மெல்லிதயம் கொண்டோரே, மெழுகுதிரி ஏந்த மெரினாவிற்கு வாரீர்..!

20-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழீழப் படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை, பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்த நிற்கும்போது மிக வலிமையாக உணர்த்தும். எல்லாவற்றையும்விட நினைவேந்தல் செய்வது அம்மக்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. நிகழ்வை சூன்-26 உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.


கடந்த மே 18-ம் தேதி அன்று மெரினாவில் ஈழப் படுகொலைகள் நினைவாக மெழுகு திரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம்.ஒவ்வொரு கட்சியினரும் அமைப்பினரும் இனப்படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருந்தாலும், பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை அறிந்தோம்.

*பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு ஆதங்கம் இருப்பதையும் அறிய முடிந்தது. இந்தச் சூழலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை சாதி, மத, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.


இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரோடும் ஆலோசனை செய்தோம். ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதுவும் அனைத்து நண்பர்களாலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கான நாளாக ஜூன் 26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 26 அன்று நமது அஞ்சலியை செலுத்துவோம்.

இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச் செய்யுங்கள்.


இணையத்திலும் பல்வேறு கட்டங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும். Twitter Campaign எப்பொழுது தொடங்குவது என்பதை ஆலோசனை செய்து தொடங்குவோம். அதுவரை நீங்கள் அனுப்பும் ட்விட்டுகளில் #June26Candle என்னும் Hash Tag இணை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஈழத்தமிழின இனப்படுகொலை ஒளியேந்தல் வலையகம் http://candlelightfortamils.blogspot.com

lightacandlefortam...@gmail.com

lightacandlefortamils@googlegroups.com

http://groups.google.com/group/lightacandlefortamils

வேண்டுகோள் :

அன்புள்ளம் கொண்ட பதிவர்கள் அனைவர்க்கும் அன்பு வணக்கம்.. வரும் ஜூன் 26 அன்று மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் அஞ்சலி நிகழ்விற்கான வலைமனை பட்டை இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கிறது அதனை தங்கள் வலைத்தளத்தில் ஜூன் 26 வரைக்கும் வைத்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்..

மேலும் துண்டுப் பிரசுரத்திற்கான நகல் ஒன்றும் இணைத்துள்ளோம். அதனை தேவைபடுகிற அன்பர்கள் பயண்டுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள் : ஜூன் 26
நேரம் : மாலை 5 மணி
இடம் : மெரினா கண்ணகி சிலை

21 comments:

Kovaiminthan said...

Thank you for remembering this and help us

Anonymous said...

Please spread it.

http://tamizachi.com/index.php/a.html

ராஜ நடராஜன் said...

பதிவுகளை விட பின்னூட்டம்தான் எனது முதல் தேர்வு.அதுவும் உங்க மாதிரி பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

மெரினாவில் மெழுகுவர்த்தி ஏந்துவோரின் எண்ணிக்கைகள் அதிகரிப்பது நமது சகோதர,சகோதரிகளுக்கு மன வலிமை
சேர்க்கும் என்பதோடு மொத்த உலகுக்கும் சொல்லும் செய்தியாக அமையும்.

இயன்ற வரை இணைந்து கொள்வோம்.

M.Rishan Shareef said...

மஹிந்த ராஜபக்ஷ வாழ்க http://rishanshareef.blogspot.com/2011/06/blog-post_20.html

Muthukumara Rajan said...

do we need to bring Handles or They will provide (this is the first time i am coming for this type of event. Dont mistake me).

jayaramprakash said...

தகவலுக்கு நன்றி அண்ணா.இந்த பதிவை என் தளத்திலும் பதிவேற்றி உள்ளேன்.

சசிகுமார் said...

மறைந்து போன நம் சகோதரர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய அனைவரும் அஞ்சலி செலுத்துவோம். சகோதரர்களின் உயிரை தான் காக்க முடியவில்லை அஞ்சலியாவது செலுத்துவோம் அனைவரும் வாருங்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[Kovaiminthan said...

