|
|
Tweet |
கலைஞரின் குடும்பச் சொத்துக்கள் - புல்லரிக்க வைக்கும் புதிய பட்டியல்..!
Posted by
உண்மைத்தமிழன்
at
5
comments
Labels: கலைஞர், கலைஞர் குடும்பம், கலைஞர் டிவி, சொத்துப் பட்டியல்
2009 பொதுத் தேர்தலில் தமிழகத்தில் விளையாடிய ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம்..!
2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பணம் எப்படி நடமாடியது என்பதற்கு ஆதாரமாக, ஒரு வாக்குமூலத்தை எடுத்துப் போடுகிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!
'நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், பண நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியாவிட்டாலும், ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது, தேர்தல் ஆணையம்.
ஆனால், இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முழுமையான பண பலத்தோடு நடந்தது. நாடாளுமன்றத் தேர்தல் பண விளையாட்டுக்கும், 2-ஜி ஊழலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு’ என்று அதிகார வட்டாரம் சொல்கிறது.
ஆ. ராசா - கனிமொழி சம்பந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கிய முக்கிய சாட்சி ஒருவரின் வாக்குமூலத்தை இந்தப் பண விளையாட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெரம்பலூர் துரைமங்களம், கவின் அமிர்தராஜ், சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வாடகை கார் டிரைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவரும் விருகம்பாக்கத்தில் 'ஸ்ரீ’ என்கிற பெயரில் தனியார் துப்பறிவு நிறுவனம் நடத்தும் வரதராஜ், டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த அஸ்ரஃப் போன்றவர்கள், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வாக்குமூலங்கள் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படியில்தான், பண விவகாரம் பற்றி பல பரபரப்பான விவரங்கள் டெல்லி வட்டாரத்தில் அடிபட ஆரம்பித்து உள்ளன. இது குறித்த முன்னோட்டமான தகவலை, 7.11.2010 தேதியிட்ட ஜூ.வி-யிலேயே கழுகார் சொல்லி இருந்தார். இப்போது, அதெல்லாம் சி.பி.ஐ-யின் குற்றப் பத்திரிக்கையிலும் இடம் பெற்று உள்ளது.
''2009-ம் ஆண்டு ஒரு டவேரா வாகனத்தின் மூலம், சென்னை அண்ணா சாலையில் உள்ள மிகப் பிரபலமான கட்டடத்தில் இருந்து, 23 பெட்டிகளில் பணம் கீழ்ப்பாக்கம் ஏரியாவில் உள்ள ஒரு கட்டடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது!'' என்கிறது சி.பி.ஐ-க்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அந்த வாக்குமூலங்கள்.
2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட்வரை கலைஞர் டி.வி-க்கு 200 கோடியை, டி.பி. ரியாலிட்டி பல தவணைகளில் கொடுத்தது என்று சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் சொல்லி இருக்கிறது. கலைஞர் டி.வி-க்குக் கொடுக்கப்பட்ட 200 கோடி, வங்கி வழியாக சென்றதால், பெட்டிகள் நடமாட்டத்துக்கும் அதற்கும் நேரடி சம்பந்தம் இருக்க முடியாது. ஆனால், அப்போது நடந்த தேர்தலுக்கும், டவேரா வாகனத்தில் பறிமாறப்பட்ட பணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. சந்தேகப்படுகிறது. ஆனால், அதிலும் 'ஸ்பெக்ட்ரம்' புகழ் டி.பி. ரியாலிட்டி நிறுவனம் சம்பந்தப்பட்டு இருப்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!
டி.பி. ரியாலிட்டியைச் சேர்ந்த அஸ்ரஃப், சென்னைக்கு வந்தாராம். அவர் பயணம் செய்வதற்காக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கவின் அமிர்தராஜ் ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளார். அந்த காரில் பணம் எடுத்துச் செல்லப்பட்டு, பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், அதாவது 2009, மே 10 அன்று நடந்த ஒரு சம்பவத்தை மட்டும் தனது குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. குறிப்பிட்டு உள்ளது.
டவேரா வாகன டிரைவர் சொல்லும் தகவல் இதுதான்...
''அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மும்பையில் இருந்து வந்த அஸ்ரஃபையும், அவருடன் வந்த சிலரையும் அழைத்துக் கொண்டு நான் சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய கட்டடத்துக்குச் சென்றேன். அங்கே இருந்த பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை(ஈ.வெ.ரா.சாலை) சந்திப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்டடத்துக்கு நான்கு தடவைகள் போய் வந்தேன்.
முதல் டிரிப்பில், 7 பெட்டிகள்; 2-வது டிரிப்பில் 4 பெட்டிகள்; 3-வது டிரிப்பில் 8 பெட்டிகள்; 4-வது டிரிப்பில் 4 பெட்டிகளை கொண்டு சென்றேன். அந்த 4-வது டிரிப்பில் 3 பெட்டிகளை மட்டுமே அந்தக் கட்டடத்துக்குள் கொண்டு சென்றேன். ஒரு பெட்டி மட்டும் காரிலேயே இருந்தது. அந்தப் பெட்டியை யாரோ ஒருவர் வாங்கிச் செல்வார் என்று சொன்னதால் இறக்கவில்லை.
ஒவ்வொரு பெட்டியையும் இறக்கி, கட்டடத்துக்குள் கொண்டு போனபோது, அந்தப் பெட்டிகளுடன் அஸ்ரஃப் மற்றும் மூன்று பேர்கள் கூடவே பாதுகாப்புக்காகப் போனார்கள். ஒரு பெட்டி வாகனத்தில் அப்படியே இருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்தில் நான்காவது பெட்டியுடன் டவேரா வாகனத்தைக் காணவில்லை!'' என்று அந்த டிரைவர் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக சி.பி.ஐ. வட்டாரம் கூறுகிறது.
பணம் கடத்தியவர்கள் விசாரித்தபோது டிரைவர், 'நான் பாத்ரூம் போனேன். திரும்பி வந்தபோது, காரைக் காணவில்லை’ என்று சொல்லி இருக்கிறார். உடனே, அண்ணா சாலை அலுவலகத்துக்கும், க்ரீன் ஹவுஸ் நிறுவனத்துக்கும் அந்த அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள்.
அஸ்ரஃப், உடனே இந்த சம்பவத்தை, மும்பையில் இருந்த டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீவ் அகர்வாலுக்கு (இவர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார்.) சொல்லி இருக்கிறார். காணாமல் போன பெட்டியில் மட்டுமே நாலு கோடி ரூபாய் இருந்ததாக அவர்கள் பேசிக் கொண்டார்களாம். இதன்படி பார்த்தால், மொத்தமாக 23 பெட்டிகளில் சுமார் 92 கோடி ரூபாய்வரை இருந்து இருக்கலாம் என்கிறது சி.பி.ஐ.
பணத்துடன் வாகனம் காணாமல் போனதில், வாகன ஓட்டுநர் மீதே க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸுக்கும், டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் சந்தேகம். அதனால், டிரைவரைப் பிடித்துக் கொண்டனர். 'பணமும் காரும் எங்கே?’ என்று கேட்டு தொடர்ந்து சில நாட்கள் தங்கள் கஸ்டடியில் வைத்து டிரைவரை செமத்தியாகக் கவனித்து இருக்கிறார்கள். அவர் சம்பந்தப்பட்ட இடங்களிலும் பணத்தைத் தேடி இருக்கிறார்கள். ஆனால், பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகே, அந்த டிரைவரை போலீஸிடம் ஒப்படைத்து உள்ளார்கள்.
போலீஸ்காரர்கள் கடுமையாக மிரட்டியும், டிரைவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. அதனால், மீண்டும் டிரைவரை க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தாரே, தங்கள் கஸ்டடிக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் முடிந்த 2009 மே 13 அன்று டிரைவரை அழைத்துச் சென்ற கவின் அமிர்தராஜ், அந்த டிரைவரை வைத்தே, கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கார் திருடு போனது குறித்து புகார் கொடுக்கவைத்தார். ஆனால், அதில் பணம் இருந்ததாகச் சொல்லவில்லை. அதன் பிறகு, மும்பையில் இருந்து வந்திருந்த ராஜீவ் அகர்வாலிடம், டிரைவரை அழைத்துப் போய் இருக்கிறார். டிரைவர் மீது பரிதாபப்படுவதுபோல் நடித்த அகர்வால், அவரை அனுப்பி விட்டாராம்.
அதன் பிறகு டிரைவரை சுதந்திரமாகவிட்டார்கள் என்றாலும், க்ரீன் ஹவுஸ் ஆட்கள் பின் தொடர்ந்து உள்ளார்கள். 'நிச்சயமாக இந்த வாடகை கார் டிரைவர்தான் பணப் பெட்டியைக் கடத்துவதற்காக, கார் திருடு போனதாக நாடகம் ஆடுகிறார்’ என்றே இவர்கள் நம்பி இருக்கிறார்கள்.
அதனால், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ டிடெக்டிவ் ஏஜென்ஸியிடம், சொல்லி அதை விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள். 'எங்களுடைய பணத்தை, இந்த டிரைவர் திருடி மறைத்துவிட்டார். அதனால், அவரைத் தீவிரமாகக் கண்காணித்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று அந்த ஏஜென்சிக்கு மனு கொடுத்தார்கள்.
காணாமல்போன டவேரா வாகனம் 25 நாட்களுக்குப் பிறகு, சென்னை மூலக்கடைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 'வாகனம் கிடைத்துவிட்டதால், நாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தர வேண்டும்’ என்று அந்த டிரைவரை வற்புறுத்தி இருக்கிறார்கள்.
அந்த டிரைவரின் சகோதரரும் ஒரு கார் டிரைவர். ஆனால், அவர் திடீரென நான்கு கார்கள் வாங்கி இருப்பதோடு, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியது தெரிய வந்தது. அண்ணன் அடித்துக் கொடுத்த பணத்தை வைத்துத்தான் தம்பி வளர்ந்துள்ளார் என்று டிடெக்டிவ் ஏஜென்சி கண்டுபிடித்தது.
ஆனால், காணாமல் போன பணப் பெட்டி எங்கே என்பது பற்றியான உருப்படியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இது குறித்து டிடெக்டிவ் ஏஜென்ஸி நிறுவனர் வரதராஜ் என்பவரிடமும் சி.பி.ஐ. வாக்குமூலம் வாங்கி இருப்பதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலோடு, டிபி ரியாலிட்டி, அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய அலுவலகம், 2009 தேர்தல், க்ரீன் ஹவுஸ் நிறுவனம் மற்றும் கலைஞர் டி.வி. போன்றவையும் பின்னிப் பிணைகின்றன.
இதில் இன்னொரு தகவலாக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தின் எம்.டி-யாக இருந்து தற்கொலை செய்துகொண்ட சாதிக் பாட்சாவின் மனைவியும், 'அந்த டிரைவர் பணத்துடன் மாயமானது’ குறித்து சி.பி.ஐ-யிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறாராம்!
கவின் அமிர்தராஜ் மற்றும் சிலரும் கொடுத்த தகவல்களை சி.பி.ஐ., வாக்குமூலமாக குற்றப் பத்திரிகையில் சேர்த்து உள்ளது. ஆனால், இந்த வாக்குமூலங்கள் ஆ.ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி மாதிரி நீதிபதியிடம் (சிஆர்.பி.சி. 164) கொடுத்தது அல்ல. இவர்கள் சி.பி.ஐ-யிடம் (சிஆர்.பி.சி. 161) வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார்கள்.
டெல்லி, மும்பை வழியாக சென்னையில் எந்த மாதிரி எல்லாம் பணம் பாய்ந்துள்ளது... அதில் தேர்தல் களத்தில் பணம் பாய்ந்த திசைகள் என்னென்ன என்பதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இந்த சாட்சியங்களைக் கொண்டு வரப் போகிறது!
நன்றி : ஜூனியர்விகடன் - 11-05-2011
|
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
8
comments
Labels: அரசியல், ஊழல், கலைஞர் டிவி, பாராளுமன்றத் தேர்தல் 2009, ஸ்பெக்ட்ரம் ஊழல்
தகத்தகாய கதிரவனைக் கை விட்டார் தானைத் தலைவர்..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ரத்தச் சொந்தங்களென்றால் தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும் என்பார்கள்..! கலைஞருக்கு இருக்கின்ற அதீத உணர்வு இது ஒன்றுதான் என்பதை இத்தனை ஆண்டுகளாக அவருடன் இருந்தவர்கள், எதிர்ப்பவர்களும் சொல்லி வந்தவேளையில் ஒப்புக் கொள்ள மறுத்த ஆதரவாளர்களும், கழகத்தின் ஒப்பு விருப்பெற்ற உடன்பிறப்புகளும் இன்றைக்காவது இதனை ஒத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்..!
