உண்மைத் தமிழனின் தன்னிலை விளக்கம்

எனது இனிய வலைத்தமிழ் மக்களே..
வணக்கம்.
கடந்த மூன்று நாட்களாக நமது வலைத்தளம் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் சிக்கித் தவித்தது உங்களுக்கே தெரிந்திருக்கும்.
அதன் தொடர்ச்சியாக http://suttapons.blogspot.com/2006/11/blog-post_21.html என்ற வலைத்தளத்தில் நான் இட்ட பின்னூட்டத்திற்கு எனதருமைச் சகோதரி பொன்ஸ் அவர்கள் எனக்குக் கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

"'உண்மைத்(?!)'தமிழன்,

1. இந்தப் பதிவு மீள்பதியப்பட வில்லை. புதிய பின்னூட்டங்கள் மட்டுமே இப்போது பிரசுரிக்கப்படுகின்றன.
2. இங்கு நடந்த "நாடகத்தின்" ஒரு பக்கத்தை நீங்கள் சொல்லாமல் விட்ட பகுதி: தேன்கூட்டில் அந்த போலிப் பதிவைப் பார்த்ததாக ஆரம்பத்தில் சொல்லிய நீங்கள், ஆதாரம் திரட்ட நாங்கள் அணுகிய பொழுது உதவி செய்யாமல் எப்படி வசதியாகக் கழன்று கொண்டீர்கள் என்பதையும் எழுதியிருந்தால், இங்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

கடைசியாக, தயவு செய்து இனிமேல் என் பதிவுகளில் எந்தப் பின்னூட்டமும் இட வேண்டாம். இந்தப் பின்னூட்டத்துக்குப் பதில் சொல்வதானாலும் உங்கள் சொந்தப் பதிவில் எழுதுங்கள்..."
- பொன்ஸ்

மேலும் எனது தளத்திற்குள் சென்று பதிலளித்துக் கொள்ளும்படியும் தனது தளத்திற்கு இனிமேல் எக்காரணம் கொண்டும் வரவேண்டாம் என்றும் கதவடைப்பும் செய்துவிட்டார். இது நான் முற்றிலும் எதிர்பாராதது.
எனது தரப்பு நியாயங்களை உங்களிடம் இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.

//1. இந்தப் பதிவு மீள் பதியப்படவில்லை. புதிய பின்னூட்டங்கள் மட்டுமே இப்போது பிரசுரிக்கப்படுகின்றன.//

//2. இங்கு நடந்த "நாடகத்தின்" ஒரு பக்கத்தை நீங்கள் சொல்லாமல் விட்ட பகுதி: தேன்கூட்டில் அந்த போலிப் பதிவைப் பார்த்ததாக ஆரம்பத்தில் சொல்லிய நீங்கள், ஆதாரம் திரட்ட நாங்கள் அணுகிய பொழுது உதவி செய்யாமல் எப்படி வசதியாகக் கழன்று கொண்டீர்கள் என்பதையும் எழுதியிருந்தால், இங்கு பொருத்தமாக இருந்திருக்கும். //

அன்புள்ள பொன்ஸ் அக்கா அவர்களுக்கு,
நீங்கள் என் மீது சுமத்தியுள்ளவை மிகக் கொடுமையான கொலை குற்றச்சாட்டு என்று நான் கருதுகிறேன்.

நான் தேன்கூடு திரட்டியில் பார்த்தது "திரட்டி 'ஜி' என்ற பகுதியில். நான் இதை தற்செயலாகத்தான் பார்த்தேன். மேலோட்டமாகப் படித்துப் பார்த்த பிறகு 'இதை மற்றவர்கள் பார்க்கக் கூடாது.. முக்கியமாக தங்களுக்குத் தெரியக்கூடாது..' என்று நினைத்தேன். தெரிந்தால் நீங்கள் மனம் வருத்தப்படுவீர்களே என்றுதான் நான் கருதினேன்.

