ஆகஸ்ட்-5 - வலைப்பதிவர் பட்டறை - எனது டைரி குறிப்புகள்-3

என் இனிய வலைத் தமிழ் மக்களே..!

அறிமுகம்

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

கீழே கூட்ட அரங்கம் பரபரப்பாகவே இருந்தது. நான் உள்ளே நுழைந்தபோது மாலன் ஸார் பேசிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு அமர்வின்போதும் அவரும் பத்ரி ஸாரும் கலந்து பேசி துவக்கி வைப்பதும், கருத்து சொல்வதுமாக இருந்தார்கள்.

அன்றைக்கு அனைவராலும் உச்சரிக்கப்பட்ட ஒரே வார்த்தை 'கட்டற்ற ஊடகத் தளம்' என்பதுதான். மாலன் ஸாரே, நூறு முறையாவது அதை உச்சரித்திருப்பார் என்று நினைக்கிறேன். பின்பு அதுவே மெகா பிரச்சனையானது.

அமெரிக்க நாராயணன் நம்மை சோதனைக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காகவே வேஷ்டி அணிந்து வந்திருந்தார். டிரவுசர் போட்டு வந்திருந்தாலும் தூக்கிக் கொண்டு போய் உள்ளே அமர்த்திருயிருப்போம் என்பது அவருக்குத் தெரியாது.

'ஏதாவது' நடக்கும் என்று எதிர்பார்த்து வந்திருந்தவருக்கு 'எதுவுமே' நடக்காததால் லேசான ஏமாற்றம் அவருக்கு..

வலைப்பதிவுகளில் அரசியல், ஆட்சியாளர்களின் கவனக்குறைவால் தமிழ் டைப்பிங் முறைகள் குழப்படி என்று நாராயணன் பேச ஆரம்பிக்க, மாலன் தடுத்து "தேவையற்ற பேச்சுக்களில் நமது கவனத்தைச் செலுத்த வேண்டாம்" என்று தடை போட.. நாராயணன் அதை மறுக்க.. காங்கிரஸ்காரராச்சே.. பேசுறதுக்கா சொல்லித் தரணும்.. அரங்கில் இதனால் ஒரு சிறிய சலசலப்பு. இது கூட இல்லேன்னா கூட்டம் நடந்ததா அர்த்தமே இல்லையே.. ஆக, தேங்க்ஸ் டூ அமெரிக்கா நாராயணன்.

CNN-IBN சேனலில் இருந்து ரிப்போர்ட்டரும், கேமராமேனும் வந்தார்கள். முதலில் மாடியில் படமெடுக்க வந்தவர்கள் கண்ணில் பட்டார் ஒரு பெரியவர். தனது மனைவியுடன் வந்திருந்த மனிதர், அவ்ளோ வெறியில் இருந்தார்.

எப்படியும் இங்கேயே பிளாக் ஓப்பன் பண்ணி இங்கேயே டைப் செய்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவரை தொலைக்காட்சிக் குழுவினரிடம் அறிமுகப்படுத்தி வைத்து பேட்டி எடுக்க வைத்தேன்.

தொடர்ந்து தனியாக மாட்டிய பொன்ஸை இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்றெல்லாம் ஆங்கிள் பார்த்து அமர வைத்து சுட்டுத் தள்ளினார்கள் டிவிகாரர்கள்.

சரி.. நாம ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாமேன்னு நினைத்து நாலு வார்த்தை.. நாலே வார்த்தைதான்.. ஆங்கிலத்தில் அந்த பெண் ரிப்போர்ட்டரிடம் பேசினேன்.. அவ்ளோதான்.. காபிகூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கேமிராமேனை இழுத்துக் கொண்டு கீழே இறங்கி ஓடிவிட்டார்கள்.

நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். கீழே அரங்கையும் படம் பிடிங்களேன் என்பதை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னேன். அவ்ளோதான்.. இது தப்பா..? என்ன கொடுமைடா சாமி..

