கார்லாவின் பதிபக்தி..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று காலை பதிவிட்ட இந்தப் பதிவை தமிழ்மணம் ஏனோ சண்டித்தனம் செய்து வெளியிட மறுத்துவிட்டது. அதனால்தான் மீண்டும் இந்த அறிமுகப் பதிவு.

கோபித்துக் கொள்ளாமல் கீழேயுள்ள லின்க்கை கிளிக் செய்து பதிவிற்குச் செல்லவும்..!

கார்லாவின் பதிபக்தி..!

வலையுலக வாசகர் கேட்ட திகிலான கேள்வி..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று காலை பதிவிட்ட இந்தப் பதிவை தமிழ்மணம் ஏனோ சண்டித்தனம் செய்து வெளியிட மறுத்துவிட்டது. அதனால்தான் மீண்டும் இந்த அறிமுகப் பதிவு.

கோபித்துக் கொள்ளாமல் கீழேயுள்ள லின்க்கை கிளிக் செய்து பதிவிற்குச் செல்லவும்..!

கலக்கலான இரவு நேர மேடை நடனம்...!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று காலை பதிவிட்ட இந்தப் பதிவை தமிழ்மணம் ஏனோ சண்டித்தனம் செய்து வெளியிட மறுத்துவிட்டது. அதனால்தான் மீண்டும் இந்த அறிமுகப் பதிவு.

கோபித்துக் கொள்ளாமல் கீழேயுள்ள லின்க்கை கிளிக் செய்து பதிவிற்குச் செல்லவும்..!

தினமலரின் திடீர் தி.மு.க. ஆதரவு..! காரணம் என்ன..?

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று காலை பதிவிட்ட இந்தப் பதிவை தமிழ்மணம் ஏனோ சண்டித்தனம் செய்து வெளியிட மறுத்துவிட்டது. அதனால்தான் மீண்டும் இந்த அறிமுகப் பதிவு.

கோபித்துக் கொள்ளாமல் கீழேயுள்ள லின்க்கை கிளிக் செய்து பதிவிற்குச் செல்லவும்..!

தினமலரின் திடீர் தி.மு.க. ஆதரவு..! காரணம் என்ன..?

திரைப்படத்தின் விளம்பரத்திற்கு இப்படியும் ஒரு வழியா..?

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு திரைப்படம் தோல்வியடையும் என்பதும், வெற்றியடையும் என்பதையும் அத்திரைப்படத்தின் வெளியிட்டீற்கு முன்பாக அத்திரைப்படத்தில் பணியாற்றியவர்களே கண்டறியலாம். ஏனெனில் அவர்களே திரையுலக ரசிகர்கள்தான்.

"ஓடிரும்.. அட்டர் பிளாப்.. கவுத்திருச்சு.. சுத்தமா காலி.. கொஞ்சம் துண்டு விழுந்திருச்சு.. ஒண்ணும் தேறலை.. தலை தப்பிருச்சு.. கர்ணம் அடிச்சு பொழைச்சேன்.. ஏதோ கைக்கு வந்திருக்கு.. கையைக் கடிக்காது.. மினிமம் கியாரண்டி.. பத்துக்கு ஒன்பது நிச்சயம் வந்திரும்.. பொட்டிக்கு ஒண்ணு லாபம்.. பொட்டிக்கு மேல வந்திருச்சு.." -- இதுவெல்லாம் திரைப்பட உலக விநியோகஸ்தர்கள் சங்கம் இருக்கும் மீரான் சாயுபு தெருவின் மொக்கு டீக்கடையில் தினமும் பேசக்கூடிய பேச்சுக்கள்.

இதே போன்று ஒரு நடிகரும், தயாரிப்பாளருமே தோல்வியை எதிர்பார்த்தே படத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால் படத்தை திரையிட்ட முதல் நாளே அதனை எதிர்கொண்டதுதான் எனக்கு ஆச்சரியம்.

'ஐந்தாம்படை' ரிலீஸின்போதுதான் 'மலையன்' திரைப்படமும் ரிலீஸானது. முதல் காட்சியில் 'ஐந்தாம்படை'க்கு ஆவரேஜாக கூட்டம் சேர்ந்திருந்தது. 'மலையனு'க்கு கூட்டமே இல்லை. ஒரு ஐந்து அல்லது ஆறு பேர்தான் உதயம் தியேட்டரில் கியூவில் நின்றிருந்தார்கள்.


அப்போது 5, 6 இளம்பெண்கள் கூட்டமாக அங்கே வந்தார்கள். அனைவரையும் நோட்டம் பார்த்தார்கள். நான்கூட படம் பார்க்க வந்தவர்கள் என்றுதான் நினைத்தேன். டிக்கெட் கொடுக்கத் துவங்கிய நிமிடத்தில் தங்களது சேலைகளுக்கு மேலே ஒரு பனியனை அணிந்தார்கள் அந்தப் பெண்கள். அந்தப் பனியனில் முன்புறம் நடிகர் கரணின் புகைப்படமும், பின்பக்கம் அவரது ரசிகர் மன்றம் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.

அவர்களது கையில் சில நோட்டீஸ்கள் இருந்தது. தியேட்டருக்கு உள்ளே வருபவர்களை வழிமறித்து, அவர்கள் கையில் அந்த நோட்டீஸ்களைத் திணித்து அதில் நடிகர் கரண் பற்றி கேட்கப்பட்டிருக்கும் ஐந்து கேள்விகளுக்கு மிகச் சரியாகப் பதில் சொன்னால் 'மலையன்' படத்தின் ஹைகிளாஸ் டிக்கெட்டை இலவசமாகத் தருவதாகச் சொல்ல.. கியூவில் நின்ற கொஞ்ச நஞ்ச கூட்டமும் மறைந்து போய் இவர்களைச் சூழ்ந்து கொண்டது.

அந்த நோட்டீஸில் கரணின் திரையுலக வாழ்க்கையைப் பற்றிய சுமாரான மிக எளிமையான ஐந்து கேள்விகளை கேட்டிருந்தார்கள். பதில் தெரியாதவர்கள் சும்மா நின்று வேடிக்கை பார்த்தவர்களிடம் "உங்களுக்குத் தெரியுமா..? உங்களுக்குத் தெரியுமா?" என்று பலரையும் விரட்டி, விரட்டி கேட்டது செம ஜாலியாக இருந்தது.

வேறு படம் பார்க்க வந்தவர்கள்கூட இவர்களுடைய இலவச டிக்கெட்டை வாங்கிவிட்டு, ஏற்கெனவே வாங்கிய படத்தின் டிக்கெட்டை திருப்பிக் கொடுக்க கவுண்ட்டரில் மல்லு கட்டினர். எப்படியோ அந்த முதல் ஷோவில் மட்டும் 'மலையன்' படம் பாதி அரங்கு நிரம்பியது.


எதற்காக இந்த விளம்பரம் என்று விசாரித்தேன். தயாரிப்பு தரப்பிலும், நடிகரின் தரப்பிலும் படத்தை பார்த்துவிட்டு முன்பே உதட்டைப் பிதுக்கிவிட்டார்களாம். அதனால்தான் முதல் ஷோவிலேயே ரசிகர்களைப் படம் பார்க்கவைத்து, ஓப்பனிங்கிலேயே ரசிகர்களிடமிருந்து ஏதாவது நல்ல வார்த்தைகளை வரவழைக்கலாம் என்று எதிர்பார்த்து இப்படியொரு செட்டப் செய்தார்களாம்.

ஆனாலும் படம் பிளாப்புதான்..!

என்னதான் 'கம்' போட்டு ஒட்டினாலும் பிடிமானம் இல்லையெனில்..?

கிழக்கு வாசல் உதயம்..! புதிய இலக்கிய இதழ்..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான இலக்கிய இதழ்' என்று விளம்பரத்துடன் 'கிழக்கு வாசல் உதயம்' என்கிற மாதாந்திர இலக்கிய பத்திரிகை திருத்துறைப்பூண்டியில் இருந்து வெளிவருகிறது.

எழுத்தாளர் உத்தமசோழனை ஆசிரியராகக் கொண்ட இந்த இதழ் சமீபத்தில்தான் எனக்குக் கிடைக்கப் பெற்றது. உத்தமசோழனின் எழுத்துக்களை கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பாகத்தான் படிக்க நேர்ந்தது. அதில் ஏதோ ஒருவித ஈர்ப்பு இருந்தது. இன்னமும் இருக்கிறது.

அவருடைய 'கசக்கும் இனிமை' என்கிற சிறுகதை 'ஆயிரத்தில் ஒருவனும், நூறில் ஒருத்தியும்' என்கிற வித்தியாசமான தலைப்போடு மின்பிம்பங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ராஜ் டிவியின் மைக்ரோ தொடர்களில் ஒன்றாக திரையிடப்பட்டது. அந்தக் கதையை முழுவதுமாக தட்டச்சு செய்யும் பணி எனக்குக் கிட்டியதால் அப்போதே உத்தமச்சோழனின் இலக்கிய உலகம் எனக்குப் பரிச்சயமானது.