அதனால் உடனேயே அதே தேன்கூட்டில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பதிவிற்குச் சென்று என்னுடைய 'உண்மைத்தமிழன்' பெயரைப் பயன்படுத்தியே "வலையுலகத்தில் பலராலும் மதிக்கப்படும் மூத்த வலைப்பதிவர் பொன்ஸ் என்கிற பெண் பதிவரின் பெயரில் யாரோ ஒருவர் போலியான காமாக்கதைகளை உருவாக்கி வலைத்தளத்தில் விட்டுள்ளார்கள். இது உங்களது திரட்டி 'ஜி' பகுதியில் வந்துள்ளது. உடனே இந்த வலைத்தளத்தை தேன்கூட்டிலிருந்து நீக்கம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.." - இது போன்று வாசகங்களைக் கொண்டு தமிழில் டைப் செய்யப்பட்ட தகவலை அனுப்பினேன்.

அத்தோடு சரி.. அதற்குப் பிறகு அன்றைய பொழுதில் நான் தேன்கூடு இதழை பார்க்கவில்லை. மறுநாள்தான் பார்த்தேன். அதில் அந்தப் பதிவு இல்லை. நிம்மதியுடன் நின்று கொண்டேன்.நான் இதை வேறு யாரிடமும் சொல்லாமல் விட்டதற்குக் காரணம் பலரும் இதைப் பார்க்காமல் விட்டிருந்தால்.. ஒருவேளை நானே இதை பகிரங்கப்படுத்தியது போலிருக்குமே என்பதால்தான்.. இதில் எனது தவறு என்ன இருக்கிறது? நான் நினைத்தது சரிதானே..

அந்த நபர் யார் என்று உடனே கண்டுபிடித்து அவரைத் தண்டிக்க வேண்டும் என்று எனக்கு அப்போது எந்த விதத்திலும் தோன்றவில்லை. காரணம் எனக்கும் தெரியவில்லை. இதை மூடி மறைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குத் தோன்றியது. அதனால்தான் நான் அப்படிச் செய்தேன்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.. நான் உங்களை நேரில் பார்த்ததுகூட கிடையாது. பேசியது கிடையாது. வலையுலகில் அனைவருமே உங்களை 'அக்கா' என்று அழைப்பதால் நம்மைவிட வயதில் மூத்தவரோ என்று நானாகவே நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இதுதான் உண்மை.
நண்பர் பாலபாரதியிடம் ஒரு நாள், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டேன். 'பொன்ஸ் என்பவர் யார்?' என்றேன். "அவங்க விப்ரோ கம்பெனில வொர்க் பண்றாங்க தலைவா.." என்று மட்டுமே சொன்னார் பாலா. நானும் மேற்கொண்டு உங்களைப் பற்றி எதையும் கேட்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் நான் எப்படி அதை உங்களுக்குத் தெரியப்படுத்துவது? எனக்குச் சங்கடமாக இருந்தது. அதனால்தான் செய்யவில்லை. சங்கடத்திற்கு என்ன காரணம் என்று கேட்காதீர்கள்.. அது அவரவர் வளர்ந்து வந்த சூழ்நிலையால் உருவாகியிருக்கும் தனிப்பட்ட குணங்கள்.. நிற்க..

அந்த வலைப்பதிவு பிரச்சினை உங்களால் வெட்டவெளிச்சமாக்கப்பட்ட பிறகு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நண்பர் பாலபாரதி அவர்கள் போன் செய்து "என்ன தலைவா? ஒரு வார்த்தை அன்னிக்கே சொல்லிருக்கக் கூடாதா?" என்று கேட்டார். அப்போதும் நான் இதையேதான் அவரிடமும் சொன்னேன். "எல்லாரிடமும் எதுக்கு பரப்பணும்.. அதான் தேன்கூட்டுலேயே அடுத்த நாள்ல இருந்து வரலியே. வெளில தெரிஞ்சா அக்காவுக்கு சங்கடமாச்சே.." என்றேன். "வரலைன்னா.. அப்படியே விட்ரதா? தனியா போட்டுட்டிருப்பான்ல.. எதையாவது செஞ்சிருக்கணும் தல.." என்றார் பாரதி.

