சின்னத்திரை விருதுகள் - தேர்தல் நேரத்து ஸ்டண்ட்டா..?

27-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தொல்லைக்காட்சிகளின் மூலம் குடும்பத்தைப் பிரிக்கும் சீரியல்கள் என்று காட்டமாக விமர்சிக்கப்படும் சின்னத்திரை தொடர்கள் மற்றும் அதில் நடித்த நடிகர், நடிகையர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் விருதுகள் வழங்கப்படத் துவங்கின.

அந்த ஒரு வருடத்திற்குக் கொடுத்துவிட்டு பின்பு நான்கு வருட இடைவெளிக்குப் பின்பு இப்போதுதான் 2007 மற்றும் 2008-ம் ஆண்டுக்கான விருதுகளை தற்போதுதான் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை ரொம்பக் கஷ்டப்பட்டுத் தேடியலைய வேண்டாம்.. கண்ணை மூடிக் கொண்டு யோசித்தாலே தானாய் புரிந்துவிடும்..!

விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்ய முன்னாள் நீதிபதி மு.மருதமுத்து தலைமையில் இயக்குநர் விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிரியர் கண்மணி சுப்பு, தயாரிப்பாளர் டி.வி.சங்கர், சின்னத்திரை நடிகர் ராஜசேகர், தமிழ் வளர்ச்சி அற நிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தேர்வுக் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு 2007-ம் ஆண்டுக்காக 7 விண்ணப்பங்களும், 2008-ம் ஆண்டுக்காக 12 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. மொத்தம் 19 சின்னத்திரைத் தொடர்களை இந்தக் குழு பார்வையிட்டு விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்துள்ளது.

காலைல 10 மணிக்கு ஆரம்பிச்சு, ராத்திரி 11 மணிவரைக்கும் எல்லா சேனல்லேயும் மாத்தி, மாத்தி நம்மளை அழுக வைக்குறாங்களே.. ஆனா போட்டிக்குன்னு பார்த்தா 7 சீரியல்கள் மட்டும்தான் போட்டி போட்டிருக்கேன்னு விசாரிச்சேன்..!

தமிழக அரசு இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விதித்திருந்த சில நிபந்தனைகளால்தான் இத்தனைக் குறைவான சீரியல்கள் களத்தில் இருந்திருக்கின்றன.

Ø    அந்தந்த ஆண்டுகளில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை உள்ள காலத்தில் நெடுந்தொடர் மற்றும் வாரத்தொடர் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்பட்டிருக்க வேண்டும்.

Ø    அந்தந்த ஆண்டுகளில் தொடர் ஒளிபரப்பு ஆரம்பித்து முடியாத நிலையில், அத்தொடர் அந்தந்த ஆண்டுகளில் குறைந்தபட்சம் 130 பகுதிகள் ஒளிபரப்பாகியிருக்க வேண்டும்.

Ø    வாரத் தொடர் எனில், அந்தந்த ஆண்டில் குறைந்தபட்சம் 26 பகுதிகள் சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகி இருக்க வேண்டும்.

Ø    தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தொடர்கள் இத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது..

- இவைகள்தான் அந்த நிபந்தனைகள். 
இதன்படி பார்த்தால், ஒரு மாதத்தில் திங்கள் முதல் வெள்ளிவரை ஓட்டினாலே மாதத்திற்கு 20 அல்லது 21 எபிசோடுகள் வரும். இதுவே 130 எபிசோடுகள் எனில் ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 7 மாதங்களாவது இத்தொடர் தொடர்ந்து ஓட்டப்பட்டிருக்க வேண்டும்.

அதாவது இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமெனில் அத்தொடர் 2006-ம் ஆண்டில் ஜூன் மாதத்திற்கு முன்பு  துவக்கப்பட்டிருக்கவேண்டும். அல்லது 2005-ம் ஆண்டு துவக்கப்பட்டு 2006-ம் ஆண்டில் ஜூலை மாதம் வரையிலாவது ஓட்டப்பட்டிருக்க வேண்டும். இப்படி இருந்திருந்தால் மட்டுமே அத்தொடர், இந்த விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டிருக்க முடியும்.

