அவரை மாமூன்னுதான் கூப்பிடுவோம் - ஒரு சாலியின் வாக்குமூலம்..!

12-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


பழசு என்றும் புதுசு -10-08-1988


ஆட்டோ சங்கர் அண்ட் கோ எடுத்திருந்த வீடியோ மற்றும் புகைப்பட ஆல்பத்தில் காணப்பட்ட 'பலான பெண்​கள்’ சிலரை சந்தித்து விசாரணை நடத்தினோம்.

''உங்கள் பெயர்?''

''மீனா... மீனா குமாரி!''

''நீங்க எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீங்க..?''

''கண்டிப்பா சொல்லணுமா சார்?''

''சரி... ஆட்டோ சங்கர் உங்களுக்கு எப்படி அறிமுகமானார்?''

''ஆட்டோ சங்கர்’னு சொன்னாலே சிரிப்பா வருது சார்... நாங்கல்லாம் அவரை 'மாமூ’னுதான் கூப்பிடுவோம். அவர் எங்களை 'சாலி’னு கூப்பிடுவார். சாலின்னா 'மச்சினி’னு அர்த்தம்.

நானா விருப்பப்பட்டுத்தான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். அதனாலே மாமூ என்னை அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாது. ஒரு தடவை நல்லா டிரிங்க்ஸ் சாப்பிட்டுட்டு என்னைத் தொட வந்திச்சு. அந்த நேரம் வேற ஒருத்தர் வர்றதா சொல்லி இருந்தார். அதை மாமூகிட்டே சொன்னதும், 'ஓஹோ... நமக்குத் தேவை துட்டு... துட்டு... துட்டு! இப்ப நான் இங்க இருந்தா... துட்டு கிடைக்காதுல்ல... நான் போயிட்டு அப்புறமா வர்றேன்...’னு சொல்லிட்டுப் போயிடுச்சு.''

''ஆட்டோ சங்கர்... ஸாரி! உங்க மாமூ கொலை பண்ணி இருப்பார்னு எப்பவாவது சந்தேகப்பட்டு இருக்கீங்களா?''

''சத்தியமா இல்லே சார்... பொணங்களைத் தோண்டுறதுக்கு நாலு நாள் முன்னாடிகூட என்னோட வந்து தங்கி இருந்து... ஜாலியாப் பேசிட்டு இருந்திச்சு... கொலை எல்லாம் பண்ணிட்டு, அந்த மாதிரி சிரிக்க முடியும்னு எனக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது சார்.  அதுக்கு அப்புறம் இன்னி வரைக்கும் நான் தொழிலுக்குப் போகலை... பயமா இருக்குது சார்.''

''உங்க பேர் என்னம்மா..?’

''ஏ.கலைச்செல்வி.''

''பார்த்தா படிச்ச பொண்ணாட்டம் இருக்கீங்க... நீங்க ஏம்மா இந்தத் தொழிலுக்கு வந்தீங்க?''

''ஹ்ஹ... ஹ்ஹா (விசும்பல் ஒலிகளுக்கிடையே) எங்க சாதியில ஒரு நவீன சுயம்வரம் ஏற்பாடு செஞ்சு இருந்தாங்க. அதுக்கு அலங்காரம் எல்லாம் செஞ்சு, எங்க அப்பா என்னை அழைச்சிட்டுப் போனார். எனக்கு அம்மா கிடையாது. நான் பி.ஏ. ஃபர்ஸ்ட் இயர் பண்ணிட்டு இருந்தேன்.   சுயம்வரத்துக்கு வந்திருந்த ஒருத்தர் பேரு நவநீதன். அவருக்கு என்னைப் பிடிச்சதாச் சொல்லி, 'வரதட்சணை ஒண்ணும் வேணாம்’னு அங்கேயே வெச்சுத் தாலி கட்டிட்டார். அப்புறம்தான் தெரிஞ்சுது... அந்த நவநீதன் ஒரு பொம்பளை புரோக்கர்னு.

