ஏண்டா வெட்டி வெண்ணை..!
உன் பொண்டாட்டிக ரெண்டு பேரும் உன்னைய கூப்பிடுறதைவிட அதிகமாகவே நான் இங்க சவுண்டு விட்டு கும்பிட்டுத் தொலைஞ்சுக்கிட்டிருக்கேன். நீ என்னடான்னா.. உண்மையான பக்தன்னுகூட பார்க்காம.. டெய்லி.. டெய்லி.. ஏதாச்சும் பிரச்சினையை குடுத்துட்டு உன்னையவே திட்ட வைக்குற..? உன்ககேண்டா இந்த புத்தி..?
உன் பொண்டாட்டிக ரெண்டு பேரும் உன்னைய கூப்பிடுறதைவிட அதிகமாகவே நான் இங்க சவுண்டு விட்டு கும்பிட்டுத் தொலைஞ்சுக்கிட்டிருக்கேன். நீ என்னடான்னா.. உண்மையான பக்தன்னுகூட பார்க்காம.. டெய்லி.. டெய்லி.. ஏதாச்சும் பிரச்சினையை குடுத்துட்டு உன்னையவே திட்ட வைக்குற..? உன்ககேண்டா இந்த புத்தி..?
டேய் மனுஷனா இருந்தா மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை இருக்கணும்.. நீ சாமியா வேற இருக்குற.. அப்போ மனுஷனைவிட கூட இருக்கணும்ல்ல..! இருக்கா உனக்கு..? எவ்ளோ திட்டியிருக்கேன். எதுக்காச்சும் ஒரு ரிப்ளை செஞ்சிருக்கியாடா..? காலைல எந்திரிச்சவுடனே இவனுக்கு என்ன பிரச்சினையை கொடுக்குறதுன்னு யோசனையோடதான் இருப்பியா..?
ஏண்டா கோமுட்டித் தலையா..? உனக்குத்தான் ரெண்டு பொண்டாட்டி.. அப்பன், ஆத்தா.. மாமன், மச்சான்னு பிச்சைக்கார பயலுக கூட்டம் நிறைய இருக்கே.. டெய்லி ஒருத்தன் வீட்லயாச்சும் போய் உக்காந்து தின்னுக்கிட்டே பொழுதைக் கழிக்க வேண்டியதுதானே..? அதுக்கேண்டா எங்களை மாதிரி ஆளுகளை படுத்தியெடுக்குற..?
உனக்கே தெரியும்.. வருஷா வருஷம் என் பொறந்த நாள் அன்னிக்கு உன்னைப் பார்க்க வருவேன்னு.. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து.. அதாவது நான் வயசுக்கு வந்த நாள்ல இருந்து தொடர்ந்து வந்துக்கிட்டுத்தான் இருக்கேன்.. இவன் ஒருத்தன் இந்த நாள்ல வருவானே.. அன்னிக்கு மட்டும் இவனுக்கு லீவு விட்டிருவோம்னு தோண வேணாம்..!
2 நாளைக்கு முன்னாடி அடிக்க ஆரம்பிச்ச காய்ச்சலு நேத்துதான் போயிருக்கு.. நேத்து பகல்வரைக்கும் நீ வேலைவெட்டியில்லாம என்னைய நோண்டிக்கிட்டேயிருந்திருக்க...? டேய். தெரியாமத்தான் கேக்குறேன்.. நீயெல்லாம் என்ன மயித்துக்குடா சாமியா இருக்குற..? ஒண்ணு நல்லது பண்ணு.. இல்லையா சுத்தமா கெட்டதை கொடுத்து உனனைக் கூப்பிட வைக்காத.. ரெண்டையுமே செய்யாம ச்சும்மா செவனேன்னு உன் அப்பன் மாதிரியே நின்னீன்னா என்னடா அர்த்தம்..?