2007-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி துவக்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சி இதில் போட்டியிட வாய்ப்பே இல்லை. நிச்சயமாக சன், ஜெயா, விஜய், ராஜ் டிவிக்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

இதில் ராஜ் டிவி மற்றும் விஜய் டிவிக்களின் பங்களிப்பு என்னவாக இருந்திருக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில் இந்த டிவிக்களில் சீரியல்கள் திங்கள் முதல் வியாழன்வரைதான். அது வாரத்துக்கு 4 நாட்கள் என்று கணக்கிட்டால் மாதத்திற்கு அதிகப்பட்சம் 16 அல்லது 17 எபிசோடுகள்தான் வந்திருக்கும்.

தொடர்ச்சியாக ஒரு ஆண்டில் 130 எபிசோடுகள் வரக்கூடிய அளவுக்கு ராஜ் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பானதா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.  ஆனால் விஜய் மற்றும் ராஜ் டிவியிலிருந்து எந்த சீரியல்களும் போட்டிக்கு அனுப்பப்படவில்லை. மிச்சம் இருந்தது சன் டிவியும், ஜெயா டிவியும்..

இதில் சன் டிவியின் சார்பாக 6 தொடர்களும், ஜெயா டிவியின் சார்பில் 1 தொடரும் போட்டியில் கலந்து கொண்டுள்ளன. இந்த 7 தொடர்களுக்குமே ஏதோ ஒரு வகையில் பரிசுகள் கிடைத்திருக்கின்றன என்பது சுவையான விஷயம். போட்டியே இல்லையே.. அப்புறமென்ன..?

2007-ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலைப் பாருங்கள் :

சிறந்த நெடுந்தொடர் முதல் பரிசு : கோலங்கள் (விகடன் டெலிவிஸ்டாஸ்) ரூ 2 லட்சம் ரொக்கம்.

சிறந்த நெடுந்தொடர் இரண்டாம் பரிசு : லட்சுமி (ஹோம் மூவி மேக்கர்ஸ்) 1 லட்சம் ரொக்கம்.

சிறந்த சாதனையாளர் விருதைப் பெறுபவர் நடிகை ராதிகா -பரிசு 1 லட்சம் ரொக்கம்.

2007-ம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுபவர் - நடிகர் வி.எஸ்.ராகவன் - பரிசு 1 லட்சம் ரொக்கம்.

அதேபோல் இவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

சிறந்த கதாநாயகன் : விஜய் ஆதிராஜ் (லட்சுமி)

சிறந்த கதாநாயகி : தேவயானி (கோலங்கள்).

சிறந்த குணச்சித்திர நடிகர் : பிருத்விராஜ் (அரசி).

சிறந்த குணச்சித்திர நடிகை : சத்யபிரியா (கோலங்கள்).

சிறந்த வில்லன் நடிகர் : ராஜ்காந்த் (மேகலா).

சிறந்த வில்லி நடிகை : நளினி (பந்தம்).

சிறந்த குழந்தை நட்சத்திரம் : நிவேதா (அரசி).

சிறந்த இயக்குனர் : சுந்தர் கே.விஜயன் (லட்சுமி).

சிறந்த கதையாசிரியர் : அறிவானந்தம் (அகமும் புறமும்).

சிறந்த திரைக்கதை ஆசிரியர் : முத்துசெல்வம் (மேகலா).

சிறந்த உரையாடல் ஆசிரியர் : பாஸ்கர் சக்தி (மேகலா).

சிறந்த ஒளிப்பதிவாளர் : வசீகரன் (அரசி).

சிறந்த படத் தொகுப்பாளர் : ரமேஷ் (அரசி).

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : ரேகான் (பந்தம்).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்(ஆண்) : மதி (லட்சுமி).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்(பெண்) :  நித்யா (பாசம்).

