வருங்கால 'முதல் குடிமகளின்' அரசியல் பயோடேட்டா



வருங்கால முதல் குடிமகள்-திருமதி பிரதிபா பாட்டீல்

இந்தியத் தலைநகர் புதுதில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அடுத்த மாதம் குத்து விளக்கேற்றி, பால் காய்ச்சி குடித்தனம் நடத்தக் காத்திருக்கும் திருமதி பிரதிபா பாட்டீலின் பயோ டேட்டா இது :

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோன் மாவட்டத்தில் உள்ள ஜல்கோவான் என்ற கிராமத்தில் 1934 டிசம்பர் 19-ம் தேதி பிறந்தார் பிரதிபா பாட்டீல். ஜலகானில் உள்ள M.J.கல்லூரியில் M.A.வும், மும்பை சட்டக் கல்லூரியில் L.L.B.யும் படித்தார். படித்து முடிந்ததும் மும்பையில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார்.

மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவை உறுப்பினராக 1962-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இடம் பெற்றார். 1967 முதல் 1972-வரை மகாராஷ்டிரா மாநில சுற்றுலா, சுகாதாரத் துறைகளில் துணை அமைச்சராகவும், 1972 முதல் 1974-வரை சமூக நலத்துறை கேபினட் அமைச்சராகவும், 1975 முதல் 1976-வரை மதுவிலக்கு மற்றும் கலாச்சாரத் துறை கேபினட் அமைச்சராகவும், 1977 முதல் 1978-வரை கல்வி அமைச்சராகவும் பணியாற்றியவர்.

1979 ஜூலையில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக சரத்பவார் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார் பிரதீபா பட்டேல்.

1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5ம் தேதி வரை அப்பதவியில் இருந்தார். இதே காலத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக் குழுத் தலைவராகவும் இருந்தார்.

1988 முதல் 1990 வரை மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார்.

1991-ல் அமராவதி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்களவை உறுப்பினர் பதிவிக் காலம் முடிந்த பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றவர் போல சற்று ஒதுங்கியே இருந்தார் பிரதிபா பாட்டீல். பிறகு, தேர்தல் பிரச்சாரத்தின் போது தீவிரமாக காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமித்தது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் பெண் கவர்னரும் இவர்தான்.

கடந்த ஆண்டு ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே, மத சுதந்திர சட்ட மசோதா கொண்டு வந்தார். 'மத மாற்றம் செய்வதைத் தடை செய்யவே இந்தச் சட்டம் உதவும்' என்று போப் ஆண்டவர் உள்ளிட்டோரிடமிருந்து இதற்கு எதிர்ப்பு வந்தது. கோப்பு, பிரதிபா பாட்டீலிடம் வந்ததும் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து பரபரப்பை உண்டு செய்தார்.

சமூக சேவையிலும் பிரதிபா பாட்டீலுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. மும்பையிலும், டெல்லியிலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக விடுதிகளைக் கட்டியுள்ளார். ஏழைகளுக்கான கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். கிராமப்புற இளைஞர்கள், பார்வையற்றோர் ஆகியோருக்கான திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டியவராம். ஜல்கானில் பெண்களுக்கான கூட்டுறவு வங்கியை நிறுவியுள்ளார்.

பிரதிபா பாட்டீலுக்கு விளையாட்டிலும் ஆர்வம் உண்டாம். கல்லூரிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீராங்கனையாகத் திகழ்ந்துள்ளார்.

பிரதிபா பாட்டீலுக்கு 1965 ஜூலை 7-ம் தேதி திருமணம் நடந்தது. கணவர் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத். சிறந்த கல்வியாளர். இத்தம்பதியினருக்கு ஜோதிரதோர் என்ற மகளும், ராஜேந்திர சிங் என்ற மகனும் உள்ளனர்.