இதுல கைல ஒரு வேலு.. அந்தக் கைல ஒரு கொடி.. பக்கத்துல ரெண்டு பொண்டாட்டிக.. தூக்கிட்டுப் போக மயிலு.. சொகமா பஞ்சாமிர்த குளியலு.. பன்னாடை.. பன்னாடை.. அன்னிக்கு நான் கோயிலுக்கு வந்திருந்தா உனக்கு மட்டும்.. 100 ரூபாய்க்கு ரோஜா மாலை.. 10 ரூபாய்க்கு துளசி மாலை.. 5 ரூபாய்க்கு கற்பூரம்.. 20 ரூபாய்க்கு தேங்காய்.. 10 ரூபாய்க்கு பூவு.. அப்புறம் சுத்தியிருக்குற உன் அவதாரங்களுக்கெல்லாம் இதே மாதிரி மாலை, மரியாதை.. உன் அண்ணன்காரன்.. அப்பன், ஆத்தா எல்லாருக்கும் மருவாதை.. எல்லாம் போச்சுல்ல.. தேவையா இது உனக்கு..?
பூசாரி சொன்னாலும் கேக்குறதுல்ல.. அப்பன், ஆத்தா சொன்னாலும் கேக்குறதுல்ல.. ஏதோ பெரிய தமிழாம்.. திமிருடா உனக்கு திமிரு..! இப்போ உன் பொண்டாட்டிக குமட்டுல குத்துறாளுகள்ல வசூல் குறைஞ்சிருச்சுன்னு.. வாங்கிக் கட்டிக்க..!
அன்னிக்குத்தான் விடுறான்னா.. நேத்தும் படுத்தியெடுத்திட்ட.. புதுசா இணையத்தளம் ஓப்பன் பண்ணி தொழிலை பார்க்கலாம்னு நேத்துதான் ஆரம்பிச்சா.. அந்த என்ஜீனியருக்கு ஏகப்பட்ட தொல்லை.. எது டவுன்லோடு செஞ்சாலும் பாதில கட்டு.. என் சைட்டை ஓப்பன் செஞ்சா லின்க் கட்டு.. சிஸ்டமே தானா ரீஸ்டார்ட் ஆகுது.. உச்சக்கட்டமா பண்ணி வைச்ச என்னோட சைட்டையே தெரியாம டெலீட் செஞ்சுட்டாராம்.. எப்பூடி...........?????? தெரியாம டெலீட் செஞ்சிட்டாராம்..?! டேய்.. டேய்.. கேட்டவுடனேயே உன் மூஞ்சிதான் என் மூஞ்சிக்கு முன்னால தெரிஞ்சது.. இதுவரைக்கும் அவரோட சர்வீஸ்ல இப்படிப்பட்ட இடைஞ்சலை பார்க்கலைன்னு கண்ணு கலங்குறாரு.. டேய்.. நீயெல்லாம் விளங்குவியா..? நல்லாயிருப்பியா..? நாசமாத்தான்டா போவ..!
வருஷத்துக்கு ஒரு தடவைதான் உன்னைய பார்க்க ஒருத்தன் வரான்.. அவனையும் வர விடாம பண்ணி்டட.. இனி இந்த வருஷம் எனக்கு எப்போ வரத் தோணுதோ, அப்பத்தான் வருவேன்.. போடா கஸ்மாலம்.. கம்னாட்டி.. சோமாறி.. கேப்மாரி.. மொள்ளமாரி..! திருட்டுப் பயலே..! ஒண்ணு பிழைக்க விடு..! இல்லையா கூப்பிட்டாச்சும் தொலை.. ரெண்டையும் செய்யாம உசிரோட உசிரை வாங்கதடா கபோதி..!
இத்தோட பிழைச்சுப் போன்னு விட்டுடறேன்.. போய்த் தொலை..!
|
Tweet |
52 comments:
தஞ்சம் என்று வந்து உன்னைக்
கெஞ்சுகின்ற எங்கள் பிள்ளை
துன்பம் தீர்க்க வேண்டுமய்யா சுடரொளியே.....