விருதுகள் பெறும் இவர்கள் அனைவருக்கும் 3 பவுன் தங்க பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

'கோலங்கள்', 'லட்சுமி', 'அரசி', 'மேகலா', 'பந்தம்', 'பாசம்' - இவை அனைத்துமே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானவைதான். 'அகமும் புறமும்' சீரியல் மட்டுமே ஜெயா தொலைக்காட்சி. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற ரீதியில் 'சிறந்த கதை'க்கான விருதினை ஜெயா டிவி தட்டிச் சென்றுள்ளது ஆச்சரியமானது.

பழம்பெரும் நடிகர் திரு.வி.எஸ்.ராகவனுக்குக் கொடுத்த விருது நிச்சயம் ஏற்கப்பட வேண்டியது. இந்த மனிதரைப் பற்றி நான் தனியாக பதிவு எழுத வேண்டும். இந்த வயதிலும் என்னவொரு டெடிகேஷனோடு இவர் நடிக்கிறார் என்பதை இவருடன் இணைந்து நடித்தவர்களிடத்திலும், இயக்கியவர்களிடத்திலும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். விருதுக்குரிய தேர்வு இவரே..!

இதேபோல் 2008-ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலையும் பாருங்கள் :

சிறந்த நெடுந்தொடர் முதல் பரிசு : ஆனந்தம் (சத்யஜோதி பிலிம்ஸ்) ரூ.2 லட்சம் ரொக்கம்.

சிறந்த நெடுந்தொடர் - இரண்டாம் பரிசு : நம்ம குடும்பம் (எவர் ஸ்மைல் என்டர்பிரைசஸ்) 1 லட்சம் ரொக்கம்.
சிறந்த சாதனையாளர் : வ.கவுதமன் ரூ1 லட்சம் ரொக்கம்.

வாழ்நாள் சாதனையாளர் : ஒய்.ஜி.மகேந்திரா 1 லட்சம் ரொக்கம்.

அதே போல், ரொக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

சிறந்த கதாநாயகன் : சஞ்சீவ் (திருமதி செல்வம்).

சிறந்த கதாநாயகி : சுகன்யா (ஆனந்தம்).

சிறந்த குணச்சித்திர நடிகர் : மோகன் வி.ராமன்(வைர நெஞ்சம்).

சிறந்த குணச்சித்திர நடிகை : அனுராதா கிருஷ்ணமூர்த்தி(அரசி).

சிறந்த வில்லன் நடிகர் : சாக்ஷிசிவா (நம்ம குடும்பம்).


சிறந்த வில்லி நடிகை : மாளவிகா (அரசி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் மோனிகா (ஆனந்தம்).

சிறந்த இயக்குநர் : செய்யாறு ரவி (ஆனந்தம்).

சிறந்த கதையாசிரியர் : குமரன் (திருமதி செல்வம்).

சிறந்த திரைக்கதை ஆசிரியர் : அமிர்தராஜ் மற்றும் அமல்ராஜ் (திருமதி செல்வம்).

சிறந்த உரையாடல் ஆசிரியர்  : லியாகத் அலிகான் (அரசி).

சிறந்த ஒளிப்பதிவாளர் : அசோக்ராஜன் (சிவசக்தி).

சிறந்த படத் தொகுப்பாளர் : ராஜீ (மேகலா).

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : ஆதித்யன் (சந்தனக்காடு).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்(ஆண்) : சங்கர் (பந்தம்).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்(பெண்) : அனுராதா (தவம்).

விருதுகள் பெறும் இவர்கள் அனைவருக்கும் 3 பவுன் தங்க பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

2008-ம் ஆண்டுக்கான போட்டியில் கலந்து கொண்ட 12 சீரியல்களுமே ஏதேனும் ஒரு விருதினைப் பெற்றிருக்கின்றன.

2007-ம் வருடம் ஜூன் 3-ம் தேதியன்று உதயமான கலைஞர் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் இந்தாண்டுக்கான போட்டியில் கலந்து கொண்டுள்ளன. கூடவே மக்கள் தொலைக்காட்சியின் புகழ் பெற்ற சீரியலான சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையைச் சொன்ன 'சந்தனக்காடு' சீரியலும் போட்டியிட்டுள்ளது.

