ஆகஸ்ட்-5 - வலைப்பதிவர் பட்டறை - எனது டைரி குறிப்புகள்-2

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அறிமுகம்

முதல் பாகம்

சொன்னது போலவே அதிகாலை 5.30 மணிக்கு மா.சி.யின் போனில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் அழைத்தது தம்பி வினையூக்கி. "எழுந்துட்டீங்களா பிரதர்.." என்றார். "குட்பாய்" என்று சொல்லி போனை வைத்தேன்.

7.30 மணி சுமாருக்கு அரங்கத்தில் நுழைந்தபோது வினையூக்கி மட்டுமே மாடியில் இருந்தார். அவருடைய வழிகாட்டுதலில் அனைத்து கம்ப்யூட்டர்களுக்கு power connection-ஐ கொடுக்கத் துவங்கினேன்.

திடீரென்று பளீரென்ற சிரிப்புடன் நடிகர் 'ரோஜா' அரவிந்த்சாமி தோற்றத்தில் வந்த ஒருவர் கை கொடுத்து நான்தான் "ஹாய் கோபி.." என்றார். முதலில் புரியவில்லை. பின்பு புரிந்ததுபோல் தலையாட்டி வைத்தேன். எதுக்குப் போய் நம்ம அறிவை வெட்டவெளிச்சமாக்கணும். அதான்.. "உங்க பதிவெல்லாம் படிச்சிருக்கேன். ஆனா பின்னூட்டம் மட்டும் போட்டதில்ல.." என்றார். இந்த வார்த்தை இப்ப வலையுலகத்துல ரொம்ப பேமஸாயிருச்சுப்பா.. பட்டறை அன்னிக்கு மட்டும் கண்டிப்பா ஒரு பத்து பேராச்சும் யார்கிட்டயாவது இப்படி சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. கோபி தம்பி நல்லாயிருப்பூ..

தொடர்ந்து தம்பி ஜேகேயும், அருள்குமாரும், ஜெயாவும் வந்து சேர்ந்தார்கள். வந்த வேகத்தில் எங்களது கம்ப்யூட்டர்களுக்கு கரண்ட் connection கொடுக்கும் பணிகள் துரிதமாக நடந்தன. அப்போது மா.சி வந்து "டிபன் வேண்டுமா..?" என்றார். "வேணுமாவா...?" என்று நாங்கள் கோரஸாக கேட்க நொடியில் எஸ்கேப்பானார் மா.சி.

பத்ரி ஸார் வந்தார். மாடியின் முதல் அறையில் Projector-ஐ வைத்து டெஸ்ட் செய்தார். பரபரப்பாக தனது பணியை ஆரம்பித்த பத்ரி நிகழ்ச்சி முடியும் வரையிலும் பரபரப்பாகவே இருந்தார். அவரது வெற்றியின் ரகசியம் என்னவென்று அவருடைய உழைப்பில் இருந்தே புரிந்தது.

"டிபன் வந்திருச்சு.. சாப்பிட வாங்க ஸார்.." என்று 'அகமும், புறமும்' ஜெயா பத்து முறையாவது என்னை அழைத்திருப்பார். அருமைத் தங்கைக்கு எனது பாசமான நன்றிகள்.

வேகமாகச் சென்றால் ஒரு வடையும், அரை கிண்ணம் பொங்கலும் இருந்தது. வடைக்குத்தான் முதலில் ஆள் வரும் என்பது தெரியுமாதலால், முதலில் அதை முழுங்கினேன்.

