Showing posts with label பாராளுமன்றத் தேர்தல் 2009. Show all posts
Showing posts with label பாராளுமன்றத் தேர்தல் 2009. Show all posts

2009 பொதுத் தேர்தலில் தமிழகத்தில் விளையாடிய ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம்..!

09-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பணம் எப்படி நடமாடியது என்பதற்கு ஆதாரமாக, ஒரு வாக்கு​மூலத்தை எடுத்துப் போடுகிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!

'நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், பண நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியாவிட்டாலும், ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது, தேர்தல் ஆணையம்.

ஆனால், இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முழுமையான பண பலத்தோடு நடந்தது. நாடாளுமன்றத் தேர்தல் பண விளையாட்டுக்கும், 2-ஜி ஊழலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு’ என்று அதிகார வட்டாரம் சொல்கிறது.

ஆ. ராசா - கனிமொழி சம்பந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கிய முக்கிய சாட்சி ஒருவரின் வாக்குமூலத்தை இந்தப் பண விளையாட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெரம்பலூர் துரைமங்களம், கவின் அமிர்தராஜ், சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வாடகை கார் டிரைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவரும் விருகம்பாக்​கத்தில் 'ஸ்ரீ’ என்கிற பெயரில் தனியார் துப்பறிவு நிறுவனம் நடத்தும் வரதராஜ், டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த அஸ்ரஃப் போன்றவர்கள், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வாக்குமூலங்கள் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படியில்தான்,  பண விவகாரம் பற்றி பல பரபரப்பான விவரங்கள் டெல்லி வட்டாரத்தில் அடிபட ஆரம்பித்து உள்ளன. இது குறித்த முன்னோட்டமான தகவலை,  7.11.2010 தேதியிட்ட ஜூ.வி-யிலேயே கழுகார் சொல்லி இருந்தார். இப்போது, அதெல்லாம் சி.பி.ஐ-யின்  குற்றப் பத்திரிக்கையிலும் இடம் பெற்று உள்ளது.

''2009-ம் ஆண்டு ஒரு டவேரா வாகனத்தின் மூலம், சென்னை அண்ணா சாலையில் உள்ள மிகப் பிரபலமான கட்டடத்தில் இருந்து, 23 பெட்டிகளில் பணம் கீழ்ப்பாக்கம் ஏரியாவில் உள்ள ஒரு கட்டடத்​துக்குக் கொண்டு செல்லப்பட்டது!'' என்கிறது சி.பி.ஐ-க்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அந்த வாக்கு​மூலங்கள்.

2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட்வரை கலைஞர் டி.வி-க்கு 200 கோடியை, டி.பி. ரியாலிட்டி பல தவணை​களில் கொடுத்தது என்று சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் சொல்லி இருக்கிறது. கலைஞர் டி.வி-க்குக் கொடுக்கப்பட்ட 200 கோடி, வங்கி வழியாக சென்றதால், பெட்டிகள் நடமாட்டத்துக்கும் அதற்கும் நேரடி சம்பந்தம் இருக்க முடியாது. ஆனால், அப்போது நடந்த தேர்தலுக்கும், டவேரா வாகனத்தில் பறிமாறப்பட்ட பணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. சந்தேகப்படுகிறது. ஆனால், அதிலும் 'ஸ்பெக்ட்ரம்' புகழ் டி.பி. ரியாலிட்டி நிறுவனம் சம்பந்தப்பட்டு இருப்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

டி.பி. ரியாலிட்டியைச் சேர்ந்த அஸ்ரஃப், சென்னைக்கு வந்தாராம். அவர் பயணம் செய்வதற்காக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கவின் அமிர்தராஜ் ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளார். அந்த காரில் பணம் எடுத்துச் செல்லப்பட்டு, பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், அதாவது 2009, மே 10 அன்று நடந்த ஒரு சம்பவத்தை மட்டும் தனது குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. குறிப்பிட்டு உள்ளது. 

டவேரா வாகன டிரைவர் சொல்லும் தகவல் இதுதான்...

''அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மும்பையில் இருந்து வந்த அஸ்ரஃபையும், அவருடன் வந்த சிலரையும் அழைத்துக் கொண்டு நான் சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய கட்டடத்துக்குச் சென்றேன். அங்கே இருந்த பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை(ஈ.வெ.ரா.சாலை) சந்திப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்டடத்துக்கு நான்கு தடவைகள் போய் வந்தேன்.

முதல் டிரிப்பில், 7 பெட்டிகள்; 2-வது டிரிப்பில் 4 பெட்டிகள்; 3-வது டிரிப்பில் 8 பெட்டிகள்; 4-வது டிரிப்பில் 4 பெட்டிகளை கொண்டு சென்றேன். அந்த 4-வது டிரிப்பில் 3 பெட்டிகளை மட்டுமே அந்தக் கட்டடத்துக்குள் கொண்டு சென்றேன். ஒரு பெட்டி மட்டும் காரிலேயே இருந்தது. அந்தப் பெட்டியை யாரோ ஒருவர் வாங்கிச் செல்வார் என்று சொன்னதால் இறக்கவில்லை.

ஒவ்வொரு பெட்டியையும் இறக்கி, கட்டடத்துக்குள் கொண்டு போனபோது, அந்தப் பெட்டிகளுடன் அஸ்ரஃப் மற்றும் மூன்று பேர்கள் கூடவே பாதுகாப்புக்காகப் போனார்கள்.  ஒரு பெட்டி வாகனத்தில் அப்படியே இருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்தில் நான்காவது பெட்டியுடன் டவேரா வாகனத்தைக் காணவில்லை!'' என்று அந்த டிரைவர் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக சி.பி.ஐ. வட்டாரம் கூறுகிறது. 

பணம் கடத்தியவர்கள் விசாரித்தபோது டிரைவர், 'நான் பாத்ரூம் போனேன். திரும்பி வந்தபோது, காரைக் காணவில்லை’ என்று சொல்லி இருக்கிறார். உடனே, அண்ணா சாலை அலுவலகத்துக்கும், க்ரீன் ஹவுஸ் நிறுவனத்துக்கும் அந்த அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள்.

அஸ்ரஃப், உடனே இந்த சம்பவத்தை, மும்பையில் இருந்த டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீவ் அகர்வாலுக்கு (இவர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார்.) சொல்லி இருக்கிறார். காணாமல் போன பெட்டியில் மட்டுமே நாலு கோடி ரூபாய் இருந்ததாக அவர்கள் பேசிக் கொண்டார்களாம். இதன்படி பார்த்தால், மொத்தமாக 23 பெட்டிகளில் சுமார் 92 கோடி ரூபாய்வரை இருந்து இருக்கலாம் என்கிறது சி.பி.ஐ.

பணத்துடன் வாகனம் காணாமல் போனதில், வாகன ஓட்டுநர் மீதே க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸுக்கும், டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் சந்தேகம். அதனால்,  டிரைவரைப் பிடித்துக் கொண்டனர். 'பணமும் காரும் எங்கே?’ என்று கேட்டு தொடர்ந்து சில நாட்கள் தங்கள் கஸ்டடியில் வைத்து டிரைவரை செமத்தியாகக் கவனித்து இருக்கிறார்​கள். அவர் சம்பந்தப்பட்ட இடங்​களிலும் பணத்தைத் தேடி இருக்கிறார்கள். ஆனால், பலன் கிடைக்க​வில்லை. அதன் பிறகே, அந்த டிரைவரை போலீஸிடம் ஒப்படைத்து உள்ளார்கள்.

போலீஸ்காரர்கள் கடுமையாக மிரட்டியும், டிரைவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. அதனால், மீண்டும் டிரைவரை க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தாரே, தங்கள் கஸ்டடிக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் முடிந்த 2009 மே  13 அன்று டிரைவரை அழைத்துச் சென்ற கவின் அமிர்தராஜ், அந்த டிரைவரை வைத்தே, கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கார் திருடு போனது குறித்து புகார் கொடுக்கவைத்தார். ஆனால், அதில் பணம் இருந்ததாகச் சொல்லவில்லை. அதன் பிறகு, மும்பையில் இருந்து வந்திருந்த ராஜீவ் அகர்வாலிடம், டிரைவரை அழைத்துப் போய் இருக்கிறார். டிரைவர் மீது பரிதாபப்படுவதுபோல் நடித்த அகர்வால், அவரை அனுப்பி விட்டாராம். 

அதன் பிறகு டிரைவரை சுதந்திரமாகவிட்டார்கள் என்றாலும், க்ரீன் ஹவுஸ் ஆட்கள் பின் தொடர்ந்து உள்ளார்கள். 'நிச்சயமாக இந்த வாடகை கார் டிரைவர்தான் பணப் பெட்டியைக் கடத்துவதற்காக, கார் திருடு போனதாக நாடகம் ஆடுகிறார்’ என்றே இவர்கள் நம்பி இருக்கிறார்கள்.

அதனால், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ டிடெக்டிவ் ஏஜென்ஸியிடம், சொல்லி அதை விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள். 'எங்களுடைய பணத்தை, இந்த டிரைவர் திருடி மறைத்துவிட்டார். அதனால், அவரைத் தீவிரமாகக் கண்காணித்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று அந்த ஏஜென்சிக்கு மனு கொடுத்தார்கள்.

காணாமல்போன டவேரா வாகனம் 25 நாட்களுக்குப் பிறகு, சென்னை மூலக்கடைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 'வாகனம் கிடைத்துவிட்டதால், நாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தர வேண்டும்’ என்று  அந்த டிரைவரை வற்புறுத்தி இருக்கிறார்கள்.
 
டிடெக்டிவ் ஏஜென்ஸியும் சில உண்மைகளைக் கண்டுபிடித்தது. மாத ஊதியம் வாங்கும் இந்த டிரைவரின் வாழ்க்கைத் தரத்தில் எதாவது மாற்றம் தென்படுகிறதா என்பதைக் கண்காணித்து, சில தகவல்களைக் கொடுத்தது.  

அந்த டிரைவரின் சகோதரரும் ஒரு கார் டிரைவர். ஆனால், அவர் திடீரென நான்கு கார்கள் வாங்கி இருப்பதோடு, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியது தெரிய வந்தது. அண்ணன் அடித்துக் கொடுத்த பணத்தை வைத்துத்தான் தம்பி வளர்ந்துள்ளார் என்று  டிடெக்டிவ் ஏஜென்சி கண்டு​பிடித்தது.

ஆனால், காணாமல் போன பணப் பெட்டி எங்கே என்பது​ பற்றியான உருப்படியான தகவல்​கள் இதுவரை கிடைக்க​வில்லை. இது குறித்து டிடெக்டிவ் ஏஜென்ஸி நிறுவனர் வரதராஜ் என்பவரிடமும் சி.பி.ஐ. வாக்கு​மூலம் வாங்கி இருப்ப​தாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலோடு, டிபி ரியாலிட்டி, அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய அலுவலகம், 2009 தேர்தல், க்ரீன் ஹவுஸ் நிறுவனம் மற்றும் கலைஞர் டி.வி. போன்றவையும் பின்னிப் பிணைகின்றன.

இதில் இன்னொரு தகவலாக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தின் எம்.டி-யாக இருந்து தற்கொலை செய்துகொண்ட சாதிக் பாட்சாவின் மனைவியும், 'அந்த டிரைவர் பணத்துடன் மாயமானது’ குறித்து சி.பி.ஐ-யிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறாராம்!

