மாலைப் பொழுதின் மயக்கத்திலே - சினிமா விமர்சனம்

27-07-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுவொரு வினோத அனுபவம்..! ஒரு காபி டே கடைதான் படத்தின் இருப்பிடம். முதல் காட்சி மற்றும் இரண்டாம் காட்சியில் காட்டப்படும் கடற்கரை, ஒரு வீடு இதற்குப் பின்பு படம் முடியும்வரையிலும் கேமிரா, காபி டே கடையைவிட்டு வெளியேறவில்லை..!


2 நாட்களுக்குள்ளாக அட்வான்ஸாக வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாய நெருக்கடியில் இருக்கும் அஜய் என்னும் உதவி இயக்குநரான ஹீரோ.. நண்பனுக்கு அட்வைஸ் செய்ய வந்து அவனுக்காகக் காத்திருக்கும் ஜியா என்ற ஹீரோயின். காதல் திருமணம் செய்தும், பிள்ளை பெற்ற பின்பும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாமல் பிரியும் தருவாயில் இருக்கும் ரம்யா-சதீஷ் பேமிலி.. தாய், தந்தையின் சண்டை புரியாமல் இருக்கின்ற சூழலை அனுபவிக்கத் துடிக்கும் இவர்களின் சின்ன வயது மகன்.. அதே காபி டேயின் ஒரு ஓரத்தில் லேப்டாப்பின் மானிட்டர் ஸ்கீரினை மட்டும் ரெப்ரஷ் செய்தபடியே இருக்கும் சினிமா கதாசிரியர்.. எப்போதும் பிகர்களுடன் கடலை போடும் சர்வர்-1.. நியாயமாக வாங்குகின்ற சம்பளத்துக்கு உழைக்க நினைக்கும் சர்வர்-2, வீட்டுப் பிரச்சினையில் மண்டை காய்ந்து போயிருக்கும் கடை மேனேஜர்.. 

இவர்கள் அனைவரின் பிரச்சினையையும் ரீல் பை ரீல் லேசுபாசாகத் தொட்டுத் தொட்டுத் தடவி அத்தனை பிரச்சினைகளுக்கும் 112 நிமிடத்தில் தீர்வு சொல்லி கதையை முடித்து நம்மை விட்டால் போதுமென்று தப்பிக்க வைக்கிறார் இயக்குநர்..!

ஹீரோ ஆரி.. ஏற்கெனவே தாமிராவின் ரெட்டைச் சுழி படத்தில் ஹீரோவாக நடித்தவர்.. அவரது வயதுக்கேற்ற வேடம் என்பதால் ஜியாவை பார்த்தவுடன் காதல் பீலிங் வந்து, ஒன்றன் பின் ஒன்றாக வார்த்தைகளைக் கோர்த்து வசனங்கள் பேசுவதும்.. பாத்ரூமுக்குள் சென்று மோனோ ஆக்டிங் செய்து பார்ப்பதும்.. ஜியாவின் தோழனுக்கு அட்வைஸ் செய்வதுமான காட்சிகளில் நிச்சயம் நடித்திருக்கிறார்.. வேறு எதுவும் சொல்வதற்கில்லை..!


ஜியா என்னும் புதுமுக ஹீரோயின் இழுத்து, இழுத்து வசனம் பேசும்போதே அவரை ரசிக்க முடியவில்லை..! இப்படித்தானா தமிழைக் கொலை செய்வது..? அழகு மட்டும் போதுமா..? நன்கு தமிழ் பேசும் நடிகைகளா தமிழ்நாட்டில் இல்லை..? சொன்னதை செய்வார்கள்.. கொடுப்பதை வாங்கிக் கொள்வார்கள் என்ற சூத்திரத்தை இப்படியெல்லாம் கடைப்பிடித்தால் படம் எப்படி..? 

