பெருகும் தமிழ்க்'குடி'மகன்கள்-யாருக்கு இருக்கு கவலை?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..


பயப்படாதீங்க.. இது சின்ன மேட்டர்தான்.. காலைல பேப்பர் படிச்சிட்டிருக்கும்போது இந்த விஷயம் நம்ம கண்ணுல பட்டுச்சு.. பட்டுன்னு சுட்டுட்டேன்.. படிச்சுப் பாருங்க.. அப்புறமா 'பெருமைப்பட்டுக்குங்க..'

"..தமிழகத்தில் மதுபானக் கொள்முதலை முன்பு 'டாஸ்மாக்' நிறுவனம் செய்து வந்தது. சில்லரை விற்பனைக் கடைகளை தனியார் நடத்தி வந்தனர். இதில், பல வகைகளில் போலி சரக்குகளும், அரசுக்கு ஆயத்தீர்வை செலுத்தாமல் நேரடியாகச் சப்ளை செய்யப்படும் சரக்குகளும் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்தன.

கடந்த 2003-ம் ஆண்டு நவம்பரில் இருந்து 'டாஸ்மாக்' நிறுவனமே சில்லரை விற்பனையை நடத்தத் துவங்கியது. இதன் மூலம் போலி சரக்குகள் கட்டுப்படுத்தப்பட்டன. 'டாஸ்மாக்' விற்பனையைத் துவக்கிய பின்னர், ஆண்டுக்கு ஆண்டு மதுபானங்களின் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே போல வருவாயும் ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது.

இந்தக் காலக்கட்டத்தில் பெரிய அளவில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டவில்லை. 'டாஸ்மாக்' விற்பனையைத் துவக்கிய பின்னர், 'குவார்ட்டர்' எனப்படும் 180 மி.லி. சரக்குகளின் விலை இரண்டு ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டது.
இப்படியிருக்கும்போது அரசுக்கு கிடைத்துவரும் வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்து இருப்பது குடிமகன்களின் எண்ணிக்கை வெகுவாகப் பெருகியுள்ளதையே வெளிப்படுத்துகிறது.

கடந்த 1996-97ம் ஆண்டில் மது வகைகள் ஒரு கோடியே 39 லட்சத்து 57 ஆயிரம் பெட்டிகள் விற்கப்பட்டுள்ளன. (ஒரு பெட்டியில் 750 மி.லி. அளவு கொண்ட 12 முழு பாட்டில்கள் இருக்கும்) இதே விற்பனை 2002-03-ம் ஆண்டில் ஒரு கோடியே 42 லட்சத்து 23 ஆயிரம் பெட்டிகளாகத்தான் இருந்தது.
ஆனால் சில்லரை விற்பனையை அரசே எடுத்து, 'டாஸ்மாக்' மூலம் 2003-ம் ஆண்டு முதல் கடைகளை நடத்தத் துவங்கிய பின்னர், விற்பனை அளவு ஆண்டுக்கு ஆண்டு உயரத் தொடங்கியது. 2003-04-ம் ஆண்டில் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரம் பெட்டிகள் விற்கப்பட்ட நிலையில் 2006-07-ம் ஆண்டில் இரண்டு கோடியே 71 லட்சத்து 54 ஆயிரமாக விற்பனை அளவு உயர்ந்துள்ளது.

இதே போல, பீர் வகைகள் விற்பனை 1996-97-ம் ஆண்டில் ஒரு கோடியே 43 ஆயிரம் பெட்டிகளாக இருந்தன. கடந்த 2002-03-ம் ஆண்டில் இதன் பெட்டி அளவு 97 லட்சத்து 16 ஆயிரம் பெட்டிகளாக குறைந்தது. ஆனால் 2006-07-ம் ஆண்டில் ஒரு கோடியே 77 லட்சத்து 33 ஆயிரம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.

இப்படி விற்பனை அளவு ஐந்தாண்டுகளில் வெகுவாக உயர்ந்துள்ளதால், அரசுக்குக் கிடைத்து வந்த வருவாயும், பத்தாண்டுகளில் ஐந்து மடங்குக்கு மேல் கூடியுள்ளது.

