந்த 600 பதிவுகள் என்பது குறைவானதாக எனக்கே தோன்றுகிறது..!

666 பாலோயர்ஸ் என்ற எண்ணிக்கையும் பல சமயங்களில் என்னை யோசிக்கத்தான் வைத்துள்ளது.. இத்தனை பேர் தொடர்ந்து படித்து வரும் அளவுக்கு அப்படியென்னதான் எழுதினேன் என்று திரும்பிப் பார்த்தால்  கும்மிகள், மொக்கைகள், சினிமா விமர்சனங்கள் என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டால் சுமாராக 400 பதிவுகளாவது உருப்படியாக எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்..!

அதிலும் இப்படி பக்கம், பக்கமாக எழுதி வைத்தாலும் ஒருவரி விடாமல் படித்துவிட்டு எழுத்துப் பிழைகளைக்கூட சுட்டிக் காட்டுகின்ற அளவுக்கு வலையுலகத்தில் அன்புத் தோழர்கள் அதிகம் இருப்பதை நினைத்தால் கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது..!

பல சமயங்களில் ஏன் இதனைத் தொடர வேண்டும். நிறுத்திவிடலாம் என்று நினைக்கின்றபோதெல்லாம் புதிது, புதிதாக வந்த பதிவர்கள் பலரும் கொடுத்தும் உற்சாகக் குரலும், பாராட்டுதலும்தான் என்னை இன்னமும் இங்கேயே நீடிக்க வைத்துள்ளது..! அவர்களுக்கும் எனது நன்றிகள்..!

எண்ணிக்கை பெரிதல்ல.. என்ன எழுதியிருக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றால்கூட, ஏதோ என்னளவில். எனக்குத் தெரிந்தவரையில், என்னால் முடிந்த அளவில், பலருக்கும் பயன்படக்கூடிய சில பதிவுகளை நான் எழுதியிருப்பதே எனக்குத் திருப்தியைத் தருகிறது. இதுவே போதும்..! இனியும் இப்படியே தொடர்வதாகத்தான் உத்தேசம்..!

தொடர்ந்து எனக்கு உற்சாகமூட்டி, வாய்ப்பளித்து, எழுத வைத்து, பின்னூட்டமிட்டு என் மனதுக்கு உரமூட்டும் அத்தனை வலையுலக முருகன்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..!
எனக்கு எல்லாமுமாக இருக்கும் என் அப்பன் முருகனை வேண்டி இந்தப் பாடல் :



சூப்பர் ஸ்டாரின் ஹிமாலயன் டூர் புகைப்படங்கள்..!

18-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு திரைப்படம் வெளியானவுடன் இமயமலைக்குச் சென்று பல ஆண்டுகளாக உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படும் தனது ஆன்மிகக் குருவான பாபாவின் குகையில் அமர்ந்து தியானம் செய்து மறுபடியும் புல் சார்ஜ் ஏற்றிக் கொண்டு திரும்பி வருவதுதான் தன் வழக்கம் என்று ஏதோ ஒரு பட விழாவில் அண்ணன் ரஜினி கூறியிருந்தார்.

சென்ற முறை அவர் அப்படி இமயமலைக்குச் சென்றபோது அவருடன் சென்றிருந்த ஹரி என்னும் நண்பரைத் துப்பறிந்து கண்டறிந்த பத்திரிகைகள், அவருடன் ரஜினியின் அனுபவங்கள் என்ற தலைப்பில் பேட்டி கண்டு கல்லா கட்டியது நினைவிருக்கலாம்.

விஜய் டிவி ஒரு படி மேலே போய் சூப்பர் ஸ்டார் சென்று வந்த பாதைகளில் கேமிராவுடன் சென்று படமெடுத்து, அவர் தியானம் செய்த குகையையும் பதிவு செய்து தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இமயமலைக்குச் சென்று வந்தால் அமைதி கிடைக்கும் என்று சொல்லியது.

இந்த முறையும் 'எந்திரன்' என்னும் சூப்பர்ஹிட்டை கொடுத்துவிட்டு வழக்கம்போல அண்ணன் இமயமலைக்குச் சென்று வந்திருக்கிறார். எப்போதும் காதும், காதும் வைத்தாற்போல் சென்று வருபவர் இந்த முறை மட்டும் எந்தத் தேதியில் செல்கிறார்? எந்தத் தேதியில் திரும்பி வருகிறார்? என்கிற செய்தியையெல்லாம் வெளியில் ரிலீஸ் செய்துவிட்டுத்தான் போனார்.

போனவர் தனது தியானத்தை முடித்துவிட்டு பத்திரமாக திரும்பிவிட்டார். இனி ரசிகர்களுக்கான விருந்து அழைப்பு என்றைக்கு என்று பத்திரிகைகள் செய்திக்காக காத்திருக்கும் நேரத்தில்  அதிசயமாக இமயமலையில் ரஜினி ரவுண்ட் அடித்த புகைப்படங்களை பேஸ்புக்கில்தான் முதலில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

யார் இந்தப் புண்ணியவான்கள் என்று தெரியவில்லை.. ரஜினிக்குத் தெரியாமல் புகைப்படம் வெளியில் வர வாய்ப்பில்லை என்பதால் அண்ணன் தேறிவிட்டார் என்றே நினைத்துக் கொள்ளலாம்.

புகைப்படத்திற்காக இமயமலையிலும் சூப்பர் ஸ்டாராகவே போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்த பின்புதான் இதனை நாமும் வெளியிட்டு கல்லா கட்டினால் என்ன என்று தோன்றியது..?

இந்தப் புகைப்படங்களில் சூப்பர் ஸ்டார் தெரிகிறாரா? சாதாரண ரஜினிகாந்த் தெரிகிறாரா என்று நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்..!

நன்றி..!
















நலம் தரும் நவராத்திரி..!

08-10-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வருடாந்திர நவராத்திரி விழா இன்று தொடங்கி விட்டது. மைலாப்பூர், மேற்கு மாம்பலம் ஆகிய இடங்களில் அநேகமாக வீடடுக்கு வீடு, பிளாட்டு பிளாட் கொலு, மண்டகப்படிகள்தான்.
இந்த 9 நாட்களும் எங்க வீட்டு மண்டகப்படிக்கு வாங்க.. வாங்க.. என்று அக்கம்பக்கம் பெண்களுக்கு அழைப்புகள் அமர்க்களமாக பறக்கும். அதிலும் கல்யாணமான சுமங்கலிப் பெண்களுக்கு கொஞ்சம் கூடுதலாக மரியாதை கிடைக்கும். கல்யாணமாகாத தாவணிகள் “ராகவனே ரமணா ரகுநாதா” என்று பாட வேண்டியதுதான்.

ஆண்களுக்கு ஒரு ராத்திரியான `சிவன் ராத்திரி'யைப் போல், பெண்களுக்கு புரட்டாசி மாதத்தில் இந்த 9 நாட்கள் நவராத்திரியாக சிறப்புப் பெற்றுள்ளது. தென் மாநிலங்களில், குறிப்பாக கர்நாடகாவில் தசரா என்றும், வட மாநிலங்களில் துர்கா பூஜை என்றும் கொண்டாடப்படும் இந்த நேரத்தில்தான் சமூகத்தின் கடைக்கோடி நபர் வரையிலும் சில்லரை புழங்கும்.. மும்பையில் இது காசு அள்ளும் நேரம்..!.

கொலு பொம்மையை அடுக்கி வைப்பதற்குள்ளேயும் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. சில வீடுகளில் இட நெருக்கடியால் 4 படிகளும், பிரம்மாண்டமான வீடுகளில் படிகளை பெரிதாகவும், எண்ணிக்கையை கூட்டியும் வைத்து கிடைக்கின்ற அத்தனை கடவுளர் பொம்மைகளையும் படையலாக வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு என்று எனதருமை பாலபாட வாத்தியார் பாலகுமாரன் ஒரு தடவை எழுதி நான் படித்திருக்கிறேன். இப்போது மறந்துபோய் விட்டது. இந்த மாதிரியான கொண்டாட்டங்களிலும் ஏதேனும் ஒரு வகையில் பக்திக்கு அர்த்தம் இருப்பது போன்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறார்கள் நமது முன்னோர்கள்..!

திண்டுக்கல்லில் இருந்தபோது எனது நண்பன் கெளரிசங்கரின் வீட்டில் நடந்த நவராத்திரி விழாவின் 9 நாட்களும் ஆர்வமாகக் கலந்து கொண்டேன். காரணம் சுண்டல்தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

மாலை 7 ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் பாட்டுக் கச்சேரி எட்டே கால் அல்லது எட்டரை வரைக்கும் நீடிக்கும். அதன் பின்புதான் எங்களை மாதிரியான பையன்களை உள்ளே விடுவார்கள். அதுவரைக்கும் பாட்டு பாடிய தாவணியின் முகத்தை கண் முன்னே கொண்டு வந்து மணிரத்னம் எபெக்ட்டில் வீட்டு வாசலில் கொட்டப்பட்டிருந்த மணலில் படுத்தபடியே கனவு கண்டு கொண்டிருந்தது ஒரு சுவையான அனுபவம். (பின்ன எப்படி அறிவு வளரும்..? அப்பவே இப்படி்ததான்..!)
 
வீட்டு வாசலில் கெளரியின் தோப்பனார் மிஸ்டர் கல்யாணம் கவனமாக காவல் காத்து வருவார். என்னை மாதிரியான பசங்க யாரும் தப்பித் தவறி ஆத்துக்குள்ள போயிரக் கூடாதுன்றதுல குறியா இருப்பார். அப்படியும் நாங்க ஏதாவது தில்லாலங்கடி வேலை செய்வோம். வேணும்னே போய் தண்ணி கேக்குறது..! "பசிக்குது மாமா.. சாப்பிடா ஏதாவது கொடுங்க"ன்னு அவர் மண்டைய காய வைக்கிறதுன்னு செஞ்சு பார்த்தோம். 

மனுஷன் அசைஞ்சு கொடுக்கலை. வீட்டுக்குப் பின்னாடி எங்களைக் கூட்டிட்டுப் போயி தண்ணி எடுத்துக் குடுப்பாரு. அங்கேயே சாப்பிடறதுக்கு முறுக்கு, அதிரசத்தை தட்டுல வைச்சுத் திணிச்சு நம்ம தோள்ல கை போட்டு பாதுகாப்பா கொண்டாந்து வீட்டு வாசல்ல இருக்குற மண்ணுல உக்கார வைச்சுட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு.. மனுஷன் கடுப்பைக் கிளப்பிட்டாருப்பா..!

அடுத்த நாள் பார்த்தா வீட்டு வாசல்லேயே ஒரு தண்ணிக் குடத்தை வைச்சுட்டாரு. பக்கத்துல ஒரு டேபிள்ல சாப்பிடறதுக்காக  முறுக்கு, அதிரசம், பொரிகடலையை கொட்டி வைச்சிட்டாரு. தப்பித் தவறிகூட எங்க பார்வை வீட்டுக்குள்ள போயிரக் கூடாதுன்றதுல குறியா இருந்த இந்த மனுஷன் ரயில்வேல கார்டு வேலை பார்த்து ரிட்டையர்டு ஆனவரு..! வருஷா வருஷம் நவராத்திரியை நினைக்கும்போது அம்பாளைவிட இந்த கல்யாணம் ஸார் நினைப்புதான் வந்து தொலையுது..!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்தி புத்தகங்களில் இருந்து பாடல்களை பாடுவார்கள். சில நேரங்களில் கர்நாடக சங்கீதமாக பாடல் பரி்ணமிக்கும்போதுதான் துக்கம் தொண்டையை அடைக்கும். பாட்டு பாடும்போது நாமும் கூடவே பாடலாம். இதுக்கெப்படி?

கெளரிசங்கரின் தோப்பனார் மிஸ்டர் கல்யாணம், தேவி புராணம், தேவி பாகவதம் என்ற இரண்டு கட்டைப் புத்தகங்களை வைத்துக் கொண்டு பகல் முழுவதும் ஆராய்ச்சி செய்வார். அதில் “இன்னிக்கு ராத்திரி இந்தப் பாட்டுதான் பாடணும்” என்று குறித்து வைத்திருப்பார்.

சில நாட்களில் அந்தப் பாடல் பாடாமல் வேறு பாடலை பாடத் துவங்கும்போது “என்னடி.. என்னென்னமோ பாடுறேள்..? நான் பத்தாம் பக்கம் நோட் பண்ணி வைச்சிருக்கேன்.. பாருங்கடி” என்று வாசலில் இருந்தே குரல் கொடுப்பார்.. ஆனாலும் கெளரியின் அம்மா.. “அதெல்லாம் பாட முடியாதுண்ணா. ரொம்பக் கஷ்டமா இருக்கு. புள்ளைகளால முடியாது. நீங்க வாசலைப் பாருங்கோ..” என்று சொல்லிவிட்டு பாட்டை பாடுவார்கள்.

மனிதர் மிக பாவமாக எங்களை பார்ப்பார். நாங்களோ மனுஷன் எப்போ கொஞ்சம் தள்ளுவார். உள்ள இருக்குற நிஜ பொம்மைகளையும், தாவணி பொம்மைகளையும் பார்க்கலாம் என்று அலையாய் அலைவோம்.

