பி.எஸ்.என்.எல்.-தீபிகா படுகோனே - கூட்டணி வைத்து எனக்கு செய்த கொடுமைகள்..!

11-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அரசு அலுவலகமும், மாமனார் வீடும் ஒன்று என்பது நமது இந்தியத் திருநாட்டுக்கே உரித்தான சொலவடை. இந்தியாவில் உள்ள அத்தனை அரசு ஊழியர்களும் இந்த விஷயத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.


அரசு அலுவலகம் என்பது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் சேவை அமைப்புகளாக இருந்துவிட்டால் நாட்டில் முக்கியப் பிரச்சினைகள் பலவும் தீர்ந்து தொலையும். நமது துரதிருஷ்டம் நமது அரசியல் அமைப்பும், நிர்வாக அமைப்பும் அப்படியல்ல..

பேச்சு எதுக்கு? விஷயத்துக்கு வரேன்..

என்னிடம் செல்போன் இருந்து தொலைந்தாலும் லேண்ட்லைன் போன் ஒன்று வாங்கியாக வேண்டிய கட்டாயம் ஒன்று வந்தது. காரணம் பல்வேறு இடங்களில் வீட்டு முகவரிக்காக பி.எஸ்.என்.எல். பில்லை ஏற்றுக் கொண்டார்கள். அதே நேரம் மற்ற தனியார் தொலைபேசி நிறுவனங்களின் அத்தாட்சியை ஏற்றுக் கொள்ள மறுத்தது மத்திய, மாநில அரசுத் துறைகள்.


இந்த ஒரு காரணத்துக்காகவே பி.எஸ்.என்.எல். போனை வாங்கித் தொலைத்தேன். முதல் நாளே ஆரம்பித்தது சண்டை.

போனை கொடுப்பதற்காக ஊழியர்கள் என் வீட்டிற்கு வந்தபோது நான் அலுவலகத்தில் இருந்தேன். எனது அக்கா பையன்தான் வீட்டில் இருந்தான். அவனிடத்தில் “300 ரூபாய் வேண்டும். வயர் வாங்க வேண்டும்..” என்று கேட்டிருக்கிறார்கள். அவன் எனக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான்.

தொடர்ந்து நானே அந்த சாய் என்கிற தொலைபேசி ஊழியரிடம் பேசினேன். “உங்க வீடு ரோட்டுல இருந்து ரொம்ப உள்ள இருக்கு ஸார்.. எங்ககிட்ட இப்ப நீளமான வயர் இல்லை. அதுனால உங்ககிட்ட வாங்கிக்கச் சொன்னாங்க. மொத மாச பில்லுல இந்த 300 ரூபாயை மைனஸ் பண்ணிருவாங்க..” என்று உறுதியுடன் சொன்னார்.

எனக்கும் போன் வாங்கியாக வேண்டுமே என்பதால் “சரி” என்று கொடுத்துத் தொலைத்தேன். போனும் ஆக்டிவ்வானது.. சந்தோஷமாக பேசினோம்.. கொஞ்சினோம்.. குலாவினோம்.. முதல் மாச பில்லை பார்க்கின்றவரையில்.

அந்த 300 ரூபாய் முதல் மாத பில்லில் கழிக்கப்படவே இல்லை என்பது தெரிந்து அந்த அலுவலகத்திற்குச் சென்று கேட்டேன். “அப்படியொரு சிஸ்டமே இல்ல ஸார்.. நீங்க ஏன் கொடுத்தீங்க..? எவ்ளோ நீளமா இருந்தாலும் எங்க ஆபீஸ்ல இருந்துதான் கொடுப்பாங்க.. அவர் சும்மா வாங்கியிருப்பாரு..” என்று சப்பைக் கட்டு கட்டினார்கள்.

நானும் விடவில்லை. “உங்காளுதான் வாங்கினாரு.. அப்படித்தான் சொன்னாரு.. எனக்கு பில்லுல மைனஸ் பண்ணிக் கொடுங்க..” என்று சவுண்ட் விட்டேன். ஒரு பெண் அஸிஸ்டெண்ட் இன்ஜீனியர் வந்தார். வெளிப்படையாகப் பேசினார். “ஸார் அவர் உங்ககிட்ட பொய் சொல்லி லஞ்சமா அந்தப் பணத்தை வாங்கிருக்காரு.. நீங்களும் ஏமாந்து கொடுத்திட்டீங்க.. அதுனால இந்த விஷயத்துல எங்களால ஒண்ணும் செய்ய முடியாது. வேண்ணா ஒரு கம்ப்ளையிண்ட்டா எழுதி கொடுங்க.. அவர்கிட்ட கேட்டு வாங்கித் தர்றோம்..” என்றார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. எப்படி சுலபமாக நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என்பதை நினைத்து எனக்கே அவமானமாக இருந்தது. அந்த சாய் என்கிற லைன்மேனை போனில் பிடித்து விளக்கம் கேட்டேன். “நீங்க எனக்காக சும்மா கொடுக்குறீங்கன்னு நினைச்சேன் ஸார்..” என்றார். எனக்கு வந்த கோபத்துக்கு மொத்த அலுவலகமும் என்னைத் திரும்பிப் பார்க்கும்விதமாக கத்தித் தீர்த்துவிட்டேன்.

கடைசியாக அந்த நபரும் சொன்னது இதுதான்.. “ஆமா ஸார்.. நான் லஞ்சம்தான் வாங்கினேன்.. உங்களால முடிஞ்சதை பாருங்க..”

வேறென்ன செய்ய முடியும்..? வாங்கியதற்கு ஆதாரம் இல்லை என்கிற தைரியத்தில் தெள்ளத் தெளிவாகப் பேசுகிறார் அந்த நபர். “அவர் மீது இலாகாபூர்வமான நடவடிக்கை எடுங்கள்..” என்று சொல்லி ஒரு புகார் மனுவை கொடுத்தேன். அதை வாங்கிய அந்த பெண் இன்ஜீனியர் “ஆதாரத்தையும் சேர்த்துக் குடுங்க..” என்றார். “அது எப்படிங்க..? அன்னிக்கு கொடுத்ததுக்கு என் மாப்ளைதான் ஆதாரம்.. அவன் வந்து உண்மையைச் சொல்வான்..” என்றேன்.

“அதெல்லாம் இங்க நிக்காது ஸார்.. எங்க ஆபீஸ்ல ஏதாவது ஆதாரம் கேப்பாங்க. இல்லாட்டி மனுவை தொடவே மாட்டாங்க..” என்றார். நானும் கோபத்தில் அந்த மனுவை வாங்கி அவர் முன்பாகவே கிழித்துப் போட்டுவிட்டு “நாசமாப் போங்க..” என்று திட்டிவிட்டு வந்துவிட்டேன்.

இதன் பின்பு என் அப்பன் முருகப் பெருமான் புண்ணியத்தில் போன் பில் சரிவர கட்ட முடியாமல் போய்விட்டதால் 1000 ரூபாய் பாக்கித் தொகை வைத்து போனை முடக்கிவிட்டார்கள். இந்த வேலையை மட்டும் மிகச் சரியாகச் செய்கிறார்கள்.

அத்தோடு அந்த போனை மறந்து தொலைத்துவிட்டு சும்மா ஷோகேஷுக்காக வீட்டில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு நாள் தொலைக்காட்சியில் நம்ம புதிய அழகு தேவதை தீபிகா படுகோனே பி.எஸ்.என்.எல்.லின் மாடலாக வந்து “வாங்கிக்கோ.. வாங்கிக்கோ..” என்று சொன்னது தூக்கத்தை துறக்க வைத்தது.

நம்ம எப்படி ஆளு..? தேவி, ஜெயப்ரதா, மாதுரி, ரவீணா டாண்டன், ராணி முகர்ஜி என்று வரிசை கட்டி சொன்னதால் பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச லக்ஸ் சோப்பையே இன்னமும் விடமுடியாம தடவிக்கிட்டிருக்குற ஆளு.. புது பாப்பா காட்டின அழகு ஷோக்குல மதி மயங்கிப் போய் அடுத்த நாளே ஓடிப் போய் ஆயிரம் ரூபாயை கட்டிட்டு வந்து “சீக்கிரமா என் வீட்டு போனை ஆக்டிவ் பண்ணிருங்க.. நானும் நாளைல இருந்து தீபிகா படுகோனே கிளப்ல ஒரு ஆளு”ன்னு சொல்லாம சொல்லிட்டு வந்தேன்.

நானும் ஒரு மிதப்புலதான் இருந்தேன். அந்த போன் கம்பெனிக்காரங்களும் ஒரு மிதப்புலதான் இருந்திருக்காங்க.. 2 நாளாச்சு.. 4 நாளாச்சு.. 6 நாளாச்சு.. 12 நாளாச்சு.. போனை எடுத்தா செத்துப் போய் கிடக்கு.. பணம் கட்டி இம்புட்டு நாளாச்சேன்னு போன் பண்ணி கேட்டா.. அப்புறமா வாயைத் தொறந்து வக்கனையா சொல்றானுக கேப்மாரிக.. “நீங்களே நேர்ல வந்து போனை ஆக்ட்டிவ் பண்ணிக் கொடுங்கன்னு எழுதிக் கொடுக்கணும் ஸார்..”ன்னு..

“சரி எங்க வரணும்..”னு கேட்டா.. “நீங்க பணம் கட்டினீங்களே அதே ஆபீஸ் மாடில ஸார்..”ங்கிறாங்க.. “அன்னிக்கே அதைச் சொல்லித் தொலைஞ்சிருந்தா எனக்கு வேலை மிச்சமாயிருக்கும்ல”ன்னு கேட்டா, “இது கஸ்டமர் கேர் ஸார்.. சொல்லியிருக்க வேண்டியது கவுண்ட்டர்ல பணத்தை வாங்கினவங்கதான்.. அங்க போய் கேளுங்க..”ன்னு சொல்லி டொக்குன்னு முகத்துல அடிச்சாப்புல போனை வைக்குறானுங்க.. இவங்கள்லாம் பொதுமக்களின் சேவகர்களாம்.. கொடுமை..

நம்ம தலையெழுத்தை நொந்துகிட்டே போய் எழுதிக் கொடுத்திட்டு வந்தேன். மறுபடியும் 10, 15 நாள் கழிச்சும் கனெக்ஷன் வரலை.. மறுபடியும் போன்ல கேட்டா “நேரா வந்து கேளுங்க”ன்னு கூலா சொல்றானுங்க.. நேர்ல போய் கேட்டா.. “அந்த லெட்டரை எங்க வைச்சோம்னு தெரியலை.. நீங்க வேற ஒண்ணு புதுசா எழுதிக் கொடுங்க”ன்னாங்க.. மறுபடியும் தலைவிதியேன்னு எழுதிக் கொடுத்திட்டு வந்தேன்..

அப்புறமும் போனுக்கு உசிரு வந்தபாடில்லை. மறுபடியும் போனை போட்டு கேட்டா.. என் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற எக்ஸ்சேஞ்சுக்கு போய் கேக்கச் சொன்னாங்க. அங்கதான் நமக்கு வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு சண்டையாகிப் போச்சே.. அதுனால அந்த இன்ஜீனியர் அம்மாவை பார்க்கணுமான்னு மனசுக்குள்ள சண்டை போட்டுக்கிட்டே போய்த் தொலைஞ்சேன்.

அந்த அம்மா என்னடான்னா “நீங்க அங்கதான் போய் கேக்கணும் ஸார்.. எங்களுக்குத் தகவல் இன்னும் வரலை.. வந்தாத்தான் நாங்க கனெக்ஷன் கொடுக்க முடியும்..” என்றார். “ஒரு போனுக்காக ஏங்க பொண்ணு பார்க்குற மாதிரி இப்படி லோ, லோன்னு அலைய விடுறீங்க.. நீங்களே பேசி வாங்கிக் கொடுக்கக் கூடாதா..”ன்னே கேட்டுட்டேன்.

“இல்லீங்க.. கவர்ன்மெண்ட் ரூல்ஸ் அப்படி.. நாங்க என்ன செய்ய.. நாங்க சாதாரண சர்வென்ட்தான்..” என்றார். இந்த வேலைக்கு கழுதை மேய்க்கப் போலாமே என்று என் மனதுக்குள்ளேயே சொல்லிவிட்டு மீண்டும் மாம்பலம் ஆபீஸுக்கு வந்து மாடில போய் ஒரு கத்து கத்தினேன்..

பின்ன.. நான் ஒரு பெரிய மனுஷன் ஆபீஸ்ல நுழையறேன்.. ஒரு மட்டு, மரியாதை வேண்டாம்.. ஆளாளுக்கு காதுல போனை எடுத்து பேசிக்கிட்டே இருக்காங்க.. கண்டுக்கவே இல்லை. அத்தனை பேருமே பொம்பளைங்கதான்.. எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கிட்டே இருக்குறது..

“டீ குடிக்கலாம்னு வந்தேன். டீ கிடைக்குமா..?” என்றேன். ஒரு அம்மா முறைத்துப் பார்த்தார். “ஏம்மா.. ஒரு கஸ்டமர் வந்திருக்கேன். வாங்க ஸார்.. என்ன ஸார் வேணும்'னு ஆர்வமா கேட்டு சீக்கிரமா முடிச்சுக் கொடுத்து அனுப்பாம, இப்படி எல்லாரும் ஊர்க்கதையை பேசிக்கிட்டிருந்தா என்னம்மா அர்த்தம்..? யார் உங்க அத்தாரிட்டி ஆபீஸர்.. கூப்பிடுங்க அவரை.. கம்ப்ளையிண்ட் பண்றேன்.. ஆபீஸா இது.. என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க..”அப்படி இப்படின்னு கத்தித் தீர்த்துட்டேன்..

ஒரு அம்மா என்னவோ ஏதோன்னு நினைச்சு ஓடி வந்து “சார் சாப்பிட்டீங்களா.. தண்ணி குடிக்கிறீங்களா?”ன்னு கேட்டு தண்ணியெல்லாம் கொடுத்துட்டு, “சொல்லுங்க ஸார்.. என்ன பிரச்சினை..” என்றார்.. என் சோகக் கதையை முழுசாகச் சொல்லி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அத்தனை பெண்களும் என்னைச் சுற்றித்தான் இருந்தார்கள்.

ஒருத்தரும் மூச்சு விடலை.. என்னிடம் விசாரித்த பெண் கம்ப்யூட்டரில் எதையோ நோண்டிவிட்டு “ஸார் உங்களுக்கு ஐஓஎன் போட்டாச்சு ஸார்.. நாளைக்கு காலைல உங்களுக்கு கனெக்ஷன் வந்திரும்..” என்றார். “நம்பலாமா..” என்று உறுதியுடன் கேட்டுவிட்டு கொஞ்சம் பந்தாவோடு வீடு வந்து சேர்ந்தேன்.