இந்த இதழில் சிறுகதை, கவிதை, சிகரம் தொட்ட கதை, இலக்கிய வீதி, பேட்டிகள், தொடர்கதை என்று பரந்துபட்ட விஷயத்தை மிக எளிமையான தமிழில் கொடுத்திருக்கிறார். ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம்.

விலை பதினைந்து ரூபாய். தொடர்புக்கு ஆசிரியர் உத்தமச்சோழன், செல்போன் எண் - 9443343292.


வளரட்டும் கிழக்கு வாசலின் படைப்பிலக்கியம்..!

எனது அயல்தேசக் கனவுக் கன்னிக்கு நேர்ந்த கொடுமை..!

29-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத்தின் விடலைப் பசங்களை ஜொள்ளுவிட வைத்த அயல்நாட்டு ஷகீலாவான ஷனோன் ட்வீட்டிற்கு சமீபத்தில் நடந்த ஒரு மூக்குடைப்பு, என்னைப் போன்ற அவரது தீவிர ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.



Shannon Tweed கனடாவில் பிறந்தவர். 52 வயசாச்சு. ஆனா பார்த்தா அப்படி தெரியாது.. 1977- கனடால ஒட்டாவா நகர் அழகிப் போட்டில நான்காவதாக வந்தவர் என்றாலும் ரசிகர்களின் மனதில் துண்டு போட்டு முதலிடம் பிடித்தவர். பிளேபாய் பத்திரிகையின் அட்டைப் படத்துக்கு போஸ் கொடுத்து உலகம் முழுவதும் தனது ரசிகர் மன்றங்களைத் துவக்கினார். அது இன்றைக்கு திண்டுக்கல் பக்கத்துல தெத்துப்பட்டின்ற ஊர்வரைக்கும் போய் சேர்ந்திருக்கு..

அம்மணி தனது 'திறமை'யைக் காட்டி நடித்த Cannibal Women in the Avocado Jungle of Death, Last Call, In the Cold of the Night, The Naked Truth, Night Eyes வரிசைப் படங்கள், Cold Sweat, Indecent Behavior, Possessed by the Night, Night Fire Indecent Behavior வரிசைப் படங்கள், The Dark Dancer, Victim of Desire, Illicit Dreams, Body Chemistry வரிசைப் படங்கள், Stormy Nights, Forbidden Sins, Naked Lies, Powerplay என்று இத்தனைப் படங்களும் ஓடாத தியேட்டர்கள் தமிழ்நாட்டில் இல்லை.

ஒரு காலத்தில் பரங்கிமலை ஜோதி தியேட்டரில் நான் ரெகுலர் பாஸ் வாங்கி வைத்திருந்த காலத்தில், அம்மணிதான் எனது இதய தெய்வம். பின்புதான் ஷகீலா வந்து பக்கத்தில் சீட்டு போட்டு உட்கார்ந்தார். ஆக முதல் தெய்வம் இந்த அம்மணிதான்.

தற்போது ஷனோன் லாஸ் ஏஞ்செல்ஸில் தனது நீண்ட நாளைய நண்பர் சிம்மன்ஸுடன் பல காலமாக சேர்ந்து வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்பும் திருமணம் செய்து கொள்ளப் பிடிக்காமல் சுதந்திர தேவியாக வாழ்ந்து வருகிறார்.


கனடாவில் பிறந்தவர் என்பதாலும் ஒட்டாவா நகரில் நான்கைந்து வருடங்கள் வாழ்ந்தவர் என்பதாலும் இந்த ஜூலை மாதத்தில் ஒரு நாளை ஷனோன் ட்வீட் நாளாக கொண்டாட அந்த நகரின் பொறுப்பு மேயர் அறிவிக்க அந்த ஊரிலேயே பிரச்சினை தீயாய் பற்றிக்கொண்டதாம்.

"அதெப்படி... எப்பவோ நாலு வருஷம் இருந்தவங்களுக்கு ஒரு நாளை அர்ப்பணிக்கலாம்..? அப்படியென்ன அந்தம்மா பெரிசா சேவை செஞ்சுட்டாங்க..? ஹோட்டல்ல நிர்வாண நடனம் ஆடுனவங்க.. பிளேபாய்க்கு போஸ் கொடுத்தவங்க.. காமப்படத்துல நடிச்சவங்க.. டூ மச்சு.. நமக்குத்தான் அசிங்கம்.."னு அந்த ஊர் நகர மன்றத்துல இருந்த கவுன்சிலர்கள் எல்லாரும் அடிச்சுக்காம, கொள்ளாம ரகளை செஞ்சதுல கடைசியா அந்த மேயர் கடைசி நிமிஷத்துல ஜகா வாங்கி, "ஸாரி.. ஷனோன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்"னு சொல்லிட்டாராம்..

என்ன கொடுமைங்க இது..?

இதெல்லாம் வேணும்னு சொல்லித்தான அந்த நாட்டுல அந்த கிளப்பு, ஹோட்டல் டான்ஸ், xxx படம்னு எல்லாத்தையும் அனுமதிச்சிருக்காங்க.. அப்புறம் எதுக்கு அந்தத் தொழில்ல இருக்கறவங்களை மரியாதை இல்லாதவங்கன்னு சொல்றாங்க.. ஒண்ணும் புரியலப்பா..

ஆனாலும் ஷனோன் இதை ரொம்ப கேஷுவலா எடுத்துக்கிட்டு அதே நாள்ல ஒட்டாவா நகருக்கு விஸிட் செஞ்சு, நகர மன்றத்துக்கு வந்து மேயரை சும்மா ஒரு மரியாதைக்கு பார்த்துட்டுத்தான் போனாங்களாம்.. நாகரிகம் தெரிந்தவர்னு சொல்லலாம்..

இருந்தாலும் அம்மணியின் தீவிர ரசிகன் என்கிற முறையில், எனக்கு இது மிகப் பெரும் அவமானத்தைத் தருகிறது. வேதனையைத் தருகிறது.. சொல்லண்ணா துயரத்தைத் தருகிறது..

எனது இதயத்தில் தனி இடத்தைப் பிடித்திருக்கும் ஷனோனுக்கு நேர்ந்த இந்த கொடுமையை நினைத்து என் நெஞ்சு தொடர்ந்து எரிந்து கொண்டேயிருப்பதால் இன்றைக்கு மட்டும் ஒரு புல் டக்கீலாவை ராவாக அடித்து மட்டையாகப் போகிறேன்..

வாழ்க ஷனோன் ட்வீட்..! வளர்க அவரது புகழ்..!!

ஒரு புகைப்படம் காட்டும் காதல் கவிதை..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திரைப்படங்களின் காதல் காட்சிகளை திரையில் பார்க்கும்போது நமக்கும் நம்மைப் பார்த்து கண் சிமிட்டுவதுபோல இருக்கும். ஆனால் புகைப்படங்களில் காண்பிக்கப்படும் காதல் காட்சிகளை பார்க்கின்றபோதே அதனுடைய செயற்கைத்தனம் நமக்குத் தெரிந்துவிடும் என்பதால் அவ்வளவு ஈர்ப்பு இருக்காது..

ஆனால் இந்தக் காட்சியைப் பாருங்கள்.. அப்படியா தெரிகிறது..?

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|






ஏதோ ஒண்ணு தெரியலை..

இதுதாங்க உண்மையான நடிப்பு..! பிரமாதம் போங்க..

எதற்கோ பழைய புகைப்படங்களை மேய்ந்து கொண்டிருந்தவன், இதனைப் பார்த்தவுடன் அப்படியே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று போய் மீண்டும், மீண்டும் பார்க்க வேண்டியதாகிவிட்டது..

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..!

எது மாதிரியும் இல்லாத புதுமையான காதல் கவிதை..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுவரையில் நான் படித்திராத புதிய பாணியிலானா காதல் கவிதை இது..!

இணையத்தில் சுட்டதுதான்..

தமிழில் தட்டச்சு செய்து வெளியிட்டது யார் என்று தெரியவில்லை. அன்னாருக்கு எனது கோடி நன்றிகள்..!

இமேஜை விரித்துப் படித்துப் பாருங்கள்..!

தர்மயுத்தம் -- வீணாகிப் போன இளையராஜாவின் தெய்வீக கானம்..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இசைஞானி இளையராஜாவின் தெய்வீகக் கானங்களில் ஒன்று 'தர்மயுத்தம்' திரைப்படத்தின் பாடலான 'ஆகாய கங்கை' பாடல். அந்தப் பாடலை தனிமையில் வெறும் பாடலாகக் கேட்கும்போதெல்லாம் மனதில் எதையோ செய்கிறது.