அதற்குள் ஒரு வதந்தி பட்டறையில் பெரும் தீயாகப் பரவியது. அது இட்லி வடை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறார் என்று. என்னடா இது? புது கதையா இருக்கே என்று பதற்றத்துடன் கீழே இறங்கப் போக, அங்கே காபி மெஷின் அருகே நா.ஜெய்சங்கரும், இட்லி வடையும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தார்கள்.

இட்லிவடை கீழே இறங்கியதுதான் தாமதம். நா.ஜெ. காபி வேலையை விட்டு விட்டு அவசரம் அவசரமாக தனியறைக்குள் ஓடி லேப்டாப்பில் பதிவு போட ஆரம்பித்தார்.

"என்ன ஸார்.." என்றேன்.. "இட்லி வடை பதிவு போட்டுட்டாருங்க.. நம்ம விடலாமா.. அதான்..." என்றார். உடனுக்குடன் பதிவு போடுவதில் சூடானவரான ஓசை செல்லா காலையில் போட்டோ எடுத்து ஆரம்பித்து வைத்த இந்த பதிவு வேட்டையில், இட்லி வடை, நா.ஜெ. தொடர்ந்து பொன்ஸ் என்று ஆளாளுக்கு லேப்டாப்பை கையில் வைத்து பிலிம் காட்டிய கொடுமை சாயந்தரம் வரையிலும் நடந்தது..

நா.ஜெ.யும், பொன்ஸ¤ம் சென்னபட்டினத்திலும், ஓசை செல்லா தன்னுடைய செல்லா ஆன் லைனிலும், இட்லிவடை தனது பதிவிலும் ஸ்பீடு காட்டியது வலைப்பதிவுலகில் ஒரு ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுத்து சென்னையைத் தவிர மற்ற ஊர் தமிழ்மண ரசிகர்களுக்கு பேதியைக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அதிலும் நண்பர் இட்லிவடை, ஒவ்வொரு சீஸன் முடிந்தவுடனேயும் வேகவேகமாக வெளியே வந்து கடகடவென செல்போனில் எதையோ ஒப்பிப்பதும், பின்பு உள்ளே செல்வதுமாக இருந்தார். இட்லி வடை பதிவும் ஏறிக் கொண்டே இருந்தது..

இந்த நேரத்தில் ஜெயா டிவியில் இருந்து படம் எடுக்க ஆட்கள் வர.. அந்த நேரம் பார்த்து கீழ் அரங்கில் மாலன் ஸார் பேசிக் கொண்டிருந்ததால் மாடிக்கு இழுத்துக் கொண்டு போகப்பட்டார்கள்.

மாடியில் இவர்கள் நுழைந்த நேரம் கரண்ட் கட். புழுக்கத்தால் அனைவரும் காபி மெஷின் அருகே இருக்க.. காபி வென்டர் நா.ஜெ. அனைவருக்கும் முகம் சுழிக்காமல் காபி பிடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள்.. ஒரு நாளாச்சும் இப்படி சிரிச்சுக்கிட்டே அவர் வீட்ல காபி போட்டிருப்பாரான்றது சந்தேகம்.. யாராவது அவர் வீட்ல போய் கொஞ்சம் போட்டுக் கொடுங்கப்பா..

அருமையாக வகுப்பெடுத்துக் கொண்டிருந்த தமிழி ஸாரிடம், கிடைத்த வெளிச்சத்தில் பேட்டி எடுத்தார்கள் ஜெயா டிவியினர். சில நிமிடத்தில் கரண்ட் வந்துவிட.. அதற்குள் கீழே மாலன் ஸார் பேசி முடிக்க.. ஜெயா டிவியினர் கீழே வந்து படம் பிடித்தனர். மறுபடியும் அவர்களை மாடிக்கு அழைத்து வந்து மா.சி.யை பேட்டி எடுக்க வைத்தேன். இந்த நேரத்தில் தம்பி பாலபாரதி சாப்பாடு வாங்க சென்றுவிட்டதால் அவரிடம் பேட்டி எடுக்க முடியவில்லை. எனக்கும் கொள்ள வருத்தம்தான்.. என்ன செய்ய..?

