என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அறிமுகம்
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்
நான்காம் பாகம்
இடையில் வரவணையான் என் கையில் சிக்காமல் எஸ்கேப்பாகிக் கொண்டேயிருந்தார். மனுஷன் பின்னாடியே போய் பேச வேண்டியிருந்துச்சு.. இதுக்குத்தான் ஒத்த கருத்துள்ள மனுஷங்களையா பிரெண்ட்ஷிப் பிடிக்கணும்ன்றது..
மிதக்கும் வெளி போய்விட்டார் என்று வரவணையான் என்னிடம் சொல்ல வெளியில் மரத்தடியில், ரிப்போர்ட்டர்கள், லிவிங்ஸ்மைலுடன் ஒரு மினி கான்ப்ரன்ஸ் நடத்திக் கொண்டிருந்தார் மிதக்கும்வெளி.
வண்டியைக் கிளப்பிக் கொண்டு போகும்போது அவரை வழி மறித்து "என்னை மறந்திராதீங்க ஸார்.." என்றேன். "உங்களைப் போய் மறப்பனா..? நாளைக்கே உங்க பேர்ல நாலு கமெண்ட் நானே போட்டுடறேன். ஓகேவா..?" என்று அன்பாகச் சொல்லிவிட்டு எஸ்கேப்பானார் சுகுணா. ம்.. எம்புட்டு நக்கலு..?
இந்த போலி கமெண்ட்டு மேட்டருக்கு, நான் எத்தனை கஷ்டப்பட்டு பதிவு போட்டு, அழுதிருக்கேன்னு எனக்குத்தான தெரியும்..
தம்பி செந்தழல் ரவி ஒரு நேரத்தில் ஒழுக்கமாக அரங்கத்தில் அமர்ந்து கருத்தரங்கை கேட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் சென்று அமர்ந்தேன்.
"வாங்க ராயல் பாருக்குப் போயிட்டு வரலாம்.." என்றார். சரி.. ஏதோ சாப்பிடத்தான் சொல்றாரோ என்று நினைத்து "சரி போகலாம்.." என்றேன்.. வெளியில் வந்தோம்..
வரவனையான், லக்கிலுக், ரவி என்று கிளம்பும்போது ரவி சொன்னார்.. "அண்ணே நீங்க ஒரு half-ஆவது அடிப்பீங்கள்லே.." என்று.. "தம்பி நீ இதுக்குத்தான் கூப்பிட்டியா ராசா.." என்றேன். "பின்ன பாருக்கு எதுக்கு கூப்பிடுவாங்க..? டீ குடிக்கவா..?" என்றார். "இல்லப்பா.. ஒரு சிப் குடிச்சாலும் நான் அங்கேயே மட்டைய போட்டிருவேன். என் உடம்புக்கு அது ஒத்துக்காது. நீ கிளம்பு.." என்று சொல்லிவிட்டு திரும்பி உள்ளே வந்துவிட்டேன்.
ஆனாலும் எல்லா இடத்திலும்தான் ஒற்றர்கள் இருக்கிறார்களே. இப்படி ஒரு டீம் வெளில கிளம்புதுன்னு யாரோ உள்ள போய் யார்கிட்டயோ பத்த வைச்சிட்டாங்க போலிருக்கு..
வரவணையான், ரவி - அவரவர் காரிலும் லக்கிலுக் பைக்கிலும் கிளம்பி நின்னுக்கிட்டிருக்காங்க.. வாசல்லேயே செல்போன்ல மடக்கிட்டாங்க.. என்ன சொன்னாங்களோ தெரியலே.. ரெண்டு காரும் திரும்பி உள்ளே வந்து.. தொங்கிப் போன முகத்தோடு புள்ள ரவி, முனங்கிக்கிட்டே முன்னாடி வந்து உக்காந்துச்சு..
அப்புறம் தெரிஞ்சது, உள்ள ஒரு மேட்டரு ரவிக்கு இருக்குன்னு.. "வலைத்தளத்தில் வேலை வாய்ப்புகள்" அப்படின்ற தலைப்புல ரவி பேசுச்சு.. பேசுச்சு.. பேசி முடிச்சுச்சு.. அவ்வளவுதான்.. லக்கிலுக்கை பார்த்து ஒரு லேசா லுக்குவிட்டுட்டு அப்படியே நைஸா நழுவிக்கின்னு எஸ்கேப்பு..
இந்தப் பக்கம் நம்ம ஓசை செல்லா ஒலி, ஒளி பத்தி பேசப் போறேன்னு ஆரம்பிக்க.. குறைந்த நேரம்தான் என்று பத்ரி ஸார் இழுத்தார். விக்கியும் குறித்த நேரத்தில் முடித்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க..
செல்லாவுக்கு மனம் கொள்ளாத வருத்தம், அஞ்சு நிமிஷத்துல முடிக்க வேண்டியதாகிப் போச்சேன்னு.. சரி விடு சாமி.. அதான் டெய்லி நாலு போட்டோ, ரெண்டு வீடியோன்னு ஏத்திக்கிட்டே இருக்கியே.. அது போதும் உனக்கு..
மாடியில் அனைத்து செய்முறைப் பயிற்சிகளையும் முடித்துவிட்டு தம்பி வினையூக்கியும், பொன்ஸ¤ம் கீழ்த் தளத்திற்கு வந்து கலந்து கொண்டனர்.
பொன்ஸ் வலைத்தளத்தில் உலா வரும் ஒளிக்கதிர்களான மங்கையர்களின் பங்கு குறித்து பேசினார். நேரமின்மையால் அவசரம், அவசரமாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பேசினது எனக்கு வருத்தம்தான்.. பாவம்.. நிறைய பேசணும்னு இருந்தார்.. கெடுத்தது மா.சி.தான்..
அவர்தாம்பா பட்டறைலேயே நிறைய நேரம் மைக்கை யார்கிட்டேயும் தராம வைச்சிருந்து அவரே பேசிக்கிட்டாரு.. அடுத்தப் பட்டறைல அவர்கிட்ட நன்றி உரையையும், பாலபாரதிகிட்ட கட்டி மேய்க்கிற வேலையையும் விடணும்.. (எத்தனை தடவை 'ங்கொய்யால'ன்னு சொல்றதை எண்ணுறதுக்கு ஒரு ஆளையும் போட்டிரலாம்)
சொல்லி வைத்தாற்போல் நன்றியுரை நிகழ்த்த வந்த பாலபாரதி, "நான்... பாலபாரதி.." என்றவுடன் சட்டமன்றத்தில் நடக்கும் மேசை தட்டுதல்களைப் போன்ற ஓசை எழும்பியதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். பொய் சொன்னா நல்லாயிருக்காது பாருங்க..
அதையும் பத்தே பத்து வரில சொல்லி முடிச்சு பட்டறைக்காக இரண்டு மாத காலமாக உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களையும் ஊர், உலகத்துக்கு காண்பித்துவிட்டு விடைபெற்றார்.
இது எப்படா முடியும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த தம்பி லக்கிலுக் விட்டால் போதும் என்று ராயல் பாருக்கு உடனேயே கிளம்பிவிட்டார். அங்கேயும் ஒரு பதிவர் பட்டறையை ரவி, வரவணையான், முகுந்த் ஆகியோரோடு லக்கிலுக் நடத்தியதாக பின்னாளில் கேள்விப்பட்டேன்.
பத்ரி ஸார் முதலில் கிளம்பி 'ஹாய்', 'பை..' சொல்லி வெளியேறினார்.
இதற்காகவே காத்திருந்தார்போல் தம்பி நந்தா நேற்று இரவு வாங்கியிருந்த அந்த ஸ்வீட் பாக்ஸை திறக்க, நிமிடத்தில் காலி.
