சிந்தாநதியாரின் போட்டியில் எனது வாதம்

எனது இனிய வலைத் தமிழறிஞர்களே..


சிந்தாநதியார் தனது http://tamiltalk.blogspot.com/2007/04/blog-post.html-ல் கிரிக்கெட் போட்டி ஒன்று வைத்திருந்தார். நானும் அவசர அவசரமாக எழுதி அனுப்பிட்டு, பரிசு இன்னைக்கு கப்பல்ல வருது.. நாளைக்கு பிளேன்ல வரப் போகுதுன்னு ஊர் முழுக்கச் சொல்லி அலம்பல் பண்ணிட்டுத் திரியறேன்.. திடீர்ன்னு பாருங்க.. ஒரு ரெண்டு வரில ஒண்ணைச் சொல்லி அதுல மண்ண அள்ளிப் போட்டுட்டாரு சிந்தாநதியாரு..
நீங்களே நியாயம் சொல்லுங்க.. என் சார்பா நீங்க எல்லாம் சிந்தாநதியாருக்கு கண்டன அறிக்கை கொடுக்கணும்.. 'சக்தி' உள்ளவங்க ஆட்டோ அனுப்பலாம்.. இந்த அ.மு.க.ல உள்ளவங்கல்லாம் இப்ப எங்க போய்த் தொலைஞ்சாங்கன்னு தெரியல.. கொஞ்சம் ஹெல்ப்புக்கு வரலாம்ல..
ஆனாலும் இந்த உண்மைத்தமிழன் அசரலங்க..

சிந்தாநதியாரின் அடுத்தப் போட்டிலேயும் குதிச்சிட்டான்ல..

"படிக்கிற வயசில் மாணவர்களுக்கு அரசியல் தேவை-தேவையில்லை" இதுதான் அந்தப் போட்டி..

இதோ என் தரப்பு வாதம் :

கல்லூரி மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை என்பது எனது கருத்து. காரணம் கல்லூரி என்பது கல்வி கற்பிக்கும் இடம். அங்கே உள்ளே நுழையும் மாணவர்களுக்கு அந்தக் கல்விதான் அவர்களுடைய வாழ்க்கையின் குறிக்கோளை அடைய உதவும். மாணவர்கள் தங்களது கவனங்களை வேறுவேறு தளங்களில் செலவிட்டால் அவர்களது கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படும். இத்திறன் பாதிக்கப்படும்போதுதான் அம்மாணவர்களுக்கு தங்கள் மீதே கோபம் வந்து அதை இந்தச் சமுதாயத்தின் மீது திசை திருப்புகிறார்கள்.

உதாரணமாக பஸ் டே என்ற பெயரில் நூறு மாணவர்கள் பஸ்ஸின் மீது ஏறி நின்று ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக வலம் வருகிறார்கள். சில இடங்களில் இந்த ஆட்டம் அளவுக்கதிகமாகிவிட பஸ் சேதத்திற்குள்ளான சம்பவங்களும் நடந்தன. இப்போது அந்த சேதத்தை யார் ஈடுகட்டுவது. பேருந்து என்பது பொதுச் சொத்து. அதை வாங்குவதற்குரிய பணத்திலும், கமிஷன் கொடுத்த பணத்திலும், பராமரிப்பு செய்யும் பணத்திலும் அம்மாணவரின் குடும்பமும் தனது பங்கைச் செலுத்தியிருக்கிறது என்பது அம்மாணவருக்குத் தெரியுமா? தெரியாது.. புரியாது.. காரணம் அதற்கேற்ற அடிப்படை கல்வி அவனிடம் இல்லை.

இப்போதைய பொருளாதார நுகர்வின் காரணமாக விலைவாசிகள் உயர்ந்துதான் உள்ளன. கல்லூரிக் கட்டணங்களும் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டன. ஒவ்வொரு தாய், தகப்பனும் பைசா, பைசாவாக காசு சேமித்து தங்களது பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கிறார்கள். இந்த பிள்ளைகள் கல்லூரியில் படித்து முடித்து நல்ல மதிப்பெண்களோடு வெளியில் வந்து வேலைக்குச் சேர்ந்து தாங்கள் கடன்பட்ட ந்த படிப்புக் கடனையாவது அடைத்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கு உண்டு. இந்த நம்பிக்கையை பிள்ளைகள் காப்பாற்றியே ஆக வேண்டும்.

