அழுதுவிடுவேன் என்று பயமுறுத்திய கமல்ஹாசன்..!

18-01-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு அப்பாஸ் அகாடமியின் சார்பில் நேற்று மாலை 6 மணிக்கு பாராட்டு விழா நடப்பதாக நேற்று மாலை 3 மணிக்குத்தான் தெரிந்தது. இப்படியிருந்தா நாடு எப்படி முன்னேறும்..?

புத்தகக் கண்காட்சியின் இறுதி நாள் விழாவில் கலந்து கொண்டு அரங்கத்தின் பூட்டைப் பூட்டிச் சாவியை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு என்னை அழைத்திருந்தும் எனது ஆசானுக்கு நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் எனது சக தோழர்களை அங்கே அனுப்பிவைத்துவிட்டு நான் மட்டும் இந்த நிகழ்ச்சிக்குப் பயணமானேன்.

காமராஜர் அரங்கத்தில் 90 சதவிகிதம் நிரம்பியிருந்தது. இத்தனைக்கும் நிகழ்ச்சிக்கு டிக்கெட் போட்டிருந்தார்கள். எப்படி இந்தக் கூட்டம் திரள்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் திரையிசைப் பாடல்களை கேட்கத்தான்..!

மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், வசந்த் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். அழைப்பிதழில் பெயர் போடாததாலும், யாரையும் குறிப்பிட்டு பெயர் சொல்லி அழைக்காததாலும் பலரும் அழைப்பிதழ்கள் வாங்கிய கையோடு மறந்து போய்விட்டனர் போலும்.. இதனை ஒளிபரப்பும் உரிமையை வாங்கியிருந்தது மெகா டிவி என்பதும் பலர் வராததற்கு ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!

கணேஷ் கிருபா இசைக் குழுவினர் இயக்குநர் சிகரத்தின் படங்களில் இருந்து மட்டும் பாடல்களை ஒலித்தனர். இவர்களைவிட வந்திருந்தவர்களை தனது வசீகரத் தமிழால் கட்டிப் போட்டிருந்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது..

1982-1983-களில் இவருடைய குரலுக்காகவே  ஞாயிற்றுக்கிழமைதோறும் இலங்கை வானொலியில் மதியம் 3.30  மணிக்கு ஒளிபரப்பாகும் லலிதா ஜூவல்லர்ஸ் வழங்கும் 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சியை தவறவிடாமல் கேட்டவன் நான்.

ஒவ்வொரு பாடலுக்கு முன்பும், அந்தப் பாடல் பற்றிய சில சுவையான விஷயங்களை எடுத்துச் சொல்லி அதற்கொரு சுவையூட்டினார். 'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தின் 'சிப்பி இருக்குது முத்து இருக்குது' பாடல் எம்.எஸ்.வி.க்கும், கவியரசருக்கும் இடையே மிகச் சரியான போட்டியாக அமைந்திருந்த கதையைச் சொன்னார்.

இயக்குநர் சிகரத்தின் புகழ் பெற்ற பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் மெல்லிசை மாமன்னர் தன்னுடைய பாடல்களை தாளம் போட்டு ரசித்தபடியே லயித்துப் போய் உட்கார்ந்திருந்தார். வந்திருந்த கூட்டத்தின் ஒட்டு மொத்த பாராட்டும் 'நிழல் நிஜமாகிறது' படத்தின் 'கம்பன் ஏமாந்தான்'  பாட்டிற்கு கிடைத்தது.! வாழ்க கவியரசர்..!

வயதான சூழலினால் சீக்கிரமாகவே விட்டுவிட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு விழாவுக்கு வந்திருந்த மெல்லிசை மாமன்னரை ஒரு மணி நேரத்திற்கு மேல் காக்க வைத்துவிட்டு அரங்கத்திற்கு வந்தார் கே.பி. வாசலிலேயே பூரண கும்ப மரியாதையோடு கே.பி.யையும், அவரது துணைவியாரையும் வரவேற்றார்கள் ரசிகர்கள்.

மீண்டும் கச்சேரி களை கட்ட.. மெல்லிசை மன்னரின் பாடல்கள் அரங்கத்தை ஆட்டுவித்தது..! புத்தம்புதுப் பாடல்கள் எத்தனைதான் வந்தாலும், பழைய பாடல்கள் ரசிகர்களுக்குக் கொடுக்கின்ற கிறக்கமே வேறாக இருக்கிறது..!

'அவள் ஒரு தொடர்கதை'யின் 'தெய்வம் தந்த வீடும்', 'நீர்க்குமிழி'யின் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' பாடலும் தொடர்ச்சியான அப்ளாஸ்களை குவித்தன. நிகில் முருகனின் திடீர் அரங்க விஜயம் எனக்கு முதலில் சந்தேகத்தைத் தெரிவித்தாலும் பின்பு கலைஞானியின் வருகையைத் தெளிவாக உணர்த்தியது.

