ஏப்ரல்-22 வலைப்பதிவர் கூட்டம்-வெளிவராத சில உண்மைகள்

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

வருடாவருடம்தான் ஏப்ரல் மாதம் வந்து செல்கிறது. அதிலும் 22-ம் தேதி என்பதும் வருகிறது.. சப்தமில்லாமல் கடந்து விடுகிறது. ஆனால் இந்த முறை அந்த ஏப்ரல்-22 எனக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல். ஏதோ ஒரு ஏஸி ரூமுக்குள்ள உக்கார்ந்து யாரோ, எவரோ எழுதினதுக்கு பின்னூட்டம் போட்டு நக்கல் பண்றோம். அவர் யாரோ? நாம யாரோ? அவர் கருப்பா? சிவப்பா? வெள்ளையான்னுகூடத் தெரியாது.. ஆனாலும் எழுத்தால் பேசிக் கொள்கிறோம்.

எப்படி இருப்பார்களோ என்ற எண்ணத்தில் இப்படி இட்டுக் கட்டி இட்ட இடுகைகளுக்கு மத்தியில் அவர்களை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற உற்சவத்தை துவக்கி வைத்தார் 'தலை' பாலபாரதி. நான் சிறுவனாக இருக்கும்போது "தீபாவளி அடுத்த மாதம் வருதே.." என்று காலண்டரைப் பார்த்து தற்செயலாக எனது அக்கா சொன்னபோது ஸ்கூல் பேகைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு அந்தப் புது டிரெஸ்ஸிற்காகவும், எனக்குப் பிடித்த ரவா உருண்டையை நினைத்தும் உற்சாகமிட்டது, ஏனோ அன்றைக்கு என் நினைவுக்கு வரத்தான் செய்தது.

அடுத்த இரண்டொரு நாட்களில் பின்னூட்டமிட்ட பதிவுகளில் எல்லாம் ஜாக்கிரதையாக ஒன்றுக்கு மூன்று முறை படித்துப் பார்த்து ஏதாவது அசம்பாவிதமாக எழுதியிருக்கேனா? எழுதித் தொலைந்துவிட்டால் நேரில் முகம் பார்த்து பேச முடியாதே என்ற நினைப்பில் பார்த்துப் பார்த்து எழுதினேன். அப்படியும் ஒரு பெரிய சறுக்கல் ஏற்பட்டு மரண அடி வாங்கி அதைத் தனிப் பதிவாகப் போட்டு அல்லல்பட்டதும் நடந்துவிட்டது.

இடையில் நடந்த சில அசம்பாவித நிகழ்வுகளால் வலையுலகமே இரண்டு பிரிவாகப் பிரிந்து மைக் இல்லாமல் பொதுக்கூட்டங்களை ஆங்காங்கே நடத்தத் துவங்க.. இந்த மீட்டிங் பற்றிய எதிர்பார்ப்பு சில நாட்கள் களையிழந்து போயிருந்தது. திடீரென்று நண்பர் தங்கவேலு, லக்கிலுக், இட்லிவடை என்று பலரும் சோர்ந்து போயிருந்த வலைத்தளத்திற்கு உற்சாகமூட்டுவதற்காக வலைப்பதிவர் சந்திப்பை தனிப்பதிவுகளாகப் போட்டுத் தள்ளினார்கள். 'தலை' பாலபாரதியும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு மீட்டிங் வேலையில் மும்முரமானார்.

கடைசி நிமிட கேன்வாஸாக தளபதி லக்கிலுக் 'தலை'க்காக என்னென்னமோ ஜிகினா, ஒட்டு வேலையெல்லாம் செய்தார். கூடவே டெல்லி மாநிலச் செயலாளர் திரு.சென்ஷி அவர்களும் ஒரு பதிவைப் போட்டு தானும் கட்சியில் இருக்கிறேன் என்பதைச் சொல்லிக் கொண்டார். கடைசி இரண்டு நாட்களிலும் மட்டற்ற, மாசற்ற உடன்பிறப்பு லக்கிலுக் SMS மூலம் மீட்டிங் பற்றி ஞாபகப்படுத்தினார்.

அந்த ஏப்ரல் 22-ம் வந்தது.. காலையில் இருந்து எனக்கு வீட்டில் கையும் ----------------காலும் -------------------.. Fill in the Blanks-ல் என்ன வார்த்தை இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே அதை எழுதவில்லை. மதியம் நேரில் சந்திக்க வரும்படி சொன்ன ஒரு சின்னத்திரை இயக்குநரிடம் சராமரியாக திட்டுக்களை வாங்கிக் கொண்டு "ஒரு முக்கியமான வேலை இருக்கு ஸார்.." என்று சொல்லித் தப்பித்தேன்.. "பிச்சையெடுக்கும்போது வருவீல்ல.. அப்ப வா.. பேசிக்கிறேன்.." என்றார் அவர். நமக்கு மீட்டிங் முக்கியமா? கதை டைப் செய்றது முக்கியமா? அதான் கிளம்பிட்டேன்..

2.45 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி 3 மணிக்கு நடேசன் முதலியார் பார்க்கிற்கு வந்து சேர்ந்தேன். 'அஞ்சாத உடன்பிறப்பு' லக்கிலுக் அரை மணி நேரத்திற்கு முன்பே வந்து தொலையும்படி அன்புடன் கேட்டுக் கொண்டிருந்தபடியால் முன்னாலேயே வந்தேன்.
வாசலில் பிச்சைக்காரர்களைத் தவிர வேறு யாருமில்லை.(பின்ன.. "புதிய உறுப்பினர் உண்மைத்தமிழன் அவர்களே வருக.. வருக.." அப்படீன்னு போஸ்டர் அடிச்சு, போர்டு வைச்சு, பேனர் கட்டி.. பூ போட்டு வரவேற்பாங்கன்னா நினைச்ச..?)

வாசலில் இருந்து 'கழகத்தின் கண்மணி' லக்கிலுக் அவர்களுக்கு போன் செய்தேன். "அப்படியே உள்ளே வந்துக்கிட்டே இருங்க ஸார்.." என்றார். உள்ளே சென்றேன். ஒரு மிஸ்டு கால். குனிந்து கைப்பேசியைப் பார்த்துவிட்டு நிமிர ஒரு கை என்னை நோக்கித் திரும்பி தன்னை நோக்கி வரும்படி பணித்தது. "யாரோ ஒருத்தர்" என்று நினைத்துக் கொண்டு அருகில் செல்லச் செல்ல.. அந்த மொட்டைத் தலையை எங்கயோ பார்த்தது போல் இருக்கிறதே என்று எனக்குள் சந்தேகம் எழுந்தது.

அருகில் சென்றவுடன் "வாங்க தலைவா.." என்று மொட்டைத் தலையிலிருந்து குரல் எழும்ப.. அட ஆண்டவா.. 'தலை'யேதான்.. 'தலை'ன்னு எதுக்குப் பேர் வைச்சோம். கொஞ்சமாச்சும் தலைல 'இருக்க' வேணாமா? இப்படி National Highways ரோடு மாதிரி மொட்டையடிச்சுட்டாரு.. "என்ன தலை?"ண்ணேன்.. "சும்மாதான் தலைவா.. எல்லாம் ஒரு சேப்டிக்குத்தான்.." என்றார் தலை. "எங்க திருப்பதியா..?" என்றேன்.. "என்ன நக்கலா? எல்லாம் இங்கனதான்.. அயனாவரம். ராயல் சலூன்.." என்றார்.(அடப்பாவி மனுஷா.. 'இங்கனதான் மொட்டை அடிக்கப் போறேன்'னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா நானே கத்திரியோட ஓடி வந்திருப்பனே.. எனக்காவது ஒரு நூறு ரூபா கிடைச்சிருக்குமே.. பொழைப்புல மண்ணை அள்ளிப் போட்டுதீரே..)
பக்கத்தில் தொண்டரணி வீரர் போல் அமர்ந்திருந்த ஒருவரைக் கை காட்டிய 'தலை' "இவர்தான் லக்கிலுக்.." என்றார். ஆத்தாடி.. உண்மையாகவே இவர்தாம்ல 'உடன்பிறப்பு'.. டிரெஸ்லகூட 'யூனிபார்ம்'லதான இருந்தார்னா பார்த்துக்குங்க.. எதிரில் இருந்தவரைக் காட்டி "இவர்தான் சிறில் அலெக்ஸ்.." என்றார். கை குலுக்கிக் கொண்டோம்.

'தலை'க்கு போன் மேல் போன் வரத் துவங்கியது.. "வேற யாரும் வரலியா..?" என்ற கேள்விக்கு தூரத்தில் ஒரு நான்கு பேர் உட்கார்ந்திப்பதைக் கை காட்டி "பாஸ்டன் பாலாவும், நடராசன் ஸாரும் வந்திருக்காங்க.. வருவாங்க.." என்றார் பாலா. திடீரென்று இன்னொருபுறத்தில் இருந்து ஒருவர் பளீரென ரின் சோப் & கோல்கேட் டூத்பேஸ்ட் விளம்பரத்தில் வரும் ஹீரோ போல் வந்தார். அருகில் வந்தவுடன் தானே முன் வந்து கை குலுக்கினார் "மா.சிவக்குமார்.." என்று.. ஆத்தி.. மென்மையா எழுதுவாரேன்னு நினைச்சா ஆளும் அப்படியேதான் இருக்காருன்னு நினைச்சேன்.

அடுத்து ஐயா இராம.கி அவர்கள் வந்தார்கள். "3.30 மணின்றது அதிகம். ஒரு 4, 4.30 மணின்னு வைச்சிருக்கணும்.." என்று தன் அபிப்ராயத்தைச் சொன்னார். "இல்லீங்கய்யா.. 3-ன்னு சொன்னாலே எல்லாரும் வந்து சேர்றதுக்கு 4 ஆயிரும். அதான்.." என்று சமாளித்தார் பாலா. அடுத்து 'இனமானப் பேராசிரியர்'(யார் யாரையோ சொல்லும்போது நம்ம ஐயாவைச் சொன்னா என்ன? குறைஞ்சா போச்சு)தருமி ஐயா அவர்கள் வந்து சேர்ந்தார்.

தொடர்ந்து தம்பி வினையூக்கி, நண்பர் பகுத்தறிவு, உங்கள் நண்பன் சரவணனும் வந்து சேர்ந்தார்கள். மணியும் 3.30 ஆனது.. சொல்லி வைத்தாற்போல் பாஸ்டன் பாலா குழுவினர் எழுந்து வந்து எங்களுடன் இணைந்தனர். 'தலை' "நான்தான் பாலபாரதி.." என்ற முன்னுரையுடன் உலகப் புகழ் பெற்ற.. 2007-ம் ஆண்டின் வலையுலக மாநாடு துவங்கியது.

முதலில் 'தேன்கூடு' நிறுவனர் இனியவர், நண்பர் திரு.சாகரன் அவர்களின் நினைவைப் போற்றும்வகையில் அவரைப் பற்றிய ஒரு புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து சாகரனின் மறைவுக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
"இன்னும் சிலர் வந்தவுடன் இப்போது இருப்பவர்களின் அறிமுகத்தை வைத்துக் கொள்ளலாம்.." என்று 'தலை' பாலபாரதி சொல்ல.. நிகழ்ச்சி நிரலின்படி முதலில் நண்பர் திருவாளர் சிறில் அலெக்ஸ் அவர்கள் "பெட்டகம்" குறித்து பேசத் துவங்கினார். நல்ல களையான முகம். அடிக்கடி செல்லமாக, சிணுங்கலாக சிரித்த சிறில் தான் அதிகம் கத்தி பேச முடியாத நிலையில் இருப்பதாகச் சொன்னார். "பரவாயில்லை.. கூர்ந்து கேட்கிறோம்.." என்று பாலா சொல்ல.. அப்படியே தனது சன்னமான குரலில் பேசத் துவங்கினார்.