பிரதிபா பாட்டீலின் கணவர் ஷெகாவத்தும் லேசுப்பட்ட ஆளில்லை. அமராவதி மாநகராட்சியின் முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாட்டுத் துறையிலும், கல்வித் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஷெகாவத் 1985-ல் மகாராஷ்டிர மாநில பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜனாதிபதி பதவிக்கான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பிரதிபா பாட்டீல்...

அப்போது,

"நாட்டின் மிக உயர்ந்த பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் ஒரு போதும் கனவு கண்டதில்லை. வாய்ப்பை நல்கிய சோனியாகாந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்தவர்களுக்கு நன்றி.

போட்டியிடும்படி என்னை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. என்னை எதிர்த்துப் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் பைரோன்சிங் ஷெகாவத் பெருமதிப்பிற்குரியவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களை மேம்படுத்த பாடுபடுவேன். சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அகற்ற பாடுபடுவேன்.." என்று தனது முதல் பேட்டியில் கூறியிருக்கிறார் பிரதிபா பாட்டீல்.

வருக.. வருக.. 'முதல் குடிமகளே' வருக..

21 comments:

Anonymous said...

என்ன கொடுமை இது உ.தமிழன்?...

திராவிடத்தலைவன் மெனக்கட்டு 2 நாள் டெல்லில இருந்து ஒரு பார்பன லேடிய தேர்ந்தெடுத்துருக்காரு, இதெ யாரு தட்டிக்கேட்க போறாங்க?...ஆம் அந்த குடும்பம் வடக்கத்தி பார்பனர்கள் தாம்.
தலித்/பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட பெண்கள் யாருமே கிடைக்கல்லியா இவருக்கு?.....ராசாத்தி/தயாளு அம்மாக்களை பரிந்துரைத்திருக்கலாமே?

சந்திப்பு said...

உண்மைத் தமிழன்

மிகச் சிறப்பாக தொகுத்துள்ளீர்கள். தமிழில் வெளிவந்துள்ள பயோ டேட்டாவிலேயே தங்களுடைய தொகுப்பு மிகச் சிறப்பானது. வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள். நம்முடைய எதிர்கால ஜனாதிபதியை நெஞ்சார வரவேற்போம்.

சந்திப்பு said...

அனானி ஆரம்பிச்சாச்சா உங்க வேலைய!

உங்களுடைய பெரியார் வழிவந்த கலைஞரும் - அம்மாவும் சங்பரிவாரத்துக்கு காவடி தூக்கும் போது எங்கப் போயிருந்தீங்க. அப்ப பார்ப்பனீத்தின் வாலைப் பிடித்து தொங்கியதெல்லாம் மறந்துப் போச்சா?

இவங்க இருக்காங்களே பா.ஜ.க. கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திருப்பி அனுப்பி வைச்ச பெருமைக் கொண்டவங்க. அதனால பார்ப்பான். பாப்பான் இல்லன்னு பேசுறது முதல்ல விடுங்க.ள என்ன கொள்கையை கைப்பிடிக்கறாங்கன்னு கொஞ்சம் யோசிங்க.

ஏன் பெரியாரே ராஜாஜியோட கொஞ்சவில்லையா? வரலாற கொஞ்சம் விமர்சன ரீதியாக புரட்டுங்கப்பா?

Anonymous said...

ஏப்பு சந்திப்பு, உங்காளுக ஆனமட்டும் மக்களவை தலைவரை ஜனாதிபதியாக்க ட்ரை பண்ணினதை மறைத்து இப்படி ஒரு பஜனை...நல்லா இருய்யா...

Thamizhan said...