'ஏக் துஜே கலியே'வின் 'தேரெ மெரெ பீச் மெய்' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தபோது அரங்கத்திற்குள் நுழைந்தார் கலைஞானி. மழு, மழுவென்று ஷேவ் செய்திருந்து, அவருடைய கண்கள் மட்டும் இப்போதெல்லாம் நிறைய பேசுவதுபோல் தெரிகிறது..!

கமலுக்காக மட்டும் 'புன்னகை மன்ன'னின் 'சிங்களத்து சின்னக் குயிலே' பாடலைப் பாடிய கையோடு மேடையேறினார்கள் பிரமுகர்கள்.

முதலில் வாழ்த்திப் பேசிய எம்.எஸ்.வி., “நான் பாலசந்தருடன் இணைந்து பணியாற்றியதையே பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அவர் பல்லாண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்..” என்று ரத்தினச் சுருக்கமாகப் பேசிவிட்டுப் போனார்.

அடுத்துப் பேச வந்தார் கலைஞானி கமல். “எத்தனையோ மேடைகளில் என் குருநாதரைப் பற்றிப் பேசிட்டேன். இப்பவும் பேசிக்கிட்டுத்தான் இருக்கேன். நான் இந்த சினிமா துறைல ஒரு நல்ல டெக்னீஷியனாத்தான் வரணும்னு நினைச்சேன். அப்படி நினைச்ச சூழல்லதான் கே.பி. ஸார் என்னைக் கூப்பிட்டு படத்துல நடிக்க வைச்சார். அப்போகூட இந்த ஒரு படத்தோட ஓடிரலாம்னுதான் நினைச்சிருந்தேன். அப்படி ஓடியிருந்தன்னா இன்னிக்கு என்னை யாருக்குமே அடையாளம் தெரிஞ்சிருக்காது.. ரோட்டுல சாதாரணமா நடந்து போயிக்கிட்டிருந்திருப்பேன்..! ஆனா கே.பி. ஸாராலதான் என் வாழ்க்கையே மாறிப் போனது..!

ஒரு நாள் ஸ்டூடியோவுக்குப் போயிருந்தப்போ நம்ம டைரக்டரும், எம்.எஸ்.வி.யும் உக்காந்து பாட்டு போட்டுக்கிட்டிருந்தாங்க. நானும் அதை வேடிக்கை பார்த்தேன். அரை மணி நேரம்தான்.. அரை மணி நேரத்துல அத்தனை பாட்டையும் போட்டு முடிச்சிட்டாங்க. அன்னிக்கு ரிக்கார்டிங் செஞ்ச ஒரு பாட்டையும் நான் கேட்டேன். ஆனால் சத்தியமா அது நான் சினிமால பாடப் போற பாட்டுன்னு எனக்குத் தெரியலை.. அதுக்குப் பின்னாடிதான் தெரிஞ்சது..

படத்துல நடிச்சு முடிச்சதுக்கப்புறமும் கே.பி. ஸார் என்கிட்ட பேசும்போது, 'அடுத்து என்ன பண்ணப் போற?'ன்னு கேட்டார். 'டெக்னீஷியனா போகப் போறேன்'னு சொன்னேன். 'மடையா.. மடையா.. டைரக்டர்ன்னா எப்போ வேண்ணாலும் டைரக்ஷன் செய்யலாம். ஆனால் நடிப்புன்னு அதை ஆரம்பத்துலேயே செஞ்சுடணும்.. இப்பவே விட்ராத.. என்ன.. நான் சொல்றது புரியுதா..? இப்போ நடிக்கிற வேலையைப் பாரு..'ன்னு என் வாழ்க்கையைத் திசை திருப்பிவிட்டார். அன்னிக்கு அவர் செஞ்ச அந்த வேலைதான் இன்னிக்கு இந்த மேடைவரைக்கும் என்னைக் கொண்டு வந்து விட்டிருக்கு.  இதுக்கான நன்றியை நான் எத்தனை வருஷமானாலும் செலுத்தலாம்.. ஆனா.. அழுகக் கூடாதுன்னு பார்க்குறேன்.. முடியலை..” என்று சொன்னவர் நிஜமாகவே கண் கலங்கிப் போனார்.

மேலும் தொடர்ந்தவர், “அவரிடமிருந்து எத்தனையோ பேர் கிளம்பி வந்திருக்காங்க.. நிறைய பேரை அறிமுகம் செஞ்சு வைச்சிருக்காரு என்னை மாதிரி. அத்தனை பேரும் இன்னிக்கு பிஸியா இருக்காங்க.. பிஸியா இருக்குற அளவுக்கு அவங்களை வளர்த்தும் வைச்சிருக்காரு.. அவங்க எல்லார் சார்பாவும் நான் வந்திருக்கேன்னு நீங்க நினைச்சுக்குங்க. என்னுடைய நன்றியும் அவர்கள் அத்தனை பேரின் சார்பா சொல்றதுதான்..” என்று தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டுப் போனார்..!

