ஊழல்களின் தாயான ஸ்பெக்ட்ரம் ஊழலும் மகன் அ.ராசாவும்..!

18-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியாவே எதிர்பார்த்து காத்திருந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான மத்திய ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.

எதிர்பார்த்ததுபோலவே இதற்கு முன்னர் பல இந்திய ஊழல் அரசியல்வியாதிகளை வெளிக்காட்டியதைப் போலவே இந்த ஊழலையும் உரித்துத் தொங்க விட்டிருக்கிறது..!

மொத்தம் 77 பக்கங்களை கொண்டிருந்த இந்த அறிக்கையில், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு, விதிமுறைகள் எப்படி மீறப்பட்டுள்ளன என்பது தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

முதலில் அறிக்கையின் முக்கிய அம்சங்களாக பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் பார்ப்போம்..!

ரூ. 1763790000000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். மொத்தம் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று எழுபத்தியொன்பது கோடி ரூபாய்கள்.

இந்தியத் தொலைத் தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் கணக்கிட்டிருக்கும் தொகை இது.

"3 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக நடந்த ஏலம் மற்றும் அதில் பங்கேற்ற ஆபரேட்டர்கள் குறிப்பிட்ட விலையை வைத்துதான்,   "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அதிக வருவாய் கிடைத்திருக்குமே என்ற யூகத்தின் அடிப்படையில் பார்த்தபோது, இதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தெரிய வந்திருக்கின்றன.

* இந்த துறையின் அமைச்சராக இருந்த ராஜா, விதிகளை மாற்றி, அதாவது வளைந்து கொடுத்து, 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பழைய நுழைவு வரி பற்றி பரிசீலிக்காமல், 2008-ம் ஆண்டில் வந்த புதிய ஆபரேட்டர்களுக்கு ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதில், பிரதமர் கூறிய ஆலோசனையையும் புறக்கணித்துள்ளார்.

*"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட முறை வெளிப்படையாக இல்லை.  மொத்தம் 122 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.   இதில் 85 நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்த தகுதி மதிப்பீட்டை பூர்த்தி செய்யவில்லை. இந்த 85 லைசென்சுகளை 13 கம்பெனிகள் பெற்றுள்ளன.  இந்த கம்பெனிகள், நிர்ணயிக்கப்பட்ட மூலதனத்தைக் கொண்டு இருக்கவில்லை.

* வெளிப்படையான அணுகுமுறை இருக்க வேண்டும் என்ற பிரதமரின் ஆலோசனையும்,  இந்த துறையோடு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குழுவை கலந்து ஆலோசித்து செயல்படுங்கள் என்று கூறிய நிதி அமைச்சகத்தின் ஆலோசனையையும் ராஜா பொருட்படுத்தவில்லை.

* தகவல் தொடர்புத் துறை ஆணையத்தின்(டிராய்) வழிகாட்டு நெறிமுறையின்படியும் நடக்கவில்லை. இந்த விஷயத்தில், "டிராய்'  கையை கட்டிக் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் வேடிக்கை பார்த்துள்ளது.

* அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு முறைகேடாக சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு  இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

* இரட்டை தொழில்நுட்ப பயன்பாடு விஷயத்தில், 2003-ம் ஆண்டு கேபினட் எடுத்த முடிவு மீறப்பட்டுள்ளது.  அவ்வாறு கேபினட் முடிவை மீறும்போது, கேபினட் அனுமதி பெற வேண்டும். அந்த நடைமுறையும்  இங்கே  பின்பற்றப்படவில்லை.

* எவ்வித அனுபவமும் இல்லாத, "ஸ்வான்'  நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

* ஸ்பெக்ட்ரம் அலைவரிசை என்பது நமது தேசத்தின் அரிதான சொத்து. இது ஏலம் விடப்படவேண்டும்.

* இதில் பங்கேற்ற புதிய ஆபரேட்டர்களுக்கு எவ்வித விதிமுறையும் பின்பற்றப்படாமல், விலையை நிர்ணயம் செய்ததில் அக்கறையின்றி செயல்பட்டுள்ளனர்.

* வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை அளிக்கவேண்டும் என்பதற்காக கடைசி தேதியை முன்கூட்டியே வருவது போல் மாற்றியமைத்துள்ளனர்.

* கடந்த 2001-ம் ஆண்டு விலைப்படி, 51 மண்டலங்களுக்கு, லைசென்ஸ் பெற்ற 13 ஆபரேட்டர்கள் கொடுத்த  விலை ரூ.2,561 கோடி. இதே ஆபரேட்டர்கள் "3 ஜி' ஏலத்திற்கு ரூ.12 ஆயிரம்  கோடி முதல் 37 ஆயிரம் கோடிவரை கொடுத்துள்ளனர்.

* தற்போது நடைமுறையில் உள்ள ஆபரேட்டர்களுக்கு ஒதுக்கீடு செய்யும்போது நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி (6.2 மெகா ஹெர்ட்ஸ்)  தகவல் தொடர்பு துறை அனுமதி வழங்கியுள்ளது.

* இரட்டை தொழில் நுட்ப லைசென்ஸ்  35 வழங்கப்பட்டுள்ளன. இதற்கான மதிப்பீட்டு தொகை 1.52 லட்சம் கோடி ரூபாய். ஆனால், உரிமமாக பெறப்பட்ட தொகை. 12 ஆயிரத்து 386 கோடி ரூபாய்.

* ஒதுக்கீடு உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான, ஸ்வான்' நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை "எட்டிசேலட்' என்ற ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த நிறுவனத்துக்கு  4,200 கோடி ரூபாய்க்கு விற்றது.  யூனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைத் தொடர்புத் துறை லைசென்சை பெற  1,661 கோடி ரூபாய் மட்டுமே  "யூனிடெக்'  கட்டியிருந்தது.  லைசென்ஸ் மற்றொரு நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீத பங்குகளை, டோகோமோ என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு 13 ஆயிரத்து 230 கோடி ரூபாய்க்கு விற்றது.

இப்படி இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70,022.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால், தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு 10,772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது.  இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது "2 ஜி' உரிமத்தில் மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இப்படித்தான் நடந்த முறைகேடுகளையும், ஊழலையும் அம்பலப்படுத்தியிருக்கிறது கமிட்டியின் அறிக்கை.

இரண்டாண்டுகளாக இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டும் இப்படியொரு ஊழலே நடக்கவில்லை என்றுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் அனைவருமே சொல்லி வந்தார்கள்.

ஆனால் இந்திய அரசியலை நன்கு கூர்ந்து கவனித்து வரும் சாதாரண டீக்கடை முனுசாமிகூட சொல்லிவிடுவார் இதில் என்ன நடந்திருக்கும் என்று..? ஆனால் இதனை உணர்ந்து கொள்ள இந்தியாவிலேயே ரொம்ப நல்லவரான நமது பிரதமருக்கு கிட்டத்தட்ட 24 மாதங்கள் ஆகியிருக்கிறது..!

அவருடைய அறிவுரையையும் மீறித்தான் ராசா செயல்பட்டிருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தும் ராசா மீது நடவடிக்கை எடுக்க அவர் தயங்கியதற்குக் காரணம் கூட்டணி ஆட்சி என்பதாலேயே..

இதனால் தயக்கமின்றி இக்கூட்டுக் கொள்ளையை மெளனமாக வேடிக்கை பார்த்த குற்றத்திற்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களில் மன்மோகன்சிங்கும் ஒருவராகிறார்.

ஒரு பக்கம் அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இன்னொரு புறம் பார்த்தால் எரிச்சலைத் தருகிறது..! சுப்பிரமணியம் சுவாமி, ராசா மீது வழக்குப் போட அனுமதி கேட்டு விண்ணப்பித்து 15 மாதங்களாகியும் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன் என்று உச்சநீதிமன்றம் இன்றைக்கு கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிறது.

நம்மூரில் சொல்வார்களே.. நாக்கு மேல் பல்லைப் போட்டு பேசியிருக்கிறான் என்று.. அப்படித்தான் இருக்கிறது உச்சநீதிமன்றத்தின் கேள்வியும்.. என்ன பதில் சொல்லப் போகிறார் பிரதமர்..?

ராசா குற்றவாளியா.. இல்லையா.. என்பதை ஊகிக்கவோ, ஏற்கவோ, மறுக்கவோ 15 மாதங்களாகும் என்றால் இவரையெல்லாம் எப்படி பிரதமராக ஒப்புக் கொள்ள முடியும்..?

நேற்றைக்கு தினமணியில் வந்திருக்கும் ஒரு தலையங்கச் செய்தியைப் படித்தபோது இதெல்லாம் நடந்திருப்பது இந்தியாவில்தானா என்ற சந்தேகமே எழுகிறது.

1954-ல் முந்திரா ஊழல் வழக்கில் நிதித்துறை செயலாளர்தான் தவறு இழைத்திருக்கிறார் என்று விசாரணை கமிஷன் குற்றம் சாட்டி, அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட அதே நாளே அன்றைய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

இது குறித்து அவர் நேருவுக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியிருக்கும் நேரு தன் கடிதத்தில் ஒரு ஜனநாயக அரசின் பிரதமரின் கடமையும், பொறுப்பும் என்ன என்பதை தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

நேருவின் பெயரை மட்டும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இன்றைய காங்கிரஸ் கட்சியின் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது.

இந்தப் பிரச்சினைக்குள் செல்வதற்கு முன் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்..!

2007 மே 18 : தி.மு.க.வைச் சேர்ந்த ராஜா மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி ஏற்றார்.

ஆகஸ்ட் 28 : டிராய் (மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சந்தை விலை நிர்ணயம் உள்ளிட்ட பரிந்துரைகளை தொலைத்தொடர்பு அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியது.

ஆகஸ்ட் 28 : ராஜா தலைமையிலான மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் டிராயின் பரிந்துரைகளை அடியோடு நிராகரித்தது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட அதே நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது.


அதாவது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் சந்தை விலையாக ஜூன் 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை நிர்ணயம் செய்வதோடு, முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிப்பது என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது.