பிறப்பிலும் திருமணத்திலும் ராஜ்புத் என்றுதான்(சத்திரியர்)போடப்பட்டுள்ளது.அநேக
வசதிகள் தாழ்த்த்ப் பட்டவர்கட்குத் தன் சொந்தச் செலவிலே செய்துள்ளாராம்.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
என்ன கொடுமை இது உ.தமிழன்?...
திராவிடத்தலைவன் மெனக்கட்டு 2 நாள் டெல்லில இருந்து ஒரு பார்பன லேடிய தேர்ந்தெடுத்துருக்காரு, இதெ யாரு தட்டிக்கேட்க போறாங்க?...ஆம் அந்த குடும்பம் வடக்கத்தி பார்பனர்கள் தாம். தலித்/பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட பெண்கள் யாருமே கிடைக்கல்லியா இவருக்கு?.....ராசாத்தி/தயாளு அம்மாக்களை பரிந்துரைத்திருக்கலாமே?//

அனானி.. உங்களுக்குப் பதில் பின்ன வந்தவங்களே சொல்லிட்டாங்க.. ஆமா அதென்ன எதை எடுத்தாலும் ஜாதி.. ஜாதி.. ஜாதின்னுட்டு..? யாரு? என்ன படிச்சிருக்காங்க? என்ன சாதிச்சிருக்காங்கன்னு பாருங்க ஸார்..

உண்மைத்தமிழன் said...

///சந்திப்பு said...
உண்மைத் தமிழன்
மிகச் சிறப்பாக தொகுத்துள்ளீர்கள். தமிழில் வெளிவந்துள்ள பயோ டேட்டாவிலேயே தங்களுடைய தொகுப்பு மிகச் சிறப்பானது. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். நம்முடைய எதிர்கால ஜனாதிபதியை நெஞ்சார வரவேற்போம்.

அனானி ஆரம்பிச்சாச்சா உங்க வேலைய! உங்களுடைய பெரியார் வழிவந்த கலைஞரும் - அம்மாவும் சங்பரிவாரத்துக்கு காவடி தூக்கும் போது எங்கப் போயிருந்தீங்க. அப்ப பார்ப்பனீத்தின் வாலைப் பிடித்து தொங்கியதெல்லாம் மறந்துப் போச்சா? இவங்க இருக்காங்களே பா.ஜ.க. கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திருப்பி அனுப்பி வைச்ச பெருமைக் கொண்டவங்க. அதனால பார்ப்பான். பாப்பான் இல்லன்னு பேசுறது முதல்ல விடுங்க. என்ன கொள்கையை கைப்பிடிக்கறாங்கன்னு கொஞ்சம் யோசிங்க. ஏன் பெரியாரே ராஜாஜியோட கொஞ்சவில்லையா? வரலாற கொஞ்சம் விமர்சன ரீதியாக புரட்டுங்கப்பா?///

நன்றி சந்திப்பு. உங்களுடன் வேறு பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இந்த விஷயத்தில் உங்களுடைய கருத்து எனக்கும் ஓகேதான்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
ஏப்பு சந்திப்பு, உங்காளுக ஆனமட்டும் மக்களவை தலைவரை ஜனாதிபதியாக்க ட்ரை பண்ணினதை மறைத்து இப்படி ஒரு பஜனை...நல்லா இருய்யா...//

யாரும், யாரையும் முன் மொழியலாம். அது அவர்களது இஷ்டம். ஏன் சோம்நாத் சாட்டர்ஜிக்கு என்ன குறை? அவருக்குத் தகுதி இல்லையா? எல்லாம் இருக்கிறது.. அடுத்து துணை ஜனாதிபதி தேர்வு இருக்கிறது. அதற்கு தகுதியானவர் சோம்நாத் சாட்டர்ஜி.. பொறுத்திருந்து பார்ப்போம்.

உண்மைத்தமிழன் said...

//Thamizhan said...
பிறப்பிலும் திருமணத்திலும் ராஜ்புத் என்றுதான்(சத்திரியர்)போடப்பட்டுள்ளது. அநேக வசதிகள் தாழ்த்த்ப் பட்டவர்கட்குத் தன் சொந்தச் செலவிலே செய்துள்ளாராம்.//

தமிழன் ஸார்.. புதுத் தகவலுக்கு மிக்க நன்றி.. எனக்குத் தெரியாது. நிறைய நல்லதுகளைத்தான் செய்திருக்கிறார் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.. பார்ப்போம். விரைவில் வெளிவருமே..

