ஆகஸ்ட்-5-வலைப்பதிவு பட்டறை-எனது டைரி குறிப்பு-அறிமுகம்

17-08-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

வலைப்பதிவர் பட்டறை முடிந்து 10 நாட்களுக்கு மேலானாலும் வந்திருந்த பதிவர்களில் 30 பேருக்கும் குறையாமல் பட்டறை குறித்த தங்களது அனுபவங்களை எழுதியிருந்தாலும் அவரவர் அனுபவங்கள் அவரவருக்கு என்ற பார்வையில் "பட்டறையில் நான்" என்ற எனது டைரி குறிப்புகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

காலதாமதத்திற்கு காரணம் எனது 'நேரம்'தான்.. வேறொன்றுமில்லை. அலுவலகத்தில் ஆணி பிடுங்கும் வேலை அதிகமாகியது. ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருக்கும் மற்ற வேலைகளையும் முடித்துக் கொடுத்த தினமும் இரவு 11 மணியாகிவிட்டது. இடையில் எனது கணினி தனது ஆயுளை தற்காலிகமாக முடித்துக் கொண்டது. அதனைத் தட்டி எழுப்பி, தாஜா செய்து மீண்டும் பணியாற்ற வைப்பதற்குள் 7 நாட்கள் ஓடிவிட்டன.

பட்டறை நிகழ்வுகள் மறந்து போய்விடுமோ என்ற பயத்தில் எப்போதெல்லாம் எனக்கு நேரம் கிடைத்ததோ, அப்போதெல்லாம் பேப்பரில் எழுதி வைத்தபடியே இருந்தேன். பின்பு அதனை கொஞ்சம், கொஞ்சமாக எடிட்டிங் செய்துதான் இங்கே கொடுத்துள்ளேன்... பயப்பட வேண்டாம்; 5 பதிவுகள்தான்..

இது முழுக்க, முழுக்க உண்மைத்தமிழன் என்ற சரவணனாகிய என்னுடைய டைரி குறிப்புகள்தான். பின்னாளில் எனக்கு நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கை எனக்கிருப்பதால் நினைவில் இருந்தவைகளையெல்லாம் குறிப்பெடுத்து உள்ளேன்.

இதனை இப்படி என் கண்ணோட்டத்தில் எழுதியிருப்பதால்,

இந்தப் பதிவினால்,

தி.மு.க.வினருக்கு என்ன லாபம்?

அ.தி.மு.க.வினருக்கு என்ன நஷ்டம்..?

பா.ம.க.வுக்கு எவ்வளவு கஷ்டம்..?

தே.தி.மு.க.வினருக்கு எவ்வளவு பாராட்டு..?

பா.க.ச.வினருக்கு என்ன வாழ்த்து?

அ.மு.க.வினருக்கு என்ன கண்டனம்?

வ.வா.சங்கத்தினருக்கு என்ன எதிர்ப்பு?

ப.பா.சங்கத்தினருக்கு என்ன ஆதரவு?

பாட்டாளிகளுக்கு என்ன புண்ணியம்?

பரங்கிக்காய்க்கு என்ன பாவம்..?

தொழிலாளர்களுக்கு என்ன லாபம்?

தொண்டரடிப் பொடியாழ்வார்களுக்கு என்ன நஷ்டம்..?

தலித்களுக்கு என்ன உதவி..?

தகர டப்பாக்களுக்கு ஏன் உதவி இல்லை..?

பார்ப்பனீயத்திற்கு என்ன பெருமை..?

பக்கோடாக்களுக்கு என்ன சிறுமை..?

ம.க.இ.க. தொண்டர்களுக்கு என்ன செய்தி..?

பெரியாரியத் தொண்டர்களுக்கு என்ன கெடுதி..?

பாமரனுக்கு என்ன சொல்கிறீர்கள்..?

கோவை பாமரனுக்கு என்ன சொல்லவில்லை..?

கம்யூனிஸ்ட்களுக்கு என்ன பதில்..?

கம்னாட்டிகளுக்கு என்ன பதில்..?

- இப்படியெல்லாம் ஓவராக கற்பனை செய்து கொண்டு படிக்க வர வேண்டாம்.

இது முழுக்க, முழுக்க வலைப்பதிவர் பட்டறையில் எனது ரவுண்ட்-அப்தான்.

படிக்க நேரமிருப்பவர்கள், இதைப் படிப்பதற்காக காசு, பணம் செலவழிக்க தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தாராளமாகப் படிக்கலாம்.

நேரத்தை செலவழிக்க முடியாத நிலையில் இருப்பவர்கள், எப்போது முடியுமோ அப்போது வந்து படித்தால் போதும்.

எதையுமே டார்வினின் தத்துவப்படி சிந்திப்பவர்களாகவும், சிந்தாத்தத்தின்படி நடப்பவர்களுமாக இருந்தால் தயவு செய்து விலகி விடுங்கள்.