2001-ம் ஆண்டில் 40 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். ஆனால் 2007 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான காலத்தில், மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்திருந்தது. இதனால் 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை வசூலித்ததால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தனியார் நிறுவனங்கள் பெருமளவில் பயனடைந்து அரசுக்கு வரவேண்டிய நிதி வராமல் பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இந்த முடிவு அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

செப்டம்பர் 20-25 : "யூனிடெக்', "லூப்', "டாடாகாம்' மற்றும் "ஸ்வான்' ஆகிய நிறுவனங்கள், "2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமத்தை பெற்றன. இதில் "யூனிடெக்' மற்றும் "ஸ்வான்' ஆகிய இரு நிறுவனங்கள் தொலைத் தொடர்பு துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத நிறுவனங்கள். இவை அமைச்சர் ராஜாவுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2007 டிசம்பர்: இவ்விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சக அதிகாரி ராஜினாமா செய்தார், அப்போது, தொலைத் தொடர்புத் துறை அமைச்சக செயலாளர் ஓய்வு பெற்று விட்டார். "ஸ்வான்' நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். இதன் மூலம் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எளிதாக நிறைவேறியது.

2008 ஜனவரி 1-10: அமைச்சர் ராஜா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது முன்னாள் செயலாளராக பணியாற்றிய"சித்தார்த்தா பெகுராவை', தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் செயலாளராக நியமித்தார்.

பின்னர் தொலைத் தொடர்பு அமைச்சகம் அடுத்த 10 நாட்களில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கான ஒன்பது லைசென்ஸ் உரிமங்களை வழங்கியது. மேலே குறிப்பிடப்பட்ட நான்கு நிறுவனங்களும் ஒதுக்கீடு பெற்றன.

2008, செப்டம்பர்-அக்டோபர்: "ஸ்வான்' நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை "எட்டிசேலட்' என்ற ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த நிறுவனத்துக்கு ஏறத்தாழ 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது.  யூனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலை தொடர்புத் துறை லைசென்சை பெறுவதற்கு 1,661 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்து "யூனிடெக்' நிறுவனம் வாங்கியிருந்தது. டாடா டெலி சர்வீசஸ் தனது 26 சதவீத பங்குகளை டோகோமோ என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு 13, 230 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70,022.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன.

ஆனால் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு இந்த நிறுவனங்கள் உரிமத் தொகையாக 10,772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தின. இதனால் ஜனவரி மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த ஒன்பது "2 ஜி' உரிமத்தில் மட்டும் 60,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஜனவரி, 2008-ம் ஆண்டு வரையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மொத்தமாக 2001-ம் ஆண்டு விலை நிர்ணயத்தின்படி 122 லைசன்ஸ் வழங்கி உள்ளது.

நவம்பர் 15 : மத்திய தலைமை விஜிலென்ஸ் கமிஷன் அமைச்சர் ராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இது தொடர்பான தனது விரிவான அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியது.

2009 அக்டோபர் 21 : 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இந்த முறைகேடு தொடர்பாக நவம்பர் 29, 2008 , அக்டோபர் 31, 2009 , மார்ச் 8, 2010 , மார்ச் 13, 2010 ஆகிய தேதிகளில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி கடிதங்களை எழுதி உள்ளார்.

2010 ஏப்ரல் 12 : சுப்ரமணிய சுவாமி டில்லி ஐகோர்ட்டில் "ரிட்' மனு தாக்கல்.

அக்டோபர் 29 : மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,க்கு "2 ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், மந்தமாக செயல்படுவதாக கூறி சுப்ரீம்கோர்ட் தனது கண்டனத்தை தெரிவித்தது. "இதேபோன்ற நடைமுறையைத்தான் அனைத்து வழக்கிலும் கடைப்பிடிப்பீர்களா..?' என்று சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியது.

நவம்பர் 10: மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம், மத்திய நிதி அமைச்சகத்திடம் இது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அந்த அறிக்கையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11: மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் "2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. எனவே இது குறித்து சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை என்று தெரிவித்தது.

நவம்பர் 14: ராஜா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதுதான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளில் இதுவரையில் நடந்த கதை..!

ராசாவின் மீது குற்றம் சாட்டுவோர் வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள்தான் என்ன..?

2001-ம் ஆண்டு 40 லட்சம் மொபைல் போன்கள் இருந்த காலக்கட்டத்தில் வைக்கப்பட்ட ஏலத் தொகையையே, 35 கோடி மொபைல் போன்கள் புழக்கத்தில் இருந்த 2008-ம் ஆண்டிலும் நிர்ணயிக்க முடியுமா..? இது தவறில்லையா என்கிறார்கள்..?

இது நியாயம்தானே..? 2001-ம் ஆண்டு வாங்கிய நிலத்தை 2008-ம் ஆண்டில் விற்பனை செய்யும்போது நிலத்தின் மதிப்பு கூடியிருக்குமா? குறைந்திருக்குமா? ராசா தான் வாங்கிய ஒரு வீட்டை இப்படி எட்டாண்டுகள் கழித்து அதே விலைக்கு விற்க முன் வருவாரா..? மாட்டார் அல்லவா..? மார்க்கெட் விலைக்குத்தானே விற்க முனைவார். அந்த எண்ணம் இதில் ராசாவுக்கு ஏன் ஏற்படவில்லை என்கிறார்கள்.

ராசா சொல்கிறார் எனக்கு முன்பு இருந்த அமைச்சர்கள் கடைப்பிடித்ததைத்தான் நானும் செய்தேன் என்று.. அவர்கள் கடைப்பிடித்தது வழிகாட்டும் முறையைத்தான். இந்த வழிகாட்டும் முறையின் செயல்பாடுகள் அந்தந்த மார்க்கெட் நிலவரப்படி மாறும் என்கின்ற சிறு புத்திகூட ராசாவுக்கு இல்லையெனில் இவருக்கு எங்கே அமைச்சராகும் தகுதி இருக்கிறது..?

அடுத்தக் குற்றச்சாட்டு இதைவிட முக்கியமானது..! பகிரங்க ஏல முறையை அனுமதிக்காமல் விரைந்து ஓடி வருபவர்களுக்குத்தான் உரிமம் என்று சினிமா தியேட்டரில் டிக்கெட் கொடுப்பதைப் போல் அழைத்தது..! இது ஒன்றே போதும்.. இந்த ராசா பெரம்பலூரில் இருக்கும் ஏதாவது ஒரு தியேட்டரில் டிக்கெட் கிழிக்கக் கூட லாயக்கில்லாதவர் என்று திடமாகச் சொல்லலாம்..!

இதுவரையிலும் இப்படியொரு வினோதமான ஏலத்தை நான் எனது 20 ஆண்டுகால பொது வாழ்க்கையில் கண்டதேயில்லை.. இதிலும் எப்படியெல்லாம் குழப்படி செய்திருக்கிறார் ராசா..!? முதலில் 10 நாட்கள் அவகாசம் என்று சொல்லி காலையில் தங்களது அலுவலக இணையத்தளத்தில் செய்தியை வெளியிடுகிறார்கள். பின்பு மதியம் 2.45 மணியளவில் இன்று மாலை அலுவலக நேரத்திற்குள் முதலில் வருபவர்களுக்குத்தான் உரிமம் என்று அதே இணையத்தளத்திலேயே செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்..!

எந்த ஊர்லய்யா இப்படிச் செய்வாங்க..? இதென்ன சைக்கிள் கடையா? சைக்கிளையா ஏலத்துல விக்குறாங்க..! 1661 கோடிக்கான உரிமத் தொகையை இப்படி ஒரே நாள்ல விண்ணப்பத்தோடு, டி.டி.யோடும் மூணு மணி நேரத்துல கொண்டாந்து கொடுத்துட்டு அள்ளிட்டுப் போன்னு சொன்னா.. கேக்குறவன் கேணையனா இருந்தா எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னுகூட சொல்வாங்களே.. அந்தக் கதைதான் இது..!

விண்ணப்பம் எத்தனை பக்கங்கள் இருக்கும்? எத்தனை சான்றுகள் கேட்டிருப்பார்கள்..? 1661 கோடியை டி.டி.யா வங்கில எடுக்கணும்.. எத்தனை வேலைகள் இருக்கும்..? யோசிச்சுப் பாருங்க.. இத்தனையையும் செஞ்சு முடிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்.. அம்பானிகளாகவே இருந்தாலும் முன்கூட்டியே தெரியாமல் இதனை மூன்று மணி நேரத்தில் முடிக்க முடியாதே..? ஸோ.. இப்படி அவசரம், அவசரமாக நடத்தப்பட்ட இந்த ஏலத்திலேயே ராசாவின் முகத்திரை கிழிகிறது..! ஏதோ ஒன்று நடந்திருக்கிறது..!

அதிலேயும் அன்றைக்கு 3 மணி நேரத்தில் வந்து குவிந்த கூட்டம் அமைச்சரவை அலுவலகத்துக்குள் எக்குத்தப்பாக நுழைந்து அதகளம் செய்திருக்கின்றன. கடைசியில் டெல்லி போலீஸாரும் உள்ளே நுழைந்து லேசான தடியடி நடத்தித்தான் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள். இது எப்படி இருக்கு..?

இப்படி செய்தும் ஸ்வான், யுனிடெக் நிறுவனத்தின் எத்தனாவது நபராக வந்தார்கள்..? அவர்களுக்கு முன் வந்தவர்கள் யார் என்பதற்கெல்லாம் ராசாவிடம் இருந்து இன்றுவரையிலும் பதிலே இல்லை..

அடுத்ததைப் பாருங்கள்.. ஏலம் எடுத்த நிறுவனத்தின் லட்சணத்தை.. ஸ்வான், யுனிடெக் என்னும் இரண்டு நிறுவனங்கள்தான் 9 உரிமங்களைப் பெற்றிருக்கின்றன. ஆனால் இவைகள் இந்தத் தொலைத் தொடர்புத் துறையில் முன் அனுபவம் இல்லாதவை.. அனுபவமே இல்லாதவைகளுக்கு இத்தனை கோடி ரூபாய்க்கான உரிமத்தைக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அவசரம் என்ன..?

அதோடு இவைகள் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து வந்த சாதாரண நிறுவனங்கள். ஒரு பிளாட் முகவரியை மட்டுமே கொண்ட இந்த நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு ஏற்கெனவே தொலைத் தொடர்புத் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தும், அவைகளுக்கும் தெரியாமலும் பார்த்துக் கொண்டு கச்சிதமாக விற்பனையை முடித்திருக்கிறார் ராசா.

