தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக.. தமிழ்ப் புலவராகவே வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேதான் புலவர்கள் வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள்வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள்.
|
Tweet |
15 comments:
இதை சொன்னவர் யார் என்று பலருக்கும் தெரியும் என நினைக்கிறேன். இருந்தாலும் பார்க்கலாம், எத்தனை பேர் கண்டுபிடிக்கிறார்கள், எத்தனை பேர் உங்களை திட்டுகிறார்கள் என்று:))
(இந்த பின்னூட்டத்தை கடைசியாக வெளியிடுங்கள். இப்போது வேண்டாம்.)
என்னுடைய மேட்டரை என்னுடைய அனுமதி இல்லாமல் ஏன் வெளியிட்டாய் உண்மைத்தமிழா ?
தலைவா,
ஆங்கில அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம் ...
மே ஐ கம் இன்?
நன்றாகத்தானே இருந்தீர்கள்? என்னாயிற்று? நீங்கள் போட்ட இந்த பதிவை மீண்டும் ஒருமுறை நீங்களே படித்துப் பாருங்கள்.
நான் நகைச்சுவை பதிவு என்றல்லவா நினைத்தேன்.
(அவர் பேசியது முழுவதும் இங்கே இருக்கிறது. சின்ன பதிவாக இருக்கிறதே என்று வருத்தப்பட்ட ரவிக்காக வேண்டுமானால் முழுபதிவாக போட்டுகொள்ளுங்கள்)
தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக்கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?
நாட்டுக்கு "சுதந்திரம்' கிடைத்து இன்றைக்கு 20ஆவது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, "இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்'. இதுதானா? அய்யோ பைத்தியமே! தமிழை (பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் "சுவை' அல்லாமல், அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை, பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன்.
சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு தமிழர் – முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ,இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?
சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.–
தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்!
தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?
இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்
இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? – என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், "தமிழ் மொழி 3000 – 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?
தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.
"தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக... தமிழ்ப் புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.
ஆகவேதான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள் வரை, இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கில்லாதவர்களாகவே ஆகி விட்டார்கள்.
அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.
உண்மைத்தமிழன் அய்யா,
மதமாற்றம் செய்ய உரிமை இருப்பது போல் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கோ,அல்லது ஃப்ரென்ச்,மொழிக்கோ, மொழி மாற்றம் செய்துகொண்டால் திராவிட அரசு மைனாரிட்டி அந்தஸ்து கொடுத்து நமக்கு இட ஒதுக்கீடு செய்யுமா?
//ஜெர்மானியக் கவிஞன் said...
தலைவா, ஆங்கில அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம்...//
அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ளச் சொன்னார். அப்போதுதான் பல வித அனுபவங்கள் உனக்கு வந்து சேரும் என்கிற எதிர்நோக்கில் செயல்படும் அறிவுதான் பகுத்தறிவு..
//விடாதுகருப்பு said...
நன்றாகத்தானே இருந்தீர்கள்? என்னாயிற்று? நீங்கள் போட்ட இந்த பதிவை மீண்டும் ஒருமுறை நீங்களே படித்துப் பாருங்கள். நான் நகைச்சுவை பதிவு என்றல்லவா நினைத்தேன்.//
கருப்பு ஸார்.. இந்தக் கிண்டல்தான வேணாங்கறது.. உங்களுக்குத் தெரியாத விஷயமா? பெரியார் சொல்லியிருப்பதில் ஒரு அளவு. அம்புட்டுத்தான்..
நன்றி அனானி..
நான் முன்பே படித்துவிட்டேன் என்றாலும் டைப் செய்து கொடுத்தமைக்கு வலைப்பதிவர்கள் சார்பாக நன்றி..
//vijay said...
உண்மைத்தமிழன் அய்யா, மதமாற்றம் செய்ய உரிமை இருப்பது போல் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கோ,அல்லது ஃப்ரென்ச்,மொழிக்கோ, மொழி மாற்றம் செய்துகொண்டால் திராவிட அரசு மைனாரிட்டி அந்தஸ்து கொடுத்து நமக்கு இட ஒதுக்கீடு செய்யுமா?//
மொழி மாற்றமா? மாற்றம் செய்து என்னவாகப் போகிறீர்கள். ஆங்கிலம் என்றால் நீங்கள் ஏன் இங்கு இருக்க வேண்டும்? பிரெஞ்ச் என்றால் பாரீஸிற்கு அல்லவா போக வேண்டும்..?
//மொழி மாற்றமா? மாற்றம் செய்து என்னவாகப் போகிறீர்கள். ஆங்கிலம் என்றால் நீங்கள் ஏன் இங்கு இருக்க வேண்டும்? பிரெஞ்ச் என்றால் பாரீஸிற்கு அல்லவா போக வேண்டும்..?//
இல்லீங்க, தமிழில் அறிவும்,அறிஞர்களும் சல்லடை போட்டு தேடினல் கூட கிடைக்காதுன்னு தமிழர்களோட தந்தையே சொல்லிவிட்டபின்,நம்ம மொழி செம்மொழியான்னு எனக்கு ரொம்பவே சந்தேகம் வந்துவிட்டது;அதான் பகுத்தறிவுல்ள மொழிக்கு மொழி மாற்றம் செய்துகொண்டா தமிழ்நாட்ல மைனாரிட்டி ஆயிடுவோமே.அந்த கெளரவம் கிடச்சா, இட ஒதுக்கீடு கேட்டு கொஞ்சம் ஓசி அடிக்கலாமே என்ற நப்பாசைதான்.
நிஜமா? இது நிஜமா?!
இது உண்மைத்தமிழன் பதிவுதானா? நம்பிப் படிக்கலாமா? ஒரே ஒரு பத்திதான் இருக்கு! (இல்லை, இதான் பதிவோட தலைப்பா?! ) :)))
//இளவஞ்சி said...
நிஜமா? இது நிஜமா?! இது உண்மைத்தமிழன் பதிவுதானா? நம்பிப் படிக்கலாமா? ஒரே ஒரு பத்திதான் இருக்கு! (இல்லை, இதான் பதிவோட தலைப்பா?! ) :)))//
இளவஞ்சி ஸார்.. இத்தனை பாசத்தை வைச்சுக்கிட்டு ஏன் சாமி இத்துணூண்டு மேட்டர் போட்டதுக்கு ஓடியார்றீக.. இருங்க.. இருங்க.. உங்களுக்காகவே 14 பக்ககத்துல ஒண்ணை போட்டுட்டு.. அப்புறமா பேசுறேன்..
//செல்வன் said...
இதை சொன்னவர் யார் என்று பலருக்கும் தெரியும் என நினைக்கிறேன். இருந்தாலும் பார்க்கலாம், எத்தனை பேர் கண்டுபிடிக்கிறார்கள், எத்தனை பேர் உங்களை திட்டுகிறார்கள் என்று:)) (இந்த பின்னூட்டத்தை கடைசியாக வெளியிடுங்கள். இப்போது வேண்டாம்.)//
செல்வன் ஸார்.. நீங்க சொன்னது மாதிரியே 'அர்ச்சனைகள்' நிறைய வந்தன. ஆனால் எதையும் வெளியிட முடியவில்லை. ஸோ பின்னூட்டக் கணக்கில் ஒரு 21-ஐ கூட்டிக் கொள்ளுங்கள்... முதலில் வந்து ஆஜர் ஆனதற்கு கடைசியாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..
Post a Comment