இடையில் மாலன் ஸார் எதற்கோ வெளியே வந்தபோது அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.. "ரொம்ப சந்தோஷம்.. சாயந்தரம் நிறைய பேசுவோம்.." என்றார். ஆனால் அதற்கு முன்பாகவே எஸ்கேப்பாகிவிட்டார்.

மீண்டும் மாடிக்குச் சென்றபோது வழிமறித்தார் டோண்டு ஸார்.. பேசத் துவங்குவதற்குள் காசி ஸார் வந்துவிட.. இருவரும் அப்போதுதான் நேரில் சந்திக்கிறார்களாம்.. உணர்வுப்பூர்வமாக இருவரும் பேசத் துவங்க.. இடையில் நுழைந்து கட் செய்த நான் டோண்டு ஸாரை காட்டி, "வலையுலகத்துல நிம்மதியா இருக்குற ஒரே ஆளு இவர்தான் ஸார்.. ஆனா இவரைத் தவிர மத்தவங்க எல்லாம் இவரால பாடா படுறாங்க.." என்று 'எதை'யோ மனதில் வைத்து காசி ஸாரிடம் சொன்னேன்.. புரிந்து கொண்டு சிரித்தார் அவர். டோண்டு ஸார் அதைவிட அதிகமாகச் சிரித்தார். ச்சே..ச்சே.. ஒருத்தருக்குக்கூட கோபம் வரலப்பா அன்னிக்கு..

தினகரன் ரிப்போர்ட்டர் திடீரென்று வந்து நின்றார். அவரிடம் பேசி, அறை, அறையாக அழைத்துச் சென்று காட்டிக் கொண்டிருந்தபோது, அமெரிக்கா நாராயணன் எதிரில் வந்து நின்றார்.

அவரிடம் "என்ன ஸார் ஆச்சு அந்த வேஷ்டி மேட்டர்..?" என்றேன். "ஒண்ணும் ஆகலே.. "CM-ஐ பார்க்க டைம் கேட்டிருக்கேன். இன்னும் கிடைக்கல.." என்றார் வருத்தத்துடன்.. "அந்த வேஷ்டி மேட்டரை பத்தி பிளாக்ல நிறைய பேர் எழுதினோம் ஸார்.." என்றேன்.. "அப்படியா.. எனக்குத் தெரியாதே.." என்றார்.

அட்ரஸையெல்லாம் சொன்னேன்.. மிக, மிக சந்தோஷப்பட்டார். "வெளியில் பத்திரிகையாளர்கள்கூட அதிகம் கண்டு கொள்ளவில்லை. முகமறியாத பதிவர்கள் எழுதியிருக்கிறார்களே.. நன்றி.." என்றார்.

மாலன் ஸார் எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தேன். அப்போது ஒருவர் எழுந்து மைக் கேட்டபோதுதான் பார்த்தேன். அது நம்ம 'பின்நவீனம்-3' வளர்மதி. மைக்கை வாங்கியதுதான் தெரியும்..

பேச ஆரம்பித்தார்.. பேசினார்.. பேசினார்.. பேசிக் கொண்டேயிருந்தார்.. முன்னால் இருந்தவர்களெல்லாம் பின்புறம் திரும்பி "யாருய்யா அது.. இம்புட்டு நேரம் சவுண்டு விடுறது..?" என்று முகத்தைப் பார்க்கும் ஆவலில் எழுந்து நிற்கும் அளவுக்கு ஆர்வத்தை உண்டு பண்ணினார்.

அவ்வப்போது மட்டுறுத்தல் வேலையை செய்து கொண்டிருந்த மா.சி.க்கு பொறுக்கவில்லை. வளர்மதியின் அருகில் வந்து நிற்க.. நான் மா.சி.யிடம், "பேசுறது வளர்மதி.." என்றேன். "யாரா இருந்தா என்னங்க.. நேரமாகுதுல்ல. அடுத்தவங்களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா?" என்றவர் மைக்கை பிடுங்குவதில் குறியாக இருக்க..(ஆனால் மா.சி. மட்டும் இடை இடையே தொடர்ந்து 15 நிமிடங்கள்லாம் பேசினார். இதை யார் கேக்குறது?) வளர்மதியோ அப்போதுதான் கால்வாசியை முடித்திருந்தார்.