உரிமத்தை வாங்கிய இந்த நிறுவனங்கள் அடுத்து செய்தது என்ன..? அலுவலகம் அமைக்கவில்லை. மாநிலத்திற்கு மாநிலம் ஆட்களை நியமிக்கவில்லை.. தங்களுடைய நிறுவனப் பங்குகளை விற்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.  ஸ்வான்' நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை "எட்டிசேலட்' என்ற ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த  நிறுவனத்துக்கு  4,200 கோடி ரூபாய்க்கு விற்கிறது. இதைத் தொடர்ந்து யூனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது.

யோசித்துப் பாருங்கள்.. இப்போது இதில் யார் புத்திசாலி..? வெறும் 1661 கோடிக்கு வாங்கிய உரிமத்தை வைத்து வெறும் லெட்டர்பேட் மட்டுமே வைத்திருக்கும் ஒரு நிறுவனம் தனது நிறுவனத்தின் மதிப்பை 10000 கோடி ரூபாய்க்கு உயர்த்த முடியுமெனில் இதுவெல்லாம் திட்டமிடப்படாமல் தற்செயலாக நடந்தது என்று நம்மால் நம்ப முடியுமா..?

ஒரு உண்மையான தேசபக்தி மிகுந்த அமைச்சனாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்..? பகிரங்க ஏலத்திற்கு அத்தனை பேரையும் அழைத்து, அவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பளித்து குறைந்தபட்ச ஏலத் தொகையாக 10000 கோடியாக நிர்ணயித்து விற்றிருக்க வேண்டும்..!

அப்போது உண்மையிலேயே இந்தத் தொலைத் தொடர்புத் துறையில் இருந்துவரும் அனைத்து நிறுவனங்களும் கலந்து கொண்டிருக்கும் வாய்ப்பு இருந்திருக்கும். ஏலத் தொகை கூடி இப்போது ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கும் தொகையில் 90 சதவிகித அளவுக்காவாவது இந்திய அரசுக்குப் பணம் கிடைத்திருக்கும்.

ஆனால் இடைத்தரகர்களை வைத்து முன்கூட்டியே பேசி வைத்து, அமைச்சரவையின் தகவல்களை முன்கூட்டியே அந்த நிறுவனங்களுக்கு வெளியிட்டு, அவர்களை மட்டுமே கலந்து கொள்ள வைத்து, அதன் மூலம் அவர்களுக்கு உரிமங்களை கொடுத்துவிட்டு, பின்பு அவைகள் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யும்போது கிடைத்திருக்கும் அந்தத் தொகையில் முக்கால்வாசியை ராசா தலைமையிலான ஒரு குழு பிட்டு போட்டு எடுத்துக் கொண்டுள்ளது என்று இந்தியா முழுவதும் நம்பப்படுவதை நானும் நூறு சதவிகிதம் நம்புகிறேன்..!

தொலைத் தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத் தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறியே ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தபோதே அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எடுக்கவில்லையே.

நாடு இழந்திருக்கும் அந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ.25 லட்சத்தில் 7,05,516 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ 1 கோடியில் 1,76,379 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ.5 கோடியில் 35,275 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ.100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,763 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 14,69,825 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 35,275  கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம்.

இவ்வளவு ஏன்..? தமிழகத்தில் நான்கு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் தொகையை பிரித்துக் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் தர முடியும். ஐந்து ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர முடியும்.
 
கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக இழுத்துக்கோ, புடிச்சுக்கோ என்று ஆடிக் கொண்டிருந்த இந்த பரமபதத்தை முடித்து வைத்த பெருமை நமது போயஸ் ஆத்தாவுக்கே போய்ச் சேரும்..

எத்தனையோ பிரம்மாஸ்திரங்களை தனது அரசியல் வாழ்க்கையில் கண்டிருந்த அரசியல் சாணக்கியர் கலைஞருக்கே அன்றைக்கு போயஸ் ஆத்தாவிடமிருந்து வந்த பிரம்மாஸ்திரம் நிச்சயம் பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

கூடவே இதுவரையில் நடந்த ஊழல்களிலேயே ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் தாய் ஊழல் என்று அறைகூவல் விடுத்துள்ளார். ஒருவகையில் நாம் போயஸ் ஆத்தாவின் தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும். எத்தனையோ ஊழல் வழக்குகள் தன் மீது இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் துணிந்து, தைரியமாக இன்னமும் தாத்தாவுடன் போராடும் அந்தக் குணம் இருக்கே.. இந்தியாவிலேயே இது மாதிரியான இரும்பு மனம் யாருக்கும் இல்லைதான்.

தனது கூட்டணி என்னும் பிரம்மாஸ்திரத்தை ஏவி இந்தப் பிரச்சினையை தற்போதைக்கு சுமூகமாக முடித்து வைத்திருப்பதற்காகவும் போயஸ் ஆத்தாவுக்கு சோனியாவும், மன்மோகன்சிங்கும் நிச்சயம் மனதுக்குள் நன்றி சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் இல்லாவிட்டால் மன்மோகனசிங்கும், சோனியாவும் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பார்கள்.

ஒரு பக்கம் நாடாளுமன்றம், மறுபக்கம் சுப்ரீம் கோர்ட் என்று இரண்டு பக்கமும் அடியை வாங்கிக் கொண்டு வலிக்காதது போல் நடித்துக் கொண்டிருந்த பிரதமர் என்று சொல்லப்படும் மன்னமோகனசிங்.. எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது என்பதைப் போல் தனது இயலாமையை சோனியா ஆத்தாவிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் நமது போயஸ் ஆத்தா தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்துவிட.. இதையே சாக்காக வைத்து கூட்டணி பற்றி கட்சிதான் முடிவு செய்யும் என்று மேம்போக்காக நாங்க என்ன வேண்ணாலும் செய்வோம் என்று மன்மோகன் கொடுத்த சிக்னல் நன்றாகவே வேலை செய்தது.

தன்னைப் பற்றி ஜூனியர் விகடனில் வெளிவந்த முதல் கட்டுரையைப் படித்தவுடனேயே வீராவேசமாக எந்த அமைச்சரும் செய்யாத ஒரு காரியமாக நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை பெற்றார் ராசா. அதனை உயர்நீதிமன்றம் வரையிலும் சென்று முறியடித்த ஜூ.வி. தனது தொடர் கட்டுரைகளால் ராசாவைத் தொடர்ந்து குறி வைத்தது ஏன் என்று பத்திரிகையாளர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்தது.
 
இதற்கெல்லாம் முன்பாகவே ராசா இருந்த வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறையில் நடந்த ஊழல்கள் பற்றி தினகரன் பத்திரிகையில் வெளிவந்த கவர் ஸ்டோரியிலேயே ராசா தன்னைக் குறி வைத்திருப்பது யார் என்பதைப் புரிந்து கொண்டுதான் இருந்தார். அதனால்தான் சுற்றிவளைத்து மாறன்களுக்கு பதிலளித்தபடியே இருந்தார்.

ஆனாலும் இந்தப் பக்கம் குடும்ப லாபியினால் மாட்டிக் கொண்டு தவித்த கலைஞருக்கு அந்தப் பக்கம் ராசாவையும் விட முடியவில்லை. செயற்குழு, பொதுக்குழு என்றால் ராசாவையும், தயாநிதி மாறனையும் அருகருகே அமர வைத்து புகைப்படம் எடுத்து அதனை மட்டும் முரசொலியி்ல் வெளியிட்டு ஒண்ணுமில்லை என்றெல்லாம் சொல்லிப் பார்த்தும் இதன் பின்னணியில் அண்ணன், தம்பிகளின் சித்து விளையாட்டும் இல்லாமல் இல்லை.

கோடிகளில் குவித்திருக்க வேண்டிய பணம் இன்னொரு பக்கம் போய்விட்டதே என்ற கோபத்தில் இருந்த டெல்லிவாலாக்கள் ஒரு பக்கம்.. தங்களுக்குப் பங்கே கிடைக்காமல் மொத்தத்தையும் சுருட்டிவிட்டாரே.. நாம்தான் ஊழல் மன்னன் என்றால், இவர்கள் ஊழலுக்கு இலக்கணம் எழுதும் திறமை படைத்தவர்களாக இருக்கிறார்களே என்ற கோபத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் இன்னொரு பக்கம்..!

சர்க்காரியா கமிஷன் அறிக்கையிலேயே விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து சம்பாதித்துள்ளார்கள் என்று பாராட்டைப் பெற்ற கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இப்போதைய காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

ஆக.. திரும்பிய பக்கமெல்லாம் எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்ட ராசாவுக்கு ஒரே ஆறுதல் கலைஞர்தான். அடுத்து வரவிருக்கும் தேர்தலின் மொத்தச் செலவையும் கவனித்துக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு காத்திருக்கும் தனது அருமை உடன்பிறப்பை கை கழுவ வேண்டிய கட்டாயம். ஒரு பக்கம் துணைவி, மகள்.. இன்னொரு பக்கம் பேரன், பேத்தி எடுத்த மகன்கள், மருமகள்கள்.. யாருக்காக யார் பக்கம் பேசுவது என்பது தெரியாமல் பந்தபாசத்தில் சிக்கித் தவிக்கிறார்..

அதிகமாகப் பிள்ளை பெற்றாலும், அதிகமாகக் கொள்ளையடித்தாலும் இப்படித்தான் பிரச்சினைகள் வரும் என்று அவர் அறியாததல்ல. இந்தக் குடும்பப் பிரச்சினையில் இருந்து அவர் நல்லபடியாக மீண்டு வர என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்.

வழக்கு இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. ஒரு பக்கம் வருமான வரித்துறையும், சி.பி.ஐ.யும், அமலாக்கப் பிரிவும் விசாரணை நடத்தி வருகின்றன. சுப்பிரமணியன் சுவாமி போட்ட வழக்கில் ராசா மீது வழக்குத் தொடர இனி அவருக்குத் தடையில்லை என்றாகிவிட்டது. இனி சுவாமியே ராசா மீது வழக்கைத் தொடரலாம்.

ஆனால் இந்தக் களேபரத்தில் நாடாளுமன்றம் வேறு சிக்கிக் கொண்டு தவிக்கிறது. தினம்தோறும் பல கோடிகளை செலவழித்து நடக்கும் நாடாளுமன்றம் கடந்த சில நாட்களாக இந்த பிரச்சினைக்காகவே முடங்கிக் கிடக்கிறது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைப்பதற்கு முக்கியக் காரணம், அத்தனை ஆவணங்களும் அவர்கள் முன் வைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு. இன்னொன்று.. இதில் தேவைப்பட்டால் ராசாவை நேரில் அழைத்து விசாரிக்க முடியும் என்கிற வசதியும் இருக்கிறது என்பதால்தான்.