அதென்னவோ எல்லா அப்பனுகளும் நம்ம மனசை ஸ்கேன் பண்ணி கண்டுபிடிச்ச மாதிரியே இருக்கானுக.. "வர்றேன் மன்னி.." "வர்றேன் மாமா..." என்று சொல்லிவிட்டு தாவணிகள் படியிறங்கும்போது கேட் அருகே அட்டென்ஷனில் நிற்கும் எங்களையெல்லாம் ஒரு மனுஷனாக்கூட மதிக்காமல் மிஸ்டர் கல்யாணம் தான் மட்டும் அந்தப் பொண்ணுககூட போயி அவுங்க வீடுவரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு வருவாரு. என்ன ஹிட்லர்தனம் பாருங்க..?

நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்னு நாங்க கோபத்துல இருக்கும்போது.. வேஷ்டி மடிப்புல இருந்து 5 ரூபாயை எடுத்துக் கொடுத்து “கெளரி. இவாளை கூட்டிட்டுப் போய் கடைல கலர் சோடா குடிச்சிட்டு வா” என்று சொல்லிவிட்டுப் போவார்..

ராத்திரில எவனாவது கலர் சோடா குடிப்பானா? அறிவு வேணாம். ஆனாலும் மனுஷன் சலிக்கணுமே..? அந்த ஒன்பது நாளும் கண் கொத்திப் பாம்பா இருப்பாரு..! “டேய் உங்கப்பாவை இதுக்காகவே ஒரு வழி பண்ணணும்டா..” என்று கெளரியிடம் சொன்னாலும் அவனே சிரிப்பான்..! எல்லாம் ஒரு காலம்..! போயே போச்சு.. என் பொழப்பு இப்போ இப்படி நாரிப் போய்க் கெடக்குறதுக்கு, என்ன காரணம்ன்னு இப்பத் தெரியுதா உங்களுக்கு..?

சரி.. நவராத்திரிக்கு வருவோம்.. இந்த புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய நவராத்திரி விழா, பெண்களுக்கே உரித்தான, சக்தி வழிபாட்டுக்கு உரியது என்கிறார்கள்.

சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சமயம் சந்திரனும், சூரியனும் சேரும் சமயத்திலும் நவராத்திரி விழா தொடங்குகிறது. கன்னி என்றாலே பெண் என்பார்கள். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் சவிதாஷரம் என்றும் சவிதா என்றால் சூரியன் சூரிய சக்தியின் பலம் என்றும் ஆசாரம் என்றால் புதன். புரட்டாசி மாதத்துக்கு பெருமை சேர்க்கும் நவராத்திரி விழாவாகும். நவ என்றால் 9. ஒன்பது இரவுகள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பதே பக்திக்கும், அம்பாளுக்கும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த வருடம்  நவராத்திரி விழா அதிர்ஷ்டவசமாக வெள்ளிக்கிழமையன்று துவங்கியிருக்கிறது. 

நவராத்திரியில், தேவி பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை ஆகியவற்றை சிறப்பாக செய்ய வேண்டுமாம். கல்வி, செல்வம், வீரம், சுகம், போகம், ஞானம், மோட்சம் ஆகிய ஏழும் ஈரேழு லோகங்களும் கிட்டக் கூடிய அம்மன் வழிபாடுதான் இந்த நவராத்திரி விழாவாக அமைந்துள்ளது.

வீட்டுக்கு வரக் கூடிய கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள் ஆகியோருக்கு ரவிக்கை, புடவையுடன், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றையும் தாம்பூலமாக வழங்க வேண்டும் என்கிறார்கள். நண்பன் கெளரியின் வீட்டில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பூ தருவார்கள். ரவிக்கை. புடவை கொடுத்து நான் பார்த்ததில்லை. அதெல்லாம் பெரிய பணக்காரர்களின் வீடுகளில் செய்வார்கள் என்று கேள்விப்பட்டேன்.

இந்த நாட்களில் அம்பாளுக்கு தினசரி ஒவ்வொரு பட்சணம் செய்து பூஜை செய்ய வேண்டுமாம்.

நவராத்திரி விழாவின், முதல் நாள் நிவேதனமாக, சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை சுண்டல் வைக்க வேண்டும்.

2-வது நாள் எள்ளு பாயசம், எள்ளு சாதம், காராமணி சுண்டல் நிவேதனம் செய்யலாம்.

3-வது நாள் கோதுமை பாயசம், கற்பூரவாழை, மாதுளம் பழம்.

4-வது நாள் பால் பாயசம், பால் இனிப்பு வகைகள்,  மிளகு சாதம், ராஜ்மா சுண்டல், தேங்காய் சாதம்.

5-வது நாள் நெய் பாயசம், சாம்பார் சாதம், வேர்க்கடலை சுண்டல், செவ்வாழைப்பழம்.

6-வது நாள் சிறு பயறு பாயசம், வெண்பொங்கல், பயிறு சுண்டல், பச்சை வாழைப்பழம், அன்னாசிப் பழம்.

7-வது நாள் தயிர் சாதம், இனிப்பு வகைகள், புட்டு, தேன்மாவு, கொண்டக் கடலை சுண்டல்.

8-வது நாள் சர்க்கரைப் பொங்கல், கேசரி, மொச்சை சுண்டல், கொய்யாபழம்.

9-வது நாள் எள்ளு பாயசம், எள்ளு சாதம், மொச்சை சுண்டல், பேரிக்காய், ஆரஞ்சுப்பழம்.

இப்படியொரு கணக்கையும் சொல்கிறார்கள். இப்படி எந்த வீட்டில் தயார் செய்து கொடுக்கிறார்கள்..? யாராவது சொன்னால் நாள் தவறாமல் அவர்களது வீட்டில் நான் ஆஜராகிவிடுகிறேன்..!

இப்படி கலந்து கட்டி அம்பாளை வழிபடும் ஆன்மிக பக்தர்களே.. படைத்தவற்றை வீட்டுக்கு வருபவர்களுக்கு மிச்சம் வைக்காமல் அள்ளிக் கொடுத்தும், நேரில் வராத என்னைப் போன்ற பிச்சைக்காரர்களுக்கு தேடிச் சென்று வழங்கியும் வந்தால் அம்பாள் உங்களுக்கு நிச்சயமாக அருள் பாலிப்பார்..!

நமது வலையுலக டீச்சர் துளசியம்மா வருடா வருடம் எந்த ஊரில் இருந்தாலும் அங்கே கொலு வைத்து விடுகிறார். இந்த வருடம் சண்டிகரில் சண்டிராணியாக வீற்றிருக்கும் நமது துளசி டீச்சர், தனது வீட்டுக் கொலுவைப் பற்றி இங்கே விரிவாக சொல்லியிருக்கிறார்.

சுண்டல் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.. அவர் வீட்டுக் கொலு எப்படி இருக்கிறது என்பதை இங்கே சென்று பார்த்துவிட்டு வாருங்கள்..!

அம்பாள் நமக்கெல்லாம் அருள் பாலிக்கட்டும்..!



உங்களுக்காக நவராத்திரி கொலு காட்சியில் மறக்க முடியாத 'இளமைக் காலங்கள்' படத்தின் பாடல்..!



விநாயகனே..! வினை தீர்ப்பவனே..!


11-09-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



விநாயகனே! வினை தீர்ப்பவனே!
வேழ முகத்தோனே! ஞான முதல்வனே!
விநாயகனே! வினை தீர்ப்பவனே..!

ஆவணி மாதம் சுக்கில பட்சம் சதுர்த்தியில் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று பொருள். ‘நாயகன்’ என்றால் ‘தலைவன்’ என்று பொருள்.

விநாயகருக்கு மற்றொரு பெயர் விக்னேஸ்வரர். 'விக்னம்' என்றால் 'தடை' என்று பொருள். 'தடைகளை நீக்குகின்ற ஈஸ்வரன்' என்பதனால் இப்பெயர் பெற்றார்.

“குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்” என்ற பழமொழியை கேட்டிருப்பீங்க. உண்மையிலேயே “குட்டுப்பட்டாலும் மோதகக் கையால் குட்டுப்பட வேண்டும்” என்பதுதான் இதன் அர்த்தம்.

விநாயகரைத் தவிர நாம் வேறு எந்தத் தெய்வத்தின் முன்னாலும் நாம் குட்டுப் போட்டுக் கொள்வதில்லை. ஆனால் தினமும் விநாயகர் முன்னால் இதனைச் செய்கிறோம்.

விநாயகருக்கு ஐந்து கரங்கள் உண்டு. ஒரு கையை தாய், தந்தையரான பரமசிவம்-பார்வதிக்கும், மற்றொரு கையைத் தேவர்களின் நலம் பொருட்டும், ஒரு கையைத் தன் பொருட்டும், இரு கைகளை நமக்கு உதவுவதன் பொருட்டும் வைத்திருக்கிறார் என்று தணிகைப் புராணம் கூறுகிறது.

‘ஓம்’ என்ற எழுத்தின் வடிவமாய் ஓங்கார ரூபத்தில் எழுந்தருளி இருக்கும் சகல ஞானத்திற்கும் அதிபதியான விநாயகரைத் தொழும் சிறந்த கால் விநாயகர் சதுர்த்தி நாளன்றுதான்.

இப்படிப்பட்ட முழுமுதற் கடவுளான விநாயகர் எங்கும் இருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் தனித்து நிற்கிறார்.

விநாயகர் வழிபாடு என்பது பாரத நாட்டில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, போர்னியோ, இந்தோனேசியா, சீனா, சிரு, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி எனப் பற்பல நாடுகளிலும் பற்பல நூற்றாண்டுகளாகப் பரவி, நிலவியமைக்கும் பல சான்றுகள் உள்ளன.

பிள்ளையார்பட்டி பிள்ளையார்

ஊரும், பேரும் ஒரே பெயர். அவர்தான் பிள்ளையார்பட்டி பிள்ளையார்.

பரஞ்சோதி முனிவர் வாதாபியிலிருந்து கொண்டு வந்த விநாயகரை திருச்செங்காட்டான் குடியில் பிரதிஷ்டை செய்தபோது பல்லவ மன்னன் நரசிம்மவர்மனும் வந்திருந்தான்.

பிள்ளையார் உருவம் அவன் மனதைப் பெரிதும் கவர்ந்தது. காரைக்குடியை அடுத்த குன்றக்குடி அருகே ஒரு குன்றில் அப்பிள்ளையார் உருவத்தை அமைத்தான். அங்கே கற்பக விநாயகர் அசைக்க முடியாத கணபதியாக அமர்ந்துவிட்டார்.

கும்பகர்ணப் பிள்ளையார்

இந்தப் பிள்ளையார் கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியாகத் திருவாரூர் செல்லும் பாதையில் திருக்கடுவாய்க் கரைப்புத்தூர் என்ற திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

ஒரு முறை கும்பகர்ணனால் பாதிக்கப்பட்ட முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க தன் மகன் விநாயகரைப் பார்த்து கும்பகர்ணனை இலங்கைக்கு அப்பால் உயிரோடு தூக்கி எறி எனறு கூற, விநாயகரும் தன் தும்பிக்கையால் கும்பகர்ணனைத் தூக்கி எறிந்தார். விநாயகரால் கும்பகர்ணனின் தொல்லைகள் முனிவர்களுக்கு நீங்கியது. அன்று முதல் விநாயகப் பெருமானுக்கு கும்பகர்ணப் பிள்ளையார் என்ற பெயர் வழங்கலாயிற்று.

ஸ்ரீஆதியந்தப் பிரபு

சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் அழகிய கோயிலில் இந்த விநாயகர் அமர்ந்திருக்கிறார்.

இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான விக்கிரகத்தை இங்கு பார்க்கிறோம்.

இதில் மற்றுமொரு விசேஷம். நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்தக் கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.

இரட்டைப் பிள்ளையார் தரிசனம்

ஒரு விநாயகரை வணங்கினாலே சிறப்பு. இரட்டை விநாயகரை வணங்கினால் மிகவும் சிறப்பு.

ஆனால் இரட்டை விநாயகர் எல்லா ஊர்களிலும் இருப்பதில்லை. சில இடங்களில் இருக்கிறார்கள்.

சங்கரன்கோவிலில், சங்கரநாராயணர் கோவிலின் பின்புறம் வேலப்ப தேசிகர் திருக்கோவில் உள்ளது.

இக்கோவில் திருவாடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானது.

இக்கோவிலில் இரட்டை விநாயகர் அமைந்து அருள் பாலித்து வருகின்றனர்.

வலம்சுழி வெள்ளை விநாயகர்

தமிழ்நாட்டில் கோவில்கள் சூழ்ந்த இடம் என்று கும்பகோணத்தைச் சொல்வார்கள்.

கும்பகோணத்திற்கு அருகில் இருப்பது சுவாமி மலை. சுவாமி மலைக்கு மிக அருகில் இருப்பது திருவலஞ்சுழி.

இந்தத் திருக்கோயிலில் வலம்சுழி வெள்ளை விநாயகர் தரிசனம் தருகிறார். வெள்ளை நிறக் கையினால் தொடப்படாதவர் இவருக்கு பச்சைக் கற்பூரத்தால்தான் அபிஷேகம். பார்க்கடல் கடையுமுன்னர் வழிபட்ட மூர்த்தி என்று கூறப்படுகிறது.

உற்சவ மூர்த்திக்குப் பக்கத்தில் வாணி, கமலா என்ற இரு தேவிமார்கள் இருக்கின்றனர்.

துதிக்கை வலமாக சுருண்டிருப்பதினாலேயே வலஞ்சுழி என்று இத்தலத்திற்குப் பெயர் ஏற்பட்டது.