"ராசா தலித் என்பதாலேயே அவரைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள். எழுதுகிறார்கள்..." என்று ராசாவின் கைதுக்கு முன்பாக துடித்தெழுந்தார் கலைஞர். இந்த ஆரிய-திராவிட சண்டையில் இன்னும் எத்தனை வருடங்கள்தான் குளிர் காய்வீர்கள் என்று இன்றைக்கு முதல்முறையாக ஓட்டளித்த சிறுவர்களே கேட்கும் நிலைக்கு வந்துவிட்டதால், கலைஞரின் இந்த போலி அழுகை அவர் வீட்டு வாசப்படியைத் தாண்டவில்லை..!
214 கோடி ரூபாய் பணத்தை சினியூக் நிறுவனத்திடமிருந்து கள்ளத்தனமாக பெற்று வைத்திருந்த கலைஞர் டிவி, சி.பி.ஐ. ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கை பதிவு செய்த பிறகே, அந்தப் பணத்தைப் பெற்றதற்காக ஒரு ஒப்பந்தத்தை அவசரம், அவசரமாக சினியூக் நிறுவனத்தினருடன் செய்துள்ளது என்பதே இந்த வழக்கில் என்ன நடந்திருக்கிறது என்பதை யூகிக்க வைக்கிறது..!
“சினியுக் நிறுவனம் 23.12.2008 முதல் 7.8.2009 வரையிலான காலக்கட்டத்தில் ஆறு தவணைகளில் 200 கோடி ரூபாயை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்துள்ளது...” என்கிறது சி.பி.ஐ.யின் குற்றப்பத்திரிகை. பணம் நேரடியாகக் கொடுக்கப்படாமல், சுற்றி வளைத்து கணக்குக் காட்டப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
1. குஸேகான் நிறுவனம், சினியுக் நிறுவனத்துக்குக் கொடுத்த 200 கோடியை, அப்படியே 2009 ஆகஸ்ட் மாதத்துக்குள் கலைஞர் டி.விக்கு, சினியுக் மீடியா நிறுவனம் கொடுத்துவிடுகிறது. இதே 2009 அக்டோபர் மாதம்தான், 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். போட்டு விசாரணையும் தொடங்கியது.
அதனால், சினியுக் மற்றும் குஸேகான் நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டு அவசரமாக சில ஒப்பந்தங்கள் போட்டன. 27.1.2010 அன்று குஸேகான் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசீப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும், சினியுக் இயக்குநர் கரீம் முரானியோடு ஒப்பந்தம் போடுகின்றனர்.
இதன்படி, சினியுக் நிறுவனத்தில் டி.பி. குரூப்பைச் சேர்ந்த குஸேகான் நிறுவனம் 49 சதவிகிதப் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததுடன் (ஒரு பங்கு 510 என்ற விலையில் 1,22,000 பங்குகளை வாங்கியது), 200 கோடியை கடனாக மாற்றிக் கொள்ளவும் ஓர் ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் போட்டுள்ளன.
முரானி குடும்பத்தினர் பல ஹிந்திப் படங்களை எடுத்தவர்கள். 'சினிமாத் தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத குஸேகான் நிறுவனம் சினியுக் நிறுவனத்துக்கு ஏன் கடன் கொடுக்க வேண்டும்?’ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது சி.பி.ஐ.
2. சினியுக் நிறுவனத்துக்கும் கலைஞர் டி.வி-க்கும் இடையே உருவான ஒப்பந்தங்கள் 'வேடிக்கை'யாக இருப்பதையும் சி.பி.ஐ. குறிப்பிடுகிறது.
கலைஞர் டி.வி. ஒரு தனியார் லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனம் 2009 மார்ச் 31 அன்று தாக்கல் செய்யப்பட்ட இருப்பு நிலை தொகைக் குறிப்பில் 31,82,21,171 பணத்தை உதிரி மற்றும் இதரக் கடன்கள் மூலம் வந்தவை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த 31 கோடியில் 25 கோடி சினியுக் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. ஆனால், சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததற்கு அடுத்த ஆண்டு (31.3.2010) கலைஞர் டி.வி. தாக்கல் செய்த இருப்பு நிலைத் தொகைக் குறிப்பில் சினியுக் நிறுவனம் கொடுத்த பணத்தைக் கழித்துவிட்டு, மீதி உள்ள சுமார் 6 கோடி மட்டுமே காட்டப்பட்டது.
இதே ஆண்டில் மேலும் பல கோடிகளை சினியுக் நிறுவனம் கலைஞர் டி.வி-க்கு கொடுத்து இருக்க, இதே பேலன்ஸ் ஷீட்டில் பழைய 25 கோடியையும் சேர்த்து உதிரி மற்றும் கடன்கள் மூலம் 214,86,54,109 வந்ததாகக் காட்டி உள்ளனர்.
அதாவது யார் பணம் கொடுத்தார்கள், இந்த 214 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் இல்லை. கலைஞர் டி.வி. இயக்குநர்களான கனிமொழியும், சரத்குமாரும் திட்டமிட்டு இந்த மாற்றங்களை மேற்கொண்டனர் என்று சி.பி.ஐ. சொல்கிறது.
3. மேலும், கொடுத்த பணத்துக்கும் வாங்கிய பணத்துக்கும் கணக்குக் காட்ட, ஒரு சில ஒப்பந்த வளையங்களுக்குள் இரு நிறுவனங்களும் வலுக்கட்டாயமாக வந்தன.
19.12.2008 அன்று சினியுக் நிறுவனமும் கலைஞர் டி.வி-யும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதாம். அதன்படி, சினியுக் நிறுவனம் அளித்துள்ள நிதியினைக் கொண்டு, கலைஞர் டி.வி-யின் பங்குகளை சுமார் 35 சதவிகிதம்வரை வாங்கிக் கொள்ளும் என்றும், ஒருவேளை இந்த பங்குப் பரிவர்த்தனை திட்டப்படி நிறைவேறவில்லை என்றால், இதைக் கடனாக மாற்றிக் கொள்ளும் என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த ஒப்பந்தங்களைப் போட்டுள்ள சரத்குமார், மற்ற இயக்குநர்களின் சார்பிலும், அவரே முடிவு எடுத்துள்ளார். ஆனால் சி.பி.ஐ., 'சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஒப்பந்தத்தைக்கூட இவர்கள் போடவில்லை. குறைந்தபட்சம் முத்திரைத் தாளில்கூட இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. வாங்கிய பணத்துக்கு நியாயம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, இப்படி ஓர் ஒப்பந்தத்தை தயாரித்து, வழக்கின் புலனாய்வைத் திசை திருப்புகிறார்கள்.
இது 2008-ல் போடப்பட்ட உண்மையான ஒப்பந்தம் என்றால், 2009-ம் ஆண்டு அறிக்கையில் இதையும் சொல்லியிருக்க வேண்டும். 2009 மார்ச் மாதம்வரை சினியுக் நிறுவனத்திடம் இருந்து 25 கோடியை கலைஞர் டி.வி. வாங்கி இருந்தது. இந்தத் தொகையைப் பங்குத் தொகையாகவோ அல்லது பங்கு விண்ணப்பத் தொகையாகவோ காட்டியிருக்கலாம். ஆனால், அந்த ஆண்டு அறிக்கையில் கடன் கணக்கில்தான் இந்த 25 கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது.
2-ஜி விசாரணை தொடங்கப்பட்ட பின்னரே 2010-ம் ஆண்டு அறிக்கையில், தப்பித்துக் கொள்ளும் வகையில் கணக்குகளை மாற்றினார்கள்...’ என்கிறது.
4. பணத்தைத் திருப்பிக் கொடுத்த விவகாரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் சி.பி.ஐ., 'கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்ட பணம் ஒரு வருடமாக அப்படியே இருந்தது. ஆ.ராசாவை நாங்கள் அழைத்து விசாரிக்கத் தொடங்கியவுடன், 200 கோடியை கலைஞர் டி.வி. அவசரம் அவசரமாகத் திருப்பிக் கொடுத்ததாகச் சொல்கிறது.
2010 டிசம்பர் 24 அன்று ஆ.ராசா சி.பி.ஐ. முன்பு ஆஜராகி விசாரணைக்கு உட்பட்ட தினத்தில்தான், கலைஞர் டி.வி. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தொடங்கியது. டிசம்பர் 24 முதல் 2011 பிப்ரவரி 3 வரை எட்டு தவணைகளில் 200 கோடியை கலைஞர் டி.வி. கொடுத்துவிட்டது.
ஆ.ராசாவை பல முறை அழைத்து விசாரித்து பின்னர், பிப்ரவரி 2 அன்று கைது செய்தோம். இந்த சமயத்தில் பணத்தை முழுமையாகத் திருப்பிக் கொடுத்துவிட்டது கலைஞர் தொலைக்காட்சி.
பணத்தைக் கொடுத்த அதே தேதிகளில், சினியுக் நிறுவனமும் குஸேகான் நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்து இருக்கிறது. இறுதியில் குஸேகானும் இந்த 200 கோடியை வட்டியோடு டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்தது. இரண்டு நிறுவனங்களைத் தாண்டி பணம் வருவதும் போவதும் பலவிதமான தொடர்புகளை உறுதிப்படுத்துகிறது!’ என்கிறது.
இந்த விவகாரத்தில், கலைஞர் டி.வி. சுமார் 30 கோடியை வட்டியாக சினியுக் நிறுவனத்துக்கும், சினியுக் நிறுவனம் சுமார் 25 கோடியை குஸேகான் நிறுவனத்துக்கும், குஸேகான் சுமார் 23 கோடியை டைனமிக்ஸ் நிறுவனத்துக்கும் வட்டியாகக் கொடுத்து உள்ளன.
இப்படி கலைஞர் டிவிக்கு பணம் வந்த விவகாரமும், இவர்கள் திருப்பிக் கொடுத்த விவகாரமும் மிக எளிதாக ஊகிக்க முடியும் விஷயமாக இருக்கின்றபோது இதில் ஊழலே நடக்கவில்லை என்று சொல்வது படு முட்டாள்தனம்..!
இவ்வளவு பெரிய தொகையை ராசா ஒருவரே கொள்ளையடித்திருக்க முடியாது என்று கலைஞர் திருவாய் மலர்ந்தார். “அதுதான்... கூட்டணியாக உங்களது குடும்பமே சாப்பிட்டிருக்கிறதே...?” என்று சுட்டிக் காட்டியவுடன் கப்சிப்பானார்..!
“ராசா எனது மகனைப் போன்றவர்.. அவரை ஒரு நாளும் தி.மு.க. கழகம் கைவிடாது.. இந்த ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ஊழலே நடக்கவில்லை...” என்றெல்லாம் இத்தனை நாட்களாக ஊருக்கு ஊர் மைக் செட்டுகளே உடையும் அளவுக்கு கூக்குரலிட்ட தி.மு.க.வினர், இன்றைக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கலைஞர் தனது அன்பு மகள் கனிமொழியைக் காப்பாற்ற அனுப்பி வைத்த கிருஷ்ண பரமாத்மாவான ராம்ஜெத்மலானியின் வாதங்களைக் கேட்டு எந்தப் பக்கம் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை..!
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராசா குற்றவாளி என்றால் அதற்கும் கனிமொழிக்கும், தி.மு.க.வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றுதானே பொருள்..?
இந்த நன்றியை மட்டுமா செய்துள்ளார் கலைஞர்..? அடுத்தது சரத்குமார் ரெட்டியையும் வசமாக மாட்டிவிட்டுள்ளார்..!
“கனிமொழிக்கு கலைஞர் டிவியில் 20 சதவீதம் பங்குகள்தான் உள்ளன. இவர் பங்குதாரராக இருந்தாலும் கலைஞர் டிவி நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. அவர் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை, எதையும் அமல்படுத்தவில்லை. நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் சரத்குமாரே கவனித்து வருகிறார். கலைஞர் டிவியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த கனிமொழி 2 மாதத்திலேயே அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இப்போது அவர் வெறும் பங்குதாரர் மட்டுமே...” என்று கலைஞர் டிவிக்குள் பணம் வந்த கதையை முழுக்க முழுக்க சரத்குமார் ரெட்டி மீது ராம்ஜெத்மலானி மூலமாகத் திருப்பிவிட்டிருக்கிறார்..!