கவின் அமிர்தராஜ் மற்றும் சிலரும் கொடுத்த தகவல்களை சி.பி.ஐ., வாக்குமூலமாக குற்றப் பத்திரிகையில் சேர்த்து உள்ளது. ஆனால், இந்த வாக்குமூலங்கள் ஆ.ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி மாதிரி நீதிபதியிடம் (சிஆர்.பி.சி. 164) கொடுத்தது அல்ல. இவர்கள் சி.பி.ஐ-யிடம் (சிஆர்.பி.சி. 161) வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார்கள்.

டெல்லி, மும்பை வழியாக சென்னையில் எந்த மாதிரி எல்லாம் பணம் பாய்ந்துள்ளது... அதில் தேர்தல் களத்தில் பணம் பாய்ந்த திசைகள் என்னென்ன என்பதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இந்த சாட்சியங்களைக் கொண்டு வரப் போகிறது!

நன்றி : ஜூனியர்விகடன் - 11-05-2011

விரிவுபடுத்தப்பட்ட கொள்ளைக் கும்பல் - புதிய பட்டியல்..!

26-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 19-ம் தேதியன்று தனது கொள்ளை அமைச்சரவையில் புதிதாக மூன்று ராஜாங்க மந்திரிகளை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் நமது மாண்புமிகு பிரதம மந்திரி மன்னமோகனசிங்..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெனி பிரசாத் வர்மா, பஞ்சாப்பைச் சேர்ந்த அஷ்வினி குமார், கேரளாவின் கே.சி.வேணுகோபால் ஆகிய மூவர்தான் புதிய மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்.


1996-ல் மத்தியில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த ஐக்கிய முன்னணி அரசில் கேபினட் மந்திரியாக இருந்த பெனிபிரசாத்வர்மா, இந்த முறை தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரியாக மட்டுமே அமர்த்தப்பட்டுள்ளார். இவருக்கு ஒதுக்கப்பட்ட துறை உருக்கு..!

அஷ்வினி குமார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கு துணை அமைச்சராகவும், கே.சி.வேணுகோபால் மின்சாரத் துறையின் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு கூடவே தனது அமைச்சரவைக் கும்பலில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறார் மன்மோகன்.. தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாக இருந்த பிரபுல் பட்டேல், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் மற்றும் சல்மான் குர்ஷித் மூவரும் கேபினட் அமைச்சராகியுள்ளனர்.

விமானப் போக்குவரத்துத் துறையின் தனிப் பொறுப்பை வகித்து வந்த  பிரஃபுல் பட்டேலுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டு அவருக்கு கனரக தொழில்சாலைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இணையமைச்சர்களாக இருந்து இதுவரை வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறையின் அமைச்சராக இருந்த வயலார் ரவி விமான போக்குவரத்துத் துறையின் தனி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த முரளி தியோரா பெரு நிறுவன விவகாரங்கள் துறையின் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி பெட்ரோலியத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ஜெய்பால் ரெட்டி வகித்த நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கமல் நாத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. கமல் நாத் வகித்த தேச சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சக பொறுப்பு சி.பி.ஜோஷிக்கு அளிக்கப்பப்ட்டது.

குர்ஷித் ஆலம்கான் நீர்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த பெருநிறுவனங்கள் துறை முரளி தியோராவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை நலத்துறை தொடர்ந்து குர்ஷித்திடம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஜய் மக்கான், இ.அகமது, பி.பி.வர்மா ஆகியோர் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுவையைச் சேர்ந்த என்.நாராணசாமி, பிரிதிவிராஜ் சவான் வகித்த பிரதமர் அலுவலக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். விலாஸ் ராவ் தேஷ்முக் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த எம்.எஸ்.கில் புள்ளி விவரத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். விளையாட்டு, இளைஞர் நலம் துறை அஜித் மக்கானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களையும் சேர்த்து இப்போது மன்னமோகனின் அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேபினட் அந்தஸ்தில் 35 அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாக 6 பேரும், துணை அமைச்சர்களாக 37 பேரும் உள்ளனர்.

இந்த எண்ணிக்கை வரவிருக்கும் சில மாநிலங்களின் தேர்தல்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வரும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக்கேற்ப கூடலாம்.. அல்லது குறையலாம்..



தற்போதைய மத்திய மந்திரிகளின் துறை விவரங்கள் :-

1. மன்மோகன்சிங் : பிரதமர் - பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் பென்சன் திட்டம். அணுசக்தி, விண்வெளி ஆய்வு துறைகள்

கேபினட் மந்திரிகள்

2. பிராணாப்முகர்ஜி : நிதி

3. சரத்பவார் : விவசாயம் மற்றும் உணவுபதப்படுத்தும் தொழில்கள்

4. ஏ.கே.அந்தோணி : ராணுவம்

5. ப.சிதம்பரம் : உள்துறை

6. எஸ்.எம்.கிருஷ்ணா : வெளியுறவு துறை

7. மம்தாபானர்ஜி : ரெயில்வே

8. குலாம்நபி ஆசாத் : சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

9. சுஷில்குமார் சிண்டே : மின்சாரம்

10. எம்.வீரப்பமொய்லி : சட்டம் மற்றும் நீதித் துறை

11. எஸ்.ஜெய்பால்ரெட்டி : பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

12. கமல்நாத் : நகர்ப்புற வளர்ச்சித் துறை

13. வயலார் ரவி : வெளிநாட்டு வாழ் இந்தியர் நலன், சிவில் விமான 
      போக்குவரத்து.

14. முரளி தியோரா : கம்பெனி விவகாரம்

15. கபில்சிபில் : மனிதவள மேம்பாடு, தொலை தொடர்பு மற்றும் தகவல் 
      தொழில் நுட்பம்

16. அம்பிகா சோனி : தகவல் ஒலிபரப்பு

17. பி.கே.ஹாண்டிக் : வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை

18. ஆனந்த் ஷர்மா : வர்த்தகம் மற்றும் தொழில் துறை

19. வீரபத்திரசிங் : மிகச்சிறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்

20. விலாஸ்ராவ் தேஷ்முக் : கிராமப்புற மேம்பாடு- பஞ்சாயத்து ராஜ்

21. சி.பி.ஜோஷி : சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை

22. குமாரி செல்ஜா : வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, கலாசாரம்

23. சுபாத் காயந்த் சகாய் : சுற்றுலா

24. எம்.எஸ்.கில் : புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கம்
 
25. ஜி.கே.வாசன் : கப்பல் துறை

26. தயாநிதிமாறன் : ஜவுளித் துறை

27. பரூக்அப்துல்லா : மறு பயன்பாட்டு எரிசக்தி

28. மல்லிகார்ஜூன கார்கே : தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு

29. பவன் கே. பன்சால் : பாராளுமன்ற விவகாரம் மற்றும் விஞ்ஞான 
     தொழில் நுட்பம், புவி அறிவியல்

30. முகுல் வாஷ்னிக் : சமூகநீதி

31. காந்திலால் பூரியா : பழங்குடியினர் நலன்

32. மு.க.அழகிரி : ரசாயனம், உரம்

33. பிரபுல்படேல் : கனரகத் தொழில்-பொதுத்துறை நிறுவனங்கள்

34. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் : நிலக்கரி

35. சல்மான் குர்ஷீத் : நீர்வளம் மற்றும் சிறுபான்மையினர் நலன்

தனிப் பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள் :

36. அஜய் மக்கான் : இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

37. பேனி பிரசாத் வர்மா: உருக்கு

38. கே.வி.தாமஸ் : நுகர்வோர் நலன்- உணவு- பொது வினியோகம்

39. தின்ஷா ஜே.படேல் : சுரங்கம்

40. கிருஷ்ணா தீரத்: பெண்கள்- குழந்தைகள் மேம்பாடு

41. ஜெய்ராம் ரமேஷ் : சுற்றுச்சூழல், வனம்

ராஜாங்க மந்திரிகள் :

42. ஸ்ரீகாந்த் ஜெனா : ரசாயனம், உரம்

43. ஈ.அகமது : வெளியுறவு

44. முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் : உள்துறை

45. வி.நாராயணசாமி : பாராளுமன்ற விவகாரம், பணியாளர் நலன், 
      பொதுமக்கள் குறை தீர்ப்பு, பென்சன், பிரதமர் அலுவலகம்

46. ஜோதிர் ஆதித்ய சிந்தியா : வர்த்தகம், தொழில் துறை

47. டி.புரந்தேஸ்வரி : மனித வள மேம்பாடு

48. கே.எச்.முனியப்பா : ரெயில்வே

49. பனபாக லட்சுமி : ஜவுளி

50. நமோ நாராயண் மீனா : நிதித் துறை

51. எம்.எம்.பல்லம் ராஜூ : ராணுவம்

52. சவுகதா ராஜ் : நகர்ப்புற வளர்ச்சி

53. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் : நிதி

54. ஜிதின் பிரசாத் : சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை

55. ஏ.சாய் பிரதாப் : கனரக தொழில்- பொதுத் துறை நிறுவனங்கள்

56. பிரனீத் கவுர் : வெளியுறவு

57. குர்தாஸ் காமத் : உள்துறை

58. ஹாரிஷ் ரவாத் : விவசாயம்- உணவு பதப்படுத்தும் தொழில்

59. பாரத்சிங் சோலங்கி : ரெயில்வே

60. மகாதேவ் எஸ்.கந்தேலா : பழங்குடியினர்

61. தினேஷ் திரிவேதி : சுகாதாரம், குடும்ப நலன்

62. சிசிர் அதிகாரி : கிராமப்புற மேம்பாடு

63. சுல்தான் அகமது: சுற்றுலா

64. முகுல்ராய் : கப்பல்

65. சவுத்ரி மோகன்ஜதுவா: தகவல் ஒலிபரப்பு

66. டி.நெப்போலியன்: சமூகநீதி, அமலாக்கம்

67. எஸ். ஜெகத்ரட்சகன் :தகவல் ஒலிபரப்பு

68. எஸ்.காந்திசெல்வன் : சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

69. துஷார்பாய் சவுத்ரி : சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை

70. சச்சின் பைலட் : தொலை தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்

71. அருண் யாதவ் : விவசாயம், உணவு பதப்படுத்துதல் துÛ

72. பிரதீக் பிரகாஷ்பாபு படீல் : நிலக்கரி

73. ஆர்.பி.என்.சிங் : பெட்ரோலியம்- இயற்கை எரிவாயு, கம்பெனி 
      விவகாரம்

74. வின்சென்ட் பாலா : நீர்வளம், சிறுபான்மையினர் நலன்

75. பிரதீப் ஜெயின் : கிராமப்புற மேம்பாடு

76. அகதா சங்மா : கிராமப்புற மேம்பாடு

77. அஷ்வினி குமார் : திட்டம், பாராளுமன்ற விவகாரம், விஞ்ஞான 
      தொழில் நுட்பம், புவி அறிவியல்

78. கே.சி.வேணுகோபால் : மின்சாரம்.

இத்தனை நாட்கள் கழித்து இது ஏன் என்கிறீர்களா..? 

அன்னை சோனியாவின் தலைசிறந்த எடுபிடியான பிரதமர் மன்னமோகனசிங்கின் முதல் அமைச்சரவைப் பட்டியலை  புதிய கொள்ளைக் கூட்டக் கும்பல் - சில புள்ளி விபரங்கள் என்ற தலைப்பில்   ஏற்கெனவே எனது வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

அதன் தொடர்ச்சியாக இதுவும் ஒரு தகவல் சேமிப்புக்காக  இங்கே பதிவிடப்படுகிறது..!

புதிய கொள்ளைக்கூட்டக் கும்பல் - சில புள்ளி விபரங்கள்

01-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


அடுத்து ஐந்தாண்டுகளுக்கு நாட்டைக் கொள்ளையடிக்க அங்கீகாரம் பெற்றிருக்கும் கும்பல் பதவியேற்றுவிட்டது.