அந்த நவநீதன், சங்கர் அண்ணன்(?!)கிட்டே வேலை பார்த்துட்டு இருந்தார். சங்கர் அண்ணன் என்னைத் 'தங்கச்சி’னுதான் கூப்பிடும். தொட்டதுகூட இல்லை சார்... ஆனா, நிறையப் பேர் என்னைக் கெடுத்துட்டாங்க. சங்கர் அண்ணன் என்னைப் பார்க்க வரும்போது, இதைச் சொல்லி அழுவேன். அப்பல்லாம் 'இது ஒண்ணும் தப்பில்லே... உடம்புங்கிறது என்ன? சட்டை, பாவாடை மாதிரி... ஆனா, மனசுதான் முக்கியம்... அது களங்கப்படாமப் பார்த்துக்க’னு அட்வைஸ் பண்ணும். ஒரு வகையில் அது உண்மைதானேன்னு நெனைச்சுத்தான் 'இது’ல அட்ஜஸ்ட் பண்ணிட்டு உயிரோட இருக்கேன்...''

''உங்க மேல இப்படி 'தங்கச்சிப் பாசம்’ வெச்சிருந்தவரா, இவ்வளவு கொலைகள் பண்ணினார்..?''

''இதுக்கும் அதுக்கும் ஏன் சார் முடிச்சுப் போடறீங்க? மந்தைவெளி ஆட்கள் மூணு பேரையும் சங்கர் அண்ணனோட ஆட்கள் அடிச்சதை, என் கண்ணாலே பார்த்தேன்... அதை டி.எஸ்.பி. ஐயாகிட்டேகூடச் சொன்னேன். கொலை பண்ணினது எதுவும் எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா, அதையும் போலீஸ்ல சொல்லி இருப்பேன்.''

''டி.எஸ்.பி-கிட்டே எப்ப சொன்னீங்க?''

''எப்பன்னு நினைவில்லே... ஏன்னா, போலீஸ்காரங்க அப்பப்ப என்னை எங்கேயாவது கூட்டிட்டுப் போவாங்க.''

''எதுக்கு... விசாரணைக்காகவா?''

''என்கிட்டே என்ன விசாரணை?''

''அப்ப..?''

''ஆமா..! பெரிய அதிகாரிங்ககூட என்னை அனுப்பி  வைப்பாங்க.''

''உங்க பேர்தானே சந்தியா..?''

''யெஸ்... விஷயத்தை நானே சொல்லிடுறேன். மிஸ்டர் சங்கரை நான் மீட் பண்ணினது ரெண்டு தடவைதான். முதல் தடவை 87 அக்டோபர் 6-ம் தேதி ஒரு பார்ட்டி போன் பண்ணிச்சு.

ரெடியா இருந்தப்ப, மிஸ்டர் சங்கர் ஒரு மாருதி கார்ல வந்தார். 'பார்ட்டி யார்?’னு கேட்டதும். ஒரு மினிஸ்டர் பேரைச் சொன்னார். ஒரு பங்களாவில் இறக்கிட்டு, மறுநாள் வர்றதா சொன்னார்.

ஆனா, மறுநாள் வேற ஒருத்தர்தான் அழைச்சுட்டுப்போய், என்னை என் இடத்தில் டிராப் பண்ணினார். அப்புறம், இவர் (சங்கர்) அரெஸ்ட் ஆகறதுக்கு மூணு நாள் முன்னாடி வந்தார். என்கிட்டே, 'நாளைக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டா, 'எனக்கு ஒண்ணுமே தெரியாது’ன்னு மட்டும் சொல்லு’னு சொன்னார். உண்மையில் ஒண்ணும் புரியலை. 'என்ன பிரச்னை?’னு கேட்டதுக்கு, 'பிரச்னை வரும்... எந்த மாதிரினு இப்போ என்னால சொல்ல முடியல’னு மட்டும் சொன்னார்.

அப்போ ஒண்ணும் புரியலை... இப்போ நீங்க சொல்லித்தான் தெரியுது - அந்த மினிஸ்டருடன் நான் இருக்கும்போது வீடியோ எடுத்திருக்காங்கன்னு!

ப்ளீஸ்... என் படத்தையோ என் பெற்றோர் விவரங்களையோ வெளியிடாதீங்க... ஐ’ம் ஸ்டடியிங் ஃபைனல் இயர் எம்.ஏ.! இந்த வருஷத்துடன் 'தொழிலுக்கு’ முழுக்குப் போட்டுட்டு, நார்த் இண்டியாவில் செட்டி​லாகிடப் போறேன். என் பிளான் தவறும் பட்சத்தில், ஐ வில் கமிட் சூஸைட்டு!'' 

(சந்தியா, கலைச்செல்வி இருவர் படங்களும் கிடைத்தும், அவர்கள் விருப்பத்தை மதித்து ஜூ.வி. வெளியிடவில்லை.)