அடுத்துப் பேச வந்தவர் கே.பாக்யராஜ். “கே.பி. ஸார் இயக்கி நான் பார்த்த முதல் திரைப்படம் நீர்க்குமிழிதான். அந்தப் படத்தை பார்த்துட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு மறுபடியும் மனசு கேக்காம அடுத்த ஷோவுக்கும் ஓடிட்டேன்.. கே.பி. ஸார்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயமே அவரோட டயலாக்ஸும், சிச்சுவேஷன் காமெடியும்தான்..

நீர்க்குமிழில நாகேஷ் சாகப் போறாருன்றதை அவர்கிட்ட சொல்லாம மறைமுகமா சொல்ற சீனை அவ்ளோ டச்சிங்கோட செஞ்சிருக்காரு டைரக்டர்.. எதிர் நீச்சல் படத்துல நாகேஷ் சாப்பிட்டிருக்க மாட்டார். யாராவது ஒருத்தராவது தன்னை சாப்பிட கூப்பிட மாட்டாங்களான்னு ஏக்கத்துல இருப்பார். அப்போ முத்துராமன்கிட்ட போய் 'சேட்டன் நீங்க சாப்பிட்டீங்களா?'ன்னு மூணு தடவை கேட்பாரு.. முத்துராமனும் மூணு தடவையும் பதில் சொல்லிட்டு எரிச்சலாகி நிக்கும்போது, 'நான் மூணு தடவை கேட்டனே சேட்டன்.. நீ பதிலுக்கு ஒரு தடவையாவது நீ சாப்பிட்டியா மாதுன்னு என்னைக் கேக்கலியே'ன்னு சொல்லுவாரு நாகேஷ்.. இந்த சென்டிமெண்ட் காட்சி எனக்கு ரொம்பப் பிடிச்சது.

அதே மாதிரி என்னையெல்லாம் தூக்கிச் சாப்பிடுற மாதிரி அவள் ஒரு தொடர்கதைல பர்ஸ்ட் நைட் சீன் ஒண்ணு வைச்சிருப்பாரு டைரக்டர்.. அதுல அந்தக் கட்டில் ஆடுற சத்தத்தை மட்டும்தான் காட்டிருப்பாரு.. முதல் தடவையா பார்க்கும்போது அந்தச் சத்தத்தோட அர்த்தம் வேற மாதிரி இருந்தது. ஆனால் இன்னொரு தடவை பார்க்கும்போதுதான் அதுல இருந்த ஒரு சென்டிமெண்ட்ஸ் புரிஞ்சது..

கே.பி. ஸார் இந்த வயசுலேயும் உழைக்கிறாருன்னா அது மிகப் பெரிய விஷயம்.. நான் 'உத்தமபுத்திரன்' ஷூட்டிங்ல இருந்தப்போ அவரோட புது நாடகத்தைப் பார்க்க வரும்படி அழைப்பு வந்திருந்துச்சு.. அதுக்காக ஷூட்டிங்கை அட்ஜஸ்ட் பண்ணி அவசரம், அவசரமா ஓடிப் போய் நாடகத்தைப் பார்த்தேன். பெர்பெக்ஷனா பண்ணியிருந்தாரு..

கே.பி. ஸார்கிட்ட இன்னொரு விஷயமும் இருக்கு.. அது அவர் படத்துல இருக்குற நகைச்சுவை. அவர் சீரியஸ் படமும் பண்ணியிருக்காரு.. நகைச்சுவை படமும் பண்ணியிருக்காரு.. ஆனால் எங்க டைரக்டருக்கு(பாரதிராஜாவுக்கு) நகைச்சுவைன்னா பிடிக்காது. தள்ளி வைச்சிருவாரு.. நான் ஒன்றரை பக்கத்துக்கு எழுதிக் கொடுத்தால்கூட அதை அப்படியே கிழிச்சிருவாரு.. நானும் இதுக்காக அவர்கிட்ட சண்டையெல்லாம் போட்டிருக்கேன். கமலுக்குக்கூட நல்லா தெரியும். ஆனா அவருக்கு அது செட்டாகலை. பட்... கே.பி. ஸாரின் இந்தத் திறமை ரொம்ப ஆச்சரியமானது. சீரியஸா படம் எடுக்கிறவரும், நகைச்சுவையா படம் எடுக்க முடியுதுன்னு அது இவராலதான்..” என்றார்..