கொஞ்சம் பொறுத்துப் பார்த்த பத்ரி ஸாரும் இப்போது வளர்மதியின் அருகில் வர எனக்கு ஒன்று புரிந்தது. இன்று பின்நவீனத்தின் கட்டுக்கோப்பான கட்டுக்களை இருவரில் ஒருவர் உடைக்கப் போகிறார் என்று. அந்தக் கொடுமையை அருகில் இருந்து பார்க்கப் பிடிக்காமல் பட்டென்று வெளியேறினேன்.. எல்லாம் முடிந்தது..

சிறிது நேரம் கழித்து வளர்மதி களைப்போடு வெளியே வந்தார். என்னிடம் சிக்கினார். "இவ்ளோ நேரம் என்ன ஸார் பேசினீங்க..?" என்று நிஜமான(!) ஆர்வத்தோடு விசாரித்தேன். மனிதர் சிரித்தாரே பாருங்கள் ஒரு சிரிப்பு.. நான் எதிர்பார்க்கவேயில்லை அவருடைய இந்த ரியாக்ஷனை..

அதன் பின் வளர்மதியும் நானும் கால் மணி நேரம் பேசினோம். நான் நிறைய பேசினேன். அவர் நிறைய சிரித்தார். நல்ல கவர்ச்சியான சிரிப்பு மனுஷனுக்கு.

நான் சொன்னேன்.. "ஏற்கெனவே இங்க சுகுணா, அய்யனார்னு ரெண்டு பேரோட 'அன்புத் தொல்லை' தாங்கலையேன்னு இருந்தோம். இப்ப நீங்களும் வந்து ஐக்கியமாயிருக்கீங்க.. எப்பங்க நாங்கள்லாம் படிக்கிற மாதிரி எழுதுவீங்க.. இப்படி பதிமூணு பக்கம் எழுதி நீங்களே படிச்சுக்கிறது உங்களுக்கே நியாயமா இருக்கா..?" என்றேன்.

இதைக் கேட்டவுடனே, வளர்மதிக்கு கொஞ்சம்கூட கோபம் வரலேன்னா பார்த்துக்குங்க..

"அதெல்லாம் இல்ல ஸார்.. எளிமையாத்தான்(!) எழுதுறேன்.. நீங்க தொடர்ந்து என் பதிவைப் படிச்சுக்கிட்டே வாங்க.. என் எழுத்து உங்களுக்குப் பிடிபட்டுவிடும்..." என்றார் சிரிப்புடன்.

மக்களே.. புரியாத வார்த்தைகளை அடுக்கி வைத்துக் கொண்டு 'நவீனம்' என்று எழுதுபவர்கள் எல்லாம் சீரியஸானவர்கள் என்று நினைக்க வேண்டாம்.

ஸோ, கும்மியடிக்கும் திம்மிகளே.. நீங்கள்லாம் பயப்படாம அண்ணன் வளர்மதி அடுத்து எது எழுதினாலும் தாராளமா உங்க கும்மியை அவர்கிட்ட பெர்மிஷன் கேக்காமலேயே குத்தலாம். 'எதுவும்' நடக்காது என்பதற்கு நான் கியாரண்டி.

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

12 comments:

வவ்வால் said...

இந்த பகுதியில் நான் என்ன பின்னுட்டம் போட்டேன், காணாம போச்சா?

//அப்போது ஒருவர் எழுந்து மைக் கேட்டபோதுதான் பார்த்தேன். அது நம்ம 'பின்நவீனம்௩' வளர்மதி. மைக்கை வாங்கியதுதான் தெரியும்...
பேச ஆரம்பித்தார்.. பேசினார்.. பேசினார்.. பேசிக் கொண்டேயிருந்தார்.. //

கமெர்சியல் படத்திலும் திறமையாக பின் நவீனத்துவம் எல்லாம் கலந்து கொடுத்து இருக்கும் இயக்குனரின்(இதானா கலைத்தாகம்) சாமார்த்தியத்தை என்னவென்பது. கண்டிப்பா அவார்டு தான்!