மதுபான விற்பனை மூலம் கடந்த 1996-97-ம் ஆண்டில் ஆயிரத்து 646 கோடியே 66 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைத்தது. இதுவே 2002-03-ம் ஆண்டில் மூவாயிரத்து 807 கோடியே 45 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

'டாஸ்மாக்' மூலம் மதுபான விற்பனையைத் துவக்கிய பின்னர், வருவாய் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து ஐந்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்தும் உள்ளது.

இதன்படி 2006-07-ம் ஆண்டில் ஏழாயிரத்து 441 கோடியே 44 லட்சம் ரூபாய் 'டாஸ்மாக்' மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

மது குடிப்போரின் எண்ணிக்கை உயர்ந்தாலும், இந்த வருமானத்தை அரசு பெரிதும் நம்பியுள்ளது.

'இலவசத் திட்டங்கள்' பலவற்றை அறிவிப்பதற்கு மதுவகைகள் மூலம் கிடைக்கும் ஏழாயிரம் கோடி ரூபாய் வருமானம்தான் இந்த அரசுக்கு கை கொடுத்து வருகிறது.."

வாழ்க தமிழகம்!
வளர்க அரசியல்!!
பல்லாண்டு வாழ்க தலைவர்கள்!!!
சில காலம் வாழட்டும் தமிழக மக்கள்!!!!

18 comments:

துளசி கோபால் said...

கண்ணை வித்து சித்திரம் வாங்குன கதைதான்(-:

Anonymous said...

பதிவர்கள் சந்திப்பிலும்
'சரக்கு' கிடைக்குமா என்று
பதிவர்கள் ஒருவருக்கொருவர்
வினவிக் கொண்ட போதே
இன்று உங்களுக்கேற்பட்ட கவலை
எனக்கும் ஏற்பட்டது.

Anonymous said...

Liquor can never be removed from Tamilnadu.

Especially with the dravidian goondas ruling it by killing the basic tamil good culture and nature.

Now, this was a good double-trick by that brahmin lady Jayalalitha to change this gutter culture into a money spinning machine.

After Karunanidhi's minority rule, there was a talk that the government will introduce air-conditioned bars to make the sales more robust. The same day Ramadoss objected and the project got killed.

I expect a day when there will be more liquor shops by government than government schools and hospitals. And, the hindu temples would have been converted into government guest houses for the amoral adventures of the ministers.

May be before soon...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
கண்ணை வித்து சித்திரம் வாங்குன கதைதான்(-://

துளசி மேடம்.. மிக்க நன்றி.. இவ்ளோவையும் செய்துவிட்டு மக்களுக்கான அரசு என்கிறார்கள் வருபவர்கள் அனைவரும். என்ன செய்வது தமிழ்நாட்டின் தலையெழுத்து?

உண்மைத்தமிழன் said...

//இப்னுஜுபைர் said...
பதிவர்கள் சந்திப்பிலும்
'சரக்கு' கிடைக்குமா என்று
பதிவர்கள் ஒருவருக்கொருவர்
வினவிக் கொண்ட போதே
இன்று உங்களுக்கேற்பட்ட கவலை
எனக்கும் ஏற்பட்டது.//

ஐயா இப்னுஜுபைர்

உங்க பெயரையே இப்பத்தான் நான் கேள்விப்படுறேன்..

புனைப் பெயரு.. நடேசன் பார்க்குக்கு வந்தவங்கள்ல ஒருத்தரு.. நிஜப் பேரு மறந்து போச்சு.. ஒரிஜினல் பேரைச் சொல்லிட்டா அடுத்த வாட்டி பார்ட்டிக்கு கூப்பிட மாட்டாங்கன்னு கவலை..

ஐயா பெரியவங்களே.. இப்ப நீங்க ஸ்டெடியா இருக்கீங்களா இல்லையான்னு எனக்கு ஒரு டவுட்டு வந்திருச்சு. ஏன்னா இப்படி பேரையெல்லாம் செலக்ட் பண்ணணும்னா கண்டிப்பா 'சரக்கு' உள்ள போயிருந்தாத்தான் புத்தி வரும்.. கரெக்ட்டுங்களா?

வந்ததுக்கு தேங்க்ஸ்..

ஸாரி.. ஸ்மைலி போட்டுடறேன்..

Anonymous said...

