தகத்தகாய கதிரவனைக் கை விட்டார் தானைத் தலைவர்..!

06-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரத்தச் சொந்தங்களென்றால் தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும் என்பார்கள்..! கலைஞருக்கு இருக்கின்ற அதீத உணர்வு இது ஒன்றுதான் என்பதை இத்தனை ஆண்டுகளாக அவருடன் இருந்தவர்கள், எதிர்ப்பவர்களும் சொல்லி வந்தவேளையில் ஒப்புக் கொள்ள மறுத்த ஆதரவாளர்களும், கழகத்தின் ஒப்பு விருப்பெற்ற உடன்பிறப்புகளும் இன்றைக்காவது இதனை ஒத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்..!

"ராசா தலித் என்பதாலேயே அவரைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள். எழுதுகிறார்கள்..." என்று ராசாவின் கைதுக்கு முன்பாக துடித்தெழுந்தார் கலைஞர். இந்த ஆரிய-திராவிட சண்டையில் இன்னும் எத்தனை வருடங்கள்தான் குளிர் காய்வீர்கள் என்று இன்றைக்கு முதல்முறையாக ஓட்டளித்த சிறுவர்களே கேட்கும் நிலைக்கு வந்துவிட்டதால், கலைஞரின் இந்த போலி அழுகை அவர் வீட்டு வாசப்படியைத் தாண்டவில்லை..!

214 கோடி ரூபாய் பணத்தை சினியூக் நிறுவனத்திடமிருந்து கள்ளத்தனமாக பெற்று வைத்திருந்த கலைஞர் டிவி, சி.பி.ஐ. ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கை பதிவு செய்த பிறகே, அந்தப் பணத்தைப் பெற்றதற்காக ஒரு ஒப்பந்தத்தை அவசரம், அவசரமாக சினியூக் நிறுவனத்தினருடன் செய்துள்ளது என்பதே இந்த வழக்கில் என்ன நடந்திருக்கிறது என்பதை யூகிக்க வைக்கிறது..!


இது பற்றி எனது முந்தைய இந்தப் பதிவில் வந்த சில செய்திகள் மீண்டும் உங்கள் பார்வைக்கு :

“சினியுக் நிறுவனம் 23.12.2008 முதல் 7.8.2009 வரையிலான காலக்கட்டத்தில் ஆறு தவணைகளில் 200 கோடி ரூபாயை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்துள்ளது...” என்கிறது சி.பி.ஐ.யின் குற்றப்பத்திரிகை. பணம் நேரடியாகக் கொடுக்கப்படாமல்,  சுற்றி வளைத்து கணக்குக் காட்டப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

1. குஸேகான் நிறுவனம், சினியுக் நிறுவனத்துக்குக் கொடுத்த 200 கோடியை, அப்படியே 2009 ஆகஸ்ட் மாதத்துக்குள் கலைஞர் டி.விக்கு, சினியுக் மீடியா நிறுவனம் கொடுத்துவிடுகிறது. இதே 2009 அக்டோபர் மாதம்தான், 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். போட்டு விசாரணையும் தொடங்கியது.

அதனால், சினியுக் மற்றும் குஸேகான் நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டு அவசரமாக சில ஒப்பந்தங்கள் போட்டன. 27.1.2010 அன்று குஸேகான் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசீப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும், சினியுக் இயக்குநர் கரீம் முரானியோடு ஒப்பந்தம் போடுகின்றனர்.

இதன்படி, சினியுக் நிறுவனத்தில் டி.பி. குரூப்பைச் சேர்ந்த குஸேகான் நிறுவனம் 49 சதவிகிதப் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததுடன் (ஒரு பங்கு 510 என்ற விலையில் 1,22,000 பங்குகளை வாங்கியது), 200 கோடியை கடனாக மாற்றிக் கொள்ளவும் ஓர் ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் போட்டுள்ளன.

முரானி குடும்பத்தினர் பல ஹிந்திப் படங்களை எடுத்தவர்கள். 'சினிமாத் தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத குஸேகான் நிறுவனம் சினியுக் நிறுவனத்துக்கு ஏன் கடன் கொடுக்க வேண்டும்?’ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது சி.பி.ஐ. 

2. சினியுக் நிறுவனத்துக்கும் கலைஞர் டி.வி-க்கும் இடையே உருவான ஒப்பந்தங்கள் 'வேடிக்கை'யாக இருப்பதையும் சி.பி.ஐ. குறிப்பிடுகிறது.

கலைஞர் டி.வி. ஒரு தனியார் லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனம் 2009 மார்ச் 31 அன்று தாக்கல் செய்யப்பட்ட இருப்பு நிலை தொகைக் குறிப்பில் 31,82,21,171 பணத்தை உதிரி மற்றும் இதரக் கடன்கள் மூலம் வந்தவை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த 31 கோடியில் 25 கோடி சினியுக் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. ஆனால், சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததற்கு அடுத்த ஆண்டு (31.3.2010) கலைஞர் டி.வி. தாக்கல் செய்த இருப்பு நிலைத் தொகைக் குறிப்பில் சினியுக் நிறுவனம் கொடுத்த பணத்தைக் கழித்துவிட்டு, மீதி உள்ள சுமார் 6 கோடி மட்டுமே காட்டப்பட்டது.

இதே ஆண்டில் மேலும் பல கோடிகளை சினியுக் நிறுவனம் கலைஞர் டி.வி-க்கு கொடுத்து இருக்க, இதே பேலன்ஸ் ஷீட்டில் பழைய 25 கோடியையும் சேர்த்து உதிரி மற்றும் கடன்கள் மூலம் 214,86,54,109 வந்ததாகக் காட்டி உள்ளனர்.

அதாவது யார் பணம் கொடுத்தார்கள், இந்த 214 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் இல்லை. கலைஞர் டி.வி. இயக்குநர்களான கனிமொழியும், சரத்குமாரும் திட்டமிட்டு இந்த மாற்றங்களை மேற்கொண்டனர் என்று சி.பி.ஐ. சொல்கிறது.

3. மேலும், கொடுத்த பணத்துக்கும் வாங்கிய பணத்துக்கும் கணக்குக் காட்ட, ஒரு சில ஒப்பந்த வளையங்களுக்குள் இரு நிறுவனங்களும் வலுக்கட்டாயமாக வந்தன.

19.12.2008 அன்று சினியுக் நிறுவனமும் கலைஞர் டி.வி-யும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதாம். அதன்படி, சினியுக் நிறுவனம் அளித்துள்ள நிதியினைக் கொண்டு, கலைஞர் டி.வி-யின் பங்குகளை சுமார் 35 சதவிகிதம்வரை வாங்கிக் கொள்ளும் என்றும், ஒருவேளை இந்த பங்குப் பரிவர்த்தனை திட்டப்படி நிறைவேறவில்லை என்றால், இதைக் கடனாக மாற்றிக் கொள்ளும் என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த ஒப்பந்தங்களைப் போட்டுள்ள சரத்குமார், மற்ற இயக்குநர்களின் சார்பிலும், அவரே முடிவு எடுத்துள்ளார். ஆனால் சி.பி.ஐ., 'சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஒப்பந்தத்தைக்கூட இவர்கள் போடவில்லை. குறைந்தபட்சம் முத்திரைத் தாளில்கூட இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. வாங்கிய பணத்துக்கு நியாயம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, இப்படி ஓர் ஒப்பந்தத்தை தயாரித்து, வழக்கின் புலனாய்வைத் திசை திருப்புகிறார்கள்.

இது 2008-ல் போடப்பட்ட உண்மையான ஒப்பந்தம் என்றால், 2009-ம் ஆண்டு அறிக்கையில் இதையும் சொல்லியிருக்க வேண்டும். 2009 மார்ச் மாதம்வரை சினியுக் நிறுவனத்திடம் இருந்து 25 கோடியை கலைஞர் டி.வி. வாங்கி இருந்தது. இந்தத் தொகையைப் பங்குத் தொகையாகவோ அல்லது பங்கு விண்ணப்பத் தொகையாகவோ காட்டியிருக்கலாம். ஆனால், அந்த ஆண்டு அறிக்கையில் கடன் கணக்கில்தான் இந்த 25 கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது.

2-ஜி விசாரணை தொடங்கப்பட்ட பின்னரே 2010-ம் ஆண்டு அறிக்கையில், தப்பித்துக் கொள்ளும் வகையில் கணக்குகளை  மாற்றினார்கள்...’ என்கிறது.

4. பணத்தைத் திருப்பிக் கொடுத்த விவகாரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் சி.பி.ஐ., 'கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்ட பணம் ஒரு வருடமாக அப்படியே இருந்தது. ஆ.ராசாவை நாங்கள் அழைத்து விசாரிக்கத் தொடங்கியவுடன், 200 கோடியை கலைஞர் டி.வி. அவசரம் அவசரமாகத் திருப்பிக் கொடுத்ததாகச் சொல்கிறது.

2010 டிசம்பர் 24 அன்று ஆ.ராசா சி.பி.ஐ. முன்பு ஆஜராகி விசாரணைக்கு உட்பட்ட தினத்தில்தான், கலைஞர் டி.வி. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தொடங்கியது. டிசம்பர் 24 முதல் 2011 பிப்ரவரி 3 வரை எட்டு தவணைகளில் 200 கோடியை கலைஞர் டி.வி. கொடுத்துவிட்டது.

ஆ.ராசாவை பல முறை அழைத்து விசாரித்து பின்னர், பிப்ரவரி 2 அன்று கைது செய்தோம். இந்த சமயத்தில் பணத்தை முழுமையாகத் திருப்பிக் கொடுத்துவிட்டது கலைஞர் தொலைக்காட்சி.

பணத்தைக் கொடுத்த அதே தேதிகளில், சினியுக் நிறுவனமும் குஸேகான் நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்து இருக்கிறது. இறுதியில் குஸேகானும் இந்த 200 கோடியை வட்டியோடு டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்தது. இரண்டு நிறுவனங்களைத் தாண்டி பணம் வருவதும் போவதும் பலவிதமான தொடர்புகளை உறுதிப்படுத்துகிறது!’ என்கிறது.

இந்த விவகாரத்தில், கலைஞர் டி.வி. சுமார் 30 கோடியை வட்டியாக சினியுக் நிறுவனத்துக்கும், சினியுக் நிறுவனம் சுமார் 25 கோடியை குஸேகான் நிறுவனத்துக்கும், குஸேகான் சுமார் 23 கோடியை டைனமிக்ஸ் நிறுவனத்துக்கும் வட்டியாகக் கொடுத்து உள்ளன.

இப்படி கலைஞர் டிவிக்கு பணம் வந்த விவகாரமும், இவர்கள் திருப்பிக் கொடுத்த விவகாரமும் மிக எளிதாக ஊகிக்க முடியும் விஷயமாக இருக்கின்றபோது இதில் ஊழலே நடக்கவில்லை என்று சொல்வது படு முட்டாள்தனம்..!

இவ்வளவு பெரிய தொகையை ராசா ஒருவரே கொள்ளையடித்திருக்க முடியாது என்று கலைஞர் திருவாய் மலர்ந்தார். “அதுதான்... கூட்டணியாக உங்களது குடும்பமே சாப்பிட்டிருக்கிறதே...?” என்று சுட்டிக் காட்டியவுடன் கப்சிப்பானார்..!

“ராசா எனது மகனைப் போன்றவர்.. அவரை ஒரு நாளும் தி.மு.க. கழகம் கைவிடாது.. இந்த ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ஊழலே நடக்கவில்லை...” என்றெல்லாம் இத்தனை நாட்களாக ஊருக்கு ஊர் மைக் செட்டுகளே உடையும் அளவுக்கு கூக்குரலிட்ட தி.மு.க.வினர், இன்றைக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கலைஞர் தனது அன்பு மகள் கனிமொழியைக் காப்பாற்ற அனுப்பி வைத்த கிருஷ்ண பரமாத்மாவான ராம்ஜெத்மலானியின் வாதங்களைக் கேட்டு எந்தப் பக்கம் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை..!