இங்கனதாங்க உண்மைத்தமிழனை 'சனி' புடிச்சது. இந்த இடத்தில் வலையுலக மக்களுக்கு ஓர் உண்மையைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளான் உண்மைத்தமிழன்.
அது என்னவெனில் உண்மைத்தமிழனுக்கு ரெண்டு காதுமே 75 சதவீதம் அவுட்.. முக்காச் செவிடு.. நண்பர் சிறில் அலெக்ஸின் பேச்சைக் கூர்ந்து கேட்பதற்காக காதில் மாட்டியிருந்த ஹியரிங் எய்டில் சவுண்ட்டை கூட்டிப் பார்த்தும் ஒன்றும் கேட்கவில்லை. சரி.. இதுக்கு மேல கஷ்டப்பட்டால் வழக்கம்போல் தலைவலி வரும். அப்புறம் தொடர்ந்து காய்ச்சல் வரும்.. அப்புறம் திரும்பவும் 'டெசிபல்' குறையும். எதுக்கு வம்பு.. 'உண்மைத்தமிழா நிறுத்திட்டு வேற வேலையப் பாரு'ன்னு என் மண்டைக்குள்ள யாரோ உக்காந்து சொன்னாங்க பாருங்க.. அந்த ஒரு செகண்ட்தான் இந்தப் பதிவையே எழுத வைச்சிருக்கு..

நண்பர் சிறில் அலெக்ஸ் பேசத் துவங்கினார். பேசிக் கொண்டிருக்கிறார். உண்மைத்தமிழன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். அனைவரையும் பார்க்கிறான். எதையாவது செய்ய வேண்டுமே என்று எண்ணி சாகரனின் அஞ்சலி புத்தகம் முழுவதையும் படித்து முடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்க.. இப்போதும் சிறில் அலெக்ஸ் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

உண்மைத்தமிழனின் கண்கள் மரம் விட்டு மரம் தாவத் துங்க.. அங்கனதான் புடிச்சது நான் முன்னமே சொன்ன சனி.. தூரத்தில் ஒரு மரம்.. அந்த மரத்திற்கு கீழே ஒரு வாலிபன்.. அந்த வாலிபனின் அருகே குனிந்த தலை நிமிராமல் ஒரு யுவதி.. என்ன வயதோ? யாருக்குத் தெரியும்?(இப்ப இது ரொம்ப அவசியம்..) அந்த வாலிபன் எதையோ சொல்கிறான். யுவதிக்கு அது ஏற்புடையதாக இல்லை. மறுக்கிறாள் அதுவும் எப்படி? தன் முகத்தைக் கீழே தரையைப் பார்த்துக் கொண்டு தன் உடலை மட்டும் குலுக்கி..

சற்றுத் தள்ளியே அமர்ந்திருந்த வாலிபன் சற்று நெருக்கமாக வர சட்டென நிமிர்ந்த அந்த யுவதி தானும் சற்றுத் தள்ளிப் போக.. இரண்டாவது முறை நெருங்கி அமர்வதற்கான முயற்சியில் இருந்த வாலிபன் லேசான கோபத்துடன் யுவதியை முறைக்க.. அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பில் உண்மைத்தமிழன் இருக்க..

திடீரென்று ஒரு பெருங்குரல். அது நம் பாலாதான்.. "சிறில் ஸார்.. நீங்க சொன்னது சுத்தமா எனக்குப் புரியலை.. கொஞ்சம் விளக்கமாச் சொன்னா நல்லது.." - வெறுத்துட்டார்யா மனுஷன் சிறில்.. ஆனாலும் அசரவில்லை. மறுபடியும் விளக்கம் சொல்ல முற்படத் துவங்க.. பட்டென்று நம்ம கதை ஞாபகம் வர.. திரும்பி அங்கே பார்க்க..

அதற்குள் அங்கே சீனும் மாறியிருந்தது. அந்த யுவதி இப்போது தன் முகத்தைக் காட்டியபடியே எங்களைப் பார்த்தே அமர்ந்திருந்தாள். பக்கத்தில் அவளது காதலன் அமர்ந்து ஒண்ணாம் வாய்ப்பாடை ஒப்பிப்பதுபோல் கடகடவென பேசிக் கொண்டேயிருக்க.. அந்த யுவதியின் முகத்தில் ஏதாவது ஆக்ஷன் வேணுமே? ம்.. நரசிம்மராவ் மாதிரி மூஞ்சிய வைச்சுக்கிட்டு.. எனக்கு பார்க்கச் சகிக்கல.. அப்படியே கண்ணைத் திருப்புறேன்.. பக்கத்துல இன்னொரு காதல் ஜோடி..

இந்த செகண்ட் காதல் ஜோடி கொஞ்சம் டீஸண்ட்டான ஜோடி போல.. காதலனும் காதலியின் தோளில் கை போட்டு அவளைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்க அந்தக் காதலி 'வர மாட்டேன் போடா..' என்பதைப் போல் செல்லமாக சிணுங்கிக் கொண்டிருக்க.. எப்படியும் இழுத்துப் பிடித்துவிடுவேன் என்பதைப் போல் 'நம்மாளு' முயற்சி செய்ய.. முடிச்சிருவான்யா(நம்ம ஜாதிதான.. புத்தி தெரியாமய்யா போகும்..) என்று நான் நினைக்கும்போது.. திடீரென்று ஒரு பெரிய சப்தம்.. திரும்பிப் பார்த்தால் அண்ணன் பாஸ்டன் பாலா பேசத் துவங்கிவிட்டார்.

"பெட்டகத்துல.." அப்படின்னு பேசத் துவங்க.. திடீரென்று ஒரு கரிய உருவம்.. முகமே தெரியலை.. அதுல ஒரு கண்ணாடி வேற.. அருகில் வந்து அமர.. யோசித்தேன். எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே.. ஆஹா.. இது ஓசை செல்லா.. "நேத்துதான் நமீதா படம் போட்டு ஏன்யா ஊரைக் கெடுக்குறீங்கன்னு.." பின்னூட்டம் போட்டுத் தாக்கினோமே அவர்தானா? என்ற நினைப்பில் ஒரு வணக்கம் போட்டேன். அவரும் 'தலை'யின் அருகில் இருக்கானே.. சரி.. நம்மாளாத்தான் இருப்பான்னு நினைச்சு அவரும் ஒரு வணக்கத்தைப் போட்டு வைச்சாரு..

திடீர்ன்னு மா.சிவக்குமாரண்ணேன்.. கட்டுரை நோட்டு ஒண்ணுல வந்திருந்தவங்க பேர், Blogspot அட்ரஸ், போன் நம்பர் வேணும்னு கேட்டு ரவுண்ட்டுக்கு விட்டுட்டாரு.. அது ஒவ்வொருத்தர் கைக்கும் போயிட்டு வந்துக்கிட்டிருக்கு.. நம்ம கதைக்கு போவோம்..

திரும்பவும் மரத்துப் பக்கம் பார்த்தா.. முதல் ஜோடில யுவதி கொஞ்சம் இளகிட்டாங்க.. பின்ன பதினாறு பக்கத்தை ஒரே மூச்சுல ஒப்பிச்சிருக்கானே பயபுள்ளை.. ஆள் மயங்கிர மாட்டாங்க.. அப்படியொரு கிறக்கப் பார்வை போங்க.. பய செத்தான்.. அப்படியே ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கிட்டே கிடக்காக..

ரெண்டாவது ஜோடி.. இன்னும் கொஞ்சம் அந்நியோன்யமா நெருங்கிட்டாங்க.. எனக்குத் தெரிஞ்ச நாலு கைல யாருது எது.. எங்க வைச்சிருக்காங்கன்னு எனக்கே குழப்பம் வந்திருச்சுன்னா பார்த்துக்குங்க...

திடீர்ன்னு பாஸ்டன் பாலா தன் பேச்சை நிறுத்திவிட்டு "அங்க பாருங்க.." என்று சொல்லிப் பின்னால் கை காட்ட.. அனைவரும் திரும்பிப் பார்க்க நானும் பார்த்தேன். அங்கே ஒரு வயதான மனிதரை ஒரு நடுத்தர வயது மனிதர் கீழே தள்ளி பெண்டு நிமிர்த்திக் கொண்டிருந்தார்.. பாவம்..

பாலா இதைப் பார்த்தவுடன் "ஐயையோ.. யாருய்யா கூட்டிட்டு வந்தது" என்று டைமிங் ஜோக்(எப்படித்தான் வருதோ தெரியலை..) அடித்து கலகலப்பாக்கினார். அங்கேயிருந்த பூங்கா ஊழியர்கள் ஒரு வழியாக அவர்களைப் பிரித்துவிட பிரச்சினை, வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆனது.. (என்ன சண்டை என்பதை கடைசியில் வந்து படித்துக் கொள்ளவும்)

சரி.. திரும்பி நம்ம வேலைய பார்க்கலாம் என்று நினைக்கும்போது பாலா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். "இப்ப எல்லாருமே ஒருத்தொருக்கொருத்தர் அறிமுகமாகிக் கொள்ளலாமே.." என்றார். "சரி.." என்று அனைவரும் சொல்ல.. ஒவ்வொருத்தராக பெயரையும், Blogspot அட்ரஸையும் சொல்லத் துவங்க.. நான் படித்த பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் புதிதாக சேரும்போது மாணவர்கள் எழுந்து நின்று பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டது எனக்கு நினைவுக்கு வந்தது.

இதற்கே ஒரு ஐந்து நிமிடம் ஆனதா? அடுத்து கட்டுரை நோட்டில் பேர், அட்ரஸ், போன் நம்பர் எழுத வேண்டி வந்ததா? அதற்கொரு ஐந்து நிமிடம். யார், யார் என்று ஒவ்வொருவரின் முகத்தையும் நிமிர்ந்து பார்த்து பார்த்துத் தெரிந்து கொண்டேன்.. அப்பாடா இது போதும்.. இப்ப நம்ம வேலைய பார்க்கலாம் என்று பார்க்கத் துவங்க.. விதி வேறு ரூபத்தில் வந்து சேர்ந்தது.

இப்போது வந்தது கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரேயொரு பெண் பதிவர் இனிய சகோதரி பொன்ஸ் மூலமாக. அவர் திடுதிப்பென்று வந்து அமர்ந்திருக்க.. யார்.. என்று தெரியாமல் குழம்பிப் போனேன்.. இவராகத்தான் இருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் மேற்படி கதையை பார்க்க முடியவில்லை. காரணம் நான் எந்தத் திசையில் பார்க்கிறேனோ அதே திசையில்தான் அவரும் அமர்ந்திருந்தார்.

அனைவரும் கையெழுத்திட்ட கட்டுரை நோட்டைப் பார்த்து பார்த்து ஒவ்வொருவரையும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் பொன்ஸ். "சரி.. நாமதான் உண்மைத்தமிழன்னு தெரிஞ்சிருக்கும். ஏற்கெனவே அவுங்க விட்ட ஸ்கட் ஏவுகணைத் தாக்குதல்ல முதுகெலும்பு உடையறாப்புல செம அடி.. இப்ப இது வேறய்யா.. எப்படிய்யா அவுகளை மீறி அந்தப் பக்கம் பாக்குறதுன்னு ஒரு டவுட்டு.. சரி.. இப்ப விடுவோம். அப்புறமா பார்ப்போம்.." என்று நினைத்தேன்.
சரியாக அதே நேரம் ஓசை செல்லா பேசத் துவங்கினார்.கோவையில் தான் வலைப்பதிவர் முகாம் ஒன்றை நடத்த உத்தேசித்திருப்பதாக ஆரம்பித்தார். இப்போது பாலாவின் போனில் வலைப்பதிவு அன்பர்கள் பலரும் மாறி மாறி வந்து "அவர்கிட்ட கொடு.. இவர்கிட்ட கொடு.." என்று இன்ப டார்ச்சர் செய்ய பாலாவும் முகம் சுழிக்காமல் பலரிடமும் எழுந்து சென்று போனை கொடுத்துக் கொண்டிருந்தார். அப்படியொரு சூழ்நிலையில் சகோதரி பொன்ஸ¤ம் எழுந்து செல்ல.. நம்ம லைனுக்குப் போயிட்டேன்.

இப்ப என்ன நடக்குதுன்னா.. முதல், இரண்டாவது ஜோடியோடு மூணாவதா ஒரு ஜோடியும் சிக்குச்சு.. இந்த ஜோடியோட ஸ்பெஷலாட்டி என்னன்னா.. காதலி கையை தன் இடுப்பில் வைத்துக் நின்று கொண்டேயிருக்க.. காதலன் அவள் எதிரில் கையைக் கட்டிக் கொண்டு பவ்யமாகப் பேசிக் கொண்டிருக்கிறான். சரணாகதி போலும்.. பேசிக் கொண்டேயிருந்த காதலி திடீரென்று முன்னால் சென்று காதலனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள். என் கண்ணால் நம்பவே முடியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்று நான் ஆவலுடன் பார்க்க.. இங்கே அதற்குள்ளாக புதிது. புதிதாக நிறைய பேர் வந்து உட்கார்ந்திருந்தார்கள்.