தொடர்ந்து பேச வந்தார் கே.பி.யின் ஆஸ்தான சீடர் வசந்த். “எனக்கும் என் குருநாதருக்கும் இடைல இருக்குறது 31 வருட பழக்கம்.. இத்தனை வருடப் பழக்கத்துல சொல்றேன்.. இவரை மாதிரி ஒரு பெர்பெக்ஷனான இயக்குநரை நீங்க பார்க்கவே முடியாது.. ஸ்கிரிப்ட்ல ஒரு சின்ன தப்புகூட இருக்க முடியாது. அத்தனையையும் பார்த்து பார்த்து செய்வார்.. அவரோட பையன்கூட ஒரு பேட்டில சொல்லியிருந்தார்.. கே.பி. வீட்லகூட டைரக்டர் மாதிரியேதான் இருப்பாரு.. அதேதான்.. 24 மணி நேரமும் இயக்குநர் மாதிரியே இருக்கிறவரு என் குருநாதர்தான்.

இங்ககூட பாருங்க.. இவ்ளோ பேரு வந்திருக்கீங்க.. எத்தனை பேரு பார்த்தீங்கன்னு தெரியலை..  'இயக்குநர் சிகரத்திற்க்கு' அப்படீன்னு மேடைல எழுதியிருக்காங்க.. அதுல 'க்'-கனா வராது.. வரக்கூடாது. தப்பா எழுதிட்டாங்க. கே.பி. ஸார் வந்து உக்காந்தவுடனேயே என்னைக் கூப்பிட்டு அந்தத் தப்பைக் குறிப்பிட்டுக் காட்டினார். இப்படித்தான் தப்பெல்லாம் இவர் கண்ணுல மட்டும் பட்டிரும்.. எப்படித்தான் படுமோ தெரியலை. ஆனால் நல்லதெல்லாம் படாது. தப்பு மட்டும் கரெக்ட்டா இவர் கண்ணுல மாட்டிரும்..

ஒரு பங்ஷனுக்குக் கிளம்பினால்கூட முன்கூட்டியே தயார் செஞ்சுட்டுத்தான் கிளம்புவார். பேசணும்னால்கூட முன் கூட்டியே குறிப்பெடுத்து வைச்சுக்குவாரு. இப்போ டைப் பண்ணி பிரிண்ட் அவுட்டை எடுத்திட்டுத்தான் வர்றாரு..

நான் இப்போ இந்த மேடைல என் குருநாதருக்குச் சொல்ற விஷயம் ஒண்ணு இருக்கு. அது நான் அவரை முதன்முதலா எங்க சந்திச்சேன்றதை சொல்லணும்.. எனக்கு அஞ்சு அல்லது ஆறு வயசு இருக்கும்போது இங்க இருந்த எங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருந்தேன். அப்போ அவங்க வீட்ல எல்லாரும் ஷூட்டிங் பார்க்க போனாங்க. போறப்போ என்னையும் கூட்டிட்டுப் போனாங்க.. வாஹினி ஸ்டூடியோன்னு நினைக்கிறேன்.

அங்க போனப்பத்தான் முதல்முதல்லா கே.பி. ஸாரை பார்த்தேன். சிகரெட்டா பிடிச்சு ஊதித் தள்ளிக்கிட்டிருந்தாரு.. என் கஸின்ஸ் அவர்கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டாங்க. அப்போ நான் ரொம்பச் சின்னப் பையன்றதால என்னைத் தள்ளிவிட்டுட்டாங்க.. ஆனா கே.பி. அப்ப 'அவனையும் கூப்பிடுங்க.. இங்க நில்லுப்பா..' என்று சொல்லி என்னையும் இழுத்துப் பிடிச்சு பக்கத்துல நிறுத்தி வைச்சு போட்டோ எடுக்க வைச்சாரு.. அன்னில இருந்து இன்னிக்கிவரைக்கும் அவர் கூடவே நிக்குறேன்.. இதுவே நான் பெற்ற பெரும் பாக்கியமா கருதுறேன்..” என்று நெகிழ்ந்தார்.

இறுதியாக ஏற்புரை ஆற்ற வந்த கே.பாலசந்தர் சற்று டென்ஷனாகவே இருந்தார்.. வயதின் காரணமாக உடல் தளர்ந்து, நடை சற்று மெதுவாக இருந்தாலும் பேச்சின் வேகம் மட்டும் குறையவில்லை..

“நம்ம அப்துல் ஹமீது எங்க மேடைல மைக் பிடிச்சு நின்னாலும் அந்த பங்ஷன் சக்ஸஸ்தான்.. அந்த அளவுக்கு அவரது தமிழ் அனைவரையும் கட்டிப் போடுகிறது. சிறந்த பேச்சாளர்.. அவருடைய மேடை ஒருங்கிணைப்பில் இந்த விழா நல்லபடியா நடக்கிறது பெரிய சந்தோஷம்..

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய பாக்கியம் எம்.எஸ்.வி. போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியதுதான். அதுதான் என்னுடைய பொற்காலம்.. அதற்குப் பிறகு இளையராஜா, ரகுமான்வரையிலும் பலரிடமும் நான் பணியாற்றிவிட்டேன். என் வயதில் பாதியுள்ளவர்களிடம்கூட நான் இணைந்து வேலை பார்த்திருக்கேன். எல்லாம் எனக்குக் கிடைத்த பாக்கியம்தான்..

