08-07-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கூகிள் பஸ்ஸில் இதனை சின்னதாக எழுதினேன்..! பேஸ்புக்கில் காப்பி செய்தேன்..! பின்பு யோசித்துப் பார்த்ததில், பிளாக்கில் அரசியல் எழுதி ரொம்ப நாளாச்சு.. அதுனால பிளாக்குலேயும் காப்பி செஞ்சா நல்லாயிருக்குமேன்னு தோணிச்சு. அதான் செஞ்சுட்டேன்..!
2ஜி- கனிமொழி, தயாளு அம்மாளை கைது செய்ய முகாந்திரம் உள்ளது: அமலாக்கப் பிரிவு
2-ஜி ஊழல் வழக்கு விவகாரத்தில், கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி பணம் தரப்பட்ட வழக்கில், கனிமொழி மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உரிய முகாந்திரம் உள்ளது என்று மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2ஜி வழக்கு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு முன்பு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் இருந்து 2ஜி உரிமம் பெற்ற டிபி குரூப் நிறுவனம், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி மற்றும் மகள் கனிமொழி பங்குதாரர்களாக உள்ள கலைஞர் டிவிக்கு ரூ.223.55 கோடி பணம் கொடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ரூ. 200 கோடி பணம் முறைகேடாக கருணாநிதி குடும்பத்தினரால் பெறப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது.
அதேபோல, மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் குடும்பத்தாருக்கு சொந்தமான சன் டைரக்ட் டிவி லிமிடெட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது பற்றியும் விசாரணை நடத்தினோம். இந்த விவகாரத்தில், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏர்செல் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து அந்த நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்க நிர்ப்பந்தப்படுத்தியுள்ளார். நிறுவனம் கைமாறிய பிறகே ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வழங்கியுள்ளார். மேலும், அதன் பின்னர் மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ.549.96 கோடி பணத்தை முதலீடு செய்துள்ளது.
இது குறித்தும் சிபிஐ துணையுடன் விசாரணை நடத்தினோம். கடந்த மே மாதம் மலேசியாவில் விசாரணை நடத்தப்பட்டது. அது குறித்து மலேசிய அதிகாரிகளிடம் இருந்து மேலும் சில தகவல்கள் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தனர். ஜேபிசி விசாரணையின்போது, சில உறுப்பினர்கள், 2ஜி ஊழல் வழக்கை அமலாக்கப்பிரிவினர் மெதுவாக விசாரணை நடத்துவததாக குற்றம் சாட்டினர்.
சாட்சிகள் பட்டியலில் வாஜ்பாய், ப.சிதம்பரம்
இதற்கிடையே 2-ஜி ஊழல் வழக்கில் தயாரிக்கப்பட்டுள்ள சாட்சிகள் பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் பெயர்களை சேர்த்துள்ளனர். ஆனால், சாட்சிப் பட்டியலில் வாஜ்பாயின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஜேபிசி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த சந்திப்பின்போது ஆஜராகுமாறு 2ஜி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலாளர் சித்தார் பெகுராவுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.
நன்றி : தேட்ஸ்தமிழ்.காம்
- மேற்படி செய்தி தேட்ஸ்தமிழ்.காம்-ல் வெளிவந்திருக்கிறது. இது சம்பந்தமான எனது கருத்தை முரசொலியில் தினமும் வெளிவரும் ஆண்டி-போண்டி கார்ட்டூன் வடிவத்தில் என் மனதுக்குத் தோன்றியதை இங்கே எழுதியிருக்கிறேன்..
ஆண்டி : என்ன போண்டியாரே..! டெல்லி அரசியல்ல இப்பவும் நம்ம கைதான ஓங்கியிருக்கு..?
போண்டி : அட போறுமய்யா உன் அலட்டலு.. டெல்லிக்காரன் நமக்குன்னு வைச்சிருக்கான் பாரு ஆப்பை.. நம்ம எம்.பி.க்களின் சப்போர்ட்டோடு மன்னமோகனசிங்கின் அற்புதமான தலைமை நிர்வாகத்தில் இருக்கும் இந்த ஆட்சில, நம்ம மேலேயே குத்தம் சொல்றானுக முட்டாப் பயலுவ..! இப்படிப்பட்ட திராவிட இயக்கத் துரோக சிந்தனை கொண்ட அதிகாரிகளை வேலைக்கு வைச்சிருக்கிற நம்ம பிரதமரை முட்டாள்ன்னு சொல்றதா.. இல்ல.. இதைக்கூட அவர்கிட்ட கேட்க முடியாத அளவுக்கு தைரியமில்லாத கோழையா இருக்கோமே.. நம்மளைக் குத்தம் சொல்றதா..? ஒண்ணுமே புரியலை ஓய்..!