ராம்ஜெத்மலானி நீதிமன்றத்தில் இன்று வாதிடுகையில்,  “கனிமொழிக்கும் ஸ்பெக்ட்ரம் வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதெல்லாம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாதான். அவர்தான் அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பு. அதில் கனிமொழி தலையிடவே இல்லை...” என்று தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார்..!

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராசா குற்றவாளி என்றால் அதற்கும் கனிமொழிக்கும், தி.மு.க.வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றுதானே பொருள்..?

இந்த நன்றியை மட்டுமா செய்துள்ளார் கலைஞர்..? அடுத்தது சரத்குமார் ரெட்டியையும் வசமாக மாட்டிவிட்டுள்ளார்..!

“கனிமொழிக்கு கலைஞர் டிவியில் 20 சதவீதம் பங்குகள்தான் உள்ளன. இவர் பங்குதாரராக இருந்தாலும் கலைஞர் டிவி நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. அவர் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை, எதையும் அமல்படுத்தவில்லை. நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் சரத்குமாரே கவனித்து வருகிறார். கலைஞர் டிவியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த கனிமொழி 2 மாதத்திலேயே அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இப்போது அவர் வெறும் பங்குதாரர் மட்டுமே...” என்று கலைஞர் டிவிக்குள் பணம் வந்த கதையை முழுக்க முழுக்க சரத்குமார் ரெட்டி மீது ராம்ஜெத்மலானி மூலமாகத் திருப்பிவிட்டிருக்கிறார்..!

பாவம் சரத்குமார்.. இந்த கலைஞருக்காக தன்னுடைய ஆத்ம நண்பர்களான கலாநிதி, தயாநிதிகளை விரோதித்துக் கொண்டு கலைஞர் டிவியை மிகக் குறுகியக் காலத்தில் துவக்க முதல் காரணமாக இருந்தார். “கண்கள் பனித்தன” வசனம் பேசிய அன்றைய இரவிலேயே தன் வீட்டிலேயே தனது மனைவி முன்பாகவே நிதி சகோதரர்களிடம் தர்ம அடி வாங்கிய பரிதாபத்திற்குரியவரும் இவரே..

இரண்டு நாட்களுக்கு முன்பாக தனது மனைவியுடன் கோபாலபுரத்திற்குப் போய் அவரைப் பார்த்து கெஞ்சிக் கூத்தாடி, தனது மனைவியை தாத்தாவின் காலில் விழுக வைத்து தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சிவிட்டு வந்திருக்கிறார்.

பாவம்.. தாத்தா, என்றைக்கும், யாருக்கும் நன்றியுடன் இருந்ததே கிடையாது என்பது அவருக்குத் தெரியாது.. இனிமேல் கலைஞர் டிவிக்கு வந்த 200 கோடி ரூபாய் பணத்திற்கான கணக்குகளை தான் மட்டுமே தனது முதுகில் சுமந்து திரிய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை இவருக்கு..!

ஒரு வகையில் இதற்கு இவரும் ஒரு வகையில் காரணம்தான். நிதி சகோதர்களால் தாக்கப்பட்ட பின்பு தனது 20 சதவிகித பங்குகளை கொடுத்துவிட்டு டிவியில் இருந்து வெளியேறுவதாக தாத்தாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அன்றோடு கலைஞர் டிவி அலுவலகத்திற்கே வராமல் தனது வீட்டில்தான் இருந்திருக்கிறார். டிவி தொடர்பான வேலைகளுக்கு தொலைபேசியில் மட்டுமே பதிலளித்து வந்ததாக கலைஞர் டிவியில் வேலை பார்ப்பவர்கள் கூறுகிறார்கள்..!

இந்த 200 கோடி ரூபாய் மர்மக் கணக்கு வெளியான பின்புதான் அவசரம், அவசரமாக அவர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு தங்களைக் காப்பாற்றும் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். அதற்குத் தலையாட்டிய பாவத்தை இன்னும் பல ஆண்டுகள் சரத்குமார் ரெட்டி அனுபவிக்கப் போகிறார். பாவம்.. தனிப்பட்ட முறையில் மிக நல்ல மனிதர் என்கிறார்கள்..!

ராம்ஜெத்மலானி மேலும் கோர்ட்டில் இன்று கூறுகையில், “கருணாநிதி மகள் என்பதால் கனிமொழி பழிவாங்கப்படுகிறார். அவர் நீதித் துறையை மதிப்பவர். எங்கும் ஓடி விட மாட்டார். எனவே, மேலும் அவர் ஒரு பெண். இந்த வகையிலாவது அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.

இந்தப் பெண் என்னும் கேடயத்தை கனிமொழிக்கு மாத்திரம் பயன்படுத்துகிறார்களே.. போயஸ் ஆத்தாவும் ஒரு பெண்தானே..? பின்பு அந்த அம்மையார் மேல் ஏன் இத்தனை வழக்கு மேல் வழக்கு போட்டு துன்புறுத்த வேண்டும்..? விட்டிருக்கலாமே..? இப்போது தான் பெற்ற மகள் என்ற உடனேயே மட்டும் தாத்தாவுக்கு பெண் என்ற வார்த்தை சிக்கியிருக்கிறதோ..? இவருக்கு ஒரு நீதி..? அடுத்தவர்களுக்கு ஒரு நீதியா..?

இதைவிடக் கொடுமை.. நேற்று இரவு ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கனிமொழி, தான் ஜாமீன் கேட்க மாட்டேன் என்றும், பெண் என்ற சலுகையை எதிர்பார்க்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். விடிந்த பொழுதில் அவர் கூறியிருந்த வாசகங்கள் பொய்யாகிப் போயிருப்பதை பார்த்தால் தாத்தாவின் நேர் வாரிசு இந்த கனிமொழிதான் என்று இப்போதே சொல்லிவிடலாம்போல் தோன்றுகிறது..!

பாவம் திருவாளர் ஆண்டிமுத்து ராசா.. தேர்தல் முடிந்ததும் எப்படியும் வெளியில் வந்துவிடலாம்.. தலைவர் தன்னை ஜாமீனில் வரவழைத்துவிடுவார் என்று விழிமேல்விழி வைத்து காத்துக் கொண்டிருந்தார். ஆனால் “தனது மகளுக்காக தன்னை நிரந்தரமாக அங்கேயே தங்க வைக்க ஏற்பாடுகளை செய்திருக்கிறார் தலைவர்..” என்பதைக் கேள்விப்பட்டு அவர் என்ன பாடுபடுகிறாரோ தெரியவில்லை..!

தான் கைது செய்யப்பட்டதும் தன் தலைவர் கூட்டணியை முறித்துக் கொண்டு, தன்னை பகடைக் காயாக வைத்து மத்திய அரசை உருட்டியெடுப்பார் என்று ராசா நினைத்திருப்பார். அதுவும் பொய்யாகிப் போனது..! மத்திய அரசுக்கு எதிராக இம்மியளவுகூட எதிர்ப்பை காட்டாமல் நீ உள்ளயே இரு ராசா.. சட்டப்படி நாம வெளில வந்திரலாம் என்று தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தியிருக்கிறது.


மகள் கைது செய்யப்படாமல் அவருடைய பெயர் குற்றப்பத்திரிகையில் வந்தவுடனேயே, தி.மு.க.வின் உயர் மட்டக் குழுவைக் கூட்டி நடவடிக்கை எடுக்கும் சூழலுக்கு போகத் துணிந்த தாத்தாவுக்கு, ஆண்டிமுத்து ராசா என்னும் தலித்திய தமிழனொருவன், தன்னை நம்பி, தனது குடும்பத்துக்காக, தனது எட்டு தலைமுறைகளுக்காக முறைகேடாக சம்பாதித்துக் கொடுத்திருக்கும் அந்தத் தங்கக் கம்பி... சிறையில் வாடுகிறானே என்பதெல்லாம் பெரும் கொடுமையாகத் தெரியவில்லை..

ஆனால் தான் பெற்றெடுத்த அருமை மகள் கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிகையில் வந்தவுடனேயே.. அவர் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்ட உடனேயே அவருடைய ரத்தம் கொதிக்கிறது.. உள்ளம் அடங்க மறுக்கிறது.. அந்த மனைவியின் வீட்டிற்குப் போக உடல் துடித்தாலும் உள்ளம் மறுக்கிறது.. இப்படி ஏற்கெனவே சொன்னதுபோல நவீன திருதராஷ்டினாக காட்சியளிக்கும் கலைஞரின் ஓரங்க நாடகத்தில் தான் கடைசியில் பபூனாகப்பட்டிருக்கிறோம் என்பதை ஆண்டிமுத்து ராசா இன்றைக்கு கொஞ்சமாவது உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்..! 

இன்றைக்குக்கூட 2 பேரின் ஜாமீன் மனுவை நிராகரித்திருக்கும் சி.பி.ஐ. கோர்ட், நாளைக்கு கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனுக்களை ஏற்கும் என்று நான் நம்பவில்லை..! இன்றைக்கே சி.பி.ஐ.யும் இவர்களின் ஜாமீன் மனுவை எதிர்த்து வாதாடியிருக்கிறது..!


உப்பைத் தின்னவன் தண்ணி குடித்தே ஆகணும் என்பார்கள்.. இது கனிமொழிக்கு நாளைக்குப் பொருந்தத்தான் போகிறது. உடன் இருந்த பாவத்திற்காக பாவம் சரத்குமாரும் உள்ளே போகப் போகிறார்..!

'தகத்தகாய கதிரவனான' ஆண்டிமுத்து ராசா, இந்த ஒன்றை மட்டுமே எண்ணி இப்போதைக்குக் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..! வேறு வழியில்லை..!

97 comments:

Unknown said...

//இந்தப் பெண் என்னும் கேடயத்தை கனிமொழிக்கு மாத்திரம் பயன்படுத்துகிறார்களே.. போயஸ் ஆத்தாவும் ஒரு பெண்தானே..? பின்பு அந்த அம்மையார் மேல் ஏன் இத்தனை வழக்கு மேல் வழக்கு போட்டு துன்புறுத்த வேண்டும்..? விட்டிருக்கலாமே..? இப்போது தான் பெற்ற மகள் என்ற உடனேயே மட்டும் தாத்தாவுக்கு பெண் என்ற வார்த்தை சிக்கியிருக்கிறதோ..? இவருக்கு ஒரு நீதி..? அடுத்தவர்களுக்கு ஒரு நீதியா..?//

அருமை அண்ணா! கலக்கிட்டிங்க...

செம்மலர் செல்வன் said...

அண்ணே,நல்ல பதிவு.

pichaikaaran said...

அண்ணே. மிக சிறப்பான சேவை செய்து வருகிறீர்கள் . செய்திகளுடன் உங்கள் கருத்துக்களையும் தருவதுதான் பெரிய பிளஸ் . உங்களை போன்றவர்களின் உழைப்புக்கு மரியாதை தரும் வகையில் நல்லதொரு தீர்ப்பு வர , எல்லாம் வல்ல இயற்கை அருளட்டும்

இராஜ ப்ரியன் said...

தமிழ்கர்களே...... தமிழர்களே....... என்னை நீங்கள் ஜெயிலில் தூக்கிப்போட்டாலும் ஊழல் புரிவேன், என்னை நீங்கள் திருடன் எனலாம். திருந்தி விடமாட்டேன்.

-திருட்டினத் தலைவன்.

ஜோதிஜி said...

எதிர்காலத்தில் இந்த ஸ்பெக்ட்ரம் குறித்து மேலாண்மை கல்லூரியில் ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டும் என்று எவராவது நினைத்தால் உங்கள் ஒரு தளம் மட்டுமே போதுமானது.

Sketch Sahul said...

அருமை கலக்கிட்டிங்க..

krishna said...