நான் அறிமுகப்படுத்தியவர்களால் நான்தான் அதிகமாக சந்தோஷமும், பெருமையும் அடைந்திருக்கிறேன். நான் எங்க போனாலும் 'ரஜினியை அறிமுகப்படுத்தினவரு இவருதான்'. 'கமலஹாசனை அறிமுகப்படுத்தினவரு இவருதான்'னு என்னையச் சொல்றாங்க.. என் முகத்துல அவங்களோட ஆஸ்தான ஹீரோக்களைத் தேடுறாங்க. இதுவே எனக்குப் பெருமைதான்..

இங்கே பாக்யராஜ் எனக்காக வந்திருக்காரு. நானும் அவரும் பல மேடைகளில் பேசியிருக்கிறோம். ஆனால் இதுதான்.. இப்பத்தான் முதல் முறையா என்னை வாழ்த்தி என் முன்னாடியே பேசியிருக்காரு. அவருக்கு எனது நன்றி..!

நான் எப்பவும் தப்பைக் கண்டுபிடிச்சிருவேன்னு வசந்த் சொன்னான். அது என்னவோ தெரியலை.. என்ன படிச்சாலும், எங்க படிச்சாலும் சரி.. தமிழ்ல தப்புன்னா உடனே என் கண்ணுக்குத் தெரிஞ்சிருது கலைஞர் மாதிரி. அதுக்காக கலைஞரோட ஒப்பிடுறேன்னு நினைக்கக் கூடாது.. இந்த விஷயத்துல மட்டும்தான்னு சொல்ல வந்தேன்.. இந்த மாதிரி பெர்பெக்ஷன்தான் ஒரு இயக்குநருக்கு வேணும்..!

நான் இன்னிக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். நான் மகிழ்ச்சியா இருப்பதைப் பார்த்து என் மனைவி மகிழ்ச்சியா இருக்கிறாள். இதுவே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது..!..” என்று நெகிழ்வாகச் சொல்லி முடித்தார்..!

விழாவை ஏற்பாடு செய்த கணேஷ் கிருபா இசைக் குழுவின் தலைவர் கிருபா, பழம்பெரும் நடிகர் யதார்த்தம் பொன்னுச்சாமியின் பேரனாம்.. இந்தத் தகவலை அப்துல் ஹமீதுதான் தெரிவித்தார்.

விடைபெற்ற கே.பி. நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அத்தனை பேரையும் அருகில் அழைத்து தனது வழக்கப்படி கை குலுக்கி நன்றி சொல்லிவிட்டுத்தான் வெளியேறினார்.

இந்த நிகழ்ச்சியின் மெகா ஸ்பான்ஸர் என்ற முறையில் மெகா டிவியின் ஓனரான தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலுவின் மகன் கார்த்திக்கும் விழாவில் கலந்து கொண்டார். நானும் யாரோ என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். மேடையேற்றும்போதுதான் தெரிந்தது தங்கபாலுவின் மகன் என்று..

இந்தத் தம்பி, எம்.எஸ்.வி.யின் அருகில் 2 மணி நேரமாக உட்கார்ந்திருந்தும் ஒரு வார்த்தைகூட தன்னுடன் பேசாமல் இருந்ததைக் கண்டு பாவம் எம்.எஸ்.வி.யே நொந்து போயிருப்பார் என்று நினைக்கிறேன்..

தம்பி இப்படியிருந்தா எப்படி அடுத்த இளைஞர் காங்கிரஸ் தலைவராக உருவெடுப்பது..? இன்னும் நிறைய டிரெயினிங் வேணும் போலிருக்கே..?

டிஸ்கி-1 : இது போன்ற தேட்ஸ்தமிழ்.காம்-ல் வரக் கூடிய செய்திகள் காலத்தின் கட்டாயத்தின் காரணமாக இனிமேல் இங்கேயும் இடம் பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொறுத்தருள்க..!

டிஸ்கி-2 : புகைப்படங்கள் இதுவரையில் கிடைக்கவில்லை. கிடைத்தால் வலையேற்றுகிறேன்..!

44 comments:

idroos said...

Me the first

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the 2nd

idroos said...

Maalai vanakkam anne

Madurai pandi said...

///வலையேற்றுகிறேன்..

வலையேற்றுங்கள் விரைவில்...
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எல்லாம் நன்றாகவே நடந்ததா?

pichaikaaran said...

நேரில் பார்த்த உணர்வை தந்துவிட்டீர்கள்

Unknown said...

இன்றைக்கு பிரபலமாக இருக்கும் பலருக்கு வாழ்வளித்தவர் கே.பி. என்பது உண்மை தானே..

rghavan66 said...

அருமையான பதிவு, கே.பி பற்றி பேச இன்னும் பல விஷயங்கள் உண்டு.

ராம்ஜி_யாஹூ said...