தனித்தனிக் கட்சிகளாகக் கொள்ளையடித்தால் அது நாளை பிரச்சினையாகும் என்பதால் கூட்டுக் கொள்ளைக்கு அவர்களே தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு கையில் கத்தியை எடுத்துவிட்டார்கள்.

தமிழினத்தின் முதல் துரோகியான கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக கோபாலபுரத்தில் இருந்து அண்ணா சமாதிவரைக்கும் மட்டுமே வர முடிந்தவர், இப்போது தனது மகனுக்கு பேரனுக்கு, அடிப்பொடிகளுக்கு கொள்ளை பதவி வேண்டும் என்பதால் டில்லிவரை காவடி எடுத்து தான் நினைத்ததை சாதித்துவிட்டார்.


தமிழ்நாட்டின் மிகப் பெரிய ரவுடிக் கும்பல் தலைவரான அவருடைய தவப்புதல்வர் அழகிரியும் இந்தக் கூட்டத்தில் ஒருவர் என்பதுதான் இந்த 15-வது லோக்சபாவின் திருஷ்டிப் பொட்டு. இதற்கு மேல் வேறொரு சிறப்பு இந்தியத் திருநாட்டுக்கு எதுவுமே தேவையில்லை. இதுவே போதும் என்று நினைக்கிறேன்.

பதவியேற்றிருக்கும் கும்பல்களின் முழுப் பட்டியல் இது..

கேபினட் அமைச்சர்கள்

1.மன்மோகன்சிங் - பிரதமர்

2.பிரணாப் முகர்ஜி - நிதி

3.ஷரத் பவார் - வேளாண்மை

4.ஏ.கே.அந்தோணி - பாதுகாப்பு

5.ப.சிதம்பரம் - உள்துறை

6.மம்தா பானர்ஜி - ரயில்வே

7.எஸ்.எம்.கிருஷ்ணா - வெளியுறவு

8.குலாம் நபி ஆசாத் - சுகாதாரம், குடும்ப நலம்

9.சுஷீல் குமார் ஷிண்டே - மின்சாரம்

10.எம்.வீரப்ப மொய்லி - சட்டம், நீதி

11.எஸ்.ஜெய்பால் ரெட்டி - நகர்ப்புற மேம்பாடு

12.கமல் நாத் - தரைவழிப் போக்குவரத்து

13.வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் நலம்

14.முரளி தியோரா - பெட்ரோலியம்

15.கபில் சிபல் - மனிதவள மேம்பாடு

16.அம்பிகா சோனி - தகவல் ஒளிபரப்பு

17.பி.கே.ஹண்டிக் - சுரங்கம், வடகிழக்கு மாநில மேம்பாடு

18.ஆனந்த் ஷர்மா - வர்த்தகம், தொழில்துறை

19.சி.பி.ஜோஷி - கிராம மேம்பாடு

20.வீரபத்ரசிங் - உருக்குத் துறை

21. விலாஸ்ராவ் தேஷ்முக் - கனரக தொழில் துறை

22. பரூக் அப்துல்லா - புதுப்பிக்கப்பட்ட எரிசக்தித்துறை

23. தயாநிதி மாறன் - ஜவுளி

24. ஆ.ராசா - தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்

25. மல்லிகார்ஜூனே கார்கே - தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு

26. குமாரி செல்ஜா - வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, சுற்றுலா

27. சுபோத்காந்த் சகாய் - உணவு பதப்படுத்துதல்

28. எம்.எஸ்.கில் - இளைஞர் நலன், விளையாட்டு

29. ஜி.கே.வாசன் - கப்பல் போக்குவரத்து

30. பவன்குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரம்

31. முகுல் வாஸ்னிக் - சமூக நீதி

32. காந்திலால் புரியா - பழங்குடியினர் நலன்

33. மு.க. அழகிரி - ரசாயனம், உரம்

இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

34. பிரஃபுல் படேல் - விமானப் போக்குவரத்து

35. பிரித்விராஜ் சவாண் - அறிவியல், தொழில் நுட்பம்

36. ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் - நிலக்கரி, புள்ளியியல்

37. சல்மான குர்ஷித் - கம்பெனி விவகாரம், சிறுபான்மையினர் நலன்

38. தின்ஷா படேல் - குறு, சிறு தொழில்கள்

39. ஜெய்ராம் ரமேஷ் - சுற்றுச்சூழல், வனம்

40. கிருஷ்ணா தீரத் - பெண்கள், குழந்தைகள் மேம்பாடு

இணையமைச்சர்கள்

41.இ. அகமது - ரயில்வே

42.வி. நாராயணசாமி - திட்டம், நாடாளுமன்ற விவகாரம்

43.ஸ்ரீகாந்த் ஜேனா - ரசாயனம், உரம்

44. முல்லபள்ளி ராமச்சந்திரன் - உள்துறை

45. புரந்தேஸ்வரி - மனிதவள மேம்பாடு

46.பனபாக லட்சுமி - ஜவுளி

47.அஜய் மாரெகன் - உள்துறை

48.கே.எச்.முனியப்பா - ரயில்வே

49.நமோ நாராயண் மீனா - நிதி

50.ஜோதிராதித்ய சிந்தியா - தொழில், வர்த்தகம்

51.ஜிதின் பிரசாத் - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

52.சாய் பிரதாப் - உருக்கு

53.குருதாஸ் காமத் - தொலைத்தொடர்புத் துறை, ஐ.டி.

54.பல்லம் ராஜு - ராணுவம்

55.மகாதேவ் கண்டேலா - நெடுஞ்சாலை, தரைவழி போக்குவரத்து

56.ஹரீஷ் ராவத் - தொழிலாளன் நலன், வேலை வாய்ப்பு

57.கே.வி.தாமஸ் - விவசாயம், நுகர்வோர் நலன், உணவு, பொது
விநியோகம்


58.சுவுகதா ராய் - நகர்ப்புற மேம்பாடு

59.சிசிர் அதிகாரி - கிராமப்புற மேம்பாடு

60.தினேஷ் திரிவேதி - சுகாதாரம், குடும்ப நலம்

61.சுல்தான் அகமது - சுற்றுலா

62.முகுல் ராய் - கப்பல்

63.மோகன் ஜாதுவா - தகவல் ஒளிபரப்பு

64.எஸ்.எஸ். பழனிமாணிக்கம் - நிதி

65.டி.நெப்போலியன் - சமூக நீதி

66.எஸ். ஜெகத்ரட்சகன் - தகவல் ஒளிபரப்பு

67.எஸ். காந்தி செல்வன் - சுகாதாரம், குடும்ப நலம்

68.பிரீனித் கவுர் - வெளியுறவு

69.சச்சின் பைலட் - தொலைத்தொடர்பு, ஐ.டி.

70.சசி தரூர் - வெளியுறவு

71.பரத்சிங் சோலங்கி - மின்சாரம்

72.துஷார்பாய் செளத்ரி - பழங்குடியினர் நலம்

73.அருண் யாதவ் - இளைஞர் நலன், விளையாட்டு

74.பிரதீக் பிரகாஷ் பாபு பாட்டீல் - கனரகம் பொதுத்துறை

75.ஆர்.பி.என். சிங் - தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலை

76.வின்சென்ட் பாலா - நீர்வளம்

77.பிரதீப் ஜெயின் - கிராம மேம்பாடு

78.அகதா சங்மா - கிராம மேம்பாடு

தற்போதைக்கு இந்தக் கூட்டுக் கொள்ளைக்கு 78 பேர் தலைமையேற்றுள்ளனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி மத்திய அமைச்சரவையில் 82 அமைச்சர்கள் வரையிலும் இருக்கலாமாம். அப்படியானால் 'இத்தாலி அம்மா' மனம் வைத்தால் மேலும் 4 பேர் கூட்டுக் கொள்ளையில் இடம் பெறலாம்.

இதில் சில சுவாரயஸ்யமான அம்சங்களாக பத்திரிகைகளில் நான் படித்ததை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர்கள்..?

இதில் 206 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 கேபினட் அமைச்சர்கள், 6 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 26 இணை அமைச்சர்கள் என்று மொத்தம் 60 அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

18 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தி.மு.க.வுக்கு 3 கேபினட் மற்றும் 4 இணை அமைச்சர்கள் என்று 7 அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

9 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சரும், 1 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சரும், 1 இணை அமைச்சரும் உள்ளனர்.

19 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சரும், 6 இணை அமைச்சர்களும் கிடைத்துள்ளனர்.

3 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

2 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் கேரள முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 இணை அமைச்சர் பதவி கிட்டியிருக்கிறது.

வயசான பார்ட்டிகதான் அதிகம்..!

ஏதோ இளைய சமுதாயம்தான் இந்தியாவை தள்ளிக் கொண்டு போகிறது என்று பலரும் சரக்கடிக்காமலேயே சரக்கடித்த போதையில் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில் இந்த அமைச்சரவையில் முக்கியத் துறைகளை கையில் வைத்திருக்கும் 27 அமைச்சர்களின் வயது 65-க்கும் மேல். சாகுறவரைக்கும் பதவியை விட மாட்டோம் என்று வெறி பிடித்து அலைவதில் இந்தியர்களை மிஞ்ச ஆளில்லை என்று நினைக்கிறேன்.

புதிய வெளியுறவுத்துறை அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாதான் இந்த அமைச்சரவையிலேயே மிக அதிக வயதானவர். ஜஸ்ட் 77தான். மிகக் குறைந்த வயதுடையவர் மேகலாயவில் இருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அசுதாசங்மா. இவரது வயது 28.

மாநில வாரியாக அமைச்சர்களின் பிரதிநிதித்துவம்

மாநில வாரியாக பட்டியலிட்டுப் பார்த்தால்

ஆந்திரா - 1 கேபினட் அமைச்சர், 5 இணை அமைச்சர்கள்

அசாம் - 2 கேபினட் அமைச்சர்கள்

பீகார் - 1 கேபினட் அமைச்சர்

குஜராத் - 3 இணை அமைச்சர்கள்

அரியானா - 1 கேபினட் அமைச்சர்

இமாச்சலப்பிரதேசம் - 2 கேபினட் அமைச்சர்கள்

காஷ்மீர் - 2 கேபினட் அமைச்சர்கள்

ஜார்கண்ட் - 1 கேபினட் அமைச்சர்

கர்நாடகா - 3 கேபினட் அமைச்சர்கள், 1 இணை அமைச்சர்

கேரளா - 2 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

மத்தியப்பிரதேசம் - 2 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

மகாராஷ்டிரா - 5 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

மேகாலயா - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்

ஒரிசா - 1 இணை அமைச்சர்

பஞ்சாப் - 2 கேபினட் அமைச்சர்கள், 1 இணை அமைச்சர்

ராஜஸ்தான் - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்

தமிழ்நாடு - 5 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

உத்தரண்ட் - 1 இணை அமைச்சர்

உத்தரப்பிரதேசம் - 1 இணை அமைச்சர்

மேற்குவங்கம் - 2 கேபினட் அமைச்சர்கள், 6 இணை அமைச்சர்கள்

டில்லி - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்

புதுவை - 1 இணை அமைச்சர்

சண்டிகர் - 1 இணை அமைச்சர்

அருணாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கர், கோவா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு அமைச்சர் பதவிகள் கிட்டவில்லை. அதேபோல் யூனியன் பிரதேசங்களான அந்தமான், தத்ராநகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு ஆகியவைகளுக்கும் அமைச்சர் பதவி ஹி..ஹி..