இந்த நேரத்தில்தான் ஒரு மடிக்கணினி எனக்கு முன்பாக ஆசை காட்டிக் கொண்டே சும்மா கிடந்தது. எடுத்து "யாருடையது..?" என்று கேட்டேன். செல்லா "தெரியாது.." என்றார். நந்தா "தெரியாது.." என்றார். ஜே.கே. "தெரியாது.." என்றார்.
சரி.. கைல வைச்சுக்குவோம். அப்பால பார்த்துக்கலாம் என்று சொல்லி வெளியே கொண்டு வந்து டேபிளில் வைத்து பக்கத்தில் பாதுகாவலாக நின்றிருந்தபோது, என் அருகில் அமர்ந்திருந்த சிவஞானம்ஜியிடம் வந்த தருமி ஐயா, "உங்களை எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே.. யார் ஸார் நீங்க..?" என்றார். இதே கேள்வியை கிட்டத்தட்ட ஒரு பதினைஞ்சு பேர்கிட்டயாச்சும் கேட்டிருக்கும் இந்த பெரிசு. எல்லாம் மதுரை ரவுசு..
சிவஞானம்ஜி ஐயா தான் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய சம்பவத்தைச் சொன்னார். பெருமையாக இருந்தது.
பொன்ஸ் வந்து மடிக்கணினி என்னுடையது என்று சொன்னபோது எனக்கு சப்பென்று ஆனது.. தெரிந்திருந்தால் அப்படியே தூக்கிட்டு எஸ்கேப்பாயிருப்பேனே.. யாருமே சொல்லலைப்பா..
லிவிங்ஸ்மைல் வித்யா அம்மணி இப்போதும் அடக்கமாக அமைதியாக காட்சியளித்தார். நான் விடைபெற்றபோதும் ஒரு சின்ன தலையசைப்பு. அவ்ளோதான்.. 'கோடம்பாக்கம்' எப்படியெல்லாம் மாத்துது பாருங்க..
குசும்பன் என்ற கோவி கண்ணன் என்ற நாமக்கல் சிபி கடைசிவரைக்கும் என் உடன் இருந்து பார்ப்பவர்களிடமெல்லாம் என்னைக் காட்டி இவர்தான், "உண்மையான உண்மைத்தமிழன்.." என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஒண்ணும் சொல்ல முடியலப்பா..
இதுல வெண்குழல் பத்த வைக்க துணைக்கு செல்லாவையும் அழைத்துக் கொண்டு ஓரமாக ஒதுங்கியபோது நான் கேட்டேன், "யோவ் இது உனக்கே நல்லாயிருக்கா.. நான் சிகரெட்டை விட்டுட்டேன்னு பதிவே போட்டியே.. இப்ப இழுத்து இழுத்து விடுற.. அப்ப அந்தப் பதிவைப் படிச்ச நாங்கள்லாம்.." என்று சொல்லி முடிப்பதற்குள்ளாக பதில் வந்தது.. "சந்தேகமேயில்லை.. லூஸ¤கதான்.. யார் உங்களைப் படிக்கச் சொன்னா.." என்றார் சிபி. துணைக்கு நம்ம செல்லாவும் சேர்ந்து கொள்ள அருகில் நின்று புகையைப் பிடிக்கத்தான் முடிந்தது என்னால்.
இதில் எனக்கு பெரிய வருத்தம் தந்த விஷயம் என்னவெனில், சக பதிவர் திரு.பாலராஜன்கீதா அவர்கள் 3, 4 முறை என்னுடன் பேசுவதற்கு முயன்றும் என்னால் அவருடன் தொடர்ந்து பேச முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. கடைசியில் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தபோது, அவர் சென்றுவிட.. ஸாரி ஸார்.. வெரி வெரி ஸாரி..
நண்பர் முத்துக்குமார் திடீரென்று வந்து அறிமுகம் செய்து கொண்டார். புகைப்படத்தில் பார்ப்பதைவிடவும் மிக இளமையாக இருந்தார். எனக்கு அடையாளம் தெரியவில்லை.
"காலையிலேயே சென்னைக்கு வந்துவிட்டாலும், வேலை இருந்ததால் கடைசி நேரத்தில்தான் வந்தேன்.." என்று பத்து தடவையாச்சும் வருத்தப்பட்டுச் சொன்னார். "சரி விடுங்க.. அடுத்த பட்டறை உங்க ஊர்லதான் இருக்கும்.. அப்ப பார்த்துக்கலாம்.." என்றேன்.
இதே நேரம் தருமி ஐயா, மதுரை பட்டறை குறித்து பாலபாரதியிடம் குசுகுசுவென கிசுகிசு பாணியில் பேசிக் கொண்டிருந்தார்.
ஆக மொத்தம், உண்மைத்தமிழனுக்கு இன்னொரு 6 பதிவுக்கு மேட்டர் வருது.. வாழ்க பாலபாரதியும், பெருசு தருமியும்..
நண்பர் காசி ஆறுமுகத்திடமும் தனியே பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். காசி ஸார் எப்போதும் நான்கு, ஐந்து பேர் இருக்கும் கூட்ட ஜோதியுடனேயே இருக்க.. முடியவே இல்லை..
கிளம்புகின்றபோது நண்பர் கிருபாசங்கரும், ஹாய் கோபியும் என்னிடம் சிக்கினார்கள்.
கிருபாசங்கரிடம் பேசினேன்..
"நீங்கதான் இட்லிவடையா..?
இல்லையே..
அப்ப நீங்க யாரு?
கிருபாசங்கர்..
நீங்கதான் இட்லிவடைன்னு எல்லாரும் சொல்றாங்களே..
அது வேற கிருபாசங்கர்..
அப்ப அவர்தான் இட்லிவடைன்னு நீங்க சொல்றீங்களா..?
இல்ல.. இல்ல.. எனக்குத் தெரியாது..
இப்பத்தான் தெரியும்னீங்க..
அவர் பேர் கிருபாசங்கர்ன்னு தெரியும்னு சொன்னேன்..
உங்களைத்தான எல்லாரும் கை காட்டுறாங்க..
தப்பா சொல்லிருப்பாங்க.. நான் விருகம்பாக்கம்.. அவர் சைதாப்பேட்டை..
அப்ப சைதாப்பேட்டைதான் இட்லிவடையா..?
நோ கமெண்ட்ஸ்..
ஒத்துக்கவே மாட்டீங்களா..?
எழுதினாத்தான ஒத்துக்குறது..?
நீங்க கிழக்கு பதிப்பகத்துல வேலை பார்க்குறதா சொன்னாங்களே..?
அது சைதாப்பேட்டை..
அப்ப நீங்க..?
நான் விருகம்பாக்கம்..
அப்ப இட்லிவடை..
அது நான் இல்லே.."
சத்தியமா எனக்குப் புரியலை சாமிகளா..
இதுனால நான் என்ன சொல்றேன்னா.. அடுத்த கூட்டமோ, பட்டறையோ எங்க நடந்தாலும் சரி.. யார் மடிக்கணினியைப் பயன்படுத்தினாலும் அவரோட பிளாக்கர் அட்ரஸ் கேட்டுட்டு, கூட ஒரு ஆளையும் காவலுக்குப் போட்டிரணும்.. அப்பத்தான் இந்த இட்லி வடை யாருன்னு கண்டுபிடிக்க முடியும்..
அந்த நேரத்திலும் பாலபாரதியும், மா.சி.யும் மிகவும் பரபரப்பாகவே இருந்தார்கள். காபி மெஷினை ஆட்டோவில் ஏற்றி அனுப்பியதில் இருந்து தண்ணீர் கேன்களை அனுப்புவதுவரை ஒரு கல்யாணத்தை நடத்தி முடித்த திருப்தி அவர்களுக்கு.