கடைசியாக, வீடியோவில் பார்த்த (முன்னணி) நடிகையை சந்தித்தோம்.

தன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டு, சிலர் தன்னை வலையில் சிக்க  வைத்துவிட்டதாகப் புலம்பினார்.

தொடர்ந்து, ''சில வேளைகளில் சிலரை அட்ஜஸ்ட் பண்ணித்தான் நடக்க வேண்டும். உண்மையில் எனக்கும் ஆட்டோ சங்கருக்கும் தொடர்பு கிடையாது. சில முறை பார்த்து இருக்கிறேன். சில போலீஸ் அதிகாரிகள், வி.ஐ.பி-க்கள் அழைப்பதாகக் கூறி அழைத்துச் செல்வார். கஸ்டமர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட். அதில் சிலர் பிரகாசமான லைட்டை அணைப்பதும் இல்லை. அந்நேரம் வீடியோ எடுக்கப்பட்டு இருப்பது இப்போதுதான் தெரியும்...'' என்று சொல்லி, கிளிசரின் இல்லாமல் அழுதார். அழுதுகொண்டு இருக்கிறார்!

மேற்கண்ட நபர்களிடம் நாம் ஒரு நிருபருக்கு உரிய தோரணையுடன் மட்டுமே விசாரணை நடத்தினோம். இன்னும் இவர்களை போலீஸார் யாரும் வந்து விசாரிக்கவில்லை!

பி.கு: கவர்னர் உத்தரவின் பேரில், திருவான்மியூர் பகுதியின் எஸ்.பி-யாக இருந்த சுப்பையா டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு உள்ளார். இன்னும் சில நாட்களில் போலீஸ் உயர் அதிகாரிகள் இருவர், சர்வீஸில் இருந்து 'வேலை நீக்கம்’ செய்யப்படுவார்கள் என்றும் தெரிகிறது!

- வி.குமார்

 ''என் மவன் போலீஸ்காரங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கானாமே...?!'' - ஆட்டோ சங்கரின் (வளர்ப்புத்) தாயுடன் சந்திப்பு...

வேலூர் அருகே உள்ள காங்கேயநல்லூரில் எதேச்சையாக ஆட்டோ சங்கரின் வளர்ப்புத் தாய் (பெரியம்மா) கமலம்மாளை சந்திக்க நேர்ந்தது. ஆட்டோ சங்கரின் தாய் இவர்தான் என்று அவ்வூரில் இருக்கும் நம் நண்பர் அழைத்துப் போய்க் காட்டியபோது அதிர்ச்சி... காரணம், நாம் பார்த்தது - கோயில் மண்டபத்தில் சுருண்டு கிடந்த ஓர் ஏழைப் பெண்மணியை. அவரை எழுப்பி உட்கார வைத்து, நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் (நம்மை அவருக்குப் புரிய வைக்கச் சற்றுக் கஷ்டப்பட்டோம்!)

''நான், எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேன். கடைசியில் இப்படிப் பண்ணிட்டானே...'' என்று புலம்பினார் கமலம்மாள். முழுதும் நரைத்திருந்த, எண்ணெய்ப் பசையே காணாத பரட்டைத் தலை. சற்று உள்ளடங்கிய கண்கள். எவ்வளவுக்கு அழுக்காக முடியுமோ, அவ்வளவுக்கு அழுக்கான புடவை. கழுத்தில் மஞ்சள் என்றால் என்னவென்று கேட்கும் தாலிச் சரடு, கால்கள் வீங்கி இருந்தன. மொத்தத்தில் மோசமான, பரிதாபத் தோற்றம். மெல்லிய குரலில் தொடர்ந்தார்.