//"பெருகும் தமிழ்க்'குடி'மகன்கள்-யாருக்கு இருக்கு கவலை?" //

உனக்கு குடிப்பழக்கம் இருக்கா? இல்லையா?

ஓசியிலே ஊத்தலேன்னு பதிவுல பொலம்புன உனக்கு இந்த பதிவு போட வக்கிருக்கா?

உண்மைத்தமிழன் said...

////Anonymous said...
//"பெருகும் தமிழ்க்'குடி'மகன்கள்-யாருக்கு இருக்கு கவலை?" //

உனக்கு குடிப்பழக்கம் இருக்கா? இல்லையா?

ஓசியிலே ஊத்தலேன்னு பதிவுல பொலம்புன உனக்கு இந்த பதிவு போட வக்கிருக்கா?////

ஐயா அனானி.. எனக்குக் குடிப்பழக்கம் கிடையவே கிடையாது..

எனது முந்தையப் பதிவில் நான் எழுதியது அந்த இடத்தில் தோன்றும் நகைச்சுவைக்காக..

அழைத்திருந்தாலும் பேசுவதற்காக உடன் சென்றிருப்பேன். தம்பி, அருமை உடன்பிறப்பு லக்கிலுக் அவர்களைப் போல 7-அப் குடித்துவிட்டுத் திரும்பியிருப்பேன்.

Anonymous said...

In your comments, instead of names of the bloggers, only smiley((:- appears.

Please correct it.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
In your comments, instead of names of the bloggers, only smiley((:- appears.

Please correct it.//

அனானி ஸார்.. புரிந்து கொண்டேன். நான் எந்தத் தோரணையில் சொல்கிறேன் என்பதை சக தோழர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற பரஸ்பர நம்பிக்கையில்தான் அப்படி வெறுமனே செய்தேன்.

அனைவரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்தான். எனக்கும் தெரியும். தாங்கள் யாரோ? எவரோ? வருமுன் உரைத்திருக்கிறீர்கள். இனி அடுத்த முறை நீங்கள் சொன்னது போலவே ஸ்மைலி போட்டுவிடுகிறேன்.

ஆனாலும் இவ்ளோ பெரிய விஷயத்தை ஒரிஜினல் பேருடனேயே வந்து சொல்லியிருக்கலாம். எனக்கும் சந்தோஷமாக இருந்திருக்கும்.

லக்கிலுக் said...

உண்மைத்தமிழன்!

அருமையான பதிவு போட்டிருக்கிறீர்கள். இவ்வார பூங்காவில் இது நிச்சயம் இடம்பெறும் என்று நினைக்கிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்....

ரமணா கேப்டன் ஸ்டைலில் புள்ளிவிவரங்களில் பொளந்து கட்டியிருக்கிறீர்கள்....

சிறு விண்ணப்பம் : மேலே செந்தழல் ரவி பெயரில் போடப்பட்டிருக்கும் கமெண்டு போலி செந்தழல் ரவியுடையது. எனவே அக்கமெண்டை டெலிட் செய்துவிடுங்கள்.

நன்றி....

அன்புடன்
லக்கிலுக்

உண்மைத்தமிழன் said...

//லக்கிலுக் said...
உண்மைத்தமிழன்!

அருமையான பதிவு போட்டிருக்கிறீர்கள். இவ்வார பூங்காவில் இது நிச்சயம் இடம்பெறும் என்று நினைக்கிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்....

ரமணா கேப்டன் ஸ்டைலில் புள்ளிவிவரங்களில் பொளந்து கட்டியிருக்கிறீர்கள்....

சிறு விண்ணப்பம் : மேலே செந்தழல் ரவி பெயரில் போடப்பட்டிருக்கும் கமெண்டு போலி செந்தழல் ரவியுடையது. எனவே அக்கமெண்டை டெலிட் செய்துவிடுங்கள்.//

ஐயையோ.. உண்மைத்தமிழனுக்கு வெடி வைக்கிறதுக்குன்னே நாலு பேர் இருக்காக போலிருக்கே.. bloggers name badge-ஐ check செய்து விட்டுத்தான் நான் ஒவ்வொரு பின்னூட்டத்தையும் போடுகிறேன். இது சரியாக செந்தழலலாரின் பாசறைக்குள் நுழைந்ததால் பின்னூட்டம் இட்டேன். இதுவும் போலியா?