பாவம் சரத்குமார்.. இந்த கலைஞருக்காக தன்னுடைய ஆத்ம நண்பர்களான கலாநிதி, தயாநிதிகளை விரோதித்துக் கொண்டு கலைஞர் டிவியை மிகக் குறுகியக் காலத்தில் துவக்க முதல் காரணமாக இருந்தார். “கண்கள் பனித்தன” வசனம் பேசிய அன்றைய இரவிலேயே தன் வீட்டிலேயே தனது மனைவி முன்பாகவே நிதி சகோதரர்களிடம் தர்ம அடி வாங்கிய பரிதாபத்திற்குரியவரும் இவரே..
இரண்டு நாட்களுக்கு முன்பாக தனது மனைவியுடன் கோபாலபுரத்திற்குப் போய் அவரைப் பார்த்து கெஞ்சிக் கூத்தாடி, தனது மனைவியை தாத்தாவின் காலில் விழுக வைத்து தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சிவிட்டு வந்திருக்கிறார்.
பாவம்.. தாத்தா, என்றைக்கும், யாருக்கும் நன்றியுடன் இருந்ததே கிடையாது என்பது அவருக்குத் தெரியாது.. இனிமேல் கலைஞர் டிவிக்கு வந்த 200 கோடி ரூபாய் பணத்திற்கான கணக்குகளை தான் மட்டுமே தனது முதுகில் சுமந்து திரிய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை இவருக்கு..!
ஒரு வகையில் இதற்கு இவரும் ஒரு வகையில் காரணம்தான். நிதி சகோதர்களால் தாக்கப்பட்ட பின்பு தனது 20 சதவிகித பங்குகளை கொடுத்துவிட்டு டிவியில் இருந்து வெளியேறுவதாக தாத்தாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அன்றோடு கலைஞர் டிவி அலுவலகத்திற்கே வராமல் தனது வீட்டில்தான் இருந்திருக்கிறார். டிவி தொடர்பான வேலைகளுக்கு தொலைபேசியில் மட்டுமே பதிலளித்து வந்ததாக கலைஞர் டிவியில் வேலை பார்ப்பவர்கள் கூறுகிறார்கள்..!
இந்த 200 கோடி ரூபாய் மர்மக் கணக்கு வெளியான பின்புதான் அவசரம், அவசரமாக அவர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு தங்களைக் காப்பாற்றும் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். அதற்குத் தலையாட்டிய பாவத்தை இன்னும் பல ஆண்டுகள் சரத்குமார் ரெட்டி அனுபவிக்கப் போகிறார். பாவம்.. தனிப்பட்ட முறையில் மிக நல்ல மனிதர் என்கிறார்கள்..!
ராம்ஜெத்மலானி மேலும் கோர்ட்டில் இன்று கூறுகையில், “கருணாநிதி மகள் என்பதால் கனிமொழி பழிவாங்கப்படுகிறார். அவர் நீதித் துறையை மதிப்பவர். எங்கும் ஓடி விட மாட்டார். எனவே, மேலும் அவர் ஒரு பெண். இந்த வகையிலாவது அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.
இந்தப் பெண் என்னும் கேடயத்தை கனிமொழிக்கு மாத்திரம் பயன்படுத்துகிறார்களே.. போயஸ் ஆத்தாவும் ஒரு பெண்தானே..? பின்பு அந்த அம்மையார் மேல் ஏன் இத்தனை வழக்கு மேல் வழக்கு போட்டு துன்புறுத்த வேண்டும்..? விட்டிருக்கலாமே..? இப்போது தான் பெற்ற மகள் என்ற உடனேயே மட்டும் தாத்தாவுக்கு பெண் என்ற வார்த்தை சிக்கியிருக்கிறதோ..? இவருக்கு ஒரு நீதி..? அடுத்தவர்களுக்கு ஒரு நீதியா..?
இதைவிடக் கொடுமை.. நேற்று இரவு ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கனிமொழி, தான் ஜாமீன் கேட்க மாட்டேன் என்றும், பெண் என்ற சலுகையை எதிர்பார்க்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். விடிந்த பொழுதில் அவர் கூறியிருந்த வாசகங்கள் பொய்யாகிப் போயிருப்பதை பார்த்தால் தாத்தாவின் நேர் வாரிசு இந்த கனிமொழிதான் என்று இப்போதே சொல்லிவிடலாம்போல் தோன்றுகிறது..!
பாவம் திருவாளர் ஆண்டிமுத்து ராசா.. தேர்தல் முடிந்ததும் எப்படியும் வெளியில் வந்துவிடலாம்.. தலைவர் தன்னை ஜாமீனில் வரவழைத்துவிடுவார் என்று விழிமேல்விழி வைத்து காத்துக் கொண்டிருந்தார். ஆனால் “தனது மகளுக்காக தன்னை நிரந்தரமாக அங்கேயே தங்க வைக்க ஏற்பாடுகளை செய்திருக்கிறார் தலைவர்..” என்பதைக் கேள்விப்பட்டு அவர் என்ன பாடுபடுகிறாரோ தெரியவில்லை..!
தான் கைது செய்யப்பட்டதும் தன் தலைவர் கூட்டணியை முறித்துக் கொண்டு, தன்னை பகடைக் காயாக வைத்து மத்திய அரசை உருட்டியெடுப்பார் என்று ராசா நினைத்திருப்பார். அதுவும் பொய்யாகிப் போனது..! மத்திய அரசுக்கு எதிராக இம்மியளவுகூட எதிர்ப்பை காட்டாமல் நீ உள்ளயே இரு ராசா.. சட்டப்படி நாம வெளில வந்திரலாம் என்று தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தியிருக்கிறது.
மகள் கைது செய்யப்படாமல் அவருடைய பெயர் குற்றப்பத்திரிகையில் வந்தவுடனேயே, தி.மு.க.வின் உயர் மட்டக் குழுவைக் கூட்டி நடவடிக்கை எடுக்கும் சூழலுக்கு போகத் துணிந்த தாத்தாவுக்கு, ஆண்டிமுத்து ராசா என்னும் தலித்திய தமிழனொருவன், தன்னை நம்பி, தனது குடும்பத்துக்காக, தனது எட்டு தலைமுறைகளுக்காக முறைகேடாக சம்பாதித்துக் கொடுத்திருக்கும் அந்தத் தங்கக் கம்பி... சிறையில் வாடுகிறானே என்பதெல்லாம் பெரும் கொடுமையாகத் தெரியவில்லை..
ஆனால் தான் பெற்றெடுத்த அருமை மகள் கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிகையில் வந்தவுடனேயே.. அவர் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்ட உடனேயே அவருடைய ரத்தம் கொதிக்கிறது.. உள்ளம் அடங்க மறுக்கிறது.. அந்த மனைவியின் வீட்டிற்குப் போக உடல் துடித்தாலும் உள்ளம் மறுக்கிறது.. இப்படி ஏற்கெனவே சொன்னதுபோல நவீன திருதராஷ்டினாக காட்சியளிக்கும் கலைஞரின் ஓரங்க நாடகத்தில் தான் கடைசியில் பபூனாகப்பட்டிருக்கிறோம் என்பதை ஆண்டிமுத்து ராசா இன்றைக்கு கொஞ்சமாவது உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்..!
இன்றைக்குக்கூட 2 பேரின் ஜாமீன் மனுவை நிராகரித்திருக்கும் சி.பி.ஐ. கோர்ட், நாளைக்கு கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனுக்களை ஏற்கும் என்று நான் நம்பவில்லை..! இன்றைக்கே சி.பி.ஐ.யும் இவர்களின் ஜாமீன் மனுவை எதிர்த்து வாதாடியிருக்கிறது..!
'தகத்தகாய கதிரவனான' ஆண்டிமுத்து ராசா, இந்த ஒன்றை மட்டுமே எண்ணி இப்போதைக்குக் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..! வேறு வழியில்லை..!
|
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
97
comments
Labels: அரசியல், ஆ.ராசா, ஊழல், கலைஞர், கலைஞர் டிவி, கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல்
கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்த பாதை...!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கலைஞர் டி.வி-க்கு பணம் கை மாறியதை 'ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தை விசாரிக்கும் சி.பி.ஐ. மிக சீரியஸ் கண்ணோட்டத்தில் பார்க்கிறது…!
'2007-08 ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறையால் ஒதுக்கப்பட்ட 2-ஜி அலைக்கற்றை விவகாரத்துக்கும், 2009-ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியுக் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2009-ம் ஆண்டு சினியுக் என்ற நிறுவனம், பங்குகள் பரிவர்த்தனைக்காக முன் பணம் கொடுத்து இருந்தது.
ஆனால், இரண்டு நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2009 ஆகஸ்ட்வரை பெறப்பட்ட 200 கோடி ரூபாயைக் கடனாகப் பாவித்து, மொத்தப் பணமும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தால் திருப்பித் தரப்பட்டுவிட்டது. அந்தத் தொகைக்கான வட்டியாக 31 கோடி ரூபாய் தரப்பட்டது.
இந்தப் பரிவர்த்தனை வருமான வரித் துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் செலுத்தப்பட்டது. இந்த மொத்தப் பரிவர்த்தனையும் சட்டத்துக்கு உட்பட்டு, உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே!’ - இதுதான் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்!
இதற்கிடையே, 'சன் டி.வி-யில் இருந்த தனது பங்குகளைப் பிரித்து வாங்கிய வகையில், 100 கோடி ரூபாய் என் மனைவி தயாளுவுக்குக் கிடைத்தது. அதைத்தான் கலைஞர் டி.வி-யில் அவர் முதலீடு செய்தார்.' என்று பணத்தின் ஒரு பகுதிக்கு முதல்வர் கருணாநிதி திடீரென்று ஒரு கணக்கு சொல்லியிருக்கிறார்.
மாறாக, 'கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்த விவகாரத்தில் நிச்சயமாக முறைகேடு நடந்து உள்ளது' என்று ஆதாரங்களுடன் சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் கூறியுள்ளது!
'அதாவது, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில், 2008 டிசம்பர் மாத இறுதியில், ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த எட்டிஸாலட் நிறுவனம் ரூபாய் 3,228 கோடியும் ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூபாய் 381 கோடியும் முதலீடு செய்து பங்குகளை வாங்கின.
ஆ.ராசாவிடம் இருந்த செல்வாக்கின் மூலம் ஸ்பெக்ட்ரம் உரிமங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, மேற்கண்ட நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்றதற்கு நன்றிக் கடனாக, ஸ்வான் நிறுவனம் பணத்தை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்தது!’ என்கிறது சி.பி.ஐ.
ஸ்வான் டெலிகாமை சேர்ந்த ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா இருவரும் நடத்தும் மற்றொரு நிறுவனம்தான் டிபி ரியாலிட்டி. இது, பங்குச் சந்தையில் பதிவு பெற்ற நிறுவனம். இந்த டிபி ரியாலிட்டி, டைனமிக்ஸ் ரியாலிட்டி என்ற மற்றொரு நிறுவனத்திலும் பங்குதாரராக இருக்கிறது. இந்த டைனமிக்ஸ் நிறுவனத்துக்கு, கட்டுமானத்தில் ஈடுபடும் இரண்டு துணை நிறுவனங்களும் உண்டு.
இப்படி சிலந்தி வலையாகப் பரவி இருக்கும் நிறுவனங்களில், ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசீப் பால்வா, ராஜீவ் அகர்வால் போன்றவர்கள் இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். இப்படிப் பல பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கி... அதன் பெயர்களில் கடன்கள் வாங்கி, அந்தப் பணத்தை வேறு காரணங்களுக்குத் திசை திருப்பிவிடுவார்கள்.
இதில் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம்தான் 200 கோடி ரூபாயை கலைஞர் டி.வி-க்கு வெவ்வேறு தேதிகளில் வழங்கியது என்று சொல்லும் சி.பி.ஐ., இந்தப் பணமும் நேரடியாகச் செல்லவில்லை என்கிறது.
'இந்த டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம், 209 கோடியை குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனத்துக்குக் கடனாகக் கொடுக்கிறது. 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட்வரை வெவ்வேறு தவணைகளில் இந்த பணத்தைக் கொடுத்து உள்ளார்கள் (இது பற்றி தனியாக ஒரு பெட்டிச் செய்தி).
ஷாகித் பால்வாவின் சகோதரர் ஆசிப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும் இதில் இயக்குநர்கள். இந்த நிறுவனம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வியாபாரங்களுக்காகப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் தனது பெயரை குஸேகான் ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்று மாற்றிக் கொண்டு, கடன் வாங்குவதும் மற்ற கம்பெனிகளுக்கு கடன் கொடுப்பதுமான பணிகளைச் செய்தது.