தருமி ஐயா, சிவஞானம்ஜி, பொன்ஸ், லிவிங்ஸ்மைல், தம்பி வினையூக்கி, தம்பி சிபி, நண்பர் அதியமான் ஆகியோரிடமெல்லாம் சொல்லிவிட்டு மா.சி.க்கும், பாலபாரதிக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிவிட்டு, செல்லாவுடன் அவருடைய ஹோட்டலுக்குக் கிளம்பினேன்.
ஹோட்டல் அறையில் பாட்டில் கையில் இல்லாமலேயே செல்லா தள்ளாட்டத்துடனேயே இருந்தார். எனக்கும் அப்படித்தான் இருந்தது. அவ்வளவு டயர்டான சூழ்நிலையிலும் பேசினோம்.. பேசினோம்.. பேசிக் கொண்டேயிருந்தோம்..
இரவு டிபனை அவருடனேயே சாப்பிட்டுவிட்டு செல்லா சொன்ன 'அட்வைஸ்கள்' அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டு, இரவு 9 மணிக்கு அங்கிருந்து கிளம்பினேன்..
செல்லா அறைக் கதவைச் சாத்துவதற்கு முன் கடைசியாக எனக்கு சொன்ன அட்வைஸ், "முதல்ல பொழப்ப பாருங்க.. அப்புறமா பிளாக்ல எழுதலாம்.." என்பதுதான்..
எனக்குத் தேவையான அட்வைஸ்தான்..!
|
Tweet |
47 comments:
எல்லாப்படத்திலும் வணக்கம் போடும் முன் சொல்லும் தத்துவ படத்துல மெஸ்ஸேஜ் எதுவும் இல்லைனு யாரும் சொல்லிடக்கூடது இதுவா...
//முதல்ல பொழப்ப பாருங்க.. அப்புறமா பிளாக்ல எழுதலாம்.." என்பதுதான்..//
நல்ல தத்துவம் ... படம் சன் டி.வி டாப் டென்னில் நிச்சயம் முதலிடம் வரும்!!.
வவ்வால்ஜி.. தங்களது ஆசீர்வாதத்திற்கு எனது நன்றிகள்.. ஆனா ஒரு கேள்வி ஸார்..
எப்படி ஸார்.. எப்படி ஸார்.. இப்படி கடைசிவரைக்கும் மூச்சுவிடாம ஒரே தம்-ல படிச்சு முடிச்சீங்க..?
என் இதயத்துல இடம் புடிச்சிட்டீங்க ஸார்.. கடைசி வரைக்கும் நானா உங்களை வெளில தள்ள மாட்டேன்.. இது சத்தியம் ஸார்..
நன்றி உண்மைத்தமிழன்,
உங்களின் மற்ற பதிவுகளை விட இந்த பதிவு சுறு சுறுப்பா இருந்தது , பதிவர் பட்டறை என்றதும் தானாகவே ஒரு வேகம் உங்கள் எழுத்தில் ஒட்டிக்கொண்டது போல.
அதிலும் பங்ஜர் ஆன வண்டியை தள்ளிக்கொண்டு அலைந்து கஷ்டப்பட்டதை படிக்கும் போது , எதுவும் செய்யாமல் நொட்டை பேசுபவர்கள் தான் கண் முன் வருகிறார்கள். உண்மைலே உங்களுக்குலாம் ரொம்ப பெரிய மனசுங்க!
//வவ்வால் said...
நன்றி உண்மைத்தமிழன்,
உங்களின் மற்ற பதிவுகளை விட இந்த பதிவு சுறு சுறுப்பா இருந்தது , பதிவர் பட்டறை என்றதும் தானாகவே ஒரு வேகம் உங்கள் எழுத்தில் ஒட்டிக்கொண்டது போல.
அதிலும் பங்ஜர் ஆன வண்டியை தள்ளிக்கொண்டு அலைந்து கஷ்டப்பட்டதை படிக்கும் போது , எதுவும் செய்யாமல் நொட்டை பேசுபவர்கள் தான் கண் முன் வருகிறார்கள். உண்மைலே உங்களுக்குலாம் ரொம்ப பெரிய மனசுங்க!//
அதை நான் எழுதியதற்குக் காரணமே நான் உண்மை என்று நினைக்கும், அந்த பைத்தியக்காரன் போன்ற தோற்றத்தில் இருந்த என் அப்பன் முருகன்தான். நிஜமாகவே கலங்கித்தான் போனேன் நான். காரணம் அப்போது கையில் போதுமான பணமும் இல்லை. நந்தாவிடம்தான் வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்குள் அவனே உடனடியாக ஒரு வழியைக் காட்டிவிட்டான். இந்த ஒரு நிகழ்வுக்காகவேதான் ஆகஸ்ட்-4-ல் நடந்ததை ஒரு பதிவாக இட்டேன்.
உண்மைத்தமிழன் அண்ணே.. நானும் படிச்சிட்டேன்.. நிசமாவே சுவாரஸ்யமாத்தேன் எழுதிருக்கீக.. :)
//பொன்ஸ்~~Poorna said...
உண்மைத்தமிழன் அண்ணே.. நானும் படிச்சிட்டேன்.. நிசமாவே சுவாரஸ்யமாத்தேன் எழுதிருக்கீக.. :)//
ரொம்ப சந்தோஷம் தங்கச்சி.. இவ்ளோ பாஸ்ட்டா படிச்சு முடிப்பீங்கன்னு எதிர்பார்க்கலே.. பரவாயில்லை.. இது மாதிரி அப்பப்ப ஒரு 25 பக்கம், 30 பக்கம் மேட்டரா மொத்தமா போட்டிரலாமான்னு இப்பத்தான் யோசிக்கிறேன்..
சொன்ன மாதிரியே போட்டுட்டீங்க...ஆனா ரொம்ப ஜாக்கிரதையா எழுதி இருக்கீங்க...
ஒரே மூச்சில் படிக்க வைத்த சுவையான பதிவு...
பிரிச்சு மேயறதுன்னு சொல்லுவாங்களே....அதுக்கு இந்த பதிவை உதாரணமாச் சொல்லலாம்....
காட்சிகளை கண் முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்....
வாழ்த்துக்கள்....
அப்புறம் ஷூட்டிங் நடத்த ஸ்கூல் கெடச்சிதா இல்லையா....எந்த மாதிரி இடத்தை எதிர்பார்க்கிறீர்கள்....?
சுவராசியமாகவே எழுதியிருக்கீங்க :)
வாழ்த்துக்கள் :)
சுவாரசியமாகவே எழுதியிருக்கீங்க :)
நன்றி :)
அன்பு நண்பரே ஐந்து பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். சுவாரஸ்யமாகவே இருந்தது. மிகவும் விவரமாகவே எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
இறுதியாக நண்பர் ஓசை சொன்னதைதான் நானும் கொஞ்சம் மாத்தி சொல்கிறேன். "முதல்ல பொழப்ப பாருங்க.. அப்புறமா நேரம் கிடைக்கும் போது பிளாக்ல எழுதலாம்.."
//உண்மைத்தமிழன் அண்ணே.. நானும் படிச்சிட்டேன்.. நிசமாவே சுவாரஸ்யமாத்தேன் எழுதிருக்கீக.. :)//
ரிப்பீட்டே...
நீங்க விவரிச்ச பெரும்பாலான நிகழ்வுகளில் நானும் ஒரு பார்வையாளனாய் (அருகிலோ, தூரத்திலிருந்தோ) இருந்திருக்கிறேன். என்னா ஞாபக சக்தி உங்களுக்கு...
5வது பாகம்...
படிச்சிட்டம்ல...
நீங்க இந்த 6 பதிவுகள் (அறிமுகம்+5).. கம்பைன் செய்து, உங்க ஸ்ட்ய்லெ நீளமா 3 பதிவா போட்டுருக்கல்லாம்..