வக்கீல் என்றால் அவர்களுக்கு மனசாட்சி என்பதே கிடையாதா.. உண்மை நேர்மை நீதி எதையும் மனதில் கொள்ளமாட்டார்களா? ஊருக்கே தெரிந்த உண்மையை இப்படி சட்டத்தை வைத்து மறைக்க பார்க்கிறாரே ஜெத்மலானி...அரசியல்வாதி என்பதை அவரும் நிரூபித்து விட்டாரே...குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும்...கலைஞரின் மகள் என்பதால் எதிர் கட்சியான பிஜேபி கூட அவர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ள்வதை போல ஜெத்மலானி அவருக்காக ஆஜர் ஆகிறாரே...யாரைத்தான் நம்புவது..எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாக இருக்கின்றனரே...மறுபடியும் சாதிக்கை போல சரத்குமாரையும் மாட்டிவிட பார்க்கின்றனர்..படித்தவன் தான் இப்படிப்பட்ட கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளுக்கு உதவுகிறான்...எப்போது இந்த நிலை மாறுமோ...கடவுளுக்கே வெளிச்சம்...

Seshadri said...

As per the current situation mr.sarath may be choose sadiq path (committing suicide may expect)

Did u noticed earlier, when kalainar TV starting time, all the decisions were taken in emotion mood not in wise decision.

(counter to Sun TV immediately)

this is the difference between Sun TV and Kalanar TV (Professional and non pro..)

Anonymous said...

அண்ணே ..,

தக்காளி போட்டு தாளிசிருக்கேள் ..,வெயிட் பண்ணுங்கோல் ..,துண்ட காணோம் ,துணிய காணோம் ..,ஓட விடுறோம் ..,எங்க போஸ்ட் மார்டம் கிரௌன்ட்ல ..,இந்த லக் லக் ..,க்கி ..,லுக் ( இருமல் அண்ணே ) அவர மட்டும் வர சொல்லுங்க ப்ளீஸ்

Anonymous said...

அண்ணே ..,ப்ளீஸ் ..,மறுபடியும் பார்ரா (லக் க்கி இருமல் ) அண்ணே அவர மட்டும் வந்தும் பின்னூட்டம் இட சொல்லுங்க ப்ளீஸ்

அகில் பூங்குன்றன் said...

Uncle, intha mathiri nirya eluthunga. ootum pottu irukken. JV copy paste vendam. athaithan angeye padikkirome..

ராஜ நடராஜன் said...

//“கண்கள் பனித்தன” வசனம் பேசிய அன்றைய இரவிலேயே தன் வீட்டிலேயே தனது மனைவி முன்பாகவே நிதி சகோதரர்களிடம் தர்ம அடி வாங்கிய பரிதாபத்திற்குரியவரும் இவரே..//

இந்தக் கதையை நீங்க சொன்னமாதிரி எனக்கு ஞாபகமேயில்லையே!

ராஜ நடராஜன் said...

//இந்தப் பெண் என்னும் கேடயத்தை கனிமொழிக்கு மாத்திரம் பயன்படுத்துகிறார்களே..//

இந்த வரி சரிதான்.ஆனால் அதுக்குப் பின்பு வாய்தா மகாராணிக்கு வக்காலத்து வாங்குனது கொடுமை.

அதுக்கு நளினிக்கு சிபாரிசு செய்திருந்தாலாவது மனிதாபிமானம் வெளிப்பட்டிருக்கும்.

ராஜ நடராஜன் said...

//எதிர்காலத்தில் இந்த ஸ்பெக்ட்ரம் குறித்து மேலாண்மை கல்லூரியில் ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டும் என்று எவராவது நினைத்தால் உங்கள் ஒரு தளம் மட்டுமே போதுமானது.//

அண்ணே!இனிமேல் காப்பி,டீன்னு யாராவது வித்துகிட்டு வந்தா குமட்டுலேயே குத்துவேன்....போர்டை முதல்ல படிங்கய்யா சொல்லுங்க:)

Namy said...

I am hailing from A.Raja native place. He did lot of works in Perambalur constituency. He very loyal to Karuna , now face the consequence.

ஸ்ரீராம். said...

இவர்களுக்குள் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பது போல வாதிடுவது, பேசுவது, எல்லாமே செட் அப்தான். பிறகு ஒருவரைக் காட்டி மற்றொருவர் வெளியில் வரலாம். சுப்ரீம் கோர்ட் ஆணையால் வேறு வழி இல்லாமல் நடக்கும் இந்த நாடகம் நல்ல படி கதை வசனம் எழுதப் பட்டிருக்கும். இப்போது ஆரம்பக் காட்சிகளில் இருக்கிறோம். இடைக் காட்சிகளில் நகத்தைக் கடிப்போம்...கண் கலந்குவோம்...டென்ஷன் ஆவோம்...முடிவில் வழக்கம் போல பிறழ் சாட்சிகள், நிரூபிக்கப் படவில்லை போன்ற வசனங்களுடன் இனிய முடிவு...
"எல்லாம் மாயைதானா பேதை எண்ணம் யாவும் வீணா ஏழை எந்தன் வாழ்வில் இனி இன்பம் காண்பேனா.." இந்தப் பாடலை தரவிறக்கி கேட்க வேண்டும்!

Unknown said...

அவர் பாவம் பெண் தானே. பிழைத்துப் போகட்டும். பெண் என்றால் பேயே இரங்கும். நீதிபதி இரங்க மாட்டாரா.

உண்மைத்தமிழன் said...

[[[யோவ் said...

//இந்தப் பெண் என்னும் கேடயத்தை கனிமொழிக்கு மாத்திரம் பயன்படுத்துகிறார்களே.. போயஸ் ஆத்தாவும் ஒரு பெண்தானே..? பின்பு அந்த அம்மையார் மேல் ஏன் இத்தனை வழக்கு மேல் வழக்கு போட்டு துன்புறுத்த வேண்டும்..? விட்டிருக்கலாமே..? இப்போது தான் பெற்ற மகள் என்ற உடனேயே மட்டும் தாத்தாவுக்கு பெண் என்ற வார்த்தை சிக்கியிருக்கிறதோ..? இவருக்கு ஒரு நீதி..? அடுத்தவர்களுக்கு ஒரு நீதியா..?//

அருமை அண்ணா! கலக்கிட்டிங்க...]]]

-))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[செம்மலர் செல்வன் said...

அண்ணே, நல்ல பதிவு.]]]

நன்றி செல்வன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

அண்ணே. மிக சிறப்பான சேவை செய்து வருகிறீர்கள். செய்திகளுடன் உங்கள் கருத்துக்களையும் தருவதுதான் பெரிய பிளஸ். உங்களை போன்றவர்களின் உழைப்புக்கு மரியாதை தரும் வகையில் நல்லதொரு தீர்ப்பு வர, எல்லாம் வல்ல இயற்கை அருளட்டும்.]]]

உங்களது வாக்கு பலிக்கட்டும் பார்வை..! நன்றியோ நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[இராஜ ப்ரியன் said...

தமிழ்கர்களே தமிழர்களே... என்னை நீங்கள் ஜெயிலில் தூக்கிப் போட்டாலும் ஊழல் புரிவேன், என்னை நீங்கள் திருடன் எனலாம். ஆனாலும் திருந்த மாட்டேன்.

- திருட்டினத் தலைவன்.]]]

இப்படியிருந்தால் இன்னும் நல்லாயிருக்கு ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

எதிர்காலத்தில் இந்த ஸ்பெக்ட்ரம் குறித்து மேலாண்மை கல்லூரியில் ஆய்வுக் கட்டுரை எழுத வேண்டும் என்று எவராவது நினைத்தால் உங்கள் ஒரு தளம் மட்டுமே போதுமானது.]]]

அதற்காகத்தான் இந்த உழைப்பு...!

உண்மைத்தமிழன் said...

[[[Sketch Sahul said...

அருமை கலக்கிட்டிங்க..]]]

மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...

வக்கீல் என்றால் அவர்களுக்கு மனசாட்சி என்பதே கிடையாதா.. உண்மை நேர்மை நீதி எதையும் மனதில் கொள்ள மாட்டார்களா? ஊருக்கே தெரிந்த உண்மையை இப்படி சட்டத்தை வைத்து மறைக்க பார்க்கிறாரே ஜெத்மலானி. அரசியல்வாதி என்பதை அவரும் நிரூபித்து விட்டாரே. குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். கலைஞரின் மகள் என்பதால் எதிர் கட்சியான பிஜேபிகூட அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வதைபோல ஜெத்மலானி அவருக்காக ஆஜர் ஆகிறாரே. யாரைத்தான் நம்புவது. எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாக இருக்கின்றனரே. மறுபடியும் சாதிக்கை போல சரத்குமாரையும் மாட்டிவிட பார்க்கின்றனர். படித்தவன்தான் இப்படிப்பட்ட கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளுக்கு உதவுகிறான். எப்போது இந்த நிலை மாறுமோ. கடவுளுக்கே வெளிச்சம்.]]]

எல்லாவற்றுக்கும் அடிப்படையான காரணம் பணமும், புகழும், பதவியும்தான்..!

இதற்கு ராம்ஜெத்மலானியும் விதிவிலக்கல்ல..!

உண்மைத்தமிழன் said...

[[[Seshadri said...

As per the current situation mr.sarath may be choose sadiq path (committing suicide may expect)

Did u noticed earlier, when kalainar TV starting time, all the decisions were taken in emotion mood not in wise decision.
(counter to Sun TV immediately)
this is the difference between Sun TV and Kalanar TV (Professional and non pro..)]]]

ஆரம்பித்தபோதே நீங்கள் ஒன்று சேர்ந்து என்னை மாட்டிவிட மாட்டீர்களே என்றெல்லாம் கேட்டு, சாதகமான பதில் வந்த பின்புதான் பணியில் சேர்ந்துள்ளார் சரத்.. ஆனால் கலைஞரின் குணம் அவருக்குத் தெரியாததால் இப்போது மாட்டிக் கொண்டு முழிக்கிறார்..!

உண்மைத்தமிழன் said...

[[[பனங்காட்டு நரி said...

அண்ணே, தக்காளி போட்டு தாளிசிருக்கேள். வெயிட் பண்ணுங்கோல் ..,துண்ட காணோம் ,துணிய காணோம் ..,ஓட விடுறோம் ..,எங்க போஸ்ட் மார்டம் கிரௌன்ட்ல ..,இந்த லக் லக் ..,க்கி ..,லுக் ( இருமல் அண்ணே ) அவர மட்டும் வர சொல்லுங்க ப்ளீஸ்..]]]

ஏன் இந்தக் கொலை வெறி..? நான் நல்லாயிருக்கிறதும் உமக்குப் பிடிக்கலையா..?

உண்மைத்தமிழன் said...

[[[பனங்காட்டு நரி said...

அண்ணே ..,ப்ளீஸ் ..,மறுபடியும் பார்ரா (லக் க்கி இருமல் ) அண்ணே அவர மட்டும் வந்தும் பின்னூட்டம் இட சொல்லுங்க ப்ளீஸ்..]]]

-))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...

Uncle, intha mathiri nirya eluthunga. ootum pottu irukken. JV copy paste vendam. athaithan angeye padikkirome..]]]

என்னது அங்கிளா..? அண்ணன்.. நான் சின்னப் பையன்ண்ணே.. இதெல்லாம் வேண்டாம்..!

ஜூ.வி.யை படிக்காதவங்களும் இங்க நிறைய பேர் இருக்காங்கண்ணே.. அவங்களுக்காகத்தான் எழுதுறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//“கண்கள் பனித்தன” வசனம் பேசிய அன்றைய இரவிலேயே தன் வீட்டிலேயே தனது மனைவி முன்பாகவே நிதி சகோதரர்களிடம் தர்ம அடி வாங்கிய பரிதாபத்திற்குரியவரும் இவரே..//

இந்தக் கதையை நீங்க சொன்ன மாதிரி எனக்கு ஞாபகமேயில்லையே!]]]

ஆமாம்.. எழுதலைதான்..! விடுங்க.. பாவம் சரத் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//இந்தப் பெண் என்னும் கேடயத்தை கனிமொழிக்கு மாத்திரம் பயன்படுத்துகிறார்களே..//

இந்த வரி சரிதான். ஆனால் அதுக்குப் பின்பு வாய்தா மகாராணிக்கு வக்காலத்து வாங்குனது கொடுமை. அதுக்கு நளினிக்கு சிபாரிசு செய்திருந்தாலாவது மனிதாபிமானம் வெளிப்பட்டிருக்கும்.]]]