சீனு said...

//திராவிடத்தலைவன் மெனக்கட்டு 2 நாள் டெல்லில இருந்து ஒரு பார்பன லேடிய தேர்ந்தெடுத்துருக்காரு, இதெ யாரு தட்டிக்கேட்க போறாங்க?...//

அட பாவிகளா!!! இப்படியெல்லாம் கூட யோசிக்கலாமா???

//ஆமா அதென்ன எதை எடுத்தாலும் ஜாதி.. ஜாதி.. ஜாதின்னுட்டு..? யாரு? என்ன படிச்சிருக்காங்க? என்ன சாதிச்சிருக்காங்கன்னு பாருங்க ஸார்..//

அத பாத்தாத்தான் அனானி எப்போவோ திருந்தியிருப்பாரே!!!

அதெல்லாம் இருக்கட்டும். இவங்களை பேட்டி எடுத்த பொழுது, 'இது நான் எதிர் பார்க்காமல் எனக்கு கிடைத்த பெருமை. இதற்கு சோனியாவிற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்'-ன்னு பேட்டி கொடுத்தாங்களே, இவிங்களை எந்த account-ல சேத்துறது?

துளசி கோபால் said...

ஆஹா......பெண் ஜனாதிபதியா?

ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு.

நல்ல விவரங்களைத் தொகுத்துக் கொடுத்ததுக்கு நன்றி.

கருப்பு said...

அருமையாக தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் உண்மைத் தமிழன்.

பின்குறிப்பு:- சோ இதற்கும் கார்ட்டூன் போட்டாரா?

உண்மைத்தமிழன் said...

//சீனு said...
அதெல்லாம் இருக்கட்டும். இவங்களை பேட்டி எடுத்த பொழுது, 'இது நான் எதிர் பார்க்காமல் எனக்கு கிடைத்த பெருமை. இதற்கு சோனியாவிற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்'-ன்னு பேட்டி கொடுத்தாங்களே, இவிங்களை எந்த account-ல சேத்துறது?//

செய்யப் போகும் நன்றிக் கடமையை எதிர்பார்த்துத்தான் நன்றிக் கடன் செய்பவர்களாகப் பார்த்து தேர்வு செய்திருக்கிறார்கள் சீனு. இது நாம் எதிர்பார்த்ததுதான்.. அரசியலில் இருக்குமம் கொடுக்கல், வாங்கல் அக்கவுண்ட்டில் இது சேரும்..

Anonymous said...

நண்பர்களே, ராஜ்புத் என்பது வடக்கே உயர்சாதியில் வருகிறது...நினைவிருக்கட்டும்....

அதெப்படிங்க தமிழன்,
//என்ன படிச்சிருக்காங்க? என்ன சாதிச்சிருக்காங்கன்னு பாருங்க //

அப்படி பார்த்து தான் நமது தற்போதைய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார், ஏன் காங்கிரஸ் அவருக்கு 2ஆவது டெர்ம் தரவில்லை?..இந்தம்மாவை விட சோம்நாத் சாட்டர்ஜி லாஜிகலா பெட்டெர் தான் ஏன் காங்கிரஸ் ஒத்துக் கொள்ளவில்லை?....ஏன்னா இந்தம்மா மன்மோகன் மாதிரி ஒரு பொம்மையா இருக்கும் என்பது சோனியாவின் எதிர்பார்ப்பு....அம்புட்டுத்தான்......
போன பார்லிமெண்ட் எலக்ஷன் முடிந்து எல்லோரும் சோனியாவை தேர்ந்தெடுத்தும், கலாம் எதிர்பாளர்களை கைக்காட்டி பேசியதால் சோனியாவால் பிரதமராக இயலவில்லை, அந்த காண்டு, தற்போது கலாமுக்கு 2ஆவது டேர்ம் இல்லை என்றனர்....இப்படி ஒரு பொம்மையை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்குவதன் மூலம் அடுத்த எலக்ஷன் முடிந்து சோனியா பிரதமர் ஆகிறாரா, இல்லையா பாருங்கள்.....