மறுநாள் தெரு நாய்கூட வீட்டுக்கு வரவில்லை. பிறகெப்படி போன் வரும்..?

அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை தினங்களாகிவிட ஒண்ணும் செய்ய முடியலை. திங்கட்கிழமை அதே பழைய ஆள் வந்தார். கனெக்ஷனை கொடுத்துவிட்டு நூறு ரூபாய் கேட்டிருக்கிறார். இப்போதும் நான் வீட்டில் இல்லை.

“லஞ்சம் கேட்டா செருப்பால அடிப்பேன்னு சொல்லு..”ன்னு மாப்ளைகிட்ட சொல்லி வைச்சிருந்ததால பயலும் அதை அப்படியே சொல்லிட்டான் போலிருக்கு.. பேசாம போயிட்டாராம்.. ஆனாலும் விடலையே.. அவனவனுக்கு ஒரு பவர் இருக்குல்ல.. காட்டிட்டான்..

சென்ற பதிவில் புலம்பியதைப் போல ஹாத்வே வீட்டில் செத்துப் போய்விட வேறு வழியில்லாமல் பி.எஸ்.என்.எல்லில் பிராட்பேண்ட்டிற்கு எழுதிக் கொடுத்தேன். முதலில் 5 நாள் என்றார்கள். பின்பு 10 நாள் என்றார்கள். 13 நாளானது..

மறுபடியும் படையெடுப்பு.. இந்த முறையும் அதே பெண் என்ஜீனியர். “ஸார்.. மோடம் ஸ்டாக் கம்மியா இருக்கு.. ஒவ்வொருத்தருக்காராத்தான் கொடுத்திட்டிருக்கோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..” என்றார். “மொதல்ல லிஸ்ட்டை காட்டுங்க.. யார், யார் என்னைக்கு பதிவு பண்ணாங்க. அதுல எத்தனை பேருக்கு கொடுத்திருக்கீங்கன்னு பார்க்கணும்..” என்றேன்.

பெவிகால் போட்டு ஒட்டியதைப் போல் சேரில் அமர்ந்திருந்ததால் வேண்டாவெறுப்போடு அந்த லிஸ்ட்டை காட்டினார் என்ஜீனியர். எனக்கு பின்பு பணம் கட்டியவர்களுக்கெல்லாம் கனெக்ஷன் கொடுத்திருக்க எனக்கு மட்டும் ‘பெப்பே' என்றது லிஸ்ட்..

“என்ன மேடம் இது..?” என்றேன்.. அவரோ ரொம்பவே சங்கோஜப்பட்டு “இது லைன்மேன் செய்ற வேலை ஸார்.. ‘அங்க போங்க'.. ‘இங்க போங்க'ன்னுதான் எங்களால சொல்ல முடியும.. டெய்லி ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிட்டுப் போயிடறாங்க.. நாளைக்கு கண்டிப்பா கொண்டு வந்து கொடுக்கச் சொல்றேன்.. கோச்சுக்காதீங்க..” என்றார்.

தான் ஒரு பெண்ணாகவும் இருப்பதால் தன் பேச்சை அந்த அலுவலகத்தில் இருக்கும் சக ஆண் ஊழியர்கள் கேட்க மறுப்பதாக ஆஃப் தி ரெக்கார்டாக சொன்னார். எனக்கும் பாவமாக இருந்தது.. வந்துவிட்டேன்.

இன்னும் இரண்டு நாட்கள் கழித்துத்தான் ஒரு மதிய வேளையில் நெட் கனெக்ஷனுக்காக மோடத்தை கொண்டு வந்தார்கள். அதே லைன்மேனும், வேறொரு ஆளும். இன்னிக்கு திருவிழாதான் என்று முடிவு செய்து தயாரானேன்.

“ஏன் லேட்டு? எதுக்கு லேட்டு..? எல்லாருக்கும் கொடுத்திட்டு கடைசியா கொடுக்க நான் என்ன இளிச்சவாயனா..? தனியார் கம்பெனின்னா 2வது நாளே கொண்டு வந்து மாட்டிடறாங்க.. நீங்க கவர்ன்மெண்ட்டு ஆபீஸ்ங்கிறதால இத்தனை லேட் பண்றீங்க.. உங்க ஆபீஸையெல்லாம் தனியார் மயமாக்குறதுல தப்பே இல்லை..” அப்படி இப்படின்னு போட்டுத் தாக்கிட்டேன்..

நான் கத்தின கத்துல லஞ்சம் கேக்க மறந்துட்டாங்க போலிருக்கு.. ஒரு வார்த்தைகூட பேசாம திரும்பிப் போயிட்டாங்க..

சந்தோஷம்டா சாமின்னு இருந்தாலும் இந்த அரசு ஊழியர்களின் அலட்சிய மனப்போக்கால் எத்தனை, எத்தனை பேர் தினமும் அல்லல்படுகிறார்கள்.. அவஸ்தைப்படுகிறார்கள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றபோது இது மாதிரியான நிறுவனங்களையெல்லாம் பேசாமல் தனியார் மயமாக்கினால்தான் என்ன என்றுதான் தோன்றுகிறது.

ஏர்டெல், டாட்டா இண்டிகாம், ரிலையன்ஸ் என்று மற்ற நிறுவன ஊழியர்கள் இணைப்பு கொடுத்துவிட்டு தலையைச் சொரிவதில்லை. ஆனால் இவர்கள் மட்டும் ஏன் வெட்கமில்லாமல் இப்படி நிற்கிறார்கள். அதான் சுளையாக மாதாமாதம் சம்பளமும் வருகிறது.. அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள். எத்தனை வசதிகள் செய்து கொடுத்தாலும், எவ்வளவு ஊதிய உயர்வை கொடுத்தாலும் லஞ்சப் பிசாசுகள் லஞ்சம் கேட்கத்தான் செய்வார்கள்.

அதனால்தான் இந்த ஒரு காரணத்துக்காகவே சொல்கிறேன். அரசுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கிவிடலாம்..

என்ன நான் சொல்றது..?

அதுக்கெதுக்குடா இப்படி நீட்டி முழக்குறன்னு நினைக்குறீங்களா..?

இனிமே யாராவது உங்ககிட்ட லஞ்சம் கேட்டா ஆதாரத்தோட கொடுத்து அவங்களை மாட்டிவிட்ருங்க.. அப்பத்தான் நீங்க ஒரு இந்தியன்.. இல்லாட்டி ஒரு அந்நியனா மாறிடுங்க..

டிஸ்கி :

தீபிகா படுகோனே பேச்சைக் கேட்டு எத்தனை அலைச்சல்..? எவ்வளவு கஷ்டங்கள்..?

ஜொள்ளுவிட்டா விட்டதைத் துடைச்சுட்டு அப்படியே போயிரணும்.. ஒழுக விட்டுக்கிட்டே ஓடக் கூடாது.. இதுதாங்க இதுல இருந்து எனக்குக் கிடைச்ச பாடம்..

107 comments:

பீர் | Peer said...

தப்பெல்லாம் உங்க மேலதாங்க.
கேபில் வாங்க 300 கொடுத்தது,
பில் கட்டாம இருந்தது,
படுகோன பார்த்ததும் பட்டுன்னு விழுந்தது,

நானும் தான் பி.எஸ்.என்.எல். ப்ராட்பேண்ட் எடுத்தேன். 2 நாள்ல வந்து கனெக்ஷன் கொடுத்திட்டாங்க. அதில சின்ன பிரச்சனை இருந்தது, 1500 ல கம்ளயிண்ட் பண்ணேன், உடனே வந்து (ஜங்ஷன்ல இருந்து வர கேபில் சரியில்லைன்னு, புது கேபில் போட்டு) சரி பண்ணிட்டாங்க... மறுபடியும் கால் பண்ணி சரியாகிடுச்சான்னு கேட்டுதான் கம்ளயிண்ட் க்ளோஸ் பண்ணாங்க..

எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கறதில்லைங்க..

ஊர்சுற்றி said...

ஐயா,

நானும் பி.எஸ்.என்.எல். தான் பயன்படுத்துகிறேன். எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் சொல்வதைப்போல அடிமட்ட ஊழியர்கள் அலட்சியமாக இருப்பது இங்கு மட்டுமல்ல. எல்லா இடங்களிலும்தான்.

நீங்க எதிர்த்துக் கேள்விகேட்டமாதிரி உங்க பகுதியில எல்லாரும் கேட்டிருந்தா இன்னிக்கு அந்த ஊழியர் அங்க இல்லாமப் போயிருந்திருக்கலாம்.

ஆனா - நம்ம மக்களுக்குத்தான் 'சகிப்புத்தன்மை(?!)' அளவுக்கு அதிகமா இருக்கே! என்ன பண்றது.

Romeoboy said...

உண்மைத்தமிழன் said

""பின்ன.. நான் ஒரு பெரிய மனுஷன் ஆபீஸ்ல நுழையறேன்.. ஒரு மட்டு, மரியாதை வேண்டாம்.. ஆளாளுக்கு காதுல போனை எடுத்து பேசிக்கிட்டே இருக்காங்க.. கண்டுக்கவே இல்லை. அத்தனை பேருமே பொம்பளைங்கதான்.. எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கிட்டே இருக்குறது..""

என்ன சார் சீரியஸ்சா இருக்க வேண்டிய டைம்ல எல்லாம் இப்படியா ஜோக் அடிப்பிங்க ??

“டீ குடிக்கலாம்னு வந்தேன். டீ கிடைக்குமா..?” என்றேன்

செம கலப்யு :))

இராகவன் நைஜிரியா said...

அனுபவும் புதுமை...
டெலிபோன் ஆபிசில் கண்டேன்...

அப்படின்னு பாட்டு பாடலாம் போலிருக்குங்க...

பாலகுமார் said...

உண்மைத்தமிழன், தனியார் துறையும் கூட அப்படி தாங்க இருக்கு. என்னோடோ icici account'la இருந்து ஒரு பெருந்தொகை ஆன்லைன் க்ரைம் மூலமா திருட்டு போய்டுச்சு.. போலீஸ் கேஸ் ரிப்போர்ட் எல்லாம் கொடுத்து பார்த்தாச்சு.. கடந்த ஒரு 8 மாசமா அலையரேன்....RBI கிட்ட கூட ரிப்போர்ட் பண்ணிட்டேன்... கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்ல...என்னோடோ தலைஎழுத்து...

பணம் பத்தரமா இருக்க தான் bankla போடறோம்.. அங்க வச்சு காணாம போன யாருங்க பொறுப்பு?

gulf-tamilan said...

இதுக்கு ஸ்மைலி இப்படி :((( போடணுமா? இல்லா இப்படியா :)))

பாலகுமார் கதை உங்களை விட மோசமா இருக்கு :(((

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாவம் சார்..நீங்க..

ஜெட்லி... said...

பீர் சொல்வதும் சரியே....
ஆனால் நானும் இது போல் லஞ்சம் கொடுத்து இருக்கிறேன்,
இல்லை என்றால் வேலை செய்ய மாட்டார்கள்.
இந்தியன் படத்தில் கமல் சொல்வது போல் தான் நம் நாட்டில்
அவர்கள் வேலையை செய்வதற்கே லஞ்சம் கொடுத்தால் தான்
வேலை நடக்கும்................

Subbu said...

தனியார்மயம் இதற்கு தீர்வாகாது. அவர்கள் வேறு மாதிரி கொள்ளை அடிப்பார்கள். அரசுத் துறையில் லஞ்சம் பிரச்சினை என்றால் தனியார் துறையில் அவர்களே பிரச்சினை. லஞ்சத்தை எல்லாரும் சேர்ந்து போராடினால்தான் ஒழிக்க முடியும். இங்கு பிரச்சினை என்னவென்றால் நாம் ஒவ்வொருவருமே corrupted. நமக்குத் தேவையானால் லஞ்சம் கொடுக்கவும் சட்டத்தை மீறவும் தயாராகவே இருக்கிறோம். அதுதான் பிரச்சினை. நாம் நேர்மையாக இருந்தால் நம்மால் இது போன்றவற்றை சகித்துக்கொள்ள முடியாது. ஊர் கூடி தேர் இழுக்கப்படும். லஞ்சம் ஒழியும். அதைவிட்டுவிட்டு தனியார்மயமென்பது தீர்வாகாது.

Unknown said...

உங்களுக்கு நடந்தது மிகவும் வருத்தமான விஷயம் உண்மைதமிழன்.

பி.எஸ்.என்.எல்லை தனியார் மயமாக்கி தொலைதொடர்பு துறையில் உள்ள அரசு கட்டுபாட்டுகளை முற்றிலும் ஒழித்தால் தான் இதற்கு தீர்வு வரும்.ஆனால் இதெல்லாம் நடக்க தோழர்களும், யூனியன்களும் விடமாட்டார்கள் என்பதால் இம்மாதிரி முறைகேடுகளுடன் வாழ பழகிகொள்வதுதான் பொதுமக்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு.

Raju said...

இங்கன என்னமோ "கேபிள்" "கேபிள்:ன்னு சத்தம் கேட்டு ஓடி வந்தேன்.
அப்போ, அது நம்ம கேபிள் சங்கர் இல்லையா...?
ரைட்டு.
:)

சிங். செயகுமார். said...

முருகா உங்களுக்கு மட்டும்தானா பிரச்சனை....
2006 ல ஊர்லதான் இருந்தேன்.தலைக்கு மேல போன டெலிபோன் கேபிள் எல்லாத்தையும் தரைக்கு கீழ மாத்த கவர்மெண்ட்ல சொல்லிட்டாங்க.

அந்த காண்டராக்டையும் அந்த லைன் மேன் ஆள் வச்சு அவரே பார்த்தார்.இடுப்பளவு ஆழத்திற்கு வாய்க்கால் வெட்டி கேபிள உள்ளாறா இறக்கி அது மேல செங்கல் வச்சி மண் போட்டு மூடிடுவாங்க.

எங்க ஊர்ல சுமார் ஒரு 500 கணெக்சன் இருக்கும் .கேபிள் போட்டதற்கு வீட்டுக்கு 300 ரூபான்னு அந்தந்த ஏரியா மெம்பர் மூலமா சொல்லிட்டார். பாதிக்கு மேல வசூலும் ஆயிட்டு. எங்க வீட்டுக்கு மட்டும் தகவல் வரல.எங்க மெம்பருக்கு நம்ம சேதி தெரியும்ல.


