தேர்தல்-2011-49-ஓ வாக்களித்தவர்களின் எண்ணிக்கை

15-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்னும் விருப்ப உரிமைப் பிரிவான 49-ஓ என்னும் பிரிவின் கீழ் வாக்களித்தவர்கள் 24,859..!

இதில் விருதுநகர், அருப்புக்கோட்டை தொகுதிகளில் ஒரு ஓட்டுகூட 49-ஓ-வில் விழுகவில்லை. அதிகபட்சமாக சிங்காநல்லூர் தொகுதியில்தான் 646 வாக்குகள் பதிவாகியுள்ளன. 

சென்னை எழும்பூர் தொகுதியில் 202 வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த பரிதி இளம்வழுதியின் தோல்விக்கு மட்டுமே, 49-ஓ ஆதரவாளர்கள் கை கொட்டி சிரிக்கலாம்.. சந்தோஷப்படலாம். இந்தத் தொகுதியில் கிடைத்துள்ள 49-ஓ வாக்குகளின் எண்ணிக்கை 274. 

ஆனால் இந்த 49-ஓ இயக்கம் மக்களிடையே தொடர்ந்து வெற்றியடையுமா என்பது சந்தேகமே..! ஏனெனில் இந்தத் தேர்தலில் மக்கள் பொங்கியெழுந்து எதிர்க்கட்சிக்கு வாக்களித்திருக்கும் விதத்தைப் பார்த்தால், யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லை என்பதைவிட தவறு செய்பவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில்தான் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது புரிகிறது..!

இதுவும் நல்லதுதானே..! இந்த வகையில் நான் பொதுமக்களையே ஆதரிக்கிறேன்..!

இனி.. இந்த 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான 49-ஓ வாக்குகள் பற்றிய முழு விபரத்தை பார்ப்போம்.. அனைத்துத் தகவல்களும் இமேஜ் ஃபைலாக இங்கே பதியப்பட்டுள்ளன.

விருப்பமுள்ளவர்கள் இமேஜின் மீது கிளிக் செய்து பெரிதாக்கி படித்துப் பார்க்கவும்..!

நன்றி..!





10 comments:

ராம்ஜி_யாஹூ said...

தினமணியில் இந்த வாக்கை ஆட்சேபனை வாக்கு என்கின்றனர். அது பொருத்தமான பெயர் என எண்ணுகிறேன்
இந்த தேர்தல் முறை குறித்து நான் ஆட்சேபம் செய்து அளிக்கும் வாக்கு .

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

தினமணியில் இந்த வாக்கை ஆட்சேபனை வாக்கு என்கின்றனர். அது பொருத்தமான பெயர் என எண்ணுகிறேன். இந்த தேர்தல் முறை குறித்து நான் ஆட்சேபம் செய்து அளிக்கும் வாக்கு.]]]

தேர்தல் முறையில் எனக்கும்தான் ஆட்சேபணை இருக்கு..! ஆனால் இதுவெல்லாம் இந்த கேடு கெட்ட, கேவலங்கெட்ட அரசியல்வியாதிகளுக்குப் புரியாதே..!

அன்பு said...

தேர்தலன்று 49-ஓ ஃபார்ம் கேட்ட எனது நண்பர், அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களாலேயே மிரட்டப்பட்டு வலுக்கட்டாயமாக வாக்களிக்க வைக்கப்பட்டார்....
ஆலந்தூர் தொகுத்திக்குட்பட்ட ஒரு பூத்...

உண்மைத்தமிழன் said...

[[[அன்பு said...

தேர்தலன்று 49-ஓ ஃபார்ம் கேட்ட எனது நண்பர், அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களாலேயே மிரட்டப்பட்டு வலுக்கட்டாயமாக வாக்களிக்க வைக்கப்பட்டார். ஆலந்தூர் தொகுத்திக்குட்பட்ட ஒரு பூத்...]]]

இதுபோல் நிறைய இடங்களில் நடந்துள்ளது.. தேர்தல் கமிஷன் முறையான நடவடிக்கைகள் எடுத்தும் இப்படியும் நடந்திருப்பது வருத்தமானது..!

Kite said...

49-ஓ ஒரு பல்லில்லாத பாம்பு. ஒரு தொகுதியில் நூறு ஓட்டுகளில் 49-ஓ இருந்தாலும் மிச்சமிருக்கும் ஒரு ஓட்டைப் பெற்றவர்தான் வெற்றி பெறுவார் என்கிறது தேர்தல் சட்டம். ஒரு தொகுதியில் 49-ஓ அதிகமாக இருந்தால் அங்கு வேறு வெட்பாளர்களை வைத்து மறு தேர்தல் நடத்த வேண்டும் என்கிற மாதிரி மாதிரி சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இதைச் செய்து தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ள அரசியல்வாதிகள் என்ன முட்டாள்களா? அன்னா ஹஸாரே போல யாராவது உண்ணாவிரதம் இருந்தால் இதற்கு வாய்ப்புள்ளது.