படத்தின் ஆறுதலான விஷயங்களில் ஒன்று ஒளிப்பதிவு.. பெஸ்ட்டோ பெஸ்ட்.. காபி டே கடையின் எந்தக் கோணத்தில் கேமிராவை திருப்பி வைத்தாலும் அழகு பளிச்சிடுகிறது. அதிலும் முக்கால்வாசி படத்தை மழை பெய்யும் சூழலிலேயே எடுத்திருப்பதும் பிரேமுக்கு பிரேம் ஜொலிக்க வைத்திருக்கிறது..! 


இன்னொரு ஆறுதல்.. இரண்டாவது ஹீரோயின் தேஜஸ்வாணி.. தேவதை.. அவர் எந்தக் கோணத்தில் அழகாக இருப்பாரோ கச்சிதமாக அதை மிஸ் செய்யாமல் படமெடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.. சின்ன சின்ன வார்த்தைகள்தான்.. கணவருடனான மோதலை முகத்திலேயே காட்டும் அந்த எக்ஸ்பிரஷன் பெர்பெக்ஷன்.. இறுதியில் இவர்கள் இணைவதாக வருவது நாடகத்தன்மையாக இருந்தாலும் அழகு தேவதையை மேலும் அழ வைக்காமல் விட்டுவிட்டார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..!

படத்தின் மேக்கிங் நல்லாத்தான இருக்கு என்பவர்கள் வசனங்களையும், காட்சியமைப்புகளையும் உதாரணமாக்குவார்கள்.. அழகு என்பது நமக்குத்தான்.. அது சராசரி ரசிகனின் மனதை லேசாக டச் செய்ய வேண்டும். அதில் இது மிஸ்ஸிங்.. எந்தக் காட்சியும் மனதில் ஒட்டாத அளவுக்கு அளவுக்கு மீறிய இயல்பு தன்மையைக் காட்டித் தொலைத்திருக்கிறார்கள். அதுவே இப்படத்திற்கு மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்டாக போய்விட்டது..!

மேனேஜர் பஞ்சுவை டென்ஷனாக்கும் சர்வர் ஹரியின் தொடர்ச்சியான பேச்சும், இன்னொரு சர்வரின் பேச்சும் யதார்த்தமாகத்தான் உள்ளது என்றாலும் அது கடைக்கோடி ரசிகனுக்குரியதாக இல்லை..! தன்னால் ஒருத்தி கர்ப்பமாகிவிட்டாள் என்பதை அறிந்து இதையே தொழிலாக வைத்திருக்கும் ஹரி.. இதற்கு காதலியிடம் போனில் சொல்லும் சமாளிப்பும், அடுத்த பிகரிடம் உடனேயே கடலை போடத் துவங்கும் காட்சிகளும் அந்த நேரத்தில் ரிலாக்ஸ் கொடுத்தது என்பது உண்மைதான்..!

இன்னொரு முக்கிய கேரக்டர் பாலாஜி.. புரிந்து கொள்ளாத கணவராக நடித்திருக்கும் இவருக்கு பஞ்சு புத்திமதி சொல்வதை போல காட்சியமைத்து, அந்தப் புத்திமதியைக் கூட தெளிவாகச் சொல்லாமல்விட்டதுதான் ஏன் என்று தெரியவில்லை..? 

தன்னிடம் கேட்ட ஆர்டரை இல்லை என்று பொய் சொல்வது தெரிந்தும் சர்வர் சேகர் வருத்தப்பட்டு நிற்பதும்.. இதை அவ்வப்போது ஹரி சுட்டிக் காட்டி ஆறுதல் சொல்வதும்.. இறுதியில் சுப்பு தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு ஊருக்குப் போகப் போவதாகச் சொல்வதும், ஜியா இறுதிக் காட்சியில் திடீரென்று மனசு மாறி திரும்பி வருவதும் வெறுமனே நாடகத்தனமாக இருக்கிறது..!