2008-ல் வெற்றி பெற்றிருக்கும் 'ஆனந்தம்', 'மேகலா', 'திருமதி செல்வம்', 'பந்தம்', 'அரசி', 'சிவசக்தி' ஆகியவை சன் தொலைக்காட்சியின் சீரியல்கள்.

'நம்ம குடும்பம்', 'தவம்', 'வைரநெஞ்சம்' ஆகியவை கலைஞர் தொலைக்காட்சியின் சீரியல்கள். ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என்ற ரீதியில் போட்டியிட்ட 'சந்தனக்காடு' சீரியலுக்கும் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது.

தேர்வு செய்யப்பட்டிருக்கும் அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!

அதே சமயத்தில் முந்தைய ஆண்டுகளில் போட்டியிட்ட சீரியல்களை அடுத்த ஆண்டில் விலக்கி வைப்பது நியாயமானது என்று நினைக்கிறேன்.

ஏனெனில் 2007-ம் ஆண்டில் சில விருதுகளில் பரிசுகளை வென்ற 'பந்தம்', 'அரசி', 'மேகலா' போன்றவைகள் 2008-ம் ஆண்டிலும் வேறு சில பிரிவுகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்தந்த ஆண்டுகளில்தான் போட்டி என்றாலும், ஏற்கெனவே கலந்து கொண்டதால் அவர்களை அடுத்தாண்டில் நீக்கிவிட்டால், புதிய ஆண்டில் புதிய சீரியல்களுக்கு நிறைய விருதுகள் கிடைக்க வாய்ப்பு கிடைக்கும்..!

130 எபிசோடுகள் விதிமுறையே சன் டிவியுடன் கலைஞர் தொலைக்காட்சியின் சீரியல்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற காரணமாகவே வைக்கப்பட்டதாக சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசு பேசுகிறார்கள்.

2007 ஜூன் 3 துவங்கி, டிசம்பர் 31-ம் தேதிக்குள் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தொடர்களின் எண்ணிக்கை தோராயமாக 138 நாட்கள் வரும் என்கிறார்கள். இதனால்தான் 130 எபிசோடு விதிமுறை வந்ததாகச் செய்தி.

அதேபோல் 130 எபிசோடுகள் என்பதையும் குறைத்து 80 எபிசோடுகள் என்று வைத்துக் கொண்டால் மற்ற சிறிய டிவிக்களின் சீரியல்களும் இதில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்..! அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..? இப்படி மறைமுகமாக அவர்களைத் தடை செய்திருப்பது ஒரு வகையில் இப்போதும் முன்னணியில் இருக்கும் சன், மற்றும் கலைஞர் டி.வி.க்களின் செல்வாக்கை உயர்த்தவே உதவும்..! இது நிச்சயம் ஜனநாயகமானதல்ல..!

ராஜ், விஜய், மக்கள் டிவி மற்றும், தற்போது களத்தில் குதித்திருக்கும் வசந்த், மெகா டிவிக்களுக்கும், சன் டிவிக்கும் விளம்பர கட்டணத்தில் ஏணி வைத்தால்கூட எட்டாது. அந்த வகையில் அவர்களால் சன், கலைஞர் அளவுக்கு 130 எபிசோடுகளாக 8 மாதங்கள் தாக்குப் பிடிக்கும்வகையில் சீரியல்களை ஓட்ட முடிவதில்லை.

மிகச் சிறந்த இயக்குநர்களும், மிகச் சிறந்த நடிகர்களும், மிகச் சிறந்த கதை ஆசிரியர்களும் இப்போது நிறையவே சம்பளம் கேட்பதால் இவர்கள் இந்த சிறிய டிவிக்களின் சீரியல்களில் பணியாற்றவும் முடியாது. அப்படியிருக்கும்போது அவர்களால் தங்களது தரத்துக்கேற்றாற்போலத்தான் சீரியல்களைத் தர முடியும். அவற்றை சன் டிவி  சீரியல்களுடன் போட்டியிட வைப்பது நியாயமாகாது.