அருமை, நன்றாக பதிவு செய்து உள்ளீர்கள்

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

விறுவிறுப்பான பதிவு. சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்.அப்புறம் தலைவா அந்தப்பாடல் 'மெரி மெரி பீச்சு ஹை' இல்லை. ‘தேரே மேரே பீச் மே’.

ஸ்வாதி said...

மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் அம்பிகா ஜூவல்லர்ஸ் வழங்கும் 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சியை தவறவிடாமல் கேட்டவன் நான்.

@ அது அம்பிகா ஜுவலர்ஸ் அல்ல;லலிதா ஜுவலர்ஸ். இலங்கையின் மிகப் பிரபலமான நகைக் கடை. ஆசியாவின் one of the best show room என்ற பெருமையும் இந்த நகைக்கடைக்கு உண்டு. பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிக்கு நானும் ரசிகை தான். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசை இருந்தது. ஆனால் ஏனோ முயற்சி எடுக்காமலே விட்டுவிட்டேன். ஒவ்வொரு எழுத்தும் சொல்லும் போது ரெடியோ பெட்டிக்கு முன்னாலிருந்து அந்த எழுத்துக்குரிய பாடலை சொல்லுவோம் போட்டி போட்டு நானும் என் தோழிகளும்..! அது ஒரு கனாக் காலம் தம்பி..! எத்தனையோ டிவிக்களில் அப்துல் ஹமீத் பாட்டுக்கு பாட்டு நடத்தியதைப் பார்த்தாலும் கூட அந்த ரேடியோ பெட்டியில் கேட்ட சந்தோஷம் வரவேயில்லை..ஏன்னு எனக்கு இன்னமும் புரியவேயில்லை.

ஸ்வாதி said...

தம்பி இப்படியிருந்தா எப்படி அடுத்த இளைஞர் காங்கிரஸ் தலைவராக உருவெடுப்பது..? இன்னும் நிறைய டிரெயினிங் வேணும் போலிருக்கே..?

@இளைஞர் அணித் தலைவராக வருவதற்கு முதியவரான , அதுவும் அரசியல் கலப்பே இல்லாத எம்.எஸ்.வி யுடன் பேசி என்னவாகப் போகுதுன்னு நினைச்சிருப்பார் தம்பி. :):)

Arun Ambie said...

அருமையான பதிவு. நிகழ்ச்சி வர்ணனையை வானொலியில் கேட்டது போல் இருந்தது.

//'ஏக் துஜே கலியே'வின் 'மெரி மெரி பீச்சு ஹை' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தபோது//
இது எந்தப்பாட்டு?

kanagu said...

நல்ல தொகுப்பு அண்ணா... நீங்கள் ப்ளாக்கில் இந்த தகவல்களையெல்லாம் கொடுப்பதால் நான் இம்மாதிரி நிகழ்ச்சிகளை டி.வியில் பார்ப்பதில்லை :)

நான் டிக்கெட் விலையெற்றத்தை பற்றி ஏன் தனி பதிவு போட சொன்னேன்னா... எல்லா படங்களுக்கும் அது தானே இப்போதுள்ள நிலைமை.. எந்த பெரிய படம்னாலும் முதல் நாள் டிக்கெட் விலை 100-க்கு குறைவாக இருப்பதில்லை... :(

உண்மைத்தமிழன் said...

[[[ஐத்ருஸ் said...
Me the first]]]

இதுக்கும்மா..?

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
me the 2-nd]]]

ரொம்ப அவசியம் பாருங்க..! இதுக்குப் பேருதான் பின்னூட்டமா..? அடங்க மாட்டீங்களாய்யா நீங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[ஐத்ருஸ் said...

Maalai vanakkam anne..]]]

ஐயையோ.. ஏற்கெனவே நிறைய பேர் நம்மளை சாத்திக்கிட்டிருக்காங்க.. இதுல இப்படியெல்லாம் பின்னூட்டம் போட்டா எப்படிப்பா..?

உண்மைத்தமிழன் said...

[[[Madurai pandi said...

///வலையேற்றுகிறேன்..

வலையேற்றுங்கள் விரைவில்...
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com]]]

காலையில் கிடைத்துவிடும். உடனேயே பதிவேற்றி விடுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எல்லாம் நன்றாகவே நடந்ததா?]]]

அல்லாம் ஒயுங்கா நடந்துச்சு மவனே..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
நேரில் பார்த்த உணர்வை தந்து விட்டீர்கள்..]]]

நன்றி பார்வை..!

உண்மைத்தமிழன் said...

[[[பாரத்... பாரதி... said...
இன்றைக்கு பிரபலமாக இருக்கும் பலருக்கு வாழ்வளித்தவர் கே.பி. என்பது உண்மைதானே..

உண்மைதான்.. அந்த நன்றிக்கடன் பலருக்கு உண்டு.. சிலருக்கு இல்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[Aaryan66 said...
அருமையான பதிவு, கே.பி பற்றி பேச இன்னும் பல விஷயங்கள் உண்டு.]]]