எல்லா பதிவும் சீக்கிரமா முடிஞ்சுடுது... உங்க பதிவ படிக்கிற ஃபீலிங்கே இல்ல :)
//✪சிந்தாநதி said...
சொன்ன மாதிரியே போட்டுட்டீங்க...ஆனா ரொம்ப ஜாக்கிரதையா எழுதி இருக்கீங்க... ஒரே மூச்சில் படிக்க வைத்த சுவையான பதிவு...//
ஒரே மூச்சில் படித்த உங்களைத்தான் பாராட்ட வேண்டும். நன்றி சிந்தாநதி ஸார்.. ரொம்ப ஜாக்கிரதையாத்தான் எழுதினேன்.. ஏன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே.. எவ்வளவுதான் அடி வாங்குறது..?
//பங்காளி... said...
பிரிச்சு மேயறதுன்னு சொல்லுவாங்களே....அதுக்கு இந்த பதிவை உதாரணமாச் சொல்லலாம்.... காட்சிகளை கண் முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்.... வாழ்த்துக்கள்....//
நன்றி பங்கு.. என்ன நீங்களும் லீவா..? பதிவே காணோமே..?
//அப்புறம் ஷூட்டிங் நடத்த ஸ்கூல் கெடச்சிதா இல்லையா....எந்த மாதிரி இடத்தை எதிர்பார்க்கிறீர்கள்....?//
ஒரு indoor அரங்கம்தான் தேவை.. spot recording என்பதால் indoor-ஆக இருந்தால்தான் வசதிப்படும். இருக்கின்ற டங்களின் வாடகை மிக அதிகமாக இருக்கிறது.. தேடிக் கொண்டேயிருக்கிறேன்.. நிச்சயம் முருகனருளால் கிடைக்கும் என்றே நம்புகிறேன்..
///கோபி(Gopi) said...
//உண்மைத்தமிழன் அண்ணே.. நானும் படிச்சிட்டேன்.. நிசமாவே சுவாரஸ்யமாத்தேன் எழுதிருக்கீக.. :)//
ரிப்பீட்டே... நீங்க விவரிச்ச பெரும்பாலான நிகழ்வுகளில் நானும் ஒரு பார்வையாளனாய் (அருகிலோ, தூரத்திலிருந்தோ) இருந்திருக்கிறேன். என்னா ஞாபக சக்தி உங்களுக்கு...///
கண்ணா.. கூட ஒரு சாட்சி இருந்ததுனாலதான் நானும் பார்த்து, பார்த்து பத்திரமா எழுத வேண்டியதாப் போச்சு. அதோட அப்பப்ப பேப்பர்ல எழுதி வைச்சிருந்து மொத்தமா டைப்பிங் செஞ்சேன்.. அதான்.. அப்புறம் அந்த மதுபாலா மேட்டர் என்னாச்சு? கிடைக்கலியா..?
//Nakkiran said...
5வது பாகம்... படிச்சிட்டம்ல...//
6-வது தடவையா தேங்க்ஸ்
சொல்லிட்டோம்ல..
//நீங்க இந்த 6 பதிவுகள் (அறிமுகம்+5).. கம்பைன் செய்து, உங்க ஸ்ட்ய்லெ நீளமா 3 பதிவா போட்டுருக்கல்லாம்.. எல்லா பதிவும் சீக்கிரமா முடிஞ்சுடுது... உங்க பதிவ படிக்கிற ஃபீலிங்கே இல்ல:)//
போட்டிருக்கலாம். மொத்த பக்கங்கள் 30. அதையே 5-ஆக பிரித்துப் போட்டேன். இன்னும் பெரியதாக இருந்தால் Net Centre-களில் போய் படிப்பவர்கள் கஷ்டப்படுவார்கள். அவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வெளி இடங்களில் இப்போதும் கம்ப்யூட்டரின் ஸ்பீட் 256தான் வைத்திருக்கிறார்கள். பதிவர்கள் பெரும்பாலோர் நமக்குத் தெரிந்தவர்களாக இருப்பதால் உங்களோட பீலிங் அப்படி இருந்திருக்கலாம் என்பது எனது அபிப்ராயம்.
தாமதமா எழுதுனாலும், உங்களோட தனி பாணியில அசத்தியிருக்கீங்க.
நான் உங்களைப் பார்த்த போது மாடியில் மா.சி யின் பேச்சை வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தீர்கள். பிறகு பேசிக் கொள்ளலாம் என நினைத்தேன்.
முடியவில்லை.
கலக்கிட்டீங்க... இனிமே இந்த மாதிரி அருமையான பதிவுகளை படிக்கணுங்கறதுக்காகவே அடிக்கடி யாரு என்ன நொட்டம் சொன்னாலும் பரவாயில்லைன்னு னிறைய பட்டறைகளை நாம நடத்தணும்னு தோணுது....
ஒரே முச்சில படிச்சு முடிச்சாச்சு. இவ்ளோவ் பெரிசா எழுதறது மேட்டரே இல்லை. அதை இவ்ளோவ் அழகா கொடுத்திருக்கீங்க பாருங்க. அதுக்கு வெக்கணுங்க ஒரு சல்யூட்.
ரொம்ப நாளா எழுதாதகுறையை இதுல தீர்த்துட்டீங்க. கலக்குங்க....
இப்பத்தான் இந்த ஆறு பதிவுகளையும் ஒரே மூச்சாப் படிச்சு முடிச்சேன்.
பட்டறையை விட்டுட்டோமேன்னு ஒரு பக்கம் மனசு அடிச்சுக்கத்தான் செய்யுது(-:
ஆமாம், கோவியார்தான் சிபியா? குழப்பமா இருக்கே!
உண்மைத் தமிழன்,
உடல்நிலை சரியில்லாத வாரத்திலும் பத்திரிகைத் தொடர்புக்காக நீங்கள் செய்த பணிகளையும் விளக்கியிருக்கலாம்.
உங்கள் கையில் கலைமகள் குடியேறியிருக்கிறாள். இது போன்று சுற்றி நடப்பவற்றைத் தொடர்ந்து எழுதுங்கள்.
முருகன் உங்களுக்கு எல்லா வளங்களும் அருள்வான்.
அன்புடன்,
மா சிவகுமார்
// 21 comments:
வவ்வால் said...
எல்லாப்படத்திலும் வணக்கம் போடும் முன் சொல்லும் தத்துவ படத்துல மெஸ்ஸேஜ் எதுவும் இல்லைனு யாரும் சொல்லிடக்கூடது இதுவா...
//முதல்ல பொழப்ப பாருங்க.. அப்புறமா பிளாக்ல எழுதலாம்.." என்பதுதான்..//
நல்ல தத்துவம் ... படம் சன் டி.வி டாப் டென்னில் நிச்சயம் முதலிடம் வரும்!!.
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007 இரவு 8:41:00
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வவ்வால்ஜி.. தங்களது ஆசீர்வாதத்திற்கு எனது நன்றிகள்.. ஆனா ஒரு கேள்வி ஸார்..
எப்படி ஸார்.. எப்படி ஸார்.. இப்படி கடைசிவரைக்கும் மூச்சுவிடாம ஒரே தம்-ல படிச்சு முடிச்சீங்க..?
என் இதயத்துல இடம் புடிச்சிட்டீங்க ஸார்.. கடைசி வரைக்கும் நானா உங்களை வெளில தள்ள மாட்டேன்.. இது சத்தியம் ஸார்..
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007 இரவு 9:29:00
வவ்வால் said...
நன்றி உண்மைத்தமிழன்,
உங்களின் மற்ற பதிவுகளை விட இந்த பதிவு சுறு சுறுப்பா இருந்தது , பதிவர் பட்டறை என்றதும் தானாகவே ஒரு வேகம் உங்கள் எழுத்தில் ஒட்டிக்கொண்டது போல.