அம்சமா பீமபுஷ்டி ஹல்வா போட்டோவில் பார்த்ததுபோல் ஒருவர் கண்ணாடி அணிந்து அமர்ந்திருந்தார். கையை நீட்டியவுடன் "நாமக்கல் சிபி.." என்றார். "அடடே.. பின்னூட்டத் திலகமாச்சே.." என்று நினைத்து என் பெயரையும் சொன்னேன். சிரித்துக் கொண்டார். பாலாவையும் திடீரென்று காணவில்லை. துணைக்கு அவர் அழைத்து வந்திருந்த ஒரு அனானி திடீரென்று சகோதரி பொன்ஸின் கேமிராவில் எங்களையெல்லாம் புகைப்படம் எடுக்கத் துவங்க..

வந்தது வந்தாச்சு.. போட்டாக்காச்சும் ஒழுங்கா போஸையாவது கொடுப்போம்னு நினைச்சு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு கேமிராவை பார்த்து ஒழுக்கமா இருந்தேனாக்கும்.. போட்டா முடிஞ்சுச்சா.. திடீர்ன்னு பாலா கைல தண்ணி பாட்டிலோட வந்தார்.. வெறும் மினரல் தண்ணிதாங்க.. கூடவே கொஞ்சம் தட்டை முறுக்கையும் வாங்கிட்டு வந்திருந்தார்.. ஆஹா.. முழு பாக்கெட்டையும் வாங்கி நானே சாப்பிடத் துவங்கினேன்.. நாமக்கல் சிபி "நாங்களும் இருக்கோமாக்கும்.." என்று சொல்லித் தான் வாங்கிச் சாப்பிடத் துவங்கினார்..

இடை இடையே வெண்குழல் பற்ற வைப்பதற்காக பாலாவைச் சிலர் தள்ளிக் கொண்டு போன கதையும் நடந்தது. தொடர்ந்து 'இனமானப் பேராசிரியர்' தருமி அவர்கள் பேசத் துவங்கினார். திடீரென்று புத்தனுக்கு ஞானதோயம் வந்ததைப் போல் எனக்கும் 'நம்ம கதை' ஞாபகம் வர கழுத்தைத் திருப்பினேன்.. இப்போது அடி வாங்கிய காதலன் இன்னும் கொஞ்சம் இளகிப் போய் கெஞ்சிக் கொண்டிருந்தான். அடித்த காதலி மெளனமாக அவனை முறைத்துப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள். (எம்புட்டு நேரம்..?)

இரண்டாவது காதலர்களில் காதலி கவிழ்ந்துவிட்டிருந்தார். பய 'கரெக்ஷன்' பண்ணிக்கிட்டிருந்தான்.. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. முதலாவது ஜோடிக்கு வந்தேன். அங்கே இப்பத்தான் நம்மாளு பிட் போட ஆரம்பிச்சிருந்தான்.. அவன் இழுக்க.. இவள் நழுவ.. அப்படியே மெதுவா தாவாங்கொட்டையைப் பிடிச்சு மெது மெதுவா இழுத்து பக்கத்தில் கொண்டு வர.. திடீரென்று என் அருகில் பெரும் சப்தம்.. பாலாதான்..

அவ்ளோ நேரம் 'இனமானப் பேராசிரியர்' பேசிக் கொண்டிருந்தார். "ஐயா அந்தப் பக்கம் போயிருவோம்.. பக்கத்து மண்டபத்துல யாரோ பாடுறாங்க.. சூஸைட் பண்ணிக்கலாம் போலிருக்கு.." என்றார் பாலா. சரி என்று அனைவரும் சொல்லி எழுந்து செல்ல.. என்னையும் யாரோ தூக்கிவிட்டது போல் தெரிகிறது. அப்படியே முன்னால் பார்த்தபடியே பின்னால் நடந்து வந்து "இங்கயே உக்காருங்க.." என்று ஒரு குரல் கேட்டு அமர்ந்துவிட்டுத் திரும்பிப் பார்க்கிறேன்.. ஐயா இராம.கி அவர்கள் என் அருகில்..

இனி என்ன பார்க்கிறது? என்ன செய்றது? தெய்வம்தான் இப்படியெல்லாம் சோதனையை நமக்கு வைக்குதுன்னு கிளியர்கட்டா நமக்குத் தெரிஞ்சு போச்சு. ஆனா எப்படியெல்லாம் வைக்குது பாருங்க.. எனக்கோ பெரிய சங்கடம்.. தப்பித் தவறி நான் பார்க்குறது ஐயாவுக்குத் தெரிஞ்சு போய்.. அவர் என்னைத் தப்பா நினைச்சு..(இப்ப மட்டும் என்ன நினைப்பாராக்கும்?) ஐயகோ என்று நினைத்து சிந்தை தடுமாறி.. குழப்பத்தில் ஆழ்ந்து காதல் மரங்களை ஓரக் கண்ணால் பார்க்கத் துவங்க..

இன்னொரு அடி தானாகவே வந்து விழுந்தது.. சகோதரர் தடாலடி கெளதம் நேராக என் அருகில் வந்து என் பின்னால் அமர்ந்துவிட்டார். அவருக்கும் எனக்குமான நட்பு ஐந்தாண்டு காலத்திற்கும் மேல் இருக்கும். அவர் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்ததே ஐம்பது ரூபாய் என்றாலும், அதில் இருபது ரூபாயை பிடுங்கிச் சென்ற நாட்களெல்லாம் எனது வாழ்க்கையில் உண்டு என்பதால் "சரி.. என்ன செய்றது.. ஒட்டு மொத்தமா சூனியத்தை இன்னிக்கு நம்ம மேல திருப்பிருக்கு சமயபுரம் ஆத்தா"ன்னு கொஞ்சம் மனசைத் தேத்திக்கிட்டு, வந்த வேலையைப் பார்ப்போம்னுட்டு கண்ணைத் திருப்பினேன்.

'இனமானப் பேராசிரியர்' திரு.தருமி ஐயா "உங்களைப் போன்ற இளைஞர்கள் மீது எனக்கு பெருத்த நம்பிக்கை உண்டு.." என்று தொடங்க.. மொத்தக் கூட்டமும் அவர் மீது பாய்ந்தது. 'தடாலடி' கெளதமும், இராம.கி. ஐயாவும் தருமி ஐயாவின் பேச்சில் சொக்கிப் போக.. நான் தாவி விட்டேன் மரத்தடிக்கு..
இப்போது சீன் கொஞ்சம் மாறியிருந்தது. முதல் ஜோடியின் யுவதி கொஞ்சம் காதலனுடன் ஒட்டிக் கொண்டு அவன் தோள்பட்டையில் சேர்ந்திருந்தாள். அங்கிருந்தும் தன் முகத்திற்கு 'டிரான்ஸ்பர்' செய்ய காதலன் நிறைய முயற்சிகள் செய்து கொண்டிருந்தான்.

இரண்டாவது ஜோடி எங்கய்யோயோயோயோ போயிட்டிருந்தாங்க.. மூன்றாவது ஜோடியில் இன்னமும் அந்தப் பெண் நின்று கொண்டிருக்க.. காதலன் மட்டும் சற்று அயர்ச்சியாக அருகில் இருந்த ஒரு திட்டில் அமர்ந்துவிட்டான். இருக்காதா பின்ன? என்ன அடி அது? கெஞ்சுகிறான்.. விஞ்சுகிறான்.. மிஞ்சுகிறான்.. ம்ஹ¤ம்.. அசையவில்லை அம்மணி..

முதல் காதல் ஜோடிக்குத் தாவியது என் கண்கள்.. இன்னும் மி.மீட்டர் தூரம்தான்.. 'சத்யா' படத்துல கமல், அமலாவுக்குக் கொடுப்பாரே இதே மாதிரி மரத்தடில.. (உண்மைத்தமிழா உனக்கு ஞாபகசக்தி அதிகமப்பூ..) டென்ஷனில் இருந்தேன் நான். திடீரென்று ஒரு சப்தம். "நான் என்ன சொல்றேன்னா ஸார்.." என்று இராம.கி. ஐயா அவர்கள் ஆரம்பிக்க.. திரும்பிப் பார்க்க வேண்டியதாகிவிட்டது..

இப்போது 'ஐயா'க்கள் இருவரும் பேசத் துவங்க.. நிமிடத்தில் ஒட்டு மொத்தமாக அனைவரின் 'கண்விழிப்பாப்பா'வில் நானும் விழுந்துவிட்டதால் ஒழுக்கமாக இருக்க வேண்டிய கட்டாயம் வந்தது.. "ஐயோ.. எப்ப முடிக்கப் போறாங்க"ன்னு பதற்றத்துல இருந்தா(என் டென்ஷன் எனக்குத்தான தெரியும்).

இராம.கி. ஐயா 'தினமலர், விகடன், தினமணி, தினத்தந்தி' என்று அனைத்துப் பத்திரிகைகளின் தனித்தனி டைப்பிங் methods பற்றிப் பேசி முடிச்சார் பாருங்க.. பட்டுன்னு தாவுனேங்க மரத்தடிக்கு. அங்க பார்த்தா.. 'புதிய பறவை' படத்துல சரோஜாதேவி 'சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டனே' பாட்டுல ஒரு shot-ல சிவாஜி குனிவாரு.. திரும்பி நிமிரும்போது 'என்னமோ' செஞ்சிட்ட மாதிரி தன் உதட்டை ஸ்டைலா துடைப்பாரு பார்த்தீங்களா.. அதான் அங்கேயும்.. வயித்தெரிச்சலா ஆயிருச்சு.. ஆனாலும் ஒரு வித்தியாசம்.. பய உதட்டைத் துடைச்சது யுவதியோட துப்பாட்டாவால.. ம்ஹ¤ம்.. 'உண்மைத்தமிழா நீ கொடுத்து வைச்சது அவ்ளோதான்'னு நினைச்சு ரெண்டாவது ஜோடியை பார்க்கப் போனேன்...

தீடிரென்று பீரங்கி வெடிக்கும் சப்தம். நம்ம ஓசை செல்லாதான்.. பின்னாடி நின்னுக்கிட்டிருந்தவருக்கு திடீர்ன்னு கோபம் வந்திருச்சு. "அதெப்படிங்க ஒருத்தருக்கு இவ்ளோதான் பின்னூட்ட எல்லைன்னு முடிவு செய்யலாம்...?" என்று பொங்கி எழ ஆரம்பித்துவிட்டார். ஆளாளுக்கு பேசத் துவங்க.. யார் என்ன பேசுறாங்கன்னு எனக்குப் புரியல சாமி.. ஓசை செல்லாவுக்கு கோபமோ கோபம்.. "இது வலைப்பதிவர்கள் மாநாடு.. தமிழ்மணத்தின் மாநாடு அல்ல.. தமிழ்மணத்துக்கு நீங்க சப்போர்ட் பண்ணணும்னா தனியா மாநாடு போட்டுப் பேசுங்க.." என்றார் செல்லா...

பேச்சு பின்னூட்டம் வராத பதிவர்களுக்கு பொறாமை, கடுப்பு, கோபம் என்றெல்லாம் பேச்சு போக சூடாகிவிட்டார் மா.சி. "அதெப்படி நீங்க அப்படி பேசலாம்.." என்று சட்டையைப் பிடிக்காத குறையாக பிடிபிடியென பிடித்துவிட்டார் மா.சி. "உங்களுக்குப் பின்னூட்டம் போடலைன்னா அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்? நீங்க மொத வாரம் பூனையைப் பாருங்க. நாயைப் பாருங்கன்னு வீடியோவை போட்டுட்டு அடுத்த வாரம் தாய்லாந்து நைட் கிளப் டான்ஸை போட்டா எந்தப் பதிவர் வந்து பார்ப்பாங்க.. யார் வந்து பின்னூட்டம் போடுவாங்க..?" என்றார் மா.சி. மா.சி. ஸார்.. நிசமாவே உங்களுக்கு திருஷ்டி சுத்திப் போடணும் ஸார். பிச்சுப்பிட்டீங்க போங்க..