அப்பப்பா.. இவுகளையெல்லாம் புடிச்சு கார்கிலுக்கு அனுப்பணும்.. ஊடுறுவறதுக்கு கரெக்ட்டா இருக்கும்..

தம்பி லக்கிலுக்.. நல்ல சமயத்துல வந்து உதவினதுக்கு நன்றி..

எனக்கே சந்தேகம்தான்.. ஏன்னா செந்தழலலார் மட்டும்தான் என்னை கரீக்ட்டாப் புரிஞ்சு வைச்சிருக்கார்ன்னு நினைச்சிக்கிட்டிருக்கேன். அவரா எழுதியிருப்பாருன்னு..

ம்.. எல்லாம் 'மொங்குச்சனி' செய்ற வேலை..

Thamizhan said...

தமிழ்க்குடி மக்கள் நினைவில் கொள்ள வேண்டியது:

முதலில் நீ குடிப்பாய்,
பின் குடி குடிக்கும்,பின்
குடி உன்னைக் குடிக்கும்.

உண்மைத்தமிழன் said...

//Thamizhan said...
தமிழ்க்குடி மக்கள் நினைவில் கொள்ள வேண்டியது:

முதலில் நீ குடிப்பாய்,
பின் குடி குடிக்கும்,பின்
குடி உன்னைக் குடிக்கும்.//

தமிழன் ஸார்.. வருகைக்கு மிக்க நன்றி..

இதை நானும் ஆமோதிக்கிறேன்.. எவ்வளவோ எழுதியும் திருந்த மாட்டேங்கிறாங்களே ஸார்..

Anonymous said...

http://www.maalaisudar.com/2604/hed_news_5.shtml

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத் துக்கு பதிலளித்து கருணாநிதி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: கள்ளச்சாராயம் என்பது ஒழிக்க முடியாதது ஆகும். காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சி என்று கூறுகிறீர்களே அவருடைய ஆட்சியிலேயே ஒழிக்க முடியவில்லை.
காந்தி பிறந்த போர்பந்தரில் அவரது வீட்டுக்கு அருகே பெரிய கிணறு தோண்டி கள்ளச்சாராயம் காய்ச்சியுள்ள தாக நாடாளு மன்றத்திலேயே பிரதமர் இந்திராகாந்தி வருத்தப்பட்டார். அப்படியுள்ள கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க முடியவில்லை. காரணம், உலகில் நிலவிவரும் பண்பாடுதான்.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால், நல்ல சரக்குக ளாக உற்பத்தி செய்து விற்பனை செய்தால் மட்டுமே ஓரளவு அதை கட்டுப்படுத்தலாம். பாமகவினர் கேட்டுக்கொண்டதைப் போல மது விலக்கு திட்டத்தை கொண்டு வந்து விடலாமா என்று நான் ஒருகணம் யோசித்தது உண்டு. ஆனால் அப்படி கொண்டு வந்தால், 7 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்.

நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. மதுவிலக்கு திட்டத்தை செயல்படுத்தலாம் என்றால், டாஸ்மாக் கடைகளில் வேலை செய்பவர்களை என்ன செய்வது? கள்ளச்சாராயம் பெருகிவிட்டதாக அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் 134 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியாகியி ருக்கிறார்கள். 387 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் திமுக ஆட்சியில் ஒரே ஒருவர் தான் இறந்துள்ளார்.

அதற்காக கள்ளச்சாராயத்துக்கு நான் வக்காளத்து வாங்குவதாக நினைக்கக் கூடாது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். கள்ளச்சாராய குற்றத்துக்கு கடும் தண்டனை அளிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்

உண்மைத்தமிழன் said...