இவருடைய திருவடிவை கடல் நுரையால் உருவாக்கி, தேவேந்திரன் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்ததாகத் தல புராணம் கூறுகிறது. இந்த விநாயகரைத் தரிசிக்க வந்த கவி காளமேகம் மிக அழகான பாடலொன்றைப் பாடியுள்ளார்.

“பறவாத தம்பி கருகாத வெங்கரி பண் புரண்டேஇறுகாத தந்தி உருகாத மாதங்கம் இந்து நுதல்நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடும் சுனையில்பிறவாத ஆம்பல் வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே”

தும்பி, வெங்கரி, தந்தி, மாதங்கம், சிந்துரம், களபம், ஆம்பல் என்னும் பெயர்கள் ஆனையைக் குறிக்கும் சொற்களாகவும் நற்றமிழில் விளங்குகின்றன.

அவற்றை இப்பாடலில் விநாயகருடன் பொருந்தி, ‘பறக்காத தும்பி, கருகாத கரி, ஸ்வரம் எழுப்பாத வீணைத் தந்தி, உருகாத பொன், சிவப்பைக் காட்டாத சிந்துரம், பூச முடியாத சந்தனம், நீல் நிலையில் தோன்றாத ஆம்பல்’ என்று சிலேடையைக் கவி காளகமேகம் பாடுவது ஆழ்ந்து, ரசிக்கத்தக்க அற்புதமாய் விளங்குகிறது.

வினைகளைத் தீர்க்கும் வில்வ விநாயகர்

வேழமுகத்து விநாயகர் சில திருத்தலங்களில் வன்னி மரத்தடியிலும், அரச மரத்தடியிலும் கொலு வீற்றிருப்பார். அவரை வணங்கி அல்லல் நீங்கப் பெற்றிருப்போம்.

ஆனால் சிவனுக்கே உரிய வில்வ மரத்தடியில் அமர்ந்த வலம்புரி விநாயகராக அருள் புரியும் பிள்ளையார் பெருமானை நீங்கள் தரிசத்ததுண்டா?

சென்னை குரோம்பேட்டை உமையாள்புரம் என்னும் வீதியில் விநாயகப் பெருமான் வில்வ மரத்தடியில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

நிறம் மாறும் அற்புத விநாயகர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலையிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் கேரளபுரம் என்ற சிறிய கிராமம் உள்ளது. அங்கு பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே ஒரு அழகிய ஆலயம் உள்ளது. இதுவே மகாதேவன் ஆலயமாகும்.

இவ்வாலயத்தின் வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயகர் சந்நிதியே கோயிலுக்குப் பெருமை சேர்க்கிறது. இங்கு எழுந்தருளியிருப்பவரே நிறம் மாறும் விநாயகராவார்.

ஆண்டு தோறும் உத்தராயண காலத்தில் (மாசி மாதம் முதல் ஆடி மாதம்வரை) இவ்விநாயகர் (ஆவணி மாதம் முதல் தை மாதம்வரை) நிறம் கருமையாக உள்ளது என்பது இதன் சிறப்பு.

ஈச்சனாரி விநாயகர்

கோவை மாவட்டத்தில் மேலைச் சிதம்பரம் எனப் போற்றப்படுவது பேரூர் ஆகும்.

இங்குள்ள பாடல் பெற்ற பராதனப் பெருமைமிக்க பண்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரையில் இருந்து 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்கிரகம் ஒன்றை வண்டியில் வைத்து எடுத்து வந்தார்கள்.

அப்படி வண்டியில் வைத்து எடுத்து வந்தபோது வண்டியின் அச்சுமுறிந்து விநாயகர் சிலை தற்போது ஈச்சனாரி விநாயகர் ஆலயம் எழுந்தருளியிருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்துவிட்டதாம்.

விநாயகர் சிலையைப் பட்டீஸ்வரத்திற்கு எடுத்துச் சென்ற பக்தர்களால் எவ்வளவோ முயன்றும் விநாயகரை அசைக்கக்கூட முடியவில்லை.

இறைவனின் விருப்பத்தை யார் தடுக்க முடியும்?

இறுதியில் அங்கேயே விநாயகப் பெருமான் கலியுகக் கர்ணாமூர்த்தியாக அருள் புரிய சித்தம் கொண்டார்.

ஆம், அவ்விடத்தில் பிள்ளையார் பெருமானுக்குப் புகழ் பெற்ற ஆலயம் எழும்பியது. அதுவே இப்போது ஈச்சனாரி விநாயகர் கோயில் என்றழைக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி பூஜை

ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம், அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி பூஜை கொண்டாடப்படுகிறது.

விநாயகரின் திருவுருவத்தை மரம், செம்பு முதலியவற்றாலும், மண், பசுஞ்சாணி, மஞ்சள், மாக்கல், கருங்கல், வெள்ளைச் சலவைக்கல், முத்து, பவழம், யானைத் தந்தம், வெள்ளெருக்கின் வேர், அத்திமரம், அரைந்த சந்தனம், சர்க்கரை போன்ற ஏதேனும் ஒன்றால் செய்து வழிபடலாம்.

அந்தப் பிம்பத்தை 21 அருகம்புற்களால் விநாயகப் பெருமானின் பலவிதப் பெயர்களைச் சொல்லியும், விநாயகரின் அஷ்டோத்திரத்தைச் சொல்லியும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

விநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டைப் பிடித்து நிவேதனம் செய்வது முக்கியமானது. எள் கொழுக்கட்டை சனி பீடையையும், உளுந்தம் கொழுக்கட்டை ராகு தோஷத்தையும், வெளியே உள்ள அரிசி மாவு குரு சுக்கிர ப்ரீதியைப் பெற்றுத் தரும்.

எக்காலத்திலும் விநாயகரை வணங்குபவர்கள் தம் கஷ்டங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள்.

வினைப் பயன்களால் உண்டாகும் நோய்கள் அவர்களைத் தீண்டாது. விநாயகரின் அருளால் விக்னங்கள் யாவும் அகலும்.

சந்தான செளபாக்யத்துடன் அனைத்துக் கலைஞானமும் பெற்று ஆரோக்யமாய் அரும்பெரும் வாழ்வு வாழ கணபதியின் திருவருள் துணை நிற்கும்.

அவரே வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுள்...!


பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!!




ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த முருகா..!
 

நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்..!


உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது 

என்று நாணித்தான் முருகா!
 

நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த  நல்ல குருநாதன்!


உனக்கென்ன விதமிக்கனியை நாமீவது 

என்று நாணித்தான் அப்பனித் தலையர் தரவில்லை...!

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ!
 

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான்
அப்பனித் தலையர் தரவில்லை...!
 

அப்பனித் தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே..!
 

ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ!
 

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான் அப்பனித் தலையர் தரவில்லையாதலால்..


முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே!
 

முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
 

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
 

சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
 

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா 
உனக்குக் குறையுமுளதோ?
 

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா 
உனக்குக் குறையுமுளதோ?
 

முருகா உனக்குக் குறையுமுளதோ?
 

ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
 

முருகா நீ... 

ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
 

எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்..!

என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்
 

தருவையரு பழனி மலையில்
 

சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி..!
 

தண்டாபாணி தண்டபாணி தண்டபாணித் தெய்வமே..!
 

பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!!
 

பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!!
 

சபைதன்னில்
 

திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
 

பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!
 

கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
 

நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
 

ஆறு  கமலத்தில் உருவாய் நின்றாய்!
 

ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!
 

கார்த்திகைப் பெண்பால் உண்டாய்!
 

திருக்கார்த்திகைப் பெண் பாலுண்டாய்!
 

உலகன்னை அணைப்பாலே
 

திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!
 

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு..!
 

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு..!

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு!
 

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு!
 

தாயுண்டு! மனம் உண்டு..!!
 

தாயுண்டு! மனம் உண்டு..! 

அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு
 

உன் தத்துவம் தவறென்று சொல்லவும் 


ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு ..!
 

ஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ?
 

ஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ?
 

மாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ?
 

மாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ?
 

ஏறு மயிலேறு..! ஈசனிடம் நாடு..!! இன்முகம் காட்டவா நீ..!!!
 

ஏற்றுக் கொள்வான்.. கூட்டிச் செல்வேன்.. 

என்னுடன் ஓடி வா நீ..!
 

என்னுடன் ஓடி வா நீ..!


ம.க.இ.கழகத்தினரின் அராஜக கம்யூனிஸம்..!

16-04-2010 என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதலிலேயே ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். லீனா மணிமேகலையின் அந்த இரண்டு கவிதைகளிலும் எனக்கு முற்றிலும் உடன்பாடில்லை. அவர் சொல்ல வந்த கருத்தும், சொல்லிய விதமும் முற்றிலும் தவறு என்பது எனது கருத்து.

தமிழில் எத்தனையோ நல்ல, நல்ல வார்த்தைகள் இருக்கின்றன. சொற்றொடர்களும், அலங்காரச் சொற்களும் கவிஞர்களுக்காக காத்திருக்கும்போது தங்களது உடல் அவயங்களை முன் வைத்து, அவற்றை வெளிப்படுத்தி எழுதிதான் ஒரு விஷயத்தை மக்களுக்கு உணர்த்தவேண்டும் என்கிற அவசியமில்லை. லீனா இந்த விஷயத்தில் சற்று யோசித்திருக்கலாம். இது மாதிரியான நிறைய 'லாம்'களை நம்மால் போட முடியும்!

ஆனால் என்ன எழுதுவது என்பது அவரது உரிமை. அவரது வலைத்தளத்தில்தான் அதனை எழுதியுள்ளார். இப்படித்தான் எழுத வேண்டும்.. இதை எழுதக்கூடாது என்று நாம் தடுக்க முடியாது. தடுப்பதற்கு உரிய அத்தாட்சியை கையில் வைத்திருப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மட்டுமே.. இது அவருக்கு மட்டுமல்ல.. நமக்கும் பொருந்தும்.

அதே சமயம், லீனா மணிமேகலையின் கருத்து சுதந்திரத்துக்கான ஒன்று கூடல் நிகழ்ச்சியில், அருமையிலும் அருமையான நமது சக தோழர்களான மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் நடத்திய அராஜகப் போராட்டத்தை வன்மையாகக் கண்டிக்கத்தான் வேண்டும்.

இந்த ம.க.இ.க.-வினரை பற்றி நான் முதன் முதலில் அடையாளம் கண்டது மதுரையில்தான். என் அப்பன் முருகப்பெருமான் வீற்றிருக்கும் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்திற்கு சென்று அவனைத் தரிசித்துவிட்டு திரும்பும்போது அன்றைய நாளில் அந்த வட்டாரம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த 'ம.க.இ.கழகத்தினரின் கலை விழா' என்ற போஸ்டரில்தான் இவர்களது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அதுவும் எனது அப்பனால்.. ரொம்ப சந்தோஷம்.. அந்தக் கலைவிழாவில் அவர்கள் நடத்திய கூத்தும், தப்பாட்டமும், அப்போதே என்னைக் கவர்ந்துதான் இருந்தது.

அதே கூத்தையும், தப்பாட்டத்தையும் வேறு வடிவில் பல வருடங்களுக்குப் பிறகு அருமைத் தம்பி முத்துக்குமாரின் இறுதி ஊர்வல தினத்தன்றுதான் பார்த்தேன். அந்த ஊர்வலத்தில் இந்த அமைப்பினர் காட்டிய எதிர்ப்புகள், எழுப்பிய கோஷங்களை எனது அந்தப் பதிவில் நான் பதிவு செய்திருக்கிறேன். சுடுகாடுவரையிலும் ஒருவர் மாற்றி ஒருவர் தொண்டை கிழிய கோஷம் போட்டுக் கத்திக் கொண்டே வந்ததை நான் இன்றைக்கும் ஆச்சரியத்துடன்தான் நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த அளவுக்கான பொது நலன்களில் அவர்கள் எடுக்கின்ற அக்கறை எப்படி, எந்த வடிவத்தில் அவர்களை ஆட்கொள்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. இந்த அமைப்பினர்தான் தமிழ் வலையுலகில் தற்போது ஆளே இல்லாத கிரவுண்ட்டில் கோல் போடும் வினவு டீம் என்பதே என் மரமண்டைக்கு மிகச் சமீபத்தில்தான் தெரிந்தது..

இவர்களுடைய ஒரு பக்கத்தை முத்துக்குமாரின் மரணத்தின்போது பார்த்து பிரமித்துப் போயிருந்த எனக்கு இவர்களது இன்னொரு பக்கத்தை எழும்பூர் இக்சா அரங்கில் அன்றைக்குப் பார்த்தபோது வெறுப்பாகிவிட்டது.

ஒருவர் சொல்கிற கருத்தில் உங்களுக்கு ஆட்சேபணையிருந்தால் எதிர்ப்பைக் காட்ட வேண்டியதுதான்.. தப்பில்லை.. அது எழுத்தாக இருந்தால் எழுத்திலேயே எதிர்ப்பைக் காட்டுவதுதான் மிகச் சிறந்த பதிலடி.

கூட்ட அழைப்பில் தெளிவாகச் சொல்லித்தான் அழைத்திருக்கிறார்கள். "லீனா மணிமேகலையின் கவிதைக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் கூட்டப்பட்டிருக்கும் ஒன்றுகூடல்" என்று அனைவருக்கும் புரிந்தாற்போலத்தான் இருந்தது.