சொல்லி வைத்தாற்போல் 'அமாவாசை' கலரில் ஒரு முரட்டு உருவம் வந்து, "வடை எங்க..? வடை எங்க..?" என்று பரபரத்தது. 'இல்லை.. காலி..' என்றதும், "ங்கொய்யால.. அதுக்குள்ள வெட்டிட்டீங்களாய்யா. நல்லாயிருங்கய்யா." என்று வாழ்த்திவிட்டு வெறும் வயிற்றைத் தடவிக் கொண்டே வெளியேறியது.. ஏதோ நம்மளால முடிஞ்சது.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே லிவிங்ஸ்மைல் வித்யா அமைதியாக, அடக்கமாக அறையினுள் வந்து அமர்ந்தார். "சாப்பிடுறீங்களா மேடம்.."னு கேட்டப்ப, "இல்ல வேணாம்.. சாப்பிட்டுட்டேன்.." என்று சொல்லிவிட்டு தான் கொண்டு வந்த பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து 'சாப்பிட' ஆரம்பித்தார். பொண்ணுன்னா இவுகல்ல..? (வேணாம்டா உண்மைத்தமிழா.. ரொம்ப நாள் கழிச்சு எழுதுற.. வம்பை விலைக்கு வாங்காத.) ஆனா உண்மையான விஷயமே வேற.. அம்மணி சினிமா ஸ்டாராயிட்டாங்கப்பூ.. அதுனால இனிமே இப்படித்தானாம். அம்மணி.. உங்ககிட்ட மேனேஜர் போஸ்ட் காலியா இருக்குன்னு கோடம்பாக்கம் பட்சி சொல்லுச்சு.. என்னையும் கொஞ்சம் ஞாபகத்துல வைச்சுக்குங்க..

"கீழே பேட்ஜ் கொடுக்குறாங்க.. முதல்ல அதைப் போய் வாங்குங்க" என்றார் ஒருவர். "நீங்க..?" என்றவுடன் "நான்தான் கரூர் கே.ஆர்.அதியமான்.." என்றார். "ஓ.. உங்களைத்தான 'நாலு' பேர் தேடிக்கிட்டிருக்காங்க" என்றேன்.. "ஆமா ஸார்.." என்று சற்று சங்கடத்தோடு சொன்னார். "இதுக்கு எதுக்கு சங்கடம்..? இப்ப நீங்களும் பிளாக்ல ஒரு வி.ஐ.பி.தான்.." என்று 'ஆறுதல்' சொன்னேன்.. 'பாதிக்கப்பட்டவங்க' ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லலைன்னா எப்படி?

பேட்ஜ் கொடுக்கும் இடத்தில் தனது வழக்கமான 'யூனிபார்மில்' நின்று கொண்டிருந்த அருமை உடன்பிறப்பு லக்கிலுக் பேட்ஜில் 'உண்மைத்தமிழன்' என்று எழுதிவிட்டு "உங்க பிளாக் அட்ரஸ் என்னண்ணா..?" என்று கேட்டு எனக்கு நெஞ்சு வலியையே வரவழைத்துவிட்டார். "அப்பா சாமி.. உனக்கே இது அடுக்குமாய்யா..?" என்று வாய்விட்டே கேட்டுவிட்டேன். "நிசமாவே தெரியாதுண்ணேன்.." என்று ஒரே போடாகப் போட்டார்.. ம்ஹ¤ம்.. 'தலைவரை'யே மிஞ்சிட்டாரு 'தொண்டர்'..

'காசி ஆறுமுகம்' என்ற பேட்ஜோடு வந்த ஒருவர், என் பேட்ஜை படித்துவிட்டு "உண்மைத்தமிழன்றது நீங்கதானா.. ஏங்க இப்படி கொஞ்சமா எழுதுறீங்க.. எங்களை பார்த்தா பாவமா இல்லையா..?" என்றார். முதலில் அவர் முகத்தைப் பார்த்தவுடனேயே எனக்குத் தெரிந்த இரண்டு நண்பர்களின் ஞாபகம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. அச்சு அசலாக அவர்களைப் போலவே இருந்தார் காசி ஸார்..

"ரொம்ப இல்ல ஸார்.. கொஞ்சம்தான்.. ரெண்டு ரெண்டு பாராலதான் எழுதுறேன்.. எல்லாரும் பெரிசா இருக்குன்றாங்க ஸார்.." என்றேன் நான். "பரவாயில்லை.. இதையே பாலோ பண்ணுங்க.. அப்பத்தான் உங்களுக்கு opponent-ஆ யாரும் வர மாட்டாங்க. ஏன்னா யாருமே படிக்க மாட்டாங்களே.." என்று வஞ்சப் புகழ்ச்சியோடு சொன்னபோது நிஜமாகவே எனக்குத் தலை சுத்தியது. யார், எப்படி பேசுவாங்கன்னு யாரால சொல்ல முடியும்...?

அடுத்து வந்தார் இனமானப் பேராசிரியர் தருமி.. "உங்களை எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே உண்மைத்தமிழன்.." என்றார். இது எப்படி இருக்கு..? இந்த குசும்பு புடிச்ச பெருசுகளையெல்லாம்...