இதன்படி, டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 209 கோடியில், 200 கோடியை சினியுக் நிறுவனத்துக்கு குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் கொடுத்தது.
அதே 2008 டிசம்பர் 23 முதல் 2009 ஆகஸ்ட் 7 வரையிலான கால கட்டங்களில் கிட்டத்தட்ட ஏழு தவணைகளில் டைனமிக்ஸ் மாதிரியே குஸேகானும் கொடுத்தது.
இதையடுத்து சினியுக் நிறுவனம் இதே காலகட்டத்தில் (23.12.2008 முதல் 7.8.2009) ஆறு தவணைகளில் இந்த 200 கோடியை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்து உள்ளது...’ என்கிறது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை. பணம் நேரடியாகக் கொடுக்கப்படாமல், சுற்றி வளைத்து கணக்குக் காட்டப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
1. குஸேகான் நிறுவனம், சினியுக் நிறுவனத்துக்குக் கொடுத்த 200 கோடியை, அப்படியே 2009 ஆகஸ்ட் மாதத்துக்குள் கலைஞர் டி.விக்கு, சினியுக் மீடியா நிறுவனம் கொடுத்துவிடுகிறது. இதே 2009 அக்டோபர் மாதம்தான், 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். போட்டு விசாரணையும் தொடங்கியது.
அதனால், சினியுக் மற்றும் குஸேகான் நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டு அவசரமாக சில ஒப்பந்தங்கள் போட்டன. 27.1.2010 அன்று குஸேகான் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசீப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும், சினியுக் இயக்குநர் கரீம் முரானியோடு ஒப்பந்தம் போடுகின்றனர்.
இதன்படி, சினியுக் நிறுவனத்தில் டி.பி. குரூப்பைச் சேர்ந்த குஸேகான் நிறுவனம் 49 சதவிகிதப் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததுடன் (ஒரு பங்கு 510 என்ற விலையில் 1,22,000 பங்குகளை வாங்கியது), 200 கோடியை கடனாக மாற்றிக் கொள்ளவும் ஓர் ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் போட்டுள்ளன.
முரானி குடும்பத்தினர் பல ஹிந்திப் படங்களை எடுத்தவர்கள். 'சினிமாத் தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத குஸேகான் நிறுவனம் சினியுக் நிறுவனத்துக்கு ஏன் கடன் கொடுக்க வேண்டும்?’ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது சி.பி.ஐ.
2. சினியுக் நிறுவனத்துக்கும் கலைஞர் டி.வி-க்கும் இடையே உருவான ஒப்பந்தங்கள் 'வேடிக்கை'யாக இருப்பதையும் சி.பி.ஐ. குறிப்பிடுகிறது.
கலைஞர் டி.வி. ஒரு தனியார் லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனம் 2009 மார்ச் 31 அன்று தாக்கல் செய்யப்பட்ட இருப்பு நிலை தொகைக் குறிப்பில் 31,82,21,171 பணத்தை உதிரி மற்றும் இதரக் கடன்கள் மூலம் வந்தவை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த 31 கோடியில் 25 கோடி சினியுக் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. ஆனால், சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததற்கு அடுத்த ஆண்டு (31.3.2010) கலைஞர் டி.வி. தாக்கல் செய்த இருப்பு நிலைத் தொகைக் குறிப்பில் சினியுக் நிறுவனம் கொடுத்த பணத்தைக் கழித்துவிட்டு, மீதி உள்ள சுமார் 6 கோடி மட்டுமே காட்டப்பட்டது.
இதே ஆண்டில் மேலும் பல கோடிகளை சினியுக் நிறுவனம் கலைஞர் டி.வி-க்கு கொடுத்து இருக்க, இதே பேலன்ஸ் ஷீட்டில் பழைய 25 கோடியையும் சேர்த்து உதிரி மற்றும் கடன்கள் மூலம் 214,86,54,109 வந்ததாகக் காட்டி உள்ளனர்.
அதாவது யார் பணம் கொடுத்தார்கள், இந்த 214 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் இல்லை. கலைஞர் டி.வி. இயக்குநர்களான கனிமொழியும் சரத்குமாரும் திட்டமிட்டு இந்த மாற்றங்களை மேற்கொண்டனர் என்று சி.பி.ஐ. சொல்கிறது.
3. மேலும், கொடுத்த பணத்துக்கும் வாங்கிய பணத்துக்கும் கணக்குக் காட்ட, ஒரு சில ஒப்பந்த வளையங்களுக்குள் இரு நிறுவனங்களும் வலுக்கட்டாயமாக வந்தன.
19.12.2008 அன்று சினியுக் நிறுவனமும் கலைஞர் டி.வி-யும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதாம். அதன்படி, சினியுக் நிறுவனம் அளித்துள்ள நிதியினைக் கொண்டு, கலைஞர் டி.வி-யின் பங்குகளை சுமார் 35 சதவிகிதம்வரை வாங்கிக் கொள்ளும் என்றும், ஒருவேளை இந்த பங்குப் பரிவர்த்தனை திட்டப்படி நிறைவேறவில்லை என்றால், இதைக் கடனாக மாற்றிக் கொள்ளும் என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த ஒப்பந்தங்களைப் போட்டுள்ள சரத்குமார், மற்ற இயக்குநர்களின் சார்பிலும், அவரே முடிவு எடுத்துள்ளார். ஆனால் சி.பி.ஐ., 'சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஒப்பந்தத்தைக்கூட இவர்கள் போடவில்லை. குறைந்தபட்சம் முத்திரைத் தாளில்கூட இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. வாங்கிய பணத்துக்கு நியாயம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, இப்படி ஓர் ஒப்பந்தத்தை தயாரித்து, வழக்கின் புலனாய்வைத் திசை திருப்புகிறார்கள்.
இது 2008-ல் போடப்பட்ட உண்மையான ஒப்பந்தம் என்றால், 2009-ம் ஆண்டு அறிக்கையில் இதையும் சொல்லியிருக்க வேண்டும். 2009 மார்ச் மாதம்வரை சினியுக் நிறுவனத்திடம் இருந்து 25 கோடியை கலைஞர் டி.வி. வாங்கி இருந்தது. இந்தத் தொகையைப் பங்குத் தொகையாகவோ அல்லது பங்கு விண்ணப்பத் தொகையாகவோ காட்டியிருக்கலாம். ஆனால், அந்த ஆண்டு அறிக்கையில் கடன் கணக்கில்தான் இந்த 25 கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது. 2-ஜி விசாரணை தொடங்கப்பட்ட பின்னரே 2010-ம் ஆண்டு அறிக்கையில், தப்பித்துக் கொள்ளும் வகையில் கணக்குகளை மாற்றினார்கள்...’ என்கிறது.
4. பணத்தைத் திருப்பிக் கொடுத்த விவகாரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் சி.பி.ஐ., 'கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்ட பணம் ஒரு வருடமாக அப்படியே இருந்தது. ஆ.ராசாவை நாங்கள் அழைத்து விசாரிக்கத் தொடங்கியவுடன், 200 கோடியை கலைஞர் டி.வி. அவசரம் அவசரமாகத் திருப்பிக் கொடுத்ததாகச் சொல்கிறது.
2010 டிசம்பர் 24 அன்று ஆ.ராசா சி.பி.ஐ. முன்பு ஆஜராகி விசாரணைக்கு உட்பட்ட தினத்தில்தான், கலைஞர் டி.வி. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தொடங்கியது. டிசம்பர் 24 முதல் 2011 பிப்ரவரி 3 வரை எட்டு தவணைகளில் 200 கோடியை கலைஞர் டி.வி. கொடுத்துவிட்டது.
ஆ.ராசாவை பல முறை அழைத்து விசாரித்து பின்னர், பிப்ரவரி 2 அன்று கைது செய்தோம். இந்த சமயத்தில் பணத்தை முழுமையாகத் திருப்பிக் கொடுத்துவிட்டது கலைஞர் தொலைக்காட்சி.
பணத்தைக் கொடுத்த அதே தேதிகளில், சினியுக் நிறுவனமும் குஸேகான் நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்து இருக்கிறது. இறுதியில் குஸேகானும் இந்த 200 கோடியை வட்டியோடு டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்தது. இரண்டு நிறுவனங்களைத் தாண்டி பணம் வருவதும் போவதும் பலவிதமான தொடர்புகளை உறுதிப்படுத்துகிறது!’ என்கிறது.
இந்த விவகாரத்தில், கலைஞர் டி.வி. சுமார் 30 கோடியை வட்டியாக சினியுக் நிறுவனத்துக்கும், சினியுக் நிறுவனம் சுமார் 25 கோடியை குஸேகான் நிறுவனத்துக்கும், குஸேகான் சுமார் 23 கோடியை டைனமிக்ஸ் நிறுவனத்துக்கும் வட்டியாகக் கொடுத்து உள்ளன.
கடனைத் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி. தனது விளம்பர வருமானத்திலும் மற்றும் அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் (70 கோடி) இந்தியன் வங்கியில் ஓ.டி-யாக கடன் வாங்கியும் சமாளித்ததாகக் கூறப்படுவதை குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. மிக விவரமாக ஆராய்ந்து இருக்கிறது.
வரும் மே 6 அன்று, செம்மொழி விருது வழங்கும் நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் நடக்கிறது. அதே தினம் கோர்ட்டில் ஆஜராகப் போகும் கனிமொழிக்கு சி.பி.ஐ. கொடுக்க இருக்கும் விருது எப்படி இருக்கும் என்பதை இந்தியாவே எதிர்பார்க்கிறது!
நன்றி : ஜூனியர்விகடன்-மே 8, 2011
|
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
20
comments
Labels: அரசியல், ஊழல், கலைஞர், கலைஞர் டிவி, கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல்
ஆ.ராசா அமைச்சராகக் காரணமே கனிமொழிதான்..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எத்தனையோ திருப்புமுனைகளைக் கடந்து வந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இப்போது கனிமொழி அத்தியாயத்தில் நிற்கிறது. இனி, வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்புகள் குறித்து அமலாக்கப் பிரிவு தகவல்களை வெளிக்கொண்டு வர வேண்டியதுதான் பாக்கி.
2008-ன் நடுவிலேயே பத்திரிகைகளும், எதிர்க் கட்சிகளும், போட்டித் தனியார் நிறுவனங்களும், '2-ஜி விவகாரத்தில் அரசுக்கு என்னென்ன நஷ்டம்? ஆ.ராசா என்னென்ன தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்..? அவரும் தி.மு.க. குடும்பமும் என்ன பலன் அடைந்தனர்...? அரசு இந்த ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டாமா..?’ என்று கண்டனங்களும் கேள்விகளும் எழுப்பின.
இத்தனை எதிர்ப்புகள் இருந்த நேரத்தில்தான், அதாவது 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட்வரை 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து கலைஞர் டி.வி. 200 கோடியைப் பெற்று உள்ளது. இதைத்தான் ஆதாரபூர்வமாகக் கண்டறிந்து, கடந்த 25-ம் தேதி கூடுதல் குற்றப் பத்திரிகையில் வெளியிட்டது சி.பி.ஐ.!
இந்தக் குற்றப் பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ள குற்றச்சாட்டுகள், ஏற்கெனவே வெளியான தகவல்கள்தான் என்றாலும், சி.பி.ஐ. இப்போதுதான் ஆதாரப்பூர்வமான சாட்சியங்களோடு உறுதி செய்துள்ளது.
'கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. அதனால், கனிமொழியைப் பற்றியும் கலைஞர் டி.வி-யைப் பற்றியும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றால், தேர்தல் பிரசாரத்தில் வீணான சர்ச்சைகள் கிளம்பும் என்று தி.மு.க-வினர் காங்கிரஸிடம் மன்றாடினர். அவர்கள் கோரிக்கைக்கு, மத்தியில் உள்ளவர்களும் அப்போது செவிசாய்த்தார்கள். அதனால்தான், குற்றப் பத்திரிகையை இரண்டு கட்டங்களாகப் பிரித்து தாக்கல் செய்ய வேண்டிய சூழலுக்கு சி.பி.ஐ. ஆளானது’ என்கிறார்கள்.
முதல் குற்றப் பத்திரிகையில், தனியார் கம்பெனிகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், ஆ.ராசா மேற்கொண்ட தில்லுமுல்லுகளை சி.பி.ஐ. வெளியே கொண்டுவந்தது. ஆனால், இந்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் 2-ஜி ஊழலின் முக்கியக் கருவை எடுத்து வைத்திருக்கிறது. இதில்தான் கனிமொழியை சி.பி.ஐ. இறக்கியுள்ளது.