இருவருக்கும் அடிப்படையானது ஊழல். அதனால்தான் ஒப்பிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//எதிர்காலத்தில் இந்த ஸ்பெக்ட்ரம் குறித்து மேலாண்மை கல்லூரியில் ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டும் என்று எவராவது நினைத்தால் உங்கள் ஒரு தளம் மட்டுமே போதுமானது.//

அண்ணே! இனிமேல் காப்பி, டீன்னு யாராவது வித்துகிட்டு வந்தா குமட்டுலேயே குத்துவேன். போர்டை முதல்ல படிங்கய்யா சொல்லுங்க:)]]]

அது அப்பப்போ.. செய்தியின் முக்கியத்துவத்தை பார்த்து வெளிவரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Namy said...

I am hailing from A.Raja native place. He did lot of works in Perambalur constituency. He very loyal to Karuna, now face the consequence.]]]

கொஞ்சம் முதலீடு செஞ்சு நிறைய லாபம் பார்க்குறதில்லையா..? அது மாதிரிதான் ஓட்டுக்கு 200 கொடுத்துட்டு 200 கோடி அள்ளிட்டுப் போறது.. அதுல ஒண்ணுதான் தொகுதிக்கு நிறைய செஞ்சதா சீன் காட்டுறது..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

இவர்களுக்குள் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பது போல வாதிடுவது, பேசுவது, எல்லாமே செட்அப்தான். பிறகு ஒருவரைக் காட்டி மற்றொருவர் வெளியில் வரலாம். சுப்ரீம் கோர்ட் ஆணையால் வேறு வழி இல்லாமல் நடக்கும் இந்த நாடகம் நல்லபடி கதை வசனம் எழுதப்பட்டிருக்கும். இப்போது ஆரம்பக் காட்சிகளில் இருக்கிறோம். இடைக் காட்சிகளில் நகத்தைக் கடிப்போம். கண் கலந்குவோம். டென்ஷன் ஆவோம். முடிவில் வழக்கம் போல பிறழ் சாட்சிகள், நிரூபிக்கப்படவில்லை போன்ற வசனங்களுடன் இனிய முடிவு.
"எல்லாம் மாயைதானா பேதை எண்ணம் யாவும் வீணா ஏழை எந்தன் வாழ்வில் இனி இன்பம் காண்பேனா.." இந்தப் பாடலை தரவிறக்கி கேட்க வேண்டும்!]]]

இந்த முறை இது நடக்காது என்றே நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...

அவர் பாவம் பெண்தானே. பிழைத்துப் போகட்டும். பெண் என்றால் பேயே இரங்கும். நீதிபதி இரங்க மாட்டாரா.]]]

அப்படீன்னா ஜெயலலிதாவையும் விடுதலை செய்யச் சொல்லி தி.மு.க. தலைவர் சொல்வாரா..?

ரிஷி said...

கட்டுரை மிகவும் விளக்கமாக இருக்கிறது. இதற்குள் எப்படி ராம்ஜெத்மலானி பூந்து விளையாடப்போகிறார் என்பது இனி சுவாரஸியமான விஷயமாக இருக்கும். மே 14ம் தேதிக்கு ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்கள்.. பார்த்தீர்களா..! கடைந்தெடுத்த அயோக்கியர்கள்! மே13ம் தேதி ரிஸல்ட் தெரிந்துவிடும். திமுக கூட்டணி முன்னிலை பெற்றால் காங்கிரஸ் முக்கிய இலாகாக்களைக் கேட்டு கருணாநிதியைக் குடையும். அப்படிக் கொடுப்பதாக ஒப்புக்கொள்ளூம் பட்சத்தில் கனிமொழி மீதான கைது நடவடிக்கை இருக்காது. இல்லையென்றால் கனிமொழி கழியவேண்டியதுதான்!!

சோனியா திரைக்கதை எழுத, அதை கருணாநிதி மாற்றியமைக்க எத்தனிக்க, மறுபடியும் சோனியா அதை திருத்தியமைக்க.... சதுரங்க ஆட்டத்தில் வெற்றிபெறப்போவது யார் எனப்பார்ப்போம்!!

Sundar said...

சரியாக சொன்னீர்கள் ரிஷி. நானும் இதைத்தான் சொல்ல வந்தேம்... மே 13 முடிவு, தொங்கு முடிவாக இருந்தால், அண்டொனோ மோனியோவிற்க்கு (பெயர் சரிதானா?) சுக்கிரதிசைதான். தாத்தா அல்லது அம்மா, யார் முன்னிலையில் இருந்தாலும், பேரம் பேசுவதற்க்கு வசதியாக இருக்கும்.

இவர்கள் வெறுமனே திரைக்கதை எழுதினால் பரவாயில்லை. இவர்கள் பேனாவில் இருப்பது தமிழக/இந்திய தலையெழ்த்து என்று நினைக்கும்போது கவலையாக இருக்கிறது...

இதில் இன்னொரு வேடிக்கை, பி.ஜே.பி-யின் எம்.பி. அவர்களின் எதிர் கட்சி எம்.பி. சார்பாக வாதிடுகிறார். எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் எல்லோரும், பாராளுமன்றத்தில் இந்த பிரச்சனையை பேசுவார்கள்.

வாழ்க ஜனநாயகம்!

Melvin said...

ஐயா,

உண்மை தமிழரே. நீங்கள் என் ஜெயா அம்மாவை பற்றி எழுதுவது இல்லை. ஏதும் நன்றி கடனா? அனைத்து பிரச்சினைகளையும் இரு கண் கொண்டு அலசி நியாயமாக நடந்து கொள்ளுங்கள். மற்றும் இனிமேல் சுயமாக மற்றும் சொந்தமாக கருத்துகளை பதிவு செயுங்கள். நன்றி.

சார்லஸ்...

krishna said...

இருந்தா எழுதாமல் விடுவாரா....இப்போதைய உயிர் பிரச்னை தண்ணீர்...எனவே அதை பருகி உயிரை தக்க வைப்போம்...காலில் பட்ட காயத்திற்கு பிறகு மருந்திடுவோம்...

krishna said...

இருந்தா எழுதாமல் விடுவாரா....இப்போதைய உயிர் பிரச்னை தண்ணீர்...எனவே அதை பருகி உயிரை தக்க வைப்போம்...காலில் பட்ட காயத்திற்கு பிறகு மருந்திடுவோம்...

Unknown said...

///[[[ananth said...

அவர் பாவம் பெண்தானே. பிழைத்துப் போகட்டும். பெண் என்றால் பேயே இரங்கும். நீதிபதி இரங்க மாட்டாரா.]]]

அப்படீன்னா ஜெயலலிதாவையும் விடுதலை செய்யச் சொல்லி தி.மு.க. தலைவர் சொல்வாரா..?///

அவரை விடுங்கள். நம்மையே எடுத்துக் கொள்வோம். நமக்கு எதிராக அரசியல் நடத்துபவரை விட்டு விட்டு நமக்கு ரத்த சம்பந்தம் உள்ளவரை சிறையில் அடைக்க சொல்வோமா. அப்படி சொல்ல நாம் என்ன ம‌னு நீதி சோழனா. தவறு செய்தது தன் மகன் என்றாலும் தேர்காலில் விட்டு சிரச்சேதம் செய்ய சொல்வதற்கு.

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

கட்டுரை மிகவும் விளக்கமாக இருக்கிறது. இதற்குள் எப்படி ராம்ஜெத்மலானி பூந்து விளையாடப்போகிறார் என்பது இனி சுவாரஸியமான விஷயமாக இருக்கும். மே 14ம் தேதிக்கு ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்கள்.. பார்த்தீர்களா..! கடைந்தெடுத்த அயோக்கியர்கள்! மே13ம் தேதி ரிஸல்ட் தெரிந்துவிடும். திமுக கூட்டணி முன்னிலை பெற்றால் காங்கிரஸ் முக்கிய இலாகாக்களைக் கேட்டு கருணாநிதியைக் குடையும். அப்படிக் கொடுப்பதாக ஒப்புக்கொள்ளூம் பட்சத்தில் கனிமொழி மீதான கைது நடவடிக்கை இருக்காது. இல்லையென்றால் கனிமொழி கழியவேண்டியதுதான்!!

சோனியா திரைக்கதை எழுத, அதை கருணாநிதி மாற்றியமைக்க எத்தனிக்க, மறுபடியும் சோனியா அதை திருத்தியமைக்க.... சதுரங்க ஆட்டத்தில் வெற்றிபெறப்போவது யார் எனப்பார்ப்போம்!!]]]

பார்க்கலாம்... இந்த ஆட்டம் எங்கே போய் முடியப் போகிறதென்று..?

மு.சரவணக்குமார் said...

ராம் செத்மலானி கோர்ட்டில் பேசியவைகளை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என சந்தேகிக்கிறேன். அல்லது அவர் கூறியதை உங்களுக்கு சாதகமாக திரித்து எழுதியிருக்கலாம்.

ராசாவை திமுக காட்டிக் கொடுத்துவிட்டது என்பதைப் போல ஒரு பிம்பத்தை உருவாக்கிட வலிந்து எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

உங்களின் திடீர் தலித்பாசம் சிலிர்க்க வைக்கிறது.

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

சரியாக சொன்னீர்கள் ரிஷி. நானும் இதைத்தான் சொல்ல வந்தேம்... மே 13 முடிவு, தொங்கு முடிவாக இருந்தால், அண்டொனோ மோனியோவிற்க்கு (பெயர் சரிதானா?) சுக்கிரதிசைதான். தாத்தா அல்லது அம்மா, யார் முன்னிலையில் இருந்தாலும், பேரம் பேசுவதற்க்கு வசதியாக இருக்கும்.

இவர்கள் வெறுமனே திரைக்கதை எழுதினால் பரவாயில்லை. இவர்கள் பேனாவில் இருப்பது தமிழக/இந்திய தலையெழ்த்து என்று நினைக்கும்போது கவலையாக இருக்கிறது...

இதில் இன்னொரு வேடிக்கை, பி.ஜே.பி-யின் எம்.பி. அவர்களின் எதிர் கட்சி எம்.பி. சார்பாக வாதிடுகிறார். எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் எல்லோரும், பாராளுமன்றத்தில் இந்த பிரச்சனையை பேசுவார்கள்.

வாழ்க ஜனநாயகம்!]]]

அரசியல்வியாதிகள் என்று இதனால்தான் சொல்கிறேன்..! ராம்ஜெத்மலானிக்கு மனசாட்சி இருந்தால் இதில் கொள்ளையடித்தவர்களுக்காக வாதாடுவாரா..? அவருடைய கட்சி ஒரு பக்கம் குற்றவாளிகளை விடக் கூடாது என்று அறைகூவல் விட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் தனது கட்சி எம்.பி.யே காப்பாற்றுவதை வேடிக்கை பார்க்கிறது..! கேவலம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Melvin said...

ஐயா, உண்மை தமிழரே. நீங்கள் என் ஜெயா அம்மாவை பற்றி எழுதுவது இல்லை. ஏதும் நன்றி கடனா? அனைத்து பிரச்சினைகளையும் இரு கண் கொண்டு அலசி நியாயமாக நடந்து கொள்ளுங்கள். மற்றும் இனிமேல் சுயமாக மற்றும் சொந்தமாக கருத்துகளை பதிவு செயுங்கள். நன்றி.

சார்லஸ்...]]]

ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கெடுத்திருப்பது ஜெயலலிதாவாக இருந்தால் இந்நேரம் அவரைப் பற்றியும் இப்படித்தான் எழுதுவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...

இருந்தா எழுதாமல் விடுவாரா.. இப்போதைய உயிர் பிரச்னை தண்ணீர்...எனவே அதை பருகி உயிரை தக்க வைப்போம். காலில் பட்ட காயத்திற்கு பிறகு மருந்திடுவோம்...]]]

கிருஷ்ணா புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...