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே விக்கி இது ஒரு unconference என்று சொல்லிவிட அடுத்த பாராவை மா.சி. எழுந்து சொல்ல ஐந்து நிமிடத்தில் அதை நிரூபித்த இருவரையும் பாராட்டத்தான் வேண்டும்.

எனக்கென்று சில வேலைகளை மா.சி. கொடுத்துவிட்டதால் அடுத்த அரை மணி நேரம் போனும், கையுமாகவே வெளியில் சுற்றிக் கொண்டிருந்தேன்.

'அகமும், புறமும்' ஜெயா வரவேற்பு வேலையை சளைக்காமல் இறுதிவரை புன்னகையோடு செய்து கொண்டிருந்தார்.

வெளியில் வரவேற்பு மேசையில் அமர்ந்திருந்த பதிவுலக நண்பர்களும் "அவர்தான் இவர்.. இவர்தான் அவர்.." என்று தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டே ரசனையோடு அடையாளம் கண்டு கொண்டது பார்ப்பதற்கு வேடிக்கையாகத்தான் இருந்தது.

டோண்டு ஸார் சொல்லி வைத்த மாதிரி கரெக்ட்டா 9.29.59-க்கு வாசலில் வந்து இறங்கினார். அவரை நான் சந்திப்பது இதுவே முதல் முறை என்பதால்('ஏன்யா உனக்கு இவ்ளோ கிறுக்கு..?' அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது) தேடிச் சென்று கை குலுக்கினேன்..

இப்போது டோண்டு ஸாருடன் உள்ளே சென்றபோது பத்ரி ஸார் பேச ஆரம்பித்திருந்தார். டோண்டு ஸார் உடனே அதைக் குறிப்பெடுக்க ஆரம்பித்தார். மனுஷன் ஏன் இந்தப் போடு போடுறாருன்னு பார்த்த உடனேயே தெரியுது.. அரங்கில் குறிப்பெடுத்த வலைப்பதிவர் எனக்குத் தெரிந்து இவர்தான்..

'பெங்களூரு மைனரு' செந்தழல் ரவி தன் காரில் வந்திறங்கிய வேகத்திலேயே புகை பிடிக்க கிளம்பினார். கூடவே நானும் அவர் விடுகின்ற புகையைப் பிடிக்கச் சென்றேன்..

"ராத்திரி மப்பு கொஞ்சம் கூட ஏறுனதால எந்திரிக்க லேட்டாயிருச்சு.." என்றார் ரவி. "சரிப்பூ.. அதையெல்லாம் யார் கேக்கப் போறா..?" என்றேன். கொரியாவில் இருந்து ipod மாதிரி ஒரு சிஸ்டத்தை வாங்கி வந்திருந்தார் ரவி. அது முதலில் லக்கிலுக், பின்பு என்னிடம், மதியம் வரவனையான் என்று பலரது கையிலும் புழங்கிக் கொண்டிருந்தது.

டெல்பின் மேடத்திடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் பாலா. "என்னங்க? யாருங்க அந்த போலி உண்மைத்தமிழன்.. எனக்கு ஒண்ணுமே புரியல.. அதுனாலதான் நீங்க இப்ப எழுதுறதே இல்லையா.." என்று அக்கறையாக விசாரித்தார். உடன் வந்த தருமி ஐயாவும் அதையே விசாரித்தார். அப்படியே கார் பக்கம் போன டெல்பின் மேடம், காலை 11 மணிக்கெல்லாம் பதிவு போட்டு அசத்தியது ஒரு தனிக்கதை.

தொடர்ந்து ஆசீப் மீரான் அண்ணாச்சியை அறிமுகம் செய்து வைத்தார் பாலா. அண்ணாச்சியை நான் நேரில் சந்திப்பது இதுதான் முதல் முறை. கடந்து போன துக்கங்களை மிக இலகுவாகத் தாங்கிக் கொண்டு அவர் கூட்டத்திற்கு வந்திருந்தது எங்களுக்கே ஆறுதல் தந்த விஷயமாக இருந்தது.

