ட்வீட்டரில் மீனவப் புரட்சி..! பங்கெடுக்க வாருங்கள் தோழர்களே..!

29-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கம்போல எப்போதும் நடக்கின்ற கொலைதான் என்கிறவகையில் தற்போது கடைசியாக நடந்திருக்கும் நாகப்பட்டினம் மீனவர் ஜெயக்குமாரின் கொலை, சிறிதளவு இந்திய, தமிழக அரசுகளை அசைத்துப் பார்த்திருக்கிறது..!


தேர்தல் நேரம் என்பதாலும், இதனை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்து சினிமாத்தனமாக அனைவருக்கும் முந்திக் கொண்டு இரவோடு இரவாக அரசு வேலை தரும் ஆணையை கிராமத்து வீட்டுக்கே கொண்டு போய்ச் சேர்ப்பித்திருக்கிறது மாநில அரசு.

இந்த வேகத்தை முதல் மீனவன் பலியானபோதே இலங்கை அரசை கண்டிப்பதிலும், தண்டிப்பதிலும் நிகழ்த்தியிருந்தால் மிச்சம் இருந்த 535 பேரின் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கலாமே..?

அரசுகளின் இந்த அவலட்சணத்தை இதுவரையிலும் சொல்லிக் கொண்டிருந்த வெகுஜன ஊடகங்களுக்கு மத்தியில், இப்போது இணைய ஊடகங்களும் களத்தில் குதித்துவிட்டன.

வலைத்தளங்களில் பல பதிவர்கள் சிங்கள அரசின் கொடுமையைக் கண்டித்தும், மீளாத் துயிலில் மூழ்கியிருக்கும் தமிழக, மத்திய அரசைக் கண்டித்தும் பதிவெழுதிவிட்டார்கள்.

கூகிள் பஸ் மற்றும் பேஸ்புக் இணையத்தளங்களிலும் உடனுக்குடன் எதிர்ப்பு கோஷங்களும், அரசுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுவிட்டது.

இன்னும் ஒரு படி மேலே போய் உணர்வுள்ள அத்தனை பேரையும் உடனுக்குடன் ஒருங்கிணைக்கும் வசதி கொண்ட ட்வீட்டரில் இதற்கென  http://twitter.com/
#TNfisherman என்ற தனி ஐ.டி.யை ஆரம்பித்து அதில் தங்களது கோபத்தையும், கொந்தளிப்பையும் பதிவு செய்து வருகின்றனர் தோழர்கள்.

மூன்று நாட்களுக்கு முன்பாக வலையுலக நண்பர் டிபிசிடி ஆரம்பித்த இந்த மீனவர்களுக்கான ஆதரவுப் போராட்டத்திற்கு இரண்டாவது நாளிலேயே ஊடகங்கள் ஆதரவு கொடுத்து அடையாளப்படுத்தின.

ட்வீட்டர் என்றில்லாமல் அங்கே இடுகின்ற செய்திகளும், கண்டனங்களும், கோரிக்கைகளும் http://www.savetnfisherman.org  என்ற வலைத்தளத்தில் தொகுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வேகத்தோடு இது அரசின் காதுகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்கிற அக்கறையோடு கடந்த மூன்று தினங்களாக ட்வீட்டர் உலகம் கலங்கிப் போய் இருக்கிறது..!

இதன் உச்சக்கட்டமாக நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் உலகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து தமிழர்களும் இந்த டிவீட்டரின் மூலம் இயங்கும் மீனவர் ஆதரவுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

9 மணி என்றில்லாமல் அதற்கு முன்பிருந்தே பல ட்வீட்டர்களும் கண்டனங்களை அதில் எழுப்பிக் கொண்டேயிருந்தார்கள். 9 மணிக்குப் பிறகு, மேலும் வேகம் பிடித்து ட்வீட்டர் ஓவர் லோடு ஆகும் அளவுக்கு தமிழர்கள் பொங்கித் தீர்த்துவிட்டார்கள்.

அந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 3710 ட்வீட்டுகள் மீனவர் பிரச்சினை தொடர்பாக இடப்பட்டன. நேற்று இரவு 10 மணிவரையிலும் இந்தப் பிரச்சினை தொடர்பான பதிவர்கள் இட்ட ட்வீட்டுகளின் எண்ணிக்கை 17,000-த்தை தாண்டியிருந்தது..!


இத்தனை களேபரங்களும் இங்கே நடந்து கொண்டிருக்க.. மத்திய அரசோ மிக மெதுவாக “நாளைக்கு நாள் நல்லாயில்லை. அடுத்த நாள் நல்லாயிருக்கும்..” என்று தேர்ந்தெடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமையன்று நமது வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமாராவை இலங்கைக்கு அனுப்புகிறதாம். அவர் அங்கே போய் என்ன பேசப் போகிறார் என்று தெரியவில்லை.