மெம்பர்கிட்ட போய் விசாரிச்சேன் .என்னய்யா எங்க வீட்ல மட்டும் பணம் கேக்கலையேன்னு.மறு நாள் லைன்மேன் வீட்ல வந்து சொல்லிட்டு போய்ட்டாரு. அவங்க பையன்கிட்ட வாங்கிக்கன்னு சொல்லிட்டாங்க..

நான் டிவிஷனல் ஆபிஸுக்கு போன் பண்ணி கேட்டேன். இது BSNL இலவசமா செஞ்சிகொடுக்குதுன்னு சொல்லீட்டாங்க.


இது சம்பந்தமா நான் ஒரு 50 பேர்கிட்ட ரகசியமா கையெழுத்து வாங்கி லைன்மேனோட ஆடியோ ரெக்கார்டிங்குக்காக ஒரு வாரம வெயிட்டிங்.

வந்தாரு லைன்மேன். அடுத்த வாரம் பணம் தருகிறேன்னு தவணை கேட்டும் கொடுக்கல. நாங்க ஒரு அரை மணி நேரம் பேசுனது என்னோட மொபைல் போன்ல ரெக்கார்ட் ஆயிடிச்சி.

மறு நாள் எங்க மெம்பர்கிட்ட புகார் கடிதமும் அந்த சிடியும் ஒரு காப்பி கொடுத்தேன்.ரெண்டு நாள் டைம் கொடுத்தேன் லட்ச கணக்குல வசூல் பண்ணுன பணம் பஞ்சாயத்தார் முன்னிலையில திருப்பி கொடுக்கனும்னு.

ரெண்டு நாள் டைம் முடிஞ்சிது. நாலாம் நாள் டிவிஷனல் ஆபிஸுக்கு புகார் போய் சேர்ந்து விளக்கம் கேட்க என்ன அழைத்தாங்க.

அதன் பின் இரண்டு நாளில் ஊரிலேயே மொத்த பணமும் திருப்பி கொடுக்கப்பட்டு புகாரும் திரும்பபெறபட்டது.


இதனால எனக்கு என்ன லாபம்?

அந்த பிரச்சனைக்கு பின் என்னோட வீட்டு போனுக்கு அழைத்தால் மணியடிக்கும்.ஆனா போன் வேல செய்யாது.அவுட்கோயிங் பொகும்.இது வரையில 5 இன்ஸ்ரூமெண்ட் மாத்தி ஒன்னும் கத நடக்காம இப்போ வீட்ல செல்போன்ல
இன்கம்மிங்...................

லோகு said...

நிதர்சனமான உண்மை..
எல்லா ஊர்லயும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அப்படித்தான் இருக்காங்க..

நான் ஏர்டெல் பிராட்பேண்ட் பயன்படுத்துகிறேன்.. ஏதாவது பிரச்சனை என்றால் புகார் செய்த ஒரு மணி நேரத்துக்குள் வந்து நிற்கிறார்கள்.. எனவே தீபிகா படுகோனாவை மறந்து விட்டு சச்சின் டெண்டுல்கர், ரஹ்மான் சொல்வதை கேக்கவும்..

நையாண்டி நைனா said...

எனக்கு இப்ப மனசே சரி இல்லை.

பித்தன் said...

படுகோனேவப் பார்த்தோமா, பாய் போட்டு குப்புறப் படுத்தோமான்னு இல்லாம..... எதுக்கு இந்த வீண் ஆசை, இவங்க எப்பவுமே இப்படித்தான் எசமான்.

ALIF AHAMED said...

நானும் bsnl பிராட்பாண்ட் எடுக்க நாலஞ்சி நாள் அலைச்சேன் கேட்டால் நாளைக்கு வந்துவிடுகிறோம் என்ற ஒரே பதில் பொறுத்தது போதும் என்று நானே களத்தில் இறங்கி மோடத்தை குடு நான் இன்ஸ்டால் பண்ணிகிறேனு சொல்ல வயர்லஸ் மோடம் இல்லை சாதா மோடம் தான் இருக்குனு ஒரு பிட்ட போட்டாரு சரி சாதாவ இப்ப குடு வயர்லஸ் வந்ததும் மாத்திகுடுனு மோடத்தை வாங்கி வந்து இன்ஸ்டால் பண்ணிட்டேன்
பிரச்சனையில்லாமல் ஓடிகிட்டு இருக்கு ! வயர்லஸ் மோடத்தைபத்தி கேட்டால் இன்னும் வரலை சார் என்ற பதில் ஒரு வருசமா..!!!

Jayakanthan R. said...

மொத்ததுல நீங்க அம்பி ஆகிட்டீங்க, இனிமேலாவது சூதனமா பொழச்சுகோங்க :)

வால்பையன் said...

”கொடுக்கமாட்டோம் லஞ்சம்”னு ஒரு அமைப்பு ஆரம்பிக்கலாமா!?

எனக்கு ரொம்ப நாளா ஆசை!

உண்மைத்தமிழன் said...

///பீர் | Peer said...

தப்பெல்லாம் உங்க மேலதாங்க.
கேபில் வாங்க 300 கொடுத்தது,
பில் கட்டாம இருந்தது,
படுகோன பார்த்ததும் பட்டுன்னு விழுந்தது,///

உண்மைதாண்ணே..

பட்ட பின்பே உண்மை சுடும்.. எனக்குச் சுட்டது.. அதான் எழுதி்ட்டேன்..

நன்றிங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஊர்சுற்றி said...

ஐயா, நானும் பி.எஸ்.என்.எல்.தான் பயன்படுத்துகிறேன். எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் சொல்வதைப்போல அடிமட்ட ஊழியர்கள் அலட்சியமாக இருப்பது இங்கு மட்டுமல்ல. எல்லா இடங்களிலும்தான்.

நீங்க எதிர்த்துக் கேள்வி கேட்டமாதிரி உங்க பகுதியில எல்லாரும் கேட்டிருந்தா இன்னிக்கு அந்த ஊழியர் அங்க இல்லாமப் போயிருந்திருக்கலாம்.

ஆனா - நம்ம மக்களுக்குத்தான் 'சகிப்புத்தன்மை(?!)' அளவுக்கு அதிகமா இருக்கே! என்ன பண்றது.]]]

அதான் சாமி பிரச்சினை..!

நோகாம நொங்கெடுக்கணும்னு நினைக்குறாங்க சிலரு..

பணத்தை வைச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம இருக்குற பலரு அள்ளி வீசுறாங்க..

அவங்களாலதான் இவ்ளோ பிரச்சினையும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜராஜன் said...
என்ன சார் சீரியஸ்சா இருக்க வேண்டிய டைம்ல எல்லாம் இப்படியா ஜோக் அடிப்பிங்க ?? “டீ குடிக்கலாம்னு வந்தேன். டீ கிடைக்குமா..?” என்றேன்
செம கலப்யு :))]]]

வேற என்ன செய்யறது ராஜராஜன்..?

அது கவர்ன்மெண்ட் ஆபீஸ் மாதிரியில்லே.. ஏதோ அவங்க வீடு மாதிரி நினைச்சுத்தான் ஹாயா இருந்தாங்க..! அதான் விட்டேன் நக்கலு..!

உண்மைத்தமிழன் said...

[[[இராகவன் நைஜிரியா said...

அனுபவும் புதுமை...
டெலிபோன் ஆபிசில் கண்டேன்...

அப்படின்னு பாட்டு பாடலாம் போலிருக்குங்க...]]]

இராகவன் ஸார்..

ஆரம்பிச்சாச்சா கச்சேரியை..

நன்றி.. நன்றி..

உண்மைத்தமிழன் said...

[[[பாலகுமார் said...
உண்மைத்தமிழன், தனியார் துறையும்கூட அப்படி தாங்க இருக்கு. என்னோடோ icici account'la இருந்து ஒரு பெருந்தொகை ஆன்லைன் க்ரைம் மூலமா திருட்டு போய்டுச்சு.. போலீஸ் கேஸ் ரிப்போர்ட் எல்லாம் கொடுத்து பார்த்தாச்சு.. கடந்த ஒரு 8 மாசமா அலையரேன்.... RBI கிட்ட கூட ரிப்போர்ட் பண்ணிட்டேன்... கொஞ்சம்கூட முன்னேற்றம் இல்ல... என்னோடோ தலைஎழுத்து... பணம் பத்தரமா இருக்கதான் bankla போடறோம்.. அங்க வச்சு காணாம போன யாருங்க பொறுப்பு?]]]

ஓ.. வெரி ஸாரி பாலகுமார்..

என்னைவிட மோசமா இருக்கே.. பெரும் தொகை என்றதும் உங்களுடைய வருத்தங்கள் புரிகிறது.

நீங்கள் இனியும் போலீஸை நம்பாமல் கோர்ட்டில் வழக்குத் தொடருங்கள்.. வேறு வழியில்லை..

சைபர் கிரைம் போலீஸ் மீது நம்பிக்கையில்லை.. சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டும் என்றோ சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றோ வழக்குத் தொடருங்கள்.. நிச்சயம் பலன் கிடைக்கும். ஆனால் கொஞ்சம் காலங்கள் ஆகும்..

வேறு வழியில்லை.. நமக்கு விதித்தது இதுதான்னு நினைச்சு மனசைத் தேத்திக்குங்க..

உண்மைத்தமிழன் said...

[[[gulf-tamilan said...
இதுக்கு ஸ்மைலி இப்படி :((( போடணுமா? இல்லா இப்படியா :)))]]]

உங்க மனசுக்கு எப்படி போடணும்னு தோணுது அப்படியே போடுங்க கல்ப்பு..

[[[பாலகுமார் கதை உங்களை விட மோசமா இருக்கு :(((]]]

ஆமாம் ஸார்.. ரொம்ப வருத்தமா இருக்கு.. மனுஷங்களுக்கு சோதனை எப்படியெல்லாம் வருது பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[T.V.Radhakrishnan said...
பாவம் சார்.. நீங்க..]]]

அனுதாபத்திற்கு எனது ஆழ்ந்த நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி said...
பீர் சொல்வதும் சரியே....
ஆனால் நானும் இது போல் லஞ்சம் கொடுத்து இருக்கிறேன், இல்லை என்றால் வேலை செய்ய மாட்டார்கள்.
இந்தியன் படத்தில் கமல் சொல்வது போல்தான் நம் நாட்டில் அவர்கள் வேலையை செய்வதற்கே லஞ்சம் கொடுத்தால்தான்
வேலை நடக்கும்.]]]

பேசாமல் இந்தியன் தாத்தாவைப் போல் தெருவுக்கு நான்கு பேரை கைமை செய்தால்தான் கொஞ்சம் கட்டுப்படுவார்கள் என்று நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Subbu said...
தனியார்மயம் இதற்கு தீர்வாகாது. அவர்கள் வேறு மாதிரி கொள்ளை அடிப்பார்கள். அரசுத் துறையில் லஞ்சம் பிரச்சினை என்றால் தனியார் துறையில் அவர்களே பிரச்சினை. லஞ்சத்தை எல்லாரும் சேர்ந்து போராடினால்தான் ஒழிக்க முடியும். இங்கு பிரச்சினை என்னவென்றால் நாம் ஒவ்வொருவருமே corrupted. நமக்குத் தேவையானால் லஞ்சம் கொடுக்கவும் சட்டத்தை மீறவும் தயாராகவே இருக்கிறோம். அதுதான் பிரச்சினை. நாம் நேர்மையாக இருந்தால் நம்மால் இது போன்றவற்றை சகித்துக்கொள்ள முடியாது. ஊர் கூடி தேர் இழுக்கப்படும். லஞ்சம் ஒழியும். அதை விட்டுவிட்டு தனியார்மயமென்பது தீர்வாகாது.]]]

சரிங்க சுப்பு ஸார்..

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இதை இப்படியே சமாளிக்கிறது..?

தனியார் மயமாகி அவர்கள் மட்டுமே அடிக்கின்ற கூட்டுக் கொள்ளைப் பற்றியும் தெரியும்..

ஆனால் வேறு வழியில்லை.. இக்கரைக்கு அக்கரை பச்சைதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[செல்வன் said...

உங்களுக்கு நடந்தது மிகவும் வருத்தமான விஷயம் உண்மைதமிழன்.
பி.எஸ்.என்.எல்லை தனியார் மயமாக்கி தொலைதொடர்பு துறையில் உள்ள அரசு கட்டுபாட்டுகளை முற்றிலும் ஒழித்தால்தான் இதற்கு தீர்வு வரும். ஆனால் இதெல்லாம் நடக்க தோழர்களும், யூனியன்களும் விடமாட்டார்கள் என்பதால் இம்மாதிரி முறைகேடுகளுடன் வாழ பழகிகொள்வதுதான் பொதுமக்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு.]]]

செல்வன் ஸார்..

வேற வழியில்லை.. மனசைத் தேத்திக்குங்கன்னு சொல்றீங்க..

அதைத்தான் இத்தனை நாளா நாங்க செஞ்சுக்கிட்டிருக்கோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[டக்ளஸ்... said...
இங்கன என்னமோ "கேபிள்" "கேபிள்:ன்னு சத்தம் கேட்டு ஓடி வந்தேன். அப்போ, அது நம்ம கேபிள் சங்கர் இல்லையா...? ரைட்டு.
:)]]]

டக்ளஸு..

கேபிள்ன்னாலே ஒரே டார்ச்சர்தாம்பா..!

நீ பரவாயில்லை.. வெளியூரு தப்பிச்சிட்ட.. நாங்க பாரு.. உள்ளூர்ல மாட்டிக்கிட்டோம்..!

குசும்பன் said...

//பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச லக்ஸ் சோப்பையே இன்னமும் விடமுடியாம தடவிக்கிட்டிருக்குற ஆளு.. //

எப்படி? ஒரு படத்தில் எஸ்.வி சேகர் சிக்கன் படத்தை பார்த்துக்கிட்டு வெறும் சாதம் சாப்பிட்டுக்கிட்டே சிக்கன் பிரியானி சூப்பர் என்பாரே அதுமாதிரி, வாங்கிய சோப்பை பார்த்துக்கிட்டே குளிச்சா 15 என்ன ஆயுசு முழுவதும் வரும்!

உண்மைத்தமிழன் said...

சிங் செயகுமார் ஸார்..

நானும் உங்களை மாதிரிதான் நினைச்சேன்..!

ஆனா முடியலை.. அந்தாளு நேர்லயே சிக்க மாட்டேன்னுட்டாரு..