பாடலின் துவக்கத்தில் வரும் ஜானகியின் ஹம்மிங் வாய்ஸை கேட்டவுடன் அதற்குள் நம்மை ஈர்க்க வைக்கிறது. இவ்வளவு அருமையான பாடலை திரைப்படத்தில் பார்த்தபோது சப்பென்று இருந்தது.

ரேஸ்கோர்ஸ் மைதானத்திலேயே முழுக்க முழுக்க ஷூட் செய்யப்பட்டிருக்கும், இந்தப் பாடல் காட்சி பாடலின் தரத்தை வெகுவாகக் குறைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.சி.சக்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பாடல் பற்றிய எனது வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் சொன்ன விஷயம் திரைப்படத் துறையில் இருக்கும் சங்கடங்கள், சில விட்டுக் கொடுத்தல்கள், பிரச்சினைகள் பற்றி எனக்கு நிறையவே கற்றுக் கொடுத்தது.

இந்த ஒரு பாடலை மட்டும் விட்டுவிட்டு மற்ற போர்ஷன்கள் அனைத்தையும் முடித்துவிட்டாராம் சக்தி ஸார்.. இந்த ஒரு பாடலையும் முடித்துவிட்டால் போதும் என்கிற நிலை இருக்கும்போது ரஜினியும், ஸ்ரீதேவியும் மிக மிக பிஸியாக இருந்திருக்கிறார்கள். ஒருவர் டேட் கிடைத்தால் இன்னொருவரின் டேட் கிடைக்காமல் போகிறது. இப்படியே ஒரு மாதம் முழுக்க கண்ணாமூச்சி நடந்திருக்கிறது.

எப்படியோ இருவரிடமும் ப்ரீயான டேட்களைக் கேட்டபோது தொடர்ச்சியான இரண்டு, மூன்று நாட்கள் கிடைக்கவே இல்லையாம். சரி விட்டுவிட்டு எடுத்துவிடலாம் என்றெண்ணத்தில் பாடல் காட்சிகளை ஊட்டியில் எடுப்பதற்காக பிளான் செய்திருக்கிறார் சக்தி ஸார்..

ஆனால் அதற்குள்ளாக ஸ்ரீதேவிக்கு தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கின் போது காலில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் மாஞ்சா கட்டுபோட்டு படுத்துவிட்டாராம். ரஜினியை அந்தத் தேதியில் விட்டுவிட்டால் மீண்டும் ஒரு மாதம் கழித்துத்தான் பிடிக்க முடியும் என்ற நிலைமை வந்துவிட.. தயாரிப்பு தரப்பு சக்தி ஸாரை போட்டு நெருக்க.. என்ன செய்வது என்ற குழப்பமாகிவிட்டதாம்.

இதன் பின்புதான் ஷூட்டிங்கை ஒரே நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ரஜினியிடம் ஓகே வாங்கியிருக்கிறார். மருத்துவமனைக்கு சென்று ஸ்ரீதேவியிடமும், அவரது அம்மாவிடமும் பேசி "வேறு வழியில்லை. வந்தே தீரணும்.." என்று கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்தார்களாம்.

ஸ்ரீதேவியின் காலில் போட்டிருந்த மாவுகட்டு வெளியே தெரியக் கூடாது என்பதால் சேலை அணிவித்தும், அவரை உட்கார வைத்தும், ரஜினியால் தூக்க வைத்தும், ஸ்ரீதேவியின் சிற்சில சிங்கிள் ஷாட்டுகளையும் வைத்தும் பாடல் காட்சியை முடித்துவிட்டாராம் சக்தி ஸார்.

முழுக் கதையையும் சொல்லி முடித்துவிட்டு, "எனக்கும் அந்தப் பாடலை இப்படி அவசரக்கதியாக படமாக்கியதில் திருப்தியில்லைதான் தம்பி.. ஆனா வேறென்னெ செய்றது..? படத்தை சொன்ன தேதில ரிலீஸ் செஞ்சாகணும்.. தயாரிப்பாளரையும் பார்க்கணும்ல..?" என்றார் சக்தி ஸார்.

காவியமாக படைத்திருக்க வேண்டியது.. வியாபாரச் சூழலால் இப்படி கற்பிழந்து போனது..!!!

தினமலரின் திடீர் தி.மு.க. ஆதரவு..! காரணம் என்ன..?

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'பார்ப்பான் பத்திரிக்கை'.. 'அவாள்கள் பேப்பர்ஸ்'.. 'தினமலம்' என்றெல்லாம் இழித்தும், பழித்தும் பேசப்பட்டு வந்த 'தினமலர்' பத்திரிகையைப் பற்றி சமீபகாலமாக உடன்பிறப்புகள் அதிகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே.. என்ன விஷயம் என்று பார்த்தால்.. 'கவுத்துட்டோம்ல' என்று கையை விரித்து கடவாய்ப்பல்வரைக்கும் வாயைப் பொளந்து சிரிக்கிறார்கள் எதற்கும் அஞ்சாத உடன்பிறப்புக்கள்.

அந்தப் பத்திரிகையின் குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பாகப்பிரிவினை, பங்காளி சண்டைகள்.. நீதிமன்ற வழக்குகள் என்று பலவற்றாலும் பத்திரிகையின் நிறம் இப்போது அடியோடு மாறிவிட்டதாக அங்கு பணியாற்றும் பத்திரிகையாளர்களே சொல்கிறார்கள்.

மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டபோது மறுநாள் வந்த தினமலரின் முதல் பக்கத் தலைப்புச் செய்தியான 'நாய்த்தொல்லை'யை இன்றைக்கும் மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியவில்லை..

ஆனால் இன்றைக்கு முழுக்க, முழுக்க தி.மு.க. சார்பு பத்திரிகையாகவே மாறிவிட்டது 'தினமலர்'. முன்பெல்லாம் 'டீக்கடை பெஞ்சில்' தி.மு.க.வும், அதன் தலைவர்களும் உருட்டப்படாத நாட்களே இல்லை.. ஆனால் இப்போது காவல்துறை செய்திகளும், அரசு அதிகாரிகளுமே வறுக்கப்படுகிறார்கள். அரசுத் தரப்பை கூல் செய்ய வேண்டி, தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் தினம் ஒருவர் என்கிற கணக்கில் கொலைக்குற்றவாளியைப் போல் எழுதி வருகிறது.

கோர்ட்டு வழக்குகளிலும், பங்காளிச் சண்டையிலும் அரசுத் தரப்பின் ஆதரவு தங்களுக்கு மிகவும் வேண்டும் என்கிற ஆசையும், ஆவலும் இருப்பதால் சென்னை நிர்வாகம் தனது கொள்கையில் இருந்து அந்தர்பல்டி அடித்துவிட்டதாம்.

ம்.. சொத்துக்கு முன்னாடி கொள்கையாவது.. மண்ணாவது..!

கலக்கலான இரவு நேர மேடை நடனம்..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நான் முன்பு எப்போதோ எழுதித் தொலைத்த அந்த இரவு நேர ஆபாச நடனம் பற்றிய மேட்டரை நானே மறந்து போயிருந்த வேளையில் ஒரு வாசகர் எனக்கு ஒரு லின்க்கை கொடுத்து போய்ப் பாருங்க ஸார் என்று அன்பாக மிரட்டியிருக்கிறார்.

சென்று பார்த்தேன். அதே பாணியிலான நடனம்தான். ஆனால் இது கொஞ்சம் தில்லாலங்கடியாக.. ஆண், பெண் சமத்துவத்தை மேடையிலேயே வெளிச்சம் போட்டுக் காட்டிய நடனமாக இருந்தது.

ஒரு ஆணும், பெண்ணும் அரைகுறை ஆடையோடு நடனமாடத் துவங்கினார்கள். ஆடத் துவங்கிய நேரத்திலேயே அந்தப் பெண்ணின் கையில் ஒரு புல் பீர் பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஆடவனின் கையில் ஒரு சிகரெட்.. பீர் முழுவதையும் அந்தப் பெண் அந்தப் பாட்டு முடிவதற்குள் காலி செய்துவிட்டார்.

இடையிடையே தன் வாயில ஊற்றி ஆடவனின் வாயில் டிரான்ஸ்பர் செய்யும் கிளுகிளுப்பு வேலையையும் செய்து முடித்தார். அவ்வப்போது பாட்டிலை கவிழ்ப்பதும், சிகரெட்டை வாங்கி புகை, புகையாக ஊதுவதுமாக ஒரு ஆம்பளைத்தனத்தை மேடையில் வெளிச்சம் போட்டுக்காட்டினார்.