நோக்க நோக்க நொடியில் நோக்க..
இதெல்லாம் விடுங்கப்பு. வயசுக்கு வந்துட்டாராம். கவனிச்சிங்களா யாராச்சும்.
அண்ணே, முருகருக்குத் தான் எங்க மேல எவ்ளோ கருணை..எப்படியாவது எங்களை காப்பாத்த டிரை பண்ணியிருக்காரு. அதையும் மீறி, ப்ளாக்கை மீட்டு எடுத்துட்டு பேச்சைப் பாரு!
முருகன் இப்படித்தான் சோதிப்பான். என்னங்க இப்புடி புலம்ப வச்சிட்டானே.
பாருங்க ஒரு நாள் எல்லாத்துக்கும் சேர்த்து சந்தோஷமா சிரிக்க வைப்பான்.
Ni ellam nalla varuvanu nenaikiraya,
ni thappu thappa coment kuduthutu computer seri illai nu solreya mada sambirani,
Murugana unnavandu keduthan,
yam irukka pamennu sonnavana ippadiya tittaradu...
ni siikiram mudama poiduva da...velangadavaneeeee
என் பெயர் கொண்டவனே கண்களை திறந்து பார் என் திருவிளையாடலில் இதுவும் ஒன்று...
இன்று முதல் உன் இணையதளம் என் கந்த சஷ்டி கவசத்துடன் இயங்கும்... :))
"பக்தா உண்மைத்தமிழா...நீயும் என்னை மன்னிக்கவேண்டும். நான் முருகன் இல்லை. விநாயகர். என் தம்பியை அடிக்கடி தொந்தரவு செய்வதால், நான் தான் முருகன் வேடத்தில் வந்தேன்" :D
எப்படி ....இப்படி !
glad that you are coming back
i was trying to contact you but i could not
be cheerful
கந்தா, கடம்பா, கார்த்திகேயா, சரவணா, குகா, முருகா, வேலவா, சுப்ரமணியா, செந்திலாண்டவா, செந்தூர் குமரா, பழனி ஆண்டவா... நின்னை நிந்தனை செய்யும் அண்ணாச்சியை மன்னித்து அவரது கஷ்டங்களைத் தீர்ப்பாயாக...
அண்ணாச்சி,
//100 ரூபாய்க்கு ரோஜா மாலை.//
செல்வமணிக்கு தெரிஞ்சா கோச்சிக்க மாட்டாரு?
உங்களுக்கு பணவிரயம் வைக்க கூடாதுனு முர்கன் அன்பா நினச்சிருப்பார் அதுக்கு போய் டெங்சன் ஆகிட்டு?
முருகனும் நீங்களும் செல்லமா திட்டி, கொஞ்சி வெளையாடுறீங்களாக்கும்?!!
அட அட அட, முருகனைப் படச்சி அவனுக்கு ரெண்டு பெண்டாட்டி கட்டி வச்சதும் உங்க மூதாதையர்தான். இப்போ அவனுகளைத் திட்டாமல் முருகனை திட்டிக்கிட்டு..
SUPER SUPER.
KALA KARTHIK (karthik amma )
அண்ணாச்சி மாஞ்சி மாஞ்சி பதிவு எழுதறாரு. ஆனா முருகனை திட்டி பதிவு போட்டதும் உடனே தமிழ்மணத்துல சூடான இடுகையாகிவிட்டது. முருகனின் லீலையே லீலை!
Murugan gets credit for this too!!!!
It is "vetti" and "veNNai" made this article "hotter". How the hell the credit always goes to one who does not deserve??! I think the whole world is fucked up, that's why!
பிறந்த நாளுக்கான இனிய நல்வாழ்த்து(க்)கள்.
"மீரா”, “ஆண்டாள்” என்பவர்களுக்கு ஆண்பால் சரவணனாகிய நீங்கள் தானா?
