கசப்புடன் முடிந்த சினிமா நூற்றாண்டு விழா..! - 3

29-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

23-09-2013 - காலை 9 மணி - மலையாளத் திரையுலக விழா

வேப்பேரி மெயின் ரோட்டிலேயே சேட்டன்கள் மற்றும் சேச்சிகளின் வருகை தெரிந்தது..! நேரு ஸ்டேடியத்தின் வாசலில் செண்டை மேளமும், மோகனியாட்டமும்,  காத்திருந்தது..! பாஸ் இல்லாதவர்கள் யாராவது பாஸ் கொடுப்பார்களா என்ற தவிப்புடன் காலையிலேயே வந்து காத்திருந்தார்கள்..! மலையாள சங்கத்தில் இருந்து வந்தவர்களெல்லாம், தங்களது சங்க பிரமுகர்களை வாசலில் இருந்து போனில் அழைத்து பாஸ்.. பாஸ்.. என்று உயிரையெடுத்துக் கொண்டிருந்தார்கள்..!



அரங்கத்தின் உள்ளே நுழைந்தபோது கேலரியே காலியாக இருந்தது.. நான் இருந்த E ஸ்டேண்ட்டில் நான் ஒருவன்தான் முதல் ஆள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..! தரைத்தளத்தில்கூட முதல் மூன்று வரிசைகள் மட்டுமே நிரம்பியிருந்தது.. அதுவும் நடிகர், நடிகையர்களால்.. மோகன்லால் எனக்கு முன்பாகவே வந்திருந்தார்..! 




மது, மம்மூட்டி, ஜெயராம், பார்வதி,  மனோஜ்.கே.ஜெயன், ஊர்வசி, மேனகா, லிஸி, மாதவி, ஷீலா, சாரதா, பிந்து பணிக்கர், சூரஜ், பஹத் பாசில், கேபிஏபி லலிதா, ரீமா கல்லிங்கால், நஸ்ரியா, அனுமோள் என்று எனக்குத் தெரிந்த சிலரும் கூட்டத்தில் இருந்தார்கள்..! முன்பே வந்துவிட்டதால் வருபவர்களை லால் சேட்டன்தான் அன்பாக வரவேற்று பேசிக் கொண்டிருந்தார்..!


கேரள அமைச்சர் வயலார் ரவி முக்கிய பிரமுகராக வந்திருந்தார். இன்றைக்கும் காலையிலேயே கமல்ஹாசனும், கே.பி.யும் தரிசனம் தந்தனர்.. மேடையில் பலரையும் ஏற்றியவர்கள் மம்மூட்டியையும், மோகன்லாலையும் மட்டும் விட்டுவிட்டனர்..!  குத்துவிளக்கு ஏற்றிய பிறகு  நடிகர் மதுவுக்கு அன்றைக்கு 80-வது பிறந்த நாள் என்று சொல்லி அவரை வாழ்த்தினார்கள். இப்போதுதான் மோகன்லாலும், மம்மூட்டியும் மேடையேறி ஆளுயுர மாலையை அணிவித்து மதுவை வாழ்த்தினார்கள்..! வயலார் ரவியும், கேரள பிலிம் சேம்பர் தலைவரும் வாழ்த்திய பிறகு கே.பி.யும், கமல்ஹாசனும் வாழ்த்தினார்கள்.. கே.பி. தன் கைப்பட எழுதிக் கொண்டு வந்ததை அப்படியே படித்துக் காண்பித்துவிட்டு போனார்.. கமல்ஹாசன் துவக்கத்தில் சில மலையாள வார்த்தைகளைத் தெரிவித்துவிட்டு பின்பு இங்கிலீஸுக்கு தாவிவிட்டார்..!


