ஆகஸ்ட்-5 - வலைப்பதிவர் பட்டறை - எனது டைரி குறிப்புகள்-4

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

அறிமுகம்

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

கீழே லன்ச்சுக்கு முன்பு ஒரு காமெடி.

தம்பி லக்கிலுக் 'இணையத்தில் பாதுகாப்பு' என்கிற தலைப்பில் பேசத் துவங்கினார். "யாரும் அவரவர் சொந்த விஷயங்களை பிளாக்கில் எழுதாதீர்கள். வெளிப்படுத்தாதீர்கள்.. யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.." என்றெல்லாம் பேசப் பேச எனக்கு கோபமான கோபம்.

மூணு மாசத்துக்கு முன்னாடி இப்படியெல்லாம் ஒளிவுமறைவில்லாம என்கிட்டேயும் சொல்லியிருந்தா, இப்படி ஒரு மாசத்துக்கு 'மெடிக்கல் லீவ்' போட வேண்டிய கட்டாயம் எனக்கு வந்திருக்குமா என்று என் மனதுக்குள் மட்டும் நான் கேட்டுக் கொண்டேன். என்ன நான் சொல்றது..?

தொடர்ந்து நாகூர் இஸ்மாயில் பேசத் துவங்கியவர் பேச்சுவாக்கில் "நான் இப்பல்லாம் பிளாக்ல எழுதறதே இல்லை.. கமெண்ட்ஸ்கூட போடுறதில்ல.." என்றெல்லாம் சொல்ல மடிக்கனிணியில் தலையைக் கவிழ்த்து வைத்திருந்த பத்ரி திடுக்கிட்டு நிமிர்ந்தார்.

மேலும் காலம் கடத்தாமல் எழுந்து வந்து "நீங்க மொதல்ல பதிவு போடுங்க.. கமெண்ட்ஸ் போடுங்க.. அப்புறமா நிறைய பேசலாம்.." என்று சொல்லி மேட்டருக்கு மங்களம் பாடிவிட்டார்.

திடீரென்று எங்கிருந்தோ வந்து ஆஜராகியிருந்த 'மப்பு மாப்ளை' வரவணையானை கையில் தயிர் சாதத்துடன் பார்த்தேன்.. "என்னண்ணே.." என்றார். நேத்து ராத்திரி உள்ளே தள்ளியிருந்த 'சரக்கு' இன்னும் இறங்காதது அவர் பக்கத்தில் வந்த போது தெளிவாகத் தெரிந்தது. "சாப்பிட்டுட்டு வந்து பேசுறேண்ணேன்..." என்று சொல்லிவிட்டு, லக்கிலுக்கை இழுத்துக் கொண்டு ஓடினார் வரவனையான்.

மேலே சென்றால் அனைவருமே வரிசையில் நின்று லன்ச் பாக்ஸை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

கொடுத்துக் கொண்டிருந்தவர் அருமைத் தம்பி பாலாதான்.. குனிந்து, நிமிர்ந்து, குனிந்து, நிமிர்ந்து.. ஆட்டோவில் வரும்போது சிதறிவிட்ட தயிர் சாதத்தை அவ்வளவு பொறுப்பாக எடுத்து டப்பாக்களில் அடைத்து கொடுத்தபடியே இருந்தார். எவ்வளவுதான் வார்த்தைகளை கொட்டினாலும் இதை எப்படி எழுதுவது என்பது எனக்குத் தெரியவில்லை.

எவ்வளவுதான் பொறுப்புக்களை சுமக்கிறானே என்று அடுத்தவன் சொன்னாலும், சுமந்தவன் அனுபவிக்கும் சுகத்தை எவராலும் உணர முடியாது.

தம்பி பாலா.. நீ என்னதான் என் அப்பன் முருகனிடமிருந்து விலகி, விலகி ஓடினாலும் அவன் விடாமல் உன்னை அவன் பக்கம் இழுக்கத்தான் செய்கிறான் என்பதை நான் உணர்கிறேன். முருகனருள் என்றும் உனக்குண்டு..