இதுநாள்வரையிலும், இத்தனை மீனவர்கள் இறந்தார்களே.. அவர்களுடைய மரணத்திற்கு காரணம் யார் என்றுகூட விசாரிக்க முடியாத, விசாரிக்கத் தெரியாத இந்தத் துப்புக் கெட்டவர்கள் “சுடாதீங்க.. அவங்க பாவம்ல்ல.. எங்களுக்கு நிறைய பிரச்சினையாகுதுல்ல..” என்று சொல்வதற்காக ஒரு தூதரை அனுப்பி வைக்கிறார்கள். இதுவே மிகக் கேவலம்.

நான் எழுதிய
தொடரும் மீனவர்கள் படுகொலை - தொலையட்டும் இந்தக் குடும்பம்..!  என்ற கட்டுரையை வாசித்த தி.மு.க.வைச் சேர்ந்த தோழர்கள் என்னிடம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

"தி.மு.க. இப்போது ஆட்சியைவிட்டு விலகினால்.. கருணாநிதி இல்லை என்றால் சிங்கள அரசு தமிழக மீனவர்களைச் சுடாது என்கிறீர்களா..?"
 
"அல்லது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டால் இது மாதிரியான சம்பவங்கள் திரும்பவும் நடக்காது என்கிறீர்களா..?" என்று கேட்கிறார்கள்.

இவ்வாறு கேட்பதற்கு இவர்களுக்கு எப்படி மனது வருகிறது என்றே தெரியவில்லை.

இப்போது நடப்பது கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி. தமிழகத்தின்  முதல்வர் கருணாநிதிதான். செத்தவன் தமிழகத்தைச் சேர்ந்த மீனவன். நியாயத்தை யாரிடம் கேட்பது..? எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிடமா கேட்க முடியும்?

ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் இறந்தபோது மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்றால் சுடத்தான் செய்வார்கள் என்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். யார் இதனை இல்லை என்று சொன்னது..? அப்போது அதனை மறுத்தும், எதிர்த்தும் பேசிய கருணாநிதி இன்றைக்கு தனது ஆட்சியிலேயே ஒரு மரணம் நிகழ்ந்ததும் கள்ள மெளனம் சாதிப்பது ஏன்..? நாங்கள் எங்கே ஜெயலலிதாவை உத்தமி என்று சொன்னோம்..?

தற்போது இந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உண்டு எனில், மத்திய அரசை எப்பாடுபட்டாவது வற்புறுத்தி இந்தப் படுகொலைகளை நிறுத்துவது மாநில அரசின் கடமையல்லவா..? கருணாநிதி ஏன் செய்யவில்லை..? ஏன் இவரால் செய்ய முடியாது..?

தனது பேரன்களின் கேபிள் சாம்ராஜ்யத்தை ஒழிக்க சட்டம் வரப் போகிறது என்ற தகவல் கிடைத்த 1 மணி நேரத்திற்குள் கவர்னர் மாளிகைக்கு அன்பழகன் தலைமையில் கட்சிப் பிரமுகர்களை அனுப்பி வைத்து புலம்பத் தெரிந்தவர்தானே இந்தக் கருணாநிதி..!

தனது பேரனுக்கும், தனது கட்சிக்காரர்களுக்கும் நல்ல லாபமான, பசையான துறைகளை வாங்கித் தர வேண்டி இந்தத் தள்ளாத வயதிலும் டெல்லியின் தெருக்களில் லாவணி பாட ஓடத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

கேட்ட துறைகள் கொடுக்கப்படவில்லை என்றவுடன் பதவியேற்பில் கலந்து கொள்ள மாட்டோம். நாங்கள் வெளியேயே நின்று கொள்கிறோம் என்று மிரட்டத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

நாங்கள் இருக்கவா வேண்டாமா என்பதை முடிவெடுத்துச் சொல்லுங்கள் என்று மிரட்டி ஜெயிலில் இருந்து தனி உத்தரவு மூலம் தான் மட்டும் வெளியேறத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

தொலைக்காட்சி துவங்க 5 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் பி்ன்னுக்குத் தள்ளிவிட்டு விண்ணப்பம் கொடுத்து 15 நாட்களில் தனது தொலைக்காட்சிக்கு மட்டும் அனுமதி வாங்கத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

உலகத்தில் எந்த நாடும் செய்திருக்காத சாதனையாக ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஜீரோக்களை எண்ணக்கூடத் தெரியாதவர்கள் இருக்கின்ற இந்த நாட்டில் அந்த ஊழல் நாயகனைக்கூட திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது என்று அடம் பிடிக்கத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

தனது மகனை ரவுடி என்று விமர்சித்த பேரனை ஒரே நொடியில் தனது சார்பான அமைச்சர்கள் பட்டியலில் இருந்து தூக்கத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

ஆங்கிலமும், இந்தியும் பேசத் தெரியாத மகனை, இது இரண்டு மட்டுமே தெரிந்த பிரதமரின் அமைச்சரவையில் கேபினட் மினிஸ்டராக ஆக்கத் தெரிந்திருக்கிறதே இந்தக் கருணாநிதிக்கு..!