பொதுக் கணக்குக் குழுவுக்கு பா.ஜ.க.வின் முரளிமனோகர்ஜோஷி தலைவராக இருந்தாலும் அவர் எழுத்து மூலம் கேள்விகளை எழுப்பலாம். அதற்கு அதிகாரிகள் ஏற்கெனவே தயாராக இருக்கும் பதில்களை சமர்ப்பித்தால் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் என்று சொல்லி அந்த இடத்தை பில்லப் செய்து அறிக்கையைத் தயார் செய்ய வேண்டியதுதான்..

இதனாலேயே எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டு விசாரணையை எதிர்பார்க்கிறார்கள். லின்க் எங்கே போகும் என்றே தெரியாமல் இதில் காலைவிட காங்கிரஸ் தயாராக இல்லை. மிக விரைவில் சில மாநிலங்களில் தேர்தல்களும் நடத்த வேண்டியிருப்பதால், குறிப்பாகத் தமிழ்நாட்டில் தனது கட்சிக்கு இதனால் பிரச்சனையாகிவிடுமே என்று பயப்படுகிறார்கள். இதனாலேயே அவர்கள் இதனை எதிர்க்கிறார்கள்..!

மொத்தத்தில் அவரவர்க்கு அவரவர் பாடு. ஆனால் நாட்டு மக்களாகிய நாம் இதனை மறப்பதற்கு என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாதே....!?



அவசியம் இவைகளையும் படியுங்கள் :


http://truetamilans.blogspot.com/2010/07/blog-post_14.html




http://savukku.net/index.php?option=com_content&view=article&id=163:2010-11-15-20-03-33&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2



http://savukku.net/index.php?option=com_content&view=article&id=165:2010-11-18-12-48-20&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2


http://dondu.blogspot.com/2010/11/01.html


http://dondu.blogspot.com/2010/11/02.html


http://dondu.blogspot.com/2010/11/03.html

82 comments:

ராஜ நடராஜன் said...

ஸ்பெக்ட்ரம் பிராது உங்ககிட்ட சொல்லி நாள் 3 ஆகுது.மெதுவா வர்றீங்க:)

ராஜ நடராஜன் said...

அதென்ன இரண்டு நாளா எனக்கே முதல் வடை சூடா கிடைக்குது:)

ரெகுலர் கஷ்டம் ர்ங்கிறதால தனியா கவனிக்கிறீங்களோ:)

ஜெய்லானி said...

அடுத்த வாரம் வேர நியூஸ் வந்தா இதை மறந்துடுவாங்க ..!! அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா

நசரேயன் said...

//ரெகுலர் கஷ்டம் ர்ங்கிறதால தனியா கவனிக்கிறீங்களோ:)//

இங்கயும் ஊழல் நடக்கு, வேற என்ன சொல்ல

Unknown said...

ஒரு வேலை உணவுக்கும், ஒரு மாத வீட்டு வாடகைக்கும் அலையக்கூடிய எத்தனையோ மனிதர்கள் நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு தலைவர் தம் குடும்ப நலனுக்காக செய்த ஊழல் மனித வாழ்முறையையே கேலிசெய்திருக்கிறார்.(கனி தான் இந்த ஊழலின் பின்புலம் என்பது சகலருக்கும் தெரியும், அவர்தான் இந்த ஊழலின் ஊற்றுக்கண் என்பது கிசுகிசு அனைத்து ஆங்கில ஊடகங்களையும் கவனித்து பாருங்கள்).. தன் சுகபோகத்திற்காக ஒரு இனத்தையே காட்டிகொடுத்து கொன்றவர்.. இந்த லட்சம் கோடிஎல்லாம் சாதாரணம். நீங்க சொன்னீங்களே போயஸ் ஆத்தா அவளும் சாதாரணமானவங்க இல்ல.. இலட்சம் பேரக்கொன்னுட்டுக்கூட ஆட்சி பிடிச்சிடனும்னு பதவிக்காகவும் சொகுசுக்காகவும் வெறியா அலையறவங்கதான். இவங்களையெல்லலாம் கொள்ளைநோய் தூக்கிட்டுபோகாதா... கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். ஆனால் கடவுள் இரத்தம் குடிக்கும் பேய்களை போற்றி வளர்க்கிறார். விசித்திரம் தான்.

ராஜ நடராஜன் said...

//இங்கயும் ஊழல் நடக்கு, வேற என்ன சொல்ல//

நசரு!அவசரமா அண்ணன்கிட்ட கேள்வியொன்னு கேட்க வேண்டியிருக்குது,உங்க விசாரணைக் கமிசனை அப்புறமா வச்சிக்கிலாம்.பிரதமரே 2 வருசம் உம்ன்னு இருக்கற போது நீங்க பொறுக்கறதுல தப்பே இல்ல.

சம்பத் said...

என்ன நடந்தது என்பது கடவுளுக்கே வெளிச்சம்..எங்கேயுமே பெரிய மனிதர்கள் தப்பு செஞ்சா எப்படியும் வெளியே வந்துடுவாங்க..நம்ம இதுவரைக்கும் பார்க்காததா?

R. Gopi said...

தலைவரே, உங்க பொறுமையின் ரகசியம் என்ன? எப்படி உங்களால் இவ்வளவு பெரிய பதிவைப் பொறுமையாகப் போட முடிகிறது? எனக்கு நாலு பாரா டைப் பண்ணாலே நாக்கு தள்ளுது.

ராஜ நடராஜன் said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.நம்மளுக்கு தேர்தல் நேரத்துல கிடைக்கிற ஓசி பிரியாணி,சரக்கு,தேர்தல் நேரத்து பணப்படையலுக்கும் மற்றும் இலவசங்களுக்கும் ஸ்பெக்ட்ரத்துக்கும் கொடுக்கல் வாங்கல் ஏதாவதுமில்லையே?

ராஜ நடராஜன் said...

//கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக இழுத்துக்கோ, புடிச்சுக்கோ என்று ஆடிக் கொண்டிருந்த இந்த பரமபதத்தை முடித்து வைத்த பெருமை நமது போயஸ் ஆத்தாவுக்கே போய்ச் சேரும்..//

இது அழுகுணி ஆட்டமா உங்களுக்கு தோணல? காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையிது.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

கோர்ட் பர்மிஷனுடன் சிபிஐ டேப் செய்துவைத்துள்ள நீரா ராடியா-ராசா-மற்றும் பலருடைய மாதக்கணக்கான உரையாடல்கள், வியாபாரப் பேரங்கள், சிபிஐ வசம் உள்ள மிகவும் ஸ்ட்ராங்கான கேஸை நமுத்துப்போக காங்கிரஸ் செய்யும் அட்டூழியங்கள், ஆபீசர்களின் அதிரடி டிரான்ஸ்ஃபர்கள், எல்லாமே தெரிந்தும், கைவசம் ஐபி(IB)யே இருந்தும் மௌனம் காத்து சோனியாவுக்கு ஜால்ரா அடிக்கும் பிரதமர் -இவர்களையும் போட்டுக் கிழியுங்கள்.

சுப்ரமணியன் ஸ்வாமி விடாமல் போட்டு உலுக்கியதால்தான், சுப்ரீம் கோர்ட் உதவியுடன், லேட்டாகவாவது சில தலைகள் உருள ஆரம்பித்திருக்கின்றன. இல்லையென்றால் எல்லா பூசணிக்காய்களையும் ஒரு கவள சோற்றில் மறைத்திருப்பார்கள்.

வெட்கம், வெட்கம்!

ராஜ நடராஜன் said...

//மொத்தத்தில் அவரவர்க்கு அவரவர் பாடு. ஆனால் நாட்டு மக்களாகிய நாம் இதனை மறப்பதற்கு என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாதே....!?//

உஷ்!அப்பாடா!ஒரு வழியா பதிவை படிச்சு முடிச்சுட்டேன்:)கடைசியா அடைப்பானுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுக்கறேன்.

மறப்போம்.மன்னிப்போம்.

வாசகன் said...

என் பாசத்திற்குரிய உண்மைத்தமிழன் அண்ணே,

இந்தப்பதிவையும் படிச்சுப்போட்டுப் பார்த்துப்போட்டு போங்கண்ணே! இதனால சந்தோசமடைஞ்சவங்க பேர்லாம் பாருங்கண்ணே



அப்புறம், கலைஞ்சர் சாரு, இதெல்லாம் அனுமானத்துல சொல்லப்படற நட்டம் சொல்லிக்கீறாரே, நீங்க என்ன நினைக்கிறீங்கன்ணே?

வாசகன் said...

சாரிண்ணே, லிங்க் கொடுத்தும் பதியப்படல.
http://www.inneram.com/2010111611938/rajas-resignation-and-dmk-vips

a said...

m..... ontrum solvatharkku illai..

மாணவன் said...

//அதிகமாகப் பிள்ளை பெற்றாலும், அதிகமாகக் கொள்ளையடித்தாலும் இப்படித்தான் பிரச்சினைகள் வரும் என்று அவர் அறியாததல்ல. இந்தக் குடும்பப் பிரச்சினையில் இருந்து அவர் நல்லபடியாக மீண்டு வர என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..//

தெளிவான பார்வை கலக்கலாக எழுதியுதியுள்ளீர்கள் சார்,

என்ன செய்வது வேறொன்றும் சொல்வதற்கில்ல்லை

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

PB Raj said...

வழக்கம் போல ரொம்ப சுடு!
வீட்டு வாடகை கட்ட முடியவில்லை நமக்கு,நீக்க வேற கோடியை பற்றி என்னமோ போங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல விரிவான ரிபோர்ட்

Unknown said...

தெளிவான, மிக அருமையான கட்டுரை. இவ்வளவு விஷயங்கள் நடந்திருந்தும் ஒன்றும் அறியாதவர்கள் போல ராசாவின் ஊழலை ஆதரிக்கும் ’கம்சன்’களை என்ன செய்வது சொல்லுங்கள்... எனக்குக் ----- த்தான் தோன்றுகிறது. சே!

//இந்தக் குடும்பப் பிரச்சினையில் இருந்து அவர் நல்லபடியாக மீண்டு வர என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்//

ஆமாமா... அப்போதானே அடுத்து என்ன புதுசாச் செய்யலாம்னு யோசிக்க முடியும்.