ஏன்னா இந்த வலைப்பதிவர் கூட்டத்திலேயே உண்மைத்தமிழன் ஒரு நொடி பேசினது இந்த இடத்துலதான்.. "நான்கூட திட்டி பின்னூட்டம் போட்டேன் ஸார்.." என்று உண்மைத்தமிழன் வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கூட்டத்தில் தன் கன்னிப் பேச்சைப் பதிவு செய்தான் என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறான்.

"எனக்கு Writing-ஐவிட Visualதான் ஸார் அதிகம் பிடிச்சது.." என்றார் ஓசை செல்லா. இதற்கும் ஒரு ஏவுகணையை உடனே வீசினார் மா.சி. "அப்புறம் எதுக்கு ஸார் இங்க வந்தீங்க.. விஷ¥வல்தான் முக்கியம்னா நீங்க இங்க வந்திருக்கவே கூடாது. இங்க இருக்குறவங்க writers.." என்று ஆணித்தரமாக தன் வாதத்தை எடுத்து வைத்தார் மா.சி. "பெண் பதிவர்களும் நிறைய பேர் உங்க தளத்துக்குள்ள வர்றாங்க.. நீங்க இப்படி பண்ணா யார் பின்னூட்டம் போடுவாங்க..?" என்று மா.சி. 'உடன்பிறப்பாகவே' மாறி உணர்ச்சி பொங்க.. உள்ளன்போடு கண்டிப்பான குரலில் கேட்க.. இதை ஆமோதிப்பதைப் போல் சகோதரி பொன்ஸ், ஓசை செல்லாவை நிமிர்ந்து பார்க்காமலேயே 'ஆமாம்' என்று தலையாட்ட.. செல்லா அமைதியானார்.

கிடைத்த இடைவெளியில் மனம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏற.. எங்கே.. என்று தேட ஆரம்பித்தேன்.. இப்ப பாருங்க. முதல் ஜோடில எப்படியோ நைஸ் பண்ணிக் கவுத்துட்டான்யா நம்ம பய.. எவ்ளோ பிலிம் காட்டினாலும் எப்படியாச்சும் மயக்கிடறானுகளேயப்பா.. பலே கில்லாடிகப்பா நம்ம பய புள்ளைக.. இரண்டாவது ஜோடியில் ஒரு தலை மட்டுமே எனக்குத் தெரிந்தது.. இன்னொரு தலை எங்கே இருந்தது என்பதை சிபிஐ வந்துதான் கண்டுபிடிக்க வேண்டும் போல் இருந்தது.. மூன்றாவது ஜோடியில் இப்போது யுவதியும் கீழே உட்கார்ந்து கொள்ள.. அருகில் குனிந்து தலை நிமிராமல் யுவதியிடம் சரண்டர் ஆகிக் கொண்டிருந்தான் நம்மாளு.. "ச்சே.. இப்படியா இருப்பானுக.. நம்ம மானத்தை வாங்குறானுகப்பா சில பேரு.."

திடீரென்று கூட்டத்தில் சலசலவென ஒரு சப்தம்.. திரும்பிப் பார்த்தேன். உண்மைத்தமிழன் சும்மாவே உட்கார்ந்து நிறைய டயர்டு ஆகிவிட்டதால் (ஏதோ வட்டமா இருந்துச்சு.. சிப்ஸா..?) Snacks வந்தது. இதையும் முதல் ஆளாக வாங்கிப் பிரித்து சாப்பிடத் துவங்க..

இவ்ளோ நேரமும் மா.சிவக்குமார் பேசிக்கிட்டிருந்தாருப்பு.. கேட்க மறந்திட்டேன்.. தாலாட்டு மாதிரி இருந்துச்சு அவர் வாய்ஸ¤.. ஹி..ஹி.. சரி வயித்தை ரொப்பியாச்சு.. மேல பார்க்கலாமேன்னு பார்த்தா..

திடீர்ன்னு தடாலடி கெளதம் பேச ஆரம்பிச்சார்.. போதாக்குறைக்கு நம்ம தோள் மேல கை போட்டு மண்டிபோட்ட நிலையில் காதோரம் பேச ஆரம்பிச்சாரு.. எப்படி கவனிக்காமப் போறதுன்னுட்டு கொஞ்சம் நம்ம மரத்தடி கதையை ஒத்தி வைச்சுப்புட்டு கெளதம் சொன்னதைக் கேட்டனாக்கும்.. மக்கள் தொலைக்காட்சியில் வலைப்பதிவர்களின் அறிமுகம், அவர்களது படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்வது.. இணையதளத்தில் இலவசமாக இறக்குமதி செய்யும் இ-கலப்பையை பிரபலப்படுத்துவது பற்றியெல்லாம் பதினைந்து நிமிடம் பேசி நிறைய கை தட்டலை வாங்கிக் கொண்டு போனார்..

பேசி ஓய்ஞ்சாரா.. 'அண்ணா இந்தாங்கண்ணா'ன்னு சொல்லி என் கையில் இருந்த பாக்கெட்டை அவர் கையில் கொடுத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தா பின்னாடி சத்தமில்லா வந்து நிக்குறாங்க அண்ணன், தம்பி ரெண்டு பேர் கமுக்கமா சொல்றேன்.. நீங்களே புரிஞ்சுக்குங்க..
ஒருத்தர் ஒரு ஊர்ல மலைக்கோட்டை பக்கத்துல வீடு இருக்கு. இப்ப மெட்ராஸ்ல இருந்து 'நவீன'த்தைப் பத்திப் பேசுறவரு.. இன்னொருத்தரு 'நான் ரொம்ப விவகாரமான ஆளு'ன்னு உலகம் முழுக்கப் போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டு, இப்ப மெட்ராஸை கெடுக்கிறதுக்குன்னே முத்துநகர் எக்ஸ்பிரஸ்ல என்ஜின் ரூம்ல ஏறி எக்மோர் வந்து இறங்கினவரு.. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. 'அவருதான் இவரு..' 'இவருதான் அவரு'ன்னு நானும் மண்டையப் போட்டு பிச்சுக்கிட்டேன்..

நல்லவேளை.. 'ஓய்வறியாத உழைப்பாளி-ஒப்பற்ற செயல்வீரர்-கட்டி வா என்றால் வெட்டி வரும் இளம் வீரன்' லக்கிலுக் என் அருகில் வந்து எனது சந்தேகத்தைத் தீர்த்து வைத்தார். அவர்தான் இவரா.. சரி போய் பேசலாம் என்று நினைத்தால் அதற்குள் மீட்டிங் முடிந்துவிட்டதோ என்பதைப் போல் அவரவர்கள் எழுந்து நிற்கத் துவங்கினார்கள்.
ஐயையோ.. நம்ம குலத்தொழில் என்னாகுறதுன்னு எல்லாரையும் விலக்கிட்டு மரத்தடியைப் பார்த்தா.. முதல் ஜோடில யுவது நம்ம பயகிட்ட சரண்டராகி அவன் நெஞ்சுல தன் பிஞ்சு விரலால இந்தியா மேப்பை வரைஞ்சுக்கிட்டிருந்தாங்க.. இரண்டாவது ஜோடில இப்பத்தான் சூரியனைப் பாக்குறாப்புல அந்தப் பொண்ணு நம்மாளு மேல சாய்ந்து உட்கார்ந்து மேல பார்த்துக்கிட்டிருந்துச்சு.. இப்பவும் நம்மாளோட கை என் கண்ணுக்கு சிக்கலை.. மூணாவது இடத்துல இப்பவும் கர்ரு.. புர்ருதான்.. சட்டுப்புட்டுன்னு மேட்டரை முடிக்கத் தெரியாம முழிக்கிறான்பா பையன்..

அதுக்குள்ள பாலா வந்து "குங்குமம்' பத்திரிகைல இருந்து காவரேஜுக்கு வந்திருக்காங்க.. போட்டோவுக்கு போஸ் கொடுக்கணும்.. போட்டோல சிக்க வேணாம்னு நினைக்குறவங்கல்லாம் கொஞ்சம் ஒதுங்கிருங்க ப்ளீஸ்.." என்று சின்னப்புள்ளை மாதிரி கேட்டுக் கொள்ள.. ஒரு டீம் தனியே போக.. நான் மொதல்ல முன் வரிசைல நின்னு முகத்தைக் காட்டினேனாக்கும்.. போட்டால அம்சமா இருக்கப் போறது உண்மைத்தமிழனாத்தான் இருக்கும். போட்டா கிடைச்சாப் பாருங்க.. சட்டைப் பாக்கெட்ல இருந்து ஒரு வயர் போய் காதுல ஹியரிங் எய்டுல மாட்டிருக்கும்.. அவன்தான் உண்மைத்தமிழன்.. ஓகேயா?

தொடர்ந்து கெளதம் அண்ணன் கூட்டிட்டு வந்திருந்த 'மக்கள் டிவி'யோட ஒளி ஓவியர் எங்களோட அழகு முகத்தையெல்லாம் அப்படி அப்படியே சுட்டுத் தள்ளிக்கிட்டிருந்தார்.. உலகத்துலேயே முதல் முதல்லா டிவில வந்த வலைப்பதிவர்கள் நாங்கதானாக்கும்.. நன்றி கெளதம் அண்ணா.. நன்றி தலை..

போட்டோவுக்கு போஸ் கொடுத்த டீம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா தனித்தனியா போய் பேச ஆரம்பிச்சாக.. அவருதான் இவரான்னு நான் நினைச்சவர்ட்ட போய் மொதல்ல பேச ஆரம்பிச்சேன். "நீங்கதான் உண்மைத்தமிழனா.. சின்னப் பையனா இருப்பீங்கன்னு நினைச்சேன்.." என்றார். ஏன் சாமி.. என் எழுத்தைப் பார்த்தா அப்படியா தெரியுது.. வெக்கமா போச்சு போங்க.. பக்கத்துல அந்த முத்துநகர்காரரும் இருந்தாக.. அவர்கிட்டேயும் பேசினேனா..

விதி.. அந்தப் பக்கமா திடீர்ன்னு சகோதரி பொன்ஸ் வந்து நிற்க.. "இவர்தான் உண்மைத்தமிழன்னு" மில்லியன் டாலர் மேட்டரை படார்ன்னு போட்டு உடைச்சிட்டாரு நவீனம்.. ஐயா நவீனம்.. உங்க 'அன்பு'க்கு அளவே இல்லீங்களா ஐயா.. இப்படியா போட்டுக் கொடுக்கிறது? திக்குன்னு ஆயிப் போச்சு எனக்கு.. பொன்ஸ் ஏதாவது செஞ்சிரப் போகுதோன்னு.. "அப்படியா"ன்னு ஒரு சிரிப்போட நிறுத்திக்கிட்டாக. அதான.. நாலு பேர் முன்னாடியா அடிக்க முடியும்..? தனியா சிக்கலடா சாமி.. விட்டாப் போதும்னு ஒரே ஜம்ப்பா எதிர்ப் பக்கம் தாவிட்டேன்..

ஆனாலும் கண்ணு என்னமோ அந்தப் பக்கமே போய்கிட்டிருந்துச்சு.. ஆஹா இனியாச்சும் மீதிக் கதையைப் பார்ப்போம்னு நினைச்சா "நீங்க.." அப்படின்னு சொல்லி கை நீட்டினார் ஓகை நடராசன் ஸார்.. "உண்மைத்தமிழன்" என்றேன். "ஓ.. அது நீங்கதானா?" என்றவர் பேசத் துவங்க.. "நான் எங்க வேலை பார்க்குறேன்.. நீங்க எங்க வேலை செய்றீங்க.." இப்படியெல்லாம் பேசி முடிச்சிட்டுத் திரும்பினா..

மொத ஜோடில யுவதி எழுந்து நின்று "நேரமாச்சு.." என்று சிணுங்கிக் கொண்டிருந்தார்.. நம்மாளு "உக்காரு.. இருட்டினாத்தான் நமக்கு செளகரியம்.." என்று இழுக்க.. அங்கே ஒரு கபடி விளையாட்டு நடந்து கொண்டிருந்தது.

இரண்டாவது ஜோடில பையன் பொண்ணு மடில தலை வைச்சு படுத்திருக்கான்.. பொண்ணு அன்பா, ஆசையா அவன் தலைமுடியைப் பிடிச்சு இழுத்துவிட்டு(மவனே மாட்டுன.. இதே தலைமுடியைக் கொத்தாப் புடிச்சு திருகிறுவாங்க..) அன்பைப் பொழிந்து கொண்டிருந்தார்.