அடுத்த நாள் காலை மறுபடியும் போன் செய்து "தேன்கூட்டில் எந்த இடத்தில் பார்த்தீர்கள்? நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்றெல்லாம் கேட்டார் பாலபாரதி. நானும் சொன்னேன். "தேதியை சரியாகச் சொல்ல முடியுமா..?" என்று வினவினார். என்னால் சொல்ல முடியவில்லை. தேதியை நான் ஞாபகம் வைத்துக் கொள்ளவில்லை. ஆகவே, "ஒரு 10 நாளைக்கு முன்னாலன்னு நினைக்கிறேன்.." என்றேன். ஏனெனில் இதுதான் உண்மை. எனக்கு சுத்தமாக அன்றைய தேதி ஞாபகமில்லை. அடுத்து "நீங்கள் என்ன எழுதியனுப்பினீர்கள்..?" என்றார். நான் மேலே சொன்ன வாக்கியங்களை ஞாபகப்படுத்தி "இந்த மாதிரி.. இதே போல்தான் எழுதி அனுப்பினேன்.." என்றேன். மறுபடியும், "நீங்க அன்னிக்கே சொல்லிருந்தீங்கன்னா.. இவ்ளோ பிரச்சினை வந்திருக்காது.." என்று சொல்லி வருத்தத்துடன் போனை வைத்தார் பாலா.

நான் சுரதா.காமில் உள்ள Typing Space-ல் Type செய்து அதை TSC Font-க யூனிகோட் பார்முக்கு மாற்றி அதை Cut செய்து தேன்கூடு திரட்டியின் தகவல் பலகையில் கொண்டு போய் Paste செய்தேன். கவே இதை எனது கம்ப்யூட்டரிலும் Save செய்யவில்லை. எனவே நண்பர் பாலா கேட்ட உதவிகளில் என்னால் இவ்வளவுதான் செய்ய முடிந்தது.

ஆனால் நீங்கள் இப்போது "ஆதாரம் திரட்ட நாங்கள் அணுகிய பொழுது உதவி செய்யாமல் எப்படி வசதியாகக் கழன்று கொண்டீர்கள்.." என்று எழுதியிருப்பது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது.

உங்களை அவமானப்படுத்துவது போல் இருக்கும் ஒரு செய்தியை நான் தங்களிடம் காட்டாமல் போனதுதான் எனது தவறா? பத்து நாட்களுக்கு முன்பான தேதியை நான் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளாமல் போனது எனது தவறா? உங்களிடம் கேட்காமலேயே யாரிடமும் லோசனை செய்யாமலேயே தேன்கூடு திரட்டி நிர்வாகிகளுக்கு உங்களைப் பற்றிச் சொல்லி எனது கண்டனத்தைத் தெரிவித்தது எனது தவறா?

சகோதரியே.. நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். தேன்கூடு திரட்டியில் அடுத்த நாளே அந்த வலைத்தளம் இல்லை என்றவுடனேயே எனக்கு அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன். ஏனெனில் வலைத்தளத்தில் என்னுடைய அனுபவம் குறைவு. உங்களுக்கே தெரியும். இதில் நான் எங்கே வசதியாகக் கழன்று கொண்டேன்?

நண்பர் பாலபாரதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் என்னால் முடிந்தவரையில் பதிலளித்தேன். இதுதான் உண்மை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நண்பர் பாலபாரதியிடம் கேட்டுக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னைப் புரிந்து கொள்ளுங்கள். நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. எதையும் மூடி மறைக்கவும் விரும்பவில்லை. யாரையும் காப்பாற்றவும் விரும்பவில்லை.