ஆண்டி : நமக்குத்தான் கோபாலபுரம், மயிலாப்பூர்ன்னு ஒண்ணுக்கு ரெண்டு ரைடக்ட் ஹாட்லைன் இருக்கே..? சிங்குக்கு போனை போட்டு "நாங்க என்ன திருடங்களா..? எங்க குடும்பம் என்ன திருட்டுக் குடும்பமா..? அப்புறம் ஏண்டா வெண்ணை என்கிட்ட ஆதரவு கேட்டு பிச்சையெடுத்து நீ பிரதமரா இருக்குற..? என் ஆதரவோட ஆட்சி செய்யற இந்த நேரத்துல உன்னோட ஆபீஸருங்க என் குடும்பத்தை திருடங்கன்னு சொல்றாய்ங்க.. இதைக் கேட்கக்கூட முடியலைன்னா நீ என்ன மயித்துக்கு என் ஆதரவுல பிரதமரா இருக்குற"ன்னு நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்க வேண்டியதுதானே..? இல்லாட்டி இந்த மத்திய அரசு "திராவிட இயக்க விரோத அரசு.. நமது இயக்கத்தின் மீது அநியாய பழி சுமத்தி நம்மை அழிக்கப் பாக்குது"ன்னு வழக்கமான புலம்பலை பாடிட்டு "ஆதரவை வாபஸ் வாங்குறோம்"னு சொல்லலாமே..? டெல்லிக்காரன் அலறியடிச்சிட்டு ஓடி வந்திர மாட்டான்..? ஏன் நம்ம தலீவரு இதைச் செய்ய மாட்டேன்றாரு..?
இதற்கு போண்டி என்ன பதில் சொல்வார் என்பதை மிகச் சரியாக யூகித்து எழுதுபவர்களுக்கு அடுத்து வரக் கூடிய 4-ஜி அலைக்கற்றையின் ஒட்டு மொத்த உரிமை ஏலத்திற்கு முதல் நாளே உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தரப்படும்..!
|
Tweet |
18 comments:
யோவ் வெண்ணை,
//இதற்கு போண்டி என்ன பதில் சொல்வார் என்பதை மிகச் சரியாக யூகித்து எழுதுபவர்களுக்கு அடுத்து வரக் கூடிய 3-ஜி அலைக்கற்றையின் ஒட்டு மொத்த உரிமை ஏலத்திற்கு முதல் நாளே உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தரப்படும்..!//
3ஜி ஏலம் விட்டப்போ வந்த வித்தியாசம் வச்சு தான் 2ஜில கேசே ஆச்சு, இனிமே எங்கே 3 ஜி ஏலம் விட, 4ஜீ க்கு தான் விடணும்,அதுவும் விட்டாச்சோ என்னமோ?
அரசியல் பதிவு போடணும்னா அப்டு டேட் ஆ இருக்கணும்யா :-))
டெல்லிக்காரன் அலறியடிச்சிட்டு ஓடி வந்திர மாட்டான்..? ஏன் நம்ம தலீவரு இதைச் செய்ய மாட்டேன்றாரு..?//
அண்ணே, நம்ம தலீவனுக்கு மானம் ரோஷம் சூடு சொரணை வெக்கம் எல்லாம் ரொம்ப இருக்காம் அண்ணே....ஆனால் கிலோ என்ன விலைன்னுதான் தெரியாதாம்.....[[ எனக்கு வாயில பச்சை பச்சையா வருது ம்ஹும் அடக்கிகிறேன் அண்ணே...]]
அட முட்டப் பயலே...
அழி தானே சுமதி இருக்கான்... அதை நிரூபிச்சிற முடியுமா என்ன...
நாமே என்ன அவளோ அப்பட்டமாவ திருடி இருப்போம்...
அந்த பழி வர்ற தேர்தல் கு முன்னாடி நிரூபணம் ஆகாம போகும்...
உடனே வீண் பழியால் சிறை சென்று வந்த தியாகச் செம்மல்கள் நு சொல்லி...அடுத்த தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிற வேண்டியது தான்....
[[[வவ்வால் said...