இன்னும் எத்தனையோ திருட்டுக்களையும், கொள்ளைகளையும் மறைமுகமாகச் செய்து பிழைத்து வரும் இந்தக் கருணாநிதிக்கு மீனவர்களின் தொடர் படுகொலையை தடுக்கக் கூடவா தெரியாது..?

இவருடைய கட்சி எம்.பி.க்களின் ஆதரவோடுதானே மத்திய அரசே இயங்குகிறது.. அந்த மத்திய அரசில் இவரும் ஒரு அங்கம்தானே.. பின்பு இவரிடம் கேட்காமல் வேறு யாரிடம் போய் கேட்பது..?

இவர் உண்மையான தமிழனாக இருந்தால், முள்ளிவாய்க்கால் போரின்போதே கூட்டணியில் இருந்து விலகியிருக்க வேண்டும். அப்போதே தெரிந்துவிட்டது ஐயா தனது குடும்பத்தினருக்கு மட்டும்தான் தமிழன் என்று..!

நானாக இருந்திருந்தால் ஆட்சியில் இருந்து விலகியிருப்பேன். மத்திய அரசை நட்டாத்தில் விட்டிருப்பேன். அடுத்து மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது நானே முதல் படகில் அமர்ந்து சென்று “இப்போ வந்து சுட்டுப் பாரு..!” என்று சவால் விட்டிருப்பேன்.

கடற்படையினரை நம்பி இனிமேல் புண்ணியமில்லை. முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு ஓட்டுப் போட்ட மக்களைக் காப்பாற்ற நான்தான் முனைய வேண்டும். அந்த வகையில் தமிழக காவல்துறையினரை மீனவர்களின் பாதுகாப்புக்காக நடுக்கடலுக்குள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அதனை செய்திருப்பேன்..!

எதிர்க்க வருபவர்களை, தடுக்க நினைக்கும் மத்திய அரசினை எதிர்த்து மக்களைத் திரட்டியிருப்பேன். போராடியிருப்பேன்.. ஆட்சி டிஸ்மிஸாகும் என்றாலும் பரவாயில்லை. துணிந்து நிற்கிறேன். டிஸ்மிஸ் செய்து பார் என்று சவால் விட்டிருப்பேன்.

ஆனால் கருணாநிதி செய்யவில்லையே.. அவருக்கு இப்போது என்ன கவலை..? ஒரே கவலைதான். தனது ஆட்சி போகக்கூடாது. அவ்வளவுதான். தனது ஆட்சியை நம்பித்தான் தனது குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். தனது ஆட்சி போய் வேறொரு ஆட்சி வந்தால், அவர்கள் சம்பாதிக்கிறார்களோ இல்லையோ.. தனது குடும்பத்தினர் மீது கை வைத்து விடுவார்களே என்று பயப்படுகிறார்.

“நான் எனது நாட்டு மக்களைவிட எனது குடும்பத்தினரை அதிகம் நேசிக்கிறேன். அவர்களுக்காகவே நான் 24 மணி நேரமும் உழைக்கிறேன். நடிக்கிறேன். பேசுகிறேன். அவர்களைவிட்டுவிட்டு வேறு யாரையும் நான் நம்பத் தயாராக இல்லை. மத்திய அரசை பகைத்துக் கொண்டால் எனது மகனும், பேரனும் மந்திரி பதவியை இழந்துவிடுவார்கள். அதன் பின் கட்சியில் குழப்பம் ஏற்பட்டால்கூட சமாளித்துவிடுவேன். ஆனால் எனது குடும்பத்தில் குழப்பம் வரும். அதனை என்னால் சமாளிக்க முடியாது.. இப்போது எனது குடும்பத்தினர் சம்பாதித்து வரும் பணம் குறைந்துவிடும். சம்பாத்தியம் போய்விடும். ஏற்கெனவே சம்பாதித்ததற்கு கணக்கு வழக்கு கேட்பார்கள். வழக்குத் தொடர்வார்கள். அதனைச் சமாளிக்க வேண்டுமெனில் என்னிடம் அதிகாரம் இருக்க வேண்டும். அதிகாரம் இல்லையெனில் எனது குடும்பத்தினரே என்னை மதிக்க மாட்டார்கள். இது எல்லாவற்றையும்விட எனக்கு எப்போது மரணம் என்று தெரியவில்லை. ஆனால் நான் சாகும்போதுகூட முதல்வராகவே சாக விரும்புகிறேன். அப்படி இறந்தால்தான் எனது 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆரை போல எனக்கும் பெயர் கிடைக்கும்..  ஆகவே எந்த நாடு, எத்தனை தமிழர்களைக் கொலை செய்தாலும் பரவாயில்லை. எனக்கு எனது ஆட்சிதான் முக்கியம்.. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..”