இதில், ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா, ஷாகித் பால்வாவின் சகோதரரும் குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் ரியாலிட்டி நிறுவனத்தின் இயக்குநருமான ஆசிப் பால்வா, இதே நிறுவனத்தின் மற்றொரு இயக்குநர் ராஜீவ் பி.அகர்வால், சினியுக் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவன இயக்குநர் கரீம் முரானி, கலைஞர் டி.வி. இயக்குநர் சரத்குமார் ஆகியோரோடு கனிமொழியும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில், கனிமொழி, சரத்குமார், கரீம் முரானி ஆகியோர்தான் இன்னும் கைது செய்யப்படவில்லை. மற்றவர்கள் கைதாகி சிறையில் உள்ளனர்.
சம்மன் அனுப்பப்பட்ட மேற்கண்ட மூவரும் வரும் மே 6-ம் தேதி டெல்லியில் ஆஜராகும்போது, சிறைக்கு அனுப்பப்படலாம். இதில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் முடிவே இறுதியானது. மற்ற நிறுவனங்களின் இயக்குநர்கள் எல்லாம் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், கனிமொழிக்கும் இதே நிலை வரலாம்.
2007-ல் சன் டி.வி. நிறுவனத்துக்கும், தி.மு.க-வுக்கும், பிரச்னை ஏற்படவே, கலைஞர் டி.வி. தொடங்கும் ஆயத்தப் பணிகளில் மற்றவர்களுடன் சேர்ந்து கனிமொழி தீவிரமாக இருந்ததாகச் சொல்லும் சி.பி.ஐ., 'இந்த விவகாரங்களில் ஆ.ராசாவை அவ்வப்போது தொடர்பு கொண்டு தொலைக்காட்சிக்கான அனுமதி பெற முயற்சி செய்தார்’ என்கிறது.
''ஆ.ராசா மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆவதற்குக் காரணமாக இருந்ததே கனிமொழிதான். ஆ.ராசாவுக்காக தி.மு.க-வின் தலைமையகத்தில் இவரே பேசினார்'' என்றும் குற்றம் சாட்டி, 2-ஜி ஊழல் வழக்கில் 17-வது குற்றவாளியாக கனிமொழியை சேர்த்துள்ளது.
கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாக இருப்பவை, இரண்டு சாட்சியங்கள். ஒன்று, ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி கொடுத்துள்ள வாக்குமூலம். இது குறித்து ஜூனியர் விகடன் 20.4.11 இதழில் விரிவாக வெளியிட்டு இருக்கிறோம். மற்றொருவர், நீரா ராடியா.
'ஒரிஜினலாக, ஸ்வான் நிறுவனத்தைத் தொடங்கியது ரிலையன்ஸ் நிறுவனம். மறைமுகமாக இந்த நிறுவனத்தின் மூலம் ஜி.எஸ்.எம். மொபைல் உரிமங்களைப் பெற ரிலையன்ஸ் முயற்சி செய்தது. பின்னர் இரட்டை உரிமத்தின் அடிப்படையில் ரிலையன்ஸுக்கு நேரடியாகவே முறைப்படி ஜி.எஸ்.எம் உரிமங்கள் கிடைத்தன. இப்படிக் கிடைத்தும், ஸ்வான் நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை ரிலையன்ஸ் வாபஸ் வாங்கவில்லை.
ஸ்வான் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய டிபி ரியாலிட்டி குரூப் நிறுவனத்தினர் ஷாகித் உஸ்மான் பால்வாவும் வினோத் கோயங்காவும் திட்டமிட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர்’ என்று சொல்லும் சி.பி.ஐ., 'ஸ்வானுக்கும் யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்துக்கும் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறும் தகுதி இல்லை. 2005-ம் ஆண்டு ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிம வழிகாட்டி விதிமுறைகளின்படி ஸ்வான் மற்றும் யுனிடெக் விண்ணப்பங்களைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.
தகுதி இல்லாத சான்றிதழ்களை வைத்துக் கொண்டு உரிமங்களைப் பெற முயற்சித்த இவர்களிடம், ஊழல் பணத்தைப் பெற்றுக் கொண்டு தொலைத் தொடர்புத் துறை உரிமங்களைக் கொடுக்க முயற்சிக்கப்பட்டது’ என்றும் சி.பி.ஐ. சொல்கிறது. இதன்படி, வந்த ஊழல் பணம் கறுப்புப் பணமாக இருக்க... இதை வெள்ளையாக மாற்றம் செய்ய மேற்கொண்ட முயற்சிகளையும் இரண்டாவது குற்றப் பத்திரிகை வெளிப்படுத்துகிறது.
'இதன் முதல் சுற்று, க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் நடந்துள்ளது. 2004-ல் சுற்றுச்சூழல் அமைச்சரானவுடன் ஆ.ராசா தொடங்கிய பினாமி நிறுவனம் இது. சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சாதிக் பட்சாவின் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், ஆ.ராசாவின் சகோதரர் கலியபெருமாள் மற்றும் சாதிக் பாட்சாவின் மனைவி போன்ற வேறு சிலரை இயக்குநர்களாக ஆக்கினார். இந்த நிறுவனத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி இயக்குநராக ஆரம்பத்தில் இருந்து, பின்னர் விலகினார்.
2-ஜி கறுப்புப் பணத்தை இந்த நிறுவனத்தின் மூலம் கொண்டுவரும் முயற்சியில் ஆரம்பத்தில் ஈடுபட்டு, பின்னர் அது கைவிடப்பட்டது’ என்றும் சி.பி.ஐ. கூறுகிறது. 'ஆனால், இந்த நிறுவனத்துக்கு சில கோடிகள் பணம் வந்துள்ளது. ரியல் எஸ்டேட்டுக்கு நிலங்களை வாங்க டிபி ரியாலிட்டி சில கோடிகளை க்ரீன் ஹவுஸுக்கு கொடுத்துள்ளது. பின்னர் இதே பணத்தை க்ரீன் ஹவுஸ் திருப்பிக் கொடுத்தது...’ என்று சொல்லும் சி.பி.ஐ., 'க்ரீன் ஹவுஸ் நிறுவனத்துக்குப் பணம் எப்படி வந்தது? ஏன் வந்தது? எப்படி எல்லாம் பணம் புழங்கியது..?’ என்பதற்கு சில ஆதாரங்களையும் சாட்சியங்களையும் சொல்கிறது.
'ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கிய ஸ்வான் டெலிகாம் சம்பந்தப்பட்ட டி.பி. ரியாலிட்டி, க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் மூலம் தமிழ்நாட்டில் பெரும் அளவில் நிலங்களை வாங்கிக் குவிக்கத் திட்டமிட்டது. ஆனால், அது வெற்றிகரமாக நடக்கவில்லை. இதனால் கொடுக்கப்பட்ட பணத்தையும் க்ரீன் ஹவுஸ் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும், 'இதற்குக் காரணம் க்ரீன் ஹவுஸ் விவகாரங்கள் பத்திரிகைகளில் வெளியானதுதான்’ என்று, சி.பி.ஐ. கருதுகிறது.
ஆனால், 2-ஜி கறுப்புப் பணத்தை கலைஞர் டி.வி. மூலமாக வெள்ளையாக்கும் முயற்சிகள் பின்னர் நடந்துள்ளன. சுமார் 200 கோடி ஸ்வான் டெலிகாம் பணம், கலைஞர் டி.வி-க்கு வந்துள்ளது. அதிலும், இந்த ஊழல் விவகாரம் உச்சக்கட்டமாக வெடித்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான், பணப் பரிவர்த்தனைகள் எந்தவிதத் தயக்கமும் இன்றி நடந்துள்ளது. இதில்தான் கருணாநிதி குடும்பத்தினரின் மனோதைரியம் குறித்து ஆச்சர்யத்தோடுதான் பேசிக் கொள்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!
லாபம் 1.36 கோடி... கடன் 214 கோடி... எப்படி?!
ஸ்பெக்ட்ரம் ஊழலில், ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்ததாக கனிமொழி பெயர் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டதும், முதல்வர் கருணாநிதி ஆலிவர் சாலையில் ஆலோசனை நடத்தினார்.
கலைஞர் டி.வி-யின் 20 சதவிகிதப் பங்குகள் கனிமொழிக்கும், 20 சதவிகிதப் பங்குகள் சரத் குமார் ரெட்டிக்கும், 60 சதவிகிதப் பங்குகள் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும் உள்ளது. 'டிபி ரியாலிட்டி மூலம் ஊழல் பணம் 214.8 கோடி கை மாறியதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் இருந்து, தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும்’ என்று 27.7.07-ல் கலைஞர் டி.வி. போர்டு மீட்டிங் நடந்ததுபோல மினிட்ஸ் ரெடியானது என்கிறது சி.பி.ஐ. தரப்பு.
கலைஞர் டி.வி. ஒப்படைத்த வரவு - செலவுக் கணக்கில், 'டிபி ரியாலிட்டியின் இணை நிறுவனம் மூலம் பெறப்பட்ட 214.8 கோடி, எந்த ஆவணமும் இல்லாமல் பெறப்பட்ட கடன்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்தத் தகவல்படி, கலைஞர் டி.வி-யின் ஆண்டு வரவு 63.12 கோடி. செலவு 61.47 கோடி.
நிகர லாபம் வரி செலுத்தும் முன்பு 1.65 கோடி. வரி செலுத்திய பின் லாபம் 1.36 கோடி மட்டும்தான். ஆனால், இப்படி இருக்கும் நிறுவனத்துக்கு ஆவணம் இல்லாமல், 214.8 கோடியை எப்படிக் கடனாகக் கொடுக்க முன் வந்தது டி.பி. ரியாலிட்டி நிறுவனம்?
கடன் கொடுத்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். பிறகு அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வட்டியுடன் ஏழு மாதங்களில் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ-யிடம் கூறப்பட்டு உள்ளது. ஏழு மாதங்களில் 214.8 கோடியை வட்டியுடன் கொடுக்க, கலைஞர் டி.வி-க்கு பணம் எப்படி வந்தது? மீண்டும் யார் கடன் கொடுத்தார்கள்?
மேலும், கலைஞர் டி.வி-யின் வரவு - செலவுக் கணக்கில், 'கண்ணுக்குப் புலப்படாத சொத்துக் கணக்கில் 2008-09-ல் 123.25 கோடி என்றும் அது 2009-10-ல் 159.16 கோடி’ என்றும் காட்டப்பட்டு உள்ளது. ''கண்ணுக்குத் தெரியாத சொத்தின் மதிப்பு மட்டும் எப்படி ஆண்டுக்கு ஆண்டு உயரும்? அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்?'' என்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், கலைஞர் டி.வி-யின் சரத்குமார் ரெட்டியிடம் கேட்டு வருகிறார்கள்.
என்ன பதில் சொல்லப் போகிறார் சார்..?
நன்றி : ஜூனியர்விகடன்-04-05-2011
|
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
31
comments
Labels: அரசியல், ஆ.ராசா, ஊழல், கலைஞர் டிவி, கனிமொழி, நீரா ராடியா, ஸ்பெக்ட்ரம் ஊழல்
ராசாவுக்கு ஆப்பு வைத்திருக்கும் ஆசிர்வாதம் ஆச்சாரி...!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
'கவிழ்க்கக் காத்திருக்கும் இருவர்’ என்ற தலைப்பில் கடந்த இதழில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து எழுதி இருந்தோம். சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டு, இப்போது திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசாவுக்கு எதிராக, இரண்டு முக்கியமான வாக்குமூலங்கள் வாங்கப்பட்டுள்ளன என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தோம்.
''சி.பி.ஐ. ரெய்டுக்கு உள்ளான ஏ.கே.ஸ்ரீவத்சவா, சுமார் ஒன்பது வருடங்களாகக் கூடுதல் பிரைவேட் செக்ரெட்டரியாக ஆ.ராசாவுடன் பணியாற்றிய ஆசீர்வாதம் ஆச்சாரி என்பவரும் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். இந்த இருவரின் வாக்குமூலங்களை வைத்து ஆ.ராசாவுக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. வலிமைப்படுத்தி உள்ளது!'' என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம். இப்போது ஆசீர்வாதம் ஆச்சாரி தொடர்பான பல தகவல்கள் டெல்லியில் இருந்து கசிய ஆரம்பித்து உள்ளன.
''2ஜி அலைக்கற்றை ஊழலில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரியின் வாக்குமூலம்தான் மிக முக்கியமானது. அவரது வாக்குமூலத்தின் முழு விவரங்கள் வெளியே வரும்போது ஆ.ராசா செய்த பல காரியங்களை எளிதாக உணரலாம். சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில், அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, 164 சட்டப் பிரிவின் கீழ் ஆசீர்வாதம் ஆச்சாரி ஒரு வாக்குமூலம் கொடுத்துள்ளார்!'' என்றும் டெல்லி தகவல்கள் கூறுகின்றன!
