அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு - திரையரங்குகள், நேரம் மாற்றம்..!

30-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
அம்பேத்கர் படம் பற்றிய பதிவைப் படித்துவிட்டு பின்னூட்டத்தில் வாழ்த்திய அன்பர்களுக்கு நன்றி.. தொலைபேசியில் பலரும் அழைத்து திரையரங்குகள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டார்கள். மேலும் ஐநாக்ஸ் திரையரங்கு பற்றி இறுதி முடிவு எடுக்காததால் தியேட்டர் நிர்வாகமும் நேற்று முன்தினம் வரையிலும் கருத்து சொல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் மேலும் நான் விசாரித்தபோது சில தகவல்கள் தெரிந்தன. பிரபல தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தருக்குக் கொடுத்திருந்த மூன்றாண்டு தவணைக் காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டதால் தற்போது அம்பேத்கர் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் விநியோக உரிமை திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கே திரும்பவும் கிடைத்துவிட்டது.

தற்போது படம் திரையிடல், விளம்பரங்கள் போன்றவற்றை திரைப்பட வளர்ச்சிக் கழகமே செய்து வருகிறது. நேற்று இன்னும் கூடுதலாக சில திரையிடல் வசதிகளை திரைப்பட வளர்ச்சிக் கழகம் செய்திருப்பதாகத் தெரிகிறது.

சென்னையில் சத்யம், ஐநாக்ஸ், எஸ்கேப், அபிராமி ஆகிய திரையரங்குகளில் மதியக் காட்சியில்(Noon Show) மட்டும் அம்பேத்கர் படம் திரையிடப்படுகிறதாம். வரும் 4, 5 ஆகிய இரண்டு நாட்களில்(சனி, ஞாயிறு) மட்டும்தானாம்.

ஆல்பர்ட் திரையரங்கில் வரும் டிசம்பர் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தினம்தோறும் ஒரு வாரத்திற்கு காலை காட்சியாக(11.30 மணிக்கு) மட்டும் அம்பேத்கர் திரைப்படம் திரையிடப்படுவதாக நேற்று மாலை முடிவான, இறுதியான செய்தியாகக் கூறினார்கள்.

இது பற்றி இன்று வெளியான 'தினத்தந்தி', 'தினகரன்' பத்திரிகைகளில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் விளம்பரமும் வெளியிட்டுள்ளது.

அம்பேத்கர் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 3-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர், ஆல்பர்ட் தியேட்டர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெறும் என்று தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் கூறுகின்றனர். சென்னைவாழ் பதிவர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

காலை காட்சி மட்டும்தான் என்பது நமக்கு மிகவும் சிரமமானதுதான். வார நாட்களில் செல்ல முடியாது என்றாலும்.. டிசம்பர் 4, 5(சனி, ஞாயிறு)தேதிகளில் காலை, மதியம் என இரண்டு காட்சிகள்  இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒரு நாளில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் திரையரங்கிற்குச் சென்று படத்தினை கண்டுகளிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கொண்டும் திரையிடல் சம்பந்தமாக ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறேன்.

நன்றி..!

30 comments:

Indian Share Market said...

மிக்க நன்றி ஸார்..!

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

தொலைக்காட்சி விளமபரம், பதிவுலக விளம்பரங்கள் உண்டா

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
மிக்க நன்றி ஸார்..!]]]

நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் 10, 20 பேரிடம் இதனைச் சொன்னால் நன்றாக இருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

தொலைக்காட்சி விளமபரம், பதிவுலக விளம்பரங்கள் உண்டா..?]]]

இதனைச் செய்ய வேண்டியது தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்தான். ஆனால் இதுவரையிலும் செய்யவில்லை. காரணம் அரசு அமைப்புகளின் சோம்பேறித்தனமும், முட்டாள்தனமும்தான். நாம் என்ன செய்ய முடியும்..? நம்மால் முடிந்ததை நாம் செய்வோம்..!

pichaikaaran said...

அண்ணன் உண்மைத்தமிழனின்
பிளஸ் , மைனஸ் என் பார்வையில்...

உமர் | Umar said...

நல்ல விஷயம்.

இயன்றால், திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு வருகின்றேன். அல்லது வார இறுதியில் திரைப்படம் பார்க்கின்றேன்.

pichaikaaran said...

இந்த பதிவை / செய்தியை அப்படியே கட் அண்ட் பேஸ்ட் செய்து , என் வலைபதிவில் வெளியிட அனுமதி தருவீர்களா?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
அண்ணன் உண்மைத்தமிழனின் பிளஸ், மைனஸ் என் பார்வையில்...]]]

தங்களின் வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[கும்மி said...
நல்ல விஷயம். இயன்றால், திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு வருகின்றேன். அல்லது வார இறுதியில் திரைப்படம் பார்க்கின்றேன்.]]]

அவசியம் பாருங்கள் கும்மி..! பார்த்துவிட்டு பகிரவும் மறக்காதீர்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
இந்த பதிவை / செய்தியை அப்படியே கட் அண்ட் பேஸ்ட் செய்து, என் வலைபதிவில் வெளியிட அனுமதி தருவீர்களா?]]]