''என் தங்கச்சி புள்ளதாங்க சங்கரு. என் தங்கச்சி ஜெயலக்ஷ்மி ஆடு மாடுங்க பெத்துப் போடற மாதிரி குழந்தைகளைப் பெத்துப் போட்டுட்டா. சங்கர், அவன் தம்பி மோகன், அவன் தங்கச்சி சாந்தி இவங்களை நான்தான் (எடுத்து) வளர்த்தேன். என்னை மூணு பேரும் அம்மான்னுதான் கூப்பிடுவாங்க. எவ்வளவு கண்டிப்போட அவங்களை வளர்த்தேன் தெரியுமா? சங்கர் இங்கே படிச்சி முடிச்சதும் அவனை வேலூருக்கு அனுப்பிப் படிக்க வெச்சேன். அங்க அவன் பரீட்சையில, இன்னொரு பையனைப் பார்த்து எழுதினப்போ கண்டுபிடிச்சி வூட்டுக்கு அனுப்பிட்டாங்க. அப்புறம் அவன் கொஞ்ச நாள் இங்கேயே தீப்பெட்டி ஒட்டற வேலை செஞ்சிக்கிட்டிருந்தான்... ஒரு தடவை அரக்கோணத்துக்குப் போனான். திரும்பி வரும்போது கூடவே ஜெகதீஸ்வரியைக் கூட்டிட்டு வந்தான். கொஞ்ச நாள் கல்யாணம் கட்டாமலே இருந்ததனாலே, 'எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே வெச்சிருப்பே’னு சொல்லி, நானே அவங்களுக்கு இதே கோயில்ல வெச்சிக் கல்யாணம் பண்ணினேன். அப்புறம் அவன் மெட்ராஸுக்குப் போனான். அங்கே முதல்ல பெயின்ட் அடிக்கிற வேலை செஞ்சான். அப்புறம் ஆட்டோ ஓட்ட கத்துக்கிட்டான். அதுக்கப்புறம் அவன் எப்படி இந்த மாதிரி ஆனான்னு எனக்குத் தெரியல...'' என்றார்.

''நீங்க, உங்க பிள்ளை வீட்டுக்குப் (மெட்ராஸ்) போயிருக்​கிறீங்களா?'' என்று கேட்டோம்.

''போயிருக்கேன்... மெட்ராஸ் கோட்டூரில(?) இடது கைப் பக்கம் ஹவுஸிங் போர்டு இருக்கும். வலது கைப் பக்கம் போனா அவன் வீடு வரும். எப்படித்தான் சம்பாதிச்சானோ தெரியலை... வீடு பெரிய பங்களா 'மாதிரி இருந்துச்சு! ரொம்பப் பெரிசு...'' என்று பெருமைப்பட்டுக் கொண்ட அவர், ''உங்களுக்குத் தெரியுமா? என் மவன் போலீஸ்காரங்களுக்கு வீடெல்லாம் கட்டிக் கொடுத்​திருக்கானாமே...?!'' என்றார்.

கடைசியாக நாம் புறப்பட்டபோது, அவர் ''எம் மருமகளைக் கூடவா போலீஸ் பிடிச்சி வெச்சிருக்காங்க...?'' என்று கேட்டார்!

நாம் திரும்பி வரும்போது வயதான ஒருவர், ''இந்தப் பொம்பளை அந்தப் பசங்களை ரொம்ப கண்டிப்பாத்தான் வளர்த்துச்சி. காலையில எழுந்ததும், ஸ்கூல் போற வரைக்கும் தீப்பெட்டி ஒட்டணும். திரும்பவும் மத்தியானம் சாப்பாட்டுக்கு வரும்போது லேபிள் ஒட்டிட்டு சாப்பிட்டுப் பள்ளிகூடம் போகணும். சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன், திரும்பத் தீப்பெட்டி ஒட்ட ஆரம்பிச்சா, ராத்திரி தூங்கற வரைக்கும் ஒட்டணும். ரொம்பத்தான் ஜெயில் மாதிரி கண்டிப்பா வெச்சிருந்தா... அதான் அவங்க கெட்டுப் போயிட்டாங்க...'' என்றார்.

''இந்தம்மா கணவர் தங்கராஜ் அந்தக் காலத்திலேயே பெரிய காண்ட்ராக்டர். காரெல்லாம் வெச்சிட்டிருந்தார். அப்படி வாழ்ந்த இவங்க, இப்படி கஷ்டப்படறதைப் பார்த்தா மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்குது சார்...'' என்றார் முதியவர் ஒருவர்.

- இரா.சிவகுமார், டி.ஜி.அனுசுயா

படம்: விடிவெள்ளி ஆறுமுகம்

நன்றி : ஜூனியர்விகடன்-12-06-2011


இந்த இதழ் வெளிவந்தவுடன் அந்தக் குறிப்பிட்ட நடிகை யார் என்பதை அறிந்து கொள்ள பத்திரிகையுலகமும், தமிழகமும் துடியாய் துடித்தது..!