வீட்டு அட்ரஸ் கேட்டேன். ஆபீஸ்ல தர மாட்டேனுட்டாங்க..

ஆனா நெட் கனெக்ஷன் கொடுக்கும்போது கேட்டா பதிவு செஞ்சிரலாம்னு தயாராத்தான் இருந்தேன். நல்ல வேளை கேட்கவே இல்லை.. தப்பிச்சிட்டாங்க..!

குசும்பன் said...

//அத்தனை பேருமே பொம்பளைங்கதான்.. எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கிட்டே இருக்குறது..//

என்ன ஆளுன்ன நீங்க பொண்ணுங்களை பார்க்காம ஆம்புளைங்களையா பார்ப்பீங்க! எவ்வளோ நேரம் பார்த்தாலும் அலுக்காதுன்னே பெண்ணின் அழகு! (அதுக்கு எல்லாம் ஒரு ரசனை வேண்டும்:))))

குசும்பன் said...

//என் சோகக் கதையை முழுசாகச் சொல்லி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அத்தனை பெண்களும் என்னைச் சுற்றித்தான் இருந்தார்கள்.//

அண்ணே என்னான்னு தெரியல, தலைநகரத்தில் வடிவேலு கதை சொல்லும் சீன் நினைவுக்கு வந்து சிரிப்பு சிரிப்பா வருது:) நான் என்ன செய்யட்டும்:)

உண்மைத்தமிழன் said...

[[[லோகு said...
நிதர்சனமான உண்மை.. எல்லா ஊர்லயும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அப்படித்தான் இருக்காங்க..
நான் ஏர்டெல் பிராட்பேண்ட் பயன்படுத்துகிறேன்.. ஏதாவது பிரச்சனை என்றால் புகார் செய்த ஒரு மணி நேரத்துக்குள் வந்து நிற்கிறார்கள்.. எனவே தீபிகா படுகோனாவை மறந்து விட்டு சச்சின் டெண்டுல்கர், ரஹ்மான் சொல்வதை கேக்கவும்..]]]

அறிவுரைக்கு மிக்க நன்றி லோகு ஸார்..!

பி.எஸ்.என்.எல்.ஐ மறந்திரலாம்.. ஆனா தீபிகாவை..

ஐயோ.. சொன்னா நம்புங்க ஸார்.. நான் சத்தியமா யூத்து ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[நையாண்டி நைனா said...
எனக்கு இப்ப மனசே சரி இல்லை.]]]

ஏன்.. நான் திரும்ப வந்துட்டனேன்னு பொறாமை..

கரீக்ட்டா..?

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
படுகோனேவப் பார்த்தோமா, பாய் போட்டு குப்புறப்படுத்தோமான்னு இல்லாம..... எதுக்கு இந்த வீண் ஆசை, இவங்க எப்பவுமே இப்படித்தான் எசமான்.]]]

கரீக்ட்டுத்தான் பித்தன் ஸார்..!

நான் எப்பவுமே பாய்ல குப்புறப் படுத்துதான் தூங்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[மின்னுது மின்னல் said...
நானும் bsnl பிராட்பாண்ட் எடுக்க நாலஞ்சி நாள் அலைச்சேன் கேட்டால் நாளைக்கு வந்துவிடுகிறோம் என்ற ஒரே பதில் பொறுத்தது போதும் என்று நானே களத்தில் இறங்கி மோடத்தை குடு நான் இன்ஸ்டால் பண்ணிகிறேனு சொல்ல வயர்லஸ் மோடம் இல்லை சாதா மோடம்தான் இருக்குனு ஒரு பிட்ட போட்டாரு. சரி சாதாவ இப்ப குடு. வயர்லஸ் வந்ததும் மாத்திகுடுனு மோடத்தை வாங்கி வந்து இன்ஸ்டால் பண்ணிட்டேன்.
பிரச்சனையில்லாமல் ஓடிகிட்டு இருக்கு! வயர்லஸ் மோடத்தை பத்தி கேட்டால் இன்னும் வரலை சார் என்ற பதில் ஒரு வருசமா..!!!]]]

அப்பாடா.. எனக்கு மட்டும்தான்னு நினைச்சேன்..

தோஸ்த்துக எத்தனை பேர் இருக்காங்க பாரு..!

வாழ்க மின்னுது மின்னலு..!

உண்மைத்தமிழன் said...

[[[Jaikanth said...
மொத்ததுல நீங்க அம்பி ஆகிட்டீங்க, இனிமேலாவது சூதனமா பொழச்சுகோங்க:)]]]

சரிங்கோ ஜெய்காந்த் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...
”கொடுக்கமாட்டோம் லஞ்சம்”னு ஒரு அமைப்பு ஆரம்பிக்கலாமா!? எனக்கு ரொம்ப நாளா ஆசை!]]]

நிஜத்துல நாட்டுல நிறைய பேர் ஏற்கெனவே ஆரம்பிச்சிட்டாங்க..!

வலையுலகத்துல நாம ஆரம்பிக்கலாமா..? நான் ரெடி..!

குசும்பன் said...

//தான் ஒரு பெண்ணாகவும் இருப்பதால் தன் பேச்சை அந்த அலுவலகத்தில் இருக்கும் சக ஆண் ஊழியர்கள் கேட்க மறுப்பதாக ஆஃப் தி ரெக்கார்டாக சொன்னார். //

அண்ணே உங்க தனியார்மய யோசனை சரி இல்லை, பேசாம அவுங்க புருசனை லைன் மேன் ஆக்கிட்டோம் என்று வெச்சுக்குங்க பேசாம சொன்ன பேச்சு கேட்டு ”கனெக்சன்” கொடுத்துக்கிட்டு இருப்பார்!
அல்லோ போன் லைனுக்கு சொன்னேன்

குசும்பன் said...

அல்லோ அண்ணாத்தே என்னதான் உங்க பதிவா இருந்தாலும் கும்மிக்கிட்டு இருக்கும் பொழுது ஊடால ஊடால “உண்மைதமிழன்” என்ற பெயரில் கமெண்ட் போட்டு என் மூட் ஸ்பாயில் பண்ணீட்டிங்க! சோ ஐ ஆம் கோயிங் பிரம் திஸ் பிளேஸ்!!!

திரும்ப இந்த தப்ப செய்யாதீங்க:)))

புருனோ Bruno said...

அது எப்படி சார் உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது

நானும் சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் தொலைபேசி விண்ணப்பித்தேன்.

ஒரு வாரம் கழித்து வந்து மாட்டி விட்டு சென்றார்கள்

அடுத்த நாள் அழைத்து தொலைபேசி எண் சொன்னார்கள்

இரண்டு நாட்கள் கழித்து அகலப்பட்டை வேலை செய்தது.

லைன்மேன் என்னிடம் காசு வாங்கவே இல்லை

//தப்பெல்லாம் உங்க மேலதாங்க.
கேபில் வாங்க 300 கொடுத்தது,
பில் கட்டாம இருந்தது,
படுகோன பார்த்ததும் பட்டுன்னு விழுந்தது,//

ஹி ஹி ஹி

நீங்கள் 300 ரூபாய் கொடுக்கும் போது ரசிது வாங்க வில்லையா

//நானும் தான் பி.எஸ்.என்.எல். ப்ராட்பேண்ட் எடுத்தேன். 2 நாள்ல வந்து கனெக்ஷன் கொடுத்திட்டாங்க. அதில சின்ன பிரச்சனை இருந்தது, 1500 ல கம்ளயிண்ட் பண்ணேன், உடனே வந்து (ஜங்ஷன்ல இருந்து வர கேபில் சரியில்லைன்னு, புது கேபில் போட்டு) சரி பண்ணிட்டாங்க... மறுபடியும் கால் பண்ணி சரியாகிடுச்சான்னு கேட்டுதான் கம்ளயிண்ட் க்ளோஸ் பண்ணாங்க..

எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கறதில்லைங்க..//

:) :)

//நானும் பி.எஸ்.என்.எல். தான் பயன்படுத்துகிறேன். எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் சொல்வதைப்போல அடிமட்ட ஊழியர்கள் அலட்சியமாக இருப்பது இங்கு மட்டுமல்ல. எல்லா இடங்களிலும்தான்.

நீங்க எதிர்த்துக் கேள்விகேட்டமாதிரி உங்க பகுதியில எல்லாரும் கேட்டிருந்தா இன்னிக்கு அந்த ஊழியர் அங்க இல்லாமப் போயிருந்திருக்கலாம்.

ஆனா - நம்ம மக்களுக்குத்தான் 'சகிப்புத்தன்மை(?!)' அளவுக்கு அதிகமா இருக்கே! என்ன பண்றது.//

வழிமொழிகிறேன்

புருனோ Bruno said...

//தனியார்மயம் இதற்கு தீர்வாகாது. அவர்கள் வேறு மாதிரி கொள்ளை அடிப்பார்கள். அரசுத் துறையில் லஞ்சம் பிரச்சினை என்றால் தனியார் துறையில் அவர்களே பிரச்சினை. லஞ்சத்தை எல்லாரும் சேர்ந்து போராடினால்தான் ஒழிக்க முடியும். இங்கு பிரச்சினை என்னவென்றால் நாம் ஒவ்வொருவருமே corrupted. நமக்குத் தேவையானால் லஞ்சம் கொடுக்கவும் சட்டத்தை மீறவும் தயாராகவே இருக்கிறோம். அதுதான் பிரச்சினை. நாம் நேர்மையாக இருந்தால் நம்மால் இது போன்றவற்றை சகித்துக்கொள்ள முடியாது. ஊர் கூடி தேர் இழுக்கப்படும். லஞ்சம் ஒழியும். அதைவிட்டுவிட்டு தனியார்மயமென்பது தீர்வாகாது.//

உண்மைத்தமிழன் அண்ணாச்சி கேட்கிறதா

பெருங்காயம் said...

அரசாங்கத் துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் அரசியல்வாதியாக அல்லது ரவுடியாக (2டும் ஒன்றே) இருக்க வேண்டும். இல்லையானால் அவர்கள் கேட்பதற்கு முன்பே நீங்களாகவே பரிசளிக்க(?) வேண்டும். பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வீட்டிற்கு என்றhல் அதற்கு லஞ்சமா ஒரு ரேட், கடையாக அதற்கு ஒரு ரேட், பிராட்பேண்டுக்கும் ஒரு ரேட் என்று நிர்மாணித்துள்ளார்கள். அதை கொடுத்தால் நீங்கள் கூப்பிட்டவுடன் வருவார்கள். இதெல்லாம் சகஜமப்பா.... நானும் கோபப்பட்டு நொந்நு நுhலாகித்தான் அவர்களின் வழிக்கு வந்துவிட்டேன்

Subbiah Veerappan said...

////தனியார்மயம் இதற்கு தீர்வாகாது. அவர்கள் வேறு மாதிரி கொள்ளை அடிப்பார்கள். அரசுத் துறையில் லஞ்சம் பிரச்சினை என்றால் தனியார் துறையில் அவர்களே பிரச்சினை. லஞ்சத்தை எல்லாரும் சேர்ந்து போராடினால்தான் ஒழிக்க முடியும். இங்கு பிரச்சினை என்னவென்றால் நாம் ஒவ்வொருவருமே corrupted. நமக்குத் தேவையானால் லஞ்சம் கொடுக்கவும் சட்டத்தை மீறவும் தயாராகவே இருக்கிறோம். அதுதான் பிரச்சினை. நாம் நேர்மையாக இருந்தால் நம்மால் இது போன்றவற்றை சகித்துக்கொள்ள முடியாது. ஊர் கூடி தேர் இழுக்கப்படும். லஞ்சம் ஒழியும். அதை விட்டுவிட்டு தனியார்மயமென்பது தீர்வாகாது./////

ரிப்பீட்டோ ரிப்பீட்ட்டு உனா தானா!


Read more: http://truetamilans.blogspot.com/2009/08/blog-post_11.html#ixzz0Nx1w231T

சிநேகிதன் அக்பர் said...

அப்ப எந்த சேவைதான் சிறந்தது. ஒரே குழப்பமா இருக்கே. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க.

உண்மைத்தமிழன் said...

///குசும்பன் said...

//பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச லக்ஸ் சோப்பையே இன்னமும் விடமுடியாம தடவிக்கிட்டிருக்குற ஆளு.. //

எப்படி? ஒரு படத்தில் எஸ்.வி சேகர் சிக்கன் படத்தை பார்த்துக்கிட்டு வெறும் சாதம் சாப்பிட்டுக்கிட்டே சிக்கன் பிரியானி சூப்பர் என்பாரே அது மாதிரி, வாங்கிய சோப்பை பார்த்துக்கிட்டே குளிச்சா 15 என்ன ஆயுசு முழுவதும் வரும்!///

தம்பீ..

உன் குசும்புத்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா..?

எப்பவுமே குளிக்கிறதுக்கு நான் லக்ஸ் சோப்பைத்தான் யூஸ் பண்றேன்னு சொல்ல வந்தேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//அத்தனை பேருமே பொம்பளைங்கதான்.. எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கிட்டே இருக்குறது..//

என்ன ஆளுன்ன நீங்க பொண்ணுங்களை பார்க்காம ஆம்புளைங்களையா பார்ப்பீங்க! எவ்வளோ நேரம் பார்த்தாலும் அலுக்காதுன்னே பெண்ணின் அழகு! (அதுக்கு எல்லாம் ஒரு ரசனை வேண்டும்:))))]]]

அடப்பாவி..

கல்யாணமானவன் மாதிரி கண்ணியமா பேசப் பழகுடா..!

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//என் சோகக் கதையை முழுசாகச் சொல்லி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அத்தனை பெண்களும் என்னைச் சுற்றித்தான் இருந்தார்கள்.//

அண்ணே என்னான்னு தெரியல, தலைநகரத்தில் வடிவேலு கதை சொல்லும் சீன் நினைவுக்கு வந்து சிரிப்பு சிரிப்பா வருது:) நான் என்ன செய்யட்டும்:)]]]

எல்லாருக்கும் என்னைய பார்த்தா காமெடியன் மாதிரிதான் தெரியுது..!!!

என்ன செய்ய.. நான் வாங்கி வந்த வரம் அப்படி..?

