நான் ஈ - சினிமா விமர்சனம்

08-06-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு நம்ப முடியாத கதையை நம்புகின்றவிதத்தில் கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.! வழக்கமான அம்புலிமாமா கதைதான் என்றாலும் அதன் செய்நேர்த்திதான் படத்தினை இரண்டே கால் மணி நேரமும் கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறது..!தன்னைக் கொன்று தனது காதலியை அடைய நினைக்கும் வில்லனை, ஈயாக பிறவியெடுத்து வரும் காதலன் எப்படி பழி வாங்குகிறான் என்பதுதான் கதை..! ஒரு சாதாரண ஈதானே..? இது என்ன செய்யும் என்று நாம் நினைப்பதற்குத்தான் தங்களால், தங்கள் சக்திக்கு முடிந்த அளவுக்கு பணத்தை வாரியிறைத்து கிராபிக்ஸில் அழகாய் பதில் சொல்லியிருக்கிறார்கள் இந்தப் படக் குழுவினர்..!


ஈ- என்ற இந்த உயிரினத்திற்கு மட்டும் சிந்தனை திறனும், நம்மைப் போன்ற அறிவும் இருந்துவிட்டால் அவைகளால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை திரையில் காண்கின்றபோது நமக்கே பகீரென்கிறது..! ஹாட்ஸ் ஆப் மெளலி ஸார்..!


அரை மணி நேரம்தான்.. சாக வேண்டும் என்ற கோரிக்கையோடு வந்தால், எந்த தமிழ்ச் சினிமா நடிகரின் வீட்டு வாசலையும் மிதிக்க முடியாது என்கிற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தெலுங்கிலும் போணியாகுமே என்பதற்காக நானி என்னும் தெலுங்கு நடிகரை(இவர் தமிழிலும் 2 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்) தமிழிலும் நடிக்க வைத்திருக்கிறார். முதல் காட்சியில் இருந்து நானி சாகின்றவரையிலும் அந்த வேகமான திரைக்கதையமைப்பில் நமக்குப் பழகிப் போன காதல் காட்சிகள்தான் தெரிந்தாலும் இதையும் தாண்டிய ஏதோ ஒன்று அவற்றில் லயிக்கச் செய்தன. அதுதான் ராஜமெளலியின் சிறப்பான இயக்கம்..!


நானி பரவாயில்லை ரகம்தான்..! இரண்டாண்டுகளாக விரட்டி விரட்டிக் காதலித்தும் சிக்னல் கிடைக்காத நிலையிலும் முயற்சியைக் கைவிடாத கேரக்டர்..! சமந்தாவின் ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் அவர் கொடுக்கும் விளக்கமும், சமந்தாவின் போன் காலுக்காகக் காத்திருந்து வந்தவுடன் சந்தோஷத்துடன் ஓடுவதும், அவருக்காகவே செத்துப் போகும் ஒரு நல்ல பையனாகவே வாழ்ந்து முடித்திருக்கிறார்..! அவருடைய அத்தனை அசட்டு ஆக்சன்களுக்கும் சேர்த்து வைத்து சுதீப்பிடம் “அவ விஷயத்துல தலையிடாத.. இல்ல.. கொன்றுவேன்..” என்று ஆவேசப்படும் அந்த ஒரு ஷாட்டில் நடிப்பைக் காட்டியிருக்கிறார். வெல்டன்..!


