அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?

28-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அது 1982-ம் வருடம். திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு பகல் பொழுதில் வகுப்பறைக்குள் நுழைந்த அலுவலக பியூனிடம் இருந்து வாங்கிய நோட்டை பார்த்துவிட்டு எனது அறிவியல் ஆசிரியர் அமல்ராஜ் இப்படி கூறினார்.. “அடுத்த வாரம் 'காந்தி' படத்துக்கு உங்களையெல்லாம் கூட்டிட்டுப் போறாங்கப்பா.. டிக்கெட் 1 ரூபாதான்.. கண்டிப்பா எல்லாரும் வந்தாகணுமாம்..” என்று சொல்லி முடிப்பதற்குள் வகுப்பறைக்குள் டெஸ்க்குகள் உடைந்துவிடுவதைப் போன்ற தட்டல்களுடன், சந்தோஷக் கூச்சல்கள். மறக்க முடியவில்லை அந்த உற்சாகத்தை..!

அதேபோல் ஒரு மதியப் பொழுதில் எனது பள்ளிக்கு எதிர் தெருவில் இருந்த 'சோலைஹால்' தியேட்டருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் வரிசையாக அணிவகுத்து சென்று அந்தப் படத்தை பார்த்தது இன்றைக்கும் நினைவுக்கு இருக்கிறது..

'தேசத் தந்தை'யின் இந்த வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களும் நிச்சயம் பார்த்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பார்க்க வைத்த அந்தப் புண்ணியவான் யாரோ.. அவருக்கு எனது முத்தங்கள். நன்றிகள்..!

அதுவெல்லாம் அந்தக் காலம் என்று கண்களில் ஏக்கத்தை வைத்துக் கொண்டு தொண்டையில் சொற்கள் சிக்கிக் கொண்டு பேச முடியாமல் தவி்த்தபடியே இப்போது சொல்கிறார்கள் 'பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர்' திரைப்படத்தை வெளியிடவே முடியவில்லையென்று..!




காந்திக்கு, அம்பேத்கர் எந்தவிதத்தில் குறைந்தவர் என்று எனக்குத் தெரியவில்லை. காந்தி இந்தியாவின் பெருவாரியான மக்களால் விரும்பப்பட்டவராக இருக்கலாம். 'தேசத் தந்தை' பட்டத்துக்கு உரியவராக இருக்கலாம். ஆனால் அதே சமயம் அம்பேத்கரும் தனது இறுதிக் காலம் வரையிலும் இந்த நாட்டுக்காகத்தான் உழைத்தார். அவரைத் தெய்வமாகத் தொழுத மக்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் இன்றளவும் அவர்தான் தந்தை.

சுதந்திரப் போராட்ட தளகர்த்தர்களில் ஒருவர். சாதிய, சமய முரண்பாடுகளின் மூட்டையாகத் திகழும் இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்த புண்ணியவான்.. எல்லாம் தலையெழுத்து என்று சொல்லி ஒதுங்கிப் போகாமல், முடிந்தால் அசுத்தமான சேரியையும், சுத்தமான அக்ரஹாரமாக்கலாம் என்று முனைந்தவர்.

சுதந்திர இந்தியாவுக்கு அடிப்படைத் தேவையான அரசியல் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர்.. சட்ட மாமேதை என்று இன்றைக்கும் சட்ட வல்லுநர்களால் ஆச்சரியத்துடனும், பிரமிப்புடனும் பார்க்கக் கூடியவர்.. இவரது வாழ்க்கை வரலாறு இந்தியாவின் குடிமகன்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய, அறிய வேண்டிய விஷயம். ஆனால் ஏன் முடியவில்லை..?

NFDC என்றழைக்கப்படும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகமும், மகாராஷ்டிரா அரசும், மத்திய அரசின் சமூக நீதித்துறையும் இணைந்துதான் இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

கடந்த 1991-ம் ஆண்டே மகாராஷ்டிர அரசு இந்தப் படத்தின் தயாரிப்புக்காக 7.7 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. படத்தில் நம்முடைய மெகா ஸ்டார் மம்முட்டிதான அம்பேத்கராக வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஜாபர் பட்டேல் இயக்கம் செய்திருக்கிறார். ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பிடித்து மேக்கப் டெஸ்ட் வைத்து, சோதனை செய்து பார்த்துவிட்டு கடைசியாகத்தான் பொருத்தமான நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற 9 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட இந்தப் படத்தின் ஆங்கிலப் பதிப்பு, 1999-ம் வருடம் வெளியாகியுள்ளது. ஹிந்தி பதிப்பு 2000-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி வெளியானது.

மிகத் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட சிறந்த படமாக பத்திரிக்கைகள் இத்திரைப்படத்தைக் கொண்டாடியிருக்கின்றன. இதனால் அந்த ஆண்டுக்கான  சிறந்த  படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. மம்முட்டி இந்தப் படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்றாவது முறையாகப் பெற்றிருக்கிறார்.

இதற்குப் பின் மராத்தி மொழியிலும், பிற சில மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு மகாராஷ்டிராவிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.. அத்தோடு இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்ற நல்ல கொள்கையுடன் அதற்கான நிதியுதவிகூட மத்திய அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் தகவல்கூட வெளியில் தெரியாமல் போனதுதான் நமது அரசியல் நிர்வாகத்தின் லட்சணம்.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் இத்திரைப்படத்தை தமிழில் வெளியிடுவதற்காக முனைந்தபோது மம்முட்டி நடித்திருக்கிறார் என்பதால் ஒரு சாதாரணமான திரைப்படம் போலவே வெளியிட முயற்சி எடுத்திருக்கிறது.

இதனால் முன்னாடியே போய் வாங்கிவிடுவோம் என்ற சினிமா வியாபார தந்திரத்தின் அடிப்படையில் 'ஆஸ்கர் பிலிம்ஸ்' ரவிச்சந்திரனின் சகோதரரான 'விஸ்வாஸ்' சுந்தர் 'அம்பேத்கர்' திரைப்படத்தை தமிழில் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். இது நடந்தது 2007-ம் ஆண்டு என்கிறார்கள்.

ஆனால் 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரையிலும் இத்திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட முயற்சிகள் செய்யாமல் அப்படியே வைத்திருந்தது ஏன் என்பது மத்திய அரசுக்கும், திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்குமே தெரிந்த ரகசியம்..!

திரைப்பட வளர்ச்சிக் கழகம் 3 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ்தான் 'விஸ்வாஸ்' சுந்தருக்கு அத்திரைப்படத்தை வழங்கியிருக்கிறது. அந்த ஒப்பந்தம் 2010 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறதாம். அதற்குள்ளாக அவர் படத்தினை அவரது சொந்த செலவில் டப்பிங் செய்து எத்தனை முறை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம். இதுதான் ஒப்பந்தம்.

ஆனால் படத்தினை வாங்கிய விஸ்வாஸ் சுந்தர் இத்திரைப்படத்தை வெளியிட இன்றுவரையிலும் முன் வரவில்லை. காரணம் ஏனென்று அப்போது தெரியவில்லை. கடைசியில்தான் தெரிந்தது. அவர் ஒரு ஆர்வத்தில்தான் அந்தப் படத்தினை வாங்கியிருக்கிறார் என்று.! ஆனால் தினம்தோறும்தான் நமது திரையுலக நடைமுறை வியாபாரங்கள் மாறிக் கொண்டேயிருப்பதால் இந்த நேரத்தில் அத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் திரையிட முடியாது என்கிற யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார்.

ஆனால் அம்பேத்கரின் சில தொண்டர்கள் சும்மா இருக்கவில்லை. பெரியார் திராவிடர் கழகத்தினர், வே.மதிமாறன் தலைமையிலான இயக்கம், ம.க.இ.க. இன்னும் பிற தோழமை இயக்கங்கள் எல்லாம் இது குறித்து கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தன.  நாள்தோறும் தனக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவுக்கு மட்டுமே செவி கொடுக்கும் நமது அன்பு முதல்வருக்கு இதெல்லாம் கேட்கவா போகிறது..?

'அம்பேத்கர் விருதை' மட்டும் ஆர்வத்துடன் ஓடோடிப் போய் வாங்கியவர் இத்திரைப்படம் பற்றிய செய்தியை மட்டும் கண்டும், காணாததுபோல் இருந்துவிட்டார். ஒருவேளை அம்பேத்கரின் பெயருக்கு தமிழ்நாட்டில் ஓட்டு வங்கி இல்லை என்று நினைத்துவிட்டாரோ என்னவோ..? தாத்தாவுக்குத்தான் இப்போது ஓட்டுக்களைத் தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது..!

இடையில் வே.மதிமாறன் தலைமையிலான இயக்கத்தவர்கள் திரைப்பட வளர்ச்சிக் கழகத்திடம் நேரில் சென்று இது குறித்து கேட்டபோது அவர்கள் விஸ்வாஸ் சுந்தரை கை காட்டியிருக்கிறார்கள். விஸ்வாஸ் சுந்தரிடம் அவர்கள் கேட்டபோது “வாங்கி வைச்சிருக்கிறவனுக்கு படத்தை வெளியிடத் தெரியாதா..? செய்வோம்..” என்று பட்டும் படாமல் சொல்லியிருக்கிறார்.

இது குறித்து பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்டவர்கள் சிலர் போராட்டத்தில் குதித்த பின்புதான் படத்தை வெளியிட முயற்சி செய்யும்படி திரைப்பட வளர்ச்சிக் கழகத்தினர், விஸ்வாஸ் சுந்தரை வற்புறுத்தியிருக்கின்றனர்.

தமிழகச் சட்டமன்றத்தில் உறுப்பினர் செல்வப்பெருந்தகை இத்திரைப்படம் பற்றி கேள்வி எழுப்பியபோது, "இத்திரைப்படத்தின் டப்பிங் செலவுக்காக பத்து லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியிருப்பதாக" பலத்த கை தட்டலுடன் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார் அமைச்சர் பரிதிஇளம்வழுதி.

  
"அதான் பத்து லட்சம் கொடுத்தாச்சே.. போய் டப்பிங் பண்ணிட்டு படத்தை ரிலீஸ் செஞ்சுக்குங்க.." என்று மறைமுகமாகச் சொல்லிவிட்டார் தாத்தா.. ஆனால் அது சாத்தியமா என்றாவது யோசித்திருக்க வேண்டாமா..? பாவம்.. அவருக்கே அடுத்த பாராட்டு விழா நடத்த ஆள் இல்லாத சோகம்..! என்ன செய்வது..? அவர் கவலை அவருக்கு..!

இந்த நிலையில் கடந்த மே மாதம் சத்தியசந்திரன் என்னும் வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் 'அம்பேத்கர்' திரைப்படத்தை தமிழகத்தில் விரைவில் வெளியிட வேண்டும் என்று கோரி மனு செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, ஆங்கிலத்தில் படமாக தயாரிக்கப்பட்டது. அதில், நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். ஜாபர் பட்டேல் இயக்கியுள்ளார். இந்தி, மராத்தி மற்றும் சில மாநில மொழிகளில் இப்படம், ‘டப்’ செய்யப்பட்டது. தமிழில் இப்படத்தை ‘டப்’ செய்ய, 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் நடவடிக்கை இல்லை. இந்த படத்தை தமிழில் வெளியிட, உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசுக்கும், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்துக்கும் மனு அனுப்பினேன். இதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, அம்பேத்கர் படத்தை தமிழில் வெளியிட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று குறிப்பிட்டிருந்தார்.

மனுவை அப்போதைய தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சசிதரன் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. விசாரணை முடிவில் தீர்ப்பாக, “படத்தின் வினியோக உரிமை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. தமிழக அரசிடம் வரிச் சலுகை பெறும் நடவடிக்கையில், வினியோகஸ்தர் ஈடுபட்டுள்ளார். வரிச் சலுகை பெற்ற உடனேயே, படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுமென திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் வக்கீல் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசு டப்பிங் செலவுகளுக்காக 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது என்றும், படம் விரைவில் வெளியாவதில், தமிழக அரசும் ஆர்வமாக உள்ளது என்றும், அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா தெரிவித்துள்ளார்.