Anonymous said...
http://www.maalaisudar.com/2604/hed_news_5.shtml

//கள்ளச்சாராயம் என்பது ஒழிக்க முடியாதது ஆகும். காந்தி பிறந்த போர்பந்தரில் அவரது வீட்டுக்கு அருகே பெரிய கிணறு தோண்டி கள்ளச்சாராயம் காய்ச்சியுள்ள தாக நாடாளு மன்றத்திலேயே பிரதமர் இந்திராகாந்தி வருத்தப்பட்டார். அப்படியுள்ள கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க முடியவில்லை.//
ஏன் விபச்சாரத்தைக்கூடத்தான் ஒழிக்க முடியவில்லை. ஊர், ஊருக்கு விபச்சார விடுதிகள் தொடங்க அனுமதி கொடுக்கலாமே.. அதிலேயும் ஒரு 7000 கோடி வரியாக கிடைக்கும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அப்போதைய ஆளும்கட்சிக்காரர்களுக்கு மட்டும் விடுதி அமைக்க அனுமதி கொடுக்கலாம். அப்படி வரியாகக் கிடைக்கின்ற பணத்தில் கமிஷன் கிடைக்கும்படியாக காண்ட்ராக்டுகளை அள்ளி வீசி இன்னும் ஒரு பத்து தலைமுறைக்கு சொத்துச் சேர்க்கலாம்..

//கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால், நல்ல சரக்குக ளாக உற்பத்தி செய்து விற்பனை செய்தால் மட்டுமே ஓரளவு அதை கட்டுப்படுத்தலாம்.//
திருட்டி விசிடியை ஒழிக்க முடியவில்லை. நல்ல விசிடியைப் பாருங்கள் என்று அரசே உருவாக்கித் தரலாமே?
கஞ்சா, ஹெராயின், பிரவுன்சுகர் இவற்றையும்தான் ஒழிக்க முடியவில்லை. அரசே இதையும் விற்கலாமே.. இதிலும் வரி கிடைக்குமே.. இதிலும்..

//பாமகவினர் கேட்டுக்கொண்டதைப் போல மது விலக்கு திட்டத்தை கொண்டு வந்து விடலாமா என்று நான் ஒருகணம் யோசித்தது உண்டு. ஆனால் அப்படி கொண்டு வந்தால், 7 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்.//
பின்ன.. சொந்த வூட்டுக் காசுன்னு சொல்லில்லே இலவசத் திட்டங்களை அறிவிச்சிட்டிருக்காக.. இப்ப போய் 7 ஆயிரம் கோடி ஸ்வாகா ஆச்சுன்னா.. நம்ம முனியாண்டிக்கு ஒரு வேளை கறிச்சோறு, குவார்ட்டர் வாங்கிக் கொடுத்து நமக்கு ஓட்டுப் போட வைச்சு அப்புறம் வருஷம் முழுக்க நாம மட்டும் மூணு வேளையும் கறிச்சோறு எப்படி சாப்பிடுறது?

//நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. மதுவிலக்கு திட்டத்தை செயல்படுத்தலாம் என்றால், டாஸ்மாக் கடைகளில் வேலை செய்பவர்களை என்ன செய்வது?//
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். வேறு வேலை எங்களுக்குத் தெரியாது என்று.. ஒரு தலைமுறைக்கு அவரவர்களுக்கேற்றவாறு வேலை வாய்ப்பை உருவாக்கத் தெரியாத அரசுகள் இருந்தென்ன? போயென்ன?

//கள்ளச்சாராயம் பெருகிவிட்டதாக அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் 134 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியாகியி ருக்கிறார்கள். 387 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் திமுக ஆட்சியில் ஒரே ஒருவர்தான் இறந்துள்ளார்.//
பாவத்தில் குறைந்ததென்ன? பெரியதென்ன? முதன்முதலில் இதற்கான 'வழி'யை தமிழகத்திற்கு காட்டியது யாராம்? அவ்ளோ பெரிய பாவத்தைச் செய்துவிட்டு இந்த ஒரு சாவுக்கு பொறுப்பு ஏற்றால் என்ன? ஏற்காமல் போனால் என்ன?

//அதற்காக கள்ளச்சாராயத்துக்கு நான் வக்காளத்து வாங்குவதாக நினைக்கக் கூடாது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். கள்ளச்சாராய குற்றத்துக்கு கடும் தண்டனை அளிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.//
அரசு சாராயம் காய்ச்சலாம். ஆனால் மக்கள் காய்ச்சக் கூடாது. இதுதான் ஜனநாயகம்..

தமிழகத்தின் தலைவிதி.. வேறென்ன?

abeer ahmed said...

See who owns shoppingcustomer.co.uk or any other website:
http://whois.domaintasks.com/shoppingcustomer.co.uk