திடீரென்று நாமக்கல் சிபி என்று சொல்லிக் கொண்டு ஆறு மாத கர்ப்பிணியைப் போல் வயிற்றை தள்ளிக் கொண்டு வந்த ஒருவர் பார்க்கின்ற சிலரிடம் "நான்தான் கோவி கண்ணன்.." என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். "அப்படியா..?" என்று சிலர் ஆச்சரியத்துடன் பேசத் துவங்க.. கேக்குறவனுக்கு நேரம் சரியில்லை என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் கிரகமே சரியில்லை என்பதை மெயின் கேட் பக்கம் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.

மெரீனா பீச்சில் காதலியின் மடியில் படுத்துக் கடலை போட்டுக் கொண்டிருந்தவனெல்லாம், நம்ம பக்கம் திரும்பித் திரும்பிப் பார்க்கிறானேன்னு வாசல் பக்கம் போனா அங்க வெள்ளை டீ ஷர்ட் போட்ட ஒரு ஆறு பேர் டீம் அட்டகாசமா சிரியோ சிரின்னு சிரிச்சிட்டிருந்தாங்கப்பா.. வ.வா.சங்கத்துக்காரங்களாம்..

நானும், முகுந்தும், கோபியும் காபி குடிக்க வெளியில் சென்றபோது அவர்களையும் பார்த்தோம்.

சரி அறிமுகமாகிக் கொள்ளலாமே என்று அருகில் சென்று கேட்க ஆளாளுக்கு ஒரு பெயரைச் சொல்லிக் கொண்டார்கள். என்ன பேர் சொன்னாலும் கேட்டுத்தான ஆகணும்..

கடைசியா பேசின மோகன்ராஜ்ங்கிறவரு இந்தப் பேரை சத்தமா சொல்லிட்டு 'கப்பிபய' என்ற தன்னுடைய பட்டப் பெயரை மட்டும் முனங்கிக்கிட்டு சொன்னது தமாஷ்.. நொடிக்கு ஒரு தடவை அப்படி சிரிக்குறாங்கப்பா.. எப்படித்தான் வருதோ தெரியல.... முருகா..

தம்பிமார்கள் முகுந்தும், ஹாய் கோபியும் டீ வாங்கித் தருவதாகச் சொல்லி என்னை வெளியே அழைத்துச் சென்றார்கள். ரோட்டின் இடது புறம் சிறிது நேரம் சென்றவுடன் ரயில்வே ஸ்டேஷன்தான் வந்தது. டீக்கடையைக் காணவில்லை. சரி.. பீச் பக்கம் போய் பார்ப்போம் என்று சொல்லி பீச் பக்கம் நடையைக் கட்டினோம்.

கலர், கலரான கூல் டிரிங்க்ஸ்தான் இருந்ததே ஒழிய தமிழனின் சோமபானம் டீக்கடை ஒன்றுகூட இல்லை. தம்பி முகுந்த் ரொம்பவே அலுத்துக் கொண்டார். "கூல்டிரிங்க்ஸ் குடிக்கலாம்.." என்றேன்.

ஏதோ அண்டார்டிகாவில் பொறந்து, அலாஸ்காவில் வளர்ந்த புள்ளைக மாதிரி ரெண்டு பேருமே சொல்லி வைச்சாப்புல சொன்ன வார்த்தை, "ஏதாவது கலப்படமா இருந்துட்டா வம்பாயிரும்ணேன்.." அப்ப நம்பி குடிக்கிற சென்னைக்காரங்கள்லாம்..?

"இவ்ளோ தூரம் வந்துட்டோம். எதையாவது குடிச்சிட்டாவது போலாம் சாமி"ன்னு என்னுடைய அனத்தலுக்குப் பிறகு இளநீர் கடைக்கு அழைத்துச் சென்றார்கள் தம்பிமார்கள். இளநீரும் போலியாக இருக்குமோ என்ற கவலை முகுந்திற்கு.. எல்லாரும் 'போலி'யைக் கண்டு இப்படி பயப்படுறாங்கப்பா..

முகுந்திடம் "எனது inscript typing file எப்ப கிடைக்கும்..?" என்றேன். "நாடு, நாடா சுத்தப் போயிட்டேங்க.. அதான் உக்காரவே முடியல.. எப்படியும் நாளைக்கு ஊருக்குப் போனவுடனேயே முதல் வேலை உங்க வேலைதான்.." என்றார். ஆனாலும் இந்தப் பதிவை எழுதுகின்ற வரையிலும் வரவில்லை. ரொம்ப வேலையா இருக்கும் போலிருக்கு..