- இப்படி சதா சர்வகாலமும் தனது குடும்பத்தைப் பற்றியே சிந்தித்து வருபவரிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்..? நேற்றுகூட ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 38 பேர் இறந்தார்களே.. ஜெயலலிதா அப்போது என்ன செய்தார் என்று..?

நீ ஏண்டா ஒரு நாள் அம்மணமா ஆடுறன்னு கேட்டா.. அவன் 38 நாள் ஆடுனானேன்னு அது உன் கண்ணுக்குத் தெரியலையா என்று கேட்கிறார் இந்தத் தமிழினத் தலைவர்..! இதுவா நியாயவான் பேசுகிற பேச்சு.. அப்போது இவரும் ஒரு ரவுடிதானே? ஜெயலலிதாவுக்கு என்ன மரியாதை கொடுக்கிறோமே அதே அளவுக்கு மரியாதைதான் இவருக்கும் கிடைக்கும். ஆனால் ஜெயலலிதா எதையும் சொல்லிவிட்டுச் செய்வார். கருணாநிதி சொல்லாமல் செய்வார், செய்தவர் என்பதால் அந்த மரியாதையைக்கூட இப்போது இழந்துவிட்டார்.

இப்போது மீனவர் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் அத்தனை பேரும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியவர்களில்லை. வாங்குபவர்களும் இல்லை. இப்போது கருணாநிதி ஆட்சியில் இல்லாமல் ஜெயலலிதா இருந்திருந்தாலும் இப்படித்தான் எழுதியிருப்பார்கள். பேசியிருப்பார்கள்.

இப்படி ஜெயலலிதாவைக் காட்டியே அவரைவிட பல மடங்கு பணத்தையும், சொத்துக்களையும் தனது குடும்பத்தினருக்காகச் சம்பாதித்துக் குவித்திருக்கும் கருணாநிதி மீண்டும், மீண்டும் ஜெயலலிதா என்னும் பூச்சாண்டியைச் சொல்லியே நம்மிடமிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்..!

அவருக்கு மட்டுமல்ல, இனி ஆட்சி பீடத்தில் ஏறப் போகும் அனைவருக்குமே ஒரு பாடத்தைப் புகட்டுவதைப் போல நாம் நமது எதிர்ப்பை தொடர்ந்து காட்டிக் கொண்டே வர வேண்டும். இது தேர்தல் சமயத்தில் நமது மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் விளைவாக இந்த கோபாலபுரத்து கோயபல்ஸின் சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக வேண்டும்..!

பதிவர்களும், வாசக அன்பர்களும் மீனவர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் தளத்திற்குச் சென்று பிரதமருக்கு ஒரு கண்டனக் கடிதத்தை உங்களது ஒப்புதலுடன் அனுப்பி வையுங்கள்..

மேலும் நேரமிருப்பவர்கள், வாய்ப்பு இருப்பவர்கள் ட்வீட்டரில் தற்போது நடைபெற்று வரும் இந்தப் போராட்டக் களத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் http://www.facebook.com/savetnfisherman என்ற தளத்தில் இணைந்து தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நம்மால் முடிந்ததை அந்த மீனவர்களின் சமுதாயத்தினருக்கு செய்வோம்..! வாருங்கள்..!

53 comments:

ஈரோடு கதிர் said...

சிங்களவனிடம் தமிழ் மீனவன் என்ற ஒற்றைக் காரணத்திற்காக மட்டும் பலியாகும் மீனவனுக்கு வெறும் 5 லட்சம் காசோலையோடு கடமையை முடிக்க நினைக்கும், கடிதங்களோடு மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் கண்ணாமூச்சியாடும் தமிழக அரசினைக் கண்டித்து.... விருது பட்டியலில் உள்ளவர்களைக் கலைமாமணி விருதுகளைப் புறக்கணிக்கக் கோருவோம்

Anand said...

Like, it.

Unknown said...

அருமையான பதிவு அண்ணே!

Unknown said...

sirathaur sombu naki unmai tamilan ha ha

சக்தி கல்வி மையம் said...

2 லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் ,
நமக்கென்ன என்றே அமைதி காத்தோம் .
ஈழத் தமிழர்களுக்குத் தான் ரெட்டை முகம் காட்டிவிட்டோம்.தாய்த் தமிழக மீனவர்களுக்காவது ,நிஜமான உணர்வைக் காட்டுவோம் #tnfisherman.
see,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html

Unknown said...