எனவே, வரிச்சலுகை குறித்து இரண்டு வாரங்களில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். படத்தை எவ்வளவு விரைவில் வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவில் வெளியிட, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. எப்படியானாலும் இன்னும் நான்கு வாரங்களுக்குள் படத்தை வெளியிட வேண்டும்" என்று மே 15-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

அடுத்த ஒரு மாதத்திற்குள் படம் நிச்சயம் வெளியாகிவிடும் என்று அம்பேத்கர் பக்தர்களும், சினிமா ஆர்வலர்களும் ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால் படம் வெளியாகவில்லை. படம் வெளியாக சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த கெடு ஜூன் 16-ம் தேதி முடிவடைய இருந்தது.

அதற்குள்ளாக ஜூன் 7-ம் தேதியன்று  தமிழில் அம்பேத்கர் படத்தை வெளியிட, 90 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க தமிழக அரசு,  மற்றும் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் விநியோகஸ்தர் விஸ்வாஸ் சுந்தர்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “அம்பேத்கர் படத்தை ஆங்கிலத்தில் ஜபார் பட்டேல் என்பவர் இயக்கியுள்ளார். இதற்கு தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம், ஸ்பான்சர் செய்துள்ளது. 2000-ம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படத்தின் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் வினியோக உரிமை பெற, 2007-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டேன். வரும் 2010, செப்டம்பர் மாதம் அந்த உரிமை முடிகிறது. தமிழ் மொழியில் அம்பேத்கர் படத்தை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளேன். இதுவரை நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தப் படத்திற்காக 30 லட்சம் ரூபாய்வரை செலவு செய்துள்ளேன். பிரின்ட் செலவு, போஸ்டர், விளம்பரம் என, மேற்கொண்டு 90 லட்ச ரூபாய்வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தத் தொகையை அரசு வழங்கினால், படம் சுமுகமாக வெளியாகும். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட, வாழ்க்கையை தியாகம் செய்த அம்பேத்கர் பற்றிய திரைப்படத்தை பொதுமக்கள் பார்க்க முடியும். ஏற்கனவே, தனியார் ஒருவர் தயாரித்த பெரியார் படத்துக்காக தமிழக அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. எனவே, தமிழில் அம்பேத்கர் படத்தை வெளியிட ஏதுவாக 90 லட்ச ரூபாய் நிதி உதவியை வழங்க தமிழக அரசு, புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.”  என்று குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு நீதிபதி வெங்கட்ராமன் முன் விசாரணைக்கு வந்தது. தமிழகம், மற்றும் புதுவை அரசுகள் இந்த அளவுக்குப் பணம் தர முடியாது என்று சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆனாலும் எவ்வளவு தைரியம் பாருங்க இவருக்கு..? டப்பிங் செலவுக்கே பத்து லட்சம் ரூபாயை ஆட்டைய போட்ட இவருக்கு மேலும் 90 லட்சம் கொடுத்தால் படத்தை ரிலீஸ் செய்வாராம்..? எப்படி..?

மொதல்ல இந்தப் படத்துக்கு டப்பிங் செலவே அதிகப்பட்சம் 5 லட்சம்தான் செலவாகியிருக்கும். இதில் நிறைய கதாபாத்திரங்களும், பல்வேறு மொழி பேசுபவர்களும் இருப்பதால்தான் இந்தச் செலவு. இல்லையெனில் 2 லட்சத்திலேயே முடித்துவிடலாம். 

இவர் எவ்வளவு தொகைக்கு திரைப்பட வளர்ச்சிக் கழகத்திடம் இருந்து வாங்கினார் என்றே தெரியவில்லை. இதில் இப்போதைக்கு படத்தை சுமூகமாக வெளியிடணும்னா 90 லட்சம் கொடுன்னு கிட்டத்தட்ட மிரட்டல் பாணியில்தான் கேட்டிருக்கிறார். 'சுமூகமா வெளியிடணும்'ன்னா என்ன அர்த்தம்னு இவர்கிட்ட மறுபடியும் விளக்கம் கேட்க வேண்டும். படத்தி்ன் வசூலே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் 90 லட்சம் ரூபாயை கேட்டதே சுருட்டத்தான் என்பதை திரையுலகில் இருப்பவர்களே ஒத்துக் கொள்வார்கள். நல்லவேளை கொடுக்காதவரையிலும் சந்தோஷமே..!

அதே சமயத்தில் ஏற்கெனவே உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை மதிக்காமல் விநியோகஸ்தர் படத்தினை வெளியிட தாமதப்படுத்துகிறார் என்று கூறி வழக்கறிஞர் சத்தியசந்திரன் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்ததாக மீண்டும் முறையீடு செய்தார்.

இப்போது தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தினர் ஆஜராகி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். “படத்தின் பிரதிகள் சிதைந்திருப்பதால், மூலப் பிரதியைப் பெற்று அதனைச் சரி செய்ய வேண்டியுள்ளது. இதற்குச் சற்று கால அவகாசம் வேண்டும்..” என்றார்கள்.

இதற்கு ஒத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் இறுதியாக வரும் டிசம்பர் 3-ம் தேதியன்று அப்படத்தினை எப்படியும் வெளியிட்டாக வேண்டும் என்று இறுதி உத்தரவினை வெளியிட்டார்கள்.

இந்த நேரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் எடிட்டர் லெனின் அவர்களின் உதவியோடு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து படத்தினை வெளியிட பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

தமிழில் டப்பிங் செய்யப்பட்ட பிலிம் ரோல் பிரதிகளே 5-தான் உள்ளதாம்.  இப்போது பெரும்பாலான திரையரங்குகளில் கியூப் சிஸ்டம் கொண்டு வந்திருப்பதால் இதில் இருக்கும் டெக்னிக்கல் சிரமங்களையும் கவனிக்க வேண்டியிருப்பதாக திரைப்பட வளர்ச்சிக் கழகத்தினர் இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் பின்புதான் படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடந்துள்ளன. ஆனாலும்  ஊர், ஊருக்குத் திரையரங்குகள் கிடைப்பதில்  நடைமுறைச் சிக்கல்கள் முளைத்திருக்கின்றன.

முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு ஊர்களில் இருக்கும் திரையரங்குகளில் இப்படத்தைத் திரையிட வேண்டி அணுகியிருக்கிறார்கள். 

“இப்ப இதையெல்லாம் யார் ஸார் பார்க்கப் போறா.. விடுங்க ஸார். தியேட்டர் வாடகைகூட கிடைக்காது..” என்று வெளிப்படையாகவே தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இன்னும் சில திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது திரையரங்கை லீஸுக்கு விட்டுவிட்டதாகச் சொல்லி ஒப்பந்ததாரர்களைக் கை காட்டியிருக்கிறார்கள். ஒப்பந்ததாரர்களோ மறுபடியும் ஓனர்களையே கை காட்டியிருக்கிறார்கள்.. இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் தியேட்டர்கள் கிடைக்காது என்ற பதிலே கிடைத்திருக்கிறது.

டிசம்பர் 3-ம் தேதிக்கு நாள் நெருங்கிவிட்டதால் சென்னையில் திரையரங்குகள் கிடைக்காமல் அல்லல்பட்டு கடைசியாக தற்போது சென்னை ஐநாக்ஸ் காம்ப்ளக்ஸில் ஒரு அரங்கில் மட்டும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தினை டிசம்பர் 3-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு திரையிட ஏற்பாடு செய்துள்ளார்கள்.

தமிழகத்தில் 1800 திரையரங்கங்கள் நாள்தோறும் இயங்குகின்றன.  ஒரு வருடத்திற்கு சுமாராக 120 படங்கள் வெளியாகின்றன, 800 கோடிக்கும் குறையாமல் வர்த்தகமும் நடக்கிறது. ஆனாலும், இந்த இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கு வித்திட்ட, அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொடுத்தவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதென்ன கொடுமை..?

கடந்த சனிக்கிழமையன்று 4 பிரேம்ஸ் பிரிவியூ திரையரங்கில் பத்திரிகையாளர்களுக்காக அம்பேத்கர் திரைப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தினை தமிழகத்து மக்களிடத்தில் எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்.

இக்கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். கூட்டத்தில் பேசிய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், படத்தினை வெளியிட வேண்டி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். மேற்கொண்டும் என்ன செய்யலாம் என்பது பற்றிய ஆலோசனைகளை கூறுமாறு வந்திருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் எடிட்டர் லெனின்  பேசும்போது தான் திரைப்பட சங்கங்கள், பிரமுகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பற்றிய செய்திகளைக் கொண்டு செல்வதாகக் கூறினார். அடுத்த வாரம் முழுவதும் திரைப்படவுலகத்தில் இதனை பரப்புவதற்கு தான் ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.

பின்பு திரைப்பட இயக்குநர் மீரா கதிரவன், வழக்கறிஞர் சத்தியசந்திரன், நமது சக வலைப்பதிவர் கார்ட்டூனிஸ்ட் பாலா, மேலும் பல அம்பேத்கர் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் பேசினார்கள். ஆலோசனைகளையும் வழங்கினார்கள். தொலைக்காட்சி மூலமாக நாம் பரப்புரை செய்ய வேண்டும். இப்படியொரு திரைப்படம் வெளியாவதை நாம் மக்களிடத்தில் கொண்டு போக வேண்டும் என்றே பலரும் தெரிவித்தார்கள்.

ஒரு கட்டத்தில் மீண்டும் எழுந்து வந்து மைக்கை பிடித்த லெனில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். “ஒரு பிரதி 5 லட்சமோ, 6 லட்சமோ.. நாம கேட்டு வாங்கிருவோம். நானே என் சொந்தச் செலவுல வாங்கித் தரேன்.. ஊர், ஊருக்குக் கிடைக்கிற தியேட்டர்ல போடுவோம்.. வர்ற மக்கள்கிட்ட ஒரு ரூபா வாங்குவோம்.. அது போதும்.. தியேட்டர் கிடைக்கலைன்னா என்ன கல்யாண மண்டபம் கிடைத்தால்கூட போதும். அங்கேயே ஸ்கிரீனை கட்டி போட்டுக் காட்டுவோம்..” என்று கொந்தளித்தார்.

உண்மையாகவே லெனின் ஸாரின் இந்தச் செயலுக்கு நாம் மண்டி போட்டுத்தான் வணங்க வேண்டும். அப்படியே வணங்குகிறேன்..!

இக்கூட்ட இறுதியில் மாணவர்கள் மத்தியில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு செல்லும் விதத்தில் இத்திரைப்படத்தினை தமிழகம் முழுவதும் அரசே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகத் திரையிட வேண்டும் என்று கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது..!

காந்தி திரைப்படம் வெளிவந்தபோது அப்போது படித்துக் கொண்டிருந்த 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலுமான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கட்டாயமாக பார்க்க வைக்கப்பட்டது போல்  இந்த அம்பேத்கர் படத்தினை இப்போதைய மாணவர்கள் மத்தியில் கொண்டு போக இந்த மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கு ஏன் தோணவில்லை..?

வெறுமனே 10 லட்சம் ரூபாயை மட்டும் தந்துவிட்டு ஒதுங்கிவிட்டால் போதுமா..? பெரியார் படத்திற்கு மட்டும் 92 லட்சம் ரூபாயை தூக்கிக் கொடுத்து, படம் வெளியிடுவதற்கான அனைத்து வசதி, வாய்ப்புகளையும் செய்து கொடுத்த இந்த மைனாரிட்டி தி.மு.க. அரசு, அம்பேத்கரை மட்டும் திரும்பிப் பார்க்க மறுப்பது ஏன்..? அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..? இத்தனைக்கும் அம்பேத்கரின் பிறந்த நாளைக்கு மாலை போட மட்டும் தாத்தா மறப்பதில்லை.