Thank you for remembering this and help us.]]]

எனது கடமைகளில் இதுவும் ஒன்று..!

உண்மைத்தமிழன் said...

[[[bull said...

Please spread it.

http://tamizachi.com/index.php/a.html]]]

பரப்புரை செய்தாச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

பதிவுகளை விட பின்னூட்டம்தான் எனது முதல் தேர்வு. அதுவும் உங்க மாதிரி பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

மெரினாவில் மெழுகுவர்த்தி ஏந்துவோரின் எண்ணிக்கைகள் அதிகரிப்பது நமது சகோதர, சகோதரிகளுக்கு மன வலிமை சேர்க்கும் என்பதோடு மொத்த உலகுக்கும் சொல்லும் செய்தியாக அமையும். இயன்றவரை இணைந்து கொள்வோம்.]]]

உங்களுடைய தொடர்ச்சியான பின்னூட்ட ஆதரவிற்கு நன்றி ராஜநடராஜன் ஸார்..!

உங்களை மாதிரியான ஒரு சிலர் இருப்பதால்தான் என்னைப் போன்றவர்கள் தனித்து இங்கு இயங்க முடிகிறது..

வந்தனம்..!

உண்மைத்தமிழன் said...

[[[எம்.ரிஷான் ஷெரீப் said...

மஹிந்த ராஜபக்ஷ வாழ்க

http://rishanshareef.blogspot.com/2011/06/blog-post_20.html]]]

பார்த்து, பத்திரமா, சூதானமா இருந்துக்குங்க ரிஷான்..!

உண்மைத்தமிழன் said...

[[[muthukumar said...

do we need to bring Handles or They will provide (this is the first time i am coming for this type of event. Dont mistake me).]]]

வரும்போது பெரிய மெழுகுவர்த்திகள் இரண்டை கையோடு வாங்கி வாருங்கள் முத்துக்குமார். இல்லாதவர்களுக்கு கொடுப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[jayaramprakash said...

தகவலுக்கு நன்றி அண்ணா. இந்த பதிவை என் தளத்திலும் பதிவேற்றி உள்ளேன்.]]]

மிக்க நன்றி பிரகாஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[சசிகுமார் said...
மறைந்து போன நம் சகோதரர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய அனைவரும் அஞ்சலி செலுத்துவோம். சகோதரர்களின் உயிரைத்தான் காக்க முடியவில்லை. அஞ்சலியாவது செலுத்துவோம். அனைவரும் வாருங்கள்.]]]

-)))))))

Anonymous said...

நான் ஒரு சிறுகுஞ்சு பெண்ணுடன் இருந்தால் என்ன, ஒரு பாட்டியுடன் இருந்தால் இந்த சமூகத்துக்கு என்ன? இதை என்னால் பிரான்ஸ் என்ற எனது ஜன்ம பூமியில் வெளிப்படையாக செய்வேன். ஏன் என்னால் அங்கு வெளிப்படையாக குப்பியடித்தல் செய்வேன். தமிழ் என்ற ஒரு நாற சமூகத்தில் இதை புரிந்து கொள்ளமுடியாது. என்னை பற்றி பரப்புரை செய்ய உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதிமன்றம் அழைப்பேன்.

மதுரை சரவணன் said...

thanks for sharing and remember this event. vaalththukkal

abeer ahmed said...

See DNS records for google.com
http://dns.domaintasks.com/google.com

abeer ahmed said...

See who owns earlysail.com or any other website.

abeer ahmed said...

See who owns blogspot.com or any other website:
http://whois.domaintasks.com/blogspot.com

abeer ahmed said...

See who owns blogspot.com or any other website:
http://whois.domaintasks.com/blogspot.com

abeer ahmed said...

See who owns blogspot.com 3201513502 or any other website.