திடீர் திடீரென்று வரும் பாடல் காட்சிகள் மட்டுமே இது தமிழ்ச் சினிமா என்பதை அடையாளம் காட்டுகின்றன.. ஆனாலும் அது எந்தவிதத்திலும் ரசிக்கும்படியாகவும் இல்லை என்பதையும் சொல்லத்தான் வேண்டும். ஊறுகாயை எதற்காகவாவது தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். ஆனால் அதையே சாப்பிட முடியுமா..? வெறும் ஒளிப்பதிவை மட்டும் வைத்துக் கொண்டு பாடல் காட்சிகளை ஒப்பேற்றியிருக்கிறார்கள்..!

சிவாஜி சந்தானம் ஸார்.. சில காட்சிகளில் தனியே அமர்ந்திருக்கிறார்.. அவருக்கென்று தனி டிராக் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஆனால் அவரது கேரக்டர் கடைசியில் வேஸ்ட்டாகவே போய்விட்டது..! 

சுவாரஸ்யமில்லாத கதை..  அழுத்தமில்லாத திரைக்கதை..! ஒரே இடத்தை சுற்றி சுற்றி வரும் போரடிப்பு.. அதிகம் முகம் தெரியாத நடிகர்கள்.. மேட்டிமைத்தனம் சார்ந்த இயக்கம்.. இதெல்லாம் சேர்ந்து இப்படத்தை புதைகுழிக்குள் தள்ளியிருக்கிறது என்று தைரியமாகச் சொல்லலாம்..!

வித்தியாசமான கதைக் களன்கள் தமிழ்ச் சினிமாவுக்கு அவசியம் தேவைதான். ஆனால் நிச்சயம் இது போன்ற முட்டாள்தனங்கள் தேவையில்லாதவை. இங்கே வெற்றி படம்.. வெற்றியடையாத படம் என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே உண்டு.. நல்ல படம்.. கெட்ட படம் என்றெல்லாம் இல்லை..! தோல்விப் படங்களெல்லாம் கெட்ட படங்களல்ல.. அதேபோல் வெற்றி பெற்ற படங்கள் அனைத்தும் நல்ல படங்கள் அல்ல..!

சராசரி ரசிகனின் பார்வையை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. வழக்கு எண்ணை ஓடோடி வந்து பார்த்த அதே ரசிகன்தான், தடையறத் தாக்க படத்தையும் பார்த்திருக்கிறான்..! அவனுடைய அளவுகோல் மாதத்துக்கு மாதம், வாரத்துக்கு வாரம்.. ஏன் நாளுக்கு நாள் மாறிக் கொண்டேதான் இருக்கிறது..! அவர்களுக்கேற்றாற்போல் நாமளும் மாறித்தான் ஆக வேண்டும். நமக்குப் பிடித்தமானதுபோல் எடுத்துக் கொடுத்து கண்டிப்பாக நீ பார்த்தே தீர வேண்டும் என்று யாரையும் வற்புறுத்த முடியாது.. 

இதன் இயக்குநர் நாராயண நாகேந்திரராவ் நிறைய லத்தீன் அமெரிக்க படங்களை பார்த்திருப்பார் போலிருக்கிறது..! இப்படம்கூட ஏதோ ஒன்றின் தழுவலாகத்தான் இருக்கும்..! ஒரு இடைவேளை.. 5 பாடல்கள்.. நகைச்சுவைக் காட்சிகள்.. சண்டைக் காட்சிகள்.. கண்ணீர் வரவழைக்கும் 5 நிமிட உருக்கமான காட்சிகளென்று வழக்கமான கமர்சியல் பார்முலாவை கேட்கவில்லை. ஏன் வழக்கு எண் போன்றாவது செய்திருக்கலாமே..? 

இதன் தயாரிப்பாளர் திருமதி.மயூரி சேகர், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் இப்படம் தயாரிக்க தான் முனைந்தது பற்றியும், அதற்கு முன் திரையுலகில் நுழைய தான் பட்ட சிரமத்தையும் வெள்ளந்தியாக எடுத்து வைத்தபோது விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேரும் உருகிப் போய் வாழ்த்து மேல் வாழ்த்து சொன்னார்கள். அந்த வாழ்த்துகள் இப்படி வீணாய்ப் போய்விட்டதே என்பதில் மீடியாக்காரர்கள் அனைவருக்குமே இப்போதும் வருத்தம்தான்..!