காந்தி திரைப்படத்தினை வெளியிட்டதுபோல இந்தத் திரைப்படத்தினையும் மொத்தமாக தமிழக அரசே வாங்கிக் கொண்டு தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யலாமே..?

ஊர், ஊருக்கு ஏதாவது ஒரு திரையரங்கை வாடகைக்கு எடுத்து அங்கே படத்தினை சலுகை விலையில் முழு வரிச்சலுகையுடன் வெளியிடலாமே..? மாணவர்களை அழைத்து வந்து காண்பிக்கலாமே..? தமிழக அரசுக்கு இந்த யோசனை ஏன் வரவில்லை..? அரசு ஒரு உத்தரவிட்டால் உடனேயே செய்துவிடலாமே..? ஏன் இந்த எண்ணம் இந்த மைனாரிட்டி அரசுக்கு உதிக்கவில்லை. பாபாசாகேப் அம்பேத்கர் மைனாரிட்டி மக்களின் தலைவனாகவும், தந்தையாகவும், காவலனாகவும் இருப்பதுதான் இந்த மைனாரிட்டி அரசுக்கு உறுத்தலாக இருக்கிறதோ என்னவோ?

இன்னும் வெளியாகாத ராடியாவின் டேப்பில் குடும்ப ரகசியங்கள் இன்னும் என்னென்ன புதைந்து கிடக்கிறதோ என்கிற குழப்பத்தில் தாத்தா இருக்கலாம். பிள்ளைகள் இருக்கலாம். இவர்களுடைய மதி கெட்ட மந்திரிகளும் இருக்கலாம்.. ஆனால் அம்பேத்கர் பெயரையும், புகைப்படத்தையும் வைத்துக் கொண்டு தமிழகத்தில் அரசியல் நடத்தி வரும் பெரிய இயக்கத்தினர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் எனக்குப் புரியவில்லை.

சென்னை, அண்ணா சாலையில் காலை 8 மணி முதல் மாலை 8 மணிவரையிலும் ஒரு ஓரமாக சேர் போட்டு உட்கார்ந்து போகும், வரும் டாடா சுமோ கார்களைப் பாருங்கள். அதன் முன், பின் பக்கக் கண்ணாடிகளில் எந்தத் தலைவரின் புகைப்படம் அதிகமாக ஒட்டப்பட்டிருக்கிறது என்று.. நிச்சயம் அம்பேத்கர்தான்.. ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிடத்தான் அத்தனை அமைப்புகளுக்கும் அக்கறையில்லை..!

இப்போது இருக்கின்ற குறைவான நாள் இடைவெளியில் எப்படி இந்தப் படத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டு கூட்டத்தைக் கூட்டி படத்தைப் பார்க்க வைப்பது.? இது நாம் மட்டுமே பார்க்கக் கூடியது அல்ல.. நிச்சயம் மாணவ சமுதாயத்தினர் அவசியம் பார்க்க வேண்டிய படம். அதற்கான முயற்சிகளைக்கூட இந்த அம்பேத்கர் படத்தை வைத்து புரட்சி அரசியல் பேசும் சில புண்ணாக்குகள் செய்ய முன் வரவில்லை என்பது வெட்கக்கேடானது..

சோனியாகாந்தி தன்னைத் தவறாக நினைத்துவிடப் போகிறார் என்பதற்காக டெல்லிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுக் காத்திருந்த திருமாவளவனுக்கு இனி அம்பேத்கர் தேவையில்லை என்று நினைக்கிறேன்.. ஆளும் தரப்புடன் கூட்டணியில் இருப்பது தனக்கும், தன் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே என்று நினைத்துவிட்டார் போலும்..

அவர் நினைத்திருந்தால்கூட இதனைச் செய்திருக்கலாம். அரசுகளை கட்டாயப்படுத்தி, நிர்ப்பந்தப்படுத்தி பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக மாணவர்கள் மத்தியில் இத்திரைப்படத்தினை கொண்டு சென்றிருக்கலாம்.. ம்ஹூம்.. என்ன செய்வது..? நமக்கு வாய்த்த தலைவர்கள் சொந்தக் காரணங்களுக்காக அரசியல் செய்பவர்களாக வந்து தொலைத்திருப்பதால் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..!

டிசம்பர் 3-ம் தேதி சென்னையில் மட்டும்தான் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது. அது சமயம் அன்றைக்கு திருவிழா போல் கூட்டத்துடன் படப் பெட்டியை ஊர்வலமாகக் கொண்டு சென்று தாரை, தப்பட்டை முழங்க ஒடுக்கப்பட்ட மக்களின் தந்தையாகத் திகழும் அம்பேத்கருக்கு நன்றி செலுத்தவிருப்பதாக கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் தெரிவித்தார்கள்.

இதுவும் இத்திரைப்படத்தின் விளம்பரத்திற்கு பேருதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயம் தவறுமில்லை. யார், யாருடைய கட்அவுட்டுக்கோ பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்யும் மூடத்தனமான ரசிகர்கள் மத்தியில் நாட்டுக்காக உழைத்த உத்தமர் ஒருவருக்கு இதுகூட செய்யவில்லையென்றால் எப்படி..?

நான் கொஞ்சம் அரசியல் ஆர்வலன்.. நிறைய சினிமா ஆர்வலன். உங்களுக்கே தெரியும். அந்த வகையில் ஒரு சினிமா ரசிகனாக மம்மூக்காவின் நடிப்பைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன். அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கை என்ன என்பதை அரசியல் ஆர்வலனாக அறிந்து கொள்ளவும் துடித்துக் கொண்டிருக்கிறேன்.

படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது என்கிறார்கள். இதனால் ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் நேரம் தெரியவில்லை. இது பற்றி இணையத்தள வசதியுள்ளவர்கள் அன்றைக்கு இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்..

நமது வலையுலகப் பதிவர்கள் அத்தனை பேரும் தயவு செய்து  இத்திரைப்படத்தினை கண்டுகளித்து இது பற்றிய விமர்சனங்களையும், செய்திகளையும் வெளியிட்டு இந்த நாட்டுக்கும், அரசியல் சட்ட மாமேதையான நமது அம்பேத்கருக்கும் நம்மால் நம் வாழ்க்கையில் முடிந்த ஒரேயொரு உதவியாக இதைச் செய்ய வேண்டுமாய் அன்போடு வேண்டிக் கொள்கிறேன்..!

இப்படத்தினை வெளியிட காரணமாகவும், ஊக்கமாகவும் இப்போதும் இருந்து வரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், வே.மதிமாறன் தலைமையிலான இயக்கத்தினருக்கும், பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும், ம.க.இ.கழகத்தினருக்கும், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கும், வழக்கறிஞர் சத்தியசந்திரனுக்கும், எடிட்டர் லெனினுக்கும், இன்ன பிற பெயர் தெரியாத அம்பேத்கர் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றி..!

படத்தில் நடித்துள்ளவர்கள் :

Mammootty - Dr. Babasaheb Ambedkar

Sonali Kulkarni  - Ramabai Ambedkar

Mohan Gokhale - Mahatma Gandhi

Mrinal Kulkarni  - Dr. Kabir

Ma Jivan Mary - Rosa Epstein

Tirlok Malik - Lala Lajpatrai

Alisa Bosschaert

Govind Namdeo

Anjaan Srivastav

Rahul Solapurkar

Stacie Kellie  - Patron

Crew Members

Director : Jabbar Patel

Producer : Madan Ratnaparkhi

Written by : Daya Pawar, Arun Sadhu , Sooni Taraporevala

CINEMATOGRAPHER : Ashok Mehta

MUSIC_DIRECTOR : Amar Haldipur

Film Editing by : Vijay Khochikar

Set Decoration by : Sophie Newman

Art Direction by : Nitin Desai

Makeup Department : Vikram Gailkwad

Costume Design by : Bhanu Athaiya

Sound Department : Pramod Purandare

Other crew : Shyam Benegal , Dr. Y.D. Phadke

படத்தின் டிரெய்லர்


69 comments:

Prabu M said...

விஸ்வாஸ் சுந்தர்தான் இந்தக் கதையில் ஒரிஜினல் வில்லன்...
இதெல்லாம் ரொம்ப ஓவராத்தான் இருக்கு... இவரு விநியோக உரிமையை வாங்கினதுக்கு அரசாங்கம் எதுக்கு ஒரு கோடி (90+10) தரணுமாம்??

ஏதேதோ அரசியல்... லெனின் தன்னுடைய சொந்த செலவில் வெளியிட முன்வந்தது துணிச்சல்....
திருமண மண்டபங்களில் வெளியிடுவது தியேட்டர்காரர்களுக்கும் பாடம் புகட்டுவதாக இருக்கும்...
அரசியல் திரைப்படங்கள் வெளிவருவதில் திரைப்பட அரசியல்கள் எவ்ளோ இருக்குது நம்ம நாட்டுல!!!

மாணவன் said...

//அம்பேத்கர் எந்தவிதத்தில் குறைந்தவர் என்று எனக்குத் தெரியவில்லை. காந்தி இந்தியாவின் பெருவாரியான மக்களால் விரும்பப்பட்டவராக இருக்கலாம். 'தேசத் தந்தை' பட்டத்துக்கு உரியவராக இருக்கலாம். ஆனால் அதே சமயம் அம்பேத்கரும் தனது இறுதிக் காலம் வரையிலும் இந்த நாட்டுக்காகத்தான் உழைத்தார். அவரைத் தெய்வமாகத் தொழுத மக்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் இன்றளவும் அவர்தான் தந்தை.//

முற்றிலும் உண்மை சார்,

உங்கள் கருத்துக்களை தெளிவான பார்வையுடன் பதிவு செய்துள்ளீர்கள் அருமை...

தொடரட்டும் பணி

சூனிய விகடன் said...

சுமோவில் அம்பேத்கார் படமெல்லாம் இன்னிக்கு தேதியில ஹாட்டான பிசினஸ் நண்பரே.....தேவை ஒரு ஊதா கலர் துண்டு......முருகேசன், சுப்பிரமணி என்கிற பெயரை எல்லாம் இளஞ்சூரியன், பொதிகை எழில் என்று மாற்றிக்கொள்ள வேண்டியது......அடுத்தது சுமோ ...ஸ்கார்ப்பியோ புக் செய்தால் ...எல்லாம் ரெடி.......இதை வைத்துக்கொண்டு அம்பேத்கார் செல்வாக்கை எடை போடாதீர்கள்.....இன்றைய தேதியில் அம்பேத்கார் செல்வாக்கு கட்டப்பஞ்சாயத்து பண்ணவும் ஊருக்குள் யாரை வேண்டுமானாலும் மிரட்டிக்கொண்டு கோயில் காளை போல் திரியவும் தான் பயன்படுகிறது ..

a said...

மிக அருமையான பதிவு......... இப்படத்தை பற்றி வளையுலகுக்கு நீங்கள் எடுத்து சொன்ன விதம் அருமை.........

pichaikaaran said...

அம்பேத்கார் அனைவருக்கும் பொதுவான தலைவர்...

அவரை தமக்கு மட்டும் தலைவராக சிலர் முன் நிறுத்துவது ஏற்படுத்தும் விளைவுகளும் சிந்திக்கதக்கது...

ஜோ/Joe said...

அண்ணே, வழக்கமான அதீத கலைஞர் குறை சொல்லும் படலத்தை தாண்டி அருமையான பதிவு .ஆதரிக்க வேண்டிய படம் . சிங்கப்பூர் போன்ற இடங்களில் வெளியாகுமா தெரியவில்லை ..குறைந்தபட்சம் டிவிடி வரும் போது வாங்கியாவது ஆதரிப்பேன்.

எஸ்.கே said...

கருத்துக்களை தெளிவாக புரிதலுடன் எழுதியுள்ளீர்கள் அருமை!