"மீரா”, “ஆண்டாள்” என்பவர்களுக்கு ஆண்பால் சரவணனாகிய நீங்கள் தானா?
உண்மையிலயே முருகனத்தான் திட்டுனீங்களா இல்ல.....
ஹஹஹ்ஹஹா.. படித்து சிரிச்சு மாலலை... :) :) :) செம்ம எள்ளல் நடை... உங்க சோகத்தையும் இப்படி ரசிக்கும்படி கொடுக்கத்தான் முருகர் இப்படி விளையாடுறாரோ...!!!
இவ்ளோ நாள், உங்க ப்ளாக் படிக்காம இருந்த எனக்கு, முதல் போஸ்டே அதிரடியா இருக்கு....!!!
[[[கே.ஆர்.பி. செந்தில் said...
தஞ்சம் என்று வந்து உன்னைக்
கெஞ்சுகின்ற எங்கள் பிள்ளை
துன்பம் தீர்க்க வேண்டுமய்யா சுடரொளியே.....]]]
என் துன்பம் தீர்க்க ஒரே வழி.. அழைப்பது ஒன்றுதான்.. அவனிடம் கொஞ்சம் சொல்லுங்கள் செந்தில்..!
[[[கே.ஆர்.பி. செந்தில் said...
தஞ்சம் என்று வந்து உன்னைக்
கெஞ்சுகின்ற எங்கள் பிள்ளை
துன்பம் தீர்க்க வேண்டுமய்யா சுடரொளியே.....]]]
என் துன்பம் தீர்க்க ஒரே வழி.. அழைப்பது ஒன்றுதான்.. அவனிடம் கொஞ்சம் சொல்லுங்கள் செந்தில்..!
[[[Karthik Ero said...
நோக்க நோக்க நொடியில் நோக்க..]]]
காக்க காக்க நொடியில் காக்க என்று அவன் செயல்பட்டிருந்தால் நான் இப்படி எழுதியிருப்பேனா..?
[[[க ரா said...
இதெல்லாம் விடுங்கப்பு. வயசுக்கு வந்துட்டாராம். கவனிச்சிங்களா யாராச்சும்.?]]]
அடப்பாவி க.ரா.. எழுதினதுலேயே உனக்குப் பிடிச்சது மட்டும்தான் உன் கண்ணுக்குத் தெரியுது பாரு.. நல்லாயிருப்பூ..!
[[[செங்கோவி said...
அண்ணே, முருகருக்குத்தான் எங்க மேல எவ்ளோ கருணை.. எப்படியாவது எங்களை காப்பாத்த டிரை பண்ணியிருக்காரு. அதையும் மீறி, ப்ளாக்கை மீட்டு எடுத்துட்டு பேச்சைப் பாரு!]]]
ம். இப்படியும் ஒரு பேச்சா..? இப்போ அவனை விட்டுட்டு உங்களைத்தான் சாத்தணும் போல இருக்கு..!
[[[உசிலை விஜயன் said...
முருகன் இப்படித்தான் சோதிப்பான். என்னங்க இப்புடி புலம்ப வச்சிட்டானே.
பாருங்க ஒரு நாள் எல்லாத்துக்கும் சேர்த்து சந்தோஷமா சிரிக்க வைப்பான்.]]]
எனக்கு நம்பிக்கையில்லை விஜயன்..? இவன் என்னிக்கு என்னை சிரிக்க வைச்சிருக்கான்..?
[[[Sha Yamuna said...
Ni ellam nalla varuvanu nenaikiraya,
ni thappu thappa coment kuduthutu computer seri illai nu solreya mada sambirani, Murugana unnavandu keduthan, yam irukka pamennu sonnavana ippadiya tittaradu. ni siikiram mudama poiduva da. velangadavaneeeee]]]
எல்லாம் உங்க ஆசீர்வாதம்ண்ணே..!
[[[சௌந்தர் said...