கலை நிகழ்ச்சியில் முதல் நிகழ்ச்சியாக பிள்ளையாரை வைத்துக் கொண்டு ஒரு பக்தி பாடலும், டான்ஸூம்.. அடுத்து குடையைப் பிடித்தபடியே சேச்சிகள் ஆடிய டான்ஸ் அசத்தல்.. என்னதான் இருந்தாலும் சேச்சிகளை சேலையில் பார்க்கும்போது சேலை என்னும் வஸ்துவுக்கே தனி மரியாதை வருதுன்னு நினைக்கிறேன்.. இதுக்கடுத்து பேயாட்டம் ஒண்ணு ஆடுனாங்க.. இந்த டான்ஸுக்கு என்ன பேருன்னு தெரியலை.. ஆனா ஆட்டம் செம செம..!  இது முடிந்ததும் கமல் அண்ணன் எஸ்கேப்பாகிவிட்டார்..!


அடுத்து நடந்தது களறியாட்டம் என்று நினைக்கிறேன்..  இதைத் தொடர்ந்து கேரள மலபார் பகுதி முஸ்லீம்களின் குச்சி டான்ஸ்.. கையில் ஒரு சிறிய குச்சியை வைத்துக் கொண்டு தாளம் தப்பாமல் தொடர்ச்சியாக 5 நிமிடங்கள் ஆடித் தீர்த்தார்கள்.. ரம்மியம்.. பிறகு ஒரு யானை போன்ற தோற்றத்தையே மேடைக்குக் கொண்டு வந்து அசத்தினார்கள்..! பாரம்பரிய நடனங்களை இத்தோடு நிறுத்திக் கொண்டவர்கள் அடுத்து உண்மையான கலை நிகழ்ச்சியைத் துவக்கினார்கள்..!


முதல் டான்ஸே இப்போதைய செல்லம் நஸ்ரியாவின் கலக்கல் டான்ஸ்.. பல பாடல்களுக்கு ஒரே ஜோடியின் நடனம் என்ற பாலிசி இங்கேயும்  கடைப்பிடிக்கப்பட்டது.. இதில் எனக்குத் தெரிஞ்சது செம்மீன் படத்தின் பாடல் மட்டுமே..! 


மம்மூட்டி மேடையேறி ஒரு சிலருக்கு விருதுகளை வழங்கினார்..! கூட்டம் அப்போதுதான் கூடிக் கொண்டே வந்ததால் பாவம் உரியவர்களுக்கு கைதட்டல்கூட கிடைக்கவில்லை என்பது உண்மைதான். அன்றைக்கு திங்கட்கிழமை.. அலுவலக நாள்.. எத்தனை பேர் வர முடியும்..? அதுவும் காலை 9 மணி.. அப்படியும் ரசிகர்களின் வருகைக்காக காத்திருந்து 10 மணிக்குத்தான் துவக்கினார்கள்..! இருந்தும் கூட்டம் இல்லாதது அவர்களுக்கே வருத்தம் தந்திருக்கும் என்று நினைக்கிறேன்..!


தொடர்ந்து வழக்கம்போல ஜூகல்பந்தி. இப்போதும் மலையாள ரசிகர்களும், நடிகர் நடிகையரும் பாடலின் கூடவே பாடும் நல்ல பழக்கத்தை செய்து காட்டினார்கள்.. பாடகர், பாடகியரும் இந்த உற்சாகத்தை பார்த்து ஜூகல்பந்தியை இசைத்துக் கொண்டே போக.. கீழே தரைத்தளத்தில் முன் வரிசை பிரமுகர்கள் கலைந்து, கலைந்து தங்களுக்குள் பேசிக் கொண்டே போக.. மோகன்லால் எழுந்து வந்து அனைவரையும் பிரித்துப் பிரித்து அனுப்பிவிட்டார்..! 


அடுத்து ஒரு நாடகம்.. மலையாள நடிகை பிந்து பணிக்கரும், காமெடி நடிகர் சூரஜ்ஜும் இணைந்து நடித்தார்கள். நமக்கு ஒண்ணும் புரியலை.. எல்லாரும் சிரிச்சாங்க. நாமளும் சிரிச்சுத் தொலைச்சோம்.. சினிமா மாதிரியே அவ்ளோ ஸ்பீடான டைமிங் மாடுலேஷன்.. காமெடியில் மலையாளத்துக்காரர்கள் தனித்துவம் பெற்றவர்கள்..! 