உண்மைத்தமிழன் said...

[[[பிரபு . எம் said...

விஸ்வாஸ் சுந்தர்தான் இந்தக் கதையில் ஒரிஜினல் வில்லன்...
இதெல்லாம் ரொம்ப ஓவராத்தான் இருக்கு... இவரு விநியோக உரிமையை வாங்கினதுக்கு அரசாங்கம் எதுக்கு ஒரு கோடி (90+10) தரணுமாம்??]]]

இவரிடம் கொடுத்ததற்குப் பதிலாக அரசே இவரிடமிருந்து வாங்கி தன் சொந்த செலவில் வெளியிட வேண்டும். இது மத்திய, மாநில அரசுகளின் கடமையும்கூட..!

[[[ஏதேதோ அரசியல்... லெனின் தன்னுடைய சொந்த செலவில் வெளியிட முன்வந்தது துணிச்சல்....
திருமண மண்டபங்களில் வெளியிடுவது தியேட்டர்காரர்களுக்கும் பாடம் புகட்டுவதாக இருக்கும்...]]]

அதெல்லாம் எங்க அவங்களுக்குப் புரியப் போகுது.. கண்டுக்காமத்தான் இருப்பாங்க..!

செங்கோவி said...

அண்ணே, ரொம்ப தைரியமா எழுதுறீங்க..உடம்பைப் பார்துக்கோங்க!
--- செங்கோவி

உண்மைத்தமிழன் said...

[[[மாணவன் said...

//அம்பேத்கர் எந்தவிதத்தில் குறைந்தவர் என்று எனக்குத் தெரியவில்லை. காந்தி இந்தியாவின் பெருவாரியான மக்களால் விரும்பப்பட்டவராக இருக்கலாம். 'தேசத் தந்தை' பட்டத்துக்கு உரியவராக இருக்கலாம். ஆனால் அதே சமயம் அம்பேத்கரும் தனது இறுதிக் காலம் வரையிலும் இந்த நாட்டுக்காகத்தான் உழைத்தார். அவரைத் தெய்வமாகத் தொழுத மக்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் இன்றளவும் அவர்தான் தந்தை.//

முற்றிலும் உண்மை சார். உங்கள் கருத்துக்களை தெளிவான பார்வையுடன் பதிவு செய்துள்ளீர்கள் அருமை...
தொடரட்டும் பணி]]]

நன்றி மாணவன் ஸார்..!

KANA VARO said...

யோசிக்க வேண்டிய விடயம் தான். பகிர்வுக்கு நன்றி

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...

சுமோவில் அம்பேத்கார் படமெல்லாம் இன்னிக்கு தேதியில ஹாட்டான பிசினஸ் நண்பரே. தேவை ஒரு ஊதா கலர் துண்டு. முருகேசன், சுப்பிரமணி என்கிற பெயரை எல்லாம் இளஞ்சூரியன், பொதிகை எழில் என்று மாற்றிக் கொள்ள வேண்டியது. அடுத்தது சுமோ ஸ்கார்ப்பியோ புக் செய்தால் எல்லாம் ரெடி. இதை வைத்துக் கொண்டு அம்பேத்கார் செல்வாக்கை எடை போடாதீர்கள். இன்றைய தேதியில் அம்பேத்கார் செல்வாக்கு கட்டப் பஞ்சாயத்து பண்ணவும் ஊருக்குள் யாரை வேண்டுமானாலும் மிரட்டிக் கொண்டு கோயில் காளை போல் திரியவும்தான் பயன்படுகிறது.]]]

ஒரு பக்கம் பார்த்தால் நீங்கள் சொல்வதுதான் சரி என்றும் படுகிறது..! இப்போதெல்லாம் அரசியலுக்கு வருவதற்கான முக்கியக் காரணமே பணம் சம்பாதித்தல்தானே..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
மிக அருமையான பதிவு......... இப்படத்தை பற்றி வளையுலகுக்கு நீங்கள் எடுத்து சொன்ன விதம் அருமை.]]]

தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி யோகேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
அம்பேத்கார் அனைவருக்கும் பொதுவான தலைவர். அவரை தமக்கு மட்டும் தலைவராக சிலர் முன் நிறுத்துவது ஏற்படுத்தும் விளைவுகளும் சிந்திக்கதக்கது.]]]

அப்பபடி அம்பேத்கரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்களும் இன்றைக்கு அமைதியாக இருக்கிறார்களே எனபதுதான் வருந்தத்தக்கது..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோ/Joe said...
அண்ணே, வழக்கமான அதீத கலைஞர் குறை சொல்லும் படலத்தை தாண்டி அருமையான பதிவு. ஆதரிக்க வேண்டிய படம். சிங்கப்பூர் போன்ற இடங்களில் வெளியாகுமா தெரியவில்லை. குறைந்தபட்சம் டிவிடி வரும்போது வாங்கியாவது ஆதரிப்பேன்.]]]

ஜோ.. கலைஞரை குறை சொல்லாமல் யாரைக் குறை சொல்ல முடியும் சொல்லுங்கள்.. அவர் நினைத்தால் காந்தி படம் போல இதை மாணவர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க முடியுமா? முடியாதா..? யோசித்துச் சொல்லுங்கள்..

கலைஞரைத் திட்டுவதுதான் எங்களுடைய ஹாபி என்றோ தினப்படியான வேலை என்றோ கருத வேண்டாம். பெரியார் படத்திற்கு 92 லட்சம் ரூபாய் கொடுத்து படத்தைத் திரையிட வேண்டிய தியேட்டர்களையும் பார்த்துக் கொடுத்ததும் அரசுதான்..! அதற்கான விளம்பரங்களை வழங்கியதும் இந்த அரசுதான்.

ஏன் அம்பேத்கருக்கு இவர்கள் செய்யக் கூடாது..?

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
கருத்துக்களை தெளிவாக புரிதலுடன் எழுதியுள்ளீர்கள் அருமை!]]]

மிக்க நன்றிகள் ஸார்..!

அஞ்சா சிங்கம் said...

சூனிய விகடன் said...

சுமோவில் அம்பேத்கார் படமெல்லாம் இன்னிக்கு தேதியில ஹாட்டான பிசினஸ் நண்பரே.....தேவை ஒரு ஊதா கலர் துண்டு......முருகேசன், சுப்பிரமணி என்கிற பெயரை எல்லாம் இளஞ்சூரியன், பொதிகை எழில் என்று மாற்றிக்கொள்ள வேண்டியது......அடுத்தது சுமோ ...ஸ்கார்ப்பியோ புக் செய்தால் ...எல்லாம் ரெடி.......இதை வைத்துக்கொண்டு அம்பேத்கார் செல்வாக்கை எடை போடாதீர்கள்.....இன்றைய தேதியில் அம்பேத்கார் செல்வாக்கு கட்டப்பஞ்சாயத்து பண்ணவும் ஊருக்குள் யாரை வேண்டுமானாலும் மிரட்டிக்கொண்டு கோயில் காளை போல் திரியவும் தான் பயன்படுகிறது ./////

சத்தியமான உண்மை

tsekar said...

உங்கள் கட்டுரை அருமை .

ஒரு சின்ன திருத்தம்

அம்பேத்கர்-Date of death: 6 December 1956

இது குறித்து நான் RTI-ல் -NFDC என்றழைக்கப்படும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திடம் தகவல் கேட்டேன்,ஆனால் பெரும்பாலான என்னுடைய கேள்விக்கு தகவல் தர மறுத்து விட்டார்கள்!.

//அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொடுத்தவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை//

திரைப்படம் வராமல் தடுக்கும் -சுயநல ,ஆதிக்க -சக்திகளை நினைத்தால் - கோபமும் ,கவலையும் -நமக்கு-இருந்தாலும் ,

அதை குறித்து நாம் அதிகம் கவலைப்பட தேவையில்லை !!இன்றைய தகவல்நுட்ப காலத்தில்,நாம் CD/DVD உரிமையை பெற்று -மிக மலிவான விலைக்கு RS-10/-நாம் தர முயற்சி செய்யலாம்.
சன் டிவி- ஜெயா -டிவி ,தமிழன் டிவி .டி .டி -இல் ஒளிபரபலாம் -அது மக்களை முழுமையாக சென்றடையும்

T SEKAR
Dahrmapuri

Thomas Ruban said...

//சுமோவில் அம்பேத்கார் படமெல்லாம் இன்னிக்கு தேதியில ஹாட்டான பிசினஸ் நண்பரே.....தேவை ஒரு ஊதா கலர் துண்டு......முருகேசன், சுப்பிரமணி என்கிற பெயரை எல்லாம் இளஞ்சூரியன், பொதிகை எழில் என்று மாற்றிக்கொள்ள வேண்டியது......அடுத்தது சுமோ ...ஸ்கார்ப்பியோ புக் செய்தால் ...எல்லாம் ரெடி.......இதை வைத்துக்கொண்டு அம்பேத்கார் செல்வாக்கை எடை போடாதீர்கள்.....இன்றைய தேதியில் அம்பேத்கார் செல்வாக்கு கட்டப்பஞ்சாயத்து பண்ணவும் ஊருக்குள் யாரை வேண்டுமானாலும் மிரட்டிக்கொண்டு கோயில் காளை போல் திரியவும் தான் பயன்படுகிறது//

நூறு சதவிகிதம் உண்மை. இங்கும் இதுதான் நடக்கிறது.

அம்பேத்கர் பெயரை சொல்லி கட்சி நடுத்தும் திருமாவளவனின் முகமூடியை கிழித்த, உண்மைத் தமிழன் அண்ணனுக்கு வாழ்த்துகள் நன்றி.

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
அண்ணே, ரொம்ப தைரியமா எழுதுறீங்க. உடம்பைப் பார்துக்கோங்க!

--- செங்கோவி]]]

விசாரிப்புக்கும், அக்கறைக்கும் நன்றி செங்கோவி..

இதிலென்ன தைரியம் வேண்டிக் கிடக்கு..? எல்லாரும்தான் எழுதுறாங்க.. அதே மாதிரிதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[KANA VARO said...
யோசிக்க வேண்டிய விடயம்தான். பகிர்வுக்கு நன்றி.]]]

இதுக்கெதுக்கு நன்றி.. லெனில் ஸாருக்கும், போராட்டம் நடத்தியவர்களுக்கும் சொல்லுங்கள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[வழக்கறிஞர் சுந்தரராஜன் said...
:)]]]

என்னது இது..? பி்ன்னூட்டமா..? ஒரு வரி எழுதக் கூட நேரமில்லீங்களா ஸாருக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[மண்டையன் said...

சூனிய விகடன் said...
சுமோவில் அம்பேத்கார் படமெல்லாம் இன்னிக்கு தேதியில ஹாட்டான பிசினஸ் நண்பரே. தேவை ஒரு ஊதா கலர் துண்டு. முருகேசன், சுப்பிரமணி என்கிற பெயரை எல்லாம் இளஞ்சூரியன், பொதிகை எழில் என்று மாற்றிக் கொள்ள வேண்டியது. அடுத்தது சுமோ. ஸ்கார்ப்பியோ புக் செய்தால். எல்லாம் ரெடி. இதை வைத்துக் கொண்டு அம்பேத்கார் செல்வாக்கை எடை போடாதீர்கள். இன்றைய தேதியில் அம்பேத்கார் செல்வாக்கு கட்டப்பஞ்சாயத்து பண்ணவும் ஊருக்குள் யாரை வேண்டுமானாலும் மிரட்டிக்கொண்டு கோயில் காளை போல் திரியவும்தான் பயன்படுகிறது.//

சத்தியமான உண்மை]]]

வருகைக்கு நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[rouse said...

உங்கள் கட்டுரை அருமை. ஒரு சின்ன திருத்தம். அம்பேத்கர்-Date of death: 6 December 1956..]]