அதிலும் பங்ஜர் ஆன வண்டியை தள்ளிக்கொண்டு அலைந்து கஷ்டப்பட்டதை படிக்கும் போது , எதுவும் செய்யாமல் நொட்டை பேசுபவர்கள் தான் கண் முன் வருகிறார்கள். உண்மைலே உங்களுக்குலாம் ரொம்ப பெரிய மனசுங்க!
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007 இரவு 9:42:00
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//வவ்வால் said...
நன்றி உண்மைத்தமிழன்,
உங்களின் மற்ற பதிவுகளை விட இந்த பதிவு சுறு சுறுப்பா இருந்தது , பதிவர் பட்டறை என்றதும் தானாகவே ஒரு வேகம் உங்கள் எழுத்தில் ஒட்டிக்கொண்டது போல.
அதிலும் பங்ஜர் ஆன வண்டியை தள்ளிக்கொண்டு அலைந்து கஷ்டப்பட்டதை படிக்கும் போது , எதுவும் செய்யாமல் நொட்டை பேசுபவர்கள் தான் கண் முன் வருகிறார்கள். உண்மைலே உங்களுக்குலாம் ரொம்ப பெரிய மனசுங்க!//
அதை நான் எழுதியதற்குக் காரணமே நான் உண்மை என்று நினைக்கும், அந்த பைத்தியக்காரன் போன்ற தோற்றத்தில் இருந்த என் அப்பன் முருகன்தான். நிஜமாகவே கலங்கித்தான் போனேன் நான். காரணம் அப்போது கையில் போதுமான பணமும் இல்லை. நந்தாவிடம்தான் வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்குள் அவனே உடனடியாக ஒரு வழியைக் காட்டிவிட்டான். இந்த ஒரு நிகழ்வுக்காகவேதான் ஆகஸ்ட்-4-ல் நடந்ததை ஒரு பதிவாக இட்டேன்.
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007 இரவு 9:53:00
பொன்ஸ்~~Poorna said...
உண்மைத்தமிழன் அண்ணே.. நானும் படிச்சிட்டேன்.. நிசமாவே சுவாரஸ்யமாத்தேன் எழுதிருக்கீக.. :)
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007 இரவு 9:58:00
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//பொன்ஸ்~~Poorna said...
உண்மைத்தமிழன் அண்ணே.. நானும் படிச்சிட்டேன்.. நிசமாவே சுவாரஸ்யமாத்தேன் எழுதிருக்கீக.. :)//
ரொம்ப சந்தோஷம் தங்கச்சி.. இவ்ளோ பாஸ்ட்டா படிச்சு முடிப்பீங்கன்னு எதிர்பார்க்கலே.. பரவாயில்லை.. இது மாதிரி அப்பப்ப ஒரு 25 பக்கம், 30 பக்கம் மேட்டரா மொத்தமா போட்டிரலாமான்னு இப்பத்தான் யோசிக்கிறேன்..
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007 இரவு 10:09:00
✪சிந்தாநதி said...
சொன்ன மாதிரியே போட்டுட்டீங்க...ஆனா ரொம்ப ஜாக்கிரதையா எழுதி இருக்கீங்க...
ஒரே மூச்சில் படிக்க வைத்த சுவையான பதிவு...
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007 இரவு 10:39:00
பங்காளி... said...
பிரிச்சு மேயறதுன்னு சொல்லுவாங்களே....அதுக்கு இந்த பதிவை உதாரணமாச் சொல்லலாம்....
காட்சிகளை கண் முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்....
வாழ்த்துக்கள்....
அப்புறம் ஷூட்டிங் நடத்த ஸ்கூல் கெடச்சிதா இல்லையா....எந்த மாதிரி இடத்தை எதிர்பார்க்கிறீர்கள்....?
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007 இரவு 10:44:00
Vicky said...
சுவராசியமாகவே எழுதியிருக்கீங்க :)
வாழ்த்துக்கள் :)
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007 இரவு 11:51:00
Vicky said...
சுவாரசியமாகவே எழுதியிருக்கீங்க :)
நன்றி :)
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007 இரவு 11:52:00
மஞ்சூர் ராசா said...
அன்பு நண்பரே ஐந்து பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். சுவாரஸ்யமாகவே இருந்தது. மிகவும் விவரமாகவே எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
இறுதியாக நண்பர் ஓசை சொன்னதைதான் நானும் கொஞ்சம் மாத்தி சொல்கிறேன். "முதல்ல பொழப்ப பாருங்க.. அப்புறமா நேரம் கிடைக்கும் போது பிளாக்ல எழுதலாம்.."
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007 இரவு 11:55:00
கோபி(Gopi) said...
//உண்மைத்தமிழன் அண்ணே.. நானும் படிச்சிட்டேன்.. நிசமாவே சுவாரஸ்யமாத்தேன் எழுதிருக்கீக.. :)//
ரிப்பீட்டே...
நீங்க விவரிச்ச பெரும்பாலான நிகழ்வுகளில் நானும் ஒரு பார்வையாளனாய் (அருகிலோ, தூரத்திலிருந்தோ) இருந்திருக்கிறேன். என்னா ஞாபக சக்தி உங்களுக்கு...
சனி, ஆகஸ்ட் 18, 2007 இரவு 1:12:00
Nakkiran said...
5வது பாகம்...
படிச்சிட்டம்ல...
நீங்க இந்த 6 பதிவுகள் (அறிமுகம்+5).. கம்பைன் செய்து, உங்க ஸ்ட்ய்லெ நீளமா 3 பதிவா போட்டுருக்கல்லாம்..
எல்லா பதிவும் சீக்கிரமா முடிஞ்சுடுது... உங்க பதிவ படிக்கிற ஃபீலிங்கே இல்ல :)
சனி, ஆகஸ்ட் 18, 2007 இரவு 3:54:00
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//✪சிந்தாநதி said...
சொன்ன மாதிரியே போட்டுட்டீங்க...ஆனா ரொம்ப ஜாக்கிரதையா எழுதி இருக்கீங்க... ஒரே மூச்சில் படிக்க வைத்த சுவையான பதிவு...//
ஒரே மூச்சில் படித்த உங்களைத்தான் பாராட்ட வேண்டும். நன்றி சிந்தாநதி ஸார்.. ரொம்ப ஜாக்கிரதையாத்தான் எழுதினேன்.. ஏன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே.. எவ்வளவுதான் அடி வாங்குறது..?
சனி, ஆகஸ்ட் 18, 2007 மதியம் 1:14:00
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//பங்காளி... said...
பிரிச்சு மேயறதுன்னு சொல்லுவாங்களே....அதுக்கு இந்த பதிவை உதாரணமாச் சொல்லலாம்.... காட்சிகளை கண் முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்.... வாழ்த்துக்கள்....//
நன்றி பங்கு.. என்ன நீங்களும் லீவா..? பதிவே காணோமே..?
//அப்புறம் ஷூட்டிங் நடத்த ஸ்கூல் கெடச்சிதா இல்லையா....எந்த மாதிரி இடத்தை எதிர்பார்க்கிறீர்கள்....?//
ஒரு indoor அரங்கம்தான் தேவை.. spot recording என்பதால் indoor-ஆக இருந்தால்தான் வசதிப்படும். இருக்கின்ற டங்களின் வாடகை மிக அதிகமாக இருக்கிறது.. தேடிக் கொண்டேயிருக்கிறேன்.. நிச்சயம் முருகனருளால் கிடைக்கும் என்றே நம்புகிறேன்..
சனி, ஆகஸ்ட் 18, 2007 மதியம் 1:17:00
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
///கோபி(Gopi) said...
