அடையாளமா? அவமானமா?


12 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Hariharan # 03985177737685368452 said...

பாரதிக்கு ஓட்டுவங்கி இருக்கா? எத்தனை எம்.எல்.ஏ, எம்.பி இடம் கேரண்டியாகக் கிடைக்கும்னு சொல்லுங்க 500 வாகனங்களில் அலைகடலாய்த் திரண்டு வந்து குரல் எழுப்ப, கிளர்ச்சி, போராட்டம், சிறை நிரப்பும் ஆர்ப்பாட்டம், கண்டனம் செய்யலாம்!

தமிழக அரசியலில் பாரதி ஆரிய/பார்ப்பனக் கவியாக பாவிக்கப் பட்டுக் கழிக்கப்படும் வரை இந்தமாதிரி கழிப்பறையில் அடையாளப்படுத்தப்படும் அடையாள அவமானங்கள் தடுக்கப்பட ஏதும் ஆவன செய்யப்படாது!

நல்லவேளை இப்படி நாற்றம் அடிக்கும் இடத்தில் ஆண்மகனுக்கு அடையாளமாகத் தோன்ற வேண்டும் என்பதால் தீர்க்கதரிசி மூக்கை மூட வசதியாக முண்டாசு கட்டிக்கொண்டுவிட்டார் பாரதி.

நாடோடி said...

நம்ம வலையுலக கம்னாட்டிகள் பண்ண அளவுக்கு இன்னும் கன்னடகாரர்கள் வளரவில்லை. அவர்களை நம்ம ம.க.இ.க தோழர்களிடம் டீயுசன் போகச்சொல்லுங்கள் பாரதியை எப்படியெல்லாம் அவமானப்படுத்தலாம் என்று.

உண்மைத்தமிழன் said...

//Hariharan # 03985177737685368452 said...
பாரதிக்கு ஓட்டுவங்கி இருக்கா? எத்தனை எம்.எல்.ஏ, எம்.பி இடம் கேரண்டியாகக் கிடைக்கும்னு சொல்லுங்க 500 வாகனங்களில் அலைகடலாய்த் திரண்டு வந்து குரல் எழுப்ப, கிளர்ச்சி, போராட்டம், சிறை நிரப்பும் ஆர்ப்பாட்டம், கண்டனம் செய்யலாம்!
தமிழக அரசியலில் பாரதி ஆரிய/பார்ப்பனக் கவியாக பாவிக்கப் பட்டுக் கழிக்கப்படும் வரை இந்தமாதிரி கழிப்பறையில் அடையாளப்படுத்தப்படும் அடையாள அவமானங்கள் தடுக்கப்பட ஏதும் ஆவன செய்யப்படாது!
நல்லவேளை இப்படி நாற்றம் அடிக்கும் இடத்தில் ஆண்மகனுக்கு அடையாளமாகத் தோன்ற வேண்டும் என்பதால் தீர்க்கதரிசி மூக்கை மூட வசதியாக முண்டாசு கட்டிக்கொண்டுவிட்டார் பாரதி.//

ஹரிஹரன் ஸார்.. அதை ஏற்பாடு செய்தவருக்கும் நமது பாரதி யார் என்று தெரியவில்லை என்று அவரே சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.. நாளை என்ன நடக்கும் என்று? நீங்கள் சொல்வது ஒரு புறத்தில் சரிதான்.. மகாகவியை அவாள் கவி என்று சொல்லி ஓரங்கட்டப் பார்த்தது திராவிடக் கலாச்சாரம்தான்.. வேறு என்ன செய்வது? திராவிடத்திற்கு அடிமைப்பட்டுவிட்டோம்.. விடுதலை கிடைக்கும்வரை இது போன்ற அசிங்கங்களை பொறுத்திக் கொள்ளத்தான் வேண்டும்..

உண்மைத்தமிழன் said...

//நாடோடி said...
நம்ம வலையுலக கம்னாட்டிகள் பண்ண அளவுக்கு இன்னும் கன்னடகாரர்கள் வளரவில்லை. அவர்களை நம்ம ம.க.இ.க தோழர்களிடம் டீயுசன் போகச்சொல்லுங்கள் பாரதியை எப்படியெல்லாம் அவமானப்படுத்தலாம் என்று//

விடுங்கள் நாடோடி.. தகவலைச் சொல்லியிருக்கிறோம்.. அப்புறப்படுத்துவார்களா என்று பார்ப்போம். இல்லாவிட்டால் பேசுவோம்.. பாரதி என்பவன் நமது கவிஞன்.. அவன் என்ன ஜாதி என்று பார்க்கும் மனிதர்களை நாம்தான் புறந்தள்ள வேண்டும்.. நன்றி நாடோடி..

சிறில் அலெக்ஸ் said...

