மும்பை நில ஊழல் - புதிய முதல்வர் பிரிதிவிராஜ் சவானும் திருடன்தானாம்..

27-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மும்பையின் கொலாபா பகுதியில் ஆதர்ஷ் சங்கம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்பில் ஊழல் என்று எழுந்த விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் அசோக்சவானின் தலையும் உருண்டது. புதிய முதலமைச்சராக அப்போது மத்திய அமைச்சராக இருந்த பிரிதிவிராஜ் சவான் இந்தியாவின் அன்னை சோனியாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரும் கர்ம சிரத்தையாக மும்பைக்கு ஓடோடி வந்து பதவியேற்ற உடனேயே அவர் மீதும் ஊழல் புகார்கள் எழுந்தன. அது தீப்பற்றி எரிவதற்குள் ஸ்பெக்ட்ரம் ஊழலின் புகை அனைவரின் கண்களையும் மறைத்துவிட்டதால் அப்போதைக்கு மட்டுமல்ல.. இப்போதுவரையிலும் தப்பித்த நிலையில்தான் உள்ளார் சவான்.

அது என்ன ஊழல்..? என்ன வகையானது..? என்பதை யோசித்துத் தேடியபோது விபரங்கள் சரிவர கிடைக்கவில்லை. ஆனால் இந்த வார துக்ளக் பத்திரிகையில் அதனைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


அதாகப்பட்டது என்னவெனில் மும்பையின் மத்திய கிழக்கு வடலாப் பகுதியில் - பிரிதிவிராஜ் சவான் 2003-ம் ஆண்டு சுமார் 1100 சதுர அடியில்,  ஒரு பிளாட் வீட்டை வாங்கியிருக்கிறார்.

இதிலென்ன முறைகேடு? ஊழல் என்கிறீர்களா..? சற்றுப் பொறுங்கள். இந்த வீட்டைக் கட்டியது அரசு கூட்டுறவு சங்கம். இது போன்ற வீடுகளை வாங்க வேண்டுமெனில் அதற்கான சில விதிமுறைகள் எல்லாம் இருக்கின்றன. அதில் ஒரு விதிமுறை சொல்வது என்னவென்றால் வாங்குபவரின் வருடாந்திர வருமானம் 1.50 லட்சத்தைவிட குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்பது.

ஆனால் இந்த வீட்டை வாங்கும்போது பிரிதிவராஜ் சவான் எம்.பி.யாக இருந்திருக்கிறார். அவரது மாத வருமானமே 76000 ரூபாய். ஆக நியாயப்படி பார்த்தால் அவருக்கு இந்த வீடு வாங்கக் கோரும் விண்ணப்பம் வாங்கும் தகுதிகூட இல்லை. ஆனாலும் வாங்கியிருக்கிறார்.. எப்படி அவரால் முடிந்தது..?

அடுத்த மெகா முறைகேடு.. அப்போதைய முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேயின் தனிப்பட்ட பிரத்யேகக் கோட்டாவில்தான் இதனை வாங்கியிருக்கிறார். முதல்வருக்கென்று தனி கோட்டா தருவதுகூட முறைகேடுதானே? ஊழல்தானே..? இதையெல்லாம் இந்த அரசியல்வியாதி நாய்கள் யோசிக்க மாட்டார்களா.? வாரி வழங்கிவிட்டார் ஷிண்டே.. சரி எத்தனை ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள்.. அங்கேயும் ஒரு மெகா ஊழல்..

2.25 கோடி மதிப்பு வாய்ந்த அந்த 1100 சதுர அடி அளவுள்ள வீட்டை வெறும் 4 லட்சம் ரூபாய்க்கு கிரயப் பத்திரம் செய்து கொடுத்திருக்கிறார்கள். என்ன கொடுமைடா இது..?

அரசியல்வாதிகளை திட்டிக்கிட்டே இருக்கீங்க.. வஞ்சிக்கிட்டே இருக்கீங்களே..? வேற வேலை வெட்டி இல்லையா உங்களுக்கு..? வாய் வலிக்கலையா..? ஏன் போரடிக்கிறீங்க..? என்றெல்லாம் பேசக்கூடிய அன்பர்கள் கொஞ்சம் இதற்கு ஒரு விளக்கத்தைச் சொல்லுங்களேன்..