அதிலும் மதிய வாக்கில் அண்ணாச்சி விடைபெறும்போது உடன் இருந்த இன்னொரு பதிவரிடம், "இவர்தான் உண்மைத்தமிழன். அப்படின்னு இவரே சொல்லிக்கிறாரு.. ஆனா, உண்மை எனக்குத் தெரியாது.." என்று இதுவரையிலும் இல்லாத புது மாதிரியாக அறிமுகப்படுத்தி வைத்தபோது கொஞ்சம் நொந்துதான் போனேன்.. எனக்குத்தான் சாமி இந்த மாதிரி பேச்செல்லாம் வர மாட்டேங்குது.. அண்ணாச்சி.. வாங்க.. பழைய அண்ணாச்சியாக சீக்கிரமா வந்திருங்க..

அரங்கில் வலைப்பதிவு பற்றிய அறிமுகப் படலம் முடிந்தவுடன் மாடியில் டிரெயினிங் என்று சொல்ல.. மாணவ, மாணவிகள் மாடிக்குப் படையெடுத்தார்கள். கூட்டம் மொத்தமாக வந்துவிட.. பலரும் நிற்க வேண்டி வந்தது.

பொன்ஸ், கீழே செல்வோர் ஒவ்வொருவரிடமும் "யாரையும் இனிமேல் மேல அனுப்பாதீங்க. அடுத்த சீஸனுக்கு அனுப்புங்க.." என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நேரத்திற்கு மாடிக்குச் சென்ற என்னிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார் பொன்ஸ்.

சரி.. ஒரு வேலையாச்சும் செய்யலாம் என்ற நினைப்போடு மாடிப்படியருகே சிறிது நேரம் காவல் காத்தேன். அதற்குள்.. நா.ஜெய்சங்கர் காபி கொடுக்கும் மிஷினை குத்தகைக்கு எடுத்து ஐந்து நிமிடத்திற்கு மூன்று காபி கொடுத்து என்னை 'கரெக்ட்' செய்ததால், நான் காபி மிஷன் அருகேயே சிலையாய் நின்றுவிட.. தொடர்ந்து தடுப்பாரே இல்லாமல் நிறைய ஆர்வலர்கள் இரண்டு அறைகளிலும் நுழைந்துவிட..

பொன்ஸ் என்னை தும்பிக்கையால் தூக்கிப் போட்டு மிதிப்பதற்குத் தேடுவதாக, தங்கை ஜெயா ஒரு ஸ்கூப் நியூஸை என்னிடம் தட்டிவிட மாடியிலிருந்து எஸ்கேப்.

கீழே தம்பி மோகன்தாஸ் அரங்கத்தை வளைத்து, வளைத்து கை தேர்ந்த புகைப்படக்காரரைப் போல் புகைப்படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். என்னை மட்டும்தான் எடுக்கவில்லை. "சாயந்தரம் போகும்போது எடுக்குறேன்" என்றார். சாயந்தரம் அவர் போகும்போது நான் பார்க்க முடியவில்லை. ஆக.. ஒரு அருமையான விலை மதிக்க முடியாத புகைப்படத்தை, தம்பி மோகன்தாஸ் இழந்துவிட்டார் என்றே சொல்லலாம்.

பெங்களூரிலிருந்து வந்திருந்த ஒரு பதிவரை செந்தழல் ரவி எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சர்ச்சைக்குள்ளான பல வலையுலக விஷயங்களையும், என் வேலை தொடர்பானவைகளையும் நிறைய பேசினார் அவர். ஆனால் அவர் பெயரைத்தான் என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. அன்று நான் தெரிந்து கொண்ட விஷயங்களை வைத்து ஒரு பத்து பதிவுகளாவது போடலாம். ஆனால் இப்போதைக்கு முடியாது என்பதை அந்தப் பதிவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவஞானம்ஜி இளைஞர்களோடு போட்டி போட்டுக் கொண்டு பதிவுகள் போட்டார். இட்லி, வடைக்குப் பிறகு உடனேயே பதிவு போட்டு அதற்கு வந்த கமெண்ட்ஸை ரிலீஸ் செய்ய வினையூக்கியின் உதவியை நாடி அதையும் செய்தார்.

தம்பி வினையூக்கி எப்போதும் மூன்று, நான்கு பேர் படை சூழ கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். பொறுமையின் சிகரம்தான்..