இந்த அமைச்சரவைப் பட்டியலில் 5 பேர் முஸ்லீம்கள், 3 பேர் கிறிஸ்தவர்கள். மிச்சம் மீதி இருப்பவர்களில் 10 பேர் ஆதி திராவிடர்கள்.

பதவி உயர்வு

கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 10 இணை, துணை அமைச்சர்களுக்கு இந்த முறை கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் இணை அமைச்சர்களாக இருந்த ஜி.கே.வாசன், பவன்குமார் பன்சல், சுபோத்காந்த் சகாய், குமாரி செல்ஜா, எம்.எஸ்.கில், கான்டிலால் புரியா ஆகியோர் இந்த முறை கேபினட் அந்தஸ்தை பெற்றுள்ளனர்.

கடந்த அமைச்சரவையில் இணை அமைச்சர்களாக இருந்த பிரகாஷ்ஜெய்ஸ்வால், ஜெய்ராம் ரமேஷ், பிரித்விராஜ் சவான், தின்ஷா படேல் ஆகியோருக்கு இந்த முறை தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கேபினட் அமைச்சர்களான முன்னாள் முதல்வர்கள்..!

இந்த அமைச்சரவையில் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர்களான எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்பமொய்லி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, குலாம்நபிஆசாத், கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர்களான சரத்பவார், சுசில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ்தேஷ்முக் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

முடிந்த அளவுக்கு போட்ட காசை அள்ள வேண்டும் என்கிற குறிக்கோளுடன் பதவிக்கு வந்திருக்கும் இவர்களைத் தட்டிக் கேட்கவோ, எதிர்த்துப் பேசவோ இந்தியாவில் எந்த ஒரு அமைப்போ, அதிகாரமோ இல்லையாததால் நான் எனது கோரிக்கையை கெஞ்சலாகவே இவர்களிடம் வைக்கிறேன்.

கொஞ்சமா சுரண்டுங்கப்பா..!

மொத்தத்தையும் உங்க வம்சத்துக்கே கொண்டு போயிராதீங்கப்பா..!

எங்க வாரிசுகளுக்கும் ஏதாவது மிச்சம், மீதி வைங்கப்பா..!

என்ன நான் சொல்றது..?

விஜயகாந்த் கட்சியின் எதிர்காலம்..!

18-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே.!


தமிழகத்தை மொட்டையடித்து தங்களது குடும்பத்தின் மொத்த சொத்துக்களை அதிகரிப்பதில் போட்டோ போட்டியில் இருக்கும் இரண்டு பெரிய திராவிட அரசியல் கட்சிகளுமே ஒரு விஷயத்தில் மட்டுமே உறுதியுடன் உள்ளன. அது தங்களைத் தவிர வேறு யாரையும் இப்போதைக்கு மட்டுமல்ல.. எப்போதுமே வளர விடக்கூடாது என்பதில்தான்.

அடிக்கின்ற கொள்ளையைத் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வது. முடிந்தால் தங்களுக்குள் மட்டுமே விட்டுக் கொடுத்துவிட்டுப் போவது.. மற்றபடி வேறு எவனாவது நானும் திராவிடன் என்று சொல்லி வந்தால் அவனை வெட்டிவிடுவது என்பதை இந்தத் தேர்தல் வரையிலும் பின்பற்றி வருகின்றன திமுகவும், அதிமுகவும்.

இரண்டு கழகங்களும் வைகோவுக்கு தேர்தல் நேரத்தில் கழுத்தில் கத்தி வைப்பதுபோல் நெருக்கடி கொடுத்தது இதனால்தான். தங்களுக்கு அடங்கியிருக்கும் கட்சி என்பதோடு, நாய்க்கு போடும் பிஸ்கட்டைப் போல் 1, 2-ஐ வாங்கிக் கொண்டு வாங்கியதற்கு நன்றியாக கேட்கும்போதெல்லாம் வாலாட்டும் கட்சிகள்தான் அவர்களுக்குத் தேவை..

இன்றுவரையிலும் விஜயகாந்த் மீது தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் இரு கட்சியினருமே தாக்குதலைக் கொடுக்காமல் வருவதற்குக் காரணமே நாம் ஏன் வளர்த்து விட வேண்டும் என்று இந்த சிவனும், ஆண்டாளும் (அப்படி என்று நினைப்பு ரெண்டு பேருக்கும்..!) நினைப்பதுதான்..

இவர்களுடைய புறக்கணிப்பில் இன்னொரு லாபமும் உண்டு. அது விஜயகாந்தால் பிரியப் போகும் பொதுவானவர்களின் ஓட்டு. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே தமிழ்நாட்டில் நிரந்தரமான ஓட்டு வங்கி ஒன்று உண்டு. அந்த இரு கட்சியின் ரசிகர்களைத் தவிர பொதுவாக இருப்பவர்களில் அதிகம்பேர் எந்தப் பக்கம் வாக்களிக்கிறார்களோ, அவர்களே ஒவ்வொரு தேர்தல்களிலும் ஜெயித்து வருகிறார்கள்.

அப்படி பொதுவாக இருப்பவர்களில் லட்சணக்கணக்கானோர் இந்த இரண்டு திருடர்களைத் தவிர வேறு யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் விஜயகாந்துக்கு கடந்த தேர்தலிலும், இந்தத் தேர்தலில் தங்களது வாக்குகளை வாரி வழங்கியிருக்கிறார்கள்.

இதன் பயனாக சென்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8.38 சதவிகித ஓட்டுக்களைப் பெற்றிருந்த தே.மு.தி.க., இந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் 10.1 சதவிகித ஓட்டுக்களைப் பெற்று தனது ஓட்டு வங்கியை உயர்த்தியிருக்கிறது.

இந்த தேர்தலில் திமுக 22 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இக்கட்சி பெற்றிருக்கும் மொத்த ஓட்டுக்கள் 76 லட்சத்து 25 ஆயிரத்து 421. இது 25.10 சதவிகிதம்.

அதிமுக 23 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களை வென்றிருக்கிறது. இக்கட்சி வாங்கியிருக்கும் மொத்த ஓட்டுக்கள் 69 லட்சத்து 63 ஆயிரத்து 510. இக்கட்சியின் ஓட்டு சதவிகிதம் 22.91.


இந்த மக்களவைத் தொகுதியில் தமிழகம் முழுவதிலும் மொத்தம் பதிவான ஓட்டுக்கள் 3 கோடியே 38 லட்சத்து 83 ஆயிரத்து 49. இதில் 30 லட்சத்து 72 ஆயிரத்து 881 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது தே.மு.தி.க.

35 தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளியுள்ளது தேமுதிக.

25 தொகுதிகளில் வேட்பாளரின் வெற்றி வித்தியாசத்தைவிட தேமுதிக வேட்பாளர் பெற்ற ஓட்டுக்கள் அதிகம்.

தேமுதிக தனித்துப் போட்டியிட்டு ஓட்டுக்களைப் பிரித்ததினால் அதிகப்பட்சமாக அதிமுக 8 தொகுதிகள், காங்கிரஸ் 7 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 1 தொகுதி, மதிமுக 1 தொகுதி, விடுதலைச்சிறுத்தைகள் 1 தொகுதி, மற்றும் பாரதீய ஜனதா 1 தொகுதி என்று பல தொகுதிகளை இழந்திருக்கிறார்கள்.

ஏழு தொகுதிகளில் திமுக வெற்றி பெற உதவியிருக்கிறது தேமுதிக.

வடசென்னை, திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி வித்தியாசத்தைவிடவும், தேமுதிக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அதிகம்.

அதே போல் திருவள்ளூர், தென்சென்னை, சேலம், திருப்பூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கும் தேமுதிக வேட்பாளர்கள் பிரித்தெடுத்த வாக்குகளே காரணம்.

ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என்று மதிமுக ஈரோட்டில் வென்ற கதையிலும் தேமுதிகவின் வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களும் ஒரு காரணகர்த்தாவாக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய 7 தொகுதிகளில் அக்கட்சி பெற்ற வெற்றிக்கும் காரணம் தேமுதிகதான்.

நான் பெரிதும் வருத்தப்படுவது வைகோவின் தோல்விக்காகத்தான்.. அவர் தோற்றது 15764 வாக்குகள் வித்தியாசத்தில். ஆனால் அந்தத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மாபா பாண்டியராஜன் பெற்றிருக்கும் வாக்குகள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 229. நடிகர் கார்த்திக் வாங்கியிருந்த ஓட்டுக்களும் பத்தாயிரத்துக்கும் மேல்..

இந்த ஒரு மனிதரின் அப்பழுக்கில்லாத லஞ்ச, லாவண்யம் இல்லாத நேர்மைக்காக இவர் ஜெயித்திருக்க வேண்டும். கதையை முடித்துவிட்டார்கள் விருதுநகர் தொகுதி மக்கள். இனிமேல் நல்லவர்கள் ஜெயிக்க முடியவில்லை என்று யாரும் புலம்பக் கூடாது..

கடைசி நிமிடத்தில் புதுமனைபுகுவிழா வீட்டில் நடந்த பேரம் நல்லபடியாக நடந்து முடிந்து காங்கிரஸோடு கூட்டணி வைத்திருந்தால், தேமுதிக மூலம் திமுக கூட்டணிக்கு 12 இடங்களாவது கூடுதலாக கிடைத்திருக்கும்.

அல்லது கொட்டிவாக்கம் பங்களாவில் நடத்திய பேச்சுவார்த்தை ஜெயித்து பக்கத்தில் இருந்து ஊத்திக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கும் ‘அம்மா'வுடன் இணைந்திருந்தால், அந்தக் கூட்டணிக்கும் 12 இடங்களாவது கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு.

கூடவே விஜயகாந்திற்கு இந்தத் தேர்தலில் காங்கிரஸ், அதிமுக இருவருமே கொடுக்க முன் வந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மாத்திரை கொடுக்காமலேயே மருத்துவர் ராமதாஸுக்கு பேதியை வரவழைத்திருக்கலாம்.

இப்படி ஜெயிக்க முடிந்த விஷயங்களையெல்லாம் கைவிட்டுவிட்டு, தங்களது கட்சிக்காரர்களை அல்லல்பட வைத்தாலும் தைரியமாக தனித்து நின்று வீரம் காட்டிய அண்ணன் விஜயகாந்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன்..

அதோடு காங்கிரஸுடனான தேமுதிகவின் கூட்டணியை முறியடித்த பெருமையும் கலைஞரையே சேரும். திமுகவின் தொகுதிப் பட்டியலில் ஒதுக்க முடியாது. வேண்டுமானால் உங்களது பட்டியலிலேயே 5 தொகுதிகளை ஒதுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

முடிந்தவரை கேட்டுப் பார்த்தும், போராடிப் பார்த்தும் 8 தொகுதிகளுக்குக் குறையாமல் விஜயகாந்த் கேட்க.. இழுபறி நிலைமை இருக்கும்போதே விஜயகாந்துக்கே 5 போய்விடும் என்றால் உங்களது மற்றத் தலைவர்களுக்கும், அவர்களுடைய அடிப்பொடிகளுக்கும் சீட்டு எப்படி கிடைக்கும் என்று டெல்லிக்கு காவடி எடுக்க வைத்து அந்தத் திட்டத்தையே முறியடித்தது திமுக.

இந்தப் பக்கம் வழக்கம்போல அம்மா.. சும்மா பேச்சுக்கு ஒரு பேச்சுவார்த்தையை நடத்திவிட்டு 4 தர்றோம்.. இஷ்டம்னா வாங்க.. இல்லாட்டி மரியாதை படத்துக்கு டப்பிங் இருக்காம்ல.. போய்ச் செய்யுங்க என்று சொல்லி கவுரவமாக அனுப்பி வைத்தார் அம்மா..