அரசியல், சினிமா என்று தங்களது கவனத்தைப் படிக்கும் காலத்திலேயே செலவிட்டால் படிப்பில் ஆர்வம் குறையும். அதனால் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு உள்ளது. மதிப்பெண்கள் குறைந்தால் வேலை வாய்ப்பும் குறைவுதான். இப்போதெல்லாம் பட்ட மேற்படிப்புகள் அனைத்திற்குமே நுழைவுத் தேர்வு வைத்திருக்கிறார்கள். அவற்றில் பாஸ் செய்தால்தான் மேற்படிப்பு படிக்க இயலும். போதாக்குறைக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில் அரை மதிப்பெண் வித்தியாசத்தில் மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளில் மாணவர்கள் நுழைய முடியாத தடைகளும் உள்ளன. இந்த நேரத்தில் அந்த அரை மதிப்பெண் அவர்களது வாழ்க்கையையே மாற்றிவிடக் கூடியதாக உள்ளது பாருங்கள்..

கல்லூரிகளில் படிக்கும்போது அரசியல்வாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டு அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்குச் சென்று வருவது. அரசியல்வாதிகளுடன் கலந்து பேசுவது என்பது மாணவர்களுக்கு போதை தரக்கூடிய விஷயங்கள் அவர்தம் மனதில் வித்தாவதற்கு காரணமாகிவிடும். அரசியல்வாதிகளின் நாளொன்றுக்கு, பொழுதொன்றுக்கு பேசும் பேச்சும், யாரையும் மதிக்காமல் ஏளனமாகப் பேசுகின்ற பேச்சு, அதிகாரிகளை மதிக்காத மமதை, எதையும் அதிகாரத்தால் சாதிக்கும் தற்பெருமை, கடைசியாக யாருக்குமே அடங்காத பண்பு இவையனைத்தும் அரசியல்வாதிகளிடமிருந்து மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விஷமாக அமைந்துவிடும் வாய்ப்புள்ளது.

இதன் தொடர்ச்சியாக இதையே மாணவர்களும் ஹீரோத்தனம் என்ற பார்முலாவின் அடிப்படையில் தொடர்ந்தால் அவர்களுடைய வீட்டிலும், வெளியிலும் அவர்களுடைய நடவடிக்கைகள் மாறும். பெற்றோரை எடுத்தெறிஞ்சு பேசுவது.. பொய் சொல்வது. திருடுவது, அசிங்கமான வார்த்தைகளை சர்வசாதாரணமாக பயன்படுத்தவது முக்கியமாக யாருக்கும் பயப்படாமல் இருப்பது.. இவையெல்லாம் ஒரு மனிதனின் உயர்வுக்கு தடைக்கல்லாக இருக்கக் கூடிய விஷயங்கள்..

இந்த மாணவனின் பெற்றோர் எவ்வளவு சையோடு தங்கள் பிள்ளைகளை வளர்த்து கல்லூரிக்கு கொண்டு வந்து விட்டிருப்பார்கள். தங்கள் பிள்ளை நன்கு படித்து நல்ல பெயரெடுக்க வேண்டும் என்றுதான் அனைத்து பெற்றோர்களும் நினைப்பார்கள். கல்லூரிப் படிப்பில் மனதை அலைபாய விடாமல் தடுத்து கல்வி ஒன்றையே குறிக்கோளாக வைத்து மாணவர்கள் படித்து முன்னேறினால்தான் அவர்களால் வெகு சீக்கிரம் நல்ல வேலையில் சேர முடியும்.

மாணவர்களுக்கு அரசியல் பற்றிய அறிவு இருந்தாலே போதும்.. அரசியல் தேவையில்லை. முதலில் தங்களது குடும்பத்தை நல்லவிதமாக வைத்துக்கொண்டு அதன் பிறகு இப்போது தனக்கு நிறைய நேரம் இருக்கிறது.. தன்னால் பொதுநல வாழ்க்கையில் உண்மையாக, நேர்மையாக நடந்து கொள்ள முடியும் என்று ஒருவன் நினைத்தால் அவன் பொது வாழ்க்கைக்கு வரலாம்.. தவறில்லை.