லீனாவின் கவிதையை கடந்த மாதமே கொத்து புரோட்டா போட்டு சலிக்கின்றவரையில் சாப்பிட வைத்திருக்கும் ம.க.இ.கழகத்தினரும், வினவும் போதாததற்கு அதற்குப் பிறகும் இரண்டு முறை அதே போன்று பதிவெழுதி தங்களது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். இதுவரையிலும் சரி..

இதேபோல் லீனாவின் கூட்டத்திற்கு மறுநாள் அதே இக்சா அரங்கத்தில் நமது தோழர்கள் எதிர்ப்பாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தி அதிலே தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தால் மிக, மிக சந்தோஷமாக இருந்திருக்கும்.

அதைவிட்டுவிட்டு எதிர்ப்புக் கூட்டத்திலேயே நேருக்கு நேராக பதில் சொல்கிறோம் என்று அழைக்காமலேயே வந்திருந்து கூட்டத்தை நடத்தவிடாமல் கூச்சலையும், குழப்பத்தையும் உண்டு செய்து கடைசியாக அவர்கள் சாதித்ததுதான் என்ன..? பூஜ்யம்.

ஆனால், தோழர்களின் அட்டாக் முறையை கவனத்துடன் பாருங்கள்..

வரும்போதே பக்காவான திட்டத்தோடுதான் வந்தார்கள் தோழர்கள். அரங்கத்தின் உள்ளே நுழைந்தவுடன் மூலைக்கு ஒருவராக போய் அமர்ந்தார்கள். யாரும், யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. வெளி ஆட்களுக்கு யாரோ சிலர் தனித்தனியாக வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்பது போலத்தான் தெரியும்..!

யார் முதலில் எழுந்து பேசுவது.. அதன் பிறகு அவருக்கு யார் துணை செய்வது..? எப்படி பேச வேண்டும்..? எதிர்ப்புகளை எப்படி சமாளிப்பது என்று அனைத்தையும் திட்டமிட்டு வந்திருந்தது பின்னால்தான் தெரிந்தது. கோஷங்களைகூட முன்கூட்டியே தயார் செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறார்கள் தோழர்கள்.. அடடா.. என்ன ஒரு பிளானிங்..?(முருகன்களா கோச்சுக்காதீங்க..!)

முன் வரிசையில் இரண்டு பேர்.. நடுவரிசையில் பெண்கள் அமைப்பினர் ஒரு ஆறு பேர்.. நடு வரிசையில் ஒருவர். அவருக்குப் பின் ஒருவர்.. அரங்கத்தின் மூலையில் இரண்டு பேர்.. கடைசி வரிசையில் எனக்குப் பின்பு இரண்டு பேர்.. எங்களுக்கு முன் வரிசையில் இரண்டு பேர்.. இது அனைத்துமே ஒரு பக்கத்தில்தான்.. அதாவது அரங்கத்தின் இடது பக்கம் முழுவதும் தோழர்களின் ராஜ்ஜியம்தான்.. வலது பக்கம் முழுவதும் ஆதரவாளர்கள் ராஜ்ஜியம்!

எழுந்து பேசும்போதும் அதே டெக்னிக்தான். முதலில் ஒரே ஒருவர் பேசத் துவங்கினார். பின்பு அடுத்த முறை இன்னும் இரண்டு பேர் எழுந்தார்கள். அதற்கடுத்த முறை இன்னும் 3 பேர் எழுந்தார்கள். பேச்சு முற்றி ஆதரவாளர்களின் எண்ணிக்கைகூட கூட நம்ம தோழர்களின் கூட்டமும் வேகவேகமாக எழுந்தது..

அடுத்து ஆதரவுக் கூட்டத்தில் இரண்டு பெண்கள் தங்களது கருத்தை வாதாடத் துவங்க.. அதுவரையில் பொறுமையுடன் காத்திருந்த ம.க.இ.க. தோழியர்கள் அவர்களுடன் பதிலுக்கு பதில் வாதாடத் துவங்க.. எண்ணிக்கை இரண்டு மட்டத்திலும் சம அளவாக இருப்பது கடைசியில்தான் தெரிந்தது..

என்ன ஒரு பக்காவான ஸ்கிரிப்ட்டு..? கொன்னுட்டாங்க போங்க..! மணிரத்னம் அடுத்த படத்துக்கு திரைக்கதையில் ஏதாவது உதவி தேவையெனில் நமது தோழர்களைத் தாராளமாக அணுகலாம்.

முதலில் வரவேற்புரை நிகழ்த்திவிட்டு பேராசிரியர் ராஜன்குறையை பேச அழைத்தார் அ.மார்க்ஸ். அனர்த்தத்தை உடனேயே ஆரம்பித்தார்கள் தோழர்கள். “பேசணும் ஸார்.. கொஞ்சம் சந்தேகம் இருக்கு ஸார்.. கண்டிப்பா பேசியே ஆகணும் ஸார்.. கொஞ்சம் தயவு பண்ணுங்க ஸார்..” என்று முதலில் நாகரிகமாகத்தான் ஆரம்பித்தது வினை.

இந்த இடத்தில் அ.மார்க்ஸை பற்றிச் சொல்லித்தான் ஆக வேண்டும். இவர்களது அரிச்சுவடியை பற்றி அவர் நன்கு தெரிந்து வைத்திருந்ததால் இவர்களது முகத்தைப் பார்த்தவுடனேயே மருவாதைக்கு காவல்துறைக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டார்போலும். இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் வந்திருந்தார்கள். வாசல் அருகேயே நின்று கொண்டு அனைத்தையும் கவனித்தபடியேதான் இருந்தார்கள்.

மார்க்ஸ் முதலில் ஜனநாயக ரீதியாக தன்மையாகத்தான் பேசினார். "நாங்க எல்லாரும் பேசி முடிச்சுக்குறோம். கடைசியா நீங்க கேக்க வேண்டியதையெல்லாம் கேளுங்க.. பேச வேண்டியதையெல்லாம் பேசலாம்.. வாய்ப்பு தர்றோம்.." என்றார். இந்த கோல்டன் சான்ஸை தோழர்கள் பயன்படுத்தியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, "உடனேயே பேச வேண்டும்.. இப்போதே பேசணும்.. எங்க சந்தேகத்துக்கு பதில் சொல்லிவிட்டுத்தான் பேச வேண்டும்" என்று அடம் பிடித்ததே இவர்கள் வந்த நோக்கம் என்னவென்பதை பறை சாற்றிவிட்டது.

நல்லதொரு வாய்ப்பை அவர்களாகவே கெடுத்துக் கொண்டார்கள். கடைசியாகப் பொறுமையுடன் காத்திருந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கலாம். பேசவே கூடாது என்று மார்க்ஸும், கூட்டத்தினரும் சொல்லவே இல்லை. "கடைசியா பேசுங்க ஸார்.. இப்ப குறுக்கிடாதீங்க.. நிறைய பேர் இருக்காங்க.. 9 மணிக்குள்ள கூட்டத்தை முடிக்கணும்னு ரூல்ஸ் இருக்கு" என்றெல்லாம் சொன்னார்கள். யார் கேட்டா..?

அரைகுறை மனதோடு அமர்ந்தார்கள் தோழர்கள். ராஜன் குறை பேச்சைத் துவக்கினார். எடுத்த எடுப்பிலேயே தெள்ளத் தெளிவாகச் சொன்னார், "இந்தக் கூட்டம் லீனாவின் கவிதைக்கான ஆதரவுக் கூட்டம் அல்ல.. லீனாவின் கவிதையில் இங்கு பலருக்கும் கருத்து வேறுபாடு உண்டு. அதனால் அவரது கவிதையில் உடன்பட்டுத்தான் அனைவரும் இங்கு வந்திருக்கிறார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம். லீனா எழுதுவதை தடை செய்யுமளவுக்குச் சென்றிருக்கும் ஒரு நடவடிக்கையைக் கண்டித்துதான் இந்தக் கூட்டம்...” என்று தோழர்களைக் கணக்கில்வைத்துதான் ராஜன் கூறினார்.

அவர் பேசி முடிக்கின்றவரையில் அமைதி காத்த தோழர்கள் மறுபடியும் எழுந்தார்கள்.. இம்முறை ஆதரவுக் கூட்டத்தில் இருந்து ஒருவர் ஆவேசமாகப் பேச பதிலுக்கு இவர்களும் ஆவேசமாகப் பேச கனன்றது அரங்கத்தின் சூழ்நிலை.. யார் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாத அளவுக்குக் கூச்சலும், குழப்பமுமாக ஆள் மாற்றி ஆள் முறை வைத்துப் பேசினார்கள் தோழர்கள். திடீரென்று அவர்களே சட்டென்று அமர்ந்தார்கள்.

பின்பு மார்க்ஸ் அவர்களை கூல் செய்யும்விதமாக பேசிவிட்டு அடுத்தவரை பேச அழைக்க மறுபடியும் எழுந்தார்கள் தோழர்கள். இது 'விளையாட்டு'தான் என்பது எல்லோருக்குமே புரிந்தது. ஆனாலும் மார்க்ஸ் வயதில் பெரியவர்.. அவரால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.

இந்த நேரத்தில் ஆதரவுக் கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் 'டா' போட்டு பேச.. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்பதைப் போல பிடித்துக் கொண்டார்கள் தோழர்கள். இவர்களும் பதிலுக்குப் பேச்சுக் குறைவில் இறங்க.. கொஞ்சம் கொஞ்சமாக அரங்கத்தில் சரோஜாதேவி புத்தக வார்த்தைகளெல்லாம் சரளமாக புழங்க ஆரம்பித்தன. பாவம் தமிழன்னை.. அவளுக்கு நேர்ந்த கொடுமை..! நேற்று மட்டும் தோழர்கள் பேசியதைக் கேட்டிருந்தால் கூவத்தில் விழுந்தே செத்திருப்பாள்.

அதுவரையில் என் வரிசையில் அமைதியாக பார்வையாளரைப் போல் காட்டிக் கொண்டு அமர்ந்திருந்த ஒரு தோழர் சட்டென்று ஏதோ ஆவேசம் வந்தவரைப் போல் லீனாவின் கவிதைக்கு கோனார் உரை நிகழ்த்தத் துவங்கினார். 'செந்தமிழ்' இவரது நாவில் தாண்டவமாடியது.

இவருடன் ஒரு பார்வையாளர் மல்லுக் கட்டத் துவங்க.. திடீரென்று எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு தோழர் எழுந்து தனது தோழருக்கு ஆதரவாகப் பேச திக்கென்றானது எங்களது பகுதியில் இருந்தவர்களுக்கு.. "ஆஹா.. தோழர்கள் நமக்கே பிலிம் காட்டுறாங்கப்பா.." என்று இடத்தைக் காலி செய்ய வேண்டியதாகிவிட்டது.

ஒருவழியாக லீனாவின் ஆதரவாளர்களை பெரும்பாடுபட்டு அடக்கிய மார்க்ஸ், தோழர்களில் ஒருவருக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் நேரம் 2 நிமிடம் மட்டும்தான் என்று சொல்லித்தான் கொடுத்தார்.

பேசியவரோ, கைகளில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு "இதில் ஏழு கேள்விகள் இருக்கின்றன. அவற்றுக்கு எங்களுக்கு பதில் வேண்டும்" என்றவர், இந்தக் கூட்டத்துக்கு வந்ததற்கான ஒரு காரணத்தை முன் வைத்தார்.

லீனா தனது வலைத்தளத்தில் இந்தக் கூட்ட அழைப்பை பதிவு செய்யும்போது அதற்கான பிளாக்கர் லேபிளில் 'வினவு, ம.க.இ.க.' என்று எழுதிவிட்டாராம். எனவே இது தங்களுக்கான எதிர்ப்பு என்பது தெரிந்ததாலேயே இங்கே நேரில் வந்ததாகச் சொன்னார்.

இது எல்லாருமே வழக்கமாகச் செய்வதுதான். நானும் இந்தப் பதிவிற்கான லேபிளில் அதேபோல்தான் செய்வேன். இது படிப்பவர்களுக்கும், தேடுபவர்களுக்கும் எளிதாக இருப்பதற்காகத்தானே.. அவர்களைப் பற்றி எழுதியிருப்பதால் நேரில் போய் சண்டையிடுவதா..? இது சரின்னு பார்த்தா வலையுலகத்துல ஒருத்தராவது அடுத்த போஸ்ட் போட முடியுமா..? ம்.. என்னமோ போங்க..!

பேசிய இந்தத் தோழராவது சரியாகப் பேசியிருக்கலாம். இந்து மக்கள் கட்சியை எதிர்த்தும், குஜராத்தில் முஸ்லீம் பெண்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் பேசியவர் சட்டென்று டிராக் மாற்றி லீனாவிடம் ஒரு கேள்வி கேட்பதாகச் சொல்லி ஒரு 'நயமான, நாகரிமான' கேள்வியை எழுப்ப.. அதைக் கேட்டு சட்டென்று உஷ்ணமான லீனா ஏதோ சொல்லிக் கொண்டே முன்னால் வர.. ஆதரவுக் கூட்டமும் அவர்களை நெருக்க.. அமர்ந்திருந்த ஒட்டு மொத்தத் தோழர்களின் கூட்டமும் மேடைக்கு ஓடியது..