வேறு வழியில்லாமல் தனித்தே நின்று ஓட்டு வங்கியை உயர்த்திக் கொண்ட பெருமையை மட்டுமே இத்தேர்தல் விஜயகாந்திற்குக் கொடுத்துள்ளது.

அடுத்தத் தேர்தலில் கேப்டன் திராவிட பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் அவருக்கு தற்போது இருக்கும் பத்து சதவிகித வாக்குகள் அப்படியே இனிமேல் கிடைக்குமா என்றால் அதுவும் சந்தேகம்தான்.. “இரண்டு திருட்டுக் கட்சிகளுமே வேண்டாம் என்றுதான் உன்னை கூப்பிடுறோம்.. நீயும் அவங்களோட சேர்ந்துக்கிட்டு வோட்டு கேட்டு வந்தா என்ன அர்த்தம்..?” என்று மக்கள் திருப்பி பொடனியில் அடித்துக் கேட்பார்கள்.

ஆக புரட்சிக் கலைஞர் அடுத்தத் தேர்தலிலும் தனித்து நின்று ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பெறலாம்.

அல்லது இந்த இரண்டு பெரிய திருட்டுக் கட்சிகளைத் தவிர மற்ற சில சில்லரை உதிரி பாகங்களைக் கொண்ட கட்சிகளை வைத்து மூன்றாவது அணி அமைத்தால் ஒரு பத்து, பதினைந்து தொகுதிகளாவது அண்ணனுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். விஜயகாந்திற்கு இன்னும் வயது இருக்கிறது.. ஒரு வேளை அடுத்தடுத்தத் தேர்தல்களின்போது அவருக்கான வாய்ப்பு இருக்குமானால் அதனை அவர் நன்கு பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்..

பார்ப்போம்..!

தம்பி சரத்பாபுவிற்கு ஒரு சல்யூட்..!

17-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



அரசியல் ஒரு சாக்கடை என்று திருக்குறளைப் போல் எழுதி வைத்துக் கொண்டு ஒப்பாரி மேல் ஒப்பாரி வைக்கும் ஒப்பற்ற தமிழர்களில் நானும் ஒருவன்.

புலம்புகிற நேரத்தில் அந்தச் சாக்கடைக்குள் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்யலாமே என்று எவராவது கேட்டுவிட்டால், பதில் சொல்ல நெஞ்சக்கூட்டில் மாஞ்சா இல்லை என்பதால் அப்போதைக்கு ஜூட் விடுவதுதான் இதுவரையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

அன்னைக்குச் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும்போது இருப்பதையும் தொலைத்துவிட்டு பின்பு எதனை வைத்து வயிற்றை நிரப்புவது என்கின்ற பிரச்சினையால்தான் பெருவாரியான அரசியல் மீது அனுதாபமுள்ள இளைஞர்கள் அரசியலை பேசுவதோடு சரி.. உள்ளே இறங்காமல் தவிர்க்கிறார்கள். அதில் நானும் ஒருவன்.

அதோடு இன்றைய அரசியலில் கவுன்சிலர் தேர்தலுக்கு நிற்க வேண்டும் என்றால்கூட குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் செலவழித்தாக வேண்டும். போட்டதை அள்ள வேண்டும் என்று நினைத்தால் சாக்கடையைச் சுத்தம் செய்த வந்தவனாகத் தன்னைக் கருதக் கூடாது.. தன்னையும் ஒரு பன்றியாக நினைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இது இல்லாமல் நிஜமாகவே கவுன்சிலராகி மக்கள் சேவை செய்ய பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் முன் வரும் இந்தியர்கள் அல்லது தமிழர்களை தேடித்தான் பிடிக்க வேண்டும். இங்கு யாருக்கும் பணம் வீட்டில் முளைப்பதில்லை. வேறெங்கும் மரத்தில் காய்ப்பதில்லை. கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம்.

கஷ்டப்பட்டு பணம் சம்பாதிப்பதை மக்கள் பணியில் செலவழிக்கலாம். ஆனால் இங்கு இறக்கப்படும் பணம் முறைகேடாக பல்வேறு வழிகளில் அரசியல்வியாதிகளின் சின்னவீடு வரையிலும் சென்று சேர்வதால்தான் அந்த தயாள எண்ணம் கொண்டவர்கள்கூட இந்தச் சாக்கடையில் இறங்காமல் வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவியளித்து வருகிறார்கள்.

தேர்தல்களில் போட்டியிடுவது ஒரு பெயருக்காக அல்லது பிரபலத்துக்காக என்று வைத்துக் கொண்டாலும், தோற்கத்தான் போகிறோம் என்பது தெரிந்துதான் அனைத்து சுயேச்சைகளும் களத்தில் நிற்கிறார்கள்.

ஆனாலும் அவர்கள் எதிர்ப்பது கட்சிகளை வைத்து அரசுப் பணத்தை சுரண்டி தங்களது மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டு அரசு மரியாதையோடு செத்துப் போக விரும்புகின்ற அரசியலில் செத்த தலைவர்களுக்கும், அவர்தம் கொள்ளைக்கூட்டக் கம்பெனிக்கும் எதிரானவை என்பதால் நிச்சயம் வரவேற்கத்தக்கதுதான்.


இதற்கெல்லாம் ஒரு தனி தைரியம் வேண்டும்தான்.. தோற்றால் பணமும் காலியாகும். மீண்டும் அந்தப் பணத்தை சம்பாதிக்க பெரும் கஷ்டப்படத்தான் வேண்டும் என்பதெல்லாம் தெரிந்தும், உண்மையான
அக்கறையோடும், சமூக நோக்கத்தோடும் இந்தத் தேர்தலில் நின்றிருக்கிறார் அருமைத் தம்பி சரத்பாபு.


தென்சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தம்பி சரத்பாபு அத்தொகுதியில் போட்டியிட்ட அனைத்து சுயேச்சைகளிலும் அதிகப்படியான ஓட்டுக்களை வாங்கியுள்ளார்.

தேசியக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இல.கணேசன் பெற்ற ஓட்டுக்கள் 42,925.

பல வருடங்களாக மாநில அரசுகளையும், தொழிலதிபர்களையும், காவல்துறையினரையும் கலங்கடித்து வரம் டிராபிக் ராமசாமி என்கிற சமூக சேவகர் பெற்ற ஓட்டுக்கள் 1693.

ஆனால் இந்தத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலமே பிரபலமான நமது அன்புத் தம்பி சரத்பாபு பெற்றுள்ள ஓட்டுக்கள் 14101.

வலையுலகத்தில் தம்பி பற்றி வெளியான செய்திகளினாலும், பத்திரிகைகள் அவருக்குக் கொடுத்த விளம்பரத்தினாலும் இந்தத் தம்பி அனைத்து சுயேச்சைகளையும் முந்தியிருக்கிறார் என்பது புரிகிறது.

இந்த விளம்பரம் சும்மா கிடைக்கவில்லை. அதற்கான தகுதி அவருக்கு உண்டு. இப்படியொரு பொடியன் தேர்தலில் நிற்கிறானே என்கிற ஆச்சரியும், மகிழ்ச்சியும் 14101 பேரை திருப்தி செய்து அவருக்கு வாக்களிக்க வைத்துள்ளது.

வெற்றிக்கும், தோல்விக்குமான ஓட்டு வித்தியாசத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கைப்பற்றியிருக்கும் இவரால்தான் திமுகவுக்கு தோல்வி என்பதில்லை. ஆனால் அவர்களையும் தாண்டி 14101 வாக்காளர்கள் இந்தத் தம்பியும் ஜெயித்து வந்தால் நல்லதுதான் என்றெண்ணி தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளார்களே. அந்த நம்பிக்கையைப் பெற்றதற்காகவாவது அந்தத் தம்பியை மனதார வாழ்த்துகிறேன்.

இந்த 14101 ஓட்டுக்களில் நான் செலுத்திய எனது ஓட்டு ஒன்றும் சேர்ந்துள்ளது என்பதால் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தம்பி இதில் பணத்தை இழந்திருக்கலாம். ஆனால் அவருடைய தைரியமான மனத்திடத்தினால், பல ஆயிரக்கணக்கான நல்ல உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறார்.

இது போன்ற நிகழ்வுகள் இனி வரும் தேர்தல்களில் தொடரும்பட்சத்தில் ஏதேனும் ஒரு நாளில் ஒரு தொகுதியில் சக்தியுள்ள யாரேனும் ஒருவர் தேர்தலில் நிற்க முன் வரும் சாத்தியக் கூறுகள் உண்டு. அந்த ஒருவர் ஜெயித்தால்கூட அதற்கு சரத்பாபு மாதிரியான தம்பிகளே காரணமாக இருப்பார்கள் என்பதால் இவர் போன்றவர்களை மனதார வரவேற்போம். ஆதரிப்போம்..

வாழ்க சரத்பாபு..

ஆகவே வாக்காளர்களே.. தயவு செய்து வாக்களியுங்கள்..

12-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

இந்தியத் திருநாட்டு அப்பாவிகளான நமக்கு இருக்கின்ற ஒரேயொரு ஆயுதமான நமது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாளைய ஒரு தினத்தில் மட்டும் எத்தனையோ வேலைகள் இருந்தாலும், சிரமங்கள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் தூசி போல் ஊதித் தள்ளிவிட்டு பஞ்சாய்ப் பறந்து வந்து வாக்களித்து விடுங்கள்.

இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நம்மால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இந்த அரசியல்வியாதிகளின் முன்னால் நடக்க முடிகிறது என்றால் அது இது போன்ற வாக்குப்பதிவு அன்றுதான்..

அந்த ஒரு நாளை தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைவிடவும் அமோகமாக நாம் கொண்டாட வேண்டும்.

“அவன் சரியில்லை.. இவன் சரியில்லை.. அவன் நொட்டை.. இவன் குட்டை.. இவன் கெட்டவன்.. அவன் கெட்டவனிலும் கெட்டவன்..” என்றெல்லாம் வருடக்கணக்காக எழுதியும், படித்தும், பேசியும் வரும் நாம், நாளைய தினத்தில் மட்டும் வாக்கு என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தும் போர் வீரனாக மாறுவோம்.

மாறத்தான் வேண்டும்.

கடந்த சில தேர்தல்களில் ஒட்டு மொத்த வாக்காளர்களில் 55 சதவிகிதம்பேர்தான் வாக்களிக்க முன் வருகிறார்கள். மீதமிருப்பவர்களில் நிச்சயமாக 45 சதவிகிதம்பேர் ஓட்டளிக்க முன் வராதவர்கள்தான். மீதி பத்து சதவிகிதம்பேர் வர முடியாமல் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கியவர்களாக இருப்பார்கள்.

வாக்களிக்க முன் வராத 45 சதவிகித வாக்காளர்களில் அதிகம் பேர் எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள்.. “ஓட்டுப் போட்டு என்ன ஆகப் போகுது..? ஓட்டு வாங்குறவன் எப்படியும் திருந்த மாட்டான்.. மறுபடியும் கொள்ளையடிக்கத்தான் போறான்.. இதுல நம்ம ஓட்டுப் போட்டா என்ன போடாட்டி என்ன..?” என்கிற அவநம்பிக்கையோடு இருப்பவர்கள்.

இதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் மகா சுயநலவாதிகள்.. இந்தச் சுயநலவாதிகளை நீங்கள் நாளை காலை சத்யம், ஐநாக்ஸ் திரையரங்களுக்குச் சென்றால் மிக எளிதாக அடையாளம் காணலாம்.