அப்படி சட்டத்தை நிறைவேற்றியபின் 49-ஓ வை வாக்கு இயந்திரத்திலேயே பொருத்தி தேர்தல் ஆணையம் அதை நன்கு விளம்பரப் படுத்தினால் இந்திய ஜனநாயகத்தில் ஒரு மாற்றம் உருவாக வாய்ப்புண்டு.

Kite said...

49-O ஒரு பல்லில்லாத பாம்பு. ஒரு தொகுதியில் நூறு ஓட்டுகளில் 99 49-O இருந்தாலும் மிச்சமிருக்கும் ஒரு ஓட்டைப் பெற்றவர்தான் வெற்றி பெறுவார் என்கிறது தேர்தல் சட்டம். ஒரு தொகுதியில் 49-O அதிகமாக இருந்தால் அங்கு வேறு வேட்பாளர்களை வைத்து மறு தேர்தல் நடத்த வேண்டும் என்கிற மாதிரி சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இதைச் செய்து தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ள அரசியல்வாதிகள் என்ன முட்டாள்களா? அன்னா ஹஸாரே போல யாராவது உண்ணாவிரதம் இருந்தால் இதற்கு வாய்ப்புள்ளது.

அப்படி சட்டத்தை நிறைவேற்றியபின் 49-ஓ வை வாக்கு இயந்திரத்திலேயே பொருத்தி தேர்தல் ஆணையம் அதை நன்கு விளம்பரப் படுத்தினால் இந்திய ஜனநாயகத்தில் ஒரு மாற்றம் உருவாக வாய்ப்புண்டு.

உண்மைத்தமிழன் said...

[[[Jagannath said...

49-ஓ ஒரு பல்லில்லாத பாம்பு. ஒரு தொகுதியில் நூறு ஓட்டுகளில் 49-ஓ இருந்தாலும் மிச்சமிருக்கும் ஒரு ஓட்டைப் பெற்றவர்தான் வெற்றி பெறுவார் என்கிறது தேர்தல் சட்டம். ஒரு தொகுதியில் 49-ஓ அதிகமாக இருந்தால் அங்கு வேறு வெட்பாளர்களை வைத்து மறு தேர்தல் நடத்த வேண்டும் என்கிற மாதிரி மாதிரி சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இதைச் செய்து தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ள அரசியல்வாதிகள் என்ன முட்டாள்களா? அன்னா ஹஸாரே போல யாராவது உண்ணாவிரதம் இருந்தால் இதற்கு வாய்ப்புள்ளது.

அப்படி சட்டத்தை நிறைவேற்றிய பின் 49-ஓ வை வாக்கு இயந்திரத்திலேயே பொருத்தி தேர்தல் ஆணையம் அதை நன்கு விளம்பரப் படுத்தினால் இந்திய ஜனநாயகத்தில் ஒரு மாற்றம் உருவாக வாய்ப்புண்டு.]]]

நிச்சயம்.. உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் ஜெகன்னாத்.. ஆனால் இந்தக் கேடு கெட்ட அரசியல்வியாதிகள் அதனைச் செய்ய விடுவார்களா என்பது சந்தேகம்தான்..!

raja said...

எனக்காக நீங்கள் காங்கிரஸ் தோற்ற தொகுதிகளின் பட்டியல் மற்றும் தோற்ற காரணம் தோற்று போனதால் ஏற்பட்ட விளைவுகள் மகிழ்ச்சிகள், தமிழ்தேசியவாதிகள் இனி தேர்தல் அரசியலில் செய்ய வேண்டிய பணிகள். போன்றவைகளை தொகுத்து ஒரு கட்டுரை எழுதவும் என வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

எனக்காக நீங்கள் காங்கிரஸ் தோற்ற தொகுதிகளின் பட்டியல் மற்றும் தோற்ற காரணம் தோற்று போனதால் ஏற்பட்ட விளைவுகள் மகிழ்ச்சிகள், தமிழ்த் தேசியவாதிகள் இனி தேர்தல் அரசியலில் செய்ய வேண்டிய பணிகள். போன்றவைகளை தொகுத்து ஒரு கட்டுரை எழுதவும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.]]]

இவ்ளோதான? செஞ்சிருவோம் ராஜா..!

Prem Nambi said...

If they have added that "49O" as a button in the ballot box , it would be used by many people. Many of us doesn't use that fearing for the local politicians and police out there. it is crime if we are saying that to whom we voted but why then they have kept "49O" as visible to all ??? But i don't think these things will be changed.