அப்புறம் நடந்ததெல்லாம் தூர்தர்ஷன்ல வர்ற டிவி சீரியல் மாதிரிதான். கேமிராவை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திட்டு கேமிராமேன் தூங்கப் போயிருவாரு.. வசனம் பேச வேண்டியவங்களெல்லாம் கேமிரா முன்னாடி வந்து பேசிட்டுப் போயிருவாங்க.. 'டாக்கிங் போர்ஷன் முடிஞ்சிருச்சு'ன்னு கேமிராமேன்கிட்ட வந்து சொன்ன பின்னாடி கேமிராமேன் எந்திரிச்சு வந்து கேமிராவை ஆஃப் பண்ணிட்டு ஸ்டேண்டை ரிமூவ் பண்ணிட்டு அப்புறமா குளோஸப் ஷாட் எடுக்கத் தொடங்குவாரு..

இதே மாதிரிதான்..! அதுவரைக்கும் வாட்ச் பண்ணிக்கிட்டிருந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் "கூட்டத்தை முடிங்க.. பெர்மிஷன் சஸ்பெண்டட்.. ஆல் ஆப் கெட் அவுட்.." என்றபடியே உள்ளே வந்து வரிசை, வரிசையாக இருப்பவர்கள் எழுப்பிவிட்டவர், தைரியமாக கூட்டத்துக்குள் புகுந்து இரு தரப்பினருக்கும் நடுவில் நின்று கொண்டார்.

இப்போதுதான் மார்க்ஸ் போதும்டா சாமி என்று நினைத்தாரோ என்னவோ, "எல்லாரும் வெளில போங்க.. நாங்க உங்களைக் கூப்பிடலை.. வெளில போலாம்.." என்றார் தைரியமாக. இதை கூட்ட ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால்..?

ஆனாலும் நமது தோழர்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தொண்டை கிழிய கத்திக் குவித்துவிட்டு, தயார் செய்து கொண்டு வந்திருந்த கோஷங்களையும் எழுப்பிவிட்டுத்தான் வெளியேறினார்கள். அவர்களுடன் வந்திருந்த பெண் தோழியர்கள் லீனாவையும், அவரது ஆதரவாளர்களையும் திட்டியதை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அதேபோலத்தான் தோழர்களும்..

'வெளியே போ' என்றவுடன் சட்டென்று வெளியில் போக எத்தனிக்கும் அளவுக்கு அவை நாகரீகத்துடன் தயாராக இருந்த தோழர்கள், எதற்காக கூட்டத்துக்கு வர வேண்டும்..? காரணம் புரிந்ததா..?

ச்சும்மா.. தங்களுடைய எதிர்ப்பை காட்டுகின்றவிதமாக..! "நாங்களும் இருக்கோம்.. பார்த்துக்குங்க.." என்று பலரையும் பயமுறுத்த.. "நாங்கள் நினைத்தால் எதையும் செய்வோம்.. எந்தக் கூட்டத்தையும் நிறுத்துவோம்.. தெரிஞ்சுக்குங்க" என்ற தங்களது நெஞ்சுர அராஜகத்தை நிலைநிறுத்தியிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்னவென்று நினைப்பது?

இந்தக் கூற்றுக்கு மற்றுமொரு உதாரணம் சில ஆண்டுகளுக்கு முன்பாக எனது இனிய நண்பன் கவிஞர் சங்கராமசுப்பிரமணியனுக்கு இந்தத் தோழர்களால் நேர்ந்திருக்கும் கதி.

அப்போது நானும் அவருடன் அதே 'மின்பிம்பங்கள்' அலுவலகத்தில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இப்படியொரு சம்பவம் நடந்ததை கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டேன். வேறென்ன செய்வது..? தளவாய்சுந்தரம் அந்தச் சந்தர்ப்பத்தில் குமுதம் பத்திரிகையில் நிருபர்.. அப்போது எங்களுடன் பணியாற்றி வந்த இன்னுமொரு தோழரான ம.செந்தமிழன் இது போன்ற குழுக்களுடன் நன்கு அறிமுகமானவர். அப்படியிருந்தும் சங்கருக்கு உதவிகள் செய்ய முடியாமல் போனது குறித்து எங்கள் அனைவருக்கும் வருத்தமே..

சங்கரின் கதை குறிப்பிடுவது என்னவென்றால் இந்த மாதிரியான தோழர்கள், தாங்கள் நிஜ வாழ்வில் அமெரிக்க அண்ணனை போல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

காவல்துறையினர் இவர்களது நிகழ்ச்சிகளுக்கு தடை போட்டாலோ, அல்லது கைது செய்தாலோ, அல்லது தடியடி நடத்தி கலைத்தாலோ 'அதிகாரத் துஷ்பிரயோகம்..' 'அடாவடித்தனம்..' 'ஆட்சிக் கொழுப்பு' என்றெல்லாம் வர்ணிக்கும் இவர்கள், எந்த அதிகாரத்தின் கீழ் சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரை மிரட்டினார்கள்..? யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது..? பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் ஆட்சியாளர்களை, அரசு அமைப்புகளைத் திட்டுகிறார்கள்..? கண்டிக்கிறார்கள்.

சங்கர் மற்றும் லீனாவின் கவிதைகள் பிடிக்கவில்லையா? எதிர்ப் பதிவு போடுங்கள்.. அது உங்களைத் தாக்கியதா..? காவல்துறையில் புகார் கொடுங்கள். அங்கு நியாயமி்ல்லையா..? நீதிமன்றத்தில் வழக்குப் போடுங்கள்.. வாதாடுங்கள்.. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அது தவறு என்றால் நிச்சயம் தண்டனை கிடைக்குமே.. அதைவிட்டுவிட்டு வீடு தேடிச் சென்று மிரட்டுவதும், இழுத்துச் செல்வதும் எந்த வகை கம்யூனிஸம்..? கம்யூனிஸத்தில் இதைத்தான் மார்க்ஸும், ஏங்கெல்ஸும் இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்களா..?

இதோ இப்போது பால் சக்காரியாவை கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவினர் தாக்கியிருக்கிறார்கள். எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரின் சொந்த வாழ்க்கையில் அத்துமீறி நுழைந்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்.. கொல்கத்தாவில் தஸ்லிமாவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள்.. இதுதான் மார்க்சிய வழியா..? மார்க்ஸும், ஏங்கெல்ஸும் சொன்ன வழியா..?

லீனா தொடர்பாக குட்டிப் பிரசுரத்தில் சி.பி.ஐ.யும், சி.பி.ஐ.எம்.மையும் கேள்வி கேட்டிருக்கிறார்களே இந்தத் தோழர்கள்..! சங்கரராமசுப்பிரமணியன் என்றால் மட்டும்தான் அவரது வீட்டிற்குச் சென்று மிரட்டுவார்களா..? ஏன் இதே கேள்வியோடு மார்க்சிஸ்டு பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்குப் போய் அவரை மிரட்டுங்களேன்..? பிரகாஷ் காரத்தை முற்றுகையிட்டு கேள்வி கேளுங்களேன்.. இருபத்தி நாலு மணி நேரமும் திறந்தே இருக்கும் பாலன் இல்லத்தில் போய் சி.மகேந்திரனிடம் இதே போல், "வாங்க தோழர்.. ஒரு பஞ்சாயத்து இருக்கு.. 'புதிய கலாச்சாரம்' ஆபீஸ்ல போய் பேசிக்குவோம்.." என்று கூப்பிட்டுப் பாருங்களேன்.. முடியுமா இவர்களால்..?

முடியாது.. ஏனெனில் 'பாலன் இல்ல'த்திலும், 'வி.பி.சிந்தன் கட்டிட'த்திலும் கால் வைத்தால் எதிரணியில் லட்சம் பேர் திரள்வார்கள். தாங்க முடியாது. டிரவுசர் கிழிந்துவிடும். அதனால் தைரியமில்லை. ஆனால் சங்கரராமசுப்ரமணியனை பிடிக்கலாம். தாக்கலாம். இழுத்துச் செல்லாம்.. கேள்வி கேட்கலாம்.. ஏனெனில், ஏனென்று கேட்க சங்கரின் பக்கத்து வீட்டுக்காரன்கூட வர மாட்டான்..

இப்படி தன்னுடைய ஆளுமையை, தனது எதிர்ப்புச் சக்தியை வலியவர்களிடம் காட்ட முடியாமல், எளியவர்களிடம் காட்டுகின்ற இவர்களுக்கும், மணிப்பூரில் மனோரமா என்கிற ஆதிவாசிப் பெண்ணைக் கொடூரமாகக் கற்பழித்துக் கொன்ற இந்திய துணை ராணுவப் படையினருக்கும் மனதளவில் என்ன வித்தியாசம்..? (ஸாரி தோழர்களே.. விமர்சனம் கடுமையானதுதான்.. ஆனால் உண்மை சுடத்தான் செய்யும்..) ஒரு வித்தியாசமும் இல்லை.

துணை நிலை ராணுவம் செய்தது தங்களது பலத்தை மக்களுக்குக் காட்ட.. மனரீதியாக அவர்களை ராணுவத்தின் அடிமையாக இருக்க வைக்க..! நம்ம தோழர்கள் செய்ததும் அதே மனநிலையோடு தங்களது பலத்தை தங்களைவிட சக்தி குறைந்தவர்களிடம் காட்டுவதற்காகத்தான்..! இதை வேறெப்படி ஒப்பிடுவது..?

ஏழு கேள்விகள் கேட்டு அவர்கள் தயார் செய்திருந்த பட்டியலை இவர்கள் முதலில் எடுத்துக் கொண்டுபோய் உரிமையோடு சட்டையைப் பிடித்துக் கேட்டிருக்க வேண்டிய இடம் "தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம்"தான். போயிருக்கலாமே.. "ஏனப்பா நீங்களும் மார்க்சியவாதிகள்தானே.. மார்க்ஸ், ஏங்கல்ஸை படித்தவர்கள்தானே.. புரட்டியவர்கள்தானே.. நீங்கள் எப்படி லீனாவுக்கு ஆதரவு கொடுக்கலாம்" என்று கேட்டிருக்கலாமே..? உங்களுடைய இனிய தோழர் காம்ரேட் ச.தமிழ்ச்செல்வன் பதில் சொல்லக் காத்துக் கொண்டிருப்பாரே..! ஏன் போகவில்லை..?

ஆனால் இங்கே இளிச்சவாயர்கள் லீனாவும், அ.மார்க்ஸும்தான்.. ஏனெனில் இவர்களுக்குப் பின்னால் எந்தவொரு அமைப்பும் இல்லை.. ஆள் பலம் இல்லை. படை பலம் இல்லை.. அம்பு, சேனைகள் இல்லை.. இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. கெஞ்ச வைக்கலாம்.. கதற வைக்கலாம்.. அழுக வைக்கலாம் என்கிற சர்வாதிகார மனநிலைதான்..

எந்தக் காலத்திலும் கம்யூனிஸ இயக்கத் தோழர்களுக்கு வரக்கூடாத மனநிலை இந்த சர்வாதிகார மனநிலைதான்.. ஆனால் இந்த இயக்கத்தினருக்கு வந்திருக்கிறது என்றால் இவர்கள் கம்யூனிஸத்தை தங்களுக்குக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் பொருள்.

நாடு இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனுக்குடன் ஓடி வரக்கூடியவர்கள் கம்யூனிஸ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இந்தியாவில் தற்போதைக்கு கண்கூடாகப் பார்க்கின்ற உண்மை. அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்ற ஒரு அமைப்பு இப்படிப்பட்ட ஒரு அராஜக மன உணர்வோடு தன்னை வளர்த்துக் கொண்டே வருவது அந்த அமைப்பினருக்கு மட்டுமல்ல.. நமக்கும் நல்லதல்ல.. நாட்டுக்கும் நல்லதல்ல..

ஏனெனில் மக்கள் கலை இலக்கியக் கழகம் இன்னொரு பக்கம் மக்களுக்கான, மக்களுக்கு நெருக்கமான பல விஷயங்களில் அழைப்பு இல்லாமலேயே தானாகவே முன் வந்து பலவிதப் போராட்டங்களை நடத்தி வருகிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவதற்குத் தடை இருந்தபோது அத்தடையை நீக்கவும், தேவாரத்தை மனமுருக பாடுவதற்காக பெருந்தவத்தோடு காத்திருந்த பெரியவர் ஓதுவார் ஆறுமுகசாமிக்காக சிதம்பரம் நகர மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் எத்துணை பாடுபட்டார்கள் என்பதனை சமீபத்தில் நான் அங்கே சென்றிருந்தபோது அறிந்து கொண்டேன்.

நீதிமன்ற உத்தரவுப்படி ஓதுவார் ஆறுமுகசாமி தேவாரம் பாடுவதற்காக கோவிலுக்கு வந்தபோது மெயின் ரோட்டில் இருந்து அவரைத் தங்களது தோளில் தூக்கிக் கொண்டு போய் அந்த உலகாளும் நடராஜனின் திருச்சிற்றம்பல மேடையில் இறக்கி வைத்தவர்கள், இந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள்தான் என்பதை அன்றைக்கு தொலைக்காட்சிகளில் பார்த்தபோதும், பத்திரிகைகளில் படித்தபோதும் எத்தனை சந்தோஷப்பட்டோம்..?

சாமியே இல்லை என்றவர்களைக்கூட சாமியைப் புகழ்ந்து பாட கால் வலிக்க கோவிலின் உள்ளே ஓட வைத்ததுகூட சிவனின் திருவிளையாடல்தான்(எப்பூடி..? சைக்கிள் கேப்புல டிரெயின் ஓட்டுறேன் பாருங்க..!) என்று அப்போது நான் நினைத்துக் கொண்டேன். சந்தோஷம்.. பெருத்த சந்தோஷம்..!