நம்மாளு ஆம்பளைத்தனத்தை அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு அந்தப் பெண்ணின் உடலை நோண்டுவதிலும், தோண்டுவதிலுமாகவே நேரத்தைச் செலவழிக்க.. விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு செம கிளுகிளுப்புதான் போங்க..


இப்படியே ஒவ்வொரு லின்க்கையும் ஓப்பன் பண்ணி பார்த்தா.. யார் ஆம்பளை.. யார் பொம்பளைன்னே தெரியாத அளவுக்கு மேட்டர் கிளுகிளுப்பா போய்க்கிட்டிருக்கு..

இதுக்கு மெட்ராஸ்ல ஐந்து நட்சத்திர ஓட்டல்ல ஆடுற ஆட்டம் எவ்வளவோ பரவாயில்லப்பா.. நம்மதான் சிட்டிதான் வளர்ந்திருக்கு.. கிராமம் வளரலைன்னு பொய், பொய்யா சொல்லிக்கிட்டிருக்கோம்.. எதுல இருக்கோ இல்லையோ.. இதுல மட்டும் நல்லாவே வளர்ந்திருக்கு சாமி..!

டிஸ்கி : புகைப்படம் போடணும்னு நினைச்சேன். ஆனா ஏதோ ஒண்ணு, ரெண்டு வலையுலக மகளிரணியினர் ரெகுரலா என் தளத்துக்குள்ள வந்து போற மாதிரி தெரியுது.. வீணா அவங்களையும் பகைச்சுக்கிட்டு இரண்டு வாசகர்களை நான் இழக்க விரும்பவில்லை. ஸோ.. போட்டோ இல்லை..

வலையுலக வாசகர் கேட்ட திகிலான கேள்வி..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திருப்பூரில் இருந்து கருப்பசாமி என்றொரு நண்பர் எனது வலைத்தளத்தின் நீண்ட நாள் வாசகர். சில சமயங்கள் எனக்கு போன் செய்து பேசுவார். ரொம்ப வெள்ளந்தியான பேச்சு. கொஞ்சம்தான் படிச்சிருக்காராம். தமிழில் கொஞ்சமாக எழுதவும், படிக்கவும் மட்டும்தான் தெரியுமாம். பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவராம்.. ஆனால் பேச்சு மிக மரியாதையாகவும், கிராமத்து வாசனை வீசுவதாகவும் இருக்கும்..

"நல்லாயிருக்கு ஸார்.. ரொம்ப நீளமாத்தான் இருக்கு.. ஆனாலும் நல்லாத்தான் இருக்கு.. ஏன் ஸார் பதிவு போடலை.. அஞ்சு நாளாச்சு ஸார்.. அந்த சினிமா விமர்சனம் எப்ப எழுதுவீங்க..?" என்றெல்லாம் அக்கறையாக விசாரிப்பார்.

கடைசியாக ஒரு முறை அவர் என்னுடன் பேசியபோது கேட்ட ஒரு கேள்வி என்னைத் தூக்கிவாரிப் போட்டது.. இப்படியுமா ஒரு அப்பாவி தமிழ்நாட்டில் இருப்பார் என்று..

அவர் கேட்ட கேள்வி "பார்ப்பான்.. பார்ப்பான்னு நிறைய பேர் எழுதுறாங்க.. பார்ப்பனீயம்னு எழுதுறாங்களே ஸார்.. அப்படீன்னா என்ன ஸார்..?" என்றார்.

ஒரு கணம் நான் திகைத்துத்தான் போனேன். வலையுலகில் அதனைப் பற்றிப் பக்கம், பக்கமாக பலரும் எழுதியும், பேசியும், விவாதித்தும் எத்தனையோ நாட்களைக் கழித்தாகிவிட்டது. அத்தனையும் பதிவாகியுள்ளது. எவ்வளவு எழுதியும் அடிப்படையான அது என்ன என்பது பற்றி யாரும் எழுதவில்லை என்பதைத்தான் அந்த வாசகரின் இந்தக் கேள்வி காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன்.

ஆஹா.. இவ்ளோ நல்லவரா இருக்காரே இந்த கருப்பு என்று நினைத்து அதனைப் பற்றி சின்னதா ஒரு கிளாஸ் எடுத்து, "அது எதையும் மனசுல நினைச்சுக்காதீங்க.. நீங்க பாட்டுக்கு உங்க வேலைய பாருங்க.. அது வேலையத்தவங்களின் புலம்பல்"ன்னு சொல்லி சமாளிச்சிட்டேன்.

இருந்தாலும் நம்ம கருப்பு மாதிரியுமான அப்பாவி மனிதர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களே என்று நினைத்து மனம் கொஞ்சம் சந்தோஷமாகிறது.

இவர்களாவது நிம்மதியாக இருக்கட்டுமே.. என்ன தப்புங்குறேன்..?

கார்லாவின் பதிபக்தி..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'கணவனே கண் கண்ட தெய்வம்' என்பதெல்லாம் நம்மூர் பாஷை என்றுதான் இத்தனை நாட்கள் நினைத்திருந்தேன். இப்போது அயல் தேசத்திலும் ஒன்றிரண்டு பேர் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறது. புரிகிறது.


கார்லா பிராட்முல்லர் என்கிற இந்தப் பெண்மணிக்கு தனது அன்புக் கணவருக்கு பிறந்த நாள் பரிசாக எதையாவது வித்தியாசமாக தர வேண்டும் என்று ஒரு ஆசையாம். எங்கயாவது ரூம் போட்டு யோசித்தாரோ என்னவோ தெரியவில்லை. ஒரு திரில்லிங்கான யோசனை அவருக்குத் தோணியிருக்கிறது.

கணவரின் இந்த பிறந்தநாளில் இருந்து அடுத்த பிறந்த நாள்வரையிலுமான ஒரு வருட காலம் முழுவதும் தனது கணவருடன் தினம்தோறும் தவறாமல் உறவு வைத்துக் கொள்வது என்ற விபரீதமான, வித்தியாசமான, கிளுகிளுப்பான முடிவை எடுத்துள்ளார்.

கணவரும் இதற்கு ஒத்துக் கொள்ள.. வருடம் முழுவதும் அந்தத் திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்கள் தம்பதிகள். எப்படிங்க..? முடியுற விஷயமா இது..?

இதெல்லாம் பத்தாதுன்னு அந்த கிளுகிளுப்பான ஓராண்டு முடிவில் கிடைத்த அனுபவங்களையெல்லாம் தொகுத்து தற்போது புத்தகமாகவும் கார்லா வெளியிட்டிருக்கிறார்.


அதனை வாசிக்க ஆவலோடு இருக்கிறேன். இது போன்ற நல்ல விஷயங்களை ஆங்கிலத்தில் படித்தால் கிக் ஏறாது. ஆகவே அதை யாராவது தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டால் தமிழக ரங்கமணிகள் சங்கத்து சிங்கங்கள், ஆளுக்கு பத்து புத்தகத்தையாவது வாங்கி என்னை மாதிரியான நண்பர்களுக்கு விநியோகிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்..

என்னமோ போங்க.. கொடுத்து வைச்ச புருஷன்பா.. அனுபவிச்சிருக்கான்... நமக்கெதுக்கு பொறாமை..?

வாழ்க பிராட்முல்லர்..! வளர்க கார்லாவின் பதிபக்தி..!!!

இவர்தான் கடற்புலிகள் தலைவர் சூசையா..?

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

புலிகள் பெயரில் உலாவும் காட்டு விலங்கு ஒன்றைத் தவிர புலிகள் என்கிற அடையாளத்தையே சுத்தமாக துடைத்து எறிந்துவிட்ட திருப்தியில் இருக்கிறது சிங்கள பேரினவாத அரசு.

கடைசி கட்டப் போரில் கொல்லப்பட்டவர்கள் லிஸ்ட்டில் கடல் புலிகளின் தலைவர் சூசையின் பெயர் இடம் பெற்றாலும், அவருடைய புகைப்படத்தை இதுவரையில் வெளியிடாமல் இருந்த சிங்கள அரசு, சமீபத்தில் அதனுடைய ஒரு வெப்சைட்டில் இவர்தான் சூசை என்று வெளியிட்டிருக்கிறது.


இந்தப் புகைப்படம் உண்மையா.. பொய்யா.. என்பது தெரியவில்லை..

சிங்கள அரசு அமைத்திருக்கும் மரண முகாம்களின் நிலைமையை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. எப்படி இதையெல்லாம் சகித்துக் கொண்டு அடுத்தக் கட்ட வேலையை பார்க்கிறேன் என்று ஒரு நிமிடம் என்னை குற்றவாளியாக்குகிறது என் மனது.

அந்த வெட்ட வெளியில் நிற்கக்கூட முடியாத அந்த கூரைக்குள் எத்தனை குடும்பங்கள் வெந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசித்தால் ஒரு வேளை சோறு உள்ளே இறங்க மாட்டேங்குது.. ஆனாலும் நம் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மட்டும் முழு திருப்தியோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வேலை மிச்சம் என்று..