மூன்றாவது ஜோடி.. அதிசயமே நடந்துவிட்டது.. அந்த வாலிபனின் மடியில் யுவதி அமர்ந்திருந்தாள். அடப்பாவிகளா.. உங்களுக்கெல்லாம் சூடு, சொரணையே இல்லையாடா? கன்னத்துல அடியையும் வாங்கிட்டு மடியையும் காட்டுறீங்களேடா.. போலீஸ்ல அடி வாங்கினா மட்டும் மனித உரிமைக் கழகம், கோர்ட்டு, கேஸ¤ன்னு கேக்குறீங்க.. இதுக்கெல்லாம் கேட்க மாட்டீங்களா? என்னமோ போய்த் தொலைங்க.. உங்களாலதான் நம்ம மானம், மரியாதையெல்லாம் காத்துல பறக்குது.. வேறென்னத்த சொல்றது..?

மனசு வெறுத்துப் போச்சுங்க.. அப்படியே கூட்டத்தைப் பார்த்தா ஆளாளுக்கு ஒரு பக்கம் கூட்டமாக நிக்குறாக.. நான் மட்டும் தனியா அம்போன்னு நிக்குறேன்.. என்ன செய்றதுன்னே தெரியலை.. யார்கிட்ட போய் பேசுறதுன்னே தெரியலை.. சரி உண்மைத்தமிழா.. நீ இப்படியே மனம் போன போக்குல பின்னூட்டம் போட்டுக்கிட்டே இரு.. கடைசியா இப்படியேதான் இருக்கப் போறன்னு மனசு சொல்லிச்சா.. வருத்தத்தோட யார்கிட்ட போலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன்.

அதுக்குள்ள பாலா வந்து "வாங்க தலைவா.. காபி குடிக்கலாம்.. வாங்க.." என்று அன்பொழுக அழைக்க.. இடத்தைக் காலி பண்ணணுமான்னு யோசித்து சரி கடைசியா ஒரு வாட்டி பார்த்து சொல்லிட்டுக் கிளம்பலாம்னு பார்த்தா.. மொதல் ஜோடி ஜூட் விட்டுட்டாங்க.. ரெண்டாவது ஜோடி கிட்டத்தட்ட காணோம்.. ஆனா நல்லா உத்துப் பார்த்தா பார்ட்டிக ரெண்டுமே சிமெண்ட் தரைல பிளாட்டு.. மூணாவது ஜோடில பய இப்பத்தான் 'தேரோட்ட' ஆரம்பிச்சிருந்தான்.. "சிக்கிருச்சு.. ஓட்டுறான். உனக்கென்னடா..?" என்ற நினைப்போடு கூட்டத்தோட கூட்டமா வெளிய வந்தேன்..

வெளில வந்து பார்த்தா பாலா தலைமைல ஒரு டீமே வெண்குழல் பத்த வைச்சுக்கிட்டிருக்காக.. காபி இல்லேன்னுட்டாக.. சரி இருக்கிறதை கொடுங்கன்னு சொல்லி அஞ்சு ஜூஸை வாங்கி யார் யார் இருக்காகளோ அவுககிட்ட நீட்டினேன். சகோதரி பொன்ஸ் எனக்கு வேணாம்னுட்டாங்க.. ஆனா பாருங்க.. அவுக கொஞ்ச நேரம் கழிச்சு கொடுத்த எள்ளுருண்டை(அதுதான்னு நினைக்கிறேன்)யை நான் வாங்கிக்கிட்டேன். எப்பவும் உண்மைத்தமிழனுக்கு பரந்த மனசாக்கும்..

இங்கேயும் ஆள் மாத்தி ஆள் மொக்கையும், மட்டையும் போட ஆரம்பிச்சாக.. யார் யார் பேசிக்கிட்டிருக்காங்களோ அங்கேயெல்லாம் போய் நின்னு ஒரு ஸ்மைல் பண்ணிட்டிருந்தனா.. அப்பத்தான் பாக்குறேன்.. அந்த மொதல் ஜோடி கடையைத் தாண்டி நடையைக் கட்டிக்கிட்டிருந்தாக.. பொண்ணு மொதல்ல முன்னாடி போகுது.. பையன் பின்னாடி பத்தடி தூரத்துல யாரோன்னு நினைச்சு போய்க்கிட்டிருக்கான்.. நம்ம கண்ணுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் சிக்குதுன்னே தெரியலைப்பா..

ஒவ்வொருத்தரா கை குலுக்கிட்டு "வரேன்.." "வாரேன்.." "தேங்க்ஸ் தலை.." "தலை கல்யாணமாம்ல.. பத்திரம்.." "சொல்லியனுப்பு.. பாட்டிலோட வந்திர்றேன்.." என்றெல்லாம் அன்பொழுக பேசிவிட்டுக் கிளம்ப.. "ஒரு முடிவோடதான் வந்திருக்கீக.." என்ற 'தலை'யின் பேவரிட் வார்த்தையைக் கேட்டுவிட்டுக் கிளம்பினர் சிலர்.

கெளதம் அண்ணனை ஏற்றிக் கொண்டு டாட்டா சுமோ கிளம்ப.. முத்துநகர்காரரும், நவீனத்தையும் "வீட்டுக்கு வாங்க ஸார்.." என்றழைத்தேன். "வரோம்.. வரோம்ப்பூ.." என்று இருவரும் சொல்லி விடைபெற்றார்கள்.

நாமக்கல் சிபி "உண்மைத்தமிழன் என்ற பெயரில் நீங்க மட்டும்தான எழுதுறீங்க?" என்றார். "ஏனுங்கண்ணா உங்களுக்கு இந்தக் குழப்பம்?" என்றேன். "இல்ல.. இனிமே உங்க பேர்ல நாங்க எழுதலாம்ல..?" என்று கேட்டு அதிர்ச்சியடைய வைத்தார். 'ஆத்தி.. இனிமே நாம சுதாரிப்பா இருக்கணும்ப்பு' என்று நினைத்துக் கொண்டேன்.

ஓசை செல்லா ஒரு முறைக்கு மூன்று முறை நான்தானே உண்மைத்தமிழன் என்று உறுதி செய்து கொண்டு "கோவை மாநாட்டுக்கு கண்டிப்பா நீங்க வரணும்.." என்று அழைப்பு விடுத்து விடை பெற்றார்.

முத்துதமிழினியும், உடன்பிறப்பு லக்கிலுக்கும் "உங்களுக்கு பெரியார் மேல் ஏன் கோபம்..?" என்று ஆரம்பிக்க "அது இங்கே வேண்டாமே.." என்று பேச்சை திசை மாற்றினேன்.. "அதெல்லாம் முடியாது. நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகணும்" என்று முத்துதமிழினி சொல்ல சிரித்தே சமாளித்தேன்.

நாமக்கல் சிபி டீம் ஒரு யூனோ காரில் ஏறி செல்ல.. முத்துதமிழினி பைக்கில் ஏற லக்கிலுக்கும் ஒரு டீமும் தனியே கிளம்ப.. அப்புறம்தான தெரிஞ்சது.. (தாகசாந்தி.. ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடதா?) நான் மட்டும் தனியே..

சரி ஒரு மாசத்துக்கு ஒரு மொக்கை போடலாம்னு நினைச்சா மூணு மொக்கையை ஒரே மாசத்துல போடுற மேட்டர் கிடைச்சிருச்சேன்னு நினைச்சு என் 'மெர்சிடிஸ் பென்ஸான டிவிஎஸ் 50 XL' பக்கத்துல வந்து நிக்குறேன். அந்த ஆள் எதிர்த்தாப்புல வந்துக்கிட்டிருந்தான்.

யாரு? பாஸ்டன்பாலா பேசிக்கிட்டிருக்கும்போது பின்பக்கம் சண்டை வந்து அடி வாங்கினானே ஒரு ஆள். அவரேதான்.. வந்தார். பார்த்தார். எதிரில் இருந்த கார் கம்பெனி வாசலில் வந்து நின்றார். கார் டிரைவர்கள் இரண்டு பேர் "யோவ்.. ஒழுங்கா ஓடிரு.. அடிபட்டிருவ.." என்று கீழே கிடந்த கல்லைத் தூக்கிக் காட்ட என்னவோ ஏதோ என்று எனது பத்திரிகை புத்தியில் லைட் எரிந்தது.

அந்த ஆள் இடது புறமாக ஓடத் துவங்கியவுடன் மெதுவாக டிரைவர்களை அணுகி, "என்ன ஸார் மேட்டர்?" என்றேன். "அது எதுக்குங்க உங்களுக்கு..? விடுங்க.." என்றார் டிரைவர் ஒருவர். "இல்ல சும்மா சொல்லுங்க.. தெரிஞ்சுக்கணும்.. இவர் மதியானம் உள்ள வந்து ஒருத்தர்கிட்ட அடி வாங்கினாரு.." என்றதும் இருவருமே கலகலவென சிரித்தார்கள். "இன்னிக்கும் அடி வாங்கிட்டானா.. ஸார்.. இந்தாள் ஒரு மாதிரியான ஆளு.." என்றார் டிரைவர். "ஒரு மாதிரின்னா..? - இது நான். "ஒரு மாதிரின்னா? யாராச்சும் சிவப்பா இருந்துட்டா போதும்.. பக்கத்துல வந்து நிப்பான். அப்புறம் உரசுவான்.. அப்புறம் தொடைல கை வைப்பான்.." என்று சொல்லி நிறுத்திக் கொண்டு சிரிக்க..

புரிந்தது எனக்கு.. ஏதோ பெண்கள்தான் பட்டப்பகலில் தனியே நடமாட முடியலைன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. இப்ப ஆம்பளைங்களும் நடக்க முடியாதா? ஏப்பு.. தமிழ்நாடு ரொம்பவும்தான் முன்னேறிறுச்சுப்பு.. என்றபடியே வீடு நோக்கிக் கிளம்பினேன்..

பெட்டிச்செய்தி : வீட்டிற்கு வந்து தலைகாணியில் தலையை வைத்தவுடன்தான் ஒரு விஷயம் மூளையில் பளீரென வெளிப்பட்டது. சாகரன் பற்றிய அஞ்சலி புத்தகத்தின் பக்கங்கள் குறைவு என்றாலும் அதை அச்சடிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு ஐயாயிரம் ரூபாயாவது ஆயிருக்குமே.. 'தலை' எப்படி சமாளித்தார்..?

வலைத்தளத்தில் மட்டுமே நட்பு கொண்டு மரணித்த ஒரு மனிதருக்காக தன் உழைப்பில் ஒரு பெரும் பகுதியை ஒதுக்கிச் செலவிட்டு புண்ணியம் செய்த 'தலை'யே நீ வாழ்க..

அப்புறம் அந்த முறுக்கு, சிப்ஸ், தண்ணி பாட்டில், ஜூஸ்.. இதெல்லாம் யாருடைய செலவு என்பதே தெரியவில்லை. கொடுத்தார்கள் வாங்கினேன்.. முழுங்கிக் கொண்டேன். கேட்கவே இல்லை.. வந்துவிட்டேன். இப்போது நினைத்துப் பார்க்க எனக்கு வெட்கமாக இருக்கிறது.. ச்சே.. என்ன புத்தி இது? என்று என்னைத்தானே நொந்து கொண்டேன்..

'தலை' பாலபாரதி அவர்களே.. நீவிர் இருக்கும் அயனாவரம், விருகம்பாக்கத்திலிருந்து எந்தத் திசையில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.. இருந்தாலும் வீட்டு வாசலில் இருந்து குத்துமதிப்பாக ஒரு திசை நோக்கித் திரும்பி இரு கரங்களையும் தலைக்கு மேல் வைத்து ஒரு தேங்க்ஸ் சொல்கிறேன்.. நன்றி.. கோடானு கோடி நன்றி.. வாழ்க வளமுடன்.
"உங்களுக்குச் சீக்கிரம் கல்யாணமாகணும்..
நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கணும்..
ஒரே attempt-ல நாலு புள்ளைக பொறக்கணும்..
அவுகளோட நீங்க சந்தோஷமா வாழணும்.."

- இம்புட்டுத்தான் என் வேண்டுதலு.

கொசுறு நியூஸ் : அடுத்த மீட்டிங்கை மெரினா பீச்ல வை 'தலை'.. அப்பத்தான்.. உண்மைத்தமிழனுக்கு ரொம்பச் சவுகரியமா இருக்கும்..