ஆண்மைக்கு அடையாளமாக தலைவரை போட்டிருப்பது சந்தோஷமான விஷயம்தானே?

பெண்கள் பகுதியில் யார் படம் போட்டிருக்கிறது எனத் தெரியலியே.

ஜான்சி ராணி? அப்டீன்னா பரவாயில்ல.

சிறில் அலெக்ஸ் said...

இதே மாதிரி .. கடவுளின் படங்களை வரைந்துவிட்டு இங்கே சிறுநீர்க் கழிக்காதே என எழுதி வைத்திருக்கும் இடங்களையும் கண்டிக்கலாம்.

கடவுள்களுக்கு வேறு வேலையில்லையா? அல்லது நாத்திகர்கள் மட்டும் அங்கே ஒதுங்கலாமா?

:) நிஜமாவே ... சிரிப்புத்தான் வருது.

துளசி கோபால் said...

எல்லாம் மூளை கெட்டு, தலை திருகிப்போய் கிடக்குறாங்க. எங்கேபோய் முட்டிக்கலாம்?

உண்மைத்தமிழன் said...

//சிறில் அலெக்ஸ் said...
ஆண்மைக்கு அடையாளமாக தலைவரை போட்டிருப்பது சந்தோஷமான விஷயம்தானே?
பெண்கள் பகுதியில் யார் படம் போட்டிருக்கிறது எனத் தெரியலியே.
ஜான்சி ராணி? அப்டீன்னா பரவாயில்ல.
இதே மாதிரி .. கடவுளின் படங்களை வரைந்துவிட்டு இங்கே சிறுநீர்க் கழிக்காதே என எழுதி வைத்திருக்கும் இடங்களையும் கண்டிக்கலாம்.
கடவுள்களுக்கு வேறு வேலையில்லையா? அல்லது நாத்திகர்கள் மட்டும் அங்கே ஒதுங்கலாமா?
:) நிஜமாவே ... சிரிப்புத்தான் வருது.//

தலீவா.. சிறுநீர் கழிக்கும் இடம் கேவலமானது, அசிங்கமான இடம் என்று சொல்லித்தான் வீட்டில் யாரும் தங்களுடைய புகைப்படத்தை அங்கே மாட்டி வைத்துக் கொள்வதில்லை. அதே போலத்தான்..
அந்த வேலையைச் செய்தவர் எனக்கு அவர் யாரென்றே தெரியாது.. மீசை பெரிதாக, அழகாக இருந்ததால் மாட்டினேன் என்றுதான் சொல்லியிருக்கிறார். ஒருவேளை இதில் ஏதும் சூழ்ச்சி உள்ளதா என்பதும் தெரியவில்லை. இது பெரிய பிரச்சினை ஆகாமல் இருக்க நான் ஆண்டவனை வேண்டுகிறேன்..

கடவுளின் படங்களை சில இடங்களில் வரைந்து வைத்திருப்பது இங்கே 'வேலை'யைக் காட்டாமல் அதற்கென்று உள்ள இடத்தில் போய் 'வேலை'யைக் காட்டு என்று கட்டாயப்படுத்துவதற்குத்தான்..

நிஜமாவே உங்களுக்குச் சிரிப்பு வருதா? அடுத்த வாட்டி வாங்க.. பார்த்துக்குறோம்..

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
எல்லாம் மூளை கெட்டு, தலை திருகிப்போய் கிடக்குறாங்க. எங்கேபோய் முட்டிக்கலாம்?//

மூளை கெட்டு, தலை திருகிப் போய் என்றால் எந்தப் பக்கம் தலை இருக்கிறதோ அந்தப் பக்கத் தலையை அருகில் இருக்கும் சுவற்றில் முட்டலாம். அதற்கு அந்த கழிவறைச் சுவர் பொருத்தமானது என்று நான் கருதுகிறேன் டீச்சர்..

Anonymous said...

இது ஏதோ தன்னிச்சையாக நடந்த ஒரு நிகழ்ச்சி. இதை பாலிடிக்ஸ் பண்ண வேண்டாம்.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
இது ஏதோ தன்னிச்சையாக நடந்த ஒரு நிகழ்ச்சி. இதை பாலிடிக்ஸ் பண்ண வேண்டாம்.//

அனானி.. இது தன்னிச்சையாக நடந்ததுதான். ஆனால் இப்படி ஒரு சம்பவவம் நடந்துள்ளது என்பதை வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டும். இதில் என்ன பாலிடிக்ஸ்? அவரவர் கருத்துக்களைச் சொல்கிறார்கள் அவ்வளவுதான்..

ஆனால் ஒன்றை நினைத்துப் பாருங்கள்.. 'முறுக்கு மீசை வைத்தால்தான் ஆண்' என்று ஒரு ஆணே நினைத்திருக்கானே.. இந்தக் கூத்தை என்னவென்று சொல்வது?