சமந்தா பொண்ணு. ஏற்கெனவே க்யூட் பொம்மைதான்.. இதில் கன்னக்குழிகள் உப்பிப் போய் இன்னும் அழகாக இருக்கிறார்..! நானியை புறக்கணிப்பது போல் நடித்துக் கொண்டே அவரை காதலிக்கிறேன் என்ற வார்த்தையை நடப்பது அறியாமல் சொல்கின்றவரையிலும் அவரது அழகு ஸ்கிரீனை நிரப்பியிருக்கிறது..! நானியின் ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் சமந்தா கொடுக்கின்ற ஆக்சன் சூப்பர்ப்.. அதிலும் கோவிலில் “நான் அவளுக்கு ரொம்ப ஸ்பெஷல்..” என்கிற வார்த்தைக்கு சமந்தாவின் ரியாக்சனை பார்க்கணுமே..?!! இதேபோலத்தான் சுதீப்பை திடீரென்று தனது அலுவலகத்தில் பார்த்தவுடன் அதிர்ச்சியாகும் அந்த முகமும் இந்தப் பெண்ணிடமும் நடிப்பு இருக்குடா சாமிகளான்னு சொல்லுது..! படத்தின் பிற்பாதியில் சுதீப் மொத்த நடிப்பையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்டதால் அவரையும், ஈயையும் தவிர வேறு யாரையும் குறிப்பிட முடியவில்லை..!


சுதீப்.. கன்னட படவுலகில் பிரகாஷ்ராஜாக அறியப்படுகிறார்..! அலட்டிக் கொள்ளாமல் ஹீரோத்தனமும், வில்லத்தனமும் செய்யக் கூடிய ஒரே ஆக்டர் என்கிறார்கள். ரத்தச்சரித்திரம் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக அவர் காட்டிய அலட்சியமான ஸ்டைலிஷான நடிப்பு இன்னமும் கண்ணில் நிற்கிறது..!


ஈ என்னும் ஒரு கேரக்டரை கிராபிக்ஸில் பில்டப் செய்து காட்டியதைவிட, சுதீப் தனது நடிப்பில் தூக்கிக் காட்டியதுதான் அதிகம். பெட்ஷீட்டுக்குள் நுழைந்து அவரை இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்து இறுக்கப் போர்த்திக் கொண்டு படுக்க வைத்து காலையில் லேட் செய்ய வைக்கும் காட்சியில் ஈயைவிட பிரமாதப்படுத்தியிருக்கிறார் சுதீப்..! ஒவ்வொரு முறையும் ஈயினால் பாதிக்கப்பட்டு அவர் அல்ல்ல்படுவதை இவரைவிட வேறு யாரும் இத்தனை தத்ரூபமாக காட்டிவிட முடியாது..! படத்தினை அதிகம் தாங்கியிருப்பவர் சுதீப்தான்..!


படத்தின் மொத்த பட்ஜெட்டில் பாதிக்கும் மேலான 24 கோடியை கிராபிக்ஸுக்கே செலவு செய்திருப்பதாகச் சொன்னார் இயக்குநர் மெளலி. அந்தச் செலவுக்கு ஏற்ற பலன் கிடைத்திருக்கிறது. தனது முட்டையில் இருந்து வெளி வரும் திருவாளர் ஈயின் பிரமாண்டத்தை முடிந்த அளவுக்கு அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள் கிராபிக்ஸ் வல்லுநர் கமலக்கண்ணன் தலைமையிலான குழு.. அற்புதம்.. அபாரம் என்றே சொல்ல வேண்டும்..!


ஒரு வில்லனுக்குரிய பங்களிப்பை அட்சரப் பிசகாமல் செய்வது போல் ஈயை பிரமாண்டப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள்..! சுதீப் சமந்தாவை தொட்டவுடன் கோபம் கொள்வது.. சுதீப்பை நோக்கி பாய்வதற்காக கால்களை உதறிக் கொள்வது.. நானி நான்தான் என்று சமந்தாவிடம் எழுதிக் காட்டுவது.. டீ குடிப்பது.. ஊசியை எடுத்துக் குத்துவது.. பீரங்கி வடிவ குழாயில் வெடிமருந்து நிரப்பி வெடிக்க வைப்பது.. கேஸ் சிலிண்டர் பக்கமே துப்பாக்கி குண்டை பாய வைப்பது.. ஒரு மனிதத்தன மூளையுடன் செயப்படும் ஈயின் செயலை எவ்வித லாஜிக்கும் பார்க்காமலேயே ரசிக்க முடிகிறது..!