வெட்கம், வேதனை :-(

Rajaraman said...

சொரணை கெட்ட, கையாலாகாத, கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்ட மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கு உங்களுடன்

சேர்ந்து என் கண்டனத்தையும் பத்தி செய்கிறேன்.

செ.சரவணக்குமார் said...

நம் மீனவ சொந்தங்களுக்காக இணைய நண்பர்கள் தொடங்கியிருக்கும் இந்த அறப்போராட்டத்தை இன்னும் உக்கிரமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

Indian Share Market said...

இவர்கள் அனைவருமே பிணம் தின்னும் கழுகுகள்.

வாய் பிளந்திருக்கும் ஓநாய்கள். வஞ்சகம் செய்யும் நரிகள்.

சதி செய்யும் செய்யும் சகுனிகள்.இவர்கள் மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால்

தமிழ் நாடு சுடுகாடு ஆகும்.ரத்த ஆறு ஓடும்.ஏழைகள் பட்டினியால் சாவார்கள்.இது உறுதி.
மத்தியிலும், மாநிலத்திலும் நமது ஆட்சி, மக்கள் எப்படி மடிந்தால் நமக்கென்ன எனபது போல் இவர்கள் தேர்தல் தொகுதி உடன் பாடு பற்றி பேசுகிறார்கள். மானஸ்தன் திருமா, ராமதாஸ் எப்படி இதையெல்லாம் சகித்து கொண்டு வாய் திறக்காமல் இருக்கிறார்கள் என்பதே எங்களை போன்ற தமிழ் ஆவலர்களின் கேள்வி. ஒரு லட்சத்தி எலுவதயிரம் கோடி ஊழலை பற்றி கூட இந்த மானஸ்தர்கள் வாய் திறக்கவில்லை. இவர்களது கட்சி காரர்களே இவர்களை தோற்கடிப்பார்கள ் வரும் தேர்தலில் எனபது உறுதி.

Anonymous said...

அண்ணே வணக்கம். நானும் சிங்களவனை விடாதே செத்து நம் மக்களடா என்று பதிவு எழுதி என்னுடைய எதிர்ப்பை ப்ளாகில் பதிவு பண்ணி விட்டேன். நானும் உங்கள் பக்கம், நாம் போராடுவோம். இந்த சுயநலமிக்க முதுகெலும்பில்லாத அரசை எதிர்த்து. நான் எப்பொழுதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன். அதுவும் உங்கள் ப்ளாகை படித்து தான் நானும் இது போல் நம் எண்ணத்தை பதிவிடுவோம் என்று தோன்றியதால்.

Anonymous said...

http://thothavanda.blogspot.com/2011/01/blog-post_27.html

அண்ணே வணக்கம். நானும் சிங்களவனை விடாதே செத்து நம் மக்களடா என்று பதிவு எழுதி என்னுடைய எதிர்ப்பை ப்ளாகில் பதிவு பண்ணி விட்டேன். நானும் உங்கள் பக்கம், நாம் போராடுவோம். இந்த சுயநலமிக்க முதுகெலும்பில்லாத அரசை எதிர்த்து. நான் எப்பொழுதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன். அதுவும் உங்கள் ப்ளாகை படித்து தான் நானும் இது போல் நம் எண்ணத்தை பதிவிடுவோம் என்று தோன்றியதால்.



Read more: http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_29.html#ixzz1CQPjrCPK

Unknown said...

வேள்வி தீயாய் எங்கும் தீ பரவட்டும், ஆனால் நிரந்தர தீர்வை கொண்டு வந்து சேர்க்கவேண்டும். ஏனெனில் தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகம் நடத்தப்படக்கூடும்..

Unknown said...

நிருபமா இலங்கை பயணம் # அந்தாளு குடுக்குற டீய குடிச்சுட்டு விஷயத்த பேசாமா வந்துராதீங்க # பிரணாப் மாதிரி. #tnfisherman #TNfisherman

Unknown said...

so sad no one taking action about this...

let we join our hand, we can help ourself

San said...

Dear TT,
Don't worry,Thatha is going to Delhi to meet Thiyaga Chudar Annai Sonya tomorrow.In a whiff of second the fishermen problem will be solved by these two non corrupt people of the world.As usual our makkal will vote for these non corrupt parties in the next election.
Hope they will not discuss about Swiss Bank Accounts!!!

Jerry Eshananda said...

உண்மைத்தமிழா...நான் உன்னை நேசிக்கிறேன்.

Jerry Eshananda said...

// கட்டுரையை வாசித்த தி.மு.க.வைச் சேர்ந்த தோழர்கள் என்னிடம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.//
கடும் கண்டனம்னா..? வேற ஒன்னும் இல்லையில..எதும்னாலும் எங்க கிட்டயும் கொஞ்சம் சொல்லுங்கப்பு..சும்மா மதுர க்குள்ளையே போரடிக்குதுல....

kanagu said...