இந்தப் படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து படங்கள் செய்ய தயாராக இருப்பதாகக் கூறியிருக்கும் தயாரிப்பாளர் இதற்கடுத்து என்ன செய்வார் என்று எனக்குத் தெரியவில்லை..! இப்படி ஒரு தயாரிப்பாளர் தோல்வியடைந்து கோடம்பாக்கத்தில் இருந்து வெளியேறினால் இவரது தோல்வியைப் பார்த்து, வருவதற்காகக் காத்திருக்கும் சிலரும் உள்ளே வராமலேயே சிலர் திசை மாறிப் போய்விடுவார்கள். இது போன்ற தோல்விகள் சங்கிலித் தொடர் போல சினிமா துறையையே பாதிக்கிறது.. இதனை யார் புரிந்து கொள்வது..?

விமர்சனங்களையும் தாண்டி இப்படம் ஓடி, வெற்றி பெற்றால் நிச்சயம் நமக்கும் சந்தோஷமே..! அடுத்த படமாவது இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் வெற்றிகரமாக இருக்க வாழ்த்துகிறேன்..!


20 comments:

கோவை நேரம் said...

வெற்றி பெற்றால் நிச்சயம் நமக்கும் சந்தோஷமே..///
அதுதான் சொல்லிடீங்களே...படம் பப்படம் என்று...

”தளிர் சுரேஷ்” said...

என்ன இது இன்னிக்கு வந்த படம் எல்லாம் வெறும்சொதப்பலா இருக்கு?

திண்டுக்கல் தனபாலன் said...

படம் போகலாமா ? வேண்டாமா ?

(த.ம. 2)

அசிஸ்டன்ட் டைரக்டர் said...

லாபத்தின் மீது கண்ணாக இல்லாமல் நல்ல சினிமா தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வரும் தயாரிப்பாளர்களில் இப்படி முதல் முயற்சியிலேயே விரடடப் படுபவர்களில் இந்த தயாரிப்பாளரும் இன்னொரு ஆள் அவ்வளவே.. உங்கள் விமரிசனம் பொருத்தமாகவும் சரியாகவும் இருந்தது. வாழ்த்துக்கள்.

Doha Talkies said...

//இது போன்ற தோல்விகள் சங்கிலித் தொடர் போல சினிமா துறையையே பாதிக்கிறது.. இதனை யார் புரிந்து கொள்வது..?//
இது தான் அண்ணனோட டச்.
விமர்சனம் அருமை அண்ணா, ஆனால் கத்தாரில் இதுபோன்ற படங்கள் வருவதில்லை.
டவுன்லோட் தான் வேறு வழி இல்லை அண்ணா.

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

வெற்றி பெற்றால் நிச்சயம் நமக்கும் சந்தோஷமே..///

அதுதான் சொல்லிடீங்களே...படம் பப்படம் என்று...]]]

ஹி.. ஹி.. ரொம்ப உன்னிப்பா பார்க்குறீங்க போலிருக்கே..?

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

என்ன இது இன்னிக்கு வந்த படம் எல்லாம் வெறும் சொதப்பலா இருக்கு?]]]

எப்பவும் நடக்கிறதுதான்.. மாசத்துக்கு ஒண்ணுதான் தேறுது..!

உண்மைத்தமிழன் said...

[[[திண்டுக்கல் தனபாலன் said...

படம் போகலாமா ? வேண்டாமா ?]]]

பொழுது போகலைன்னா.. காசு நிறைய இருந்தா.. நேரமும் மிச்சமிருந்தா போலாம்ண்ணே..! தலைவலி வராது.. அது மட்டும் கியாரண்டி..!

உண்மைத்தமிழன் said...

[[[அசிஸ்டன்ட் டைரக்டர் said...