இந்த விஷயத்தைக்கூட சமூக நல ஆர்வலர் ஒருவர் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் மூலம் தெரிந்து வைத்திருக்கிறார். சவான் பதவியேற்ற உடனேயே இந்தத் தகவலை வெளியிட்டு நியாயம் கேட்டிருக்கிறார். நியாயம் கேட்டா உடனே பதில் சொல்ல அவர் என்ன சாமான்யனா..? அரசியல்வியாதி இல்லையா..? அதுலேயும் மாநிலத்தையே ஆளும் முதல் அமைச்சர் இல்லையா..? சுலபத்துல பேசிருவாரா..? கொஞ்சம் லேட்டாகத்தான் ஆனால் அட்டகாசமா பதில் சொல்லியிருக்காரு..

“2003-ல் எனது தாய் பிரேமிலா பாய் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது புற்றுநோயால் அவதிப்பட்டு மும்பையில் சிகிச்சை பெற வசதியாக மேற்படி வீடு வாங்கப்பட்டிருந்தது உண்மைதான். ஆனால் அதில் குடி புகுவதற்குள் அவர் இயற்கை எய்திவிட்டார். நான் பாராளுமன்ற அங்கத்தினராக அப்போது முதல் இருந்து வருவதால் அவ்வீடு என் பெயரில் உள்ளது. இதில் தவறுகள் இருந்தால் வீட்டை அரசுக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்..” - எப்படி இருக்கு பதில்..?

64 வயசாயிருச்சுல்ல.. சுயபுத்தி இருக்குல்ல.. அறிவு இருக்குல்ல.. படிச்சாருக்குல்ல.. 2.25 கோடி மதிப்புள்ள அரசு சொத்தை வெறும் 4 லட்சத்துக்கு வாங்குறோமேன்னு ஒரு குற்றவுணர்ச்சியாவது இருக்கான்னு பாருங்க.. தப்புன்னா திருப்பிக் கொடுக்கிறேன்னு கூலா ஒரு பதில்.. மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையெல்லாம் இவங்ககளுக்கு இருக்கவே இருக்காதா..? பின்ன என்னதான் ஸ்கூல்ல படிச்சிட்டு வர்றாங்க இவங்க..? இந்த லட்சணத்துல எம்.பி.யாம்.. மத்திய அமைச்சராம்.. இருக்குற சில வெட்கக்கேடுகள்ள இதுவும் ஒரு வெட்கக் கேடு..

இப்படியொரு விளக்கம் சொன்ன இந்த மகாத்மா சில கேள்விகளுக்கு மட்டும் வேணும்னே பதில் சொல்லாம எஸ்கேப்பாயிட்டாரு..

1. அவருடைய மாத வருமானம் 76000 ரூபாயாக இருக்கும்போது வருடாந்திர வருமானம் 1.50 லட்சத்திற்கு குறைவுன்னு விண்ணப்பத்துல எழுதினது ஏன்..?

2. எந்த அடிப்படையில் 2.25 கோடி மதிப்புள்ள வீட்டை சலுகை விலையில் 4 லட்சத்திற்குப் பெற்றார்..?

3. அவரது அம்மாவுக்குத்தான் அந்த பிளாட் கொடுக்கப்பட்டது என்றால் அம்மா இறந்த பிறகு சவான் ஏன் அதன் மீது சொந்தம் கொண்டாடினார்..?

4. எந்த ஊழலும் இல்லைன்னா இப்போ வீட்டை திரும்பி ஒப்படைக்கிறேன்னு சொல்றது எதுக்கு..? ஏதேனும் விசேஷப் பிரார்த்தனைக்காகவா..?

இப்படியெல்லாம் பா.ஜ.க.-சிவசேனா கட்சிக்காரங்க கேள்வி மேல் கேள்வி கேட்டாலும், எருமை மாடு மேல மழை பேஞ்ச கதையா “எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் இப்போ சி.எம்.” அப்படீன்னு சொல்லி எஸ்கேப்பாயிட்டாரு சவான்.