தப்பித் தவறி அந்த முகாம்களை அமைக்காமல் மக்களை அப்படியே விட்டு வைத்திருந்தால், அவர்களில் பாதிப் பேர் தமிழகம் தப்பி வந்திருப்பார்கள். பின்பு வந்தவர்களைத் தங்க வைத்து சோறு போட்டு பார்த்துக்கணுமே.. தொல்லை வேலையாச்சே என்று நினைத்து மனதுக்குள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஆடட்டும்.. ஆடும்வரை ஆடட்டும்..!!!

வித்தியாசமான தமிழ்ப் படம் - வில்லங்கமான விவகாரம்..!

29-08-1009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டது என்றாலும், இளவரசர்களுக்குள் அனைத்துவகை போட்டிகள் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் மதுரை இளவரசரின் இளவல், சென்னை இளவரசரின் இளவலுக்குப் போட்டியாகவோ, அல்லது துணையாகவோ திரைப்படத் துறையில் கால் பதித்துவிட்டார்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கிற பேச்செல்லாம் மேடையோடு சரி.. வீட்டுக்குள்ளேயெல்லாம் கொண்டு வரக்கூடாது என்று இரண்டு சமஸ்தான குட்டி இளவரசர்களும் சொல்லிவிட்டதால் கம்பெனி பெயரும் வித்தியாசமாகத்தான் உள்ளது. CLOUD NINE MOVIES. மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிதான் தயாரிப்பாளர். படத்தின் பெயரே "தமிழ்ப் படம்" என்பதுதான்.


தமிழ்ச் சினிமாவின் இலக்கணங்களான

"தாலி சென்டிமெண்ட்..

தாயிற் சிறந்த கோவிலுமில்லை..

அக்கா, தங்கை பாசம்..

சிக்ஸ் பேக் உடற்கட்டு..

பறந்து பறந்து அடிப்பது..

பிச்சைக்காரன் கோலத்தில் இருந்தாலும் கோடீஸ்வரியை லவ்வுவது..

இடையிடையே பாட்டுக்காக வெளிநாட்டுக்கு ஓடுவது..

போலி அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு கொதிப்பது. அது மாமனாராகவே இருந்தாலும் நியாயத்திற்காக அவரை எதிர்ப்பது..

சூப்பர் பிகராக இருந்தால் டாவடிப்பது.. அட்டு பிகராக இருந்தால் தங்கச்சி.."

என்று பாசத்தைக் கொட்டுவது..


- இப்படி தற்போதைய தமிழ்ச் சினிமாவின் சூத்திரங்களையெல்லாம் நக்கலோ நக்கல் செய்கிறார்களாம் இந்தப் படத்தில். நகைச்சுவைதான் பிரதானமாம். பார்ப்போம்.. மதுரை இளவரசின் வருகை தமிழ்த் திரையுலகை என்னவாக மாற்றப் போகிறது என்று பார்ப்போம்..

இதில் இன்னொரு விசேஷம்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறை ஒன்றை கொண்டு வந்தார்கள்.

அதாவது அச்சங்கத்தில் உறுப்பினர்களாக அல்லாதவர்கள் திரைப்படங்களை இயக்கினால் பெப்ஸியில் புகார் கொடுத்து அவர்களது திரைப்பட ஷூட்டிங்கை நிறுத்துவது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதனைக் கடுமையாக செயல்படுத்தியும் வந்தார்கள்.


இந்தத் "தமிழ்ப் படம்" என்கிற தமிழ்த் திரைப்படத்தின் இயக்குநர் அமுதன் இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர் இல்லையாம். "அப்ளிகேஷன் வாங்கிட்டுப் போனவர்தான் இன்னமும் பணத்தோடு திரும்பி வரவில்லை" என்கிறார்கள். ஆனால் ஷூட்டிங் மட்டும் ஜெகஜோதியாக நடந்து வருகிறது.

பெப்ஸியாவது..? சங்கமாவது..? சட்டத்திட்டமாவது..?

"அப்ப நாங்கதான் இளிச்சவாயனுகளா..?" என்று முதல் படத்துக்கு சம்பளமாக வாங்கிய ஐம்பதாயிரத்தையும் அப்படியே சங்கத்தில் செலுத்தி உறுப்பினர்களாக ஆன, புதிய இயக்குநர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

அனுராதா அம்மா அவர்களுக்கு முதலாமாண்டு அஞ்சலி..!

28-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்ப் பதிவுலகில் தனக்கென்று ஒரு தனியிடத்தை பதித்துவிட்டு சென்றிருக்கும் "அனுராதா அம்மாவின்" முதல் நினைவு நாளான இன்றைக்கு அவரை ஒருகணம் நினைத்துப் பார்க்கிறேன்.

வெறும் சினிமாவும், வெற்று அரசியலும், சிரிக்க முடியாத நகைச்சுவைகளும், முதுகு சொரியலும், நட்புக்கு சோப்பு போட்டு கும்மியடித்துக் கொண்டிருக்கும் இந்தப் பதிவுலகில் இப்படியும் இதனை ஒரு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பதை தைரியமாகச் செய்து காட்டிய அனுராதாம்மாவின் தொண்டு மகத்தானது.

நோய் தந்த துயரையும், சித்ரவதையையும் அவரது உடல் எப்படித்தான் தாங்கியதோ தெரியவில்லை.. ஆனால் அதைப் படிக்கின்றபோதெல்லாம் அதே போன்ற உணர்வு எனக்குள்ளும் எழுந்தது.

இப்போதும் எனக்குத் தெரிந்த, உரிமையுள்ள பெண்குலத்தாரிடம் இந்த வலைப்பதிவை அறிமுகப்படுத்தி வைத்தபடியேதான் உள்ளேன். இதனைப் படித்து ஒருவராவது தற்காப்பு முயற்சிகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றாரென்றால் அதுவே அனுராதாம்மாவின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

இந்த நேரத்தில் தானும் அந்த நோயைத் தாங்கிய ஒரு மனப்பான்மையில் சுழன்று, உழன்று எல்லாவகையிலும் அம்மாவுக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை கடமையாகச் செய்த அவருடைய அன்புக் கணவர் திண்டுக்கல் சர்தார் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

அம்மாவின் எழுத்தை இந்த வலையுலகம் முடிந்தவரை தங்களது இல்லத்துப் பெண்களுக்கு அறிமுகம் செய்து அவர்களுக்குள்ளும் இந்த நோய் குறித்த ஒரு விழிப்புணர்வைத் தோற்றுவிக்க வேண்டுமாய் அனுராதா அம்மாவின் இந்த நினைவு நாளில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..

ரத்தக்கண்ணீர் - நாடகம் - விமர்சனம்..!

24-08-2009

என்
இனிய வலைத்தமிழ் மக்களே..!


தன்
வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு மனிதருக்கு மட்டுமே தொண்டனாக இருந்து அந்த தலைவரின் பிறந்த நாளில், தலைவர் இறந்த அதே நேரத்தில் தானும் இறந்து தனது விசுவாசத்தை வரலாற்றில் பதியச் செய்துவிட்டு பகுத்தறிவு உலகத்தில் அணையாத விளக்காக எரிந்து கொண்டிருக்கும் பகுத்தறிவுத் திலகம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 'ரத்தக்கண்ணீர்' நாடகத்தை மிக நீண்ட வருட இடைவெளிக்குப் பின்பு சமீபத்தில் பார்த்தேன்.



தென்னிந்திய
நடிகர் சங்கத்தில் 'நினைவலைகள்' என்கிற தலைப்பில் நாடக விழா தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு நடைபெற்றது. இந்த நாடக விழாவில்தான் நடிகவேளின் புதல்வர் ராதாரவியால் 'ரத்தக்கண்ணீர்' நாடகம் மீண்டும் அரங்கேறியது.



எம்.ஆர்.ராதாவிற்குப் பின்பு அவருடைய மகன் எம்.ஆர்.ஆர்.வாசுவும், அவருக்குப் பின் ராதாரவியும் இந்த நாடகத்தை தமிழ்நாடெங்கும் நடத்திக் கொண்டிருந்தார்கள். 1980-ல் இருந்து 1999வரையிலும் ராதாரவி சினிமாவில் பிஸியாக இருக்கும் சமயத்திலும் இந்த நாடகத்தை தொடர்ந்து நடத்தி வந்தார். அதன் பின்பு வாசுவின் மகன் வாசுவிக்ரம் இந்த நாடகத்தைத் தொடர்ந்து நடத்தினார். இதுவரையிலும் இந்த ரத்தக்கண்ணீர் நாடகம் பத்தாயிரம் முறைக்கு மேல் அரங்கேறியுள்ளது. தற்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு ராதாரவி இந்த நாடகத்தை நடத்தினார்.