நண்பர் பாலபாரதி சொன்ன பிறகுதான் அந்த நபரின் பெயர் ஜெயராமன் என்பது எனக்குத் தெரிந்தது. அதுகூட பாலபாரதியின் வலைத்தளத்தில் பூடகமாக போட்டிருந்தது எனக்குப் புரியாமல் "யார்.. யார்.." என்று கேட்டு மீண்டும் மீண்டும் கமெண்ட்ஸ் செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக பாலபாரதியே எனக்கு போன் செய்து "அவர் பெயர் ஜெயராமன், கிண்டியில் உள்ள Alcatel கம்பெனியில் பணியாற்றுவதையும்" தெரிவித்தார்.

அதன் பிறகு இதையெல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறீர்கள் என்று நான் வினவியதற்கு "எனது தளத்திலேயே சில இணைய முகவரிகளைக் கொடுத்திருக்கிறேன். அங்கே சென்று பாருங்கள் தலைவா.. அவன் ஜாதகமே தெரியும்.." என்றெல்லாம் சொன்னார். அதே போல் நானும் மறுநாள் அந்தத் தளங்களுக்குள் சென்று அவரைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இதுதான் நடந்த உண்மை. நண்பர் பாலபாரதியின் தளத்திற்குள் நீங்கள் சென்று பார்த்தீர்களானால் நான் போட்ட பின்னூட்டமும், நண்பர் பாலபாரதியின் பின்னூட்டமும் இருக்கும்.

அடுத்து இந்தப் பதிவு பற்றியச் செய்திக்கு வருகிறேன். வெட்டியாய்ச் சுட்டவைகள் blog-ஐயே நான் நேற்றுதான் பார்த்தேன். அதில் 'நேற்று இன்று நாளை' என்ற பகுதியை படித்தேன். அதில் படித்ததில் இருந்து எனக்குத் தெரிந்தது நண்பர் திரு.ஜெயராமன் இதற்கு முன்பே பலருக்கும் போலிப் பதிவு பின்னூட்டம் போட்டு அனைவரின் மனதையும் கஷ்டப்படுத்தியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். திரு.ஜெயராமனே இதில் மன்னிப்பும் கேட்டு பின்னூட்டம் போட்டிருக்கிறார். அதையும் படித்தேன். கடைசியாக நண்பர் திரு.பெ.மகேந்திரன் அவர்கள் போட்டிருந்த பின்னூட்டம் நேற்றையச் சூழலுக்கு பொருத்தமாக இருந்ததாக எனக்குப் பட்டது. காரணம் கடந்த மூன்று நாட்களாக உங்களுக்கு ஓய்வில்லாத மன உளைச்சலைத் தந்த திரு.ஜெயராமனும், இந்த போலி ஜெயராமனும் ஒருவர்தான் என்று நான் நினைத்துவிட்டேன். இதுதான் நான் செய்த தவறு. கொஞ்சம் அவசரக் குடுக்கைதான். ஒத்துக் கொள்கிறேன். அவசரத்திற்குக் கொஞ்சம் காரணம் இருக்கிறது.

இவ்ளோ தூரம் இரண்டு நாட்களாக மூன்று பதிவுகளைப் போட்டு தகவல் அளித்த நண்பர் திரு.பாலபாரதி அந்த நண்பர் திரு.ஜெயராமன் நேரில் வந்து மன்னிப்பு கேட்டு, எழுதிக் கொடுத்தவுடன் 'மன்னிக்கலாம்' என்று சொல்லி பிரச்சினையை முடித்துவிட்டது நான் எதிர்பாராதது. அத்தோடு விட்டுவிடாமல் 'அவரையும் ஏப்ரல்-22 வலையாளர்கள் மீட்டிங்கிற்கு அழைக்கிறோம்' என்று சொல்லி ஒரு பதிவில் தெரிவித்திருந்தார். இது எனக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தது.