ஆனால் அவருக்குப் பதிலா இப்போ துணை முதல்வரா பதவி வகிக்கிற சரத்பவாரின் அண்ணன் மகனான அஜீத்பவார்தான் பதில் சொல்லியிருக்காரு. அதுவும் எப்படின்னு பாருங்க..

“இப்படிப்பட்ட கேள்விகளை பிரிதிவிராஜ் சவான் ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் ஈவிரக்கமின்றி சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அபாண்டமாகக் கூறுகின்றன. அவர் மீது குற்றச்சாட்டுக்களை வெறும் அரசியல் காரணங்களுக்காகச் சுமத்தி தங்களது காழ்ப்புணர்ச்சியை மட்டுமே எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்துகின்றன. எப்படிப்பட்ட மாபெரும் ஊழலின் ஆணி வேரையே அகற்ற பிரிதிவிராஜ் சவான் வந்துள்ளார் என்பதையும், பதவியேற்ற 72 மணி நேரத்திற்குள் ஆதர்ஷ் கட்டிடத்தை ஏன் இடிக்கக் கூடாது என்று கேள்வி கேட்டு மத்திய சுற்றுப் புறச் சூழல் அமைச்சகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பக் காரணமாக இருந்த முதல்வரின் அதிரடிச் செயலில் இருந்தே அவரது நியாய, நாணய உணர்வின் வெளிப்பாட்டைப் புரிந்து கொள்ள முடியவில்லையே..?” இப்படி பக்காவான கூட்டணிக் கட்சிக்காரனா பேசியிருக்காரு அஜீத்பவாரு.

இனி என்னாகும்..? சட்டமன்றத்தில் இந்தப் பேச்சு எழுந்து கலாட்டா நடக்கும்போது வீட்டைத் திருப்பிக் கொடுத்துட்டு எனக்குக் கொடுத்தத் திருட்டுப் பட்டத்தை வாபஸ் வாங்கிருங்கன்னு நம்மளைப் பார்த்து வெக்கமில்லாம இளிக்கப் போறாரு முதலமைச்சரு..

இதேபோலத்தான் ஆதர்ஷ் ஊழலும் நடந்தது. உடனேயே அசோக் சவானை வீட்டுக்கு அனுப்பின சோனியாம்மா.. அதே மாதிரி இன்னொரு ஊழலை செஞ்ச இன்னொரு சவானுக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தது ஏனோ..?

எல்லாம் நடிப்புங்க.. பாருங்க.. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட்டோம்னு ஒரு பாவ்லா.. அப்படியே கட்சியையும் உடையாம பார்த்துக்கணும்.. கூட்டணியும் பிரியாம பார்த்துக்கணும். நமக்கும் தலையாட்டற ஆளாவும் இருக்கணும்.. அப்படீன்னு இன்னொரு ஊழல்வாதியைக் கொண்டாந்து உக்கார வைச்சிருக்காங்க..

இதோட இன்னொரு விஷயமும் இப்போ வெளில வந்திருக்கு. மத்திய ராணுவ அமைச்சர் அந்தோணி, ராணுவ இலாகாவில் எத்தனை இடங்களில் நிலம் ஆக்கிரமிப்பு அல்லது அபகரிப்பு மூலமாக ஊழல் நடந்துள்ளது என்பதை ஆராய ஆய்வு நடத்தும்படி உத்தரவு போட்டிருக்காராம்.

அப்போது, முதலில் வெளிப்பட்ட குட்டு, புனே நகரின் மையப் பகுதிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்கள் மலிவு விலையில் மறைந்த ஊழலும் ஒன்று.. அந்தப் பகுதி நமது இன்னுமொரு மாபெரும் ஊழல் விளையாட்டு அரசியல்வியாதி சுரேஷ் கல்மாடியின் பாராளுமன்றத் தொகுதிக்குள்தான் அடங்கியிருக்கிறதாம்.. அடடா என்ன பொருத்தம்.. என்ன பொருத்தம்..?

அத்தனை அரசியல்வியாதிகளும் சுருட்டறதுல மட்டும்தாங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கானுக.. நாம வழக்கம்போல அடுத்து  ஓசில என்ன கிடைக்கும்னு நாக்கைத் தொங்கப் போட்டுட்டு காத்துக்கிட்டிருப்போம்..!!!