குழலி / Kuzhali said...

இதை முதலில் அறிவுஜீவி பத்ரி சேஷாத்ரிக்கு அனுப்பிவைங்க....

எஸ்.கே said...

//மொத்தத்தில் அவரவர்க்கு அவரவர் பாடு. ஆனால் நாட்டு மக்களாகிய நாம் இதனை மறப்பதற்கு என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாதே.// இதான் நம்ம நிலைமை!

Thomas Ruban said...

சிறப்பான நல்ல விளக்கமான பதிவை கொடுத்தமைக்கு நன்றி அண்ணே.

இந்த மாதிரியான ஊழல்கள் இந்தியாவை இன்னும் சில படிகள் அழிவை நோக்கி நகர்த்தி கொண்டிருக்கிறது.

சமூக அக்கறையுள்ள பதிவுகளை எழுதும் பல அறிவுஜீவிகள், ராசாவிற்கு (ஊழலை ஆதரித்து) பி.ஆர்.ஓ வேலைகளை
பார்க்கிறார்கள்...இந்த கொடுமையை என்னவென்பது.

Muthukumara Rajan said...

மிக விளக்கமான அருமையான பதிவு.
மறதி என்ற வியாதி இருக்கும்வரை இந்த ஊழல்கள் எல்லாம் நடக்க தான் செய்யும் .

இந்திய உள்ள அனைத்து துறைகளிலும் வெளிப்படியான நடை முறை வேண்டும் .

ராஜா வின் டைம்ஸ் நொவ் பேட்டியை பார்க்கவும் என்ன தெனாவட்டா பேசுகிறார்.
என்ன செய்ய விதி வேறு என்ன சொல்ல.

இதுல விமான நிலையத்தில் வரவேற்ப்பு வேற.

அட போக பாஸ் கடுப்பா இருக்கு

தமிழுடன்
முத்துக்குமார்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரூ. 1763790000000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். மொத்தம் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று எழுபத்தியொன்பது கோடி ரூபாய்கள்.

//

அண்ணே.. இதுமாறீ நம்பரை பார்த்தா தலை சுத்துது..

ஹி..ஹி..

டீ சாப்பிட வந்தேன்.. மறந்தாப்புல(?), பணம் கொண்டுவரலே..

ஒரு 5 ரூபாய் கிடைக்குமா?.

காசு கொடுக்கிலேனா, கட்டி வெச்சு உதைப்பேனு கடைக்காரன் மிரட்டுரான்.. ஹி..ஹி

Prakash said...

Every one quote CAG report on Spectrum, Particularly Jayalalitha even asks to arrest Raja based on CAG reports. The same JJ, when CAG pointed revenue loss of 11,000 Crores for TN government in 2004, whether she has resigned or got arrested?

Instead, JJ gave a one page advertisement on all National News papers on Friday, 6th August, 2004 stating that CAG report is just a Govt audit report and argued that there was no actual loss of revenue.

Pls refer the advertisement on 11th Page, Times Of India (Mumbai Edition)dated 6th August 2004.

http://epaper.timesofindia.com/Default/Client.asp?skin=pastissues2&enter=LowLevel&AW=1289923326765

Any Audit Authorities shall raise doubts and Queries on the subject they conduct Audit. Even raises Non-Conformities (NCs) and Observations. But they are NOT final, if sufficient proofs and justifications are given, those Audit Observations and Queries shall be closed. This is normal audit practice, in this Spectrum Case also, DoT & Telecom Ministry shall explain on what basis they allotted the Spectrum and it’s a Govt Policy decision.

Now the same JJ and others quote CAG report to target Raja, if it comes to them CAG is just a report, for others it is a Final Judgment and those should be prosecuted immediately.

Unknown said...

இதெல்லாம் முன்பே தெரியாத முட்டாள் இல்லை மண்ணுமோகன் சிங்.

தமிழ் இன கருவறுப்பை கண்டுகொள்ளாமல் இருக்க தமிழ் ஈனத்தலைவர் கருணாவுக்கு கொடுத்த கமிஷன் என்று நன்கு தெரிந்தே, கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவிற்கு வராமலா போகும் கமுக்கமாக இருந்திருக்கிறார்.

ராசா இதில் ஒரு ஏஜெண்ட்தானே தவிர, முழுவதும் அவரே ஆட்டையைப் போட்டிருக்க முடியாது.
அடித்துக் கொடுத்த பணத்திற்கு அவருக்கு ஏதாவது பிச்சை இடப்பட்டிருக்கும்.

SurveySan said...

ஹ்ம். இதுவும் கடந்து போகும்.

Unknown said...

தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் அன்பு அண்ணன், அதை தவிர அவர் வேறு என்ன தவறு செய்து விட்டார்...? தேவை இல்லாமல் ஆங்கில ஊடகங்கள் 2G அலைக்கற்றை விஷயத்தை பெரிது படுத்துகின்றன. இது ஒரு பின் தங்கிய வகுப்பை சார்ந்தவர், அதுவும் ஒரு தமிழன் மத்திய அமைச்சராக மிகவும் சிறப்பான முறையில், தாழ்த்தப் பட்ட மக்களின் உயர்வும் நல்வாழ்வும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு இரவு பகல் பாராமல் உழைப்பதை பார்த்து பொறுக்கமாட்டாத சக்திகளின் சூழ்ச்சி.

அடுத்த முறை மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அண்ணன் அவர்களுக்கு எப்படியாவது பிரதமர் பதிவியை பெற்று தந்து விடவேண்டும். இலங்கையில் மட்டுமல்ல இந்த உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் தமிழனையும் அழித்தாகிலும் பிரதமர் பதவியை பெற்று விடவேண்டும். அது தான் பெரியாரும், அண்ணாவும் வகுத்து தந்த சமுதாய சீர்திருத்த பாதையில் செல்லும் நமக்கெலாம் மிகப் பெரும் பெருமை.

வாழ்க டாஸ்மாக், வாழ்க இலவசங்கள், வாழ்க தமிழ் மக்கள்.

Prakash said...

2ஜி அலைவரிசை முதன் முதலில் ஒதுக்கப்பட்டபோது airtel பிரமோத் மகாஜனை அணுகியது..போட்டியில்லாமல் எங்களுக்கே அலைவரிசையை கொடுத்து விடுங்கள்..வருடத்திற்க்கு 300 கோடி என எடுத்துக்கொள்கிறோம்...என கேட்டது...பிரமோத் தும் அள்ளி கொடுத்தார்

2021 வரை இந்த லைசன்ஸ்உரிமை செல்லும்..இதற்கு கைமாறாக பிரமோத்துக்கு 5000 கோடி கொடுக்கப்பட்டது...airtel life time ல் 2021 என வரும்..பார்த்திருப்பீருப்பீர்கள்..அது அதன் லைசன்ஸ் காலத்தை குறிக்கிறது.
அதே 3ஜி அலைவரிசையை இப்போது அதெ கம்பெனி 30,000 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது என்றால் airtel அடித்த கொள்ளை எவ்வளவு என கணக்கு போட்டு பாருங்கள்..இது வருடம் ஒன்றிற்கு மட்டுமே..airtel மளமள வென முன்னேறி இந்தியாவின் தொலை தொடர்பில் முதலிடத்தில் பிடிக்க இது ஒரு முக்கிய காரணம்...

5000 கோடி அவர் வாங்கியது அனைத்து மீடியாவிற்க்கும் தெரியும் ...எதிர்கட்சியாய் இருந்த காங்கிரஸ்க்கும் தெரியும்..போபர்ஸ் ஊழல் பற்றி பிஜேபி மீண்டும் மீண்டும் ஊதி பெரிதாக்கி காங்கிரசை பிஜேபி முடக்கி வைத்திருந்த காலம் அது...அப்போது காங்கிரஸ் வாய் மூடி நின்ற பலனை இன்று அனுபவிக்கிறது..காங்கிரஸ் ..அன்று சும்மா இருந்த மீடியாக்களும் இன்று ஸ்பெக்ட்ரமை ஊதி பெரிதாக்குவதின் காரணம் வட இந்திய மீடியாக்கள் கலைஞரை வெறுப்பதே காரணம்...

பார்ப்பனர்களை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்பவர் ..20 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியை பெற்றவர் என்பதால்...வட இந்திய மீடியாக்களும்..வட இந்திய எம்.பி க்களும்..சில காங்கிரஸ் எம்.பி.க்களும் தி.மு.க வை ஒழிக்க முயற்சிக்கின்றன..அதற்கு அல்வாவாக கிடைத்ததுதான் ராசா மேட்டர்
இன்றும் கூட..சூத்திரனுக்கு ஒரு மரியாதை ..பார்பனுக்கு ஒரு மரியாதையோ என பாரதியின் வரிகளை எடுத்துப்போட்டு ஜெயலலிதாவை வறுத்து எடுத்திருக்கிறார் கலைஞர்..இது போன்ற அறிக்கைகளால்தான்..,பார்ப்பன பத்திரிக்கைகளான..இந்து,இந்தியன் எக்ஸ்பிரஸ்,ஜூனியர் விகடன்,இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை ஸ்பெக்ட்ரமை செமையாக ஊதின...தி.மு.க வின் இமேஜை காலி செய்தன.ஜுனியர் விகடன் மட்டும் 2007 முதல் 12 கவர் ஸ்டோரிகள் ஸ்பெக்ட்ரம் பற்றி வெளியிட்டுள்ளன..

குரங்குபெடல் said...

நல்லபதிவு . . .நன்றி . .

Subramanian said...

This prakash seems to be a stooge of the DMK.Going around all blogs & espousing support for Raja.Till such people are available many more scams will be committed even in the future.Where the hell is the need to bring in caste here.

Ravichandran Somu said...

மிகத் தெளிவான கட்டுரை!

ராஜரத்தினம் said...

உண்மைத்தமிழனிடமிருந்து ஒரு நல்ல கட்டுரை. வாழ்த்துகள். (வாழ்த்துக்கள் இல்லை)

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
ஸ்பெக்ட்ரம் பிராது உங்ககிட்ட சொல்லி நாள் 3 ஆகுது. மெதுவா வர்றீங்க:)]]]

கொஞ்சம் வேலை ஜாஸ்திங்கண்ணா.. அதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
அதென்ன இரண்டு நாளா எனக்கே முதல் வடை சூடா கிடைக்குது:)
ரெகுலர் கஷ்டம்ர்ங்கிறதால தனியா கவனிக்கிறீங்களோ:)]]]

நீங்க எனக்காக அர்த்த ராத்திரிலேயும் காத்திருக்கீங்களோ..? அதுனாலதான் முதலிடம் கிடைக்குது..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெய்லானி said...
அடுத்த வாரம் வேர நியூஸ் வந்தா இதை மறந்துடுவாங்க..!! அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா.]]]