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//தான் ஒரு பெண்ணாகவும் இருப்பதால் தன் பேச்சை அந்த அலுவலகத்தில் இருக்கும் சக ஆண் ஊழியர்கள் கேட்க மறுப்பதாக ஆஃப் தி ரெக்கார்டாக சொன்னார். //

அண்ணே உங்க தனியார் மய யோசனை சரி இல்லை, பேசாம அவுங்க புருசனை லைன் மேன் ஆக்கிட்டோம் என்று வெச்சுக்குங்க பேசாம சொன்ன பேச்சு கேட்டு ”கனெக்சன்” கொடுத்துக்கிட்டு இருப்பார்! அல்லோ போன் லைனுக்கு சொன்னேன்]]]

ரொம்ப நல்ல யோசனை.. இதை அப்படியே மன்னமோகனசிங்குக்கு அனுப்பி வைக்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

அல்லோ அண்ணாத்தே என்னதான் உங்க பதிவா இருந்தாலும் கும்மிக்கிட்டு இருக்கும் பொழுது ஊடால ஊடால “உண்மைதமிழன்” என்ற பெயரில் கமெண்ட் போட்டு என் மூட் ஸ்பாயில் பண்ணீட்டிங்க! சோ ஐ ஆம் கோயிங் பிரம் திஸ் பிளேஸ்!!! திரும்ப இந்த தப்ப செய்யாதீங்க:)))]]]

தம்பி.. தம்பி.. கோச்சுக்காத கண்ணு..

எல்லாம் முடிஞ்சப்புறம்தான் நான் உன் கமெண்ட்டுகளையே பார்த்தேன்.

முன்னாடியே பார்த்திருந்தா நிறுத்தியிருந்திருப்பேன்.. சரி. சரி.. இதே மாதிரி இனிமே வர்ற எல்லா பதிவுக்கும் வந்து கமெண்ட்டை போட்டிரு..

வாழ்க வளமுடன்..!

உண்மைத்தமிழன் said...

[[[புருனோ Bruno said...
அது எப்படி சார் உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது..?]]]

இதுதான் ஸார் நான் வாங்கி வந்த வரம்..!

இப்பவாவது புரிஞ்சுக்குங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[புருனோ Bruno said...
//தனியார் மயம் இதற்கு தீர்வாகாது. அவர்கள் வேறு மாதிரி கொள்ளை அடிப்பார்கள். அரசுத் துறையில் லஞ்சம் பிரச்சினை என்றால் தனியார் துறையில் அவர்களே பிரச்சினை. லஞ்சத்தை எல்லாரும் சேர்ந்து போராடினால்தான் ஒழிக்க முடியும். இங்கு பிரச்சினை என்னவென்றால் நாம் ஒவ்வொருவருமே corrupted. நமக்குத் தேவையானால் லஞ்சம் கொடுக்கவும் சட்டத்தை மீறவும் தயாராகவே இருக்கிறோம். அதுதான் பிரச்சினை. நாம் நேர்மையாக இருந்தால் நம்மால் இது போன்றவற்றை சகித்துக்கொள்ள முடியாது. ஊர் கூடி தேர் இழுக்கப்படும். லஞ்சம் ஒழியும். அதை விட்டுவிட்டு தனியார்மயமென்பது தீர்வாகாது.//

உண்மைத்தமிழன் அண்ணாச்சி கேட்கிறதா?]]]

கேக்குறேன்தான்..

தனிப்பட்ட சரவணனின் கோபம்தான் அது..

தனியார் மயம் என்றால் நிறுவனத் தலைவர்கள் அடிக்கும் கொள்ளை தனியாகப் போய்விடும். ஆனால் நிறுவன ஊழியர்களின் கொள்ளை நிறுத்தப்படும் என்பது எனக்குப் புரிகிறது.

ஆனால் இங்கே எனக்கு என் பிரச்சினைதான் பெரிதாகத் தெரிகிறது.

அவ்வளவே..!

உண்மைத்தமிழன் said...

[[[விஜய் said...
அரசாங்கத் துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் அரசியல்வாதியாக அல்லது ரவுடியாக (2ம் ஒன்றே) இருக்க வேண்டும். இல்லையானால் அவர்கள் கேட்பதற்கு முன்பே நீங்களாகவே பரிசளிக்க(?) வேண்டும். பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வீட்டிற்கு என்றhல் அதற்கு லஞ்சமா ஒரு ரேட், கடையாக அதற்கு ஒரு ரேட், பிராட்பேண்டுக்கும் ஒரு ரேட் என்று நிர்மாணித்துள்ளார்கள். அதை கொடுத்தால் நீங்கள் கூப்பிட்டவுடன் வருவார்கள். இதெல்லாம் சகஜமப்பா.... நானும் கோபப்பட்டு நொந்நு நுhலாகித்தான் அவர்களின் வழிக்கு வந்துவிட்டேன்]]]

விஜய்..

உங்களைப் போன்ற ஒரு சிலர் செய்கின்ற தவறால்தான் என்னைப் போன்றவர்களும் மாட்டிக் கொள்கிறார்கள்.

காலதாமதமானாலும் பரவாயில்லை என்று லஞ்சம் கொடுக்காமல் சாதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[SP.VR. SUBBIAH said...
//தனியார்மயம் இதற்கு தீர்வாகாது. அவர்கள் வேறு மாதிரி கொள்ளை அடிப்பார்கள். அரசுத் துறையில் லஞ்சம் பிரச்சினை என்றால் தனியார் துறையில் அவர்களே பிரச்சினை. லஞ்சத்தை எல்லாரும் சேர்ந்து போராடினால்தான் ஒழிக்க முடியும். இங்கு பிரச்சினை என்னவென்றால் நாம் ஒவ்வொருவருமே corrupted. நமக்குத் தேவையானால் லஞ்சம் கொடுக்கவும் சட்டத்தை மீறவும் தயாராகவே இருக்கிறோம். அதுதான் பிரச்சினை. நாம் நேர்மையாக இருந்தால் நம்மால் இது போன்றவற்றை சகித்துக்கொள்ள முடியாது. ஊர் கூடி தேர் இழுக்கப்படும். லஞ்சம் ஒழியும். அதை விட்டுவிட்டு தனியார் மயமென்பது தீர்வாகாது.//

ரிப்பீட்டோ ரிப்பீட்ட்டு உனா தானா!]]]

ஓகே.. ஓகே.. வாத்தியாரே..!

உண்மைத்தமிழன் said...

[[[அக்பர் said...
அப்ப எந்த சேவைதான் சிறந்தது. ஒரே குழப்பமா இருக்கே. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க.]]]

ஆளுக்கொண்ணு சொல்றாங்க அக்பர் ஸார்..

நானும் குழப்பத்துலதான் இருக்கேன்..!

Unknown said...

//ஒரு அம்மா என்னவோ ஏதோன்னு நினைச்சு ஓடி வந்து “சார் சாப்பிட்டீங்களா.. தண்ணி குடிக்கிறீங்களா?”ன்னு கேட்டு தண்ணியெல்லாம் கொடுத்துட்டு, “சொல்லுங்க ஸார்.. என்ன பிரச்சினை..” என்றார்.. என் சோகக் கதையை முழுசாகச் சொல்லி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அத்தனை பெண்களும் என்னைச் சுற்றித்தான் இருந்தார்கள்.//

கங்கைக்கரைத் தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம்
உண்மைத்தமிழன் நடுவினிலே. கன்னிராசி கன்னாபின்னான்னு வொர்க்கவுட் ஆகுதா முருகா?

Unknown said...

அண்ணனுக்குதான் எவ்வளவு பிரச்சினை. கேட்கவே மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. பிரச்சினை/பிரச்சினை இல்லை என்பவர்களுக்கு. ஒவ்வொரு ஸ்தாபனங்களிலும் ஒரு சில நல்லவர்களும் இருப்பார்கள். பல கெட்டவர்கள் இருப்பதைப் போல. நம் நேரம் நன்றாக இருந்தால் நமக்கு நல்லவர்கள் கிடைப்பார்கள். இல்லாவிட்டால் இப்படிதான் தொல்லை. லஞ்சத்திற்கு எதிராக அனைவரும் போராடினால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.

எங்கள் ஊரிலும் லஞ்சம் இருக்கிறது. ஆனால் இதுபோல் சில்லரை விசயத்திற்கெல்லாம் கேட்க மாட்டார்கள். இதைப் பற்றி விளக்க ஆரம்பித்தால் அண்ணனுடைய பதிவை விட என்னுடைய் பின்னூட்டம் நீளமாக இருக்கும்.

உண்மைத்தமிழன் said...

///ராஜா | KVR said...

//ஒரு அம்மா என்னவோ ஏதோன்னு நினைச்சு ஓடி வந்து “சார் சாப்பிட்டீங்களா.. தண்ணி குடிக்கிறீங்களா?”ன்னு கேட்டு தண்ணியெல்லாம் கொடுத்துட்டு, “சொல்லுங்க ஸார்.. என்ன பிரச்சினை..” என்றார்.. என் சோகக் கதையை முழுசாகச் சொல்லி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அத்தனை பெண்களும் என்னைச் சுற்றித்தான் இருந்தார்கள்.//

கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் உண்மைத்தமிழன் நடுவினிலே. கன்னிராசி கன்னாபின்னான்னு வொர்க்கவுட் ஆகுதா முருகா?///

"ஏண்டா இந்த ராசிக்காரனா பொறந்து தொலைஞ்சோம்"னு வருத்தமா இருக்கு.. இதுல நீங்க வேற..?!!!

உண்மைத்தமிழன் said...

///ananth said...
அண்ணனுக்குதான் எவ்வளவு பிரச்சினை. கேட்கவே மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.///

ஆனந்த் தம்பி..

ஆறுதலுக்கு மிக்க நன்றி..!

[[[பிரச்சினை/பிரச்சினை இல்லை என்பவர்களுக்கு. ஒவ்வொரு ஸ்தாபனங்களிலும் ஒரு சில நல்லவர்களும் இருப்பார்கள். பல கெட்டவர்கள் இருப்பதைப் போல. நம் நேரம் நன்றாக இருந்தால் நமக்கு நல்லவர்கள் கிடைப்பார்கள். இல்லாவிட்டால் இப்படிதான் தொல்லை.]]]

நமக்கு இப்ப அஷ்டமத்து சனி நடக்குதாம்.. வாத்தியாரே சொல்லிட்டாரு..

[[[லஞ்சத்திற்கு எதிராக அனைவரும் போராடினால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.]]]

இந்த ஒத்துமைதான் கிடைக்க மாட்டேங்குது..

[[[எங்கள் ஊரிலும் லஞ்சம் இருக்கிறது. ஆனால் இது போல் சில்லரை விசயத்திற்கெல்லாம் கேட்க மாட்டார்கள். இதைப் பற்றி விளக்க ஆரம்பித்தால் அண்ணனுடைய பதிவை விட என்னுடைய் பின்னூட்டம் நீளமாக இருக்கும்.///

எங்க ஊர்ல இது மாதிரி சில்லறை விஷயத்தை ஊழியர்களும், பெரிய விஷயத்தை நிர்வாகிகளும் பகிர்ந்து கொள்வார்கள்.

மொத்தத்தில் இந்தியாவில் லஞ்சம் என்பது கூட்டுக் கொள்ளை ஆனந்து..!

Anonymous said...

உண்மைதமிழனே இது யார் தவறு?

அன்பு தம்பி உண்மை தமிழனுக்கு ...
“பி.எஸ்.என்.எல் தீபிகா படுகோனே - கூட்டணி வைத்து எனக்கு செய்த கொடுமைகள்” என்ற தலைப்பிட்ட தங்கள் பதிவு கண்டு அதிர்ச்சி அடைந் தேன்..... வலையுலகில் ஜாம்ப வானாகிய தாங்கள், அனுபவத்தின் அடிப்படையில் கூறியுள்ள கருத்து கண்டு!

ஏமாற்றப்படுவதில் இரண்டுவகை உண்டு. ஒன்று விஷயம் தெரியாமல் நாம் ஏமாறுவது. இதற்கு நாம்தான் முழு பொறுப்பு. மற்றது மோசடி மூலம் நாம் ஏமாற்றப்படுவது. இதற்கு நாம் பொறுப்பு கிடையாது.

பி.எஸ்.என்.எல் தொலைபெசி இணைப்பு கொடுக்க வந்தபொழுது,“உங்க வீடு ரோட்டி லிருந்து ரெம்ப உள்ள இருக்கு சார்.... என்கிட்ட இப்ப நீளமான வயர் இல்லை. அதுனால உங்ககிட்ட வாங்கிக்க சொன்னாங்க. மொத மாச பில்லுல இந்த 300 ரூபாயை மைனஸ் பண்ணிருவாங்க.” என்று லைன் மேன் கூறியுள்ளார். அதை எப்படி நம்பினீர்கள்?.

பொதுவாக எந்த அலுவலகத்திலும் ( தனியாராக இருந்தாலும் சரி அரசு துறையாக இருந்தாலும் சரி) வாய்மொழியாக தகவல் அல்லது உத்தரவு கொடுக்க முடியாது. இறுதி முடிவெடுக்கும் அதிகார, கொண்ட நீதிமன்றங்கலளில் கூட தீர்ப்பு வாசிக்கப் பட்டாலும் அதிகாரப் பூர்வமாக எழுத்து மூலம் வழங்கப் படுவதை கவனிக்க வேண்டும். அப்படியிருக்கும் பொழுது, எழுத்து மூலமான உத்தரவை லைன் மேனிடம் கேட்க வேண்டும் என, ஏன் தோணவில்லை?

ரஸீது இல்லாமல் கொடுக்கும் எந்த தொகைக்கும் எதிராளி பொறுப்பு கிடையாது என்பது சட்டம். இது எல்லொருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்பொழுது எதன் அடிப்படையில் ரஸீது இல்லாமல் பணம் கொடுத்தீர்கள்?

சரி இதுதான் நடைமுறை என் தாங்கள் நினைத்தது சரியென்றே வைத்துக்கொண்டா லும், இதே நடை முறையை பின்பற்றாமல் ஏன் விண்ணப்ப படிவத்துடன் டெப்பாசிட் தொகையை டி.டி ஆக எடுத்து அலுவலகத்தில் செலுத்த சொன்னார்கள்? என்ற அடிப்படை சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்!. ஆனால் ஏற்படவில்ல என்பதே உண்மை.

அதற்கு பின் டிஸ்கனெக்ஷன், ரிகனெக்ஷன் சம்பவங்கள்! இந்த அனுபவங்களின் அடிப் படையில் தனியார் நிறுவனங்களில் பிரச்சனையே இல்லை (?) .. (இக்கரைக்கு அக்கரை பச்சை) அதனால் பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கிவிடலாம் என தாங்கள் கூறுவது “மூட்டைப்பூச்சி கடிக்கு பயந்து வீட்டை தீவைத்து கொளுத்தலாம்” என்பது போல உள்ளது.