யார் இந்த ஆசீர்வாதம் ஆச்சாரி..?
தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவர் வெளி மாநிலங்களில்தான் அதிகம் வசித்தவர். இவரது அப்பா பெயர், ராஜலிங்கம் மனா ஜோசப்!
1992 மார்ச் மாதம் ரயில்வே துறையில் 'ஸ்டெனோ டி’ அந்தஸ்தில் சேர்ந்தவர் ஆசீர்வாதம். 1999-ல் 'ஸ்டெனோ சி’ அந்தஸ்து பெற்று பதவி உயர்வு கிடைத்தது. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை 2004-ல் எழுதித் தேர்ச்சி பெற்று, ரயில்வே துறையில் பிரிவு அதிகாரியாகச் சேர்ந்தார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளராக 1999 அக்டோபரில் சேர்ந்து, பிறகு அக்டோபர் 2000-ல் சுகாதாரத் துறை அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளராக மாற்றப்பட்டு, 2004 டிசம்பர் வரை பணிபுரிந்துள்ளார்.
2004 பொதுத் தேர்தல் முடிந்தவுடன், ஆ.ராசா சுற்றுப்புறச் சூழல் துறை கேபினெட் அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1.1.2006-ம் தேதி ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார் ஆசீர்வாதம். அப்போது, ஆர்.கே.சந்தோலியாதான், தனிச் செயலாளராக இருந்தார். (இப்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்!) 2007 மே மாதம் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆ.ராசாவின் விருப்பப்படி, சுற்றுச் சூழல் துறையில் இருந்து தொலைத் தொடர்புத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக ஆக்கப்பட்டார் ஆசீர்வாதம். அதே நேரத்தில், ஆர்.கே.சந்தோலியாவும் மீண்டும் ஆ.ராசாவின் செயலாளராகச் சேர்ந்தார் என்று, ஆசீர்வாதம் வளர்ந்த கதையைச் சொல்கிறார்கள்.
இதனால், ஆ.ராசாவுடன் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு ஆசீர்வாதத்துக்குக் கிடைத்தது. இதை சி.பி.ஐ.யிடம் ஆசீர்வாதம் விரிவாக விளக்கி உள்ளாராம்.
2.11.2007 அன்று எலெக்ட்ரானிக்ஸ் நிகேதான் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டேன். இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு இரவு உணவை சாப்பிட்டேன். அப்போது வீட்டில் போன் அடித்தது. அமைச்சர் ஆ.ராசாதான் பேசினார். வீட்டுக்கு வரும்படி கூறினார். உடனடியாக அமைச்சர் வீட்டுக்குப் போனேன். அமைச்சரின் அறையில், ஆர்.கே.சந்தோலியா, மெம்பர் டெக்னாலாஜி ஸ்ரீதரா, அமைச்சர் பி.ஏ-வான ராஜன் ஆகியோர் இருந்தனர்.
சந்தோலியா, அமைச்சரின் லெட்டர் பேப்பரை எடுத்துக் கொடுத்தார். கம்ப்யூட்டரில் நான் உட்கார்ந்து அடிக்க ஆரம்பித்தேன். அமைச்சர் ஆ.ராசாவே என்ன விஷயங்கள் அடிக்க வேண்டும் என்பதை டிக்டேட் செய்தார். பல மாற்றங்கள் செய்யப்பட்டு, இரவு 11 மணிக்கு கடிதம் இறுதி வடிவம் பெற்றது. இரவு 1.30 மணிக்கு அந்தக் கடிதம் சிறப்பு நபர் மூலம் கொண்டுசெல்ல, அமைச்சர் ஆ.ராசா உத்தரவிட்டார். நான் புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.
26.12.2007 அன்று சந்தோலியா என்னிடம், '2.11.2007 இரவு தயார் செய்த கடிதம் எங்கு உள்ளது. உடனடியாகப் பிரதமர் கேட்கிறார்’ என்றார். கம்ப்யூட்டரில் இருக்கிறது என்று சொன்னேன். பென் டிரைவ் மூலம் அந்தக் கடிதத்தை காபி செய்துகொண்டு போனார் சந்தோலியா. மீண்டும் வந்து அந்தக் கடிதத்தை பிரின்ட் எடுத்துக்கொண்டு போனார். பிரதமருக்கு அந்தக் கடிதத்தைக் கொடுத்தாகப் பேசிக்கொண்டார்கள்.
மே 2007-ல், மொரானி சகோதரர்கள் வந்தார்கள். சரத்குமார் ரெட்டியும் அவர்களை சந்தித்துப் பேசினார். கலைஞர் டி.வி. தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் ஆ.ராசா வீட்டில்தான் நடந்தன. கலைஞர் டி.வி-க்கு அனுமதி பெறுவது தொடர்பாக அமைச்சர் ஆ.ராசா, மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷியிடமும், அவருடைய செயலாளர் மனோஜ்குமாரிடமும் பேசினார். கலைஞர் டி.வி-க்கு அனுமதி கிடைத்தது. 'கலைஞர் செய்தி சேனல்’ தொடங்க வேண்டும் என்று கனிமொழி பல முறை அமைச்சர் வீட்டுக்கும், எலெக்ட்ரானிக்ஸ் நிகேதான் அலுவலகத்துக்கும் வந்தார். பல முறை பல மணி நேரம் பேசிக்கொண்டு இருப்பார்கள்.
3.10.2008-ல் ஆசீர்வாதத்தைக் கூடுதல் தனிச் செயலாளர் பதவியில் இருந்து ராசா விடுவித்து இருக்கிறார். 29.10.08-ல் ரயில்வே துறைப் பணியில் இவர் சேர்ந்து இருக்கிறார்.
இந்த வாக்குமூலத்தை நேரடியான சாட்சியாக சி.பி.ஐ. பார்க்கிறது. இவரது வாக்குமூலத்தை, முக்கியமானதாகப் பயன்படுத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், 2ஜி அலைக்கற்றை ஊழலின் இரண்டாவது குற்றப் பத்திரிகை அமையும். இந்த குற்றப் பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார், தயாளு அம்மாள் ஆகிய மூவரின் பெயர்களும் இடம் பெறும் என்று சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது!
நன்றி : ஜூனியர்விகடன்-20-04-2011
|
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
17
comments
Labels: அரசியல், ஆ.ராசா, ஊழல், கலைஞர் டிவி, கனிமொழி, நீரா ராடியா, ஸ்பெக்ட்ரம் ஊழல்
கனிமொழி, தயாளு அம்மாள் பெயர்களைச் சேர்க்காதது ஏன்?
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கடந்த 2-ம் தேதியன்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் முதல் கட்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அது தொடர்பாக ஜூனியர்விகடனில் வந்திருக்கும் ஸ்பெஷல் கட்டுரை இது..!
கடந்த 28 ஆண்டுகள் கழித்து கிரிக்கெட் விளையாட்டில் உலகக் கோப்பையைக் கைப்பற்றி, சனிக்கிழமை அன்று இரவில், தலைநிமிர்ந்து ஆர்ப்பரித்தது இந்தியா! அன்று பகலில், டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை
ஒன்று, 'இந்தியாவின் ஜனநாயக விளையாட்டில் பணமும் அதிகார துஷ்பிரயோகமும் எப்படி தலைவிரித்து ஆடுகிறது’ என்பதை உறுதிபடச் சொல்லி, இந்தியாவைத் தலைகுனிய வைத்து இருக்கிறது!
உலகக் கோப்பையை வாங்கித் தந்த டீமில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லை என்பது வருத்தமான விஷயம்தான். ஆனால், இந்தக் குற்றப்பத்திரிகையில் இருந்த முதல் பெயரே, தமிழகத்து முகம் என்பது அதைவிட வருத்தமானது!
'1.76 லட்சம் கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஒதுக்கீட்டை மிக மிகக் குறைவான விலைக்கு விற்றதன் மூலம், பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தினார். இதில் ஏராளமான கோடிகள் சுய லாபம் அடைந்தார்’ என்பதுதான் மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.
இதில் தவறுகள் நடந்து இருப்பதாகவும் சுமார் 22 ஆயிரம் கோடி பணம் கைமாறி இருப்பதாகவும் மத்திய விழிப்பு உணர்வு மற்றும் கண்காணிப்பு ஆணையம் நவம்பர் 15-ம் தேதி குற்றம்சாட்டியது. இதனை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.
சி.பி.ஐ. கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி வழக்கை பதிவு செய்தது. ராசா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், அவர் கைது செய்யப்பட்டதும், இன்று திகார் சிறையில் இருப்பதும் தொடர்ச்சியாக நடந்த திருப்பங்கள்!
இந்த வழக்கை எப்படியாவது கிடப்பில் போடவேண்டும் என்று தி.மு.க. தரப்பு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால், உச்சநீதிமன்றமும் சி.பி.ஐ-யும் காட்டிய அழுத்தமான பிடிமானத்தால் ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த சனிக்கிழமை மதியம் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி ஓ.பி.ஷைனி, தனக்கு முன்னால் வைக்கப்பட்டு இருந்த மலை அளவு ஆவணங்களைப் பார்த்துவிட்டு, ''இந்த வழக்கு, விசாரணைக்கான முகாந்திரம் கொண்டதுதான்...'' என்று சொன்ன வார்த்தைகள் 2-ஜி விவகாரத்தின் மர்மப் பக்கங்களை, அரசியல் நெருக்கடிகளைத் தாண்டி அதிகாரபூர்வமாகத் திறந்து பார்ப்பதற்கான முக்கியமான சாவி!
இதில், ஒன்பது பேரை குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. இணைத்துள்ளது. மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா இதன் மையப்புள்ளி. அவரது தனிச் செயலாளராக இருந்து ராசாவின் கட்டளையை அட்சரசுத்தமாக நிறைவேற்றிய ஆர்.கே.சந்தோலியா, இரண்டாவதாக உள்ளார். இத்துறையின் செயலாளராக இருந்த சித்தார்த்த பெஹுரா மூன்றாவதாக குறிப்பிடப்பட்டு உள்ளார். ஸ்வான் நிறுவனத்தின் உரிமையாளரான ஷாகித் பால்வா அடுத்து வருகிறார். இந்த நால்வரையும் சி.பி.ஐ. முன்னதாகவே கைது செய்து சிறையில் வைத்து இருக்கிறது.
டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் உரிமையாளர்தான் வினோத் கோயங்கா. இவரும் ஷாகித் பால்வாவும் நெருங்கிய கூட்டாளிகள். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள்தான் கவுதம் ஜோஷி, சுரேந்திரா பிரபா, ஹரி நாயர் ஆகிய மூவரும்.
'அனில் அம்பானி தன்னுடைய உயர் அதிகாரிகளை வைத்து ஸ்வான், டி.பி. ரியாலிட்டி ஆகிய கம்பெனிகளை உருவாக்கி, அவர்களை வைத்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளைப் பெற்று லாபம் பார்த்துள்ளார்’ என்றுதான் சி.பி.ஐ. நினைக்கிறது.
''அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான எந்தத் தகுதியும் இல்லாத நிறுவனங்களான ஸ்வான், யுனிடெக் வயர்லெஸ் ஆகியவை உள்ளே புகுந்து லாபம் பார்த்துள்ளது. இதில் யுனிடெக் அதிக லாபத்தைப் பெற்றுள்ளது!'' என்று சொல்கிறது சி.பி.ஐ.
நழுவும் நீரா ராடியா!
இந்த 'லாபியிஸ்ட்'டை இதுவரை சி.பி.ஐ. பல முறை விசாரித்துள்ளது. வீடு, அலுவலகத்தை ரெய்டு செய்தது. ஆனால், அவர் இந்த வழக்கில் கைது செய்யப்படவில்லை. 125 சாட்சிகளில் ஒருவராகவே நீரா சேர்க்கப்பட்டுள்ளார். 'இந்த விவகாரத்தில் நீராவின் பங்களிப்பே அவ்வளவுதானா?’ என்ற அதிர்ச்சியான கேள்விகள் இதன் மூலம் எழுந்துள்ளன.
''நீரா ராடியா என்பது பனி மலையின் ஒரு முனை மட்டுமே. அவரை வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்த்தால், இந்திய பொருளாதாரத்தையே தாங்கிச் செல்லும் பலே பிசினஸ் முதலைகளையெல்லாம் அடுத்தடுத்து வழக்கினுள் இழுக்க வேண்டி வரும். அதற்கு சி.பி.ஐ. தயாரா?