என் பெயர் கொண்டவனே கண்களை திறந்து பார் என் திருவிளையாடலில் இதுவும் ஒன்று. இன்று முதல் உன் இணையதளம் என் கந்த சஷ்டி கவசத்துடன் இயங்கும்.:))]]]
ம்க்கும்.. இது ஒண்ணுதான் குறைச்சல்..!
[[[Srinivasan K said...
"பக்தா உண்மைத்தமிழா... நீயும் என்னை மன்னிக்கவேண்டும். நான் முருகன் இல்லை. விநாயகர். என் தம்பியை அடிக்கடி தொந்தரவு செய்வதால், நான்தான் முருகன் வேடத்தில் வந்தேன்" :D]]]
இப்போ நீ ஓடிப் போகலைன்னா கொழுக்கட்டையாலேயே அடிப்பேன்.. மடச்சாம்பிராணி..!
[[[கிரி said...
:-)]]]
நன்றி கிரி..
இன்னும் புரொபைல் போட்டோவை மாத்தலியா..? இந்தம்மாவுக்கு அப்புறம் நிறைய அம்மா வந்துட்டாங்களே..? பார்க்கலே..?
[[[senthilkumar said...
எப்படி. இப்படி !]]]
அனுபவிச்சுப் பாருங்க.. தெரியும்..!
[[[siva gnanamji(#18100882083107547329) said...
glad that you are coming back
i was trying to contact you but i could not be cheerful.]]]
நல்லாயிருக்கேன் ஸார்.. உங்களுடைய அக்கறையான விசாரிப்புக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து எழுதுவேன்.. தொடர்பில் இருக்கிறேன்..
[[[siva gnanamji(#18100882083107547329) said...
glad that you are coming back
i was trying to contact you but i could not be cheerful.]]]
நல்லாயிருக்கேன் ஸார்.. உங்களுடைய அக்கறையான விசாரிப்புக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து எழுதுவேன்.. தொடர்பில் இருக்கிறேன்..
[[[ஸ்கூல் பையன் said...
கந்தா, கடம்பா, கார்த்திகேயா, சரவணா, குகா, முருகா, வேலவா, சுப்ரமணியா, செந்திலாண்டவா, செந்தூர் குமரா, பழனி ஆண்டவா நின்னை நிந்தனை செய்யும் அண்ணாச்சியை மன்னித்து அவரது கஷ்டங்களைத் தீர்ப்பாயாக.]]]
கஷ்டங்களைத் தீர்க்க வேணாம்பா.. கூப்பிட்டுக்கச் சொல்லு.. அது போதும்..!
[[[வவ்வால் said...
அண்ணாச்சி,
//100 ரூபாய்க்கு ரோஜா மாலை.//
செல்வமணிக்கு தெரிஞ்சா கோச்சிக்க மாட்டாரு? உங்களுக்கு பணவிரயம் வைக்க கூடாதுனு முர்கன் அன்பா நினச்சிருப்பார் அதுக்கு போய் டெங்சன் ஆகிட்டு?]]]
வவ்ஸ்.. இவனாவது நமக்கு பரிதாபம் காட்டுறதாவது..? வேலை ரொம்ப ஈஸியாச்சேன்னு பிலிம் காட்டுவான்..! இந்த வருஷமே இந்தச் செலவை ஈடுகட்டிருவான்.. பாருங்க..!
[[[வருண் said...
முருகனும் நீங்களும் செல்லமா திட்டி, கொஞ்சி வெளையாடுறீங்களாக்கும்?!!
அட அட அட, முருகனைப் படச்சி அவனுக்கு ரெண்டு பெண்டாட்டி கட்டி வச்சதும் உங்க மூதாதையர்தான். இப்போ அவனுகளைத் திட்டாமல் முருகனை திட்டிக்கிட்டு..]]]
என் மூத்தோர்களே முருகனைத்தான் திட்டினாங்க. அப்போ நானும் அவனைத்தானே திட்டணும்..?