//உண்மைத்தமிழன் அண்ணே.. நானும் படிச்சிட்டேன்.. நிசமாவே சுவாரஸ்யமாத்தேன் எழுதிருக்கீக.. :)//
ரிப்பீட்டே... நீங்க விவரிச்ச பெரும்பாலான நிகழ்வுகளில் நானும் ஒரு பார்வையாளனாய் (அருகிலோ, தூரத்திலிருந்தோ) இருந்திருக்கிறேன். என்னா ஞாபக சக்தி உங்களுக்கு...///
கண்ணா.. கூட ஒரு சாட்சி இருந்ததுனாலதான் நானும் பார்த்து, பார்த்து பத்திரமா எழுத வேண்டியதாப் போச்சு. அதோட அப்பப்ப பேப்பர்ல எழுதி வைச்சிருந்து மொத்தமா டைப்பிங் செஞ்சேன்.. அதான்.. அப்புறம் அந்த மதுபாலா மேட்டர் என்னாச்சு? கிடைக்கலியா..?
சனி, ஆகஸ்ட் 18, 2007 மதியம் 1:19:00
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//Nakkiran said...
5வது பாகம்... படிச்சிட்டம்ல...//
6-வது தடவையா தேங்க்ஸ்
சொல்லிட்டோம்ல..
//நீங்க இந்த 6 பதிவுகள் (அறிமுகம்+5).. கம்பைன் செய்து, உங்க ஸ்ட்ய்லெ நீளமா 3 பதிவா போட்டுருக்கல்லாம்.. எல்லா பதிவும் சீக்கிரமா முடிஞ்சுடுது... உங்க பதிவ படிக்கிற ஃபீலிங்கே இல்ல:)//
போட்டிருக்கலாம். மொத்த பக்கங்கள் 30. அதையே 5-ஆக பிரித்துப் போட்டேன். இன்னும் பெரியதாக இருந்தால் Net Centre-களில் போய் படிப்பவர்கள் கஷ்டப்படுவார்கள். அவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வெளி இடங்களில் இப்போதும் கம்ப்யூட்டரின் ஸ்பீட் 256தான் வைத்திருக்கிறார்கள். பதிவர்கள் பெரும்பாலோர் நமக்குத் தெரிந்தவர்களாக இருப்பதால் உங்களோட பீலிங் அப்படி இருந்திருக்கலாம் என்பது எனது அபிப்ராயம்.
சனி, ஆகஸ்ட் 18, 2007 மதியம் 1:23:00
வெயிலான் said...
தாமதமா எழுதுனாலும், உங்களோட தனி பாணியில அசத்தியிருக்கீங்க.
நான் உங்களைப் பார்த்த போது மாடியில் மா.சி யின் பேச்சை வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தீர்கள். பிறகு பேசிக் கொள்ளலாம் என நினைத்தேன்.
முடியவில்லை.
சனி, ஆகஸ்ட் 18, 2007 இரவு 8:08:00
நந்தா said...
கலக்கிட்டீங்க... இனிமே இந்த மாதிரி அருமையான பதிவுகளை படிக்கணுங்கறதுக்காகவே அடிக்கடி யாரு என்ன நொட்டம் சொன்னாலும் பரவாயில்லைன்னு னிறைய பட்டறைகளை நாம நடத்தணும்னு தோணுது....
ஒரே முச்சில படிச்சு முடிச்சாச்சு. இவ்ளோவ் பெரிசா எழுதறது மேட்டரே இல்லை. அதை இவ்ளோவ் அழகா கொடுத்திருக்கீங்க பாருங்க. அதுக்கு வெக்கணுங்க ஒரு சல்யூட்.
ரொம்ப நாளா எழுதாதகுறையை இதுல தீர்த்துட்டீங்க. கலக்குங்க....
ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2007 இரவு 1:24:00
துளசி கோபால் said...
இப்பத்தான் இந்த ஆறு பதிவுகளையும் ஒரே மூச்சாப் படிச்சு முடிச்சேன்.
பட்டறையை விட்டுட்டோமேன்னு ஒரு பக்கம் மனசு அடிச்சுக்கத்தான் செய்யுது(-:
ஆமாம், கோவியார்தான் சிபியா? குழப்பமா இருக்கே!
ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2007 காலை 8:24:00
மா சிவகுமார் said...
உண்மைத் தமிழன்,
உடல்நிலை சரியில்லாத வாரத்திலும் பத்திரிகைத் தொடர்புக்காக நீங்கள் செய்த பணிகளையும் விளக்கியிருக்கலாம்.
உங்கள் கையில் கலைமகள் குடியேறியிருக்கிறாள். இது போன்று சுற்றி நடப்பவற்றைத் தொடர்ந்து எழுதுங்கள்.
முருகன் உங்களுக்கு எல்லா வளங்களும் அருள்வான்.
அன்புடன்,
மா சிவகுமார//
ரிப்பீட்டே...
ரிப்பீட்டே...
ரிப்பீட்டே...
ரிப்பீட்டே...
இது பாகச மாதம் இல்லியா...அதான் வித்தியாசம் காமிக்கிறோம்
தலைவா ..
அய்யோ இந்த பதிவர் சந்திப்பு பதிவுகள் இன்னும் அடங்குலியாங்கிற நேரத்தில விறுவிறு ன்னு எழுதிட்டீங்க ..
இவ்வளவு பெரீஈஈஈஈஈஈசா எழுதிறீங்க கை வலிக்காதா?
//வெயிலான் said...
தாமதமா எழுதுனாலும், உங்களோட தனி பாணியில அசத்தியிருக்கீங்க.//
நன்றி வெயிலான் ஸார்..
//நான் உங்களைப் பார்த்த போது மாடியில் மா.சி யின் பேச்சை வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தீர்கள். பிறகு பேசிக் கொள்ளலாம் என நினைத்தேன். முடியவில்லை.//
அதனால் என்ன? அடுத்தப் பட்டறையின்போது நாம தனியா ஒரு பட்டறை போட்டு பேசிருவோம்..
//நந்தா said...
கலக்கிட்டீங்க... இனிமே இந்த மாதிரி அருமையான பதிவுகளை படிக்கணுங்கறதுக்காகவே அடிக்கடி யாரு என்ன நொட்டம் சொன்னாலும் பரவாயில்லைன்னு நிறைய பட்டறைகளை நாம நடத்தணும்னு தோணுது....//
அதுக்கென்ன கண்ணா.. நடத்திருவோம்.. யாரும் கருத்து சொல்றதைப் பத்தி நாம கவலைப்படவே கூடாது. கண்டுக்காம அடுத்தக் கட்ட வேலையைப் பார்ப்போம்..
//ஒரே முச்சில படிச்சு முடிச்சாச்சு. இவ்ளோவ் பெரிசா எழுதறது மேட்டரே இல்லை. அதை இவ்ளோவ் அழகா கொடுத்திருக்கீங்க பாருங்க. அதுக்கு வெக்கணுங்க ஒரு சல்யூட். ரொம்ப நாளா எழுதாதகுறையை இதுல தீர்த்துட்டீங்க. கலக்குங்க....//
உனக்குத்தாம்பூ வைக்கணும் சல்யூட்டு.. பட்டறைக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கன்னு எண்ணிப் பார்த்தாகூட முடியல கண்ணு.. நீ நல்லாயிருக்கணும்ப்பூ..
//துளசி கோபால் said...
இப்பத்தான் இந்த ஆறு பதிவுகளையும் ஒரே மூச்சாப் படிச்சு முடிச்சேன். பட்டறையை விட்டுட்டோமேன்னு ஒரு பக்கம் மனசு அடிச்சுக்கத்தான் செய்யுது//
நியூஸிலாந்துல ஒரு பட்டறைக்கு ஏற்பாடு பண்ணா நல்லாயிருக்குமே டீச்சர்..