இது போன்ற மக்களுக்கான போராட்டங்களின் வாயிலாகவும், போராட்ட வழிமுறைகளினால் மக்களை இன்னமும் நெருங்க வேண்டிய இடத்தில் இருக்கும் இந்த கழகத் தோழர்கள் இப்படி தேவையற்ற முறையில், நேர்மையில்லாத வகையில் நடந்து கொள்வது மக்களிடமிருந்து அவர்களை விலக்கத்தான் செய்யும். நாளை அவர்களைப் பற்றி சொல்லும்போதே, "ஆமாப்பா.. அவங்க வந்தாலே அப்படித்தான்.. ஏதாவது கலகம் பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க.." என்பது போன்ற பாராட்டுரைகள்தான் கிடைக்கும்.. தேவைதானா இது..?

லீனாவின் இந்தக் கவிதை ஆபாசம்.. அந்த ஆபாசத்திற்கு எங்களது ஆசான்கள்தான் கிடைத்தார்களா என்று முழங்குகிறீர்களே..! இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியே ஆத்திகர்களான நாங்கள் நெஞ்சார வணங்கும் எங்களது தெய்வங்களை பழித்துப் பேசுகிறீர்களே.. எழுதுகிறீர்களே.. பத்தகம் அச்சடித்து வெளியிடுகிறீர்களே..(ச்சும்மா ஒரு பேச்சுக்குத்தான்) நாங்கள் என்றைக்காவது ஏதாவது கேட்டிருக்கிறோமா..? இல்லையே..! கண்டு கொள்ளாமல் நாங்கள் பாட்டுக்கு எங்கள் வழியில் போய்க் கொண்டுதானே இருக்கிறோம்..!

ஏனெனில் இந்து மக்கள் கட்சியும், ஆர்.எஸ்.எஸ்ஸும், பஜ்ரங்தளமும், பி.ஜே.பியும், இன்னும் பிற அமைப்புகளும் கூக்குரல் போடுவதாலேயே இந்த இந்தியத் திருநாட்டில் ஆத்திகம் வளரவில்லை.. நாத்திகமும் செழிக்கவில்லை.

ஒவ்வொரு மனிதனும் சுயமான அறிவு, சுயமான நடத்தை, சுயமான செல்வாக்கு, சுயமான சிந்தனை வருகின்றவரையில் குடும்பத்துக்காக ஆத்திகத்தைச் சுமக்கிறான். ஏற்றுக் கொள்கிறான். ஆனால் அதன் பின்பு அவன் படுகின்ற வாழ்க்கை அனுபவங்கள் மட்டுமே அவனை ஆத்திகனாக நிலைக்க வைக்கிறதே ஒழிய.. யாரும் அவனை கோவிலுக்குள் இழுத்துச் சென்று நிப்பாட்டுவதில்லை.

இன்னும் எத்தனை பெரியார்களும், திராவிடர் கழகங்களும், நாத்திகக் கழகங்களும் வந்தாலும் ஆத்திக உணர்வு என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் பரவத்தான் செய்யும். அதனை யாராலும் தடுக்க முடியாது..

அதேபோலத்தான் மார்க்ஸும், ஏங்கெல்ஸும், லெனினும் உங்களுடைய இன்ன பிற தலைவர்களும்.. அவர்களைப் பற்றி என்ன எழுதினாலும் அவர்களுடைய மதிப்பையும், மரியாதையையும் உங்களிடமிருந்தும் யாரும் அபகரிக்க முடியாது..

இப்போது எதற்கு இந்த வீணான போராட்டம்..? மேலேயும், கீழேயுமான குதிப்பு..? ஒரு கவிதை வந்தது. நீங்கள் எதிர்ப் பதிவு போட்டு எதிர்ப்பைக் காட்டிவிட்டீர்கள். முடிந்தது பிரச்சினை.. அடுத்த வேலையைப் பார்த்துவிட்டுப் போகலாம்.

நீங்கள் ஒரு கட்டுக்குள் இருந்து கொண்டு அமைப்பை நடத்துகிறீர்கள். இது போன்ற ஆவேசத்தையும், எதிர்ப்புணர்வையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.. போர்க்குணத்தை போராட்டத்தில் மட்டும் காட்டலாம்.. அரசு அமைப்புகளிடம் காட்டலாம்.. ராணுவத்திடம் காட்டலாம்.. காவல்துறையினரிடம் காட்டலாம்.. காட்டியிருக்கிறது கம்யூனிஸம்... உலகில் முதலில் தோன்றிய கம்யூனிஸம் இப்படித்தானே மலர்ந்தது.. ஆனால் தனி மனிதர்களிடம் தன் வீரத்தைக் காட்டவில்லையே..! அப்படிக் காட்டினால் அதற்குப் பெயர் கம்யூனிஸமும் இல்லையே..!

யோசியுங்கள் தோழர்களே..!


உஷ்ஷ்ஷ்.. அப்பா.. யாராச்சும் கொஞ்சம் சோடா உடைங்கப்பா..! மூச்சு வாங்குது..!


கடைசியா ஒரு விஷயம் தோழர்களே..! இதற்காக எனது வீட்டு அட்ரஸ் கேட்டு தயவு செய்து அலைய வேண்டாம்.. வீட்டுக்கு ஆட்டோவோ, டெம்போ வேனோ, மினி லாரியோ அனுப்ப வேண்டாம் தோழர்களே.. யாராவது ஒரு தோழரை சைக்கிளில் அனுப்பினாலே போதும்.. பெரியவர் உ.ரா.வரதராஜன் மாதிரி கேரியர்ல உக்காந்து எங்க வரச் சொல்றீங்களோ அங்க நானே வந்து ஆஜராகியிருவேன்..!

என்னடா இந்தச் சுள்ளான் நம்மகிட்டயே இப்படி பயமில்லாம பேசுறானே அப்படீன்னு நினைக்குறீங்களா தோழர்களே..?

ஹி.. ஹி.. எனக்குத்தான் என் அப்பன் முருகன் இருக்கானே..! அப்புறமெதுக்கு பயம்..? அவன் ஒருத்தனே போதும்..!

முருகா சரணம்.. முருகனடி சரணம்..!

வேல் வேல் வெற்றிவேல்..!

கந்தனுக்கு அரோகரா..!

முருகனுக்கு அரோகரா..!

நித்தியானந்தம் தவிர நாமெல்லாரும் யோக்கியமானவர்கள்தானா..?

04-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த இரண்டாம் தேதி இரவு எட்டரை மணிமுதல் கோடம்பாக்கத்தில் யாருக்கும் உறக்கமில்லை. எப்படி இப்படி நடந்தது என்று இரவு முழுவதும் போன் போட்டு அழுதவர்கள், இப்போதுவரையிலும் அதையேதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திரையுலகம் மட்டும்தான் என்று நினைத்தேன். வலையுலகத்தில் நான் எதிர்பார்த்தது போலவே இதைத் தவிர முக்கியம் வேறில்லை என்பதைப் போல் ஒரே சமயத்தில் ஒரே சம்பவத்தை வைத்து பதினைந்து பதிவுகள் தமிழ்மணத்தின் முகப்பில் நின்றது என்றால் அது நிச்சயம் இந்தப் பிரச்சினைக்காகத்தான்.

எப்போதடா சமயம் கிட்டும் என்று காத்துக் கொண்டிருந்தவர்கள் பக்தியின் மீது, கடவுள் மீதும், அந்த நம்பிக்கை மீதும், சாமியார்கள் மீதும், அவர்களது பிரதான பக்தர்களின் மீதும், கடைநிலை பக்தர்கள் மீதும் பாய்ந்து குதறியெடுத்துவிட்டதை நினைத்து இனிமேல் இந்தப் பிரச்சினையில் எழுதுவதற்கு எதுவுமே இல்லை என்றாகிவிட்டது.

ஆனாலும் இந்த விஷயத்தில் நமது தரப்புக் கருத்தைச் சொல்லாவிட்டால் பின்னாளில் நாட்டுப் பிரச்சினைகள் எதையும் பொதுவில் வைத்து வாதாடும்போது உனக்கென்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி எழ வாய்ப்பு உண்டு என்கிற காரணத்தினால் விருப்பமே இல்லாமல் இந்தப் பதிவு.

காமம் மனிதர்களைக் கொல்லத்தான் செய்கிறது. எவ்வளவு செல்வாக்கு படைத்த மனிதர்களும் இதை வெல்ல முடியாமல் கடைசியில் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள். இதைத்தான் கடவுளர் வரலாறுகளும், தேசங்களின் வரலாறுகளும், ஒரு சமான்யனின் வரலாறுகளும் வருடக்கணக்காக சொல்லி வருகின்றன. ஆனாலும் சாதாரண மக்களுக்கு தங்களிடம் அதன் மீதிருக்கும் ஒரு மரியாதை கலந்த பயத்தையும், விருப்பம் கலந்த வெறுப்பையும் நீக்க முடியவில்லை.

நித்தியானந்தம் என்கிற தனி நபரும், ரஞ்சிதா என்கிற பெண்மணியும் கலந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு இது என்கிற பட்சத்தில் இது இருந்திருந்தால், தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் லட்சணக்கணக்கான அந்தரங்க வீடியோக்களில் ஒன்றாக இதுவும் போய்விட்டிருக்கும்.

மாறாக தன்னையொரு அவதாரப் புருஷனாகவும், மக்களுக்கே அறிவுரை சொல்லும் மகானாகவும், ரட்சிக்க வந்த புனிதராகவும் காட்டிக் கொண்டதால்தான் நித்தியானந்தம் இன்றைக்கு தலைகாட்ட முடியாமல் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டியிருக்கிறது.

அவரால் முடிந்தது.. போய்விட்டார். ஆனால் அவரைத் தொழுதவர்கள் அன்றைய இரவு முதல் பட்டபாட்டை அவர் நிச்சயம் உணர்ந்திருக்க மாட்டார். கவுதம புத்தர் தோரணையில் நித்தியானந்தம் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பலரது வீடுகளின் வரவேற்பறையில் பார்த்திருக்கிறேன். இப்போது போனால் நிச்சயமாக அது குப்பைக் கூடைக்குள்தான் இருக்கும்.

திரையுலகில் கோவைசரளாவும், நடிகர் விவேக்கும் இவரது பிரதான சீடர்கள். தயாரிப்பாளர் 'சத்யஜோதி' தியாகராஜன் இவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து புண்ணியத்தைத் தேடிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். பல பிரபலங்களுக்கு மத்தியில் இப்படி குருவாக இருந்தவர் தனக்குத்தானே குழியைத் தேடிக் கொண்டார் என்றால், அதற்குக் காரணம் அவரது வயதுதான். இளம் வயதில் பெயரும், புகழும், பணமும், அளவற்ற செல்வாக்கும் கிடைத்தால் எது நடக்குமோ அதுதான் இவருக்கும் நடந்திருக்கிறது.

ஏதோ நம்மைத்தான் இந்தப் பிரச்சினை தாக்கியிருக்கிறது என்றில்லை. தமிழ்நாடு முழுக்கவே நிலைமை இதுதான். டீக்கடையில் இருந்து பெட்ரோல் பங்க்வரையிலும் அனைவரின் முகத்திலும் ஒரு நக்கல் சிரிப்பு. அடுத்தவர்களின் அந்தரங்கம் உலகத்தில் அத்தனை பேருக்குமே எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது பாருங்கள்..?

நித்தியானந்தம் ஒரு சாமியார் என்கிற ரீதியிலேயே கவனிக்கப்பட்டுவிட்டாலும் அவருக்குள் இருந்த இயற்கையான, இயல்பான மனித குணம் இல்லாமல் போயிருக்காது. ஆனால் அதற்காக அவர் அதனைப் பயன்படுத்தியவிதமான அந்த காவி உடையை அணிந்து அந்தச் செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்பதும் ஒரு புறும் இருக்கட்டும்.. இந்தச் செயல் எதற்காக, எப்படி வெளிப்பட்டது என்பதையும் ஒருபுறம் பாருங்கள்..

பல்வேறு மீடியாக்களுக்கும் குறிப்பாக குமுதம் பத்திரிகைக்கும் இந்தச் செய்தி டிவிடியுடன் ஒரு கோரிக்கை கடிதத்துடன் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருக்கும் வாசகங்களைப் படிக்கின்றபோது இந்தச் செயலில் பங்கு கொண்ட மூன்றாமவரும் நிச்சயம் ஒரு பெண்ணாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் அதனை வாசிக்க வாய்ப்புக் கிடைத்த பத்திரிகையாளர்கள்.

நீண்ட வருடங்களாக தனக்கும், நித்தியானந்தத்திற்கும் இடையில் இருந்த நெருங்கிய நட்பை உடைத்தெறிந்துவிட்டு புதிய நட்பை உருவாக்கிக் கொண்ட ரஞ்சிதாவின் மேல் கோபம் கொண்டுதான் அந்த பெண் அவர்கள் இருவருக்குமே தெரியாமல் இதனை ரிக்கார்டு செய்து மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார் என்பது பலரது அனுமானம். அந்தப் பெண்ணை கிட்டத்தட்ட ஸ்மெல் செய்துவிட்ட பத்திரிகையாளர்கள் விரைவில் அந்தப் பெண்ணின் பெயர் போட்டு கவர்ஸ்டோரி எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.