அடுத்ததும் வந்திருச்சு. கர்நாடகாவில் எடியூரப்பாவின் நில விற்பனை ஊழல்..! எங்கெங்கு காணினும் ஊழலடா..!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...

//ரெகுலர் கஷ்டம் ர்ங்கிறதால தனியா கவனிக்கிறீங்களோ:)//

இங்கயும் ஊழல் நடக்கு, வேற என்ன சொல்ல..?]]]

இதுக்கெல்லாம் சி.பி.ஐ. விசாரணை கேக்கப்படாது நசரேயன்..!

உண்மைத்தமிழன் said...

[[[kama said...
இவங்களையெல்லலாம் கொள்ளை நோய் தூக்கிட்டு போகாதா..? கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். ஆனால் கடவுள் இரத்தம் குடிக்கும் பேய்களை போற்றி வளர்க்கிறார். விசித்திரம்தான்.]]]

எனக்கும் இந்த அளவுக்கான கோபம் உண்டுதான்.. காலத்தின் கோலம்தான் எனக்கும் புரியவில்லை..! இந்த மாதிரியான அயோக்கியர்களுக்குத்தானே இங்கே வாழ்க்கை கிடைக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//இங்கயும் ஊழல் நடக்கு, வேற என்ன சொல்ல//

நசரு! அவசரமா அண்ணன்கிட்ட கேள்வியொன்னு கேட்க வேண்டியிருக்குது, உங்க விசாரணைக் கமிசனை அப்புறமா வச்சிக்கிலாம். பிரதமரே 2 வருசம் உம்ன்னு இருக்கறபோது நீங்க பொறுக்கறதுல தப்பே இல்ல.]]]

எனக்கான பதிலுரைக்கு ஹின்ட்ஸ் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[சம்பத் said...
என்ன நடந்தது என்பது கடவுளுக்கே வெளிச்சம். எங்கேயுமே பெரிய மனிதர்கள் தப்பு செஞ்சா எப்படியும் வெளியே வந்துடுவாங்க. நம்ம இதுவரைக்கும் பார்க்காததா?]]]

பணமும், அதிகாரமும் எதுவும் செய்யும்..! அதுவும் இந்தியாவில் தலைவிரித்தாடுகிறது இந்தக் கொடூரம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Gopi Ramamoorthy said...
தலைவரே, உங்க பொறுமையின் ரகசியம் என்ன? எப்படி உங்களால் இவ்வளவு பெரிய பதிவைப் பொறுமையாகப் போட முடிகிறது? எனக்கு நாலு பாரா டைப் பண்ணாலே நாக்கு தள்ளுது.]]]

மொதல்ல எனக்கும் இப்படித்தான் இருந்தது. அப்புறம் அடிக்க, அடிக்க பழகிப் போச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். நம்மாளுக்கு தேர்தல் நேரத்துல கிடைக்கிற ஓசி பிரியாணி, சரக்கு, தேர்தல் நேரத்து பணப் படையலுக்கும் மற்றும் இலவசங்களுக்கும் ஸ்பெக்ட்ரத்துக்கும் கொடுக்கல் வாங்கல் ஏதாவதுமில்லையே?]]]

நிச்சயமா தொடுப்பு இருக்கு..! அதில் கிடைத்த பணத்தைதான் அடுத்த தேர்தலில் அள்ளிவிடப் போகிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக இழுத்துக்கோ, புடிச்சுக்கோ என்று ஆடிக் கொண்டிருந்த இந்த பரமபதத்தை முடித்து வைத்த பெருமை நமது போயஸ் ஆத்தாவுக்கே போய்ச் சேரும்..//

இது அழுகுணி ஆட்டமா உங்களுக்கு தோணல? காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையிது.]]]

இல்லை.. ஜெயலலிதாவின் இந்த அறிக்கையை காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குச் சாதகமாக நன்கு பயன்படுத்திக் கொண்டனர்..

உண்மைத்தமிழன் said...

[[[லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

கோர்ட் பர்மிஷனுடன் சிபிஐ டேப் செய்து வைத்துள்ள நீரா ராடியா-ராசா-மற்றும் பலருடைய மாதக்கணக்கான உரையாடல்கள், வியாபாரப் பேரங்கள், சிபிஐ வசம் உள்ள மிகவும் ஸ்ட்ராங்கான கேஸை நமுத்துப்போக காங்கிரஸ் செய்யும் அட்டூழியங்கள், ஆபீசர்களின் அதிரடி டிரான்ஸ்ஃபர்கள், எல்லாமே தெரிந்தும், கைவசம் ஐபி(IB)யே இருந்தும் மௌனம் காத்து சோனியாவுக்கு ஜால்ரா அடிக்கும் பிரதமர் -இவர்களையும் போட்டுக் கிழியுங்கள்.]]]

உண்மையில் இவர்கள் குற்றத்தை மறைக்க முயன்ற குற்றவாளிகள்தான். சந்தேகமேயில்லை ராம்..!

[[[சுப்ரமணியன் ஸ்வாமி விடாமல் போட்டு உலுக்கியதால்தான், சுப்ரீம் கோர்ட் உதவியுடன், லேட்டாகவாவது சில தலைகள் உருள ஆரம்பித்திருக்கின்றன. இல்லையென்றால் எல்லா பூசணிக்காய்களையும் ஒரு கவள சோற்றில் மறைத்திருப்பார்கள்.
வெட்கம், வெட்கம்!]]]

சாமிக்கு ஒரு ஜே போடலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//மொத்தத்தில் அவரவர்க்கு அவரவர் பாடு. ஆனால் நாட்டு மக்களாகிய நாம் இதனை மறப்பதற்கு என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாதே....!?//

உஷ்! அப்பாடா! ஒரு வழியா பதிவை படிச்சு முடிச்சுட்டேன்:) கடைசியா அடைப்பானுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுக்கறேன். மறப்போம். மன்னிப்போம்.]]]

மறப்பதாவது.. மன்னிக்கிறதாவது.. இப்படியே விட்டால் கடைசியா நம்மகிட்ட இருக்குற கோவணத்தையும் உருவிருவானுக..!

உண்மைத்தமிழன் said...

[[[வாசகன் said...
என் பாசத்திற்குரிய உண்மைத்தமிழன் அண்ணே, இந்தப் பதிவையும் படிச்சுப் போட்டுப் பார்த்துப் போட்டு போங்கண்ணே! இதனால சந்தோசமடைஞ்சவங்க பேர்லாம் பாருங்கண்ணே. அப்புறம், கலைஞ்சர் சாரு, இதெல்லாம் அனுமானத்துல சொல்லப்படற நட்டம் சொல்லிக்கீறாரே, நீங்க என்ன நினைக்கிறீங்கன்ணே?]]]

அனுமானத்திலேயே லாபம் வரும் என்று கூகித்து செயல்படத் தெரியாதவரையெல்லாம் அமைச்சர் பதவியில் வைத்திருப்பது யாருடைய குற்றம்..!?

உண்மைத்தமிழன் said...

[[[வாசகன் said...

சாரிண்ணே, லிங்க் கொடுத்தும் பதியப்படல.

http://www.inneram.com/2010111611938/rajas-resignation-and-dmk-vips]]

நன்றி வாசகன்..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
m..... ontrum solvatharkku illai..]]]

நீங்க என்னைக்குத்தான் வாயத் தொறந்து சொல்லியிருக்கீங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[மாணவன் said...

//அதிகமாகப் பிள்ளை பெற்றாலும், அதிகமாகக் கொள்ளையடித்தாலும் இப்படித்தான் பிரச்சினைகள் வரும் என்று அவர் அறியாததல்ல. இந்தக் குடும்பப் பிரச்சினையில் இருந்து அவர் நல்லபடியாக மீண்டு வர என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..//

தெளிவான பார்வை கலக்கலாக எழுதியுதியுள்ளீர்கள் சார். என்ன செய்வது வேறொன்றும் சொல்வதற்கில்ல்லை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்.]]]

வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...
வழக்கம் போல ரொம்ப சுடு!
வீட்டு வாடகை கட்ட முடியவில்லை நமக்கு, நீக்க வேற கோடியை பற்றி என்னமோ போங்க..]]]

எனக்கும் இதே நிலைமைதான் ராஜ்..! அதுதான் கோபமும் பொங்கி வருகிறது.

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நல்ல விரிவான ரிபோர்ட்.]]]

நன்றி ரமேஷ் தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[anangan said...
தெளிவான, மிக அருமையான கட்டுரை. இவ்வளவு விஷயங்கள் நடந்திருந்தும் ஒன்றும் அறியாதவர்கள் போல ராசாவின் ஊழலை ஆதரிக்கும் ’கம்சன்’களை என்ன செய்வது சொல்லுங்கள்... எனக்குக் ----- த்தான் தோன்றுகிறது. சே!]]]

-))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[குழலி / Kuzhali said...
இதை முதலில் அறிவுஜீவி பத்ரி சேஷாத்ரிக்கு அனுப்பி வைங்க.]]]

இந்த விவகாரத்தில் அவருடைய நிலைப்பாடு எனக்கும் அதிர்ச்சியாகத்தான் உள்ளது..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
//மொத்தத்தில் அவரவர்க்கு அவரவர் பாடு. ஆனால் நாட்டு மக்களாகிய நாம் இதனை மறப்பதற்கு என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாதே.//

இதான் நம்ம நிலைமை!]]]

வேறென்னத்த ஸார் சொல்றது..? தினத்துக்கு ஒரு ஊழல்ன்னு வெளில வந்தா எவ்ளோதான் திட்டுறது..?

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...

சிறப்பான நல்ல விளக்கமான பதிவை கொடுத்தமைக்கு நன்றி அண்ணே.

இந்த மாதிரியான ஊழல்கள் இந்தியாவை இன்னும் சில படிகள் அழிவை நோக்கி நகர்த்தி கொண்டிருக்கிறது.