ஆனால் பொதுவானது அதுவே என்றால், முந்தைய ஆண்டில் விருது பெற்றவைகளை கழித்தாலாவாவது, புதிய ஆண்டில் சிறிய டி.வி.க்களின் சீரியல்கள் சில பரிசுகளை வெல்ல வாய்ப்பு கிடைக்கும்..! இதனை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கமும், கூட்டமைப்பும் கவனத்தில் கொண்டால் நல்லது..!

தாத்தா நல்லதுதானே செய்திருக்கிறார்.. இதில் என்ன அரசியல் ஸ்டண்ட் என்கிறார்களா..? இருக்கே..! என்னடா இது.. திடீரென்று தேர்தல் வரவிருக்கும் கடைசி நேரத்தில் இப்படியொரு அறிவிப்பு வெளி வருகிறதே என்று யோசித்த நேரத்தில் இன்னொன்றும் ஞாபகத்திற்கு வந்தது..!

கடந்த 23-ம் தேதிதான் 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளுக்குரிய  சின்னத்திரை விருதுகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்திட அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் பிப்ரவரி 18-ம் தேதி என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்த அறிவிப்பு வெளியான இரண்டு நாட்கள் இடைவெளியில் முந்தைய இரு ஆண்டுகளுக்கான விருதுகளைப் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. யோசித்துப் பார்த்தால் சநதேகமேயில்லாமல் இதில் இருக்கும் அரசியல் தெரிகிறது.

2007 விருதுகளை 2008-ம் ஆண்டிலும், 2008-ம் ஆண்டுக்குரிய விருதுகளை 2009-ம் ஆண்டிலும், 2009-க்குரிய விருதுகளை 2010-ம் ஆண்டிலும் கொடுத்து முடித்திருந்தால் நிச்சயம் இந்த அரசு, விருதுகளை உண்மையான அக்கறையோடு வழங்கி வருகிறது என்று சொல்லியிருப்பேன்.

ஆனால் கடமைக்கே என்று முதல் வருடம் மட்டும் கொடுத்துவிட்டு அனைத்தையும் சேர்த்து வைத்து தேர்தல் சமயத்தில் கொடுக்க நினைப்பது தங்களின் அரசியல் லாபத்திற்கு இதனைப் பயன்படுத்தும் எண்ணத்தில்தான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை..!

2007-2008 விருதுகள் வழங்கும் விழா மார்ச் மாதத் துவக்கத்தில் கலைஞர் டிவியில் தாத்தாவுக்கு பாராட்டு விழாவாகவும் உருவெடுத்து தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவப் போகிறது என்று நினைக்கிறேன்.

இன்னும் 2009 மற்றும் 2010-ம் ஆண்டுக்குரிய விருதுகள்கூட விரைவாக ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத் துவக்கத்திலோ இன்னுமொரு விழாவாக வைக்கப்படலாம். யார் கண்டது..?

இந்த நேரத்தில் ஒரு சின்ன விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. 2010-ம் ஆண்டுக்கான சிறந்த சீரியல்கள் போட்டியில் 'எங்கே பிராமணன்' போட்டியிட்டுச் சிறந்த கதையாகத் தேர்வு செய்யப்பட்டுவிட்டால்(அப்படியொன்று நடந்தால் மட்டுமே..!) தேர்தல் நேரத்தில் சோ-வுடன் முதல்வர் மேடையில் நிற்க வேண்டி வந்து.. ஒரு காமெடி நடக்க வாய்ப்புண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

தாத்தாவின் ஒவ்வொரு ஸ்டெப்பையும் நாங்க உத்து உத்துப் பார்ப்போமாக்கும்..!! எங்களுக்கா தெரியாது அவரைப் பத்தி..? தாத்தா.. நீ இன்றைய சாணியடிக்கிற அரசியல்ல சாணி தட்டுறதுல சாணக்கியன்யா..! இந்த ஒரு விஷயம்தான் எனக்கு உன்கிட்ட ரொம்ப, ரொம்பப் புடிச்சது. எவ்ளோ பிரச்சினை வந்தாலும் தப்பிக்கிறதுக்கு எல்லா வழியையும் தேடிப் பிடிச்சு ஓடுற பாரு..? அரசியல்ல நீயொரு கில்லி..! உன் அளவுக்கு தில்லாலங்கடி செய்யத் தெரியாதவங்கதான் இப்ப உனக்கு அரசியல் எதிரிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் உன்னோட பலமே..! ஜமாய் தாத்தா ஜமாய்..!