பினாத்தல் சுரேஷ் என்று சொல்லி ஒருவர் கை நீட்டினார். நான் முதலில் நம்பவில்லை. தலையில் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னதால், "சரி.. சரி.. நீங்கதான் பினாத்தல் சுரேஷ்.." என்றேன். அதற்குப் பிறகுதான் பேசவே ஆரம்பித்தார்.

"ஏன் ஸார் பதிவு போட மாட்டேங்குறீங்க.. சீக்கிரமா போடுங்க ஸார்.." என்றெல்லாம் பாசமாகப் பேசியவர், "கும்மிப் பதிவுகளுக்கான மேட்டர்லாம் எப்படி ஸார் இவ்ளோ ஈஸியா உங்களுக்கு சிக்குது.." என்ற எனது கேள்விக்கு மட்டும் நேரடியாகப் பதில் சொல்லாமல் "ஏதோ ஒண்ணு ஸார்.. அது அப்படித்தான்.." என்று சொல்லிச் சொல்லியே சிரித்துக் கொண்டிருந்தார். இவருக்கும் டிரேட் மார்க் சிரிப்புதான்..

பினாத்தலாரைப் போலவே அவருடைய கிளாஸ¤ம் கலகலப்பாகவே இருந்தது. எப்பவும், யாருக்கும், எதற்கும் அடங்காத 'தல' பாலபாரதி பினாத்தலாரின் பிளாஷ் வகுப்பில் கையை, காலை கட்டிக் கொண்டு அடக்கமாக தரையில் அமர்ந்திருந்தது பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. கல்வியின் சிறப்பு அப்படி..

காலையில் தமிழி ஸார் ஒரு மணி நேரம் வகுப்பு எடுத்தபோதும் சரி, மதியம் ரவி கிளாஸ் எடுத்தபோதும் சரி.. ஒரு பத்து நிமிடம் மட்டுமே நான் அருகே இருந்து கேட்க நேர்ந்தது.

சொல்லித் தருவதில் இருக்கின்ற இன்பமே தனிதான் என்றாலும், பிரதிபலன் பாராமல் கற்றவர்கள் பிறருக்கு கற்பிக்கும் வித்தையை ஒரு வகையில் அன்னதானம் என்றே சொல்லலாம்.

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

12 comments:

வவ்வால் said...

இப்போ தான் திரைக்கதை மெதுவா சூடு பிடிக்குது , வில்லன் வந்தாச்சா , ஹீரோவும் வில்லனும் பஜ்ஜி சாப்பிட்டுகிட்டே பேசுற போல ஒரு ஸீன் வைன்க ..அடுத்த ரீலில்.

நான் வேணா எடுத்து தரேன்:
ஹீரோ: அதுல பாதியா எனக்கு தந்துடு...
வில்லன்: எதுல ..
ஹீ: ஹை பஜ்ஜில இல்லை உனக்கு வர பின்னூட்டத்தில , கண்ணா அதுலாம் அனானி பின்னுட்டம் நீ வெளில சொல்லிக்கவே முடியாது...
இப்படி பர பரப்பா ஒரு காட்சி வைங்க!

அரவிந்தன் said...

பெங்களூரிலிருந்து வந்திருந்த ஒரு பதிவரை செந்தழல் ரவி எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சர்ச்சைக்குள்ளான பல வலையுலக விஷயங்களையும், என் வேலை தொடர்பானவைகளையும் நிறைய பேசினார் அவர். ஆனால் அவர் பெயரைத்தான் என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. அன்று நான் தெரிந்து கொண்ட விஷயங்களை வைத்து ஒரு பத்து பதிவுகளாவது போடலாம். ஆனால் இப்போதைக்கு முடியாது என்பதை அந்தப் பதிவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
---------------------------

வணக்கம்!!! உண்மைத் தமிழன்.

செந்தழல் ரவி அறிமுகப்படுத்திய பெங்களுர் பதிவர் அடியேன் தான்..

அன்புடன்
அரவிந்தன்

உண்மைத்தமிழன் said...