இப்போதைக்கு அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சுதந்திரம், அடுத்தக்கட்டத்துக்கு விஸ்தரிக்கப்பட்டால் மட்டும்தான் அது சாத்தியம். இப்போதைக்கு ஒரு மெகா நிறுவனத்தின் பலம்தான் நீராவை காப்பாற்றி வைத்திருக்கிறது.
'அவர் சி.பி.ஐ-யின் விசாரணைக்கு ஒத்துழைப்பார். கைது செய்ய வேண்டாம். அவர் அளவுக்கு உண்மை என்று தெரிந்த அனைத்துத் தகவல்களையும் தந்துவிடுவார்...’ என்று அந்த நிறுவனத்தின் பெருந்தலை வாக்கு கொடுத்திருப்பதால், நீராவை இதுவரை கைது செய்யவில்லை.
சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது படேலும் இவரைக் காப்பாற்றுவதற்கான அனைத்துக் காரியங்களையும் பார்க்கிறார்'' என்று டெல்லியில் தகவல் பரவிக் கிடக்கிறது!
ஒன்று உறுதி... நீரா ராடியா மீது வழக்கு பாய்ந்தால் அவர் வெகுண்டு போவார். அதைத் தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தால், 2-ஜி-யின் பின்னால் மறைந்திருக்கும் பல காங்கிரஸ்ஜி-க்கள் தடுமாற ஆரம்பித்துவிடுவார்கள்!
நன்றி - ஜூனியர்விகடன்-10-04-2011
|
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
11
comments
Labels: அரசியல், ஆ.ராசா, ஊழல், கலைஞர், கலைஞர் டிவி, கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல்
கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பொன் விழா கண்ட தி.மு.க, எத்தனையோ முறை ஊழலை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கியது உண்டு. ஆனால், அதே தி.மு.க., இப்போது ஊழலில் கைதாகியிருக்கும் தங்களது கட்சியின் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஆதரவாகப் போர்க் கொடி தூக்கியதற்குப் பின்னணி ஏதும் உண்டா என்பதே டெல்லி வட்டாரங்களை இப்போது குடையும் கேள்வி!
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைதான முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஐந்து நாள் கஸ்டடியில் இருக்கிறார்! முறைகேட்டில் கைமாறிய பணம் எங்கெல்லாம் போனது என்பதைப் பல்வேறு கேள்விகளாக்கி, ஆ.ராசா மற்றும் அவரோடு கைதான இருவரையும் துளைத்துக் கொண்டிருக்கிறது சி.பி.ஐ.
''மும்பையில் உள்ள ஒரு 'லிங்க்'குடன் சென்னை தி.மு.கழக வி.ஐ.பி-க்குத் தொடர்பு இருக்கிறது. யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு முறைகேடுகள் இதில் நடந்துள்ளன. அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வெளிநாட்டுப் புரோக்கர்கள், அரசியல் பிரமுகர்கள் என்று பெரிய பட்டாளமே இந்த ஊழல் சுழலில் மாட்டி உள்ளனர். சென்னை தி.மு.கழக வி.ஐ.பி. சம்பந்தப்பட்ட ஆதாரத்தை தகுந்த நேரத்தில் கோர்ட்டில் சொல்வேன்'' என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே ஜூ.வி-யில் பேட்டி அளித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. இந்நிலையில், டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் மீடியாக்கள் மூலமாகக் கசியவிட்டிருக்கும் புதிய தகவல்கள் மேலும் பல அரசியல் பரபரப்புகளுக்கு அடிபோடுகிறது!
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து கலைஞர் டிவிக்கு பணம் கை மாறியுள்ளது என்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்பதே அந்தச் செய்தி..!
இனி விரிவாகப் பார்ப்போம்.
2008-ல் ஆ.ராசா ஒதுக்கீடு செய்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை சுமார் எட்டு நிறுவனங்கள்வரை வாங்கியிருந்தன. அனைத்து உரிமங்களும் மிகக் குறைவான விலைக்கு கொடுக்கப்பட்டதாலேயே, அரசாங்கத்துக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பதுதான் கணக்குத் தணிக்கைக் குழுவின் குற்றச்சாட்டு. இதில் கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளானவை இரண்டு நிறுவனங்கள். ஒன்று - ஸ்வான் டெலிகாம்... மற்றொன்று - யுனிடெக் நிறுவனம். இதில் ஸ்வான் டெலிகாம் நிறுவனம்தான் கலைஞர் டிவியோடு பணத் தொடர்பு வைத்திருந்தது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மும்பையிலும், ஹரியானாவில் உள்ள குர்கானிலும் தன்னுடைய அலுவலகங்கள் இருப்பதாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை கேட்டு விண்ணப்பிக்கும்போது தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தது. தன்னுடைய லெட்டர் பேடுகளிலும் காண்பித்திருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட அந்த இடங்களில் அப்படியொரு நிறுவனம் செயல்பட்டதற்கான எந்தச் சுவடும் தற்போது இல்லை என்பதுதான் உண்மை. அதோடு, அந்த லெட்டர்பேடிலும், உரிமம் கோரிய விண்ணப்பத்திலும் கம்பெனியின் தொலைபேசி எண் கூட இல்லை என்று சி.பி.ஐ. சொல்கிறது..! இந்தக் கூத்தை எங்கே போய் சொல்வது..?
தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தீவிரமாகக் கிளறுவதே - டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகியோரின் பின்னணிகளைப் பற்றித்தான். ''மேலோட்டமாகப் பார்க்கும்போது, இவர்கள் சாதாரண நபர்கள்தான். ஆனால், மகாராஷ்டிர அரசியலிலும் மத்திய அரசிலும் தொடர்ந்து 'பவர்' காட்டி வரும் சரத்பவார், இந்த பால்வா குரூப்புக்கு மிக நெருக்கமானவர்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முடிந்தவுடனேயே உரிமம் கிடைக்காதவர்கள் இது பற்றிய முறைகேடுகளை வெளியில் சொல்லத் தொடங்கியபோது, ஸ்வான் நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்தால் அது அப்பட்டமாகத் தெரிந்துவிடும் என்று நினைத்து இந்த நிறுவனத்தின் பங்குகளையெல்லாம் வேறு கம்பெனிகளுக்கு மாற்றியிருக்கிறார்கள்.
இதற்காகவே சில பினாமி கம்பெனிகளையும் புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் பிரதான பினாமி நிறுவனமாக காட்டப்பட்டதுதான் டி.பி.ரியாலிட்டீஸ் என்கிற நிறுவனம்.
இந்த நிறுவனம், மும்பையில் இருக்கும் சாஹித் உஸ்மான் பல்வா (இவர் தனியாக டைமிக்ஸ் ரியாலிட்டி என்கிற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்) குடும்பத்தினரும், வினோத் கோயங்கோ குடும்பத்தினரும் சேர்ந்து ஆரம்பித்த நிறுவனமாகும்.
ரியல் எஸ்டேட், பைனான்ஸ், ஏற்றமதி, இறக்குமதி போன்ற பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்த இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்துதான் டைனமிக்ஸ் பல்வா ரியாலிட்டி என்ற பெயரில் நிறுவனத்தைத் துவக்கி அதன் பெயரைச் சுருக்கி டி.பி. ரியாலிட்டீஸ் என்று ஆக்கிவிட்டார்கள்.
சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் சாஹித் பல்வா இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இன்றுவரையிலும் தேடப்படும் சர்வதேச பயங்கரவாத குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அஷிஷ் பல்வா தலைமைச் செயல் அதிகாரி. இவர்களில் சாஹித் பல்வா 11 குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர். தாவூத் இப்ராஹிம் 14 குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி. ஆக, இவர்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நிறுவனத்தோடு நேரடியாக தொடர்பில் இருப்பது பற்றி அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் கேள்வியெழுப்பியதால், சம்பந்தப்பட்டவர்கள் இந்த நிறுவனத்தின் பங்குகளை வேறு சில நிறுவனங்களுக்கு விற்க தீர்மானித்துள்ளார்கள்.
இதற்காக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமையைக் கையில் வைத்திருந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 45.73 சதவீத பங்குகளை அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எடிசலாட் (இ.டி.ஏ. குழும நிறுவனத்தின் சலாஹூதீன், பி.எஸ்.ரஹ்மான், ஆகியோர்தான் எடிசலாட் நிறுவனத்தின் பங்குதாரர்கள்) என்கிற நிறுவனத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட எடிசலாட் டி.பி. டெலிகம்யூனிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்துக்கு சுமார் 4500 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள். மூன்று தவணைகளில் மொத்தப் பணமும் செட்டில் செய்யப்பட்டுவிட்டதாம்.
அன்னிய மூலதன வாரியத்தின் அனுமதியோடு வந்து சேர்ந்த இந்தப் பண பரிவர்த்தனைக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலும் பெறப்பட்டு இருக்கிறது. இந்த எடிசலாட் - டி.பி.டெலிகம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 45.73 சதவீத பங்குகளை மட்டுமே தங்களது வசம் வைத்திருந்தால், நிறுவனத்தில் பெரும்பான்மை இல்லாமல் போய், தாங்கள் நினைத்ததைச் சாதிக்க முடியாமல் போய்விடும் என்பதால், 51 சதவிகிதம் அளவுக்கு பங்குதாரர்களாக மாறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
இதற்காக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஜெனிக்ஸ் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் (இதன் அலுவலகம் சிட்டி சென்டர் கட்டிடத்தில் உள்ளது) ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்கள். முகமது அசன் (இ.டி.ஏ. குழும பி.எஸ்.ரஹ்மானின் சகோதரியின் மகன்), அகமது சாஹிர் (இ.டி.ஏ. குழும சலாஹுதினின் மருமகளின் அண்ணன்) ஆகியோரை முக்கிய பங்குதாரர்களாகக் கொண்டுதான் இந்த நிறுவனமும் துவக்கப்பட்டுள்ளது. இந்த ஜெனிக்ஸ் எக்ஸிம் நிறுவனம், டி.பி. ரியாலிட்டீஸ் நிறுவனத்தில் இருந்து 5.27 சதவிகிதப் பங்குகளை வாங்குகிறது.
இந்த நிறுவனத்தை எடிசலாட் டி.பி.டெலிகம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைத்து மொத்தம் 51 சதவிகிதப் பங்கு உள்ள பங்குதாரர்களாக இவர்கள் உருவெடுத்துவிட்டார்கள். மீதமிருக்கும் 49 சதவிகிதப் பங்குகளை சீனாவின் உவேயி நிறுவனம் (மத்திய அமைச்சர் சரத்பவாரின் நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது) வாங்கிக் கொண்டது.
இந்தவரையில் சரி.. இதில் கலைஞர் தொலைக்காட்சியின் பெயர் எங்கே வந்தது என்றால் இனிமேல்தான் கதையே ஆரம்பம்.
இதில் என்ன விசேஷம் எனில், 2007-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதியன்று கனிமொழி கருணாநிதியும், தயாளு அம்மாளும், சரத்குமார் ரெட்டியும் கலைஞர் டிவியின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அடுத்த ஆறு நாட்கள் கழித்து அதாவது ஜூன் 12-ம் தேதியன்று அமிர்தம் இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் மிகச் சரியாக இயக்குநர்களாக நியமிக்கப்பட்ட 14 நாட்கள் கழித்து ஜூன் 20-ம் தேதியன்று கனிமொழி கருணாநிதியும், தயாளு அம்மாளும் இயக்குநர்கள் பொறுப்பில் இருந்து விலகுகிறார்கள்.
இது எதற்காக என்ற குழப்பம் சி.பி.ஐ.யினருக்கு இருந்தாலும், கலைஞர் டிவிக்கு பணம் வந்து சேர்ந்த கதையோ நன்கு திட்டமிட்ட ஒரு சிறப்பான சினிமா திரைக்கதையை போல இருக்கிறது என்கிறது சி.பி.ஐ.
டி.பி. ரியாலிட்டீஸ் கம்பெனியின் பணம் நேரடியாக கலைஞர் டிவிக்கு வந்து சேர்ந்தால் குட்டு வெளிப்படும் என்பதற்காகவே, இரண்டு மூன்று கம்பெனிகளைத் தாண்டி இந்தப் பணம் வந்துள்ளது. 'இந்தப் பணத்தை நாங்கள் திரும்ப வாங்கிவிட்டோம்' என்றும், 'நாங்கள் கடனாக வாங்கியதைத் திரும்பக் கொடுத்துவிட்டோம்' என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சொன்னாலும்... கை மாறிய தொகை மற்றும் தேதிகளில் பல சேதிகள் ஒளிந்து கிடப்பதாகவே தெரிகிறது.