சிறு குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. தனது 9-வது வெற்றிப் படத்தை தொட்டிருக்கும் இயக்குநர் ராஜமெளலியிடம் துணை இயக்குநராக பணியாற்றுபவர்கள் நிச்சயம் கொடுத்து வைத்தவர்கள்தான். இத்தனை விஷயங்களையும் ஒரே இடத்தில் கற்றுக் கொள்ள முடியும் என்றால், அது இவரிடம்தான் போலும்..!


டிஷ் டிவியில் ஜிகினா பேப்பரை ஒட்டி வெளிச்சத்தைக் கொண்டு வருவது, மினியேச்சர் ஆர்ட்டிஸ்ட் வடிவத்திற்காக டிஸைன்களை தேடிப் பிடித்திருப்பது.. ஈ-யின் வடிவத்திற்காக அவர் செய்திருக்கும் ஆராய்ச்சிகள்..! சுதீப் ஆக்சிடெண்ட்டாகும் அந்தக் காட்சியை படமாக்கியவிதம்.. முதல் பாடல் காட்சியில் பென்சிலை சீவும் பெண் சிலையே என்ற கார்க்கியின் வார்த்தைகளுக்கேற்ப படமாக்கியிருக்கும் விதம் அழகு..! மந்திரவாதியை அழைத்து மந்திர பூஜை செய்து ஈயை அழிக்கப் பார்ப்பது.. ஈ பதிலடி கொடுப்பது..! அந்த ஒரு அறையை களமாக மாற்றி அவர் காட்டியிருந்த வித்தை.. ஹாலிவுட் படங்களில் மட்டுமே காணப்படும் குறிப்பால் உணர்த்துவது போன்ற சில ஷாட்டுகளை இங்கே அனாயசமாக வைத்திருந்து ராஜமெளலியின் ரசிகர்களை கொஞ்சம் முன்னோக்கி தள்ளியிருப்பது.. ஒரு சில நொடிகள்கூட கைக்கடிகாரத்தை பார்க்கவிடாமல் செய்த அற்புதமான இயக்கம்.. எப்படி வேண்டுமானாலும் இந்த மனிதரைப் பாராட்டலாம்..! நன்றிகள்.. வாழ்த்துகள்..!


இது போன்ற சயின்ஸ் பிக்சன் சினிமாவிற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணமாகிவிட்டது. 'ஈடா ஈடா' பாடல் காட்சியும், அதன் காட்சிகளையும் ஜெட் வேகத்தில் கொண்டு போயிருக்கிறது பின்னணி இசை..! ஈயின் அட்டகாசங்களுக்கு பெரிய பக்க பலமே பின்னணி இசைதான்.. மரகதமணியின் முத்தான இசைக் கோர்ப்பு படத்தினை எந்த இடத்திலும் தோய்வடையவிடவில்லை..! 


பழைய விட்டாலாச்சார்யா படங்களைத் தவிர மற்ற கிராபிக்ஸ் செய்த தமிழ்ப் படங்கள் எல்லாமே ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் வரும் புகைப்படங்களை போலவே செய்யப்பட்டவை.. கடைசியாக ஜெகன்மோகினி ரீமேக்கில் செய்யப்பட்ட படு சொதப்பலான கிராபிக்ஸ் காட்சிகள்தான் அந்தப் படத்தையே வதம் செய்துவிட்டது.. இராம.நாராயணன் தனது பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் செய்த தேள் கடி காட்சிகள் மாதிரிகூட இனி யாரும் இங்கே வைத்துவிட முடியாது..! 


பொழுது போக்கு என்னும் அம்சத்தில் இவைகள்தான் சினிமாக்கள் என்று நிச்சயமாகச் சொல்ல்லாம்..! இது மாதிரியான திரைப்படங்கள் சிறு பிள்ளைகளிடம் சினிமா மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.. ஒரு பக்கம் சினிமாவின் வளர்ச்சி. இன்னொரு பக்கம் அடுத்தத் தலைமுறை சினிமா ரசிகர்களின் துவக்கம்.. இப்படி இரண்டுவிதமான நன்மைகளையும் நாம் தொடர்ந்து பெற வேண்டுமெனில் இது போன்ற படங்கள் நிச்சயமாக நிறைய வர வேண்டும்.. 


அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்..!!!


15 comments:

முத்தரசு said...

இம்புட்டு விரிவா சொல்றீங்க....சரி பாத்துடுவோம்..

”தளிர் சுரேஷ்” said...

ஆகா! கண்டிப்பா பாத்துடுவோம்!

NAGARAJAN said...

You did not mention anything about Crazy Mohan's dialogues? How is it?

உண்மைத்தமிழன் said...

[[[மனசாட்சி™ said...

இம்புட்டு விரிவா சொல்றீங்க.... சரி பாத்துடுவோம்..]]]

அவசியம் பாருங்க ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

ஆகா! கண்டிப்பா பாத்துடுவோம்!]]]

அவசியம் பாருங்க.. குடும்பத்தோட..!

உண்மைத்தமிழன் said...

[[[NAGARAJAN said...

You did not mention anything about Crazy Mohan's dialogues? How is it?]]]

சொல்லணும்னு தோணலை ஸார்.. அவ்வளவுதான்..!

Paleo God said...

நன்றிண்ணே :))

ghi said...

//சிறு குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Read more: http://truetamilans.blogspot.com/2012/07/blog-post.html#ixzz20BzIgS1c
//

ஈ செய்யும் சேட்டைகளாலேயே, நிறைய வன்முறை காட்சிகள் கொண்ட இந்த படத்தை குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று சொல்வது சரிதானா? நிச்சயம் இது குழந்தைகளுக்கான படம்தானா??

உண்மைத்தமிழன் said...

[[[【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நன்றிண்ணே :))]]]

உங்க கண் பார்வை பட்டதுக்கு நான்தாண்ணே நன்றி சொல்லணும்..!

உண்மைத்தமிழன் said...

[[['யாவரும் நலம்' வெங்கட் said...

//சிறு குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Read more:
http://truetamilans.blogspot.com/2012/07/blog-post.html#ixzz20BzIgS1c
//

ஈ செய்யும் சேட்டைகளாலேயே, நிறைய வன்முறை காட்சிகள் கொண்ட இந்த படத்தை குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று சொல்வது சரிதானா? நிச்சயம் இது குழந்தைகளுக்கான படம்தானா??]]]

குழந்தைகள் இதனை வன்முறையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு ஈயின் சேட்டைகள்தான் முக்கியம்.. நமக்குத்தான் அது வன்முறை..!

Doha Talkies said...

Movie review romba nalla irunthathu..
inga doha vil release pannala.
avasiyam parkirom kudumbathudan..

Doha Talkies said...

«ñ½¡ Ó¾ø Өȡ¸ ô¦Ä¡ì ±Ø¾¢Ôû§Çý.
ºÁÂõ þÕó¾¡ø ´Õ Ó¨È À¡÷ì¸×õ.
¿ýÈ¢.

Doha Talkies said...

aNNA muthal muRaiyaaka blog ezhuthiyuLLaen.
samayam irunthaal oru muRai paarkkavum.
nanRi.

http://dohatalkies.blogspot.com/2012/07/good-bad-and-ugly.html

உண்மைத்தமிழன் said...

[[[Doha Talkies said...

Movie review romba nalla irunthathu.
inga dohavil release pannala.
avasiyam parkirom kudumbathudan..]]]

நல்லது. டோஹாவுக்கு அவசியம், விரைவில் வரும் என்று நினைக்கிறேன் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Doha Talkies said...

aNNA muthal muRaiyaaka blog ezhuthiyuLLaen. samayam irunthaal oru muRai paarkkavum.
nanRi.]]]

அவசியம் வந்து படிக்கிறேன் அண்ணா..!