நன்றி நண்பரே.. நானும் சரி பார்க்காமல் தவறு செய்து விட்டேன்..! இப்போது திருத்திவிட்டேன்..!

[[[இது குறித்து நான் RTI-ல் -NFDC என்றழைக்கப்படும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திடம் தகவல் கேட்டேன். ஆனால் பெரும்பாலான என்னுடைய கேள்விக்கு தகவல் தர மறுத்து விட்டார்கள்!.]]]

இதுதான் அரசமைப்பு லட்சணம்..!

[[[//அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொடுத்தவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை//

திரைப்படம் வராமல் தடுக்கும் -சுயநல, ஆதிக்க -சக்திகளை நினைத்தால் - கோபமும், கவலையும்-நமக்கு-இருந்தாலும்,
அதை குறித்து நாம் அதிகம் கவலைப்பட தேவையில்லை!! இன்றைய தகவல் நுட்ப காலத்தில், நாம் CD/DVD உரிமையை பெற்று - மிக மலிவான விலைக்கு RS-10/-நாம் தர முயற்சி செய்யலாம்.]]]

இது பற்றியும் பேசியிருக்கிறார்கள். டிவிடி உரிமையை வாங்கினால் அதன் பின்பு இலவசமாகவே மக்களுக்கு டிவிடிகளை வழங்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

[[[சன் டிவி-ஜெயா டிவி, தமிழன் டிவி டி.டி-இல் ஒளிபரபலாம் -அது மக்களை முழுமையாக சென்றடையும்.
T SEKAR
Dahrmapuri]]]

இது குறித்து படத்தை வெளியிட்டுள்ள என்.எஃப்.டி.சி.தான் முடிவு செய்ய வேண்டும்..! நாம் ஆலோசனைதான் செய்ய முடியும். நாமளே செய்ய முடியாதே..!

அப்ரகாம் said...

அம்பேட்கர் படத்தை 10 ஆண்டுகள் கழித்தும் அதை வெளியிட விரும்பாத நிலையில் இருக்கும் தமிழக திராவிட கட்சிகளின் ளைப் பற்றி பேசுவதற்க்கு ஒன்றுமில்லை, இந்த அரசியல் வியாபாரிகளுக்கு அம்பேட்கர் என்றுமே பாகர்காய்தான். இன்நிலையில் தமிழக செய்தி ஒளிபரப்புத் துறையையும் கவணிப்பது ஓர் தலிதுதான். அம்பேட்கரை ஏற்றுக்கொள்ள இங்குள்ள சுயமரியாதை சிப்பாய்களுக்கு ஏன் இன்னும் மனது வரவில்லை ?

Siva said...

அருமையான கட்டுரை. படித்து முடித்ததும் என்னையும் அறியாமல் கண்களில் நீர்.

உண்மையான மகாத்மா யார் என்பதை உலகம் உணர முடியாத அளவு, ஆடம்பர விழாக்களில் காந்தி மிளிர, இந்த மனிதர் மட்டும் இரும்பு வேலிக்குள் சிலைகளாய், முரட்டுத்தனத்தின் குறியீடாய் மாற்றப்பட்டிருக்கிறார் அதிகார வர்க்கங்களால்.

காந்தியை சரியான பார்வையில் பார்த்த ஒரே அறிஞர் அண்ணல் அம்பேத்கராகத்தான் இருக்கும்.

புரட்சியாளர்களுக்கு எப்போதும் இந்த நிலைதானா... திருந்தவே மாட்டார்களா இந்த நாடும் மக்களும்.

-சிவா

tsekar said...

ஐநாக்ஸ் திரையரங்கின் இனையதலத்தில்-http://www.inoxmovies.com/இதை பற்றி -எந்த தகவலூம் இல்லை

தொலைபேசி வழியாக -டிக்கெட் முன்பதிவு-செய்யும் எண் -(044) 42658888 -கு,போன் செய்து விசாரித்தால் -அதை பற்றி எந்த தகவலூம் அவர்களுக்கு -தெரியவில்லை என்கீறார்கள் .

ஐநாக்ஸ் திரையரங்கின் -Manager -திருமதி /செல்வி-ஆர்த்தி அவர்களுக்கு -044-28478880 -கு போன் செய்தால்-யாரும் எடுக்கவில்லை

திரைப்படம் -எந்த தேதியில் -எத்தனை-மணி காட்சியில் , எத்தனை நாள் திரை இடுகீறார்கள்

என்ற விபரம் -இருந்தால் -நன்றாக இருக்கும்

T SEKAR
Dahrampuri

Arun Ambie said...

பெரியாருக்கு படமெடுக்க 92 லட்சம் கொடுத்தது அரசு என்றால் காரணம் கி.வீரமணியோ, கு.இராமகிருட்டிணனோ அவர் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்பதில்லை. Return on Investment மிக அதிகம்.

ஆனால் அம்பேத்கருக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும், திருமா, தமிழரசன், கிருஷ்ணசாமி என்று லாபத்தில் பலருக்குப் பங்கு தரவேண்டும். கொடுத்தவருக்குக் கணிசமான ஓட்டுத் தேறும் என்பது உறுதியில்லை. அப்புறம் எதற்குக் கொடுத்துக் கையைச் சுட்டுக் கொள்வானேன்?

நலன் நாட வேண்டிய அரசே இப்படி வணிக நோக்கில் யோசிக்கும் போது லாபம் நாடும் பிசினஸ்மேன் சுந்தர் கைக்காசு இழக்கத் து்ணிவாரா?

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...
நூறு சதவிகிதம் உண்மை. இங்கும் இதுதான் நடக்கிறது. அம்பேத்கர் பெயரை சொல்லி கட்சி நடுத்தும் திருமாவளவனின் முகமூடியை கிழித்த, உண்மைத் தமிழன் அண்ணனுக்கு வாழ்த்துகள் நன்றி.]]]

அவர் நினைத்தால், அவரது கட்சிக்காரர்களை வைத்தே இதனை எங்கோ கொண்டு செல்லலாம்.. மனம் வேண்டும்..! அரசியலில் உண்மைத்தனம் வேண்டும்..! இது இரண்டுமே இவருக்கு இல்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[முகப்பு said...
அம்பேட்கர் படத்தை 10 ஆண்டுகள் கழித்தும் அதை வெளியிட விரும்பாத நிலையில் இருக்கும் தமிழக திராவிட கட்சிகளைப் பற்றி பேசுவதற்க்கு ஒன்றுமில்லை, இந்த அரசியல் வியாபாரிகளுக்கு அம்பேட்கர் என்றுமே பாகர்காய்தான். இன்நிலையில் தமிழக செய்தி ஒளிபரப்புத் துறையையும் கவணிப்பது ஓர் தலிதுதான். அம்பேட்கரை ஏற்றுக்கொள்ள இங்குள்ள சுயமரியாதை சிப்பாய்களுக்கு ஏன் இன்னும் மனது வரவில்லை?]]]

அதுதான் எனக்கும் புரியவில்லை..! படிப்பது ராமாயணம்.. இடிப்பது பெருமாள் கோவில் என்பதைப் போலத்தான் இந்தக் கட்சிகளின் செயல் உள்ளது..!

உண்மைத்தமிழன் said...

[[[siva said...

அருமையான கட்டுரை. படித்து முடித்ததும் என்னையும் அறியாமல் கண்களில் நீர். உண்மையான மகாத்மா யார் என்பதை உலகம் உணர முடியாத அளவு, ஆடம்பர விழாக்களில் காந்தி மிளிர, இந்த மனிதர் மட்டும் இரும்பு வேலிக்குள் சிலைகளாய், முரட்டுத்தனத்தின் குறியீடாய் மாற்றப்பட்டிருக்கிறார் அதிகார வர்க்கங்களால். காந்தியை சரியான பார்வையில் பார்த்த ஒரே அறிஞர் அண்ணல் அம்பேத்கராகத்தான் இருக்கும்.
புரட்சியாளர்களுக்கு எப்போதும் இந்த நிலைதானா... திருந்தவே மாட்டார்களா இந்த நாடும் மக்களும்.
-சிவா]]]

அரசுகள்தான் திருந்த வேண்டும்.. அவர்கள் கொள்ளையடிப்பதற்காகத்தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்களோ ஒழிய.. நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்ய அல்ல. பின்பு எப்படி இப்படியெல்லாம் செய்வதற்கு மனசு வரும்..?

உண்மைத்தமிழன் said...

[[[rouse said...

ஐநாக்ஸ் திரையரங்கின் இனையதலத்தில்-http://www.inoxmovies.com/இதை பற்றி -எந்த தகவலூம் இல்லை

தொலைபேசி வழியாக -டிக்கெட் முன்பதிவு-செய்யும் எண் -(044) 42658888 -கு,போன் செய்து விசாரித்தால் -அதை பற்றி எந்த தகவலூம் அவர்களுக்கு -தெரியவில்லை என்கீறார்கள் .

ஐநாக்ஸ் திரையரங்கின் -Manager -திருமதி /செல்வி-ஆர்த்தி அவர்களுக்கு -044-28478880 -கு போன் செய்தால்-யாரும் எடுக்கவில்லை

திரைப்படம் -எந்த தேதியில் -எத்தனை-மணி காட்சியில் , எத்தனை நாள் திரை இடுகீறார்கள்
என்ற விபரம் -இருந்தால் -நன்றாக இருக்கும்

T SEKAR
Dahrampuri]]]

புதன்கிழமையன்று உறுதியாகத் தெரிந்துவிடும். இப்போது படத்தினை வெளியிட்டிருப்பது என்.எஃப்.டி.சி.தான் என்பதால் அரசு அலுவலகத்தைப் போலவே பதில் சொல்லவும் மறுக்கிறார்கள். அதான் ஐநாக்ஸுன்னு சொல்லியாச்சுல்ல.. பிறகென்ன என்றுதான் சொல்கிறார்கள்..!

புதன்கிழமையன்றுதான் இறுதியாகும் என்கிறார்கள். பார்ப்போம்..!

Photo's Blog said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

அப்புறமா நிதானமாக படிக்கிறேன்.இப்போதைக்கு பதிவுக்கு நன்றி.

உமர் | Umar said...

மிகவும் அவசியமான பதிவு அண்ணே!

BalajiS said...

Sir,

I have a simple suggession.

Instead of chasing theatre owners,
They can chase TV channel owners.

Vijay TV or Doordarshan. (Not other channels).

Definately one of the will be ready to film on air.

That will definately work out!
Please attempt that.
Everybody can watch simultaneously.

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...

பெரியாருக்கு படமெடுக்க 92 லட்சம் கொடுத்தது அரசு என்றால் காரணம் கி.வீரமணியோ, கு.இராமகிருட்டிணனோ அவர் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்பதில்லை. Return on Investment மிக அதிகம். ஆனால் அம்பேத்கருக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும், திருமா, தமிழரசன், கிருஷ்ணசாமி என்று லாபத்தில் பலருக்குப் பங்கு தரவேண்டும். கொடுத்தவருக்குக் கணிசமான ஓட்டுத் தேறும் என்பது உறுதியில்லை. அப்புறம் எதற்குக் கொடுத்துக் கையைச் சுட்டுக் கொள்வானேன்?]]]

நியாயமான கேள்விதான் ஸார்..! அரசியல் லாபமில்லாததால்தான் நாட்டுக்காகச் செய்ய வேண்டிய கடமையை தாத்தா செய்ய மறுக்கிறார் என்பதை நாம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. செய்துவிட்டோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
அப்புறமா நிதானமாக படிக்கிறேன். இப்போதைக்கு பதிவுக்கு நன்றி.]]]

தங்களுடைய வருகைக்கே நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[கும்மி said...
மிகவும் அவசியமான பதிவு அண்ணே!]]]

அதனால்தான் எழுதியிருக்கிறேன் கும்மி தம்பி..! படம் பார்க்க அவசியம் வந்திருங்க..!

சிவராம்குமார் said...

உங்க ஆதங்கமும் உள்ளக் குமுறலும் புரிகிறது!!! ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்தினா!!!!