திரும்பி வந்தபோது கோட்டைச் சுவரில் ஏறி அமர்ந்து 'தீராநதி' படித்துக் கொண்டிருந்தார் 'அறிவுத்திலகம்' மிதக்கும் வெளி சுகுணாதிவாகர். ('எல்லாம்' முத்திப் போச்சுன்னா கோட்டைச் சுவத்துல போயிதான் முட்டிக்கணும்னு சொல்வாங்க. கேள்விப்பட்டிருக்கீங்களா..?.) "என்ன ஸார்? எப்படி இருக்கீங்க..?" என்று எனது அறிமுகப் படலத்தை ஆரம்பிக்க.. எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்கு சென்றார் சுகுணா.

இவரும் சீரியஸ் டைப்புன்னு நினைச்சிராதீங்க கண்ணுகளா... சுகுணாவும் குணத்தில் வளர்மதி போலத்தான். என்ன கொஞ்சம் சிரிப்புதான் வராது... இவர் அறிவுத்திலகம் மட்டுமல்ல; நக்கல் திலகமும்கூட..

"ஏங்க யாருங்க இவுங்கள்லாம்.. எனக்கு யாரையுமே தெரியல.. எதுக்கு வந்திருக்காங்க.. என்ன நடக்குது இங்க..?"

- இப்படியெல்லாம் கேட்டா என்னத்தங்க சொல்றது..?

நானும் சொன்னேன்.. "நீங்க அவ்ளோ லேசுல யாருக்கும் பின்னூட்டம் போட மாட்டீங்க.. எல்லாரும் வந்து படிக்கிற மாதிரியும் எழுத மாட்டீங்க.. அப்புறம் எப்படி உங்களை எல்லாருக்கும் தெரியும்.." என்றேன்.. "எனக்குத்தாங்க பின்னூட்டமே வர மாட்டேங்குது.. ஆமா இவ்ளோ பேருமா எழுதுறாங்க..?" என்றார். என்ன பேசுவீங்க..?


"மாடிக்குப் போய் பார்க்கலாம்.. வாங்க.." என்று அழைத்துக் கொண்டு சென்றேன்.. பட்டறை அறைகளைச் சுத்திப் பார்த்துக் கொண்டிருக்க சுகுணா காபி மிஷினை பார்த்தவுடன் "காபி.." என்றார்.

அருகில் சென்று பார்க்க.. 'பின் நவீனம்' வந்திருக்கிறது என்பதை எப்படியோ கண்டு கொண்ட காபி மிஷின், மக்கர் செய்ய ஆரம்பித்தது..

"காபி வென்டர் எங்கய்யா..?" என்று பலரும் கூப்பாடு போட்ட பின்பு, இட்லி-வடைக்கு இணையத்தில் 'ஒத்தாசை' செய்து கொண்டிருந்த நா.ஜெய்சங்கர் 'வேலை'யை பாதியில் விட்டுவிட்டு ஓடி வந்து காபி போட்டுக் கொடுத்தார்..

அந்த நேரம்தான் வரவணையான், லக்கிலுக்குடன் வந்தார். சுகுணாவைப் பார்த்து குசலம் விசாரித்த போது 'மண்டையடி' ஓசை செல்லா அங்கே வந்துவிட்டார்.

வரவணையான் முதல் நாள் இரவு செல்லா, ரவியுடன் இணைந்து 'சரக்கு' அடித்தது, அதை செல்லா தனது பதிவில் புகைப்படத்துடன் போட்டுவிட்டது பற்றியெல்லாம் சொன்னார்.

உடனே சுகுணா, "நல்ல வேளை.. நான் வரலை. தப்பிச்சேன்.. உங்களுக்கு பொண்ணு தேடிக்கிட்டிருக்கீங்க.. இப்ப போய் கைல கிளாஸோட 'வசந்தமாளிகை சிவாஜி' மாதிரி போஸ் கொடுத்தா எவங்க பொண்ணு தருவான்...?" என்று அக்கறையாக வரவணையானிடம் கேட்ட சுகுணாவின் அடுத்த கேள்வியில் எனக்குத் தலையே சுற்றியது.. "ஆமா.. ஏங்க இப்படி குடிக்கிறீங்க. கெட்டப் பழக்கம்ல...?" என்றார் சுகுணா.