யோவ் வெண்ணை,
//இதற்கு போண்டி என்ன பதில் சொல்வார் என்பதை மிகச் சரியாக யூகித்து எழுதுபவர்களுக்கு அடுத்து வரக் கூடிய 3-ஜி அலைக்கற்றையின் ஒட்டு மொத்த உரிமை ஏலத்திற்கு முதல் நாளே உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தரப்படும்..!//
3ஜி ஏலம் விட்டப்போ வந்த வித்தியாசம் வச்சு தான் 2ஜில கேசே ஆச்சு, இனிமே எங்கே 3 ஜி ஏலம் விட, 4ஜீ க்கு தான் விடணும்,அதுவும் விட்டாச்சோ என்னமோ? அரசியல் பதிவு போடணும்னா அப்டு டேட் ஆ இருக்கணும்யா :-))]]]
வாங்க ஸார்.. செளக்கியமா..? ரொம்ப நாளாச்சு உம்மை என் தளத்துல பார்த்து..! ஒரு கேள்வி கேட்டதுக்கு முறைச்சுட்டு போனீங்க.. இப்பத்தான் பழசை மறந்து வந்திருக்கீங்க.. நல்லாயிருங்க..!
3ஜி அலைக்கற்றைல சில ஏரியாக்களை மட்டும் இப்போ மறுபடியும் ஏலத்துல விட்டிருக்காங்க. இன்னும் கொஞ்சம் இருக்காம்.. அடுத்து வரக் கூடியது 4 அல்லது 6 ஆக இருக்கலாம் என்பது என் கணிப்பு..! மாத்திட்டேன்..!
"யோவ் வெண்ணை"ன்னு உரிமையெடுத்து பேசுறவரு, உங்க திருமுகத்தையும் காட்டலாமே..? அப்போ கேட்டதைத்தான் இப்பவும் திருப்பி கேக்குறேன்..! என்னோடு தொடர்பில் இருப்பவர்கள் மட்டுமே என்னை இப்படி நெருக்கமாக அழைப்பார்கள். வேறு யாரும் அப்படி அழைக்க மாட்டார்கள். என்னை இப்படி கூப்பிடணும்னு உமக்கு ஆசையிருக்கலாம். அது தப்பில்லை.. அதே சமயம்.. முதல்ல பரஸ்பர அறிதலுக்கு பின்புதானே இந்த சொரிதல் வரணும்.. யோசிங்க..! அப்புறமா வந்து பின்னூட்டம் போடுங்க..!
[[[MANO நாஞ்சில் மனோ said...
டெல்லிக்காரன் அலறியடிச்சிட்டு ஓடி வந்திர மாட்டான்..? ஏன் நம்ம தலீவரு இதைச் செய்ய மாட்டேன்றாரு..?//
அண்ணே, நம்ம தலீவனுக்கு மானம் ரோஷம் சூடு சொரணை வெக்கம் எல்லாம் ரொம்ப இருக்காம் அண்ணே. ஆனால் கிலோ என்ன விலைன்னுதான் தெரியாதாம். [[எனக்கு வாயில பச்சை பச்சையா வருது ம்ஹும் அடக்கிகிறேன் அண்ணே...]]]
ஹி.. ஹி.. எனக்கும்தான். ஆனாலும் முடியாமத்தான் எழுதினேன்..! தலீவரு ஊருக்கெல்லாம் உபதேசம்னு லெட்டர் எழுதறவரு.. இதுக்கு ஒரு பதிலையும் சொல்ல மாட்டாரு பாருங்க..!
[[[Balaji Ramamurthy said...
அட முட்டாப் பயலே. பழிதானே சுமத்தியிருக்கான். அதை நிரூபிச்சிற முடியுமா என்ன? நாமே என்ன அவளோ அப்பட்டமாவ திருடி இருப்போம். அந்த பழி வர்ற தேர்தலுக்கு முன்னாடி நிரூபணம் ஆகாம போகும். உடனே வீண் பழியால் சிறை சென்று வந்த தியாகச் செம்மல்கள்னு சொல்லி அடுத்த தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிற வேண்டியதுதான்.]]]
பாலாஜியண்ணே.. சூப்பர்ப்.. டெய்லி முரசொலி படிக்கிறீங்க போலிருக்கு..! கிட்டத்தட்ட பக்கத்துல வந்துட்டீங்க..! வெல்டன்..!
irukkave irukku,janadhipathi therthal,adhai vaithu kooda arasiyal pannalam
அவ்வளவு சுவாரஸியமா இல்லியேண்ணே! டர்பன் சிங்கையும், திருவாரூர் சிங்கத்தையும் திட்டறதுல சிக்கனமே வச்சுக்காததுனால அலுத்துடுச்சோ!!