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
ஆஹா......பெண் ஜனாதிபதியா? ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு. நல்ல விவரங்களைத் தொகுத்துக் கொடுத்ததுக்கு நன்றி.//

ஆமாங்கோ.. நீங்களும் கூட இங்கிட்டு வரலாம் டீச்சர். கட்சில சேரலாம்.. நாளைப் பொழுது 33 சதவிகிதம் உறுதின்னு தெரிஞ்சா ஏதாவது கட்சில உங்களை மாதிரி அறிவாளிகளுக்கு லக்கு அடிக்கலாம் இல்லீங்களா.. வாங்கோ டீச்சர்..

உண்மைத்தமிழன் said...

//விடாதுகருப்பு said...
அருமையாக தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் உண்மைத் தமிழன். பின்குறிப்பு:- சோ இதற்கும் கார்ட்டூன் போட்டாரா?//

நன்றி கருப்பு ஸார்.. இஇந்த வாரம் எதுவும் இல்லை. அடுத்த வார துக்ளக்குல ஏதாச்சும் வரும்னு நினைக்கிறேன். வந்தவுடனேயே உங்களுக்காகவே எடுத்துப் போட்டுடறேன் ஸார்..

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
நண்பர்களே, ராஜ்புத் என்பது வடக்கே உயர்சாதியில் வருகிறது...நினைவிருக்கட்டும்....
அதெப்படிங்க தமிழன்,
//என்ன படிச்சிருக்காங்க? என்ன சாதிச்சிருக்காங்கன்னு பாருங்க //
அப்படி பார்த்து தான் நமது தற்போதைய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார், ஏன் காங்கிரஸ் அவருக்கு 2ஆவது டெர்ம் தரவில்லை?..இந்தம்மாவை விட சோம்நாத் சாட்டர்ஜி லாஜிகலா பெட்டெர் தான் ஏன் காங்கிரஸ் ஒத்துக் கொள்ளவில்லை?....ஏன்னா இந்தம்மா மன்மோகன் மாதிரி ஒரு பொம்மையா இருக்கும் என்பது சோனியாவின் எதிர்பார்ப்பு....அம்புட்டுத்தான்......
போன பார்லிமெண்ட் எலக்ஷன் முடிந்து எல்லோரும் சோனியாவை தேர்ந்தெடுத்தும், கலாம் எதிர்பாளர்களை கைக்காட்டி பேசியதால் சோனியாவால் பிரதமராக இயலவில்லை, அந்த காண்டு, தற்போது கலாமுக்கு 2ஆவது டேர்ம் இல்லை என்றனர்....இப்படி ஒரு பொம்மையை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்குவதன் மூலம் அடுத்த எலக்ஷன் முடிந்து சோனியா பிரதமர் ஆகிறாரா, இல்லையா பாருங்கள்.....///

அனானி.. ராஜ்புத் உயர் சாதியோ, தாழ்ந்த சாதியோ எனக்குத் தெரியாது.. ஆனால் பிரதிபா பாட்டீல் மேடம், நிறைய அரசியல், ஆட்சி அனுபவங்களைப் பெற்றிருக்கிறார். அதற்காகவே வரவேற்கலாம். மற்றபடி அவரைக் குறிப்பிட்டுத் தேர்வு செய்ததற்கு நீங்கள் சொல்லியிருப்பதுதான் முக்கியக் காரணங்கள் என்பதில் எனக்கும் ஐயமில்லை.

Anonymous said...