சமூக அக்கறையுள்ள பதிவுகளை எழுதும் பல அறிவுஜீவிகள், ராசாவிற்கு (ஊழலை ஆதரித்து) பி.ஆர்.ஓ வேலைகளை
பார்க்கிறார்கள். இந்த கொடுமையை என்னவென்பது.]]]

அதுதான் எனக்கும் புரியவில்லை..! விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும், ஊழலையும் அவர்கள் ஒரு சேர பார்க்கிறார்கள் என்றே நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[muthukumar said...

மிக விளக்கமான அருமையான பதிவு. மறதி என்ற வியாதி இருக்கும்வரை இந்த ஊழல்கள் எல்லாம் நடக்கதான் செய்யும் .

இந்திய உள்ள அனைத்து துறைகளிலும் வெளிப்படியான நடைமுறை வேண்டும் .

ராஜாவின் டைம்ஸ் நொவ் பேட்டியை பார்க்கவும் என்ன தெனாவட்டா பேசுகிறார். என்ன செய்ய விதி வேறு என்ன சொல்ல. இதுல விமான நிலையத்தில் வரவேற்ப்பு வேற. அட போக பாஸ் கடுப்பா இருக்கு

தமிழுடன்
முத்துக்குமார்]]

கொலை வெறியாக இருக்கிறது முத்துக்குமார்..! ஊழலையும் செய்துவிட்டு அதற்குப் பின்னும் வியாக்கியானம் பேசுவதற்கு அரசுகளே முன் வருகின்றன பாருங்கள். இது மிக மிகக் கொடுமை..!

உண்மைத்தமிழன் said...

[[[பட்டாபட்டி.. said...

ரூ. 1763790000000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். மொத்தம் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று எழுபத்தியொன்பது கோடி ரூபாய்கள்.

// அண்ணே.. இதுமாறீ நம்பரை பார்த்தா தலை சுத்துது.. ஹி..ஹி..
டீ சாப்பிட வந்தேன்.. மறந்தாப்புல(?), பணம் கொண்டு வரலே. ஒரு 5 ரூபாய் கிடைக்குமா?. காசு கொடுக்கிலேனா, கட்டி வெச்சு உதைப்பேனு கடைக்காரன் மிரட்டுரான்.. ஹி.. ஹி]]]

ராஜாவோட ஜாதிக்காரன்னு சொல்லுங்க.. விட்ருவாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

Every one quote CAG report on Spectrum, Particularly Jayalalitha even asks to arrest Raja based on CAG reports. The same JJ, when CAG pointed revenue loss of 11,000 Crores for TN government in 2004, whether she has resigned or got arrested?

Instead, JJ gave a one page advertisement on all National News papers on Friday, 6th August, 2004 stating that CAG report is just a Govt audit report and argued that there was no actual loss of revenue.

Pls refer the advertisement on 11th Page, Times Of India (Mumbai Edition)dated 6th August 2004.

http://epaper.timesofindia.com/Default/Client.asp?skin=pastissues2&enter=LowLevel&AW=1289923326765

Any Audit Authorities shall raise doubts and Queries on the subject they conduct Audit. Even raises Non-Conformities (NCs) and Observations.

But they are NOT final, if sufficient proofs and justifications are given, those Audit Observations and Queries shall be closed. This is normal audit practice, in this Spectrum Case also, DoT & Telecom Ministry shall explain on what basis they allotted the Spectrum and it’s a Govt Policy decision.

Now the same JJ and others quote CAG report to target Raja, if it comes to them CAG is just a report, for others it is a Final Judgment and those should be prosecuted immediately.]]]

பிரகாஷ் ஸார்.. ஜெயலலிதா மீதான அந்தக் குற்றச்சாட்டுக்கு கருணாநிதி அரசு எடுத்த மேல் நடவடிக்கை என்ன..? அவர்தானே இப்போது ஆட்சியில் இருக்கிறார்? செய்திருக்க வேண்டியதுதானே..? யார் வேண்டாம் என்று சொ்னனது..?

ஜெயலலிதா செய்தார் என்பதற்காக ராஜாவும் செய்வார். அதனை அனுமதியுங்கள் என்று கேட்பது உங்களுக்கே ஓவரா இல்லியா..?

உண்மைத்தமிழன் said...

[[[பரிதி நிலவன் said...

இதெல்லாம் முன்பே தெரியாத முட்டாள் இல்லை மண்ணுமோகன் சிங்.

தமிழ் இன கருவறுப்பை கண்டு கொள்ளாமல் இருக்க தமிழ் ஈனத் தலைவர் கருணாவுக்கு கொடுத்த கமிஷன் என்று நன்கு தெரிந்தே, கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவிற்கு வராமலா போகும் கமுக்கமாக இருந்திருக்கிறார்.

ராசா இதில் ஒரு ஏஜெண்ட்தானே தவிர, முழுவதும் அவரே ஆட்டையைப் போட்டிருக்க முடியாது.

அடித்துக் கொடுத்த பணத்திற்கு அவருக்கு ஏதாவது பிச்சை இடப்பட்டிருக்கும்.]]]

பிச்சைத் தொகையே இத்தனை கோடிகளா..? ஆத்தாடியோவ்..!

உண்மைத்தமிழன் said...

[[[SurveySan said...
ஹ்ம். இதுவும் கடந்து போகும்.]]]

ம்.. தெரிந்த விஷயம்தான். வேறென்ன சொல்வது..?

உண்மைத்தமிழன் said...

[[[Anbusivam said...
தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் அன்பு அண்ணன், அதை தவிர அவர் வேறு என்ன தவறு செய்து விட்டார்? தேவை இல்லாமல் ஆங்கில ஊடகங்கள் 2G அலைக்கற்றை விஷயத்தை பெரிதுபடுத்துகின்றன. இது ஒரு பின் தங்கிய வகுப்பை சார்ந்தவர், அதுவும் ஒரு தமிழன் மத்திய அமைச்சராக மிகவும் சிறப்பான முறையில், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வும் நல்வாழ்வும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு இரவு பகல் பாராமல் உழைப்பதை பார்த்து பொறுக்கமாட்டாத சக்திகளின் சூழ்ச்சி. அடுத்த முறை மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அண்ணன் அவர்களுக்கு எப்படியாவது பிரதமர் பதிவியை பெற்று தந்து விடவேண்டும். இலங்கையில் மட்டுமல்ல இந்த உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் தமிழனையும் அழித்தாகிலும் பிரதமர் பதவியை பெற்று விடவேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும் வகுத்து தந்த சமுதாய சீர்திருத்த பாதையில் செல்லும் நமக்கெலாம் மிகப் பெரும் பெருமை. வாழ்க டாஸ்மாக், வாழ்க இலவசங்கள், வாழ்க தமிழ் மக்கள்.]]]

வாழ்க அன்புசிவம்.. வளர்க உங்களது தி.மு.க. தொண்டு..!!!

உண்மைத்தமிழன் said...

பிரகாஷ் ஸார்..!

பாஜக சொக்கத் தங்கம் என்று நான் சொல்லவேயில்லை.. இதற்கு முன்பும் ஊழல் நடந்திருக்கலாம். நிச்சயம் நடந்திருக்கும்.. ஆனால் அது தெரியவில்லை. தெரியாமலேயே போய்விட்டது. ஆனால் இப்போது கண்ணுக்குத் தெரிந்தே ஒன்று இருக்கிறதே.. அதனை ஏன் நாம் நிவர்த்தி செய்யக் கூடாது என்கிறேன்..!

ச்சும்மா இதுக்கெல்லாம் அரசியல்வியாதிகளைப் போல ஜாதி சாயம் பூசாதீர்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[udhavi iyakkam said...
நல்ல பதிவு. நன்றி..]]]

வருகைக்கு நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[subramanian said...
This prakash seems to be a stooge of the DMK. Going around all blogs & espousing support for Raja. Till such people are available many more scams will be committed even in the future. Where the hell is the need to bring in caste here.]]]

இதையேதான் நானும் கேட்டிருக்கிறேன்.. இதில் ஜாதி சாயத்தை பூசுவது ராஜா தப்பிக்க முயலத்தான் என்பது தெளிவு..!

உண்மைத்தமிழன் said...

[[[ரவிச்சந்திரன் said...
மிகத் தெளிவான கட்டுரை!]]]

நன்றி ரவிச்சந்திரன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...
உண்மைத் தமிழனிடமிருந்து ஒரு நல்ல கட்டுரை. வாழ்த்துகள். (வாழ்த்துக்கள் இல்லை)]]]

நன்றி ராஜரத்தினம் ஸார்..!

Prakash said...

Kindly go thru the below blog
http://sundaresan-n.blogspot.com/2010/11/blog-post.html

pichaikaaran said...

தமிழனுக்கு எதிராக வட இந்தியர்களின் சதி இது என சிலர் சொல்வது குறித்து ?

NAGA INTHU said...

//அதிகமாகப் பிள்ளை பெற்றாலும், அதிகமாகக் கொள்ளையடித்தாலும் இப்படித்தான் பிரச்சினைகள் வரும் என்று அவர் அறியாததல்ல. இந்தக் குடும்பப் பிரச்சினையில் இருந்து அவர் நல்லபடியாக மீண்டு வர என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..//

ஐயா,உண்மைதமிழா மீண்டும் கருணாநிதி கொள்ளையடிக்க முருகபெருமான் அருள்புரியவேண்டுமா ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு தமிழக மக்கள் மீது.
அரவரசன்.

ammarajam said...

Hi unmai tamilan sir,

This is a great article in your all time blogs. You proved ur worth as a good blogger and differentiated urself from other dmk supporting bloggers. Hatsoff to u. Expecting thesame in future.

Regards,

P. Amarnath santh

ஜோதிஜி said...

அப்புறம் அடிக்க, அடிக்க பழகிப் போச்சு..!

சரவணன் இந்த பதில் ராசாவுக்கும் பொருந்தும் போல.

SURI said...

Wonderful! You have done a thorough job. Great!! Congrats!!!

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...
Kindly go thru the below blog
http://sundaresan-n.blogspot.com/2010/11/blog-post.html]]]

தகவலுக்கு நன்றி பிரகாஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
தமிழனுக்கு எதிராக வட இந்தியர்களின் சதி இது என சிலர் சொல்வது குறித்து?]]]

ஊழலுக்குச் சப்பைக் கட்டு கட்டும் தேசத் துரோகிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[NAGA said...