33 comments:

pichaikaaran said...

me the first

pichaikaaran said...

me the second

pichaikaaran said...

me the third

pichaikaaran said...

forth too

Unknown said...

ஊழலை நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு காங்கிரஸ் அரசாங்கம் செய்து வருகிறது ...

a said...

என்னத்தை சொல்ல!!!!!!!!!!!!!!!

pichaikaaran said...

சுதந்திரம் அடைந்ததும் காங்கிரசை கலைக்க சொன்ன காந்தியின் பேச்சை கேட்காததன் விளைவு இது

Sundar said...

சுதந்திரம் வாங்கி குடுத்ததே காந்தியின் தவறுதானே??? மன்னிக்கவும்...

இங்கு, பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் தற்கொலை செய்துகொள்வதோ, அல்லது பேசாமல் ஊரைவிட்டு ஓடிவிடுவதோ தானே நடக்கிறது? அதற்குப் பதில், யாராவது ஒருவர், தங்களை பாதித்தவர்களை தண்டிப்பதே இல்லையே!!!

போலீஸ், கோர்ட், எல்லாமே அரசியல்வியாதிகளின் அடிமைகள் தானே???

தன் சொத்தை அல்லது வேலை வாய்ப்பை அல்லது தனது உரிமையை தட்டிப்பரித்த ஒரு சின்ன அளவு அரசியல் வியாதியை போட்டுத்தள்ளிவிட்டு தற்கொலையோ அல்லது ஊரைவிட்டு ஓடுவதோ செய்யவேண்டியதுதானே???

உமர் | Umar said...

மற்ற கட்சியினரின் ஊழல்கள் வெளிவரும்போது (பதிவுலகில்) குரல் எழுப்பும் பலரும், காங்கிரஸின் ஊழல் வெளிவரும்பொது மட்டும் அமைதி காப்பதேன்?

உண்மைத்தமிழன் said...

பார்வையான் ஏன் இப்படி..? உங்களுக்கே போரடிக்கலையா..?

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
ஊழலை நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு காங்கிரஸ் அரசாங்கம் செய்து வருகிறது]]]

காங்கிரஸ் என்றில்லை செந்தில்.. அரசியல்வியாதிகளில் நேர்மையானவர்களே இல்லை என்கிற நிலைமைதான் இப்போது இருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
என்னத்தை சொல்ல!!!!!!!!!!!!!!!]]]

என் சோகத்தைப் பகிர்ந்துக்கிறேன் யோகேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
சுதந்திரம் அடைந்ததும் காங்கிரசை கலைக்க சொன்ன காந்தியின் பேச்சை கேட்காததன் விளைவு இது.]]]

ம்..

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

சுதந்திரம் வாங்கி குடுத்ததே காந்தியின் தவறுதானே??? மன்னிக்கவும்...

இங்கு, பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதோ, அல்லது பேசாமல் ஊரைவிட்டு ஓடி விடுவதோதானே நடக்கிறது? அதற்குப் பதில், யாராவது ஒருவர், தங்களை பாதித்தவர்களை தண்டிப்பதே இல்லையே!!!

போலீஸ், கோர்ட், எல்லாமே அரசியல்வியாதிகளின் அடிமைகள்தானே???

தன் சொத்தை அல்லது வேலை வாய்ப்பை அல்லது தனது உரிமையை தட்டிப் பரித்த ஒரு சின்ன அளவு அரசியல்வியாதியை போட்டுத் தள்ளிவிட்டு தற்கொலையோ அல்லது ஊரைவிட்டு ஓடுவதோ செய்ய வேண்டியதுதானே???]]]

நல்ல ஐடியா சுந்தர்.. எல்லாரையும் அந்நியனா அவதாரமெடுக்கச் சொல்றீங்க..? யாருக்கு இந்தத் தைரியம் இருக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[கும்மி said...
மற்ற கட்சியினரின் ஊழல்கள் வெளிவரும்போது (பதிவுலகில்) குரல் எழுப்பும் பலரும், காங்கிரஸின் ஊழல் வெளிவரும்பொது மட்டும் அமைதி காப்பதேன்?]]]

