நீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்

03-05-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஹிந்தியில் வித்யா பாலனின் நடிப்பில் ‘கஹானி’ என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற படம். இந்தக் காலத்திற்கு மிக பொருத்தமானதுதான்..
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்த அதே நாளில், குண்டு வெடிப்பு சம்பவத்தை மையமாக வைத்தே எடுக்கப்பட்ட இந்தப் படம் சென்னையில் ரிலீஸானது யாருடைய விருப்பமோ தெரியவில்லை..? சாலப் பொருத்தம்..! தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரில் இதனை ரீமேக் செய்திருக்கிறார்கள். அங்கிருந்து தமிழுக்கு ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
வலிக்காமல் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல இந்திய அறிவாளிகளின் இப்போதைய நிலைப்பாட்டைத்தான் இந்தப் படமும் எடுத்துச் சொல்கிறது.. இஸ்லாமிய தீவிரவாதிகள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்.. இதற்காக இஸ்லாத்தை மறுத்து வேறு மதத்தின் பெயரில்கூட ஒளிந்திருந்து தாக்குவார்கள் என்பதை இந்தப் படத்தின் மூலமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் இந்த போதனை நம் மக்களுக்குப் புரிந்ததோ புரியலையோ.. ஒரு திரைப்படமாக பார்க்கப் போனால் மேக்கிங் அசத்தியிருப்பதால் அனைவருமே உண்மையை மறந்துவிட்டு, இரண்டரை மணி நேரம் டைம் போனதே தெரியலை என்றே சொல்லிவிட்டு தியேட்டரில் இருந்து வெளியேறுவார்கள். இதைத்தான் இந்தப் படத்தின் கதாசிரியரும், இயக்குநரும் எதிர்பார்த்தார்கள்.. இதுதான் நடக்கிறது..
அமெரிக்காவில் இருந்து ஐதராபாத்துக்கு வரும் ஹீரோயின் நயன்தாரா.. விமான நிலையத்தில் இருந்து நேராக போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்கிறார். அமெரிக்காவில் இருந்து ஐதராபாத்திற்கு அலுவல் விஷயமாக வந்த தனது காதல் கணவரைக் காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். ஸ்டேஷனில் புதிதாக சப் இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்ந்திருக்கும் தமிழரான வைபவ் நயன்தாராவுக்கு உதவ முன் வருகிறார்.
முதல் கட்ட விசாரணையில் எதுவும் தெரியாமல் இருந்தாலும் தனது கணவர் தங்கியிருந்த அதே ஹோட்டலில், அதே அறையில்தான் நயன்தாராவும தங்குகிறார். அங்கே வேலை செய்யும் ஒரு சிறுவனின் சாட்சியத்தின்படி அவரது கணவர் சில ரவுடிகளால் கடத்திச் செல்லப்பட்டார் என்கிற தகவலும் கிடைக்கிறது. இதனையும் போலீஸில் சொல்லி விசாரிக்கச் சொல்கிறார்.
விசாரணை தொடரும் சமயத்தில் ஒரு சந்தேகத்தில் முஸ்லீம் மத குருவிடம் போய் விசாரிக்கிறார்கள். நயன்தாரா படும் கஷ்டத்தைப் பார்த்து வருத்தப்படும் மதகுரு அன்றைய நாள் நடக்கும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்தால் சில தகவல்கள் கிடைக்கும் என்கிறார். வைபவும், நயன்தாராவும் அங்கே போய் காத்திருக்க.. இங்கே மதகுருவை ஒரு நபர் நமஸ்காரம் சொல்லி சுட்டுக் கொலை செய்கிறார்.
இதற்கிடையில் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நயன்தாராவை படுக்கைக்கு அழைக்கிறார். தன்னுடன் ஒரு நாள் இருந்தால்போதும்.. அவரது கணவனை கண்டுபிடித்துத் தருவதாகச் சொல்கிறார். அந்தச் சமயத்தில் அந்த இன்ஸ்பெக்டரும் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார்.
இப்போது இந்த வழக்கில் பசுபதி விசாரணை அதிகாரியாக நுழைகிறார். அவரும் நயன்தாராவை மிரட்டி உருட்டி விசாரணை செய்தவர் சொல்லும் தகவல் அதிர்ச்சியாக இருக்கிறது. காற்றாடி திருவிழா அன்று ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு காணாமல் போன நயன்தாராவின் கணவன்தான் காரணம் என்கிறார் பசுபதி. நயன்தாரா அதனை நம்ப மறுக்கிறார்.
சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் வீட்டில் சோதனை செய்யும்போது ஒரு ஹார்டு டிஸ்க் கிடைக்கிறது. தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் இருக்கும் அந்த ஹார்டு டிஸ்க்கை கேட்டு உள்துறை அமைச்சர் ஒரு பக்கம் பசுபதியை விரட்டுகிறார். அந்த ஹார்டு டிஸ்க் நயன்தாரா கையில் கிடைக்க. இன்னொரு பக்கம் வைபவுக்கு வேறொரு துப்பு கிடைக்க..
இறுதியில் என்னவாகிறது என்பதை மிக சுவாரஸ்யமான திரைக்கதையோடு, விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் மிக அழுத்தமான இயக்கத்துடன் ஆர்ப்பாட்டமான பின்னணி இசை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
கஹானியின் இருந்ததை போல இதில் ஹீரோயினுக்கு கர்ப்பிணி வேடமில்லை. நயன்தாராவை கரு சுமக்கும் நிலையில் நடிக்க வைத்தால் தெலுங்கிற்காக சின்னதாக மாற்றம் செய்திருக்கும் திரைக்கதையில் சிக்கல் வரும் என்பதால் கர்ப்பிணி வேடத்தை மட்டும் விட்டுவிட்டு மிச்சத்தை கஹானியை போலவே எடுத்திருக்கிறார்கள்.
நயன்தாரா படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். மிக்க் குறைவான மேக்கப்தான். ஆனால் நடிப்பு அதே வீச்சு.. பசுபதியிடம் வாக்குவாதம் செய்யுமிடங்களில் உண்மைக்கு மிக அருகிலேயே சென்றுவிட்டார். அற்புதமான எளிமையான வசனங்கள். ஹார்டு டிஸ்க்கை ஒளித்து வைக்க அவதிப்படும் நேரத்தில் டென்ஷனைக் கூட்டும் பசுபதியிடம் பேசும் காட்சிகளும்.. இறுதியில் தனது கணவனுடன் அமைதியாக பேசி பத்ரகாளியாக உருமாறும் காட்சியிலும் நயன்தாரா தெரியவே இல்லை.. யாரோ ஒரு அனாமிகாதான் தெரிந்தார்.. அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பும், இயக்கமும் அசத்தியிருக்கிறது..!
கீரவாணியின் பின்னணி இசையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். குண்டு வெடிக்கின்ற தருணத்தில் அந்த நொடியை நோக்கிச் செல்கின்ற அந்த நேரத்தை மிகவும் பதட்டமாக்கியிருக்கிறார் தனது இசையில்.. ஸ்கூட்டர் கொலையாளியை விரட்டிச் செல்லும் சமயத்திலும், ஹார்ட் டிஸ்க் கேட்டு பசுபதியும், தேசிய பாதுகாப்பு படையும் ஹோட்டல் அறையில் ரகளை செய்யும் நேரத்திலும் இசைதான் பரபரவென்றிருக்கிறது..
உதவி செய்யும் சப் இன்ஸ்பெக்டராக வைபவ். நயன்தாராவுடன் நடித்துவிட்ட திருப்தியுடன் இருப்பாரென்று நினைக்கிறோம். விசாரணை அதிகாரியாக பசுபதி.. அதே வேகம்.. ஆக்சன்.. டயலாக் டெலிவரி.. வைபவை விரட்டும் காட்சியில் இருக்கும் வயித்தெரிச்சல் அவரது முகத்திலேயே தெரிந்தது.. இறுதிக் காட்சியில் அவ கிடைக்க மாட்டா.. இந்நேரம் பிளைட் ஏறியிருப்பா என்று உறுதியுடன் சொல்லும் அந்தக் குரல்.. எல்லாம் சேர்ந்து அழகான நடிப்பைக் காட்டியிருக்கிறார் பசுபதி. அந்த இன்ஸ்பெக்டரின் ரியாக்ஷன்களும், ஹோட்டலுக்கு வெளியே வந்து நின்று கொண்டு நயன்தாராவை மிரட்டி விட்டுப் போகின்ற ஆக்சனும் உண்மையிலேயே மிரட்டல்..!
முதற்பாதியில் நிறைய தெலுங்கு வசனங்கள் இருப்பதினால் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருந்தது. பேசாமல் அதிலும் தமிழில் சப் டைட்டில் போட்டிருக்கலாம்.. எண்டமூரி வீரேந்திரநாத்தின் திரைக்கதையில் நிறைய மாறுதல்கள்.
கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று சாதாரண ரசிகன் ஊகிக்க முடியாத அளவுக்குக் கொண்டு போய் முடித்திருப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.. அந்த கிளைமாக்ஸின் இரண்டு டிவிஸ்ட்டுகள்தான் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன. நயன்தாராவின் நடிப்பு கேரியரில் நிச்சயமாக இந்தப் படம் மிக முக்கியமானதாக இருக்கும்..!
ஒரு குண்டு வெடிக்கிறது.. பேப்பரில் செய்தி வருகிறது.. படித்துவிட்டு தனக்குப் பாதிப்பில்லையெனில் அடுத்த வேலையை பார்த்துவிட்டுப் போகும் சாதாரண பொதுஜனத்திற்கும் இதில் ஒரு பொறுப்புணர்வு உண்டு என்பதை இந்தப் படத்தின் ஹீரோயின் மூலமாக கதாசிரியர் சொல்லியிருக்கிறார். இது ஒன்றுக்காகவே அவருக்கு சபாஷ் போடலாம்..!
அவசியம் பாருங்கள்…!

