தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல்-2011 முடிவுகள்

22-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் மிகப் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் பாரதிராஜா தலைமையில் 'ஒருங்கிணைந்த இயக்குநர்கள் குழு' ஒரு அணியாகவும், 'புதிய அலைகள்' என்ற பெயரில் துணை இயக்குநர்கள் தனி அணியாகவும் போட்டியிட்டார்கள்.

'புதிய அலைகள்' அணி தலைவர், செயலாளர், துணைத் தலைவர்கள், பொருளாளர் பதவிக்குப் போட்டியிடவில்லை. 4 இணைச் செயலாளர்கள் மற்றும் 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டுமே போட்டியிட்டார்கள்.

ஆனாலும் பாரதிராஜாவை எதிர்த்து எஸ்.முரளி என்னும் துணை இயக்குநர், தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

செயலாளர் பதவியில் அமீரை எதிர்த்து 'தமிழன்' படத்தின் இயக்குநர் அப்துல் மஜீத் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

மேலும் 'யார் கண்ணன்', டி.பி.கஜேந்திரன் போன்ற இயக்குநர்களும் சுயேச்சையாகவே செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிட்டார்கள்.

4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு 10 பேரும், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 34 பேரும் போட்டியிட்டனர்.

கடந்த 19-06-2011 ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை வடபழனி இசையமைப்பாளர்கள் சங்க கட்டிடத்தில் தேர்தல் நடந்தது. அதன் ஓட்டு எண்ணிக்கை நேற்று(21-06-2011) இரவு 10.30 மணிக்கு முடிவடைந்து, அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இரவு 11 மணிக்குத்தான் வெளியானது.

தற்போதைய தலைவரான பாரதிராஜாவே மீண்டும்   தலைவராகத் தேர்வு  செய்யப்பட்டுள்ளார்.  பாரதிராஜா பெற்ற வாக்குகள் 1033. அவரை எதிர்த்து நின்ற துணை இயக்குநர் எஸ்.முரளி பெற்ற வாக்குகள் 267. செல்லாத வாக்குகள் 11.

சங்கத்தின் செயலாளராக இயக்குநர் அமீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 901. இவரை எதிர்த்து நின்ற தமிழன் படத்தின் இயக்குநர் அப்துல் மஜீத் பெற்ற வாக்குகள்  375.

சங்கத்தின் பொருளாளராக இயக்குநர் ஜனநாதன் போட்டியிடின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேபோல் சங்கத்தின் துணைத் தலைவர்களாக இயக்குநர்கள் சேரனும், சமுத்திரக்கனியும் போட்டியிடின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.

ஒருங்கிணைந்த இயக்குநர் குழுவின் சார்பில் 4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு, இயக்குநர்கள் பிரபு சாலமன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, தம்பித்துரை, சி.வி.வித்யாசாகர் ஆகியோர் போட்டியிட்டார்கள். 

இவர்களில் பிரபு சாலமன்(905), எஸ்.எஸ்.ஸ்டான்லி(716), தம்பித்துரை(696) ஆகியோர் வெற்றி பெற்று வித்யாசாகர் தோல்வியடைந்தார். அவர் இடத்திற்கு 'நேசம் புதுசு' படத்தின் இயக்குநர் வேல்முருகன் 655 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சங்கத்தின் 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவியில் 7 இடங்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த இயக்குநர்கள் குழு போட்டியிட்டது. மீதமிருந்த 5 இடங்களை துணை இயக்குநர்களுக்காக விட்டுக் கொடுத்தது.  இயக்குநர்கள் குழு சார்பில் இயக்குநர்கள் சிம்புத்தேவன், வசந்தபாலன், வெங்கட்பிரபு, ஏ.வெங்கடேஷ், கதிர், விஜய் ஆனந்த், பாலசேகரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

ஆனால் 'புதிய அலைகள்' என்ற துணை இயக்குநர்கள் குழு துணைத் தலைவர் மற்றும் இணைச் செயலாளர் பதவிகளிலும் இட ஒதுக்கீடு கேட்டனர். அந்த ஒதுக்கீட்டிற்கு இயக்குநர்கள் குழு ஒத்துக் கொள்ளாததால் செயற்குழு உறுப்பினர்களின் 12 இடங்களுக்கும் புதிய அலைகள் அணி போட்டியிட்டது.