“எவன் வந்தால் என்ன..? வராவிட்டால் என்ன..? எனக்கு வேண்டியது இங்கே இருக்கிறது.. கிடைக்கிறது.. அனுபவிப்பேன்.. எந்த அரசுகள் வந்தாலும் எங்களுக்கு அவர்களால் கஷ்டமில்லை. ஏனெனில் என்னிடம் அளவுக்கதிமான பணமும், அதனால் வாழ்க்கை பற்றிய எவ்வித பயமும் இல்லாத தன்மையும் உள்ளது.. எவன் போய் ஓட்டு போடுவான்..?” என்கிற மேட்டுக்குடி வர்க்க மனோபாவத்தை உடையவர்கள்.

இன்னும் சிலர் வாக்களிக்க கியூவில் நிற்கவே தயக்கம் காட்டுபவர்கள். இவர்கள் சொல்லும் காரணம் “போனா ஏதாவது சண்டை வரும்.. அடிச்சுக்குவாங்க.. போலீஸ் வரும்.. நமக்கெதுக்கு வம்பு..” இப்படியொரு கூட்டமும் இருக்கிறது.

இந்தக் கூட்டத்தை அடையாளம் காண வேண்டுமெனில் ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் வாக்குச்சாவடிகளுக்கு நீங்கள் சென்றால் எளிதில் பார்க்க முடியும். வரவே மாட்டார்கள். காரணம், கியூவில் நிற்பதற்கு அவ்வளவு சோம்பேறித்தனம்.

முன்பெல்லாம் திராவிடக் கட்சிகள் தங்களுடைய குஞ்சுகளைத் தவிர வேறு யாரும் ஓட்டளித்துவிட முடியாத அளவுக்கு பல தந்திரங்களை செய்திருந்தார்கள். அதில் ஒன்றுதான் தேர்தல் கமிஷனை நிர்ப்பந்தித்து பாதுகாப்பு அளிக்க முடியாது என்கிற பெயரில் மிகக் குறைந்த அளவு வாக்குச்சாவடிகளை அமைத்தது.. முணுக்கென்றாலே சோடாபாட்டிலை வீசும் கட்சியின் உயிருக்குயிரான தொண்டர்களை பூத் ஏஜெண்டுகளாகப் பயன்படுத்துவது.. காவலர்களை குறைந்த அளவில் பயன்படுத்துவது.. பூத்திற்குள்ளேயே ரவுடிகளை நிறுத்தி வைத்து மிரட்டுவது என்று சகலத்தையும் பயன்படுத்தித்தான் வாக்களிக்க நினைக்கும், நினைத்த இது போன்ற மேட்டுக்குடியினரை வாக்குச்சாவடிக்கு வராமலேயே தடுத்தார்கள்.

நல்லவேளையாக இப்போது வாக்குச்சீட்டுகளுக்குப் பதிலாக இயந்திரங்களும், இவ்வளவு கடுமையான விதிமுறைகள் அடங்கிய தேர்தலாகவும் மாற்றிய பின்புதான் கொஞ்சமாவது அந்த மேன்மக்கள் வீட்டுப் படியிறங்கி வருகிறார்கள். இந்த நிலைமை மென்மேலும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்தத் தேர்தலில் 14 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாகக் காட்டி வாக்காளர்கள் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1.புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை

2.ஓட்டுநர் உரிமம்

3.பாஸ்போர்ட்

4.ரேஷன் கார்டு

5.மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தனியார் பொது நிறுவனப் பணியாளர்களுக்கு வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள்.

6.பொதுத்துறை வங்கிகள், அஞ்சலக மற்றும் விவசாயிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்.

7.அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை.

8.பான் கார்டு

9. புகைப்படத்துன் கூடிய ஆவணங்கள், முன்னாள் படை வீரர் பென்ஷன் புத்தகம், பென்ஷனுக்கான ஆணை..

10.புகைப்படத்துடன் கூடிய முதியோர் பென்ஷன் ஆணை, குடும்ப ஓய்வூதிய ஆணை

11.புகைப்படத்துடன் கூடிய துப்பாக்கி லைசென்ஸ்

12.ஊனமுற்றோர் இயக்குனரகத்தால் வழங்கப்பட்டுள்ள ஊனமுற்றோருக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.

13.புகைப்படத்துடன் கூடிய ரயில்வே அடையாள அட்டை.

14. புகைப்படத்துடன் கூடிய சுதந்திரப் போராட்ட வீரர் அடையாள அட்டை.

இந்த 14 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று உங்கள் கையில் இருந்தால் நீங்கள் தாராளமாக வாக்களிக்க வரலாம்.

நாளைய தினம் வேலை இருக்கிறது.. கண்டிப்பாக போயே தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் விடியற்காலையிலேயே கிளம்பி ஆறரை மணிக்கெல்லாம் பூத்துக்கு போய்விடுவது நல்லது.

ஏனெனில் காலையில் இருந்து மதியத்திற்குள்தான் கட்சித் தொண்டர்கள் தங்களது குடும்பம், குடும்பமாக வாக்களிக்க வருவார்கள். கூட்டம் அமோகமாக இருக்கும். மிகத் தாமதம் ஏற்படும்.

பூத்திற்குள் நுழைவதற்கு முன்னர் உங்களுடைய வாக்குச் சீட்டு எந்த வட்டத்தின் எண்ணில் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொரு தேர்தல் சாவடிகளுக்குள்ளும் வட்ட எண்ணின் அடிப்படையில்தான் வாக்கு அளிக்கும் அறைகளைப் பிரித்துள்ளார்கள். பூத்திற்கு மிக தொலைவில் பல்வேறு கட்சியினரும் பூத் ஸ்லிப்போடு அமர்ந்திருப்பார்கள். அவர்களிடத்தில் உங்களது வீட்டு முகவரியைச் சொல்லி பூத் ஸ்லிப்பை பெற்றுக் கொண்டு பின்பு பூத்தின் உள்ளே நுழையுங்கள்.

கூட்டமாக இருந்தால் நிற்பதற்கு சோம்பேறித்தனப்பட்டு அப்படியே திரும்பிப் போய்விடக் கூடாது.. உங்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு நோய் என்று மருத்துவமனைக்குச் சென்றால் கூட்டம் அதிகமாக இருந்தால் திரும்ப மாட்டீர்கள் அல்லவா.. அது போன்று நாளைய தினத்தை நினைத்துக் கொள்ளுங்கள். இந்திய ஜனநாயகம் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது.. நோயை விரட்டுவதில் நமக்கும் பங்கு உள்ளது. எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து எனது கையில் இருக்கும் மருந்தை புகட்டுவேன் என்றெண்ணி உங்களது பொன்னான வாக்குகளை அளியுங்கள்.


வரிசையில் நிற்கும்போது அவ்வப்போது ஏதாவது கூச்சல், குழப்பம் இருக்கத்தான் செய்யும். வரத்தான் செய்யும்.. அதற்காகவெல்லாம் தலைதெறிக்க ஓடி வரக்கூடாது.. குழப்பம், அடிதடி என்று நடந்தால்கூட முடிந்த அளவு உங்களை முதலில் தற்காத்துக் கொள்ளுங்கள். பின்பும் அங்கேயே இருந்து வாக்குகளை அளிக்க மறந்துவிடாதீர்கள்.

சில இடங்களில் தங்களை எதிர்க்கும் கூட்டத்தினர் அதிகமாக இருப்பது தெரியவந்தால் சில கட்சிக்காரர்களே வேண்டுமென்றே ஏதாவது தகராறு செய்து கூட்டத்தைக் கலைத்துவிடுவார்கள். காரணம் அவர்கள் கட்சிக்கு எதிரான வாக்குகள் குறையுமல்லவா அதற்காகத்தான். இந்த டெக்னிக்கை முழுமையாகக் கற்றறிந்தவர்கள் திராவிடக் கட்சியினர்தான்.. எதற்கும் ஜாக்கிரதையாகவே இருங்கள்.

கியூவில் நிற்கும்போதுகூட தப்பித் தவறி நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதை சும்மாவாச்சும்கூட சொல்லிவிடாதீர்கள். கேட்பவன் நம்ம குசும்பனுக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா மகனாக்கூட இருந்து தொலைக்கலாம். பின்பு துபாயில் இருந்து குசும்பன்தான் வந்து நமது புண்ணுக்கு மருந்திட வேண்டும். இது ஒன்றை வைத்தே யாராவது ஒருவர் ஏதாவதொரு பிரச்சினையைக் கிளப்பிவிட வாய்ப்புண்டு.

குடும்பத்தோடு உள்ளே செல்பவர்கள் குடும்பத்தோடுதான் வாக்களிப்போம் என்று பின்னவீனத்துவம் பாணியில் வாதாடக்கூடாது.. அங்கே ஆண்கள், பெண்கள் தனித்தனி கியூதான்.. குழந்தைகள் இருந்தால் பொறுப்பாக நீங்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு, மகளிரை முதலில் அனுப்பி வாக்கைப் பதிவு செய்ய வைத்துவிட்டு பின்பு நீங்கள் சென்று வாக்களியுங்கள். இப்படியெல்லாம் செய்தீர்களானால் ஆதிமூலகிருஷ்ணாவை தலைவராக கொண்டிருக்கும் உலகமகா இளிச்சவாயர்கள் சங்கத்தில் உங்களுக்கு ஆயுட்கால உறுப்பினர் பதவி உறுதி.

தப்பித் தவறி உங்களுடைய வாக்கை வேறு எந்தவொரு இந்தியக் குடிமகனாவது போட்டிருந்தால் அதற்காக அந்த நேரத்தில், அந்த இடத்தில் ஒப்பாரி வைக்காதீர்கள். நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுங்கள். “இது என்னுடைய வாக்கு.. நான் பதிலி வாக்கினைப் பதிவு செய்தாக வேண்டும். இது எனது உரிமை..” என்று வாதிடுங்கள். உங்களுடைய வாக்கினை தனிப் பதிவேட்டில் பூத் அதிகாரி பதிவு செய்ய வேண்டியது அவருடைய கடமை.

சும்மாவாச்சும்கூட கைகளை விரித்துக் காட்டியோ, ரெண்டு விரலைக் காட்டியோ விடாதீர்கள். கையை சும்மா சொரிஞ்சேன்.. அவ்வளவுதான் என்றோ, ரெண்டுக்கு வந்தது.. அதான் எங்க இருக்குன்னு காட்டினேன் என்றோ கையில் ஒண்ணுமேயில்லைன்னு காட்டத்தான் சிம்பாலிக்கா கையை விரிச்சுக் காட்டினேன் என்றோ நீங்கள் உதாரும், சுதாரும் விடலாம். ஆனால் உள்ளேயிருக்கும் கட்சிக்காரர்கள் அல்வா கிண்டிவிடுவார்கள். எத்தனை வருட அனுபவசாலிகள் அவர்கள். ஓட்டுப் போட விடாமல் தடுத்து வெளியேற்றி விடுவார்கள். உள்ளே போய் வெளியே வரும்வரையிலும் வாக்களிப்பது என்ற ஒன்றைத் தவிர வேறு ஒரு சிந்தனையிலும் இருக்காதீர்கள்.

வேலை இருக்கு.. முடியலை.. நேரமாச்சு என்றெல்லாம் சொல்லிவிட்டு மாலை 4.30 மணிக்கு பூத்துக்கு செல்லாதீர்கள். அதற்கும் முன்னதாகவே செல்வதற்கு தயவு செய்து முயற்சி செய்யுங்கள்.