(டிஸ்கி : தாத்தாவின் இன்னொரு ‘கில்லி’ வேலை, நாளைய பதிவில்..!)

30 comments:

Rajaraman said...

\\நீ இன்றைய சாணியடிக்கிற அரசியல்ல சாணி தட்டுறதுல சாணக்கியன்யா..!//

தமிழ்நாட்டில் இந்த கேவலமான அரசியல் கலாசாரத்தை ஆரம்பித்து வைத்ததே இந்த புண்ணிவான் தானே. இந்தாள் அளவுக்கு கீழே இறங்கி தரங்கெட்ட அரசியல் செய்ய இந்தியாவில் இன்னும் யாரும் உதிக்கவில்லை.

Raju said...

\\தேர்தல் நேரத்தில் சோ-வுடன் முதல்வர் மேடையில்\\

ஒரு சின்ன திருத்தம்!
சோ-வுடன் முதல்வர் அல்ல; முதல்வருடன் சோ என்றிருக்க வேண்டும்.

ரிஷி said...

சே..! மூணாவது பின்னூட்டமாப் போச்சே! எனக்கு வடை இல்லையா!!

கானா பிரபா said...

அண்ணே

இதென்ன சன் டிவி வழங்கும் விருதுகளா?

Indian Share Market said...

சார், உண்மையாகவே சொல்றேன் நாட்ல யார் யாரையோ சூப்பர் சடார்னு சொல்றாங்க. ஆனா நீங்க தான் உண்மையான சூப்பர் ஸ்டார் சார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே சீரியல் சீரியல்னு சொல்றீங்களே அப்டின்னா என்ன? சீரியல் செட்டா?

உண்மைத்தமிழன் said...

[[[Rajaraman said...

\\நீ இன்றைய சாணியடிக்கிற அரசியல்ல சாணி தட்டுறதுல சாணக்கியன்யா..!//

தமிழ்நாட்டில் இந்த கேவலமான அரசியல் கலாசாரத்தை ஆரம்பித்து வைத்ததே இந்த புண்ணிவான்தானே. இந்தாள் அளவுக்கு கீழே இறங்கி தரங்கெட்ட அரசியல் செய்ய இந்தியாவில் இன்னும் யாரும் உதிக்கவில்லை.]]]

இனியும் உதிக்கப் போவதுமில்லை..! இந்தச் சரித்திரச் சாதனையின் ஒரே சொந்தக்காரர் நம்ம தாத்தாதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[♠ ராஜு ♠ said...

\\தேர்தல் நேரத்தில் சோ-வுடன் முதல்வர் மேடையில்\\

ஒரு சின்ன திருத்தம்! சோ-வுடன் முதல்வர் அல்ல; முதல்வருடன் சோ என்றிருக்க வேண்டும்.]]]

தகவலுக்கு நன்றி ராஜூ..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
சே..! மூணாவது பின்னூட்டமாப் போச்சே! எனக்கு வடை இல்லையா!!]]]

விடுங்க. அடுத்த பதிவுல பார்த்துக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[கானா பிரபா said...

அண்ணே.. இதென்ன சன் டிவி வழங்கும் விருதுகளா?]]]

சன் டிவிக்கு வழங்கும் விருதுகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

சார், உண்மையாகவே சொல்றேன் நாட்ல யார் யாரையோ சூப்பர் சடார்னு சொல்றாங்க. ஆனா நீங்கதான் உண்மையான சூப்பர் ஸ்டார் சார்.]]]