யேயப்பா என்னமோ பிகர ஆசைப்பட்டு கூப்பீட்டாப்போல நினைச்சுக்கிட்டாரே :-))
நாம எல்லாரையும் வழக்கமா கலாய்ப்பது தானே, அப்படிக்கூப்பிட்டா, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு ,ஓட்டர் காட்டுன்னு சொல்லிக்கிட்டு, :-))
குமுதம் அரசு, விகடன் மதன்(அப்போ) சுஜாதா எல்லாருக்கும் கேள்விக்கேட்டு போஸ்ட்கார்டு போடும்போதே இப்படித்தான் கலாய்ப்பேன். ஊடகத்தில இருப்பவர்களை எல்லாம் வாசகர்கள் உரிமையா கலாய்க்கலாம், அதுக்கெல்லாமா பஞ்சாயத்து வைப்பாங்க ,என்ன அக்கப்போரா இருக்கு.
//டெல்லிக்காரன் அலறியடிச்சிட்டு ஓடி வந்திர மாட்டான்..? ஏன் நம்ம தலீவரு இதைச் செய்ய மாட்டேன்றாரு..?//
டில்லிக்காரன் ஒன்னும் அந்த அளவுக்கு மூளையத்தவன் இல்லை, நேரா தோட்டத்துக்கு ஒரு பூச்செண்டு அனுப்பிட்டு, தயாளு அம்மாளுக்கு சம்மன் அனுப்பிடுவாங்க :-))
குடுமியோட கோவணமும் டில்லில மாட்டிக்கிட்டு இருக்கும் போது ...சூடாவது ,சுரணையாவது :-))
[[[vsankar said...
irukkave irukku, janadhipathi therthal, adhai vaithu kooda arasiyal pannalam.]]]
இப்போ அதைத்தான் செய்றானுக காங்கிரஸ்காரனுக..! ஓட்டுப் போட்டு முடியறவரைக்கும் இப்படியொரு இழுப்பு தொடரும்ன்னுதான் நினைக்கிறேன்..! அதுக்கப்புறம் எப்படியோ..?
[[[ரிஷி said...
அவ்வளவு சுவாரஸியமா இல்லியேண்ணே! டர்பன் சிங்கையும், திருவாரூர் சிங்கத்தையும் திட்டறதுல சிக்கனமே வச்சுக்காததுனால அலுத்துடுச்சோ!!]]]
அதேதான்.. எவ்வளவுதான் திட்டுறது..? எனக்கே போரடிக்குது..!
[[[வவ்வால் said...
யேயப்பா என்னமோ பிகர ஆசைப்பட்டு கூப்பீட்டாப்போல நினைச்சுக்கிட்டாரே:-))
நாம எல்லாரையும் வழக்கமா கலாய்ப்பதுதானே, அப்படிக் கூப்பிட்டா, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டர் காட்டுன்னு சொல்லிக்கிட்டு, :-))
குமுதம் அரசு, விகடன் மதன்(அப்போ) சுஜாதா எல்லாருக்கும் கேள்வி கேட்டு போஸ்ட் கார்டு போடும்போதே இப்படித்தான் கலாய்ப்பேன். ஊடகத்தில இருப்பவர்களை எல்லாம் வாசகர்கள் உரிமையா கலாய்க்கலாம், அதுக்கெல்லாமா பஞ்சாயத்து வைப்பாங்க, என்ன அக்கப்போரா இருக்கு.]]]
முன் பின் தெரியாதவர்களை எதற்காக கலாய்க்கிறீர்கள்..?
ஆட்டோவில் போகும்போது டிரைவர், என்ன ஸார் பேமானித்தனமா பேசுறீங்க.. கேனத்தனமா கூவுறீங்கன்னு சொன்னா சிரிப்பீங்களோ..?
[[[வவ்வால் said...
//டெல்லிக்காரன் அலறியடிச்சிட்டு ஓடி வந்திர மாட்டான்..? ஏன் நம்ம தலீவரு இதைச் செய்ய மாட்டேன்றாரு..?//
டில்லிக்காரன் ஒன்னும் அந்த அளவுக்கு மூளையத்தவன் இல்லை, நேரா தோட்டத்துக்கு ஒரு பூச்செண்டு அனுப்பிட்டு, தயாளு அம்மாளுக்கு சம்மன் அனுப்பிடுவாங்க :-))
குடுமியோட கோவணமும் டில்லில மாட்டிக்கிட்டு இருக்கும்போது சூடாவது, சுரணையாவது :-))]]]
-))))))))))))))
நறுக் மொறுக் அரசியல் பதிவு! வாழ்த்துக்கள்!
[[[s suresh said...
நறுக் மொறுக் அரசியல் பதிவு! வாழ்த்துக்கள்!]]]
நன்றிகள் சுரேஷ்..!
நல்லதொரு அரசியல் பதிவு... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...! (த.ம. 5)
[[[திண்டுக்கல் தனபாலன் said...
நல்லதொரு அரசியல் பதிவு... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...! (த.ம. 5)]]
தங்களது வருகைக்கு நன்றி தனபாலன் ஸார்..!
Post a Comment