உண்மைத்தமிழன் said...

//கமெர்சியல் படத்திலும் திறமையாக பின் நவீனத்துவம் எல்லாம் கலந்து கொடுத்து இருக்கும் இயக்குனரின்(இதானா கலைத்தாகம்) சாமார்த்தியத்தை என்னவென்பது. கண்டிப்பா அவார்டு தான்!//

அவார்டு என்பது ஆட்டோவில் வந்து தருவார்களா? அல்லது ஒரு பதிவு போட்டுத் தாளிப்பார்களா? எது என்பதை பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன் வவ்வால்ஜி..

பொன்ஸ்~~Poorna said...

//ஒரு நாள்.. ஒரு நாளாச்சும் இப்படி சிரிச்சுக்கிட்டே அவர் வீட்ல காபி போட்டிருப்பாரான்றது சந்தேகம்.. //
சூப்பர் பாயிண்டுபா... இது எனக்குத் தோணவே இல்லையே.. மொதோ வேல ஜெய் வூட்டுக்குப் போனப் போடுறது தான்..

//அருமையாக வகுப்பெடுத்துக் கொண்டிருந்த முத்து ஸாரிடம், கிடைத்த வெளிச்சத்தில் பேட்டி எடுத்தார்கள்//
தமிழின்னு நினைக்கிறேன்.. தப்பா எழுதிருக்கீங்க..

//அவரிடம் பேட்டி எடுக்க முடியவில்லை//
அப்பாடா.. ஜெயா டீவி இந்த முறையாவது தப்பிச்சதே..

உண்மைத்தமிழன் said...

///பொன்ஸ்~~Poorna said...
//ஒரு நாள்.. ஒரு நாளாச்சும் இப்படி சிரிச்சுக்கிட்டே அவர் வீட்ல காபி போட்டிருப்பாரான்றது சந்தேகம்..//

சூப்பர் பாயிண்டுபா... இது எனக்குத் தோணவே இல்லையே.. மொதோ வேல ஜெய் வூட்டுக்குப் போனப் போடுறதுதான்..///

இனிமே எனக்கும், இதுக்கும் சம்பந்தம் இல்ல சாமிகளோவ்..

//அருமையாக வகுப்பெடுத்துக் கொண்டிருந்த முத்து ஸாரிடம், கிடைத்த வெளிச்சத்தில் பேட்டி எடுத்தார்கள்//
தமிழின்னு நினைக்கிறேன்.. தப்பா எழுதிருக்கீங்க..///

தவறுதான்.. திருத்திட்டேன்.. நன்றிங்கோ..

//அவரிடம் பேட்டி எடுக்க முடியவில்லை//
அப்பாடா.. ஜெயா டீவி இந்த முறையாவது தப்பிச்சதே..

பா.க.ச.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து கொண்டு 'தல'யை கிண்டலடிக்கும் உங்களுக்கு என்றென்றைக்கும் கொ.ப.செ. பதவி மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்..

வவ்வால் said...

//அடுத்தவங்களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா?" என்றவர் மைக்கை பிடுங்குவதில் குறியாக இருக்க..(ஆனால் மா.சி. மட்டும் இடை இடையே தொடர்ந்து 15 நிமிடங்கள்லாம் பேசினார். இதை யார் கேக்குறது?)//

உண்மை தமிழர்,

பாவம்ங்க மா.சி அவர் என்னப்பண்ணுவார் எல்லாம் சூழலின் நிர்பந்தம் தான் அவரிடத்தில் நீங்கள் இருந்தாலும் அப்படி தான் செயல்பட்டு இருப்பீர்கள். உங்களை மைக் பக்கமே விடலை என்ற மனவருத்தமா? அடுத்த தடவை மைக் குத்தகை தாறர் உண்மைதமிழன் தான் , நான் போராட்டம் நடத்தியாவது மைக் வாங்கி தரேன்! :-))

Nakkiran said...