ரொம்பப் புகழ்றீங்க..? என் அளவுக்கு வலையுலகத்துல வேலை வெட்டி இல்லாத வெட்டி ஆபீஸர் யார் இருக்கா..? சொல்லுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே சீரியல் சீரியல்னு சொல்றீங்களே அப்டின்னா என்ன? சீரியல் செட்டா?]]]

இல்லை.. சீரியல் லைட்டு..!

bandhu said...

சீரியல் என்ற கொடுமை அழிக்கறது போதாதுன்னு அதுக்கு அவார்டு வேறயா? அதுவும் கோலங்கள், அரசின்னு எப்போ பார்த்தாலும் ஒரே மாதிரி அழுதுட்டு இருக்கற சீரியலுங்கலுக்கு அவார்டு கொடுக்கும் கொடுமை நம்ப ஊர்லதான் நடக்கும்! எவன் வீட்டு காசு? இவனுங்களுக்கெல்லாம் அவார்டு கொடுக்கற அளவு என்ன இருக்கு சீரியலுங்களில? இதையெல்லாம் ப்ரொமோட் வேற பண்ணனமா?

அநியாயம்! உலகமே ஒரு திசைல முன்னேறிட்டு இருந்தா நாம அதுக்கு எதிரான திசைல வேகமா பின்னேறிட்டு இருக்கோம்!

Anonymous said...

>>> சீரியல் ஓடும் சேனல் பக்கம் எப்போது சென்றாலும் ஏதோ ஒரு பெண் கோபமாக பன்ச் டயலாக் பேசுகிறாள். சும்மா நடந்தால் கூட பீதியை கிளப்புகிற மாதிரி பின்னணி இசை வேறு போட்டு கிச்சு கிச்சு மூட்றாங்க சார். நமக்கு சரிப்படாது. மத்தவங்க என்சாய். என்சாய்.

உண்மைத்தமிழன் said...

[[[bandhu said...
சீரியல் என்ற கொடுமை அழிக்கறது போதாதுன்னு அதுக்கு அவார்டு வேறயா? அதுவும் கோலங்கள், அரசின்னு எப்போ பார்த்தாலும் ஒரே மாதிரி அழுதுட்டு இருக்கற சீரியலுங்கலுக்கு அவார்டு கொடுக்கும் கொடுமை நம்ப ஊர்லதான் நடக்கும்! எவன் வீட்டு காசு? இவனுங்களுக்கெல்லாம் அவார்டு கொடுக்கற அளவு என்ன இருக்கு சீரியலுங்களில? இதையெல்லாம் ப்ரொமோட் வேற பண்ணனமா?
அநியாயம்! உலகமே ஒரு திசைல முன்னேறிட்டு இருந்தா நாம அதுக்கு எதிரான திசைல வேகமா பின்னேறிட்டு இருக்கோம்!]]]

பந்து ஸார்..!

உங்களது கோபத்தில் கொஞ்சூண்டு நியாயம் இருக்கத்தான் செய்கிறது..! ஆனால் அதே சமயம் அதுவும் சமூகத்தில் ஒரு அங்கம்.. வேலை வாய்ப்பு தரும் அமைப்பு.. மக்களுக்கு மன ஓய்வைத் தரும் நிகழ்வுகளாக பாவியுங்கள்..!

இதில் கண்ணுக்குக் கண் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்..! என்ஜாய் பண்றவங்க பண்ணட்டுமே..?

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...
>>> சீரியல் ஓடும் சேனல் பக்கம் எப்போது சென்றாலும் ஏதோ ஒரு பெண் கோபமாக பன்ச் டயலாக் பேசுகிறாள். சும்மா நடந்தால்கூட பீதியை கிளப்புகிற மாதிரி பின்னணி இசை வேறு போட்டு கிச்சு கிச்சு மூட்றாங்க சார். நமக்கு சரிப்படாது. மத்தவங்க என்சாய். என்சாய்.]]]

நன்றி சிவா ஸார்..! பார்க்குறவங்க பார்த்துட்டுப் போகட்டும்..!

Sankar Gurusamy said...