இது கண்டிப்பா ஜாலிக்குத்தான்..
நிசமா மீட்டிங் மினிட்ஸ் புக்ல இருக்கிறதைப் படிக்கணும்னா இங்கல்லாம் போங்க..

41 comments:

உண்மைத்தமிழன் said...

அனானி அண்ணன்களா.. பின்னூட்டம் போடுறதுக்கு நீங்க ரொம்பக் கஷ்டப்படவெல்லாம் வேணாம்.. பதினெட்டு பக்கம் டைம் செஞ்சவனுக்கு கூட ரெண்டு பக்கம் டைப் செய்ய வலிக்குமா என்ன?

இதோ உண்மைத்தமிழனின் 'மனசாட்சி' ஒரு அனானியா பேசுது..

யாருக்கு எது பிடிக்குதோ அதை Copy, Paste பண்ணிட்டு 'ரிப்பிட்டூ' அப்படின்னு ஒத்த வார்த்தைல முடிச்சிட்டு நம்ம மேட்டரை குளோஸ் பண்ணிருங்க.. உங்களுக்கு டயமாவது மிச்சமாகும்.

1. ஏம்ப்பா உண்மைத்தமிழா.. உனக்கு 'உண்மை'யைத் தவிர வேற எதையும் எழுத வராதா? நீ போனது வலைத்தள கலைஞர்கள் மீட்டிங்குக்கு. ஆனா இங்க என்ன எழுதிருக்குற? ஏன்யா இப்படி கழுத்தை அறுக்குற?

2. யோவ்.. பார்த்துதான் பார்த்த.. பொத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான.. அதான் ஒருத்தருக்கு எட்டு பேர் பதிவ போட்டுட்டாங்கள்லே.. உனக்கெதுக்கு இந்த வேலை?

3. ஏண்டா செவிட்டு எழவு? எதுவுமே காதுல விழலைன்னா உனக்காக என்ன மைக்லயா பேச முடியும்.. கேக்கலைன்னா எந்திரிச்சு வீட்டுக்குப் போய் தொலைய வேண்டியதுதான.. நீ தின்ன முறுக்கையும், ஜூஸையும் வேற யாராவது சாப்பிட்டு, குடிச்சிருப்பாங்கள்லே.. எங்கிட்டிருந்துடா வந்துத் தொலையுறீங்க..?

4. ஏம்பா உண்மைத்தமிழா.. போற இடமெல்லாம் திட்டு வாங்கிட்டுத்தான் இருக்கற.. அப்புறம் ஏம்ப்பூ உனக்கு இந்த வெட்டி வேலை..? லக்கிலுக் ஒரு மரியாதைக்கு SMS அனுப்பினா உடனே நீ போயிடறதா? இப்ப பார்.. இம்புட்டு பெரிசா பதிவு போட வேண்டியிருக்கு.

5. ஏண்டா என்னமோ 'உண்மைத்தமிழனின் தன்னிலைவிளக்கம்'னு பெரிசா எட்டுப் பக்கத்துக்கு ஒண்ணு எழுதி பத்து நாளா மொத பக்கத்துலேயே வைச்சு அழகு பார்த்தியே.. இப்ப எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு பொன்ஸை பார்த்தேன்னு எழுதுற.. மண்டைல ஏதாவது இருக்கா இல்லையா?

6. சரி.. போனதுதான் போன.. அதான் 'நவீனம்' மாட்டிவிட்டுட்டாரே அப்படியே பேசித் தொலைஞ்சிருக்க வேண்டியதுதான.. தன்மானம் தடுத்திருச்சோ..?

7. உனக்கெல்லாம் என்னடா தன்மானம்? அதான் நீ கொடுத்த ஜூஸை வேணாம்னு சொல்லிட்டாங்கள்லே.. அப்புறம் என்ன எழவுக்கு அவுககிட்ட பிச்சைக்காரன் மாதிரி கை நீட்டி எள்ளுருண்டையை வாங்கிருக்க.. சோத்துல உப்பு போட்டுதான சாப்பிடுற.. மூதேவி.. மூதேவி..

8. ஏண்டா எழவெடுத்தவனே? பகுத்தறிவுன்னா என்னன்னு உனக்குத் தெரியுமா? பெரியார் யாருன்னு உனக்குத் தெரியுமா? கலைஞர் யாருன்னு உனக்குத் தெரியுமா? ஒண்ணுமே தெரியாம என்னத்துக்கு ஆங்காங்க போயி பின்னூட்டம் போடுற..?

9. டேய் உண்மைத்தமிழா.. அதான் உங்க ஊர்க்காரர் சுகுணாதிவாகர் 'மொக்கைத்தமிழன்'னு உன் புகழைப் பரப்பிட்டாரே.. அப்புறமென்ன அவர்கிட்ட கொஞ்சல் வேண்டிக்கிடக்கு? வெட்கமில்லாம அவர்கிட்டயே போய் "நான்தான் உண்மைத்தமிழன்"னு கையை நீட்டிருக்க.. த்தூ.. மனுஷனா இருந்தா மானம், ரோஷம், சூடு, சொரணை இருக்கணும்டா..

10. தருமி ஸார் பேசுனாங்க.. மா.சி. ஸார் பேசினாங்க. ஓகை ஸார் பேசினாங்க.. வந்திருந்தா எல்லாச் சொந்தக்காரங்களும் பேசுனாங்க.. பேச வேண்டிய ஆளு நீதானடா கபோதி.. அதை விட்டுட்டு எவன், எவ உதட்டைக் கடிக்கிறான். எவன் எவளை மடில போட்டுத் தாலாட்டுறான்னு ஒட்டுக் கேட்டுட்டு வந்து அதையும் பதிவா போட்டு மானத்தை வாங்குற பாரு.. டேய்.. தயவு செஞ்சு பேரை மாத்தி எங்க மானத்தைக் காப்பாத்துடா..

11. இதெல்லாம் தேவையா? பேசாம அந்த சின்னத்திரை டைரக்டர் கூப்பிட்டாரே.. போய் டைப் செஞ்சு கொடுத்திருந்தா ஒரு நாள் சாப்பாட்டு செலவுக்கு காசு கிடைச்சிருக்கும்ல.. புத்தி வேணும்ல..

12. டேய் உனக்கும் பொன்ஸ¤க்கும் தகராறுன்னா நேரா போய் பேசு.. உனக்கும், சுகுணாதிவாகருக்கும் பிரச்சினைன்னா ஆபீஸ் தெரியும்ல.. போய் மோத வேண்டியதுதான? திராணியிருக்காடா பொட்டைப் பயலே.. பேச வந்துட்டான்..

13. அதான் உன் உடன்பிறப்பு லக்கிலுக்கே "ஏன்யா இங்க வந்து தாலியறுக்குறேன்னு கேட்டுட்டாருல்லே.." அப்புறம் எதுக்கு அவருக்கு இம்புட்டு பட்டப் பேரு..? நிசமாவே எனக்கு ஒரு டவுட்டு.. லக்கிலுக் சொன்ன மாதிரி இத்தனை வருஷமா நீ கீழ்ப்பாக்கத்துல 'உள்ள' இருந்திட்டு வந்தியா?

14. டேய் உண்மைத்தமிழா தாலியறுக்கிறதுக்கும் ஒரு லிமிட் இருக்கு.. நீ எல்லை தாண்டிப் போயிட்டிருக்குறே.. இப்படியே போன.. மெட்ராஸ்ல தூக்கிட்டுப் போகக் கூட ஆள் இருக்காது.. ஜாக்கிரதை.. சொல்லிப்புட்டேன்..

சென்ஷி said...

மத்த எல்லோரும் சொன்னப்ப நம்பல.
ஆனா இப்ப நம்பறேன். நீங்க மேட்டர விட்டுட்டு மத்தத கரெக்டா பிடிக்கற ஆள் தான் :)

சென்ஷி

(பி.கு. தேவப்பட்டா எல்லாத்துக்கும் என்பேர்ல ரிப்பீட்டு போட்டுக்குங்க. காலையிலேந்து நான் ரொம்ப பிஸி)

சென்ஷி said...

பின்னூட்டபின் குறிப்பு : நான் போட்டத 15வதா சேத்துக்குங்க :)

சென்ஷி

அபி அப்பா said...

அடப்பாவி தமிழா முழுசா 40 நிமிஷத்தை ழுழுங்கிட்டியே! அலுக்காம போச்சுய்யா பதிவு:-))

லக்கிலுக் said...

தலைவா!

இந்தப் பதிவு ரொம்ப நீளமா? இல்லை அறுவையான்னு சொல்லத் தெரியல....

ஆனாலும் தெரியாத்தனமா முழுசா படிச்சித் தொலைச்சேன் :(

Anonymous said...

ஆத்தாடி எவ்ளோ பெரிசு. முடியல.

ஜோ/Joe said...

அருமை..ரொம்ப ரசித்தேன்.

பொன்ஸ்~~Poorna said...

மீட்டிங்க் மேட்டர் மட்டும் தான் படிச்சேன்.. ஆமாம் உங்களுக்கு என்ன பிரச்சனை?

1. மொதல்ல, நீங்க கொடுத்தது ஜூஸா? இல்லைன்னா fanta, மாதிரி குளிர்பானமா? ரெண்டுல எதுன்னு தெரியலை.. aerated drinks சாப்புடறதில்லை.. எனக்கு அடுத்தநாளே ஜுரம் வந்திடும். யாரோ காசு கொடுத்து வாங்கின ஜூஸை நான் கைல வாங்கலைன்னு இத்தினி பீலிங்க்ஸ் ஆவுறீங்க?

2. அந்த எள்ளுருண்டைக்குப் பதிலா அடுத்த சந்திப்புல கடலை உருண்டையா வாங்கியாந்திடுங்க..

நிம்மதியா வேலையப் பாருங்க.. ஒரு ஜூஸுக்கு இத்தினி டெம்ப்ளேட் பின்னூட்டமா?!!

//உனக்கும், சுகுணாதிவாகருக்கும் பிரச்சினைன்னா ஆபீஸ் தெரியும்ல.. ? //
அய்யோ பாவம் சுகுணா.. அன்னாருக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள் ;)

உண்மைத்தமிழன் said...

நன்றி சென்ஷி

நீங்கள் சொன்னது போல் நீங்கள் இட்டப் பின்னூட்டத்தை 15-வது அனானிகளுக்கான சுருக்க கமெண்ட்டாக நினைத்துக் கொள்ளும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

// அபி அப்பா said...
அடப்பாவி தமிழா முழுசா 40 நிமிஷத்தை ழுழுங்கிட்டியே! அலுக்காம போச்சுய்யா பதிவு:-))//

அப்பாடா.. என்னைத் 'தமிழன்'னு கூப்பிடுறதுக்கு ஒரு ஆள் கிடைச்சிருச்சு.. நன்றி அபிஅப்பா அவர்களே.. மிக்க நன்றி.. இது மாதிரி அடிக்கடி வாங்க..

//லக்கிலுக் said...
தலைவா!
இந்தப் பதிவு ரொம்ப நீளமா? இல்லை அறுவையான்னு சொல்லத் தெரியல....
ஆனாலும் தெரியாத்தனமா முழுசா படிச்சித் தொலைச்சேன் :(//

அருமை உடன்பிறப்பே.. நன்றி.. இன்னும் இரண்டு முறை தாங்கள் என் மீது மதிப்பளித்து படித்துப் பார்த்தீர்களானால் கண்டிப்பாக இது உங்களுக்குப் புரியும்.

//Anonymous said...
ஆத்தாடி எவ்ளோ பெரிசு. முடியல.//

அனானி இதுக்கே மலைக்குறீங்களே? இது மாதிரி இன்னொரு பெரிய மேட்டர் இரண்டொரு நாளில் வெளியாக இருக்கிறது. அதையும் படிக்கத் தயாராகுங்கள்..

//ஜோ / Joe said...
அருமை..ரொம்ப ரசித்தேன்.//

நன்றி ஜோ.. அடிக்கடி வாருங்கள்.. முதல் மேட்டரையே இவ்ளோ நீளமா படிக்க வைச்சதுக்கு என்னை மன்னிக்கவும்.

//பொன்ஸ்~~Poorna said...
மீட்டிங்க் மேட்டர் மட்டும் தான் படிச்சேன்.. ஆமாம் உங்களுக்கு என்ன பிரச்சனை?