சாமி.. எனக்கு காதுல அப்படியே ஈயத்தை காய்ச்சி ஊத்தின மாதிரியிருந்துச்சு.. யாரு.. எதைப் பத்தி அட்வைஸ் பண்றதுன்னே விவஸ்தையே இல்லாம போச்சுய்யா நாட்டுல..

இந்த மயக்கத்தில் நின்றபோது செல்லா எங்களை செல்பேசியில் சுட்டுக் கொண்டார். சரி இவராவது போட்டோ எடுத்தாரே என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அதை வலையேற்றிய ஓசை செல்லாவிற்கு தேங்க்ஸ்..

நம்ம தருமி ஐயா அவ்வப்போது பார்க்கும் இடங்களிலெல்லாம் என்னிடம் மட்டை போட்டுக் கொண்டிருந்தார்.

"என்னாச்சு உங்க short film? எப்படியும் நான் சினிமா படம் டைரக்ட் பண்றதுக்குள்ள நீங்க இதை எடுத்திரணும் என்ன..?" என்று நக்கல் செய்யவும் தவறவில்லை.

அவரே தன் அருகில் நின்றிருந்தவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்து "இவர்தான் புதுவை இரா.சுகுமாரன்" என்றார். அவரிடமும் பேசினேன். அவரும், "நிறைய பள்ளிகளில் கேட்டுப் பாருங்கள். கண்டிப்பாகக் கிடைக்கும்.." என்றார். நம்பிக்கையோடு வாழ்த்துவதற்கு நமக்கும் ஆள் இருக்கிறார்களே என்று எனக்குள் ஒரு சின்ன சந்தோஷம்..

சகோதரி பொன்ஸின் தாயார் கூட்டத்திற்கு மதியவாக்கில் வந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்த பொன்ஸ் ஏதோ.. ஏதோ.. ஏதோ.. ஏதோ.. சொல்லிக் கொண்டேயிருந்தார்.

அந்தச் சமயத்தில் பொன்ஸ் என்ன சொன்னார் என்பதே எனக்குக் கேட்காத அளவுக்கு என் காது மந்தமாகிவிட்டது என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

பொன்ஸின் தாயாரிடம் மாலை நேரத்தில் பேசும் சூழல் வந்தது. "நிகழ்ச்சி எப்போ முடியும்..?" என்றார். "எப்படியும் 6, 7 ஆயிரும்.." என்றேன்.. "அவ்ளோ நேரம் ஆகுமா..?" என்றார் சந்தேகமாக..

பின்பு அவரே, "பீச்சுக்குப் போகலாம்னு நினைச்சேன்.." என்றார். "சரி போயிட்டு வாங்களேன்.." என்றேன். "இல்ல.. இல்ல.. பூர்ணாவோட போகணும்னு நினைச்சுத்தான் வந்தேன்.." என்றார். "மேடம் அவ்வளவு சீக்கிரம் வர மாட்டாங்களே.." என்றேன்..

'மேடம்' என்று பொன்ஸை குறிப்பிட்டு நான் சொன்னவுடன் பொன்ஸின் தாயார் முகத்தில் ஒரு சிறிய மகிழ்ச்சி. பூரிப்பு. இருக்காதா பின்ன..? லேசான சிரிப்போடு, "இல்ல வருவா.. அவளுக்கு என்ன வேலை இருக்கு..?" என்றார். "என்ன வேலையா? கடைசியா எங்களையெல்லாம் வெளில தள்ளி கதவைப் பூட்டி சாவியைக் கொடுத்துட்டுத்தான் கிளம்புவாங்க.." என்றேன்..

இப்போதும் அவரிடத்தில் ஒரு பெருமித சிரிப்பு.

இப்படியொரு சூழ்நிலையைத் தன் தாயாருக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்காக பொன்ஸ், நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

ஐந்தாம் பாகம்

11 comments:

வவ்வால் said...