Yes. It really looks like political stunt to invite parties to make one more Paaraattuvuzha... :-(

Kalaingar Rocks....


http://anubhudhi.blogspot.com/

குரங்குபெடல் said...

அகமும் புறமும்' சீரியல்
ஒளிபரப்பானது மக்கள் தொலைக்காட்சியில் . . .


நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

களிங்கர் ஜீ வால்க......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பாடா இன்னிக்கு யாரும் மைனஸ் ஓட்டுப் போடல (இதுவரைக்கும்...!)

உண்மைத்தமிழன் said...

[[[சங்கர் குருசாமி said...

Yes. It really looks like political stunt to invite parties to make one more Paaraattuvuzha... :-(

Kalaingar Rocks....

http://anubhudhi.blogspot.com/]]]

அப்பாடா.. நீங்கள் ஒருத்தராவது ஒத்துக் கொண்டீர்களே.. மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[udhavi iyakkam said...

அகமும் புறமும்' சீரியல் ஒளிபரப்பானது மக்கள் தொலைக்காட்சியில் . . .

நன்றி]]

அட.. மிகப் பெரிய தவறாக இருக்கிறதே.. குழுவில் இருந்த ஒரு நண்பரிடம் கேட்டுத்தான் பதிவி்ட்டேன். விசாரித்து நீக்கி விடுகிறேன்..

நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

களிங்கர் ஜீ வால்க......!]]]

தமிழ் என்னமா வெளையாடுது தம்பிகிட்ட..?

Arun Ambie said...

ஏற்கனவே கை(மட்டுமா)நிறைய சம்பாதிக்கிற இவங்களுக்கு விருதுன்னு சான்றிதழ், கேடயம் மாதிரி கொடுத்தா போதாதா? லட்சக்கணக்குல ரொக்கம் வேற கொடுக்கணுமாக்கும்?

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்பாடா இன்னிக்கு யாரும் மைனஸ் ஓட்டுப் போடல (இதுவரைக்கும்...!)]]]

உன் வாய் முகூர்த்தம் இப்போதுவரையிலும் போடவில்லை. சந்தோஷம்தான். ஆனால் அதுக்காக பிளஸ் ஓட்டு கூடவா அதிகமாகக் குத்தக் கூடாது.. ரொம்ப ஓரவஞ்சனை பண்றீங்கப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...
ஏற்கனவே கை(மட்டுமா)நிறைய சம்பாதிக்கிற இவங்களுக்கு விருதுன்னு சான்றிதழ், கேடயம் மாதிரி கொடுத்தா போதாதா? லட்சக்கணக்குல ரொக்கம் வேற கொடுக்கணுமாக்கும்?]]]

இருப்பவர்கள் வாங்குகின்ற நேரத்தில், இல்லாதவர்களும் வாங்குகிறார்கள். அவர்களுக்குப் பயன்படட்டுமே..!?

R.Gopi said...

ஸ்பெக்ட்ரம்ல அடிச்ச அமவுண்டுக்கு ஏதாவது “கின்னஸ்” விருது இருக்கா தலைவா?

உலகத்தின் அனைத்து விருதுகளும் எனக்கேன்னு “தல” சொல்லுவாரே. அதான், இந்த விருதும் கிடைக்குமேன்னு சொன்னேன்...

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...
ஸ்பெக்ட்ரம்ல அடிச்ச அமவுண்டுக்கு ஏதாவது “கின்னஸ்” விருது இருக்கா தலைவா? உலகத்தின் அனைத்து விருதுகளும் எனக்கேன்னு “தல” சொல்லுவாரே. அதான், இந்த விருதும் கிடைக்குமேன்னு சொன்னேன்...]]]

உலகத்தின் தலை சிறந்த ஊழல்வாதி என்ற விருதை நாம் அவருக்கு வழங்கிவிடுவோம்..!

abeer ahmed said...

See who owns investmentpropertiesinfo.com or any other website:
http://whois.domaintasks.com/investmentpropertiesinfo.com

abeer ahmed said...

See who owns arabo.com or any other website.