காங்கிரஸின் எதிர்ப்பாளர்கள் இங்கே குறைவு.. அதே சமயம் திராவிடக் கட்சிகளின் எதிர்ப்பாளர்கள் சம அளவில் இருக்கிறார்கள். இதுதான் பிரச்சினை..!

pichaikaaran said...

தன் சொத்தை அல்லது வேலை வாய்ப்பை அல்லது தனது உரிமையை தட்டிப் பரித்த ஒரு சின்ன அளவு அரசியல்வியாதியை போட்டுத் தள்ளிவிட்டு "

அப்படி போட்டு தள்ளினால் அதையும் எதிர்த்து ஒரு பதிவு போடுவார் அண்ணன் உண்மை தமிழன் ...

ஒண்ணும் செயவதற்கில்லை ..

”போலீஸ், கோர்ட், எல்லாமே அரசியல்வியாதிகளின் அடிமைகள் தானே???”

உங்களுக்கு தெரியுது,, எனக்கு தெரியுது... அண்ணன் உட்பட பலருக்கு தெரியவில்லையே...

சட்டம் வேலை செய்யாத நிலையில், தாமும் சட்டத்தை கையில் எடுக்கும் தைரியம் இல்லாத நிலையில், வேறு யாராவது இதை செய்தால் மக்கள் அதை கொண்டாடுகிறார்கள்.. இதை குறை சொல்வது நியாயமா ?

செங்கோவி said...

என்னண்ணே பேசுறீங்க...சூடு சொரணை எல்லாம் பார்த்தா வேலைக்காகுமா..நாம ஊழல் ஊழல்னு கத்தறதும்,அவங்க ஊலலல்லான்னு பாடுருதும் வழக்கம்தானே பாஸ்..
-செங்கோவி

Thomas Ruban said...

தவறுகளை சட்டம் போட்டு தடுக்க வேண்டியவர்களும், தவறுகளை தட்டிக் கேட்க வேண்டியவர்களே கைகட்டி வேடிக்கை பார்க்கும்போது சாதரண common man என்ன செய்ய முடியும்...
ஊழல் செய்துவிட்டு அதை நியப்படுத்தி வேறு பேசுகிறார்கள்!!!!!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

தன் சொத்தை அல்லது வேலை வாய்ப்பை அல்லது தனது உரிமையை தட்டிப் பரித்த ஒரு சின்ன அளவு அரசியல்வியாதியை போட்டுத் தள்ளிவிட்டு "

அப்படி போட்டு தள்ளினால் அதையும் எதிர்த்து ஒரு பதிவு போடுவார் அண்ணன் உண்மைதமிழன்...

ஒண்ணும் செயவதற்கில்லை ..
”போலீஸ், கோர்ட், எல்லாமே அரசியல் வியாதிகளின் அடிமைகள்தானே???”

உங்களுக்கு தெரியுது,, எனக்கு தெரியுது... அண்ணன் உட்பட பலருக்கு தெரியவில்லையே...

சட்டம் வேலை செய்யாத நிலையில், தாமும் சட்டத்தை கையில் எடுக்கும் தைரியம் இல்லாத நிலையில், வேறு யாராவது இதை செய்தால் மக்கள் அதை கொண்டாடுகிறார்கள்.. இதை குறை சொல்வது நியாயமா?]]]

இப்படியே ஒருவர் மாற்றி ஒருவர் கொலை செய்து கொண்டிருந்தால் கடைசியில் யார்தான் இங்கே மிஞ்சுவார்..?

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
என்னண்ணே பேசுறீங்க. சூடு சொரணை எல்லாம் பார்த்தா வேலைக்காகுமா. நாம ஊழல் ஊழல்னு கத்தறதும், அவங்க ஊலலல்லான்னு பாடுருதும் வழக்கம்தானே பாஸ்.

- செங்கோவி]]]

என்னத்த சொல்றது..? இவங்களை ஏதாவது கொள்ளை நோய் கொள்ளை கொண்டு போகக் கூடாதா..?