///[[[ananth said...

அவர் பாவம் பெண்தானே. பிழைத்துப் போகட்டும். பெண் என்றால் பேயே இரங்கும். நீதிபதி இரங்க மாட்டாரா.]]]

அப்படீன்னா ஜெயலலிதாவையும் விடுதலை செய்யச் சொல்லி தி.மு.க. தலைவர் சொல்வாரா..?///

அவரை விடுங்கள். நம்மையே எடுத்துக் கொள்வோம். நமக்கு எதிராக அரசியல் நடத்துபவரை விட்டு விட்டு நமக்கு ரத்த சம்பந்தம் உள்ளவரை சிறையில் அடைக்க சொல்வோமா. அப்படி சொல்ல நாம் என்ன ம‌னு நீதி சோழனா. தவறு செய்தது தன் மகன் என்றாலும் தேர்காலில் விட்டு சிரச்சேதம் செய்ய சொல்வதற்கு.]]]

ம்.. இப்படி ஒரு கோணமும் இருக்கா.. சரிதான்..! இதை வெளிப்படையா சொல்லிட்டுச் செய்யலாமே..? ஏன் நாடகம்..?

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

ராம் செத்மலானி கோர்ட்டில் பேசியவைகளை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என சந்தேகிக்கிறேன். அல்லது அவர் கூறியதை உங்களுக்கு சாதகமாக திரித்து எழுதியிருக்கலாம்.

ராசாவை திமுக காட்டிக் கொடுத்துவிட்டது என்பதைப் போல ஒரு பிம்பத்தை உருவாக்கிட வலிந்து எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்களின் திடீர் தலித் பாசம் சிலிர்க்க வைக்கிறது.]]]

தலித் பாசமா..? அப்போ தாத்தா இத்தனை நாளா சொல்லிட்டிருந்தது மட்டும் பாசமில்லையா? நானே இப்போத்தான் முதல் முறையா ராசாவைப் பத்தி தலித் என்று சொல்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். உடனேயே பாசமா..? முழுசா படிங்கண்ணே..!

Unknown said...

உண்மைத்தமிழன் அவர்களுக்கு! ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் கனிமொழி, ராசா, கலைஞர் மீது இவ்வளவு தவறுகள் இருப்பதாக இவ்வளவு நாட்களாக நீங்களும் மாங்கு மாங்கு என்று எழுதி வருகிறீர்கள்.

உண்மையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு என்பது அமைச்சரவை உயர்மட்ட குழு ஒப்புதல் இல்லாமல் நடந்து இருக்காது. நிச்சயம் பிரதமருக்கு தெரியாமல் அவரது ஒப்புதல் கோப்புகளில் பெறாமல் ஒதுக்கீடு நடக்க சாத்தியமே இல்லை.

Unknown said...

தனக்கு கீழுள்ள அமைச்சர் ஒரு தவறான கொள்கை முடிவை எடுக்கிறார் அதற்கு பிரதமர் ஒப்புதல் அளிக்கிறார் என்றால் என்ன பொருள். பிரதமருக்கு வேறு ஒரு உயர்ந்த இடத்திலிருந்து நெருக்கடி இருந்தது என்றுதானே பொருள்.

சுப்பிரமணிய சுவாமி சோனியாகாந்தியின் தலையீடு இருப்பதால்தான் மன்மோகன் சிங் ஒப்புதல் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார் என்று குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு உங்கள் தரப்பு வாதம் என்ன? எந்த வகையான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது எடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது எழுதியதுண்டா!.

Unknown said...

உங்கள் புலனாய்வு எல்லாம் திமுகவும், கருணா குடும்பத்தினருக்கு மட்டும் தானா?. கலைஞர் டிவிக்கு 215 கோடி பண பரிமாற்றத்திற்கு கிட்ட தட்ட ஒரு வருடமாக எழுதிவரும் நீங்கள் மீதமுள்ள பணம் யார் யார் கை மாறியது. காங்கிரஸ் தலைகளின் பங்கு பற்றி ஏன் தொடர்ந்து விமர்சிக்கவில்லை.

அல்லது அவர்களைப்பற்றிய செய்தி உங்கள் கவனத்திற்கு வரவில்லையெனில் என்ன பொருள். சிபிஐ விசாரணை ஏன் மன்மோகன் சிங்கை நோக்கி பாயவில்லை. அதிகாரம் அவர்களிடம் உள்ளது என்பதால் தானே அவர்கள் தரப்பு விசாரணை கூட செய்யப்படவில்லை. எனவேதான் அதுபற்றிய செய்திகளும் வரவில்லை. நீங்களும் காப்பி பேஸ்ட் செய்ய முடியவில்லை.

Unknown said...

சட்டமும், நீதியும் ஒன்று என்றால் அனைவருக்கும் சமமாகதானே இருக்க வேண்டும். அதிகாரத்தில் வலிந்த காங்கிரஸ் தங்களுக்கு பேரம் பேச எடுத்துக்கொண்ட ஆயுதம் தான் ஸ்பெக்ட்ரம்.

உண்மையில் நீங்கள் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை மக்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டுமென்றால் முக்கால்வாசி கொள்ளையடித்த காங்கிரஸ் தலைகளின் பங்குபற்றிய செய்திகளை அல்லவா எழுதியிருக்க வேண்டும்.

அது இருக்கட்டும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தவறானது என்று நீதிமன்றம் விசாரிக்கிறது. பொது கணக்கு குழு அறிக்கை அளிக்கிறது. ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒப்பந்தங்கள் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. மீண்டும் ஏல முறை நடைபெற எந்தவித முயற்சியும் நடைபெறவில்லை. நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படவில்லை, அபராதம் விதிக்கப்படவில்லை

Unknown said...

இதற்கெல்லாம் யார் காரணம். தற்போது காங்கிரஸ்சின் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருக்கும் கபில்சிபல் அல்லவா. அவரைப்பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை. அவரை துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஏன் அறிவுறுத்தவில்லை. அப்படியெனில் போனது போனதுமட்டுமல்லாமல் இன்னும் இழப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனவே.

இவற்றையெல்லாம் நீங்கள் எழுதவில்லை. உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கலைஞர் குடும்பமும், ஈழப்பிரச்சனையில் கலைஞர் தலையீடு செய்யாததால் ஏற்பட்ட கோபமும் தான். விஷமரத்தின் வேரை விட்டுவிட்டு கிளையை வெட்டிக்கொண்டிருக்கும் உங்கள் புத்திசாலிதனத்தை என்னவென்று சொல்வது.

Unknown said...

ஸ்பெக்ட்ரம் என்று இல்லை நாட்டில் உள்ள அனைத்து ஊழல்களும் நடந்தால் நடந்ததுதான் அது திரும்பி வந்நதாக வரலாறு இல்லை. ஆனால் வழக்குகள் மட்டும் அரசியல் கட்சிகளின் சுய லாபங்களுக்கான ஆடுபுலி ஆட்டமாக ஆடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இனிமேலாவது உண்மைத்தமிழன் என்ற பெயருக்கு ஏற்றவாறு உண்மையான தகவல்களை உண்மையான நோக்கத்துடன் எழுத முயலுங்கள். இல்லவிட்டால் உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு எழுதிவந்தால் வலையுலகிலும் வாசகர்கள் மத்தியிலும் நீங்கள் பொய்த்தமிழனாக அறியப்படுவீர்கள் என்பது உறுதி.

krishna said...

அய்யா..எதோ அவருக்கு தெரிந்தவரை எழுதி வருகிறார்..நீங்கள் என்ன என்றால் அவரை சிபிஐ அளவிற்கு நினைத்துக்கொண்டு விவரமாக ஆதி முதல் அந்தம் வரை ச்பெக்ட்ரும் குறித்தும் அதில் ஈடுபட்டவர்கள் குறித்தும் எழுத சொல்கிறீர்கள். இது வரை அந்த சிபிஐ கூட முழுமையாக விசாரணையை முடித்ததா என்று தெரியவில்லை..தோண்ட தோண்ட பல பூதங்கள் வந்துகொண்டு இருக்கின்றன...முடிந்தவரை அவரும் தோண்டி துருவி எழுதிதான் வருகிறார்..அது பொறுக்கவில்லையா..ஆகமொத்தம் இப்படி எழுதிவருபவர்களையும் நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா...நுனி மரம்..வேர் என்பதெல்லாம் தாண்டி இப்போது இந்த விஷயம் நாட்டின் பாதுகாப்பு எனும் நிலம் வரை விஷமாய் பரவிவிட்டது...உங்களுக்கு அதை பற்றி தெரிந்தால் விரிவாக நீங்களும் எழுதலாமே..

Unknown said...

krishna அவர்களே சிபிஐ முழுமையான விசாரணை எல்லாம் எப்போதும் செய்யாது செய்யவும் முடியாது.

///முடிந்தவரை அவரும் தோண்டி துருவி எழுதிதான் வருகிறார்..///

அவர் தோண்டுவதும் துருவுவதும் கருணாவை சுற்றியே. ஸ்பெக்ட்ரம் குறித்து எதாவது செய்தி கிடைத்தாலும் அதில் நம் கருணாவை எப்படி சம்பந்தப்படுத்தி எழுதலாம் என்பதே அவருடைய நோக்கம்.

///ஆகமொத்தம் இப்படி எழுதிவருபவர்களையும் நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா..///

ஆளானப்பட்ட எதிர்கட்சிகளாலேயே ஒன்றும் புடுங்கமுடியவில்லை. இவர் எழுதி என்னத்தை புடுங்கிவிடுவார்.

Unknown said...

///உங்களுக்கு அதை பற்றி தெரிந்தால் விரிவாக நீங்களும் எழுதலாமே..///

நான் எனது கருத்தைதான் எழுதியிருக்கிறேன். இவர்தான் காப்பி பேஸ்ட் மேனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

krishna said...

முடிவா என்னதான் ஆகும் இந்த விவகாரத்துல...கொஞ்ச நாளைக்கு அவல் மாதிரி மென்னுட்டு அப்படியே அவங்கவங்க வேலைய பாத்துட்டு போக வேண்டியதுதானா? நீங்க சொல்லற மாதிரி இதெல்லாம் ஊழல் அப்படிங்கறத தாண்டி ஒரு அரசியல் விளையாட்டு மாதிரி ஆகிடுச்சு...இல்லேன்னா எதிர் அணிய சேர்ந்த ஜெத்மலானியே இவர்களுக்காக வாதாடுவாரா? ஆனா நீங்களே சொல்லுங்க...கலைஞர் தொலைக்காட்சிக்கும் இவங்களுக்கும் தொடர்பில்லைன்னு சொல்லறது கொஞ்சம் அதிகபடியா தெரியலையா..?

Unknown said...

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு முழுமுதற்காரணம் காங்கிரஸ் கட்சியும். மன்மோகன் சிங் மற்றும் அவரது தலைவி சோனியா ஆகியோர்களே.

தங்களது பதவியை காத்துக்கொள்ள தவறு என்று தெரிந்தும் அலைகற்றை ஒப்பந்தத்தை அனுமதித்தது முதல் குற்றம். அனுசக்கதி ஒப்பந்தத்திற்காக நாட்டையே விலைபேசியவர்கள் தானே இவர்கள்.

ஒதுக்கீடு முடிந்தபின்பும் எதிர்கட்சிகள் குரலை ஒடுக்க முனைந்ததும். குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்து அவர்களிடம் வழிப்பறி செய்ததும் இரண்டாவது குற்றம்.

Unknown said...

உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் விசாரிக்கிறோம் என்ற போர்வையில் டாடா, அம்பானி போன்ற திமிங்கலங்களை எல்லாம் விட்டுவிட்டு
டிபி ரியாலிட்டி பால்வா போன்ற பூச்சிகளையெல்லாம் மருந்தடிப்பது மூன்றாவது குற்றம்.

தனது அரசியல் சுய லாப பேரங்களுக்காக திமுக-வை வஞ்சம் தீர்க்க சிபிஐ மூலம் அச்சுறுத்தி பணிய வைக்க முயற்ச்சிப்பது நான்காவது குற்றம்.