லாபத்தின் மீது கண்ணாக இல்லாமல் நல்ல சினிமா தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வரும் தயாரிப்பாளர்களில் இப்படி முதல் முயற்சியிலேயே விரடடப்படுபவர்களில் இந்த தயாரிப்பாளரும் இன்னொரு ஆள் அவ்வளவே.. உங்கள் விமரிசனம் பொருத்தமாகவும் சரியாகவும் இருந்தது. வாழ்த்துக்கள்.]]]

நன்றி நண்பரே..! வன்முறை, மசாலா காட்சிகள் இல்லை.. இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை.. என்றெல்லாம் சமாதானம் சொன்னாலும்.. பெருவாரியான மக்கள் ரசனைக்கு ஏற்றாற்போல் இல்லையென்றால் அதுவும் ஓடாது..! இதையும் புதிய இயக்குநர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Doha Talkies said...

//இது போன்ற தோல்விகள் சங்கிலித் தொடர் போல சினிமா துறையையே பாதிக்கிறது.. இதனை யார் புரிந்து கொள்வது..?//

இதுதான் அண்ணனோட டச்.
விமர்சனம் அருமை அண்ணா, ஆனால் கத்தாரில் இது போன்ற படங்கள் வருவதில்லை. டவுன்லோட்தான் வேறு வழி இல்லை அண்ணா.]]]

அவசியம் பாருங்க தம்பி..! ஏதோ டைம் பாஸாகும்..!

வவ்வால் said...

என்ன ஒரேயடியா வாரிவிட்டிங்களே, இந்தப்படத்துக்கு எப்.எம் ரேடியோவில் வித்தியாசமான படம் ஹாலிவுட் ரேஞ்சில் லைவ் ரெக்கார்டிங் செய்த தமிழ்ப்படம்னு எல்லாம் விளம்பரம் ஓடிக்கிட்டு இருக்கு.

//ஜியா என்னும் புதுமுக ஹீரோயின் இழுத்து, இழுத்து வசனம் பேசும்போதே அவரை ரசிக்க முடியவில்லை..! இப்படித்தானா தமிழைக் கொலை செய்வது..? அழகு மட்டும் போதுமா..? நன்கு தமிழ் பேசும் நடிகைகளா தமிழ்நாட்டில் இல்லை..?
//

என்னமோ எல்லா நடிகையும் அவங்களே பேசி நடிப்பது போல சொல்லி இருக்கீங்க, எல்லாருக்கும் டப்பிங்க் தானே அதுவும் சபிதாவோ சவிதாவோ ஒரே பொண்ணே எல்லா ஹீரோயினுக்கும் டப்பிங்க் கொடுக்குது.

இந்தப்படத்தில எல்லாம் சொந்தக்குரலில் பேசி லைவ் ரெக்கார்டிங்ல ஷூட் செய்து இருக்காங்கன்னு சொல்றாங்க.

ஹீரோயின் இழுத்து இழுத்து பேசவும் அதான் காரணம் போல, சொந்த குரலில் ஸ்பாட்ல டயலாக் பேசி நடிக்கணும்ல.(லைவ் ரெக்கார்டிங்னா அப்படித்தானே செய்யணும்,இல்லை வேற எதாவது செய்வாங்களா?)

வவ்வால் said...

ஆஸ்கார் வென்ற ஜெர்மன்/ஆங்கிலப்படமான பழைய "பாக்தாத் கஃபே" வை உல்டா செய்தார்ப்போல இருக்கு, அதில தான் பலப்பிரச்சனைகளோட ஒரு காபி ஷாப்ல சந்திக்கிற கதாபாத்திரங்கள்,காபி ஷாப் நஷ்டதில ஓடும், எல்லாம் கடைசியில் சுபமா முடியும்.படம் முழுக்க காபி ஷாப்லவே நடக்கும் :-))

ஆனால் முன்னரே லோகநாயகன் இதை நளதமயந்தினு உல்டா அடிசிட்டார் :-))

பழைய ஜெர்மன் படங்களை காப்பி அடிக்க ஓரு கூட்டமே கிளம்பிடுச்சு போல கோலிவுட்டில :-))

மிஷ்கின் சீடர்னு இயக்குனர் நிருபிச்சுட்டார் :-))

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

என்ன ஒரேயடியா வாரிவிட்டிங்களே, இந்தப் படத்துக்கு எப்.எம் ரேடியோவில் வித்தியாசமான படம். ஹாலிவுட் ரேஞ்சில் லைவ் ரெக்கார்டிங் செய்த தமிழ்ப் படம்னு எல்லாம் விளம்பரம் ஓடிக்கிட்டு இருக்கு.]]]