1. மொதல்ல, நீங்க கொடுத்தது ஜூஸா? இல்லைன்னா fanta, மாதிரி குளிர்பானமா? ரெண்டுல எதுன்னு தெரியலை.. aerated drinks சாப்புடறதில்லை.. எனக்கு அடுத்தநாளே ஜுரம் வந்திடும். யாரோ காசு கொடுத்து வாங்கின ஜூஸை நான் கைல வாங்கலைன்னு இத்தினி பீலிங்க்ஸ் ஆவுறீங்க?

2. அந்த எள்ளுருண்டைக்குப் பதிலா அடுத்த சந்திப்புல கடலை உருண்டையா வாங்கியாந்திடுங்க..

நிம்மதியா வேலையப் பாருங்க.. ஒரு ஜூஸுக்கு இத்தினி டெம்ப்ளேட் பின்னூட்டமா?!!

//உனக்கும், சுகுணாதிவாகருக்கும் பிரச்சினைன்னா ஆபீஸ் தெரியும்ல.. ? //
அய்யோ பாவம் சுகுணா.. அன்னாருக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள் ;)//

எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.. நன்றாகவே இருக்கிறேன். மற்றபடி அனைவரின் மனதிற்குள் ஒளிந்து கொண்டிருப்பதைத்தான் நானே வெளியில் எடுத்துப் போட்டேன்.. அவ்வளவுதான்.. அடுத்த சந்திப்பில் கண்டிப்பாக கடலை உருண்டையுடன் வருகிறேன்.

சுகுணா ஸாருக்காக வருத்தம் வேண்டாம்.. அவர் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். நானும் அப்படியே.. வருகைக்கு நன்றி சகோதரியே..

நந்தா said...

மத்தவங்களுக்கு இது மொக்கையா என்னான்னு எனக்கு தெரியாது. ஆனா முழுசா 20 நிமிஷம் இதை ஒக்காந்து படிச்சு முடிச்சுட்டேன். அலுக்காம போச்சு.

இவ்ளோவ் பெரிய பதிவு போடறதுக்கெல்லாம் ஒரு தைரியம் வேணும்.

ஏண்டா லூசு மாதிரி சிரிக்கிற ன்னு என் கூட work பண்றவங்க கேக்கிறாங்க. அத்தனை தடவை சிரிச்சுட்டேன். அதுலயும் நீங்களே அனானியாக போட்டுக்கிட்ட பின்னூட்டம் டாப்.

உண்மைத்தமிழன் said...

//Nandha said...
மத்தவங்களுக்கு இது மொக்கையா என்னான்னு எனக்கு தெரியாது. ஆனா முழுசா 20 நிமிஷம் இதை ஒக்காந்து படிச்சு முடிச்சுட்டேன். அலுக்காம போச்சு.

இவ்ளோவ் பெரிய பதிவு போடறதுக்கெல்லாம் ஒரு தைரியம் வேணும்.

ஏண்டா லூசு மாதிரி சிரிக்கிற ன்னு என் கூட work பண்றவங்க கேக்கிறாங்க. அத்தனை தடவை சிரிச்சுட்டேன். அதுலயும் நீங்களே அனானியாக போட்டுக்கிட்ட பின்னூட்டம் டாப்.//

மன்னிக்க வேண்டும் நந்தா அவர்களே..

என் அருகாமையில் அமர்ந்திருந்தும் உங்களது பெயர் ஞாபகத்திற்கு வராமல் போய் விட்டது. விடுபட்டதற்கு மீண்டும் மன்னிக்கக் கோருகிறேன்.

அபி அப்பா முழுவதும் படித்து முடிக்க 40 நிமிடங்கள் ஆனது என்றார். நீங்கள் 20 நிமிடங்கள் என்கிறீர்கள். எனக்கு டைப் செய்யவே ஒரு நாளாகிவிட்டது. ஏனெனில் அடித்து, டைப் செய்து, மீண்டும் அடித்து என்று ஏகப்பட்ட திருத்தல்கள் செய்தேன்.

ஆனாலும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்கள் அந்தக் களைப்பை போக்கி விடுகின்றன. நன்றிகள் நந்தாவுக்கு..

நந்தா said...

நான் கொஞ்சம் சீக்கிரமா படிச்சிடுவேன். அதனாலயா இருக்கும்

அல்லது காமெடியா இருக்கிறதால, அபி அப்ப ரெண்டு தடவை கூட படிச்சிருக்கலாம்.

//
என் அருகாமையில் அமர்ந்திருந்தும் உங்களது பெயர் ஞாபகத்திற்கு வராமல் போய் விட்டது. விடுபட்டதற்கு மீண்டும் மன்னிக்கக் கோருகிறேன். //

அட விடுங்கப்பூ. இதெல்லாம் ஒரு மேட்டரா?

வினையூக்கி said...

:):):):)

Anonymous said...

Dubukku Said..

பதிவு நீளமாக இருந்தாலும் கொஞ்சம் கூட அலுக்காம போச்சு. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

உண்மைத்தமிழன் said...

//Dubukku Said..

பதிவு நீளமாக இருந்தாலும் கொஞ்சம் கூட அலுக்காம போச்சு. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.//

//Dubukku Said..

பதிவு நீளமாக இருந்தாலும் கொஞ்சம் கூட அலுக்காம போச்சு. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.//

அன்பார்ந்த Dubukku Sir, இது உங்களுடைய பின்னூட்டம்தான். அடுத்த பத்தியை நான் முழுவதுமாக எடிட் செய்துவிட்டேன். மன்னிக்கவும். காரணம் நீங்கள் எழுதியிருந்த பகுதியை நானே நீக்கி விட்டேன். ஆகவே அது தேவையில்லை என்றே கருதுகிறேன்.. ஆனாலும் தங்களுடைய ஆலோசனைக்கும், கருத்துக்களுக்கும் எனது நன்றிகள்..

பெயர் லேபிளில் வைக்கும்படி செய்து கமெண்ட்ஸை மட்டும் நீக்குவது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை. ஆகவேதான் இப்படி மாற்றினேன். சிரமத்திற்கு மறுபடியும் மன்னிக்கவும்.

வல்லிசிம்ஹன் said...

அப்பாடி,
தொண்டைத் தண்ணி வத்திப் போச்சுப்பா.
படிச்சு முடிச்சேன் இல்ல!!
படிச்ச்ட்டு,சிரிச்சுட்டு இப்படி ஒரு வியூபாஇண்டும் உண்டானு யோசிச்சு. முடிக்கலை....

Anonymous said...

எனது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்...

எதுக்கு....என்ன Sirன்னு கூப்பிடறதுக்கு...என்ன இருந்தாலும் நான் உங்கள விட ரெண்டு வயசு சின்னவன் தானே

உண்மைத்தமிழன் said...

//வல்லிசிம்ஹன் said...
அப்பாடி,
தொண்டைத் தண்ணி வத்திப் போச்சுப்பா.
படிச்சு முடிச்சேன் இல்ல!!
படிச்ச்ட்டு,சிரிச்சுட்டு இப்படி ஒரு வியூபாஇண்டும் உண்டானு யோசிச்சு. முடிக்கலை....//

தங்களது முதல் வருகைக்கு எனது நன்றிகள்.. அடிக்கடி வாருங்கள்..

உண்மைத்தமிழன் said...

//Dubukku said...
எனது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்...

எதுக்கு....என்ன Sirன்னு கூப்பிடறதுக்கு...என்ன இருந்தாலும் நான் உங்கள விட ரெண்டு வயசு சின்னவன் தானே//

"தம்பி.."

"தம்பி டொபுக்கு"

"டொபுக்கு தம்பி"

கூப்பிட்டுட்டேன் போதுமா? ஆமா.. கரெக்ட்டா என்னைவிட இரண்டரை வயசு கம்மின்னு சொல்றே.. நான் எங்கினாச்சும் என் உண்மையான வயசைச் சொல்லித் தொலைஞ்சிருக்கேனா? அட ஆண்டவா? எனக்கே மறந்து போச்சு..

சரி பரவாயில்லை. நீயாச்சும் இப்படி ஒரு பதிலைச் சொன்னியே.. சந்தோஷம்.. வாழ்க வளமுடன்..

குழலி / Kuzhali said...

நீங்கதாமப்பு ஒழுங்கா மீட்டிங் பற்றி எழுதியிருக்கிங்க, அல்லாரும் சொல்றது தான் மொத தடவையா இம்புட்டு பெரிய பதிவை இடைவெளி வுடாமா முழுசா படிச்சேன்....

Anonymous said...

வணக்கம் உண்மைத் தமிழன்,
கொஞ்சம் நீளமான பதிவுதான்..ஆனால் சுவாரசயம் அதிகம். ஓரளவு வலைப்பதிவர்களை தெரிந்ததால்...புரிந்து கொள்ள முடிந்தது. பல பகுதிகளை படித்த போது சிரித்தேன்..:)

உண்மைத்தமிழன் said...

நன்றி குழலி ஸார்.. உங்களுடைய வரலாற்றில் பின்னூட்டங்களுக்கு மட்டும் தனியே ஒரு bloggers தயார் செய்திருக்கிறீர்கள். இது எப்படி உங்களுக்குச் சாத்தியமானது? சொல்ல முடியும் என்றால் எனக்கும் சொல்லலாமே.. தெரிந்து கொள்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

தூயா அவர்களே.. தங்களின் முதல் வருகைக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..

Muthu said...

பதிவில் நான் சம்பந்தப்பட்ட பகுதியை தவறாக எழுதி உள்ளீர்கள்.இருந்தாலும் உங்கள் உடல் குறைப்பாட்டை முன்னிட்டு சகித்துக்கொள்கிறேன்.


நீங்க உண்மை தமிழன்னா நாங்க எல்லாரும் பொய் தமிழர்களா? :))என்னங்க இது? ( இது ஜோக்)

உண்மைத்தமிழன் said...

தவறையும் சேர்த்தே சொல்லியிருந்தால் உடனே திருத்தியிருப்பேன். தற்போதும் பாதகமில்லை. உடனே சொல்லவும். திருத்தம் செய்கிறேன். அதற்காக “சகித்துக் கொள்கிறேன்..” என்றெல்லாம் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்ல வேண்டாம் அண்ணாச்சி.. உண்மைத்தமிழன் பீலீங் ஆயிட்டான். நீங்களுமான்னுட்டு...?

உண்மைத்தமிழன் said...

அனானி தெய்வங்களே..

இது உங்களுக்கே நல்லாயிருக்கா? ஏதோ நீங்க இருக்கீங்கன்ற தைரியத்துல உங்களுக்கு எப்படி எழுதினா பிடிக்கும்.. எப்படியெழுதினா பிடிக்காதுன்னு மண்டையைப் போட்டு பிச்சுக்கிட்டு ராத்திரி 2 மணி வரைக்கும் உக்காந்து மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதினேன் சாமிகளா.. இப்படிக் கவுத்திட்டீங்களே.. ஒருத்தராச்சும் present ஆயிருக்க வேணாம்.. சரி விடுங்க..

இந்த அ.மு.க.காரங்க எங்க போயிட்டாங்க? ஒருத்தர் கூடவா ஆபீஸ்ல இல்லை.. அல்லாட்டி ஸ்டிரைக்கா? ஒட்டு மொத்த மெடிக்கல் லீவா? இல்லாட்டி கேஷ¤வல் லீவா?

எங்கே அனானி.. எங்கே அனானிகள்.. எங்கே தெய்வங்கள்..?

ச்சே.. இம்புட்டு எழுதியும் வேஸ்ட்டா போச்சே.. என் வயித்தெரிச்சல் உங்களைச் சும்மா விடாது அனானிகளே.. சும்மா விடாது.. சொல்லிப்புட்டேன்..

சுவாமி said...

Superஆன rendition. உங்க இயல்பான humilityயும் நகைச்சுவை உணர்வும் அநியாயமான combinationஆ இருக்கு. எவ்வளவு நேரம் எடுத்துச்சு????

பதிவை படிச்சுட்டு தான் தமிழ்மணம் badgeஐ பார்த்தேன். நீங்களுமான்னு தோணுச்சு. தமிழ்மணத்தை எதிர்ப்பவங்களும் சரி, ஆதரிச்சு badge போடறவங்களும் சரி, முதிர்ச்சி இல்லாத குழந்தைத்தனமான behaviourஆதான் படுது.

நல்ல பதிவுன்னு வாழ்த்துக்களோட முடிச்சிக்கிறேன்!!!

சுவாமி

Santhosh said...