தவறுகள் நடந்தபின்பும் அலைகற்றை ஒதுக்கீடு ஒப்பந்தம் ரத்து செய்யாமல் அதனை இன்னமும் அனுமதிப்பது ஐந்தாவது குற்றம்.

Unknown said...

இதையெல்லாம் விட தனது தரப்பு பற்றியும் தனது கட்சியின் பங்கு பற்றியும் எந்த வித விசாரணைக்கும் உத்தரவு இடாமல் ஊழலுக்கு எதிரானவர்கள் போல் நடிப்பது மிகப்பெரிய குற்றம்.

அமைச்சரான ராசா பதவில் இருந்து விலகி விசாரணையை சந்திப்பது போல் மன்மோகன் சிங் பதவி விலகி ஜேபிசி முன்பு ஆஜராகி உண்மைகளை வெளியிடுவாரா. பதவியில் இருந்துகொண்டு விசாரணை செய்தால் எப்படிப்பட்ட விசாரணை நடக்கும். எப்படிப்பட்ட நீதி கிடைக்கும் என்பதற்கு இப்போது நடக்கும் சம்பவங்களே சாட்சி.

krishna said...

இப்ப நீங்க சொல்லறது கொஞ்சம்..இல்ல இல்ல நிறையவே யோசிக்க வேண்டிய விஷயம்...ஞாயமா பார்த்தா டாட்டா ..அம்பானி போன்ற திமிங்கலகளும் வலையில் சிக்கியபோதும் அவர்களை மட்டும் நேக்காக இந்த காங்கிரஸ் தப்பிக்க விட்டுவிட்டதே...அதிலும் பிஜேபி கூட அவர்களை பற்றி மூச்சு விட மறுக்கிறதே...என்னத்த சொல்லறது...ஆக மொத்தம் தமிழர்களின் மானன் இந்திய அளவில் பற பறன்னு பறக்குது...

krishna said...

ஆனா அதுக்காக இவர்கள் செய்ததை மறுக்க முடியுமா??? கொள்ளை அடிக்க போனவர்கள் திமுக என்றால் அவர்கள் கொள்ளை அடிப்பதை வேடிக்கை பார்த்தவர்கள் காங்கிரஸ். யாருக்கு தெரியும் கொள்ளை அடித்து வரும் வழியில் அவர்களும் கூட பங்கு வாங்கி இருக்கலாம்...

மு.சரவணக்குமார் said...

ஊழலைப் பற்றி பேசும்போது மட்டும் படக்கென எல்லோருமே உத்தமர்களாகி விடுகிறோம்.

அது பங்கு கிடைக்காத ஆத்திரமா?, இல்லை தனக்கு பிடிக்காதவனுக்கு கிடைத்து விட்டதே என்கிற வயிற்றெறிச்சலா?

உடனே நான் நேர்மையானவன், வெங்காயமானவனென்றெல்லாம் சொல்லிக் கொண்டு யாரும் வந்துவிடாதீர்கள்...என்னால் சிரித்து மாளமுடியாது.

krishna said...

என்ன அண்ணே...இப்படி படக்குன்னு பொது சபைல வச்சு உண்மைய ஒடச்சு சொல்லீட்டீங்க...எனக்கும் சிரிப்பு தாண்ணே வருது.... என்ன செய்ய ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெரியும்..இருந்தாலும் நம்ம பங்குக்கு கொஞ்ச நாள் கூச்சலாவது கூட்டத்தோட போடுவோமே...

ரிஷி said...

சுந்தரமூர்த்தி மற்றும் கிருஷ்ணா,

தமிழர்களின் மானம் ஒன்றும் கப்பலேறி பர்மாவுக்குப் போய்விடவில்லை. அதில் உண்மையிலேயே காங்கிரஸ் கயவாளிகளுக்கு பங்கு போயிருக்கும்பட்சத்தில், இந்த எழவெடுத்த ப.சி., சோனியா, மன்மோகன் வகையறாக்கு கூட்டுசதி இருக்கும்பட்சத்தில், கார்ப்பரேட் கொள்ளையர்களின் நாதாரித்தனத்தையும், நம் தமிழினத் தலைவர் மனந்திறந்து புட்டுப்புட்டு வைக்கவேண்டும் என்பதே எம் அவா. தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா என்று கேட்டவராச்சே அவர்.. இன்று தேனையே அள்ளிக் குடித்திருக்கும்போது, அவரை சுற்றி வளைத்து கேள்விகளால் சங்கை நெரிக்கும்போது.. கூட சேர்ந்து அள்ளிக்குடித்தவர்களை அம்பலப்படுத்தினால் என்ன என்றுதான் கேட்கிறேன். தமிழனின் மானம் கப்பலில் ஏறி சிங்கப்பூருக்குப் போனால் இந்திய அரசியல்வியாதிகள், கார்ப்பரேட் கனவான்களின் மானங்களை ஏவுகணையில் ஏற்றி விண்ணுக்கு ஏன் நாம் அனுப்பி வைக்கக்கூடாது?? மக்களிடம் மனம் திறந்து பேசி.. தாம் செய்தது தவறுதான் என்றும், மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறிவிட்டு பங்காளிகளை ஏன் பந்தாடக்கூடாது?? அப்படியிருக்கும்பட்சத்தில் சக தமிழன் என்றபட்சத்தில் கருணாநிதிக்காக நாமெல்லாம் இந்தியத்தலைகளை உருட்டும் வேலையைச் செய்வோம்.

ரிஷி said...

///மு.சரவணக்குமார் said...

ஊழலைப் பற்றி பேசும்போது மட்டும் படக்கென எல்லோருமே உத்தமர்களாகி விடுகிறோம்.

அது பங்கு கிடைக்காத ஆத்திரமா?, இல்லை தனக்கு பிடிக்காதவனுக்கு கிடைத்து விட்டதே என்கிற வயிற்றெறிச்சலா?

உடனே நான் நேர்மையானவன், வெங்காயமானவனென்றெல்லாம் சொல்லிக் கொண்டு யாரும் வந்துவிடாதீர்கள்...என்னால் சிரித்து மாளமுடியாது.///

நான் நேர்மையானவனோ அல்லது வெங்காயமானவனோ... தப்பு செய்தவர்கள் மீது நாம் கல்லெறிகிறோம். நாம் தப்பு செய்யும்பட்சத்தில் நாமும் கல்லடிபடுவோம். இது இயற்கைதான்!

Ganpat said...

இந்திய ஜனத்தொகை 120 கோடி
அதில் ஆண்கள் 10கோடி பெண்கள் 10கோடி மீதி 100 கோடி பாப்பாக்கள் என்று நினைக்கிறேன்

2G ஊழலில்,முதலில் விசாரிக்கப்பட்டு,தண்டிக்கப்பட
வேண்டிய மூன்று பேர்:
மன்மோகன்,
சோனியா
கருணாநிதி
மற்றவர் எல்லாம் அப்புறம்தான்!

என்று நம் நாட்டில் பாராட்டுக்கள்
கீழ் மட்டத்திலிருந்தும்,
தண்டனைகள் மேல்மட்டத்திலிருந்தும் வழங்கப்படுகிறதோ,
அன்றுதான் விடிவு காலம்.

உண்மைத்தமிழன் said...

[[[sundaramoorthy said...

உண்மைத்தமிழன் அவர்களுக்கு! ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் கனிமொழி, ராசா, கலைஞர் மீது இவ்வளவு தவறுகள் இருப்பதாக இவ்வளவு நாட்களாக நீங்களும் மாங்கு மாங்கு என்று எழுதி வருகிறீர்கள்.

உண்மையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு என்பது அமைச்சரவை உயர்மட்ட குழு ஒப்புதல் இல்லாமல் நடந்து இருக்காது. நிச்சயம் பிரதமருக்கு தெரியாமல் அவரது ஒப்புதல் கோப்புகளில் பெறாமல் ஒதுக்கீடு நடக்க சாத்தியமே இல்லை.]]]

இப்பத்தான் படிக்க ஆரம்பிருச்சிருக்கீங்க போலிருக்கு..! உயர் மட்டக் குழுவின் ஒப்புதல் விற்பனை செய்யத்தான் கிடைத்தது. எந்த வழியில் விற்பனை என்று கொடுத்த ஆலோசனையை தூக்கியெறிந்து செயல்பட்டிருப்பது ராசாதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[sundaramoorthy said...

தனக்கு கீழுள்ள அமைச்சர் ஒரு தவறான கொள்கை முடிவை எடுக்கிறார் அதற்கு பிரதமர் ஒப்புதல் அளிக்கிறார் என்றால் என்ன பொருள். பிரதமருக்கு வேறு ஒரு உயர்ந்த இடத்திலிருந்து நெருக்கடி இருந்தது என்றுதானே பொருள்.
சுப்பிரமணிய சுவாமி சோனியா காந்தியின் தலையீடு இருப்பதால்தான் மன்மோகன் சிங் ஒப்புதல் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார் என்று குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு உங்கள் தரப்பு வாதம் என்ன? எந்த வகையான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது எடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது எழுதியதுண்டா!.]]]

மன்மோகன்சிங், சோனியா காந்தி இருவரும்தான் இதில் பிரதான குற்றவாளிகள்.. அவர்கள் சொல்படிதான் நடந்தேன் என்று ராசா இதுவரையில் சொல்லவில்லையே..! "நான் நியாயமாகத்தான் செயல்பட்டேன். அதனால்தான் ஏழைகளும் செல்போன் வாங்க முடிந்தது" என்றுதானே கர்வத்துடன் இப்போதுவரையில் சொல்லி வருகிறார்..!

உண்மைத்தமிழன் said...

[[[sundaramoorthy said...

உங்கள் புலனாய்வு எல்லாம் திமுகவும், கருணா குடும்பத்தினருக்கு மட்டும்தானா?. கலைஞர் டிவிக்கு 215 கோடி பண பரிமாற்றத்திற்கு கிட்ட தட்ட ஒரு வருடமாக எழுதிவரும் நீங்கள் மீதமுள்ள பணம் யார் யார் கை மாறியது. காங்கிரஸ் தலைகளின் பங்கு பற்றி ஏன் தொடர்ந்து விமர்சிக்கவில்லை.]]]

காங்கிரஸ் தலைவர்களுக்கு இதில் இருக்கும் பங்குகள் பற்றிய. செய்திகள் இன்னும் வெளியாகவில்லை. அது பற்றி ராசாவும், கருணாநிதியும் மூச்சுவிடவில்லையே..! அவர்கள் வெளியிட்டால்தானே தெரியும்..!

[[[அல்லது அவர்களைப் பற்றிய செய்தி உங்கள் கவனத்திற்கு வரவில்லையெனில் என்ன பொருள். சிபிஐ விசாரணை ஏன் மன்மோகன் சிங்கை நோக்கி பாயவில்லை. அதிகாரம் அவர்களிடம் உள்ளது என்பதால்தானே அவர்கள் தரப்பு விசாரணைகூட செய்யப்படவில்லை. எனவேதான் அது பற்றிய செய்திகளும் வரவில்லை. நீங்களும் காப்பி பேஸ்ட் செய்ய முடியவில்லை.]]]

நீங்களே எனக்காக பதிலையும் சொல்லிவிட்டீர்கள்..! பின்பு நானென்ன சொல்வது..!?

உண்மைத்தமிழன் said...

[[[sundaramoorthy said...

சட்டமும், நீதியும் ஒன்று என்றால் அனைவருக்கும் சமமாகதானே இருக்க வேண்டும். அதிகாரத்தில் வலிந்த காங்கிரஸ் தங்களுக்கு பேரம் பேச எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் ஸ்பெக்ட்ரம்.

உண்மையில் நீங்கள் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை மக்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டுமென்றால் முக்கால்வாசி கொள்ளையடித்த காங்கிரஸ் தலைகளின் பங்கு பற்றிய செய்திகளை அல்லவா எழுதியிருக்க வேண்டும்.]]]