டைனமிக் ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஆஷிப் பல்வா என்பவரும் டைனமிக்ஸ் பல்வா ரியாலிட்டி நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ராஜீவ் அகர்வால் என்பவரும் இணைந்து ஆளுக்கு 50 சதவிகிதப் பங்குகளோடு குசேகான் ரியாலிட்டி என்கிற நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள்.
டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம், குசேகான் நிறுவனத்தில் 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் 210 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. இதன் பிறகு குசேகான் நிறுவனம், சினியூக் என்ற சினிமா பைனான்ஸியல் கம்பெனிக்கு 221 கோடி ரூபாயை கடனாகக் கொடுத்திருக்கிறது. குசேகான் நிறுவனத்தின் 31.3.2010 தேதியிட்ட பேலன்ஸ் ஷீட்டில் 'லோன்ஸ் அண்டு அட்வான்ஸஸ்' என்ற பிரிவின் கீழ் இந்த 221 கோடி ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது.
'சினியுக்' நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டிலும் கிட்டத்தட்ட அதே தொகை வந்து சேர்ந்திருக்கிறது. தவிர, அதே பேலன்ஸ் ஷீட்டில் 214 கோடியே 86 லட்சத்து 54 ஆயிரத்து 109 ரூபாய், 'கலைஞர் டி.வி. பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துக்கு 'அதர் அட்வான்ஸஸ்' என்ற தலைப்பில் அளிக்கப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.
இருந்தாலும் இதன் பின்பு, தன்னுடைய நூறு சதவிகித பங்குகளை அடமானம் வைத்து 214.8 கோடி ரூபாய்களை சினியூக் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவி பெற்றதுபோல ஒப்பந்தம் திருத்தி அமைக்கப்படுகிறது.
ஒரே ஆண்டில் கலைஞர் டி.வி. நிர்வாகம் தான் வாங்கிய 214.8 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கூடவே வட்டியாக 35.2 கோடியையும் சினியூக் நிறுவனத்துக்குத் திருப்பி செலுத்தியது போலவும் ஆவணங்கள் சொல்கின்றன. கலைஞர் டி.வி-யின் இதே காலகட்டத்துக்கான பேலன்ஸ் ஷீட்டிலும், இந்தத் தொகை பெறப்பட்டது குறிப்பிடப்பட்டு உள்ளது.
''வாங்கிய கடனை தற்போது நடக்கும் 'ஃபைனான்ஷியல்' வருடத்தில் திருப்பிக் கொடுத்துவிட்டோம்!'' என்று கலைஞர் டி.வி.யின் இயக்குநர்களில் ஒருவரான சரத்குமார் ரெட்டி கூறியிருப்பதும் கவனத்துக்குரியது.
விளம்பர வருமானத்தைத் தவிர வேறு வருமானம் இல்லாத கலைஞர் டிவி, ஒரே வருடத்தில் 214.8 கோடி ரூபாயை வட்டியோடு திருப்பிச் செலுத்தியது எப்படி என்று எல்லோரும் புருவம் உயர்த்தியது போலவே, மத்திய உள்துறை வருவாய்ப் புலனாய்வுத் துறை போன்றவைகளுக்கும் சந்தேகம் எழ.. கடந்த 11.08.2010-ல் கலைஞர் டிவியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான தயாளு அம்மாள், கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.
கலைஞர் டிவியின் ஆரம்ப முதலீடே 15 கோடிகள்தான். இதில் 60 சதவிகிதப் பங்குகள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும், 20 சதவிகிதப் பங்குகள் மகள் கனிமொழியிடமும்... மீதம் உள்ள 20 சதவிகிதப் பங்குகள் சரத்குமார் ரெட்டியிடமும் இருக்கின்றன.
பங்குகளின் மதிப்பின்படி பார்த்தால் தயாளு அம்மாள் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 9 கோடி. கனிமொழியின் பங்குகளின் மதிப்பு 3 கோடி. சரத்குமார்ரெட்டியின் பங்குகளின் மதிப்பு 3 கோடி.
'டிபி ரியாலிட்டிக்கு சொந்தமானதுதான் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம். இந்த டைனமிக்ஸ் நிறுவனத்திலும் குசேகான் நிறுவனத்திலும் இருப்பவர்கள் வேறு யாரும் இல்லை. பால்வா மற்றும் டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் ராஜீவ் பாட்டே, கிருஷ்ண அகர்வால் ஆகியோர்தான். இவர்களுடைய பங்குகள் பற்றிய விவரங்களை நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.
இங்கே இருந்து பணம் மாற்றப்பட்ட சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் புரோமோட்டரான கரீம் குலாமலி மொரானியின் பின்னணி பற்றியும் சி.பி.ஐ. தீவிரமாகப் பல தகவல்களை சேகரித்து வருகிறதாம். “மொரானிக்கும் தனக்கும் பல வருடங்களாக இருந்த பழக்கத்தின் காரணமாகவே, கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடிக்கும் அதிகமான தொகையைக் கடனாக வாங்க முடிந்தது. இந்தப் பண டீலிங்கில் தயாளு அம்மாளுக்கும், கனிமொழிக்கும், கலைஞருக்கும் எந்தத் தொடர்புமில்லை..” என்று சரத்குமார் ரெட்டி தன்னிலைவிளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிதிப் பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கப் பிரிவில் கிடைத்த செய்திகள் அடிப்படையில் சில டெல்லிப் பத்திரிகையாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த நிறுவனத்தினர் சொல்லிய தகவல்களும் விறுவிறுப்பானவை.
சினியுக் நிறுவனத்தினர், ''நாங்கள் கலைஞர் டி.வி-யின் 27 சதவிகிதப் பங்குகளை வாங்குவதாக இருந்தோம். ஆனால், பங்குகளின் மதிப்பு குறித்து எழுந்த வித்தியாசங்கள் காரணமாகவே, அந்தப் பரிமாற்றம் நடக்கவில்லை. அளிக்கப்பட்ட பணம் கடனாகக் கருதப்பட்டது!'' என்று மொரானி கூறியுள்ளார்.
ஆனால், பணத்தை கலைஞர் டி.வி. வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டதாகக் கூறினாலும், எப்போது, எப்படி திரும்ப ஒப்படைத்தது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இது, வரும் நிதியாண்டில் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்போதுதான் தெரிய வரும்!'' என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
“கலைஞர் டிவியின் பிரதான பங்குதாரராக நான் இருந்தாலும் நிர்வாகத்தைக் கவனிக்கும் நிர்வாக இயக்குநர் அமிர்தமும், செயல் இயக்குநராக இருக்கும் சரத்ரெட்டியும்தான் இந்தப் பணப் பரிவர்த்தனைகள் குறித்து பதிலளிக்க வேண்டும். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லி பதில் அனுப்பிவிட்டாராம் தயாளு அம்மாள்.
அதேபோல கனிமொழியும் “மொத்த விவகாரங்களும் எனக்குத் தெரியாது. நான் அந்த டிவி அலுவலகம் இருக்கும் பக்கமே ஒரு வருடமாகப் போகவில்லை. மற்றபடி கலைஞர் டிவி நிர்வாகிகள்தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டார்.
கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநரான அமிர்தமோ, “ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டு தொடர்பாக தனியாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தலைவர் குடும்பத்தை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று சிலர் தொடர்ந்து முயற்சித்து, இப்படியெல்லாம் இல்லாததுகளையும், பொல்லாததுகளையும் கிளப்பி விடுகிறார்கள். கலைஞர் டிவிக்கு கடன் பெற்றது.. திருப்பிச் செலுத்தியது எல்லாமே சட்டத்திற்கு உட்பட்டதுதான். அதில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. தேவையானால் உரிய நேரத்தில், உரிய இடத்தில் இதற்கான விளக்கங்களை சம்பந்தப்பட்டவர்கள் அளிப்பார்கள்..” என்கிறார்.
இதற்கிடையில் வருமான வரித்துறையிடம் கலைஞர் டிவிக்காக காட்டப்பட்ட கணக்கு வழக்குகளில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்களாம். இந்த முரண்பாடுகளையும் சி.பி.ஐ. தனது விசாரணையில் நோண்டி எடுத்திருக்கிறது. என்கிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விஷயத்தில் பலனடைந்தவர்கள் பல்வேறு துணை நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டிவிக்கு இப்படி பணம் கொடுத்தது போல கொடுத்து பணப் பரிவர்த்தனை செய்திருக்கிறார்கள். இதுதான் சுற்றி வளைத்து இப்போது தி.மு.க.வுக்கு வில்லங்கமாகியிருக்கிறது.
இதே நேரத்தில் நேற்றைய தினம்வரையிலான விசாரணக்குப் பின் இந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தின் பின்னணியில் சுமார் 3000 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சப் பணம் ஆ.ராசாவின் மூலமாக பல்வேறு தலைவர்களுக்கும், புள்ளிகளுக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது என்ற தகவலை சி.பி.ஐ. கசிய விட்டிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடிக்காமல் இருந்திருந்தாலோ, அல்லது குற்றச்சாட்டுக்கள் ஏதும் சொல்லாமல் இருந்திருந்தாலோ கலைஞர் டிவியின் 27 முதல் 34 சதவித அளவிலான பங்குகள் 221 கோடிக்கு விற்கப்பட்டிருக்கும். ஆனால் டிவி ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள்ளாக 221 கோடி ரூபாய் அளவுக்கான மதிப்பை கலைஞர் டிவிக்கு எதை வைத்து முடிவு செய்தார்கள்..? யார் அதற்கான அளவீடுகளை செய்தது என்றெல்லாம் கணக்கிட்டால் பணம் கொடுத்தவர்கள் முட்டாள்கள் என்றுதான் தொழில் உலகத்தில் சொல்வார்கள்.
சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் சாஹித் பல்வாவிடம் கலைஞர் டிவிக்கு எதற்காகப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது என்கிற விவரத்தை அறிவதுதான் சி.பி.ஐ.யின் முதல் வேலையாக இருக்கும் என்கிறார்கள்.
சாஹித் பல்வா மூலம் ஸ்வான் நிறுவனத்தில் ஆரம்பித்து சினியூக் நிறுவனம்வரையில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் கிடைத்த பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் எங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது போன்ற விவரங்களை அறியவும்தான் சாஹித் பல்வாவை கஸ்டடிக்குள் கொண்டு வந்திருக்கிறது சி.பி.ஐ. அவரிடம் நடக்கும் விசாரணைக்குப் பிறகு அரசியல் தொடர்புடைய முக்கிய வி.ஐ.பி.க்கள் பலருக்கும் சிக்கல்கள் காத்திருக்கின்றனபோல் தெரிகிறது.
அது மட்டுமில்லாமல் இந்த விவகாரத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கரங்களும், தீவிரவாதிகளின் மறைமுகச் செயல்பாடுகளும் இருப்பதாகவும் அறிகிறோம். இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்வகையில் பல்வேறு டீலிங்குகள் நடந்திருப்பதாகச் சொல்லப்படுவது குறித்த தகவல்களும் விசாரணைக்குப் பிறகு ஊர்ஜிதமாகலாம் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்கள் சி.பி.ஐ. வட்டாரத்தில்..!
இந்த வழக்கு இன்றைக்குவரைக்கும் சுப்ரீம் கோர்ட்டின் நேரடி பார்வையில் நடப்பதால்தான் இந்த அளவுக்கான திருட்டுகளும், கொள்ளைகளும் வெளிப்பட்டுள்ளன. இல்லையேல் இந்த விவகாரத்தையே குழி தோண்டி புதைத்திருப்பார்கள் நமது மதிப்பிற்குரிய கில்லாடி அயோக்கிய அரசியல்வியாதிகள்..!
இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டி சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவிற்காக ஒரு பூச்செண்டை காணிக்கையாக்கி அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
[ இந்தக் கட்டுரையை ஜூனியர் விகடன், ஆனந்தவிகடன், சூரியக்கதிர், தமிழக அரசியல், தினமலர், தெஹல்கா.காம் ஆகியவற்றின் உதவியோடுதான் எழுதினேன். இதில் இருக்கும் ஆதாரங்கள் ஜூனியர்விகடனில் இருந்து கையாளப்பட்டது..! - இவர்களுக்கு நமது நன்றிகள் உரித்தாகட்டும்..! ]
|
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
52
comments
Labels: அரசியல், அனுபவம், ஆ.ராசா, கலைஞர் டிவி, சமூகம், ஸ்பெக்ட்ரம் ஊழல்


