மாலை
6.30 மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய நடிகை பாத்திமா பாபு, கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகையர் பெயர்களை மனப்பாடமாக சொன்னபோது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இந்த 'ரத்தக்கண்ணீர்' நாடகம் பிறந்து, தவழ்ந்து, வெற்றிகரமாக உருவான கதையை சில நிமிடங்களில் சொல்லி முடித்தார் பாத்திமா. சேலத்திலும், கோவையிலும் தொடர்ந்து ஒரு வருட காலம் இந்த நாடகத்தை நடிகவேள் நடத்திக் காட்டினார் என்பதை கேள்விப்பட்டபோது, நாடகத்தின் மீது அவருக்கு இருந்த வெறியை புரிந்து கொள்ள முடிகிறது.



'ரத்தக்கண்ணீர்' என்கிற இந்த விலைமதிக்க முடியாத கலைச்சிற்பத்தை எழுதிய திருவாரூர் தங்கராசு என்கிற மனிதரை, இந்நேரத்தில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.


தமிழில்
அரங்கேறிய பழம்பெரும் நாடகங்கள் அனைத்தும் இன்றைக்கு துருப்பிடித்த வாளாகிப் போய் வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துடன் மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த 'ரத்தக்கண்ணீர்' நாடகம் மட்டுமே பொதுமக்களிடையே இன்றுவரையிலும் பெற்றிருக்கும் வெற்றிக்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால் அது ஒன்றே ஒன்றுதான். நடிகவேளின் நடிப்புதான் அது.


அந்த
நடிப்புக்குச் சற்றும் குறைவில்லாததுபோலத்தான் எனக்குத் தோன்றியது ராதாரவியின் நடிப்பை பார்க்கின்றபோது.. அண்ணன் திரைப்படங்களில்கூட இப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தியதில்லை..


நாடகத்தின்
துவக்கத்தில் பேசிய ராதாரவி "என்னோட அம்மா இல்லாம இந்த நாடகத்தை நடத்துறது இதுதான் முதல் தடவை" என்று சொல்லி கண் கலங்கினார். சென்னையில் எங்கே 'ரத்தக்கண்ணீர்' நாடகத்தை நடத்தினாலும் அவருடைய அம்மா வந்துவிடுவாராம்.. அந்த அளவுக்கு அந்த நாடகத்தின் மூலம் தனது கணவரைக் கண்டு வந்தார் என்றார்கள் ராதாரவிக்கு நெருக்கமானவர்கள்.


இந்த
நாளில் நாள், நட்சத்திரம் பார்க்காமல், நல்ல நேரம் பார்க்காமல் ஒரு புதிய நட்சத்திரம் ஒன்றும் உதயமானது. அது ராதாரவியின் மகன் ஹரி. அவரை பல பேர் திரைப்படத்தில் நடிக்க அழைத்தும் சம்மதிக்காத ராதாரவி, முதலில் நாடகத்தில் நடித்து பின்புதான் சினிமாவுக்குள் கால் வைக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம். அதற்கான வழியாக இந்த நாடகத்தில் காந்தாவை வைத்து படமெடுக்க வரும் புதிய தயாரிப்பாளர் வேடத்தில் நடித்தார் நடிகவேளின் பேரன். அடுத்த கலைச்சேவைக்கு ஒருவர் 'பராக்..' 'பராக்..!'


ஒரு
பத்தாண்டுகளுக்கு முன்பாக மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த சித்திரைத் திருவிழாவில் பார்த்தது. அதற்குப் பின்பு இப்போதுதான்.

'ரத்தக்கண்ணீர்' நாடகத்தை ராதா நடத்தியபோது அன்றைக்கு காலையில் வருகின்ற தினசரி பேப்பர்கள் அனைத்தையும் வாங்கிப் படிப்பாராம். அதில் வந்திருக்கும் சின்னச் சின்ன செய்திகளை எல்லாம் மனதில் ஏற்றிக் கொண்டு, அதையே மாலையில் நடக்கும் நாடகத்தில் நகைச்சுவையாகப் புகுத்தி மக்களை சிரிக்க வைப்பாராம். இந்த முறையால்தான் வருடக்கணக்கில் நடத்தப்பட்ட இந்த நாடகத்தை, மக்கள் திரும்பத் திரும்ப வந்து பார்த்ததாகச் சொல்கிறார்கள்.

அதேபோலத்தான்
இன்றும்.. நிறைய மாறுதல்கள்.. வசனங்களில் இன்றைய தமிழக, இந்திய அரசியல் நிலைமையை சகட்டுமேனிக்கு கிண்டலடித்திருக்கிறார் ராதாரவி.


மோகனாக
ராதாரவியும், மனைவி சந்திராவாக குயிலியும், காந்தாவாக சோனியாவும் நடித்தனர். காட்சியமைப்புகளில் அதிகம் மாற்றம் செய்யாமல், வசனங்களில் மட்டும் துணிந்து அத்தனை நக்கல், நையாண்டியையும் செய்திருக்கிறார் ராதாரவி.


நாடகங்களில்
டைமிங்சென்ஸ்தான் முக்கியம் என்பார்கள். அதனால்தான் நாடக நடிகர்கள் டயலாக் டெலிவரியில் நம்பர் ஒன்னாக இருக்கிறார்கள். இதிலும் அப்படித்தான்.. பேச்சுக்கு பேச்சு, வரிக்கு வரி சிரிக்க வைக்கிறார்கள். முக பாவனை, டைமிங்சென்ஸ் இரண்டும் சேர்ந்து கலக்கிவிட்டன.


"சிங்கப்பூர்ல இருந்து மெட்ராஸ் ஏர்போர்ட்ல வந்து இறங்குறதுக்கு ரெண்டு மணி நேரம்தான் ஆச்சு. ஆனா மெட்ராஸ் ஏர்போர்ட்ல இருந்து இந்த வீட்டுக்கு வர்றதுக்கு நாலு மணி நேரமாகுது.. என்ன நடக்குது இங்க..?" என்று நாடகத்தின் துவக்கத்திலேயே தனது அளப்பரையை ஆரம்பித்தார் ராதாரவி.


தனது
மனைவியான சந்திரா குனிந்த தலை நிமிராமல் நிற்பதைப் பார்த்து "இப்படி முகத்தையே பார்க்காம தரையை பார்த்தே ஓகே பண்ணா நான் என்ன அவ்ளோ கேவலமாவா இருக்கேன்?" என்றொரு பரிதாபமான கேள்வி..




முதல்
இரவுக்கு நாளும், நேரமும் குறிக்கும் அய்யர்கள் கிரகங்களை பற்றியெல்லாம் சொல்ல “எனக்கு இன்னிக்கு டைம் இல்லே மேன்.. அவங்களையெல்லாம் நாளைக்கு வரச் சொல்லு..” என்று சொல்லும் நக்கல் டயலாக்கை மறக்க முடியவில்லை..


அவருடைய
மாமனாராக நடித்தவர் வருடக்கணக்காக நாடகங்களில் நடிக்கிறாராம்.. பின்னியிருக்கார். மோகன் சேரில் அமர்ந்திருக்க மாமனாரை வெளியே போகச் சொல்ல.. அவருடைய மரியாதையை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்துக் கொண்டே போய் "டேய்..!" என்பதுவரை சொல்லி நிறுத்திய காட்சியில் தொடர்ந்து அப்ளாஸ்தான்..


அவருடைய
தாயார் இறக்கும் காட்சியில் ராதா தன் காலத்திய நாடகத்தில், "ம.பொ.சி.யே இன்னும் உசிரோடத்தான் இருக்கார். ஆனா எங்கம்மா போயிட்டாங்க..!" என்பாராம்.. அப்போது பெரியாரை, ம.பொ.சி. கடுமையாகத் தாக்கிப் பேசி வந்தாராம். அந்தக் கடுப்பில் எந்த ஊரில் நாடகம் போட்டாலும் இந்த வசனம்தானாம்..


ஆனால்
இப்போது ம.பொ.சி. நிஜமாகவே இறந்துவிட்டதால், லாலுபிரசாத்யாதவை வம்புக்கு இழுத்திருக்கிறார் ராதாரவி. "எங்கம்மாவுக்கும் லாலு பிரசாத்துக்கும் ஒரே வயசுதான். ஆனா எங்கம்மா போயிட்டாங்க.." என்று மட்டும் சொல்லி இடைவெளிவிட்டு ஆடியன்ஸை பார்க்க புரிந்து கொண்டு சிரிக்கிறது கூட்டம்.