9 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

//இஸ்லாமிய தீவிரவாதிகள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்.. இதற்காக இஸ்லாத்தை மறுத்து வேறு மதத்தின் பெயரில்கூட ஒளிந்திருந்து தாக்குவார்கள் என்பதை இந்தப் படத்தின் மூலமாகவும் சொல்லியிருக்கிறார்கள்

//

காந்திய சுட்டுக்கொன்ற கோட்சே கையில் இக்பால்னு பச்சைக்குத்தியிருந்தானாம் அது எதுக்குண்ணே?

சினிமா விமர்சனம் செய்யவே நீங்க கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு,இதுல சமூக விமர்சனம் வேற வெளங்கிடும் அவ்வ்!

Sketch Sahul said...

"இஸ்லாமிய தீவிரவாதிகள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்."

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்
நக்சலைட் தீவிரவாதிகள்
போடோ தீவிரவாதிகள்
மாலேகான் குண்டு வெடிப்பு ,,சமாஜ்வாதா ரயில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட r.s.s.தீவிரவாதிகள் இன்னும் பல தீவிரவாத குழுக்களை சேர்ந்தவர்கள் எல்லாத்துக்கும் பயப்படுவாங்க ,,

Vetrivendan said...

பயங்கரவாதிகள் எந்தவொரு நிலையிலும் பயங்கரவாதிகளே.அவர்கள் எந்த மதம் சார்ந்து கொடுமை செய்தாலும் கண்டிக்கும் நேர்மை வேண்டும்.யாரோ எப்போதோ செய்தானென்று சொல்வதன் மறைபொருள் இவன் செயலை நியாயப் படுத்துவதாகும்.

SANKAR said...

முசுலீம்கள் மட்டுமே வரும் ஒரு பள்ளிவாசலில் தெரியாத ஒரு நபர இருப்பதையோ அல்லது அவர்கள் அதிகம் வசிக்கும் மன்னடியிலோ ஒருவர் இருக்கிறார்.அவர் இங்குள்ளவர்களுக்கு மூளை சலவை செய்கிறார் என்பதை ஏன் ஒரு முசுலீமோ அல்லது இயக்கமோ போலீசுக்கு தெரிவிக்க வில்லை.அல்லது போலீசு செய்தது தவறு என்றால் ஏன் இன்னமும் அது பற்றி எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.ஒரு சாதாரண சினிமாவுக்கே/யு ட்யுபுக்கே சென்னையை ஸ்தம்பிக்க வைத்தவர்களே பதில் சொல்லுங்கள்.

k.rahman said...

/சாதாரண சினிமாவுக்கே/யு ட்யுபுக்கே சென்னையை ஸ்தம்பிக்க வைத்தவர்களே/

ஆமாம். தமிழர்கள் ரொம்ப ஒழுங்கு!! இனம் படத்தை ரிலீஸ் பண்ணவே குடாதுன்னு தானே லிங்குசாமிய மிரட்டி பணிய வச்சாங்க.

சூனிய விகடன் said...

மொத்தத்தையும் மூணால் வகுத்துப் போடலாம்..மீதியே வராது...வைக்கிறவங்க..வைக்கிறதுக்கு உதவி பண்றவங்க..வைக்கிறதைக் கேள்விப்பட்டு சந்தோஷப்படறவங்க.

Vetrivendan said...

அப்போ k.rahman தமிழர் இல்லையா !

Vetrivendan said...
This comment has been removed by the author.
சீனு said...

//இஸ்லாமிய தீவிரவாதிகள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்.. இதற்காக இஸ்லாத்தை மறுத்து வேறு மதத்தின் பெயரில்கூட ஒளிந்திருந்து தாக்குவார்கள் என்பதை இந்தப் படத்தின் மூலமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.//

உண்மை தானே!!!

//ஆமாம். தமிழர்கள் ரொம்ப ஒழுங்கு!! இனம் படத்தை ரிலீஸ் பண்ணவே குடாதுன்னு தானே லிங்குசாமிய மிரட்டி பணிய வச்சாங்க.//

ஆமா, ஆனா 25000 பேர் சேர்ந்து ரௌடியிசம் பன்னலியே!!!