அவர்கள்தான் கொள்ளையடித்தார்கள் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டியது ராசாவும், கலைஞரும் அல்லவா..?

[[[அது இருக்கட்டும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தவறானது என்று நீதிமன்றம் விசாரிக்கிறது. பொது கணக்கு குழு அறிக்கை அளிக்கிறது. ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒப்பந்தங்கள் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. மீண்டும் ஏல முறை நடைபெற எந்தவித முயற்சியும் நடைபெறவில்லை. நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படவில்லை, அபராதம் விதிக்கப்படவில்லை]]]

இனி இது பற்றி தீர்ப்பு சொல்ல வேண்டியது சுப்ரீம் கோர்ட்டுதான். இந்த ஒப்பந்தங்கள் தீர்ப்புக்கு கட்டுப்படக் கூடியவை என்று ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது. காத்திருங்கள்.!

உண்மைத்தமிழன் said...

[[[sundaramoorthy said...

இதற்கெல்லாம் யார் காரணம். தற்போது காங்கிரஸ்சின் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருக்கும் கபில்சிபல் அல்லவா. அவரைப் பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை. அவரை துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஏன் அறிவுறுத்தவில்லை. அப்படியெனில் போனது போனது மட்டுமல்லாமல் இன்னும் இழப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனவே.
இவற்றையெல்லாம் நீங்கள் எழுதவில்லை. உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கலைஞர் குடும்பமும், ஈழப் பிரச்சனையில் கலைஞர் தலையீடு செய்யாததால் ஏற்பட்ட கோபமும்தான். விஷமரத்தின் வேரை விட்டுவிட்டு கிளையை வெட்டிக் கொண்டிருக்கும் உங்கள் புத்திசாலிதனத்தை என்னவென்று சொல்வது.]]]

இப்போதைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலின் விசாரணையில் கிடைத்திருக்கும் அனைத்துத் தகவல்களும் ராசாவையும், கலைஞர் குடும்பத்தையுமே சுற்றிச் சுற்றி வருகிறது. அதனால் அவர்களைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படை பிளாட்பார்ம் காங்கிரஸின் இந்த ஆட்சிதான் என்று எத்தனையோ முறை திட்டியாகிவிட்டது.

உண்மைத்தமிழன் said...

[[[sundaramoorthy said...

ஸ்பெக்ட்ரம் என்று இல்லை நாட்டில் உள்ள அனைத்து ஊழல்களும் நடந்தால் நடந்ததுதான் அது திரும்பி வந்நதாக வரலாறு இல்லை. ஆனால் வழக்குகள் மட்டும் அரசியல் கட்சிகளின் சுய லாபங்களுக்கான ஆடுபுலி ஆட்டமாக ஆடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.]]]

ஒத்துக் கொள்கிறேன். நியாயமான கருத்து நண்பரே..!

[[[இனிமேலாவது உண்மைத்தமிழன் என்ற பெயருக்கு ஏற்றவாறு உண்மையான தகவல்களை உண்மையான நோக்கத்துடன் எழுத முயலுங்கள். இல்லவிட்டால் உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு எழுதி வந்தால் வலையுலகிலும் வாசகர்கள் மத்தியிலும் நீங்கள் பொய்த் தமிழனாக அறியப்படுவீர்கள் என்பது உறுதி.]]]

ஹா.. ஹா.. நல்ல காமெடி.. இப்போது நடக்கின்ற அனைத்து வகை ஊழல்களையும் எதிர்த்துதான் எழுதி வருகிறேன்..! ராசா, தி.மு.க. மீது உங்களுக்கு இருக்கும் பற்றுக்காக நீங்கள் என் மீது கோபப்படுகிறீர்கள். அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...

அய்யா.. எதோ அவருக்கு தெரிந்தவரை எழுதி வருகிறார்.. நீங்கள் என்ன என்றால் அவரை சி.பி.ஐ. அளவிற்கு நினைத்துக்கொண்டு விவரமாக ஆதி முதல் அந்தம்வரை ச்பெக்ட்ரும் குறித்தும் அதில் ஈடுபட்டவர்கள் குறித்தும் எழுத சொல்கிறீர்கள். இதுவரை அந்த சி.பி.ஐ.கூட முழுமையாக விசாரணையை முடித்ததா என்று தெரியவில்லை. தோண்ட தோண்ட பல பூதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. முடிந்தவரை அவரும் தோண்டி துருவி எழுதிதான் வருகிறார். அது பொறுக்கவில்லையா. ஆக மொத்தம் இப்படி எழுதி வருபவர்களையும் நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா. நுனி மரம் வேர் என்பதெல்லாம் தாண்டி இப்போது இந்த விஷயம் நாட்டின் பாதுகாப்பு எனும் நிலம்வரை விஷமாய் பரவிவிட்டது. உங்களுக்கு அதை பற்றி தெரிந்தால் விரிவாக நீங்களும் எழுதலாமே..]]]

நன்றி கிருஷ்ணா..! தி.மு.க. மீது பற்றாளர் என்று நினைக்கிறேன். அதுதான் இவ்வளவு பொங்கியிருக்கிறார்..!

உண்மைத்தமிழன் said...

sundaramoorthy said...

krishna அவர்களே சிபிஐ முழுமையான விசாரணை எல்லாம் எப்போதும் செய்யாது செய்யவும் முடியாது.

அவர் தோண்டுவதும் துருவுவதும் கருணாவை சுற்றியே. ஸ்பெக்ட்ரம் குறித்து எதாவது செய்தி கிடைத்தாலும் அதில் நம் கருணாவை எப்படி சம்பந்தப்படுத்தி எழுதலாம் என்பதே அவருடைய நோக்கம்.

ஆளானப்பட்ட எதிர்கட்சிகளாலேயே ஒன்றும் புடுங்க முடியவில்லை. இவர் எழுதி என்னத்தை புடுங்கி விடுவார்.]]]

காங்கிரஸ் பற்றிய தகவல்கள் கிடைத்தாலும் நிச்சயமாக நான் அதனை இங்கு பதிவு செய்வேன் நண்பரே.. கோபம் வேண்டாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[sundaramoorthy said...

///உங்களுக்கு அதை பற்றி தெரிந்தால் விரிவாக நீங்களும் எழுதலாமே..///

நான் எனது கருத்தைதான் எழுதியிருக்கிறேன். இவர்தான் காப்பி பேஸ்ட் மேனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.]]]

40 பேர் படித்ததை 400 பேர் படிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறேன். அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...

முடிவா என்னதான் ஆகும் இந்த விவகாரத்துல. கொஞ்ச நாளைக்கு அவல் மாதிரி மென்னுட்டு அப்படியே அவங்கவங்க வேலைய பாத்துட்டு போக வேண்டியதுதானா? நீங்க சொல்லற மாதிரி இதெல்லாம் ஊழல் அப்படிங்கறத தாண்டி ஒரு அரசியல் விளையாட்டு மாதிரி ஆகிடுச்சு. இல்லேன்னா எதிர் அணிய சேர்ந்த ஜெத்மலானியே இவர்களுக்காக வாதாடுவாரா? ஆனா நீங்களே சொல்லுங்க. கலைஞர் தொலைக்காட்சிக்கும் இவங்களுக்கும் தொடர்பில்லைன்னு சொல்லறது கொஞ்சம் அதிகபடியா தெரியலையா..?]]]

கிடைத்திருக்கும், வெளியே வந்திருக்கும் அனைத்து ஆதாரங்களும் தி.மு.க. மற்றும் ராசாவுக்கு எதிரானதாக இருக்கும்போது நாமென்ன செய்ய முடியும் கிருஷ்ணா..?

உண்மைத்தமிழன் said...

[[[sundaramoorthy said...

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு முழு முதற் காரணம் காங்கிரஸ் கட்சியும். மன்மோகன் சிங் மற்றும் அவரது தலைவி சோனியா ஆகியோர்களே.

தங்களது பதவியை காத்துக் கொள்ள தவறு என்று தெரிந்தும் அலைகற்றை ஒப்பந்தத்தை அனுமதித்தது முதல் குற்றம். அனுசக்கதி ஒப்பந்தத்திற்காக நாட்டையே விலை பேசியவர்கள்தானே இவர்கள்.

ஒதுக்கீடு முடிந்த பின்பும் எதிர்கட்சிகள் குரலை ஒடுக்க முனைந்ததும். குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்து அவர்களிடம் வழிப்பறி செய்ததும் இரண்டாவது குற்றம்.]]]

சரி.. முழு முதற் காரணம் இவர்கள்தான். தி.மு.க. கூட்டணி வைத்து, ராசாவுக்கு பதிவு கொடுத்ததுதான் முதல் அடிப்படையான காரணம்..!

krishna said...

அதெப்படிங்க இவங்களுக்குன்னே "ராசா" "சாதிக் பாஷா" "சரத்குமார்" நு வந்து வரிசையா மாட்டுறாங்க...

உண்மைத்தமிழன் said...

[[[sundaramoorthy said...

உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் விசாரிக்கிறோம் என்ற போர்வையில் டாடா, அம்பானி போன்ற திமிங்கலங்களை எல்லாம் விட்டுவிட்டு டிபி ரியாலிட்டி பால்வா போன்ற பூச்சிகளையெல்லாம் மருந்தடிப்பது மூன்றாவது குற்றம்.]]]

நியாயமானதுதான். இது பற்றி விரிவாக எழுதுங்கள்.. நானும் தெரிந்து கொள்கிறேன்..! இது பற்றிய ஒரு பதிவையும் நான் காபி பேஸ்ட் செய்திருக்கிறேன்..!

[[[தனது அரசியல் சுய லாப பேரங்களுக்காக திமுக-வை வஞ்சம் தீர்க்க சிபிஐ மூலம் அச்சுறுத்தி பணிய வைக்க முயற்ச்சிப்பது நான்காவது குற்றம்.]]]

ம்... சரிதான்.. இதற்கு இப்போதுவரையில் தலையாட்டி வரும் தி.மு.க.வையும் குற்றம் சாட்ட வேண்டுமே..?

[[[தவறுகள் நடந்த பின்பும் அலைகற்றை ஒதுக்கீடு ஒப்பந்தம் ரத்து செய்யாமல் அதனை இன்னமும் அனுமதிப்பது ஐந்தாவது குற்றம்.]]]

ம்.. இந்த வழக்கின் தீர்ப்புக்கு அவர்கள் கட்டுப்பட்டாக வேண்டுமே..? கவலை வேண்டாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[sundaramoorthy said...

இதையெல்லாம் விட தனது தரப்பு பற்றியும் தனது கட்சியின் பங்கு பற்றியும் எந்த வித விசாரணைக்கும் உத்தரவு இடாமல் ஊழலுக்கு எதிரானவர்கள் போல் நடிப்பது மிகப் பெரிய குற்றம்.

அமைச்சரான ராசா பதவில் இருந்து விலகி விசாரணையை சந்திப்பது போல் மன்மோகன் சிங் பதவி விலகி ஜேபிசி முன்பு ஆஜராகி உண்மைகளை வெளியிடுவாரா. பதவியில் இருந்துகொண்டு விசாரணை செய்தால் எப்படிப்பட்ட விசாரணை நடக்கும். எப்படிப்பட்ட நீதி கிடைக்கும் என்பதற்கு இப்போது நடக்கும் சம்பவங்களே சாட்சி.]]]

இதைப் பகிரங்கமாக கேட்க வேண்டியது தி.மு.க.வும், ராசாவும்தான். கேட்கச் சொல்லுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...

இப்ப நீங்க சொல்லறது கொஞ்சம் இல்ல இல்ல நிறையவே யோசிக்க வேண்டிய விஷயம். ஞாயமா பார்த்தா டாட்டா. அம்பானி போன்ற திமிங்கலகளும் வலையில் சிக்கியபோதும் அவர்களை மட்டும் நேக்காக இந்த காங்கிரஸ் தப்பிக்கவிட்டுவிட்டதே. அதிலும் பிஜேபிகூட அவர்களை பற்றி மூச்சுவிட மறுக்கிறதே. என்னத்த சொல்லறது. ஆக மொத்தம் தமிழர்களின் மானம் இந்திய அளவில் பற பறன்னு பறக்குது.]]]

