'சிவாஜி' படத்திற்கு வரிவிலக்கு


05-06-2007


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தமிழக அரசு தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பதால், இப்போதெல்லாம் எல்லாப் படங்களுக்கும் தமிழிலேயே பெயர்கள் சூட்டப்படுகின்றன என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததுதான்.


முன்பு வரிவிலக்கிற்காக வந்த சில திரைப்படங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்தானா என்ற சந்தேகத்தையும் கிளப்பியிருந்தது. அதனால் ஆட்சேபணைக்குள்ளாகும் திரைப்படங்களின் பெயர்கள் அதிரடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு வரியை வசூல் செய்து கொண்டு சென்றன.


கூடவே அப்போது ரஜினியின் 'சிவாஜி' என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்கிற சர்ச்சையும் எழுந்திருந்தது. 'சிவாஜி' தமிழ்ச் சொல் அல்ல என்பதால் அதற்கு கேளிக்கை வரி அனுமதிக்கப்படுமா என்றெல்லாம் சந்தேகங்கள் தற்சமயம்வரை கிளப்பி விடப்பட்டுக் கொண்டிருந்தன.


இதற்கிடையே படத்தின் தணிக்கை முடிந்ததும், ஏவி.எம். நிறுவனம் இது சம்பந்தமாக வணிகவரித்துறை ஆணையரிடம் விண்ணப்பித்தது. 'சிவாஜி' என்பது தமிழில் வழக்கத்தில் உள்ள பெயர்ச் சொல் என்பதால், அதற்கு வரிவிலக்கு அளிப்பதில் பிரச்சினையில்லை என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.


இதனால் 'சிவாஜி' முழுமையான வரிவிலக்கைப் பெற்று தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு கொள்ளை லாபம் தரப் போகிறது.


அதே போல் இயக்குநர் மனோஜ்குமார் தயாரித்திருக்கும் மாதவன்-பாவனா நடித்த 'ஆர்யா' படத்திற்கும், 'தமிழில் வலம் வரும் பெயர்ச் சொல்' என்ற அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


முதலில் தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு முழு வரிவிலக்கு என்று அரசு உத்தரவிட்டபோது 'தமிழில் இப்போது புழுங்கிக் கொண்டிருக்கும் வடமொழி எழுத்துக்களைக் கொண்ட சொற்களும் தமிழ்ச் சொற்கள் என்றே கருதப்படும்' என்று சொன்னார்களா என்பது தெரியவில்லை.


எது எப்படியோ தங்களது டிவிக்கு படத்தைக் கொடுத்த கடனுக்கு 'உதவி' செய்தாகிவிட்டது. கூடவே, எதிர்க்கட்சி வாயைத் திறக்கக்கூடாது என்பதற்காக அக்கட்சியின் பிரச்சார பீரங்கிகளில் ஒருவரும், கலையுலகப் பொறுப்பாளருமான இயக்குநர் திரு.மனோஜ்குமார் தயாரித்திருக்கும் படத்திற்கும் வரிவிலக்கு கொடுத்தாகிவிட்டது.

எனவே இனி எதிர்ப்புகள் ஏதும் வராது என்றே நம்பலாம்.


ஆனால், 'பாட்டாளி'களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தாலும் வரும்.. வரட்டுமே..
மதுரை கொலைச் சம்பவத்தை இன்னும் கொஞ்சம் ஊறப் போட ஒரு வாய்ப்பாவது கிடைக்கும்..


'பஞ்சதந்திரத்தில்' சாணக்யன்லாம் நம்ம திராவிடத் தலைவர்களிடம் வந்து பிச்சையெடுக்க வேண்டும்..

35 comments:

Anonymous said...

வீனஸ் வில்லியம்ஸ் தோத்துப் போயிட்டாங்க

Anonymous said...

உங்க பேரை அங்க அங்க பின்னூட்டம் போட்டு காலி பண்ணிட்டு இருக்காரு, நீங்க சிவாஜி பேரை பத்தி பேசிக்க்கிட்டு இருக்கீங்க

Anonymous said...

ஒரிஜினல் தமிழன் ரசிகன் நான்...ஹிஹி நான் உங்களை சொல்லல

Anonymous said...

எங்கே எனது பின்னூட்டங்கள்?

Anonymous said...

சிவாசி

Anonymous said...

கலகல கலகல லகலகலக...

Anonymous said...

சதுர்வேதியுடன் நீங்க கிரிக்கெட் விளையாடினுங்கன்னு சொல்லி இருக்காங்க

Anonymous said...