சிற்சில இடங்களில் கலவரங்கள் வெடிக்கலாம். அல்லது தூண்டப்படலாம். அப்போதெல்லாம் சற்று ஓரம் தள்ளி வேடிக்கை பார்த்துவிட்டு கலவரம் ஓய்ந்தவுடன் பூத்தின் உள்ளே செல்லுங்கள்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மக்களவைத் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க ரிப்பன் பில்டிங்கில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கீழ்க்கண்ட செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - 9445191463
பெரம்பூர் - 9445191464
கொளத்தூர் - 9445191465
திரு.வி.க. நகர் - 9445191466
ராயபுரம் - 9445191467
எழும்பூர் - 9445191468
துறைமுகம் - 9445191469
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - 9445191470
அண்ணா நகர் - 9445191471
ஆயிரம் விளக்கு - 9445191472
வில்லிவாக்கம் - 9445191473
தி.நகர் - 9445191474
விருகம்பாக்கம் 9445191475
சைதாப்பேட்டை - 9445191476
மயிலாப்பூர் - 9445191477
வேளச்சேரி - 9445191478
திருவொற்றியூர் - 9445191479
சோழிங்கநல்லூர் - 9445191480

மேற்குறிப்பிட்ட ஏதேனும் தொகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டால் உடனடியாக பொறுப்பான இந்தியக் குடிமகனைப் போல அலைசேயில் அழைத்து விஷயத்தைத் தெரிவித்துவிடுங்கள். புண்ணியம் கிடைக்கும்.

கடைசியாக ஒன்று..

புதிய போஸ்ட் எழுத ஒரு மேட்டர் கிடைக்கிறதே என்றெண்ணி ஆங்காங்கே நடைபெறவிருக்கும் கலவரத்தில் தலையைக் கொடுத்து உடம்பை புண்ணாக்கிக் கொள்ளாதீர்கள்..

பின்பு கட்டுப் போட்ட நிலையில் உங்களது போட்டோவுடனான செய்தியை நாங்கள் எங்கள் பதிவில் போட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஜாக்கிரதை..

மறந்தும் இருந்து விடாதீர்கள் தோழர்களே..

நாளைய தினம் நமது தினம்..

கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியல்..!

13-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வரவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மக்கள் பணியில் ஈடுபட்டு, சமூக சேவையாற்ற காத்திருக்கும் நமது வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலும் தற்போது வெளியாகி வருகிறது.

அதில் குறிப்பிடத்தக்கவர்களின் சொத்து விபரங்கள் இதோ..

சோனியாகாந்தி - 1.38 கோடி


இந்தியாவின் அன்னை(!) சோனியாகாந்தி தாக்கல் செய்த மனுவில் தனக்கு ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், இந்தியாவில் தனக்குச் சொந்தமாக கார், வீடு எதுவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவரின் முன்னோர்கள் வீடு ஒன்று இத்தாலியில் உள்ளது. அதன் மதிப்பு 18.05 லட்சம். கையில் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளது. யூகோ வங்கியில் 28.61 லட்சம் ரூபாய் பணம் டிபாசிட்டாக உள்ளது. மேலும் 20 லட்சம் ரூபாயை மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்துள்ளார்.

மாருதி டெக்னிக்கல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 10 பங்குகள் வெஸ்டர்ன் இந்தியா டானரிஸ் லிமிடெட் நிறுவனத்தின் 500 பங்குகளைத் தவிர, இந்திய ரிசர்வ் வங்கியின் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பங்குப் பத்திரங்களும் அம்மா வசம் உள்ளனவாம்.

தேசிய சேமிப்புத் திட்டத்தில் 1.99 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளதோடு தனிப்பட்ட வருங்கால சேமிப்பு நிதியில் 24.88 லட்சம் ரூபாய் டெபாஸிட் செய்துள்ளார். 18.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான 88 கிலோ வெள்ளி மற்றும் 11.08 லட்சம் மதிப்பிலான நகைகளும் அன்னையிடம் உள்ளன.

இவருக்குச் சொந்தமாக சுல்தான்பூர் மற்றும் தெராமண்டி கிராமத்தில் 2.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் உள்ளதாம். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது இவரின் சொத்து மதிப்பு 95 லட்சம் ரூபாய்தானாம்.. மூன்றாண்டுகளில் இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

ராகுல்காந்தி - 2.33 கோடி


ராகுல்காந்தி தனக்கு 2.33 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். HDFC வங்கியில் இருந்து 70 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இதில் 23.25 லட்சம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதுள்ளதாம். டில்லியில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் இரண்டு கடைகள் உண்டாம். ஒரு கடையின் மதிப்பு 1.08 கோடி ரூபாய்.. மற்றொரு கடையின் மதிப்பு 55.80 லட்சம் ரூபாய்.

11 லட்சம் ரூபாய்க்கு வருமான வரியும், 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேவை வரியும் செலுத்தியுள்ளார் ராகுல். டில்லியில் உள்ள மூன்று வங்கிகளில் மொத்தம் 10.92 லட்சம் ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ளன.

அசையா சொத்துக்கள் வகையில் மெக்ராவுலி பகுதியில் 9.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பண்ணை வீடு உள்ளது. பல்வேறு இடங்களில் ஆறு ஏக்கர் அளவிற்கு விவசாய நிலங்களும் இவர் பெயரில் உண்டு. சொந்த வாகனம் எதுவுமில்லை..

சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சொத்து - 88 கோடி


பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி தனது சொந்த ஊரான பாலகொல்லு தொகுதியில் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி சுரேகா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த வேட்பு மனுவில் சிரஞ்சீவிக்கு 88 கோடி ரூபாய் அளவுக்கான சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி தனது மனுவில் சென்னையில் தனக்குப் பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் செஞ்சுரி பிளாசாவில் ஒரு கடையும், அண்ணாசாலை டெம்பிள் டவர்ஸில் 1200 சதுர அடி பரப்பளவுள்ள ஷோரூமும் உள்ளது. இதன் மதிப்பு மூன்றரை கோடியாம்.

மேலும் சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் நாலரை கோடி மதிப்புள்ள நிலமும், கிருஷ்ணா கார்டனில் 2 கோடி மதிப்புள்ள சொத்து, சாலிகிராமம் அருணாச்சலம் ரோட்டில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடமும் உள்ளது.

ஐதராபாத்தில் உள்ள இவரது வீட்டின் மதிப்பு மட்டும் 14 கோடியாம். அவரது வீடு 3 ஆயிரத்து 333 அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

ஆந்திரா, தமிழ்நாடு தவிர சிரஞ்சீவிக்கு கர்நாடக மாநிலத்திலும் அதிக அளவில் சொத்துக்கள் உள்ளன. அவருக்கு பெங்களூரில் வணிக வளாகங்களும், புறநகர்ப் பகுதிகளில் விவசாய நிலமும் உள்ளது.

ராஜசேகர ரெட்டியின் சொத்து விவரம்


ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகரரெட்டி கடப்பா மாவட்டம் பிலிவேந்தலா சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவருடைய சொத்துப் பட்டியலைப் பார்ப்போம்..

ரெட்டியின் பெயரில் 1 கோடியே 34 லட்சத்து, 78 ஆயிரத்து 487 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. வங்கி கையிருப்பு 12,379. வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை 1 லட்சத்து 93 ஆயிரத்து 797. அவரது மனைவி விஜயலட்சுமி பெயரில் 44 லட்சத்து 54 ஆயிரத்து 643 ரூபாய் டெபாஸிட்டும், ரூ.31,069 வங்கி கையிருப்பும் உள்ளது.

ராஜசேகர் ரெட்டிக்கு சொந்தமாக வேம்பள்ளி கிராமத்தில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும், அவரது மனைவி பெயரில் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிலமும் உள்ளன. கடப்பாவில் ராஜசேகரரெட்டியின் பெயரில் உள்ள வீட்டின் மதிப்பு 8 லட்சத்து 97 ஆயிரத்து 250 ரூபாய். அதே பகுதியில் அவரது மனைவி பெயரில் 10 லட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தனியார் நிறுவனங்களில் ராஜசேகரரெட்டி பெயரில் 2 ஆயிரம் ரூபாயும், ஏ.பி.ஸ்டீல்ஸ் லிமிடெட்டில் ஆயிரம் பங்குகளும் உள்ளன.

விஜயலட்சுமி பெயரில் சரஸ்வரி பவர் இண்டஸ்ட்ரியல் என்ற நிறுவனத்தில் 35 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. இது தவிர தேசிய சேமிப்புப் பத்திரம், 2 லட்சத்து 43, 848 ரூபாயில் எல்.ஐ.சி. பாலிஸி பத்திரங்களும் வைத்துள்ளார். ராஜசேகரரெட்டிக்கு சொந்தமாக சுமார் 74 பவுன் தங்க நகைகளும், 13 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும் உள்ளன. அவரது மனைவியின் பெயரில் சுமார் 72 பவுன் தங்கநகைகளும், பத்து லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும் உள்ளன. இருவரின் பெயரில் கார் உட்பட வேறெந்த வாகனங்களும் இல்லை.

ஜக்மோகன் ரெட்டி - 77 கோடி

ராஜசேகர ரெட்டியின் மருமகன் ஜக்மோகன் ரெட்டி கடப்பா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவரது சொத்து மதிப்பும் குறைவில்லை.. 77 கோடிதானாம்..

ராஜகோபால் - 299 கோடி

விஜயவாடா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் தொழிலதிபர் ராஜகோபால் தனக்கு 299 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திராவின் மருமகன். முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் தீவிர ஆதரவாளர். இவரது மனைவி பத்மாவின் பெயரிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளனவாம்.

ஆதிகேசவலு - 67 கோடி

சித்தூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிடும் ஆதிகேசவலுக்கு 67 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் உள்ளனவாம்.

சந்திரபாபு நாயுடு - 69 கோடி



ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குப்பம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தனக்கு 69 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் இருப்பதாகக் கணக்குக் காண்பித்துள்ளார்.

சஷி தரூர் - 21 கோடி


திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சஷி தரூருக்கு 21 கோடி ரூபாய் மதிப்பிற்கு சொத்துக்கள் உள்ளனவாம்.

தரூரின் பெயரில் 14 கோடியே 41 லட்சமும், அவரது மனைவி கிறிஸ்டா கைல்ஸின் பெயரில் 4 கோடியே 80 லட்ச ரூபாயும் உள்ளதாம். இவரது பெரும்பாலான சொத்துக்கள் வெளிநாடுகளில்தான் உள்ளது.

தரூர் மற்றும் அவரது மனைவியின் சொத்தில் 15 கோடி ரூபாய் வங்கி சேமிப்பு, டிபென்ச்சர்கள், பங்குகளாக இருக்கி்ன்றன. கனடாவில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடு, எர்ணாகுளத்தில் 24.96 லட்சம் மதிப்பில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு, பாலக்காட்டில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பில் பூர்வீகச் சொத்து, துபாயில் உள்ள அஃப்ராஸ் வென்ச்ர்ஸ் நிறுவனத்தின் தலைவரான தரூரிடம் கைக்காசாக 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளதாம். தங்கம், வெள்ளி வாகனங்கள் எதுவும் இல்லையாம்..

வீரப்ப மொய்லி


கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி சிக்பல்லபூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். இவருடைய சொத்துப் பட்டியல் இது..

மொய்லியின் பெயரில் வங்கியில் பத்து லட்சம் ரூபாய் டிபாசிட் தொகை உள்ளது. கையிருப்பு பணம் 60 ஆயிரம் ரூபாய்தான். இரண்டு லட்சம் மதிப்புள்ள கார். 40 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள பங்கு பத்திரங்கள் உள்ளன. ஆனால் அசையா சொத்துக்களோ, நகைகளோ இவர் பெயரில் இல்லை.