இந்தக் கட்டுரையை எழுதிய வி.குமார், சிவகுமார், அனுசூயா மூவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்? யாருக்காவது தெரியுமா..? தெரிந்தால் சொல்லுங்கள்..! முதலில் பாராட்ட வேண்டும்..! இரண்டாவது, யார் அந்தத் திரையுலகத் தாரகை என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்..!(நாட்டுக்கு ரொம்ப அவசியம் பாருங்க..!)

14 comments:

விழியே பேசு... said...

அந்த முன்னணி நடிகை யார்ன்னு எனக்கு தெரியும் சார். நான் 'ஆட்டோசங்கர்' நு ஒரு தொடர் போட்டிடு இருந்தேன் சார் , சில காரணங்களுக்காக அதை தற்காலிகமாக நிறுத்த வேண்டியதாச்சு. மீண்டும் தொடர் எழுதும் போது அந்த நடிகை யார் என்று கூறுகிறேன் சார்.

Unknown said...

//கடைசியாக, வீடியோவில் பார்த்த (முன்னணி) நடிகையை சந்தித்தோம்.//

தெலங்கானா அரசியலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் முன்னாள் நடிகை தானே! நக்கீரன் கோபால் இதை ஏற்கெனவே தன்னோட சேலஞ்ச் நூலில் சொல்லிட்டார்ணே!

N Ramesh said...

ஜூனியர் விகடனில் வெளிவரும் கட்டுரைகளை அனுமதி இல்லாமல் நீங்கள் பதிப்பது தவறு. சட்டப்படி குற்றமும் கூட. அந்த கட்டுரையை ஜூ.வி-ல் படித்து கொள்கிறோம்.

உங்கள் சொந்த சரக்கை வைத்து கருத்து சொல்லுங்கள்.

Your posting is utter violation of copyright law.
If possible write on your own.
Don't copy & paste.

Unknown said...

[[[ஜூனியர் விகடனில் வெளிவரும் கட்டுரைகளை அனுமதி இல்லாமல் நீங்கள் பதிப்பது தவறு. சட்டப்படி குற்றமும் கூட. அந்த கட்டுரையை ஜூ.வி-ல் படித்து கொள்கிறோம்.

உங்கள் சொந்த சரக்கை வைத்து கருத்து சொல்லுங்கள்.

Your posting is utter violation of copyright law.
If possible write on your own.
Don't copy & paste.

Read more: http://truetamilans.blogspot.com/2011/06/blog-post_12.html#ixzz1P1ZoAzpD
]]]

நன்றின்னு சிகப்பு கலர்ல போட்டிருக்காரே, கவனிக்கலையா? அப்படிப் பாத்தா ஜூ.வி.யே சொந்த சரக்குக்கு வழியில்லாம தான் வலை பாயுதேன்னு அடுத்தவன் சரக்கை எடுத்துப் போட்டு தான் கல்லா கட்டுதுன்னு சொல்லிட முடியுமா?

உண்மைத்தமிழன் said...

[[[விழியே பேசு... said...

அந்த முன்னணி நடிகை யார்ன்னு எனக்கு தெரியும் சார். நான் 'ஆட்டோசங்கர்' நு ஒரு தொடர் போட்டிடு இருந்தேன் சார் , சில காரணங்களுக்காக அதை தற்காலிகமாக நிறுத்த வேண்டியதாச்சு. மீண்டும் தொடர் எழுதும் போது அந்த நடிகை யார் என்று கூறுகிறேன் சார்.]]]

சரி.. சொல்லுங்கள்.. தெரிந்து கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[விஜய்கோபால்சாமி said...

//கடைசியாக, வீடியோவில் பார்த்த (முன்னணி) நடிகையை சந்தித்தோம்.//

தெலங்கானா அரசியலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் முன்னாள் நடிகைதானே! நக்கீரன் கோபால் இதை ஏற்கெனவே தன்னோட சேலஞ்ச் நூலில் சொல்லிட்டார்ணே!]]]

அப்படியா..? எனக்கு இது உண்மையாகத் தெரியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[N said...

ஜூனியர் விகடனில் வெளிவரும் கட்டுரைகளை அனுமதி இல்லாமல் நீங்கள் பதிப்பது தவறு. சட்டப்படி குற்றமும் கூட. அந்த கட்டுரையை ஜூ.வி-ல் படித்து கொள்கிறோம்.