நீங்க ரொம்ப நல்லவரா!!!

Anonymous said...

ஆக்சுவலி மிஸ்டர் ட்ரூ டமிலன், உங்க போஸ்டிங் எல்லாம் நல்லா இருக்கு

Anonymous said...

அனானி கமெண்டுக்கு பதில் எங்க...

Anonymous said...

ஆமாம் ...டின்னர் ஆச்சா!!!

Anonymous said...

ஆட்கள் தேவை...

Anonymous said...

ஹாய் ஹவ் ஆர் யூ

Anonymous said...

சார்.. சார் உங்க ரசிகர் மன்றத்தலைவர் உண்மைத்தமிழன் எனக்கும் பின்னூட்டம் போட்டு இருக்காரு

Anonymous said...

எல்லா போலியும் போலியல்ல
அண்ணன் உண்மைத்தமிழன் போலியே உண்மைப் போலி

Anonymous said...

தேன்கூடு தமிழமண ஹீரோ அண்ணன் உ.த வுக்கு மேற்கு ஐரோப்பா சார்பில் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்

Anonymous said...

இந்தப் பின்னூட்டம் ஃபயர் பாக்ஸ் பயன்படுத்திப் போடப்பட்டது..

Anonymous said...

நீங்க என்னைவிட அழகா இருக்கீங்க

Anonymous said...

என்னங்க சார், யாரும் கருத்து சொல்ல வரல

Anonymous said...

எங்கே பதில்...

Anonymous said...

நான் சிவாஜி படம் பாக்க போறேன் நீ வரியா

Anonymous said...

என்னது வீனஸ் வில்லியம்ஸ் செத்துப்பபொய்டாங்களா

Anonymous said...

எனக்கு சிவாஜி படத்துக்கு ஒரு டிக்கட் குடுங்க

Anonymous said...

//
உங்க பேரை அங்க அங்க பின்னூட்டம் போட்டு காலி பண்ணிட்டு இருக்காரு, நீங்க சிவாஜி பேரை பத்தி பேசிக்க்கிட்டு இருக்கீங்க
//

பின்னுட்டம் போட்டுட்டு இங்க வந்து அதுக்கு விளம்பரம் குடுக்குறியா

Unknown said...

உண்மை தமிழன்,

காந்தி, அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, ஜெயலலிதா, கருணாநிதி, முக ஸ்டாலின், என்கிற பெயர்களில் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை யாராவது படம் எடுத்தால் அதற்கு வரி விலக்கு உண்டா இல்லையா?:)))

துளசி கோபால் said...

'ஜிலேபி' யும் தமிழ்ச்சொல்தானே? அப்பாடா........இப்ப நிம்மதியா இருக்கு.:-))))

Anonymous said...

"ஜில்லென்று ஒரு காதல்" என்று ஒரு படம் எடுத்தார்கள். அதில் வடமொழி பெயர் இருக்கிறது என்று வரிவிலக்கு மறுத்தார்கள். அந்த படக்காரர்கள் பின்னால் அந்த படத்தின் பெயரை "சில்லென்று ஒரு காதல்" என்று மாற்றினார்கள். தமிழ் வெற்றி பெற்றதாம்! உடனே, வரிவிலக்கு கிடைத்தது.

இப்படியெல்லாம் போராடி தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போ சிவாஜி என்றால் தமிழ் வார்த்தை என்று சொல்லிவிட்டார்கள். ரொம்ப சந்தோஷம்.

நிச்சயமாக கருணாநிதி, உதயசூரியன், ஸ்டாலின் முதலான வேற்று மொழி வார்த்தைகளும் இப்போ தமிழாக ஆகிவிடும்.

இளிச்சவாயன் தமிழன் வரிப்பணம் வருஷத்துக்கு 300 கோடி கோவிந்தா!!!

நல்ல கூத்து.

Anonymous said...

இந்த பதிவு எதிர்பார்த்த அளவை விட சிறியதாக இருப்பதால் ஆட்டத்தில் சேர்ப்பு இல்லை...

ம்ம்ம்மாத்தேன், போ...!!!!

:)))

அது என்ன நீங்க பதிவு போட்டா அனானி ஆட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கு...

உண்மைத்தமிழன் said...

கும்மியடித்த திம்மிகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.. நிறைய ஆணி புடுங்கினேன் என்பதால் நன்றி தெரிவிக்க லேட்டாயிருச்சு. அவ்ளோதான்.. ஆமா.. எங்கிட்டிருந்தாம்ப்பா வர்றீங்க..?