நேற்றுவரை வில்லனாக தெரிந்தவர் ஒரே நாள் இரவில் நண்பராவது அரசியலில்தான் நடக்கும். நாமுமா அப்படியிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எனது கருத்தை அதே பதிவில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டிருந்தேன்.

1. "தல.. நீங்கள் செய்ததும், சொல்வதும் மிகத் தவறு.

அந்த நபர் இனிமேல் யோக்கியவானாக தன்னைக் காட்டிக் கொண்டு பெண்ணுரிமையை பற்றியும், பெண் விடுதலையைப் பற்றியும், பெண் சுதந்திரத்தைப் பற்றியும் எழுதித் தள்ளப் போகிறார். நம் அனானிகள் அவருடைய ஜாதகம் தெரியாமல் அங்கே போய் ஜல்லியிடப் போகிறார்கள். மறுபடியும் என்றாவது ஒரு நாள் அவருடைய வலைத்தளத்தில் நாமே பின்னூட்டமிட வேண்டிய கட்டாயம் ஒன்றும் வரும்.. இதெல்லாம் தேவையா?

இவர் போன்ற ஆசாமிகளை வெளிப்படுத்தி அவர்களை ஒதுக்கி வைப்பதுதான் நமக்கு நல்லது. பெயரையும் சொல்லக் கூடாது.. வலைத்தளத்தையும் சொல்லக் கூடாது என்று சொல்லிவிட்டால் நாளை நம் வலையுலகத்திற்குள் வரும் புதியவர்களுக்கு அவரைப் பற்றித் தெரியுமா? ஏன் நல்லவர் போல் நடித்து நாளை வேறொருவரைப் பற்றி இதே போல் எழுத மாட்டார் என்பது என்ன நிச்சயம்?

முதலில் இவரை மாதிரி ஆட்களை நாம் ஒதுக்கி வைக்க வேண்டும். தண்டனையிலேயே மிகக் கொடிய தண்டனை 'புறக்கணிப்பு'தான்.. இனி இந்த ஆள் எந்த ரூபத்தில் எழுதினாலும் அங்கே யாரும் சென்று பின்னூட்டம் இடக்கூடாது.. ஏன் பார்க்கக் கூடக் கூடாது என்று நமக்குள் ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டால் நமக்கு நல்லது. நம்முடைய நேரத்தை இவர் போன்ற திருடர்களிடம் செலவிடக்கூடாது.

முதலில் பெயரையும், அவருடைய ஜாதகத்தையும் சொல்லி நம்முடைய புறக்கணிப்புத் தீர்மானத்தை கழகத்தின் பொதுக்குழுவிற்கு கொண்டு வந்து நிறைவேற்றுங்கள். புறக்கணிப்போம் இவர் மாதிரியான ஆட்களை..

அதோட என்ன.. என்ன.. ஏப்ரல்-22 சந்திப்புக்கும் அவருக்கு அழைப்பா..? தல.. எனக்கும் கோபம் மண்டை உச்சில நிக்குது.. அந்தாளை நேர்ல பார்த்தேன்.. அதுக்கப்புறம் நடேசன் முதலியார் பார்க்ல 'எது' நடந்தாலும் நீங்கதான் பொறுப்பு.."

ஆனால் இதற்குப் பதிலளித்த நண்பர் திரு.பாலபாரதி இதை முற்றிலும் மறுத்துவிட்டார். இதுவும் எனக்கு அதிர்ச்சியளித்தது. மேற்கண்ட பதிவில் இருக்கும் நியாயமான காரணத்தில் நான் இன்னமும் உறுதியாகவே இருக்கிறேன்.

இந்த நேரத்தில் உங்களுடைய 'நேற்று இன்று நாளை' என்கிற பதிவைப் படித்தவுடன் அந்த ஜெயராமன்தான் இந்த ஜெயராமனோ என்று நினைத்துவிட்டேன். முன்பு மன்னிப்பு கேட்க வைத்துவிட்ட கோபத்தால்தான் இந்த அளவிற்கு மோசமாக எழுதியிருக்கிறாரோ என்று நினைத்தேன்.