நிறைய இருக்கு.. பின்னால் பேசலாம் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...
அருமை, நன்றாக பதிவு செய்து உள்ளீர்கள்.]]]

நன்றிகள் ஸார்..! உங்களுடைய பின்னூட்டம் எனக்கொரு உற்சாகம்..!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தாரப்பட்டி பெத்துசாமி said...
விறுவிறுப்பான பதிவு. சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். அப்புறம் தலைவா அந்தப் பாடல் 'மெரி மெரி பீச்சு ஹை' இல்லை. ‘தேரே மேரே பீச் மே’.]]]

உதவிக்கு நன்றி நண்பரே.. திருத்தி விடுகிறேன்..!

radhu said...

"மெரி மெரி பீச்சு ஹை" இது தேரெ மெரெ பீச் மெய் என்று இருக்க வேண்டும்.

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்வாதி said...
எத்தனையோ டிவிக்களில் அப்துல் ஹமீத் பாட்டுக்கு பாட்டு நடத்தியதைப் பார்த்தாலும்கூட அந்த ரேடியோ பெட்டியில் கேட்ட சந்தோஷம் வரவேயில்லை. ஏன்னு எனக்கு இன்னமும் புரியவேயில்லை.]]]

எனக்கும்தான்.. அது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியின் மீதும் ஹமீதின் தமிழ் உச்சரிப்பின் மீதும் நமக்கு இருந்த காதல்.. இப்போது அது தீரவில்லை என்றாலும், நிறையக் கிடைத்துவிட்டதே என்கிற ஒருவித சலிப்புதான் காரணம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்வாதி said...

தம்பி இப்படியிருந்தா எப்படி அடுத்த இளைஞர் காங்கிரஸ் தலைவராக உருவெடுப்பது..? இன்னும் நிறைய டிரெயினிங் வேணும் போலிருக்கே..?

@இளைஞர் அணித் தலைவராக வருவதற்கு முதியவரான, அதுவும் அரசியல் கலப்பே இல்லாத எம்.எஸ்.வி.யுடன் பேசி என்னவாகப் போகுதுன்னு நினைச்சிருப்பார் தம்பி. :):)]]]

அட ஒரு வார்த்தை மரியாதைக்காகவாவது பேச வேண்டாமா..? என்ன புள்ளைங்கப்பா இவங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...
அருமையான பதிவு. நிகழ்ச்சி வர்ணனையை வானொலியில் கேட்டது போல் இருந்தது.]]]

நன்றி..!

//'ஏக் துஜே கலியே'வின் 'மெரி மெரி பீச்சு ஹை' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தபோது//

இது எந்தப் பாட்டு?]]]

படத்துல வர்ற பாட்டுதான்.. பாடல் வரிகள் தவறு நண்பரே.. மன்னிக்க வேண்டுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

நல்ல தொகுப்பு அண்ணா... நீங்கள் ப்ளாக்கில் இந்த தகவல்களையெல்லாம் கொடுப்பதால் நான் இம்மாதிரி நிகழ்ச்சிகளை டி.வியில் பார்ப்பதில்லை :)]]]

இப்போது எழுதியவைகள் முழுமையானவை அல்ல கனகு. எனது நினைவிலிருந்தவரையில் தொகுத்திருக்கிறேன். முழுவதும் கேட்க, பார்க்க வேண்டுமெனில் டிவியைத்தான் பார்க்க வேண்டும். அவசியம் பாருங்கள்..!

[[[நான் டிக்கெட் விலையெற்றத்தை பற்றி ஏன் தனி பதிவு போட சொன்னேன்னா... எல்லா படங்களுக்கும் அதுதானே இப்போதுள்ள நிலைமை.. எந்த பெரிய படம்னாலும் முதல் நாள் டிக்கெட் விலை 100-க்கு குறைவாக இருப்பதில்லை...:(]]]

உண்மைதான். தனிப் பதிவு போடுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[radhu said...
"மெரி மெரி பீச்சு ஹை" இது தேரெ மெரெ பீச் மெய் என்று இருக்க வேண்டும்.]]]

உண்மைதான் நண்பரே.. தவறாக எழுதிவிட்டேன். இப்போது திருத்தி விடுகிறேன்..!

நன்றி..!

Philosophy Prabhakaran said...

அது என்ன காலத்தின் கட்டாயம்...? தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை ரொம்பவும் கீழே வைத்துவிட்டீர்களே...

எனது பதிவில் வந்து நீயும் அந்த ஜோதியில் ஐக்கியமாகிட்டியா ன்னு கேட்டிருந்தீங்க...
தலைவரே... என்னை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க... நீங்க குறிப்பிட்ட அந்த ஜோதியில் நான் ஐக்கியமாகவில்லை... ஐக்கியமாகவும் மாட்டேன்... தனிப்பட்ட நண்பர் என்ற முறையிலேயே செந்திலை பேட்டி கண்டேன்... இதில் எந்த உள்குத்தும் இல்லை...