உண்மைத்தமிழன் said...

[[[BalajiS said...
Sir,
I have a simple suggession.
Instead of chasing theatre owners,
They can chase TV channel owners.
Vijay TV or Doordarshan. (Not other channels).
Definately one of the will be ready to film on air.
That will definately work out!
Please attempt that.
Everybody can watch simultaneously.]]]

இதனை கடைசியாகத்தான் யோசித்து வைத்திருக்கிறார்கள். முடிந்த அளவுக்கு திரையரங்குகளில் திரையிட்டுக் காண்பித்த பின்பே தொலைக்காட்சிகளில் காண்பிக்க ஏற்பாடு செய்யலாம் என்று முடிவெடு்த்திருக்கிறார்கள்..!

ராஜ நடராஜன் said...

மீண்டும் வந்தேன்.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் சகோதரரின் சுயநலம் அப்பட்டமாக தெரிகிறது.காசுன்னா இவர்கள் ஏன் இப்படி ஆலாய் பறக்கிறார்கள்?

தமிழக அரசின் மீதான உங்கள் கோபம்,மற்றும் சுயநல அரசியல் விமர்சனங்கள் சரியானதாக இருந்தாலும் கொடுத்த காசை ஆட்டைய போட்ட விஸ்வாஸ் நிறுவனத்தை இனியும் சந்தர்ப்பம் கிடைத்தால் தோலுரித்துக் காட்டுவது அவசியமென்பேன்.

லெனின் சமூக பார்வை பற்றி பல நேரங்களில் காண முடிகிறது.லெனின் போன்றவர்களை இன்னும் முதன்மை, பொதுமை படுத்துவது சமூகத்துக்கு நலம் விளைவிக்கும். லெனினுக்கு நமது ஆதரவை மேலும் தருவோம்.அதற்கு பிள்ளையார் சுழியா இயன்றால் ஒரு தனிபதிவு நீங்கள் போட்டால் கூட பதிவுலகம் அவரை கௌரவப்படுத்திய மாதிரி இருக்கும்.

திராவிட கட்சிகளின் சமூக பங்களிப்புக்கான காலகட்டங்கள் முடிவடைந்து விட்டதென்றே நினைக்கின்றேன்.

லெனினுக்கும்,உண்மையான அம்பேத்கார் இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துக்களுடன் சந்தர்ப்பம் கிடைத்தால் திரைப்படத்தையும் தியேட்டரில் பார்த்து விடுகிறேன்.

வெட்டிப்பயல் said...

ஒரு + ஓட்டுப் போட்டாச்சுண்ணே!

R.Gopi said...

//ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பிடித்து மேக்கப் டெஸ்ட் வைத்து, சோதனை செய்து பார்த்துவிட்டு கடைசியாகத்தான் பொருத்தமான நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். //

**********

தங்கர் பச்சானுக்கு மேக்கப் போட்டு ட்ரை பண்ணி பார்த்தீங்களா? அவரா இருந்தா இலவசமாவே நடிச்சு கொடுத்திருப்பாரே!!

R.Gopi said...

//அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..? இத்தனைக்கும் அம்பேத்கரின் பிறந்த நாளைக்கு மாலை போட மட்டும் தாத்தா மறப்பதில்லை. //

*******

தாத்தா ஆதாயம் இல்லேன்னா ஒரு டீ வாங்க கூட காசு கொடுக்க மாட்டாரு...

அம்பேத்கர் பேர் சொல்லி அரசியல் பொழப்பு நடத்தும் “குருமா” & க்ரூப் என்ன செய்யுது!!??

உண்மைத்தமிழன் said...

[[[சிவா என்கிற சிவராம்குமார் said...
உங்க ஆதங்கமும் உள்ளக் குமுறலும் புரிகிறது!!! ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்தினா!!!!]]]

இதுக்கெதுக்கு தைரியம்..? மனதில் பட்டது நியாயமென்றால் சொல்ல வேண்டியதுதானே..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

மீண்டும் வந்தேன். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் சகோதரரின் சுயநலம் அப்பட்டமாக தெரிகிறது. காசுன்னா இவர்கள் ஏன் இப்படி ஆலாய் பறக்கிறார்கள்?

தமிழக அரசின் மீதான உங்கள் கோபம், மற்றும் சுயநல அரசியல் விமர்சனங்கள் சரியானதாக இருந்தாலும் கொடுத்த காசை ஆட்டைய போட்ட விஸ்வாஸ் நிறுவனத்தை இனியும் சந்தர்ப்பம் கிடைத்தால் தோலுரித்துக் காட்டுவது அவசியமென்பேன்.

லெனின் சமூக பார்வை பற்றி பல நேரங்களில் காண முடிகிறது. லெனின் போன்றவர்களை இன்னும் முதன்மை, பொதுமைபடுத்துவது சமூகத்துக்கு நலம் விளைவிக்கும். லெனினுக்கு நமது ஆதரவை மேலும் தருவோம். அதற்கு பிள்ளையார் சுழியா இயன்றால் ஒரு தனி பதிவு நீங்கள் போட்டால்கூட பதிவுலகம் அவரை கௌரவப்படுத்திய மாதிரி இருக்கும்.

திராவிட கட்சிகளின் சமூக பங்களிப்புக்கான காலகட்டங்கள் முடிவடைந்து விட்டதென்றே நினைக்கின்றேன்.

லெனினுக்கும், உண்மையான அம்பேத்கார் இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துக்களுடன் சந்தர்ப்பம் கிடைத்தால் திரைப்படத்தையும் தியேட்டரில் பார்த்து விடுகிறேன்.]]]

வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றிகள் ஸார்.. லெனின் ஸாரின் தொண்டுக்கு நாம் நிறைய நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[வெட்டிப்பயல் said...
ஒரு + ஓட்டுப் போட்டாச்சுண்ணே!]]]

ரொம்ப சந்தோஷம் தம்பி.. நன்றியும்கூட..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

//ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பிடித்து மேக்கப் டெஸ்ட் வைத்து, சோதனை செய்து பார்த்துவிட்டு கடைசியாகத்தான் பொருத்தமான நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். //

**********

தங்கர்பச்சானுக்கு மேக்கப் போட்டு ட்ரை பண்ணி பார்த்தீங்களா? அவரா இருந்தா இலவசமாவே நடிச்சு கொடுத்திருப்பாரே!!]]]

குசும்பா..? கொஞ்சமும் பொருத்தமே இல்லாதவர்..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

//அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..? இத்தனைக்கும் அம்பேத்கரின் பிறந்த நாளைக்கு மாலை போட மட்டும் தாத்தா மறப்பதில்லை. //

*******

தாத்தா ஆதாயம் இல்லேன்னா ஒரு டீ வாங்க கூட காசு கொடுக்க மாட்டாரு. அம்பேத்கர் பேர் சொல்லி அரசியல் பொழப்பு நடத்தும் “குருமா” & க்ரூப் என்ன செய்யுது!!??]]]

அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, பணம் சம்பாதிப்பது என்று ஓஹோவென்று இருக்கிறார்கள்..

ஜோதிஜி said...

உங்கள் ஆக்கபூர்வ எழுத்துக்கு என் பாராட்டுரைகள்.

அப்புறம் நீங்களும் மைனாரிட்டு தாத்தா பாராட்டு போன்ற வார்த்தைகளை புடுச்சு தொங்கிட்டு இருக்காதீங்க.....

எல்லாமே நமக்குத் தெரியும் என்றாலும் எடுத்து வைக்கும் வாதத்தில் தான் வெற்றி இருக்கிறது. அதை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆதரவு எதிர்ப்பு இந்த இரண்டு கண்ணோட்டத்தை விட்டு நீங்க வரவேண்டும் என்பதற்காக...

குதறிவிடமாட்டீங்க தானே?

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
உங்கள் ஆக்கபூர்வ எழுத்துக்கு என் பாராட்டுரைகள். அப்புறம் நீங்களும் மைனாரிட்டு தாத்தா பாராட்டு போன்ற வார்த்தைகளை புடுச்சு தொங்கிட்டு இருக்காதீங்க.....
எல்லாமே நமக்குத் தெரியும் என்றாலும் எடுத்து வைக்கும் வாதத்தில்தான் வெற்றி இருக்கிறது. அதை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆதரவு எதிர்ப்பு இந்த இரண்டு கண்ணோட்டத்தை விட்டு நீங்க வர வேண்டும் என்பதற்காக...
குதறிவிட மாட்டீங்கதானே?]]]

மைனாரிட்டி என்ற வார்த்தையும் உண்மைதானே..! ஆதரித்தவர்கள் குறைவு.. கூட்டணி இருப்பதால்தானே அவர் ஆட்சித் தலைவராக உள்ளார். இதுதானே உண்மை. சொல்வதில் என்ன தவறு..?

உண்மைத்தமிழன் said...

தோழர்கள் தயவு செய்து இதனையும் படிக்கவும் :

http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_30.html

Ezhil said...

//சுதந்திர இந்தியாவுக்கு அடிப்படைத் தேவையான அரசியல் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர்.. சட்ட மாமேதை என்று இன்றைக்கும் சட்ட வல்லுநர்களால் ஆச்சரியத்துடனும், பிரமிப்புடனும் பார்க்கக் கூடியவர்.. //

அம்பேத்கார பத்தி நீங்க சொன்ன மத்ததெல்லாம் சரி ஆனா இது தான் கொஞ்சம் இடிக்குது அவர் நாம இப்ப பண்ற காபி -பேஸ்ட் ,find and replace வேலைகளை ரொம்ப முன்னாடியே செய்தவர்.முதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் மக்களுக்கான அரசியல் சட்டத்தை முதிர்ச்சி அடையாத இந்திய மக்கள் மீது திணித்தவர் அல்லது திணிக்க வைக்கப் பட்டவர்
வட இந்திய மேலாதிக்கத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போனவர்.

Ezhil said...

//சுதந்திர இந்தியாவுக்கு அடிப்படைத் தேவையான அரசியல் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர்.. சட்ட மாமேதை என்று இன்றைக்கும் சட்ட வல்லுநர்களால் ஆச்சரியத்துடனும், பிரமிப்புடனும் பார்க்கக் கூடியவர்.. //

அம்பேத்கார பத்தி நீங்க சொன்ன மத்ததெல்லாம் சரி ஆனா இது தான் கொஞ்சம் இடிக்குது அவர் நாம இப்ப பண்ற காபி -பேஸ்ட் ,find and replace வேலைகளை ரொம்ப முன்னாடியே செய்தவர்.முதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் மக்களுக்கான அரசியல் சட்டத்தை முதிர்ச்சி அடையாத இந்திய மக்கள் மீது திணித்தவர் அல்லது திணிக்க வைக்கப் பட்டவர்
வட இந்திய மேலாதிக்கத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போனவர்.

உண்மைத்தமிழன் said...

[[[Ezhil said...

//சுதந்திர இந்தியாவுக்கு அடிப்படைத் தேவையான அரசியல் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர்.. சட்ட மாமேதை என்று இன்றைக்கும் சட்ட வல்லுநர்களால் ஆச்சரியத்துடனும், பிரமிப்புடனும் பார்க்கக் கூடியவர்.. //

அம்பேத்கார பத்தி நீங்க சொன்ன மத்ததெல்லாம் சரி ஆனா இதுதான் கொஞ்சம் இடிக்குது. அவர் நாம இப்ப பண்ற காபி-பேஸ்ட், find and replace வேலைகளை ரொம்ப முன்னாடியே செய்தவர். முதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் மக்களுக்கான அரசியல் சட்டத்தை முதிர்ச்சி அடையாத இந்திய மக்கள் மீது திணித்தவர் அல்லது திணிக்க வைக்கப்பட்டவர். வட இந்திய மேலாதிக்கத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போனவர்.]]]