போடலாமா வேண்டாமா என்றெல்லாம் பலரும் தங்களது அலுவலகத்தில் யோசித்துக் கொண்டிருக்க பல்வேறு டிவிக்களின் செய்தி ஆசிரியர்களும் இரவு 9 மணியோடு கடைசி புல்லட்டின்னை முடித்துவிட்டு கிளம்பிவிடுவார்கள் என்பதை யூகித்து இரவு நேரத்திலேயே சப்தமில்லாமல் வெளியிட்டுள்ளார்கள் சேனல்காரர்கள்.

அதுவும் துணை முதல்வர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவின் நேரடி ஒளிபரப்பு கலைஞர் டிவியில் முடிகின்றவரையில் காத்திருந்து அதன் பின்புதான் ஸ்கிரால் நியூஸே ஓடத் துவங்கியது. அப்போதிலிருந்தே சேனல்காரர்கள் நினைத்ததுபோல தமிழ்நாடே பரபரக்கத் துவங்கியது.

ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு முன்பாகவே நித்தியானந்தத்தை தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்கப்பட்டு அவர் அதனை மறுத்து அது தன்னுடையதல்ல என்று சொன்ன பின்புதான் ஒளிபரப்பியுள்ளார்கள். இதனால்தான் நேற்று மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தம் தரப்பினர் ஒளிபரப்புக்கு தடைகோரியபோது ஸ்டே ஆர்டரை கொடுக்க நீதிபதியும் மறுத்துவிட்டாராம்.

நான் அந்த வீடியோவை பார்த்தபோது ஒரு 32 வயது வாலிபனும், அவன் மீது தாளாத காதல் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்குமான உணர்ச்சிக் குவியலைத்தான் பார்க்க முடிந்தது. எனது பக்கத்துவீட்டுப் பெண்கள் "புருஷனுக்குக்கூட எந்த பொம்பளையும் இவ்வளவு மரியாதையா கால் பிடிச்சுவிட மாட்டாங்க.." என்று கிண்டல் அடித்தார்கள். அவர்களுடைய பார்வை எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள்..

நடந்ததெல்லாம் ஒரு நிகழ்வு என்று சொல்லிவிட்டுப் போக இங்கே யாருக்கும் மனமில்லை. காரணம் அவர் ஒரு சாமியார்.. சாமியார் பெண்ணுடன் சம்போகிக்கலாமா என்கிறார்கள். அதனால் நித்தியின் உடலை இரண்டாகப் பிளந்ததுபோல் அத்தனை பேரின் கோபச் சொல்லாடல்கள் அவரைத் துளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் இதற்கெல்லாம் தகுதிகள் யாருக்கு உண்டு..? அந்தக் காட்சிகளை ஒளிபரப்பிய அந்தத் தொலைக்காட்சி சேனலுக்கு முதலில் இருக்கிறதா..? இந்தக் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஃபிரேமுக்குக் கீழேதான் தீராத விளையாட்டு பிள்ளை என்கிற நடிகைகளின் திவ்ய தரிசனத்தை முழுமையாகக் காட்டிக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் விளம்பரம் ஓடியது.

அதே தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் காட்டப்படுகின்ற காட்சிகள் எதுவும் நித்தியும், ரஞ்சிதாவும் இருந்த காட்சிகளுக்குக் குறைந்ததல்ல.. வெறுமனே கட்டில் அறை காட்சிகள் மட்டும்தான் ஆபாசமா..?

பத்தாண்டுகளுக்கு முன்பாக 'மெட்ரோ பிரியா' என்றொரு தொகுப்பாளினி பற்றிய ஒரு விளம்பரம் அதே தொலைக்காட்சியில் ஓடியது.. பாலங்கள், சாலைகள், போக்குவரத்து நெரிசல்கள் அனைத்தையும் கடந்து ஓடி வருகிறார்கள் இரண்டு பெரியவர்கள். அரக்கப் பறக்க ஓடி வரும் அவர்கள் ப்ரியாவின் எதிரில் வந்தமர்ந்தவுடன் அதில் ஒருவரின் வாயில் இருந்து உமிழ்நீர் அப்படியே கொட்டிக் கொண்டேயிருக்கும். கேட்டால் இது அந்த ப்ரியா என்றொரு பெண்ணிற்காக தமிழ்நாடே காத்துக் கொண்டிருப்பதை உணர்த்துவது போன்ற கான்செப்டாம்..

அடுத்து திடீரென்று ஒரு ஜட்டி கம்பெனி லம்பமாக ஒரு தொகையைக் கொடுத்து அனைத்து நிகழ்ச்சிகளின் இடையிலேயும் தங்களது உலகப் புகழ் பெற்ற ஜட்டியைக் காட்டச் சொன்னது.. காட்டினார்கள்.. எப்படி..? ஒரு ஆண் கட்டிலில் படுத்திருப்பார்.. கான்செப்ட்டின் டயலாக்குகள் முடிந்தவுடன் சடாரென்று தனது ஜிப்பைத் திறந்து பேண்ட்டை முட்டி வரையிலும் கீழிறக்கி ஜட்டியைக் காண்பிப்பார். அப்படியே ஜட்டி மீது லோகோ வந்து நிற்க.. விளம்பரம் முடியும்.. இப்படிப்பட்ட அற்புதமான காட்சிகளையும் அள்ளித் தெளித்ததுதான் இந்த சேனல்.

இவர்கள் என்றில்லை.. இப்போது அனைத்து மீடியாக்களுமே சிற்றின்பத்தை மையமாக வைத்துதான் தங்களை வளர்த்துக் வருகின்றன. இந்த சிற்றின்பத்தில் அடுத்தக் கட்டமான 'பெரிய' இன்பத்தையும் இவர்கள் நட்ட நடு இரவில் சில வருடங்கள் தொடர்ந்து காட்டிக் கொண்டுதான் இருந்தார்கள்..

'சூர்யா' டிவியில் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு ஷகிலா நடித்த மலையாளப் படங்களையும் காண்பித்தார்கள். தமிழக சட்டப்பேரவைவரையிலும் இந்த விஷயம் பேசப்பட்டு தாத்தா வழக்கம்போல பேரன்கள் பக்கமே பேச.. இனி போடுவதற்கு படங்கள் கிடைக்காததால் அது அப்படியே நின்று போனது. ஆனாலும் வசந்த் தொலைக்காட்சியில் இப்போது இந்த அரிய சேவையை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் எதைவிடக் குறைந்துபோய்விட்டது நித்தியின் இந்த உறவு..?

இந்த வெளியீட்டீன் மூலம் நித்தியானந்தத்தை குதறியெடுக்கும் பலரும் உடன் காட்சியளிக்கும் அந்தப் பெண் ரஞ்சிதாவை ஏன் நினைத்துப் பார்க்கவில்லை?

கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ்.. திரைப்படங்களில் முன்புபோல் நடிக்க வாய்ப்பில்லை.. சின்னத்திரையிலும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரிடமே மோதல் ஏற்பட்டு அங்கிருந்தும் விலக வேண்டிய நிர்ப்பந்தம்.

இப்படி எல்லா இடத்திலும் பிரச்சினைகள் என்று வந்த பிறகு ஒரு மன அமைதி வேண்டி அவர் சென்றடைந்த இடம் அது. அங்கே ஏற்கெனவே அமைதி வேண்டி வந்திருந்த மனிதர்களில் ஒருவரோடு ஒருவராக இருந்திருக்க வேண்டியவர், நித்தியுடன் ஒட்டிக் கொண்டதுதான் இப்போது இந்தளவுக்குக் கொண்டு வந்துவிட்டுள்ளது.

இதனைத் தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அவர் அந்த வீடியோவில் நடந்துகொண்டிருக்கும் விதத்தினைப் பார்க்கின்ற போது எந்த அளவிற்கு நித்தி மீது அவருக்கு இருக்கும் காதலையும், மரியாதையையும் புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம் அது ஏதோ ஒருவித செட்டில்மெண்ட்டுக்காக நடத்தப்பட்டவிதமாக இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ரஞ்சிதா நித்தியை முழுமையாக நம்பியிருக்கிறார். ஆனால் இப்போது அவரது நிலைமைதான் பரிதாபமாக இருக்கிறது. இனி அவர் எப்படி வெளியுலகில் தயக்கமில்லாமல் நடமாட முடியும்..? எத்தனை கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியும்..? கேள்விகள் அனைத்தும் தார்மீக ரீதியாக வருமா..? 'அந்தக்' காட்சிகளை மையமாக வைத்துதானே கேள்விகள் பறந்து வரும். அதற்கு ஒரு பெண்ணால் எப்படி பதில் சொல்ல முடியும்..?

ரஞ்சிதாவின் பொருட்டாவது இந்த வீடியோவை வெளியிடாமல் இருந்திருக்கலாம்.. கண் மூடித்தனமான பக்தியும், காதலையும்தான் அந்தப் பெண் அந்த வீடியோவில் காண்பித்திருக்கிறார். ஒரு கணவருக்கும், மனைவிக்குமான உறவு போல இருந்த அவற்றை இப்படி பகிரங்கப்படுத்தியிருப்பதில் காணாமல் போயிருப்பது நமது நாகரிகமும் சேர்ந்துதான்.

நித்தியின் உடன் இருந்தவர்களின் பொறாமையும், பயமும் அந்தப் பெண்ணையும் இப்போது பலி வாங்கிவிட்டது. இது பல மாதங்கள் நீடித்திருக்கும் நட்புதான் என்று உறுதியாகச் சொல்கிறது ஆசிரம வட்டாரம்.

உரிமையாக நித்தியின் படுக்கையறைக்குள் நுழையும் அளவுக்கு செல்வாக்கையும், தகுதியையும் உடைய ஒரு பெண் திடீரென்று வந்துசேர்ந்த ரஞ்சிதாவால், நித்தியை சந்திக்க முடியாத அளவுக்குப் போய் அந்தக் கோபத்தில்தான் வீடியோ கேமிராவை நித்திக்கும், ரஞ்சிதாவிற்குமே தெரியாத அளவுக்கு மறைத்து வைத்து படம் பிடித்திருக்கிறார் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

நித்தி இன்றைய செய்தியின்படி ஹரித்துவாருக்கு சென்றிருக்கிறார். உண்மையாக அவர் நாளை அலகாபாத்தில் நடக்கும் ஒரு கும்பமேளாவில் பல சாமியார்களுக்குத் தலைமை தாங்கி பூஜை நடத்த வேண்டுமாம். இருக்கின்ற குழப்பத்தில் அங்கே அவர் சென்றால், அவருக்கே பூஜை நடத்திவிடுவார்கள் என்பது உறுதி.

வீடியோவை வெளியிட்டவர்கள் சாமியாரின் சல்லாபம் என்றே குறிப்பிடுவதும் மிக நகைச்சுவையான ஒன்று.. இவர்களது சேனல்களில் நிமிடத்துக்கொருமுறை காட்டப்படுகின்ற சினிமா பாடல் காட்சிகளில் இருப்பது மட்டும் என்ன என்பதை இவர்கள் விளக்கிச் சொன்னால் தேவலை.

அதோடு அந்த வீடியோவின் காட்சிகளுக்கேற்ப 'சிருங்கார ரசம்' சொட்டும் சினிமாப் பாடல்களைச் சேர்த்து வெளியிட்டிருக்கும் அற்பபுத்திக்காரர்களை எதை வைத்து அடிப்பது..? யார் இவர்களைக் கண்டிப்பது..? எப்படி கண்டிப்பது என்று தெரியவில்லை. நிச்சயமாக அது ஸ்பாட் ரிக்கார்டிங் அல்ல. எடிட்டிங் டேபிளில் இணைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புலனாகிறது.

மற்றபடி சேனல்காரர்கள் என்ன நினைத்தார்களோ அது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது.. தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இருக்கும் நித்தியின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டுள்ளன. அவருடைய புகைப்பட போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டுள்ளன. அவருடைய புகைப்படங்கள் எரிக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் இருக்கும் தலைமை அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளது.

இவ்வளவுக்குப் பின்பும் "இது ஒரு கிராபிக்ஸ் வேலை.. நாங்கள் இதனை சட்டரீதியாக அணுகுவோம். நித்தி சாமி ஒரு தவறும் செய்யாதவர்.." என்று இன்னொரு சாமி பேட்டியளித்திருக்கிறார். உடன் போலீஸார் இருந்ததால் தப்பித்திருக்கிறார்.

நேற்று மட்டும் முகத்தை மார்பிங் செய்துவெளியிட்ட சேனல் இன்றைக்கு அப்படியே வெளியிட்டது. அதோடு அவர்கள் ரஞ்சிதாவின் புகைப்படத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள். 'உதயா' தொலைக்காட்சியில் ரஞ்சிதா நடித்த ஒரு நெருக்கமான காதல் காட்சியையும், அவரைக் கற்பழிக்க முனையும் காட்சியையும் போட்டுக் காண்பித்து இவர்தான் ரஞ்சிதா என்கிறார்கள். இதுவா ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கும் முறை..? இதற்கு நித்தி, காவி உடை அணிந்து காதலியுடன் ஒன்றாக இருந்ததில் ஒன்றும் தவறில்லையே..?

எந்தவிதத்திலும் இந்த விஷயத்தில் நித்தியானந்தத்தை கண்டிக்க யாருக்கும் தகுதியில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. ஒரு விரல் அவரைக் குற்றம் சுமத்தினால் மற்ற நான்கு விரல்களும் நம்மைத்தான் காட்டுகின்றன. அவர்கள் நடத்தியது சல்லாபம் என்றால் அடுத்தவர்களின் சல்லாபத்தை உச்சுக் கொட்டி பார்த்த நம்முடைய செயலை என்னவென்று சொல்வது..?