இங்குதான் கார்ப்பரேட் ஆதிக்கம் தொடர்கிறது..! பணம்.. பணம்.. பணம்.. அவர்களிடமிருந்து வருடக் கணக்காக பணத்தை வாங்கியிருக்கும் காங்கிரஸால் அவர்கள் மீது கை வைக்க முடியாது.. ஆனால் இது பற்றி கேள்வி கேட்க வேண்டிய தி.மு.க.வும் அமைதியாக இருக்கிறது என்பதையும் நினைத்துப் பாருங்கள்..

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...

ஆனா அதுக்காக இவர்கள் செய்ததை மறுக்க முடியுமா??? கொள்ளை அடிக்க போனவர்கள் திமுக என்றால் அவர்கள் கொள்ளை அடிப்பதை வேடிக்கை பார்த்தவர்கள் காங்கிரஸ். யாருக்கு தெரியும் கொள்ளை அடித்து வரும் வழியில் அவர்களும்கூட பங்கு வாங்கி இருக்கலாம்.]]]

வாங்கியிருப்பார்கள்..! ஆனால் கொடுத்தவர்கள்தானே இதனை ஆதாரப்பூர்வமாகச் சொல்ல வேண்டும்? அவர்கள் ஏன் சொல்ல மறுக்கிறார்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...
ஊழலைப் பற்றி பேசும்போது மட்டும் படக்கென எல்லோருமே உத்தமர்களாகி விடுகிறோம்.
அது பங்கு கிடைக்காத ஆத்திரமா?, இல்லை தனக்கு பிடிக்காதவனுக்கு கிடைத்து விட்டதே என்கிற வயிற்றெறிச்சலா? உடனே நான் நேர்மையானவன், வெங்காயமானவனென்றெல்லாம் சொல்லிக் கொண்டு யாரும் வந்து விடாதீர்கள். என்னால் சிரித்து மாள முடியாது.]]]

என்னாலும்தான் சிரிக்க முடியல சரவணக்குமார்..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

ஊழலைப் பற்றி பேசும்போது மட்டும் படக்கென எல்லோருமே உத்தமர்களாகி விடுகிறோம்.

அது பங்கு கிடைக்காத ஆத்திரமா? இல்லை தனக்கு பிடிக்காதவனுக்கு கிடைத்து விட்டதே என்கிற வயிற்றெறிச்சலா?

உடனே நான் நேர்மையானவன், வெங்காயமானவனென்றெல்லாம் சொல்லிக் கொண்டு யாரும் வந்துவிடாதீர்கள். என்னால் சிரித்து மாளமுடியாது.]]]

என்னாலேயும் சிரிக்க முடியல சரவணக்குமார்..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

ஊழலைப் பற்றி பேசும்போது மட்டும் படக்கென எல்லோருமே உத்தமர்களாகி விடுகிறோம்.

அது பங்கு கிடைக்காத ஆத்திரமா?, இல்லை தனக்கு பிடிக்காதவனுக்கு கிடைத்து விட்டதே என்கிற வயிற்றெறிச்சலா?

உடனே நான் நேர்மையானவன், வெங்காயமானவனென்றெல்லாம் சொல்லிக் கொண்டு யாரும் வந்துவிடாதீர்கள்...என்னால் சிரித்து மாளமுடியாது.]]]

என்னாலேயும்தான் சரவணக்குமார்..!

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...

என்ன அண்ணே. இப்படி படக்குன்னு பொது சபைல வச்சு உண்மைய ஒடச்சு சொல்லீட்டீங்க. எனக்கும் சிரிப்புதாண்ணே வருது. என்ன செய்ய ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் நம்ம பங்குக்கு கொஞ்ச நாள் கூச்சலாவது கூட்டத்தோட போடுவோமே.]]]

தெரிந்த தகவலை சொல்லித்தானே ஆக வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

சுந்தரமூர்த்தி மற்றும் கிருஷ்ணா,
தமிழர்களின் மானம் ஒன்றும் கப்பலேறி பர்மாவுக்குப் போய்விடவில்லை. அதில் உண்மையிலேயே காங்கிரஸ் கயவாளிகளுக்கு பங்கு போயிருக்கும்பட்சத்தில், இந்த எழவெடுத்த ப.சி., சோனியா, மன்மோகன் வகையறாக்கு கூட்டுசதி இருக்கும்பட்சத்தில், கார்ப்பரேட் கொள்ளையர்களின் நாதாரித்தனத்தையும், நம் தமிழினத் தலைவர் மனந்திறந்து புட்டுப்புட்டு வைக்கவேண்டும் என்பதே எம் அவா. தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா என்று கேட்டவராச்சே அவர்.. இன்று தேனையே அள்ளிக் குடித்திருக்கும்போது, அவரை சுற்றி வளைத்து கேள்விகளால் சங்கை நெரிக்கும்போதுகூட சேர்ந்து அள்ளிக் குடித்தவர்களை அம்பலப்படுத்தினால் என்ன என்றுதான் கேட்கிறேன். தமிழனின் மானம் கப்பலில் ஏறி சிங்கப்பூருக்குப் போனால் இந்திய அரசியல்வியாதிகள், கார்ப்பரேட் கனவான்களின் மானங்களை ஏவுகணையில் ஏற்றி விண்ணுக்கு ஏன் நாம் அனுப்பி வைக்கக்கூடாது?? மக்களிடம் மனம் திறந்து பேசி.. தாம் செய்தது தவறுதான் என்றும், மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறிவிட்டு பங்காளிகளை ஏன் பந்தாடக் கூடாது?? அப்படியிருக்கும்பட்சத்தில் சக தமிழன் என்றபட்சத்தில் கருணாநிதிக்காக நாமெல்லாம் இந்தியத் தலைகளை உருட்டும் வேலையைச் செய்வோம்.]]]

கரீக்ட்டு ரிஷி ஸார்..! ஒப்புக் கொள்கிறேன்.. நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

நான் நேர்மையானவனோ அல்லது வெங்காயமானவனோ... தப்பு செய்தவர்கள் மீது நாம் கல்லெறிகிறோம். நாம் தப்பு செய்யும்பட்சத்தில் நாமும் கல்லடிபடுவோம். இது இயற்கைதான்!]]]

-))))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

இந்திய ஜனத்தொகை 120 கோடி
அதில் ஆண்கள் 10 கோடி பெண்கள் 10 கோடி மீதி 100 கோடி பாப்பாக்கள் என்று நினைக்கிறேன்.
2G ஊழலில்,முதலில் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட
வேண்டிய மூன்று பேர்:
மன்மோகன்,
சோனியா
கருணாநிதி
மற்றவர் எல்லாம் அப்புறம்தான்!
என்று நம் நாட்டில் பாராட்டுக்கள்
கீழ் மட்டத்திலிருந்தும்,
தண்டனைகள் மேல்மட்டத்திலிருந்தும் வழங்கப்படுகிறதோ,
அன்றுதான் விடிவு காலம்.]]]

விசாரிக்க வேண்டும்தான்.. ஆனால் யார் விசாரிப்பது..!?

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...

அதெப்படிங்க இவங்களுக்குன்னே "ராசா" "சாதிக் பாஷா" "சரத்குமார்" நு வந்து வரிசையா மாட்டுறாங்க...]]]

இவங்களா இழுத்துக்கிறதுதாண்ணே..! இந்நேரம் காங்கிரஸ் கட்சிக்கு இவ்வளவு, தலைவர்களுக்கு இவ்வளவு.. சோனியாவுக்கு இவ்வளவு கொடுத்தேன்னு ராசா வெளில சொல்லியிருந்தா இதெல்லாம் நடக்குமா..?

krishna said...

சபாஷ்...சரியாக சொன்னீங்க... எதிர் கேள்வி கேக்க சொல்லுங்க திமுக வை...ஏன் இன்னும் தயக்கம்...மடியில் கனம் இல்லை கனம் இல்லை என்று இன்னும் எத்தனை நாளைக்குதான் சொல்லிக்கொண்டே இருக்க போகிறார்கள் திமுக தலைவரும்...அவர் மகளும்...? உதறி காட்டுங்கள் எல்லோரும் நம்புவோம் அப்போது...

krishna said...

காசை முளுங்குன சின்ன குழந்தையை போல ராசா இப்போ நல்லா முழிக்கிறாரு...நல்ல பக்குவமா கையை வாய்க்குள்ள விட்டு காச எடுக்குற மாதிரி சிபிஐ தரப்புல வக்கீல் கொஞ்சம் வேலை பார்க்கணும்... இப்போ இருக்குற வக்கீல் எப்படிண்ணே???

krishna said...

அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்....இப்போ சிபிஐ அறுபது சதவிகித பங்கு வச்சிருக்குற தயாளு அம்மாளை தமிழ் தவிர்த்த வேறு மொழிகள் தெரியாது.... அப்படின்னு சொல்லி குற்றபதிரிக்கையில பெற சேர்க்காம விட்டுடாங்களே...ஒருவேளை நூறு சதவிகித பங்கும் தயாளு அம்மா பேரிலேயே இருந்தா கலைஞர் தொலைக்காட்சி மேலயும், அந்த அம்மா மேலயும் நடவடிக்கையே எடுத்து இருக்க மாட்டாங்களா???

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...
சபாஷ். சரியாக சொன்னீங்க. எதிர் கேள்வி கேக்க சொல்லுங்க திமுகவை. ஏன் இன்னும் தயக்கம். மடியில் கனம் இல்லை கனம் இல்லை என்று இன்னும் எத்தனை நாளைக்குதான் சொல்லிக்கொண்டே இருக்க போகிறார்கள் திமுக தலைவரும். அவர் மகளும்...? உதறி காட்டுங்கள் எல்லோரும் நம்புவோம் அப்போது...]]

இருக்கின்ற கோவணத்தையும் உதறினால் என்னாகும்..? அதனால் செய்ய மாட்டார்கள். நாளைய தேர்தலுக்குப் பின்னர்தான் ஏதாவது ஒரு முடிவெடுப்பார்கள் என்று நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...

காசை முளுங்குன சின்ன குழந்தையை போல ராசா இப்போ நல்லா முழிக்கிறாரு. நல்ல பக்குவமா கையை வாய்க்குள்ள விட்டு காச எடுக்குற மாதிரி சிபிஐ தரப்புல வக்கீல் கொஞ்சம் வேலை பார்க்கணும். இப்போ இருக்குற வக்கீல் எப்படிண்ணே???]]]

லலித் என்னும் அந்த வக்கீலும் பிரபலமானவர்தான்.. இதற்கு முன்பே பல அரசியல், கிரிமினல் வழக்குகளில் வாதாடியவர்.. என்ன இருந்தாலும் எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதான். அவருக்கும் ஒரு கோடு போட்டிருக்கிறார்கள். அதைத் தாண்டி அவராலும் பேச முடியாது..!

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...
அண்ணே எனக்கு ஒரு சந்தேகம். இப்போ சிபிஐ அறுபது சதவிகித பங்கு வச்சிருக்குற தயாளு அம்மாளை தமிழ் தவிர்த்த வேறு மொழிகள் தெரியாது. அப்படின்னு சொல்லி குற்றபதிரிக்கையில பெற சேர்க்காம விட்டுடாங்களே. ஒருவேளை நூறு சதவிகித பங்கும் தயாளு அம்மா பேரிலேயே இருந்தா கலைஞர் தொலைக்காட்சி மேலயும், அந்த அம்மா மேலயும் நடவடிக்கையே எடுத்து இருக்க மாட்டாங்களா???]]]

ஹா.. ஹா.. நல்ல கேள்வி கிருஷ்ணா.. அப்படியிருந்தா தயாளு அம்மாளை குற்றப்பத்திரிகைல சேர்த்திருப்பாங்க. இன்னிக்கு உள்ள கொண்டு போறதுக்கு கனிமொழி இருக்கிறதால தயாளு அம்மாளை போனா போகுதுன்னு விட்டுட்டாங்க..!