ஒரு விஷயமும் உங்க கண்ணுக்கு, காதுக்கு படாம போகாதா வவ்ஸு..! பெரிய சிபிஐயா இருப்பீரு போலிருக்கே..?

[[[//ஜியா என்னும் புதுமுக ஹீரோயின் இழுத்து, இழுத்து வசனம் பேசும்போதே அவரை ரசிக்க முடியவில்லை..! இப்படித்தானா தமிழைக் கொலை செய்வது..? அழகு மட்டும் போதுமா..? நன்கு தமிழ் பேசும் நடிகைகளா தமிழ்நாட்டில் இல்லை..?//

என்னமோ எல்லா நடிகையும் அவங்களே பேசி நடிப்பது போல சொல்லி இருக்கீங்க, எல்லாருக்கும் டப்பிங்தானே.. அதுவும் சபிதாவோ சவிதாவோ ஒரே பொண்ணே எல்லா ஹீரோயினுக்கும் டப்பிங்க் கொடுக்குது. இந்தப் படத்தில எல்லாம் சொந்தக் குரலில் பேசி லைவ் ரெக்கார்டிங்ல ஷூட் செய்து இருக்காங்கன்னு சொல்றாங்க.
ஹீரோயின் இழுத்து இழுத்து பேசவும் அதான் காரணம் போல, சொந்த குரலில் ஸ்பாட்ல டயலாக் பேசி நடிக்கணும்ல.(லைவ் ரெக்கார்டிங்னா அப்படித்தானே செய்யணும்,இல்லை வேற எதாவது செய்வாங்களா?)]]]

வவ்ஸு.. அந்தப் பொண்ணு பேச்சு ஸ்டைலே அப்படித்தான்னு நினைக்கிறேன்.. அதுக்கு தமிழ் ஒத்து வரலை.. மத்த புதுமுகங்கள்கூட தமிழை தமிங்கிலீஷ்ல எழுதி வைச்சு மனப்பாடம் செஞ்சுதான் சொல்றாங்க.. மத்தவங்களுக்கெல்லாம் நல்லா வருதே.. இந்தப் பொண்ணுதான் கொஞ்சம் மக்கர்.. சந்தேகமா இருந்தா பொல்லாங்கு படத்தை பாருங்க.. நிலா லால்வாணி அசத்தலா டயலாக் பேசியிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

ஆஸ்கார் வென்ற ஜெர்மன்/ஆங்கிலப் படமான பழைய "பாக்தாத் கஃபே" வை உல்டா செய்தார் போல இருக்கு, அதிலதான் பலப் பிரச்சனைகளோட ஒரு காபி ஷாப்ல சந்திக்கிற கதாபாத்திரங்கள், காபி ஷாப் நஷ்டதில ஓடும், எல்லாம் கடைசியில் சுபமா முடியும். படம் முழுக்க காபி ஷாப்லவே நடக்கும் :-))

ஆனால் முன்னரே லோகநாயகன் இதை நளதமயந்தினு உல்டா அடிசிட்டார் :-)) பழைய ஜெர்மன் படங்களை காப்பி அடிக்க ஓரு கூட்டமே கிளம்பிடுச்சு போல கோலிவுட்டில :-))

மிஷ்கின் சீடர்னு இயக்குனர் நிருபிச்சுட்டார் :-))]]]

ஓஹோ.. சுழலும் காப்பி.. இதுவும் காப்பியா..? அப்போ பொல்லாங்கு..? என்ன கொடுமை சரவணா இது..? எல்லாம் காப்பி படமா வருது..?