3வது பாகம்...
படிச்சிட்டம்ல...

dondu(#11168674346665545885) said...

//மீண்டும் மாடிக்குச் சென்றபோது வழிமறித்தார் டோண்டு ஸார்.. பேசத் துவங்குவதற்குள் காசி ஸார் வந்துவிட.. இருவரும் அப்போதுதான் நேரில் சந்திக்கிறார்களாம்.. உணர்வுப்பூர்வமாக இருவரும் பேசத் துவங்க..//

Kasi and I had already met in 2005 and talked for nearly 2 hours. Please see comments in the post http://dondu.blogspot.com/2005/07/blog-post_06.html

Regards,
Dondu N.Raghavan

உண்மைத்தமிழன் said...

//வவ்வால் said...
உண்மை தமிழர், பாவம்ங்க மா.சி அவர் என்னப்பண்ணுவார் எல்லாம் சூழலின் நிர்பந்தம்தான் அவரிடத்தில் நீங்கள் இருந்தாலும் அப்படிதான் செயல்பட்டு இருப்பீர்கள். உங்களை மைக் பக்கமே விடலை என்ற மனவருத்தமா? அடுத்த தடவை மைக் குத்தகை தாறர் உண்மைதமிழன் தான் , நான் போராட்டம் நடத்தியாவது மைக் வாங்கி தரேன்! :-))//

உண்மைதான் வவ்வால்ஜி.. பட்டறைக்கு முன்பே நான் மா.சி.யிடம் கேட்டேன்.. நான் பேசப் போகின்ற டாபிக்கை பத்தியும் சொன்னேன். அப்ப நீங்க பட்டறைக்கே வரவேணாம்னு சொல்லிட்டார்.. இதெல்லாம் அநியாயம் இல்லே..

உண்மைத்தமிழன் said...

//Nakkiran said...
3வது பாகம்... படிச்சிட்டம்ல...//

நாங்களும் 3-வது தடவையா தேங்க்ஸ் சொல்லிட்டோம்ல..

உண்மைத்தமிழன் said...

//dondu(#11168674346665545885) said...
Kasi and I had already met in 2005 and talked for nearly 2 hours. Please see comments in the post http://dondu.blogspot.com/2005/07/blog-post_06.html
Regards,
Dondu N.Raghavan//

டோண்டு ஸார்.. பக்கத்தில் இருந்து பார்த்தபோது நீங்கள் பேச்சைத் துவக்கிய விதம் பற்றிய எனது பார்வையில் சிறு குழப்பம் விளைந்துவிட்டது.. ஸாரி ஸார்..

வவ்வால் said...

உண்மை தமிழர்,

//உண்மைதான் வவ்வால்ஜி.. பட்டறைக்கு முன்பே நான் மா.சி.யிடம் கேட்டேன்.. நான் பேசப் போகின்ற டாபிக்கை பத்தியும் சொன்னேன். அப்ப நீங்க பட்டறைக்கே வரவேணாம்னு சொல்லிட்டார்.. இதெல்லாம் அநியாயம் இல்லே..//

ஆகா இப்படி வேற ஒரு சமாச்சாரம் நடந்து இருக்கா? சொல்லவேயில்ல... ஆமாம் அப்படி என்ன பத்தவைக்கும் பதற வைக்கும் டாபிக் அது.

பேசாம பட்டறையில் "சொல்ல மறந்த அல்லது மறுக்கப்பட்ட டாபிக்" நு ஒரு 33 பக்கதில சின்னதா?!! ஒரு பதிவை தட்டிவிடுங்க... உங்க கதையையும் தெரிஞ்சுக்கிறோம்!( ஏதோ என்னால ஆனது கொளுத்தி போட்டுடேன் பத்திகுதா பார்ப்போம்)

abeer ahmed said...

See who owns myshopping.com.au or any other website:
http://whois.domaintasks.com/myshopping.com.au