உங்கள் சொந்த சரக்கை வைத்து கருத்து சொல்லுங்கள்.

Your posting is utter violation of copyright law. If possible write on your own. Don't copy & paste.]]]

இதற்கு நான் பல முறை பதில் சொல்லிவிட்டேன்..

ஜூ.வி.யைப் படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்காகவும், வரும்காலத்தில் அனைவருக்கும் தெரிய வருவதற்காகவும் எனது தளத்தில் பதிவு செய்து வைக்கிறேன்.

காப்பி ரைட் பிரச்சினைகள் வந்தால் அதனை நான் பார்த்துக் கொள்கிறேன். அக்கறைக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[விஜய்கோபால்சாமி said...

நன்றின்னு சிகப்பு கலர்ல போட்டிருக்காரே, கவனிக்கலையா? அப்படிப் பாத்தா ஜூ.வி.யே சொந்த சரக்குக்கு வழியில்லாமதான் வலை பாயுதேன்னு அடுத்தவன் சரக்கை எடுத்துப் போட்டுதான் கல்லா கட்டுதுன்னு சொல்லிட முடியுமா?]]]

-)))))))))))))

Unknown said...

...விஜயலலிதா அப்போது வைத்துக் கொண்டிருந்த பெண்களில் சாந்தி என்கிற பெண்ணுக்கு வாடிக்கையாளர் மத்தியில் கடும் போட்டி. “குட்டை சாந்தி” என்று செல்லப் பெயர் கூட உண்டு. நானும் கூட என் வாடிக்கையாளரின் விருப்பம் நிறைவேற்ற பல தடவை குட்டை சாந்தியை வாங்கிச் சென்றேன்...

...அன்றைக்கு நூற்றைம்பதும் இருநூறும் ஊதியமாக வாங்கிய குட்டை சாந்தி இன்றைக்கு வாங்கும் சம்பளம் படத்திற்கு ஐம்பது, அறுபது லட்சங்கள். இப்போது அவள் பெயரும் குட்டை சாந்தி அல்ல; விஜயசாந்தி...

-பக்கம் 336, 337 “சேலஞ்ச்” நக்கீரன் வெளியீடு.

Unknown said...

சங்கரிடம் தொழில் செய்த நடிகைகள் பட்டியலில் அம்பிகா, ராதா பெயர்களும் உண்டு. தகவல் உபயம், அதே “சேலஞ்ச்” புத்தகம் தான்.

satheshpandian said...

விஜய சாந்தியின் பெயர் குள்ள சாந்தி. சங்கர் அப்படி தான் இவரை கூப்பிட்டு உள்ளார். பெயர் தெரிந்து விட்டதா?

உண்மைத்தமிழன் said...

[[[விஜய்கோபால்சாமி said...

...விஜயலலிதா அப்போது வைத்துக் கொண்டிருந்த பெண்களில் சாந்தி என்கிற பெண்ணுக்கு வாடிக்கையாளர் மத்தியில் கடும் போட்டி. “குட்டை சாந்தி” என்று செல்லப் பெயர் கூட உண்டு. நானும்கூட என் வாடிக்கையாளரின் விருப்பம் நிறைவேற்ற பல தடவை குட்டை சாந்தியை வாங்கிச் சென்றேன்...

...அன்றைக்கு நூற்றைம்பதும் இருநூறும் ஊதியமாக வாங்கிய குட்டை சாந்தி இன்றைக்கு வாங்கும் சம்பளம் படத்திற்கு ஐம்பது, அறுபது லட்சங்கள். இப்போது அவள் பெயரும் குட்டை சாந்தி அல்ல; விஜயசாந்தி...

- பக்கம் 336, 337 “சேலஞ்ச்” நக்கீரன் வெளியீடு.]]]

-)))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[விஜய்கோபால்சாமி said...

சங்கரிடம் தொழில் செய்த நடிகைகள் பட்டியலில் அம்பிகா, ராதா பெயர்களும் உண்டு. தகவல் உபயம், அதே “சேலஞ்ச்” புத்தகம்தான்.]]]

எத்தனை கதைகளைத்தான் நம்புவது..?

உண்மைத்தமிழன் said...

[[[satheshpandian said...

விஜயசாந்தியின் பெயர் குள்ள சாந்தி. சங்கர் அப்படிதான் இவரை கூப்பிட்டு உள்ளார். பெயர் தெரிந்து விட்டதா?]]]

ம்.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை..!