//(-: ஆமாம், கோவியார்தான் சிபியா? குழப்பமா இருக்கே!//
டீச்சர் சத்தமா சொல்லாதீங்க.. கோவியார்க்கு தெரிஞ்சா அவ்ளோதான்..
//மா சிவகுமார் said...
உண்மைத் தமிழன், உடல்நிலை சரியில்லாத வாரத்திலும் பத்திரிகைத் தொடர்புக்காக நீங்கள் செய்த பணிகளையும் விளக்கியிருக்கலாம். உங்கள் கையில் கலைமகள் குடியேறியிருக்கிறாள். இது போன்று சுற்றி நடப்பவற்றைத் தொடர்ந்து எழுதுங்கள். முருகன் உங்களுக்கு எல்லா வளங்களும் அருள்வான்.
அன்புடன்,
மா சிவகுமார்//
ஹி..ஹி.. ரொம்ப நன்றிங்க ஸார்.. ரொம்பப் புகழாதீங்க.. கண்ணு பட்டிரப் போகுது.. முருகன் எனக்கு மட்டுமில்ல.. உங்களுக்கும் சொந்தக்காரன்தான்.. மறந்திராதீங்க.
Pot"tea" kadai said...
//ரிப்பீட்டே...
ரிப்பீட்டே...
ரிப்பீட்டே...
ரிப்பீட்டே...
இது பாகச மாதம் இல்லியா...அதான் வித்தியாசம் காமிக்கிறோம்//
பொட்டீ.. ஏற்கெனவே என் பதிவு நீளம்னு அல்லாரும் மூக்கால அழுகுறாங்க.. இப்ப பின்னூட்டத்திலேயும் இப்படிப் போட்டுத் தாக்குனீங்கன்னா..
உங்களைச் சொல்லிக் குத்தமில்ல.. எல்லாம் பா.க.ச.காரங்க செய்ற வேலை..
//அய்யனார் said...
தலைவா.. அய்யோ இந்த பதிவர் சந்திப்பு பதிவுகள் இன்னும் அடங்குலியாங்கிற நேரத்தில விறுவிறு ன்னு எழுதிட்டீங்க .. இவ்வளவு பெரீஈஈஈஈஈஈசா எழுதிறீங்க கை வலிக்காதா?//
கை வலிக்கத்தான் செய்யுது பின் நவீனம்-2.. ஆனா பாருங்க.. உங்களை மாதிரி அன்பர்களோட வாழ்த்துக்களை படிச்சவுடனே காணாமப் போயிருது.. தேங்க்ஸ் ஸார்..
உண்மைத் தமிழன்,
பட்டறை - டைரிக் குறிப்புகள் அனைத்தும் படித்தாகிவிட்டது.
உங்களுக்கு ரோட்டில் உதவிய சாலையோர வசிப்பாளர் பற்றிய செய்தி மிகவும் ஆச்சர்யமானது.
ஓர் உதவி வேண்டும். balloonmama at ஜிமெயிலுக்கு ஒரு மயில் அனுப்ப முடியுமா?
//கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
உண்மைத் தமிழன், பட்டறை - டைரிக் குறிப்புகள் அனைத்தும் படித்தாகிவிட்டது. உங்களுக்கு ரோட்டில் உதவிய சாலையோர வசிப்பாளர் பற்றிய செய்தி மிகவும் ஆச்சர்யமானது.//
எனக்கும் ஆச்சரியம் அதுதான்.. இதைத்தான் தெய்வச் செயல் என்கிறேன்..
//ஓர் உதவி வேண்டும். balloonmama at ஜிமெயிலுக்கு ஒரு மயில் அனுப்ப முடியுமா?//
மயில்தான.. அனுப்பி வைக்கலாம்.. ஆனா கூடவே சப்பாணியும் வருவான்.. பரவாயில்லையா..?
//எனக்கும் ஆச்சரியம் அதுதான்.. இதைத்தான் தெய்வச் செயல் என்கிறேன்.. //
அந்தத் தெய்வம் அந்த சாலையோர வசிப்பாளனுக்கும் உதவட்டும் அவன் விரும்பிய வழியில்.
//மயில்தான.. அனுப்பி வைக்கலாம்.. ஆனா கூடவே சப்பாணியும் வருவான்.. பரவாயில்லையா..? //
:-))
..பிரச்சனை இல்லை.
உங்களுக்கேயான நடையில் சுவாரஸ்யமாக உள்ளது....
///கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
//எனக்கும் ஆச்சரியம் அதுதான்.. இதைத்தான் தெய்வச் செயல் என்கிறேன்.. //
அந்தத் தெய்வம் அந்த சாலையோர வசிப்பாளனுக்கும் உதவட்டும் அவன் விரும்பிய வழியில்.///
நிச்சயம் காப்பாற்றுவான் என்பதில் ஐயமில்லை..
///மயில்தான.. அனுப்பி வைக்கலாம்.. ஆனா கூடவே சப்பாணியும் வருவான்.. பரவாயில்லையா..? //
:-)) ..பிரச்சனை இல்லை.///
என்ன பிரச்சினை இல்ல மாமா..?
சப்பாணி ஏற்கெனவே ஒரு கொலை பண்ணிருக்கான்.. ஞாபகமிருக்கா..?
//மதுரையம்பதி said...
உங்களுக்கேயான நடையில் சுவாரஸ்யமாக உள்ளது....//
மிக்க நன்றி ஸார்..
உண்மைத் தமிழரே,
இன்னைக்கு நான் தானா கிடைச்சேனா ? :-))
சப்பாணியோ, பரட்டையோ அல்லது முருகனோ இருந்தாலும் இல்லாட்டியும் பரவாயில்லை ஒரு மயில் அனுப்பி வைங்க. தாவு தீருது :-))
//கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
உண்மைத் தமிழரே, இன்னைக்கு நான்தான் கிடைச்சேனா ? :-))
சப்பாணியோ, பரட்டையோ அல்லது முருகனோ இருந்தாலும் இல்லாட்டியும் பரவாயில்லை ஒரு மயில் அனுப்பி வைங்க. தாவு தீருது :-))
முருகன்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி கடன் வாங்கி அனுப்பிரலாம்.. ஆனால் மயிலை வீட்ல வளர்க்குறது தப்பாம்.. அதோட மயில் கறியை சாப்பிடுறது அதைவிட தப்பாம்.. ரெண்டுக்கும் சேர்த்து 5 வருஷம் ஜெயில் தண்டனை கிடைக்குமாம். பரவாயில்லையா மாமா..?
பல மாசங்கழிச்சு தமிழ் வலைபதிவுகள்ல நான் இவ்வளவு நேரம் செல்வழிச்சது இதுவே முதல் முறை. சும்மா சொல்லக்கூடாது, கமர்ஷியல் படம் பாக்கிறமாதிரி அஞ்சு பாகமும் விறுவிறுப்பா இருந்துச்சு. இடையிடையே கொஞ்சம் தொய்வு இருந்தாலும் மொத்தத்தில சுவாரஸ்யமாவே போச்சு.
நல்லா படம் எடுப்பீங்க போலத் தெரியுது. வாய்ப்பு விரைவில் வர வாழ்த்துக்கள்
இவ்வளவு நீளமா எழுதற ரகசியத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன் - நமக்கெல்லாம் நாலுவரி எழுதறதுக்குள்ளேயே, நுரை தள்ளுது :-)
//நிலா said...
பல மாசங்கழிச்சு தமிழ் வலைபதிவுகள்ல நான் இவ்வளவு நேரம் செல்வழிச்சது இதுவே முதல் முறை. சும்மா சொல்லக்கூடாது, கமர்ஷியல் படம் பாக்கிறமாதிரி அஞ்சு பாகமும் விறுவிறுப்பா இருந்துச்சு. இடையிடையே கொஞ்சம் தொய்வு இருந்தாலும் மொத்தத்தில சுவாரஸ்யமாவே போச்சு.//
எந்தெந்த இடத்துல தொய்வுன்னு சொன்னீங்க.. தெரிஞ்சுக்குவேன் திருத்திக்குவேன்..