தமிழன் கலக்கி எடுத்து இருக்கீங்க. பதிவு நீளம் தான் இருந்தாலும் அடுத்து இந்த ஆளு என்ன பண்ணி இருப்பாருன்னு என்னையவே யோசிக்க வெச்சிடிங்க.

உண்மைத்தமிழன் said...

//சுவாமி said...
Superஆன rendition. உங்க இயல்பான humilityயும் நகைச்சுவை உணர்வும் அநியாயமான combinationஆ இருக்கு. எவ்வளவு நேரம் எடுத்துச்சு????

பதிவை படிச்சுட்டு தான் தமிழ்மணம் badgeஐ பார்த்தேன். நீங்களுமான்னு தோணுச்சு. தமிழ்மணத்தை எதிர்ப்பவங்களும் சரி, ஆதரிச்சு badge போடறவங்களும் சரி, முதிர்ச்சி இல்லாத குழந்தைத்தனமான behaviourஆதான் படுது.

நல்ல பதிவுன்னு வாழ்த்துக்களோட முடிச்சிக்கிறேன்!!!//

நன்றி சுவாமி ஸார்.. முழுவதையும் டைப் செய்து முடிக்க ஒரு நாள்தான் ஆச்சு.. ஆனாலும் என் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஆங்காங்கே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கும் வந்திருச்சு..

தமிழ்மணத்துக்கு எதிர்ப்பு என்று எழும்புகிற குரல்களுக்கு பதிவு மூலமாகவோ, பின்னூட்டம் மூலமாகவோ பதில் சொல்லி எங்களது பொன்னா நேரங்களை வீணாக்க விரும்பவில்லை. எனவேதான்.. ஒரேயொரு பேட்ஜின் மூலமாக எங்களது ஆதரவைத் தெரிவித்துவிட்டு அடுத்தக் கட்ட வேலையைப் பார்க்கத் துவங்கியுள்ளோம்.

யோசித்துப் பார்த்தீர்களானால் தமிழ்மணத்தில் இடம் பெறும் ஒரு பதிவர் இந்தப் பிரச்சினை குறித்து கண்டிப்பாக ஏதோ ஒரு பக்கம் தனது ஆதரவை தார்மீக ரீதியாக வழங்கியே தீர வேண்டும். ஏனெனில் தமிழ்மணம் மூலமாகத்தானே தினந்தோறும் எங்களது படைப்புகள் வெளியிடப்படுகின்றன. அப்படியிருக்கும்போது இந்த விஷயத்தில் நடுநிலைமை வகிப்பது என்பது நம் வீட்டில் ஒரு பிரச்சினை வெடித்தால் நாம் கண்டு கொள்ளாமல் செல்வதற்குச் சமம்.

ஆகவே தங்களது 'குழந்தைத்தனமான behaviour' என்கிற வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மன்னிக்கவும். வருகைக்கு எனது இனிய நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

நன்றி சந்தோஷ்.. அடிக்கடி வந்திட்டுப் போங்க..

தருமி said...

என்னடா, நாமெல்லாம் குழு குழுவா நின்னு அரட்டை அடிச்சிக்கிட்டு இருக்கும்போது, எனக்கென்னன்னு ஒரு ஆளு மட்டும் புல்வெளியில படுத்துக்கிட்டு "எங்கேயோ" பாத்துக்கிட்டு படுத்துக்கிட்டு இருக்காரேன்னு பார்த்தேன். இப்பத்தான புரியுது உங்க 'பைனாக்குலர்' கண்ணு வ்ழியா எதப் பாத்துக்கிட்டு இருந்தீங்கன்னு .. பரவாயில்ல, உங்களுக்கு ரொம்ப நல்லாவே டைப் போயிருந்திருக்கும்போல .

அதுசரி, அந்த சந்திப்புக்குப் பிறகு இப்ப்வெல்லாம் அடிக்கடி 'சினிமா' பார்க்கறதுக்காகவே நடேசன் பார்க்குக்கு போயிடுறீங்களாமே, அப்படியா?

Anonymous said...

இதுவரை நான் படித்ததிலேயே நீண்ண்ண்ட பதிவு இதுதாங்னா...

பின்னவீனத்துவம் உங்க பிறவியிலேயே ஊறிக்கீதுன்னா...!!!!!

பின்னூட்டத்துக்கு வேற அ.மு.கவினருக்கு ஹிண்ட் ஆ ? முடியல...முடியல...!!!!

வெரி குட்..!!!

துளசி கோபால் said...

எழுதனது பூராவும்( மரத்தடி மேட்டர்ஸ்) உண்மைதானே?:-)))

உண்மைத்தமிழன் said...

தருமி said...

//அதுசரி, அந்த சந்திப்புக்குப் பிறகு இப்ப்வெல்லாம் அடிக்கடி 'சினிமா' பார்க்கறதுக்காகவே நடேசன் பார்க்குக்கு போயிடுறீங்களாமே, அப்படியா?//

இனமானப் பேராசிரியர் திரு.தருமி ஐயா அவர்களே.. நீங்கள் தெரிவித்தக் கருத்துக்களையும், என் காதுக்கு எட்டியவரைக்கும் பூங்காவில் கேட்டேன். பின்பு வலை அன்பர்கள் பலரும் எழுதியிருந்ததிலும் படித்துத் தெரிந்து கொண்டேன். எங்கள் மீது(நானும் இளைஞன்தான்) நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாத அளவிற்கு இந்த வலைத்தளத்தை பெருவாரியான தமிழ் மீது பற்றுள்ள மக்களிடம் கொண்டு செல்வோம் என்று உறுதியளிக்கிறேன்..

ஐயா.. உண்மைத்தமிழன் ரொம்ப நல்ல பையனுக ஐயா.. தியேட்டருக்குப் போய்தான் சினிமா பார்ப்பனே ஒழிய இந்த மாதிரி 'சினிமா'ல்லாம் பார்க்க மாட்டேனுங்க ஐயா.. அன்னிக்கு ஏதோ என் நேரம்.. அதான் எழுதியிருந்தனே ஐயா.. சனி.. 'மொங்குச்சனி'ன்னு நினைக்கிறேன்.. முக்கி எடுத்துச்சுருங்க..

ஐயா அடிக்கடி இது மாதிரி வந்துட்டுப் போயிட்டிருந்தீங்கன்னா இந்த மாணவனுக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கும். நன்றிங்க ஐயா..

உண்மைத்தமிழன் said...

//செந்தழல் ரவி said...
இதுவரை நான் படித்ததிலேயே நீண்ண்ண்ட பதிவு இதுதாங்னா...

பின்னவீனத்துவம் உங்க பிறவியிலேயே ஊறிக்கீதுன்னா...!!!!!//

செந்தழல் பிரதர்.. நான் நல்லாயிருக்கிறதும் உங்களுக்குப் பிடிக்கலியா? இப்பவே நான் எழுதறதை 'மொக்கை'ன்னுட்டாங்க. நீங்க ஒருத்தர்தான் 'பின்நவீனத்துவம்'னு சொல்றீங்க..

ஆமா.. அப்படின்னா என்னங்கண்ணா..? எனக்கு நெசமாவே தெரியாதுண்ணா.. தெரிஞ்சவங்ககிட்ட கேட்டாச்சும் கொஞ்சம் சொல்லுங்களேன்..

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
எழுதனது பூராவும்( மரத்தடி மேட்டர்ஸ்) உண்மைதானே?:-)))//

பின்ன 'பார்க்ல' யாராவது எழுதிக் கொடுத்ததுன்னா நினைச்சீங்க..? கை வலிக்க 29 பக்கம் எழுதி அதை 18 பக்கமா எடிட் பண்ணி ஏத்துணதுங்கோ.. ம்.. இவ்ளோ எழுதினப்புறம்தான் நீங்க என்னைப் பார்க்க உள்ள வந்திருக்கீங்க.. தேங்க்ஸ்.. தேங்க்ஸ்.. தேங்க்ஸ்..

rv said...

:)))))))))

உண்மையான தமிழன்னா நீங்கதான். வேண்டியத கரெக்டா நோட் பண்ணிகிட்டு வந்திருக்கீங்க...

உண்மைத்தமிழன் said...

இராமநாதன் said...
:)))))))))

//உண்மையான தமிழன்னா நீங்கதான். வேண்டியத கரெக்டா நோட் பண்ணிகிட்டு வந்திருக்கீங்க...//


'வயதுக்கு வந்த வாலிபர்' சங்கத்தின்(வ.வா.ச.) நிறுவனரே..

சத்தியமா நான் மீட்டிங்ல பேசத்தான் சாமி போனேன்.

அங்கன போய்தான்.. அதான் எழுதிருக்கனே சாமி.. சனின்னு.. சரி ஏதோ ஒண்ணு.. விடுங்க..

அதுக்காக நீங்க எதுக்காச்சும் கூப்பிட்டாம இருந்திராதீங்க.. அடிக்கடி வராமயும் இருந்திராதீங்க.. வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ¤ங்கோ..

Boston Bala said...

இது நம்ம தகவல் அறிக்கைங்க :)

Blogger Meets - Chennai & New Jersey

Anonymous said...

//பக்கத்தில் தொண்டரணி வீரர் போல் அமர்ந்திருந்த ஒருவரைக் கை காட்டிய 'தலை' "இவர்தான் லக்கிலுக்.." என்றார்.//


//இன்னொருபுறத்தில் இருந்து ஒருவர் பளீரென ரின் சோப் & கோல்கேட் டூத்பேஸ்ட் விளம்பரத்தில் வரும் ஹீரோ போல் வந்தார். அருகில் வந்தவுடன் தானே முன் வந்து கை குலுக்கினார் "மா.சிவக்குமார்.." என்று..//

//'இனமானப் பேராசிரியர்'(யார் யாரையோ சொல்லும்போது நம்ம ஐயாவைச் சொன்னா என்ன? குறைஞ்சா போச்சு)தருமி ஐயா//

//முதலில் நண்பர் திருவாளர் சிறில் அலெக்ஸ் அவர்கள் "பெட்டகம்" குறித்து பேசத் துவங்கினார். நல்ல களையான முகம். அடிக்கடி செல்லமாக, சிணுங்கலாக சிரித்த சிறில்//

//திடீரென்று ஒரு கரிய உருவம்.. முகமே தெரியலை.. அதுல ஒரு கண்ணாடி வேற.. அருகில் வந்து அமர.. யோசித்தேன். எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே.. ஆஹா.. இது ஓசை செல்லா..//

//அம்சமா பீமபுஷ்டி ஹல்வா போட்டோவில் பார்த்ததுபோல் ஒருவர் கண்ணாடி அணிந்து அமர்ந்திருந்தார். கையை நீட்டியவுடன் "நாமக்கல் சிபி.." என்றார்.//

//ஒருத்தர் ஒரு ஊர்ல மலைக்கோட்டை பக்கத்துல வீடு இருக்கு. இப்ப மெட்ராஸ்ல இருந்து 'நவீன'த்தைப் பத்திப் பேசுறவரு.. இன்னொருத்தரு 'நான் ரொம்ப விவகாரமான ஆளு'ன்னு உலகம் முழுக்கப் போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டு, இப்ப மெட்ராஸை கெடுக்கிறதுக்குன்னே முத்துநகர் எக்ஸ்பிரஸ்ல என்ஜின் ரூம்ல ஏறி எக்மோர் வந்து இறங்கினவரு..//

//'ஓய்வறியாத உழைப்பாளி-ஒப்பற்ற செயல்வீரர்-கட்டி வா என்றால் வெட்டி வரும் இளம் வீரன்' லக்கிலுக்//

உண்மைத்தமிழா என்ன இது? உள்ள வந்து ஒரு மாசந்தான் ஆச்சாம்ல.... அதுக்குள்ள இப்படியா? அது எப்படிய்யா இவ்ளோ தில்லா நக்கலடிச்சிருக்குற..? ம்ஹ¤ம்.. அடி வாங்காம நீ மெட்ராஸை விட்டுப் போக மாட்டன்னு நினைக்கிறோம்.. இங்க மொக்கை மட்டும்தான் போடுவாங்கன்னு நினைக்காத.. சமயத்துல மட்டையும் போடுவாங்க.. அப்புறம் உன் சொந்தக் காசுல உனக்கே சூனியம் வைப்பாங்க ராசா.. ம்.. பார்த்து நடந்துக்கப்பா..

abeer ahmed said...

See who owns bbc.co.uk or any other website:
http://whois.domaintasks.com/bbc.co.uk