மொய்லியின் மனைவி மாலதி பெயரில் பெங்களூரு ஆர்.டி.நகரில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா உள்ளது. அதுபோல ராமநகர மாவட்டத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17.27 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதே மதிப்பிற்கு கர்கலாவில் மூன்றரை ஏக்கர் பண்ணை நிலம் உள்ளது.

மனைவி பெயரில் வங்கி டிபாசிட் பணம் 11 லட்சம். ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிற்கு நகைகள் உள்ளன. மொய்லிக்கு கடன் எதுவும் இல்லை. ஆனால் அவர் மனைவிக்கு வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன் உள்ளது..

பல ஆண்டுகள் அரசியலில் உள்ள வீரப்பமொய்லி மீது எந்தக் குற்ற வழக்குகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயசங்கர் - 2 கோடி

மைசூரில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் விஜயசங்கருக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பூர்வீகச் சொத்துக்கள் உள்ளனவாம். கூடவே 550 செம்மறி ஆடுகளும் சொந்தமாக உள்ளனவாம். இவற்றின் மதிப்பு 10 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார். இவரது மனைவி சரோஜாம்மாவுக்கு 21 ஆயுள் காப்பீட்டு பாலிஸிகள் உள்ளன.(??????????)

சாந்தி - 4.11 கோடி

கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராமுலுவின் தங்கை சாந்தி பெல்லாரி தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு 4.11 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளது. 500 கிராம் அளவுக்கு தங்க நகைகள் உள்ளனவாம்.

பிரகாஷ் ரதோட் - 4 கோடி

கர்நாடக மாநிலம் பூஜப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் பிரகாஷ் ரதோட், தனக்கு நான்கு கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவரது கையிருப்பில் 2.2 லட்சம் ரூபாயும், நான்கு கார்களும் உள்ளனவாம்.

பிரகாஷ் ஜா - 55 கோடி


பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்ஜா.. பல பாலிவுட் மற்றும் ஜோத்பூரி மொழி படங்களை எடுத்தவர். இயக்குநராகவும் இருந்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் பஸ்வானின் லோக்ஜனசக்தி சார்பில் மகாராஷ்டிராவில் மந்த்ராகோண்டா தொகுதியில் போட்டியிடுகிறார் இவர்.

இவர் சொத்து மதிப்பாக வேட்புமனுவுடன் காட்டியிருப்பது 55 கோடி ரூபாய். பிரகாஷ் ஜாவின் சாத்துக்களில் கையிருப்பு பணம், வங்கிகளில் டெபாசிட் தொகை, நடத்தி வரும் பட நிறுவனங்கள், நகைகள், சொந்த ஊரான பீகாரின் பஸ்ஸிம் சேம்பரான் மாவட்டத்தில் உள்ள அசையா சொத்துக்கள், மகாராஷ்டிராவில் வாங்கிய சொத்துக்கள் ஆகியவை அடங்கும். அசையா சொத்துக்களில் விவசாய நிலங்களும் இருக்கின்றன. அசையா சொத்துக்களின் மதிப்பு மட்டுமே 16 கோடி ரூபாய். விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜா பாலிவுட்டில் நுழைந்து பல படங்களை தயாரித்தவர்.

கரண்சிங்தன்வார் - 150 கோடி

தெற்கு டில்லி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் கரண்சிங்தன்வார் தனக்கு 150 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.

நவீன் பட்நாயக் - 7.98 கோடி


ஒரிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். இவருக்கு 7.98 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளனவாம். வங்கியில் 57 ஆயிரம் ரூபாய் கையிருப்பு உள்ளதாம்.

சுப்ரியா சுலே - 53 கோடி


மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரின் மகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாரமதி தொகுதியில் போட்டியிடும் சுப்ரியா சுலேவுக்கு 53 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளனவாம்.

எம்.கே.சுப்பா - 60 கோடி

அசாம் மாநிலம் தேஜ்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எம்.கே.சுப்பாவுக்கு 60 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளனவாம்.

வின்சென்ட் பாலா - 24.5 கோடி

மேகலயா மாநிலத்தின் ஷில்லாங் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வின்சென்ட் பாலா என்ற வேட்பாளரின் கைக்கடிகாரத்தின் மதிப்பு 12.5 லட்சமாம். இவரது குடும்பச் சொத்தின் மதிப்பு 24.5 கோடி என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மிலிந்த் தியாரோ - 17.15 கோடி

மும்பை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மிலிந்த் தியாரோ தனக்கு 17.15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரியா தத் - 37 கோடி



மும்பை வடமத்திய தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மறைந்த நடிகர் சுனில்தத்தின் மகள் பிரியாதத் தனக்கு 37 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாந்த்ரா பகுதியில் விவசாய நிலங்கள், வர்த்தக மற்றும் குடியிருப்புகள், கட்டிடங்களின் மதிப்பு 31.77 கோடி என கூறியுள்ளார்.

மகேஷ் ஜெத்மலானி - 28 கோடி

இதே தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வக்கீல் ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ்ஜெத்மலானி தனக்கு 28 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்வானி - 3.5 கோடி



பாரதீய ஜனதா தலைவர் அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனக்கு 3.5 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் இருப்பதாகக் கணக்குக் காட்டியுள்ளார்.

டில்லி அருகே உள்ள குர்கானில் 92.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு வீடுகள் உள்ளன. காந்தி நகரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு வீடு உள்ளது. வங்கியில் அத்வானியின் பெயரில் 67.56 லட்சம் ரூபாயும், அவரது மனைவி பெயரில் 36.56 லட்சம் ரூபாயும் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது.

16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் இவர்களுடைய குடும்பத்தில் உள்ளதாம். கையிருப்பாக அத்வானியிடம் 20 ஆயிரம் ரூபாயும், அவரது மனைவியிடம் 5000 ரூபாயும் உள்ளதாம்.

கடந்த 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது அத்வானியின் சொத்து மதிப்பு 1.30 கோடி ரூபாய்தான்.. 5 வருஷத்துல 2 கோடியே 10 லட்சம் ரூபாய் உயர்ந்திருக்கு. இந்த அளவுக்குக்கூட உசரலைன்னா இவர் என்ன தலைவரு..?

ஜஸ்வந்த்சிங்


பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் போட்டியிடுகிறார். இவருக்கு அத்தொகுதியில் செல்வாக்கு மிகுந்த கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு முழு ஆதரவு அளித்துள்ளது. இவர் தாக்கல் செய்துள்ள சொத்துப் பட்டியலில் அரேபியக் குதிரைகள் இடம் பெற்றிருப்பது சுவாரசியம்தான்..

சவூதி அரேபிய இளவரசர் கொடுத்த இரண்டு அரேபிய குதிரைகள், ராஜஸ்தானில் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்கள், ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜோத்பூர் பண்ணை வீடு மற்றும் பங்களா, டில்லியில் உள்ள குடியிருப்பின் மதிப்பு எட்டு கோடி ரூபாயாம்.

வங்கியில் கையிருப்பு எட்டு லட்சம் ரூபாய். பியட் காரின் மதிப்பு 15 ஆயிரம் ரூபாய். டிராக்டரின் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய். மனைவியிடம் உள்ள இன்னோவா காரின் மதிப்பு 9.5 லட்சம் மதிப்பு மற்றும் யூனோ காரின் மதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். கால்நடைகளின் மதிப்பு 1.50 லட்சம் ரூபாய். கைவசமுள்ள நகைகளின் மதிப்பு ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் என்று தனது மனுவில் கூறியுள்ளார்.

மாட்டு வண்டிதான் சொத்து..!

ரொக்கப் பணமும், அசையா சொத்துக்களான கட்டிடங்களும், நகைகளையும் பல வேட்பாளர்கள் தங்களது சொத்தாகக் காட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அம்லாவே மாட்டுவண்டிதான் தனது வாகனச் சொத்து என்று கணக்குக் காட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் ராஜ்கர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் இவருடைய வங்கிக் கணக்கில் 1612 ரூபாய் இருக்கிறதாம். சொந்தமாக 22 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், ஒரே ஒரு காளை மாடு என்று வாயில்லா ஜீவன்கள் சொத்துக்களாக உள்ளன. தனது பெயரில் 6.3 ஹெக்டேர் நிலமும், தனது மனைவி பெயரில் 3 ஹெக்டேர் நிலமும், 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்மோட்டார் ஒன்றும் சொந்தமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனாலும் இவரது மனைவியின் பெயரில் 19 லட்சம் ரூபாய்க்கான சொத்துக்கள் தனியாக உள்ளது என்று கணக்குக் காட்டியுள்ளார்.

இந்தப் பட்டியல் மேலும் மேலும் வந்து கொண்டேயிருக்கிறது என்பதால் அவ்வப்போது இந்தப் பதிவு அப்டேட் செய்யப்படும்.

நன்றி..!

பாராளுமன்றத் தேர்தல்-2009 - தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!

05-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி சற்று நேரத்திற்கு முன்பாக வெளியிட்டுள்ளது.


தென்சென்னை - ஆர்.எஸ்.பாரதி

மத்திய சென்னை - தயாநிதி மாறன்


வடசென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்


திருப்பெரும்புதூர் - டி.ஆர்.பாலு


திருவள்ளூர்(தனி) - காயத்ரி ஸ்ரீதரன்


அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன்


தர்மபுரி - தாமரைச்செல்வன்


கிருஷ்ணகிரி - இ.ஜி.சுகவனம்


திருவண்ணாமலை - த.வேணுகோபால்


கள்ளக்குறிச்சி - ஆதி.சங்கர்


தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்


பெரம்பலூர் - து.நெப்போலியன்


நாமக்கல் - செ.
காந்திசெல்வன்

கரூர் - கே.சி.பழனிச்சாமி


பொள்ளாச்சி - ம. சண்முகசுந்தரம்


நீலகிரி(தனி)
- எம்.ராசா

மதுரை - மு.க.அழகிரி


நாகை(தனி) - ஏ.கே.எஸ்.விஜயன்


ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்


தூத்துக்குடி - எஸ்.ஆர்.ஜெயதுரை


கன்னியாகுமரி - ஜெ.
ஹெலன் டேவிட்சன்

மத்திய அமைச்சர்கள் ரகுபதி, வேங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மற்றும் ராமநாதபுரம் தற்போதைய எம்.பி. பவானி ராஜேந்திரனுக்கும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை..

பிளாஷ் நியூஸ்-தி.மு.க. கூட்டணி-தொகுதிகள் அறிவிப்பு

29-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியலை கலைஞர் இன்று வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. போட்டியிட உள்ள 21 தொகுதிகள்

தென்சென்னை
மத்திய சென்னை
வடசென்னை
பெரும்புதூர்
திருவள்ளூர்(தனி)
அரக்கோணம்
தர்மபுரி
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
தஞ்சாவூர்
பெரம்பலூர்
நாமக்கல்
கரூர்
பொள்ளாச்சி
நீலகிரி(தனி)
மதுரை
நாகை(தனி)
ராமநாதபுரம்
தூத்துக்குடி
கன்னியாகுமரி

காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள 16 தொகுதிகள்

காஞ்சிபுரம்(தனி)
ஆரணி
கடலூர்
ஈரோடு
திருப்பூர்
சேலம்
கோவை
மயிலாடுதுறை
சிவகங்கை
திண்டுக்கல்
தேனி
திருச்சி
விருதுநகர்
தென்காசி(தனி)
நெல்லை
புதுச்சேரி

விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிட உள்ள 2 தொகுதிகள்

விழுப்புரம்(தனி)
சிதம்பரம்(தனி)

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதி

வேலூர்