எழில்.. இது பற்றி உங்களுடன் விவாதிக்க வேண்டுமெனில் நான் அம்பேத்கரை கரைத்துக் குடித்தவனாகத்தான் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு நான் அம்பேத்கரை வாசித்ததில்லை. ஆகவே இதற்கு என்னால் பதில் சொல்ல இயலாது. மன்னிக்கவும்.

ஆனால் ஒரு தேசத் தலைவரின் வாழ்க்கை வரலாறு என்ற ரீதியில் இந்தத் திரைப்படத்தை நாம் பார்க்க வேண்டியது நமது கடமை..! அதனை மறந்து விடாதீர்கள்..!

Anisha Yunus said...

ஓட்டுக்களையும் சொத்துக்களையும் மட்டுமே குறி வைத்து, ‘குவார்ட்டர்’ என்ற பெயருள்ள பட்த்திற்கெல்லாம் வரிச்சலுகை அரசுக்கு கட்டாயம் தெரிந்த விஷயம்தான், இந்த படத்தினால் வரப்போகும் வருவாய். இதில் வேறு அபிப்பிராயமே கிடையாது. அம்பேத்கர் வாழ்வு அனைவரின் பாடப்புத்தகத்திலும் நினைவிலும் இருக்க வேண்டிய ஒரு விஷயம். கண்டிப்பாக பார்க்க வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய, மற்றவரையும் பார்க்க சொல்லி தூண்டப்பட் வேண்டிய திரைப்படம் இது. அரசே செலவு செய்து மாணவர்களுக்கு காட்டினால் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் இது பகலில் காணும் சொப்பனம்... வேறேன்ன சொல்ல?

உண்மைத்தமிழன் said...

[[[அன்னு said...
ஓட்டுக்களையும் சொத்துக்களையும் மட்டுமே குறி வைத்து, ‘குவார்ட்டர்’ என்ற பெயருள்ள பட்த்திற்கெல்லாம் வரிச் சலுகை அரசுக்கு கட்டாயம் தெரிந்த விஷயம்தான், இந்த படத்தினால் வரப் போகும் வருவாய். இதில் வேறு அபிப்பிராயமே கிடையாது. அம்பேத்கர் வாழ்வு அனைவரின் பாடப் புத்தகத்திலும் நினைவிலும் இருக்க வேண்டிய ஒரு விஷயம். கண்டிப்பாக பார்க்க வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய, மற்றவரையும் பார்க்க சொல்லி தூண்டப்பட் வேண்டிய திரைப்படம் இது. அரசே செலவு செய்து மாணவர்களுக்கு காட்டினால் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் இது பகலில் காணும் சொப்பனம்... வேறேன்ன சொல்ல?]]]

இந்த அரசுகள்தானே அம்பேத்கர் பெயரைச் சொல்லி அவ்வப்போது கூப்பாடு போடுகின்றன.. வெளியில் ஒரு மாதிரி.. உள்ளுக்குள் ஒரு மாதிரி வேஷம் போடும் வேடதாரிகளாகிய இவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்..!

tsekar said...

//Ezhil said...

/
அம்பேத்கார பத்தி நீங்க சொன்ன மத்ததெல்லாம் சரி ஆனா இதுதான் கொஞ்சம் இடிக்குது. அவர் நாம இப்ப பண்ற காபி-பேஸ்ட், find and replace வேலைகளை ரொம்ப முன்னாடியே செய்தவர். முதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் மக்களுக்கான அரசியல் சட்டத்தை முதிர்ச்சி அடையாத இந்திய மக்கள் மீது திணித்தவர் அல்லது திணிக்க வைக்கப்பட்டவர். வட இந்திய மேலாதிக்கத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போனவர்.]]]//




திரு எழில் அவர்களுக்கு,

ஒரு நாட்டுக்கு சட்டத்தை வரையறை செய்யும் போது- யாரும் அவருடயா தனிப்பட்ட -அறிவால்-எழுதிவிடமுடியாது. - -இங்கிலாந்து நாட்டின் சட்டம் -ஒருவர் யாரும் தனிப்பட்ட முறையில் ,ஒருவருடைய அறிவால் எழுதிவிடவில்லை ,பல ஆண்டு காலம் நாகரிக மக்கள் -மனிதகுலம் மகிழ்ச்சியாக வாழ கடைபிடித்த விதிகளை -பல்வேறு காலகட்டங்களில் -பல நூறு அறின்சர் குழுக்களால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் யாரும் ,தனிப்பட்ட மனிதர் ,ஒரு சில நாட்களில் எழுதிவிடவில்லை

ஆதி முதல் , உலகின் பல்வேறு சமுதாயம் -பல்வேறு -சட்டங்களை கடைபிடித்து வருகிறது !

கண்ணுக்கு கண் ,பல்லுக்கு பல் -என்ற -ஹீப்ரு சட்டம் போன்ற கொடுமையான சட்டங்களும் -சில சமுதாயதில் இருந்து இருகிறது ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் உலகின் பல்வேறு சமுதாயம் கடைபிடித்த நல்ல சட்டங்களின் தொகுப்பு !

இந்திய நாடு -ஜனநாயகத்தை -அடிப்படையாக கொண்ட நாடு என்பதால் -இங்கிலாந்து நாட்டின் சட்டத்தை மாதிரியாக கொண்டு -இந்திய சமூதாய சூழலுக்கு ஏற்ற மாதிரி
மாற்றம் செய்து -எழுதப்பட்டதுதான் -இந்திய சட்டம்.நீங்கள் சொல்வது போல் -Copy ,paste -செய்து விடவில்லை -கிட்ட தட்ட -ஆண்டுகள் -மிக கடுமையான -ஊழைத்து -அவருடைய -ஆழமான அறிவால் உருவானதுதான் - -இந்திய சட்டம்.அம்பேத்கர் போல் மிக சிறந்த -சட்ட மேதை -அப்போது இந்தியாவில் யாரும் இல்லாததால் தான் -தலித் சமூதாயத்தை -சேர்ந்தவராக இருந்தாலூம் -அம்பேத்கர் அவர்களுக்கு -அதிக்க சாதி இந்துகள் -சட்டம் எழுதும் பணியை அம்பேத்கர்க்கு தந்தார்கள் !!!

உலக நாட்டு சட்டங்களை பற்றி -அறிந்த மிக பெரிய அறிவாளி என்பதால் தான் ,அவரை சுதந்திர நாட்டின் முதல் சட்ட அமைச்சராக -ஜவகர்லால் நேரு ஆக்கினார் ! University of London -இல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் ,வக்கீல் பட்டம் பெற்று -பல நூறு புதத்கங்கலை படித்த அறிவாளியை -கேலி செய்வது போல் -Copy ,பேஸ்ட் செய்தார் என்று சொல்வது -உங்கள் -சாதி வெறியை காட்டுகீறது !

உலக நாட்டு சட்டங்களை பற்றி -அறிந்த மிக பெரிய அறிவாளி மாதிரி நீங்கள் -(இங்கிலாந்து நாட்டின் சட்டங்களை முழுவதும் அறிந்து -பின் இந்திய சட்டங்களை முழுவதும் அறிந்து இருப்பது போல்) -Copy ,பேஸ்ட் என்று சொல்வது -மிக தவறு
மாதிரி


-ts
மருதிபட்டி -அஞ்சல்
அரூர் வட்டம்

tsekar said...

திரு எழில்அவர்களுக்கு,

ஒரு நாட்டுக்கு சட்டத்தை வரையறை செய்யும் போது- யாரும் அவருடயா தனிப்பட்ட -அறிவால்-எழுதிவிடமுடியாது. - -இங்கிலாந்து நாட்டின் சட்டம் -ஒருவர் யாரும் தனிப்பட்ட முறையில் ,ஒருவருடைய அறிவால் எழுதிவிடவில்லை ,பல ஆண்டு காலம் நாகரிக மக்கள் -மனிதகுலம் மகிழ்ச்சியாக வாழ கடைபிடித்த விதிகளை -பல்வேறு காலகட்டங்களில் -பல நூறு அறின்சர் குழுக்களால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் யாரும் ,தனிப்பட்ட மனிதர் ,ஒரு சில நாட்களில் எழுதிவிடவில்லை

ஆதி முதல் , உலகின் பல்வேறு சமுதாயம் -பல்வேறு -சட்டங்களை கடைபிடித்து வருகிறது !

கண்ணுக்கு கண் ,பல்லுக்கு பல் -என்ற -ஹீப்ரு சட்டம் போன்ற கொடுமையான சட்டங்களும் -சில சமுதாயதில் இருந்து இருகிறது ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் உலகின் பல்வேறு சமுதாயம் கடைபிடித்த நல்ல சட்டங்களின் தொகுப்பு !

இந்திய நாடு -ஜனநாயகத்தை -அடிப்படையாக கொண்ட நாடு என்பதால் -இங்கிலாந்து நாட்டின் சட்டத்தை மாதிரியாக கொண்டு -இந்திய சமூதாய சூழலுக்கு ஏற்ற மாதிரி
மாற்றம் செய்து -எழுதப்பட்டதுதான் -இந்திய சட்டம்.நீங்கள் சொல்வது போல் -Copy ,paste -செய்து விடவில்லை -கிட்ட தட்ட -ஆண்டுகள் -மிக கடுமையான -ஊழைத்து -அவருடைய -ஆழமான அறிவால் உருவானதுதான் - -இந்திய சட்டம்.அம்பேத்கர் போல் மிக சிறந்த -சட்ட மேதை -அப்போது இந்தியாவில் யாரும் இல்லாததால் தான் -தலித் சமூதாயத்தை -சேர்ந்தவராக இருந்தாலூம் -அம்பேத்கர் அவர்களுக்கு -அதிக்க சாதி இந்துகள் -சட்டம் எழுதும் பணியை அம்பேத்கர்க்கு தந்தார்கள் !!!

உலக நாட்டு சட்டங்களை பற்றி -அறிந்த மிக பெரிய அறிவாளி என்பதால் தான் ,அவரை சுதந்திர நாட்டின் முதல் சட்ட அமைச்சராக -ஜவகர்லால் நேரு ஆக்கினார் ! University of London -இல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் ,வக்கீல் பட்டம் பெற்று -பல நூறு புதத்கங்கலை படித்த அறிவாளியை -கேலி செய்வது போல் -Copy ,பேஸ்ட் செய்தார் என்று சொல்வது -உங்கள் -சாதி வெறியை காட்டுகீறது !

உலக நாட்டு சட்டங்களை பற்றி -அறிந்த மிக பெரிய அறிவாளி மாதிரி- நீங்கள் -இங்கிலாந்து நாட்டின் சட்டங்களை முழுவதும் அறிந்து -பின் இந்திய சட்டங்களை முழுவதும் அறிந்து இருப்பது போல் -Copy ,பேஸ்ட் என்று சொல்வது -மிக தவறு
மாதிரி

ts,மருதிபட்டி -அஞ்சல்
அரூர் வட்டம்

tsekar said...