அட டா அட்டகாசமான அதிரடி படம் போடுவிங்கனு பார்த்தா ஒரு குடும்ப கதைய சொல்லி இருக்கிங்க .... கண்டிப்பா தாய்மார்களின் ஆதரவுடன் வெள்ளி விழா தான்!

உண்மைத்தமிழன் said...

//அடடா அட்டகாசமான அதிரடி படம் போடுவிங்கனு பார்த்தா ஒரு குடும்ப கதைய சொல்லி இருக்கிங்க .... கண்டிப்பா தாய்மார்களின் ஆதரவுடன் வெள்ளி விழாதான்!//

எத்தனை தடவைதான் அதிரடி மசாலாவா எழுதுறது.. கொஞ்சம் பேமிலி சப்ஜெக்ட்டையும் எடுப்போமே.. ஏன்னா, மக்களோட ரசனை எந்த நேரத்துல மாறும்னு யாராலேயும் சொல்ல முடியாது ஸார்.. அதுனாலதான்.. வெள்ளி விழா எடுத்தா உங்களுக்கு நான் ராயல் பார்ல கண்டிப்பா ஒரு விழா எடுக்குறேன்.. சர்ரீங்களா வவ்வால்ஜி..

பொன்ஸ்~~Poorna said...

அப்பாடா.. நீங்க மட்டுமாவது இப்படி நல்லதா சொன்னீங்களே..

மானம் காத்த மாவீரன் அண்ணன் உண்மைத்தமிழன் வாழ்க !

அன்னிக்கு அத்தனை நேரம் கழிச்சி, கடலைக் கூட காட்டாம கூட்டிப் போனதுக்கு நல்ல பூசை எதிர்பார்த்தேன்.. இதனால தான் அதிகம் கண்டுக்கிடலை போலிருக்கு.. ரொம்ப நன்றி சாமி..

உண்மைத்தமிழன் said...

//பொன்ஸ்~~Poorna said...
அப்பாடா.. நீங்க மட்டுமாவது இப்படி நல்லதா சொன்னீங்களே..
மானம் காத்த மாவீரன் அண்ணன் உண்மைத்தமிழன் வாழ்க !
அன்னிக்கு அத்தனை நேரம் கழிச்சி, கடலைக் கூட காட்டாம கூட்டிப் போனதுக்கு நல்ல பூசை எதிர்பார்த்தேன்.. இதனால தான் அதிகம் கண்டுக்கிடலை போலிருக்கு.. ரொம்ப நன்றி சாமி..//

நன்றியா.. அடுத்த வாரம் மறக்காம அம்மாவை பீச்சுக்குக் கூட்டிட்டுப் போய் காட்டுங்க..

அவ்ளோ நேரம் பாவமா காத்திருந்தும் செய்யலையா.. உங்களையெல்லாம் யானை கால்ல வைச்சு...)))))))

வவ்வால் said...

உண்மை தமிழர் ,

இந்த ராயல் பார் மேட்டருக்காகவே அடுத்த தடவை பட்டறை நடந்தா செந்தழல் ரவிக்கு பக்கதில் சீர் புடிக்கணும்னு திட்டம் போட்டு இருக்கேன்! நீங்களே ராயல் பார் ல வச்சு "கவனிக்க்கிறேன்" சொன்ன பிறகு வெள்ளி விழா வரைக்கும் படத்த ஓட்டாம விடுவனா! கவலையே படாதீங்க ஓட்டிரலாம்!
-------------------------

அம்மா பொன்ஸ்!
//அன்னிக்கு அத்தனை நேரம் கழிச்சி, கடலைக் கூட காட்டாம கூட்டிப் போனதுக்கு நல்ல பூசை எதிர்பார்த்தேன்.. இதனால தான் அதிகம் கண்டுக்கிடலை போலிருக்கு.. //

அப்போ உங்களை காத்த குல தெய்வம் ஆகிட்டார் உண்மை தமிழர்! உண்மைலே டச்சிங் பார்ட் இது தான் , உங்க அம்மாவும் வந்து கலந்து கொண்டது. எதையும் நேராப்பார்க்காமலே பார்க்க வச்ச வலைப்பதிவுகளும் அதன் சேவையும் அட டா ...