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...
தவறுகளை சட்டம் போட்டு தடுக்க வேண்டியவர்களும், தவறுகளை தட்டிக் கேட்க வேண்டியவர்களே கைகட்டி வேடிக்கை பார்க்கும்போது சாதரண common man என்ன செய்ய முடியும்...
ஊழல் செய்துவிட்டு அதை நியப்படுத்தி வேறு பேசுகிறார்கள்!!!!!]]]

காமன்மேன், காமன்மேன்களாக உருமாற வேண்டும். அது என்றைக்கோ அன்றைக்குத்தான் இந்த அரசியல்வியாதிகளுக்கு ஆப்பு..!

ரிஷி said...

Boss one small doubt.

how come a person having less than 1.5 lakh income PA can buy / get a plot worth in crores?

Margie said...

@RISHI,

//how come a person having less than 1.5 lakh income PA can buy / get a plot worth in crores?//

That's why it must have got registered for 4 lakhs

Margie said...

சார், இவ்ளோ லபோ திபோ-ன்னு ஒரொரு தடவையும் கோப பட்டு, blog -ல எழுதறத தவிர வேற என்ன செஞ்சிரிக்றீங்க, சொல்லுங்க? (ஹீ...ஹீ...ஹீ...நான் உங்க அளவுக்கு எழுதினது கூட இல்ல). ஆனா கேப்போமில்ல.

Unknown said...

செய்தியைச் சொல்லணும்ங்கிற உங்க நோக்கம் புரியுது, ஆனா தெளிவா சொல்லியிருக்கலாம்: பிரிதிவிராஜ் சவான், "MP கோட்டா"வுல வாங்கியிருக்கேன்றாரு; அவரு அம்மா பிரேம்லாபாய் சவானும் MP (அவங்களுக்கும் சம்பள அளவு அதிகம்)!! இதுல, இந்த வீடு அலாட் ஆவுறதுக்குள்ள அம்மா இறந்துட்டாங்க‌, ஆனா புள்ள வீட்ட எடுத்துகிட்டாரு: அம்மா ஆசிர்வாதமா!

//2003-ல் எனது தாய் பிரேமிலா பாய் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது//
//அவரது அம்மாவுக்குத்தான் அந்த பிளாட் கொடுக்கப்பட்டது //
//அரசு கூட்டுறவு சங்கம்...விதிமுறை: வாங்குபவரின் வருடாந்திர வருமானம் 1.50 லட்சத்தைவிட குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்பது.//

Also see reports: “I do not think there is anything illegal in it. I was allocated the flat from the quota meant for members of Parliament,” Mr Chavan said.
The new CM also said his mother, the late Premlabai Chavan, a former MP, had requested for allotment of a flat in Mumbai as she was then undergoing treatment for cancer at the Tata Memorial Hospital. In 2003, a flat at Venus Society in Mumbai was allotted to Mr Chavan apparently in his capacity as an MP, even though in the meantime his mother had reportedly passed away.

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
Boss one small doubt. how come a person having less than 1.5 lakh income PA can buy / get a plot worth in crores?]]]

இது எனக்கும்தான் புரியலை..! ஆனால் அப்படித்தான் விதிமுறை என்று பத்திரிகைகளில் செய்தி..!

உண்மைத்தமிழன் said...

[[[Margie said...

@RISHI,

//how come a person having less than 1.5 lakh income PA can buy / get a plot worth in crores?//

That's why it must have got registered for 4 lakhs..]]]

ஹி.. ஹி.. ஒண்ணுக்கு, ஒண்ணு சரியாப் போச்சு பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[கெக்கே பிக்குணி said...

செய்தியைச் சொல்லணும்ங்கிற உங்க நோக்கம் புரியுது, ஆனா தெளிவா சொல்லியிருக்கலாம்: பிரிதிவிராஜ் சவான், "MP கோட்டா"வுல வாங்கியிருக்கேன்றாரு; அவரு அம்மா பிரேம்லாபாய் சவானும் MP (அவங்களுக்கும் சம்பள அளவு அதிகம்)!! இதுல, இந்த வீடு அலாட் ஆவுறதுக்குள்ள அம்மா இறந்துட்டாங்க‌, ஆனா புள்ள வீட்ட எடுத்துகிட்டாரு: அம்மா ஆசிர்வாதமா!