[[[Ponniyinselvan/karthikeyan said...
SUPER SUPER.
KALA KARTHIK (karthik amma)]]]
வருகைக்கு நன்றி..!
[[[நந்தவனத்தான் said...
அண்ணாச்சி மாஞ்சி மாஞ்சி பதிவு எழுதறாரு. ஆனா முருகனை திட்டி பதிவு போட்டதும் உடனே தமிழ்மணத்துல சூடான இடுகையாகிவிட்டது. முருகனின் லீலையே லீலை!]]]
அப்போ யாரையாச்சும் திட்டினாத்தான் எல்லோரும் ஓடி வந்து படிக்கிறீங்க? கரெக்ட்டா..?
[[[வருண் said...
Murugan gets credit for this too!
It is "vetti" and "veNNai" made this article "hotter". How the hell the credit always goes to one who does not deserve??! I think the whole world is fucked up, that's why!]]]
வெட்டி, வெண்ணை என்று யாரைச் சொன்னாலும் அது சூடாகத்தான் செய்யும். ஏன்னா அதுதான் ஹாட்டான டாபிக்..!
[[[துளசி கோபால் said...
பிறந்த நாளுக்கான இனிய நல்வாழ்த்து(க்)கள்.]]]
மிக்க நன்றிகள் டீச்சர்..!
[[[தருமி said...
"மீரா”, “ஆண்டாள்” என்பவர்களுக்கு ஆண்பால் சரவணனாகிய நீங்கள்தானா?]]]
ஹி.. ஹி.. நீங்க என்னை ரொம்ப புகழ்றீங்க தருமி ஸார்..! எனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியுது..? நான் சாதா சரவணன்தான்..!
[[[டிபிஆர்.ஜோசப் said...
உண்மையிலயே முருகனத்தான் திட்டுனீங்களா இல்ல.?]]]
சத்தியமா முருகனைத்தான் ஸார்..! வேற யாரை சொல்ல முடியும்..? மத்தவன்லாம் அரிவாளைத் தூக்கிட்டு வந்திர மாட்டான்..?!
[[[டிபிஆர்.ஜோசப் said...
உண்மையிலயே முருகனத்தான் திட்டுனீங்களா இல்ல.?]]]
சத்தியமா முருகனைத்தான் ஸார்..! வேற யாரை சொல்ல முடியும்..? மத்தவன்லாம் அரிவாளைத் தூக்கிட்டு வந்திர மாட்டான்..?!
[[[Nondavan said...
இவ்ளோ நாள், உங்க ப்ளாக் படிக்காம இருந்த எனக்கு, முதல் போஸ்டே அதிரடியா இருக்கு....!!!]]]
நல்லது.. நல்லாயிருக்கீங்களா..?
[[எனக்கு நம்பிக்கையில்லை விஜயன்..? இவன் என்னிக்கு என்னை சிரிக்க வைச்சிருக்கான்..?]]
நம்பிக்கைதாங்க முருகன் , நல்லா ஆழமா சிந்திச்சு பாருங்க நான் சொன்னத.
உங்களைப் போன்றவர்களுக்காகதான் அன்றே "உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்று கவியரசர் எழுதி விட்டு சென்றாரோ என்னவோ?
வாழ்க்கையில் பிரச்சினை என்று கேள்வி பட்டிருக்கிறேன். பிரச்சினையே வாழ்க்கை என்பது உங்களைப் பாத்தவுடதான் தெரிகிறது.
முருகனின் மாமாவான கண்ணன்தான் வெண்ணையைத் திருடியவர். அவரைதான் வெட்டி வெண்ணை என்று திட்டிருக்க வேண்டும். இடம் மாறி வந்து திட்டியிருக்கிறீர்கள்.
பக்தி முத்திப்போச்சோ ? ஹும் ... கலிகாலம் !
பக்தி முத்திப்போச்சோ ? ஹும் ... கலிகாலம் !
Post a Comment