தகடூர் கோபி(Gopi) said...

//மோகன்ராஜ்ங்கிறவரு இந்தப் பேரை சத்தமா சொல்லிட்டு 'கப்பிபய' என்ற தன்னுடைய பட்டப் பெயரை மட்டும் முனங்கிக்கிட்டு சொன்னது தமாஷ்.//

ஏதேது... இருக்குற குழப்பம் பத்தாதுன்னு இன்னும் குழப்பிடுவீங்க போல இருக்கு... மோகன்ராஜ் பேரு கைப்புள்ளங்க.. அவர் தான் வ.வா.சங்கத்தோட 'தல'

Nakkiran said...

4வது பாகம்...
படிச்சிட்டம்ல...

உண்மைத்தமிழன் said...

//வவ்வால் said...
உண்மை தமிழர், இந்த ராயல் பார் மேட்டருக்காகவே அடுத்த தடவை பட்டறை நடந்தா செந்தழல் ரவிக்கு பக்கதில் சீட் புடிக்கணும்னு திட்டம் போட்டு இருக்கேன்! நீங்களே ராயல் பார ல வச்சு "கவனிக்கிறேன்" சொன்ன பிறகு வெள்ளி விழாவரைக்கும் படத்த ஓட்டாம விடுவனா! கவலையேபடாதீங்க ஓட்டிரலாம்!//

வவ்வால்ஜி.. இப்படியெல்லாம் திடீர்ன்னு கோஷ்டி மார்றது நல்லாயில்ல.. சொல்லிப்புட்டேன்.. தம்பி ரவி.. ரொம்பத் தங்கமான புள்ளை.. இந்த செல்லாவும், வரவனையும் சேர்ந்துதான்.............

அம்மா பொன்ஸ்!

//அன்னிக்கு அத்தனை நேரம் கழிச்சி, கடலைக் கூட காட்டாம கூட்டிப் போனதுக்கு நல்ல பூசை எதிர்பார்த்தேன்.. இதனால தான் அதிகம் கண்டுக்கிடலை போலிருக்கு.. //

அப்போ உங்களை காத்த குல தெய்வம் ஆகிட்டார் உண்மை தமிழர்! உண்மைலே டச்சிங் பார்ட் இதுதான் , உங்க அம்மாவும் வந்து கலந்து கொண்டது. எதையும் நேராப ்பார்க்காமலே பார்க்க வச்ச வலைப்பதிவுகளும் அதன் சேவையும் அடடா...

அடுத்தத் தடவை மறக்காம எங்கேயிருந்தாலும் வந்திருங்க வவ்வால்ஜி.. பொன்ஸ் அம்மணிகிட்ட உங்க பாசத்தை உங்க சார்பா நானே கொட்டிர்றேன்.. கண்ணைத் துடைச்சுக்குங்க..

உண்மைத்தமிழன் said...

///கோபி(Gopi) said...
//மோகன்ராஜ்ங்கிறவரு இந்தப் பேரை சத்தமா சொல்லிட்டு 'கப்பிபய' என்ற தன்னுடைய பட்டப் பெயரை மட்டும் முனங்கிக்கிட்டு சொன்னது தமாஷ்.//
ஏதேது... இருக்குற குழப்பம் பத்தாதுன்னு இன்னும் குழப்பிடுவீங்க போல இருக்கு... மோகன்ராஜ் பேரு கைப்புள்ளங்க.. அவர் தான் வ.வா.சங்கத்தோட 'தல'///

ஓ.. ஸாரி அரவிந்த்சாமி.. ஸாரி கோபி.. கைப்புள்ளைய, கப்பிபயன்னு மாத்திட்டேன் அவ்ளோதான.. . இனிமே எங்க யார்கூட பேச போனாலும் துணைக்கு ஒரு ஆளோட போகணும்ன்றது இதுக்குத்தான்..

உண்மைத்தமிழன் said...

//Nakkiran said...
4-வது பாகம்... படிச்சிட்டம்ல...//

5-வது முறையா தேங்க்ஸ்..

சொல்லிட்டோம்ல..

abeer ahmed said...

See who owns sparrowlane.com or any other website:
http://whois.domaintasks.com/sparrowlane.com