//நல்லா படம் எடுப்பீங்க போலத் தெரியுது. வாய்ப்பு விரைவில் வர வாழ்த்துக்கள்.//
நன்றி.. உங்க வாய் முகூர்த்தத்தில் நான் நிச்சயம் வெல்வேன் என்றே நினைக்கிறேன் மேடம்..
//இவ்வளவு நீளமா எழுதற ரகசியத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன் - நமக்கெல்லாம் நாலுவரி எழுதறதுக்குள்ளேயே, நுரை தள்ளுது :-)//
ஒண்ணும் ரகசியமெல்லாம் இல்ல மேடம்.. இன்னிக்கு ஒரு பத்து பக்கம் அடிச்சே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு சீட்ல உக்காருங்க.. முடிச்சிருவீங்க.. அதுக்கு மொதல்ல hints எடுத்துக்குங்க.. நானும் இதையெல்லாம் 30 பக்க அளவுக்கு பேப்பர்ல எழுதிட்டு அப்புறமாத்தான் டைப்பிங் செஞ்சேன்.. கஷ்டந்தான்.. அதெல்லாம் பார்த்தா முடியுமா? நமக்கு எப்படியாச்சும் பதிவு போட்டிரணும். அவ்ளோதான்.. கை வலிதான.. கமெண்ட்ஸ் பாக்ஸை ஒரு தடவை படிச்சா பஞ்சா பறந்திரும்..
தங்களது வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி மேடம்..
வெளியூர்ப் பயணம். திரும்பியவுடன்
6 பதிவுகளையும் ஒரேமூச்சில் படித்தேன். நல்ல பிர்சண்டேஷன்...
//குசும்பன் என்ற கோவியார் என்ற நாமக்கல் சிபி// புரியல்லே..
யார் சொன்னது? சிபியார் சொன்னாரா?
அவர் தான்தான் உண்மைத்தமிழன் னு
சொல்லி உங்ககிட்ட அறிமுகம் செஞ்சிருப்பாரே! செஞ்சாரா?
செல்லா சொன்னது.....
ர்ர்ர்ரிப்பீட்டேய்!
சிவஞானம்ஜி ஸார்.. லேட்டா வந்தாலும் கரெக்ட்டாத்தான் சொன்னீங்க.. அதே நாமக்கல் சிபிதான்.. சில பேர்கிட்ட தன்னோட பேர் குசும்பன் என்றும், மற்றும் பலரிடம் கோவி.கண்ணன் என்றும் சிலரிடம் மட்டுமே சிபி என்றும் அளந்து கொண்டிருந்தார். அதைத்தான்அப்படி குறிப்பிட்டேன்.
ஒரே மூச்சில் படித்து முடித்ததற்கு எனது ஒரேயொரு கோடானுகோடி நன்றி..
அருமையான பதிவு...!!!!
இவ்வளவு விஷயங்களை கவனித்து எழுதனும் என்றால் எவ்வளவு கஷ்டம் என்று தெரியும்...ஆனால் அதனை இவ்வளவு எளிமையாக கொடுத்ததுக்கு நன்றி...
உங்களை பாருக்கு கூப்பிட்டது தண்ணியடிக்க என்று நீங்கள் நினைத்தது தப்பு...ச்ச்சும்மா ஜாலியா பேசிக்கிட்டிருக்கத்தான்...
தண்ணியடிக்கும் பழக்கம் இல்லாத நான் பாருக்கு போவலியா கம்பெனி கொடுக்க...அதுமாதிரி தான்...:))
அரவிந்தன் பெயரை இரண்டாம் பாகத்தில் பின்னூட்டமாக தரலாம் என்று பார்த்தால் அரவிந்தன் முந்திக்கொண்டார் போல...
மின்னஞ்சல் வேனுமா ?
கேரி ஆன். அடுத்த பதிவு எப்போ !!
////முருகன்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி கடன் வாங்கி அனுப்பிரலாம்.. ஆனால் மயிலை வீட்ல வளர்க்குறது தப்பாம்.. அதோட மயில் கறியை சாப்பிடுறது அதைவிட தப்பாம்.. ரெண்டுக்கும் சேர்த்து 5 வருஷம் ஜெயில் தண்டனை கிடைக்குமாம். பரவாயில்லையா மாமா..? ///
சிம்பிளா ஒரு மடல் அனுப்பி முடிக்க வேண்டிய காரியத்தை, கல்வெட்டு(பலூன்மாமா) அவர்களை நொந்து நூடுல்ஸ் ஆக்கி இருக்கீரே ?
எதோ ஒரு விடயமா உங்களிடம் எதாவது விடயம் கேக்கனும்னு மடல் போட்டுவைக்க சொல்லியிருப்பார்...
ஆனா இப்பிடி தாவு தீர்ந்து, டவுசர் கிழியவெச்சுட்டீங்களே...
இப்ப புரியுது..!!!!!!!!
//செந்தழல் ரவி said...
உங்களை பாருக்கு கூப்பிட்டது தண்ணியடிக்க என்று நீங்கள் நினைத்தது தப்பு...ச்ச்சும்மா ஜாலியா பேசிக்கிட்டிருக்கத்தான்... தண்ணியடிக்கும் பழக்கம் இல்லாத நான் பாருக்கு போவலியா கம்பெனி கொடுக்க...அதுமாதிரி தான்...:))//
டேய் ராசா.. அப்புறம் பதிவு போடும்போது ஊத்திக் கொடுத்த உண்மைத்தமிழனுக்கு தேங்க்ஸ்ன்னு சொல்லி ஒரு பிட்டை போடலாம்னு பார்த்த.. நான் தப்பிச்சிட்டேன். அது எப்படிய்யா.. எல்லாரும் ரொம்பக் கூலா டகுல் விடுறீங்க.. எனக்குத்தான் வரவே மாட்டேங்குது..
//செந்தழல் ரவி said...
சிம்பிளா ஒரு மடல் அனுப்பி முடிக்க வேண்டிய காரியத்தை, கல்வெட்டு(பலூன்மாமா) அவர்களை நொந்து நூடுல்ஸ் ஆக்கி இருக்கீரே? எதோ ஒரு விடயமா உங்களிடம் எதாவது விடயம் கேக்கனும்னு மடல் போட்டுவைக்க சொல்லியிருப்பார்... ஆனா இப்பிடி தாவு தீர்ந்து, டவுசர் கிழியவெச்சுட்டீங்களே... இப்ப புரியுது..!!!!!!!!//
ஏம்பா இப்படி திடுதிப்புன்னு ஒரு மயிலை அனுப்புன்னு என்னமோ வெங்காயம் ஒரு கிலோ வாங்கியனுப்புன்னு சொல்றாப்புல சொன்னா நான் எதை நம்புறது?
இந்த டாவு, டவுசர் கிழியறது.. இதையெல்லாம் விடவே மாட்டீங்களா..? out of fashion ஆயிருச்சுப்பா.. வேற எதுனாச்சும் புதுசா சொல்லுங்க..
ஒன் நிமிட்! நான் விருகம்பாக்கம் போய் இருக்கேன்னும், அவர் சைதாப்பேட்டை வந்திருக்கலாம்னு சொல்ல நினைச்சுருப்பேன்.
என்ன? ஓ சரி சரி. நீங்களும் அப்படித்தான் புரிஞ்சுண்டீங்களா? சரி, நானும் அதையேதான் சொல்றேன்.
See who owns quickpwn.com or any other website:
http://whois.domaintasks.com/quickpwn.com
Post a Comment