//2003-ல் எனது தாய் பிரேமிலா பாய் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது//

//அவரது அம்மாவுக்குத்தான் அந்த பிளாட் கொடுக்கப்பட்டது //

//அரசு கூட்டுறவு சங்கம். விதிமுறை: வாங்குபவரின் வருடாந்திர வருமானம் 1.50 லட்சத்தைவிட குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்பது.//

Also see reports: “I do not think there is anything illegal in it. I was allocated the flat from the quota meant for members of Parliament,” Mr Chavan said.

The new CM also said his mother, the late Premlabai Chavan, a former MP, had requested for allotment of a flat in Mumbai as she was then undergoing treatment for cancer at the Tata Memorial Hospital. In 2003, a flat at Venus Society in Mumbai was allotted to Mr Chavan apparently in his capacity as an MP, even though in the meantime his mother had reportedly passed away.]]]

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றிகள் மேடம்..!

துக்ளக்கில் வந்த கட்டுரையில் இருந்ததைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்.. மற்றபடி இது போல் தேடவில்லை..! இதனால்தான் இந்தக் குழப்பம்.. மன்னிக்கவும்..!

ராஜ நடராஜன் said...

இது எப்ப?யாரும் சொல்லவேயில்ல!

எப்படியோ வர வர துப்பறியும் ஜர்னலிஸ்ட் ஆகிட்டு வர்றீங்க.துவைச்சு காயப்போடுங்க.உங்களுக்கு மத்தளம் கொட்ட நானிருக்கிறேன்.

அப்புறம்,விக்கிலீக் அமெரிக்காவோட கோமணத்தை கழட்டிவுட்டிடுச்சு தெரியுமா?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
இது எப்ப? யாரும் சொல்லவேயில்ல!
எப்படியோ வர வர துப்பறியும் ஜர்னலிஸ்ட் ஆகிட்டு வர்றீங்க. துவைச்சு காயப் போடுங்க. உங்களுக்கு மத்தளம் கொட்ட நானிருக்கிறேன்.
அப்புறம், விக்கிலீக் அமெரிக்காவோட கோமணத்தை கழட்டிவுட்டிடுச்சு தெரியுமா?]]]

இது ரொம்ப நாளா இணையத்துல உலா வர்ற நியூஸ்தான் ஸார்..!

விக்கிலீக் மேட்டர்களை நான் இன்னமும் படிக்கவில்லை. படித்தவுடன் போட்டிருவோம்..!

ரிஷி said...

//காமன்மேன், காமன்மேன்களாக உருமாற வேண்டும். அது என்றைக்கோ அன்றைக்குத்தான் இந்த அரசியல்வியாதிகளுக்கு ஆப்பு..!//

காமன்மேன்களாக உருவாக்குவதற்கு அல்லது அப்படி உருமாறியவர்களை முறையாக ஒருங்கிணைப்பதற்கு சீரிய தலைமைப் பண்புள்ளவர்கள் வேண்டும். தைரியமாய் அப்படி முன்வரப் போகிறவர் யார் என்பதுதான் மிக முக்கிய கேள்வி.!!!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//காமன்மேன், காமன்மேன்களாக உருமாற வேண்டும். அது என்றைக்கோ அன்றைக்குத்தான் இந்த அரசியல்வியாதிகளுக்கு ஆப்பு..!//

காமன்மேன்களாக உருவாக்குவதற்கு அல்லது அப்படி உருமாறியவர்களை முறையாக ஒருங்கிணைப்பதற்கு சீரிய தலைமைப் பண்புள்ளவர்கள் வேண்டும். தைரியமாய் அப்படி முன் வரப் போகிறவர் யார் என்பதுதான் மிக முக்கிய கேள்வி!]]]

நிச்சயம் நல்ல கேள்வி..! அப்படியொரு சூரியனும் நம் கண் முன்னே இப்போதுவரையிலும் தெரியாததால் இந்தச் சாத்தியம் இதுவரையிலும் நடைபெறவில்லை..!

abeer ahmed said...

See who owns listed-in-dmoz.org or any other website:
http://whois.domaintasks.com/listed-in-dmoz.org