காந்தாவின் அம்மாவாக 'பசி' சத்யா அறிமுகமாகும் காட்சியில் ஒரு புதுமையாக மோகனும், அவரும் மோதிக்கொண்டு பேசும் பேச்சு கொஞ்சம் கிளுகிளுப்பு. இது மட்டுமா..? அவ்வப்போது அவரது மனைவியிடம் பேசுகின்ற பேச்சுகூட கொஞ்சம் கிளுகிளுப்புதான். இரட்டை அர்த்த வசனங்கள்தான்..! 'ரத்தக்கண்ணீரில்' இது போன்ற வசனத்தை நான் கேட்டது இதுதான் முதல் முறை.

'வள்ளி திருமணம்', 'அல்லி அர்ஜூனா' போன்ற 'தெய்வீக' நாடகங்களில் இருந்த இது மாதிரியான 'தெய்வீக வசனங்களை'விட, இதில் கொஞ்சம் குறைவுதான். இதற்காக கொஞ்சம் மனசு திருப்தி.


மனைவியான
குயிலி, கணவனுக்கு ஊத்திக் கொடுக்கும் காட்சியில் பரிதாபத்தைவிட நகைச்சுவையைத்தான் அதிகம் காட்டியது. ஒரு சிகரெட்டை பற்ற வைக்க குயிலி படும்பாடும், மோகனுக்கு விசிறி விடும்விதமாக விசிறியை வாங்கி கை வலிக்க மிக வேகமாக விசிறியை வீசுகின்ற இந்தக் காட்சிதான் அதிகமான கிளாப்ஸை எழ வைத்தது. குயிலி மேடம் சூப்பர்..


முன்பு
மூன்றரை மணி நேரம். பின்பு மூன்று மணி நேரம்.. பின்பு இரண்டரை மணி நேரம்.. கடைசியாக இரண்டு மணி நேரம் என்று நேரத்தை சுருக்குவதற்காக கதையையும் கொஞ்சம் சுருக்கித்தான் ஆக வேண்டிய கட்டாயம். காலத்திற்கேற்றாற்போல் நாமும் மாறித்தானே ஆக வேண்டும்.

இடையிடையே ராதாரவி தான் செய்த அரசியல் ஜம்ப்புகள்.. தவறான முடிவுகள்.. இதனால் தான் இப்போது படும் கஷ்டங்கள் இதையெல்லாம் வசனத்தில் சேர்த்து வைத்து சொந்த சோகத்தைத் தணித்துக் கொண்டார்.

"எல்லாக் கட்சியும் கூட்டணி வைச்சே நிக்குறாங்க.. தனித்து நிக்க மாட்டாங்க.. நின்னாத்தான் தெரியும் செல்வாக்கு. ஆனா ஒருத்தர் மட்டும் தனியாத்தான் நிப்பேன்னு சொல்லி நின்னு தோக்குறாரு.." என்று விஜயகாந்தை சொல்லாமல் சொன்னார்.

ஆனாலும் அடுத்த நொடியில்.. "போதும்.. இதுக்கு மேல வேணாம்.. எனக்கெதுக்கு பொல்லாப்பு. அவர் அடுத்து ஒரு படம் டைரக்ட் பண்ணப் போறாராம்.. அதுல எனக்கு ஒரு வேஷம் கொடுத்திருக்காரு. இப்ப எதையாவது பேசி என் பொழப்ப கெடுத்துக்க விரும்பலை.." என்று சொல்லி தப்பித்துக் கொண்டார்.

காந்தாவின்
வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது கை, கால்களை லேசாக சொரிந்து காட்டி, இரும.. அதற்குப் பின் அதுவரை அவரை "துரை" என்று அழைத்து வந்த காந்தாவின் தம்பி "யோவ்" என்று கூப்பிட.. “பாருங்க.. ஒரு தடவைதான் இருமுனேன். மரியாதையைக் குறைச்சிட்டான்..” என்ற டைமிங்கான நக்கல் வசனம் சூப்பர்..


அவருடைய
சொறியும் குணம் அதிகமாவதைக் கண்டு டாக்டரை அழைத்து வருகிறார்கள். வந்த டாக்டரை உட்கார வைத்து 'கிளாஸ்' எடுக்கும்போது இன்றைய பிரச்சினைகளை கையாண்டிருப்பதற்காக ராதாரவி அண்ணனுக்கு எனது நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


"சிகரெட் டப்பாவோட அட்டையில 'புகைப்பழக்கம் உடலுக்கு கெடுதி'ன்னு சின்னதா எழுதிட்டு, கம்பெனி பெயரை பெரிசா எழுதினா எவனுக்குத் தெரியும்..? உனக்கு நிஜமாவே மக்கள் மேல அக்கறையிருந்தா நீ என்ன செஞ்சிருக்கணும்.. கம்பெனி பெயரை சின்னதா போட்டு 'உடலுக்கு கெடுதி'ன்றதை பெரிசா போட்டிருக்கணும்.. அதுதான் கவர்ன்மெண்ட்டு. ஆனா நீ என்ன செஞ்சிருக்க.. இதுதான் ஊர், உலகத்துக்கு அட்வைஸ் பண்ற யோக்கியதையா..?" என்று ஒரு தாக்குதல் நடத்தினார்.




அடுத்து
அன்புமணியும் இவரிடம் மாட்டிக் கொண்டார். "இந்த பக்கம் இப்படி பேசிட்டு அந்தப் பக்கம் கம்பெனிக்காரன்கிட்ட துட்டை வாங்கி கம்பெனி, டிவியெல்லாம் நடத்துறாங்க. கேட்டா எல்லாம் கணக்குக் காட்டியாச்சுன்றாங்க.. நல்லவேளை இந்த எலெக்ஷன்ல அவங்க வரலை.. நாம தப்பிச்சோம்.. இல்லைன்னா நாளைக்கு சினிமால சிகரெட் அட்டையையே காட்டிருக்க முடியாது.." என்று நக்கல் விடவும் தவறவில்லை.




ராதா
தனது காலத்திய நாடகத்தில் காந்தாவை "வேசி மகள்" என்று மட்டுமே அழைத்து வந்ததாகப் படித்திருக்கிறேன். ஆனால் இதில் "தேவடியாள் பெற்றெடுத்த தெய்வத் திருமகளே.." என்று கர்ணக் குரலில் அழைக்கிறார் ராதாரவி.


குஷ்டரோகம்
வந்த பின்பான காலக்கட்டத்தில் "சொரிய சொரிய இன்பம்" என்கிற அந்த புகழ் பெற்ற வசனத்தை கஷ்டத்தோடு உச்சரித்த நடிப்பையெல்லாம் பார்த்தால், இதையெல்லாம் ஒரு சினிமாவில்கூட அவர் காட்டியிருக்க மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது..


அவருடைய
மகனான ஹரி சினிமா தயாரிப்பாளர் வேஷத்தில் காந்தாவை பார்க்க வீட்டுக்கு வர.. “அடியே காந்தா.. இந்த சினிமாக்காரனுகளையெல்லாம் நம்பாதடி.. யூஸ் பண்ணுவானுக.. அப்புறம் பாதில விட்ருவானுக.. புதுப் பார்ட்டி ஒண்ணு வந்தா பழசை கழட்டிவிட்டுட்டு புதுசைத் தேடி ஓடிருவானுங்க..” என்கிற டயலாக்கை இதற்கு முந்தைய நாடகங்களில் கேட்டிருக்கிறேன். ஆனால் இதை இப்போது சென்சார் செய்துவிட்டார் போலும்.. காணவில்லை..


இந்த
முறை மகன் ஹரியை பேசவிட்டு இவர் அமைதியாக இருந்துவிட்டு கடைசியில், “ரொம்பப் பேசுறான் இவன்.. நம்மளையே கொஸ்டீன் கேக்குறான் பாருங்க... ஒரு வேளை நம்ம பரம்பரை போலிருக்கு..” என்று சொல்லி மகனுக்கும் கைதட்டல் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.


மோகனின்
நச்சரிப்புத் தாங்காமல் போலீஸை விட்டு அவரை வீட்டில் இருந்து வெளியேற்றும் காட்சியில் இப்போதைய காவல்துறையினரை ஒரு பிடி பிடித்திருக்கிறார். வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தாவின் சினிமா பிரபலத்தை பார்த்து ஆட்டோகிராப் கேட்கும் காட்சியில் வசனமே இல்லாமல் ராதாரவியின் முக பாவனை அட்டகாசம்..


"குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது..?" என்கிற பாடல் காட்சியை மட்டும் வைத்து ஏதோ தங்களால் முடிந்த அளவுக்கு ரெண்டு வெங்காய வெடியையும், சினிமா பேனையும் வைத்து காட்டி முடித்துவிட்டார்கள். ஆனால் மதுரையில் நான் பார்த்தபோது அந்த பாடலை முழுவதுமாகவே நடித்துக் காண்பித்தார் ராதாரவி.