அடுத்து ரீமா கல்லிங்காலின் டான்ஸ் என்று சொன்னவுடனேயே பெரும் கரவொலி.. அசத்தல் டான்ஸ் ஆடினார் ரீமா.. தொடர்ந்து நடிகர் முகேஷ் தலைமையேற்க இயக்குநர் ஜோஷி மேடையேறி விருதுகளை வழங்கினார்.  


மலையாள நிகழ்ச்சியின் தலைவர் இயக்குநர் சிபிமலயில்.. கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு அடுத்து விருது பெற போகிறவர்கள் யார், யார் என்பதை பார்த்துக் கொண்டு அவர்களைத் தேடிப் பிடித்து இழுத்து வந்து மேடைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்..! மலையாள நகைச்சுவை சக்கரவர்த்தி ஜெகதி ஸ்ரீகுமாருக்கு அவரது இல்லத்தில் பொன்னாடை போர்த்தி கவுரவம் செய்ததை வீடியோவில் காட்டினார்கள்..! வருத்தமாக இருந்தது..! எப்படியிருந்த மனுஷன்..! இன்னிக்கு என்ன சொல்றாங்கன்னு கூட தெரியாத அளவுக்கு இருப்பது காலத்தின் கொடுமை.. இது மிகக் கொடுமையான தண்டனை..! பாவம் அவருடைய குடும்பத்தினர்..! 

ஜோஷியே களைத்துப் போய் மேடையில் இருந்து இறங்கிய பின்பு மீண்டும் ஒரு ஜூகல் பந்தி.. இதைத் தொடர்ந்து மீண்டும் டான்ஸ்.. டான்ஸ்.. 


இதன் பின்பு லாலேட்டன் மேடையேறி ஒரு பாடலை பாட.. கூட்டம் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தது..! இதற்குப் பின்பு நேரம் படத்தின் டைட்டில் ஸாங்கிற்கு நஸ்ரியா கலக்கல் டான்ஸ் ஆட.. அரங்கம் அதிர்ந்தது கைதட்டலில்..!


தெலுங்கில் எஸ்.பி.பி.க்கு எப்படி ஒரு தனி  மரியாதையோ அதுபோல மலையாளத்தில் சித்ராவுக்கு அமோக வரவேற்பு.. மேடையேறியவர் அட்டகாசமான ஒரு பாடலையும் பாடிவிட்டுத்தான் போனார்.. ஆனாலும் பூவே பூச்சுடவா பாடலை பாடாமல் விட்டது வருத்தமாகத்தான் இருந்தது..!


சில நிமிடங்கள் கழித்து... மேடையின் பின்புறத்தில் இருந்து சரசரவென இறங்கிய மோகன்லால்.. மம்மூட்டிக்கு மட்டும் லேசான ஜாடைகாட்டிவிட்டு நடக்கத் துவங்க.. மம்மூட்டி பின் தொடர.. தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் அனைவருமே எஸ்கேப்பானார்கள்..! இதற்குப் பின்னும் மதியம் 3.30 ஐ தாண்டிய பின்பும் டான்ஸ்கள் தொடர்ந்து நடக்க.. பசியோடு இதற்கு மேல் உட்கார முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் எழுந்தேன்..!


வெளியே வந்தபோது இந்த நிகழ்ச்சிக்கு பின்பு அரங்கத்தை மறுநாள் ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சியின் பாதுகாப்பு வேண்டி முழுமையாகக் கைப்பற்றும் எண்ணத்துடன் வந்திருந்த போலீஸ் உயரதிகாரிகள் கூட்டத்தை பார்க்க முடிந்தது..! அனைவரின் கைகளிலும் கத்தை, கத்தையாக பேப்பர்கள்.. யார் என்ன போஸ்ட்டில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றாலும் பாதிக்கு பாதி பேர் மப்டியில் இருந்தததாலும் கான்ஸ்டபிள்களின் நிலைமைதான் பரிதாபம்.. பார்க்கின்ற அனைவருக்குமே சல்யூட் அடித்து அடித்து ஓய்ந்துதான் போனார்கள்..!