தேர்தல் முடிவில் ஒருங்கிணைந்த இயக்குநர்கள் குழு சார்பாக போட்டியிட்டவர்களில் பாலசேகரன், சிம்புதேவன், வசந்தபாலன், வெங்கட்பிரபு ஆகிய நால்வர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

மீதமிருந்த 8 இடங்களில் 7 இடங்களில் புதிய அலைகள் அணியும், சுயேச்சையாக களமிறங்கிய  ராஜா கார்த்திக் என்னும் இணை இயக்குநரும் வெற்றி பெற்றனர்.சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

1.ஐந்து கோவிலான் - 864
2. விஜயசங்கர் - 700
3. வெங்கட்பிரபு - 673
4.வசந்தபாலன் - 670
5. பாலமுரளிவர்மன் - 666
6. சிம்புதேவன் - 636
7. முகமது அஸ்லாம் - 630
8. ஜெகதீசன் - 621
9. பாலசேகரன் - 618
10. நாகேந்திரன் - 618
11. கமலக்கண்ணன் - 596
12. ராஜா கார்த்திக் - 557

மேலும், விரிவான செய்திகள் விரைவில் வெளிவரும்..!

14 comments:

Unknown said...

Thanks for the Information and waiting for continuation

சுதா SJ said...

உங்க தமிழ் எழுத்து சூப்பர் பாஸ்
உங்கள் தமிழின் ரசிகன் நான்

உண்மைத்தமிழன் said...

[[[Arun Kumar said...

Thanks for the Information and waiting for continuation.]]]

வருகைக்கு மிக்க நன்றி அருண்குமார்..!

உண்மைத்தமிழன் said...

[[[துஷ்யந்தன் said...

உங்க தமிழ் எழுத்து சூப்பர் பாஸ்
உங்கள் தமிழின் ரசிகன் நான்.]]]

ஆஹா.. எனக்கே ஆச்சரியமா இருக்கு! மிக்க நன்றி துஷ்யந்தன்..!

a said...

Suda Suda therthal mudivugal..

முரளிகண்ணன் said...

அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங் அண்ணே(உள் அரசியல் பற்றி விரிவாக எழுதவும்)

Unknown said...

//வருகைக்கு மிக்க நன்றி அருண்குமார்..!//

நான் உங்கள் பல பதிவுகளின் ரசிகன்.... ஆட்டோ சங்கர் தொடர் தினமும் வராதா என்று எதிர்பார்த்து கொண்டு இருப்பவன்

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

Suda Suda therthal mudivugal..]]]

யோகேஷ்.. எங்க இருக்க? என்னைப் பார்க்க வருவேன்னு சொன்ன..?

உண்மைத்தமிழன் said...

[[[முரளிகண்ணன் said...

அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங் அண்ணே (உள் அரசியல் பற்றி விரிவாக எழுதவும்)]]]

அதுதான் எழுதப் போறேன்.. கொஞ்சம் வெயிட்டிங்..!

உண்மைத்தமிழன் said...

[[[Arun Kumar said...

//வருகைக்கு மிக்க நன்றி அருண்குமார்..!//

நான் உங்கள் பல பதிவுகளின் ரசிகன்.... ஆட்டோ சங்கர் தொடர் தினமும் வராதா என்று எதிர்பார்த்து கொண்டு இருப்பவன்.]]]

அருண்.. ஆட்டோ சங்கர் கதை முடிந்துவிட்டது. அத்தோடு தொடரும் முடிந்தது..! அவ்வளவுதான்..!

abeer ahmed said...

See DNS records for google.com.eg
http://dns.domaintasks.com/google.com.eg

abeer ahmed said...

See who owns goshopone.com or any other website.

abeer ahmed said...

See who owns blogspot.com or any other website:
http://whois.domaintasks.com/blogspot.com

abeer ahmed said...

See who owns blogspot.com 1665889899 or any other website.