:( :(

இவங்கள எங்கண்ணா நம்புறது... வெறும் நம்பிக்கை தெரிவிக்கிறோம்-னு கிளம்பி வந்துடுவாய்ங்க..

மதுரை சரவணன் said...

தி.மு.க வின் தமிழ் பற்றினை இதை விட தெளிவாக யாரும் கூறிட முடியாது. அதற்காக நாம் அ. தி.மு.கவை ஆதரிக்கவில்லை என்பதையும் தெளிவாகவும் கூறியுள்ளீர்கள். உயிரின் விலை தெரியவில்லை இவர்களுக்கு .

Unknown said...

நம் மீனவ சொந்தங்களுக்காக இணைய நண்பர்கள் தொடங்கியிருக்கும் இந்த அறப்போராட்டத்தை இன்னும் உக்கிரமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

செங்கோவி said...

இனையப் புரட்சியைப் பார்த்து, ஒரு பதிவராகப் பெருமைப் படுகிறேன்.

---செங்கோவி
ஒன்றுபடுவோம் மீனவச் சகோதரனுக்காக.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தொடர்ந்து போராடுவோம்

உண்மைத்தமிழன் said...

[[[ஈரோடு கதிர் said...
சிங்களவனிடம் தமிழ் மீனவன் என்ற ஒற்றைக் காரணத்திற்காக மட்டும் பலியாகும் மீனவனுக்கு வெறும் 5 லட்சம் காசோலையோடு கடமையை முடிக்க நினைக்கும், கடிதங்களோடு மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் கண்ணாமூச்சியாடும் தமிழக அரசினைக் கண்டித்து விருது பட்டியலில் உள்ளவர்களைக் கலைமாமணி விருதுகளைப் புறக்கணிக்கக் கோருவோம்.]]]

இதில் எனக்குக் கொஞ்சம் கருத்து மாறுபாடு உண்டு கதிர்..!

விருதுகளை தி.மு.க. கொடுக்கவில்லை. தமிழக அரசுதான் கொடுக்கிறது. இப்போது முதல்வர் கருணாநிதி என்பதால் அவர் கொடுக்கவிருக்கிறார். ஆனால் கொடுக்கும் நேரம், தேர்வான விதம் கண்டனத்துக்குரியது என்றாலும் கொடுக்கப்படுவதில் தவறு என்று சொல்ல முடியாது.

ஆனால், கருணாநிதிக்கு விருது வழங்கத் தகுதியில்லை என்று கூறி புறக்கணிக்கச் சொல்லலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Anand said...

Like, it.]]]

நன்றி ஆனந்த்..!

உண்மைத்தமிழன் said...

[[[அருணையடி said...

அருமையான பதிவு அண்ணே!]]]

நன்றி முருகா..!

உண்மைத்தமிழன் said...

[[[immie said...
sirathaur sombu naki unmai tamilan ha ha]]]

உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[sakthistudycentre-கருன் said...
2 லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் ,
நமக்கென்ன என்றே அமைதி காத்தோம். ஈழத் தமிழர்களுக்குத்தான் ரெட்டை முகம் காட்டிவிட்டோம். தாய்த் தமிழக மீனவர்களுக்காவது, நிஜமான உணர்வைக் காட்டுவோம் #tnfisherman.

see,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html]]]

இந்த உணர்வோடுதான் நாம் இப்போது இணைந்திருக்கிறோம் நண்பரே..! உங்களுடைய ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[இரவு வானம் said...

வெட்கம், வேதனை :-(]]]

இவை இரண்டு கலந்ததுதான் தமிழக அரசு தமிழர்களுக்கு விளைவித்த துரோகம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Rajaraman said...
சொரணை கெட்ட, கையாலாகாத, கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்ட மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கு உங்களுடன்
சேர்ந்து என் கண்டனத்தையும் பத்தி செய்கிறேன்.]]]

ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி ராஜாராமன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[செ.சரவணக்குமார் said...
நம் மீனவ சொந்தங்களுக்காக இணைய நண்பர்கள் தொடங்கியிருக்கும் இந்த அறப் போராட்டத்தை இன்னும் உக்கிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.]]]

அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

இவர்கள் அனைவருமே பிணம் தின்னும் கழுகுகள். வாய் பிளந்திருக்கும் ஓநாய்கள். வஞ்சகம் செய்யும் நரிகள். சதி செய்யும் செய்யும் சகுனிகள். இவர்கள் மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால்
தமிழ்நாடு சுடுகாடு ஆகும். ரத்த ஆறு ஓடும். ஏழைகள் பட்டினியால் சாவார்கள். இது உறுதி.
மத்தியிலும், மாநிலத்திலும் நமது ஆட்சி, மக்கள் எப்படி மடிந்தால் நமக்கென்ன எனபது போல் இவர்கள் தேர்தல் தொகுதி உடன்பாடு பற்றி பேசுகிறார்கள். மானஸ்தன் திருமா, ராமதாஸ் எப்படி இதையெல்லாம் சகித்து கொண்டு வாய் திறக்காமல் இருக்கிறார்கள் என்பதே எங்களை போன்ற தமிழ் ஆவலர்களின் கேள்வி. ஒரு லட்சத்தி எலுவதயிரம் கோடி ஊழலை பற்றிகூட இந்த மானஸ்தர்கள் வாய் திறக்கவில்லை. இவர்களது கட்சிகாரர்களே இவர்களை தோற்கடிப்பார்கள ் வரும் தேர்தலில் எனபது உறுதி.]]]

உங்களது உறுதியான எண்ணம்தான் நிறைவேற வேண்டும் என்பது எனது ஆசை..!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தில் குமார் said...

http://thothavanda.blogspot.com/2011/01/blog-post_27.html

அண்ணே வணக்கம். நானும் சிங்களவனை விடாதே செத்து நம் மக்களடா என்று பதிவு எழுதி என்னுடைய எதிர்ப்பை ப்ளாகில் பதிவு பண்ணி விட்டேன். நானும் உங்கள் பக்கம், நாம் போராடுவோம். இந்த சுயநலமிக்க முதுகெலும்பில்லாத அரசை எதிர்த்து. நான் எப்பொழுதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன். அதுவும் உங்கள் ப்ளாகை படித்துதான்.. நானும் இது போல் நம் எண்ணத்தை பதிவிடுவோம் என்று தோன்றியதால்.]]]

வாங்க.. வாங்க செந்தில்.. உங்களது வரவு நல்வரவாகட்டும்.. முதல் பதிவே நாட்டு மக்களுக்குத் தேவையான ஒரு விஷயத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.. நன்றி.. நன்றி.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[பாரத்... பாரதி... said...
வேள்வி தீயாய் எங்கும் தீ பரவட்டும், ஆனால் நிரந்தரத் தீர்வை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். ஏனெனில் தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகம் நடத்தப்படக்கூடும்..]]]

அதற்கான வேலைகளைத்தான் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன..!

உண்மைத்தமிழன் said...

[[[பாரத்... பாரதி... said...
நிருபமா இலங்கை பயணம் # அந்தாளு குடுக்குற டீய குடிச்சுட்டு விஷயத்த பேசாமா வந்துராதீங்க # பிரணாப் மாதிரி. #tnfisherman #TNfisherman]]]

நீங்க எழுதியிருக்கிறதுதான் நடக்கப் போவுது..! அங்க போய் டீ குடிக்கிறதுக்கு நாகப்பட்டினத்துல ஜெயக்குமார் வீட்டுக்குப் போயே டீ குடிக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[..:: Mãstän ::.. said...
so sad no one taking action about this. let we join our hand, we can help ourself.]]]

வாருங்கள் மஸ்தான்.. கை கோர்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[San said...
Dear TT, Don't worry, Thatha is going to Delhi to meet Thiyaga Chudar Annai Sonya tomorrow. In a whiff of second the fishermen problem will be solved by these two non corrupt people of the world. As usual our makkal will vote for these non corrupt parties in the next election. Hope they will not discuss about Swiss Bank Accounts!!!]]]

ஹா.. ஹா.. நல்ல காமெடி.. கிண்டலில் ஜொலிக்கிறீர்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெரி ஈசானந்தன். said...
உண்மைத்தமிழா. நான் உன்னை நேசிக்கிறேன்.]]]

நானும்தான் நண்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெரி ஈசானந்தன். said...

//கட்டுரையை வாசித்த தி.மு.க.வைச் சேர்ந்த தோழர்கள் என்னிடம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.//

கடும் கண்டனம்னா..? வேற ஒன்னும் இல்லையில. எதும்னாலும் எங்ககிட்டயும் கொஞ்சம் சொல்லுங்கப்பு. சும்மா மதுரக்குள்ளையே போரடிக்குதுல.]]]

அவசியம்.. எலும்புல எதுனாச்சும் கோளாறாயிருச்சுன்னா உங்களைத்தான் கோர்த்துவிட கூப்பிடுவேன்.. மறக்காம வந்திருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

:( :(

இவங்கள எங்கண்ணா நம்புறது... வெறும் நம்பிக்கை தெரிவிக்கிறோம்-னு கிளம்பி வந்துடுவாய்ங்க..]]]