NAAN said...

kerala kafe மலையாள பட உல்டா?

வவ்வால் said...

அண்ணாச்சி,

பேசிக்கிட்டே நடிச்சதுல ஒழுங்க பேச முடியாம போய் இருக்கும்.

சின்ன பட்ஜெட் படத்துல புதுமுகம் வச்சு லைவ் ரெக் செய்றது ரிஸ்க் தானே.

பொல்லாங்கு போல ஒரு 1000 படமாச்சும் ஹாலிவுட்ல எடுத்து இருப்பாங்க, இன்டி மூவி மேக்கர்ஸ்னு எடுக்கிறவங்க செய்ற கதையே இதான் :-))
யூ டர்ன் னு ஒரு படம் இதே போல கதையில ஹிட்டாச்சு, அது தான் தமிழ்ல சரோஜாவ சில மாற்றத்துடன் வந்துச்சு.அஸ்தமனம், காட்டுப்புலினு வந்த தமிழ்ப்படம் எல்லாம் இந்த கதைக்களன் தான் :-))
----------

கேரளா கஃபேல தனி தனியா நாளஞ்சு குறும்படம் வரும் தானே,பேரு வச்சு ஒற்றுமையா? :-))

உண்மைத்தமிழன் said...

[[[வல்லத்தான் said...

kerala kafe மலையாள பட உல்டா?]]]

இல்லை.. அது வேறு.. இது வேறு..! அதில் ஆறு கதைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் இறுதியில் வந்து சந்திக்கும் இடம் கபே.. இதில் கதையே கபேயில்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, பேசிக்கிட்டே நடிச்சதுல ஒழுங்க பேச முடியாம போய் இருக்கும். சின்ன பட்ஜெட் படத்துல புதுமுகம் வச்சு லைவ் ரெக் செய்றது ரிஸ்க்தானே. பொல்லாங்கு போல ஒரு 1000 படமாச்சும் ஹாலிவுட்ல எடுத்து இருப்பாங்க, இன்டி மூவி மேக்கர்ஸ்னு எடுக்கிறவங்க செய்ற கதையே இதான் :-)) யூ டர்ன் னு ஒரு படம் இதே போல கதையில ஹிட்டாச்சு, அதுதான் தமிழ்ல சரோஜாவ சில மாற்றத்துடன் வந்துச்சு. அஸ்தமனம், காட்டுப்புலினு வந்த தமிழ்ப்படம் எல்லாம் இந்த கதைக் களன்தான் :-))]]]

வவ்வால்ஜி.. கோடம்பாக்கத்தில் இருக்கும் நீர் ஏன் இப்படி முகம் காட்டாமலேயே பேசுகிறீர் என்று தெரியவில்லை. அஸ்தமனம், காட்டுப் புலியெல்லாம் எப்படி உமக்குத் தெரியும்..? ச்சும்மா நடிக்காதீர்..! சரி.. சரி.. நல்லாயிரும். என்னிக்காச்சும் ஒரு நாள் தெரியத்தான் போவுது.. அன்னிக்கு வைச்சுக்கிறேன்..!
----------

[[[கேரளா கஃபேல தனி தனியா நாளஞ்சு குறும்படம் வரும்தானே,பேரு வச்சு ஒற்றுமையா? :-))]]]

ஆமாம்.. பெயரில் மட்டுமே ஒற்றுமை..!

Kharthik said...

21 years old, 'Maalai Pozhuthin Mayakathile' movie's cute heroine Subha passed away today due to Jaundice...

உண்மைத்தமிழன் said...

[[[Kharthik said...

21 years old, 'Maalai Pozhuthin Mayakathile' movie's cute heroine Subha passed away today due to Jaundice...]]]

சாகுற வயசா இந்தப் பொண்ணுக்கு.. க்யூட்டான அழகு..! ஒரு ரவுண்டு வரும்னு நினைச்சேன்.. பட்.. முருகன் கணக்கு வேற மாதிரியிருந்திருக்கு..! எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..!