சட்டப்படியான நம் உரிமைகளை பெற நமது கடமைகள் என்ன என்பதை புரிந்து அதன் படி செய்தால் பெருமளவு பிரச்சனைகள் ஏற்படாது என்பது எனது அனுப வத்தில் புரிந்து கொண்ட உண்மை. அதோடு பி.எஸ்.என்.எல் - ல் நம்மை ஏமாற்றி பில் மூலம் பணம் பறிக்க முடியாது. ஆனால் தனியார் நிறுவனங்கள் புதிய இணைப்பு விஷயத்தில் தாமதமின்றி இணைப்பு கொடுப்பது, லஞ்சம் கேட்பதில்லை என்பது உண்மைதான். அதகு பின் தான் ஆப்பு வைப்பார்கள் பில்லில். இது நூற்றுக்கு நூறு உண்மை.
என்னடா இவன் பி.எஸ்.என்.எல் -ல் வேலை பார்க்கிறானா? அல்லது இவனுக்கு இலவச தொலைபேசி இணைப்பு கொடுத்திருக்கிறார்களா? இப்படி சப்போர்ட் பண்றானே என்று நினைக்க வேண்டாம். கொலை வெறியோடு 3 நுகர்வோர் வழக்கு களை போட்டு, அவர்களை துண்டை காணோம், துணியை காணோம் என்று அவர்களை ஓட ஓட விரட்டி, கன்ஸுமரால் என்ன செய்ய முடியும் என்பதை புரிய வைத்தவன் நான்.
நாம் எல்லோருமே அவரவர் துறையில் கெட்டிக்காரர்களாக இருந் தாலும் பொது வான விஷயங் களை தெரிந்து கொள்வதில்லை. எனது அனுபவம் பற்றி நான் என் பிளாக்கில் எழுதினால் அது மற்றவர்களுக்கு பயன்படும் என்பதால் எழுதலாம் என் நினைக்கிறேன்.

மணிப்பக்கம் said...

;)
எனக்கு இதவிட கொடுமை நடந்தது, அலுப்பா இருக்குங்க, ஊர்ல இருந்த கொஞ்ச நாள் interest ah ஓடுனது bsnl புண்ணியம்தான், ஒரு நாள் அம்மா, என் தங்கையிடம், 'மணி பத்தாவ போவுது புள்ள அவன் டெலிபோன் ஆபிஸூக்கு போக வேணாமா, அவனுக்கு இந்த ஈடு எடுத்து சீக்கிரம் வை ன்னாங்களே, அன்னியிலிருந்து அந்த பக்கம் போகல.... இந்தியா உண்மையா உருப்படுணும்னா, பாக் நம்ம மேல அணுகுண்டு போட்டாத்தான் உண்டு!

DHANS said...

ithu ennoda soga kathai.....

http://dhans4all.blogspot.com/2008/06/blog-post_8535.html

karishna said...

எனக்கும் இதே அனுபவம் தான்.....இப்போ broadbande வேண்டாம்ணு கட் பண்ணிடோம் ...ஆணியே புடுங்க வேண்டாம்..


ரொம்ப அக்கிரமம்

நித்யன் said...

விதி வலியதுதான் போல..

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்... பழமொழி சரியாத்தான் சொல்லி வச்சிருக்காங்க..

உங்கள் வருத்தத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்பு நித்யன்

உண்மைத்தமிழன் said...

திரவிய நடராஜன் ஸார்..

அந்த லைன்மேன் வந்தபோது நான் ஆபீஸில் இருந்தேன். போனில்தான் பேசினேன். அந்த நேரத்தில் ரசீது வாங்க எனக்குத் தோணவில்லை. அவசரத்தில் கொடுக்கும்படி சொல்லிவிட்டேன். அதற்கான பரிசைத்தான் அனுபவித்திருக்கிறேன்..

இந்த ஒரு அனுபவமே எனக்குப் போதுமானது. இனி இது போல் ஏமாற மாட்டேன்.

தங்களுடைய பொறுமையான நீண்ட பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள்..!

வாழ்க வளமுடன்..

உண்மைத்தமிழன் said...

[[[மணிப்பக்கம் said...
எனக்கு இதவிட கொடுமை நடந்தது, அலுப்பா இருக்குங்க, ஊர்ல இருந்த கொஞ்ச நாள் interest ah ஓடுனது bsnl புண்ணியம்தான், ஒரு நாள் அம்மா, என் தங்கையிடம், 'மணி பத்தாவ போவுது புள்ள அவன் டெலிபோன் ஆபிஸூக்கு போக வேணாமா, அவனுக்கு இந்த ஈடு எடுத்து சீக்கிரம் வைன்னாங்களே, அன்னியிலிருந்து அந்த பக்கம் போகல.... இந்தியா உண்மையா உருப்படுணும்னா, பாக் நம்ம மேல அணுகுண்டு போட்டாத்தான் உண்டு!///

ஐயோ..

எல்லோரும் செத்த பின்னாடி யாருக்காக போன் கனெக்ஷன் வாங்குறது..?

இது மாதிரி ஆளுங்களைத் தண்டிக்கணும்னா நியாயமான, உண்மையான அரசியல் தலைவர்கள் தீர்க்கமான முடிவோடு வரணும்..

எனக்குத் தெரிஞ்சு அப்படியொரு புண்ணியம் நமக்குக் கிடைக்கப் போறதில்லை.

ஸோ, இப்படியே புலம்ப வேண்டியதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[DHANS said...
ithu ennoda soga kathai.....
http://dhans4all.blogspot.com/2008/06/blog-post_8535.html]]]

ஹா... ஹா.. நல்ல காமெடி.. எனக்கு ஒரு தோஸ்த்து இருக்காருங்கப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[karishna said...
எனக்கும் இதே அனுபவம் தான்..... இப்போ broadbande வேண்டாம்ணு கட் பண்ணிடோம் ... ஆணியே புடுங்க வேண்டாம்.. ரொம்ப அக்கிரமம்]]]

ஐயோ.. பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் போலிருக்கிறதே..

பி.எஸ்.என்.எல். இவ்ளோ பாவத்தை சம்பாதித்து வைத்து என்ன செய்யப் போகிறது..?!!!

உண்மைத்தமிழன் said...

[[[நித்யகுமாரன் said...

விதி வலியதுதான் போல..

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்... பழமொழி சரியாத்தான் சொல்லி வச்சிருக்காங்க..

உங்கள் வருத்தத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்பு நித்யன்]]]

தம்பி நித்யா..

பார்த்தாயா..? பிரச்சினையெல்லாம் எப்படி வருதுன்னு..!!!

பங்கெடுக்கிறேன்னு சும்மா எழுத்தால சொன்னா எப்படி..?

ஒரு மாச பிராட்பேண்ட் செலவை ஏத்துக்கிட்டா எவ்ளோ நல்லாயிருக்கும்..?

மணிஜி said...

//பிஎஸ்னலை வன்மையாக கண்டிக்கிறேன்.உங்களுக்கு கனெக்‌ஷன் கொடுத்ததுக்கு...

உண்மைத்தமிழன் said...

///தண்டோரா ...... said...
பிஎஸ்னலை வன்மையாக கண்டிக்கிறேன். உங்களுக்கு கனெக்‌ஷன் கொடுத்ததுக்கு...///

ஏன்.. ஏன்.. ஏன்..?

நானே 300 ரூபா போச்சேன்னு கவலைல இருக்கேன்.. நீங்க வேற சாமி..!

Unknown said...

////தனியார்மயம் இதற்கு தீர்வாகாது. அவர்கள் வேறு மாதிரி கொள்ளை அடிப்பார்கள். அரசுத் துறையில் லஞ்சம் பிரச்சினை என்றால் தனியார் துறையில் அவர்களே பிரச்சினை. லஞ்சத்தை எல்லாரும் சேர்ந்து போராடினால்தான் ஒழிக்க முடியும். இங்கு பிரச்சினை என்னவென்றால் நாம் ஒவ்வொருவருமே cஒர்ருப்டெட். நமக்குத் தேவையானால் லஞ்சம் கொடுக்கவும் சட்டத்தை மீறவும் தயாராகவே இருக்கிறோம். அதுதான் பிரச்சினை. நாம் நேர்மையாக இருந்தால் நம்மால் இது போன்றவற்றை சகித்துக்கொள்ள முடியாது. ஊர் கூடி தேர் இழுக்கப்படும். லஞ்சம் ஒழியும். அதை விட்டுவிட்டு தனியார்மயமென்பது தீர்வாகாது./////

லாபம் என்பது கொள்ளை அல்ல.அது முதலாளியின் உழைப்புக்கு கிடைக்கும் ஊதியம்.பொதுமக்களுக்கு சிறப்பாக சேவை செய்யாவிட்டால் அந்த ஊதியம் அவருக்கு கிடைக்காது.

ஒரு தனியார் கம்பனியில் அதிக விலையில் பொருள் விற்றால் இன்னொரு கம்பனிக்கு மாறமுடியும்.அரசு கம்பனியில் அப்படி செய்யமுடியாது.

டீக்கடை நடத்தவும், ஓட்டல் நடத்தவும்,விமான கம்பனி நடத்தவும், டெலிபோன் கம்பனி நடத்தவும் அரசாங்கத்துக்கு எந்த தேவையும் இல்லை.அரசின் பணி சாலை போடுவதும், பள்ளிகள் கட்டுவதும், சுகாதாரத்தை மேம்படுத்துவதும் போன்ற அடிப்படை பணிகளே ஆகும்.

உண்மைத்தமிழன் said...

///செல்வன் said...

லாபம் என்பது கொள்ளை அல்ல.அது முதலாளியின் உழைப்புக்கு கிடைக்கும் ஊதியம்.பொதுமக்களுக்கு சிறப்பாக சேவை செய்யாவிட்டால் அந்த ஊதியம் அவருக்கு கிடைக்காது.

ஒரு தனியார் கம்பனியில் அதிக விலையில் பொருள் விற்றால் இன்னொரு கம்பனிக்கு மாறமுடியும்.அரசு கம்பனியில் அப்படி செய்யமுடியாது.

டீக்கடை நடத்தவும், ஓட்டல் நடத்தவும்,விமான கம்பனி நடத்தவும், டெலிபோன் கம்பனி நடத்தவும் அரசாங்கத்துக்கு எந்த தேவையும் இல்லை.அரசின் பணி சாலை போடுவதும், பள்ளிகள் கட்டுவதும், சுகாதாரத்தை மேம்படுத்துவதும் போன்ற அடிப்படை பணிகளே ஆகும்.///

கொள்ளை லாபம் அடித்தாலும் அதில் பங்கு அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தானாகவே போய்ச் சேரும்.. இதுவும் ஒரு வகையில் லஞ்சம்தான்.. ஊழல்தான்..

எனக்கு 300 ரூபாய் பெரியது என்பதால் நான் ஆட்சேபிக்கிறேன். 300 ரூபாய் பெரிதில்லை என்பவர்கள் கூலாகக் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். அவர்களால்தான் என்னைப் போன்றவர்களுக்கு பாதிப்பு.

திருந்த வேண்டியது பொதுமக்கள்தான்..

தனியார் கைக்குச் சென்றால் கட்டண விகிதத்தை உயர்த்தித்தான் பணத்தை பிடுங்க முடியும்.. இல்லாவிடில் பலவிதங்களிலும் மறைமுகக் கட்டணங்களை புகுத்தி கொள்ளையடிக்கலாம். அப்போது என் கண்ணுக்கு அது தெரியப் போவதில்லை. நானும் ஆட்சேபிக்கப் போவதில்லை.. இப்போது தெரிவதால் வன்மையாகக் கண்டிக்கிறேன்.. இதுதான் உண்மை..

எனக்குப் பிடிக்கவில்லையெனில் அல்லது அந்த மறைமுகக் கொள்ளையை உணர்ந்தேன் என்றால் நானே அந்த நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறி விடுவேன்.. ஸோ.. இதனால் எனக்குப் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும்..

செல்வன் ஸார்.. தனியார் மயமாக்குவதில் பாதகமும் உண்டு.. சாதகமும் உண்டு..

பாதகம் நாட்டுக்கு என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

சாதகம் என்னைப் போன்ற சாதாரண பிரஜைகளுக்கு என்பதிலும் எனக்குச் சந்தேகமில்லை.

Unknown said...

உண்மைதமிழன்,

தனிமனிதனுக்கு நன்மையை தரும் எதுவும் நாட்டுக்கு தீமையை தராது.தனிமனிதனின் நலனை பலிகொடுத்துவிட்டு எந்த நாடும் மேன்மையைடையவும் முடியாது.மக்களுக்காக தான் நாடே அன்றி நாட்டுக்காக மக்கள் அல்ல.

வணீகத்தில் நேர்மையான போட்டி நிலவ அரசு வழிவகுத்தால் கொள்ளைலாபம் அடிக்க முடியாது.வணிகத்தில் அரசின் குறுக்கீடு அதிக அளவில் இருப்பதாலும், உங்களை போலவே கம்பனி நடத்தும் முதலாளிகளும் கோடிக்கணக்கில் லஞ்சத்தை தரவேண்டி இருப்பதாலும் தான் தனியார் கம்பனிகள் நேர்மையான போட்டியில் ஈடுபட முடிவதில்லை.ஒரு போன் கனெக்சன் வாங்கவே உங்களுக்கு இத்தனை பெண்டு நிமிர்கிறதே?ஓராயிரம் லைன்சென்ஸுகளும், பர்மிட்டுகளும் வாங்கி தொழில் செய்யும் தனியாருக்கு பிரச்சனை எந்த அளவில் இருக்கும்?

வாடிக்கையாளரை நீண்டநாள் ஏமாற்றி எந்த தனியார் கம்பனியும் சர்வைவ் ஆகவே முடியாது.அதை சந்தையில் நிலவும் போட்டி கவனித்துகொள்ளும்.

Prabhu said...

நான் சொல்வது வித்தியாசமாக எண்ண வேண்டாம். நான் நிறைய அலுவலகங்களுக்கு சென்றதில்லை. ஆனால் என்னை பொறுத்தவரை Bsnl அரசு அலுவலகங்களிலேயே கொஞ்சம் தேவலை என தோன்றுகிறது. எனக்கான வேலை அனைத்தும் சில நாட்களிலேயே முடித்து வைக்கப் பட்டுள்ளது. மரியாதையும் இருந்தது. ஒருவேளை உங்கள் ஏரியா அலுவ்லகம் சரியில்லை என நினைக்கிறேன்.

வால்பையன் said...