//அதிகமாகப் பிள்ளை பெற்றாலும், அதிகமாகக் கொள்ளையடித்தாலும் இப்படித்தான் பிரச்சினைகள் வரும் என்று அவர் அறியாததல்ல. இந்தக் குடும்பப் பிரச்சினையில் இருந்து அவர் நல்லபடியாக மீண்டு வர என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..//

ஐயா, உண்மைதமிழா மீண்டும் கருணாநிதி கொள்ளையடிக்க முருகபெருமான் அருள் புரிய வேண்டுமா ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு தமிழக மக்கள் மீது.
அரவரசன்.]]]

ஓ.. நீங்க அப்படி யோசிக்கிறீங்களா..? பயமாத்தான் இருக்கு..! அப்புறம் என்னதான் செய்யறது..?

உண்மைத்தமிழன் said...

[[[amarmuamar said...
Hi unmai tamilan sir,
This is a great article in your all time blogs. You proved ur worth as a good blogger and differentiated urself from other dmk supporting bloggers. Hats off to u. Expecting the same in future.
Regards,
P. Amarnath santh]]]

மிக்க நன்றி அமர்நாத் ஸார்..! தங்களுடைய உற்சாகமூட்டும் வார்த்தைகள் எனக்கு டானிக்காக இனிக்கின்றன..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
அப்புறம் அடிக்க, அடிக்க பழகிப் போச்சு..! சரவணன் இந்த பதில் ராசாவுக்கும் பொருந்தும் போல.]]]

ஹா.. ஹா.. சமயம் பார்த்து போட்டுத் தாக்குறீங்களே சாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[SURI said...
Wonderful! You have done a thorough job. Great!! Congrats!!!]]]

நன்றி சூரி ஸார்..!

Prakash said...

Good one, seen in one comment - ராஜா தொலைதொடர்பு அமைச்சர் ஆவதற்கு முன்பு இருந்த அமைச்சர்களுக்கு எல்லாம் இவ்வளவு அலைகற்றைகள் இன்னும் கையிருப்பு உள்ளது என்பது தெரியாது(அல்லது மறைக்கப்பட்டது?????).... இப்படி தெரியாமல் இருந்து வந்ததில் யார் லாபம் அடைந்து வந்தார்கள் என்பது அனைவரும் யூகிக்கக் கூடியதே.... ஏற்கனவே உரிமம் பெற்றிருந்த பெரிய தொலைதொடர்பு நிறுவனங்கள் தான்.... ஏர்டெல், ஏர்செல், டாடா, ரிலையன்ஸ் போன்ற கம்பெனிகள்....

அதிக போட்டியில்லாமல், நூறு கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், மொத்தம் இந்த நான்கைந்து நிறுவனங்களை நம்பி தான் மொத்த மக்கள் தொகையும் இருந்தது..... நல்லா காசு பாத்துட்டு இருந்தாங்க....


ராஜா வந்தான்.... இன்னும் எவ்வளவு அலைக்கற்றை உபயோகப் படுத்தப் படாமல் இருக்குதுன்னு தோண்டி எடுத்தான்..... அதை, இன்னும் பல புதிய நிறுவனங்களுக்கு வித்தான்.... (இதுல கமிஷன் அடிச்சானா?? இல்லையா?? எவ்வளவு அடிச்சான்?? அதெல்லாம் எனக்கு முக்கியமில்லை...)

புதிய நிறுவனங்களுக்கு கொடுத்தானா... அவுங்களையும் இந்திய மார்க்கெட்ல நுழைச்சானா.... இதுல யாருக்கு நஷ்டம்??????? ஏற்கனவே, தங்களோட தொலைதொடர்பு சேவையை நாடு முழுசும் பரப்பி வச்சுகிட்டு கோடிக்கணக்கான மக்களை வாடிக்கையாளர்களா தன் வசம் வச்சுகிட்டிருந்த பழைய மகா கோடீஸ்வரர்களுக்கு தான் நஷ்டம்... ஏன்???? இது வரைக்கும் போட்டினு பெருசா இல்ல.... 100 கோடி மக்களை நாலா பிரிச்சு நாலு பேரும் அனுபவிச்சுகிட்டு இருந்தானுங்க.... போட்டின்னு இன்னும் 10 பேரு உள்ள நுழைஞ்சா கோவம் வருமா வராதா????? வரத்தானே செய்யும்....


அது மட்டுமா.... இந்த ராஜா வந்த பிறகு தான் "Number portability"யை இந்தியாவில் கொண்டு வருவதற்கு தீவிர முயற்சி எடுத்தான்.... நம்பர் போர்டபிலிட்டினா என்னனா..... "நாம இப்போ ஒரு செல் கனெக்சன் வச்சிருக்கோம்... அது ஏர்டெல்னு வச்சுப்போம்... இப்போ நாம வோடஃபோன்ல ஒரு ப்ளான் நல்லா இருக்குன்னு அந்த கம்பெனியோட வாடிக்கையாளரா மாறனும்னா, அந்த வோடஃபோன் காரன் ஒரு புது நம்பர நமக்கு கொடுத்து, இனிமே இது தான்டா உன் நம்பரு... என் கம்பெனி ப்ளானை நீ யூஸ் பண்ணனும்னா நீ இந்த புது நம்பர் மூலமா தான் நீ யூஸ் பண்ணியாகனும்னு சொல்லுவான்.... இதுவே நம்பர் போர்டபிலிட்டி அறிமுகம் ஆச்சுனா, ஒரு கம்பெனில இருந்து இன்னொரு கம்பெனி மாறினாலும் நம்மளோட பழைய நம்பரையே மெயின்டெயின் பண்ணிக்குற வாய்ப்பு நமக்கு கிடைக்கும்...."

இத தான் ராஜா கொண்டு வந்தே தீருவேன்னு அடம் புடிச்சான்.... நம்ம பழைய பெரும் தொழில் நிறுவனங்கள் எல்லாம் அவங்களால முடிஞ்ச அளவு இந்த நம்பர் போர்டபிலிட்டி விஷயத்துக்கு ஒத்துழைக்க மறுத்தாங்க... மறுத்துகிட்டு வராங்க.... ராஜா கொஞ்சம் விடாப்பிடியா இருந்தான்.... இதனாலேயும் கூட ராஜா மேல இந்த தொழிலதிபருங்களுக்கு எல்லாம் கடுப்பு.....

எனக்கு தெரிஞ்சு பல பேரு, தங்களோட பல வருசத்து ஃபோன் நம்பர மாத்திடக் கூடாதுங்குற ஒரே காரணுத்துக்காக வேற செல் ஃபோன் கனெக்சனுக்கு மாறாம இருக்காங்க....

நம்பர் போர்டபிலிட்டி மட்டும் இருந்துச்சுனா... "அட போடா... ஏர்டெல்லாவது மண்ணாவது ... நான் போறேன் புதுசா வந்த யூனிநாருக்கு"னு அவன் அவன் போய்கிட்டே இருப்பான்....

இதுலயும் நஷ்டம் யாருக்கு.....???? ஏற்கனவே இந்தியாவுல பெரிய அளவுல மார்கெட்ட பிடிச்சு வச்சிருக்குற பழைய பெரும் நிறுவனங்களுக்கு தான் நஷ்டம்....


இவ்வளவு பெரிய முதலைகளை பகைச்சுகிட்டு ஒருத்தன் அமைச்சரா இருந்துட முடியுமா இந்தியாவுல??????????????????????

யோசிங்க... யோசிங்க....

Jayadev Das said...

என்ன செய்தாலும் இந்த ராசாவை சட்டப்படி தண்டிப்பது நடக்குற மாதிரி தெரியலை. வழக்கமா செய்வது போல கொஞ்ச நாள் கூவி விட்டு கடைசியில் எல்லாத்தையும் ஊத்தி மூடத்தான் போகிறார்கள். வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்து திரும்ப ஏலத்தை நடத்த வழி இருக்கிறதா? அப்படி வழி இல்லாவிட்டால் எத்தனை வழக்கு போட்டாலும் பயன் ஒன்றும் இருக்கப் போவதில்லை. நம்ம அம்மா ஜெயலலிதா மீதுள்ள வழக்குகள் அத்தனையிலுமே ஆதாரங்கள் இருக்கின்றன, ஆனாலும் எல்லாவற்றிலும் இருந்து அனாசயமாக தப்பித்து வந்து, "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், நாய் உன் காதைக் கவ்வும்"ன்னு வீர வசனம் உட்டுகினு இருக்கார். சுயநலத்துக்காக நாட்டை காட்டிக் கொடுக்கும் திருடர்களிடம் இருந்து காக்க இன்னொரு சுதந்திரப் போராட்டம் வந்தால்தான் உண்டு.

உண்மைத்தமிழன் said...

பிரகாஷ் ஸார்..!

ராஜா அவசரம், அவசரமாக விதிமுறைகளை மீறி லைசென்ஸ் வழங்கிய ஸ்வான், யூனிநார் நிறுவனத்தில் அ.ராசா மற்றும் அவரது குடும்பத்தினரும் பங்குதாரர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது..! அதையும் படித்துப் பார்க்கவும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayadeva said...
என்ன செய்தாலும் இந்த ராசாவை சட்டப்படி தண்டிப்பது நடக்குற மாதிரி தெரியலை. வழக்கமா செய்வது போல கொஞ்ச நாள் கூவி விட்டு கடைசியில் எல்லாத்தையும் ஊத்தி மூடத்தான் போகிறார்கள். வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்து திரும்ப ஏலத்தை நடத்த வழி இருக்கிறதா? அப்படி வழி இல்லாவிட்டால் எத்தனை வழக்கு போட்டாலும் பயன் ஒன்றும் இருக்கப் போவதில்லை. நம்ம அம்மா ஜெயலலிதா மீதுள்ள வழக்குகள் அத்தனையிலுமே ஆதாரங்கள் இருக்கின்றன, ஆனாலும் எல்லாவற்றிலும் இருந்து அனாசயமாக தப்பித்து வந்து, "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், நாய் உன் காதைக் கவ்வும்"ன்னு வீர வசனம் உட்டுகினு இருக்கார். சுயநலத்துக்காக நாட்டை காட்டிக் கொடுக்கும் திருடர்களிடம் இருந்து காக்க இன்னொரு சுதந்திரப் போராட்டம் வந்தால்தான் உண்டு.]]]

போராட்டம் வரட்டும். ஆனால் முன்னின்று நடத்துவது.. அப்படியொரு ஆளைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்..!