//நான் வேணா எடுத்து தரேன்:
ஹீரோ: அதுல பாதியா எனக்கு தந்துடு...
வில்லன்: எதுல ..
ஹீ: ஹை பஜ்ஜில இல்லை உனக்கு வர பின்னூட்டத்தில , கண்ணா அதுலாம் அனானி பின்னுட்டம் நீ வெளில சொல்லிக்கவே முடியாது...//

புரிஞ்சு போச்சு வவ்வால்ஜி.. ஸாரி.. கோச்சுக்காதீங்க.. அனானிகளை புறந்தள்ளி நட்பைப் பேண நினைக்கும் உங்களது நல்ல மனசுக்கு எனது நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//வணக்கம்!!! உண்மைத் தமிழன்.
செந்தழல் ரவி அறிமுகப்படுத்திய பெங்களுர் பதிவர் அடியேன் தான்..
அன்புடன்
அரவிந்தன்//

ஸாரி அரவிந்தன் ஸார்.. அந்த நேரத்தில் ஞாபகத்திற்கு வரவில்லை. அதனால்தான் எழுத இயலவில்லை. என்னைத் தொடர்ந்து கவனத்தில் வைத்திருப்பதற்கு எனது நன்றிகள்..

நாமக்கல் சிபி said...

//ஸாரி அரவிந்தன் ஸார்..//

என்னங்க உண்மைத் தமிழன்? அரவிந்தனை மறந்துட்டீங்களா?

ஓ! நீங்கதான் அரவிந்தனா ன்னு கேட்டவுடனே அடுத்த கேள்வி கேட்டுடாதீங்கன்னு கெஞ்சினவராச்சே!

(ஆளாளுக்கு அடுத்த கேள்வி ஒண்ணையும் கேக்குறாங்களேன்னு கவலைப் பட்டாரே அவர்தான் அது)

நாமக்கல் சிபி said...

//ஹீ: ஹை பஜ்ஜில இல்லை உனக்கு வர பின்னூட்டத்தில , கண்ணா அதுலாம் அனானி பின்னுட்டம் நீ வெளில சொல்லிக்கவே முடியாது...
இப்படி பர பரப்பா ஒரு காட்சி வைங்க! //

:))

Anonymous said...

ஒர்க்க்க்க்கூடை சன் ஜீரோஸ்!
ஒர்க்க்க்கூடை மூன் ஒன்ஸ்!
ஒன்றாகச் சேர்த்தால் அதானே டிஜிட்டல்!


அப்போ நான் அனலாக் தமிழன்!

இப்போ நான் டிஜிட்டல் தமிழன்!

உண்மைத்தமிழன் said...

///நாமக்கல் சிபி said...
//ஸாரி அரவிந்தன் ஸார்..//
என்னங்க உண்மைத் தமிழன்? அரவிந்தனை மறந்துட்டீங்களா? ஓ! நீங்கதான் அரவிந்தனா ன்னு கேட்டவுடனே அடுத்த கேள்வி கேட்டுடாதீங்கன்னு கெஞ்சினவராச்சே!
(ஆளாளுக்கு அடுத்த கேள்வி ஒண்ணையும் கேக்குறாங்களேன்னு கவலைப் பட்டாரே அவர்தான் அது)///

குசும்பா...

செய்றதையும் செஞ்சுப்போட்டு இப்ப பர்னாலை வேற தடவுறியா..?

நீதான்யா மொத ஆளா அந்தக் கேள்வியைக் கேட்ட..?

அப்புறம் வர்றவுக, போறவுககிட்டேயெல்லாம் இவர் அரவிந்தன், இவர் அரவிந்தன் அப்படின்னு கொஞ்சம் ஏத்திவிட்ட.. இருடி இரு.. உனக்கெல்லாம் 'ஆப்பு' வைக்குற மாதிரி ஒரு பதிவு போடணும். அப்பத்தான் உன் குசும்பு கொஞ்சமாச்சும் அடங்கும்..

Nakkiran said...

2வது பாகம்...
படிச்சிட்டம்ல...

உண்மைத்தமிழன் said...

//Nakkiran said...
2-வது பாகம்... படிச்சிட்டம்ல...//

3-வது தேங்க்ஸ்..

சொல்லிட்டோம்ல..

Unknown said...

//நீதான்யா மொத ஆளா அந்தக் கேள்வியைக் கேட்ட..? //
அந்த கேள்வி என்னன்னு சொல்றதுகூடவா தப்பு? புரியவே மாட்டேங்குதுங்க இந்த அரசியல்.

abeer ahmed said...

See who owns yahoo.com or any other website:
http://whois.domaintasks.com/yahoo.com