மேலும் ஒரு முறை தவறு செய்பவனை மன்னிக்கலாம். விட்டுவிடலாம். ஆனால் மீண்டும் அதைவிட பெரிய தவறை செய்பவனை மீண்டும் மன்னிப்பது என்பது தனிப்பட்ட விஷயங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். பொதுவான இது போன்ற வலைத்தளத்தில் ஊடுறுவி ஒருவரை அவமானப்படுத்தும் நபரை மீண்டும் நண்பர் என்று கட்டிக் கொள்வது என்பது நம்மை நாமே அசிங்கப்படுத்திக் கொள்வது போலாகும்.

இதில் வந்த போலி ஜெயராமன்தான் இந்த சல்மா அயூப் ஜெயராமன் என்பது உண்மையானால் நான் பாலபாரதியின் பதிவில் போட்டிருந்த மேற்கண்ட எனது ஆதங்கமும் சரிதான். நான் 'நாடகம்' என்று குறிப்பிட்டிருந்தது தங்களது மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கணும் சகோதரியே.. மன்னிக்கணும்..

"கொஞ்ச நாட்களுக்காவது இந்த மாதிரி ஆட்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவையாவது எடுங்கள்.." என்று நண்பர் பாலபாரதியிடம் சொன்னேன். இதேபோல் தங்களது பதிவிலும் போட்டு தங்களுடைய பார்வைக்கும் போக வேண்டுமே என்று நினைத்தேன். அதற்குள் தாங்கள் அவரை மன்னித்துவிட்டதைப் போல் பின்னூட்டங்களில் படித்தேன். இல்லாவிட்டால் நண்பர் திரு.பாலபாரதி அவரையும் கூட்டத்திற்கு அழைப்பு விட்டிருக்க மாட்டாரே என்று நினைத்தேன்.

அதனால்தான் நான் 'நாடகம்' என்று வர்ணித்திருந்தேன். ஒரு முடிவை எடுத்தால் அது தனக்கு மட்டுமல்ல.. இனிமேல் வரக்கூடிய வாரிசுகளுக்கும் நன்மை பயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கின்ற முடிவுகள்தான் வெற்றி பெறும் என்பது எனது கருத்து.

தாங்கள் பெருந்தன்மையானவர், பரந்த மனதுடையவர். மன்னிக்கும் மனப்பாங்கு உடையவர்.. ஆகவே மன்னித்துவிட்டீர்கள். இனி இவர் நாளைய பொழுதுகளில் வேறு என்னெல்லாம் செய்ய மாட்டார் என்பதற்கு யார் உத்தரவாதம் தருவது? இவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தால் நான் இவரிடம் என்ன பேசுவது? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..

"மன்னிப்பு என்பது புறக்கணிப்பு என்கிற தண்டனையோடு தாருங்கள் என்பதுதான்.." எனது கோரிக்கை. இது எங்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சினை என்று நீங்கள் இப்போது சொல்வீர்களானால் இந்தப் பிரச்சினையில் தலையிட்டததற்காக கடைசி முறையாக நான் மன்னிப்பு கேட்டு இன்று முதல் உங்களிடமிருந்து முற்றிலும் விலகிக் கொள்கிறேன்.

ஆனால் தயவு செய்து என்னைத் தவறாக நினைக்க வேண்டாம்.. நான் நிஜமாகவே 'உண்மைத் தமிழன்'தான்.

நன்றி வணக்கம்.

6 comments:

லக்கிலுக் said...

உண்மைத் தமிழன் அவர்களே!

பட்டையக் கிளப்பிட்டீங்க. எப்படி இவ்வளவு மேட்டர்களை கோர்வையாக எழுதுகிறீர்கள் என்றே தெரியவில்லை. அருமை.