Philosophy Prabhakaran said...

Follow up...

மாணவன் said...

பகிர்வுக்கு நன்றி சார்

உண்மைத்தமிழன் said...

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

அது என்ன காலத்தின் கட்டாயம்...? தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை ரொம்பவும் கீழே வைத்துவிட்டீர்களே.]]]

வேறெங்க வைக்குறது..? படிச்சிட்டுத்தான் ஓட்டுப் போடுவேன்னு நிறைய பேர் அடம் பிடிக்கிறாங்க.. ஏற்கெனவே நான் நீளமா வேற எழுதறதால கருவிப் பட்டையும் கீழ போயிருது..!

[[[எனது பதிவில் வந்து நீயும் அந்த ஜோதியில் ஐக்கியமாகிட்டியா ன்னு கேட்டிருந்தீங்க. தலைவரே. என்னை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. நீங்க குறிப்பிட்ட அந்த ஜோதியில் நான் ஐக்கியமாகவில்லை. ஐக்கியமாகவும் மாட்டேன். தனிப்பட்ட நண்பர் என்ற முறையிலேயே செந்திலை பேட்டி கண்டேன். இதில் எந்த உள்குத்தும் இல்லை.]]]

நானும் எந்த உள்குத்தோடும் அதனை எழுதவில்லை.. ச்சும்மாதான்..! தினமும் பிளாக் எழுதுவதைத் தவிர வேறு வேலையில்லாத டீமில் சேர்வது பற்றித்தான் குறிப்பிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

Follow up...]]]

முதலிலேயே சரியாச் செய்ய வேண்டாமா..? எதுக்கு என்னை இரண்டாவது தடவையா பின்னூட்டம் எழுத வைக்குற தம்பி.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[மாணவன் said...

பகிர்வுக்கு நன்றி சார்]]]

வருகைக்கு நன்றி தம்பி..!

ஜோதிஜி said...

நன்றி சரவணன்

ஆர்வா said...

ஒரு அருமையான நிகழ்ச்சியை ஏன் மற்ற தொலைக்காட்சிகள் கண்டுகொள்ளவில்லை. வசந்தின் பேச்சில் ஒரு அன்னியோன்யம் தெரிந்தது. எப்படித்தான் இவ்வளவு விஷயங்களையும் வலையேற்றுகிறீர்களோ?

விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

ஸ்ரீராம். said...

நிகழ்ச்சி மெகா டிவியில் வருகிறது என்றால் நினைவு வைத்திருந்து பார்ப்பேனோ என்னமோ...ஆனால் மிஸ் பண்ணாமல் உங்கள் பதிவைப் படித்து விட்டேன். எதிர்நீச்சல் மாது டயலாக் படித்த போதே கண்கள் கலங்கி விட்டன. நாகேஷ் அற்புதமான கலைஞன். நன்றி ஒரு மிக சுவாரஸ்யமான பதிவுக்கு.

யுவா said...

நீங்க என்ன எழுதினாலும் நாங்க படிப்போம்ல... உங்க நேர்மைக்காக.

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
நன்றி சரவணன்]]]

எதுக்குங்கண்ணா..?

உண்மைத்தமிழன் said...

[[[கவிதை காதலன் said...
ஒரு அருமையான நிகழ்ச்சியை ஏன் மற்ற தொலைக்காட்சிகள் கண்டு கொள்ளவில்லை. வசந்தின் பேச்சில் ஒரு அன்னியோன்யம் தெரிந்தது. எப்படித்தான் இவ்வளவு விஷயங்களையும் வலையேற்றுகிறீர்களோ?]]]

இதிலென்ன அதிசயம்..? ஆச்சரியம்.. நமக்குத் தொழிலே இதுதானே..

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
நிகழ்ச்சி மெகா டிவியில் வருகிறது என்றால் நினைவு வைத்திருந்து பார்ப்பேனோ என்னமோ. ஆனால் மிஸ் பண்ணாமல் உங்கள் பதிவைப் படித்து விட்டேன். எதிர்நீச்சல் மாது டயலாக் படித்த போதே கண்கள் கலங்கி விட்டன. நாகேஷ் அற்புதமான கலைஞன். நன்றி ஒரு மிக சுவாரஸ்யமான பதிவுக்கு.]]]

நன்றிகள் ஸார்..! எதிர்நீச்சலும், நீர்க்குமிழியும் தமிழ்ச் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[Yuva said...
நீங்க என்ன எழுதினாலும் நாங்க படிப்போம்ல... உங்க நேர்மைக்காக.]]]

இதுல என்ன நேர்மை இருக்கு..? பார்த்ததை, கேட்டதை டைப் பண்ணிப் போடுறேன்.. அவ்வளவுதான்.