காரை இன்னொரு தீவில் விட்டுவிட்டு வந்த காரணத்தினால் பலருக்கும் பலவித பிரச்சினைகள்..! ஜெயராமும், பார்வதியும் காருக்காக காத்திருந்த நேரத்தில் ரசிகர்களின் அன்புத் தொல்லையில் சிக்கித் தவித்துப் போனார்கள்.. இடையில் அடுத்த நாள் விழாவில் நடனமாடிய நடிகை ஷோபனா ஒத்திகை பார்க்க வர.. அவரைச் சுற்றியும் ஒரு கூட்டம்..! 

கூடியிருந்த போலீஸ் கூட்டத்தை பார்த்தே நமக்கு பக்கென்றானது.. நாளைக்கு எப்படித்தான் உள்ளாற போறதுன்னு..!? மறுநாள் போலீஸார் செய்த டார்ச்சரில்  இனிமேல் இது போன்ற சினிமா விழாக்களுக்கு அரசியல் தலைவர்களை அழைப்பது பற்றி ரொம்பவே யோசிக்க வேண்டும் என்று கோடம்பாக்கத்துக்காரர்களை நினைக்க வைத்துவிட்டது..! 

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com 


10 comments:

Samy said...

Writing so stylish. Thanks. Sathi

வவ்வால் said...

அண்ணாச்சி,

// *இனிமேல் இது போன்ற சினிமா விழாக்களுக்கு அரசியல் தலைவர்களை அழைப்பது பற்றி ரொம்பவே யோசிக்க வேண்டும் என்று கோடம்பாக்கத்துக்காரர்களை நினைக்க வைத்துவிட்டது..! *//

ஹி ..ஹி ..முடியுமா அது? 10 கோடி சும்மாவா?

Gujaal said...

தெலுகு மற்றும் மலையாளக் கலை நிகழ்ச்சிகளையும் அம்மா தொலைக்காட்சி ஒளிபரப்பினால் வையகம் வாழ்த்தும்.

உண்மைத்தமிழன் said...

[[[Samy said...

Writing so stylish. Thanks. Sathi.]]]

வருகைக்கு நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//*இனிமேல் இது போன்ற சினிமா விழாக்களுக்கு அரசியல் தலைவர்களை அழைப்பது பற்றி ரொம்பவே யோசிக்க வேண்டும் என்று கோடம்பாக்கத்துக்காரர்களை நினைக்க வைத்துவிட்டது..! *//

ஹி.. ஹி.. முடியுமா அது? 10 கோடி சும்மாவா?]]]

கோடியை வாங்கிவிட்டு இவர்கள் தெருக்கோடியில் அல்லவா நின்றார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Gujaal said...

தெலுகு மற்றும் மலையாளக் கலை நிகழ்ச்சிகளையும் அம்மா தொலைக்காட்சி ஒளிபரப்பினால் வையகம் வாழ்த்தும்.]]]

அம்மா தொலைக்காட்சி தமிழ் மட்டும்தான்.. தெலுங்கு, மலையாளம் இரண்டுக்கும் சேர்த்து 12 கோடியை பிவிபி நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதனைவிட கூடுதலாக யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் பர்ஸ்ட் பிரிண்ட் தருவார்கள்..!

indrayavanam.blogspot.com said...

நேரில் பார்த்த அனுபவம்..நன்றி

உண்மைத்தமிழன் said...

[[[indrayavanam.blogspot.com said...

நேரில் பார்த்த அனுபவம்.. நன்றி..]]]

தங்களது வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..!

ஆர்வா said...

உணர்வுபூர்வமாக நடக்க வேண்டிய விழாவை TRP பூர்வமாக நடத்தி முடித்துவிட்டார்கள்..

உண்மைத்தமிழன் said...

[[[மணிகண்டவேல் said...

உணர்வுபூர்வமாக நடக்க வேண்டிய விழாவை TRP பூர்வமாக நடத்தி முடித்துவிட்டார்கள்.]]]

வேறு வழி.. 10 கோடி வாங்கியாச்சுல்ல.. அவங்க சொல்றதை கேட்டுத்தான ஆகணும்ன்னு பணம் வாங்கினவங்க சொல்றாங்க.. நாம என்னத்த சொல்றது..