உண்மைத்தமிழன் said...

//செல்வன் said...
உண்மை தமிழன்,
காந்தி, அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, ஜெயலலிதா, கருணாநிதி, முக ஸ்டாலின், என்கிற பெயர்களில் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை யாராவது படம் எடுத்தால் அதற்கு வரி விலக்கு உண்டா இல்லையா?:)))//

அப்போது யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதில்தான் இதற்கான விடை உள்ளது.. ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மூவரின் திரைப்படங்களும் கண்டிப்பாக வெளிவரும்.. அதுவும் நமது சொந்தக் காசில்தான்.. பார்த்துக் கொண்டேயிருங்கள் செல்வன்..

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
'ஜிலேபி' யும் தமிழ்ச்சொல்தானே? அப்பாடா........இப்ப நிம்மதியா இருக்கு.:-))))

ஜிலேபியா? டீச்சர் இந்தத் தலைப்புல படம் எடுக்கப் போறீகளா? கதை வேணும்னா கேளுங்க.. தர்றேன்.. ரெடியா இருக்கு..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
"ஜில்லென்று ஒரு காதல்" என்று ஒரு படம் எடுத்தார்கள். அதில் வடமொழி பெயர் இருக்கிறது என்று வரிவிலக்கு மறுத்தார்கள். அந்த படக்காரர்கள் பின்னால் அந்த படத்தின் பெயரை "சில்லென்று ஒரு காதல்" என்று மாற்றினார்கள். தமிழ் வெற்றி பெற்றதாம்! உடனே, வரிவிலக்கு கிடைத்தது.
இப்படியெல்லாம் போராடி தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்போ சிவாஜி என்றால் தமிழ் வார்த்தை என்று சொல்லிவிட்டார்கள். ரொம்ப சந்தோஷம்.
நிச்சயமாக கருணாநிதி, உதயசூரியன், ஸ்டாலின் முதலான வேற்று மொழி வார்த்தைகளும் இப்போ தமிழாக ஆகிவிடும்.
இளிச்சவாயன் தமிழன் வரிப்பணம் வருஷத்துக்கு 300 கோடி கோவிந்தா!!!//

அனானி.. இன்னும் நிறைய வேடிக்கை இருக்கு.. வெயிட் பண்ணிப் பாருங்க. 300 கோடி 400 கோடி ஆகப் போகுது.

உண்மைத்தமிழன் said...

//செந்தழல் ரவி said...
இந்த பதிவு எதிர்பார்த்த அளவை விட சிறியதாக இருப்பதால் ஆட்டத்தில் சேர்ப்பு இல்லை...
ம்ம்ம்மாத்தேன், போ...!!!!:))) அது என்ன நீங்க பதிவு போட்டா அனானி ஆட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கு...//

என்ன பண்றது ரவி.. ஒரே அன்புத் தொல்லையா இருக்கு.. கொஞ்சம் வேகமாகப் போட்டேன். அதான் சின்னதாயிருச்சு. நாளைக்குப் பாரு.. உனக்காகவே பெரிசா போடுறேன்.. ஓகே..

abeer ahmed said...

See who owns ebay.ph or any other website:
http://whois.domaintasks.com/ebay.ph

Unknown said...

வணக்கம், நீங்கள் ஒரு வணிக மனிதன் அல்லது பெண்? நீங்கள் எந்த இருக்கிறீர்களா
நான் நிதி அல்லது நிதி தேவை மன அழுத்தம் உங்கள் சொந்த தொடங்கும்
வணிக? நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது செலுத்த கடன் செய்ய வேண்டும்
உங்கள் பில்கள்? நீங்கள் ஒரு குறைந்த கடன் ஸ்கோர் வேண்டும் மற்றும் இல்லை
சிரமம் உள்ளூர் வங்கிகள் மற்றும் பிற இருந்து கடன் பெறுவதற்கு
நிதி நிறுவனங்கள்? நான் நீங்கள் அந்த வாய்ப்பை கடன்கள் தெரிவிக்க விரும்புகிறேன்
குறைந்த வட்டி விகிதம் 2%, நீங்கள் ஒரு பெறுவதில் ஆர்வமாக இருந்தால் மணிக்கு
எங்களுக்கு இருந்து கடன், மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்: (MARYAUSTINECREDITFIRM77@GMAIL.COM)