முதல் முறையாக அந்தக் காட்சிகளைப் பார்த்தபோது ரஞ்சிதாவாக இருக்காது என்றுதான் நினைத்தேன். ஆனால் 'நக்கீரன்' இணையத் தளத்தில் முழுமையாகப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துதான் போனேன். நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த முறைகள் பாஸ்ட் பார்வேர்டும், ரிவர்ஸுமாக மாற்றி மாற்றிப் பார்த்ததில் பாதி நித்தியானந்தமாக நானே மாறிவிட்டேன். பின்பு எனக்கு எங்கே இருக்கிறது கண்டிக்கின்ற தகுதி..?

இல்லை. எங்களுக்கு இருக்கிறது என்றால், உங்களது வாழ்க்கையை கொஞ்சம் புரட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒருவிதத்தில் ஒரு நோக்கில் நீங்களும் இந்தக் காமத்தை எதிர்கொண்டிருப்பீர்கள். அல்லது தெரிந்தும், தெரியாததுபோல் இருந்திருப்பீர்கள். யாரோ ஒரு நித்தியானந்தமோ அல்லது ரஞ்சிதாவோ உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் அப்போது மெளனமாக இருந்த நீங்கள், இப்போது இவர்கள் என்றவுடன் வெளிப்படையாகக் கொட்டுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

வலையுலகில் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் பற்றி பதிவர்கள் எழுதிய விமர்சனத்தில் அத்தனை பேரும் அட்சரப் பிசகாமல் சொன்ன ஒரு வாக்கியம் "ரீமாசென்னின் உடல் மொழி அசத்தல்" என்பது. ஆனால் படத்தைப் பார்த்தபோதுதான் அந்த உடல்மொழியை எப்படி பதிவர்கள் கண்டுகொண்டுள்ளார்கள் என்பது புரிந்தது. அடிப்படையே காமம்.. அத்தனை காமக்கண்ணோட்டத்தோடு ரீமாசென்னை அணு, அணுவாக ரசித்துத் துடித்த அந்த ரசனைதான், இன்றைக்கு இரு உடல்கள் இசைவோடு இணைந்திருப்பதை குற்றமாக பார்க்கிறது. விந்தையாக இல்லை..?

நித்தியானந்தம் செய்த ஒரே தவறு அவர் சாமியாராக இருப்பதுதான். தன்னை பின்பற்று என்று அவர் சொல்லியிருக்கும்பட்சத்தில் அதை தீர ஆராயாமல், யோசிக்காமல் பின்பற்றியிருக்கும் தொண்டர்களைத்தான் நாம் கண்டிக்க வேண்டும்.

ரஞ்சிதாவை இப்போது நினைத்துப் பார்த்து வருத்தமடையும் என் மனம் அந்த வீடியோவில் பார்க்கின்றபோது அவருடன் சேர்ந்து களியாட்டம் ஆடியதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பின்பு நான் எப்படி "இதுவொரு சாமியாரின் சல்லாபம்" என்று கண்டிக்க முடியும்..?

இணையத்தில் இன்றைய தேதிவரையில் இது போன்று நித்தியானந்தங்களும், ரஞ்சிதாக்களும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை அவ்வப்போது நாம் பார்த்து ரசிப்பதுண்டு.. 'காஞ்சிபுரம் தேவநாதன்' வீடியோக்களை தேடித் தேடிப் பார்த்த அனைவரும் அவன் மீது வழக்குப் போடவா பார்த்தார்கள்? இல்லையே.. என்ன நடந்தது என்பதற்காகத்தான் என்று மனசில் சல்ஜாப்பு சொல்லிக் கொண்டாலும் அதில் இருந்த காமத்தின் ஈர்ப்பை யாராலேயும் மறுக்கமுடியாது.

நித்தியானந்தம் துறவற வாழ்க்கைக்குத் தகுதியானவர் இல்லை என்று சொல்வதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை. அது மாதிரியான கணக்கிலடங்காத வீடியோக்களை திரையரங்கத்தின் இருட்டு மூலையிலும் கணிணியின் உதவியாலும் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருக்கும் என் மனது "நீயே ஒரு நித்தியானந்தம்தான். அவருக்கு வாய்ப்புக் கிடைத்து செய்திருக்கிறார். நீயும் அவர் நிலையில் இருந்தால் அதைத்தான் செய்வாய்.. இனி முடிவெடுக்க வேண்டியது நித்திதான். என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தீர்ப்பு சொல்ல வேண்டியது நீயல்ல.." என்று கூப்பாடு போடுகிறது.

அவருடைய செயல் ஒரு கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பிறண்டதுதான். இந்தக் கட்டுப்பாட்டை மீறியை செயலை செய்யாதவன் எவனும் உலகத்தில் இருக்க முடியாது என்பதே எனது கருத்து. நான் ஒரு காலத்தில் கை நீட்டி சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்த்த இடத்தில் அந்த நிர்வாகத்தின் தயாரிப்பையும், அதன் பொருட்களையுமே பார்க்காதீர்கள்.. வாங்காதீர்கள்.. கண்டுகொள்ளாதீர்கள் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தேன். இது எவ்வளவு பெரிய தவறு..? ஆனால் தனியொரு மனிதனாக நான் செய்தது சரி.. இப்படிப்பட்ட குழப்பம்தான் நமக்குள் இப்போதும் இருந்துவருகிறது.

பல கட்சிக்காரர்களின் அனுதாபிகளும் வலையுலகில் இருப்பார்கள். அவர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் கட்சியிலும் இப்படிப்பட்ட ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் அவர்களைப் பொருட்படுத்தாமல் கட்சிதான் முக்கியம் என்று நினைத்து கொள்கைகளில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நித்தி கட்சிக்காரர் இல்லையே.. கட்சியில் இருந்துகொண்டு கொள்ளையடிப்பவனைப் பற்றிக் கவலைப்படாத சிலர்தான், காவி உடையை மட்டும் தனி கவனம் கொண்டு பறந்து வருகிறார்கள். ஏனெனில் அவர்களும் கட்சிக்காரர்களே..

வலையுலகத்தில் நித்தியானந்தத்திற்கு அடுத்து அதிகமாக சாடப்பட்டுள்ளவர் சாருநிவேதிதா. அவர் செய்த தவறு அவரும் நித்தியை அதீதமாக நம்பியதுதான். மனிதர்களை கடவுளாக்கினால் என்ன நடக்கும் என்பதை இப்போது அவரும் உணர்ந்திருக்கிறார் போலும். ஆனால் அதனை வெளிப்படுத்த நினைத்து அவர் எழுதியிருக்கும் கட்டுரையைப் படித்தபோது வேதனையாக இருந்தது.

தான் தமிழ் மொழியின் குறிப்பிடத்தக்க எழுத்தாளன். என்னை வறுமையால் வாட வைத்து வேடிக்கை பார்க்கிறது இச்சமூகம் என்றெல்லாம் பொங்கியெழும் சாரு இப்போதைய கட்டுரையில் பயன்படுத்தியிருக்கும் சில வார்த்தைகளைப் பார்க்கின்றபோது நிச்சயமாக இவர் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமான எழுத்தாளராகவோ, குருவாகவோ, வழிகாட்டியாகவோ இருக்க சிறிதும் தகுதியில்லாதவர் என்றே சொல்லத் தோன்றுகிறது.

இப்படியொரு எழுத்தினை தமிழில் பதிவு செய்யப்படுவதற்கு எந்தவிதத்திலும் தமிழ் மொழி உதவாமலேயே இருந்து தொலைந்திருக்கலாம் என்கிற ஆதங்கம்தான் எனக்குள் தோன்றுகிறது.

இன்றைய வாரமே சாமியார்கள் வாரமோ என்று சொல்லக் கூடிய அளவுக்கு புலனாய்வு பத்திரிகைகள் அத்தனையிலும் சாமியார்களின் நடவடிக்கைகள் பற்றியச் செய்திகள்தான் பிரதானம். டெல்லியில் ஒரு சாமியார் விபச்சார விடுதியே நடத்தியிருக்கிறார். திருச்சி அருகே ஒரு சாமியார் கடவுளின் வரம் கிடைத்த வாழைப்பழத்தை பெண் பக்தர்களுக்கு வாயாலேயே டிரான்ஸ்பர் செய்கிறாராம்.. எங்கேயிருந்துதான் இப்படியெல்லாம் கிளம்புகிறார்கள் என்று தெரியவில்லை.

கல்கி ஆசிரமத்தில் உருண்டை வடிவத்தில் தரப்படும் பிரசாதத்தில் ஏதோ ஒரு மயக்க மருந்து இருக்கிறது. அதை வைத்து எங்களது பிள்ளைகளை கடத்துகிறார்கள் என்ற புகார் நீண்ட வருடங்களாகவே இருந்துவருகிறது. திவாரியின் அக்கப்போர் லீலைகளை அம்பலப்படுத்தியே அதே டிவி சேனல், நேற்றைய முன்தினம் கல்கி ஆசிரமத்திற்குள் நடக்கும் ஓஷோ ஸ்டைல் விஷயங்களை வெளிப்படையாக்க.. அங்கேயும் பிரச்சினைகள்.. கலவரங்கள்..

இந்து மதம் வேரோன்றியிருக்கும் இந்திய நாட்டில் சாமியார்களுக்கும், கடவுள்களுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதும், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் பெரிது, பெரிதாக வளர்ந்து கொண்டேயிருப்பதும்தான் இதற்குக் காரணம்.

மூன்று வேளையும் சாப்பிட்டே தீர வேண்டும் என்கிற கட்டாயமும், அப்படி சாப்பிட்டதையும் வெளியில் அனுப்பித்தான் தீர வேண்டும் என்கிற நிர்ப்பந்தமும் உள்ள மனித உடலைத் தாங்கிய எவரும் இங்கே கடவுளர் இல்லை என்பதை சராசரி மனிதர்கள் புரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள். மொழி இந்த சாமியார்களது நாவில் அரசியல்வியாதிகளைவிடவும் அபாரமாக விளையாடுவதுதான் சாமான்யர்களை கவர்ந்திழுக்கக் காரணம்.

ஆறுதல் தேடி கோவிலுக்கு ஓடி வரும் மனிதர்கள் பாரத்தை அங்கே இறக்கி வைத்துவிட்டு அமைதியாக பெருமூச்சுடன் வீடு நோக்கிச் செல்லலாம், இதுவும் கடந்து போகும் என்ற நினைப்பில்.. என்னைப் போலவே..

ஆனால் ஒரு சிலர்தான் இப்படியொரு குறுக்குச் சந்தில் நிற்கும் ஒருவரிடம் உபதேசம் கேட்டு வாழ்க்கையைத் திசை திருப்பிக் கொள்ளலாம்.. மனதை அமைதிப்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்து அங்கே போய் சிக்கிக் கொள்கிறார்கள். மீள்வது சுலபம்தான் என்றாலும் இங்காவது தனக்கு நல்லதொரு ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கிறதே என்பதால்தான் அவர்கள் மீள்வதில்லை.

குடும்பங்களில் சோகங்களும், சோதனைகளும் ஏற்படத்தான் செய்யும். அத்தனைக்கும் நாம் வருத்தப்பட்டுக் கொண்டே அப்படியே அமர்ந்திருந்தால் வந்த நோய் வாசலைத் தாண்டிப் போகாது. வீட்டுக்குள்தான் இருக்கும். இருப்பதை விரட்டுவதற்கும் அவரவர்க்கு போதிய சக்தியைக் கொடுக்கத்தான் செய்திருக்கிறான் ஆண்டவன். நமக்குள்ளேயே நம்மிடையையே, நம்மின் அருகிலேயே தீர்வுக்கு வழி இருக்கிறது என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இவருடைய தப்பினால் இவர்கள் மேற்கொண்ட கடவுள் பக்தி என்பது பொய்யாகிவிடாது. எவன் ஒருவன் அனுபவத்தால் இறைவனை உணர்ந்தானோ, அவனே உண்மையான பக்தன். வெறும் வார்த்தைகளாலும், கோஷங்களாலும், பஜனைகளாலும், பாடல்களாலும் இறைவனை நீங்கள் அணுகவே முடியாது. இது நன்கு படித்த மனிதர்களுக்கே புரியாமல் போகிறது.

பக்தி என்பது கடவுளிடம் பக்தன் காட்டுகின்ற தீவிரத்திற்கு மட்டுமல்ல.. கட்சியின் உண்மையான தொண்டனாக இருப்பவன் காட்டுவதும் பக்திதான். உழைக்கின்ற இடத்தில் முழுமையான அர்ப்பணிப்பு நோக்கத்துடன் உழைப்பவன் வெளிப்படுத்துவதும் பக்திதான். குருவின் பேச்சைத் தட்டாமல் செய்து முடிக்கும் சிஷ்யனிடம் உள்ளதும் பக்திதான். இந்த பக்திக்கு மதச் சாயமோ, இனச் சாயமோ தேவையில்லை என்பது எனது கருத்து.

நித்தி இனி ஒதுக்கப்பட்டவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த மனிதரை நேசித்தக் குற்றத்திற்காக ரஞ்சிதா இனி வாழ்க்கை முழுவதும் தன்னை எப்படி வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. நித்தி செய்த குற்றத்திற்காக அவருடைய காவி உடையைப் பறித்துவிடலாம். ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?