அதேதான் நடக்கப் போகுது கனகு..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை சரவணன் said...
தி.மு.க வின் தமிழ் பற்றினை இதைவிட தெளிவாக யாரும் கூறிட முடியாது. அதற்காக நாம் அ.தி.மு.கவை ஆதரிக்கவில்லை என்பதையும் தெளிவாகவும் கூறியுள்ளீர்கள். உயிரின் விலை தெரியவில்லை இவர்களுக்கு.]]]

நான் இதனை எழுதியதே தி.மு.க. அன்பர்களுக்காகத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[கிறுக்கன் said...
நம் மீனவ சொந்தங்களுக்காக இணைய நண்பர்கள் தொடங்கியிருக்கும் இந்த அறப் போராட்டத்தை இன்னும் உக்கிரமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்.]]]

இது உங்களைப் போன்றோரின் கைகளில்தான் இருக்கிறது கிறுக்கன்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

இனையப் புரட்சியைப் பார்த்து, ஒரு பதிவராகப் பெருமைப்படுகிறேன்.

---செங்கோவி
ஒன்றுபடுவோம் மீனவச் சகோதரனுக்காக.]]]

ஆதரவுக்கு நன்றி செங்கோவி.. நீங்களும் வந்து கலந்து கொள்ளுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தொடர்ந்து போராடுவோம்.]]]

இதைத்தான் நம்மால் செய்ய முடியும்..! வேறென்ன செய்வது..?

Vasagan said...

அனைத்து பதிவர்களே
நீங்கள் எல்லாம் சும்மா பதிவு எழுதி விட்டு மறந்து விடுவீர்கள் என்று அரசு எந்திரம் நினைக்கலாம். ஆனால் மக்களின் மௌனம் எரிமலை மாதரி வெடிக்கும் நாள் மிக அருகில் அன்று இருக்கு வோட்டு பொறிகிகளுக்கு தீபாவளி.

Samy said...

Rajapakse has many things for old enough Narayanan, Pranab and Nambiar and companies but nothing for Nirubama.

Boycott Kalaimamani titles.

Unite for our fishermen. Sathi

Arun Ambie said...

இது குறித்து நானும் என் வலைப்பூவில் ஒரு "கலைஞர் கடிதம்" எழுதியிருக்கிறேன் (http://ch-arunprabu.blogspot.com/2011/01/blog-post_28.html). நண்பர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து கொஞ்ச நாள் ஊருக்குப் போய் இருந்துவிட்டு வா என்றனர். குறை சொல்வோர் மீது வரும் கோபம் குறைகளின் மீது வருவதில்லை?

உண்மைத்தமிழன் said...

[[[Vasagan said...
அனைத்து பதிவர்களே, நீங்கள் எல்லாம் சும்மா பதிவு எழுதி விட்டு மறந்து விடுவீர்கள் என்று அரசு எந்திரம் நினைக்கலாம். ஆனால் மக்களின் மௌனம் எரிமலை மாதிரி வெடிக்கும் நாள் மிக அருகில்.. அன்று இருக்கு வோட்டுப் பொறுக்கிகளுக்கு தீபாவளி.]]]

அந்தத் தீபாவளி, வரவிருக்கும் தேர்தல் நாளன்று..!

உண்மைத்தமிழன் said...

[[[Samy said...
Rajapakse has many things for old enough Narayanan, Pranab and Nambiar and companies but nothing for Nirubama.
Boycott Kalaimamani titles. Unite for our fishermen. Sathi]]]

பரிந்துணர்வுக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...

இது குறித்து நானும் என் வலைப்பூவில் ஒரு "கலைஞர் கடிதம்" எழுதியிருக்கிறேன் (http://ch-arunprabu.blogspot.com/2011/01/blog-post_28.html). நண்பர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து கொஞ்ச நாள் ஊருக்குப் போய் இருந்துவிட்டு வா என்றனர். குறை சொல்வோர் மீது வரும் கோபம் குறைகளின் மீது வருவதில்லை?]]]

எல்லாம் பயம்தான். வேறில்லை. நாடு எப்படி போனால் எனக்கென்ன? நாம் நம் குடும்பத்தையும், வேலையையும் பார்ப்போம் என்கிறார்கள். இதுதான் 99 சதவிகித தமிழனின் மனநிலை..!

Kumar said...

Thanks for this wonderful posting and I have done my petition..

உண்மைத்தமிழன் said...

[[[Kumar said...
Thanks for this wonderful posting and I have done my petition..]]]

மிக்க நன்றி குமார். இன்னும் உங்களுக்குத் தெரிந்தவர்கள், நண்பர்களுக்கெல்லாம் இதனை அறிமுகப்படுத்துங்கள்..!

abeer ahmed said...

See who owns pedals2people.org or any other website:
http://whois.domaintasks.com/pedals2people.org

abeer ahmed said...

See who owns yu-tube.net or any other website.