செல்வம்!

தனியார்மயத்தை ஆதரித்த அமெரிக்கா ஏன் மண்ணை கவ்வியது!?

உண்மைத்தமிழன் said...

///செல்வன் said...

உண்மைதமிழன்,

தனி மனிதனுக்கு நன்மையை தரும் எதுவும் நாட்டுக்கு தீமையை தராது. தனி மனிதனின் நலனை பலி கொடுத்துவிட்டு எந்த நாடும் மேன்மையைடையவும் முடியாது. மக்களுக்காகதான் நாடே அன்றி நாட்டுக்காக மக்கள் அல்ல.
வணீகத்தில் நேர்மையான போட்டி நிலவ அரசு வழிவகுத்தால் கொள்ளை லாபம் அடிக்க முடியாது. வணிகத்தில் அரசின் குறுக்கீடு அதிக அளவில் இருப்பதாலும், உங்களை போலவே கம்பனி நடத்தும் முதலாளிகளும் கோடிக்கணக்கில் லஞ்சத்தை தரவேண்டி இருப்பதாலும்தான் தனியார் கம்பனிகள் நேர்மையான போட்டியில் ஈடுபட முடிவதில்லை.ஒரு போன் கனெக்சன் வாங்கவே உங்களுக்கு இத்தனை பெண்டு நிமிர்கிறதே? ஓராயிரம் லைன்சென்ஸுகளும், பர்மிட்டுகளும் வாங்கி தொழில் செய்யும் தனியாருக்கு பிரச்சனை எந்த அளவில் இருக்கும்?
வாடிக்கையாளரை நீண்டநாள் ஏமாற்றி எந்த தனியார் கம்பனியும் சர்வைவ் ஆகவே முடியாது. அதை சந்தையில் நிலவும் போட்டி கவனித்துகொள்ளும்.///

செல்வன் ஸார்..

நீங்கள் சொல்வது புரிகிறது..! ரிலையன்ஸ் போன் நிறுவனம் ஆரம்பித்த முதல் வருடத்தில் 500 கோடி நஷ்டம் என்றார்கள். நஷ்டமடைந்த அந்தப் பணம் முழுவதும் அவர்களுடைய பணமல்ல.. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடைய பணம்.. அவர்கள் அதை எடுத்து வழித்துக் கொண்டார்கள். இது போல அவர்களுடைய தொழில் போட்டிக்காக செலவழிக்கின்ற தொகைகூட முறைகேடானதுதான்..

ஆனால் தட்டிக் கேட்க வேண்டிய அரசுகளே அவர்கள் முன் கை கட்டி நிற்கும் நிலை இருப்பதால் நாம் எதுவும் செய்ய முடியாததுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[pappu said...
நான் சொல்வது வித்தியாசமாக எண்ண வேண்டாம். நான் நிறைய அலுவலகங்களுக்கு சென்றதில்லை. ஆனால் என்னை பொறுத்தவரை Bsnl அரசு அலுவலகங்களிலேயே கொஞ்சம் தேவலை என தோன்றுகிறது. எனக்கான வேலை அனைத்தும் சில நாட்களிலேயே முடித்து வைக்கப் பட்டுள்ளது. மரியாதையும் இருந்தது. ஒருவேளை உங்கள் ஏரியா அலுவ்லகம் சரியில்லை என நினைக்கிறேன்.]]]

பாப்பூ..

என் ஏரியா அலுவலகம் சரியில்லை..

இதுதான் உண்மை என்று பலருடைய பின்னூட்டங்களில் இருந்து தெரிகிறது..

மக்கள்ஸ் எல்லாரும் ஒரே மாதிரியாவா இருக்காங்க..?!!!

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...
செல்வம்! தனியார் மயத்தை ஆதரித்த அமெரிக்கா ஏன் மண்ணை கவ்வியது!?]]]

அளவுக்கதிகமான சுதந்திர வர்த்தகம்..!

Unknown said...

வால் பையன்,

பொருளாதார மந்தநிலை அமெரிக்காவில்,ஐரோப்பாவில்,இந்தியாவில்,உலகில் பலதரம் ஏற்பட்டிருக்கிறது.இதை வைத்து அமெரிக்கா மண்ணை கவ்வியது என்பதும் தனியார்மயம் தோற்றுவிட்டது என்பதும் சரியல்ல.அமெரிக்கா என்ற கண்டம் கண்டுபிடிக்கப்படாததுக்கு முந்தி, அரசு என்ற அமைப்பே மனிதனுக்கு தெரியாததுக்கு முந்தியே தோன்றியது தனிநபரின் சுயதொழில்.அதுக்கு தோல்வியே கிடையாது.

உண்மை தமிழன்,

கம்பனியில் ஒவ்வொரு வருடமும் லாபமும் வரும்,நஷ்டமும் வரும். 2007ல் ரிலையன்ஸ் டெலெகாமுக்கு லாபம் 900 கோடி.பங்ச்கு சந்தையில் லாபமும் வரும் நஷ்டமும் வரும் என்று தெரிந்துதான் பணம்போடுகிறார்கள்.அதனால் நஷ்டம் வருவதை முறைகேடு என்று சொல்லமுடியாது.இப்ப நான் முதல்போட்டு எதாவது மளிகைகடை நடத்துகிறேன் என வைத்துகொள்வோம்.அதில் லாபம் வந்தால் அது எனக்கு, நஷ்டம் வந்தாலும் அது எனக்குதான்.பங்கு சந்தையும் அந்த மாதிரிதான்.அது ஒரு முதலீடு.

வால்பையன் said...

//கம்பனியில் ஒவ்வொரு வருடமும் லாபமும் வரும்,//

லாபம் வந்தால் கம்பெனிக்கு,
நட்டம் வந்தால் மக்களுக்கு!

நிலப்பிரபுத்துவ முறை ஆதிகாலத்திலிருந்து இருக்கிறது ஒத்து கொள்கிறேன் செல்வம்! ஆனால் அனைத்து பிரச்சனைகளும் அதனால் தானே ஆரம்பிக்கிறது!

முக்கியமா இந்தியா நாசமா போனதுக்கு அதானே காரணம், ஆங்காங்கே பிரிந்து கிடந்த மன்னர்களை, நிலபிரபுகளை பயன்படுத்தி தானே வெள்ளையன் நமக்கு ரிவிட் அடித்தான்!

தனியார்மயம் வேண்டும் தான்! ஆனால் அதே துறையில் ஒப்புக்காவது அரசும் இருக்கவேண்டும், இல்லையென்றால் தனியார் வைத்தது தான் சட்டம் என்றாகிவிடும்!

Unknown said...

இல்லை வால்பையன்,

பங்கு சந்தையில் லாபம்,நஷ்டம் என எது வந்தாலும் அனைத்தும் பங்குதாரர்களுக்கே.

நிலபிரபுத்துவ முறை என்பது விவசாயம் தோன்றியபின் தோன்றியது.விவசாயம் தோன்றுவதற்கும் முன்பே சுதந்திர பொருளாதாரம் தோன்றிவிட்டது.

அரசு தொழிலில் இறங்கினால் மகக்ள் வரிப்பணம் தான் நாசமாகும்.ஏர் இந்தியாவின் நஷ்டத்தை சரிப்படுத்த டில்லி மாநில பட்ஜட்டுக்கு சமமான தொகையை கேட்கிறார்களாம்.ஏழைநாட்டுக்கு இத்தனை செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கா?இந்த காசில் எத்தனை அரசு கல்லூரிகள் கட்டலாம்,அரசு ஆஸ்பத்திரிகள் கட்டி எத்தனை உயிர்களை காப்பாற்றலாம்?

ஜெட் ஏர்வேசுக்கும், மல்லையாவுக்கும் விமானதொழிலில் நஷ்டம் வந்தால் அதனால் அவர்களுக்கும் அவர்கள் கம்பனியில் முதலீடு செய்தவர்களுக்கும் தான் நஷ்டம்.மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் கம்பனியில் இப்படி ஆயிரகணக்கான கோடிகள் நஷ்டமானால் ஏழை,பாழை உயிரை கொடுத்து கட்டும் வரிபணம் தானே வீணாக போகிறது?

வால்பையன் said...

அரசு கல்லூரிகள், அரசு மருத்துமனைகள் ஒத்து கொள்கிறேன்!

விமானத்தை விட்டு தள்லுங்கள் அது அத்யாவிசய தேவையில்லை! ஆனால் வெகு முக்கிய தேவைகளே தினமும் அழியும் அல்லது அதிக வருமானம் தருவதாக இருக்கிறது! அதை அரசு தான் செய்ய வேண்டும் என்பது எனது கருத்து, மிக முக்கியமாக பெட்ரோல் மற்றும் இயற்கைவாயு!

ஷண்முகப்ரியன் said...

உங்கள் குமுறல்கள் மட்டுமே உண்மை.தீர்வுகள் கனவுகளே,சரவணன்.
சமூகமாகக் கூடி வாழத் தனிமனிதர்கள் சில விலைகளைத் தந்தே தீர வேண்டும்.

Unknown said...

நிலபிரபுத்துவ முறையால் தான் நம்மை காலனிபடுத்தினார்கள் என்பதும் தவறு.பிரிட்டிஷ் சமூகத்திலும் அப்போது நிலபிரபுத்துவ முறைதான் இருந்தது.சொல்லபோனால் பிரிட்டிஷ் கம்பனி ஒன்றுதான் இந்தியாவை காலனி ஆதிக்கதுபடுத்தியது.ஆக நிலபிரபுத்துவ முறை இருந்த நாடு இன்னொரு நிலபிரபுத்துவ முறை இருந்த நாட்டை காலனி ஆதிக்கதுட்படுத்தியது.

நிலபிரபுத்துவம்,விவசாயம் என்று எதுவுமே இல்லாமல் ஆதிவாசிகளாக வாழ்ந்த இனங்கள் பலவும் வட,தென் அமெரிக்காவில் வெள்ளையரால் அழித்தே ஒழிக்கப்பட்டன.அந்த காலகட்டத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஒரே ஜனதொகைதான். செவ்விந்திய இனம் முழுவதையும் அழித்தது போல் அவனால் நம்மை இனபடுகொலை செய்ய முடியவில்லை. காரணம் நம்மிடம் வலுவான பொருளாதார அமைப்பும், மன்னர்களும் இருந்ததால்.பிரிட்டிஷ்காரன் வருவதற்கு முன்னரே நாம் பீரங்கியும்,கப்பலும் வைத்திருந்தோம்.என்ன ஒற்றுமையின்மையால் தோற்றாம்.நிலபிரபுத்துவ முறையால் அல்ல.அதுதான் நம்மை காப்பாற்றீயது.

வால்பையன் said...

நான் சொல்ல வந்தது, ஆண்டான் அடிமை முறையை பயன்படுத்தி நம்மை ஆட்கொண்டான் என்று!

வெளிநாட்டிலும் இதோ போல் சாதி முறைகள் உண்டா! நண்பரே!?

Unknown said...

இந்தியாவில் பெட்ரோல் அதிகம் கிடைக்காது.வெளிநடடில் இருந்துதான் இறக்குமதி செய்யவேண்டும்.அதை சுத்திகரித்து பொதுமக்களுக்கு விற்பதை தனியார் செய்தால் அரசை விட நிறைய திறமையாக செய்வார்கள்.

பெட்ரோலியம் சுத்திகரிக்க பல லட்சம் கோடி செலவு ஆகும்.ரிலையன்ஸ் பெட்ரோலியம் கம்பனி 27,000 கோடி செலவில் புயல்வேகத்தில் ஆலைகள் அமைக்கிறது.ஜாம்நகர் ஆலை கட்டுவதை ரிகார்ட் பிரேன்ன்கிங் வேகத்தில் ரிலையன்ஸ் செய்ததாக சொல்வார்கள். இதையே அரசு செய்திருந்தால் இதை விட மும்மடங்கு செலவாகியிருக்கும்.ஆலை கட்ட பட்ஜெட்டில் மெதுவாக நிதி ஒதுக்கி, அரசியல்வாதிகளுக்கு காண்டிராக்ட் விட்டு இழுத்தடித்திருப்பார்கள்.தேவையற்ற நிதி விரயம்.மகக்ளுக்கும் இதனால் எந்த லாபமும் வந்திருக்காது.

Unknown said...

ஜாதிக்கும், தனியார் மயத்துக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா வால்பையன்?:-)

வால்பையன் said...

//ஜாதிக்கும், தனியார் மயத்துக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா வால்பையன்?:-) //

ஒற்றுமையின்மைக்கும், தனியார் மையத்துக்கும் சம்பந்தம் உண்டு!

Unknown said...

உலகெங்கும் பெரும்பாலும் தனியார் கம்பனிகள் தான் இருக்கின்றன.உலக நாடுகளில் அதனால் ஒற்றூமை இல்லமாலா போய்விட்டது?:-)

வால்பையன் said...

//உலகெங்கும் பெரும்பாலும் தனியார் கம்பனிகள் தான் இருக்கின்றன.உலக நாடுகளில்//

அதான் ஊத்திக்கிச்சே!
மீண்டும் அரசு உதவியில்லாமல் எங்குமே நிறுவனத்தை நடத்தமுடியவில்லை என்பது உண்மை தானே!

Unknown said...

நாம் ஒற்றுமையின்மையை பற்றிதானே பேசுகிறோம்?:-)

பொருளாதார மந்தம் வராதா நாடே கிடையாது வால்பையன்.1929ல் இதை விட மோசமான மந்தநிலை உலகெங்கும் வந்தது.அதனால் சுதந்திர பொருளாதாரம் தோற்றுவிட்டது என்றா அர்த்தம்?

கூகிள் அரசு கம்பனியா இருந்திருந்தா இப்ப நாம இருவரும் உரையாடிகொண்டே இருக்கமுடியாது:-)

வால்பையன் said...

//கூகிள் அரசு கம்பனியா இருந்திருந்தா இப்ப நாம இருவரும் உரையாடிகொண்டே இருக்கமுடியாது:-)//

நான் அதற்கு பி.எஸ்.என்.எல் இணையம் பயன்படுத்தி தான் உங்களிடம் உரையாடி கொண்டிருக்கிறேன்!

அநியாய விலையேற்றத்திற்கும், ஒரு சாரார் மட்டும் பொருளாதாரத்தில் உயருவதற்கும், அரசு தலையீடிள்ளாத தனியார் மையங்களே காரணம் என்பது என் கருத்து!

மேலும் அத்த்யாவிசய பொருள்கள் அல்லாது மற்ற விசயங்களில் அரசு மூக்கை நுழைக்க வேண்டியதில்லை!
நீங்கள் சொன்ன கூகுள் போல!