ஒரு சின்ன விளக்கம் வேண்டும். அந்த ஜெயராமன் தான் இந்த ஜெயராமனா? என்றெல்லாம் கேட்டிருக்கிறீர்கள். எந்த ஜெயராமன் தான் இந்த ஜெயராமன் என்பதை விளக்க முடியுமா?

நேற்று இன்று நாளையில் வந்த ஜெயராமன் சல்மா ஜெயராமன் இல்லையென்றால், சல்மா ஜெயராமன் எந்த ஜெயராமன். இல்லையென்றால் சல்மா ஜெயராமனும், நேற்று இன்று நாளையில் வந்த ஜெயராமனும் ஒன்றா.

இரு ஜெயராமனும் வேறு வேறா. அல்லது இருவரும் ஒருவரா. இல்லையேல் சல்மா ஜெயராமன் ஒருவர், நேற்று இன்று நாளை ஜெயராமன் ஒருவர், போலி ஜெயராமன் ஒருவர் என்று மூன்று பேர் இருக்கிறார்களா?

எனக்கு தலை சுற்றுகிறது. விளக்கவும்.

ரவி said...

மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் போல இருக்கிறது....சரியாகிவிடும்....எல்லாரும் டெங்ஷனாக இருக்கும் - இப்போதைக்கு கொஞ்சம் அமைதி...ஓக்கேவா...

உண்மைத்தமிழன் said...

//ஒரு சின்ன விளக்கம் வேண்டும். அந்த ஜெயராமன் தான் இந்த ஜெயராமனா? என்றெல்லாம் கேட்டிருக்கிறீர்கள். எந்த ஜெயராமன் தான் இந்த ஜெயராமன் என்பதை விளக்க முடியுமா?

நேற்று இன்று நாளையில் வந்த ஜெயராமன் சல்மா ஜெயராமன் இல்லையென்றால், சல்மா ஜெயராமன் எந்த ஜெயராமன். இல்லையென்றால் சல்மா ஜெயராமனும், நேற்று இன்று நாளையில் வந்த ஜெயராமனும் ஒன்றா.

இரு ஜெயராமனும் வேறு வேறா. அல்லது இருவரும் ஒருவரா. இல்லையேல் சல்மா ஜெயராமன் ஒருவர், நேற்று இன்று நாளை ஜெயராமன் ஒருவர், போலி ஜெயராமன் ஒருவர் என்று மூன்று பேர் இருக்கிறார்களா?//

லக்கிலுக் அண்ணே..

இது தெரிஞ்சிருந்தா நான் ஏண்ணே சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியாட்டம், வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறேன்..

இருவரும் ஒருவர் என்ற நினைப்பில்தான் அந்தப் பின்னூட்டத்தைப் போட்டேன்.. இப்போ..

ம்.. தேவையா எனக்கு?

அப்புறம் சகோதரி பொன்ஸ் எனக்கு தங்கையா? அக்காவா என்பதே எனக்குத் தெரியாது. இனிமேல் மேடம் என்று அழைத்துக் கொள்கிறேன். அதுதான் எனக்கு மரியாதை.. ஓகேவா?

உண்மைத்தமிழன் said...

//மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் போல இருக்கிறது....சரியாகிவிடும்....எல்லாரும் டெங்ஷனாக இருக்கும் - இப்போதைக்கு கொஞ்சம் அமைதி...ஓக்கேவா...//

முதல்முறையாக எனது வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த சகோதரர் செந்தழல் ரவி அவர்களுக்கு வணக்கங்கள். தங்களுடைய அறிவுரைக்கு எனது நன்றிகள்.. அமைதி காப்பதுதான் சிறந்த வழி என்று நானும் நினைக்கிறேன். அடிக்கடி வாருங்கள்..

Anonymous said...

//பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. //

முற்றிலும் உண்மை.

abeer ahmed said...

See who owns ea4nt.com or any other website:
http://whois.domaintasks.com/ea4nt.com