னால் படிக்கும் பொழுதே வந்தால், அவர்களை இந்தக் கேடு கெட்ட, கேவலம் கெட்ட அரசியல்வாதிகள் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், தங்களை வாழ்த்தி கோஷம் போடவும், தங்களுக்குப் பதிலாக காவல் துறையிடம் அடி வாங்குவதற்கும், உண்ணாவிரதத்தில் கூட்டம் சேர்ப்பதற்காக ஜர்படுத்துவதற்கும்தான் பயன்படுத்தவார்கள்.

காரியம் முடிந்ததும் கருவேப்பிலையாக இந்த மாணவர்களைத் தூக்கியெறியவும் தயங்க மாட்டார்கள். ஒரு வேளை அப்போது இந்த மாணவர்கள் மனம் திருந்தி கல்விதான் முக்கியம் என்று திரும்பி வந்தால்.. ஸாரி.. காலம் திரும்பி வர முடியாதே.. அவர்களுடைய பொன்னான வாழ்க்கையே வீணாகப் போயிருக்குமே..

நம் நாட்டின் இன்றைய அரசியல், சமூக சூழ்நிலைக்கு மாணவர்கள் அரசியல் வருவது, அவர்கள் தங்கள் கழுத்தில் தாங்களே தூக்குக் கயிற்றை மாட்டிக் கொள்வது போலாகும்.

எனவே மாணவர்கள் தாங்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்தில் கல்வியைத் தவிர வேறெந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருந்து கல்வியின் முதலிடம் பெற்று உயர்வடைய வேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும்.

நன்றி.. வணக்கம்..

4 comments:

✪சிந்தாநதி said...

உண்மைத் தமிழரே...

நான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்து விடவில்லை. அது தொடர்கிறது என்றுதான் சொல்லி இருக்கிறேன். ஒரு சில தினங்களில் அது பற்றி ஒரு ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம் என்று நினைக்கிறேன்.

அப்புறம்...

இப்போதைய போட்டியைப் பொறுத்தவரை பதிவை நீங்கள் அங்கேயே பின்னூட்டமாக இடும்படி வேண்டுகிறேன். அது பட்டி மன்றமாக நடைபெறுவதால் தொடர்ச்சி தேவை. மேலும் நடுவருக்கு அனுப்பும் போதும் குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதால் உங்கள் கருத்தை போட்டிக்களத்தில் மறுமொழியாக இடும்படி வேண்டுகிறேன்.

(கிரிக்கெட் போட்டி விடை இங்கேயே இருக்கலாம்)

நன்றி

அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) said...

எப்படி எப்படி எங்க போய் தொலைஞ்சமா கேப்பிங்க கேப்பீங்க வாடீ உனக்கு இனிமே பின்னூட்ட ஆதரவு வாபஸ்
:)))))

உண்மைத்தமிழன் said...

//எப்படி எப்படி எங்க போய் தொலைஞ்சமா கேப்பிங்க கேப்பீங்க வாடீ உனக்கு இனிமே பின்னூட்ட ஆதரவு வாபஸ் //

அனானி அண்ணன்மார்களே.. கழகத்தின் மட்டற்ற, மாசற்ற, சிங்கங்களே.. கொஞ்சம் உங்க மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க.. இதுவரைக்கும் என் 'வூட்டுக்குள்ள' பூந்து எத்தனை தடவை பின்னூட்டம் போட்டிருக்கீங்கன்னு..?

ஹி..ஹி..ஹி..

ஏதாவது போட்டிருந்தாத்தான உங்களால சொல்ல முடியும்..

ஏற்கெனவே நான் வலையுலகத்துல பேமஸான அனாதை.. இப்போ நீங்க அதைவிட ரொம்ப பேமஸாக்கப் போறீங்க..

சரி.. சரி.. இப்படியாச்சும் என்னைப் பார்க்க வந்தீங்களே.. அதுக்கொசரம் அல்லாருக்கும் தேங்க்ஸ்..

abeer ahmed said...

See who owns gsm-egypt.com or any other website:
http://whois.domaintasks.com/gsm-egypt.com