மங்களூர் சிவா said...

/
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[குசும்பன் said...

//அத்தனை பேருமே பொம்பளைங்கதான்.. எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கிட்டே இருக்குறது..//

என்ன ஆளுன்ன நீங்க பொண்ணுங்களை பார்க்காம ஆம்புளைங்களையா பார்ப்பீங்க! எவ்வளோ நேரம் பார்த்தாலும் அலுக்காதுன்னே பெண்ணின் அழகு! (அதுக்கு எல்லாம் ஒரு ரசனை வேண்டும்:))))]]]

அடப்பாவி..

கல்யாணமானவன் மாதிரி கண்ணியமா பேசப் பழகுடா..!

/

:)))))))))))

Unknown said...

வால் பையன்,

அத்தியாவசியம் என்பது உணவு, உடை, இருப்பிடம்.இது மூன்றும் நம் நாட்டில் தனியாரிடம் தான் இருக்கிறது.அரசாங்கம் விவசாயத்தை அரசுமயமாக்கி கூட்டுபண்ணைகள் அமைத்து விவசயம் செய்திருந்தால் நாட்டில் பஞ்சம் வந்து பலகோடி பேர் செத்திருப்பார்கள். அரசாங்கம் டெக்ஸ்டைல் மில்களை அரசுமயமாக்கி துணி விற்றிருந்தால் இன்று எல்லோருக்கும் மாதத்துக்கு ரெண்டு வேட்டி மட்டுமே கிடைத்திருக்கும்.

இம்மாதிரி அத்தியாவசிய சேவைகள் தனியாரிடம் இருப்பதால் தான் நாம் தப்பி பிழைக்கிறோம்.அரசால் லாபம் வரும் எந்த தொழிலையும் செய்யவே முடியாது.லாபம் வராத மக்கள் சேவைகளை மட்டும் அரசு செய்தால் போதும். உதாரணம் ரோடு போடுதல், பள்ளீகளை நடத்துதல்.ஆனால் துரதிர்ச்டவசமாக அரசு ரொட்டி கம்பனியையும், ஓட்டல்களையும், விமான கம்பனிகளையும், தகவல் தொழில்நுட்பத்தையும், டிவி, டெலிபோனையும்,கார் கம்பனிகளை நடத்திகொண்டு அதில் வரும் நஷ்டத்தை சமாளீக்கமுடியாமல் பள்ளிகள்,ஆசுபத்திரிகள் கட்டுவதை தனியாரிடம் விட்டுவிடுகிறது.

அரசு ராணூவம்,ஆசுபத்திரி,பள்ளிகள் போன்ற லாபம் வராத துறைகளை மட்டுமே நடத்தவேண்டும்.லாபம் வரும் துறையை நடத்தும் உரிமையை மக்களுக்கு தான் தரவேண்டும்.இது ஏழைகளுக்கு தான் நல்லது.தகவல் தொழில்நுட்பமும் அத்தியாவசிய துறை என்று சொல்லி அரசு கம்பனிகள் மட்டுமே அதை நடத்தியிருந்தால் இன்று நாராயணமூர்த்தி, ஆசிம் பிரேம்ஜி மாதிரி பூர்ஷ்வாக்கள் தோன்றியிருக்கமாட்டார்கள்.அதே சமயம் அவர்களால் உருவான லட்சகணகான வேலைகளும் உருவாகாமல் போயிருக்கும்.

பொருளாதார சமத்துவம் அடையவேண்டுமென்றால் எல்லோரையும் ஏழைகளாக்கலாம்.அல்லது எல்லோரையும் பணகாரர்களாக்கலாம்.முன்னதை சட்டம் போட்டு செய்யமுடியும்.பின்னதை செய்யமுடியாது.


பொருளாதார சமத்துவம் என்ற மாயமானை துரத்துவதை விட்டுவிட்டு எல்லோருக்கும் உணவு,உடை,இருப்பிடம் என்ற சாத்தியமான குறிகோளை எட்ட முனைவதே அரசுக்கு நல்லது.

ஊர்சுற்றி said...

செல்வன் அவர்களே,

உங்கள் பின்னூட்டங்களில் இருந்து - அரசு எந்திரம் என்றாலே, ஒழுங்காக வேலை பார்ப்பது கிடையாது, சோம்பித்திரிவது, அதனால் நஷ்டத்தைத் தவிர வேறேதும் தர இயலாது - என்பது போன்ற கருத்தே மேலோங்கியிருக்கிறது. அதனால்தான் நீங்கள் தனியார்மயத்திற்கு வாதிடுகிறீர்கள் என நினைக்கிறேன் (சரியா?).

''ஏன் ஒரு அரசு எந்திரம் லாபத்தில் இயங்க முடியாது? அல்லது லாபத்தில் இயங்க சரியான வழிமுறைகள் இருந்தால்?'' என்கிற கோணத்தில் யோசித்துப் பார்த்தால் என்ன பதில் கூறுவீர்கள்? உதாரணத்திற்கு நம்ம ரயில்வே துறையை எடுத்துக் கொள்ளுங்கள். இதுபோல மற்றத் துறைகளும் இருந்தால், தனியார் மயம் என்ற பேச்சு வருமா?

Unknown said...

ஊர் சுற்றி,

///உங்கள் பின்னூட்டங்களில் இருந்து - அரசு எந்திரம் என்றாலே, ஒழுங்காக வேலை பார்ப்பது கிடையாது, சோம்பித்திரிவது, அதனால் நஷ்டத்தைத் தவிர வேறேதும் தர இயலாது - என்பது போன்ற கருத்தே மேலோங்கியிருக்கிறது. அதனால்தான் நீங்கள் தனியார்மயத்திற்கு வாதிடுகிறீர்கள் என நினைக்கிறேன் (சரியா?).///

மிகவும் சரி.

///''ஏன் ஒரு அரசு எந்திரம் லாபத்தில் இயங்க முடியாது? அல்லது லாபத்தில் இயங்க சரியான வழிமுறைகள் இருந்தால்?'' என்கிற கோணத்தில் யோசித்துப் பார்த்தால் என்ன பதில் கூறுவீர்கள்? உதாரணத்திற்கு நம்ம ரயில்வே துறையை எடுத்துக் கொள்ளுங்கள். இதுபோல மற்றத் துறைகளும் இருந்தால், தனியார் மயம் என்ற பேச்சு வருமா?///

ரயில்வே என்பது மோனோபொலி.அதாவது போட்டியே இல்லாத நிறுவனம்.அதனால் லாப நஷ்டத்தை வைத்து இந்த துறையை மதிப்பிடமுடியாது.இந்த துறை மகக்ளுக்கு எப்படி சேவை செய்கிறது என்றுதான் பார்க்கவேண்டும்.

இதே ரயில்வே தனியார் மயமாக இருந்து ஏழெட்டு ரயில் கம்பனிகள் நாட்டில் இருந்திருந்தால் இநேரம் ஒவ்வொரு மாநிலமும் "எனக்கு ரயில்வே பட்ஜட்டில் நிதி ஒதுக்கி அகல ரயில் பாதை விடு:" என கேட்கும் நிலை இருந்திருக்காது.தனியார் கம்பனிகள் போட்டி போட்டு ரயிலை விட்டிருக்கும்.சுதந்திரம் கிடைத்து அறுபதான்டுகள் ஆகியும் இன்னும் பல வழிதடங்களில் ரயில் பாதையை பிராட்காஜ் பாதையாக மாற்ற நிதி கிடையாது.ஆள் இல்லாத ரயில்வே கேட்டுகள், நூற்றுகணக்கில் மக்கள் சாகும் ரயில் விபத்துக்களை பற்றி சொல்லவே வேண்டாம்.மனித உயிருக்கு இத்தனைதான் மதிப்பா?


உலகின் மிக சிறப்பான ரயில்வே துறைகளை கொண்ட ஜப்பானில் 20க்கும் மேலான தனியார் ரயில்வே கம்பனிகள் இயங்குகின்றன.இந்தியாவை விட நிலபரப்பில்,ஜனதொகையில் மிகவும் சிறிய அந்த நாட்டில் இந்தியாவில் இருப்பதில் மூன்றில் ஒரு பங்கு நீளம் ரையிவே லைன்கள் போடப்பட்டு மிகசிறப்பாக ரயில்கள் செயல்படுகின்ரன.


நம்மாலும் அது போன்ற ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியும்.நம்மிடம் உலகதரம் வாய்ந்த மனிதவளம் இருக்கிறது.உலகின் தலைசிறந்த தொழிலதிபர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்.But will we? Never.Government wont let us.

உண்மைத்தமிழன் said...

[[[ஷண்முகப்ரியன் said...
உங்கள் குமுறல்கள் மட்டுமே உண்மை. தீர்வுகள் கனவுகளே, சரவணன்.
சமூகமாகக் கூடி வாழத் தனி மனிதர்கள் சில விலைகளைத் தந்தே தீர வேண்டும்.]]]

சமூகத்திற்கான தியாகம் தனி மனிதர்களிடம் மட்டும்தானா ஸார்..

அரசுகளிடமும், பணக்காரர்களிடமும் கிடையாதா..?

உண்மைத்தமிழன் said...

[[[மங்களூர் சிவா said...
/உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[குசும்பன் said...
//அத்தனை பேருமே பொம்பளைங்கதான்.. எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கிட்டே இருக்குறது..//
என்ன ஆளுன்ன நீங்க பொண்ணுங்களை பார்க்காம ஆம்புளைங்களையா பார்ப்பீங்க! எவ்வளோ நேரம் பார்த்தாலும் அலுக்காதுன்னே பெண்ணின் அழகு! (அதுக்கு எல்லாம் ஒரு ரசனை வேண்டும்:))))]]]

அடப்பாவி.. கல்யாணமானவன் மாதிரி கண்ணியமா பேசப் பழகுடா..!/
:)))))))))))]]]

அடங்குற பயலா அவன்..?

குசும்பு என்கிற வார்த்தைக்கே அர்த்தம் அவன்தான்..!

உண்மைத்தமிழன் said...

செல்வன் ஸார்..

தனியார் மயம் என்றாலும், சரி அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலும் சரி.. எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான சட்டத் திட்டங்கள் துஷ்பிரயோகம் இல்லாமல் பின்பற்றப்படுமானால் நீங்கள் சொல்வதைப் போல தனியார் துறையினால் நன்மைகளே விளையும்..

அதீதமான செல்வாக்கினால் தங்களைத் தவிர மற்றவர்களை வளர விடாமல் செய்து தாங்கள் மட்டுமே ஒரே துறையில் கோலோச்சி பணம் சம்பாதிப்பதும், அதற்கு அரசுகள் துணை நிற்பதும் கேலிக்கூத்தானது. இது போன்ற சமயங்களில்தான் தனியார் மயம் சர்ச்சைக்குள்ளாக்குகிறது..

இந்தியாவில் அரசியலும், ஊழலும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருப்பதால் தனியார்கள் வளம் கொழிப்பதும், அரசுத் துறை செல்வத்தை இழப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

உதாரணம் தமிழகத்து டான்ஸி தொழிற்சாலை நிலவரம். அரசு அலுவலகங்களுக்கு சப்ளை செய்து கொண்டிருந்ததெல்லாம் மலையேறிப் போய் இன்றைக்கு அரசுத் துறைகளே கமிஷனுக்காக தனியாரிடம் கையேந்தி நிற்க.. அல்லாடுகிறது டான்ஸி.. இதனை எங்கே போய்ச் சொல்வது..?

தனியார் மயமாக்குதலில் நன்மையும் உண்டு.. தீமையும் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்..

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நண்பர் உண்மைதமிழன்,

தனியார்மயம் என்று இல்லை.உலகின் அனைத்து விஷயங்களிலும் நன்மையும் உண்டு,தீமையும் உண்டு.எதை செய்தால் அதிக நன்மை,குறைந்த தீமை என்று பார்த்து செயல்படவேண்டும்.

தனியார் மயம்,அரசு மயம் இரண்டையும் ஒப்பிட்டால் சிலவற்றில் அரசுமயமாக இருப்பது சிறப்பு.உதாரணம் ராணுவம்.சிலவற்றில் தனியார் மயம் இருப்பது சிறப்பு, உதாரணம் லாபம் வரும் தொழில்கள்.

ஆக லாபம் வரும் தொழில்கள் அனைத்தையும் மக்களுக்கு அளித்துவிட்டு சேவை தொழில்களில் மட்டுமே அரசு ஈடுபடவேண்டும்.

மங்களூர் சிவா said...

//
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மங்களூர் சிவா said...
/உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[குசும்பன் said...
//அத்தனை பேருமே பொம்பளைங்கதான்.. எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கிட்டே இருக்குறது..//
என்ன ஆளுன்ன நீங்க பொண்ணுங்களை பார்க்காம ஆம்புளைங்களையா பார்ப்பீங்க! எவ்வளோ நேரம் பார்த்தாலும் அலுக்காதுன்னே பெண்ணின் அழகு! (அதுக்கு எல்லாம் ஒரு ரசனை வேண்டும்:))))]]]

அடப்பாவி.. கல்யாணமானவன் மாதிரி கண்ணியமா பேசப் பழகுடா..!/
:)))))))))))]]]

அடங்குற பயலா அவன்..?

குசும்பு என்கிற வார்த்தைக்கே அர்த்தம் அவன்தான்..!
//

அதை எதுக்கு quote பண்ணேன்னா அதை படிச்சிட்டு நான் எதும் கமெண்ட் போடாம போய்ட்டேன் அதுக்குதான்

:)))))))))))))

உங்கள் தோழி கிருத்திகா said...

அப்பா தீபிகா படுகோனே பத்தி எழுதிருகின்களே... டாப் சார்...
இதே மாதிரி தன நாட்டுல எல்லாருமே திரியுரங்க.....பூஸ்ட் விக்க காரணம் நம்ம சச்சின் தான்.....ஒனோன்னும் ஒவ்வொரு டைப் ஆ ஏமாத்துறாங்க

vennilavu said...

hi i am new to blogs.. Seen ur post.. I too had such an irritating experience With BSNL wen trying to get Broad band connection..But it took place in AP,HYD.. Finally we withdrawn the registration and went on a private connection.. Ore Aaruthal They didnt Demand bribe... All over India Pbm than Pola.. :(

PS: Can any body tell me hw to type feed backs in tamil.. Shud any softwares be installed? If so hw..?

Fewinfo said...

நல்லா புடுங்குரான்கைய ... BSNL இதுக்குதான் லாயக்கு