//பிரதிபா பாட்டீல் மேடம், நிறைய அரசியல், ஆட்சி அனுபவங்களைப் பெற்றிருக்கிறார். அதற்காகவே வரவேற்கலாம். மற்றபடி அவரைக் குறிப்பிட்டுத் தேர்வு செய்ததற்கு நீங்கள் சொல்லியிருப்பதுதான் முக்கியக் காரணங்கள் என்பதில் எனக்கும் ஐயமில்லை. //

உ.தமிழா, கடைசியாக என் கூற்றை ஒத்துக்கொண்டதற்கு நன்றி......
எனக்கும் சாதியினை கோடிட்டுக் காட்ட விருப்பமில்லைதான், ஆனால் இங்கிருந்து குடும்பத்துடன் சென்ற திராவிட தலைவர், பகுத்தறிவுப் பகலவன், தலித் ரட்சகன், இட ஒதுக்கீட்டின் ஒப்புயர்வற்ற நாயகன், மத்திய அரசின் மதியூகி, மைனாரிட்டிகளின் மங்காச் செல்வம் என்ன செய்தார் என்பது பற்றி விளங்கட்டும் என்றே சாதியினை இழுக்க வேண்டியதாயிற்று... விளங்கவேண்டியவர்களுக்கு விளங்கினால் சரி....

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
உ.தமிழா, கடைசியாக என் கூற்றை ஒத்துக்கொண்டதற்கு நன்றி......
எனக்கும் சாதியினை கோடிட்டுக் காட்ட விருப்பமில்லைதான், ஆனால் இங்கிருந்து குடும்பத்துடன் சென்ற திராவிட தலைவர், பகுத்தறிவுப் பகலவன், தலித் ரட்சகன், இட ஒதுக்கீட்டின் ஒப்புயர்வற்ற நாயகன், மத்திய அரசின் மதியூகி, மைனாரிட்டிகளின் மங்காச் செல்வம் என்ன செய்தார் என்பது பற்றி விளங்கட்டும் என்றே சாதியினை இழுக்க வேண்டியதாயிற்று... விளங்கவேண்டியவர்களுக்கு விளங்கினால் சரி....//

அவர் நினைத்தது ஒன்று. ஆனால் அங்கே நடந்தது வேறு.. இருந்தாலும் யார் வரக்கூடாது என்று தடுத்தோமே அவர் வரவில்லையே என்ற பெரிய சந்தோஷத்துடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார் திராவிடத் தலைவர். அவரைப் பொறுத்தமட்டில் இது அவருக்குக் கிடைத்துள்ள வெற்றியே..

Anonymous said...

//இருந்தாலும் யார் வரக்கூடாது என்று தடுத்தோமே அவர் வரவில்லையே என்ற பெரிய சந்தோஷத்துடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார் திராவிடத் தலைவர். அவரைப் பொறுத்தமட்டில் இது அவருக்குக் கிடைத்துள்ள வெற்றியே..//

கலைஞர் எது செய்தாலும் உங்கள் கண்ணுக்கு எப்படித் தெரிகிறது உ.தமிழன்.. முதல் ஜனாதிபதியைத் தவிர வேறு யாருக்கும் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக வாய்ப்புத் தரப்படவில்லை. அது இப்போதும் பின்பற்றப்பட்டுள்ளது. கூடவே பிரதீபா பாட்டீல் என்ற பெண்மணியைத் தேர்ந்தெடுக்க உதவியிருக்கிறார். இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டது சிறப்புத்தானே.. அதில் ஏனய்யா உமது எரிச்சலைக் கொட்டுகிறீர்..? அப்துல்கலாமுக்கு மட்டும்தான் தேசத்தின் மீது பாசமும், அன்பும் இருக்குமா? மற்றவர்களுக்கு இருக்கவே இருக்காதா..? மேலும் இந்தத் தேர்வை செய்தது சோனியாதானே தவிர.. கலைஞர் அல்ல.. முதலில் இதைப் புரிந்து கொள்ளுங்கள்..

abeer ahmed said...

See who owns medicalmega.com or any other website:
http://whois.domaintasks.com/medicalmega.com