தாராளமாச் செய்து கொள்ளுங்கள் தம்பி.. இந்தப் பதிவு என்றில்லை.. என் வலைத்தளத்தில் எந்தப் பதிவையும் எடுத்துக் கொள்ளலாம்..! உங்களுக்கில்லாததா..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல விஷயம்

kanagu said...

update seithamaikku nandri anna..

Albert theatre-il sanikizhamai andru sendru paarkalam endru irukkiren.. :) :)

Neenga eppo paaka poreenga???

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நல்ல விஷயம்]]]

வருகைக்கு நன்றி ரமேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
update seithamaikku nandri anna.
Albert theatre-il sanikizhamai andru sendru paarkalam endru irukkiren..:):) Neenga eppo paaka poreenga???]]]

வாங்க கனகு.. நான் வெள்ளிக்கிழமையே பார்த்திருவேன்.. அதனால் என்ன? இன்னொரு நாள் சந்திப்போம்..! உங்களுக்குத் தெரிந்தவர்களிடத்தில் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லி வரச் செய்யுங்கள்..!

ம.தி.சுதா said...

தங்கள் பதிவு ரசிக்க வைக்கிறது வாழ்த்துக்கள்...அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

kanagu said...

கண்டிப்பா சொல்றேன் அண்ணா... :)

ஆர்வா said...

நன்றி நண்பரே.. கண்டிப்பாக வருவதற்கு முயற்சி செய்கிறேன். இது போன்ற முயற்சிகளை நாமும் ஆதரிக்க வேண்டும்

உண்மைத்தமிழன் said...

[[[ம.தி.சுதா said...

தங்கள் பதிவு ரசிக்க வைக்கிறது வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/]]]

திரைப்படத்திற்கு அவசியம் வாருங்கள் தோழரே..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
கண்டிப்பா சொல்றேன் அண்ணா:)]]]

நல்லது.. நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[கவிதை காதலன் said...
நன்றி நண்பரே.. கண்டிப்பாக வருவதற்கு முயற்சி செய்கிறேன். இது போன்ற முயற்சிகளை நாமும் ஆதரிக்க வேண்டும்.]]]

வாருங்கள் கவிதை காதலன்..!

Anonymous said...

கண்டிப்பாக இத்திரைப்படத்தை பார்ப்பேன். இதற்கு முன் காமராஜ் திரைப்படம் சென்னை ஆனந்த் தியேட்டரில் வெளியானபோது வெகு சிலரே வந்திருந்தனர். வருத்தமாக இருந்தது. இந்த படம் வசூலில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ தெரியாது ஆனால் திரைவரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. நான் சென்னைவாசிதான் சரண் அவர்களே!. ஏதேனும் ஒரு விடுமுறை நாளில் உங்களை சந்தித்து பேச வேண்டும் என விரும்புகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். உங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள தகுந்த நேரம் எது என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)

ம.தி.சுதா said...

/////திரைப்படத்திற்கு அவசியம் வாருங்கள் தோழரே..! ////

மன்னிக்கணு் சகோதரம் நான் யாழ்ப்பாணத்தில் உள்ளதால் தங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை ஆனால் நண்பருக்கு இதை தெரிப்படுத்துகிறேன்..

tsekar said...

நன்றி நண்பரே!!

we will meet on
டிசம்பர் 3-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர், ஆல்பர்ட் தியேட்டர் வளாகத்தில்

ts
Maruthipatty

உண்மைத்தமிழன் said...

[[[சிவகுமார் said...
கண்டிப்பாக இத்திரைப்படத்தை பார்ப்பேன். இதற்கு முன் காமராஜ் திரைப்படம் சென்னை ஆனந்த் தியேட்டரில் வெளியானபோது வெகு சிலரே வந்திருந்தனர். வருத்தமாக இருந்தது. இந்த படம் வசூலில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ தெரியாது ஆனால் திரைவரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.]]]

இதனை பெருவாரியான மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பணி..!

[[[நான் சென்னைவாசிதான் சரண் அவர்களே!. ஏதேனும் ஒரு விடுமுறை நாளில் உங்களை சந்தித்து பேச வேண்டும் என விரும்புகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். உங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள தகுந்த நேரம் எது என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)]]]

எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ம.தி.சுதா said...

/////திரைப்படத்திற்கு அவசியம் வாருங்கள் தோழரே..! ////

மன்னிக்கணு் சகோதரம் நான் யாழ்ப்பாணத்தில் உள்ளதால் தங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை ஆனால் நண்பருக்கு இதை தெரிப்படுத்துகிறேன்..]]]

ஓ.. யாழ்ப்பாணமா..? நல்லது.. வாழ்க வளமுடன்..!

உண்மைத்தமிழன் said...

[[[tsekar said...

நன்றி நண்பரே!!

we will meet on
டிசம்பர் 3-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர், ஆல்பர்ட் தியேட்டர் வளாகத்தில்

ts
Maruthipatty]]]

வாங்க சேகர்.. நிச்சயமாக சந்திப்போம்..!

Ashok D said...

பகிர்வுக்கு நன்றி

உண்மைத்தமிழன் said...

[[[D.R.Ashok said...
பகிர்வுக்கு நன்றி]]]

அவசியம் பாருங்க அசோக்..!

abeer ahmed said...

See who owns free.fr or any other website:
http://whois.domaintasks.com/free.fr

abeer ahmed said...

See who owns blogspot.com or any other website.