இது உங்களுக்கான இடமல்ல..

பாராட்டுக்கள்.. இதைப் படித்தவுடனேயே எஸ்கேப்பானவர்களுக்கு..

படித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி படிக்க முனைபவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

நன்றி..

வணக்கம்.

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

11 comments:

வடுவூர் குமார் said...

பயப்பட வேண்டாம்; 5 பதிவுகள்தான்..
சே! பழைய ஞாபகத்தில் மௌசை ஸ்கிரோல் செய்துகொண்டிருக்கிறேன். :-))
இதுவரை போட்ட பதிவிலேயே இது தான் மிகச்சின்னது என்று நினைக்கிறேன்.
தொடருங்கள்.

வவ்வால் said...

ஏங்க இன்னும் மெயின் பிக்சரையே காட்டலை ட்ரெய்லர் ஓட்டுறதுக்கே இத்தனை பில்ட் அப் ஆ? மனசுக்குள்ளே சிவாஜி படம்க்கு கதை வசனம் எழுதுவதாக நினைப்போ? :-))
படத்த காட்டுங்கய்யா....

மெளலி (மதுரையம்பதி) said...

படத்தப் போடுங்கப்பா!!!!
(டூரிங் டாக்கீஸ்-ல கத்துவது போல படிக்கவும்)

உண்மைத்தமிழன் said...

//இதுவரை போட்ட பதிவிலேயே இது தான் மிகச்சின்னது என்று நினைக்கிறேன்.
தொடருங்கள்.//

வடுவூர் ஸார்.. இதைவிட சின்னதெல்லாம் இருக்கு. உள்ள பூந்து பாருங்க.. தெர்யும்..

உண்மைத்தமிழன் said...

//வவ்வால் said...
ஏங்க இன்னும் மெயின் பிக்சரையே காட்டலை ட்ரெய்லர் ஓட்டுறதுக்கே இத்தனை பில்ட் அப் ஆ? மனசுக்குள்ளே சிவாஜி படம்க்கு கதை வசனம் எழுதுவதாக நினைப்போ? :-))
படத்த காட்டுங்கய்யா....//

வவ்வால்ஜி,

அதேதான்.. அதுல என்ன தப்புன்றேன்.. பன்னிரெண்டு நாளாச்சுல்ல.. பயபுள்ளைக மறந்து போயிருக்க மாட்டாங்க..? அதான் ஞாபகப்படுத்தத்தான் இப்படி..

உண்மைத்தமிழன் said...

//மதுரையம்பதி said...
படத்தப் போடுங்கப்பா!!!!
(டூரிங் டாக்கீஸ்-ல கத்துவது போல படிக்கவும்)//

போட்டாச்சு சாமி.. அங்க திரும்பிப் பாருங்க.. 20 ரீல் காட்டுதா இல்லையா..? பொறுமையா, மெதுவா பார்த்துட்டுச் சொல்லுங்க..

ஓகை said...

முடித்துவிட்டீர்களா! அவளவு சீக்கிரம் முடிக்க மாட்டீர்களே என்று பார்த்தேன்.

பட்டறையில் நானும் உங்களைப் பார்த்தேன். நீங்களும் என்னைப் பார்த்தீர்கள். இதையும் சேர்த்துவிடுங்கள்.

Nakkiran said...

படிச்சிட்டம்ல...

உண்மைத்தமிழன் said...

//ஓகை said...
முடித்துவிட்டீர்களா! அவளவு சீக்கிரம் முடிக்க மாட்டீர்களே என்று பார்த்தேன். பட்டறையில் நானும் உங்களைப் பார்த்தேன். நீங்களும் என்னைப் பார்த்தீர்கள். இதையும் சேர்த்துவிடுங்கள்.//

ஓகை ஸார்..

மாலை நேரத்தில்தான் நீங்கள் வந்தீர்கள். "ஏன் ஸார் லேட்டு..?" என்று விசாரித்தேன். "உங்க பிரெண்ட் என்கிட்டகூட சொல்லாம போயிட்டாரு.." என்றேன். "யார்..?" என்றீர்கள். "டோண்டு ஸார்.." என்றேன். "அவர் எல்லாருக்கும் பிரண்டுதான் உண்மைத்தமிழன்.." என்றீர்கள். நன்கு நினைவிருக்கிறது..

எழுதத்தான் மறந்துபோனது.. ஸாரி ஸார்..

உண்மைத்தமிழன் said...

//Nakkiran said...
படிச்சிட்டம்ல...//

தேங்க்ஸ்

சொல்லிட்டோம்ல..

abeer ahmed said...

See who owns epinions.com or any other website:
http://whois.domaintasks.com/epinions.com