"தமிழ் படங்களுக்கே இப்பத்தான் தமிழ்ல பேர் வைக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதுவரைக்கும் எப்படி இருந்திருக்கானுங்க பாருங்க. ஆனா இவனுங்க எல்லாம் தமிழர்களாம்.. நமக்குள்ளயே ஒற்றுமை இல்லையே.. அப்புறம் என்ன பெரிய தமிழ்.. தமிழன்.. பக்கத்துல இருக்குற கேரளாவுக்குள்ள போய் சொல்லிப் பாரு.. உதை வாங்கிட்டுத்தான் வருவ.. ஏதோ ஒரு 'பெரிய மனுஷன்' இருக்காரு.. அவர் இருக்குறவரைக்கும் நாம சொல்லிக்க வேண்டியதுதான்.. அவரும் இல்லைன்னா அவ்ளோதான்.. என்று சொல்லி தனது 'உள்ளக்கிடக்கை'யை தெரிவிக்கிறார் ராதாரவி.

இடையில்
ஜீவகாருண்ய சங்கத்தையும் ஒரு பிடிபிடிக்கிறார். "எதையும் கொல்லாத.. சாப்பிடாத.. விட்ரு.. பாவமாம்.. மூட்டைப்பூச்சி கடிச்சா என்ன செய்வ..? 'சபாஷ் போயிட்டு வா'ன்னு தட்டிக் கொடுத்து அனுப்பி வைப்பியா?" என்கிற நக்கலும் உண்டு.


கண்பார்வை
இல்லாமல் தெருவில் பிச்சையெடுக்கும் மோகனை சற்றுத் தள்ளி நின்று பிச்சையெடுக்கும்படி சொல்ல.. "அந்த ஓரத்துல என்கூட அம்பானி உக்காந்து பிச்சையெடுக்குறான். அதான் நான் இங்கிட்டு வந்துட்டேன்.." என்ற நக்கல் ஓவரோ ஓவர்..

திருவண்ணாமலை தீபத்தை பார்த்தா கன்னத்துல போட்டுக்குற.. வீடு தீப்பிடிச்சா மட்டும் ஏண்டா வயித்துல அடிச்சிட்டு அழுவுற..?" என்ற வசனம் மிகச் சரியான சமயத்தில் பயன்பட்டிருக்கிறது..

தனது
மனைவி சந்திராவிடமே வந்து பிச்சை கேட்டு கலாய்ப்பது செம சீன்.. சந்திரா சோறும்போட்டு, அவரது கையைப் பிடித்துத் தூக்கிவிட.. "நம்மளை யாருமே தொட மாட்டாங்களே. இந்தப் பொம்பளை எப்படித் தொட்டுப் பேசினா.. ஒருவேளை நம்மளை மாதிரியே இவளுக்கும் குஷ்டமோ..?" என்று சொல்லும் ராதாவின் டிரேட்மார்க் நக்கல் அப்படியே இங்கேயும் வருகிறது.


மோகனின்
நண்பனே அவனை அடையாளம் தெரியாமல் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல.. "வெஜ்னா வரலே.. நான்வெஜ்னா வரேன்.." என்று சொல்வது செம காமெடி..


இறுதியில்
'நடிகை காந்தா மரணம்' என்று பேப்பர் செய்தியை மனைவி சந்திரா பார்த்து பதறிப் போய் "மாமாவோட நிலைமை என்னாச்சுன்னு தெரியலையே..?" என்று கேட்கின்றபோது பிச்சை சோறு சாப்பிட வந்து நிற்கும் மோகன், "என்ன காந்தா போயிட்டாளா..? உங்களுக்கு அவளைத் தெரியுமா..?" என்று விசாரித்து அவர்கள் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கதறுவது ஒன்றுதான் இந்த நாடகத்தில் சிரிக்க முடியாமல் இருந்த நேரம்..


அந்த
கிளைமாக்ஸை கூட பட்டென்று முடித்துவிட்டதுதான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

மோகனைத்
தொட வரும் சந்திராவை "என்னைத் தொடாத.." என்று சொல்லிவிட்டு மோகன் உள்ளே போக சந்திரா பின் தொடர.. நாடகம் முடிந்ததாகச் சொன்னது கொஞ்சம் உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது.

ராதா காலத்திய நாடகத்திலும், திரைப்படத்திலும் தனது நண்பனுக்கும், மனைவிக்கும் இடையில் பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு உயிரை விடுவார் ராதா. அது இதில் இல்லை. தான் உயிரை விடுவதைப் போல் காட்சி வேண்டாம் என்று ராதாரவி நினைத்துவிட்டாரோ என்னவோ..?

அதேபோல் ராதாவின் புகழ் பெற்ற "அரிக்குதடி காந்தா..!" என்கிற டயலாக்கை நான் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தேன். அது இதில் பேசப்படவே இல்லை என்பதிலும் எனக்கு வருத்தமே..

அதேபோல்
ராதா குடும்பத்தின் குலச் சொத்தான அந்த வெண்கலக் குரல் பேச்சை ராதாரவி ஓரிரண்டு இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பயன்படுத்தாமல் சாதாரணமாகவே பேசியது ஏன் என்று தெரியவில்லை. அந்த உச்சரிப்பில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..


ராதாவின்
காலத்தில் நாடகத்தில் இருந்த பகுத்தறிவு வசனங்கள், கடவுள் நம்பிக்கையை கிண்டல் செய்வது.. கடவுளர்களை கேலி செய்வது போன்றவைகள் இந்த நாடகத்தில் அதிகம் இல்லாமல் வழிக்கொழிந்து போயிருப்பது காலத்தின் மாற்றத்தைக் காட்டுகிறது.

நடிகவேளின்
இளவல் ராதாரவி தீவிர கடவுள் பக்தராக மாறியிருப்பதுதான் அதற்குக் காரணம். அது போன்ற வசனங்களை அவரும் வைக்காததால்தான், சமீப வருடங்களாக இந்த நாடகத்தை அவர் தொடாமல் வைத்திருந்தார் என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.


இருந்தபோதிலும்
அதற்கு முந்தைய நான்கு நாட்கள் நடந்த நாடகங்களுக்கு வந்த கூட்டத்தைவிட, அன்றைக்கு அதிகமான கூட்டம் குவிந்திருந்தது இந்த நாடகத்தின் தனிச்சிறப்புக்கு அடையாளம்..


இந்த
நாடகத்தின் மையக் கருத்தே பெண்களுக்கான மறுமணம்தான்.

இல்லற
சுகத்தையே அனுபவித்திராத ஒரு பெண் கணவன் தொலைந்து போனாலோ, இறந்து போனாலோ அப்படியேதான் இருக்க வேண்டுமா..? கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டு அடங்கியிருக்க வேண்டுமா..? அவளுக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா என்பதையெல்லாம்தான் தனது காலத்தில் கொஸ்டீன் மேல் கொஸ்டீன் கேட்டு இந்த நாடகமான, காவியத்தை பெரியாருக்கு காணிக்கையாக்கியிருந்தார் ராதா.


இந்த
அளவுக்கு நடிகவவேள் அவர்கள் தனது பேச்சாலும், நடிப்பாலும் மக்களைச் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்ததுதான் இந்த நாடகத்தின் வெற்றிக்கு காரணம்..


திரைப்படத்தில்
அவர் இறந்த பின்பு வருகின்ற அந்த கடைசி வசனம்கூட அவருடைய குரலில் கணீரென்று கேட்குமே..


"மதத்தை காப்பாற்ற புறப்பட்டிருக்கும் மதிவாணர்களே;


சமூகத்தை
காக்க முனையும் பெரியோர்களே;


இந்த
மறுமணம் தவறா?

தமிழ்
மண்ணில் பிறந்த எவரும் இதனை தவறென்று சொல்ல மாட்டார்கள்.

என்னைப்
போன்ற கண்மூடிகளால் எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டு தங்களின் உணர்ச்சிகளை மறைக்க முடியாமல் அவமானமாகி விடுமோ என ஆற்றிலோ குளத்திலோ விழுந்து ஆவி போக்கி கொள்கிறார்கள்.

இந்த
அவல நிலை மாறட்டும்.

லட்சக்கணக்கான
அபலைப் பெண்கள் சிந்தும் 'ரத்தக்கண்ணீர்' இனியாவது நிற்கட்டும்"


பெண்கள்
வடித்த அந்த ரத்தக்கண்ணீர் இப்போதும் இருந்து வருகின்ற இன்றைய நிலைமையில், இந்த நிஜமான 'ரத்தக்கண்ணீர்' உலகம் உள்ளவரையில் தமிழ் மொழி உள்ளவரையில், தமிழர்கள் உள்ளவரையில் எத்தனை தலைமுறைக்கும் நீடித்திருக்க வேண்டும் என்பதே எனது ஆவல்..!


வாழ்க
நடிவேகள் எம்.ஆர்.ராதாவின் புகழ்..!