திரு எழில்அவர்களுக்கு,

ஒரு நாட்டுக்கு சட்டத்தை வரையறை செய்யும் போது- யாரும் அவருடயா தனிப்பட்ட -அறிவால்-எழுதிவிடமுடியாது. - -இங்கிலாந்து நாட்டின் சட்டம் -ஒருவர் யாரும் தனிப்பட்ட முறையில் ,ஒருவருடைய அறிவால் எழுதிவிடவில்லை ,பல ஆண்டு காலம் நாகரிக மக்கள் -மனிதகுலம் மகிழ்ச்சியாக வாழ கடைபிடித்த விதிகளை -பல்வேறு காலகட்டங்களில் -பல நூறு அறின்சர் குழுக்களால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் யாரும் ,தனிப்பட்ட மனிதர் ,ஒரு சில நாட்களில்எழுதிவிடவில்லை
ஆதி முதல் , உலகின் பல்வேறு சமுதாயம் -பல்வேறு -சட்டங்களை கடைபிடித்து வருகிறது !
கண்ணுக்கு கண் ,பல்லுக்கு பல் -என்ற -ஹீப்ரு சட்டம் போன்ற கொடுமையான சட்டங்களும் -சில சமுதாயதில் இருந்து இருகிறது ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் உலகின் பல்வேறு சமுதாயம் கடைபிடித்த நல்ல சட்டங்களின் தொகுப்பு ! இந்திய நாடு -ஜனநாயகத்தை -அடிப்படையாக கொண்ட நாடு என்பதால் -இங்கிலாந்து நாட்டின் சட்டத்தை மாதிரியாக கொண்டு -இந்திய சமூதாய சூழலுக்கு ஏற்ற மாதிரி மாற்றம் செய்து -எழுதப்பட்டதுதான் -இந்திய சட்டம்.நீங்கள் சொல்வது போல் -Copy ,paste -செய்து விடவில்லை -கிட்ட தட்ட -ஆண்டுகள் -மிக கடுமையான -ஊழைத்து -அவருடைய -ஆழமான அறிவால் உருவானதுதான் - -இந்திய சட்டம்.அம்பேத்கர் போல் மிக சிறந்த -சட்ட மேதை -அப்போது இந்தியாவில் யாரும் இல்லாததால் தான் -தலித் சமூதாயத்தை -சேர்ந்தவராக இருந்தாலூம் -அம்பேத்கர் அவர்களுக்கு -அதிக்க சாதி இந்துகள் -சட்டம் எழுதும் பணியை அம்பேத்கர்க்கு தந்தார்கள் !!!
உலக நாட்டு சட்டங்களை பற்றி -அறிந்த மிக பெரிய அறிவாளி என்பதால் தான் ,அவரை சுதந்திர நாட்டின் முதல் சட்ட அமைச்சராக -ஜவகர்லால் நேரு ஆக்கினார் ! University of London -இல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் ,வக்கீல் பட்டம் பெற்று -பல நூறு புதத்கங்கலை படித்த அறிவாளியை -கேலி செய்வது போல் -Copy ,பேஸ்ட் செய்தார் என்று சொல்வது -உங்கள் -சாதி வெறியை காட்டுகீறது !

உலக நாட்டு சட்டங்களை பற்றி -அறிந்த மிக பெரிய அறிவாளி மாதிரி- Copy ,பேஸ்ட் என்று சொல்வது -மிக தவறு
மாதிரி

ts,மருதிபட்டி -அஞ்சல்
அரூர் வட்டம்

tsekar said...

திருஎழில்அவர்களுக்கு, ஒரு நாட்டுக்கு சட்டத்தை வரையறை செய்யும் போது- யாரும் அவருடயா தனிப்பட்ட -அறிவால்-எழுதிவிடமுடியாது. - -இங்கிலாந்து நாட்டின் சட்டம் -ஒருவர் யாரும் தனிப்பட்ட முறையில் ,ஒருவருடைய அறிவால் எழுதிவிடவில்லை ,பல ஆண்டு காலம் நாகரிக மக்கள் -மனிதகுலம் மகிழ்ச்சியாக வாழ கடைபிடித்த விதிகளை -பல்வேறு காலகட்டங்களில் -பல நூறு அறின்சர் குழுக்களால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் யாரும் ,தனிப்பட்ட மனிதர் ,ஒருசிலநாட்களில்எழுதிவிடவில்லை ஆதி முதல் , உலகின் பல்வேறு சமுதாயம் -பல்வேறு -சட்டங்களை கடைபிடித்து வருகிறது !
கண்ணுக்கு கண் ,பல்லுக்கு பல் -என்ற -ஹீப்ரு சட்டம் போன்ற கொடுமையான சட்டங்களும் -சில சமுதாயதில் இருந்து இருகிறது ! இங்கிலாந்து நாட்டின் சட்டம் உலகின் பல்வேறு சமுதாயம் கடைபிடித்த நல்ல சட்டங்களின் தொகுப்பு ! இந்திய நாடு -ஜனநாயகத்தை -அடிப்படையாக கொண்ட நாடு என்பதால் -இங்கிலாந்து நாட்டின் சட்டத்தை மாதிரியாக கொண்டு -இந்திய சமூதாய சூழலுக்கு ஏற்ற மாதிரி மாற்றம் செய்து -எழுதப்பட்டதுதான் -இந்திய சட்டம்.நீங்கள் சொல்வது போல் -Copy ,paste -செய்து விடவில்லை -கிட்ட தட்ட -ஆண்டுகள் -மிக கடுமையான -ஊழைத்து -அவருடைய -ஆழமான அறிவால் உருவானதுதான் - -இந்திய சட்டம்.அம்பேத்கர் போல் மிக சிறந்த -சட்ட மேதை -அப்போது இந்தியாவில் யாரும் இல்லாததால் தான் -தலித் சமூதாயத்தை -சேர்ந்தவராக இருந்தாலூம் -அம்பேத்கர் அவர்களுக்கு -அதிக்க சாதி இந்துகள் -சட்டம் எழுதும் பணியை அம்பேத்கர்க்கு தந்தார்கள்
உலக நாட்டு சட்டங்களை பற்றி -அறிந்த மிக பெரிய அறிவாளி மாதிரி- Copy ,பேஸ்ட் என்று சொல்வது -மிக தவறு,உங்கள் -சாதி வெறியை காட்டுகீறது !
மாதிரி

ts,மருதிபட்டி -அஞ்சல்
அரூர் வட்டம்

Ezhil said...

[[[ உண்மைத்தமிழன் said ..
//எழில்.. இது பற்றி உங்களுடன் விவாதிக்க வேண்டுமெனில் நான் அம்பேத்கரை கரைத்துக் குடித்தவனாகத்தான் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு நான் அம்பேத்கரை வாசித்ததில்லை. ஆகவே இதற்கு என்னால் பதில் சொல்ல இயலாது. மன்னிக்கவும்.
ஆனால் ஒரு தேசத் தலைவரின் வாழ்க்கை வரலாறு என்ற ரீதியில் இந்தத் திரைப்படத்தை நாம் பார்க்க வேண்டியது நமது கடமை..! அதனை மறந்து விடாதீர்கள்..! // ]]]

நன்றி கண்டிப்பாக படத்தை நான் பார்க்கிறேன் நானும் பல நாட்களாக இந்த படத்தை தேடிக் கொண்டு இருந்தேன்.

[[[ tsekar said...

// இங்கிலாந்து நாட்டின் சட்டத்தை மாதிரியாக கொண்டு -இந்திய சமூதாய சூழலுக்கு ஏற்ற மாதிரி
மாற்றம் செய்து -எழுதப்பட்டதுதான் -இந்திய சட்டம்.நீங்கள் சொல்வது போல் -Copy ,paste -செய்து விடவில்லை -கிட்ட தட்ட -ஆண்டுகள் -மிக கடுமையான -ஊழைத்து -அவருடைய -ஆழமான அறிவால் உருவானதுதான் - -இந்திய சட்டம். //

அவர் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம் கூட்டாட்சி முறைக்கு முற்றிலும் எதிரானது
இதை பற்றி ஆலடி அருணா unfederal features of the indian constitution என்ற நூலே எழுதி உள்ளாரே அதற்கு என்ன பதில் ????

அதே இந்திய சட்டம் தான் முழுமையான (வட) இந்திய மேலாதிக்கத்துக்கு துணை போகிறது என்ற என் குற்றச்சாட்டுக்கு எந்த பதிலையும் காணோம் ???

//பல நூறு புதத்கங்கலை படித்த அறிவாளியை -கேலி செய்வது போல் -Copy ,பேஸ்ட் செய்தார் என்று சொல்வது -உங்கள் -சாதி வெறியை காட்டுகீறது !///
உடனே சாதி வெறி என்று கிளம்பாதீர்கள்.
இது அடிப்படையில் பாசிசம்.ஏற்கனவே தங்கள் செய்யும் தவறுகளை மறைக்க சாதி அடையாளத்தை பயன் படுத்துவது நமது சமூகத்தின் சாபக்கேடு! மானக்கேடு !
நான் எனது பின்னூட்டத்தில் மற்ற எந்த தகுதியையும் குறை சொல்லவில்லை அவரின் சமூகப் பார்வை சரியானதே.
எப்படி தலித்திய வாதிகள் பெரியாரை மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரினார்களோ அது போல அம்பேத்காரின் சட்ட "மேதைமையும்" மறு வாசிப்புக்கு உட்படுத்தியே ஆக வேண்டும். ஏனெனில் மக்கள் நடுவ அமைப்பில் எவர் ஒருவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மாதவராஜ் said...

உண்மைத்தமிழன்!

பகிர்வுக்கு நன்றி.

என வலைப்பக்கத்தில் அம்பேத்கர் படத்திற்கான போஸ்டர் வெளியிட்டு இருக்கிறேன். தங்கள் வலைப்பக்கத்தில் அதனை விட்ஜெட்டாக்கி பலருக்கும் செய்திகள் செல்ல உதவும்படி வேண்டுகிறேன்.

உண்மைத்தமிழன் said...

சேகர் ஸார்..

எழிலுக்கு நீங்கள் கொடுத்துள்ள பதிலில் சாதி வெறி என்ற ஒரு விஷயத்தைத் தவிர மற்றவைகளை நானும் ஏற்றுக் கொள்கிறேன்..!

ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், பல தேசங்களை உள்ளடக்கிய, பல சாதி, சமூகங்களை கொண்ட இந்த சமுதாயத்திற்காகத்தான் இங்கிலாந்து நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை ஒத்த வடிவில் நமக்கான சட்டத்தை அம்பேத்கர் வடிவமைத்துள்ளார் என்றே நானும் உணர்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[// இங்கிலாந்து நாட்டின் சட்டத்தை மாதிரியாக கொண்டு -இந்திய சமூதாய சூழலுக்கு ஏற்ற மாதிரி
மாற்றம் செய்து -எழுதப்பட்டதுதான் -இந்திய சட்டம்.நீங்கள் சொல்வது போல் -Copy ,paste -செய்து விடவில்லை -கிட்ட தட்ட -ஆண்டுகள் -மிக கடுமையான -ஊழைத்து -அவருடைய -ஆழமான அறிவால் உருவானதுதான் - -இந்திய சட்டம். //

அவர் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம் கூட்டாட்சி முறைக்கு முற்றிலும் எதிரானது
இதை பற்றி ஆலடி அருணா unfederal features of the indian constitution என்ற நூலே எழுதி உள்ளாரே அதற்கு என்ன பதில் ????
அதே இந்திய சட்டம்தான் முழுமையான (வட) இந்திய மேலாதிக்கத்துக்கு துணை போகிறது என்ற என் குற்றச்சாட்டுக்கு எந்த பதிலையும் காணோம்???]]]

கூட்டாட்சி தத்துவம் ஒன்றே இப்போதைய இந்தியாவை சிதறிவிடாமல் இருக்க உதவும் என்பதால்தான் அம்பேத்கர் இது போல் வடிவமைத்துள்ளார். இது நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும் சேகர் ஸார்..!

ஆனால் இப்போது அத்தனை சட்டங்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடே.. அப்படி செய்தால் நிச்சயம் நாடு நலம் பெறும்..

உண்மைத்தமிழன் said...

[[[மாதவராஜ் said...

உண்மைத்தமிழன்!

பகிர்வுக்கு நன்றி.

என வலைப் பக்கத்தில் அம்பேத்கர் படத்திற்கான போஸ்டர் வெளியிட்டு இருக்கிறேன். தங்கள் வலைப்பக்கத்தில் அதனை விட்ஜெட்டாக்கி பலருக்கும் செய்திகள் செல்ல உதவும்படி வேண்டுகிறேன்.]]]

அண்ணே.. நன்றிண்ணே.. செஞ்சிரலாம்..!

abeer ahmed said...

See who owns lessignets.com or any other website:
http://whois.domaintasks.com/lessignets.com

abeer ahmed said...

See who owns 3tralleel.net or any other website.